11th Tamil Unit 2 Questions
11th Tamil Unit 2 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.
1. ‘உழவு உலகிற்கு அச்சாணி’ என்று கூறியவர்
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) பாரதி
ஈ.) வள்ளுவர்
2. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று கூறியவர்
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) பாரதி
ஈ.) வள்ளுவர்
3. கீழ்க்கண்ட பனை மரம் குறித்த கூற்றுகளில் தவறானது எது/எவை
i. தமிழ் நாட்டின் மாநில மரம் என அழைக்கப்படும் பனை மரம் காற்றுத் தடுப்பானாகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் உதவுகிறது.
ii. பனங்கொட்டையை இரண்டடிக்கு இரண்டடி என இடைவெளி விட்டு நட வேண்டும்.
iii. பனை மரம் வளர்ந்து பலன் தர ஏழு ஆண்டுகள் ஆகும்.
iv. இது ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது.
அ) அனைத்தும்
ஆ) i, iii
இ) ii, iii
ஈ) iii, iv
4. வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர் யார் மற்றும் அவர் எந்த நாட்டை சேந்தவர்
அ) மசானபு ஃபுகோகா – இந்தியா
ஆ) மசானபு ஃபுகோகா – சீனா
இ) மசானபு ஃபுகோகா – ரஷ்யா
ஈ) மசானபு ஃபுகோகா – ஜப்பான்
5. மசானபு ஃபுகோகா என்பவர் வைக்கோல் பற்றி எழுதிய நூல் மற்றும் நூலை வெளியிட்ட ஆண்டு
அ) வைக்கோல் புரட்சி – 1978
ஆ) வைக்கோல் புரட்சி – 1878
இ) ஒற்றை வைக்கோல் புரட்சி – 1978
ஈ) ஒற்றை வைக்கோல் புரட்சி – 1878
6. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை _____ என அழைக்கிறோம்.
அ) கூட்டுப் பொருள்
ஆ) மதிப்புக் கூட்டுப் பொருள்
இ) செலவுக் கூட்டுப் பொருள்
ஈ) மதிப்புப் பொருள்
7. “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்“ என்று கூறியவர்
அ) மசானபு ஃபுகோகா
ஆ) நம்மாழ்வார்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
8. கீழ்க்கண்டவற்றுள் மசானபு ஃபுகோகா உலகிற்கு கூறிய ஐந்து விவசாய மந்திரங்களில் கூறப்படாதது எது / எவை?
i. உழப்பட்ட நிலம்
ii. இரசாயன உரம் இல்லாத உற்பத்தி
iii. பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
iv. தண்ணீர் நிறுத்தும் நெல் சாகுபடி
v. ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல்
அ) i, iii
ஆ) iii, iv
இ) i, iv
ஈ) எதுவுமில்லை.
9. மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்கும் தொழு உரத்தை எவ்வகை நிலத்திற்கு பயன்படுத்த வேண்டும்
அ) நஞ்சை நிலம்
ஆ) புஞ்சை நிலம்
இ) இரண்டிற்கும்
ஈ) இரண்டிற்கும் அல்ல
10. காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை எவ்வகை நிலத்துக்கு பயன்படுத்த வேண்டும்
அ) நஞ்சை நிலம்
ஆ) புஞ்சை நிலம்
இ) இரண்டிற்கும்
ஈ) இரண்டிற்கும்
11. கூற்று: விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
12. கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i) வேப்பங்கொட்டை ii) முருங்கை இலை iii) புங்கன் iv) உளுந்து v) பிரண்டை
அ) ii, iii
ஆ) ii, iv
இ) ii, iv, v
ஈ) ii, iv
13. கீழ்க்கண்ட இயற்கை பூச்சிக்கொல்லி குறித்த செய்திகளில் தவறானது எது?
i) வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை முதலியவற்றை இடித்து கோமியத்தில் ஊற வைத்து தயாரிக்கப்படுகிறது.
ii) இதை தெளிப்பதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது.
iii) மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது.
அ) எதுவுமில்லை
ஆ) ii மட்டும்
இ) i மட்டும்
ஈ) i, ii
14. இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.
அ) கூட்டுறவு வங்கி
ஆ) பேரூராட்சி அலுவலகம்
இ) கிராம அலுவலர்
ஈ) வேளாண்மை அலுவலகம்
15. “கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள் ”
இவ்வரிகளை இயற்றியவர்
அ) பெரியவன் கவிராயர்
ஆ) அழகிய பெரியவன்
இ) பேயனார்
ஈ) பவணந்தி முனிவர்
16. உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படும் நாள்
அ) மே 20
ஆ) மார்ச் 20
இ) செப்டம்பர் 20
ஈ) அக்டோபர் 20
17. கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
அ) தகப்பன்
ஆ) தகப்பன் பாசம்
இ) தகப்பன்கொடி
ஈ) தகப்பன் மலர்
18. கீழ்க்கண்டவற்றுள் அழகிய பெரியவன் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளில் அல்லாதது எது?
i) மீள் கோணம் ii) நெரிக் கட்டு iii) அரூப நெஞ்சு iv) குறடு v) பெருகும் வேட்கை
அ) ii, v, iii
ஆ) ii, iii, iv
இ) i, v
ஈ) ii, iii, v
19. சரியான இணையைக் கண்டறி.
1. நெரிக்கட்டு – சிறுகதை தொகுப்பு
2. உனக்கும் எனக்குமான சொல் – கவிதை தொகுப்பு
3. மீள் கோணம் – கட்டுரை தொகுப்பு
4. அரூப நெஞ்சு – கவிதை தொகுப்பு
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2
இ) 1, 3, 4
ஈ) 1, 2, 3
20. அழகிய பெரியவன் பிறந்த ஊர்?
அ) பேரணாம்பட்டை – விழுப்புரம்
ஆ) பேரணாம்பட்டை – வேலூர்
இ) பேரணாம்பட்டை – காஞ்சிபுரம்
ஈ) பேரணாம்பட்டை – திருவள்ளூர்
21. தகப்பன் கொடி புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதை பெற்ற ஆண்டு
அ) 2002
ஆ) 2008
இ) 2004
ஈ) 2003
22. அழகிய பெரியவன் குறித்த கூற்றுகளில் சரியானது எது?
அ) விழுப்புரம் மாவட்டம் பேரணாம்பட்டை என்னும் ஊரில் பிறந்தார்
ஆ) இவரது இயற்பெயர் அரவிந்தன்
இ) தகப்பன் கொடி என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார்.
ஈ.) கனடாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்
23. ” மூங்கில் கிளையமர்ந்து சுழித்தோடும் நீருடன் பாடிக் கொண்டிருக்கும் சிட்டுகள் ” இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
அ) சிட்டுக்குருவிகள்
ஆ) ஏதிலிக் குருவிகள்
இ) தூக்கணாங்குருவிகள்
ஈ) ஏந்தல் குருவிகள்
24. உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்தும் சிற்றிலக்கியம்
அ) உலா
ஆ) குறவஞ்சி
இ) திருக்குறள்
ஈ) பள்ளு
25. ” மலரில் ஆரளி இந்துளம் பாடும்
மடையிடங்கணி வந்துளம் ஆடும் ” இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) குற்றாலக் குறவஞ்சி
ஆ) ஏதிலிக் குருவிகள்
இ) திருமலை முருகன் பள்ளு
ஈ) திருமலை ஆண்டவர் பள்ளு
26. ” சலச வாவியில் செங்கயல் பாயும்
தரளம் ஈன்ற வெண் செங்கயல் மேயும் ”
என்னும் வரிகள் எந்த நாட்டின் வளத்தை கூறுகின்றன
அ) வடகரை நாடு
ஆ) தென்கரை நாடு
இ) வட ஆரிய நாடு
ஈ) தென் ஆரிய நாடு
27. வட ஆரிநாடு, தென் ஆரிநாடு என்பவை முறையே கீழ்க்கண்ட எந்த இடங்களை குறிக்கின்றன
அ) குற்றாலம், திருமலை
ஆ) குற்றாலம், திருவண்ணாமலை
இ) தஞ்சாவூர், திருவண்ணாமலை
ஈ) திருமலை, குற்றாலம்
28. சரியான பொருளை தேர்ந்தெடு
ஆரளி, அளிஉலாம்
அ) மொய்க்கின்ற வண்டு, வண்டு மொய்க்கின்ற
ஆ) பாடும் வண்டு, வண்டின் சத்தம்
இ) வண்டு மொய்க்கின்ற, மொய்க்கின்ற வண்டு
ஈ) வண்டின் சத்தம், பாடும் வண்டு
29. “இளமின்னார் பொன்னரங்கில் நடிக்கும் – முத்து
ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் ”
என்ற வரிகள் குறிக்கும் நாடு
அ) வடகரை நாடு
ஆ) தென்கரை நாடு
இ) வட ஆரியர் நாடு
ஈ) தென் ஆரியர் நாடு
30. “வளருங்காவில் முகில் தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற் புகை நாறும்
குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும் ”
என்ற வரிகளை இயற்றியவர்
அ) பாரதி
ஆ) பாரதிதாசன்
இ) அழகிய பெரியவன்
ஈ) பெரியவன் கவிராயர்
31. ‘இந்துளம், உளம்’ என்பவை முறையே எவற்றை குறிக்கின்றன.
அ) பறவை, பண்
ஆ) பண், பறவை
இ) நண்டு, பண்
ஈ) பண், நண்டு
32. சரியான பொருளை தேர்ந்தெடு
சலச வாவி, வாவித் தரங்கம்
அ) தாமரை தடாகம், குளத்தில் எழும் அலை
ஆ) குளத்தில் எழும் அலை, தாமரை தடாகம்
இ) தாமரை மொட்டு, கடல் அலை
ஈ) கடல்அலை, தாமரை மொட்டு
33. பொருத்துக.
i) இடங்கணி – 1. முத்து
ii) தரளம் – 2. சங்கிலி
iii) மஞ்சை – 3. மயில்
iv) மண்டலம் – 4. மேகம்
v) கொண்டல் – 5. உலகம்
அ) 1 2 3 4 5
ஆ) 2 1 4 3 5
இ) 3 2 1 5 4
ஈ) 2 1 3 5 4
34. திருமலை சேவகன், குற்றாலநாதர் ஆகியோர் முறையே வீற்றிருக்கும் நாடுகளாக பெரியவன் கவிராயர் கூறுவது எந்நாடுகளை
அ) வடகரை நாடு, தென் கரை நாடு
ஆ) தென்னாடு, வட நாடு
இ) வட நாடு, தென்னாடு
ஈ) தென்கரை நாடு, வடகரை நாடு
35. இலக்கணக் குறிப்புத் தருக.
அகிற்புகை, கொன்றைசூடு
அ) 7 ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
ஆ) 6 ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை
இ) 6ம் வேற்றுமைத் தொகை, 2 ம் வேற்றுமைத் தொகை
ஈ) 3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
36. இலக்கணக் குறிப்புத் தருக.
செங்கயல், வெண்சங்கு
அ) வினைத் தொகை, பண்புத்தொகை
ஆ) பண்புத்தொகை, வினைத் தொகை
இ) பண்புத்தொகை, உம்மைத் தொகை
ஈ) பண்புத்தொகை, பண்புத்தொகை.
37. ‘ஈன்ற’ என்பதின் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) ஈன்று + அ
ஆ) ஈன் + ற
இ) ஈ + அ
ஈ) ஈன் + ற் + அ
38. ‘செங்கயல்’ என்ற சொல்லின் சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
அ) செம்மை + கயல் –> செங் + கயல் –> செங்கயல்
ஆ) செம்மை + கயல் –> செம் + கயல் –> செங்கயல்
இ) செ + கயல் –> செம் + கயல் –> செங்கயல்
ஈ) செம் + கயல் –> செ + கயல் –> செங்கயல்
39. கீழ்க்கண்ட பள்ளு குறித்த செய்திகளில் சரியானதை கண்டறி.
i) பள்ளு என்பது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
ii) இது 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
iii) இது தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையை சாரும்.
அ) அனைத்தும்
ஆ) i, iii
இ) ii, iii
ஈ) எதுவுமில்லை
40. கீழ்க்கண்ட திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளுள் தவறானது எது?
i) சொரி குரம்பை ii) அதிக்கிராதி iii) பாற்கடுக்கண் iv) பூம்பாளை v) கருங்சூரை
அ) அனைத்தும்
ஆ) ii, iii
இ) iiii, iv
ஈ) எதுவுமில்லை
41. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளில் தவறானது எது?
அ) காரி
ஆ) பூம்பாளை
இ) செம்மறையான்
ஈ) கருமறையான்
42. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகளில் சரியானது எது?
அ) உழவு மரம்
ஆ) வல்லைக்கை
இ) பூட்டுமரம்
ஈ) கொழுகயமரம்
43. நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) கங்காணம்
ஆ) கன்கானம்
இ) கண்காணி
ஈ) கங்காணி
44. “ஈன்ற = ஈன் + ற் + அ ” என்ற பகுபத உறுப்பிலக்கணத்தில் “ற்” என்பது எதை குறிக்கிறது
அ) சந்தி
ஆ) எதிர்கால இடைநிலை
இ) நிகழ்கால இடைநிலை
ஈ) இறந்த கால இடைநிலை
45. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டணம் என்னும் இடத்தின் வேறு பெயர்கள்
அ) பண்பை, பண்ணெழில்
ஆ) பண்புளி, பண்ணெழில்
இ) பண்பொழில், பண்புளி
ஈ) பண்பொழில், பண்பை
46. திருமலை முருகன் பள்ளு நூலில் விரவி காணப்படும் பாவகைகள் யாவை?
i) கலித்துறை ii) வெண்பா iii) கலிப்பா iv) சிந்து
அ) அனைத்தும் சரி
ஆ) i, ii, iii சரி
இ) ii, iii, iv சரி
ஈ) I, iii, iv சரி
47. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் யார் மற்றும் அவர் வாழ்ந்த காலம் என்ன?
அ) பெரியவன் கவிராயர் – 18 ம் நூற்றாண்டு
ஆ) பெரியவன் கவிராயர் – 13ம் நூற்றாண்டு
இ) அழகிய பெரியவன் – 18 ம் நூற்றாண்டு
ஈ) அழகிய பெரியவன் – 13ம் நூற்றாண்டு
48. திருமலை முருகன் பள்ளு நூலின் வேறு பெயர்கள் யாவை?
அ) பள்ளியல், திருமலை அதிபர் பள்ளு
ஆ) பள்ளிசை, திருமுருகன் அதிபர் பள்ளு
இ) பள்ளியல், திருமுருகன் அதிபர் பள்ளு
ஈ) பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
49. ”காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவனி”
என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) நற்றிணை
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) ஐங்குறுநூறு
ஈ) குறுந்தொகை
50. ” காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
___ ___ ___ ___ ___
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே”
என்னும் ஐங்குறுநூறு பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள திணை
அ) நெய்தல்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) மருதம்
51. பொருத்துக.
1. தளவம் – i) மொட்டு
2. போது – ii) மழைக்கால மலர்
3. அலர்ந்து – iii) மலர்ந்து
4. கவினி – iv) அழகுற
1 2 3 4
அ) i ii iii iv
ஆ) iii i ii iv
இ) ii i iii iv
ஈ) ii i iv iii
52. தவறான இணையைக் கண்டறி
i) ஆடுகம் – தன்மை பன்மை வினை முற்று
ii) கண்ணி – அண்மை விளிச்சொல்
iii) ஆல் – அசைநிலை
அ) i மட்டும்
ஆ) iii, ii மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) எதுவுமில்லை.
53. “அலர்ந்து ” என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம்
அ) அலர் + த் + உ
ஆ) அவர்ந் + உ
இ) அலர் + த்(ந்) + த் + உ
ஈ) அலர் + த் + த்(ந்) + த் + உ
54. ஐங்குறுநூற்றின் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் அடி வரையறை யாது?
அ) 500, 3 – 5 அடி
ஆ) 500, 3 – 6 அடி
இ) 500, 9 – 12 அடி
ஈ) 500, 9 – 10 அடி
55. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
அ) பாரதம் பாடிய கூடலூர்க் கிழார்
ஆ) பாரதம் பாடிய சேரலிரும்பொறை
இ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஈ) பாரதம் பாடிய பெருமகனார்
56. ஐங்குறுநூற்றை தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் முறையே
அ) புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
ஆ) யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார், கூடலூர்க் கிழார்
ஈ) கூடலூர்க் கிழார், கடியலூர் உருத்திரங்கண்ணனார்
57. ஐங்குறுநூற்றின் ஐந்து திணைகளை பாடிய புலவர்களின் இணையை ஆராய்கள்
i) குறிஞ்சி – கபிலர்
ii) முல்லை – பேயனார்
iii) மருதம் – ஓரம்போகியார்
iv) நெய்தல் – அம்மூவனார்
v) பாலை – ஓதலாந்தையார்.
அ) அனைத்தும் சரி
ஆ) ii, iii, iv தவறு
இ) ii, iii, iv சரி
ஈ) அனைத்தும் தவறு.
58. சங்க காலப் புலவர்களில் ஒருவரான பேயனார் இயற்றிய பாடல்களில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன
அ) 100
ஆ) 108
இ) 150
ஈ) 105
59. ” பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே”
– இவ்வரிகளை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) ஓதலாந்தையார்
இ) பேயனார்
ஈ) ஒளவையார்
60. காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் ______ என அழைக்கப்படுகின்றனர்,
அ) காட்டின் அடையாளம்
ஆ) காட்டின் மூலவர்
இ) காட்டின் வளம்
ஈ) காட்டின் கொடை
61. மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றை கொண்டதும் எது?
அ) சிட்டுக்குருவி
ஆ) டால்பின்
இ) தூக்கணாங்குருவி
ஈ) யானை
62. இந்திய வனவியல் துறையின் கையேட்டு விதிமுறைகளை உருவாக்கியவர்
அ) வி. கிருஷ்ணமூர்த்தி
ஆ) வி. கிருஷ்ணமேனன்
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயபாரதி
63. ”இபம்” என்ற சொல் கீழ்க்கண்டவற்றுள் எதை குறிக்கிறது?
அ) மாட்டின் வகை
ஆ) நெல்லின் வகை
இ) உழவுக் கருவி
ஈ) யானை
64. கீழ்க்கண்டவற்றுள் யானையை குறிக்கும் சொற்களில் அல்லாதது எது?
i) அஞ்சனாவதி
ii) அல்லியன்
iii) காரி
iv) அனுபமை
v) முத்து வெள்ளை
அ) iii, iv
ஆ) ii, iii, v
இ) iii, v
ஈ) அனைத்தும் சரி
65. கீழ்க்கண்டவற்றுள் உலகில் எஞ்சியுள்ள யானை சிற்றினங்களில் அல்லாதது எது?
அ) ஆசிய புதர்வெளி யானைகள்
ஆ) ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
இ) ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
ஈ) ஆசிய யானைகள்.
66. யானைகள் குறித்த செய்திகளை ஆராய்க.
i) மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளில் யானை அதிக நாள்கள் வாழும் நீர்வாழ் விலங்கு.
ii) இவை அதிக ஞாபக சக்தி கொண்ட குடும்பமாக வாழும் விலங்கு.
iii) யானைகளில் நான்கு சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
iv) ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
அ) அனைத்தும் சரி
ஆ) i, iii மட்டும் சரி
இ) i, iii மட்டும் தவறு
ஈ) i, ii, iv சரி
67. டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?.
அ) காசிரங்கா புலி
ஆ) காசிரங்கா சிங்கம்
இ) காசிரங்கா குரங்கு
ஈ) காசிரங்கள் காண்டாமிருகம்
68. “காழ்வாரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு”
– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை
ஈ) ஐங்குறுநூறு
69. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி வனப் பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதை பெற்ற ஆண்டு
அ) 2001
ஆ) 2002
இ) 2003
ஈ) 2000
70. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
அ) இவர் தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்.
ஆ) உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
இ) இவர் வனப் பேணுநர்களுக்கான வேணுமேனன் ஏலீஸ் விருதை 2000ல் பெற்றார்.
ஈ) இவர் இந்திய கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
71. “யானை டாக்டர் “ என்ற குரும் புதினத்தை எழுதியவர்
அ) அழகிய பெரியவன்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) ஜெயமோகன்
ஈ) மல்லார்மே
72. ஜெயமோகன் அவர்கள் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகளில் ஒன்று
அ) விஷ்ணுபுரம்
ஆ) கொற்றவை
இ) ஊமைச்செந்நாய்
ஈ) ஊமைச் சிங்கம்
73. ” யானை டாக்டர் ” என்னும் குறும் புதினம் இடம்பெற்றுள்ள சிறுகதை தொகுப்பு
அ) அன்பு
ஆ) அறம்
இ) மத்தகம்
ஈ) மாதங்கம்
74. ஜெயமோகன் குறித்த கூந்துகளில் தவறானது எது?
அ) இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்
ஆ) விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
இ) தற்கால மக்களை அடிப்படையாக கொண்டு ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
ஈ) இவர் சிறுகதை, கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
75. சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது ______ எனப்படும்.
அ) அளபெடை
ஆ) மெய்ம்மயக்கம்
இ) ஆய்த குறுக்கம்
ஈ) ஒளகார குறுக்கம்
76. மெய்ம்மயக்கத்தின் வகைகள் யாவை?
அ) உயிர் நிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம்
ஆ) உயிர் நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
இ) வேற்று நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
ஈ) உடனிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம்
77. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ____ எனப்படும்.
அ) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆ) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
இ) உயிர் நிலை மெய்ம்மயக்கம்
ஈ) ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
78. உடனிலை மெயம் மயக்க எழுத்துகளல் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் மெய்யெழுத்துக்கள் எவை?
அ) க், ங், ச், த்
ஆ) க், ச், த், ட்
இ) ர், ழ்
ஈ) க், ச், த், ப்
79. ‘சாத்தன்” என்ற சொல்லில் வந்துள்ள மெய்ம்மயக்கம்
அ) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆ) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
இ) உயிர் நிலை மெய்ம்மயக்கம்
ஈ) ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
80. சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது ______ எனப்படும்
அ) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆ) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
இ) உயிர் நிலை மெய்ம்மயக்கம்
ஈ) ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
81. தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும் எழுத்துகள் யாவை?
அ க், ங், ச், த்
ஆ) க், ச், த், ட்
இ) ர், ழ்
ஈ) க், ச், த், ப்
82. உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் வரும் எழுத்துகள் எத்தனை?
அ) 6
ஆ) 7
இ) 12
ஈ) 11
83. சரியான விடையைத் தேர்ந்தெடு.
கப்பம், தேர்தல்
அ) ஈரொற்று மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம்
ஆ) உயிர் நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
இ) வேற்று நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம்
ஈ) உடனிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம்
84. தனிச்சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் வரும் ஈரொற்று மெய்ம்மயக்க எழுத்துகள் யாவை?
அ) ய், ர், ழ், த்
ஆ) க், ச், த், ட், ய், ர், ழ்
இ) ய், ர், ழ்
ஈ) க், ச், த், ப்
85. சரியான இணையைத் தேர்ந்தெடு.
i) காழ்ப்புணர்ச்சி – ஈரொற்று மெய்ம்மயக்கம்
ii) மொத்தம் – உடனிலை மெய்ம்மயக்கம்
iii) வாழ்பவன் – வேற்று நிலை மெய்ம்மயக்கம்
iv) கப்பம் – ஈரொற்று மெய்ம்மயக்கம்
அ) அனைத்தும் சரி
ஆ) i, iii, iv சரி
இ) ii, iii, iv சரி
ஈ) i, ii, iii சரி
86. மெய்யெழுத்துகளின் வகைகள் யாவை?
அ) உடனிலை மெய், வேற்றுநிலை மெய், ஈரொற்று மெய்
ஆ) உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை
இ) வல்லினம், மெல்லினம், இடையினம்
ஈ) உடனிலை மெய், வேற்று நிலை மெய், இனவெழுத்து மெய்
87. ணகர, நகர, னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழை_____ எனப்படும்.
அ) சந்திப்பிழை
ஆ) மயங்கொலிப்பிழை
இ) ஒலிப் பிழை
ஈ) மயங்கும் பிழை
88. இனவெழுத்துகள் அல்லது நட்பெழுத்துக்கள் என்பது _____
அ) சொற்களின் இடையில் வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருவது
ஆ) சொற்களின் இடையில் வல்லினத்துக்குப் பின் இடையினம் வருவது
இ) சொற்களின் இடையில் மெல்லினத்துக்குப் பின் வல்லினம் வருவது.
ஈ) சொல்றகளின் இடையில் மெல்லினத்துக்குப் பின் இடையினம் வருவது.
89. கீழ்க்கண்டவற்றுள் நட்பெழுத்துக்கள் அல்லாதது எது?
அ) ங் – க்
ஆ) ண் – ட்
இ) ன் – ட்
ஈ) ந் – த்
90. மயங்கொலி பிழைகளை திருத்துகள்
“வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான்.”
அ) வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கண்டு மகிழ்ந்து நின்றான்.
ஆ) வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான்
இ) வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான்
ஈ) வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான்
91. பொருத்துக
1. எச்சம் – i) உடனிலை மெய்ம்மயக்கம்
2. ஆழ்தல் – ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
3. நார்ச்சத்து – iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
4. பஞ்சம் – iv) இனமிகல்
1 2 3 4
அ) ii i iv iii
ஆ) iii i ii iv
இ) i ii iii iv
ஈ) i iv iii ii
92. “இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது “
இதில், ” இந்திய, ஆய்வுக்கழகம்” என்பவை
அ) வேற்று நிலை மெய்ம்மயக்கம், ஈரொற்று மெய்ம்மயக்கம்
ஆ) உடனிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம்
இ) வேற்று நிலை மெய்ம்மயக்கம், உடனிலை மெய்ம்மயக்கம்
ஈ) உடனிலை மெய்ம்மயக்கம், ஈரொற்று மெய்ம்மயக்கம்
93. பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் – மரபுக்கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
இ) யானை டாக்டர் – குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
94. மண்ணுக்கு வளம் சேர்ப்பன____
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
95. “வான் பொய்த்தது“ என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள்
அ) வானம் இடித்தது
ஆ) மழை பெய்யவில்லை
இ) மின்னல் வெட்டியது
ஈ) வானம் என்பது பொய்யானது.
96. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
i) மதிப்புக் கூட்டுப் பொருள் ii) நேரடிப்பொருள்
அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) அ தவறு, ஆ சரி
97. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) ஏதிலிக் குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை உடையது ஐங்குறுநூறு நூல்.
ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.
98. ஐங்குறு நூறு எவ்வகை பாக்களால் ஆனது?
அ) சிந்துப்பா
ஆ) ஆசிரியப்பா
இ) வெண்பா
ஈ) அகவற்பா
99. ” வளருங் காவில் முகில் தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் ”
– அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
அ) சோலையில் மேகக்கூட்Lங்கள் தங்கி செல்லும்
ஆ) மேகக்கூட்டத்தினால் அகிற் புகை மணம் ஏற்படும்
இ) சோலையில் அகிற் புகைமணம் வீசும்.
ஈ) சோலையில் மலர்களின் மணம் வீசும்.
100. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
அ) ஆபிரகாம் லிங்கன்
ஆ) ஆறுமுக நாவலர்
இ) ஆபிரகாம் பண்டிதர்
ஈ) உ.வே.சா
101. ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போது சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் ___ என்று அழைக்கப்பட்டார்.
அ) சித்தர்
ஆ) ஞானி
இ) பண்டிதர்
ஈ) பண்டுவர்
102. ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர்
அ) சாம்பவர் வடகரை (காசிக்கு அருகில்)
ஆ) சாம்பவர் தென்கரை (காசிக்கு அருகில்)
இ) சாம்பவர் வடகரை (தென்காசிக்கு அருகில்)
ஈ) சாம்பவர் தென்கரை (தென்காசிக்கு அருகில்)
103. ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பு
அ) சங்கீத வித்தியா மகாஜன சங்கம்
ஆ) சங்கீத மகாஜன சங்கம்
இ) மகாஜன சபை
ஈ) சன்மார்க்க சங்கம்
104. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் வாழ்ந்த காலம்
அ) 1859 – 1920
ஆ) 1895 – 1930
இ) 1859 – 1930
ஈ) 1895 – 1920
105. ஆபிரகாம் லிங்கன் குறித்த செய்திகளில் தவறானது எது?
அ) இவர் இளமையிலேயே புகைப்படக் கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் உள்ள நுட்பங்களைப் பயின்றார்.
ஆ) தஞ்சையில் குடியேறிய போது மக்கள் அவரை பண்டிதர் என அழைத்தனர்.
இ) அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் “கருணாமிர்த சாகரம்”.
ஈ) இவர் 70 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்தார்.
106. இலக்கணக் குறிப்புத் தருக.
பயின்றார், தொடங்கினர்
அ) வினையாலணையும் பெயர், வினையெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர், வினை முற்று
இ) வினையாலணையும் பெயர், வினையாலணையும் பெயர்
ஈ) வினையெச்சம், வினையாலணையும் பெயர்
107. “மன உளைச்சல் தீர்வும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்”
இத்தொடரில் உள்ள மயங்கொலி சொற்கள் யாவை?
அ) உளைச்சல், தீரவும், வீட்டில்
ஆ) உளைச்சல், உலை, உழைக்க
இ) உலை, தீரவும், வீட்டில்
ஈ) உழைக்க, தீரவும், உலை
108. “மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம் போல வரும் வெண்ணிலாவே ”
– இவ்வரிகளை பாடியவர்
அ) அழகிய பெரியவன்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) பாரதி
ஈ.) கவிமணி
109. பொருத்துக
a. Farmyard Manure – i) இயற்கை வேளாண்மை
b. shell Seeds – ii) வேதி உரங்கள்
c. Chemical Fertilizers – iii) ஒட்டு விதை
d. Organic farming – iv) தொழு உரம்
அ) i ii iii iv
ஆ) ii i iii iv
இ) i iv iii ii
ஈ) iv iii ii i
110. பொருத்துக
1. Harvesting – i) மதிப்புக் கூட்டுப் பொருள்
2. Weaver Bird – ii) வேர் முடிச்சுகள்
3. Root nodes – iii) தூக்கணாங் குருவி
4. Value added product – iv) அறுவடை
அ) i ii iii iv
ஆ) ii i iii iv
இ) i iv iii ii
ஈ) iv iii ii i
111. பொருத்துக.
1. இயற்கை வேளாண்மை – i) கோ.நம்மாழ்வார்
2. பனைமரமே பனைமரமே – ii) ஆ.சிவசுப்பிரமணியன்
3. பறவை உலகம் – iii) சலீம் அலி
4. யானைகள் – அழியும் பேருயிர் – iv) முகமது அலி
1 2 3 4
அ) ii i iv iii
ஆ) iii i ii iv
இ) i ii iii iv
ஈ) i iv iii ii
112. “Elephants: Majestic Creatures of the Wild ” என்னும் நூலை எழுதியவர்
அ) சலீம் அலி
ஆ) முகமது அலி
இ) ஜெயமோகன்
ஈ) சோஷானி
113. சரியான இணையை கண்டறி
அ) அரசுவா – நெல் வகை
ஆ) வள்ளைக்கை – முல்லை நிலமலர்
இ) மயிலைமறையான் – மாடு வகை
ஈ) சிறை மீட்டான் – நெல் வகை
114. பின்வருவனவற்றுள் வேளாண்மை இலக்கியம் எது?
அ) ஐங்குறுநூறு
ஆ) திருக்குறள்
இ) திருமந்திரம்
ஈ) திருமலை முருகன் பள்ளு.
115.” சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது ”
என்ற வரிகள் யாருடையது?
அ) மோரிடாகே
ஆ) பாஷோ
இ) இஸ்ஸா
ஈ) பிரமிள்
116. பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன?
அ) சிவமூர்ததி
ஆ) சிவபாலா
இ) சிவராமலிங்கம்
ஈ) சிவராமு
117. சிவராமலிங்கம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைப்பெயர்களில் எழுதினார்?
1. பிரமிள் 2. அரூப் சிவராம் 3. தருமு சிவராம் 4. பானு சந்திரன்
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2 சரி
இ) 3, 4 சரி
ஈ.) 1, 2, 3 சரி
118. பிரமிள் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த தளங்களில் இயங்கினார்?
2. சிறுகதை 2. நாடகம் 3. மொழியாக்கம்
4. விமர்சனம் 5. புதுக்கவிதை
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2, 3 சரி
இ) 3, 4, 5 சரி
ஈ) 1, 2, 3, 4 சரி
119.கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு எது?
அ) வெயிலும் நிழலும்
ஆ) நக்ஷத்திரவாசி
இ) லங்காபுரி ராஜா
ஈ) நிழல்
120.கீழ்க்கண்டவற்றுள் சிவராமலிங்கம் அவர்கள் எழுதிய நாடகம் எது?
அ) வெயிலும் நிழலும்
ஆ) நக்ஷத்திரவாசி
இ) லங்காபுரி ராஜா
ஈ) நிழல்
121.கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பு எது?
அ) வெயிலும் நிழலும்
ஆ) நக்ஷத்திரவாசி
இ) லங்காபுரி ராஜா
ஈ) நிழல்