General Tamil

11th Tamil Unit 1 Questions

11th Tamil Unit 1 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 11th Tamil Unit 1 Questions With Answers Uploaded Below.

1. “கலைகளின் உச்சம் கவிதை அக்கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம். அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்று கூறியவர்

அ. பாரதிதாசன்

ஆ. இந்திரன்

இ. பாரதி

ஈ. வில்வரத்தினம்

2. “மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்தி கொள்கின்றன” என்றவர்

அ. எர்னஸ்ட் காசிரர்

ஆ. இந்திரன்

இ. வால்ட் விட்மன்

ஈ. பாப்லோ நெரூபி

3. மொழிவழியாக ஒன்றை பெயரிட்டு அழைக்க தொடங்கியவுடன் அந்த பொருளின் மீது ________ வருகிறது என இந்திரன் கூறுகிறார்

அ. இறக்கம்

ஆ. அதிகாரம்

இ. உணர்ச்சி

ஈ. மௌனம்

4. கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.

1. கைகால் அசைவுகள் 2. தசைநார் சுருக்க அபிநயங்கள்

3. உதட்டின் அசைவுகள் 4. விரல் அசைவுகள்

அ. அனைத்தும்

ஆ. 3 மட்டும்

இ. 1 மட்டும்

ஈ. 1, 2

5. கீழ்க்கண்டவற்றின் சரியான இணையை தேர்ந்தெடு.

1. திரவ நிலை – அச்சிடப்பட்ட கவிதை

2. பனிக்கட்டி (திட நிலை) – எழுத்து மொழி

3. பிருந்து போய்விட்ட பொருள் – பேச்சு மொழி

அ. 1

ஆ. 2, 3

இ. 2

ஈ. அனைத்தும்

6. எழுத்து மொழியை காட்டிலும் ______ உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.

அ. பேச்சு மொழி

ஆ. கவிதை

இ. உடல் அசைவுகள்

ஈ. சைகைகள்

7. கவிஞனுடைய கவிதை மொழி, அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுகிறது?

அ. பேச்சு மொழியை கைவிட்டு இலக்கிய வழக்கிற்கு திரும்பும் போது

ஆ. பேச்சு மொழியை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது

இ. இலக்கிய வழக்கை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது

ஈ. இலக்கிய வழக்கை கைவிட்டு பேச்சு மொழிக்கு திரும்பும் போது

8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பேச்சு மொழி எழுத்து மொழியை விட அதிக உணர்ச்சி வெளிப்பாடு உடையது

2. எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது

3. எழுத்து என்பது தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு

4. எழுத்து என்பது தன்னை திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு

அ. அனைத்தும் சரி

ஆ. 1, 2, 3 தவறு

இ. 1, 2, 4 சரி

ஈ. 1, 2, 3 சரி

9. பேச்சு மொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நன்மை ________ என்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

அ. மொழி

ஆ. அசைவுடன்

இ. எழுத்து

ஈ. கவிதை

10. எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமையும் கவிதை________

அ. பேச்சு மொழி

ஆ. எழுத்து மொழி

இ. நேரடி மொழி

ஈ. மறைமுக வழி

11. “நேரடி மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது“ என்று கூறியவர்

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. இந்திரன்

ஈ. ஆற்றூர் ரவிவர்மா

12. நேரடி மொழி பற்றிய ஆற்றூர் ரவிவர்மாவின் கூற்றுகளை ஆராய்க.

1. நேரடி மொழி என்னும் பேச்சு மொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை

2. அது வேற்றுமொழி ஆவதில்லை

3. எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது

4. கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என நிர்ணயிக்கிறது.

அ. அனைத்தும் சரி

ஆ. 1, 3, 4 சரி

இ. 1, 2, 4 சரி

ஈ. அனைத்தும் தவறு

13. __________ மொழியில் கவிதை செய்யப்படுகிறபோது அது உடம்பின் மேல் தோல்போல் இருக்கிறது.

அ. எழுத்து மொழி

ஆ. பேச்சு மொழி

இ. நேரடி மொழி

ஈ. மறைமுக வரி

14. _________ மொழியில் கவிதை செய்யப்படுகிற போது சொற்கள் கவிதையின் உணர்வை உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன்.

அ. எழுத்து மொழி

ஆ. பேச்சு மொழி

இ. நேரடி மொழி

ஈ. மறைமுக மொழி

15. பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உள்ளனர்

அ. 2

ஆ. 3

இ. 4

ஈ. 5

16. எந்தவொரு சொல்லு மற்றொரு சொல்லை விட முக்கியமாகி விடாதபடி கவிதை இயற்றுபவர்கள் யாரை போன்றவர்கள்

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூபி

ஈ. யாருமில்லை

17. “மக்கள் தோற்றத்திலும் அன்பே, அன்பேதான் அவர் மொழியும்” இவ்வரிகள் யாருடையது

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூபி

ஈ. யாருமில்லை

18. “புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்

நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே

ஆனால் உடலோ சோகத்தில்” யாருடைய வரிகள்

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. ஸ்ரீ ராம்

19. வால்ட் விட்மனை போன்றவர்களின் கவிதைகளின் இயல்பு

1. இவற்றில் சொற்கள் தங்களுக்கு தாங்களே பேசிக் கொள்கின்றன

2. தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றை சேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னையே பேசிக் கொள்கிறது

3. எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை

4. எழுத்தின் சொற்களில் கரைவது போல, சொற்கள் கவிதைகளில் கரைந்து போகின்றன.

அ. 1, 3, 4 சரி

ஆ. 1, 3, சரி

இ. 3, 4 சரி

ஈ. அனைத்தும் சரி

20. இறுக்கி சுற்றப்பட்ட கம்பிச் சுருளை போன்று அல்லாமல் பேச்சு மொழிக்கே உரிய தளர்வோடு கட்டப்பட்டவை யாருடைய கவிதைகள்

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. யாருமில்லை

21. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

அ. வால்ட் விட்மன்

ஆ. பாரதி

இ. பாப்லோ நெரூடா

ஈ. மல்லார்மே

22. கீழ்க்கண்டவற்றில் வால்ட் விட்மன் எழுதிய நூல்

அ. பறவைகள் ஒரு வேளை தூங்க போயிருக்கலாம்

ஆ. புல்லின் இதழ்கள்

இ. முப்பட்டை

ஈ. நவீன ஓவியம்

23. கிழ்க்கண்டவற்றுள் வால்ட் விட்மன் ஈடுபட்ட துறைகள் எது/எவை?

1. கவிஞர் 2. கட்டுரையாளர் 3. உரைநடையாசிரியர் 4. இதழானர்

அ. அனைத்தும்

ஆ. 1, 2, 3

இ. 1, 2, 4

ஈ. 1, 3, 4

24. “தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன் நண்பர்கள் நகரம்

என்றொரு புதுநகரம் வந்தது என் கனவில்” யாருடைய கவிதை

அ. மல்லார்மே

ஆ. பாப்லோ நெரூடா

இ. வால்ட் விட்மன்

ஈ. இந்திரன்

25. பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுவது யாருடைய கவிதைகளில்

அ. மல்லார்மே

ஆ. வால்ட் விட்மன்

இ. பாப்லோ நெரூடா

ஈ. எர்னஸ்ட் காசிரர்

26. சரியான இணையை கண்டறி

1. வால்ட் விட்மன் – பிரான்ஸ்

2. மல்லார்மே – அமெரிக்கா

3. பாப்லோ நெரூடா – சிலி

அ. அனைத்தும்

ஆ. 1, 2

இ. 1, 3

ஈ. 3 மட்டும்

27. “குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் மொழி மறுமுனையிலும் இருக்கையில் கவிதையின் பேச்சு இடையில் இருக்கும் வெளியில் புழங்குவது” யாருடைய கவிதைகளில்

அ. வால்ட் விட்மன்

ஆ. மால்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. இந்திரன்

28. ஸ்டெஃபான் மல்லார்மே குறித்த கூற்றுகளை ஆராய்க.

1. பிரான்சு நாட்டை சேர்ந்தவர்

2. ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்

3. இவரை புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ள முடியும்

அ. அனைத்தும் சரி

ஆ. 2, 3 சரி

இ. 1., 3 சரி

ஈ. அனைத்தும் தவறு

29. பாப்லோ நெரூடா போன்றவர்களின் கவிதை எவ்வாறாக இருக்கும்?

அ. எந்தவித முன்கூட்டி திட்டமோ, ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றை சுட்டுவது போல காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்துபோகிறது

ஆ. எந்தவித சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை

இ. சொற்கள் தங்களுக்கு தாங்களே பேசிக் கொள்வதில்லை

ஈ. தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிரிதொன்றை பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னையே பேசிக் கொள்கிறது

30. குறியீட்டு கவிதை என்பது யாது?

அ. பொருளை பதிவு செய்வது; நினைவுக் கூறத்தக்க தருணங்களை பதிவு செய்வதன்று

ஆ. பொருளை பதிவு செய்வதன்று; நினைவுக்கூறத்தக்க தருணங்களை பதிவு செய்வது

இ. பொருள் மற்றும் நினைவுக்கூறத்தக்க தருணங்களை பதிவு செய்வது

ஈ. நினைவுக்கூறத்தக்க தருணம் மற்றும் சொற்களை பதிவு செய்வது

31. “தூங்கும் போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்? என்ற வரிகள் யாருடையது?

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. எர்னஸ்ட் காசிதர்

32. பாப்லோ நெரூடா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

அ. 1971

ஆ. 1972

இ. 1973

ஈ. 1991

33. ‘பாப்லோ நெரூடா குறித்த கூற்றுகளில் சரியானவை எது/எவை?

1. தென் ஆப்பிரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தார்

2. இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர்

3. 1971 ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்

அ. அனைத்தும்

ஆ. 2, 3

இ. 1, 2

ஈ. 2, 3

34. அறியப்பட்டிராததை நோக்கி நகர்கிற அதே நேரத்தில் விரிந்த்தாகவும் மையத்தை நோக்கி நகர்வதாகவும் உள்ள கவிதை யாருடையது?

அ, வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. இந்திரன்

35. “களைத்துப்போன உம் கத்திரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது” என்றவர்

அ. வால்ட் விட்மன்

ஆ. மல்லார்மே

இ. பாப்லோ நெரூடா

ஈ. இந்திரன்

36. கவிதை என்பது யாது? என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

1. கவிதை என்பது ஒரு பொருளன்று. அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிட முயலும் படைப்பு செயல்பாடு

2. கவிதை என்பது மொழியன்று அது ஒரு பொருள்

3. கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகை கட்டியெழுப்புகிறது.

அ. அனைத்தும்

ஆ. 1, 2

இ. 1, 3

ஈ. 2, 3

37. தமிழின் கவிதையியல் என்ற நூலின் ஆசிரியர்_______

அ. வால்ட் விட்மன்

ஆ. இந்திரன்

இ. சிவத்தம்பி

ஈ. ஜெயராமன்

38. “கவிதைகள் கேட்போரால், வாசகர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பெறும் முறையில், காலத்துக்கு காலம் அழுத்த வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்

அ. புல்லின் இதழ்கள்

ஆ. தமிழின் கவிதையியல்

இ. முப்பட்டை நகரம்

ஈ. நவீன ஓவியம்

39. ஓரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஶின் “பறவைகள் ஒருவேளை தூங்ல போயிருக்கலாம்” என்னும் நூல் யாருடைய மொழிப் பெயர்ப்பு

அ. ஜெயராமன்

ஆ. இந்திரன்

இ. வெங்கடாசலபதி

ஈ. ஸ்ரீராம்

40. கீழ்க்கண்டவைகளில் 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ. வில்வரத்தினம்

ஆ. இராசேந்திரன்

இ. முத்துலிங்கம்

ஈ. சிவத்தம்பி

41. கவிஞர் இந்திரனின் இயற்பெயர்_________

அ. இந்திரேசன்

ஆ. இராசலிங்கம்

இ. இராசேந்திரன்

ஈ. இராசமாணிக்கம்

42. கவிஞர் இந்திரன் நடத்திய இதழ்கள் யாவை?

1. வெளிச்சம் 2. தமிழ்நிலம் 3. தென்றல் 4. நுண்கலை

அ. 1, 4

ஆ. 1, 2

இ. 2, 4

ஈ. 3, 4

43. தவறான இணையை தேர்ந்தெடு.

1. சாம்பல் வார்த்தைகள் – கவிதை தொகுப்புகள்

2. நவீன் ஓவியம் – கட்டுரை நூக்

3. வெளிச்சம் – இதழ்

4. தமிழ் அழகியல் – கட்டுரை நூல்

அ. 2, 4

ஆ. 2, 3

இ. 3, 4

ஈ. எதுவுமில்லை

44. இராசேந்திரன் குறித்த கூற்றுகளில் எது/எவை தவறானவை?

1. இவர் கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் மற்றும் சிறந்த நடிகர்

2. இவரது “பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம்” என்னும் நூல் 2001 ல் சாகித்ய அகாதெமி விருதி பெற்றது.

3. வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தினார்

4. முப்பட்டை நகரம் என்னும் கட்டுரை நூலை எழுதியுள்ளார்

அ. 3 மட்டும்

ஆ. 1, 3, 4

இ. 1, 2, 4

ஈ. 2 மட்டும்

45. பொருத்துக.

A. வால்ட் விட்மன் – 1. இலத்தீன் அமெரிக்க கவி

B. மனோரமா டிஸ்வாஸ் – 2. பிரான்சு

C. மல்லார்மே – 3. ஒரிய மொழி கவி

D. பாப்லோ நெரூடா – 4. அமெரிக்கா

A B C D

அ. 4 3 2 1

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 4 2 1 3

46. வால்ட் விட்மனின் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்த்தவர்

அ. வெங்கடாசலபதி

ஆ. ஸ்ரீராம்

இ. ஜெயராமன்

ஈ. இந்திரன்

47. பாப்லோ நெரூடாவின் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயத்தவர்

அ. வெங்கடாசலபதி

ஆ. ஸ்ரீராம்

இ. ஜெயராமன்

ஈ. இந்திரன்

48. மல்லார்மேவின் கவிதையை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்

அ. வெங்கடாசலபதி

ஆ. ஸ்ரீராம்

இ. ஜெயராமன்

ஈ. இந்திரன்

49. “யுகத்தின் பாடல்” என்னும் கவிதை யாருடையது

அ. இந்திரன்

ஆ. வில்வரத்தினம்

இ. சிவதம்பி

ஈ. ஜெயராமன்

50. ஒரு இனத்தின் மையப்புள்ளியாகவும், ஆதி அடையாளமாகவும் விளங்குவது எது?

அ. கலை

ஆ. இலக்கியம்

இ. இலக்கணம்

ஈ. மொழி

51. “உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்” என்று பாடியவர்

அ. வில்வரத்தினம்

ஆ. பெரியவன் கவிராயர்

இ. இந்திரன்

ஈ. அழகிய பெரியவன்

52. “வழி வழி நிதைடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே” என்ற பாடலடி கீழ்க்கண்ட எதில் இடம்பெற்றுள்ளது?

அ. நன்னூல்

ஆ. யுகத்தின் பாடல்

இ. தமிழ் அழகியல்

ஈ. திருமலை முருகன் பள்ளு

53. மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை ________ என்பர்.

அ. நேரடி மொழி

ஆ. வசனக் கவிதை

இ. புதுக்கவிதை

ஈ. மரபுக்கவிதை

54. புதுக்கவிதை குறித்த கூற்றுகளை ஆராய்க.

1. படிப்போரின் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது முதன்மையானது

2. படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது

3. மரபு சார்ந்த செய்யுள்களில் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது

அ. அனைத்தும் தவறு

ஆ. 1, 2 சரி

இ. 2, 3 சரி

ஈ. அனைத்தும் சரி

55. யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத்தீவில் பிறந்தவர்

அ. வில்வரத்தினம்

ஆ. ஆறுமுக நாவலர்

இ. முத்துலிங்கம்

ஈ. இந்திரன்

56. வில்வரத்தினம் கவிதைகள் 2001ல் _________ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது.

அ. உயிர்த்தெழும் உலகத்துக்காக

ஆ. உயிர்த்தெழும் காலத்துக்காக

இ. உயிர்த்தெழும் உரிமைக்காக

ஈ. உயிர்த்தெழும் மொழிக்காக

57. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை” என்றவர்

அ. வில்வரத்தினம்

ஆ. வால்ட் விட்மன்

இ. பாரதிதாசன்

ஈ. இரசூல் கம்சதேவ்

58. கவிஞர் வில்வரத்தினம் குறித்த தகவல்களில் சரியனது எது/ எவை?

1. இவர் யாழ்ப்பாணம் கொக்குவில் கிராமத்தில் பிறந்தார்

2. இவரது கவிதை தொகுப்பு “உயிர்த்தெழும் மொழிக்காக” என்ற தலைப்பில் 2001ல் தொகுக்கப்பட்டது

3. சிறப்பாக பாடும் திறனும், கவிதை இயற்றும் திறனும் உள்ளவர்.

அ. அனைத்தும்

ஆ. 1, 3

இ. 2, 3

ஈ. 3 மட்டும்

59. “கபாடபுறங்களை காவு கொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல்கனிமங்களின்

உரமெலாம் சேரர்

பாடத்தான் வேண்டும்” என்ற வரி யாருடையது.

அ. யுகத்தின் பாடல் – முத்துலிங்கம்

ஆ. ஆறாம் திணை – வில்வரத்தினம்

இ. யுகத்தின் பாடல் – வில்வரத்தினம்

ஈ. ஆறாம் திணை – முத்துலிங்கம்

60. “திசைகளின் சுவரெல்லாம் எழுதத்தான் வேண்டும்

எழுகின்ற யுகத்தினோர் பாடலை” என்று பாடியவர்

அ. வில்வரத்தினம்

ஆ. முத்துலிங்கம்

இ. அழகிய பெரியவன்

ஈ. பவனந்தி முனிவர்

61. தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூல்________

அ. நாலாயிர திவ்ய பிரபந்தம்

ஆ. நான்மணிக்கடிகை

இ. நாலடியார்

ஈ. நன்னூல்

62. நன்னூல் விளக்கப்படும் பாயிரங்கள் எவை?

1. பொதுப்பாயிரம் 2. மொழிப்பாயிரம்

3. சிறப்பு பாயிரம் 4. எழுத்து பாயிரம்

அ. 1, 4

ஆ. 1, 3

இ. 1, 2

ஈ. 2, 4

63. “காலம் களனே காரணம் என்று இம்

மூவகை ஏற்றி மொழிநரும் உளரே” என்னும் அழகர் இடம்பெற்ற நூல்

அ. நன்னூல்

ஆ. ஐங்குறுநூறு

இ. தொல்காப்பியம்

ஈ. திருமலை முருகன் பள்ளு

64. பொருத்துக.

அ. பால் 1. வகை

ஆ. இயல்பு 2. பண்பு

இ. மாடம் 3. மூங்கில்

ஈ. அமை 4. மாளிகை

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 1 2 4 3

இ. 2 1 4 3

ஈ. 2 1 3 4

65. பாயிரத்திற்கு உரிய பெயர்களில் பொருந்தாது

1. பதிகம் 2. அணிந்துரை 3. அகவுரை 4. நூன்முகம்

அ. எதுவுமிலை

ஆ. 1, 3

இ. 3, 4

ஈ. 3

66. நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது

அ. அகவுரை

ஆ. புறவுரை

இ. தந்துரை

ஈ. பதிகம்

67. நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை தந்து சொல்வது

அ. அகவுரை

ஆ. புறவுரை

இ. தந்துரை

ஈ. பதிகம்

68. நூலின் பெருமை முதலியவற்றை அலங்கரித்து சொல்வது

அ. முகவுரை

ஆ. நான்முகம்

இ. பதிகம்

ஈ. புனைந்துரை

69. பதிகம் என்பது ________ பொதுவும் ______ சிறப்புமாகிய பலவகை பொருள்களையும் தொகுத்து சொல்வது.

அ. 5, 16

ஆ. 5, 11

இ. 6, 11

ஈ. 6, 12

70. நூலுக்கு முன் சொல்லப்படுவது எது?

அ. நான்முகம்

ஆ. முகவுரை

இ. அணிந்துரை

ஈ. பதிகம்

71. பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை

அ. 6

ஆ. 8

இ. 7

ஈ. 9

72. பொதுப்பாயிரம் மொத்தம் எத்தனை செய்திகளை கூறுகிறது

அ. 6

ஆ. 7

இ. 5

ஈ. 8

73. பொதுப்பாயிரம் கூறும் செய்திகளில் தவறானது

1. நூலின் இயல்பு 2. நூலின் பெயர்

3. நூல் பின்பற்றிய வழி 4. நூலாசிரியர் பெயர்

அ. 1 மட்டும்

ஆ. 12,

இ. 1, 4, 3

ஈ. 2, 3, 4

74. சிறப்பாயிரத்தின் இலக்கணம் கூறும் செய்திகள் மொத்தம் எத்தனை

அ. 7

அ. 3

இ. 8

ஈ. 11

75. கீழ்க்கண்டவற்றில் சிறப்பு பாயிரத்தின் இலக்கணத்தில் கூறப்படுபவை.

1. நூலாசிரியர் பெயர் 2. நூல் இயற்றப்பட்ட காலம்

3. அரங்கேற்றப்பட்ட அவைக்களம் 4. இயற்றப்பட்டதற்கான காரணம்

அ. அனைத்தும்

ஆ. 2, 4

இ. 1, 2, 4

ஈ. 3, 4

76. சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது

அ. அகவற்பா

ஆ. நூற்பா

இ. சிந்துப்பா

ஈ. ஆசிரியப்பா

77. “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே” இடம்பெற்றுள்ள நூல்

அ. நாலடியார்

ஆ. தொல்காப்பியம்

இ. நன்னூல்

ஈ. ஐங்குறுநூறு

78. நன்னூல் முதன்முதலில் பதிக்கப்பட்ட ஆண்டு

அ. 1934

ஆ. 1937

இ. 1837

ஈ. 1834

79. அனைத்து வகையான நூல்களிலும் இடம்பெறும் சிறப்பு பாயிர இலக்கணத்தின் செய்திகள் மொத்தம் எத்தனை?

அ. 3

ஆ. 11

இ. 8

ஈ. 5

80. பொருத்துக.

அ. மாடங்கள் – 1. கோபுரங்கள்

ஆ. மாநகர் – 2. சித்திரம்

இ. மகளிர் – 3. அணிந்துரை

ஈ. நூல்கள் – 4. அணிகலன்கள்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 1 3 4

இ. 2 1 4 3

ஈ. 2 4 1 3

81. இலக்கணக் குறிப்பு தருக. கேட்போர், காட்டல்

அ. வினையாலணையும் பெயர், உரிச்சொற்றொடர்

ஆ. வினையாலனையும் பெயர், அலீற்று வினைமுற்று

இ. வினையாலனையும் பெயர், வினையெச்சம்

ஈ. வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்

82. ‘மாநகர்’ என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. உரிச்சொற்றொடர்

ஆ. வினைமுற்று

இ. பெயர்ச்சொல்

ஈ. தொழிற்பெயர்

83. சரியான இணையை கண்டறி

1. ஐந்தும் – முற்றும்மை

2. கோடல் – தொழிற்பெயர்

3. மாநகர் – உரிச்சொற்றொடர்

4. கோடல் – வினையெச்சம்

அ. அனைத்தும் சரி

ஆ. 2, 3, 4

இ. 1, 2, 3

ஈ. 1, 3, 4

84. வைத்தார் என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ. வைத்து + ஆர்

ஆ. வை + தார்

இ. வை + த் + ஆர்

ஈ. வை + த் + த் + ஆர்

85. வை + த் + த் + ஆர்= வைத்தார் என்பதில் “ஆர்” என்பது.

அ. ஆண்பால் வினைமுற்று விகுதி

ஆ. வினைமுற்று விகுதி

இ. பலர்பால் வினைமுற்று

ஈ. ஒன்றன்பால் வினைமுற்று

86. ‘அணிந்துரை’ என்பதன் சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு.

அ. அணிந்து + உரை __ > அணிந் + உரை __ > அணிந்துரை

ஆ. அணிந்து + உரை __ > அணி + உரை __ > அணிந்துரை

இ. அணிந் + துரை __ > அணிந்து + உரை __ > அணிந்துரை

ஈ. அணிந்து + உரை __ > அணிந்த் + உரை __ > அணிந்துரை

87. பொது + சிறப்பு = பொதுச்சிறப்பு என்பதில் இடம்பெறும் புணர்ச்சி

அ. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசடதற மிகும்

ஆ. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

இ. இனமிகல் விதி

ஈ. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

88. அணிந்து + உரை __ > அணிந்த் + உரை இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி

அ. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

ஆ. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

இ. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

இ. இனமிகல்

89. தொல்காப்பியத்தை முதல் நூலாக கொண்ட வழி நூல் எது?

அ. நாலடியர்

ஆ. நன்னூல்

இ. திருக்குறள்

ஈ. ஐங்குறுநூறு

90. பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றிய காலம்

அ. கி.பி. 13

ஆ. கி.மு. 13

இ. கி.பி. 12

ஈ. கி.மு. 12

91. நன்னூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

அ. 3

ஆ. 4

இ. 2

ஈ. 1

92. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் யாவை?

அ. எழுத்ததிகாரம், பெயரில் அதிகாரம்

ஆ. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்

இ. பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம்

ஈ. எழுத்தியல், பதவியல்

93. எழுத்ததிகாரம் மற்றும் சொல்லதிகாரம் எத்தனை பகுதிகளை கொண்டுள்ளன.

அ. 6, 6

ஆ. 8, 3

இ. 5, 11

ஈ. 5, 5

94. பவணந்தி முனிவர் யார் வேண்டுகோளுக்கிணங்க நன்னூலை இயற்றினார்

அ. சீவகன்

ஆ. தொல்காப்பியர்

இ. சீயகங்கன்

ஈ. சேக்கிழார்

95. நன்னூலின் சொல்லதிகாரத்தில் உள்ள பகுதிகளில் அல்லாதவை.

1. பொதுவியல் 2. இடையியல்

3. உயிரியியல் 4. பெயரியல் 5. வினையியல்

அ. 2, 3

ஆ. 3 மட்டும்

இ. 1, 3

ஈ. எதுவுமில்லை

96. நன்னூலின் எழுத்ததிகாரத்தில் இடம்பெற்றுள்ள பகுதி

அ. இடையில்

ஆ. பொதுவியல்

இ. பெயரியல்

ஈ. பதவியல்

97. கீழ்க்கண்டவற்றில் நன்னூலின் எழுத்ததிகாரத்தில் இடம்பெறாதது எது?

1. எழுத்தியல் 2. உயிரீற்று புணரியல் 3. மெய்யீற்று புணரியல்

4. பதவியல் 5. உருபுப் புணரியல்

அ. 2, 4

ஆ. 4, 2

இ. 1, 5,

ஈ. எதுவுமில்லை

98. நன்னூலின் சொல்லதிகாரத்தில் இடம்பெறும் பகுதி எது

அ. பதவியல்

ஆ. பதவியியல்

இ. பதிவுயியல்

ஈ. பாதவியல்

99. தீர்த்தங்கரர்களில் சந்திரபிரபா என்பவர் எத்தனையாவது தீர்த்தங்கரர்

அ. 7

ஆ. 6

இ. 9

ஈ. 8

100. தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோவில் உள்ள இடம்

அ. மேட்டுக் குப்பம் – ஈரோடு

ஆ. மேட்டுக் குப்பம் – திருப்பூர்

இ. மேட்டுப்புதூர் – ஈரோடு

ஈ. மேட்டுப்புதூர் – திருப்பூர்

101. பவணந்தியாரின் உருவச்சிற்பம் யாருடைய கோவிலில் உள்ளது

அ. சந்திர பிரபா

ஆ. சந்திரகுப்தர்

இ. சந்திர பாரதி

ஈ. சமுத்திர பிரபா

102. பவணந்தியாரின் உருவச் சிற்பம் உள்ள இடம்

அ. மேட்டுக்குப்பம் – ஈரோடு

ஆ. மேட்டுக்குப்பம் – திருப்பூர்

இ. மேட்டுப்புதூர் – ஈரோடு

ஈ. மேட்டுப்புதூர் – திருப்பூர்

103. நன்னூலுக்கு முதல் உரை செய்து பதிப்பித்தவர்

அ. விசாக நாயனார்

ஆ. விசாகப் பெருமாவிளயர்

இ. சீயகங்கள்

ஈ. விசாகநாதர்

104. எட்டாம் தீர்த்தங்காரரான சந்திர பிரபாவின் கோவில் உள்ள மேட்டுப்புதூர் உள்ள மாவட்டம்

அ. கோவை

ஆ. திருப்பூர்

இ. மதுரை

ஈ. ஈரோடு

105. “நூலே, நுவல்வோன் நூவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லா நூற்கும் இவை பொதுப்பெயராம்”

என்னும் பாடல் நன்னூலில் இடம்பெற்றுள்ளன. நூ.எண்

அ. 2

ஆ. 3

இ. 14

ஈ. 47

106. “காலம் களனே காரணம் என்றுஇம்

மூவகை ஏற்றி மொழிநரும் உளரே” என்னும் பாடல் நன்னூலில் இடம்பெற்றுள்ள நூ.எண்.

அ. 47

ஆ. 49

இ. 54

ஈ. 48

107. “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே”

எனும் பாடல் நன்னூலில் இடம்பெற்றுள்ள நூ.எண்

அ. 47

ஆ. 49

இ. 54

ஈ. 48

108. “ஆறாம் திணை” என்பதின் ஆசிரியர்

அ. வில்வரத்தினம்

ஆ. முத்துலிங்கம்

இ. பெரியவன் கவிராயர்

ஈ. அழகிய பெரியவன்

109. இலங்கையில் கலவரம் நடந்ததாக ஆறாம் திணையில் குறிப்பிடப்படும் ஆண்டு

அ. 1956

ஆ. 1959

இ. 1958

ஈ. 1957

110. “ராபின்சன் குரூசோ” என்ற நூலை எழுதியவர்

அ. மல்லார்மே

ஆ. பாப்லோ நெரூடா

இ. எர்னஸ்ட் காசிரர்

ஈ. டேனியல் டிஃபோ

111. பொருள் தேடப் போவதால் புலம் பெயர்வது ______ எனப்படும்.

அ. கால்வழி பிரிவு

ஆ. தரை வழிப்பிரிவு

இ. கடல் வழிப்பிரிவு

ஈ. பொருள் வயின்பிரிவு

112. ‘வெஞ்சின வேந்ஹன் பகை அலைக்கலங்கி,

வாழ்வோர், போகிய பேர் ஊர்ப் பாழ்” என்ற பாடலடி இடம்பெற்றுள்ள

நூல்

அ. நன்னூல்

ஆ. நற்றினை

இ. யுகத்தின் பாடல்

ஈ. நாலடியார்

113. அரசனின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் குடிபெயர்ந்த மக்களின் கதை பற்றி நற்றிணையின் எத்தனையாவது பாடல் கூறுகிறது.

அ. 152

ஆ. 153

இ. 154

ஈ. 155

114. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்

அ. கால்டுவெல்

ஆ. ஆறுமுக நாவலர்

இ. உ.வே.சா

ஈ. ஜி.யு.போப்

115. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் ஜி.யு.போப். பிறந்த நாடு

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. ரஷ்யா

ஈ. கனடா

116. தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கிய ஆண்டு

அ. 1958

ஆ. 1938

இ. 1982

ஈ. 1983

117. “யாழ்நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

……………………..

…………………………

நானோ வழித்தவறி அலாஸ்கா

வந்துவிட்ட ஒட்டகம் போல் ஓஸ்லோவில்!

என்ற வரிகளை எழுதியவர்

அ. மல்லார்மே

ஆ. ஜி.யு. போப்

இ. வ.ஜ.ச. ஜெயபாலன்

ஈ. ஜெயபாரதி

118. “கடல்புறா” என்ற நூலின் ஆசிரியர்

அ. டேனியல் டிஃபோ

ஆ. முத்துலிங்கம்

இ. வில்வரத்தினம்

ஈ. சாண்டியன்

119. ஓர் இனத்தை அழிக்க அவர்களது நூல்களை எரித்தால் போதும் அவர்கள் அறிவு மேலும் வளர முடியாமல் நின்று விடும் என்றுகூறும் நூல்

அ. ஃபாரன்ஹீட் 145

ஆ. ஃபாரன்ஹீட் 451

இ. ஃபாரன் ஹீட் 541

ஈ. ஃபாரன் ஹீட் 415

120. உலக முழுவதுமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை

அ. 6 கோடி

ஆ. 7 கோடி

இ. 8 கோடி

ஈ. 10 கோடி

121. நியுசிலாந்திலிருந்து அலாஸ்கா வரை பரந்து போய் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை

அ. 8 கோடி

ஆ. 3 லட்சம்

இ. 10 லட்சம்

ஈ. 7 லட்சம்

122. கனடாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை

அ. 8 கோடி

ஆ. 7 கோடி

இ. 3 லட்சம்

ஈ. 10 லட்சம்

123. ஜனவரி 14 தமிழர் பாரம்பரிய நாள் என பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு

அ. 2012

ஆ. 2013

இ. 2010

ஈ. 2011

124. உலகின் 2 வது பெரிய தேசமான கனடாவில் உள்ள புதிய வீதிக்கு இடப்பட்ட தமிழ் பெயர்

அ. சென்னி வீதி

ஆ. வன்னி வீதி

இ. சோழர்வீதி

ஈ. தமிழ்வீதி

125. எந்த ஒரு தமிழராலும் மறக்க முடியாத நாள்

அ. 1981 – மே 31

ஆ. 1980 – மே 31

இ. 1981 – மே 30

ஈ. 1980 – மே 30

126. ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்நூறு பாடல்களை கொண்ட நூல்

அ. அகநானூறு

ஆ. நற்றினை

இ. தேவாரம்

ஈ. ஐங்குறுநூறு

127. காகத்தின் பறக்கும் எல்லை தூரம் எவ்வளவு என முத்துலிங்கம் ஆறாம் திணையில் கூறுகிறார்.

அ. 2 மைல்

ஆ. 3 மைல்

இ. 4 மைல்

ஈ. எல்லை கிடையாது

128. ஆறுமணிக்குருவியின் பறக்கும் எல்லை தூரம்

அ. 2 மைல்

ஆ. 3 மைல்

இ. 4 மைல்

ஈ. எல்லை கிடையாது

129. ஆறாம் திணை என முத்துலிங்கம் குறிப்பிடும் பகுதி

அ. பனியும் பனி சார்ந்த நிலமும்

ஆ. பனியும் காடு சார்ந்த நிலமும்

இ. வயலும் பனி சார்ந்த நிலமும்

ஈ. காற்றும் காற்று சார்ந்த நிலமும்

130. இலங்கை யாழ்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்

அ. வில்வரத்தினம்

ஆ. முத்துலிங்கம்

இ. ஆறுமுக நாவலர்

ஈ. எம்.ஜி.ஆர்

131. எழுத்தாளர் முத்துலிங்கம் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றது எந்நூலுக்காக

அ. வடக்கு வீதி

ஆ. திகடச்சக்கரம்

இ. வம்சவிருத்தி

ஈ. ரயில் வண்டி

132. வம்சவிருத்தி என்னும் நூலுக்காக முத்துலிங்கம் தமிழக அரசின் முதல் பரிசை பெற்ற ஆண்டு

அ. 1994

ஆ. 1995

இ. 1996

ஈ. 1997

133. எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் எந்த நூல் இலங்கை அரசின் சாகித்ய பரிசை பெற்றது

அ. வடக்கு வீதி

ஆ. திகடச்சக்கரம்

இ. வம்சவிருத்தி

ஈ. ரயில் வண்டி

134. எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை தொகுப்புகளில் அல்லாதது.

அ. உயிர்த்தெழும் காலத்துக்காக

ஆ. திகடச்சக்கரம்

இ. மகாராஜாவின் ரயில் வண்டி

ஈ. அக்கா

135. வடக்கு வீதி என்னும் நூலுக்காக முத்துலிங்கம் இலங்கை அரசின் சாகித்ய பரிசை பெற்ற ஆண்டு

அ. 1996

ஆ. 1999

இ. 1997

ஈ. 1993

136. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் முத்துலிங்கம் தற்போதுள்ள நாடு

அ. நியுசிலாந்து

ஆ. அலாஸ்கா

இ. அமெரிக்கா

இ. கனடா

137. சொற்கள் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க காரணம்

அ. சொல்லின் இடையில் உள்ள எழுத்தொலிகள்

ஆ. சொல்லின் முதலிலும் இறுதியிலும் உள்ள எழுத்தொலிகள்

இ. சொல்லில் உள்ள அனைத்து எழுத்தொலிகள்

ஈ. சொல்லில் உள்ள உயிரெழுத்தொலிகள்

138. பிறமொழி சொற்களை கண்டறி.

1. காவிரி 2. டமாதம் 3. றெக்கை 4. பாவை 5. ராக்கி

அ. 2, 1, 3

ஆ. 1, 2, 5

இ. 2, 3, 5

ஈ. 1, 4, 5

139. தமிழ்மொழி (ம) பிறமொழிக்கு உரிய சொற்களை பிரித்தறிய உதவுவது எது

அ. சொற்களின் வருகை

ஆ. எழுத்துக்களின் வருகை

இ. எழுத்துகளின் ஒலிப்பு முறை

ஈ. நூல்கள்

140. மொழி முதல் எழுத்துகள் (ம) மொழி இறுதி எழுத்துகள் எத்தனை

அ. 22, 26

ஆ. 21, 24

இ. 22, 21

ஈ. 22, 24

141. மொழி முதல் எழுத்துகளில் உயிரெழுத்துகள் வரும் இடம்

அ. இறுதியில்

ஆ. நடுவில்

இ. முதலில்

ஈ. எதுவுமில்லை

142. மொழி முதல் எழுத்துகளில் மெய்யெழுத்தின் எத்தனை வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாக சொல்லின் முதலில் வரும்.

அ. 10

ஆ. 9

இ. 8

ஈ. முதலில் வராது

143. மொழி முதல் எழுத்துகளில் மெய்யெழுத்தின் எத்தனை வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாக சொல்லின் முதலில் வருவதில்லை.

அ. 10

ஆ. 9

இ. 8

ஈ. 7

144. மொழி முதல் எழுத்துகளில் ஆய்த எழுத்து வரும் இடம்

அ. இறுதி

ஆ. இடை

இ. முதல்

ஈ. வராது

145. குறள் என்னும் சொல்லின் முதலில் வரும் மொழி முதல் எழுத்து

அ. க்

ஆ. கு

இ. உ

ஈ. ற

146. மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்

அ. க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ

ஆ. க, ங, ச ஞ, ட, த, ந, ப, ம, வ

இ. க. ங, ச, ட, த, ந, ப, ம, ய, வ

ஈ. க, ங, ச, ட, த, ந, ப, ம, ர, ல

147. மொழி முதல் எழுத்தின் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வராது

அ. ட, ண, த, ர, ல, ழ, ள, ன

ஆ. ட, ண, ர, ல, ழ, ள, ற, ன

இ. ட, ண, ர, ல, ழ, ப, ற, ன

ஈ. ங, ட, ன, ர, ல, ழ, ள, ற

148. ‘ங்’ என்னும் மெல்லின மெய் ‘ஙனம்’ என்னும் சொல்லில் கீழ்க்கண்ட எந்த பொருளில் வரும்

அ. வீதம்

ஆ. விதம்

இ. அங்கு

ஈ. இங்கு

149. கீழ்க்கண்டவற்றில் சுட்டெழுத்துகள் எது?

அ. அ, இ, எ

ஆ. இ, எ, யா

இ. அ, இ, உ

ஈ. எ, யா

150. கீழ்க்கண்டவற்றில் எந்த சொல் தமிழகத்தில் வழக்கில் இல்லை

அ. அங்ஙனம்

ஆ. இங்ஙனம்

இ. உங்ஙனம்

ஈ. எங்ஙனம்

151. உங்கு, உங்ஙனம் என்ற சொற்களை தற்போது எங்கிருக்கும் தமிழர்கள் பயன்படுத்துகின்றன

அ. இலங்கை

ஆ. கனடா

இ. நியுசிலாந்து

ஈ. மலேசியா

152. மொழி இறுதி எழுத்துகளில் உயிரெழுத்துக்கள் வரும் இடம்

அ. இறுதி

ஆ. இடை

இ. முதல்

ஈ. வராது

153. மொழி இறுதி எழுத்துகளில் எத்தனை மெய்யெழுத்துகள் இடம்பெறும்

அ. 10

ஆ. 11

இ. 12

ஈ. 18

154. மொழி இறுதி எழுத்துகளில் இடம்பெறாத மெல்லின மெய்

அ. ங்

ஆ. ஞ்

இ. ண்

ஈ. ந்

155. பழைய இலக்கண நூலார் மொழி இறுதி குற்றியலுகர எழுத்தை கீழ்க்கண்ட எதில் சேர்த்துள்ளனர்

அ. மொழி முதல் எழுத்து

ஆ. மொழி இறுதி எழுத்து

இ. இரண்டிலும்

ஈ. எதுவுமில்லை

156. பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்து தற்போது வழக்கில் இல்லாத எழுத்துகள்

அ. ஞ், ந், வ்

ஆ. ஞ், ண், ந்

இ. ஞ், ண், ன்

ஈ. ஞ், ன், ழ்

157. மொழி இறுதி எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லில் இறுதியில் வரும்

அ. ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்

ஆ. ஞ், ண், ந், ம், ன், ங், ர், ல், ழ், ள்

இ. ஞ், ண், ந், ம், ன், க், ச், ல், ழ், ள், வ்

ஈ. ஞ், ண், ந், ம், ன், க், ச், ட், த், ப், ர்

158. மொழி இறுதி எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் இறுதியில் வாராது

அ. க், ச், ட், த், ப், ற், ஞ்

ஆ. க், ச், ட், த், ப், ற், ண்

இ. க், ச், ட், த், ப், ற், ங்

ஈ. க். ச், ட், த், ப், ற், ழ்

159. மொழி இறுதி எழுத்தில் வரும் உயிரெழுத்து, மெய்யெழுத்து, குற்றியலுகரம் ஆகியவற்றின் சரியான எண்ணிக்கையை தேர்ந்தெடு.

அ. 12, 1, 11

ஆ. 12, 7, 1

இ. 12, 11, 1

ஈ. 11, 1, 24

160. நாட்டுப்பண் என்பதை எவ்வாறு பிரிக்கலாம்?

அ. நாட்டு + பண்

ஆ. நாடு + பண்

இ. நாட் + பண்

ஈ. நா + பண்

161. நிலைமொழியும் வருமொழியும் இணைவது ____ எனப்படும்.

அ. புணர்ச்சி

ஆ. உயிரீறு

இ. மெய்யீறு

ஈ. உயிரெழுத்து

162. புணர்ச்சிக்கு உரிய எழுத்துவை எவை

அ. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்

ஆ. உயிர்மெய்யெழுத்து

இ. நிலைமொழி இறுதி எழுத்தும் வருமொழி முதலெழுத்தும்

ஈ. நிலைமொழி முதல் எழுத்தும் வருமொழி இறுதிஎழுத்தும்

163. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தால் அது _______ எனப்படும்.

அ. உயிரீறு

ஆ. மெய்யீறு

இ. உயிர்முதல்

ஈ. மெய்முதல்

164. சரியான விடையை தேர்ந்தெடு.

மணிமேகலை, பொன்வண்டு

அ. மெய்யீறு, உயிரீறு

ஆ. உயிரீறு, மெய்யீறு

இ. மெய்யீறு, உயிர்மெய்யீறு

ஈ. உயிரீறு, உயிர்மெய்யீறு

165. வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தால் அது _________ எனப்படும்.

அ. உயிர்மெய் முதல்

ஆ. உயிர்முதல்

இ. மெய் முதல்

ஈ. மெய்யீறு

166. வருமொழியின் முதல் எழுத்தை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.

வாழையிலை, தமிழ்நிலம்

அ. உயிர்முதல், மெய்முதல்

ஆ. மெய்முதல், உயிர்முதல்

இ. உயிரீறு, மெய்யீறு

ஈ. மெய்யீறு, உயிரீறு

167. சொர் புணர்ச்சியில் நிலைமொழி – இறுதி எழுத்தும் வருமொழி முதலெழுத்தும் சந்திக்கும் முறை எத்தனை வகைப்படும்

அ. 2

ஆ. 3

இ. 4

ஈ. 5

168. பொருத்துக.

அ. உயிர் + உயிர் – 1. மலை + அருவி

ஆ. மெய் + உயிர் – 2. தென்னை + மரம்

இ. உயிர் + மெய் – 3. தேன் + மழை

ஈ. மெய் + மெய் – 4. தமிழ் + அன்னை

அ ஆ இ ஈ

அ. 2 4 1 3

ஆ. 1 4 2 3

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

169. இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்

அ. 2

ஆ. 4

இ. 6

ஈ. 8

170. புணர்ச்சி குறித்த கூற்றுகளை கவனி

1. நிலைமொழியும் வருமொழியும் இணைவது புணர்ச்சி

2. நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்கு உரியவை

3. புணர்ச்சி எழுத்துக்களின் சந்திப்பாகவும், சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது

4. எழுத்துகளும் சொற்களும் ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வு புணர்ச்சி

அ. 1, 2 சரி

ஆ. 1, 2, 3 சரி

இ. 1, 3, 4 சரி

ஈ. அனைத்தும் சரி

171. பொருத்துக,

அ. பெயர் + பெயர் – 1. தமிழ் + படி

ஆ. பெயர் + வினை – 2. கனி + சாறு

இ. வினை + வினை – 3. நடந்து + செல்

ஈ. வினை + பெயர் – 4. படித்த + நூல்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 2 1 4 3

இ. 2 4 1 3

ஈ. 2 1 3 4

172. சார்பெழுத்துகளுள் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராத எழுத்து _______

அ. உயிர்மெய்

ஆ. ஆய்தம்

இ. உயிரளபெடை

ஈ. ஒற்றளபெடை

173. குற்றியலுகரமும், குற்றியலிகரமும் சொல்லின் எப்பகுதியில் வராது.

அ. இடை

ஆ. கடை

இ. முதல்

ஈ. எதுவுமில்லை

174. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி _________ எனப்படும்.

அ. குற்றியலுகர ஈறு

ஆ. குற்றியலுகர நிலைமொழி

இ. இரண்டும்

ஈ. இரண்டுமில்லை

175. குற்றியலுகரத்தின் 6 வகைகளும் சொல்லின் எப்பகுதியில் வரும்

அ. இடை

ஆ. கடை

இ. முதல்

ஈ. எதுவுமில்லை

176. பொருத்துக.

அ. வீடில்லை – 1. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

ஆ. முரட்டுக்காளை – 2. நெடில் தொடர் குற்றியலுகரம்

இ. அச்சுப்பாதை – 3. மெந்தொடர் குற்றியலுகரம்

ஈ. பஞ்சுப்பொதி – 4. வன்தொடர் குற்றியலுகரம்

உ. மார்புக் கூடு – 5. இடைத்தொடர் குற்றியலுகரம்

அ ஆ இ ஈ உ

அ. 1 2 3 4 5

ஆ. 2 1 3 5 4

இ. 2 1 4 3 5

ஈ. 1 2 3 5 4

177. தவறான இணையை தேர்ந்தெடு

அ. மொழியாளுமை – உயிர் + உயிர்

ஆ. கடலலை – உயிர் + மெய்

இ. தமிழுணர்வு – மெய் + உயிர்

ஈ. மண்வளம் – மெய் + மெய்

178. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர்

அ. கருணாநிதி

ஆ. காமராசர்

இ. அண்ணா

ஈ. எம்.ஜி.ஆர்

179. தொழிலாளர்களின் தந்தை என அழைக்கப்படுபவர்

அ. அண்ணா

ஆ. திரு.வி.க.

இ. பாரதிதாசன்

ஈ. பாரதி

180. “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என பாடியவர்

அ. அண்ணா

ஆ. திரு.வி.க

இ. பாரதிதாசன்

ஈ. பாரதி

181. பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர்

அ. அண்ணா

ஆ. சாமி

இ. பெரியார்

ஈ. ஜீவானந்தம்

182. சரியான எழுத்து வழக்கு சொற்றொடரை தேர்ந்தெடு

அ. முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராம போவாது

ஆ. காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

இ. காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

ஈ. தேர்வெழுத வேகமாய் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாவிடும்

183. “குரங்குக்குட்டி” சரியான புணர்ச்சி விதியை தேர்ந்தெடு.

அ. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

ஆ. இனமிகல் விதி

இ. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

ஈ. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசடதபற மிகும்

184. பொருந்தாததை தேர்ந்தெடு

1. அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்

2. பவனந்தி முனிவர் – நன்னூல்

3. சு. விஸ்வரத்தினம் – ஆறாம் திணை

4. இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

அ. 1, 2

ஆ. 1, 4

இ. 2, 4

ஈ. 1, 3

185. “கபாடபுரங்களை காவு கொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள் “ – அடி மோனையை தேர்ந்தெடு

அ. கபாடபுரங்களை – காவுகொண்ட

ஆ. காலத்தால் – கனிமங்கள்

இ. கபாடபுரங்களை – காலத்தால்

ஈ. காலத்தால் – சாகாத

186. பாயிரம் இல்லது _______ அன்றே.

அ. காவியம்

ஆ. பனுவல்

இ. பாடல்

ஈ. கவிதை

187. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாக பதிவு செய்யப்படுகிறபோது வளைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

அ. மொழி என்பது திரவ, திட நிலையில் இருக்கும்

ஆ. பேச்சு மொழி, எழுத்து மொழியை திட, திரவ பொருளாக உருவகப்படுத்தவில்லை

இ. எழுத்து மொழியை விட பேச்சு மொழி எளிமையானது

ஈ. பேச்சு மொழியை காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது

188. தமிழ் இலக்கிய வரலாற்றில் “புலமைக் கதிரவன்” என தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர்

அ. உ.வே.சா

ஆ. மீனாட்சி சுந்தரனார்

இ. திருவள்ளுவர்

ஈ. இளங்கோவடிகள்

189. மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் எது?

அ. அதவத்தூர் – திருச்சி

ஆ. அதவத்தூர் – கரூர்

இ. அதவத்தூர் – திருநெல்வேலி

ஈ. அதவத்தூர் – தஞ்சை

190. மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவர்களில் யாரிடம் பாடம் கற்றார்.

1. சுப்பிரமணிய தேசிகர் 2. சென்னை தாண்டவராயர்

3. உ.வே.சா. 4. திருத்தனிகை விசாக பெருமாள்

அ. அனைத்தும் சரி

ஆ. 2, 3, 4

இ. 1, 2, 4

ஈ. 1, 3, 4

191. தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்

அ. உ.வெ.சா

ஆ. மீனாட்சி சுந்தரனார்

இ. இளங்கோ

ஈ. கம்பர்

192. கீழ்க்கண்டவற்றுள் மீனாட்சி சுந்தரனார் பாடாதது எது?

1. யமக அந்தாதி 2. வெண்பா அந்தாதி

3. திரிபந்தாதி 4. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

அ. 1, 2

ஆ. 13,

இ. 1, 4

ஈ. எதுவுமில்லை

193. கீழ்க்கண்டவர்களில் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள் யார்?

1. உ.வே.சா 2. தியாகராசர்

3. குலாம்காத்து நாவல் 4. ஆறுமுக நாவலர்

அ. 1, 2

ஆ. 1, 2, 3

இ. 1, 2, 4

ஈ. 1, 3, 4

194. விடைக்கேற்ற வினாவை அமைக்க

விடை: மீனாட்சி சுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்

அ. மீனாட்சி சுந்தரனார் எப்பாடல் பாடுவார்?

ஆ. தலப்புராணங்கள் பாடுவதில் வல்லவர் யார்?

இ. தலப்புராணங்களை யார் நன்றாக பாடுவார்?

ஈ. மீனாட்சி சுந்தரனார் எப்பாடலை நன்றாக பாடுவார்?

195. “இனிமையும் நீர்மையும் தமிழெனல்” என கூறும் நூல்

அ. திருக்குறள்

ஆ. பிங்கல நிகண்டு

இ. சிலப்பதிகாரம்

ஈ. தொல்காப்பியம்

196. “தமிழ்” என்ற சொல்லின் பொரூல் அல்லாதது

அ. இனிமை

ஆ. பண்பாடு

இ. அகப்பொருள்

ஈ. மொழிஞாயிறு

197. “அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

அ. பிங்கல நிகண்டு

ஆ. திருக்குறள்

இ. புறநானூறு

ஈ. தேவாரம்

198. “தமிழ்க்கெழு கூடல்” என்ற இடத்தில் தமிழ் – பொருளில் ஆளப்பட்டுள்ளது

அ. இயற்கை

ஆ. கலைப்புலமை

இ. அழகு

ஈ. இனிமை

199. ‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்’ என்ர புறநானூற்று பாடலில் ‘தமிழ்’ என்ற சொல் எந்த பொருளில் ஆளப்பட்டுள்ளது.

அ. பல்கலைப் புலமை

ஆ. இயற்கை

இ. அழகு

ஈ. இனிமை

200. “தமிழ் தழீஇய சாயலவர்” எனப் பாடியவர்

அ. கம்பன்

ஆ. இளங்கோவடிகள்

இ. சேக்கிழார்

ஈ. ஆண்டாள்

201. கம்பன் “தமிழ் தழீஇய சாயலவர்” என்ற இடத்தில் தமிழ் என்பதற்கு கூறும் பொருள்

அ. இயற்கை, மென்மை

ஆ. அழகு, இயற்கை

இ. அழகு, மென்மை

ஈ. கலை, அழகு

202. தேவாராம் போன்ற பக்தி இலக்கியங்களில் “தமிழ்” எந்த பொருளில் ஆளப்படுகிறது

அ. பல்கலைப்புலமை

ஆ. பாட்டு

இ. இயற்கை

ஈ. அழகு

203. “தமிழ் இவை பத்துமே” என்று கூறியவர்

அ. கம்பம்

ஆ. ஆண்டாள்

இ. ஞானசம்பந்தர்

ஈ. நாவுக்கரசர்

204. முப்பது பாட்டுகளால் ஆன திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர்

அ. தமிழ் முப்பது

ஆ. தமிழ் அழகு

இ. தமிழ் மாலை

ஈ. தமிழ் மலை

205. “பண்பாட்டு அசைவுகள்” என்னும் நூலை எழுதியவர்

அ. திரு.வி.க

ஆ. கம்பர்

இ. தொ. பரமசிவன்

ஈ. இந்திரன்

206. வந்தான் என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்

அ. வந்த

ஆ. வந்து

இ. வா

ஈ. வந்தனர்

207. “அங்கு வந்த பேருந்தில் அனைவரும் ஏறினர்”

இத்தொடரிலுள்ள “வந்த” என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு

அ. வினையெச்சம்

ஆ. பெயரெச்சம்

இ. வினையாலணையும் பெயர்

ஈ. வினைமுற்று

208. “கருணாகரன் மேடையில் வந்து நின்றார்” இதில் ‘வந்து’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ. வினையெச்சம்

ஆ. பெயரெச்சம்

இ. வினையாலணையும் பெயர்

ஈ. வினைமுற்று

209. “என்னை பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர்” இதில் ‘வந்தவர்’ என்பதின் இலக்கணக் குறிப்பு

அ. வினையெச்சம்

ஆ. பெயரெச்சம்

இ. வினையாலணையும் பெயர்

ஈ. வினைமுற்று

210. பொருத்துக.

அ. Aesthetic – 1. தத்துவ ஞானி

ஆ. Journalist – 2. புலம் பெயர்தல்

இ. Art Critic – 3. கலை விமர்சகர்

ஈ. Migration – 4. இதழாளர்

உ. Philosopher – 5. அழகியல்

அ ஆ இ ஈ

அ. 1 2 4 3 5

ஆ. 5 4 3 2 1

இ. 4 5 3 2 1

ஈ. 5 4 3 1 2

211. ‘தம் அப்பன்’ என்பதின் திரிந்த வடிவம்

அ. தகப்பன்

ஆ. தமப்பன்

இ. தந்தை

ஈ. அப்பா

212. பொருத்துக.

அ. நாடற்றவன் – 1. மீனாட்சி சுந்தரனார்

ஆ. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – 2. முத்துலிங்கம்

இ. உயிர்தெழும் காலத்துக்காக – 3. வில்வரத்தினம்

ஈ. யமக அந்தாதி – 4. அ.கி. பரந்தாமனார்

அ ஆ இ ஈ

அ. 2 4 3 1

ஆ. 4 2 3 1

இ. 4 3 2 1

ஈ. 3 4 1 2

213. பொருத்துக.

அ. சம்பளம் – 1. நுழைவு இசைவு

ஆ. விசா – 2. ஊதியம்

இ. பாஸ்போர்ட் – 3. கடவுச்சீட்டு

ஈ. போலிஸ் – 4. மகிழ்ச்சி

உ. சந்தோஷம் – 5. காவலர்

அ ஆ இ ஈ உ

அ. 2 1 4 3 5

ஆ. 2 1 3 5 4

இ. 1 2 3 4 5

ஈ. 3 2 1 5 4

214. “மலை முகடுகளை கடந்து செல் என செல்லுமோர் பாடலை” என்ற பாடலடி இடம்பெற்ற கவிதை

அ. ஆறாம் திணை

ஆ. யுகத்தின் பாடல்

இ. ஏதிலிக் குருவிகள்

ஈ. சிலப்பதிகாரம்

215) ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை’என்று தமிழுணர்வுடன் கூறியவர் யார்?

A) கவிஞர் சு.வில்வரத்தினம்

B) ரா.பி.சேதுப்பிள்ளை

C) இரசூல் கம்சதேவ்

D) பாரதியார்

விளக்கம்: தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை என்று கூறியவர் இரசூல் கம்சதேவ் ஆவார்

216) கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் எந்த ஆண்டு தொகுக்கப்பட்டது?

A) 2000

B) 2001

C) 2002

D) 2004

விளக்கம்: கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டது.

217) கவிஞர் சு.வில்வரத்தினம் என்பவர் எங்கு பிறந்தார்?

A) யாழ்ப்பாணம்

B) கொழும்பு

C) கன்னியாகுமரி

D) திருநெல்வேலி

விளக்கம்: கவிஞர் சு.வில்வத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டது.

218) கவிஞர் சு.வில்வரத்தினம் என்பவர் கவிதைகள் இயற்றுவதுடன் கீழ்க்காணும் எந்த கூடுதல் திறiமையைப் பெற்றவர்?

A) இசைத் திறன்

B) பாடும் திறன்

C) உரைநடை எழுதும் திறன்

D) சொற்பொழிவாற்றும் திறன்

விளக்கம்: கவிஞர் சு.வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டது. கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர்.

219) மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்மை விடுவித்துக் கொண்ட கவிதைகளை________என்பர்.

A) மரபு கவிதைகள்

B) புதுக்கவிதைகள்

C) ஹைக்கூ

D) சென்ரியு

விளக்கம்: மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.

220) படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது எது?

A) மரபுக் கவிதை

B) லிமரைக்கூ

C) ஹைக்கூ

D) புதுக்கவிதை

விளக்கம்: மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்மை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். படிப்போரின் ஆழ்மனதில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.

221) தவறான கூற்றை தேர்வு செய்க

A) மொழி என்பது பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது

B) படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது – புதுக்கவிதை

C) கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2002இல் தொகுக்கப்பட்டது.

D) மனித இனத்தின் ஆதி அடையாளம் – மொழி

விளக்கம்: கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டது.

222) கனைகடலை, நெருப்பாற்றை

மலைமுகடுகளைக் கடந்து

செல் எனச் செல்லுமோர் பாடலை

கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்

உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) தமிழ் ஒளி

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) கவிஞர் சு.வில்வரத்தினம்

விளக்கம்: மேற்காணும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யுகத்தின் பாடல் ஆகும். இப்பாடலை எழுதியவர் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆவார்.

223) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.

B) தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை – இரசூல் கம்சதோவ்

C) கவிஞர் சு.வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்குடித் தீவில் பிறந்தவர்.

D) ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது மொழியே

விளக்கம்: கவிஞர் சு.வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.

224) கனைகடலை, நெருப்பாற்றை

மலைமுகடுகளைக் கடந்து

செல் எனச் செல்லுமோர் பாடலை

கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்

உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும் என்ற பாடல் வரியில் கபாடபுரம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) முதல் தமிழ்ச்சங்கம்

B) இரண்டாம் தமிழ்ச்சங்கம்

C) மூன்றாம் தமிழ்ச்சங்கம்

D) நான்காம் தமிழ்ச்சங்கம்

விளக்கம்: முதல் தமிழ்ச்சங்கம் – கடல்கொண்ட குமரிக்கண்டம்

இரண்டாம் தமிழ்ச்சங்கம் – கபாடபுரம்

மூன்றாம் தமிழ்ச்சங்கம் – இன்றைய மதுரை

225) மனித இனத்தின் ஆதி அடையாளம் எனக் குறிப்பிடப்படுவது எது?

A) கற்கருவிகள்

B) மொழி

C) இலக்கியம்

D) ஓவியம்

விளக்கம்: மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது.

226) என் அம்மை ஒற்றியெடுத்த

நெற்றிமண் அழகே

வழிவழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்,

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே

உனக்குப்

பல்லாண்டு

பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு

பாடத்தான் வேண்டும் – என்ற வரியை எழுதியவர் யார்?

A) தமிழ் ஒளி

B) கவிஞர் சு.வில்வரத்தினம்

C) ஈரோடு தமிழன்பன்

D) ரா.பி.சேதுப்பிள்ளை

விளக்கம்: மேற்காணும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யுகத்தின் பாடலாகும். இப்பாடலை எழுதியவர் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆவார்.

227) ஓர் இனத்தின் மையப்புள்ளியாக கீழ்க்காண்பனவற்றில் எது விளங்குகிறது?

A) மொழி

B) ஒலி

C) சைகைகள்

D) ஓவியம்

விளக்கம்: மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மொழியே. அது, நம் இருப்பின் அடையாளம். நம் தாய்மொழியாம், தமிழ் மொழியின் வேர், சங்ககாலத்தில் தொடங்கி, இன்றையகாலம் வரையும் இடர்பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது.

228) ஏடு தொடக்கி வைத்து என்னம்மை

மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த

விரல்முனையத் தீயிலே தோய்த்து

திசைகளின் சுவரெல்லாம்

எழுதத்தான் வேண்டும்

எழுகின்றன யுகத்தினோர் பாடலை – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) கவிஞர். தமிழ்ஒளி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: மேற்காணும் பாடல் வரிகளை இயற்றியவர் கவிஞர் சு. வில்வரத்தினம் ஆவார். இப்பாடல்கள் இவர் இயற்றிய யுகத்தின் பாடல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!