General Tamil

11th Tamil Unit 5 Questions

11th Tamil Unit 5 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.

1. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு புதுச்சேரியின் எந்த நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.

அ) 17ம் நூற்றாண்டு

ஆ) 18ம் நூற்றாண்டு

இ) 19ம் நூற்றாண்டு

ஈ) 20ம் நூற்றாண்டு

2. டைரியம் என்பது _____ மொழி சொல்லின் மூலமான டைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.

அ) ஆங்கிலம்

ஆ) பிரஞ்சு

இ) இலத்தீன்

ஈ) போர்ச்சுக்கீசியம்

3. நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு.

அ) EPHERIDES

ஆ) EPHEMERS

இ) EPHEMERIDES

ஈ) EPHEDIARY

4. EPHEMERIDES என்ற சொல்லின் பொருள்

அ) ஒரு நாளுக்கான முடிவு

ஆ) ஒரு மாதத்திற்கான முடிவு

இ) ஒரு வாரத்திற்கான முடிவு

ஈ) ஒரு வருடத்திற்கான முடிவு

5. முகலாய மன்னர்களில் யாருடைய காலத்திலிருந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

அ) அக்பர்

ஆ) பாபர்

இ) ஷாஜகான்

ஈ) ஒளரங்கசீப்

6. முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது

அ) அக்பர்

ஆ) பாபர்

இ) ஷாஜகான்

ஈ) ஒளரங்கசீப்

7. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியை வாஸ்கோடாகாமா கண்டுபிடித்த ஆண்டு

அ) 1496

ஆ) 1498

இ) 1500

ஈ) 1489

8. வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அ) ஆனந்தரங்கர்

ஆ) துய்ப்ளே

இ) ஆல்வாரோ வெல்லோ

ஈ) பிரான்சுவா மர்த்தேன்

9. ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

அ) 24

ஆ) 25

இ) 26

ஈ) 27

10. ஆனந்தரங்கர் ____ என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

அ) துய்ப்ளே

ஆ) ராபர்ட் கிளைவ்

இ) டூமாஸ்

ஈ) அல்போன் சோ டி அல்புகர்க்

11. புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை வகித்த கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர்

அ) நைனியப்பர்

ஆ) திருவேங்கடம்

இ) ஆனந்தரங்கர்

ஈ) பிரான்சுவா மர்த்தேன்

12. ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?

அ) பாண்டிச்சேரி, 30.மார்ச்.1709

ஆ) பெரம்பலூர், 9.மார்ச்.1730

இ) பெரம்பூர், 30.மார்ச்.1709

ஈ) பெரம்பலூர், 30.மார்ச்.1709

13. ஆனந்தரங்கர் யாருடைய உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச் சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அ) துய்ப்ளே

ஆ) பிரான்சுவா மர்த்தேன்

இ) கியோம் ஆந்த்ரே

ஈ) அலனுவார்

14. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில் ஆனந்தரங்கர் _____ ஆக பணியாற்றினார்.

அ) துஷிபாஷி

ஆ) தலைமை துஷிபாஷி

இ) உரைபெயர்ப்பாளர்

ஈ) உதவி உரைபெயர்ப்பாளர்

15. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 13

16. நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற பிரெஞ்சு ஆளுநர்

அ) துய்ப்ளே

ஆ) ராபர்ட் கிளைவ்

இ) டூமாஸ்

ஈ) அல்போன் சோ டி அல்புகர்க்

17. ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.

அ) 10.09.1736

ஆ) 09.10.1736

இ) 03.06.1736

ஈ) 10.09.1763

18. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) ஆனந்தரங்கர்

ஆ) சாமுவேல் பெப்பிசு

இ) 2ம் சார்லஸ்

ஈ) 3ம் சார்லஸ்.

19. சாமுவேல் பெப்பிசு யாருடைய காலத்து நிகழ்வுகளை நாட் குறிப்பாக பதிவு செய்துள்ளார்

அ) முதலாம் சார்லஸ்

ஆ) இரண்டாம் சார்லஸ்

இ) மூன்றாம் சார்லஸ்

ஈ) ஐந்தாம் சார்லஸ்

20. ஆனந்தரங்கர் எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்

அ) 06.09.1736 – 06.01.1761

ஆ) 06.09.1736 – 06.09.1763

இ) 06.09.1736 – 11.01.1761

ஈ) 06.01.1736 – 11. 09. 1763

21. “இந்தியாவின் பெப்பிசு” என அழைக்கப்படுபவர் யார்?

அ) ஆனந்தரங்கர்

ஆ) சாமுவேல் பெப்பிசு

இ) 2ம் சார்லஸ்

ஈ) 3ம் சார்லஸ்.

22. சாமுவேல் பெப்பிசு குறிப்பிட்டுள்ள இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளின் காலம்

அ) 1636 – 1661

ஆ) 1660 – 1669

இ) 1660 – 1666

ஈ) 1666 – 1669

23. 1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்சுக் கப்பல் தளபதி ____.

அ) துய்ப்ளே

ஆ) ராபர்ட் கிளைவ்

இ) டூமாஸ்

ஈ) லெபூர் தொனே

24. 1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது அவர்களை எதிர்த்து போரிட்டவர்

அ) அன்வாருதீன்

ஆ) துயூப்ளே

இ) மகபூஸ்கான்

ஈ) டூமாஸ்

25. கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர் தனது நாட்குறிப்பில் குறிப்பிடுவது எவற்றை?

1. ஆம்பூர் போர்

2. தஞ்சை கோட்டை முற்றுகை

3. இராபர்ட் கிளைவ் படையெடுப்பு

4. ஆங்கிலேயரின் புதுச்சேரி முற்றுகை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 2, 3 சரி

26. லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற ஆண்டு

அ) 1785

ஆ) 1758

இ) 1875

ஈ) 1857

27. லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர்

அ) துய்ப்ளே

ஆ) மேஸ்தர் பிகட்

இ) டூமாஸ்

ஈ) லெபூர் தொனே

28. புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்

அ) துய்ப்ளே

ஆ) துய்மா

இ) டூமாஸ்

ஈ) லெபூர் தொனே

29. புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள்

அ) 11.06.1739

ஆ) 19.06.1739

இ) 11.06.1793

ஈ) 19.06.1739

30. கீழ்க்கண்டவற்றுள் ஆனந்த ரங்கர் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள் எவை?

1. மரண தண்டனை 2. காதறுத்தல்

3. சாட்டையடி 4. கிடங்கில் போடுதல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 2, 3 சரி

31. “தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன” என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்

அ) அண்ணா

ஆ) திரு.வி.க

இ) உ.வே.சா

ஈ) வ.வே.சு

32. “அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்” என்று கூறியவர்

அ) அண்ணா

ஆ) திரு.வி.க

இ) உ.வே.சா

ஈ) வ.வே.சு

33. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் பெரும் பகுதி எவ்வகையான செய்திகளை விவரிக்கின்றன

அ) போர் செய்திகள்

ஆ) ஆட்சி மாற்றம்

இ) வணிக செய்திகள்

ஈ) நீதி வழங்குதல்

34. புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.

அ) இங்கிலாந்து

ஆ) மணிலா

இ) போர்ச்சுக்கல்

ஈ) இலங்கை

35. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை திங்கள் தேவைப்பட்டன என ஆனந்தரங்கரின் குறிப்பேடு குறிப்பிடுகிறது.

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

(Note: 11.11.1737 அன்று பிரான்சிலிருந்து புறப்பட்டு 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்தது)

36. கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது?

அ) ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ஆ) துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

இ) 100க்கு 220 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

ஈ) வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றை பெற்றுப் பாதுகாத்துள்ளார்.

37. புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரஞ்சு வணிகக் கழகம் பெற்ற ஆணையை 10.9.1976 அன்று பல்லக்கில் ஊருக்குள் கொண்டு வந்தவர் யார்?

அ) காசிரங்கர்

ஆ) கனகராயர்

இ) அழகப்பன்

ஈ) சண்முகம்

38. எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் அறிவிக்கப்பட்ட ஆண்டு

அ) 1740 – மே

ஆ) 1740 – ஏப்ரல்

இ) 1739 – மே

ஈ) 1739 – ஏப்ரல்

39. கீழ்க்கண்டவற்றுள் ஆனந்தரங்கர் குறிப்பிடாத வராகன்கள் எது / எவை?

1. புதுச்சேரிப் பிறை வராகன்

2. சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்

3. வட்டவராகன்

4. பரங்கிப்பேட்டை வராகன்

5. ஆரணி வராகன்

அ) 2, 3, 5

ஆ) 1, 2, 4

இ) 2, 3, 4

ஈ) எதுவுமில்லை

40. பொருத்துக

1. 480 காசு – i) ஒருவராகன்

2. 60 காசு – ii) 1 ரூபாய்

3. 8 பணம் – iii) 1 பணம்

4. 24 பணம் – iv) ஒரு ரூபாய்

அ) iv iii I ii

ஆ) iii i ii iv

இ) ii i iii iv

ஈ) ii i iv iii

41. பொருத்துக

1. 1 பொன் – i) 1/2 வராகன்

2. 1 வராகன் – ii) 3 அல்லது 3.2 ரூபாய்

3. 1 மோகரி – iii) 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்

4. 1 சக்கரம் – iv) 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்கம்

அ) iv iii I ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

42. புதுச்சேரியை பெருங் காற்று சூறையாடியது என ஆனந்தரங்கம் குறிப்பிடும் ஆண்டு

அ) 1743

ஆ) 1745

இ) 1747

ஈ) 1749

43. கூற்று: புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745 ல் தடைபட்டது.

காரணம்: இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் தடைபட்டது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

44. புதுச்சேரியில் 1745 ஆம் ஆண்டு தடைபட்ட கப்பல்களின் வருகை மீண்டும் தொடங்கியது எப்போது?

அ) 06.08.1746

ஆ) 08.06.1746

இ) 08.06.1749

ஈ) 06.08.1749

(Note: லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தன)

45. ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகள் கீழ்க்கண்ட எவற்றைக் கூறுகின்றன

அ) ஆனந்தரங்கர் நோய்வாய்ப்பட்டது

ஆ) புதுச்சேரியின் வணிகம்

இ) ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகை மற்றும் புதுச்சேரியின் வீழ்ச்சி

ஈ) புதுச்சேரியின் எழுச்சி

46. ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகளில் ஆங்கிலேயக் கப்பல்கள் புதுச்சேரியை தாக்கி கைப்பற்றியதாக கூறப்படும் ஆண்டு

அ) 1670

ஆ) 1760

இ) 1765

ஈ) 1770

47. புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்திய ஆளுநர்

அ) துய்ப்ளே

ஆ) லெறி

இ) டூமாஸ்

ஈ) லெபூர் தொனே

48. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி

1. ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர்

2. ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – பிரபஞ்சன்

3. வானம் வசப்படும் – புலவரேறு அரிமதி தென்னகன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 1, 2 சரி

ஈ) 3 மட்டும் சரி

(Note: ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன், வானம் வசப்படும் – பிரபஞ்சன்)

49. ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்

அ) 11. 1. 1671

ஆ) 11. 1. 1761

இ) 1.11.1671

ஈ) 1.11.1761

50. தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்

அ) முதுமொழிமாலை

ஆ) சின்ன சீறா

இ) சீறாப்புறாணம்

ஈ) ஹிஜிறத்துக் காண்டம்

51. மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறும் காண்டம்

அ) விவாதத்துக் காண்டம்

ஆ) நுபுவ்வத்துக் காண்டம்

இ) ஹிஜிரத்துக் காண்டம்

ஈ) எதுவுமில்லை

52. ஹிஜிறத் என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள்

அ) இலத்தீன், செலவு

ஆ) அரபு, இடம்பெயர்தல்

இ) கிரேக்கம், செலவு

ஈ) இலத்தீன், இடம்பெயர்தல்

53. நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்த மக்கா இன மக்கள்

அ) குறைசி

ஆ) மதீனா

இ) குறிஞ்சி

ஈ) முல்லை

54. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

எய்துதல், நல்கல்

அ) அளித்தல், பெறுதல்

ஆ) அம்பு, பெறுதல்

இ) பெறுதல், அளித்தல்

ஈ) அம்பு, நன்மை

55. சரியான பொருளைத் தேர்ந்தெடு

துன்ன, மண்டிய

அ) உண், நெருங்கிய

ஆ) நெருங்கிய, நிறைந்த

இ) நிறைந்த, நெருங்கிய

ஈ) உண், நிறைந்த

56. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

வரை, வாரணம்

அ) நிறைவு, யானை

ஆ) எல்லை, யானை

இ) எல்லை, ஆரவாரம்

ஈ) மலை, யானை

57. சரியான பொருளைத் தேர்ந்தெடு

பூரணம், காய்ந்த

அ) சிறந்த, சிறந்த

ஆ) நிறைவு, நிறைவு

இ) நிறைவு, சிறந்த

ஈ) நெருங்கிய, சிறந்த

58. பொருத்துக

1. வதுவை – i) அரசன்

2. கோன் – ii) திருமணம்

3. மறுவிலா – iii) தெள்ளிய நீரலை

4. தெண் டிரை – iv) குற்றம் இல்லாத

5. விண்டு – v) திறந்து

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) ii i iv iii v

ஈ) ii i v iii iv

59. சரியான பொருளைத் தேர்ந்தெடு

விண்டு, தீன்

அ) மூடிய, மார்க்கம்

ஆ) திறந்து, மார்க்கம்

இ) திறந்து, உணவு

ஈ) மூடிய, உணவு

60. ” வடவரை பொருவென மலிந்த மேனிலைக்

கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப்

புடவியை அளந்தன போன்று வீதிகள்

இடனற நெருங்கின மாடம் எங்குமே ”

என்னும் பாடல் எந்நகரின் சிறப்பினைக் கூறுகிறது

அ) மக்கா

ஆ) மதீனா

இ) மதுரை

ஈ) கும்பகோணம்

61. “சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்

புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் ”

– இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீறாப்புராணம்

ஈ) முதுமொழிமாலை

62. “ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்

தீன் எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”

– இவ்வரிகளை இயற்றியவர்

அ) உமறுப் புலவர்

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) நபிகள் நாயகம்

ஈ) சீதக்காதி

63. இலக்கணக் குறிப்புத் தருக.

மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த

அ) வினையெச்சங்கள்

ஆ) பெயரெச்சங்கள்

இ) வினைத் தொகை

ஈ) பண்புத்தொகை

64. இலக்கணக் குறிப்புத் தருக.

ஐந்தும், தவமும் ஈகையும்

அ) உம்மைத் தொகை, எண்ணும்மை

ஆ) முற்றும்மை, உம்மைத் தொகை

இ) முற்றும்மை, எண்ணும்மை

ஈ) எண்ணும்மை, உம்மைத் தொகை

65. இலக்கணக் குறிப்புத் தருக – பொன்நகர்

அ) 2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

ஆ) 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

இ) 2ம் வேற்றுமை தொகை

ஈ) 3ம் வேற்றுமை தொகை

66. தவறான இணையைத் தேர்ந்தெடு.

அ) இடன் – ஈற்றுப் போலி

ஆ) பெரும்புகழ் – பண்புத்தொகை

இ) உறுபகை – வினைத் தொகை

ஈ) தரும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

(Note: உறுபகை – உரிச்சொல் தொடர்)

67. பகுபத உறுப்பிலக்கணம் தருக – மலிந்த

அ) மலிந்து + அ

ஆ) மலி + ந் + த் + அ

இ) மலி + த்(ந்) + த் + அ

ஈ) மலி + த் + த் ( ந்) + அ

68. பகுபத உறுப்பிலக்கணம் தருக – நெருங்கின

அ) நெருங்கு + (இ) ன் + அ

ஆ) நெருங்கு + அ

இ) நெருங்கு + இன

ஈ) நெரு + ங் + இன் + அ

69. ” மலிந்த 🡪 மலி + த் ( ந்) + த் + அ ”

இதில் ‘ந்‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) சந்தி

ஆ) விகாரம்

இ) இறந்தகால இடைநிலை

ஈ) எதிர்கால இடைநிலை

70. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – அரும்பொருள்

அ) அருமை + பொருள் –> அரும்பொருள்

ஆ) அருமை + பொருள் –> அரும் + ஐ + பொருள் –> அரும் + பொருள் –> அரும்பொருள்

இ) அருமை + பொருள் –> அரு + பொருள் –> அரும்பொருள்

ஈ) அரும்பு + பொருள் –> அரும் + பொருள் –> அரும்பொருள்

71. சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென

அ) மனை + என –> மனை + ஐ + அன –> மனையென

ஆ) மனை + என –> மனை + ய் + என –> மனையென

இ) மனை + என்ன –> மனை + ய் + என்ன –> மனையென

ஈ) மனை + என்ன –> மனை + யெ + என்ன –> மனையென

72. “மனை + என –> மனை + ய் + என ”

– இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ) இன மிகல்

ஆ) பூப்பெயர் முன் இன மென்மையும்

இ) இ ஈ ஐ வழி யவ்வும்

ஈ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

73. ‘சீறா’ என்பது _____ என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.

அ) சீறம்

ஆ) சீறத்

இ) சீறு

ஈ) சீற்

74. கீழ்க்கண்டவற்றை ஆராய் கரு

1. சீறத் – வாழ்க்கை

2. புராணம் – வரலாறு

அ) இரண்டும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

75. சீறாப்புறாணத்தை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப் புலவர் இயற்றினார்.

அ) நபிகள் நாயகம்

ஆ) அபுல் காசிம்மரைக்காயர்

இ) பனி அகமது மரைக்காயர்

ஈ) வள்ளல் சீதக்காதி

76. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள், படலங்கள், பாடல்கள் முறையே __.

அ) 2, 5027, 92

ஆ) 3, 92, 5027

இ) 2, 92, 5027

ஈ) 3, 29, 5027

77. சீறாப்புராணத்தின் தொடர்ச்சியான சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்

அ) நபிகள் நாயகம்

ஆ) அபுல் காசிம்மரைக்காயர்

இ) பனி அகமது மரைக்காயர்

ஈ) வள்ளல் சீதக்காதி

78. உமறுபுலவரை ஆதரித்தவர்கள் யாவர்?

1] நபிகள் நாயகம் 2] அபுல் காசிம்மரைக்காயர்

3] பனி அகமது மரைக்காயர் 4] வள்ளல் சீதக்காதி

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 2, 4

ஈ) 3, 4

79. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர்

2. இவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர்.

3. நபிகள் நாயகத்தின் மீது சீறாப்புராணம் மற்றும் முது மொழி மாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

80. சீறாப்புராணம் எவ்வகைப் பாடல்களால் ஆனது

அ) ஆசிரியப்பா பாடல்

ஆ) விருத்தப் பாடல்

இ) சிந்துப் பாடல்

ஈ) கலிப்பா பாடல்

81. சொல்ல வந்த கருத்தை’ உள்ளுறை‘ வழியாக உரைப்பது _____ பாடல்களின் சிறப்பு.

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) ஐங்குறுநூறு

ஈ) குறுந்தொகை

82. சரியான பொருளைத் தேர்ந்தெடு

சமம், தழலை

அ) சமானம், இலை

ஆ) போர், பறவைகளை ஓட்டும் கருவி

இ) சமானம், விலங்குகளை ஓட்டும் கருவி

ஈ) போர், ஒரு வகை மலர்

83. பொருத்துக.

1. கொண்மூ – i) மேகம்

2. விசும்பு – ii) வானம்

3. அரவம் – iii) ஆரவாரம்

4. ஆயம் – iv) சுற்றம்

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

84. பொருத்துக

1. அருஞ்சமம் – i) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

2. வளைஇ – ii) ஈற்றுப் போலி

3. எறிவாள் – iii) வினைத் தொகை

4. அறன் – iv) சொல்லிசை அளபெடை

5. பிழையா – v) பண்புத்தொகை

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) ii i v iii iv

85. “ பெருங்கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!

இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,

போர்ப்பு உறு முரசின் இரங்கி ”

– இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) ஐங்குறுநூறு

ஈ) குறுந்தொகை

86. “பொன்னென மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்

பொலிந்த ஆயமொடுகாண் தக இயலித்

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் ”

– இவ்வரிகளை பாடியவர்

அ) கபிலர்

ஆ) பேயனார்

இ) வீரை வெளியன் தித்தனார்

ஈ) ஓரம் போகியார்

87. ” அழலேர் செயலை அம் தழை அசைஇயும்,

குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ? வாழிய, மழையே!”

இவ்வரிகள் அமைந்துள்ள பாடலில் இடம்பெற்றுள்ள திணை

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

88. அகநானூறு பாடல்களை பாடிய புலவர்கள் எத்தனை பேர்

அ) 101

ஆ) 154

இ) 145

ஈ) 157

89. கீழ்க்கண்வற்றுள் அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகள் யாவை?

1. களிற்றி யானை நிரை 2. மணிமிடைப் பவளம்

2. 3. நித்திலக் கோவை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

90. கீழ்க்கண்டவற்றுள் நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல் எது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) ஐங்குறுநூறு

ஈ) குறுந்தொகை

91. அகநானூறு பாடல்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை கொண்டுள்ள திணை எது?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) பாலை

92. அகநானூறு பாடல்களில் 40 பாடல்களை கொண்டுள்ள திணைகள் எவை?

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை

அ) 1, 2, 4

ஆ) 2, 3, 4

இ) 1, 2, 3

ஈ) 3, 4, 5

93. அகநானூற்றில் குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 200

ஆ) 80

இ) 40

ஈ) 20

94. பொருத்துக

திணை பாடல் வரிசை

1. குறிஞ்சி – i) 1, 3, 5, 7,….

2. முல்லை – ii) 10, 20, 30, 40 …

3. மருதம் – iii) 6, 16, 26, 36…

4. நெய்தல் – iv) 4, 14, 24, 34…

5. பாலை – v) 2, 8, 12, 18 …

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) ii i v iii iv

95. ‘பிம்பம்’ என்னும் சிறுகதையை இயற்றியவர் யார்?

அ) மீரா

ஆ) வைத்தியலிங்கம்

இ) ஈரோடு தமிழன்பன்

ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

96. ‘வானம் வசப்படும்‘ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் மற்றும் எந்த ஆண்டு?

அ) பிரபஞ்சன் – 1993

ஆ) பிரபஞ்சன் – 1995

இ) கல்கி – 1993

ஈ) கல்கி – 1995

97. பிரபஞ்சன் குறித்த செய்திகளில் தவறானது எது?

அ) இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.

ஆ) சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்.

இ) இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்ட்டுள்ளன.

ஈ) இவருடைய வானம் வசப்படும் என்ற கட்டுரை சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

(Note: வானம் வசப்படும் – வரலாற்றுப் புதினம்)

98. “இந்த உலகமே நாடக மேடை ; அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே. ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு” என்று கூறியவர்

அ) பிரபஞ்சன்

ஆ) வைத்தியலிங்கம்

இ) ஷேக்ஸ்பியர்

ஈ) கல்கி

99. கீழ்க்கண்டவற்றுள் செய்யுளின் உறுப்புகள் யாவை?

1. எழுத்து 2. அசை 3. சீர் 4. தளை 5. அடி 6. தொடை

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 5, 6

இ) 1, 2, 3, 4

ஈ) 2, 3, 4, 5

100. பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது எந்நூல்?

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) பாயிரம்

ஈ) யாப்பருங்கலக்காரிகை

101. யாப்பு என்னும் கடலைக் கடக்க உதவும் நூல் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) பாயிரம்

ஈ) யாப்பருங்கலக்காரிகை

102. தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ____ஐ அடிப்படையாகக் கொண்டவை.

அ) எழுத்து

ஆ) செய்யுள்

இ) இசை

ஈ) பொருள்

103. பொருத்துக

1. வெண்பா – i) செப்பலோசை

2. ஆசிரியப்பா – ii) அகவலோசை

3. கலிப்பா – iii) துள்ளலோசை

4. வஞ்சிப்பா – iv) தூங்கலோசை

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

104. செய்யுளில் இசையை பிணைப்பவை எவை?

1. மோனை 2. எதுகை 3. இயைபு 4. அசை

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

105. செய்யுளில் ___ அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன.

அ) அசை

ஆ) சீர்

இ) தளை

ஈ) தொடை

106. பொருத்துக

1. குறளடி – i) 3 சீர்கள்

2. சிந்தடி – ii) 2 சீர்கள்

3. நேரடி – iii) 4 சீர்கள்

4. நெடிலடி – iv) 6 சீர்கள்

5. கழிநெடிலடி – v) 5 சீர்கள்

அ) iv iii i ii v

ஆ) ii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) ii i v iii iv

107. கீழ்க்கண்ட ஆசிரியப்பா குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) பா இயற்றுவதற்குரிய எளிய வடிவம் ஆசிரியப்பா.

ஆ) அகவல் ஓசை பெற்றதால் இது அகவற்பா என அழைக்கப்படுகிறது.

இ) பெரும்பாலும் 3 அசைகளால் அமையும்.

ஈ) ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாக உள்ளன.

108. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

1. யாப்பில் எழுத்து அசையை அமைக்க உதவும்.

2. அசை என்பது மாத்திரை சேர்ந்து வருவதாகும்.

3. அசை நேர், நிரை என இரு வகையாக அமையும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

109. பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?

அ) கண்

ஆ) பா

இ) கலா

ஈ) பார்

110. பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?

அ) அகம்

ஆ) பார்

இ) கலா

ஈ) கலாம்

111. பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

1. சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ள வேண்டும்

2. ஆல் – நேரசை – இரு மாத்திரை (‘ல்’ அலகு பெறாது)

3. இகழ்ச்சி – நிரையசை – இரு மாத்திரை (‘ழ்ச்’ அலகு பெறாது)

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3 சரி

இ) 1, 3 சரி

ஈ) 1, 3 சரி

(Note: சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ளக்கூடாது)

112. அசைகள் சேர்ந்து அமைந்தால் ____ பிறக்கும்.

அ) இசை

ஆ) சீர்

இ) தளை

ஈ) தொடை

113. கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் எது?

அ) இயற்சீர்

ஆ) காய்ச்சீர்

இ) கனிச்சீர்

ஈ) வெண்சீர்

114. கீழ்க்கண்டவற்றுள் எவை நேரீற்று ஈரசைச் சீர்களாக வரும்

1. தேமா 2. புளிமா 3. கருவிளம் 4. கூவிளம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 3, 4

115. கீழ்க்கண்டவற்றுள் எவை நிரையீற்று ஈரசைச் சீர்களாக வரும்

1. தேமா 2. புளிமா 3. கருவிளம் 4. கூவிளம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 3, 4

116. கீழ்க்கண்டவற்றுள் எவை வெண்பாவிற்குரிய நேரீற்று மூவசைச் சீர்கள்?

1. தேமாங்காய் 2. புளிமாங்காய்

3. கரு விளங்காய் 4. கூவிளங்காய்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 2, 4 சரி

117. பொருத்துக

1. நிரை நிரை – i) கூவிளம்

2. நேர் நேர் – ii) புளிமா

3. நேர் நிரை – iii) கருவிளம்

4. நிரை நேர் – iv) தேமா

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) iii iv i ii

ஈ) ii i iv iii

118. பொருத்துக

1. நேர் நேர் நேர் – i) தேமாங்காய்

2. நிரை நேர் நேர் – ii) புளிமாங்காய்

3. நிரை நிரை நேர் – iii) கருவிளங்காய்

4. நேர் நிரை நேர் – iv) கூவிளங்காய்

அ) iv iii i ii

ஆ) iii i ii iv

இ) i ii iii iv

ஈ) ii i iv iii

119. மாமுன் நேர் ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்

அ) நேரொன்றாசிரியத்தளை

ஆ) நிரையொன்றாசிரியத்தளை

இ) இயற்சீர் வெண்டளை

ஈ) வெண்சீர் வெண்டளை

120. விளமுன் நிரை ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்.

அ) நேரொன்றாசிரியத்தளை

ஆ) நிரையொன்றாசிரியத்தளை

இ) இயற்சீர் வெண்டளை

ஈ) வெண்சீர் வெண்டளை

121. கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

அ) எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்.

ஆ) இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

இ) ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்.

ஈ) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்.

(Note: ஆசிரியத் தளை மிகுந்தும் தளைகள் கலந்தும் காணப்படும்.)

122. ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.

அ) ஏ, கே, இன், எ

ஆ) ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ

இ) ஏ, கே, ஈ, இன், ஐ

ஈ) எ, ஈ, இன்

123. ஆசிரியப்பாவில் இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது ___ எனப்படும்.

அ) நேரிசை ஆசிரியப்பா

ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா

இ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஈ) அடி மறிமண்டில ஆசிரியப்பா

124. முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வரும் ஆசிரியப்பா _____.

அ) நேரிசை ஆசிரியப்பா

ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா

இ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஈ) அடி மறிமண்டில ஆசிரியப்பா

125. எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும் ஆசிரியப்பா ____ எனப்படும்.

அ) நேரிசை ஆசிரியப்பா

ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா

இ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஈ) அடி மறிமண்டில ஆசிரியப்பா

126. பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் அமையும் ஆசிரியப்பா ____ எனப்படும்.

அ) நேரிசை ஆசிரியப்பா

ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா

இ) நிலைமண்டில ஆசிரியப்பா

ஈ) அடி மறிமண்டில ஆசிரியப்பா

127. கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?

1. ஆசிரியத்தாழிசை 2. ஆசிரியத் துறை 3. ஆசிரிய விருத்தம்

அ) 1, 2, 3

ஆ) 1, 2

இ) 2, 3

ஈ) 1, 3

128. “தீதெலாம்” என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்

அ) நிரை நேர்

ஆ) நிரை நிரை

இ) நேர் நிரை

ஈ) நேர் நேர்

129. ”இன்னல்கள்” என்ற சொல்லின் அசைக்குரிய வாய்ப்பாட்டை எழுதுக.

அ) கருவிளம்

ஆ) தேமாங்காய்

இ) கருவிளங்காய்

ஈ) கூவிளங்காய்

130. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

அ) ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களே இன்று பெரு வழக்கில் உள்ளன.

ஆ) ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்று விருத்தம்.

இ) ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களை கையாள்வது எளிது.

ஈ) நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ‘ எனப்படும்.

(Note: ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ‘ எனப்படும்.)

131. சீர் அமைப்பை வைத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளில் தவறானது எது?

அ) ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவன.

ஆ) ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவன.

இ) ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனர்

ஈ) ஓரடியுள் நான்கு மாச் சீரும் இரு காய்ச்சீரும் வருவன.

132. “பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே !”

– இவ்வரிகளை பாடியவர்

அ) நம்மாழ்வார்

ஆ) பேயாழ்வார்

இ) தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஈ) பூதத்தாழ்வார்

133. “சீறிய நெற்றி எங்கே?

சிவந்தநல் இதழ்கள் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குறுநகை போன தெங்கே?”

– இவ்வரிகளை இயற்றியவர்

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) மீரா

134. பொருந்தாததைத் தேர்க.

1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

2. ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்

3. ஆனந்தரங்களின் நாட் குறிப்பு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

4. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன.

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 1, 3

ஈ) 2, 4

135. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?

அ) மொழிபெயர்ப்பாளர்

ஆ) இந்தியாவின் பெப்பிசு

இ) தலைமைத் துவிபாஷி

ஈ) உலக நாட் குறிப்பு இலக்கியத்தின் தந்தை

136. உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு

அ) உரிச்சொல் தொடர், ஈற்றுப் போலி

ஆ) வினைத் தொகை இடவாகுபெயர்

இ) வினையெச்சம், வினைத் தொகை

ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை

137. நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது

அ) காய் முன் நேர்

ஆ) காய் முன் நிரை

இ) கனி முன் நிரை

ஈ) மா முன் நேர்

138. யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல் _____ எனப்படும்.

அ) சிர்

ஆ) தளை

இ) அசை

ஈ) தொடை

139. தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் என சான்றுகளுடன் எடுத்துச் சொன்னவர்

அ) திரு.வி.க

ஆ) மு.வ

இ) டி. கே.சி

ஈ) உ.வே.சா

140. ” வட்டித் தொட்டி“ என்னும் அமைப்பு யாருடைய வீட்டில் நடைமுறையில் இருந்தது

அ) திரு.வி.க

ஆ) மு.வ

இ) டி. கே.சி

ஈ) உ.வே.சா

141. டி.கே.சிதம்பரநாதர் அவர்கள் வாழ்ந்த காலம்

அ) 1881 – 1953

ஆ) 1882 – 1954

இ) 1880 – 1952

ஈ) 1882 – 1945

142. டி.கே.சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?

அ) டி.கே.சி அவர்களின் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாக கருதப்பட்டன.

ஆ) முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.

இ) சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் இருந்தார்.

ஈ) தமிழ் இசை, தமிழ் இலக்கியம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

(Note: இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களை இயற்றியுள்ளார்)

143. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார் – விடைக் கேற்ற வினா அமைக்க

அ) வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட எதில் திளைப்பதை டி.கே.சி விரும்பினார்?

ஆ) டி.கே.சி எதை விரும்பினார்?

இ) தமிழின்பத்தில் திளைப்பதை டி.கே.சி விரும்பினாரா?

ஈ) டி.கே.சி அவர்கள் வழக்கறிஞர் தொழிலை விரும்பினாரா?

144. உலகம் முழுவதும் புத்தக தினமாக யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்

அ) ஷேக்ஸ்பியர் – டிசம்பர் 23

ஆ) ஷேக்ஸ்பியர் – ஏப்ரல் 23

இ) பிளேட்டோ – ஏப்ரல் 23

ஈ) பிளேட்டோ – டிசம்பர் 23

145. “யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்

யாவரும் கேளிர் என்றதுவும்

மேதினிக் குரைத்தவர் நம் முன்னோர் – இன்று

வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?”

– இப்பாடலை பாடியவர் யார்?

அ) கணியன் பூங்குன்றனார்

ஆ) டி. கே.சி

இ) பெ.தூரன்

ஈ) உ.வே.சா

146. பொருள் இலக்கணத்தின் வகைகள் யாவை?

1. அகப்பொருள் 2. முதற் பொருள்

3. புறப்பொருள் 4. கருப்பொருள்

அ) 1, 2

ஆ) 1, 3

இ) 2, 3

ஈ) 2, 4

147. அகப்பொருளின் வகைகள் யாவை?

1. அகப்பொருள் 2. முதற் பொருள்

3. உரிப்பொருள் 4. கருப்பொருள்

அ) 1, 2, 3

ஆ) 2, 3, 4

இ) 1, 2, 3

ஈ) 1, 2, 4

148. முதற் பொருளின் வகைகள் யாவை?

1. நிலம் 2. காலம் 3. பருவம் 4. பொழுது

அ) 1, 2

ஆ) 1, 3

இ) 1, 4

ஈ) 2, 4

149. பொருத்துக

1. Invasion – i) மாலுமி

2. Back water – ii) ஒப்பந்தம்

3. Culture – iii) பண்பாடு

4. Agreement – iv) உப்பங்கழி

5. Sailor – v) படையெடுப்பு

அ) iv iii I ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) ii i v iii iv

150. “மறைக்கப்பட்ட இந்தியா” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பிரபஞ்சன்

ஆ) எஸ்.இராமகிருஷ்ணன்

இ) கல்கி

ஈ) டி.கே.எஸ்

151. “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கை கொல்லும் காழ்த்த இடத்து ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) பொருள்பின் வரும்நிலை அணி

ஆ) பிறிது மொழிதல் அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

152. ” இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) உருவக அணி

ஆ) பிறிது மொழிதல் அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

153. ” நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் “

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) சொற்பொருள்பின் வரும்நிலை அணி

ஆ) பிறிது மொழிதல் அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

154. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து _____ நினை.

அ) முகக்குறிப்பை அறிந்தவரை

ஆ) எண்ணியதை எண்ணியவரை

இ) மறதியால் கெட்டவர்களை

ஈ) சொல்லேர் உழவரை

155. இலக்கணக் குறிப்புத் தருக – கெடுக, குறிப்புணர்வார்

அ) வினையெச்சம், வினையெச்சம்

ஆ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்

இ) வியங்கோல் வினை முற்று, வினையாலணையும் பெயர்

ஈ) வியங்கோல் வினை முற்று, வினையெச்சம்

156. ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணைகள் எவை?

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 4, 1

157. சுரமும் சுரம் சார்ந்த நிலமும் கொண்ட திணை எது?

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

158. பொருத்துக

திணை – சிறுபொழுது

1. குறிஞ்சி – i) யாமம்

2. முல்லை – ii) மாலை

3. மருதம் – iii) காலை

4. நெய்தல் – iv) எற்பாடு

5. பாலை – v) நண்பகல்

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) i ii iii iv v

159. பொருத்துக

திணை – உரிப்பொருள்

1. குறிஞ்சி – i) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

2. முல்லை – ii) புணர்தலும் புணர்தல் நிமித்தம்

3. மருதம் – iii) ஊடலும் உடல் நிமித்தமும்

4. நெய்தல் – iv) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

5. பாலை – v) இரங்கலும் இரங்கல் நிமித்தம்

அ) iv iii I ii v

ஆ) iii v ii iv i

இ) ii i iii v iv

ஈ) i ii iii iv v

160. தவறான இணையை தேர்ந்தெடு

அ) குறிஞ்சி – கூதிர், முன் பனி

ஆ) முல்லை – முன் பனி

இ) மருதம் – ஆறு பெரும்பொழுது

ஈ) பாலை – இளவேனில், முதுவேனில்

(Note: முல்லை – கார்)

161. பொருத்துக

திணை தெய்வம்

1. குறிஞ்சி – i) சேயோன்

2. முல்லை – ii) மாயோன்

3. மருதம் – iii) வேந்தன்

4. நெய்தல் – iv) வருணன்

5. பாலை – v) கொற்றவை

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) i ii iii iv v

162. எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் ஆகிய மக்களை கொண்ட திணை_______.

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

163. நாரை, மகன்றில் ஆகிய பறவைகள் காணப்படும் திணை___.

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

164. சிங்கம், புலி, கரடி, யானை ஆகிய விலங்குகளை கொண்ட திணை ___.

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) குறிஞ்சி

165. பொருத்துக

திணை – ஊர்

1. குறிஞ்சி – i) பாடி

2. முல்லை – ii) சிறுகுடி

3. மருதம் – iii) பேரூர்

4. நெய்தல் – iv) பாக்கம்

5. பாலை – v) குறும்பு

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) ii i iii iv v

166. குறுஞ்சுனை, கானாறு ஆகியவற்றை நீர் நிலைகளாக கொண்ட திணை

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) குறிஞ்சி

167. கீழ்க்கண்டவற்றுள் பாலை திணைக்குரிய பூ எது?

அ) காந்தள்

ஆ) பிடவம்

இ) மராம் பூ

ஈ) ஞாழல்

168. கீழ்க்கண்டவற்றுள் முல்லை திணைக்குரிய உணவு எது?

அ) தினை

ஆ) முதிரை

இ) செந்நெல்

ஈ) மூங்கிலரிசி

169. உழிஞை, ஓமை ஆகியவை எந்த திணைக்குரிய மரங்கள்?

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

170. பொருத்துக

திணை – பறை

1. குறிஞ்சி – i) துடி

2. முல்லை – ii) நாவாய்ப் பம்பை

3. மருதம் – iii) மணமுழவு

4. நெய்தல் – iv) ஏறுகோட்பறை

5. பாலை – v) தொண்டகப்பறை

அ) iv iii i ii v

ஆ) iii v ii iv i

இ) v iv iii ii i

ஈ) v iv iii ii i

171. பொருத்துக

திணை – பண்

1. குறிஞ்சி – i) குறிஞ்சிப் பண்

2. முல்லை – ii) சாதாரிப் பண்

3. மருதம் – iii) மருதப் பண்

4. நெய்தல் – iv) செவ்வழிப் பண்

5. பாலை – v) பஞ்சுரப் பண்

அ) i ii iii iv v

ஆ) iii v ii iv i

இ) i iv iii ii v

ஈ) ii i iii iv v

172. சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல் போன்றவை எவ்வகை நிலத்திற்குரிய தொழில்

அ) முல்லை

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) குறிஞ்சி

173) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – என்ற குறட்பாவில் இகழ்ச்சி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) துன்பம்

B) கடுந்துரைத்தல்

C) சினம்

D) மறதி

விளக்கம்: இகழ்ச்சி – மறதி.

தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.

174) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின் – என்ற குறட்பாவில் உள்ளியது என்ற சொல்லின் பொருள் என்ன?

A) எண்ணியது

B) மறந்தது

C) உள்ளத்தில் உள்ளது

D) உடனிருப்பது

விளக்கம்: உள்ளியது – எண்ணியது.

எப்போதும் எண்ணியதை எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளிது என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

175) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) உவமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) சொல் பொருள் பின்வரு நிலையணி

D) உருவக அணி

விளக்கம்: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – உருவக அணி

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

இங்கு,

இரந்து வாழ்ந்து வாழ்தல் – பாதுகாப்பற்ற படகு

கொடாமை (கொடுக்காமல் இருத்தல்) – பெரிய பாறையில் மோதுவது

மேற்காணும் வகையில் இரந்து வாழ்தல் என்பது உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மேற்காணும் குறட்பாவில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

176) திருவள்ளுவர் குறிப்பிடும் படைக்குப் பாதுகாப்பான நான்கில் பொருந்தாதது எது?

A) மானம்

B) நல்லோர் வழியில் நடத்தல்

C) நம்பிக்கைக்கு உரியவர் ஆதல்

D) வீரம்

விளக்கம்: மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு ஆகும்.

177) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்ற குறட்பாவில் நோய்நாடி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நோயைக் கண்டறிதல்

B) நோய்க்கான காரணத்தை கண்டறிதல்

C) நோயின் தன்மையை அறிதல்

D) நோய் நீக்கும் வழியை அறிதல்

விளக்கம்: நோய்நாடி – நோயை கண்டறிதல்

நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

178) ________ உழவர் பகைகொளினும் கொள்ளற்க

__________ உழவர் பகை – என்ற குறட்பாவில் விடுபட்ட வார்த்தையை பூர்த்தி செய்க?

A) வில்லேர், சொல்லேர்

B) சொல்லேர், வில்லேர்

C) தீயோர், நல்லோர்

D) நல்லோர், தீயோர்

விளக்கம்: வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

179) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – என்ற குறட்பாவில் உள்ளுக என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நினைத்து பார்த்தல்

B) வணங்குதல்

C) போற்றுதல்

D) கெடுதல்

விளக்கம்: உள்ளுக – நினைத்துப் பார்க்க

தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.

180) இரவென்னும் ஏமாப்பில் _________ கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க.

A) வாழ்தல்

B) கெடுக

C) தோணி

D) வேண்டுதல்

விளக்கம்: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – உருவக அணி

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

181) _________ அளவும் பிணியளவும் காலமும்

______ கருதிச் செயல் – கோடிட்ட இடத்தை நிரப்புக

A) கற்றான், உற்றான்

B) உற்றவன், கற்றான்

C) உற்றான், தீர்ப்பன்

D) உற்றான், கற்றான்

விளக்கம்: உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்

182) இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து – என்ற குறட்பாவில் உணர்த்தப்படும் செய்தி என்ன?

A) முள்மரத்தை வெட்ட வேண்டும்

B) முதிர்ந்த முள் மரம் பயன்படாது

C) இளைதாக இருக்கும் போதே முள்மரத்தைக் களைந்து விட வேண்டும்

D) முதிர்ந்த முள்மரத்தை கவனமாக களைய வேண்டும்

விளக்கம்: சிறியதாக இருக்கையிலேயே முள்மரத்தைக் களைந்து விடுக. முதிர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கையையே வருத்தும்.

183) பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று – என்ற குறட்பாவில் திருவள்ளுவர் உணர்த்தும் செய்தி என்ன?

A) பகையை விரும்பக்கூடாது

B) பகையை பண்பாக கொள்ளக் கூடாது

C) மற்றவரிடம் பகைமை கொள்ளக் கூடாது

D) பகைவரிடம் பண்பாக நடந்து கொள்ள வேண்டும்

விளக்கம்: பகை என்னும் பண்பற்றதை ஒருவன் விளையாட்டாக்குக் கூட விரும்பக் கூடாது.

184) உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால்நாற் கூற்றே மருந்து – என்ற குறட்பாவில் மருத்துவம் எத்தனை வகை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்று மருத்துவம் நான்கு வகையில் அடங்கும்

185) மறமமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு – என்ற குறட்பாவில் மாண்ட வழிச்செலவு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) போர் செலவு

B) போரில் தோற்றவரின் இழப்பு

C) ஏமாற்றமடைதல்

D) முன்னோர் வழியில் நடத்தல்

விளக்கம்: மாண்ட வழிச்செலவு – முன்னோர் வழியில் நடத்தல்

வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்

186) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் – என்ற குறட்பாவில் குறிப்பிடப்படும் கருத்து என்ன?

A) அளவாக உண்ண வேண்டும்

B) உடலுக்கு கேற்ற உணவினை உண்ண வேண்டும்

C) வயதுக்கேற்றபடி உண்ண வேண்டும்

D) செரித்தபின் உண்ண வேண்டும்

விளக்கம்: உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

187) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) சொல் பின்வருநிலையணி

B) பொருள் பின்வருநிலையணி

C) சொற்பொருள் பின்வரும் நிலையணி

D) பிறிது மொழிதல் அணி

விளக்கம்: நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – சொற்பொருள் பின்வரும் நிலையணி

188) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – என்ற குறட்பாவில் ஏமாப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) பாதுகாப்பு

B) ஏமாற்றமின்மை

C) பெறுதல்

D) இரந்து வாழ்தல்

விளக்கம்: ஏமாப்பு – பாதுகாப்பற்ற. இதன் எதிர்ச்சொல் – பாதுகாப்பு.

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

189) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – என்ற குறட்பாவில் மைந்துறும் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நினைத்து பார்த்தல்

B) மறதியடைதல்

C) மகிழ்ச்சியடைதல்

D) கடமையை மறத்தல்

விளக்கம்: மைந்துறும் – கடமையை மறத்தல்

தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.

190) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின் – என்ற குறட்பாவில் எய்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) எண்ணியது

B) ஏவுதல்

C) அடைதல்

D) உடனிருத்தல்

விளக்கம்: எய்தல் – அடைதல்

எப்போதும் எண்ணியதை எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளிது என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

191) வில்லோர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லோர் உழவர் பகை – என்ற குறட்பாவில் உணர்த்தப்படும் செய்தி யாது?

A) வில் வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும்

B) சொல்லாற்றல் உடையவராக இருத்தல் வேண்டும்

C) வில் வீரரிடம் பகை கொள்ள கூடாது

D) சொல்வன்மை உடைய அறிஞரிடம் பகையைப் பெறக்கூடாது

விளக்கம்: வில் வீரரின் பகையைப் பெற்றாலும், சொல்வன்மை உடைய அறிஞரின் பகையைப் பெறக்கூடாது.

192) பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று – என்ற குறட்பாவில் நகை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) சிரிப்பு

B) அணிகலன்

C) மகிழ்ச்சி

D) விளையாட்டு

விளக்கம்: நகை – விiளாட்டு

பகை என்னும் பண்பற்றதை ஒருவன் விளையாட்டுக்குக் கூட விரும்பக்கூடாது.

193) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்ற குறட்பாவில் நோய்முதல் நாடி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நோயை அறிந்து

B) நோய்க்கான காரணத்தை அறிந்து

C) நோயை நீக்கும் வழியை அறிந்து

D) நோயின் தன்மை அறிந்து

விளக்கம்: நோய்முதல் நாடி – நோய்க்கான காரணத்தை அறிந்து.

நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

194) பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின் – என்ற குறட்பாவில் கேண்மை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பகைமை

B) நட்பு

C) உறவினர்

D) கிணறு

விளக்கம்: கேண்மை – நட்பு.

கண்ணின் குறிப்புகளை உணர்பவரைப் பெற்றால் பகைமையும் நட்பையும் அவரது கண்ணே அறிவித்துவிடும்.

195) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – என்ற குறட்பாவில் தோணி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) படகு

B) பாறை

C) கடல்

D) கப்பல்

விளக்கம்: தோணி – படகு

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

196) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – என்ற குறட்பாவில் உணர்த்தப்படும் செய்தி என்ன?

A) மகிழ்ச்சியில் கடமையை மறக்கக் கூடாது

B) கெட்டவர்களை நினைத்துப்பார்க்க வேண்டும்

C) மகிழ்ச்சியோடு கடமையை செய்ய வேண்டும்

D) கடமையை காலத்தே செய்ய வேண்டும்

விளக்கம்: தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.

197) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

__________உள்ளப் பெறின் – என்ற குறட்பாவில் விடுபட்ட வார்த்தை என்ன?

A) எண்ணியது

B) உள்ளியது

C) எய்திய

D) எளிதாக

விளக்கம்: உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்

198) இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) உவமை அணி

B) உருவக அணி

C) சொல் பின்வருநிலையணி

D) பிறிதுமொழிதல் அணி

விளக்கம்: இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து – பிறிதுமொழிதல் அணி.

199) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு – என்ற குறட்பாவில் தேற்றம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பாதுகாப்பு

B) முன்னோர் வழியில் நடத்தல்

C) நம்பிக்கைக்கு உரியவர் ஆதல்

D) போர் புரிதல்

விளக்கம்: தேற்றம் – நம்பிக்கைக்கு உரியவர் ஆதல்

வீரம், மானம், முன்னோர் வழியி; நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

200) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றிய உணின் – என்ற குறட்பாவில் யாக்கை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உடல்

B) மருந்து

C) உணவு

D) செரிமானம்

விளக்கம்: யாக்கை – உடல்

உண்டதும், செரித்ததும், அறிந்து உண்டால் மருந்து என ஒன்று உடலுக்கு வேண்டியதில்லை என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

201) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – என்ற குறட்பாவில் பார் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) படகு

B) பாறை

C) உலகம்

D) பார்த்தல்

விளக்கம்: பார் – பாறை

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

202) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்ற குறட்பாவில் வாய்நாடி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நோயை அறிதல்

B) நோய்க்கான காரணத்தை அறிதல்

C) நோயின் தன்மையை அறிதல்

D) நோயை நீக்கும் வழியை அறிதல்

விளக்கம்: வாய்நாடி – நோயை நீக்கும் வழியை அறிதல்.

நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

203) உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல் – என்ற குறட்பாவில் பிணி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) துன்பம்

B) நோய்

C) மருந்து

D) நோயாளி

விளக்கம்: பிணி – நோய்

நோயாளியின் வயதையும், நோயின் அளவையும் மருத்துவத்தின் காலத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

204) உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால்நாற் கூற்றே மருந்து – என்ற குறட்பாவில் தீர்ப்பான் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) செவிலியர்

B) மருந்து

C) மருந்தாளுநர்

D) மருத்துவர்

விளக்கம்: தீர்ப்பான் – மருத்துவர்.

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுர் என்று மருத்துவம் நான்கு வகையில் அடங்கும்

205) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு – என்ற குறட்பாவில் ஏமம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஏமாற்றம்

B) பாதுகாப்பு

C) கருவி

D) போர்

விளக்கம்: ஏமம் – பாதுகாப்பு.

வீரம், மானம், முன்னோர் வழியில நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பர்துகாப்பு ஆகும்.

206) குறிப்பில் குறிப்புணர் வாரை ____________

யாது கொடுத்தும் கொளல் – என்ற குறட்பாவில் விடுபட்ட இடத்தை பூர்ததி செய்க?

A) பொறுப்பு

B) உறுப்பினுள்

C) கண்

D) பொருள்

விளக்கம்: குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்

முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்க என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

207) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின் – என்ற குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் குறிப்பிடுவது கீழ்க்காணும் எதனை?

A) எண்ணியதை அடைய, எண்ணியதை காலமறிந்து செய்ய வேண்டும்

B) எண்ணியதை அடைய, எண்ணியதை இடம் மற்றும் காலம் அறிந்து செயல்பட வேண்டும்

C) எண்ணியதை அடைய தகுந்த துணையுடன் செயல்பட வேண்டும்

D) எண்ணியதை அடைய, அதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்;க வேண்டும்

விளக்கம்: எப்போதும் எண்ணியதை எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளிது என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

208) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும் – என்ற குறட்பாவில் பக்கு விடும் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பக்குவமடையும்

B) பெற்றுவிடும்

C) தந்துவிடும்

D) உடைந்துவிடும்

விளக்கம்: பக்கு விடும் – உடைந்துவிடும்.

பிறரை எதிர்ப்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

209) உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல் – என்ற குறட்பாவில் கற்றான் என்று குறிப்பிடப்படுவர் யார்?

A) நோயாளி

B) மருந்தாளுநர்

C) மருத்துவர்

D) கல்வி கற்றவர்

விளக்கம்: கற்றான் – மருத்துவர்.

நோயாளியின் வயதையும் நோயின் அளவையும் மருத்துவத்தின் காலத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.

210) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல் – என்ற குறட்பாவில் குறிப்பில் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) முகக்குறிப்பு

B) அகக்குறிப்பு

C) தன்குறிப்பு

D) பிறர் குறிப்பு

விளக்கம்: குறிப்பில் – முகக்குறிப்பு. இதன் எதிர்ச்சொல் – அகக்குறிப்பு.

முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்க என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

211) _________ நாடி __________ நாடி அது தணிக்கும்

__________ நாடி வாய்ப்பச் செயல் – கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க.

A) நோய்முதல், நோய், வாய்

B) நோய், வாய், நோய்முதல்

C) நோய்முதல், வாய், நோய்

D) நோய், நோய்முதல், வாய்

விளக்கம்: நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

212) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு – என்ற குறட்பாவில் மறம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அறிவு

B) பண்பு

C) செறிவு

D) வீரம்

விளக்கம்: மறம் – வீரம்

வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு.

213) _________________ உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் – என்ற குறட்பாவில் விடுபட்ட சொல் எது?

A) பகைத்தும்

B) துணிந்தும்

C) நட்பின்

D) இரந்தும்

விளக்கம்: இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

214) இளைதாக ________________________ கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க.

A) சினம்

B) பகை

C) முள்மரம்

D) நச்சுச்செடி

விளக்கம்: இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து – பிறிதுமொழிதல் அணி.

சிறியதாக இருக்கையிலேயே முள்மரத்தைக் களைந்து விடுக, முதிர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கையையே வருத்தும்.

215) ___________________ பண்பில் அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க

A) பகைஎன்னும்

B) தோற்றம்என்னும்

C) இரவென்னும்

D) மருந்தெனும்

விளக்கம்: பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று

பகை என்னும் பண்பற்றதை ஒருவன் விளையாட்டுக்குக் கூட விரும்பக்கூடாது.

216) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்ற குறட்பா கீழ்க்காணும் யாருக்கு அறிவுரை கூறுகிறது?

A) பொதுமக்கள்

B) மருத்துவர்

C) நோயாளிகள்

D) மருந்து விற்பனையாளர்

விளக்கம்: நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

217) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல் – என்ற குறட்பாவில் குறிப்புணர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) முகக்குறிப்பு

B) அகக்குறிப்பு

C) தன்குறிப்பு

D) பிறர் குறிப்பு

விளக்கம்: குறிப்புணர் – அகக்குறிப்பு.

முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்க என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

218) பகைமையும் ___________________ கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின் – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க.

A) நட்பும்

B) கேண்மையும்

C) நன்மையும்

D) அதன் துணையும்

விளக்கம்: பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்

கண்ணின் குறிப்புகளை உணர்பவரைப் பெற்றால் பகைமையும் நட்பையும் அவரது கண்ணே அறிவித்துவிடும்

219) உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல் – என்ற குறட்பாவில் குறிப்பிடப்படுவது எது?

A) நோயாளியின் வயதை அறிந்து மருத்துவர் செயல்பட வேண்டும்

B) நோயின் அளவை அறிந்து மருத்துவர் செயல்பட வேண்டும்

C) மருத்துவத்தின் காலத்தை அறிந்து மருத்துவர் செயல்பட வேண்டும

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: நோயாளியின் வயதையும், நோயின் அளவையும் மருத்துவத்தின் காலத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!