11th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2
11th Science Lesson 5 Questions in Tamil
5] ஈர்ப்பியல்
1. 2017 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு ____________ கண்டுபிடிப்புக்கு வழங்கப்பட்டது.
A) ஈர்ப்பியல் விதிகள்
B) ஈர்ப்பியல் துகள்கள்
C) ஈர்ப்பியல் அலைநீளம்
D) ஈர்ப்பியல் அலைகள்
விளக்கம்: 2017 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஈர்ப்பியல் அலைகள் கண்டுபிடிப்புக்கு வழங்கப்பட்டது.
2. ஈர்ப்பியல் அலைகள் குறித்து கருத்தளவில் 1915 ஆம் ஆண்டிலே____________ முன்னறிவிப்பு செய்திருந்தார்.
A) நியூட்டன்
B) ஸ்டீபன் ஹாங்கிங்
C) நீல்ஸ் போர்
D) ஐன்ஸ்ட்டின்
விளக்கம்: ஈர்ப்பியல் அலைகள் குறித்து கருத்தளவில் 1915 ஆம் ஆண்டிலே ஐன்ஸ்ட்டின் முன்னறிவிப்பு செய்திருந்தார்.
3. புவிமையக் கொள்கை உருவாக்கியவர் ____________
A) அரிஸ்டாட்டில்
B) நியூட்டன்
C) கிளாடியஸ் தாலமி
D) ஐன்ஸ்ட்டின்
விளக்கம்: புவிமையக் கொள்கை உருவாக்கியவர் கிளாடியஸ் தாலமி ஆவார்.
4. கிளாடியஸ் தாலமி எந்தெந்த வான்பொருள்களை விளக்குவதற்கு ஒரு கொள்கையை உருவாக்கினார்?
A) சூரியன்
B) செவ்வாய்
C) வியாழன்
D) இவை அனைத்தும்
விளக்கம்: கிளாடியஸ் தாலமி வான்பொருள்களான சூரியன், நிலா, செவ்வாய், வியாழன் போன்றவற்றில் இயக்கத்தை விளக்குவதற்காக ஒரு கொள்கையை உருவாக்கினார்.
5. கிளாடியஸ் தாலமி எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
A) முதலாம்
B) இரண்டாம்
C) மூன்றாம்
D) நான்காம்
விளக்கம்: இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க-ரோமானிய வானியல் அறிஞர் கிளாடியஸ் தாலமி ஆவார்.
6. தாலமியின் புவிமையக் கொள்கைப்படி பிரபஞ்சத்தின் மையம்____________
A) சூரியன்
B) செவ்வாய்
C) வியாழன்
D) புவி
விளக்கம்: தாலமியின் புவிமையக் கொள்கைப்படி புவியே பிரபஞ்சத்தின் மையம்.
7. செவ்வாய், வியாழன் கோள்களின்____________ இயக்கத்தை தாலமியின் புவிமையக் கொள்கை விளக்கவில்லை.
A) முன்னோக்கு
B) பின்னோக்கு
C) மையநோக்கு
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: செவ்வாய், வியாழன் கோள்களின் பின்னோக்கு இயக்கத்தை தாலமியின் புவிமையக் கொள்கை விளக்கவில்லை.
8. சூரிய மையக்கொள்கையை முன்மொழிந்தவர் ____________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) நியூட்டன்
C) கலிலியோ
D) ஐன்ஸ்ட்டின்
விளக்கம்: 15 ம் நூற்றாண்டில் போலந்து நாட்டு வானியல் அறிஞர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் சூரிய மையக்கொள்கையை முன்மொழிந்தார்.
9. கீழ்க்கண்டவற்றுள் சூரிய மையக்கொள்கையில் எவை சரியானவை?
1] சூரிய குடும்பத்தின் மையமாக சூரியன் உள்ளது.
2] சூரியனை மையமாக கொண்டு புவி உட்பட அனைத்து கோள்களும் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: சூரிய குடும்பத்தின் மையமாக சூரியன் உள்ளது. சூரியனை மையமாக கொண்டு புவி உட்பட அனைத்து கோள்களும் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
10. புவிக்கு அருகில் மேலிருந்து கீழே விழும் பொருள்கள் அனைத்தும் புவியினை நோக்கி சம வீதத்தில் முடுக்கமடைகின்றன எனக்கண்டறிந்தவர்____________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) நியூட்டன்
C) கலிலியோ
D) ஐன்ஸ்ட்டின்
விளக்கம்: அதே காலகட்டத்தில் புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞர் கலிலியோ புவிக்கு அருகில் மேலிருந்து கீழே விழும் பொருள்கள் அனைத்தும் புவியினை நோக்கி சம வீதத்தில் முடுக்கமடைகின்றன எனக்கண்டறிந்தார்.
11. தன் வாழ் நாள் முழுவதும் விண்மீன்கள் மற்றும் கோள்கள் ஆகியவற்றின் நிலை மற்றும் இயக்கம் குறித்து வெறும் கண்களால் கண்டறிந்து பதிவுகள் செய்வதில் செலவழித்தவர்____________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) நியூட்டன்
C) கலிலியோ
D) டைகோ பிராஹே
விளக்கம்: டைகோ பிராஹே தன் வாழ் நாள் முழுவதும் விண்மீன்கள் மற்றும் கோள்கள் ஆகியவற்றின் நிலை மற்றும் இயக்கம் குறித்து வெறும் கண்களால் கண்டறிந்து பதிவுகள் செய்வதில் செலவழித்தார்.
12. கோள்களின் இயக்கம் பற்றிய விதிகளை கண்டறிந்தவர்____________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) டைகோ பிராஹே
விளக்கம்: ஜோகன் கெப்ளர் பகுத்தாய்வு செய்து கோள்களின் இயக்கம் பற்றிய விதிகளை கண்டறிந்தார்.
13. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] கோபர்னிக்கசும் தாலமியும் கோள்கள் நீள் வட்டப்பாதையில் இயங்குகின்றன எனக் கருதினர்.
2] கோள்கள் வட்டப்பாதையில் இயங்குகின்றன என்பதை கெப்ளர் கண்டறிந்தார்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: கோபர்னிக்கசும் தாலமியும் கோள்கள் வட்டப்பாதையில் இயங்குகின்றன எனக் கருதினர். ஆனால் கோள்கள் நீள் வட்டப்பாதையில் இயங்குகின்றன என்பதை கெப்ளர் கண்டறிந்தார்.
14. சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புக்களை ஏற்படுத்தும் விதி____________
A) சுற்றுக்காலங்களுக்கான விதி
B) சுற்றுப்பாதைகளுக்கான விதி
C) பரப்பு விதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புக்களை ஏற்படுத்தும்.
15. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] கோள் சூரியனுக்கு அருகே செல்லும் போது குறைந்த திசைவேகத்திலும் செல்லும். சூரியனிடமிருந்து நீண்ட தொலைவில் செல்லும் போது மிக அதிக வேகத்திலும் செல்லும்.
2] இதன் மூலம் சமகால அளவில் சமஅளவு பரப்புகளை கடந்து செல்கிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: கோள் சூரியனுக்கு அருகே செல்லும் போது மிக அதிக வேகத்திலும், சூரியனிடமிருந்து நீண்ட தொலைவில் செல்லும் போது குறைந்த திசைவேகத்திலும் செல்லும். இதன் மூலம் சமகால அளவில் சமஅளவு பரப்புகளை கடந்து செல்கிறது.
16. கோள்களின்____________ மாறுபடுவதை தரவுகள் மூலம் அறிந்த கெப்ளர் அதன் அடிப்படையில் பரப்பு விதியை கண்டறிந்தார்.
A) திசைவேகம்
B) காலம்
C) வேகம்
D) முடுக்கம்
விளக்கம்: கோள்களின் வேகம் மாறுபடுவதை தரவுகள் மூலம் அறிந்த கெப்ளர் அதன் அடிப்படையில் பரப்பு விதியை கண்டறிந்தார்.
17. நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் கோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த நீள்வட்டத்தின் அரைநெட்டச்சின் மும்மடிக்கு நேர் தகவில் இருக்கும் விதி____________
A) சுற்றுக்காலங்களுக்கான விதி
B) சுற்றுப்பாதைகளுக்கான விதி
C) பரப்பு விதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் கோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த நீள்வட்டத்தின் அரைநெட்டச்சின் மும்மடிக்கு நேர் தகவில் இருக்கும்.
18. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] சூரியனிலிருந்து உள்ள தொலைவு அதிகரிக்கும்போது, சுற்றுகாலமும் குறைகிறது.
2] ஆனால் குறைவு வீதம் மாறுபடும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: சூரியனிலிருந்து உள்ள தொலைவு அதிகரிக்கும்போது, சுற்றுகாலமும் அதிகரிக்கும். ஆனால் அதிகரிப்பு வீதம் மாறுபடும்.
19. ____________விதிப்படி புற விசை செயல்பட்டால் மட்டுமே ஒரு பொருள் முடுக்கமடையும்.
A) நியூட்டன் முதலாம் விதி
B) நியூட்டன் இரண்டாம் விதி
C) நியூட்டன் மூன்றாம் விதி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: நியூட்டன் இரண்டாம் விதிப்படி புற விசை செயல்பட்டால் மட்டுமே ஒரு பொருள் முடுக்கமடையும்.
20. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புவிப் பரப்புக்கு அருகே உள்ள பொருளுக்கு புவியின் ஈரப்பு புலத்தால் ஏற்படும் முடுக்கமானது, ஈர்ப்பு முடுக்கம் எனப்படுகிறது.
2] இது G என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புவிப் பரப்புக்கு அருகே உள்ள பொருளுக்கு புவியின் ஈரப்பு புலத்தால் ஏற்படும் முடுக்கமானது, ஈர்ப்பு முடுக்கம் எனப்படுகிறது. இது g என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
21. புவியினை நோக்கி விழும் அனைத்து பொருள்களும்____________ முடுக்கமடைகிறது.
A) எதிராக
B) நேராக
C) சமமாக
D) மாறாக
விளக்கம்: புவியினை நோக்கி விழும் அனைத்து பொருள்களும் சமமாக முடுக்கமடைகிறது.
22. புவியின் பூமத்திய ரேகை பகுதியில் ஈர்ப்பின் முடுக்கம் g =____________
A) 9.7 ms-2
B) 9.8 ms-2
C) 9.6 ms-2
D) 9.9 ms-2
விளக்கம்: புவியின் பூமத்திய ரேகை பகுதியில் ஈர்ப்பின் முடுக்கம் 9.8 ms-2என கண்டறியப்பட்டுள்ளது.
23. குத்துயரம் h அதிகரிக்கும் போது ஈர்ப்பு முடுக்கம் =____________
A) அதிகரிக்கிறது
B) குறைகிறது
C) முடுக்கமடைகிறது
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: குத்துயரம் h அதிகரிக்கும் போது ஈர்ப்பு முடுக்கம் g குறைகிறது.
24. புவிக்கு அருகே ஈர்ப்பின் முடுக்கம் ___________ உள்ளது.
A) மாறி
B) சுழி
C) ஒன்று
D) மாறிலி
விளக்கம்: புவிக்கு அருகே ஈர்ப்பின் முடுக்கம் மாறிலியாக உள்ளது.
25. புவியின் மேற்பரப்பில் ஈர்ப்பின் முடுக்கம்___________ இருக்கிறது.
A) குறைவாக
B) சுழி
C) மாறிலி
D) பெருமமாக
விளக்கம்: புவியின் மேற்பரப்பில் ஈர்ப்பின் முடுக்கம் பெருமமாக இருக்கிறது.
26. பரப்புக்கு உயரே சென்றாலோ அல்லது புவியின் ஆழத்திற்கு சென்றாலோ ஈர்ப்பின் முடுக்கம் ___________
A) அதிகரிக்கிறது
B) குறைகிறது
C) முடுக்கமடைகிறது
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: பரப்புக்கு உயரே சென்றாலோ அல்லது புவியின் ஆழத்திற்கு சென்றாலோ ஈர்ப்பின் முடுக்கம் குறையும்.
27. புவிப்பரப்பில் ஒரு பொருள் உள்ளபோது, அது___________ யினை உணருகிறது.
A) விசை
B) மைய நோக்கு விசை
C) மைய விலக்கு விசை
D) திசைவேகம்
விளக்கம்: புவிப்பரப்பில் ஒரு பொருள் உள்ளபோது, அது மைய விலக்கு விசையினை உணருகிறது.
28. மைய விலக்கு விசையானது புவியின்___________ மதிப்பை சார்ந்துள்ளது.
A) நேர்கோட்டு
B) மத்திய கோட்டு
C) குறுக்கு கோட்டு
D) அச்சுக்கோட்டு
விளக்கம்: மைய விலக்கு விசையானது புவியின் குறுக்குக்கோட்டு மதிப்பை சார்ந்துள்ளது.
29. புவி சுழலவில்லை எனில் பொருளின் மீதான விசை___________
A) MG
B) mk
C) mf
D) mg
விளக்கம்: புவி சுழலவில்லை எனில் பொருளின் மீதான விசை mg ஆகும்.
30. புவிமையக்கோட்டில் ஈர்ப்பின் முடுக்கம் g ஆனது ___________ ஆகும்.
A) சிறுமம்
B) சுழி
C) மாறிலி
D) பெருமமாக
விளக்கம்: புவிமையக்கோட்டில் ஈர்ப்பின் முடுக்கம் g ஆனது சிறுமம் ஆகும்.
31. துருவப் பகுதியில் ஈர்ப்பின் முடுக்கம்___________ ஆகும்.
A) சிறுமம்
B) சுழி
C) மாறிலி
D) பெருமம்
விளக்கம்: துருவப் பகுதியில் ஈர்ப்பின் முடுக்கம் பெருமம் ஆகும்.
32. சென்னைக்கு குறுக்குக்கோட்டு மதிப்பு___________ ஆகும்.
A) 14°
B) 12°
C) 15°
D) 13°
விளக்கம்: சென்னைக்கு குறுக்குக்கோட்டு மதிப்பு 13° ஆகும்.
33. 13° என்பது___________ ரேடியனுக்கு சமம்.
A) 0.2268
B) 0.2269
C) 0.2278
D) 0.2368
விளக்கம்: 13°என்பது 0.2268 ரேடியனுக்கு சமம்.
34. விடுபடுவேகமானது பொருளின்___________ சார்ந்தது அல்ல.
A) எடை
B) வேகம்
C) நிறை
D) திசைவேகம்
விளக்கம்: விடுபடுவேகமானது பொருளின் நிறையினை சார்ந்தது அல்ல.
35. விடுபடு வேகம் பொருள் எறியப்படும்___________ சார்ந்தது அல்ல.
A) எடை
B) வேகம்
C) நிறை
D) திசை
விளக்கம்: விடுபடு வேகம் பொருள் எறியப்படும் திசையை சார்ந்தது அல்ல.
36. விடுபடுவேகமானது ___________புவியின் ஆரம் ஆகிய இரு காரணிகளை சார்ந்துள்ளது.
A) ஈர்ப்பின் திசைவேகம்
B) ஈர்ப்பின் வேகம்
C) ஈர்ப்பின் முடுக்கம்
D) ஈர்ப்பின் அலைநீளம்
விளக்கம்: விடுபடுவேகமானது ஈர்ப்பின் முடுக்கம், புவியின் ஆரம் ஆகிய இரு காரணிகளை சார்ந்துள்ளது.
37. கூற்று(A): நைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லேசான மூலக்கூறுகள் புவிப்பரப்பை விட்டு தப்பி செல்லுகின்றன.
காரணம்(R): ஏனெனில் இவை போதுமான வேகம் கொண்டுள்ளன.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லேசான மூலக்கூறுகள் புவிப்பரப்பை விட்டு தப்பி செல்லுவதற்கு போதுமான வேகம் கொண்டுள்ளன.
38. கூற்று(A): நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான மூலக்கூறுகள் புவிப்பரப்பை விட்டு தப்பி செல்லுகின்றன.
காரணம்(R): ஏனெனில் இவை போதுமான வேகம் கொண்டுள்ளன.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான மூலக்கூறுகள் தப்பிச் செல்ல போதுமான வேகம் உடையவை அல்ல.
39. புவியின் வளிமண்டலத்தில்___________ஆக்சிஜனுமே அதிக அளவில் உள்ளன.
A) ஹீலியம்
B) ஹைட்ரஜன்
C) கார்பன் டை ஆக்ஸைடு
D) நைட்ரஜன்
விளக்கம்: புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனுமே அதிக அளவில் உள்ளன.
40. புவியின் விடுபடுவேகம் =___________
A) 11.1 kms-1
B) 11.2 kms-1
C) 11.3 kms-1
D) 11.4 kms-1
விளக்கம்: புவியின் விடுபடுவேகம் = 11.2 kms-1
41. உயரம் h அதிகரிக்கும் போது, துணைக்கோளின் சுற்றியக்க வேகம் ___________
A) அதிகரிக்கிறது
B) குறைகிறது
C) முடுக்கமடைகிறது
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: உயரம் h அதிகரிக்கும் போது, துணைக்கோளின் சுற்றியக்க வேகம் குறையும்.
42. துணைக்கோளின் சுழற்சி காலம் T =___________நிமிடங்கள் எனப் பெறப்படுகிறது.
A) 95
B) 85
C) 75
D) 65
விளக்கம்: துணைக்கோளின் சுழற்சி காலம் T =85 நிமிடங்கள் எனப் பெறப்படுகிறது.
43. புவிபரப்பிலிருந்து நிலா உள்ள தொலைவு ___________
A) 3.78 x 106 km
B) 3.77 x 105 km
C) 3.79 x 105 km
D) 3.80 x 104 km
விளக்கம்: புவிபரப்பிலிருந்து நிலா உள்ள தொலைவு = 3.77 x 105 km
44. துணைக்கோளின் மொத்த ஆற்றல் அதன் இயக்க ஆற்றல் மற்றும்___________ ன் கூட்டுத்தொகையாகும்.
A) வேக ஆற்றல்
B) நிறை ஆற்றல்
C) நிலை ஆற்றல்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: துணைக்கோளின் மொத்த ஆற்றல் அதன் இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூட்டுத்தொகையாகும்.
45. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] துணைக்கோளானது புவியின் ஈர்ப்பு புலத்தின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது.
2] மிக அதிக தொலைவு உள்ளபோது துணைக்கோள் புவியுடன் பிணைக்கப்படவில்லை என்பதாகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: துணைக்கோளானது புவியின் ஈர்ப்பு புலத்தின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. மேலும் மிக அதிக தொலைவு உள்ளபோது துணைக்கோள் புவியுடன் பிணைக்கப்படவில்லை என்பதாகும்.
46. புவியின் நிறை = ___________
A) 6.02 x 10-24 kg
B) 6.02 x 1024 kg
C) 6.22 x 1025 kg
D) 6.22 x 10-25 kg
விளக்கம்: புவியின் நிறை = 6.02 x 1024 kg
47. நிலாவின் நிறை = ___________
A) 7.35 x 10-22 kg
B) 7.35 x 1022 kg
C) 7.34 x 1023 kg
D) 7.34 x 10-23 kg
விளக்கம்: நிலாவின் நிறை =7.35 x 1022 kg
48. நிலவுக்கும் புவிக்கும் இடையேயான தொலைவு =___________
A) 3.84 x 10-5 km
B) 3.84 x 105 km
C) 3.85 x 105 km
D) 3.85 x 10-5 km
விளக்கம்: நிலவுக்கும் புவிக்கும் இடையேயான தொலைவு =3.84 x 105 km
49. ஈர்ப்பியல் மாறிலி =___________
A) 6.67 x 1013 Nm2 / kg2
B) 6.67 x 10-11 Nm2 / kg2
C) 6.68 x 1012 Nm2 / kg2
D) 6.68 x 1014 Nm2 / kg2
விளக்கம்: ஈர்ப்பியல் மாறிலி =6.67 x 10-11Nm2 / kg2
50. புவியிலிருந்து பார்க்கும் போது நிலையாக இருப்பது போல தோன்றுவது ___________ஆகும்
A) புவி மாறும் துணைக்கோள்கள்
B) புவி எடை துணைக்கோள்
C) புவி நிலை துணைக்கோள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: புவியிலிருந்து பாரக்கும் போது நிலையாக இருப்பது போல தோன்றுவது புவி நிலை துணைக்கோள்கள் ஆகும்.
51. ___________ புவி நிலை துணைக்கோள்கள் ஆகும்.
A) இன்சாட்-1
B) இன்சாட்-A
C) இன்சாட்- B
D) இன்சாட்
விளக்கம்: இந்தியா செய்தி தொடர்புக்குப் பயன்படுத்தும் புவிநிலை துணைக்கோள்களான இன்சாட் (INSAT) வகை துணைக்கோள்கள் அடிப்படையில் புவி நிலைத் துணைக்கோள்களே.
52. புவியின் வட-தென் துருவங்கள் மேல் செல்லும் சுற்றுப்பாதையில் புவியினை சுற்றி வரும் இவ்வகை துணைக்கோள்கள் ___________ எனப்படுகின்றன.
A) புவி மாறும் துணைக்கோள்கள்
B) புவி எடை துணைக்கோள்
C) புவி நிலை துணைக்கோள்
D) துருவதுணைக்கோள்கள்
விளக்கம்: புவியின் வட-தென் துருவங்கள் மேல் செல்லும் சுற்றுப்பாதையில் புவியினை சுற்றி வரும் இவ்வகை துணைக்கோள்கள் துருவதுணைக்கோள்கள் எனப்படுகின்றன.
53. துருவ துணைக்கோள்களின் சுழற்சிக்காலம் ___________ நிமிடங்கள் ஆகும்.
A) 200
B) 300
C) 100
D) 400
விளக்கம்: துருவ துணைக்கோள்களின் சுழற்சிக்காலம் 100 நிமிடங்கள் ஆகும்.
54. பொது சார்பியல் தத்துவம்___________ ஆல் உருவாக்கப்பட்டது.
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
விளக்கம்: பொது சார்பியல் தத்துவம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது.
55. விண்மீனின் மறைவு பற்றிய கொள்கையினை ___________ உருவாக்கினார்.
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) சுப்பிரமணியன் சந்திரசேகர்
விளக்கம்: விண்மீனின் மறைவு பற்றிய கொள்கையினை சுப்பிரமணியன் சந்திரசேகர் உருவாக்கினார்.
56. சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசுபெற்ற வருடம்___________
A) 1980
B) 1989
C) 1981
D) 1983
விளக்கம்: சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசுபெற்ற வருடம் 1983 ஆகும்.
57. விண்மீன்களில் நடைபெறும் அயனியாக்கத்திற்கு உரிய சமன்பாட்டை கண்டுபுடித்தவர்___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) மேக்நாட் சாகா
D) சுப்பிரமணியன் சந்திரசேகர்
விளக்கம்: விண்மீன்களில் நடைபெறும் அயனியாக்கத்திற்கு உரிய சமன்பாட்டை கண்டுபுடித்தவர் மேக்நாட் சாகா.
58. விண்மீன்களை வகைப்படுத்த உதவும் சமன்பாடு ___________
A) சாகாவின் அலைநீளம் சமன்பாடு
B) சாகாவின் விண்மீன் சமன்பாடு
C) சாகாவின் அயனியாக்க சமன்பாடு
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: சாகாவின் அயனியாக்க சமன்பாடு விண்மீன்களை வகைப்படுத்த உதவுகிறது.
59. ராய்- சௌத்ரி சமன்பாடு உருவாக்கியவர்___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) அமல் குமார் சௌத்திரி
C) மேக்நாட் சாகா
D) சுப்பிரமணியன் சந்திரசேகர்
விளக்கம்: ராய்- சௌத்ரி சமன்பாடு உருவாக்கியவர் அமல் குமார் சௌத்திரி.
60. வானியல் மற்றும் வானியற்பியல் பற்றிய ஆர்வத்தை தூண்டும் நூல்கள் பல எழுதியுள்ளவர்___________
A) ஜெயந்த் வி நர்லிகர்
B) அமல் குமார் சௌத்திரி
C) மேக்நாட் சாகா
D) சுப்பிரமணியன் சந்திரசேகர்
விளக்கம்: வானியல் மற்றும் வானியற்பியல் பற்றிய ஆர்வத்தை தூண்டும் நூல்கள் பல ஜெயந்த் வி நர்லிகர் எழுதியுள்ளார்.
61. IUCAA ஆராய்ச்சி நிறுவனம் யாரால் ஆரம்பிக்கபட்டது
A) ஜெயந்த் வி நர்லிகர்
B) அமல் குமார் சௌத்திரி
C) மேக்நாட் சாகா
D) சுப்பிரமணியன் சந்திரசேகர்
விளக்கம்: ஜெயந்த் வி நர்லிகர் என்பவரால் IUCAA ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்கபட்டது.
62. IUCAA =
A) Inter University Centre for Astronomy and Astrophysics
B) Inter University Centre for Astronomy and Aerospace
C) Inter University Centre for Astrology and Aerospace
D) இவற்றில் எதுவுமில்லை
63. அச்சை பொருந்து சுழலும் பூமியின் சுழற்சியானது___________ பற்றி விளக்குகிறது.
A) நட்சத்திரங்களின் தோற்றம்
B) நட்சத்திரங்களின் சுழற்சி
C) தோற்ற சுழற்சி
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: அச்சை பொருந்து சுழலும் பூமியின் சுழற்சியானது நட்சத்திரங்களின் தோற்ற சுழற்சி பற்றி விளக்குகிறது.
64. கூற்று(A): துருவ விண்மீன்கள் நிலையானதாக தோன்றுகிறது.
காரணம்(R): புவியின் சுழற்சி அச்சுக்கு எதிராக அமைந்துள்ளது
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: புவியின் சுழற்சி அச்சுக்கு நேராக துருவ விண்மீன்கள் அமைந்துள்ளதால் அவ்வீண்மீன்கள் நிலையானதாக தோன்றுகிறது.
65. ___________ விண்மீன் துருவ விண்மீன் ஆகும்.
சிரஸ்
வேகா
அண்ட்ரெஸ்
போலாரிஸ்
விளக்கம்: போலாரிஸ் விண்மீன் துருவ விண்மீன் ஆகும்.
66. சூரிய ஒளிக்கதிர்களையும் மற்றும் நிழலினையும் பயன்படுத்தி புவியானது___________ சாய்ந்துள்ளது.
A) 23.4°
B) 23°
C) 23.5°
D) 22.5°
விளக்கம்: சூரிய ஒளிக்கதிர்களையும் மற்றும் நிழலினையும் பயன்படுத்தி புவியானது 23.5° சாய்ந்துள்ளது.
67. கூற்று(A): துருவ விண்மீனை மற்ற விண்மீன்கள் வடடப்பாதையில் சுற்றி வருவது போல தோன்றுகிறது.
காரணம்(R): புவியின் தற்சுழற்சி காரணமாகவே அவ்வாறு தோன்றுகிறது.
விளக்கம்: புவியின் தற்சுழற்சி காரணமாகவே துருவ விண்மீனை மற்ற விண்மீன்கள் வடடப்பாதையில் சுற்றி வருவது போல தோன்றுகிறது.
68. புவியில் பருவ காலங்கள் தோன்றுவது ஏன்?
A) சூரியனுக்கு அண்மையில் புவி உள்ளபோது
B) சூரியனுக்கு சேய்மையில் புவி உள்ளபோது
C) 23.5° சாய்வின் காரணமாக
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: புவியானது சூரியனை கோண சாய்வுடன் 23.5° சுற்றி வருவதாலயே பருவ காலங்கள் தோன்றுகின்றன.
69. முழு நிலவு நாளின் போது நிலவின் சுற்றுப்பாதையும் புவியின் சுற்றுப்பாதையும் ஒரே தளத்தில் அமைந்தால் ___________ தோன்றும்.
A) சூரிய கிரகணம்
B) சந்திர கிரகணம்
C) அமாவாசை
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: முழு நிலவு நாளின் போது நிலவின் சுற்றுப்பாதையும் புவியின் சுற்றுப்பாதையும் ஒரே தளத்தில் அமைந்தால் சந்திரகிரகணம் தோன்றும்.
70. நிலாவின் சுற்று பாதையானது புவியின் சுற்றுப்பாதை தளத்திலிருந்து ___________ சாய்ந்து காணப்படுகிறது.
A) 6°
B) 7°
C) 4°
D) 5°
விளக்கம்: நிலாவின் சுற்று பாதையானது புவியின் சுற்றுப்பாதை தளத்திலிருந்து 5° சாய்ந்து காணப்படுகிறது.
71. முழு சந்திரகிரகணம் நடைபெற்ற நாள்
A) 2018 ஜனவரி 30
B) 2018 ஜனவரி 31
C) 2017 ஜனவரி 31
D) 2017 ஜனவரி 30
72. புவியின் கருநிழல் பகுதியில் நிலா உள்ளபோது___________ நிறத்தில் நிலா தெரியும்.
A) கருப்பு
B) செந்நிறம்
C) சிவப்பு
D) மஞ்சள்
விளக்கம்: புவியின் கருநிழல் பகுதியில் நிலா உள்ளபோது சிவப்பு நிறத்தில் நிலா தெரியும்.
73. புவியின் கருநிழல் பகுதியினை விட்டு நிலா வெளியேறிய உடனே அது ___________ போல தோன்றும்.
A) முழு நிலவு
B) பிறைநிலவு
C) அரை நிலவு
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: புவியின் கருநிழல் பகுதியினை விட்டு நிலா வெளியேறிய உடனே அது பிறைநிலவு போல தோன்றும்.
74. புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவினை கண்டறிந்தவர்___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) ஹிப்பார்க்கஸ்
விளக்கம்: ஹிப்பார்க்கஸ் புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவினை கண்டறிந்தார்.
75. புவியின் ஆரத்தை முதன்முதலில் அளந்தவர் ___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) எரட்டோஸ்தனிஸ்
விளக்கம்: எரட்டோஸ்தனிஸ் புவியின் ஆரத்தை முதன்முதலில் அளந்தார்.
76. புதன் மற்றும் ___________ கோள்கள் உள் கோள்கள் எனப்படுகின்றன.
A) செவ்வாய்
B) வியாழன்
C) சனி
D) வெள்ளி
விளக்கம்: புதன் மற்றும் வெள்ளி கோள்கள் உள் கோள்கள் எனப்படுகின்றன.
77. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கும் வெள்ளிக் கோளுக்கும் இடையே உள்ள அதிகபட்ச கோணம்___________
A) 45°
B) 47°
C) 46°
D) 48°
விளக்கம்: பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கும் வெள்ளிக் கோளுக்கும் இடையே உள்ள அதிகபட்ச கோணம் 46° ஆகும்.
78. புதன் கோளுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள அதிகபட்ச கோணம்___________
A) 225°
B) 22.5°
C) 235°
D) 23.5°
விளக்கம்: புதன் கோளுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள அதிகபட்ச கோணம் 22.5° ஆகும்.
79. சூரியனுக்கும், வெள்ளிக்கும் உள்ள கோட்டுக்கும், வெள்ளிக்கும் பூமிக்கும் உள்ள கோட்டுக்கும் இடையே உள்ள கோணம்___________
A) 100°
B) 80°
C) 90°
D) 70°
விளக்கம்: சூரியனுக்கும், வெள்ளிக்கும் உள்ள கோட்டுக்கும், வெள்ளிக்கும் பூமிக்கும் உள்ள கோட்டுக்கும் இடையே உள்ள கோணம் 90°ஆகும்.
80. வெள்ளி சூரியனிலிருந்து___________ தொலைவில் உள்ளது.
A) 0.78 AU
B) 0.79 AU
C) 0.77 AU
D) 0.75 AU
விளக்கம்: வெள்ளி சூரியனிலிருந்து 0.77 AU தொலைவில் உள்ளது.
81. புதனுக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு___________
A) 0.48 AU
B) 0.39 AU
C) 0.38 AU
D) 0.35 AU
விளக்கம்: புதனுக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 0.38 AU ஆகும்.
82. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புதன் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 0.387 AU
2] வெள்ளி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 0.723 AU
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புதன் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 0.389 AU. வெள்ளி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 0.724 AU ஆகும்.
83. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] புவி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 1.000 AU
2] செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 1.524 AU
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புவி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 1.000 AU. செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 1.524 AU ஆகும்.
84. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] வியாழன் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 5.201 AU
2] சனி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 9.511 AU
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: வியாழன் கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 5.200 AU. சனி கோளின் சுற்றுப்பாதையின் ஆரம் 9.510 AU ஆகும்.
85. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] வியாழன் கோளின் சுற்றுக்காலம் 4332.62 நாட்கள்
2] சனி கோளின் சுற்றுக்காலம் 10,759.20 நாட்கள்
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: வியாழன் கோளின் சுற்றுக்காலம் 4332.62 நாட்கள். சனி கோளின் சுற்றுக்காலம் 10,759.20 நாட்கள் ஆகும்.
86. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புவி கோளின் சுற்றுக்காலம் 365.26 நாட்கள்
2] செவ்வாய் கோளின் சுற்றுக்காலம் 686.97 நாட்கள்
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புவி கோளின் சுற்றுக்காலம் 365.25 நாட்கள். செவ்வாய் கோளின் சுற்றுக்காலம் 686.98 நாட்கள் ஆகும்.
87. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புதன் கோளின் சுற்றுக்காலம் 87.77 நாட்கள்
2] வெள்ளி கோளின் சுற்றுக்காலம் 224.70 நாட்கள்
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புதன் கோளின் சுற்றுக்காலம் 87.77 நாட்கள். வெள்ளி கோளின் சுற்றுக்காலம் 224.70 நாட்கள் ஆகும்.
88. பெருவட்டத்தின் மேல் அமையும் சிறு வட்டச்சுழற்சி என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர்___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) தாலமி
விளக்கம்: தாலமி இந்த புவிமையக் கோட்பாட்டில் பெருவட்டத்தின் மேல் அமையும் சிறு வட்டச்சுழற்சி என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார்.
89. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] ஈர்ப்பு புலம் ஸ்கேலார் அளவாகும்.
2] தன்னிலை ஆற்றல் வெக்டர் அளவாகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஈர்ப்பு புலம் வெக்டர் அளவாகும். தன்னிலை ஆற்றல் ஸ்கேலார் அளவாகும்.
90. தன்னிலை ஆற்றல் அலகு___________
A) J/KG
B) j/Kg
C) J/kg
D) J/Kg
விளக்கம்: தன்னிலை ஆற்றல் அலகு = J/kg
91. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] ஈர்ப்பு விசை வெக்டர் அளவாகும்.
2] ஈர்ப்பு நிலை ஆற்றல் ஸ்கேலார் அளவாகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஈர்ப்பு விசை வெக்டர் அளவாகும். ஈர்ப்பு நிலை ஆற்றல் ஸ்கேலார் அளவாகும்.
92. ___________ அளவுகளை பயன்படுத்தி துகள்களின் இயக்கத்தை பகுத்தாய்வு செய்தல் எளிதாகும்.
A) வெக்டர்
B) ஸ்கேலார்
C) மோலார்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: வெக்டர் அளவுகளைவிட ஸ்கேலார் அளவுகளை பயன்படுத்தி துகள்களின் இயக்கத்தை பகுத்தாய்வு செய்தல் எளிதாகும்.
93. நவீன இயற்பியல் கோட்பாடுகளில் ___________ முக்கிய பங்கு வகிக்கிறது.
A) ஈர்ப்பு நிலை விசை
B) ஈர்ப்பு நிலை ஆற்றல்
C) ஈர்ப்பு தன்னிலை விசை
D) ஈர்ப்பு தன்னிலை ஆற்றல்
விளக்கம்: நவீன இயற்பியல் கோட்பாடுகளில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
94. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புதன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 5.79
2] வெள்ளி கோளின் அரைநெட்டச்சு நீளம் 10.8
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புதன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 5.79. வெள்ளி கோளின் அரைநெட்டச்சு நீளம் 10.8 ஆகும்.
95. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] புவி கோளின் அரைநெட்டச்சு நீளம் 15.1
2] செவ்வாய் கோளின் அரைநெட்டச்சு நீளம் 22.8
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: புவி கோளின் அரைநெட்டச்சு நீளம் 15.0. செவ்வாய் கோளின் அரைநெட்டச்சு நீளம் 22.8 ஆகும்.
96. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] வியாழன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 77.9
2] சனி கோளின் அரைநெட்டச்சு நீளம் 144
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: வியாழன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 77.8. சனி கோளின் அரைநெட்டச்சு நீளம் 143 ஆகும்.
97. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] யுரேனஸ் கோளின் அரைநெட்டச்சு நீளம் 287
2] நெப்டியூன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 450
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: யுரேனஸ் கோளின் அரைநெட்டச்சு நீளம் 287. நெப்டியூன் கோளின் அரைநெட்டச்சு நீளம் 450 ஆகும்.
98. முறுக்கு தராசு மூலம் G ன் மதிப்பை கண்டறிந்தவர்___________
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) ஹென்றி காவன்டிஷ்
விளக்கம்: 1798 ல் ஹென்றி காவன்டிஷ் முறுக்கு தராசு மூலம் G ன் மதிப்பை கண்டறிந்தார்.
99. ஈர்ப்பு புலச்செறிவு ஒரு ___________ அளவாகும்
A) ஸ்கேலார்
B) வெக்டர்
C) மோலார்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: ஈர்ப்பு புலச்செறிவு ஒரு வெக்டார் அளவாகும்.
100. ஈர்ப்பு புலத்தின் அலகு___________
A) நியூட்டன்/ கிராம்
B) நியூட்டன்/ மீட்டர்
C) மீட்டர்/ செகண்ட்
D) நியூட்டன்/கிலோகிராம்
விளக்கம்: ஈர்ப்பு புலத்தின் அலகு நியூட்டன்/கிலோகிராம்.
101. மின்னூட்டங்கள் இயங்குகின்ற முறையை புரிந்து கொள்ள ___________ தவிர்க்க முடியாது.ஒன்றாக விளங்குகிறது.
A) ஈர்ப்பு புலம்
B) ஈர்ப்பு விசை
C) ஈர்ப்பு செறிவு
D) ஈர்ப்பு கொள்கை
விளக்கம்: மின்னூட்டங்கள் இயங்குகின்ற முறையை புரிந்து கொள்ள புலக்கொள்கையானது தவிர்க்க முடியாது.ஒன்றாக விளங்குகிறது.
102. ஈர்ப்பு நிலை ஆற்றல் அலகு ___________
A) ஜூல்
B) நியூட்டன்
C) கிலோகிராம்
D) மீட்டர்
விளக்கம்: ஈர்ப்பு நிலை ஆற்றல் அலகு ஜூல்.
103. ஈர்ப்பு நிலை ஆற்றலானது ___________ அவற்றுக்கு இடையேயான தொலைவினையும் சார்ந்தது.
A) எடை
B) நிறை
C) வேகம்
D) திசைவேகம்
விளக்கம்: ஈர்ப்பு நிலை ஆற்றலானது நிறைகளையும் அவற்றுக்கு இடையேயான தொலைவினையும் சார்ந்தது.
104. பின்நோக்கிச் செல்வது போல தோன்றும் இயக்கமானது கோள்களுக்குக்கிடையேயான சார்பு இயக்கத்தால் ஏற்படுவது என்பதை___________ மாதிரி விளக்கியது.
A) நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
B) ஜோகன் கெப்ளர்
C) கலிலியோ
D) ஹென்றி காவன்டிஷ்
விளக்கம்: பின்நோக்கிச் செல்வது போல தோன்றும் இயக்கமானது கோள்களுக்குக்கிடையேயான சார்பு இயக்கத்தால் ஏற்படுவது என்பதை கோபர்நிக்கஸின் மாதிரி விளக்கியது.
105. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
1] துணைக்கோளின் ஆற்றல் எதிர்க்குறி மதிப்பு உடையது.
2] இது துணைக்கோளானது புவியின் ஈர்ப்பியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: துணைக்கோளின் ஆற்றல் எதிர்க்குறி மதிப்பு உடையது. இது துணைக்கோளானது புவியின் ஈர்ப்பியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது.
106. கோளின் நிலைவெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குததாக அமைவது
A) அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
B) அனைத்து புள்ளிகளிலும்
C) அண்மை நிலையில் மட்டும்
D) எப்புள்ளியிலும் அல்ல
விளக்கம்: கோளின் நிலைவெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குததாக அமைவது அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்.
107. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்குக்கிடையேயான ஈர்ப்பியல் விசை
A) மாறாது
B) 2 மடங்கு அதிகரிக்கும்
C) 4 மடங்கு அதிகரிக்கும்
D) 2 மடங்கு குறையும்
விளக்கம்: திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்குக்கிடையேயான ஈர்ப்பியல் விசை 4 மடங்கு அதிகரிக்கும்.
108. புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல”
A) சுற்றுப்பாதையின் ஆரம்
B) துணைக்கோளின் நிறை
C) சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும்
D) சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல
விளக்கம்: புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் துணைக்கோளின் நிறையை சார்ந்தது அல்ல.
109. புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல்
A) நிலை ஆற்றலுக்குச் சமம்
B) நிலை ஆற்றலை விடக் குறைவு
C) நிலை ஆற்றலை விட அதிகம்
D) சுழி
விளக்கம்: புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் நிலை ஆற்றலை விடக் குறைவு.
110. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம்
A) மாறாது
B) 2 மடங்காகும்
C) பாதியாகும்
D) 4 மடங்காகும்
விளக்கம்: ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம்2 மடங்காகும்.
111. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு.
A) 98 N
B) சுழி
C) 49 N
D) 9.8 N
112. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால், அவரது எடையானது
A) அதிகரிக்கும்
B) குறையும்
C) மாறாது
D) அதிகரித்து பின்பு குறையும்
விளக்கம்: சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால், அவரது எடையானது அதிகரிக்கும்.
113. புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு
A) ஆண்டு முழுவதும் மாறாது
B) ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும்
C) ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும்.
D) பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும்.
விளக்கம்: புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும்.
114. புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g
A) மாறாது
B) g/2
C) 2g
D) 4g
விளக்கம்: புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g = g/2.
115. புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை
A) எப்பொழுதும் சுழி
B) எப்பொழுதும் நேர் குறி உடையது
C) நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்
D) எப்பொழுதும் எதிர்குறி உடையது
விளக்கம்: புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்.
116. புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல்
A) எப்பொழுதும் நேர்குறி உடையது
B) எப்பொழுதும் எதிர்குறி உடையது
C) நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்
D) எப்பொழுதும் சுழி
விளக்கம்: புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் எப்பொழுதும் எதிர்குறி உடையது.
117. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது___________ மாறா விதிப்படி அமைந்துள்ளது.
A) நேர்கோட்டு உந்தம்
B) கோண உந்தம்
C) ஆற்றல்
D) இயக்க ஆற்றல்
விளக்கம்: கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது கோண உந்தம் மாறா விதிப்படி அமைந்துள்ளது.
118. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்
A) 64.5
B) 1032
C) 182.5
D) 730
விளக்கம்: புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது 1032 நாட்கள்.
11th Science Lesson 6 Questions in Tamil
6] வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
1. உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான வெப்பநிலையை தரும் ஆற்றல் மூலம்_____________
A) சந்திரன்
B) நெபுலா
C) சூரியன்
D) நிலவு
விளக்கம்: அனைத்து உயிரினங்களும் சரிவர செயல்படுவதற்கு அவற்றின் உடல் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் பராமரித்தல் அவசியமாகும். உண்மையில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான வெப்பநிலையை சூரியனே தருகிறது.
2. கூற்று (i): இயற்கையை புரிந்து கொள்வதற்கு மிகவும் அடிப்படையானது வெப்பநிலை மற்றும் வெப்பத்தைப் பற்றிய புரிதலாகும்.
கூற்று (ii): வெப்பநிலை, வெப்பம் போன்றவற்றை விளக்கும் இயற்பயிலின் ஒரு பிரிவே வெப்ப நிலையியல் ஆகும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: இயற்கையை புரிந்து கொள்வதற்கு மிகவும் அடிப்படையானது வெப்பநிலை மற்றும் வெப்பத்தைப் பற்றிய புரிதலாகும். வெப்பநிலை, வெப்பம் போன்றவற்றை விளக்கும் இயற்பயிலின் ஒரு பிரிவே வெப்ப இயக்கவியல் ஆகும்.
3. பொருத்துக:
A) வெப்பம் – 1. K
B) வெப்பநிலை – 2. J
C) தன்வெப்ப ஏற்புத்திறன் – 3. J kg-1
D) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன் – 4. J kg-1 K-1
விளக்கம்:
A) 2 1 4 3
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 3 4 1 2
விளக்கம்:
A) வெப்பம் – 1. J
B) வெப்பநிலை – 2. K
C) தன்வெப்ப ஏற்புத்திறன் – 3. J kg-1 K-1
D) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன் – 4. J kg-1
4. வெப்ப இயக்கவியல் அலகிலும், வாயுக்களின் இயக்கவியற் கொள்கை அலகிலும், நாம் வெப்பநிலையை கணக்கீடு செய்யும்போது பயன்படுத்த வேண்டிய அலகு____________
A) செல்சியஸ்
B) ஃபாரன்ஹீட்
C) செல்சியஸ்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: வெப்ப இயக்கவியல் அலகிலும், வாயுக்களின் இயக்கவியற் கொள்கை அலகிலும், நாம் எந்த கணக்கீடு செய்யும்போதும், வெப்பநிலையை கெல்வின் அலகில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடைமுறையில் செல்சியஸ் (0C) மற்றும் ஃபாரன்ஹீட் (0F) என்ற அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. பொருளின் வெப்பநிலையை அளவிடப் பயன்படும் கருவி____________
A) தெர்மோமீட்டர்
B) பாதோம்மீட்டர்
C) ஹைக்ரோமீட்டர்
D) ஸ்பீடோமீட்டர்
6. பாயில் விதிப்படி மாறா வெப்பநிலையிலுள்ள வாயு ஒன்றின் அழுத்தம், அதன் பருமனுக்கு_____________விகிதத்தில் இருக்கும்.
A) நேர்
B) எதிர்
C) சம
D) அறிய இயலாது
விளக்கம்: மாறா வெப்பநிலையிலுள்ள வாயு ஒன்றின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்விகிதத்திலிருக்கும். இதனை இராபர்ட் பாயில் என்பவர் கண்டறிந்தார். எனவே இவ்விதி பாயில்விதி(1627 – 1691) என அழைக்கப்படுகிறது.
7. மாறா அழுத்ததிலுள்ள வாயு ஒன்றின் பருமன், அதன் வெப்பநிலைக்கு நேர்த்தகவிலிருக்கும் என்பதைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர்____________
A) இராபர்ட் பாயில்
B) ஜாக்ஸ் சார்லஸ்
C) போல்ட்ஸ்மென்
D) ஜேம்ஸ் பிரிஸ்கோட் ஜீல்
விளக்கம்: மாறா அழுத்தத்திலுள்ள வாயு ஒன்றின் பருமன், அதன் வெப்பநிலைக்கு (கெல்வின்) நேர்த்தகவிலிருக்கும். இதனை ஜாக்ஸ் சார்லஸ் (1743 – 1823) என்பவர் கண்டறிந்தார். எனவே இவ்விதி சார்லஸ்விதி என்று அழைக்கப்படுகிறது.
8. அவகட்ரோ எண் என்பது____________
A) 6.023 × 1023mol-1
B) 6.023 × 10-23mol-1
C) 5.023 × 1023mol-1
D) 6.023 × 1028mol-1
9. நல்லியல்பு வாயுச் சமன்பாட்டை கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு எழுதலாம்.
A) PV = NkT
B) PV = µRT
C) AB இரண்டும்
D) A மட்டும்
10. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) செல்சியஸ் அளவை கெல்வின் முறைக்கு மாற்ற = K=0C + 273.15
2) பாரன்ஹீட் அளவை கெல்வின் முறைக்கு மாற்ற = K= (0F + 459.67) ÷ 1.8
3) செல்சியஸ் அளவை பாரன்ஹீட் முறைக்கு மாற்ற = 0F=(1.8 × 0C) + 32
4) பாரன்ஹீட் அளவை செல்சியஸ் முறைக்கு மாற்ற = 0C=(0F – 32)÷ 32
A) 1 2 மட்டும் சரி
B) 1 3 மட்டும் சரி
C) 1 2 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்:
1) செல்சியஸ் அளவை கெல்வின் முறைக்கு மாற்ற = K=0C + 273.15
2) பாரன்ஹீட் அளவை கெல்வின் முறைக்கு மாற்ற = K= (0F + 459.67) ÷ 1.8
3) செல்சியஸ் அளவை பாரன்ஹீட் முறைக்கு மாற்ற = 0F=(1.8 × 0C) + 32
4) பாரன்ஹீட் அளவை செல்சியஸ் முறைக்கு மாற்ற = 0C=(0F – 32)÷ 1.8
11. கீழ்க்கணடவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
A) கெல்வின் முறையிலிருந்து செல்சியஸாக மாற்ற = 0C=K-273.15
B) கெல்வின் முறையிலிருந்து பாரன்ஹீட்டாக மாற்ற = 0F=(K × 1.8)-459.67
C) பாரன்ஹீட் முறையிலிருந்து செல்சியஸாக மாற்ற = 0C=(0F-1.8)÷32
D) கெல்வின் முறையிலிருந்து பாரன்ஹீட்டாக மாற்ற = 0F=(1.8 × 0C) 32
விளக்கம்:
A) கெல்வின் முறையிலிருந்து செல்சியஸாக மாற்ற = 0C=K-273.15
B) கெல்வின் முறையிலிருந்து பாரன்ஹீட்டாக மாற்ற = 0F=(K × 1.8)-459.67
C) பாரன்ஹீட் முறையிலிருந்து செல்சியஸாக மாற்ற = 0C=(0F-32)÷1.8
D) கெல்வின் முறையிலிருந்து பாரன்ஹீட்டாக மாற்ற = 0F=(1.8 × 0C) 32
12. ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின் அல்லது 10C உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவு____________
A) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்
B) தன் வெப்ப ஏற்புத்திறன்
C) ஒரு கெல்வின்
D) ஒரு மோல்
விளக்கம்: ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு கெல்வின் அல்லது 10C உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவே, தன்வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
13. தன்வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு __________
A) J kg-1
B) J kg-1 K-1
C) J kg-1 K-2
D)J kg-2
14. பொருத்துக:
பொருள் தன்வெப்ப ஏற்புத்திறன் (J kg-1 K-1)
A) காற்று – 1. (390)
B) ஈயம் – 2. (130)
C) தாமிரம் – 3. (1005)
D) இரும்பு(எஃகு) – 4. (450)
A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 3 1 2 4
D) 4 3 2 1
விளக்கம்:
பொருள் தன்வெப்ப ஏற்புத்திறன் (J kg-1 K-1)
A) காற்று – 1. (1005)
B) ஈயம் – 2. (130)
C) தாமிரம் – 3. (390)
D) இரும்பு(எஃகு) – 4. (450)
15. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
பொருள் தன்வெப்ப ஏற்புத்திறன் (J kg-1 K-1)
A) கண்ணாடி – 840
B) அலுமினியம் – 9000
C) மனித உடல் – 3470
D) நீர் – 4186
விளக்கம்:
A) கண்ணாடி – 840
B) அலுமினியம் – 900
C) மனித உடல் – 3470
D) நீர் – 4186
16. கூற்று (i): ஒரே நிறையுடைய இரண்டு வெவ்வேறு பொருள்களை ஒரே வீதத்தில் வெப்பபடுத்தும்போது, குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறனுடைய பொருளின் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்.
கூற்று (ii): ஒரே நிறையுடைய இரண்டு வெவ்வேறு பொருள்களை ஒரே வீதத்தில் குளிர்விக்கும்போது குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறனுடைய பொருள் வேகமாக குளிர்வடையும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
17. கீழ்க்கண்டவற்றுள் உள்ளுரை வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு_______________
A) J kg-1
B) J kg-1 K-1
C) J kg-1 K-2
D)J kg-2
18. வெப்பநிலை மாற்றத்தினால் பொருள்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கு_________என்று பெயர்.
A) வெப்ப பிளவு
B) வெப்ப விரிவு
C) வெப்ப குணகம்
D) கண்டறிய இயலாது
விளக்கம்: வெப்பநிலை மாற்றத்தினால் பொருள்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றமே வெப்ப விரிவு எனப்படும்.
19. பொருள்களின் மூன்று நிலைகளும் வெப்பப்படுத்தும்போது ஏற்படும் மாற்றம்______________
A) விரிவடையும்
B) சுருங்கும்
C) கெட்டித்தன்மையாகும்
D) உடையும் தன்மை பெறும்
20. கீழ்க்கண்டக்கூற்றுகளை கவனி:
1) திடப்பொருளொன்றை வெப்படுத்தும்போது அதன் அணுக்கள் அவற்றின் சமநிலைப் புள்ளியைப் பொருத்து வேகமாக அதிர்வடைகின்றன.
2) மற்ற பொருள்களுடன் ஒப்பிடும்போது திடப்பொருள்களின் ஏற்படும் மாற்றம் அதிகமாகும்.
A) 1 சரி,2 தவறு
B) 1 தவறு,2 சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: திடப்பொருளொன்றை வெப்படுத்தும்போது அதன் அணுக்கள் அவற்றின் சமநிலைப் புள்ளியைப் பொருத்து வேகமாக அதிர்வடைகின்றன. மற்ற பொருள்களுடன் ஒப்பிடும்போது திடப்பொருள்களின் ஏற்படும் மாற்றம் குறைவானதாகும்.
21. இரயில் வண்டிகளின் இருப்புபாதைகளில் சில இடங்களில் சிறிய இடைவெளி விடப்பட்டிருப்பதற்கான காரணம்.
A) கோடை காலங்களில் இருப்புப் பாதை விரிவடையும்
B) குளிர் காலங்களில் இருப்புப் பாதை விரிவடையும்
C) கோடை காலங்களில் இருப்புப் பாதை சுருங்கும்
D) குளிர் காலங்களில் இருப்புப் பாதை உடையும்
விளக்கம்: இரயில் வண்டிகளின் இருப்புப்பாதைகளில் சில இடங்களில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும். ஏனெனில் கோடை காலங்களில் இருப்புப்பாதை விரிவடையும். அவ்வாறு வெப்பநிலை மாற்றங்களின்போது எளிதாக விரிவடையவும், சுருங்கவும் ஏற்ற வகையில் பாலங்களிலும், இருப்புப்பாதைகளிலும் விரிவடையும் இணைப்புகள் உள்ளவாறு காணப்படும்.
22. கூற்று: திரவங்களின் மூலக்கூறிடை விசை, திடப்பொருள்களின் மூலக்கூறிடை விசையை விடக் குறைவாக இருக்கும்.
காரணம்: அவை திடப்பொருள்களைவிட அதிகமாக விரிவடையும். இந்தப் பண்பின் அடிப்படையில்தான் பாதரச வெப்பநிலைமானி செயல்படுகிறது.
A) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.
B) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
23. வெப்பநிலை உயர்வால் பொருள்களின் பரிமாணத்தில் ஏற்படும் அதிகரிப்பு___________
A) வெப்ப பிளவு
B) வெப்ப விரிவு
C) வெப்ப குணகம்
D) கண்டறிய இயலாது
விளக்கம்: வெப்பநிலை உயர்வால் பொருள்களின் பரிமாணத்தில் ஏற்படும் அதிகரிப்பே வெப்பவிரிவு எனப்படும்.
24. வெப்ப விரிவு ஏற்படுவதனால் பொருள்களில் கீழ்க்கண்ட எந்த பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறது.
A) வடிவம்
B) பரப்பு
C) பருமன்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: வெப்பநிலை மாற்றத்தினால் பொருள்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றமே வெப்ப விரிவு எனப்படும்.
25. ஈபில் டவர் கீழ்க்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது.
A) அமெரிக்கா
B) பிரான்ஸ்
C) ஜப்பான்
D) இங்கிலாந்து
26. வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது பொருள்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றமடைவும் நிகழ்வு__________
A) நிலை மாற்றம்
B) வெப்ப மாற்றம்
C) இயக்க மாற்றம்
D) குளிர் மாற்றம்
27. பொருளானது திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு________
A) ஆவியாதல்
B) உருகுதல்
C) உறைதல்
D) சுருங்குதல்
28. பொருத்துக:
A) ஆவியாதல் – 1. திடநிலை →வாயு
B) பதங்கமாதல் – 2. திரவநிலை →வாயு
C) உறைதல் – 3. வாயுநிலை →திரவ
D) சுருங்குதல் – 4. திரவநிலை →திட
A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 3 1 2 4
D) 2 1 4 3
விளக்கம்:
A) ஆவியாதல் – 1. திரவநிலை →வாயு
B) பதங்கமாதல் – 2. திடநிலை →வாயு
C) உறைதல் – 3. திரவநிலை →திட
D) சுருங்குதல் – 4. வாயுநிலை →திரவ
29. போல்ட்ஸ்மென் மாறிலி___________
A) 1.381 × 10-23 JK-1
B) 2.381 × 10-23 JK-1
C) 4.381 × 10-23 JK-1
D) 1.381 × 10-28 JK-1
30. ஓரலகு நிறையுடைய பொருளின் நிலையை மாற்றுவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் ஆற்றலின் அளவு அப்பொருளின்___________
A) வெப்ப ஏற்புத்திறன்
B) தன்வெப்ப ஏற்புத்திறன்
C) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்
D) ஒரு கெல்வின்
விளக்கம்: ஓரலகு நிறையுடைய பொருளின் நிலையை மாற்றுவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் ஆற்றலின் அளவே, பொருளின் உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
31. நிலைமாற்றத்தின்போது வெப்பத்தைக் கொடுக்கவோ அல்லது நீக்கவோ நேரும்போது அதன் வெப்பநிலை_____________
A) குறையும்
B) மாறாது
C) அதிகரிக்கும்
D) மாற்றமடையும்
32. திட – திரவ நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பமானது___________என அழைக்கப்படும்.
A) ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
B) பதங்கமாதலின் உள்ளுறை வெப்பம்
C) உருகுதலின் உள்ளுறை வெப்பம்
D) உறைதலின் உள்ளுறை வெப்பம்
விளக்கம்: திட – திரவ நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பம், உருகுதலின் உள்ளுறை வெப்பம் என அழைக்கப்படும்.
33. திரவ – வாயு நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பமானது_________என அழைக்கப்படும்.
A) ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
B) பதங்கமாதலின் உள்ளுறை வெப்பம்
C) உருகுதலின் உள்ளுறை வெப்பம்
D) உறைதலின் உள்ளுறை வெப்பம்
விளக்கம்: திரவ – வாயு நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பம், ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என அழைக்கப்படும்.
34 திட – வாயு நிலை மாற்றத்திற்கான உள்ளுறை வெப்பமானது________என அழைக்கப்படும்.
A) ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
B) பதங்கமாதலின் உள்ளுறை வெப்பம்
C) உருகுதலின் உள்ளுறை வெப்பம்
D) உறைதலின் உள்ளுறை வெப்பம்
விளக்கம்: திட – வாயு நிலை மாற்றத்திற்கான உள்ளுறைவெப்பம், பதங்கமாதலின் உள்ளுறை வெப்பம் என அழைக்கப்படும்.
35. கூற்று (i): கொடுக்கப்பட்ட பொருளொன்றின் மூன்று நிலைகளும் வெப்ப இயக்கச் சமநிலையில் உள்ளபோது, அப்பொருளின் வெப்பநிலை மற்றும் பருமனே பொருளின் முப்புள்ளி என அழைக்கப்படுகிறது.
கூற்று (ii): நீரின் முப்புள்ளி 273.1K மற்றும் பகுதி ஆவி அழுத்தம் 611.657 பாஸ்கலாகும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: கொடுக்கப்பட்ட பொருளொன்றின் மூன்று நிலைகளும் வெப்ப இயக்கச் சமநிலையில் உள்ளபோது, அப்பொருளின் வெப்பநிலை மற்றும் அழுத்தமே பொருளின் முப்புள்ளி என அழைக்கப்படுகிறது. நீரின் முப்புள்ளி 273.1K மற்றும் பகுதி ஆவி அழுத்தம் 611.657 பாஸ்கலாகும்.
36. வெப்ப மாற்றம் கீழ்க்கண்ட எத்தனை வழிகளில் நடைபெறுகிறது.
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
விளக்கம்: வெப்ப மாற்றம் மூன்று வழிகளில் நடைபெறும் அவை வெப்பக்கடத்தல், வெப்பச் சலனம் மற்றும் வெப்பக்கதிர்வீச்சு ஆகும்.
37. கூற்று (i): வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக பொருள்களுக்கிடையே நேரடியாக வெப்பமாற்றம் ஏற்படும் நிகழ்ச்சிக்கு வெப்பக்கடத்தல் என்று பெயர்.
கூற்று (ii): வெப்பத்தை எளிதாகத் தன்வழியே கடந்துபோக அனுமதிக்கும் பொருள்களுக்கு வெப்பஏற்பிகள் என்று பெயர்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக பொருள்களுக்கிடையே நேரடியாக வெப்பமாற்றம் ஏற்படும் நிகழ்ச்சிக்கு வெப்பக்கடத்தல் என்று பெயர். வெப்பத்தை எளிதாகத் தன்வழியே கடந்துபோக அனுமதிக்கும் பொருள்களுக்கு வெப்பகடத்திகள் என்று பெயர்.
38. மாறாநிலை நிபந்தனையில் ஓரலகு வெப்பநிலை வேறுபாட்டில், ஓரலகு தடிமன் கொண்ட பொருளின் வழியே ஓரலகு பரப்பிற்குச் செங்குத்தாக உள்ள திசையில் கடத்தப்படும் வெப்பத்தின் அளவு________
A) வெப்ப ஏற்புத்திறன்
B) தன்வெப்ப ஏற்புத்திறன்
C) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்
D) வெப்பக்கடத்துத்திறன்
விளக்கம்: மாறாநிலை நிபந்தனையில் ஓரலகு வெப்பநிலை வேறுபாட்டில், ஓரலகு தடிமன் கொண்ட பொருளின் வழியே ஓரலகு பரப்பிற்குச் செங்குத்தாக உள்ள திசையில் கடத்தப்படும் வெப்பத்தின் அளவே, பொருளின் வெப்பக்கடத்துதிறன் என அழைக்கப்படுகிறது.
39. வெப்பக் கடத்துத்திறனின் SIஅலகு____________
A) J s-1 m-1 K-1
B) W m-1 K-1
C) A B இரண்டும்
D) A மட்டும்
40. பொருத்துக:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) வைரம் – 1. (420)
B) வெள்ளி – 2. (2300)
C) தாமிரம் – 3. (380)
D) அலுமினியம் – 4. (200)
A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 3 1 2 4
D) 2 1 3 4
விளக்கம்:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) வைரம் – 1. (2300)
B) வெள்ளி – 2. (420)
C) தாமிரம் – 3. (380)
D) அலுமினியம் – 4. (200)
41. பொருத்துக:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) எஃகு – 1. (0.2)
B) பனிக்கட்டி – 2. (0.84)
C) கண்ணாடி – 3. (2)
D) மனிதனின் திசு – 4. (40)
A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 4 3 2 1
D) 2 1 3 4
விளக்கம்:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) எஃகு – 1. (40)
B) பனிக்கட்டி – 2. (2)
C) கண்ணாடி – 3. (0.84)
D) மனிதனின் திசு – 4. (0.2)
42. பொருத்துக:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) செங்கல் – 1. (0.17)
B) மரக்கட்டை – 2. (0.84)
C) ஹீலியம் – 3. (0.042)
D) மென்மையான இரப்பர் – 4. (0.152)
A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 4 3 2 1
D) 2 1 4 3
விளக்கம்:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
A) செங்கல் – 1. (0.84)
B) மரக்கட்டை – 2. (0.17)
C) ஹீலியம் – 3. (0.152)
D) மென்மையான இரப்பர் – 4. (0.042)
43. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
1) தண்ணீர் – 0.023
2) காற்று – 0.56
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) இரண்டும் தவறு
D) இரண்டும் சரி
விளக்கம்:
பொருள் வெப்பக்கடத்துத்திறன் (W m-1 K-1)
1) தண்ணீர் – 0.56
2) காற்று – 0.023
44. கீழ்க்கண்டவற்றுள் உயர்ந்த வெப்பக்கடத்துதிறனைப் பெற்றுள்ள உலோகம்____________
A) வெள்ளி
B) அலுமினியம்
C) இரும்பு
D) AB இரண்டும்
விளக்கம்: வெள்ளி மற்றும் அலுமினியம் உயர்ந்த வெப்பக்கடத்துத்திறனைப் பெற்றுள்ளதால் அவை சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றன.
45. கீழ்க்கண்டவற்றுள் தவறானக் கூற்றைக் கண்டறி:
A) திரவங்கள் மற்றும் வாயுக்கள் போன்ற பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகள் உண்மையான நகர்வினால் வெப்ப ஆற்றல் மாற்றப்படும் நிகழ்வு வெப்பச்சலனம் என அழைக்கப்படுகிறது.
B) இந்த வெப்பச்சலனத்தில் மூலக்கூறுகள் சில கட்டுப்பாடுகளின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன.
C) இந்நிகழ்வு இயற்கையாகவோ அல்லது புறவிசை காரணமாகவோ ஏற்படலாம்.
D) சமையல் பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீர் வெப்பசலனத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
விளக்கம்: இந்த வெப்பச்சலனத்தில் மூலக்கூறுகள் எவ்வித கட்டுபாடின்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன.
46. வெப்பசலன ஓட்டம் என்பது_____________
A) மூலக்கூறுகள் கிடைமட்டமாக நகர்தல்
B) மூலக்கூறுகள் அலைந்து திரிதல்
C) மூலக்கூறுகள் மேலும் கீழும் நகர்தல்
D) மூலக்கூறுகள் நிலையாக ஓரிடத்தில் இருத்தல்
47. எந்த விதமான ஊடகத்தின் உதவியும் இன்றி ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு ஆற்றலை மாற்றுவது____________ன் பன்பாகும்.
A) வெப்பக்கடத்தல்
B) வெப்பச்சலனம்
C) வெப்பக்கதிர்வீச்சு
D) வெப்பமாற்றி
விளக்கம்: எந்த விதமான ஊடகத்தின் உதவியும் இன்றி ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு ஆற்றலை மாற்றுவது கதிர்வீச்சின் ஒரு சிறப்புப் பண்பாகும். ஆனால் வெப்பக்கடத்தல் மற்றும் வெப்பச்சலனம் இவ்விரண்டிலும் வெப்ப ஆற்றலை மாற்றம் செய்வதற்கு ஊடகம் அவசியமாகும்.
48. ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்காந்த அலைகளினால் வெப்பம் பரவும் முறைக்கு____________என்று பெயர்.
A) வெப்பக்கடத்தல்
B) வெப்பக்கதிர்வீச்சு
C) வெப்பச்சலனம்
D) வெப்பமாற்றி
49. கீழ்க்கண்ட கூற்றைக் கவனி சரியானதைக் கண்டறி:
1) பகல் நேரங்களில், சூரியக்கதிர்கள் கடல் நீரைவிட வேகமாக நிலத்தை சூடேற்றும் இதற்கு காரணம் நிலத்தின் குறைவான தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகும்.
2) இதன் விளைவாக நிலப்பரப்பில் உள்ள காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைந்து மேலே சென்றுவிடுகிறது.
3) கடற்பரப்பிலுள்ள குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசும் இதனையே நிலக்காற்று என்று அழைக்கிறோம்.
A) 1 3 மட்டும் சரி
B) 2 3 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) 1 2 மட்டும் சரி
விளக்கம்: பகல் நேரங்களில், சூரியக்கதிர்கள் கடல் நீரைவிட வேகமாக நிலத்தை சூடேற்றும் இதற்கு காரணம் நிலத்தின் குறைவான தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகும். இதன் விளைவாக நிலப்பரப்பில் உள்ள காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைந்து மேலே சென்றுவிடுகிறது. கடற்பரப்பிலுள்ள குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசும் இதனையே கடல்காற்று என்று அழைக்கிறோம்.
50. கீழ்க்கண்ட கூற்றைக் கவனி சரியற்றதைக் கண்டறி:
1) இரவு நேரங்களில் கடற்பரப்பை விட, நிலப்பரப்பு வேகமாக குளிர்ச்சி அடைகிறது.
2) இதன் விளைவாக கடற்பரப்பிலுள்ள காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைந்து மேலே சென்றுவிடுகிறது.
3) அதே நேரத்தில் நிலப்பரப்பிலுள்ள அடர்த்தி அதிகமான குளிர்ந்தகாற்று கடலை நோக்கி வீசுகிறது இதனையே கடல்காற்று என்று அழைக்கிறோம்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: இரவு நேரங்களில் கடற்பரப்பை விட, நிலப்பரப்பு வேகமாக குளிர்ச்சி அடைகிறது. இதன் விளைவாக கடற்பரப்பிலுள்ள காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைந்து மேலே சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் நிலப்பரப்பிலுள்ள அடர்த்தி அதிகமான குளிர்ந்தகாற்று கடலை நோக்கி வீசுகிறது இதனையே நிலக்காற்று என்று அழைக்கிறோம்.
51. பொருளொன்றின் வெப்ப இழப்பு வீதம், அப்பொருளுக்கும் சூழலுக்கும் உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும் என்பது____________விதியாகும்.
A) நீயூட்டனின் குளிர்வு விதி
B) நீயூட்டனின் வெப்ப விதி
C) பிரிவொஸ்ட் கொள்கை
D) ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி
விளக்கம்: நீயூட்டனின் குளிர்வு விதியின்படி பொருளொன்றின் வெப்ப இழப்பு வீதம், அப்பொருளுக்கும் சூழலுக்கும் உள்ள வெப்பிநலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
52. __________கொள்கையின்படி சூழலின் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அனைத்து பொருள்களும் சுழிகெல்வின் வெப்பநிலைக்கு மேல் உள்ள அனைத்து வெப்பநிலைகளிலும் வெப்பக்கதிர்வீச்சை உமிழும்.
A) நீயூட்டனின் குளிர்வு விதி
B) நீயூட்டனின் வெப்ப விதி
C) பிரிவொஸ்ட் கொள்கை
D) ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதி
விளக்கம்: பிரிவொஸ்ட் கொள்கையின்படி சூழலின் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அனைத்து பொருள்களும் சுழிகெல்வின் வெப்பநிலைக்கு மேல் உள்ள அனைத்து வெப்பநிலைகிளிலும் வெப்பக்கதிர்வீச்சை உமிழும்.
53. ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின்_________மதிப்புக்கு நேர்த்தகவில் இருக்கும்.
A) இரு மடிக்கு
B) மும்மடிக்கு
C) நான்குமடிக்கு
D) எண்ணிலடங்கா
விளக்கம்: ஸ்டெஃபான் போல்ட்ஸ்மென் விதியின்படி, கருப்பொருளின் ஓரலகு பரப்பினால் ஓரலகு நேரத்தில் கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றலின் மொத்த அளவு அக்கருப்பொருளின் கெல்வின் வெப்பநிலையின் நான்மடிக்கு நேர்த்தகவில் இருக்கும்.
54. ஸ்டெஃபான் மாறிலியின் மதிப்பு___________
A) 5.67 × 10-8 W m-2 K-4
B) 4.67 × 10-8 W m-2 K-4
C) 6.67 × 10-8 W m-2 K-4
D) 8.67 × 10-8 W m-2 K-4
55. வியன் மாறிலியின் மதிப்பு__________
A) 5.898 × 10-3 m K
B) 3.898 × 10-3 m K
C) 4.898 × 10-3 m K
D) 2.898 × 10-3 m K
56. இயந்திர ஆற்றலை அக ஆற்றலாகவும், அக ஆற்றலை இயந்திர ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்று நிரூபித்த அறிவியல் அறிஞர்.
A) ஜேம்ஸ் ஜீல்
B) ஜேம்ஸ் சாட்விக்
C) ரூதர்போர்டு
D) ஜேம்ஸ் தாமஸ்
விளக்கம்: பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் ஜீல் என்ற அறிவியல் அறிஞர் இயந்திர ஆற்றலை அக ஆற்றலாகவும், அக ஆற்றலை இயந்திர ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்று நிரூபித்தார்.
57. ஒரு கிராம் நிறையுடைய நீரின் வெப்பநிலையை 10C உயர்த்த_______J ஆற்றல் தேவைப்படும் என்று ஜீல் கண்டறிந்தார்.
A) 2.186J
B) 3.186 J
C) 4.186 J
D) 5.186 J
விளக்கம்: 1 கிராம் நிறையுடைய நீரின் வெப்பநிலையை 10C உயர்த்த 4.186J ஆற்றல் தேவைப்படும் என்று ஜீல் கண்டறிந்தார்.
58. அழுத்தம் மாறா நிலையில் 1kg நிறையுடைய பொருளின் வெப்பநிலையை 1K அல்லது 10C உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு____________ஆகும்.
A) தன் வெப்ப ஏற்புத்திறன்
B) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்
C) அழுத்தம் மாறாத்தன்வெப்ப ஏற்புத்திறன்
D) பருமன் மாறாத்தன்வெப்ப ஏற்புத்திறன்
விளக்கம்: அழுத்தம் மாறா நிலையில் 1kg நிறையுடைய பொருளின் வெப்பநிலையை 1K அல்லது 10C உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அழுத்தம் மாறாத்தன்வெப்ப ஏற்புத்திறன் என அழைக்கப்படும்.
59. மாறாப்பருமனில் 1 மோல் அளவுள்ள பொருளின் வெப்பநிலையை 1K அல்லது 10C உயர்த்துவதற்குக் தேவைப்படும் வெப்பத்தின் அளவு_________
A) பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
B) உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்
C) அழுத்தம் மாறாத்தன்வெப்ப ஏற்புத்திறன்
D) பருமன் மாறாத்தன்வெப்ப ஏற்புத்திறன்
விளக்கம்: மாறாப்பருமனில் 1 மோல் அளவுள்ள பொருளின் வெப்பநிலையை 1K அல்லது 10C உயர்த்துவதற்குக் தேவைப்படும் வெப்பத்தின் அளவே, பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்
60. கூற்று (i): நமது வீட்டு சமையல் அறையில் நடைபெறும் பெரும்பாலான சமையல் நிகழ்வுகள் அழுத்தம் மாறா நிகழ்வுகள் ஆகும்.
கூற்று (ii): திறந்த பாத்திரத்தில் உணவினை சமைக்கும்போது உணவிற்கு மேலே உள்ள அழுத்தம் எப்போதும் வளிமண்டல அழுத்தத்திற்குச் மிகக் குறைவாகும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: நமது வீட்டு சமையல் அறையில் நடைபெறும் பெரும்பாலான சமையல் நிகழ்வுகள் அழுத்தம் மாறா நிகழ்வுகள் ஆகும். திறந்த பாத்திரத்தில் உணவினை சமைக்கும்போது உணவிற்கு மேலே உள்ள அழுத்தம் எப்போதும் வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமாகும்.
61. டீசல் இயந்திரத்தின் பயனுறுதிறன் அதிகபட்சமாக_____________
A) 34 %
B) 44 %
C) 54 %
D) 64 %
62. பெட்ரோல் இயந்திரத்தின் பெரும பயனுறுதிறன்____________
A) 20 %
B) 30 %
C) 40 %
D) 50 %
63. வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளித்த பின்னர் நமது உடலின்
A) அக ஆற்றல் குறையும்
B) அக ஆற்றல் அதிகரிக்கும்
C) வெப்பம் குறையும்
D) அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
64. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம்.
A) ஒரு நீள்வட்டம்
B) ஒரு வட்டம்
C) ஒரு நேர்க்கோடு
D) ஒரு பரவளையம்
65. சைக்கிள் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது இதற்கு___________நிகழ்வு என்று பெயர்.
A) வெப்பநிலை மாறா
B) வெப்பப்பரிமாற்றமில்லா
C) அழுத்தம்மாறா
D) பருமன் மாறா
66. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.
A) நிறை
B) எடை
C) நிறை மையம்
D) நிலைமத்திருப்புத்திறன்
67. மூடப்பட்ட பாத்திரத்தினுள் உணவு சமைக்கப்படுகிறது. சிறிது நேரத்திற்குப்பின் நீராவி பாத்திரத்தின் மூடியை சற்றே மேலே தள்ளுகிறது. நீராவியை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் இந்நிகழ்விற்கு பொருத்தமான கூற்று எது?
A) Q > O, W > O,
B) Q < O, W > O,
C) Q > O, W < O,
D) Q < O, W < O,
68. நாம் அதிகாலை உடற்பயிற்சி செய்யும் நிகழ்வில், நமது உடலை ஒரு வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமானக் கூற்று எது?
A) ∆U > O, W > O,
B) ∆U < O, W > O,
C) ∆U < O, W < O,
D) ∆U = O, W > O,
69. மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது?
A) ∆U > O, Q = O,
B) ∆U > O, W < O,
C) ∆U > O, Q > O,
D) ∆U = O, Q > O,
70. வெகுதொலைவிலுள்ள விண்மீனொன்று 350nm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்விண்மீனின் வெப்பநிலை
A) 8280 K
B) 5000 K
C) 7260 K
D) 9044 K
71. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?
A) Q, T, W
B) P, T, U
C) Q, W
D) P, T, Q
72. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?
A) W = O
B) Q = O
C) U = O
D) T = O
73. நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன்
A) 6.35 %
B) 20 %
C) 26.8 %
D) 12.5 %
74. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கும் பாகத்தின் வெப்பநிலை -120C அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்பநிலை என்ன?
A) 500C
B) 45.20C
C) 40.20C
D) 37.50C
11th Science Lesson 7 Questions in Tamil
7] சுற்றுச்சூழல் வேதியியல்
1. பசுமை வேதியியல் அடிப்படையில் புதிய வேதி சேர்மங்களை உருவாக்கியமைக்காக 2005 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களுல் பொருந்தாதவர் யார்?
A) அடால்ப் உர்ட்ஸ்
B) விஸ் சாவின்
C) ராபர்ட் H. கிரப்ஸ்
D) ரிச்சர்ட் R. ஷ்ராக்
விளக்கம்: பசுமை வேதியியல் அடிப்படையில் புதிய வேதி சேர்மங்களை உருவாக்கியமைக்காக 2005 ஆம் ஆண்டு நோபல் பரிசு விஸ் சாவின், ராபர்ட் H. கிரப்ஸ் மேலும் ரிச்சர்ட் R. ஷ்ராக் ஆகிய அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.
2. கீழ்க்கண்டவர்களுல் 1971-ம் ஆண்டு மெட்டாதிசிஸ் வினைகள் வினையூக்கிகளாகச் செயல்படும் உலோகச் சேர்மங்களை பற்றி விளக்கியவர்________
A) அடால்ப் உர்ட்ஸ்
B) விஸ் சாவின்
C) ராபர்ட் H. கிரப்ஸ்
D) ரிச்சர்ட் R. ஷ்ராக்
விளக்கம்: 1971 விஸ் சாவின் மெட்டாதிசிஸ் வினைகள் வினையூக்கிகளாகச் செயல்படும் உலோகச் சேர்மங்களை பற்றி விளக்கினார்.
3. கீழ்க்கண்டவர்களுல் 1990-ம் ஆண்டு மெட்டாதிசிஸ் வினைக்கான செயல்திறன் மிக்க வினையூக்கியினை முதன் முதலில் உருவாக்கியவர்.
A) அடால்ப் உர்ட்ஸ்
B) விஸ் சாவின்
C) ராபர்ட் H. கிரப்ஸ்
D) ரிச்சர்ட் R. ஷ்ராக்
விளக்கம்: ரிச்சர்ட் R. ஷ்ராக் 1990 மெட்டாதிசிஸ் வினைக்கான செயல்திறன் மிக்க வினையூக்கியினை முதன் முதலில் உருவாக்கினார்.
4. கீழ்க்கண்டவர்களுல் சிறந்த காற்றில் நிலைப்புத் தன்மை உடைய பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வினையூக்கியினை உருவாக்கியவர்.
A) அடால்ப் உர்ட்ஸ்
B) விஸ் சாவின்
C) ராபர்ட் H. கிரப்ஸ்
D) ரிச்சர்ட் R. ஷ்ராக்
விளக்கம்: ராபர்ட் H. கிரப்ஸ் சிறந்த காற்றில் நிலைப்புத் தன்மை உடைய பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வினையூக்கியினை உருவாக்கினார்.
5. கூற்று (i): சுற்றுச்சூழல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று, புவிபரப்பின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள நீர், மேலும் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
கூற்று (ii): சுற்றுச்சூழல் வேதியியல் என்பது காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள் மற்றும் அவற்றின் வேதிச்செயல்முறைகள் பற்றி பயிலும் வேதியியலின் பிரிவு ஆகும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
6. கீழ்க்கண்டக்கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதகுலம் ஆகியவற்றின்மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், நம் சுற்றுச்சூழலில் நிகழும் விரும்பத்தக்க மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
2) வழக்கமாக, மனித செயல்பாடுகளினால், சுற்றுச்சூழலில் வீசப்படும் கழிவுப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகிறது.
A) 1 சரி 2 தவறு
B) 1 தவறு 2 சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதகுலம் ஆகியவற்றின்மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், நம் சுற்றுச்சூழலில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு என்றழைக்கப்படுகிறது. வழக்கமாக, மனித செயல்பாடுகளினால், சுற்றுச்சூழலில் வீசப்படும் கழிவுப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகிறது.
7. சுற்றுசூழலை மாசுபடுத்தும் பொருள்கள்_________என்றழைக்கப்படுகின்றன.
A) மாசுபடுத்திகள்
B) தீங்குயிரிகள்
C) நுண் கொல்லிகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: வழக்கமாக, மனித செயல்பாடுகளினால், சுற்றுச்சூழலில் வீசப்படும் கழிவுப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகிறது. சுற்றுசூழலை மாசுபடுத்தும் பொருள்கள் மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன.
8. நம்முடைய சுற்றுச்சூழலில் குறிப்பிடத் தகுந்த செறிவில் காணப்படும் மாசுபடுத்திகள் கீழ்க்கண்ட எந்த நிலையில் காணப்படுகிறது.
A) திண்மம்
B) திரவம்
C) வாயு
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: நம்முடைய சுற்றுச்சூழலில் குறிப்பிடத் தகுந்த செறிவில் காணப்படும் மாசுபடுத்திகள் திண்மங்களாகவோ, நீர்மங்களாகவோ அல்லது வாயுக்களாகவோ இருக்கலாம். தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வீட்டுக்கழிவுகள் அதிகளவில் சேர்க்கப்படுவதால் நம்முடைய சுற்றுச்சூழலானது, தினம்தினம் மாசுபட்டுக்கொண்டே உள்ளது.
9. இயற்கையான உயிரியல் செயல்முறைகளால் எளிதாக சிதைவடையக்கூடிய மாசுபடுத்திகள்________என்றழைக்கப்படுகின்றன.
A) மக்கும் மாசுபடுத்திகள்
B) மக்காத மாசுபடுத்திகள்
C) சிதைவுறாத மாசுபடுத்திகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையக்கூடிய மாசுபடுத்திகள் மக்கும் மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. தாவரக்கழிவுகள், விலங்குக் கழிவுகள் போன்றவை.
10. இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள்________என்றழைக்கப்படுகின்றன.
A) மக்கும் மாசுபடுத்திகள்
B) மக்காத மாசுபடுத்திகள்
C) சிதையும் மாசுபடுத்திகள்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள் மக்காத மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. உலோகக் கழிவுகள். இத்தகைய மாசுபடுத்திகள் சிறிய அளவில் இருப்பினும், உயிரினங்களுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியவை.
11. கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்டதைக் கண்டறி:
A) உலோகக் கழிவுகள்
B) DDT மற்றும் நெகிழிகள்
C) விலங்குக் கழிவுகள்
D) கதிர்வீச்சு கழிவுகள்
விளக்கம்: இயற்கையான உயிரியல் செயல்முறைகளால், எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள் மக்காத மாசுபடுத்திகள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. உலோகக் கழிவுகள் (முக்கியமாக Hg மற்றும் Pb),DDT, நெகிழிகள், கதிர்வீச்சு கழிவுகள் போன்றவை. இத்தகைய மாசுபடுத்திகள் சிறிய அளவில் இருப்பினும், உயிரினங்களுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியவை. அவை இயற்கையாக சிதைவடையாதலால் அவற்றை நம் சுற்றுச்சூழலிருந்து நீக்குவது கடினம்.
12. பொருத்தக:
A) நைட்ரஜன் – 1. (0.93%)
B) ஆக்சிஜன் – 2. (0.04%)
C) ஆர்கான் – 3. (78%)
D) கார்பன் டையாக்சைடு – 4. (21%)
A) 1 2 4 3
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
A) நைட்ரஜன் – 1. (78%)
B) ஆக்சிஜன் – 2. (21%)
C) ஆர்கான் – 3. (0.93%)
D) கார்பன் டையாக்சைடு – 4. (0.04%)
13. கீழ்க்கண்டக் கூற்றுகளைக் கவனி:
i) பூமியின் வளிமண்டலம் என்பது, பூமியின் புவிஈர்ப்பு விசையால் நிலைப்படுத்தப்பட்டுள்ள வாயு அடுக்குகளாகும்.
ii) வளிமண்டலம் எங்கும் பரவியுள்ள காற்று ஒரு சேர்மம் ஆகும்.
A) i சரி ii தவறு
B) i தவறு ii சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பூமியின் வளிமண்டலம் என்பது, பூமியின் புவிஈர்ப்பு விசையால் நிலைப்படுத்தப்பட்டுள்ள வாயு அடுக்குகளாகும். வளிமண்டலம் எங்கும் பரவியுள்ள காற்று ஒரு கலவையாகும்.
14. பொருத்துக:
A) அடிவெளிப்பகுதி – 1. ஸ்ட்ரோபோஸ்பியர்
B) அடுக்குமண்டலம் – 2. ட்ரோபோஸ்பியர்
C) மத்திய அடுக்கு – 3. மீசோஸ்பியர்
D) வெப்ப அடுக்கு – 4. தெர்மோஸ்பியர்
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
A) அடிவெளிப்பகுதி – 1. ட்ரோபோஸ்பியர்
B) அடுக்குமண்டலம் – 2. ஸ்ட்ரோபோஸ்பியர்
C) மத்திய அடுக்கு – 3. மீசோஸ்பியர்
D) வெப்ப அடுக்கு – 4. தெர்மோஸ்பியர்
15. பொருத்துக:
அடுக்குகள் புவிப்பரப்பிலிருந்து உயரம்
A) அடிவெளிப்பகுதி – 1. (0 முதல் 10கி.மீ வரை)
B) அடுக்குமண்டலம் – 2. (10 முதல் 50கி.மீ வரை)
C) மத்திய அடுக்கு – 3. (85 முதல் 500கி.மீ வரை)
D) வெப்ப அடுக்கு – 4. (50 முதல் 85கி.மீ வரை)
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 1 2 4 3
D) 4 1 2 3
விளக்கம்:
அடுக்குகள் புவிப்பரப்பிலிருந்து உயரம்)
A) அடிவெளிப்பகுதி – 1. (0 முதல் 10கி.மீ வரை)
B) அடுக்குமண்டலம் – 2. (10 முதல் 50கி.மீ வரை)
C) மத்திய அடுக்கு – 3. (50 முதல் 85கி.மீ வரை)
D) வெப்ப அடுக்கு – 4. (85 முதல் 500கி.மீ வரை)
16. பொருத்துக:
அடுக்குகள் புவிப்பரப்பிலிருந்து உயரம்
A) அடிவெளிப்பகுதி – 1. (150C முதல் 560C)
B) அடுக்குமண்டலம் – 2. (560C முதல் 20C)
C) மத்திய அடுக்கு – 3. (20C முதல் 920C)
D) வெப்ப அடுக்கு – 4. (920C முதல் 12000C)
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 1 2 3 4
D) 4 1 2 3
விளக்கம்:
அடுக்குகள் புவிப்பரப்பிலிருந்து உயரம்
A) அடிவெளிப்பகுதி – 1. (150C முதல் 560C)
B) அடுக்குமண்டலம் – 2. (560C முதல் 20C)
C) மத்திய அடுக்கு – 3. (20C முதல் 920C)
D) வெப்ப அடுக்கு – 4. (920C முதல் 12000C)
17. வளிமண்டலத்தின் அடிநிலை அடுக்கானது_______என்றழைக்கப்படுகிறது.
A) அடுக்கு மண்டலம்
B) அடிவெளிப்பகுதி
C) மத்திய அடுக்கு
D) வெப்ப அடுக்கு
விளக்கம்: வளிமண்டலத்தின் அடிநிலை அடுக்கானது அடிவெளிப்பகுதி என்றழைக்கப்படுகிறது. இது புவியின் மேற்பரப்பிலிருந்து 0 முதல் 10 கி.மீ வரை நீண்டு விரிந்துள்ளது.
18. வளிமண்டலத்தின் நிறையில் ஏறத்தாழ 80 சதவீதம் நிறையானது கீழ்க்கண்ட எந்த அடுக்கில் அமைந்துள்ளது.
A) ஸ்ட்ரோபோஸ்பியர்
B) ட்ரோபோஸ்பியர்
C) மீசோஸ்பியர்
D) தெர்மோஸ்பியர்
விளக்கம்: வளிமண்டலத்தின் அடிநிலை அடுக்கானது அடிவெளிப்பகுதி என்றழைக்கப்படுகிறது. இது புவியின் மேற்பரப்பிலிருந்து 0 முதல் 10 கி.மீ வரை நீண்டு விரிந்துள்ளது. வளிமண்டலத்தின் நிறையில் ஏறத்தாழ 80 சதவீதம் நிறையானது இந்த அடுக்கில் தான் உள்ளது.
19. ஹைட்ரோஸ்பியர் என்பது___________
A) வளிக்கோளம்
B) உயிர்க்கோளம்
C) நீர்க்கோளம்
D) நிலக்கோளம்
20. பூமியின் பரப்பில் ஏறக்குறைய 75 சதவீதம் இடத்தை கீழ்க்கண்ட எந்த அடுக்கு நிரப்பியுள்ளது.
A) ஸ்ட்ரோபோஸ்பியர்
B) ட்ரோபோஸ்பியர்
C) ஹைட்ரோஸ்பியர்
D) தெர்மோஸ்பியர்
விளக்கம்: நீர்க்கோளம் என்பது சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், நீரோடைகள், நிலத்தடி நீர், துருவப்பனி மலைகள், மேகங்கள் ஆகிய அனைத்து வகையான நீர் மூலங்களையும் உள்ளடக்கியது. இது பூமியின் பரப்பில் ஏறக்குறைய 75 சதவீத இடத்தை நிரப்புகிறது. எனவே பூமியானது நீலக்கோள் என்றழைக்கப்படுகிறது.
21. கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கோள் நீலக்கோள் என்றழைக்கப்படுகிறது.
A) புதன்
B) பூமி
C) சனி
D) யுரேனஸ்
22. கற்கோளம் என்பது__________
A) பயோஸ்பியர்
B) ஹைட்ரோஸ்பியர்
C) லித்தோஸ்பியர்
D) மீசோஸ்பியர்
விளக்கம்: கற்கோளம் அல்லது லித்தோஸ்பியர் என்பது பூமியின் திண்ம பகுதியாகும். இது மண், பாறைகள் மற்றும் மலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
23. கீழ்க்கண்டவற்றுள் உயிர்க்கோளத்துடன் தொடர்பில்லாதது எது?
A) லித்தோஸ்பியர்
B) ஹைட்ரோஸ்பியர்
C) அட்மோஸ்பியர்
D) ட்ரோபோஸ்பியர்
விளக்கம்: உயிர்க்கோளம் என்பது கற்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இதில் தான் உயிரினங்கள் வாழ முடியும்.
24. உலகிலேயே அதி மோசமான இரசாயன பேரழிவு நிகழ்ந்த இடம்_________
A) சென்னை
B) ஹைதராபாத்
C) போபால்
D) மும்பை
25. போபால் விஷவாயு நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள்___________
A) 1984 டிசம்பர் 1
B) 1984 டிசம்பர் 2
C) 1984 டிசம்பர் 3
D) 1984 டிசம்பர் 4
விளக்கம்: 1984 ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அதிகாலையில் இந்திய நகரமான போபாலில், உலகிலேயெ அதி மோசமான இரசாயன பேரழிவு நிகழ்ந்தது.
26. போபால் விஷவாயுடன் தொடர்புடைய நிறுவனம்___________
A) போபால் கார்பைடு நிறுவனம்
B) யூனியன் கார்பைடு நிறுவனம்
C) யூனியன் கார்னர் கார்பைடு நிறுவனம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: 1984 ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அதிகாலையில் இந்திய நகரமான போபாலில், உலகிலேயெ அதி மோசமான இரசாயன பேரழிவு நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு எனும் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி ஆலையில் ஏற்பட்ட வெடிப்பால் நச்சுத்தன்மை கொண்டவாயு காற்றில் கலந்தது. இந்த வாயு காற்றை விட இருமடங்கு கனமானது, எனவே காற்றில் கலைந்து செல்லாமல் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் போர்வை போல சூழ்ந்து கொண்டது.
27. 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயுவின் போது வெளியான வாயு________
A) மீத்தைல் ஐசோ சயனைடு
B) எத்தில் ஐசோ சயனைடு
C) மெத்தில் ஐசோ சயனைடு
D) புரப்பைல் ஐசோ சயனைடு
28. 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயுவினால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பு_________
A) மூளை, கண்கள்
B) நுரையீரல், இரைப்பைக்குடல்
C) நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அமைப்பு
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: 1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷவாயுவினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாழாகியது. உயிர் பிழைத்தவர்களின் நுரையீரல்கள், மூளை, கண்கள் மற்றும் இரைப்பைக் குடல், நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியன மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
29. வளிமண்டல மாசுபாடுகள் என்பது கீழ்க்கண்ட அடுக்கில் ஏற்படுவதாக கருதப்படுகிறது.
A) அடுக்கு மண்டலம்
B) அடிவெளி மண்டலம்
C) மத்திய அடுக்கு மண்டலம்
D) வெப்ப அடுக்கு மண்டலம்
விளக்கம்: வளிமண்டல மாசுபாடு என்பது பொதுவாக அடிவெளி மண்டல மாசுபாடாகவே கருதப்படுகிறது.
30. கீழ்க்கண்டவற்றுள் அடிவளி அடுக்கு மண்டலத்தில் ஏற்படும் மாசுபாட்டின் வகைகளுல் பொருந்தாதது எது.
A) காற்று மாசுபாடு
B) தண்ணீர் மாசுபாடு
C) அமில மழை மாசுபாடு
D) மண் மாசுபாடு
31. கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசுபாடு பற்றியக் கூற்றுகளில் பொருந்தாததைத் கண்டறி:
A) உயிரினங்களின் மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில், காற்றில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் காற்று மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
B) காற்று மாசுபாடு என்பது மத்திய அடுக்கு மற்றும் வெப்ப மண்டலத்துடன் வரையறுக்கப்படுகிறது.
C) முதன்மையாக வெளிவிடப்படும் விரும்பத்தகாக பொருள்களால் காற்று மாசுபாடு உருவாகிறது.
D) காற்று மாசுபடுத்திகள் பொதுவாக வாயுக்கள் மற்றும் துகள்கள் எனும் இரண்டு முக்கிய வடிவங்களில் இருக்கலாம்.
விளக்கம்: காற்று மாசுபாடு என்பது அடிவெளி மண்டலம் மற்றும் அடுக்கு மண்டலத்துடன் வரையறுக்கப்படுகிறது.
32. கீழ்க்கண்டவற்றுள் வாயுநிலை மாசுபடுத்திகளுடன் பொருந்தாதது எது.
A) சல்பர் ஆக்சைடுகள்
B) உலோக கழிவுகள்
C) நைட்ரஜன் ஆக்சைடுகள்
D) கார்பன் ஆக்சைடுகள்
விளக்கம்: சல்பர் ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோபார்பன்கள் ஆகியன வாயுநிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
33. சல்பரைக் கொண்டுள்ள புதைப்படிம பொருள்களை எரித்தல் மற்றும் சல்பைடு தாதுக்களை வறுத்தலால் அதிலிருந்து உருவாகும் வாயுக்கள்_________
A) சல்பர் ஆக்சைடு
B) சல்பர் டையாக்சைடு
C) சல்பர் ட்ரையாக்சைடு
D) BC இரண்டும்
விளக்கம்: சல்பரைக் கொண்டுள்ள புதைப்படிம பொருள்களை எரித்தல், மற்றும் சல்பைடு தாதுக்களை வறுத்தல் ஆகிய காரணங்களால் சல்பர் டையாக்சைடு மற்றும் சல்பர் ட்ரையாக்சைடு வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன.
34. கீழ்க்கண்ட வாயுக்களில் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கும் வாயு_________
A) சல்பர் ஆக்சைடு
B) சல்பர் ட்ரையாக்சைடு
C) சல்பர் டையாக்சைடு
D) சல்பர் டெட்ரா ஆக்சைடு
விளக்கம்: சல்பரைக் கொண்டுள்ள புதைப்படிம பொருள்களை எரித்தல், மற்றும் சல்பைடு தாதுக்களை வறுத்தல் ஆகிய காரணங்களால் சல்பர் டையாக்சைடு மற்றும் சல்பர் ட்ரையாக்சைடு வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. சல்பர் டையாக்சைடு வாயுவானது விலங்குகள் மற்றும் தாவரங்கள் இரண்டிற்கும் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது.
35. சல்பர் டையாக்சைடு வாயுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு_______
A) கண் எரிச்சல்
B) இருமல்
C) ஆஸ்துமா
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: சல்பர் டையாக்சைடு வாயுவானது கண்எரிச்சல், இருமல் மற்றும் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி போன்ற சுவாச நோய்கள் உருவாக்குகிறது.
36. கூற்று (i): சல்பர் டையாக்சைடு வாயுவானது மாசுபட்ட காற்றில் காணப்படும் துகள்மாசுப் பொருட்களால் அதிக நச்சுத்தன்மையுடைய சல்பர் ட்ரையாக்சைடாக ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
கூற்று (ii): O3 ஆனது காற்று மண்டலத்திலுள்ள நீராவியுடன் இணைந்து F2SO4 ஐ உருவாக்குகிறது, இது அமிலமழையாக பொழிகிறது.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: O3 ஆனது காற்று மண்டலத்திலுள்ள நீராவியுடன் இணைந்து F2SO4 ஐ உருவாக்குகிறது, இது அமிலமழையாக பொழிகிறது.
37. கீழ்க்கண்ட எந்த நிகழ்வின்போது நைட்ரஜன் ஆக்சைடுகள் வெளியேறுகிறது.
A) உயர் வெப்பநிலை எரிதல்
B) காற்றில் நைட்ரஜன் ஆக்சிஜனேற்றமடைதல்
C) எரிபொருள் எரிதல்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: உயர் வெப்பநிலை எரிதல் செயல் முறைகள், காற்றில் நைட்ரஜன் ஆக்சிஜனேற்ற மடைதல் மற்றும் எரிபொருள்கள் (நிலக்கரி, டீசல், பெட்ரோல்) எரித்தல் ஆகியவற்றின் போது நைட்ரஜன் ஆக்சைடுகள் வெளியேற்றப்படுகின்றன.
38. கடுமையான போக்குவரத்து நெரிசலின் போது செம்பழுப்பு நிற தூசிப் பனி மூட்டத்தை உருவாக்குவது________
A) சல்பர் ஆக்சைடு
B) நைட்ரஜன் ஆக்சைடு
C) கார்பன் மோனாக்சைடு
D) கார்பன் டையாக்சைடு
விளக்கம்: கடுமையான போக்குவரத்து நெரிசலில், நைட்ரஜன் ஆக்சைடுகள் செம்பழுப்பு நிற தூசிப் பனி மூட்டத்தை உருவாக்குகின்றன. நைட்ரஜன் டையாக்சைடானது தாவர இலைகளை வெகுவாகபாதித்து ஒளிச்சேர்க்கையை தடுக்கிறது. NO2 ஆனது சுவாசப்பாதை எரிச்சலூட்டி ஆகும். இது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பை உருவாக்குகிறது. நைட்ரஜன் டையாக்சைடு பல்வேறு துணி இழைகள் மற்றும் உலோகங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
39. கீழ்க்கண்டவற்றுள் எந்த வாயுவானது தாவர இலைகளை வெகுவாகபாதித்து ஒளிச்சேர்க்கையை தடுக்கிறது.
A) சல்பர் ஆக்சைடு
B) கார்பன் மோனாக்சைடு
C) கார்பன் டையாக்சைடு
D) நைட்ரஜன் ஆக்சைடு
40. கீழ்க்கண்டவற்றுள் சுவாசப்பாதை எரிச்சலூட்டி எது.
A) SO2
B) NO2
C) SO3
D) SO4
41. நைட்ரஜன் டையாக்சைடினால் ஏற்படும் தீங்கு விளைவுகளுல் பொருந்தாதது எது.
A) ஆஸ்துமா
B) நுரையீரல் பாதிப்பு
C) துணி இழைகள் பாதிப்பு
D) HIV
42. கீழ்க்கண்டவற்றுள் முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் உருவாகும் வாயு___________
A) கார்பன் மோனாக்சைடு
B) நைட்ரஜன் டையாக்சைடு
C) சல்பர் டையாக்சைடு
D) சல்பர் ட்ரையாக்சைடு
விளக்கம்: முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் கார்பன் மோனாக்சைடு உருவாக்கப்படுகிறது.
43. கார்பன் மோனாக்சைடு பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
A) கார்பன் மோனாக்சைடு முதன்மையாக வாகனப்புகையின் மூலம் காற்றில் வெளிவிடப்படுகிறது.
B) கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்டது.
C) இது ஹீமோகுளோபினுடன் பிணைந்து கார்பாக்ஸிஹீமோகுளோபினை உருவாக்குகிறது.
D) இது இரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை தூண்டுகிறது.
விளக்கம்: இது இரத்தத்தின் ஆக்ஸிஜன் கடத்தும் திறனை பாதிக்கிறது.
44. இரத்தத்தில் ஆக்சிஜன் கடத்தும் திறன் குறைவதனால் ஏற்படும் பாதிப்புகளுல் பொருந்தாதது எது.
A) தலைவலி
B) சுயநினைவிழத்தல்
C) புற்றுநோய்
D) கண்பார்வை
விளக்கம்: இரத்தத்தில் ஆக்ஸிஜன் கடத்தும் திறன் குறைவதனால் தலைவலி, தலைச்சுற்றல், சுயநினைவிழத்தல், பதற்றம், கண்பார்வை மங்குதல் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
45. கீழ்க்கண்ட எந்த செயல்முறையினால் காற்றுமண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
A) புதைப்படிம எரி பொருள்களை எரித்தல்
B) காட்டுத் தீ
C) சுவாசித்தல்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: சுவாசித்தல், புதைப்படிம எரி பொருள்களை எரித்தல், காட்டுத் தீ, சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக் கற்கள் சிதைக்கப்படுதல் போன்ற செயல் முறைகளினால் காற்றுமண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது.
46. கீழ்க்கண்ட எந்த செயல்முறையினால் காற்று மண்டலத்திலுள்ள CO2 வாயுவை கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்சிஜன் வாயுவாக பச்சைத் தாவரங்கள் மாற்றுகிறது.
A) நீராவிப்போக்கு
B) சுவாசித்தல்
C) ஒளிச்சேர்க்கை
D) உணவு சேகரித்தல்
விளக்கம்: ஒளிச்சேர்க்கை எனும் செயல் முறையின் மூலம், காற்று மண்டலத்திலுள்ள CO2 வாயுவை கார்போஹைட்ரேட் மற்றும் ஆக்சிஜன் வாயுவாக பச்சைத் தாவரங்கள் மாற்ற முடியும்.
47. கீழ்க்கண்ட கூற்றுகளை உற்றுநோக்கி சரியானவற்றைத் தேர்ந்தெடு.
i) காற்று மண்டலத்தில் உருவாகும் அதிகரிக்கப்பட்ட O2 அளவானது உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.
ii) இது தலைவலி மற்றும் குமட்டலை உருவாக்குகிறது.
A) i சரி ii தவறு
B) i தவறு ii சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: காற்று மண்டலத்தில் உருவாகும் அதிகரிக்கப்பட்ட CO2 அளவானது உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.
48. ஹைட்ரோகார்பன்கள் கீழ்க்கண்ட எந்த இரு சேர்மங்கள் இணைந்து உருவானதாகும்.
A) கார்பன்
B) நைட்ரஜன்
C) ஹைட்ரஜன்
D) AC இரண்டும்
விளக்கம்: கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கப்படுகின்றன.
49. வாகன எரிபொருள்கள் முற்றிலும் எரிக்கபடாததால் உண்டாகும் வாயு___________
A) கார்பன் டையாக்சைடு
B) ஹைட்ரஜன் டையாக்சைடு
C) ஹைட்ரோகார்பன்
D) கார்பன் மோனாக்சைடு
விளக்கம்: கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை இயற்கையாகவும் (சதுப்புநிலவாயு), வாகன எரி பொருள்கள் முற்றிலுமாக எரியாததாலும் உருவாக்கப்படுகின்றன.
50. கீழ்க்கண்டவற்றுள் ஹைட்ரோகார்பன் பற்றியக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) இவை வலிமை மிகுந்த புற்றுநோய் உருவாக்கும் காரணிகளாகும்.
2) பல்லணு அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் புற்றுநோய் காரணிகளாகும்.
3) இவை கண் மற்றும் மூக்கு ஆகியவற்றின் எரிச்சலை உருவாக்குகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
51. 1987 ஆம் அண்டு பசுமைக்குடில் விளைவு எனும் சொற்பதத்தை உருவாக்கிய அறிஞர்__________
A) விஸ் சாவின்
B) ஜீன் பேப்டிஸ் ஃபுரீயர்
C) ராபர்ட் H. கிரப்ஸ்
D) ரிச்சர்ட் R. ஷ்ராக்
விளக்கம்: 1987 ஆம் ஆண்டு ஜீன் பேப்டிஸ் ஃபுரீயர் எனும் பிரான்சு நாட்டு கணிதவியலாளர், வளிமண்டலத்திலுள்ள சில வாயுக்கள் வெப்பத்தை சிறைப்படுத்துகின்றன. என்பதைக்கூற பசுமைக்குடில் விளைவு எனும் சொற்பதத்தை உருவாக்கினார்.
52. கீழ்க்கண்டவற்றுள் பசுமைக்குடில் விளைவுப் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி:
A) பூமியின் வளிமண்டலமானது, சூரியனிலிருந்து வெளிப்படும் கட்புலனாகும் ஒளியின் பெரும்பகுதியை அனுமதித்து பூமியின் மேற்பரப்பை அடையச் செய்கிறது.
B) இதனால் பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியினால் வெப்பமடைகிறது, இந்த ஆற்றலின் ஒரு பகுதியை பூமி குறைந்த அலைநீளம் கொண்ட ஒளியாக(அகச்சிவப்புக் கதிர்கள்) வளிமண்டலத்தை நோக்கி திருப்பி அனுப்புகிறது.
C) வெப்பத்தின் ஒரு பகுதியானது வளிமண்டலத்தில் உள்ள CH4, CO2, CFC மற்றும் நீராவியால் சிறைபிடிக்கப்படுகிறது. அவைகள் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சுகின்றன. இதனால் பூமியினால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் பெரும்பகுதியை வெளியே செல்லாமல் தடுக்கின்றன.
D) உறிஞ்சப்பட்ட கதிர்வீச்சின் ஒருபகுதி மீண்டும் பூமியின் மேற்பரப்பின் மீதே திருப்பி செலுத்தப்படுகிறது. எனவே பூமியின் மேற்பரப்பு பசுமைக்குடில் விளைவு எனம் நிகழ்வால் வெப்பமடைகிறது.
விளக்கம்: இதனால் பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியினால் வெப்பமடைகிறது, இந்த ஆற்றலின் ஒரு பகுதியை பூமி அதிக அலைநீளம் கொண்ட ஒளியாக(அகச்சிவப்புக் கதிர்கள்) வளிமண்டலத்தை நோக்கி திருப்பி அனுப்புகிறது.
53. கூற்று (i): பூமியின் மேற்பரப்பால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்பு கதிர்களை வளிமண்டலத்திலுள்ள CO2 படலம் உறிஞ்சி சிறைப்பிடிக்கும் காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு வெப்பமடையும் நிகழ்ச்சி பசுமைக்குடில் விளைவு என வரையறுக்கப்படுகிறது.
கூற்று (ii): பசுமைக்குடில் விளைவின் காரணமாக பூமி குளிர்வடையும் நிகழ்வு உலகம் வெப்பமாதல் என்றழைக்கப்படுகிறது.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: பசுமைக்குடில் விளைவின் காரணமாக பூமி வெப்பமடையும் நிகழ்வு உலகம் வெப்பமாதல் என்றழைக்கப்படுகிறது.
54. பசுமைக்குடில் விளைவினால் உருவாக்கப்படும் வெப்பமாதல் நிகழவில்லை எனில் பூமியின் சராசரி புறப்பரப்பு வெப்பநிலை________ஆக இருந்திருக்கும்.
A) -180C
B) 180C
C) 00F
D) AC இரண்டும்
விளக்கம்: பசுமைக்குடில் விளைவினால் உருவாக்கப்படும் வெப்பமாதல் நிகழவில்லை எனில் பூமியின் சராசரி புறப்பரப்பு வெப்பநிலை -180C(00F) ஆகத்தான் இருந்திருக்கும். பசுமைக்குடில் விளைவு இயற்கையாக நிகழும் நிகழ்வாயினும், வளிமண்டலத்தில் தொடர்ந்து பசமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதால் அது தீவிரமாக நிகழ்கிறது.
55. கடந்த 100 வருடங்களில் காற்று மண்டலத்திலுள்ள கார்பன் டையாக்சைடின் அளவு தோராயமாக__________சதவீதம் அதிகரித்துள்ளது.
A) 20 %
B) 30 %
C) 40 %
D) 50 %
விளக்கம்: கடந்த 100 வருடங்களில், காற்று மண்டலத்திலுள்ள கார்பன் டையாக்சைடின் அளவு தோராயமாக 30 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் மீத்தேனின் அளவு இரண்டு மடங்குகளுக்கும் அதிகமாகி உள்ளது.
56. மழைநீரின் PH மதிப்பு_________
A) 4.6
B) 5.6
C) 6.5
D) 6.6
விளக்கம்: வளிமண்டலத்தில் உள்ள CO2 மழை நீரில் கரைந்திருப்பதன் காரணத்தால் சாதாரணமாக மழை நீரின் PH மதிப்பு 5.6 ஆக உள்ளது.
57. மழைநீரின் PH மதிப்பு 5.6 க்கு கீழ் குறையும்போது அது_____________என்றழைக்கப்படுகிறது.
A) சலன மழை
B) அமில மழை
C) சாரல் மழை
D) பனி மழை
விளக்கம்: மழைநீரின் PH மதிப்பு 5.6க்க கீழ் குறையும்போது, அது அமில மழை என்றழைக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உள்ள நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.
58. காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள், மேகங்களில் உள்ள நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே_______மற்றும்_______ஆக மாற்றப்படுகிறது.
A) சல்பியுரிக் அமிலம் மற்றும் ஹைட்ரிக் அமிலம்
B) சல்பியுரிக் அமிலம் மற்றும் கந்தக அமிலம்
C) நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரிக் அமிலம்
D) கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம்
விளக்கம்: காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உள்ள நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.
59. கீழ்க்கண்டவற்றுள் அமில மழைப் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
A) அமிலமழை என்பது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு சல்பர் மற்றும் ஹைட்ரஜன் ஆக்சைடுகள் பக்கவிளை பொருளாகும்.
B) நிலக்கரி போன்ற புதை படிம எரி பொருள்களை எரித்தல், அனல் மின்நிலையங்கள் மற்றும் உலைகளில் எண்ணெய்களை எரித்தல், வாகன இயந்திரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை எரித்தல் ஆகியவை சல்பர் டையாக்சைடு மற்றும் நைட்ரஜன் அக்சைடுகளை உருவாக்குகின்றன.
C) SO2 மற்றும் NO2 ஆகியன அமில மழைக்கு முக்கிய பங்களிக்கின்றன.
D) இவை ஆக்சிஜன் மற்றும் நீருடன் வினை புரிந்து முறையே கந்தக அமிலம் மற்றும் ஹைட்ரிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன.
விளக்கம்: இவை ஆக்சிஜன் மற்றும் நீருடன் வினை புரிந்து முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன.
60. அமில மழையினால் ஏற்படும் தீய விளைவுளில் பொருந்தாததைக் காண்க:
A) அமில மழையானது, கட்டிடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருள்களின் மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது.
B) பளிங்கு கற்களின் மீது நிகழும் இந்ததாக்குதல் “கல்குஷ்டம்” எனப் பெயரிடப்படுகிறது.
C) அமில மழையானது, நீர்ச் சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.
D) தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு நன்மை விளைவிக்கின்றன.
விளக்கம்: தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கின்றன.
61. அமில மழையினால் ஏற்படும் தீய விளைவுளில் பொருந்தாததைக் காண்க:
1) இது தண்ணீர் குழாய்களை அரித்து, இரும்பு, லெட் மற்றும் காப்பர் போன்ற கன உலோகங்களை குடிநீரில் கரைக்கிறது.
2) இவை நச்சுவிளைவுகளை நீக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
3) இது மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சுவாசக் கோளாறுகளை உருவாக்குகிறது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: இவை நச்சுவிளைவுகளை உருவாக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
62. கீழ்க்கண்டவற்றுள் துகள் மாசுபடுத்திகளுடன் பொருந்தாததைக் கண்டறி:
A) தூசி
B) மகரந்ததூள்
C) நெகிழி
D) புகைக்கரி
விளக்கம்: துகள் மாசுபடுத்திகள் என்பவை, சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலைப்படுத்தப்பட்ட திரவ துளிகளாகும். பெரும்பாலான துகள் மாசுபடுத்திகள் அபாயகரமானவை. எ.கா. தூசி, மகரந்ததூள், புகை, புகைக்கரி மற்றும் திரவதுளிகள்(நீர்ம காற்று கரைகள்) போன்றவை.
63. கீழ்க்கண்டவற்றுள் உயிருள்ள துகள் பொருள்களுடன் பொருந்தாதது எது.
A) பாக்டீரியா
B) எண்ணெய்ப்புகை
C) பூஞ்சை
D) நுண்பூஞ்சை
விளக்கம்: உயிருள்ள துகள் பொருள்கள் என்பவை காற்றில் விரவியுள்ள பாக்டீரியா, பூஞ்சை, நுண்பூஞ்சை, பாசி போன்ற நுண்ணுயிரிகளாகும். சில பூஞ்சைகள் மனிதர்களுக்கு ஒவ்வாமையையும், தாவரங்களில் நோய்களையும் உருவாக்குகின்றன.
64. கீழ்க்கண்டவற்றுள் உயிரற்ற துகள் பொருள்களுடன் பொருந்தாதது எது.
A) புகை
B) கரும்புகை
C) பூஞ்சைகள்
D) மூடுபனி
விளக்கம்: வளிமண்டலத்தில் நான்கு வகையான உயிரற்றதுகள் பொருள்கள் காணப்படுகின்றன. அவை, அவற்றின் இயல்பு மற்றும் உருவளவின் அடிப்படையில் புகை, தூசி, மூடுபனி மற்றும் கரும்புகை.
65. திண்ம துகள்கள் அல்லது கரிம பொருட்களை எரிப்பதால் உருவாகும் திண்ம மற்றும் நீர்ம துகள்களின் கலவை________
A) தூசி
B) புகை
C) மூடுபனி
D) கரும்புகை
விளக்கம்: புகையானது, திண்ம துகள்கள் அல்லது கரிம பொருட்களை எரிப்பதால் உருவாகும் திண்ம மற்றும் நீர்ம துகள்களின் கலவையை கொண்டுள்ளது. எ.கா. சிகரெட் புகை, எண்ணெய்ப் புகை.
66. திண்ம பொருட்களை இடித்தல் மற்றும் அரைக்கும் போது உருவாகும் நுண்ணிய திண்ம துகள்_________
A) தூசி
B) புகை
C) மூடுபனி
D) கரும்புகை
விளக்கம்: தூசி என்பது திண்ம பொருட்களை இடித்தல் மற்றும் அரைக்கும் போது உருவாகும் நுண்ணிய திண்ம துகள்களால் ஆனது. எ.கா. மண்ணூதையிடுதலில் உருவாகும் மணல் துகள்கள், மரவேலையின்போது உருவாகும் மரத்தூள்.
67. காற்றில் தெறிக்கப்படும் திரவதுளிகள் மற்றும் காற்றில் உள்ள குளிர்ந்த ஆவிநிலை மூலக்கூறுகளால் உருவாவது__________
A) தூசி
B) புகை
C) மூடுபனி
D) கரும்புகை
விளக்கம்: காற்றில் தெறிக்கப்படும் திரவதுளிகள் மற்றும் காற்றில் உள்ள குளிர்ந்த ஆவிநிலை மூலக்கூறுகளால் மூடுபனி உருவாகிறது. எ.கா. கந்தக அமில மூடுபனி, களைக்கொல்லி மற்றும் பூச்சுகொல்லி மருந்துகள் தெளிப்பதாலும் மூடுபனி.
68. கீழ்க்கண்டவற்றுள் மூடுபனியுடன் தொடர்பில்லாததைக் கண்டறி:
A) கந்தக அமிலம்
B) புதைபடிம எரிபொருள்
C) களைக்கொல்லி மருந்து
D) பூச்சிக்கொல்லி மருந்து
69. பதங்கமாதல், காய்ச்சிவடித்தல் போன்ற பல வேதிவினைகளின் போது வெளிப்படும் வாயுக்கள் சுருங்குவதால் ஏற்படுவது________
A) தூசி
B) புகை
C) மூடுபனி
D) கரும்புகை
விளக்கம்: பதங்கமாதல், காய்ச்சிவடித்தல், கொதிக்கவைத்தல் மற்றும் காலிசினேற்றத்தின்போதும் மேலும் பல வேதிவினைகளின் போதும், வெளிப்படும் வாயுக்கள் சுருங்குவதால் கரும்புகை உருவாகிறது. எ.கா. கரைப்பான்கள், உலோகங்கள் மற்றும் உலோக ஆக்சைடுகள் கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன.
70. கீழ்க்கண்டவற்றுள் கரும்புகையை உருவாக்கும் துகள்கள்_______
A) கரிம கரைப்பான்கள்
B) உலோகங்கள்
C) உலோக ஆக்சைடுகள்
D) மேற்கண்ட அனைத்தும்
71. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
A) தூசி, மூடுபனி, கரும்புகை ஆகியவை காற்றில் பரவும் துகள்களாகும், இவை மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பவையாகும்.
B) 10 மைக்ரான் அளவைவிட பெரிய துகள் மாசுபடுத்திகள் சுவாச பாதையில் படிந்துவிடுகின்றன.
C) 5 மைக்ரான் அளவுள்ள துகள்கள் எளிதாக நுரையீரலினுள் நுழைந்து நுரையீரலின் புறணியில் தழும்புகள் அல்லது இழை இணைப்பு திசுக்களை உருவாக்குகின்றன.
D) இவை நுரையீரல் எரிச்சலை உருவாக்குகின்றன. மேலும் புற்றுநோய் மற்றும் ஆஸ்துமாவை உருவாக்குகின்றன.
A) 1, 2 மட்டும் தவறு
B) 2, 3 மட்டும் தவறு
C) 3, 4 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: 5 மைக்ரான் அளவைவிட பெரிய துகள் மாசுபடுத்திகள் சுவாச பாதையில் படிந்துவிடுகின்றன. 10 மைக்ரான் அளவுள்ள துகள்கள் எளிதாக நுரையீரலினுள் நுழைந்து நுரையீரலின் புறணியில் தழும்புகள் அல்லது இழை இணைப்பு திசுக்களை உருவாக்குகின்றன.
72. கூற்று (i): நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்கள் வெண்மை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம்.
கூற்று (ii): நூற்பாலை தொழிலாளர்கள் கருமை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்கள் கருமை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம். நூற்பாலை தொழிலாளர்கள் வெண்மை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம்.
73. கீழ்க்கண்டவற்றுள் லெட் துகள்களினால் ஏற்படும் பாதிப்புகளுல் பொருந்தாததைக் கண்டறி:
1) லெட் துகள்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கின்றன.
2) இரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சி அடைதலில் இடையிடுகின்றன.
3) புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: லெட் துகள்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கின்றன. இரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சி அடைதலில் இடையிடுகின்றன. மேலும் புற்றுநோயையும் உருவாக்குகின்றன.
74. துகள் பொருளில் உள்ள மாசுபடுத்திகளினால் ஏற்படும் தீய விளைவுகளில் சரியாக பொருந்துவதைக் காண்க:
1) வளிமண்டலத்தில் உள்ள துகள் பொருள்கள் சூரியஒளியை எதிரொளித்தல் மற்றும் உறிஞ்சுவதன் மூலம் பார்க்கும் திறனை குறைக்கிறது. இது வானூர்திகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது.
2) துகள் பொருள்கள் ஆனவை மேகம் உருவாவதற்கு ஏந்தியாக செயல்படுவதால் அதிகளவில் மூடுபனி மற்றும் மழை ஆகியவை ஏற்படுகின்றன.
3) துகள் பொருள்கள் ஆனவை தாவர இலைகளின் மீது படிவதால் காற்றிலிருந்து CO2 உட்கிரகித்தலை தடுத்து, ஒளிச்சேர்க்கையை பாதிக்கிறது.
A) 1 2 மட்டும் சரி
B) 2 3 மட்டும் சரி
C) 1 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
75. காற்றிலுள்ள துகள் பொருள்களை நீக்கும் முறை________
A) நிலைமின்னியல் வீழ்படிவாக்கிகள்
B) புவிஈர்ப்பு படிவு கலன்கள்
C) ஈர துப்புரவாக்கிகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: நிலைமின்னியல் வீழ்படிவாக்கிகள், புவிஈர்ப்பு படிவு கலன்கள் மேலும் ஈர துப்புரவாக்கிகள் அல்லது சுழல் தூசி சேகரிப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டு காற்றிலுள்ள துகள் பொருள்களை நீக்க முடியும்.
76. கூற்று (i): நிலைமின்னியல் வீழ்படிவாக்கிகள், புவிஈர்ப்பு படிவு கலன்கள் மேலும் ஈர துப்புரவாக்கிகள் அல்லது சுழல் தூசி சேகரிப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டு காற்றிலுள்ள துகள் பொருள்களை நீக்க முடியும்.
கூற்று (ii): இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் துகள் பொருள்களை கழுவி நீக்குதல் அல்லது வீழ்படிவாக்குதலை அடிப்படையாக கொண்டவை.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
77. புகை மற்றும் மூடுபனி இவற்றின் சேர்க்கையானது_________என்றழைக்கப்படுகிறது.
A) தூசு
B) கரும்புகை
C) பனிப்புகை
D) புகை
விளக்கம்: பனிப்புகை என்பது புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். இது காற்றில் விரவியுள்ள திரவதுளிகளை உருவாக்குகிறது.
78. பனிப்புகை என்பது நகர்ப்புறப்பகுதிகளில்_________புகைமூட்டத்தை உருவாக்கும்.
A) கருப்பு நிற
B) பழுப்பு மஞ்சள் நிற
C) செம்பழுப்பு நிற
D) மஞ்சள் நிற
விளக்கம்: பனிப்புகை என்பது நகர்ப்புறப்பகுதிகளில் பழுப்பு மஞ்சள் நிற புகைமூட்டத்தை உருவாக்கும் வாயுக்களின் வேதிக்கலவையாகும். பனிப்புகையானது பொதுவாக தரைமட்ட ஓசோன், நைட்ரஜனின் ஆக்சைடுகள், எளிதில் ஆவியாகும் கரிச் சேர்மங்கள்,SO2, அமிலத்தன்மை கொண்ட நீர்மகாற்று கரைசல்கள், வாயுக்கள் மற்றும் துகள் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.
79. 1952 ஆம் ஆண்டு முதன் முதலில் தீவிரப் பனிப்புகை உருவான நகரம்____________
A) லண்டன் நகரம்
B) ஷாங்காய் நகரம்
C) லாஸ்ஏஞ்சலஸ் நகரம்
D) நியுயார்க் நகரம்
விளக்கம்: முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு லண்டன் நகரின் தீவிர பனிப்புகை உருவானது, ஆகவே இது லண்டன் பனிப்புகை எனவும் அறியப்படுகிறது. இது நிலக்கரிப்புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
80. தீவிரப் பனிப்புகை என்பது கீழ்க்கண்ட எவற்றின் கலவையாகும்.
A) SO2
B) SO3
C) ஈரப்பதம்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: இது குளிர்ந்த, ஈரப்பதம் நிறைந்த காலநிலையில் உருவாகிறது. இந்த வளிமண்டல பனிப்புகை பல பெரிய நகரங்களிலும் உருவாகிறது. SO2,SO3 மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் கலவையே இதன் வேதிஇயைபு ஆகும். இது பொதுவாக காலையில் நிகழ்கிறது. சூரிய உதயத்திற்கு பிறகு மிகவும் மோசமடைகிறது.
81. கீழ்க்கண்டவற்றுள் தீவிர பனிப்புகையினால் ஏற்படும் விளைவுகளுல் பொருந்தாதது எது.
1) முதன்மையாக, பனிப்புகையானது சலன மழைக்கு காரணமாகிறது.
2) பனிப்புகையானது பார்வைத்திறன் குறைவை ஏற்படுத்துகிறது. இதனால் வான்வெளி மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
3) இது மேலும் மூச்சுக்குழல் எரிச்சலை உருவாக்குகிறது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
82. 1952 இல் நடைபெற்ற பெரும் பனிப்புகையினால் ஏற்பட்ட மிகுந்த பாதிப்பு__________
A) காசநோய்
B) புற்றுநோய்
C) ஆஸ்துமா
D) பார்வைத்திறன் குறைபாடு
விளக்கம்: 1952 ஆம் வருடம் டிசம்பர் மாதம், பிரிட்டிஷ் தலைநகரமான லண்டன் மாநகரத்தை கடுமையாக பாதித்த காற்று மாசுபாட்டு நிகழ்வு “பெரும் பனிப்புகை” என அறியப்படுகிறது. இது 1952 ஆம் வருடம் டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை வரை நீடித்த பனிப்புகையானது பின்னர் காலநிலை மாறியதால் திடீரென கலைந்து சென்றது. வீடுகளின் உட்புறபகுதிகளிலும் நுழைந்து பார்வைத்திறனை குறைத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்த வாரங்களில் வெளியான அரசு மருத்துவ அறிக்கையின்படி, டிசம்பர் 8 ஆம் தேதி வரை பனிப்புகையின் நேரடி பாதிப்பால் 4000 மக்கள் கொல்லப்பட்டதாகவும், பனிப்புகையால் ஏற்பட்ட சுவாசப்பாதை கோளாறுகளால் ஒரு இலட்சம் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கணக்கிடப்பட்டது.
83. 1950 ஆம் ஆண்டு ஒளிவேதிப் பனிப்புகை கீழ்க்கண்ட எந்த நகரத்தில் நடைபெற்றது.
A) லண்டன் நகரம்
B) ஷாங்காய் நகரம்
C) லாஸ்ஏஞ்சலஸ் நகரம்
D) நியுயார்க் நகரம்
விளக்கம்: முதன் முதலில் 1950 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒளிவேதிப் பனிப்புகை உருவானது. இது சூடான, உலர்ந்த மற்றும் சூரியஒளி நிறைந்த காலநிலையில் உருவாகிறது. இவ்வகை பனிப்புகையானது புகை, தூசி மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், ஹைட்ரோகார்பன்கள் போன்ற காற்று மாசுபடுத்திகள் நிரம்பிய மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கையில் சூரிய ஒளி முன்னிலையில் உண்டாகிறது.
84. கீழ்க்கண்டவற்றுள் “ஆக்ஸிஜனேற்ற பனிப்புகை” என்றழைக்கப்படுவது_________
A) 1952 பெரும் பனிப்புகை
B) பெரும் லண்டன் பனிப்புகை
C) ஒளிவேதிப் பனிப்புகை
D) மேற்கண்ட எதுவுமில்லை
85. கூற்று (i): NO மற்றும் O3 ஆகியன வலிமைமிக்க ஆக்சிஜனேற்றிகளாகும்.
கூற்று (ii): மேலும் இவை, மாசுபட்ட காற்றில் உள்ள எரிக்கப்படாத ஹைட்ரோகார்பன்களுடன் வினைப்புரிந்து ஃபார்மால்டிஹைடு, அக்ரோலின் மற்றும் பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட் ஆகியவற்றை உருவாக்க முடியும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
86. கீழ்க்கண்டவற்றுள் ஒளிவேதிப் பனிப்புகையின் மூன்று முக்கிய பகுதிப் பொருட்களுல் அடங்காதது எது.
A) பார்மால்டிஹைடு
B) பெர்ரஸ் அசிட்டைல் நைட்ரேட்
C) அக்ரோலின்
D) பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட்
விளக்கம்: நைட்ரஜன் ஆக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் பெற்ற ஹைட்ரோகார்பன்களான பார்மால்டிஹைடு, அக்ரோலின், பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட் ஆகியன ஒளிவேதிப் பனிப்புகையின் மூன்று முக்கிய பகுதிப் பொருட்களாகும்.
87. கீழ்க்கண்டவற்றுள் ஒளிவேதிப் பனிப்புகையினால் ஏற்படும் விளைவுகளுல் பொருந்தாததைக் கண்டறி:
A) ஒளிவேதிப்பனிப்புகையானது கண், தோல் மற்றும் நுரையீரலில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது, மேலும் ஆஸ்துமா நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
B) இரப்பர் பொருள்கள், ஓசோன் கவர்ச்சி கொண்டவையாகும், மேலும் இவை பனிப்புகையால் வெடிப்பு மற்றும் மங்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
C) குறைந்த செறிவில் உள்ள ஓசோன் மற்றும் NO போன்றவை மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், மார்வலி, சுவாச அடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
D) PAN ஒரு தாவர நச்சாகும், இவை தளிர் இலைகளை தாக்குகின்றன. இதனால் இலைகளின் மேற்பரப்பு பழுப்பு நிறமாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
விளக்கம்: அதிக செறிவில் உள்ள ஓசோன் மற்றும் NO போன்றவை மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், மார்வலி, சுவாச அடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
88. கீழ்க்கண்டவற்றுள் ஒளிவேதிப்பனிப்புகையை கட்டுப்படுத்துதலுக்கான செயல்பாடுகளுல் பொருந்தாததைக் கண்டறி.
1) எஞ்சின்களில் வினையூக்கி மாற்றிகளை பொருத்தி, மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளிப்படும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களை தடுப்பதன் மூலம், ஒளிவேதிப் பனிப்புகையை கட்டுப்படுத்தலாம்.
2) பைனஸ், பைரஸ் குவர்கஸ் வைடஸ் மற்றும் கோனிபெரஸ் போன்ற மரங்களை வளர்த்தல், இவற்றால் ஹைட்ரஜன் ஆக்சைடை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்த முடியும்.
A) 1 சரி,2 தவறு
B) 1 தவறு,2 சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பைனஸ், பைரஸ் குவர்கஸ் வைடஸ் மற்றும் கோனிபெரஸ் போன்ற மரங்களை வளர்த்தல், இவற்றால் நைட்ரஜன் ஆக்சைடை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்த முடியும்.
89. கூற்று (i): அதிக உயரத்தில் நம் வளிமண்டலமானது ஓசோன் படலத்தை கொண்டுள்ளது. இது தீங்குவிளைவிக்கும் ரேடியோ கதிர்வீச்சிலிருந்து பூமியை காக்கும் குடையாக அல்லது கேடயமாக செயலாற்றுகிறது.
கூற்று (ii): இந்த ஓசோன் போர்வையானது, தோல் புற்றுநோய் உருவாதல் போன்ற தீய விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
A) i சரி ii தவறு
B) i தவறு ii சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: அதிக உயரத்தில் நம் வளிமண்டலமானது ஓசோன் படலத்தை கொண்டுள்ளது. இது தீங்குவிளைவிக்கும் UV கதிர்வீச்சிலிருந்து பூமியை காக்கும் குடையாக அல்லது கேடயமாக செயலாற்றுகிறது.
90. கீழ்க்கண்டவற்றுள் ஓசோன் படலம் சிதைவதற்கு காரணமான முக்கிய காரணிகளை கண்டறி.
A) நைட்ரிக் ஆக்சைடு
B) குளோரோ புளோரோ கார்பன்
C) சல்புரிக் ஆக்சைடு
D) AB இரண்டும்
விளக்கம்: சமீப ஆண்டுகளில், இந்த ஓசோன் பாதுகாப்பு படலம் தொடர்ந்து சிதைவடைகிறது எனும் தகவல் பெறப்பட்டுள்ளது. நைட்ரிக் ஆக்சைடு மற்றும் CFC ஆகியன ஓசோன் படலம் சிதைதலுக்கு மிக முக்கிய காரணிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
91. கீழ்க்கண்டக் கூற்றுகளைக் உற்றுநோக்கி சரியானதைக் கண்டறி:
1) ஓசோன் படலத்தை சிதைக்கும் அல்லது அதை மெலிதாக்கும் சேர்மங்கள் பொதுவாக,“ஓசோன் குறைப்பு பொருட்கள்” என்றழைக்கப்படுகின்றன.
2) இவை ODS என சுருக்கமாக குறிப்பிடப்படுகின்றன.
3) உயர் வளிமண்டலத்தில் ஓசோன் மூலக்கூறுகளின் இழப்பானது அடுக்குமண்டல“ஓசோன் சிதைவு”என பெயரிடப்பட்டுள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
92. சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் வெளிவிடும் வாயுக்களின் மூலம் நேரடியாக___________ஆக்சைடுகள் அடுக்குமண்டலத்தில் வெளிவிடப்படுகின்றன.
A) ஹைட்ரஜன் ஆக்சைடு
B) சல்பர் ஆக்சைடு
C) நைட்ரஜன் ஆக்சைடு
D) கார்பன் டையாக்சைடு
விளக்கம்: சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் வெளிவிடும் வாயுக்களின் மூலம் நேரடியாக நைட்ரஜன் ஆக்சைடுகள் அடுக்குமண்டலத்தில் வெளிவிடப்படுகின்றன.
93. பின்வரும் கூற்றுக்ளில் தவறானவற்றைக் கண்டறி:
1) புதைபடிம எரிபொருள்களை எரித்தல் மற்றும் நைட்ரஜன் உரங்கள் மூலமாகவும் நைட்ரஜன் ஆக்சைடுகள் வெளிவிடப் படுகின்றன.
2) வினைதிறன் அற்ற நைட்ரஸ் ஆக்சைடு ஆனது அடுக்குமண்டலத்தில் ஒளிவேதிவினை மூலம் வினைதிறன்மிக்க நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது.
3) நைட்ரஜனின் ஆக்சைடுகள் ஓசோன் சிதைத்தலை தடுக்கின்றன. மேலும் இவை தாமாகவே மீண்டும் உருவாகின்றன.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: நைட்ரஜனின் ஆக்சைடுகள் ஓசோன் சிதைத்தலை ஊக்கப்படுத்துகின்றன. மேலும் இவை தாமாகவே மீண்டும் உருவாகின்றன.
94. மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோபுளுரோ பெறுதிகளானவை______எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன.
A) குளோரின்கள்
B) பிரிமிடியன்கள்
C) நெஃப்ரிடியன்கள்
D) ஃபிரியான்கள்
விளக்கம்: மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோபுளுரோ பெறுதிகளானவை ஃபிரியான்கள் எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன. இந்த குளோரோபுளுரோ கார்பன் சேர்மங்கள் நிலைத்தன்மையுடையவை, நச்சுத் தன்மையற்றவை, அரிக்கும் தன்மையற்றவை, எளிதில் தீப்பற்றாதவை, மற்றும் எளிதில் திரவமாகும் வாயுக்கள். மேலும் இவை குளிர்ப்பதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைப்புகள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
95. குளோரோபுளுரோ கார்பன் கீழ்க்கண்ட எவற்றின் பயன்_______
A) குளிர்பதனப் பெட்டிகள்
B) குளிரூட்டிகள்
C) பிளாஸ்டிக் நுரைப்புகள்
D) மேற்கண்ட அனைத்தும்
96. கீழ்க்கண்டவற்றுள் குளோரோபுளுரோ கார்பன்களின் பண்புகளுல் பொருந்தாததைக் காண்க.
A) நச்சத் தன்மையற்றவை
B) அரிக்கும் தன்மையற்றவை
C) தீப்பற்றும் தன்மை கொண்டவை
D) எளிதில் திரமாகும் வாயுக்கள்
விளக்கம்: எளிதில் தீப்பற்றாதவை.
97. உயர்வளி மண்டல அடுக்குகளில் கீழ்க்கண்ட எதன் மூலம் CFC வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
A) சூப்பர்சானிக் ஜெட்விமானங்கள்
B) ஜம்போஜெட் விமானம்
C) கிரையோஜெனிக்
D) AB இரண்டும்
விளக்கம்: உயர்வளி மண்டல் அடுக்குகளில் பயணிக்கும் சூப்பர்சானிக் ஜெட்விமானங்கள் மற்றும் ஜம்போட்களிலிருந்து CFC வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை அடிவெளிப் பகுதியிலிருந்து மெதுவாக அடுக்கு மண்டலத்திற்கு செல்கின்றன.
98. அடுக்கு மண்டலத்தில் உருவாகும் ஒவ்வொரு வினைதிறன்மிக்க குளோரின் அணுவும்__________ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.
A) 1 லட்சம்
B) 2 லட்சம்
C) 3 லட்சம்
D) 4 லட்சம்
விளக்கம்: அடுக்கு மண்டலத்தில் உருவாகும் ஒவ்வொரு வினைதிறன்மிக்க குளோரின் அணுவும் 1,00,000 ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.
99. சுற்றுச்சூழல் மீது ஓசோன்படல சிதைவின் தாக்கம் பற்றியக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
1) ஓசோன் படம் உருவாதலும், சிதைத்தலும் தொடர்ந்த இயற்கை செயல்முறையாகும், இது ஒருபொழுதும் அடுக்குமண்டலத்தில் உள்ள ஓசோன் சமநிலையை பாதிப்பதில்லை.
2) UV கதிர்வீச்சு தாவர புரதங்களை பாதிக்கின்றன. இது அபாயகரமான செல்பிறழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
3) UV கதிர்வீச்சு தாவர மிதவையுரிகளின் வளர்ச்சியை பாதுகாக்கின்றன. இதனால் கடல்வாழ் உணவுச்சங்கிலி பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. மேலும் இது மீன் உற்பத்தியை அதிகப்படுத்துகறது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: UV கதிர்வீச்சுதாவர மிதவையுரிகளின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இதனால் கடல்வாழ் உணவுச்சுங்கிலி பாதிக்கப்படுகிறது. மேலும் இது மீன் உற்பத்தியை குறைக்கிறது.
100. சுற்றுச்சூழல் மீது ஓசோன்படல சிதைவின் தாக்கம் பற்றியக் கூற்றுகளில் பொருந்துவதைக் கண்டறி:
1) ஓசோன் படல சிதைவானது, அதிகளவு UV கதிர்கள் புவிபரப்பை அடைய அனுமதிக்கும்.
2) ஓசோன் படல சிதைவு தோல் புற்றுநோயை உருவாக்கும்.
3) மேலும் மனிதர்களில் நோய் எதிர்ப்பு நிலையை குறைக்கிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
101. கீழ்க்கண்டவற்றுள் முக்கிய நீர் மாசுபடுத்தி___________
A) பாக்டீரியா
B) வைரஸ்
C) புரோட்டோசோவா
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: பாக்டீரியா, வைரஸ் மற்றும் புரோட்டாசோவாக்கள் போன்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் மிக அபாயகரமான நீர் மாசுபடுத்திகளாகும்.
102. கூற்று (i): மாசுபாட்டுக்கு காரணமான மூலங்களின் தோன்றுமிடம் எளிதில் கண்டறியக்கூடியதாக இருந்தால் அவை கண்டுணர் மூலங்கள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. நகராட்சி (ம) தொழிற்சாலைக் கழிவுநீர்.
கூற்று (ii): கண்டுணரியலா மூலங்களை எளிதில் கண்டறிய இயலாது. எ.கா. விவசாயக் கழிவுநீர்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
103. கீழ்க்கண்டவற்றுள் நீரினால் பரவக்கூடிய நோய்களைக் கண்டறி:
A) போலியோ
B) காலரா
C) புற்றுநோய்
D) AB இரண்டும்
விளக்கம்: போலியோ மற்றும் காலரா போன்ற சிலதீவிர நோய்கள் நீரினால் பரவக்கூடியவை. மனித கழிவானது, இரைப்பை குடல் நோய்களை உருவாக்கக்கூடிய எஸ்செரிசியா கோலி மற்றும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ்ஃபேகாலிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொண்டுள்ளது.
104. இரைப்பைக் குடல் நோய்களை உருவாக்கக்கூடிய பாக்டீரியா_________
A) எஸ்செரிசியா கோலி
B) லேக்டோபேசில்லஸ்
C) ஸ்ட்ரெப்டோ காக்கஸ்ஃபேகாலிஸ்
D) AC இரண்டும்
105. _________தாவரங்கள் அதிகளவில் வளருவதால் நீர்மாசுபாடு உண்டாகிறது.
A) தண்டு மூழ்கியத் தாவரம்
B) வேர் மூழ்கியத் தாவரம்
C) மிதவைத் தாவரம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: இலைகள், புல், குப்பை போன்ற கரிம பொருள்களும் நீரை மாசுபடுத்த முடியும், நீரினுள் மிதவைத் தாவரங்கள் அதிகளவில் வளருவதால் நீர்மாசுபாடு உண்டாகிறது.
106. களைகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள்_______
A) பூச்சிக்கொல்லிகள்
B) கதிரியக்கபொருள்கள்
C) கரிம கழிவுகள்
D) தாவர ஊட்டச்சத்துக்கள்
107. பொருத்துக:
நுண்ணுயிரிகள் மூலங்கள்
A) நுண்ணுயிரிகள் – 1. டிடர்ஜெண்ட்கள்
B) கரிம கழிவுகள் – 2. வேதி உரங்கள்
C) தாவர ஊட்டச்சத்துக்கள் – 3. கன உலோக உற்பத்தி தொழிற்சாலை
D) கன உலோகங்கள் – 4. சாணக்குவியல்
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 1 2 3 4
D) 4 1 2 3
விளக்கம்:
நுண்ணுயிரிகள் மூலங்கள்
A) நுண்ணுயிரிகள் – 1. சாணக்குவியல்
B) கரிம கழிவுகள் – 2. டிடர்ஜெண்ட்கள்
C) தாவர ஊட்டச்சத்துக்கள் – 3. வேதி உரங்கள்
D) கன உலோகங்கள் – 4. கன உலோக உற்பத்தி தொழிற்சாலை
108. பொருத்துக:
நுண்ணுயிரிகள் மூலங்கள்
A) வண்டல் படிவுகள் – 1. குளிர்வித்தலுக்கு பயன்படுகிறது
B) பூச்சிக்கொல்லிகள் – 2. தாதுக்களை வெட்டியெடுத்தல்
C) கதிரியக்கபொருள்கள் – 3. களைகளை கொல்வதற்கு
D) வெப்பம் – 4. மண் அரிப்பு
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
நுண்ணுயிரிகள் மூலங்கள்
A) வண்டல் படிவுகள் – 1. மண் அரிப்பு
B) பூச்சிக்கொல்லிகள் – 2. களைகளை கொல்வதற்கு
C) கதிரியக்கபொருள்கள் – 3. தாதுக்களை வெட்டியெடுத்தல்
D) வெப்பம் – 4. குளிர்வித்தலுக்கு பயன்படுகிறது
109. அதிகப்படியான தாவர வளர்ச்சியைத் தூண்டும் நிகழ்வு________
A) தூர்ந்து போதல்
B) மூழ்குதல்
C) வளர்ச்சி அடைதல்
D) வளர்ச்சி குறைதல்
விளக்கம்: தூர்ந்து போதல் என்பது, நீர் நிலைகள் அதிகப்படியான சத்துக்களை பெறுவதால் அதிகப்படியான தாவர (பாசி மற்றும் மற்றதாவரக்களைகள்) வளர்ச்சியை தூண்டும் நிகழ்வு ஆகும். நீர் நிலைகளில் ஏற்படும் இந்த அதீத தாவர வளர்ச்சியானது பாசிபடர்தல் என்றழைக்கப்படுகிறது.
110. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானவற்றைக் கண்டறி:
1) BOD ஆனது நீர் மாசுபாட்டின் அளவை குறிப்பிடப் பயன்படுகிறது.
2) தூயநீரின் BOD மதிப்பு 5 ppm ஐ விட அதிகமாக இருக்கும்.
3) அதே சமயம் மாசுபட்ட நீரின் BOD மதிப்பு 17 ppm அல்லது அதற்கு குறைவாக இருக்கக்கூடும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: BOD ஆனது நீர் மாசுபாட்டின் அளவை குறிப்பிடப் பயன்படுகிறது. தூயநீரின் BOD மதிப்பு 5 ppm ஐ விட குறைவாக இருக்கும். அதே சமயம் மாசுபட்ட நீரின் BOD மதிப்பு 17 ppm அல்லது அதற்கு அதிகமாக இருக்கக்கூடும்.
111. குறிப்பட்ட நீர் மாதிரியிலுள்ள கரிம பொருட்களை, அமில ஊடகத்தில்,2 மணிநேர கால இடைவெளியில்,K2Cr2O7 போன்ற வலிமையான ஆக்ஸிஜனேற்றி கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவானது________என வரையறுக்கப்படுகிறது.
A) உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை
B) வேதி ஆக்ஸிஜன் தேவை
C) உயிர்வேதி நைட்ரஜன் தேவை
D) வேதி நைட்ரஜன் தேவை
112. வேதி நீர்மாசுபடுத்திகளின் தீயவிளைவுகளுல் பொருந்தாததைக் கண்டறி:
1) காட்மியம் மற்றும் மெர்குரி ஆகியவற்றால் சிறுநீரக சேதத்தை ஏற்படுத்த முடியும்.
2) லெட் நச்சால் சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளில் தீவிர பாதிப்புகளை உண்டாக்க முடியும், மேலும் இது தண்டு வட நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது
3) பாலி குளோரினேற்றம் செய்யப்பட்ட பைபீனைல்கள் தோல் நோய்களை உருவாக்குகின்றன, மேலும் இவை புற்றுநோய்க்காரணிகளாகவும் செயல்படுகின்றன.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: லெட் நச்சால் சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளில் தீவிர பாதிப்புகளை உண்டாக்க முடியும், மேலும் இது மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
113. குடிநீரில் புளுரைடு பற்றாக்குறை_________தோற்றுவிக்கிறது.
A) எலும்புசிதைவு
B) மூட்டுவலி
C) பற்சிதைவு
D) தோல்சிதைவு
விளக்கம்: குடிநீரில் புளுரைடு பற்றாக்குறை பற்சிதைவை தோற்றுவிக்கிறது. இத்தகைய நிகழ்வுகளில் நீரில் கரையும் புளுரைடுகளை சேர்த்து புளுரைடு அயனிச் செறிவு 1 ppm வரை உயர்த்தப்படுகிறது.
114. கீழ்க்கண்டக் கூற்றுகளுல் சரியானதைக் கண்டறி:
1) புளுரைடு அயனிகள், பற்களின் மேற்பரப்பில் உள்ள ஹைட்ராக்ஸி அபடைட் ஐ மேலும் மிகக் கடினமான புளுரோ அபடைட்டாக மாற்றுவதன் மூலமாக எனாமலை கடினமாக்குகின்றன.
2) எனினும் புளுரைடு அயனிச்செறிவு 2 ppm க்கு அதிகமாக இருப்பின் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகளை தோற்றுவிக்கிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
115. அதிகப்படியான புளுரைடு மனித உடலில்__________ற்கு சேதத்தை உருவாக்குகிறது.
A) எலும்புகள்
B) தோல்
C) பற்கள்
D) AC இரண்டும்
116. பொருத்துக: (இந்திய தரநிலை அமைச்சகம் 1991)
பண்பியல்புகள் விரும்பத்தக்க எல்லை
A) PH – 1. 45 ppm
B) மொத்த கரைந்த திண்மங்கள் – 2. 6.5 to 8.5
C) மொத்த கடினத்தன்மை – 3. 300 ppm
D) நைட்ரேட் – 4. 500 ppm
A) 2 4 3 1
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
A) PH – 1. 6.5 to 8.5
B) மொத்த கரைந்த திண்மங்கள் – 2. 500 ppm
C) மொத்த கடினத்தன்மை – 3. 300 ppm
D) நைட்ரேட் – 4. 45 ppm
117. இந்திய தரநிலை அமைச்சகம் 1991 – ன் படி சரியற்ற இணையைக் கண்டறி:
பண்பியல்புகள் விரும்பத்தக்க எல்லை
A) குளோரைடு – 250
B) சல்பேட் – 200
C) புளுரைடு – 1
D) எஸ்செரிச்சியாகோலி – 5
விளக்கம்:
பண்பியல்புகள் விரும்பத்தக்க எல்லை
A) குளோரைடு – 250
B) சல்பேட் – 200
C) புளுரைடு – 1
D) எஸ்செரிச்சியாகோலி – இல்லை
118. குடிநீரில் லெட்மாசுக்களின் அளவானது 50 ppb க்கு அதிகமாக இருப்பதானால் ஏற்படும் குறைபாடுகளின் போது கீழ்க்கண்ட எந்த உறுப்பினைப் பாதிப்பதில்லை.
A) கல்லீரல்
B) சிறுநீரசம்
C) மண்ணீரல்
D) இனப்பெருக்கமண்டலம்
விளக்கம்: குடிநீரில் லெட்மாசுக்கள் அளவானது 50 ppb க்கு அதிகமாக இருப்பின் இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும்இனப்பெருக்கமண்டலம் ஆகியவற்றிற்கு பாதிப்பை உண்டாக்குகிறது.
119. கூற்று (i): இயல்பான அளவு சல்பேட் தீங்கு விளைவிப்பதில்லை.
கூற்று (ii): குடிநீரில் சல்பேட்டுகள் குறைந்த செறிவில் இருப்பின் மல மிளக்குதல் விளைவை உண்டாக்குகிறது.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: இயல்பான அளவு சல்பேட் தீங்கு விளைவிப்பதில்லை. குடிநீரில் சல்பேட்டுகள் குறைந்த செறிவில் இருப்பின் மல மிளக்குதல் விளைவை உண்டாக்குகிறது.
120. குழந்தைகளுக்கு “இரத்த இரும்புக் கனிமக் குறைவு நோய்” ஏற்படக் காரணம்_________
A) 45 ppm க்கும் குறைவான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடிநீரை பயன்படுத்துவதால்
B) 45 ppm க்கும் அதிகமான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடிநீரை பயன்படுத்துவதால்
C) 55 ppm க்கும் குறைவான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடிநீரை பயன்படுத்துவதால்
D) 75 ppm க்கும் அதிகமான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடிநீரை பயன்படுத்துவதால்
விளக்கம்: 45 ppm க்கும் அதிகமான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடிநீரை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு “இரத்த இரும்புக் கனிமக் குறைவு” நோய் (நீலக்குழந்தை நோய்க்குறி) உண்டாகலாம்.
121. கீழ்க்கண்டவற்றுள் நேரயணிகொண்ட உப்புகளில் பொருந்தாததைக் காண்க:
A) கால்சியம்
B) மெக்னீசியம்
C) பொட்டாசியம்
D) பாஸ்பேட்
விளக்கம்: பெரும்பாலான உப்புகள் நீரில் கரையக் கூடியவை. இவை கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு ஆகிய நேரயனிகளையும், கார்பனேட், பைகார்பனேட், குளோரைடு, சல்பேட், பாஸ்பேட், நைட்ரேட் போன்ற எதிரயனிகளையும் உள்ளடக்கியவை.
122. கீழ்க்கண்டவற்றுள் எதிரயணிகொண்ட உப்புகளில் பொருந்தாததைக் காண்க:
A) கார்பனேட்
B) பொட்டாசியம்
C) பைகார்பனேட்
D) குளோரைடு
123. மொத்த கரைந்த திண்மங்களின் செறிவு 500 ppm க்கு அதிகமாக உள்ள குடிநீரை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் உறுப்பு________
A) வயிறு
B) கல்லீரல்
C) குடல்
D) AC இரண்டும்
124. கீழ்க்கண்டவற்றுள் மண் பற்றியக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
A) மண் என்பது, பூமியின் பாறை மேற்பரப்பை மூடியுள்ள, கரிம மற்றும் கனிம பொருள்களால் ஆன மெல்லிய அடுக்கு ஆகும்.
B) மண் பூமியின் மேலடுக்காக அமைந்துள்ளது.
C) இது நிலம், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆதாரமாக உள்ளது.
D) தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் நச்சுப்பொருள்கள், கதிர்வீச்சுப் பொருள்கள் மற்றும் நோயுண்டாக்கும் காரணிகள் விடாப்பிடியாக மண்ணில் உருவாக்கப்படும் நிகழ்ச்சி காற்று மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.
விளக்கம்: தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் நச்சுப்பொருள்கள், கதிர்வீச்சுப் பொருள்கள் மற்றும் நோயுண்டாக்கும் காரணிகள் விடாப்பிடியாக மண்ணில் உருவாக்கப்படும் நிகழ்ச்சி மண் மாசுபாடு என வரையறுக்கப்படுகிறது.
125. மண்மாசுபாடானது கீழ்க்கண்டவற்றுள் எவற்றினைப் பாதிப்பதில்லை?
A) மண்ணின் அமைப்பு
B) மண் வளம்
C) கடல்வாழ் உயிரினங்கள்
D) நிலத்தடி நீரின் தரம்
விளக்கம்: மண்மாசுபாடானது, மண்ணின் அமைப்பு, மண் வளம், நிலத்தடி நீரின் தரம் மற்றும் உயர்ச்சூழல் அமைப்பில் காணப்படும் உணவுச் சங்கிலி ஆகியவற்றை பாதிக்கின்றன.
126. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டதைக் காண்க.
A) கார்பன்
B) ஹைட்ரஜன்
C) பாஸ்பேட்
D) ஆக்சிஜன்
விளக்கம்: மண்ணில் காணப்படும் சத்துக்கள் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன. தாவரங்கள் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை காற்று மற்றும் நீரிலிருந்து பெறுகின்றன. அதே சமயம், நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீஷியம், சல்பர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன.
127. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டதைக் காண்க.
A) கார்பன்
B) நைட்ரஜன்
C) பொட்டாசியம்
D) மெக்னீசியம்
128. கீழ்க்கண்டவற்றுள் செயற்கை உரங்களுல் அல்லாதது_______
A) நைட்ரஜன்
B) தாவரக் கழிவுகள்
C) பாஸ்பரஸ்
D) பொட்டாசியம்
விளக்கம்: மண்ணில் காணப்படும் சத்து குறைபாட்டை நீக்குவதற்காக விவசாயிகள், செயற்கை உரங்களை சேர்க்கின்றனர். மண்ணில், அதிகரிக்கப்பட்ட பாஸ்பேட் உரங்களின் பயன்பாடு அல்லது NPK போன்ற செயற்கை உரங்களின் அதிகப்படியான பயன்பாடு, விளைச்சலை குறைக்க வழிவகை செய்கிறது.
129. கீழ்க்கண்டவற்றுள் பூச்சிக்கொல்லிகளுல் அல்லாதது எது.
A) DDT
B) BHC
C) போர்டாக்ஸ் கலவை
D) ஆல்டிரின்
விளக்கம்: DDT,BHC, ஆல்டிரின் போன்ற பூச்சிக்கொல்லிகளால் மண்ணில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியும், இவை மண்ணினால் உறிஞ்சப்படுகின்றன. இவை கேரட், முள்ளங்கி போன்ற வேர்த் தாவரங்களை மாசுபடச் செய்கின்றன.
130. கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சைக்கொல்லி எது.
A) DDT
B) போர்டாக்ஸ்கலவை
C) BHC
D) ஆல்டிரின்
விளக்கம்: பொதுவாக கரிம மெர்குரி சேர்மங்கள் பூஞ்சைக் கொல்லிகளாக பயன்படுத்தப்படுகின்றன. அவை நீரில் கரைந்து அதிக நச்சுத்தன்மையுடைய மெர்குரியை உருவாக்குகின்றன.
131. கீழ்க்கண்டவற்றுள் களைக்கொல்லிகளாக பயன்படுத்தபடுபவை எவை.
A) சோடியம் குளோரேட்
B) சோடியம் ஆர்சினைட்
C) ஆல்டிரின்
D) AB இரண்டும்
விளக்கம்: களைக் கொல்லிகள் என்பவை, தேவையற்ற பயிர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் ஆர்சினைட். பெரும்பாலான களைக்கொல்லிகள் பாலூட்டிகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன.
132. கீழ்க்கண்டவற்றுள் களைக்கொல்லிகளாக பயன்படுத்தபடுபவை எவை.
A) ஆல்டிரின்
B) NaCl3
C) Na3AsO3
D) BC இரண்டும்
133. சுரங்க தொழில் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள்________மாசுபாட்டில் மிகப்பெரிய பங்களிக்கின்றன.
A) வெப்ப மாசுபாடு
B) காற்று மாசுபாடு
C) மண் மாசுபாடு
D) கதிர்வீச்சு மாசுபாடு
விளக்கம்: தொழிற்சாலை நடவடிக்கைகள், குறிப்பாக சுரங்க தொழில் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் மண் மாசுபாட்டில் மிகப்பெரிய பங்களிக்கின்றன.
134. கீழ்க்கண்டவற்றுள் தொழிற்சாலைக்கழிவுகளில் அடங்காதவை எது.
A) சயனைடுகள்
B) குரோமேட்டுகள்
C) தாவரகழிவுகள்
D) காட்மியம்
விளக்கம்: தொழிற்சாலைகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் என்பவை சயனைடுகள், குரோமேட்டுகள், காரங்கள் மற்றும் மெர்குரி, காப்பர், ஜிங்க், காட்மியம் மற்றும் லெட் போன்ற உலோகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த தொழிற்சாலைக்கழிவுகள் மண்பரப்பில் நீண்ட காலத்திற்கு நீடித்து, மண்ணை பயன்படுத்த தகுதியற்றதாக மாற்றுகின்றன.
135. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுபடுத்த மேற்கொள்ள வேண்டிய உத்திகளுல் பொருந்தாததைக் கண்டறி:
A) கழிவு மேலாண்மை செய்தல்
B) மறுசுழற்சி செய்தல்
C) அதிக மரங்களை வளர்த்தல்
D) அதிகளவு சல்பரை கொண்டுள்ள எரிபொருட்களை பயன்படுத்துதல்
136. ஸ்டைரினானது கீழ்க்கண்ட எந்த வழிமுறைகளில் தயார் செய்யப்படுகிறது.
A) மரபுவழி
B) பசுமைவழி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மரபுவழி மற்றும் பசுமைவழி ஆகிய இரண்டு வழிமுறைகளில் ஸ்டைரீன் தயாரிக்கும் வினைகளை நோக்குவதன் மூலம் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
137. கூற்று (i): புற்றுநோய் உண்டாக்கக்கூடிய பென்சீன், எத்திலீனுடன் வினைப்பட்டு எத்தில் பென்சீனை தருகிறது. பின்னர் எத்தில் பென்சீன் ஆனது ஐ பயன்படுத்தி ஹைட்ரஜன் நீக்கம் செய்யப்பட்டு ஸ்டைரீன் கிடைக்கிறது.
கூற்று (ii): புற்றுநோய் உண்டாக்கக்கூடிய பென்சீனை தவிர்ப்பதற்காக, விலைமலிந்த மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான சைலீன்களை கொண்டு பசுமை வழியில் ஸ்டைரின் கிடைக்கிறது.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
138. உலர்சலவை மூலம் துணிகளை வெளுத்தலில் பயன்படுத்தப்படும்_________ஆனது நிலத்தடி நீரை மாசடையச் செய்கிறது.
A) டை குளோரோ எத்திலின்
B) ட்ரை குளோரோ எத்திலின்
C) டெட்ரா குளோரோ எத்திலின்
D) டெட்ரா குளோரோ மெத்திலின்
விளக்கம்: உலர்சலவை மூலம் துணிகளை வெளுத்தலில் பயன்படுத்தப்படும் டெட்ராகுளோரோ எத்திலீன் நிலத்தடி நீரை மாசடையச் செய்கிறது. மேலும் இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாகும். டெட்ராகுளோரோ எத்திலீனுக்கு மாற்றாக, திரவமாக்கப்பட்ட CO2 ஐ தருந் டிடர்ஜெண்ட உடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
139. வழக்கமான வெளுக்கும் முறையானது___________னை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டது.
A) ப்ளுரின்
B) புரோமின்
C) குளோரின்
D) மேற்கண்ட எதுவுமில்லை
140. பெட்ரோலுக்கு பதிலாக, வாகனங்களில்________எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
A) எத்தனால்
B) மெத்தனால்
C) ஆல்கஹால்
D) ஹைட்ரஜன்
விளக்கம்: பெட்ரோலுக்கு பதிலாக, வாகனங்களில் மெத்தனால் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
141. ஹைட்ரோகார்பனைவிட அதிக பாதுகாப்பான பூச்சிக் கொல்லி_______
A) வேங்கை சார்ந்த பூச்சிக்கொல்லி
B) வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி
C) BHC சார்ந்த பூச்சிக்கொல்லி
D) DDT சார்ந்த பூச்சிக்கொல்லி
விளக்கம்: வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை குளோரினேற்றம் செய்யப்பட்ட ஹைட்ரோகார்பன்களைவிட மிக அதிக பாதுகாப்பானவை.
142. உலக சுற்றுச்சூழல் தினம்__________
A) மார்ச் 5
B) ஏப்ரல் 5
C) மே 5
D) ஜீன் 5
விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
143. கீழ்க்கண்டவற்றுள் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் எவை.
A) வீணான காய்கறிகள்
B) விவசாயக் கழிவுகள்
C) நெகிழி பொருள்கள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் மாசுபடுத்திகளானவை, பொதுவாக விரைவாக மக்கக்கூடியவை (எ.கா வீணான காய்கறிகள்), மெதுவாக மக்கக்கூடியவை (எ.கா விவசாயக் கழிவுகள்) மற்றும் மக்காத மாசுபடுத்திகள் (எ.கா DDT, நெகிழி பொருள்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
144. வளிமண்டல மாசுபாடு என்பது கீழ்க்ண்ட எந்த மண்டலத்தில் உண்டாவதை குறிக்கிறது.
A) வெப்ப மண்டலம்
B) அடுக்கு மண்டலம்
C) அடிவெளி மண்டலம்
D) BC இரண்டும்
விளக்கம்: வளிமண்டல மாசுபாடு என்பது அடிவெளிமண்டல மற்றும் அடுக்கு மண்டல மாசுபாடுகளை உள்ளடக்கியது. அடிவெளிமண்டலம் மற்றும் அடுக்கு மண்டலம் இரண்டும் பூமியின் உயிர்க்கோளத்தை வெகுவாக பாதிக்கின்றன.
145. கீழ்க்கண்டவற்றுள் அடிவளி மண்டலத்தை மாசுபடுத்தும் காரணியைக் கண்டறி.
A) CO
B) CO2
C) O3
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: அடிவெளிமண்டலம் என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் வளிமண்டலத்தின் அடிப்பகுதியாகும். Sox,NOx,CO, CO2O3, ஹைட்ரோகார்பன்கள் போன்ற வாயு மாசுபடுத்திகளும், தூசி, மூடுபனி, கரும்புகை, பனிப்புகை போன்ற துகள் மாசுபடுத்திகளும் அடிவெளிமண்டலத்தை மாசுபடுத்தகின்றன.
146. கீழ்க்கண்டவற்றுள் பசுமைக்குடில் வாயு___________
A) CO2
B) CH2
C) O3
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: புவி வெப்பமடைதல் செயல்முறையானது பசுமைக்குடில் விளைவு அல்லது உலக வெப்பமாதல். என அறியப்படுகிறது. வளிமண்டலத்தில் காணப்படும் CO2,CH4,O3CFC,N2 மற்றும் நீராவி ஆகியன பசுமைக்குடில் வாயுக்களாக செயலாற்றுகின்றன.
147. கீழ்க்கண்டக்கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) அடுக்கு மண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலமானது, அபாயகரமான UV கதிர்வீச்சிலிருந்து உயிரினங்களை பாதுகாக்கிறது.
2) ஆனால் மனிதர்கள் பயன்படுத்தும் ஓசோன் குறைப்பு பொருள்களானவை ஓசோன் படலத்தை சிதைக்கின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
148. ஓசோன் படல பாதுகாப்பு தினம்_________
A) ஆக்ஸ்ட் 16
B) செப்டம்பர் 16
C) அக்டோபர் 16
D) நவம்பர் 16
149. கீழ்க்கண்டவற்றுள் சரியானக் கூற்றினைத் தேர்ந்தெடு.
1) மக்கிய இலை தழைகளாலான போர்வையால் மூடப்பட்ட வளிகோளம் மண் எனப்படுகிறது.
2) மண்ணின் மேற்பரப்பு தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
3) தொழிற்சாலைகள், செயற்கை உரங்கள், நுண்ணுயிர்க்கொல்லிகள் ஆகியன மண் மாசுபாட்டை உண்டுபண்ணுகின்றன.
A) 1, 2 மட்டும் சரி
B) 2, 3 மட்டும் சரி
C) 1, 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: மக்கிய இலை தழைகளாலான போர்வையால் மூடப்பட்ட கற்கோளம் மண் எனப்படுகிறது.
150. கீழ்க்கண்டவற்றுள் கழிவுகளின் வடிவங்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) திண்மம்
B) திரவம்
C) பிளாஸ்மா
D) வாயு
விளக்கம்: சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கும் உத்திகளில், கழிவு மேலாண்மையானது, கழிவுகளின் அளவை குறைத்தல் மற்றும் அவற்றை முறையாக அகற்றுதல் ஆகும். திண்மம், நீர்மம் மற்றும் வாயுக்கழிவுகள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.
151. கூற்று (i): சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதிப்பொருட்களை தொகுப்பதற்காக, அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தும் முயற்சியே கரிம வேதியியல் என்றழைக்கப்படுகிறது.
கூற்று (ii): பசுமை வேதியியல் என்பது சூழலுக்குகந்த வேதிப்பொருள்களை தொகுக்கும் அறிவியல் ஆகும்.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதிப்பொருட்களை தொகுப்பதற்காக, அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தும் முயற்சியே பசுமை வேதியியல் என்றழைக்கப்படுகிறது.
152. பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறை வளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி____________
A) அடிவெளிப்பகுதி
B) மத்திய அடுக்கு
C) வெப்ப அடுக்கு
D) அடுக்கு மண்டலம்
153. பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
A) காட்டுத் தீ
B) வெள்ளம்
C) அமில மழை
D) பசுமைக்குடில் விளைவு
154. போபால் வாயு துயரம் என்பது________இன் விளைவு ஆகும்.
A) வெப்ப மாசுபாடு
B) காற்று மாசுபாடு
C) கதிர்வீச்சு மாசுபாடு
D) நில மாசுபாடு
155. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்_________உடன் கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.
A) கார்பன் டையாக்சைடு
B) கார்பன் டெட்ரா குளோரைடு
C) கார்பன் மோனாக்சைடு
D) கார்பானிக் அமிலம்
156. பசுமைக்குடில்வாயுக்களின் தொடர்வரிசையில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது.
A) CFC > N2O > CO2 > CH4
B) CFC > CO2 > N2O > CH4
C) CFC > N2O > CH4 > CO2
D) CFC > CH4 > N2O > CO2
157. நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக_______ஐ கொண்டுள்ளது.
A) ஓசோன்,SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்
B) ஓசோன்,PAN மற்றும் NO2
C) PAN, புகைமற்றும் SO2
D) ஹைட்ரோகார்பன்கள்,SO2 மற்றும் CO2
158. ஓசோன் படல சிதைவு உருவாக்குவது_________
A) காட்டுத்தீ
B) தூர்ந்துபோதல்
C) உயிர் பெருக்கம்
D) உலக வெப்பமயமாதல்
159. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.
A) தூய நீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.
B) பசுமைக்குடில் விளைவு ஆனது உலக வெப்பமயமாதல் எனவும் அழைக்கப்படுகிறது.
C) காற்றிலுள்ள நுண்ணிய திண்ம துகள்கள், துகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
D) உயிர்க்கோளம் ஆனது பூமியை சூழ்ந்துள்ள பாதுகாப்பு போர்வையாகும்.
160. CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது, ஏனெனில்
A) உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.
B) திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது.
C) ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.
D) இரத்தத்தை உலரவைக்கிறது.
161. மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள்_________ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.
A) சரளை அறை
B) துப்புரவாக்கிகள்
C) சொட்டுநீர் பிரிப்பான்கள்
D) வினையூக்கி மாற்றிகள்
162. உயிர்வேதி ஆக்சிஜன் தேவை அளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது
A) அதிகளவில் மாசுபட்டுள்ளது
B) குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்
C) அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது
D) குறைந்த COD
163. பொருத்துக:
A) ஓசோன் படல சிதைவு – 1. CO2
B) அமிலமழை – 2. NO
C) ஒளி வேதிப் பனிப்புகை – 3. SO2
D) பசுமைக்குடில் விளைவு – 4. CFC
A) 2 1 3 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
A) ஓசோன் படல சிதைவு – 1. CFC
B) அமிலமழை – 2. SO2
C) ஒளி வேதிப் பனிப்புகை – 3. NO
D) பசுமைக்குடில் விளைவு – 4. CO2
164. பொருத்துக:
A) கல்குஷ்டம் – 1. CO
B) உயிர்ப் பெருக்கம் – 2. பசுமைக்குடில் வாயுக்கள்
C) உலக வெப்பமயமாதல் – 3. அமிலமழை
D) ஹீமோகுளோபினுடன் இணைதல் – 4. DDT
A) 2 1 3 4
B) 3 4 2 1
C) 4 3 2 1
D) 4 1 2 3
விளக்கம்:
A) கல்குஷ்டம் – 1. அமிலமழை
B) உயிர்ப் பெருக்கம் – 2. DDT
C) உலக வெப்பமயமாதல் – 3. பசுமைக்குடில் வாயுக்கள்
D) ஹீமோகுளோபினுடன் இணைதல் – 4. CO
165. கூற்று (i): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.
கூற்று (ii): உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.
A) i மற்றும் ii சரி. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் ஆகும்.
B) i மற்றும் ii இரண்டும் சரி,. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் அல்ல.
C) i மற்றும் ii இரண்டும் தவறு
D) i சரி ஆனால் ii தவறு
166. கூற்று (i): குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பர்டு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
காரணம் (ii): இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.
A) i மற்றும் ii சரி,. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் ஆகும்.
B) i மற்றும் ii இரண்டும் சரி,. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் அல்ல.
C) i மற்றும் ii இரண்டும் தவறு
D) i சரி ஆனால் ii தவறு
167. கூற்று (i): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.
காரணம் (i): அடிவெளிமண்டலமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை.
A) i மற்றும் ii சரி. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் ஆகும்.
B) i மற்றும் ii இரண்டும் சரி,. மேலும் ii ஆனது i க்கான சரியான விளக்கம் அல்ல.
C) i மற்றும் ii இரண்டும் தவறு
D) i சரி ஆனால் ii தவறு
11th Science Lesson 8 Questions in Tamil
8] வேதிப் பிணைப்புகள்
1. 1954 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர்________
A) கினாட் லூயிஸ் பெர்த்தோலெட்
B) பிரான்சுவா – மேரி ரௌலட்
C) லீனஸ் கார்ல் பௌலிங்
D) லூயிஸ் கார்ல் பெர்லிங்
விளக்கம்: லீனஸ் கார்ல் பௌலிங் ஒரு அமெரிக்க வேதியயியலாளர், உயிர் வேதியியல் அறிஞர், அமைதிக்கான செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். வேதிப்பிணைப்புகளின் இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான வடிவமைப்பினை வருவித்தலில் அவற்றின் பயன்பாடு பற்றிய ஆற்விற்காக 1954 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
2. 1954 ஆம் ஆண்டு லீனஸ் கார்ல் பௌலிங் என்பவர் கீழ்க்கண்ட எந்த ஆய்விற்காக நோபல் பரிசுப் பெற்றார்.
A) இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான தன்மையைக் கண்டறிந்ததற்காக
B) இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களின் தன்மையை விளக்கி கூறியதற்காக
C) இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான வடிவமைப்பினை வருவித்ததற்காக
D) இயல்பு மற்றும் சிக்கலான தனிமங்களின் தன்மையைக் கண்டறிந்ததற்காக
3. 1916 ஆம் ஆண்டு வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறையை முன்மொழிந்தவர்கள்__________
A) கோசல்
B) பெர்லிங்
C) லூயிஸ்
D) AC இரண்டும்
விளக்கம்: 1916ல் வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறை கோசல் மற்றும் லூயிஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. மந்த வாயுக்கள் பிற அணுக்களுடன் வினைபுரியாத அல்லது அரிதாக வினைபுரியும் தன்மையைப் பெற்று மந்தத் தன்மையுடன் இருப்பதன் அடிப்படையில் வேதிப்பிணைப்பு உருவாதலை இவ்வறிவியல் அறிஞர்கள் அணுகினார்கள்.
4. கூற்று (i): மந்த வாயுக்கள் முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை பெற்றிருப்பதால் அவைகள் குறைந்த நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன.
கூற்று (ii): மந்த வாயுக்களைத் தவிர்த்த பிற தனிமங்கள் தங்கள் வெளிக்கூட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழத்தல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது பங்கிடுதல் ஆகியவற்றின் மூலம் நிலைப்புத் தன்மையை பெற முயல்கின்றன.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: மந்த வாயுக்கள் முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை பெற்றிருப்பதால் அவைகள் அதிக நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன.
5. கீழ்க்கண்ட கூற்றுக்களை உற்றுநோக்கி சரியானவற்றைக் கண்டறி:
கூற்று 1: சோடியம் ஒரு எலக்ட்ரானை இழப்பதன் மூலம் Na+ அயனி உருவாகிறது. அது இழக்கும் எலக்ட்ரானை குளோரின் ஏற்றுக் கொண்டு Cl– அயனி உருவாகிறது.
கூற்று 2: இதன் விளைவாக இரண்டு அணுக்களும் தங்களுக்கு அருகே உள்ள மந்த வாயுக்களின் நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெறுகின்றன.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
6. கீழ்க்கண்டவர்களுல் ஈரணு மூலக்கூறுகளான நைட்ரஜன் ஆக்சிஜன் போன்றவற்றில், அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான்களின் பரிமாற்ற பங்கீட்டினால் அவைகள் நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன என்ற கருத்தினை முன்மொழிந்தவர்.
A) பிரான்சுவா – மேரி ரௌலட்
B) லூயிஸ் கார்ல் பெர்லிங்
C) கோசல்
D) G. N. லூயிஸ்
7. நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு__________
A) 1s2, 2s2, 2p
B) 1s2, 2s2
C) 1s2, 2s2, 2p3
D) 1s2, 2s2, 2p4
விளக்கம்: நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்புஇது ஐந்து இணைதிற எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளது.
8. கீழ்க்கண்டவர்களுல் யாருடைய அணுகுமுறையானது எண்மவிதி உருவாக காரணமாக அமைந்தது
A) G. N. லூயிஸ்
B) H. W. பெர்லிங்
C) கோசல் – லூயிஸ்
D) கார்ல் பௌலிங்
விளக்கம்: வேதிப்பிணைப்பு பற்றிய கோசல் – லூயிஸ் அணுகுமுறையானது எண்மவிதி உருவாக காரணமாக அமைந்தது.
9. வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்து அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில்________எலக்ட்ரான்களை பெற்றிருக்க வேண்டும்.
A) ஆறு
B) எட்டு
C) ஒன்பது
D) பத்து
விளக்கம்: ஒரு வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்து அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் வகையில் தங்களுக்குள் எலக்ட்ரான்களை பரிமாற்றம் அல்லது பங்கீடு செய்து கொள்கின்றன.
10. பொதுவாக உலோகங்கள், அலோகங்களுடன் வினைபுரியும்போது________பிணைப்பினை உருவாக்குகின்றன.
A) சகப்பிணைப்பு
B) அயனிப்பிணைப்பு
C) ஈதல் சகப்பிணைப்பு
D) எந்த பிணைப்பினையும் உண்டாக்குவதில்லை
விளக்கம்: பொதுவாக உலோகங்கள், அலோகங்களுடன் வினைபுரியும் போது அயனிப்பிணைப்புகளை உருவாக்குகின்றன மேலும் அலோகங்கள் உருவாக்கும் சேர்மங்களில் சகப்பிணைப்பு காணப்படுகிறது.
11. அலோகங்கள் உருவாக்கும் சேர்மங்கள்_________பிணைப்பினை கொண்டிருக்கும்.
A) சகப்பிணைப்பு
B) அயனிப்பிணைப்பு
C) ஈதல் சகப்பிணைப்பு
D) எந்த பிணைப்பினையும் உண்டாக்குவதில்லை
12. __________யை தவிர்த்து பிற அனைத்து தனிமங்களும் சேர்மங்களாகவோ அல்லது பல்லணு மூலக்கூறுகளாகவோ காணப்படுகின்றன.
A) கார உலோகம்
B) கார மண் உலோகம்
C) மந்த வாயுக்கள்
D) அலோகங்கள்
விளக்கம்: மந்த வாயுக்களை தவிர்த்து பிற அனைத்து தனிமங்களும் சேர்மங்களாகவோ அல்லது பல்லணு மூலக்கூறுகளாகவோ காணப்படுகின்றன.
13. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க:
மூலக்கூறுகள் இணைதிறன் எலக்ட்ரான்கள்
1) நீர் மூலக்கூறு – 8
2) HNO3 – 24
3) CO2 – 24
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்:
மூலக்கூறுகள் இணைதிறன் எலக்ட்ரான்கள்
1) நீர் மூலக்கூறு – 8
2) HNO3 – 24
3) CO2 – 16
14. அயனிப்பிணைப்புப் பற்றியக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:
கூற்று (i): எலக்ட்ரான்கள் முற்றிலுமாக பரிமாற்றம் செய்யப்படுவதால் நேர் மற்றும் எதிர் மின் சுமையுடைய அயனிகள் உருவாகின்றன.
கூற்று (ii): இவ்விரு அயனிகளும் வலிமை மிக்க மின்நிலையியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று பிரிக்கப்படுகின்றன.
A) கூற்று i சரி,ii தவறு
B) கூற்று i தவறு,ii சரி
C) கூற்று i,ii இரண்டும் சரி
D) கூற்று i,ii இரண்டும் தவறு
விளக்கம்: எலக்ட்ரான்கள் முற்றிலுமாக பரிமாற்றம் செய்யப்படுவதால் நேர் மற்றும் எதிர் மின் சுமையுடைய அயனிகள் உருவாகின்றன. இவ்விரு அயனிகளும் வலிமை மிக்க மின்நிலையியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றன. இப்பிணைப்பு அயனிப்பிணைப்பு எனப்படுகிறது.
15. ஒரு சகப்பிணைப்பானது கீழ்க்கண்ட எந்த காரணிகளால் வரையறுக்கப்படுகிறது.
A) பிணைப்பு நீளம்
B) பிணைப்புக் கோணம்
C) பிணைப்புத் தரம்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: ஒரு சகப்பிணைப்பானது பிணைப்பு நீளம், பிணைப்புக் கோணம், பிணைப்புத் தரம் போன்ற அளவீட்டுக் காரணிகளால் வரையறுக்கப்படுகிறது.
16. சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு__________எனப்படுகிறது.
A) பிணைப்பு நீளம்
B) பிணைப்புக் கோணம்
C) பிணைப்புத் தரம்
D) பிணைப்பு ஆற்றல்
விளக்கம்: சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் எனப்படுகின்றது.
17. அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது, பிணைப்பு நீளமானது________ஆக இருக்கும்.
A) மிகக்குறைவாக
B) குறைவாக
C) அதிகமாக
D) மிக அதிகமாக
விளக்கம்: அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது, பிணைப்பு நீளம் அதிகமாக இருக்கும். எ.கா. கார்பன் – கார்பன் ஒன்றை பிணைப்பின் நீளமானது (1.54 Å) கார்பன் – நைட்ரஜன் ஒன்றை பிணைப்பின் நீளத்தைக் (1.43 Å) காட்டிலும் அதிகமாகும்.
18. இரு அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பிணைப்பு நீளம்________ஆக இருக்கும்.
A) மிகக்குறைவாக
B) குறைவாக
C) மிக அதிகமாக
D) அதிகமாக
விளக்கம்: இரு அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பிணைப்பு நீளம் குறைவாக இருக்கும். எ.கா. கார்பன் ஒற்றை பிணைப்பு நீளம் (1.54 Å) கார்பன் – கார்பன் முப்பிணைப்பு நீளம் (1.20 Å) கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகம்.
19. ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை__________என்றழைக்கப்படுகிறது.
A) பிணைப்பு நீளம்
B) பிணைப்புக் கோணம்
C) பிணைப்புத் தரம்
D) பிணைப்பு ஆற்றல்
விளக்கம்: ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது. லூயிஸ் கொள்கையில், பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களுக்கிடையே சமமாகப் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையே பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது.
20. கீழ்க்கண்டவற்றுள் பிணைப்புக்கோணம் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:
A) சகப்பிணைப்புகள் திசைப்பண்புடையவை அவைகள் புறவெளியில் குறித்த திசையினை நோக்கி அமைகின்றன.
B) இத்திசைப் பண்பின் காரணமாக ஒரு மூலக்கூறின் இருசகப் பிணைப்புகளுக் கிடையே குறிப்பிட்ட நிலையான கோணம் உருவாகிறது. இக்கோணம் பிணைப்புக்கோணம் என்றழைக்கப்படுகிறது.
C) இது வழக்கமாக (0) குறிப்பிடப்படும்
D) நிறப்பிரிகை முறைகளைப் பயன்படுத்தி பிணைப்புக் கோணத்தைக் கண்டறியலாம்.
விளக்கம்: நிறமாலை முறைகளைப் பயன்படுத்தி பிணைப்புக் கோணத்தைக் கண்டறியலாம்.
21. வாயுநிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு_______என வரையறுக்கப்படுகிறது.
A) பிணைப்பு நீளம்
B) பிணைப்புக் கோணம்
C) பிணைப்புத் தரம்
D) பிணைப்பு ஆற்றல்
விளக்கம்: வாயுநிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு பிணைப்பு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
22. பிணைப்பு ஆற்றலின் அலகு___________
A)KJ-1
B) KJmol-1
C) KJmol-2
D) KJ-3
23. கீழ்க்கண்டவற்றுள் பிணைப்பு ஆற்றல் பற்றியக் கூற்றுகளுல் சரியானதைக் கண்டறி:
1) பிணைப்பு ஆற்றலின் மதிப்பு அதிகமெனில், பிணைப்பின் வலிமை அதிகம்.
2) பிணைக்கப்பட்டிருக்கும் அணுக்களின் உருவளவு மற்றும் அவைகளுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பொறுத்து பிணைப்பு ஆற்றல் அமையும்.
3) பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுவின் உருவளவு அதிகம் எனில், பிணைப்பு ஆற்றலின் மதிப்பு அதிகமாகும்.
A) 1 2 மட்டும் சரி
B) 2 3 மட்டும் சரி
C) 1 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுவின் உருவளவு அதிகம் எனில், பிணைப்பு ஆற்றலின் மதிப்பு குறைவாகும்.
24. ஒரு சகப்பிணைப்பின் முனைவுத் தன்மையை அளவிட பயன்படும் இருமுனை திருப்புத் திறனின் சமன்பாடு___________
A) µ = q × 2d
B) µ = q + 2d
C) q = µ × 2d
D) µ = q – 2d
விளக்கம்: ஒரு சகப்பிணைப்பின் முனைவுத் தன்மையை இருமுறை திருப்புத் திறனின் அடிப்படையில் அளவிட இயலும் இது µ = q × 2d என்று வரையறுக்கப்படுகிறது. இங்கு µ என்பது இருமுனை திருப்புத் திறனையும்,q என்பது மின்சுமை மற்றும் 2d என்பது இரு மின்சுமைகளுக்கு இடையேயானத் தொலைவினையும் குறிப்பிடுகின்றன.
25. இருமுனை திருப்புத் திறனின் அலகு__________
A) கூலூம் சென்டிமீட்டர்
B) கூலூம் மில்லிமீட்டர்
C) கூலூம் மீட்டர்
D) கூலூம் கிலோமீட்டர்
விளக்கம்: இருமுனை திருப்புத் திறனின அலகு கூலூம் மீட்டர்(Cm), இது பொதுவாக டிபை அலகில் (π) குறிப்பிடப்படுகிறது.
26. ஒரு டிபை என்பது___________
A) 3.336 × 10-30 Cm
B) 4.556 × 10-30 Cm
C) 6.436 × 10-30 Cm
D) 9.536 × 10-30 Cm
27. கீழ்க்கண்டவற்றுள் பூஜ்ய இருமுனைதிருப்புத் திறன் அற்ற மூலக்கூறு எது?
A) H2
B) O2
C) F2
D) CO
விளக்கம்: H2, O2, F2 போன்ற ஈரணு மூலக்கூறுகள் பூஜ்ய இருமுனைதிருப்புத் திறனைப் பெற்றுள்ளன. மேலும் இவைகள் முனைவற்ற மூலக்கூறுகள் எனப்படுகின்றன.
28. இருமுனை திருப்புத் திறனானது ஒரு________அலகாகும்.
A) வெக்டார்
B) ஸ்கேலார்
C) கெல்வின்
D) வெக்டார் மற்றும் ஸ்கேலார்
விளக்கம்: இருமுனை திருப்புத் திறனானது ஒரு வெக்டார் அளவீடாகும். இவ்வெக்டாரின் திசையானது எதிர்மின் சுமையிலிருந்து நேர்மின்சுமையினை நோக்கி அமையும்.
29. HF ஆனது________பிணைப்புத் தன்மையுடதாகும்.
A) முனைவுற்ற சகப்பிணைப்பு
B) அயனி பிணைப்பு
C) முனைவுள்ள சகப்பிணைப்பு
D) ஈதல் சகப்பிணைப்பு
விளக்கம்: HF பிணைப்பானது முனைவுற்ற சகப்பிணைப்பு என அழைக்கப்படுகிறது. இங்கு, மிகச் சிறிய சமமான எதிர் எதிர் மின்சுமையுடைய மின்சுமைகள் மிகச்சிறிய தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு இருமுனை என அழைக்கப்படுகிறது.
30. கீழ்க்கண்டவற்றுள் பூஜ்யமற்ற இருமுனை திருப்புத்திறன் அல்லாத மூலக்கூறினை கண்டறி.
A) HF
B) CO
C) NO
D) H2
விளக்கம்: HF, HCl, CO, NO போன்ற மூலக்கூறுகள் பூஜ்யமற்ற இருமுனை திருப்புத்திறன் மதிப்புகளைப் பெற்றுள்ளன. இத்தகைய மூலக்கூறுகள் முனைவுற்ற மூலக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
31. அயனிச் சேர்மங்களில் எந்த அளவிற்கு முனைவாக்கம் நிகழ்கிறது என்பதனை___________விதி மூலம் அறியலாம்.
A) ஹேல்ஸ் விதி
B) பெஜனான்ஸ் விதி
C) ஃபெரல் விதி
D) மேற்கண்ட எதுவுமில்லை
32. கீழ்க்கண்டவற்றுள் முனைவற்ற மூலக்கூறு எது?
A) HCl
B) F2
C) HF
D) CO
33. கீழ்க்கண்டவற்றுள் முனைவுற்ற மூலக்கூறு எது?
A) H2
B) O2
C) NO
D) F2
34. பெஜான்ஸ் விதிகளுல் பொருந்தாததைக் கண்டறி:
A) அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டுமெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் குறைவாக இருக்க வேண்டும்.
B) நேர் அயனியின் மீதுள்ள மின்சுமை அதிகமாக இருப்பின், எதிர் அயனியின் எலக்ட்ரான் மேகத்தின் மீது செலுத்தும் கவர்ச்சி விசையும் அதிகமாக இருக்கும்.
C) இதைப் போலவே எதிர் அயனியின் மீதுள்ள எதிர் மின்சுமையின் எண்மதிப்பு அதிகம் எனில் அதன் முனைவாகும் திறன் அதிகம்.
D) நேர் அயனி அல்லது எதிர் அயனியின் மின்சுமை அதிகமாக இருப்பின் சகப்பிணைப்புத் தன்மை அதிகரிக்கும்.
விளக்கம்: அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டுமெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் அதிகமாக இருக்க வேண்டும்.
35. இணைதிறன் எலக்ட்ரான் இரட்டை விலக்கல் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளுல் பொருந்தாதது எது.
1) மைய அணுவை சுற்றி காணப்படும் இணைதிற கூடு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து மூலக்கூறின் வடிவம் அமைகிறது.
2) எலக்ட்ரான் இரட்டைகள் இருவகைப்படும். அவை பிணைப்பு எலக்ட்ரான் இரட்டை மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை ஆகும்.
3) பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான் இரட்டைகள் பிணைப்பு இரட்டை எலக்ட்ரான்கள் எனப்படுகிறது. அதே நேரத்தில் பிணைப்பில் ஈடுபடாத அணுவின் இணைதிற எலக்ட்ரான்களின் இரட்டையினை தனித்த எலக்ட்ரான் எனப்படுகிறது.
4) மைய அணுவினை சூழ்ந்துள்ள ஒவ்வொரு எலக்ட்ரான் இரட்டையும் தங்களுக்குள் ஒன்றையொன்று விலக்குகின்றன. எனவே, அவைகளுக்கிடையேயான விலக்குவிசையினை எந்த அளவிற்கு சிறுமமாக்க இயலுமோ அதற்கேற்ப முப்பரிமாண வெளியில் விலகி அமைகின்றன.
A) 1 2 3 மட்டும் தவறு
B) 2 3 4 மட்டும் தவறு
C) 1 3 4 மட்டும் தவறு
D) மேற்கண்ட எதுவுமில்லை
36. ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலுக்கான கருத்தியல் வழிமுறையை முன்மொழிந்தவர்_______
A) ஹைய்ட்லர்
B) லண்டன்
C) லூயிஸ்
D) AB இரண்டும்
விளக்கம்: எலக்ட்ரானின் அலை இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் ஹைய்ட்லர் மற்றும் லண்டன் ஆகிய அறிவியல் அறிஞர்கள் ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலுக்கான கருத்தியல் வழிமுறையை முன்மொழிந்தனர்.
37. ஹைய்ட்லர் மற்றும் லண்டன் ஆகியோர் ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலைக் கீழ்க்கண்ட கொள்கையின் அடிப்படையில் முன்மொழிந்தனர்.
A) நியூட்ரானின் அலை இயக்கவியல் கொள்கை
B) புரோட்டான்களின் அலை இயக்கவியல் கொள்கை
C) எலக்ட்ரான்களின் அலை இயக்கவியல் கொள்கை
D) மேற்கண்ட எதுவுமில்லை
38. எலக்ட்ரான் அலை இயக்கவியல் கொள்கையினை மேம்படுத்திய அறிவியல் அறிஞர்கள்___________
A) ஹைய்ட்லர்
B) பாலிங்
C) ஸ்லேட்டர்
D) BC இரண்டும்
39. மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்றழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கிய அறிஞர்கள்.
A) பாலிங்
B) F. ஹீண்ட்
C) ராபர்ட் S. முல்லிகன்
D) BC இரண்டும்
விளக்கம்: F. ஹீண்ட் மற்றும் ராபர்ட் S. முல்லிகன் ஆகிய அறிஞர்கள் மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்றழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கினார்கள். இக்கொள்கையானது மூலக்கூறுகளின் காந்தப் பண்பினை விளக்கியது.
40. ஆர்பிட்டால் கொள்கையின் முக்கிய அம்சங்களுல் பொருந்தாதது எது.
A) அணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்கும் போது, அவைகளின் அணு ஆர்பிட்டால்கள் தங்களது தனித்தன்மையை ஏற்கின்றன. மேலும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றழைக்கப்படும் புதிய ஆர்பிட்டால்கள் உருவாகின்றன.
B) இணையும் அணு ஆர்பிட்டால்களின் வடிவத்தனைப் பொறுத்து, உருவாகும் மூலக்கூறு ஆர்பிட்டால்களின் வடிவங்கள் அமைகின்றன.
C) இணைகின்ற அணு ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையும் உருவான மூலக்கூறு ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையும் சமம்.
D) மூலக்கூறில் உள்ள எலக்ட்ரான்கள் புதிதாக உருவான மூலக்கூறு ஆர்பிட்டால்களில் நிரப்பப்படுகின்றன.
விளக்கம்: அணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்கும் போது, அவைகளின் அணு ஆர்பிட்டால்கள் தங்களது தனித்தன்மையை இழக்கின்றன. மேலும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றழைக்கப்படும் புதிய ஆர்பிட்டால்கள் உருவாகின்றன.
41. ஆர்பிட்டால்களில் கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுகின்றன.
A) ஆஃபா தத்துவம்
B) பௌலி தவிர்க்கைத் தத்துவம்
C) ஹீண்ட் விதி
D) மேற்கண்ட அனைத்தும்
42. உலோகங்களின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:
A) உலோகங்கள் பளபளப்புத் தன்மை கொண்டது.
B) அதிக அடர்த்தி கொண்டது.
C) மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தக்கூடியதாகும்.
D) கம்பியாக நீட்ட முடியாது.
விளக்கம்: தட்டையாக்குதல் மற்றும் கம்பியாக நீட்டுதல் ஆகிய சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன.
43. உலோகங்களின் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:
1) உலோகங்கள் அதிக கொதிநிலைக் கொண்டது.
2) உலோகங்கள் குறைந்த உருகுநிலைக் கொண்டது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: உலோகங்கள் அதிக உருகுநிலைக் கொண்டது.
44. உலோகப் படிகத்தில் உலோக அணுக்களை மிக அருகில் நெருங்கி அமைந்திருக்க காரணமாக அமையும் விசை_______என அறியப்படுகிறது.
A) உலோகத்தன்மை
B) உலோகத்திறன்
C) உலோகநெடுக்கம்
D) உலோகபிணைப்பு
விளக்கம்: உலோகப் படிகத்தில் உலோக அணுக்களை மிக அருகில் நெருங்கி அமைந்திருக்க காரணமாக அமையும் விசை உலோகப்பிணைப்பு என அறியப்படுகிறது. இது அயனிப்பிணைப்பு அல்ல.
45. முதன் முதலில் உலோகப்பிணைப்பை விளக்கிக் கூறிய அறிவியல் அறிஞர்கள்__________
A) கார்லாக்
B) ட்ரூட்
C) லாரன்ஸ்
D) BC இரண்டும்
விளக்கம்: முதன்முதலில் உலோகப்பிணைப்பை விளக்க ட்ரூட் மற்றும் லாரன்ஸ் ஆகியோர்களால் ஒரு கொள்கை முன்மொழியப்பட்டது. இக்கொள்கைப்படி கட்டுறாத எலக்ட்ரான் வாயுவில் நேர்மின்சுமையுடைய அயனிகள் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.
46. இணைதிறன் எலக்ட்ரான்கள் உலோகத்தின் அனைத்து அயனிகளாலும் பங்கிடப்படுவதால் உலோகப்பிணைப்பானது_________பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
A) நியூட்ரானிக் பிணைப்பு
B) புரோட்டானிக் பிணைப்பு
C) எலக்ட்ரானிக் பிணைப்பு
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: இணைதிறன் எலக்ட்ரான்கள் உலோகத்தின் அனைத்து அயனிகளாலும் பங்கிடப்படுவதால் உலோகப்பிணைப்பானது எலக்ட்ரானிக் பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது. கட்டுறா எலக்ட்ரான்கள் ஒன்றையொன்று விளக்குவதால் உலோக அயனிகளைச் சுற்றி அவைகள் சீராக விரவியுள்ளன. இக் கொள்கையின்படி உலோகங்களின் பல்வேறு இயற்பண்புகளை விளக்க இயலும் எனினும் சில வரம்புகள் உள்ளன.
47. தாமிரம், வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களைத் தவிர்த்து பெரும்பாலான உலோகங்கள்_________நிறமுடையவை ஆகும்.
A) வெண்மை
B) மஞ்சள்
C) கருமை
D) வெளிர்மஞ்சள்
விளக்கம்: தாமிரம், வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களைத் தவிர்த்து பெரும்பாலான உலோகங்கள் கருமை நிறமுடையவை. ஏனெனில் அனைத்து அலைநீளமுடைய ஒளிகளையும் உலோகங்கள் உட்கவர்கின்றன. இந்த அனைத்து அலைநீள ஒளிகளை உட்கவர்தலுக்கு பட்டை இடைவெளி இல்லாதிருப்பதே காரணமாக அமைகிறது.
48. பின்வரும்சேர்மங்களில், எதில் உள்ள அணுவானது எண்மவிதிக்கு கட்டுப்படவில்லை?
A) XeF4
B) AlCl3
C) SF6
D) SCl2
49. OA = C = OB, மூலக்கூறில்,OA, C மற்றும் OB ஆகியவற்றின்மீதுள்ள முறைசார் மின் சுமைகள் முறையே
A) -1, 0, +1
B) +1, 0, -1
C) -2, 0,+2
D) 0, 0, 0
50. பின்வருவனவற்றுள் π பிணைப்பை கொண்டிராத மூலக்கூறு எது?
A) SO2
B) NO2
C) CO2
D) H2O
51. பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் குறைச் சேர்மம்?
A) PH3
B) (CH3)2
C) BH3
D) NH3
52. 2-பியுட்டைனலில் (2-butynal) உள்ள சிக்மா(σ) மற்றும் பை(π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ள விகிதம்.
A) 8/3
B) 5/3
C) 8/2
D) 9/2
53. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று, சல்பர்டெட்ராபுளுரைடு மூலக்கூறின் பிணைப்புக் கோணங்களாக இருக்கலாம்?
A) 1200,800
B) 1090,28
C) 900
D) 890,1170
54. கூற்று (A): ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.
காரணம் (R) : அது, அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்களை கொண்டுள்ளது.
A) கூற்று A மற்றும் காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R ஆனது கூற்று A க்கான சரியான விளக்கம்.
B) கூற்று A மற்றும் காரணம் R இரண்டும் சரி, மேலும் காரணம் R ஆனது கூற்று A க்கான சரியான விளக்கமல்ல.
C) கூற்று A சரி ஆனால் காரணம் R தவறு
D) கூற்று A மற்றும் காரணம் R இரண்டும் தவறு
55. இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே பிணைப்பு உருவாவது.
A) முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
B) சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
C) பிணைப்பில் ஈடுபடாத அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
D) காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது
56. ClF3, NF3மற்றும் BF3மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள்
A) sp3இனக்கலப்பிலுள்ளன.
B) முறையே sp3, sp3மற்றும் sp2இனக்கலப்பிலுள்ளன.
C) sp2இனக்கலப்பிலுள்ளன
D) முறையே sp3d, sp3மற்றும் spஇனக்கலப்பிலுள்ளன.
57. ஒரு s மற்றும் மூன்று p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,
A) ஒன்றுக்கொன்று 900 ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும்
B) ஒன்றுக்கொன்று 1090 28ʹ-ல் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும்.
C) ஒரே தளத்தில் அமைந்துள்ள நான்கு சமான ஆர்பிட்டால்கள் உருவாக்கப்படும்
D) இவற்றில் எதுவுமில்லை
58. பின் வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்தசரியான வரிசையை குறிப்பிடுகிறது.
A) C2< C2 2-< O2 2-< O2
B) C2 2-< C2 +< O2< O2 2-
C) O2 2-< O2< C2 2-< C2 +
D) O2 2-< C2 +< O2< C2 2-
59. PCl5இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்
A) s, px, py, dx2, dx2-y2
B) s, px, py, pxy, dx2-y2
C) s, px, py, pz, dx2-y2
D) s, px, py, dxy, dx2-y2
60. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
A) H2O2> O3> O2
B) O2> O3> H2O2
C) O2> H2O2> O3
D) O3> O2> H2O2
61. பின்வருவனவற்றில் எந்த ஒன்றுடையா காந்தத்தன்மை கொண்டது?
A) O2
B) O2 2-
C) O2 +
D) இவற்றில் எதுவுமில்லை
62. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
A) மூன்று
B) நான்கு
C) பூஜ்ஜியம்
D) கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது.
63.மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு
A) முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d2
B) முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d
C) சதுரபிரமிடு வடிவம், Sp3d2
D) எண்முகி வடிவம், Sp3d2
64. பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றை தேர்ந்தெடு
A) Sp3இனக்கலப்பு ஆர்பிட்டால்கள்சமமானவை மேலும் அவை ஒன்றுக்கொன்று 1090 28ʹகோணத்தில் அமைந்துள்ளன.
B) dsp2இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 900
C) ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3dஇனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 1200, கோணத்திலும், மீதமுள்ள இரண்டு ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.
D) இவற்றில் எதுவுமில்லை
65. ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
A) SeF4, XeO2, F2
B) SF4, XeF2
C) XeOF4, TeF4
D) SeCl4, XeF4
66. பின்வரும் மூலக்கூறுகள் / அயனிகளில் BF3, NO2, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது?
A) NH2–மற்றும் H2O
B) NO2–மற்றும் H2O
C) BF3மற்றும் NO2–
D) BF3மற்றும் NH2–
67. இரண்டு அயனிகள் NO3–மற்றும் H3O+ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?
A) வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன.
B) ஒத்த வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.
C) ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.
D) இவற்றில் எதுவுமில்லை
68.பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.
A) sp3, sp2, sp, sp2, sp3
B) sp3, sp, sp, sp, sp3
C) sp2, sp, sp2, sp2, sp3
D) sp3, sp3, sp2, sp3, sp3
69. Xe F2ஆனது_________உடன் ஒத்த வடிவமுடையது.
A) SbCl2
B) BaCl2
C) TeF2
D) ICl2–
70. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s–பண்பு சதவீதங்கள் முறையே
A) 25, 25, 33.3, 50
B) 50, 50, 33.3, 25
C) 50, 25, 33.3, 50
D) 50, 25, 25, 50
71. பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?
A) SnCl2
B) NO2
C) C2 H2
D) இவை அனைத்தும்
72.கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விலக்கம்________வரிசையில் அமைகிறது.
A) l.p – l.p>b.p – b.p>l.p – b.p
B) b.p – b.p>b.p – l.p>l.p – b.p
C) l.p – l.p>b.p – l.p>b.p – b.p
D) b.p – b.p>l.p – l.p>b.p – l.p
73. ClF3இன் வடிவம்
A) முக்கோண சமதளம்
B) பிரமிடுவடிவம்
C) “T” வடிவம்
D) இவற்றில் எதுவுமில்லை
74. பூஜ்ஜீயமற்ற இரு முனை திருப்புத் திறனைக் காட்டுவது
A) CO2
B) p–டைகுளோரோபென்சீன்
C) கார்பன் டெட்ராகுளோரைடு
D) நீர்
75. பின்வரும் நிபந்தனைகளில் எது உடனிசைவு அமைப்புகளுக்கு சரியானது அல்ல?
A) பங்கேற்கும் வடிவமைப்புகள் கண்டிப்பாக ஒரே எண்ணிக்கையிலான தனித்த எலக்ட்ரான்களை கொண்டிருக்க வேண்டும்
B) பங்கேற்கும் வடிவமைப்புகள் ஒத்த ஆற்றல்களை கொண்டிருக்க வேண்டும்.
C) உடனிசைவு இனக்கலப்பு வடிவமைப்பானது, பங்கேற்கும் எந்த அமைப்பை விடவும் அதிக ஆற்றலை கொண்டிருக்க வேண்டும்.
D) இவற்றில் எதுவுமில்லை
76. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்
A) NH4Cl
B) NH3
C) NaCl
D) இவற்றில் ஏதுமில்லை
77. CaOமற்றும் NaCl ஆகியன ஒரே படிக அமைப்பையும், ஏறத்தாழ ஒரே ஆரத்தையும் கொண்டுள்ளன. NaCl இன் படிகக்கூடு ஆற்றலை U எனக்கொண்டால்,CaOஇன் தோராயபடிகக்கூடு ஆற்றல் மதிப்பு
A) U
B) 2U
C) U/2
D) 4U
78. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
மூலக்கூறு பிணைப்புக்கோணம்
1) CH4 – 1090 28ʹ
2) NH3 – 1070 18ʹ
3) H2O – 1080 35ʹ
A) 1 2 மட்டும் சரி
B) 2 3 மட்டும் சரி
C) 1 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்:
மூலக்கூறு பிணைப்புக்கோணம்
1) CH4 – 1090 28ʹ
2) NH3 – 1070 18ʹ
3) H2O – 1040 35ʹ
79. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
மூலக்கூறு கோணம் வரையறுக்கப்படும் பிணைப்பு
1) CH4 – H-C-H
2) NH3 – H=N=H
3) H2O – H-O-H
A) 1மட்டும் தவறு
B) 2மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D)அனைத்தும் தவறு
விளக்கம்:
மூலக்கூறு கோணம் வரையறுக்கப்படும் பிணைப்பு
1) CH4 – H-C-H
2) NH3 – H-N-H
3) H2O – H-O-H
80. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை
A) H2 – 1
B) O2 – 2
C) N2 – 3
D) HCN – 6
விளக்கம்:
மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை
A) H2 – 1
B) O2 – 2
C) N2 – 3
D) HCN – 3
81. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை
1) HCHO – 2
2) CH4 – 1
3) C2H4 – 4
A) 1 2 மட்டும் சரி
B) 2 3 மட்டும் சரி
C) 1 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்:
மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை
1) HCHO – 2
2) CH4 – 1
3) C2H4 – 2
82. பொருத்துக:
மூலக்கூறு பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள்
A) H2 – 1. C-H
B) O2 – 2. C=O
C) HCHO – 3. H-H
D) CH4 – 4. O=O
A) 1 2 3 4
B) 4 3 1 2
C) 3 4 2 1
D) 3 4 1 2
விளக்கம்:
மூலக்கூறு பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள்
A) H2 – 1. H-H
B) O2 – 2. O=O
C) HCHO – 3. C=O
D) CH4 – 4. C-H