General Tamil

11th Tamil Unit 3 Questions

11th Tamil Unit 3 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.

1. மனித சமூகத்தின் ஆதி நிலம் என அழைக்கப்படுவது எது?

அ) காடு

ஆ) குகை

இ) மலை

ஈ) கடல்

2. மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி என குறிப்பது ___

அ) அகத்திணையியல்

ஆ) புறத்திணையியல்

இ) இரண்டும்

ஈ) இரண்டு மில்லை

3. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை குறிக்கும் கலைச்சொல்

அ) ORNITHOLOGY

ஆ) ORTHOLOGY

இ) ORGANOLOGY

ஈ) OROLOGY

4. திராவிடர்களை, ‘மலை நில மனிதர்கள் ‘ என்று யார் அழைக்கிறார்

அ) எமினோ

ஆ) பிரான்சிஸ் எல்லிஸ்

இ) கமில் சுவலபில்

ஈ) கால்டுவெல்

5. ” சேயோன் மேய மைவரை உலகம்” என்று கூறும் நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) திருக்குறள்

ஈ) சிலப்பதிகாரம்

6. “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்னும் பாடலடி இடம் பெற்றுள்ள நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) திருமுருகாற்றுப்படை

இ) திருமலை முருகன் பள்ளு

ஈ) ஐங்குறுநூறு

7. பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் ____ ன் தலைவர்களாக விளங்கினர்.

அ) சமவெளிப் பகுதி

ஆ) மருத நிலப்பகுதி

இ) நெய்தல் நிலப்பகுதி

ஈ) குறிஞ்சி நிலப்பகுதி

8. இந்தியாவில் தற்போது வாழும் ______ பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள் அவர்களின் மலை சார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.

அ) வட இந்திய

ஆ) ஆரிய

இ) வடமேற்கு

ஈ) திராவிட

9. பொருத்துக.

1. மால் பஹாடியா – i) எர்நாட் – கேரளம்

2. மல அரயன் – ii) நெடுமங்காடு – கேரளம்

3. மல குறவன் – iii) மேற்குத் தொடர்ச்சி மலை – கேரளம்

4. மல மூத்தன் – iv) ஜார்கண்ட்

அ) i ii iii iv

ஆ) ii i iii iv

இ) i iv iii ii

ஈ) iv iii ii i

10. பொருத்துக.

1. மல மணிக்கர் – i) வட கேரளம்

2. மலயன் – ii) பாலக்காடு _ கேரளம்

3. மலவேடா – iii) இடுக்கி _ கேரளா

4. மலேரு – iv) தட்சிண கன்னடா – கர்நாடகம்

அ) i ii iii iv

ஆ) ii i iii iv

இ) i iv iii ii

ஈ) iv iii ii i

11. பின்வருவனவற்றுள் தவறான இணையைக் கண்டறி

i) கோண்டு, கொய்ட்டெர் – ஒடிஸா

ii) கொண்டா தோரா – ஆந்திரா

iii) கோட்டா – நீலகிரி

அ) ii மட்டும்

ஆ) iii, ii

இ) அனைத்தும்

ஈ) எதுவுமில்லை

12. ” கோட்டா, கொண்டா தோரா, கோண்டு ” முதலியவை கீழ்க்கண்ட எவற்றைக் குறிக்கின்றன.

அ) திராவிட இடங்கள்

ஆ) திராவிட பழங்குடி இனக்குழு

இ) திராவிட எழுத்துக்கள்

ஈ) திராவிட மன்னர்கள்.

13. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பழங்குடியினர் தங்கள் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்திலோடும் சிற்றாறுகள், ஓடைகள் போன்ற ஓடும் நீரையே தங்கள் குடிநீராக பயன்படுத்தினர்.

2. சதுரகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களை புனித இடமாகக் கருதினர்.

3. தோடர் இனத்தவர் வீடுகளில் திண்டுகள் இடம் பெற்றிருந்தன.

4. தோடர் இனத்தவர் மொழியில் தாழ்வாரத்தை மெட்டு என்பர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 4 சரி

ஈ) 1, 3 சரி

14. “ஜதாப்பு ” என்ற திராவிட பழங்குடியினர் எந்த பகுதியில் வாழ்ந்தனர்

அ) நீலகிரி

ஆ) ஆந்திரா

இ) ஒடிஸா

ஈ) ஆ, இ இரண்டும்

15. திராவிட சொல்லான ‘மலை’ என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ) மல

ஆ) மலய

இ) மலே

ஈ) மேல

16. ‘மலையத்துவஜ‘ என்று அழைக்கப்பட்ட மன்னன் யார்?

அ) சேர மன்னன்

ஆ) சோழ மன்னன்

இ) நாயக்க மன்னன்

ஈ) பாண்டிய மன்னன்.

17. வடமொழியில் “மலய” என்ற சொல் எப்பகுதியில் உள்ள மலைகளை குறிக்கிறது

அ) மலபாருக்கு கிழக்கே உள்ள மலைகளை

ஆ) மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை

இ) மலபாருக்கு வடக்கே உள்ள மலைகளை

ஈ) மலபாரை சுற்றியுள்ள மலைகளை

18. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களின் பொருள்

1. மலை – உயரமானது

2. குன்று – உயரம் அதிகமானது.

அ) இரண்டும் சரி

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) இரண்டும் தவறு

19. மலை, குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொணரும் உயர வேறுபாட்டை _____ பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப் பெயர்கள் உறுதி செய்கின்றன.

அ) நீலகிரி

ஆ) ஆந்திரா

இ) வட கிழக்கு

ஈ) வடமேற்கு

20. கீழ்க்கண்டவற்றுள் ‘வரை‘ என்ற சொல்லின் பொருள்.

1.விளிம்பு 2.கரை 3. எல்லை 4. நுனி 5. கோடு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 4, 5 சரி

இ) 2, 3, 5 சரி

ஈ) 1, 2, 3, 5 சரி

21. “நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை ” என்ற தொடர்களில் ‘வரை‘ என்ற சொல்லின் பொருள்

அ) கரை

ஆ) எல்லை

இ) நுனி

ஈ) விளிம்பு

22. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி

1. மலை – ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)

2. வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)

3. மலா – வல்ஸட் (குஜராத்)

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3 சரி

இ) 1, 2 சரி

ஈ) 1, 2 தவறு

23. தமிழ்நாட்டில் “மலை” என்ற சொல் _____ இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் _____ இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெறுகின்றது.

அ) 17, 48

ஆ) 71, 48

இ) 71, 84

ஈ) 17, 84

24. ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படும் ‘மலா’ என்ற சொல்லின் வேர்ச்சொல்

அ) மலை

ஆ) மலே

இ) மல்

ஈ) மலாய்

25. மலை என்ற வடிவம் “தோணிமலை“ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) ஆந்திரா

ஈ) கர்நாடகா

26. கர்நாடகத்தில் மலையை குறிக்கும் ‘மலே’ என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.

அ) 17

ஆ) 48

இ) 51

ஈ) 15

27. _____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) ஆந்திரா

ஈ) கர்நாடகா

28. காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பு தமிழ் மொழியில் எவ்வாறு குறிக்கப்படுகிறது.

அ) கோட்ட

ஆ) கோட்டை

இ) கோட்டே

ஈ) வரை

29. பொருத்துக

1. கோடு – i) மலையாளம்

2. கோட்டே – ii) கன்னடம்

3. கோட்ட – iii) தெலுங்கு

4. கோட்டே – iv) துளு

5. க்வாட் – v) தோடா

அ) v iii iv i ii

ஆ) iv ii iii v i

இ) I ii iii iv v

ஈ) v iv iii ii i

30. இந்தியாவில் ‘கோட்டை’ என முடியும் எத்தனை இடப்பெயர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

அ) 245

ஆ) 248

இ) 243

ஈ) 428

31. ‘கோடு’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருளில் பொருந்தாதது

அ) வல்லரன்

ஆ) வரி

இ) சிகரம்

ஈ) மலையுச்சி.

32. ‘மலை’ என்னும் பொருள் தரும் சொற்களில் அல்லாதது எது

i) கோடு ii) கோடை iii) வரை iv) கோட்டை

அ) i, iii

ஆ) ii, iv

இ) iv மட்டும்

ஈ) எதுவுமில்லை

33. சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ் சமூகத்திற்கு எந்த பெயர்கள் ஆணிவேர் அடையாளங்களாக உள்ளன.

அ) பூம்புகார், கொற்கை, வஞ்சி

ஆ) பூம்புகார், கொற்கை, தொண்டி

இ) பூம்புகார், வஞ்சி, தொண்டி

ஈ) கொற்கை, வஞ்சி, தொண்டி

34. கீழ்க்கண்ட கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் குறித்த கூற்றுகளை ஆராய்க

i) கொற்கை, வஞ்சி, தொண்டி ஊர் பெயர்கள் பழந்தமிழர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவாக உருவானவை

ii) இவை பழந்தமிழ் சமூகத்திற்கு ஆணி வேர் அடையாளங்கள்.

iii) இப் பெயர்களை வடமொழி இலக்கியங்களும் பதிவு செய்கின்றன.

iv) சங்ககால தமிழ் மன்னர்களின், குறுநிலத் தலைவர்களின், தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க் களங்கள் ஆகியவற்றோடு வடகிழக்கு பகுதிகளில் உள்ள ஊர் பெயர்கள் பொருந்தி போகின்றன.

அ) அனைத்தும் சரி

ஆ) iii, iv சரி

இ) iii, iv தவறு

ஈ) i, iii, iv தவறு.

35. ”கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை” ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்

அ) பாலசுப்ரமணியன்

ஆ) வில்லியம் ஜோன்ஸ்

இ) கால்டுவெல்

ஈ) ஆர்.பாலகிருஷ்ணன்

36. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் துணையாசிரியராக பணியாற்றிய நாளிதழ்?

அ) கணையாழி

ஆ) தினமணி

இ) அ, ஆ இரண்டும்

ஈ) தினமலர்

37. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் நூல்களில் அல்லாதது.

1. சிந்து வெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்

2. அன்புள்ள அம்மா

3. சிந்து வெளி நாகரிகம்

4. சிறகுக்குள் வானம்

அ) 4, 3

ஆ) 2 மட்டும்

இ) 3 மட்டும்

ஈ) எதுவுமில்லை

38. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய ஆட்சிப்பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு

அ) 1983

ஆ) 1984

இ) 1985

ஈ) 1986

39. கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆராய்க.

1. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் 26 ஆண்டுகளாக இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார்.

2. தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநில வளர்ச்சி ஆணையராக உள்ளார்

3. கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் தீவிர பங்காற்றியுள்ளார்.

4. இவர் இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர்

அ) அனைத்தும் சரி

ஆ) 3, 4 சரி

இ) 3, 4 தவறு

ஈ) 1 மட்டும் தவறு

40. திராவிடர்களின் மலை பெருமிதத்தின் நீட்சியாக ____ நாடுகளின் நெடுமலைகளோடு பொருந்தி போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அ) ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான்

ஆ) கிர்கிஸ்தான், பாகிஸ்தான்

இ) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

ஈ) பாகிஸ்தான், இந்தியா

41. பொருள் தருக.

வன்னம், விலாசம்

அ) நிறம், அழகு

ஆ) அழகு, முகவரி

இ) நிறம், முகவரி

ஈ) அழகு, அழகு

42. காவடிச் சிந்து பாடலில் “கழுகாசலம் ” என்பது எதை குறிக்கிறது

அ) கழுகு

ஆ) கழுகுமலை

இ) பழனி மலை

ஈ) முருகன்

43. தவறான இணையைக் கண்டறி

1. புயம் – தோல்

2. நூபுரம் – சிலம்பு

3. மாசுணம் – பாம்பு

4. வரை – மலை

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3

இ) 1, 3

ஈ) 1, 2, 3

44. பொருத்துக

1. இஞ்சி – i) மேகம்

2. புயல் – ii) மதில்

3. கறங்கும் – iii) உலகம்

4. ஜகம் – iv) சுழலும்

5. த்வஜஸ்தம்பம் – v) கொடிமரம்

அ) ii i iv iii v

ஆ) iv ii iii v i

இ) I ii iii iv v

ஈ) v iv iii ii i

45. இலக்கணக் குறிப்பு தருக.

தாவி, மாதே

அ) வினையெச்சம், பெயரெச்சம்

ஆ) பெயரெச்சம், வினையெச்சம்

இ) பெயரெச்சம், விளி

ஈ) வினையெச்சம், விளி

46. பகுபத உறுப்பிலக்கணம் தருக.

வருகின்ற

அ) வா + கின்று + அ

ஆ) வா (வரு) + கின்று + அ

இ) வரு + கின்று + அ

ஈ) வரு + கின் + ற

47. வருகின்ற –> வா (வரு) + கின்று + அ

_ இதில் “கின்று, அ” என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) இறந்த கால இடைநிலை, பெயரெச்ச விகுதி

ஆ) நிகழ்கால இடைநிலை, வினையெச்ச விகுதி

இ) இறந்த கால இடைநிலை, வினையெச்ச விகுதி

ஈ) நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி

48. “திருப்புகழ் = திரு + புகழ் “

இதில் வரும் புணர்ச்சி விதி

அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.

ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.

இ) இனமிகல் விதி

ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

49. “உயர்ந்தோங்கும் ” என்பதின் புணர்ச்சி விதி வரிசையை எழுதுக.

அ) உயர் + து + ஓங்கும் –> உயர்ந்து + ஓங்கும் –> உயர்ந்தோங்கும்

ஆ) உயர்ந்து + ஓங்கும் –> உயர்த் + ஓங்கும் –> உயர்ந்தோங்கும்

இ) உயர்ந்து + ஓங்கும் –> உயர்ந்த் + ஓங்கும் –> உயர்ந்தோங்கும்

ஈ) உயர்ந்து + ஓங்கும் –> உயர் + ஓங்கும் –> உயர்ந்தோங்கும்

50. “உயர்ந்த் + ஓங்கும் ” புணரும் விதி

அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.

ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.

இ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

51. “நூபுரத்துத் தொனி வெடிக்கும் – பத

நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் ”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்

அ) திருமலை முருகன் பள்ளு

ஆ) காவடிச் சிந்து

இ) ஐங்குறுநூறு

ஈ) சிலப்பதிகாரம்

52. “அருணகிரி நாவில் பழக்கம் – தரும்

அந்த திருப்புகழ் முழக்கம் ”

– இவ்வரிகளை பாடியவர்

அ) அழகிய பெரியவன்

ஆ) பெரியவன் கவிராயர்

இ) திருமூலர்

ஈ) சென்னிக்குளம் அண்ணாமலையார்.

53. அண்ணாமலையார் இயற்றிய காவடிச் சிந்து யாருடைய நூலின் தாக்கத்தால் விளைந்தது.

அ) அருணகிரியாரின் திருப்புகழ்

ஆ) திருமூலரின் திருமந்திரம்

இ) அருணகிரியாரின் திருமந்திரம்

ஈ) திருமூலரின் திருப்புகழ்

54. தமிழில் முதன்முதலில் வண்ணச் சிந்து பாடியதால் “ காவடிச் சிந்தின் தந்தை” என அழைக்கப்படுபவர்

அ) அழகிய பெரியவன்

ஆ) பெரியவன் கவிராயர்

இ) திருமூலர்

ஈ) சென்னிக்குளம் அண்ணாமலையார்.

55. சென்னிக்குளம் அண்ணாமையார் யாருடைய அரசவையில் அரசவைப் புலவராக இருந்தார்

அ) பாரி

ஆ) அருணகிரிநாதர்

இ) இருதயாலய மருதப்பத் தேவர்

ஈ) பேகன்

56. கீழ்க்கண்டவற்றுள் சென்னிகுளம் அண்ணாமலையார் எழுதிய நூல்கள் யாவை?

1. வீரைத் தல புராணம் 2. சங்கரன்கோவில் திரிபந்தாதி

3. கருவை மும்மணிக்கோவை 4. கோமதி அந்தாதி

அ) அனைத்தும்

ஆ) ii, iii, iv

இ) ii, iv

ஈ) i, ii, iv

57. “அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ”

– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) ஐங்குறுநூறு

ஆ) குறுந்தொகை

இ) அகநானூறு

ஈ) நற்றிணை

58. “அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

___ ___ ___ ___ ___ ___ ___ _

இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே ”

என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள திணை

அ) குறிஞ்சித் திணை

ஆ) முல்லைத் திணை

இ) மருத திணை

ஈ) நெய்தல் திணை

59. சரியான இணையை கண்டறி

1. சிதவல் – தலைப் பாகை

2. தண்டு – ஊன்றுகோல்

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

60. “ அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

___ ___ ___ ___ ___ ___ ___ _

இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே ”

என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை

அ) வெண்பா

ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா

ஈ) நேரிசை ஆசிரியப்பா

61. இலக்கணக் குறிப்புத் தருக: பிரிந்தோர்

அ) வினையெச்சம்

ஆ) வினையாலணையும் பெயர்

இ) வினை முற்று

ஈ) பெயரெச்சம்

62. “நன்றுநன்று “இலக்கணக் குறிப்பு

அ) விளித் தொடர்

ஆ) இரட்டைக் கிளவி

இ) வினை முற்று

ஈ) அடுக்குத் தொடர்

63. ” பிரிந்தோர் “ என்பதன் பகுப்பத உறுப்பிலக்கணம்

அ) பிரிந்து + ஓர்

ஆ) பிரி + த்(ந்) + த் + ஓர்

இ) பிரி + த் + ந் + ஓர்

ஈ) பிரிந்து + த் + ஓர்

64. “பிரி + த்(ந்) + த் + ஓர் ” என்பதில் ‘ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பலர்பால் வினைமுற்று விகுதி

ஆ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

இ) வினையாலனையும் பெயர்

ஈ) இறந்த கால விகுதி

65. “தண்டு + உடை __ > தண்ட் + உடை” இதில் வந்துள்ள புணர்ச்சி விதி

அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.

ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.

இ) இனமிகல் விதி

ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

66. எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்ல ‘ என்ற அடைமொழியை பெற்று வரும் நூல்

அ) நற்றினை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) பதிற்றுப்பத்து

67. குறுந்தொகை அகத்திணை சார்ந்த எத்தனை பாடல்களை உடையது

அ) 500

ஆ) 400

இ) 401

ஈ) 501

68. எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்

அ) நற்றினை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) பதிற்றுப்பத்து

69. குறுந்தொகை நூலை தொகுத்தவர்

அ) உக்கிரபெருவழுதி

ஆ) பெருந்தேவனார்

இ) கபிலர்

ஈ) பூரிக்கோ

70. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்

அ) உக்கிரபெருவழுதி

ஆ) பெருந்தேவனார்

இ) கபிலர்

ஈ) பூரிக்கோ

71. வெள்ளி வீதியார் சங்கத் தொகை நூல்களில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை

அ) 10

ஆ) 12

இ) 15

ஈ) 13

72. கூற்று: குறுந்தொகை முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது

காரணம்: இது உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

73. தமிழர்களின் வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல் வாழ்வின் விழுமியங்களையும் பேசும் தமிழரின் வாழ்வியல் கருவூல நூல் எது?

அ) நற்றினை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) புறநானூறு

74. “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் ”

– இவ்வரிகளை இயற்றியவர்

அ) வெள்ளி வீதியார்

ஆ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

இ) ஒளவையார்

ஈ) அண்ணாமலையார்

75. “புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் ”

– இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

அ) நற்றினை

ஆ) குறுந்தொகை

இ) ஐங்குறுநூறு

ஈ) புறநானூறு

76. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்து கூறுவது

அ) கைக்கிளை

ஆ) பெருந்திணை

இ) வஞ்சி

ஈ) பொதுவியல்

77. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறும் துறை

அ) பொதுவியல்

ஆ) பொருண்மொழிக் காஞ்சித் துறை

இ) காஞ்சித் துறை

ஈ) ஆ, இ இரண்டும்

78. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

இப்பாடல் அமைந்துள்ள துறை

அ) பொதுவியல்

ஆ) பொருண்மொழிக் காஞ்சித் துறை

இ) காஞ்சித் துறை

ஈ) ஆ, இ இரண்டும்

79. சரியான பொருளை தேர்ந்தெடு.

துஞ்சல், அயர்வு

அ) ஊஞ்சல், சோர்வு

ஆ) விளையாட்டு, சோம்பல்

இ) சோம்பல், சோர்வு

ஈ) பெருமை, வலிமை

80. பொருத்துக.

1. தமியர் – i) முயற்சி

2. முனிதல் – ii) வலிமை

3. மாட்சி – iii) பெருமை

4. நோன்மை – iv) வெறுத்தல்

5. தாள் – v) தனித்தவர்

அ) v iv iii ii i

ஆ) iv ii iii v i

இ) I ii iii iv v

ஈ) v iv iii ii i

81. “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் ”

– இவ்வரிகள் அமைந்த பாடலின் பாவகை

அ) வெண்பா

ஆ) கலிப்பா

இ) வஞ்சிப்பா

ஈ) நேரிசை ஆசிரியப்பா

82. இலக்கணக் குறிப்பு தருக.

உண்டல், துஞ்சல்

அ) வினைமுற்று

ஆ) அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) தொழிற்பெயர்

83. சரியான இணையை தேர்ந்தெடு.

1. அம்ம – அசைநிலை

2. முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

84. பகுபத உறுப்பிலக்கணம் தருக.

முனிவிலர்

அ) முனி + வி + இல் + அர்

ஆ) முனி + வ் + இல் + அர்

இ) முனிவு + இலர்

ஈ) முனி + விலர்

85. ‘துஞ்சல் –> துஞ்சு + அல்‘ என்னும் பகுபத உறுப்பிலக்கணத்தில் “அல்” என்பது

அ) வினைமுற்று

ஆ) வினையெச்ச விகுதி

இ) பெயரெச்ச விகுதி

ஈ) தொழிற்பெயர் விகுதி

86. ” இயைவதாயினும் ” என்பதன் புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு

அ) இயைவது + ஆயினும் –> இயைவதாயினும்

ஆ) இயை + வ் + அ + தாயினும் –> இயை + வ + தாயினும் –> இயைவதாயினம்

இ) இயைவது + ஆயினும் –> இயைவத் + ஆயினும் –> இயைவதாயினம்

ஈ) இயைவு + ஆயினும் –> இயைவ் + ஆயினும் –> இயைவதாயினும்

87. “புகலிழனின் – புகழ் + எனின் ”

– புணர்ச்சி விதி தருக.

அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.

ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.

இ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

88. புறநானூற்றை பாடல்கள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்

அ) ஜி.யு.போப்

ஆ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) உ.வே.சா

89. புறநானூற்றை பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்

அ) ஜி.யு.போப்

ஆ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) உ.வே.சா

90. “Extracts from purananooru & Purapporul Venbamalai ” என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்

அ) ஜி.யு.போப்

ஆ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) உ.வே.சா

91. “The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil, the purananuru” என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்

அ) ஜி.யு.போப்

ஆ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) உ.வே.சா

92. சுவடிகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த புறநானூற்றை முதன் முதலில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டவர்

அ) ஜி.யு.போப்

ஆ) ஜார்ஜ் எல்.ஹார்ட்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) உ.வே.சா

93. புறநானூறு முதன் முதலில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு

அ) 1893

ஆ) 1895

இ) 1894

ஈ) 1896

94. கீழ்க்கண்டவற்றுள் புறநானூற்றின் வேறு பெயர்கள் யாவை

1. புறம் 2. புறப்பாட்டு 3. வேளாண்மை இலக்கியம் 4. வேளாண் பாடல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) 1, 2, 4 சரி

95. புறநானூற்றின் பாடல்கள் கீழ்க்கண்ட எவற்றை எடுத்துரைக்கின்றன

1. அரசர்களை பற்றி

2. மக்களின் சமூக வாழ்க்கை பற்றி

3. மக்களின் வேளாண் முறைகளை பற்றி

அ) அனைத்தும்

ஆ) 1, 3

இ) 2, 3

ஈ) 1, 2

96. புறநானூறு பாடல்கள் எவ்வகை பாக்களால் ஆனது

அ) வெண்பா

ஆ) ஆசிரியப்பா

இ) அகவற்பா

ஈ) கலிப்பா

97. புறநானூறு பாடல்கள் எவ்வகை பாடல்களை கொண்டுள்ளன

1. அகத்திணை பாடல்கள் 2. புறத்திணைப் பாடல்கள்

3. அறப் பாடல்கள்

அ) அனைத்தும் சரி

ஆ) 2 மட்டும்

இ) 1 மட்டும்

ஈ) 1, 2 மட்டும்

98. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எந்தெந்த நூல்களில் பாடல்கள் இயற்றியுள்ளார்

அ) புறநானூறு, அகநானூறு

ஆ) புறநானூறு, பரிபாடல்

இ) அகநானூறு, பரிபாடல்

ஈ) பரிபாடல், பதிற்றுபத்து

99. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பெயர்க்காரணங்களில் சரியானது எது?

1. அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம் பெருவழுதி என்றனர்

2. கடற்பயணம் ஒன்றில் இறந்து போனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என அழைக்கப்படுகிறார்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும்

ஈ) இரண்டும் தவறு

100. “முனிவிலர் –> முனி + வ் + இல் + அர்” இதில் ‘இல் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) இறந்த கால இடைநிலை

ஆ) நிகழ்கால இடைநிலை

இ) எதிர்கால இடைநிலை

ஈ) எதுவுமில்லை

101. அளவில் சிறு கதையை விட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருப்பது

அ) உரைநடை

ஆ) குறுநாவல்

இ) பெருங்கதை

ஈ) நாவல்

102. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

1. அளவில் சிறு கதையை விட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருப்பது குறும் புதினம்

2. இதனைக் குறுநாவல் என்றும் செல்வர்.

3. இது சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் ஆகும்

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3 சரி

இ) 1, 2 சரி

ஈ) 1, 3 சரி

103. “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என கூறும் நூல்

அ) நற்றிணை

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) குறுந்தொகை

104. ” கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்

___________________

நைவாரா ஆய மகள் தோள் ”

– என்னும் பாடல் எதை பற்றிக் கூறுகிறது

அ) மகளிர்

ஆ) பொது மக்கள்

இ) விலங்குகள்

ஈ) ஏறு தழுவுதல்

105. வாடிவாசல் என்ற குறும்பு தினத்தின் ஆசிரியர்

அ) பரணர்

ஆ) வெள்ளி வீதியார்

இ) சி.சு.செல்லப்பா

ஈ) இளம் பெருவழுதி

106. சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில உதவி ஆசிரியராக பணியாற்றியவர்

அ) ஜெயபாரதி

ஆ) ஜெயமோகன்

இ) பாலகிருஷ்ணன்

ஈ) சி.சு.செல்லப்பா.

107. எழுத்து என்ற இதழினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

அ) ஜெயபாரதி

ஆ) ஜெயமோகன்

இ) பாலகிருஷ்ணன்

ஈ) சி.சு.செல்லப்பா.

108. சி.சு.செல்லப்பா எந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

அ) சுதந்திர தாகம் – 2010

ஆ) வாடிவாசல் – 2010

இ) சுதந்திர தாகம் – 2001

ஈ) வாடிவாசல் – 2001

109. சி.சு.செல்லப்பா அவர்களின் படைப்புகளில் அல்லாதது எது?

1. ஜீவனாம்சம்

2. தமிழ் சிறுகதை பிறக்கிறது

3. பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி

4. யானை டாக்டர்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 2, 3 சரி

ஈ) எதுவுமில்லை

110. சி. சு. செல்லப்பா அவர்கள் ஈடுபடாத துறை எது?

அ) சிறுகதை

ஆ) நடிப்பு

இ) கவிதை

ஈ) மொழிப்பெயர்ப்பு

111. ‘பதம்’ என்ற சொல்லின் பொருள்

அ) தாள்

ஆ) சொல்

இ) பாதம்

ஈ) விரைவு

112. இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்

அ) 5

ஆ) 6

இ) 4

ஈ) 2

113. இலக்கண வகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகுபதத்திற்கு உரியவை எது /எவை?

1. பெயர்ச்சொல் 2. வினைச்சொல்

3. இடைச்சொல் 4. உரிச்சொல்

அ) 1, 3

ஆ) 1, 2

இ) 1, 2, 3

ஈ) 3, 4

114. இலக்கண வகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகாபதத்திற்கு உரியவை எது /எவை?

1. பெயர்ச்சொல் 2. வினைச்சொல்

3. இடைச்சொல் 4. உரிச்சொல்

அ) 1, 3

ஆ) 1, 2

இ) 1, 2, 3

ஈ) 3, 4

115. இலக்கண வகையில் அமைந்த பகுபத சொற்களில் எந்த வகை பகுபத சொற்கள் மிகுதியாக உள்ளன.

அ) பெயர்ப்பகுபதச் சொற்கள்

ஆ) வினைப் பகுபதச் சொற்கள்

இ) அ, ஆ இரண்டும்

ஈ) அ, ஆ இரண்டுமில்லை

116. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

117. சொற்களை கீழ்க்கண்ட எதனடிப்டையில் பிரித்து எழுதுவர்.

1. பொருள் 2. வினை 3. உறுப்புகள்

அ) 1, 2

ஆ) 1, 2, 3

இ) 1, 3

ஈ) 2, 3

118. வினைப் பகுபதத்தின் அடிப்படை உறுப்புகளாக இருப்பவை

அ) பகுதி, விகாரம்

ஆ) பகுதி, விகுதி

இ) விகுதி, விகாரம்

ஈ) சந்தி, சாரியை

119. ஒரு பகுபதத்தில் பொருள் தரும் உறுப்புகள் எவை?

1. பகுதி 2. விகுதி 3. இடை நிலை

4. சந்தி 5. சாரியை 6. விகாரம்

அ) 1, 2, 3, 4

ஆ) 1, 2, 4, 5

இ) 1, 2, 3

ஈ) அனைத்தும்

120. பகுபத உறுப்புகளில் ____ சொற்பொருளையும் _____, _____இலக்கண பொருண்மைகளையும் தருகின்றன.

அ) பகுதி, சந்தி, சாரியை

ஆ) பகுதி, விகுதி, இடைநிலை

இ) விகுதி, பகுதி, இடைநிலை

ஈ) பகுதி, விகுதி, சந்தி

121. பகுபத உறுப்புகளில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை இணைவதால் ஏற்படும் புணர்ச்சி மாற்றம்

அ) சந்தி

ஆ) சாரியை

இ) விகாரம்

ஈ) அ, ஆ, இ மூன்றும்

122. விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் பகுபத உறுப்பு

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடை நிலை

ஈ) சந்தி

123. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அறிஞர்

அ) அறி + ஞர்

ஆ) அறிஞ + அர்

இ) அறி + ஞ் + அர்

ஈ) அறி + ஞ + அர்

124. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பாடினான்

அ) பாடு + இனான்

ஆ) பாடி + இனான்

இ) பாடு + இனான்

ஈ) பாடு + இன் + ஆன்

125. பகுபத உறுப்புகளுள் சொல்லின் அடிச் சொல் ___ எனப்படும்.

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடை நிலை

ஈ) சந்தி

126. கீழ்க்கண்ட பகுதி குறித்த கூற்றுகளுள் தவறானதை கண்டறி

அ) சொல்லின் பகுதி முதனிலை எனவும் கூறப்படுகிறது.

ஆ) மேலும் பகுதி, விகுதி என பிரிக்க இயலாது.

இ) விகுதி பெற்ற ஏவல்வினையாக வரும்

ஈ) சில நேரங்களில் ஒற்று இரட்டித்து காலம் காட்டும்.

127. வினை முற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடை நிலை

ஈ) சந்தி

128. பகுபத உறுப்பிலக்கணம் தருக – நடந்தது

அ) நடந்த + அது

ஆ) நடந் + த் + அ + து

இ) நட + த் + அ + து

ஈ) நட + த்(ந்) + த் + அது

129. பகுபத உறுப்பிலக்கண விகுதியான “ஆன் ” என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்

அ) உயர்திணை ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம்

ஆ) உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம்

இ அ ஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

130. பகுபத உறுப்பிலக்கண விகுதியான “ஆள் ” என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்

அ) உயர்திணை ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம்

ஆ) உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம்

இ அ ஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

131. பகுபத உறுப்பிலக்கண விகுதியான “து ” என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்

அ) உயர்திணை ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம்

ஆ) உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம்

இ) அ ஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

132. பகுபத உறுப்பிலக்கணம் தருக – படித்தாள்

அ) படித்து + ஆள்

ஆ) படி + த் + து + ஆள்

இ) படி + த் + த் + ஆள்

ஈ) படி + த் + ஆள்

133. தவறான இணையை தேர்ந்தெடு

அ) எழுதுக – எழுது + க

ஆ) உரைத்த – உரை + த் + த் + அ

இ) செய்தல் – செய்து + அல்

ஈ) படித்து – படி + த் + த் + உ

134. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடை நிலை

ஈ) சந்தி

135. வினைப் பகுபதம், பெயர்ப் பகுபதம் முறையே எத்தனை வகைப்படும்

அ) 2, 2

ஆ) 2, 1

இ) 1, 2

ஈ) 1, 1

136. வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையின் வகைகள் யாவை?

1. கால இடைநிலை 2. பெயர் இடை நிலை

3. எதிர்மறை இடைநிலை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 2, 3

137. பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையின் வகைகள் யாவை?

1. கால இடைநிலை 2. பெயர் இடை நிலை

3. எதிர்மறை இடைநிலை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2

இ) 1, 3

ஈ) 2 மட்டும்

138. ஒரு வினைப் பகு பதத்தில் பகுதிக்கும் விடுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் பகுபத இலக்கண உறுப்பு

அ) சந்தி

ஆ) சாரியை

இ) கால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

139. ” செய்கிறான் –> செய் + கிறு + ஆன் ” என்பதில் “கிறு” என்பது

அ) இறந்த கால இடைநிலை

ஆ) எதிர்கால இடைநிலை

இ) நிகழ்கால இடைநிலை

ஈ) எதுவுமில்லை

140. பொருத்துக

1. இறந்த கால இடைநிலை – i) த், ட், ற், இன்

2. நிகழ்கால இடைநிலை – ii) கிறு, கின்று, ஆநின்று

3. எதிர்கால இடைநிலை – iii) ப், வ்

4. எதிர்மறை இடைநிலை – iv) ஆ, அல், இல்

அ) i ii iii iv

ஆ) ii i iii iv

இ) i iv iii ii

ஈ) iv iii ii i

141. எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்துவது

அ) சாரியை

ஆ) எதிர்கால இடைநிலை

இ) இறந்த கால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

142. “பேசான், ஓடாது” என்பதில் வந்துள்ள இடைநிலை

அ) ஆன், ஆ

ஆ) ஆ, ஆ

இ) ஆ, ஆது

ஈ) அல், இல்

143. ஆக்கப் பெயர்ச்சொல்லில் பெயர்ப் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வருவது

1. கால இடைநிலை 2. பெயர் இடை நிலை

3. எதிர்மறை இடைநிலை

அ) 1, 2

ஆ) 1, 3

இ) 2

ஈ) 3

144. பெயர் இடைநிலைகளாக வரும் மெய்கள் யாவை?

அ) ச், ஞ், த், ட், ன்

ஆ) ச், ஞ், ந், த், வ்

இ) க், ச், ட், த், ப்

ஈ) ங், ஞ், ண், ந், ம்

145. பகுபத உறுப்புகளாக பிரிக்க – தமிழச்சி

அ) தமிழ் + அச்சி

ஆ) தமிழ் + அ + சி

இ) தமிழ் + அ + ச் + சி

ஈ) தமிழ் + அ + ச் + ச் + இ

146. பகுபத உறுப்புகளாக பிரிக்க – இளைஞர்

அ) இளை + ஞர்

ஆ) இளை + ஞ + அர்

இ) இளை + ஞ் + அர்

ஈ) இளை + ஞ் + ஞர்.

147. பகுபத உறுப்புகளாக பிரிக்க – மூவர்

அ) மூ + வ் + அர்

ஆ) மூன்று + வ் + அர்

இ) மூன்று + வ + அர்

ஈ) மூ + வ + ர்

148. பகுபத உறுப்புகளாக பிரிக்க – ஓட்டுநர்

அ) ஓடு + ந் + அர்

ஆ) ஓட்டு + நர்

இ) ஓட்டு + ந் + அர்

ஈ) ஓடு + ந் + அர்

149. ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து _____வரின் கெடாமல் வரும், ____வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.

அ) உயிரெழுத்து, உயிர்மெய்

ஆ) உயிர்மெய், உயிரெழுத்து

இ) உயிரெழுத்து, மெய்யெழுத்து

ஈ) மெய்யெழுத்து, உயிரெழுத்து

150. பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றும் உறுப்பு

அ) சாரியை

ஆ) சந்தி

இ) அ, ஆ

ஈ) எதுவுமில்லை

151. சந்தி என்பதற்கு ____ என்று பெயர்.

அ) பகுபதம்

ஆ) இடைநிலை

இ) புணர்ச்சி

ஈ) எதுவுமில்லை

152. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடை நிலை

ஈ) சந்தி

153. புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்கள் எவை?

அ) தோன்றல்

ஆ) திரிதல்

இ) கெடுதல்

ஈ) மூன்றும்

154. புணர்ச்சியின் போது எழுத்து தோன்றுதலை ____ என்றும் மற்றைய திரிதலையும் கெடுதலையும் ___ என்றும் வழங்குவர்.

அ) விகாரம், சந்தி

ஆ) சந்தி, விகாரம்.

இ) இடைநிலை, விகாரம்

ஈ) இடைநிலை, சந்தி

155. புணர்ச்சியின் போது பெரும்பாலும் வரும் சந்தி எழுத்துகள்

அ) க், ச், த்

ஆ) க், ச், ட்

இ) க், த், ப்

ஈ) க், ச், ற்

156. தவறான இணையைத் தேர்ந்தெடு.

அ) அசைத்தான் – அசை + த் + த் + ஆன்

ஆ) காப்பார் – கா + ப் + ப் + ஆர்

இ) படிக்கிறார் – படி + க் + கிறு + ஆர்

ஈ) வணங்கிய – வணங்கு + இ(ன்) + அ

157. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு

அ) மொழிப்பேறு

ஆ) எழுத்துப் பேறு

இ) சந்திப்பேறு

ஈ) பகுபத பேறு

158. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது

அ) சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப் பேறு என்பர்.

ஆ) விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்தே எழுத்துப் பேறு எனப்படும்.

இ) எழுத்துப் பேறு காலம் காட்டும்

ஈ) பாடுதி – பாடு + த் + இ – இதில் த் என்பது எழுத்துப்பேறாகும்.

159. பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் பகுபத உறுப்பு

அ) எழுத்துப் பேறு

ஆ) சாரியை

இ) சந்தி

ஈ) எதுவுமில்லை

160. சொற்களை பகுபத உறுப்புகளாக பிரிக்கும் போது சாரியை வரும் இடம்

அ) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில்

ஆ) இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்

இ) சந்திக்கும் சாரியைக்கும் இடையில்

ஈ) பகுதிக்கும் சந்திக்கும் இடையில்

161. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக

அ) பார் + த் + அன்

ஆ) பார் + த் + த் + அன்

இ) பார் + த் + த் + அன் + அன்

ஈ) பார் + த் + அன் + அன்

162. சந்தி வர வேண்டிய இடத்தில் ___வந்தால் அது சாரியை ஆகும்.

அ) உயிர்மெய்

ஆ) உயிர் எழுத்து

இ) மெய் எழுத்து

ஈ) ஆய்தம்

163. “பார் + த் + த் + அன் + அன்” என்பதில் த் ஐ அடுத்து வரும் ‘அன்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) சந்தி

ஆ) இடைநிலை

இ) சாரியை

ஈ) விகுதி

164. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருகுவென்

அ) தா + கு + வ் + என்

ஆ) தா (தரு) + கு + வ் + என்

இ) தரு + க் + வ் + என்

ஈ) தரு + கு + வென்

165. சரியான கூற்றை தேர்ந்தெடு

அ) சாரியைக்கு பொருள் உண்டு

ஆ) அன் என்பது விகுதியாக வரும் போது ஆன் சாரியையாக வரும்.

இ) ஆன், ஆள், ஆர் ஆகிய விகுதிகள் வரும் போது அன் சாரியையாக வரும்.

ஈ) தா (தரு) + கு + வ் + என் என்பதில் ‘வ்’ என்பது சாரியை.

166. பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ____ எனப்படும்,

அ) புணர்ச்சி

ஆ) விகாரம்

இ) சாரியை

ஈ) சந்தி

167. தவறான இணையைத் தேர்ந்தெடு

அ) நின்றான் – நில்(ன்) + ற் + ஆன்

ஆ) வணங்கிய – வணங்கு + இ(ன்) + ய் + அ

இ) கண்டான் – காண் (கண்) + டான்

ஈ) எழுதினோர் – எழுது + இன் + ஓர் (ஆர்)

168. தவறான கூற்றை தேர்ந்தெடு

1. பகுபதத்தன்மை உள்ள மொழியை கற்று கொள்வது எளிது.

2. பிற மொழியினர் தமிழை எளிதாக கற்றுக் கொள்ள இதுவுமொரு காரணம்.

3. இப்பகுபதத் தன்மையால் எண்ணிறந்த சொற்கள் உருவாகின்றன

4. இது மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2 தவறு

ஈ) 1, 2, 4 சரி

169. பொருந்தாத இணையை தேர்ந்தெடு

அ) அன் – வந்தனன்

ஆ) இன் – முறிந்தது

இ) கு – காண்குவன்

ஈ) அன் – சென்றன

170. காவடிச் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) அண்ணாமலையார்

இ) முருகன்

ஈ) பாரதியார்

171. கூற்று – “கோடு ” என்பது தமிழ்ச் சொல் ஆகும்.

விளக்கம் – கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.

அ) கூற்று சரி, விளக்கம் தவறு

ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

இ) கூற்று தவறு, விளக்கம் சரி

ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு

172. பொருத்துக.

a. வெள்ளி வீதியார் – i) புறநானூறு

b. அண்ணாமலையார் – ii) சி.சு செல்லப்பா

c. வாடிவாசல் – iii) குறுந்தொகை

d. இளம் பெருவழுதி – iv) காவடிச் சிந்து

அ) i ii iii iv

ஆ) ii i iii iv

இ) iii iv ii i

ஈ) iv iii ii i

173. “இனிதென” – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.

அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

ஆ) தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்.

இ) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

ஈ) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்.

174. தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் யார்?

அ) ஆறுமுக நாவலர்

ஆ) உ.வே.சா

இ) சி.வை.தாமோதரனார்

ஈ.) ஜி.யு.போப்

175. சி.வை.தாமோதரனார் தமது 20 வது வயதில் உரையுடன் பதிப்பித்து வெளியிட்ட நூல்

அ) அகநானூறு

ஆ) நீதிநெறி விளக்கம்

இ) புறநானூறு

ஈ) நன்னூல்

176. சி.வை.தாமோதரனார் எப்போது தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்த ஆண்டு

அ) 1968

ஆ) 1886

இ) 1868

ஈ) 1986

177. சி.வை.தாமோதரனார் எழுதிய நூல்களில் அல்லாதது.

அ) நட்சத்திர மாலை

ஆ) சூளாமணி வசனம்

இ) கட்டளைக் கலித்துறை

ஈ) நீதிநெறி விளக்கம்

178. சி.வை.தாமோதரனார் எழுதிய பள்ளிப் பாடநூல்

அ) நட்சத்திர மாலை

ஆ) சூளாமணி வசனம்

இ) கட்டளைக் கலித்துறை

ஈ) ஆறாம் வாசகப் புத்தகம்

179. கீழ்க்கண்டவற்றுள் சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல் எது.

அ) நட்சத்திர மாலை

ஆ) கலித்தொகை

இ) கட்டளைக் கலித்துறை

ஈ) நீதிநெறி விளக்கம்

180. ‘தினவர்த்தமானி ‘ என்னும் இதழை நடத்தியவர்

அ) சி.வை.தாமோதரனார்

ஆ) பெர்சிவல் பாதிரியார்

இ) உ.வே.சா

ஈ) பாரதி

181. சி.வை.தாமோதரனார் தமிழ் பண்டிதராக நியமிக்கப்பட்ட கல்லூரி

அ) சென்னை மாநிலக் கல்லூரி

ஆ) பாரதிதாசன் கல்லூரி

இ) தமிழ்ப் பல்கலைக்கழகம்

ஈ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

182. சி.வை.தாமோதரனார் 1884ம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இடம்

அ) கும்பகோணம்

ஆ) புதுக்கோட்டை

இ) யாழ்ப்பாணம்

ஈ) புதுச்சேரி

183. சி.வை.தாமோதரனார் வாழ்ந்த காலம்

அ) 1832 – 1900

ஆ) 1823 – 1900

இ) 1832 – 1901

ஈ) 1823 – 1901

184. பெரும்புகழ் – இலக்கணக் குறிப்பு தருக

அ) வினைத் தொகை

ஆ) பண்புத்தொகை

இ) வினைமுற்று

ஈ) வினையெச்சம்

185. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

“தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்”

அ) தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்

ஆ) தமிழர் ஆற்றுத் தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்

இ) தமிழர் ஆற்றுத் தண்ணீரைத் தேக்கி சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்

ஈ) தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கிச் சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்

186. ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவது

அ) மதுரகவி

ஆ) சித்திரகவி

இ) ஆசுகவி

ஈ) எதுவுமில்லை

187. ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடல் சித்திர கவியின் எந்த வகையை சார்ந்தது

அ) ஆசுகவி

ஆ) மாலை மாற்று

இ) மாலை

ஈ) பூமாலை

188. ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடல் சித்திர கவியின் மாலை மாற்று வகையை போன்ற ஆங்கில வடிவம்

அ) POLY

ஆ) POYCHROME

இ) POLINDROME

ஈ) POLYCROSS

189. தவறான இணையை தேர்ந்தெடு

அ) Ethnic Group – இனக்குழு

ஆ) Earth Environment – புவிச்சூழல்

இ) Etymological Dictionary – வேர்ச்சொல் அகராதி

ஈ) Cultural Elements – பண்பாடு

190. தவறான இணையை தேர்ந்தெடு

1. Prefix – பின்னொட்டு 2. Suffix – முன்னொட்டு

அ) 1 தவறு

ஆ) 2 தவறு

இ) இரண்டும் தவறு

ஈ) இரண்டும் சரி

191..”தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு”

– இக்குறளில் பயின்று வரும் அணி

அ) இல்பொருள் உவமை அணி

ஆ) எடுத்துக்காட்டுவமை அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

192..”மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான் கண் படின் “

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) இல்பொருள் உவமை அணி

ஆ) எடுத்துக்காட்டுவமை அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

193..”சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) இல்பொருள் உவமை அணி

ஆ) எடுத்துக்காட்டுவமை அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

194.” பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பறறுக பற்று விடற்கு ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) பொருள்பின் வரும்நிலை அணி

ஆ) சொல் பின்வரும் நிலை அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

195.” பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) பிறிது மொழிதல் அணி

ஆ) எடுத்துக்காட்டுவமை அணி

இ) வேற்றுமை அணி

ஈ) உவமை அணி

196.திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முறையே

அ) 70, 38, 25

ஆ) 38, 70, 25

இ) 38, 25, 70

ஈ) 25, 38, 70

197. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை முறையே

அ) 38, 70, 25

ஆ) 25, 70, 38

இ) 4, 3, 2

ஈ) 3, 2, 4

198.பொருத்துக

1. பாயிரவியல் – i) 1

2. இல்லறவியல் – ii) 13

3. துறவறவியல் – iii) 20

4. ஊழியல் – iv) 4

அ) i ii iii iv

ஆ) ii i iii iv

இ) i iv iii ii

ஈ) iv iii ii i

199.சரியான இணையை தேர்ந்தெடு

அ) அமைச்சு இயல் – 25

ஆ) அரசு இயல் – 32

இ) ஒழிபியல் – 13

ஈ) ஊழியல் – 1

200. பொருட்பாலிலுள்ள இயல்களில் அல்லாதது எது?

அ) அரசு இயல்

ஆ) துறவறவியல்

இ) அமைச்சு இயல்

ஈ) ஒழிபியல்

201. சரியான இணையை தேர்ந்தெடு

1. களவியல் – 7

2. கற்பியல் – 18

அ) இரண்டும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

202. கூற்று: திருக்குறள் உலகப் பொது மறை என போற்றப்படுகிறது.

காரணம்: இது தமிழர்களுக்கு எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்ததால் இவ்வாறு போற்றப்படுகிறது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

203. திருக்குறளில் உள்ள பாடல்கள் அனைத்தும் எவ்வகைப் பாவால் ஆனது

அ) குறள் வெண்பா

ஆ) குறள் ஆசிரியப்பா

இ) குறள் ஆசிரியரப்பா

ஈ) குறள் வஞ்சிப்பா

204. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்

அ) காலிங்கர்

ஆ) நச்சர்

இ) மணக்குடவர்

ஈ) அ, ஆ, இ

205. திருக்குறளின் சிறப்பினை விளக்க பல புலவர்கள் பாடிய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல்

அ) திருக்குறள் மாலை

ஆ) திருவள்ளுவ மாலை

இ) இரண்டும்

ஈ) இரண்டுமில்லை.

206. திருக்குறளுக்கான வேறு பெயர்களில் அல்லாதது

1. உத்திர வேதம் 2. தெய்வ நூல்

3. மாதானுபங்கி 4. செந்நாப்போதர்

அ) அனைத்தும் சரி

ஆ) 3, 4 தவறு

இ) 3, 4 சரி

ஈ) 1, 2 தவறு

207. துன்பப்படுவர் _____.

அ) தீக்காயம் பட்டவர்

ஆ) தீயினால் சுட்டவர்

இ) பொருளை காக்காதவர்

ஈ) நாவைக் காக்காதவர்

208. ஒப்புரவு என்பது ____

அ) அடக்கமுடையது

ஆ) பண்புடையது

இ) ஊருக்கு உதவுவது

ஈ) செல்வ முடையது

209. பொருத்துக

1.வாழ்பவன் – i) காத்திருப்பவன்

2.வாழாதவன் – ii) மருந்தாகும் மரமானவன்

3. தோன்றுபவன் – iii) ஒத்ததறிபவன்

4. வெல்ல நினைப்பவன் – iv) புகழ் பெறும் தன்மையுடையவன்

5. பெரும் பண்புடையவன் – v) இசையொழித்தவன்

அ) i ii iii iv v

ஆ) ii i iii v iv

இ) iii v iv I ii

ஈ) iv ii iii I v

210. விரைந்து கெடுபவன் யார்?.

அ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்

ஆ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்

இ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்

ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்

211. பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்வனைப் பற்றுவதால் உண்டாவது

அ) பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்

ஆ) பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்

இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்

ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்

212. இலக்கணக் குறிப்புத் தருக – சுடச்சுட

அ) இரட்டைக் கிளவி

ஆ) அடுக்குத் தொடர்

இ) சிலேடை

ஈ) எதுவுமில்லை

213. ” வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல் ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) பொருள்பின் வரும்நிலை அணி

ஆ) சொல் பின்வரும் நிலை அணி

இ) சொற்பொருள் பின்வரும் நிலை அணி

ஈ) உவமை அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!