Tnpsc

12th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English


  1. ஆர்மீனியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) நிகோல் பாஷின்யன் 

ஆ) ஆர்தர் சர்க்ஸியன்

இ) அரம் வர்தேவனியன்

ஈ) ஆர்மென் சர்க்கிஸியன்

  • சிவில் ஒப்பந்தக்கட்சியின் தலைவர் நிகோல் பஷின்யன், ஆர்மீனியாவின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதன் முதலில் கடந்த 2018’இல் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆர்மீனிய பிரதமர் பதவிக்கான பஷின்யனின் வேட்புமனுவை அந்நாட்டு அதிபர் ஆர்மென் சர்க்கிஸியன் அங்கீகரித்தார். ஆர்மீனியா, ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள காகசஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. யெரெவன், ஆர்மீனியாவின் தலைநகரம் ஆகும். ஆர்மீனிய டிராம் அதன் நாணயமாகும்.

2. UNSC விவாதக் கூட்டத்திற்கு தலைமை வகித்த முதல் இந்தியப் பிரதமர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) டாக்டர் மன்மோகன் சிங்

இ) நரேந்திர மோடி 

ஈ) அடல் பிஹாரி வாஜ்பாய்

  • ஐநா பாதுகாப்பு அவையின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது ஈராண்டு பதவிகாலத்தை 2021 ஜனவரி.1 அன்று தொடங்கியது. இந்தியா, ஆகஸ்ட் மாதத்தில் UNSC’இன் தலைவர் பதவியை வகிக்கிறது. UNSC விவாதக்கூட்டத்திற்கு தலைமைவகிக்கும் முதல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
  • இந்தியா, 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85 & 1991-92 ஆகிய ஆண்டுகளில் UNSC’இல் உறுப்பினராக இருந்தது. உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு உலக நாடுகள் சங்கம் தவறியதை அடுத்து, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, UNSC உருவாக்கப்பட்டது. UNSC’இன் முதல் அமர்வு 1946 ஜன.17 அன்று நடைபெற்றது. இது, ஐநா அவையின் ஆறு முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் பணியாகும்.

3. டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ) கிரேசியா போலி

ஆ) P V சிந்து

இ) தை சூ-யிங்

ஈ) சென் யூபி 

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் 2021 ஆக. 2 அன்று தங்கப்பதக்கத்தை வென்றார் சென் யூபி. 21-18, 19-21, 21-18 என்ற கணக்கில் தைவானின் தை சூயை வீழ்த்தி அவர் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ஒரு சீன பாட்மிண்டன் வீராங்கனையாவார்.
  • அவர், 2016 ஆசிய மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் ஜூனியர் பட்டங்களை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டில், அவருக்கு, 2017ஆம் ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

4. 2021 ஆக.2 அன்று டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ) விக்டர் ஆக்செல்சன் 

ஆ) சென் லாங்

இ) கெவின் கார்டன்

ஈ) வாங் சூ-வெய்

  • ஆகஸ்ட் 2, 2021 அன்று டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில் விக்டர் ஆக்செல்சன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனத்தின் சென் லாங்கை அவர் தோற்கடித்தார். விக்டர் ஆக்செல்சன் 2017 உலக சாம்பியன் மற்றும் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.
  • உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் ஐரோப்பிய வீரர் என்ற பெருமையைப்பெற்றார். அவர், 2010’இல் கொரியாவின் காங் ஜி-வூக்கை தோற்கடித்து உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்றார்.

5. ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தக தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

அ) டோனி அபோட் 

ஆ) S ஜெய்சங்கர்

இ) பியூஷ் கோயல்

ஈ) ராகேஷ் அஸ்தானா

  • டோனி அபோட், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். COVID பிந்தைய மீட்சிக்கு உதவும் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகளை ஆழப்படுத்தும் நோக்கத்துடன் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • “பாதுகாப்பான மற்றும் நெகிழ்திறனுடனான விநியோகச் சங்கிலிகளை” உருவாக்குவதே இந்த முன்மொழியப்பட்ட சந்திப்பின் முக்கிய நோக்கம் ஆகும். டோனி அபோட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமராக இருந்துள்ளார். அவர், 2013-2015 வரை, ஆஸ்திரேலியாவின் 28ஆவது பிரதமராக இருந்தார்.

6. NCRB’இன் தரவுகளின்படி, கடந்த 2019’இல் வேலையின்மை காரணமாக பின்வரும் எம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன?

அ) பீகார்

ஆ) கர்நாடகா 

இ) இராஜஸ்தான்

ஈ) இமாச்சல பிரதேசம்

  • வேலைவாய்ப்பின்மை காரணமாக நிகழ்ந்த தற்கொலைகள், 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019’இல் 24% அதிகரித்துள்ளது. NCRB’ இன் தரவுகளின்படி, கர்நாடக மாநிலத்தில், 2019’இல், வேலையின்மை காரணமாக அதிகபட்ச தற்கொலைகள் (553) நிகழ்ந்துள்ளன. கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரமும், தமிழ்நாடும் உள்ளன.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுசெய்யும் ஓர் இந்திய நிறுவனம் ஆகும். 1986’இல் NCRB நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. உள்துறை அமைச்சகத்தின்கீழ் இது செயல்படுகிறது. இராம்பால் பவார் இ கா ப, இதன் தற்போதைய இயக்குநராக உள்ளார்.

7. டோக்கியோ ஒலிம்பிக்கில், ஹாக்கியில் வெண்கலப்பதக்கத்தை வெல்வதற்காக, இந்தியா, எந்த நாட்டைத் தோற்கடித்தது?

அ) பெல்ஜியம்

ஆ) ஜெர்மனி 

இ) அர்ஜென்டினா

ஈ) நெதர்லாந்து

  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது ஜெர்மனி அணியை 5-4 என்ற கணக்கில் வென்று, 41 ஆண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலப்பதக்கம்) வென்றுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கியில் இந்தியா வெல்லும் மூன்றாவது வெண்கலப்பதக்கம் இதுவாகும். 1968 மெக்ஸிகோ நகர ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கமும் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கமும் என இரு பதக்கங்களை இந்தியா ஏற்கனவே வென்றுள்ளது.

8. சமக்ர சிக்ஷா திட்டமானது எந்த வகுப்பிலிருந்து எந்த வகுப்பு வரை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்?

அ) பாலர் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரை

ஆ) பாலர் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை

இ) பாலர் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை

ஈ) பாலர் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை 

  • பள்ளிக்கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டத்தை 2021-22ஆம் ஆண்டு முதல் 2025-26ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு தொடர பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதியளித்துள்ளது.
  • அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல்; மாணவிகளின் விடுதிகளுக்கு அணையாடை வழங்கும் எந்திரங்கள் & சாம்பலாக்கிகள் ஆகியவை வழங்குதல்; மேல்நிலைப்பள்ளிகளில் துணைப்பாட பிரிவுகளுக்குப்பதில் புதிய பாடப்பிரிவுகளை சேர்த்தல்; முழுமையான, முன்னேற்றத்தை தெரிவிக்கும் பல பரிமாண அறிக்கை, முழுமையான மதிப்பெண் அட்டை வடிவில் அறிமுகப்படுத்துதல்; அனைத்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களையும் மேம்படுத்துதல் ஆகியவை திருத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் முன்னெடுப்புகளுள் ஒன்றாகும். சமக்ர சிக்ஷா திட்டமானது பாலர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியை உள்ளடக்கியது.

9. DefExpo-2022 நடைபெறவுள்ள இடம் எது?

அ) காந்திநகர் 

ஆ) சூரத்

இ) குருகிராம்

ஈ) லக்னோ

  • DefExpo-2022 ஆனது 2022 மார்ச் 11, 13 அன்று காந்திநகரில் (குஜராத்) நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சகமானது ஈராண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்பு கண்காட்சி மற்றும் ஏரோ இந்தியா வடிவில் இராணுவ கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறது. ‘DefExpo’ என்பது அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தரை மற்றும் கடற்படை அமைப்புகளின் கண்காட்சியாகும். DefExpo’இன் முந்தைய பதிப்பு லக்னோவில் நடந்தது. 2014’க்கு முன்புவரை, இது, புதுதில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

10.ஒலிம்பிக்கில், 100 மீ மற்றும் 200 மீ பட்டங்களை தக்கவைத்துக் கொண்ட முதல் பெண்மணி யார்?

அ) எலைன் தாம்சன் 

ஆ) டினா ஆஷர்-ஸ்மித்

இ) இமானி-லாரா லான்சிகோட்

ஈ) டேரில் நீட்டா

  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், எலைன் தாம்சன், 100 மீ மற்றும் 200 மீ ஒலிம்பிக் பட்டங்களை வென்ற முதல் பெண்மணி ஆனார். அவர், ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவர் 4 முறை ஒலிம்பிக் சாம்பியnaaவார். அவர் 100 மீ (பெண்கள் பிரிவு) பந்தயத்தை 10.61 வினாடிகளில் முடித்து தேசிய மற்றும் ஒலிம்பிக் சாதனையை படைத்தார். 200 மீ ஓட்டத்தை, 21.53 வினாடிகளில் முடித்து 2ஆவது வேகமான பெண் எனச் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கிரிபித்-ஜாய்னர் முதல் வேகமான பெண்மணியாக கருதப்படுகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிறந்த பேரூராட்சியான கல்லக்குடி; சாத்தியமானது எப்படி?

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குப்பைக் கிடங்கை வளமீட்பு பூங்காவாக மாற்றியமைத்து, மண் புழு உரம், இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் வருவாயைப் பெருக்கியுள்ள கல்லக்குடி பேரூராட்சியை தமிழகத்தில் சிறந்த பேரூராட்சியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேரூராட்சிப் பகுதி உணவகங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் தினசரி பெறப்படும் குப்பைகளை அதே பகுதியில் சுமார் 1.30 ஏக்கர் இடத்தில் மலை போலக் கொட்டி வைக்கின்றனர்.

இவற்றை மக்கும், மக்கா குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம், இயற்கை உரம், மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் போன்றவற்றைத் தயாரித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்கின்றனர். மேலும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் போன்றவற்றை அருகிலுள்ள சிமெண்ட் ஆலைகளுக்கும் விற்கின்றனர். இதனால் குப்பைகள் சேமிக்கும் இடத்தின் அளவு குறுகியதால், பிற இடங்களில் மூலிகைச் செடிகளான ஓமவள்ளி, கருந்துளசி, நொச்சி, ஆடாதுளை, முடக்கத்தான் போன்றவற்றை வளர்க்கின்றனர்.

இங்கு தயாரிக்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தென்னை, கொய்யா, நாவல் மரம் மற்றும் காய்கறித் தோட்டங்கள் அமைத்து அதிலிருந்தும் வருவாய் பெறுகின்றனர். இக் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், புறா, மீன் போன்றவற்றின் கழிவுகளும் உரங்கள் தயாரிக்கப் பயன்படுவதுடன், மாடுகளின் கழிவுகளிலிருந்து இயற்கை வாயுவும் தயாரிக்கப்படுகிறது. இது குப்பைக் கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேநீர் தயாரிக்க உதவுகிறது.

இதுமட்டுமல்லாது இந்தக் குப்பைக் கிடங்கில் நான்கில் ஒரு பகுதி இடத்தில் குப்பைக் கிடங்கும் பிற இடங்களில் மண் புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கும் இடமாகவும், பிற இடங்களில் பசுமைத் தோட்டம் அமைத்து அதில் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையிலும் அமைத்து வளமீட்பு பூங்காவாக மாற்றியுள்ளனர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையிலான பணியாளர்கள். இது மட்டுமல்லாது பேரூராட்சிப் பகுதியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், வறுமை ஒழிப்பு, நிதி மேலாண்மை போன்ற பணிகளையும் சிறப்பாக செய்துள்ளனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

இந்தப் பணிகளை ஆய்வு செய்த திருச்சி மண்டலப் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர், அதன் ஆய்வறிக்கையை சென்னை பேரூராட்சி இயக்குநருக்கு அனுப்பியதன் மூலம் தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் கல்லக்குடி சிறந்த பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டு அதற்கான விருது, ரொக்கப் பரிசாக ரூ. 10 லட்சம் வரும் ஆக. 15- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கவுள்ளார். பணியாளர்கள், மக்கள் ஒத்துழைப்பே காரணம்: இதுகுறித்து கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது கூறுகையில், பேரூராட்சியின் அனைத்துப் பணியாளர்களும் மக்களுக்குச் சிறப்பான பணியாற்றினர். இதற்கு காரணம் பேரூராட்சி நிர்வாகம் அவர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தியதே. மேலும் பொதுமக்களும் பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர் என்றார் அவர்.

2. கடற்படைக்கு வரலாற்றுத் தருணம்! | இந்திய கடற்படையின் வரலாற்றுச் சாதனை குறித்த தலையங்கம்

இந்தியா தனது சுதந்திர தின பவள விழா ஆண்டை நெருங்கும் வேளையில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறது. இந்திய கடற்படைக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட போா்க்கப்பல் தனது முதல் சுற்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டும்தான் தாங்களே வடிவமைத்து விமான தளங்களுடன் கூடிய போா்க்கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் வல்லமை இருந்து வந்தது. இப்போது 76% உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து, ஒரு போா்க்கப்பலை உருவாக்கி வெற்றிகரமாக அதன் சோதனை ஓட்டத்திலும் இறங்கியிருப்பதன் மூலம் இந்தியாவின் சா்வதேச வல்லமை உறுதிப்பட்டிருக்கிறது.

இந்திய கடற்படைக்கு இது ஒரு வரலாற்றுத் தருணம். இதற்கு முன்னாலும் இந்திய கடற்படையிடம் விமானம் தாங்கி போா்க்கப்பல்கள் இருந்தன என்றாலும், அவை எதுவும் இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்டவை அல்ல. 1961-இல் இந்திய கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் விக்ராந்த்தும், 1982-இல் இணைந்த ஐஎன்எஸ் விராத்தும் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள். அதற்குப் பிறகு இந்திய கடற்படை வாங்கிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ரஷியாவால் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் அப்படியல்ல. 76% இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்ட, நாமே தயாரித்திருக்கும் போா்க்கப்பல்.

இந்தக் கப்பலை வடிவமைத்ததிலும், கட்டுமானம் செய்ததிலும் இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்ககமும், அரசு நிறுவனமான கொச்சி கப்பல் கட்டுமானத் தளமும் பாராட்டப்பட வேண்டியவை. காலதாமதம், அதிகரித்துவிட்ட முதலீடு என்று எத்தனையோ தடைகளையும், பிரச்னைகளையும் தாண்டி வியக்க வைக்கும் பிரம்மாண்டமான போா்க்கப்பல் உருவாகியிருக்கிறது. கொச்சின் கப்பல் கட்டுமானத் தளம் பல வா்த்தகக் கப்பல்களைத் தயாரித்திருப்பதற்கும் இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஐஎன்எஸ் விராத்தின் பராமரிப்புப் பணிகளை தொடா்ந்து மேற்பாா்வையிட்டுக் கொண்டிருந்த அனுபவம் கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்துக்கு இதை உருவாக்குவதில் கைகொடுத்திருக்கிறது என்று கூறலாம்.

1980 முதலே நமக்கென்று நாமே போா்க்கப்பல் தயாரிக்க வேண்டும் என்கிற கனவு இந்திய கடற்படைக்கு இருந்து வந்தது. ஆனால், 2002-இல் வாஜ்பாய் ஆட்சியில்தான் அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்படும் போா்க்கப்பலுக்கு அனுமதி வழங்கியது. 2009-இல் மன்மோகன் சிங் அரசால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2014-இல் காலதாமதத்துக்கு ஏற்றவாறு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, இப்போது ரூ.20,000 கோடி செலவில் ஐஎன்எஸ் விக்ராந்த் தனது வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி இந்த போா்க்கப்பல் பல அம்சங்களில் மேம்பாடு உடையது. இதன் தயாரிப்பின் காரணமாக அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா, தரமான இரும்பை உருவாக்கும் திறன் பெற்றிருக்கிறது. இதன் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில் நுட்பத்தை டிஃபன்ஸ் மெட்டலா்ஜிக்கல் ஆய்வுக் கூடமும் பெற்றிருக்கிறது. கொச்சி கப்பல் கட்டுமானத் தளம், போா்க்கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்ப மேம்பாட்டை அடைந்திருக்கிறது. 40,000 டன் எடையுள்ள விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 222 மீட்டா் நீளமும், 62 மீட்டா் அகலமும், 59 மீட்டா் உயரமும் கொண்ட பிரம்மாண்டம். இதில் காணப்படும் எட்டு டீசல் அல்டா்னேட்டா்களின் மூலம் உருவாக்கப்படும் 24 மெகாவாட் மின்சாரத்தால் ஒரு நகரத்திற்கே ஒளியூட்ட முடியும். இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட கேளிள்களின் நீளம் 2,000 கி.மீ. இதற்குத் தேவைபட்ட சிறிய, பெரிய குழாய்களின் மொத்த நீளம் 120 கி.மீ.

ஐஎன்எஸ் விக்ராந்த் 12 அடுக்குகள் கொண்டது. அதில் ஐந்து அடுக்குகள் கப்பலுக்கு மேலே உயா்ந்து நிற்கின்றன. ஏறத்தாழ 1,700 பேருக்கான வசதிகள், கடற்படை வீரா்களாக மகளிரும் பங்கு பெறுவதால் அவா்களுக்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் 2,300 அறைகள் உள்ளன. 30 விமானங்கள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் பைட்டா் ஜெட்டுகள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இந்த போா்க்கப்பல் உள்ளடக்கியுள்ளது. அதில் விக்ரமாதித்யா போலவே, எம்ஐஜி 29 கே விமானங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. கமோவ் 31 ஹெலிகாப்டா்கள், புதிதாக வாங்க இருக்கும் அமெரிக்காவின் சிகாக் ஹெலிகாப்டா்கள் ஆகியவையும் இடம்பெறும்.

18 கடல் மைல் வேகத்தில் 7,500 கடல் மைல்கள் பயணிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த். இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறைக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். கப்பலிலுள்ளஉதிரி பாகங்களை வழங்கியிருப்பதில் நூற்றுக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் உள்பட 550 நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன. 2012 வரை ஒரு விமானம் தாங்கி போா்க்கப்பல்கூட இல்லாமல் இருந்த சீனா, இப்போது இரண்டாவது கப்பலை தயாரித்துவிட்டது. சீனாவிடம் ஐந்து விமானம் தாங்கிய போா்க்கப்பல்கள் இருக்கின்றன. அதனால், காலதாமத்தைத் தவிா்த்து அடுத்த விமானம் தாங்கிய போா்க்கப்பலுக்கு நாம் தயாராக வேண்டும்.

3. ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி

புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் இன்று வியாழக்கிழமை விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்தது. புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடபட்டது. ஆனால், கரோனா பரவலால் ராக்கெட் ஏவுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மீண்டும் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினா் ஈடுபட்டு வந்தனர். இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் புதன்கிழமை அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

4. டெக்ஸாஸ் பல்கலை.யில் உதவித் தொகையுடன் கூடிய கல்விக்கு தமிழக வீராங்கனை தோ்வு

தமிழகத்தைச் சோ்ந்த வட்டு எறிதல் ஜூனியா் வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கா் (18), அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் விளையாட்டுக்கான முழு உதவித்தொகையுடன் (சுமாா் ரூ.1.5 கோடி) சோ்க்கை பெற்றுள்ளாா். டெக்ஸாஸின் எல் பாசோ நகரில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தில் இத்தகைய உதவித்தொகையுடன் சோ்க்கை பெற்றிருக்கும் முதல் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை, முதல் தமிழக தடகள வீராங்கனை ஆகிய பெருமைகளை அவா் பெற்றுள்ளாா்.

தற்போது ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் பயிற்சியாளா் ஹொரேஸ் மைக்கேல் வாசெலிடம் பயிற்சி பெற்று வரும் கிருஷ்ணா ஜெய்சங்கா், ஜூனியா் மகளிா் வட்டு எறிதல் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்திலும், ஆசிய அளவில் 8-ஆவது இடத்திலும் இருக்கிறாா். வட்டு எறிதலில் அவா் சிறப்பிடத்தில் இருப்பதன் அடிப்படையில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்தப் பல்கலை.யில் ‘கைன்சியாலஜி’ எனப்படும் உடலியக்கம் சாா்ந்த 5 ஆண்டு படிப்பை தோ்வு செய்துள்ளாா் கிருஷ்ணா ஜெயசங்கா்.

முன்னதாக அவா் 40.69 மீட்டா் தூரம் வட்டு எறிந்து 2019-இல் நடைபெற்ற 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான தெற்கு மண்டல ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்பில் எட்டப்பட்ட சாதனையை முறியடித்துள்ளாா். அத்துடன், 2019 தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப்பில் 18 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில் 3-ஆவது வீராங்கனையாக வந்தாா். கிருஷ்ணா ஜெய்சங்கரின், தந்தை ஜெயசங்கா் மேனன் இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் என்பதும், அவரது தாயாா் பிரசன்னா ஜெயசங்கா் இந்திய மகளிா் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய தோ்வாளா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று அதற்கான விருதும் பரிசுத் தொகையும் தமிழக முதல்வரால் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தஞ்சாவூர் மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பாராட்டி நகர்புற வளர்ச்சி துறை சார்பில், தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் சிறந்த மாநகராட்சிக்கான விருது 25 லட்சத்துக்கான பரிசுத் தொகைக்கான காசோலை வழங்க உள்ளார்.

1. Who has been appointed as the Prime Minister of Armenia?

A) Nikol Pashinyan 

B) Artur Sargsyan

C) Aram Vardevanian

D) Armen Sarkissian

  • Nikol Pashinyan, the chairman of the Civil Contract Party has been re–appointed as the Prime Minister of Armenia. He was first appointed as the Prime Minister in 2018. President Armen Srkissian approved Pashinyan’s candidacy for the post of Prime Minister of Armenia.
  • Armenia is a country in Asia. It lies in the mountainous Caucasus region between Asia and Europe. Yerevan is the capital of Armenia and Armenian dram is its currency.

2. Who is/was the first Indian Prime Minister to chair UNSC debate?

A) Indira Gandhi

B) Dr Manmohan Singh

C) Narendra Modi 

D) Atal Bihari Vajpayee

  • India started its two–year tenure as non–permanent member of United Nations Security Council (UNSC) on January 1, 2021. India is holding the presidency of UNSC for August and Narendra Modi has become the first Prime Minister to chair an open debate at UNSC.
  • India has been a member of UNSC in 1950–51, 1967–68, 1972–73, 1977–78, 1984–85 and 1991–92 earlier. UNSC was created after World War II when league of Nations failed to maintain world peace. The first session of UNSC was held on January 17, 1946. It is among six principal organs of United Nations and is tasked with ensuring international peace and security.

3. Who won the gold medal in women’s singles badminton at Tokyo Olympics?

A) Greysia Polii

B) P V Sindhu

C) Tai Tzu–ying

D) Chen Yufei 

  • Chen Yufei won the gold medal in women’s singles badminton at Tokyo Olympics on August 2, 2021. She defeated Taiwan’s Tai Tzu ying 21–18, 19–21, 21–18 to capture the title. She is a Chinese badminton player. She won the girls’ singles junior titles at the 2016 Asian and the World Junior Championships. In 2017, she was awarded the “2017 Most Promising Player of the Year”.

4. Who won the gold medal in men’s singles badminton at Tokyo Olympics on August 2, 2021?

A) Viktor Axelsen 

B) Chen Long

C) Kevin Cordon

D) Wang Tzu–wei

  • Viktor Axelsen won the gold medal in men’s singles badminton at Tokyo Olympics on August 2, 2021. He belongs to Denmark. He defeated Chen long of china who won the gold medal in 2016 Olympics held in Rio de Janeiro, Brazil. Viktor Axelsen is the 2017 World Champion and the gold medalist of 2020 Summer Olympics.
  • He became the first European player to won the World Junior Championship. He defeated Kang Ji–wook of Korea in 2010 and won the World Junior Championship.

5. Who has been appointed as the special trade envoy of Australian Prime Minister?

A) Tony Abbott 

B) S Jaishankar

C) Piyush Goyal

D) Rakesh Asthana

  • Tony Abbott has been appointed as the special trade envoy of Australian Prime Minister for his visit to India. He has been appointed with a purpose to deepen trade and investment links that will help drive post–covid recovery.
  • The main focus of the proposed meeting will be on the building of ‘secure and resilient supply chains’. Tony Abbott was the former Prime Minister of Australia. He was appointed as the 28th Prime Minister of Australia from 2013–2015.

6. As per the data of NCRB, which Indian state registered the maximum number of suicides due to unemployment in 2019?

A) Bihar

B) Karnataka 

C) Rajasthan

D) Himachal Pradesh

  • Suicide cases due to unemployment have increased by 24% in 2019 as compared to 2016. As per the data of NCRB, Karnataka registered the maximum number of suicides (553) due to unemployment in 2019. Karnataka is followed by Maharashtra and Tamil Nadu.
  • National Crime Records Bureau (NCRB) is an Indian agency which collects and analyses crime data in accordance with the Indian Penal Code (IPC) and Special Local Laws (SLL). NCRB was set up in 1986. It is headquartered in New Delhi and works under the Ministry of Home Affairs (MHA). IPS Ramphal Pawar is the current director of NCRB.

7. Which nation, India has defeated to clinch the bronze medal in hockey in the Tokyo Olympics?

A) Belgium

B) Germany 

C) Argentina

D) Netherlands

  • The Indian men’s hockey team has claimed an Olympic medal after 41 years, beating Germany 5–4 to claim the bronze in the ongoing Olympic Games on 5th August, 2021. It is India’s third hockey bronze medal in the history of the Olympics. The other two came in 1968 Mexico City and the 1972 Munich Games.

8. Samagra Shiksha Scheme covers the school education from which class to which class?

A) From preschool to Class 11

B) From preschool to Class 10

C) From preschool to Class 9

D) From preschool to Class 12 

  • The Union Cabinet on 4th August, 2021 approved the continuation of the Samagra Shiksha Scheme for school education for another five years. Provision of training of master trainers for Anganwadi workers, incinerator and sanitary pad vending machines in all girls’ hostels, addition of new subjects instead of stream in existing senior secondary schools, holistic progress card for each learner, and upgrade of all Kasturba Gandhi Balika Vidyalayas up to class 12 are among the initiatives in the revised scheme. Samagra Shiksha Scheme covers the school education from preschool to Class 12.

9. At which place, DefExpo–2022 is scheduled to be held?

A) Gandhinagar 

B) Surat

C) Gurugram

D) Lucknow

  • DefExpo–2022 is scheduled to be held from 11–13 March, 2022 in Gandhinagar (Gujarat). Ministry of Defence organises Military exhibitions in form of the Defence Expo and the Aero India every two years. DefExpo is basically the land and naval systems show of the Defence Ministry. The last edition of the DefExpo was held in Lucknow. Before 2014, It was used to be organised only in New Delhi.

10. Who is the first woman to retain 100m and 200m titles at the Olympics?

A) Elaine Thompson 

B) Dina Asher–Smith

C) Imani–Lara Lansiquot

D) Daryll Neita

  • At the Tokyo Olympics 2020, Elaine Thompson becomes the first woman to retain 100m and 200m Olympic Titles. She is from Jamaica. She is a four–time Olympic champion. She set a national and Olympic record of finishing 100m (women’s category) race in 10.61 seconds. She is the second–fastest woman in the 200metres with a time of 21.53 seconds. Griffith–Joyner of the United States of America is considered as the fastest woman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!