TnpscTnpsc Current Affairs

12th & 13th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th & 13th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th & 13th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாடு – 2022 நடைபெறும் நாடு எது?

அ) ஜிம்பாப்வே

ஆ) மாலி

இ) எத்தியோப்பியா 

ஈ) தென்னாப்பிரிக்கா

  • 2022ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாடு அண்மையில் எத்தியோப்பியாவில் அமைந்துள்ள AU தலைமையகத்தில் அடிஸ் அபாபாவில் தொடங்கியது.
  • பல்வேறு இராணுவ சதிப்புரட்சிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த உச்சிமாநாடு நடைபெற்றது. இரு நாள் நடைபெற்ற இவ்வுச்சிமாநாடு கடந்த 18 மாதங்களில் நிகழ்ந்த 6 ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது சதித்திட்ட முயற்சிகள் மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங் -கள்பற்றி விவாதித்தது.

2. ‘வடிவமைப்புக் கூடங்களின் மேம்பாடு’ என்பது எந்த திட்டத்தின்கீழ் ஒரு புதிய துணைத் திட்டமாக உள்ளது?

அ) இந்திய காலணி & தோல் மேம்பாட்டு திட்டம் 

ஆ) வடிவமைப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்

இ) PM YUVA திட்டம்

ஈ) PM KUSUM திட்டம்

  • இந்திய காலணி & தோல் மேம்பாட்டுத் திட்டத்தை (IFLDP) 2021-22 முதல் `1,700 கோடி செலவில் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நடுவண் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘வடிவமைப்புக் கூடங்களின் மேம்பாடு’ (உத்தேச செலவு `100 கோடி) என்பது இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள ஒரு புதிய துணைத்திட்டமாகும்.
  • தோல் தொழிற்துறைக்கான உட்கட்டமைப்பை மேம்படுத் -துதல், சுற்றுச்சூழல் சிக்கல்களை நிவர்த்தி செய்தல், முதலீடுகளை எளிதாக்குதல், வேலைவாய்ப்பு உருவாக்க -ம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதை IFLDP தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ‘இராட்சச மாகெல்லன் தொலைநோக்கி’த் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) பிரான்ஸ்

இ) ரஷ்யா

ஈ) சீனா

  • பிரம்மாண்ட மாகெல்லன் தொலைநோக்கியை உள்ளடக்கிய US பிரம்மாண்ட தொலைநோக்கி திட்டம் ஆனது ஆஸி, பிரேஸில் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்காவால் வழிநடத்தப்படுகிறது.
  • சிலி இத்திட்டத்தை நடத்துகிறது. $1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இத்திட்டம், ‘வானியல் மற்றும் வான் இயற்பியல்பற்றிய 2020 தசாப்த ஆய்வினால்’ ‘மிஷன் கிரிட்டிகல்’ எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

4. சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) இராஜஸ்தான் 

இ) பஞ்சாப்

ஈ) உத்தர பிரதேசம்

  • சரிஸ்கா புலிகள் காப்பகம் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் உள்ளது. புலிகளின் வாழ்விட மேலாண்மைக்கான பல்வேறு நடவடிக்கைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அக்காப்பகத்தில் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக, அக்காப்பாகத்தில் புலிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

5. கீழ்காணும் எந்நாட்டின் அதிபராக 2ஆவது முறையாக செர்ஜியோ மேட்டரெல்லா தெரிவு செய்யப்பட்டுள்ளார்?

அ) பிரேசில்

ஆ) இத்தாலி 

இ) பிரான்ஸ்

ஈ) உக்ரைன்

  • இத்தாலியின் அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா சமீபத்தில் நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமியற்றுபவர்கள் & பிராந்திய பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில்,
    மெட்டரெல்லா அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபரானார். 80 வயதான மெட்டரெல்லா 2015ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் அதிபராக பணியாற்றி வருகிறார்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘HERMES’ திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ‘HERMES’ என்பது Heliophysics Environmental & Radiation Measurement Experiment Suite என்பதைக் குறிக்கிறது. இது நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். HERMES என்பது நாசாவின் நிலவுச்சுற்றுப் பாதயின் நுழைவாயிலுக்கு வெளியே நிறுவப்படும் ஒரு நான்கு-கருவி தொகுப்பாகும்.
  • HERMES விண்வெளி வானிலை மற்றும் சூரியனால் விண்வெளியில் ஏற்படும் ஏற்றஇறக்கமான நிலைகளை கண்காணிக்கும்.

7. “United for Dignity” என்ற பிரச்சாரம், எந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணியத்தை மதிக்கின்றது?

அ) COVID

ஆ) தொழுநோய் 

இ) புற்றுநோய்

ஈ) காசநோய்

  • உலக தொழுநோய் நாளானது ஜனவரி கடைசி ஞாயிறு அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டில், உலக தொழுநோய் நாள் ஜனவரி.30 அன்று அனுசரிக்கப் -பட்டது. “United for Dignity” பிரச்சாரம் தொழுநோயை அனுபவித்த மக்களின் கண்ணியத்தை மதிப்பதற்காக அழைப்புவிடுக்கிறது.
  • தொழுநோய் ஒழிப்புக்கான WHO’இன் நல்லெண்ணத் தூதர் “Don’t forget leprosy” என்ற பிரச்சாரத்தைத் தொட -ங்கினார். இந்தியாவில், மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி.30 அன்று தொழுநோய் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

8. எரிசக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பவர்தான் -2022 என்ற ஹேக்கத்தானின் மைய முகமை எது?

அ) PFC

ஆ) REC 

இ) NITI ஆயோக்

ஈ) ONGC

  • மத்திய எரிசக்தி அமைச்சர் R K சிங், தரமான எரிசக்தி வழங்குவதற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தீர்வுகளைக் கண்டறிவதற்காக ‘பவர்தான்-2022’ என்ற ஹேக்கத்தானைத் தொடங்கினார். REC லிட், IIT பாம்பே இன் Society for Innovation and Entrepreneurship (SINE) உடன் இணைந்து மைய முகமையாக செயல்படுகிறது.
  • RDSS’இன் (Revamped Distribution Sector Scheme) கீழ் இது தொடங்கப்பட்டது. புதிய எண்ணங்கள் மற்றும் கருத்துகளுக்கு உரிமத்துடன் வெகுமதி அளிக்கப்படும்.

9. ‘மத்திய ஊடக அங்கீகார வழிகாட்டுதல்கள்-2022’ஐ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

இ) தகவல்தொடர்பு அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • மத்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகமானது ‘மத்திய ஊடக அங்கீகார வழிகாட்டுதல்கள்–2022’ஐ வெளியிட்டது.
  • இந்தியாவின் இறையாண்மை & ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பத்திரிகையாளர் ஒருவர் செயல்பட்டால், அவரது அங்கீகாரம் இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்ற கடுமையான விதியை இது உள்ளடக்கியுள்ளது.

10. ‘கஞ்சோத் திருவிழா’ கொண்டாடப்படுகிற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) பீகார்

ஆ) ஜம்மு-காஷ்மீர் 

இ) மேற்கு வங்கம்

ஈ) அஸ்ஸாம்

  • ‘கஞ்சோத் விழா’ என்பது நாக கலாச்சாரத்தைப்பின்பற்றும் மக்களின் ஒரு மதஞ்சார் நிகழ்வு ஆகும். இது சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இந்தத்திருவிழாவின்போது பார்வதிதேவியுடனான சிவபெருமானின் திருமணத்தை மக்கள் கொண்டாடுகிறா -ர்கள். இது கௌரி-திருதியை என்றுமழைக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடர் அகழாய்வுப் பணிகள்: 3 இடங்களில் புதிதாக ஆய்வு

கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடர் அகழாய்வுப் பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார். வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி உள்பட 3 இடங்களில் முதல் கட்ட ஆய்வுப்பணிகளையும் அவர் தொடக்கினார்.

நான்கு இடங்கள்: தமிழகத்தில் 4 இடங்களில் வெவ்வேறு கட்டங்களாக ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 2 கட்டங்களும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கீழடியில் எட்டாம் கட்டமாகவும், சிவகளையில் மூன்றாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரத்தில் 2ஆம் கட்ட ஆய்வுப்பணிகளும் தொடக்கப்படவுள்ளன. வெம்பக் கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் ஆய்வுப்பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்படவுள்ளன.

புதிதாக ஆய்வு: விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் 25 ஏக்கர் பரப்பிலான தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரையிலான வாழ்வுக்குரிய அடையாளங்கள் வெளிப்படுகின்றன. இப்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளைச் சேகரிப்பதாகும்.

துலுக்கர்பட்டி-பெரும்பாலை: திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றின் இடக்கரையில் துலுக்கர்பட்டி அமைந்து உள்ளது. இந்த ஊரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5 கிமீட்டர் தொலைவில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட உள்ள அகழ்வு ஆய்வின் குறிக்கோள், செறிவுமிக்க தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை, தொல்பொருள்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதாகும். நம்பியாற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதும் அகழாய்வின் நோக்கம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 25 கிமீட்டர் தொலைவில் பாலாற்றின் இடதுகரையில் பெரும்பாலை அமைந்துள்ளது. இங்குள்ள வாழ்விட மேடானது இப்போதைய நிலவியல் அமைப்பில் இருந்து 3 முதல் 4 மீ உயரத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் ஆற்றங் கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது அகழாய்வின் நோக்கமாகும்.

பதினைந்து லட்சம் ஆண்டுகள் கொண்ட நிலப்பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிகளவிலான சான்றுகள் தேவை. இதனைப் பூர்த்தி செய்ய அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

2. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம்: சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கிறது

சிங்கப்பூரில் விமான கண்காட்சி – 2022இல் இலகு இஇரக தேஜஸ் போர்விமானம் பங்கேற்கிறது.

வான்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் நவீன தேஜஸ் மார்க் 1 இஇரக போர் விமானம் கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. தேஜஸ் இரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கூடுதல் சிறப்பு அம்சங்கள், தாக்குதல், கண்காணிப்பு திறன் கொண்டவை.

இந்த இலகு இரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிட் நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்படுகிறது. இந்தநிலையில் சிங்கப்பூரில் விமான கண்காட்சி – 2022இல் இலகு இரக தேஜஸ் போர் விமானம் பங்கேற்கிறது.

சிங்கப்பூரில் நடைபெறும் விமான கண்காட்சி – 2022இல் பங்கேற்க 44 பேரைக்கொண்ட இந்திய விமானப் படையினர் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர். இந்த விமான கண்காட்சி வரும் 15 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. சர்வதேச விமான தொழில்துறை இரண்டாண்டுக்கு ஒருமுறை தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த சிங்கப்பூர் விமானக் கண்காட்சி வழிவகுத்துள்ளது.

பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு இரக தேஜஸ் எம்கே-I போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப்படுத்தவுள்ளது.

1. Which is the host country of the African Union Summit 2022?

A) Zimbabwe

B) Mali

C) Ethiopia 

D) South Africa

  • The African Union Summit 2022 recently began in the AU Headquarters Addis Ababa, Ethiopia. The summit was held amidst a range of military coups and the coronavirus pandemic in the continent. The two–day summit will address six coups or attempted coups over the past 18 months and low vaccination rates.

2. ‘Development of design studios’ is a new sub–scheme under which scheme?

A) Indian Footwear and Leather Development Programme 

B) Design Linked Incentive Scheme

C) PM YUVA Yojana

D) PM KUSUM Scheme

  • Indian Footwear and Leather Development Programme (IFLDP) has been approved for continuation from 2021–22 with an outlay of ₹1,700 crore, as per the Ministry of Commerce. ‘Development of design studios’ (proposed outlay ₹100 crore) is a new sub–scheme under the scheme.
  • IFLDP aims to develop infrastructure for leather sector, address environmental concerns, facilitate investments, employment generation and increase in production.

3. Which country leads the ‘Giant Magellan Telescope’ project?

A) USA 

B) France

C) Russia

D) China

  • The U.S. Extremely Large Telescope Program, which includes the Giant Magellan Telescope (GMT), is led by the US and in partnership with Australia, Brazil, and South Korea, with Chile as the host country. The USD 1 billion project was ranked ‘Mission Critical’ by the 2020 Decadal Survey on Astronomy and Astrophysics.

4. Sariska Tiger Reserve is located in which Indian state?

A) Gujarat

B) Rajasthan 

C) Punjab

D) Uttar Pradesh

  • Sariska Tiger Reserve is located in Rajasthan’s Alwar district. Several measures for habitat management for tigers were launched about six months ago at the Reserve. As a result, the tiger population in the wildlife sanctuary has gone up to 25.

5. Sergio Mattarella has been elected as the President of which country for the second term?

A) Brazil

B) Italy 

C) France

D) Ukraine

  • Italian President Sergio Mattarella has been elected to a second term in the recent round of elections. Mattarella was reconfirmed with a broad majority, in the voting done by lawmakers and regional representatives. The 80–year–old Sergio Mattarella has been serving as the country’s President since 2015.

6. ‘HERMES Mission’ seen in the news is associated with country?

A) USA 

B) Russia

C) China

D) UAE

  • HERMES stands for Heliophysics Environmental and Radiation Measurement Experiment Suite. It is a critical part of NASA’s Artemis mission. HERMES is a four–instrument suite to be mounted outside NASA’s Moon–orbiting Gateway, and has recently passed a critical mission review. HERMES will monitor the space weather and the fluctuating conditions in space driven by the Sun.

7. “United for Dignity” Campaign honors the dignity of people who have experienced which disease?

A) COVID

B) Leprosy 

C) Cancer

D) Tuberculosis

  • World Leprosy Day (WLD) is observed on the last Sunday of January. In 2022, World Leprosy Day is 30 January. The “United for Dignity” campaign calls for unity in honoring the dignity of people who have experienced leprosy.
  • WHO Goodwill Ambassador for leprosy elimination launched “Don’t forget leprosy” campaign. In India, Anti–Leprosy Day is observed on 30 January, the death anniversary of Mahatma Gandhi.

8. Which is the nodal agency of Powerthon–2022, a hackathon launched by the Union Power Ministry?

A) PFC

B) REC 

C) NITI Aayog

D) ONGC

  • Union Power Minister R K Singh launched a hackathon, named Powerthon–2022, to find tech–driven solutions for quality power supply. REC Limited, in collaboration with Society for Innovation and Entrepreneurship (SINE), IIT Bombay, acts as the nodal agency.
  • It is launched under RDSS (Revamped Distribution Sector Scheme). New ideas and concepts will be rewarded with licence.

9. Which Union Ministry launched the ‘Central Media Accreditation Guidelines–2022’?

A) Ministry of Electronics and IT

B) Ministry of Information and Broadcasting 

C) Ministry of Communication

D) Ministry of Home Affairs

  • The Ministry of Information and Broadcasting released Central Media Accreditation Guidelines–2022. It includes a stringent provision under which the accreditation is liable to be suspended or withdrawn if a journalist ‘acts in a manner which is prejudicial to the sovereignty and integrity of India, the security of the State’ among others.

10. ‘Kanchoth festival’ is celebrated in which Indian state/UT?

A) Bihar

B) Jammu and Kashmir 

C) West Bengal

D) Assam

  • ‘Kanchoth festival’ is a religious and colourful events for the followers of Nag Culture. It was recently celebrated across erstwhile district Doda of Jammu and Kashmir. The people celebrate marriage of Lord Shiva with Goddess Parvati. It is also called as Gauri–Tritya.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!