TnpscTnpsc Current Affairs

11th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் காணப்பட்ட புனௌரா தாம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பீகார் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • பீகாரில் அமைந்துள்ள புனௌரா தாம், ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்தின் இராமாயண சுற்றில் சேர்க்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது. பீகாரில் வைஷாலியில் தீர்த்தங்கர் சுற்று – அர்ரா – மசாத் – பாட்னா – இராஜ்கிர் – பவாபுரி – சம்பாபுரி, ஆன்மீக சுற்றுலா சுல்தாங்கஞ்ச் – தர்மஷாலா – தியோகர் மற்றும் புத்த கயாவில் உள்ள பௌத்த சுற்றுலா உட்பட பல சுற்றுலாத் தலங்கள் இத்திட்டத்தில் உள்ளன.

2. “The $10 Trillion Dream” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) ரகுராம் ராஜன்

ஆ) சுபாஷ் சந்திர கார்க் 

இ) உர்ஜித் படேல்

ஈ) அரவிந்த் சுப்ரமணியன்

  • முன்னாள் நிதிச்செயலர் சுபாஷ் சந்திர கார்க், “The $10 Trillion Dream” என்ற நூலை எழுதியுள்ளார். இது இன்று இந்தியா எதிர்கொள்ளும் கொள்கைச் சிக்கல்களை ஆய்ந் -து, 2030’களின் இடைப்பகுதியில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான சீர்திருத்தங்களை இது பரிந்துரைக்கிறது.
  • ஓர் இந்திய குடிமைப்பணி அதிகாரியான S C கார்க், கடந்த 2019இல் நிதிச்செயலராக நியமிக்கப்பட்டார்.

3. ‘லாக்பிட் 2.0’ குழு, எந்த நாட்டின் நீதி அமைச்சகத்தின் மீது சைபர் தாக்குதலை நடத்தியது?

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ் 

இ) ரஷ்யா

ஈ) சீனா

  • ‘லாக்பிட் 2.0’ எனப்படும் குழுவின் சைபர் தாக்குதலால் பிரான்சின் நீதி அமைச்சகம் பாதிக்கப்பட்டுள்ளது. அக்குழு அவ்வமைச்சகத்தின் கோப்புகளைப்பூட்டி, அதனை மீட்க வேண்டுமெனில் பிரான்ஸ் அரசாங்கம் பிணைத்தொகை தரவேண்டும் என வேண்டியது. இத்தாக்குதல்குறித்து அந்நாடு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

4. ‘தேசிய மருந்தாக்கத்தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER)’ என்பது எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகும்?

அ) சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்

ஆ) இரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகம் 

இ) கல்வி அமைச்சகம்

ஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

  • தேசிய மருந்தாக்கத் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) என்பது இந்தியாவின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு பொதுத் துறை மருந்து ஆராய்ச்சி நிறுவனமாகும்.
  • மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் மான்சுக் மாண்டவியா, அனைத்து ஏழு NIPER’கள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றிய தகவல்க
    -ளைப் பரப்புவதற்காக NIPER ஆராய்ச்சி வலைதளத்தைத் தொடங்கினார்.

5. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனைத் தொடர்ந்து இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

அ) உர்ஜித் படேல்

ஆ) ஜீன் டிரேஸ்

இ) கௌசிக் பாசு

ஈ) V ஆனந்த நாகேஸ்வரன் 

  • இந்திய அரசாங்கம் அதன் தலைமைப் பொருளாதார ஆலோசகராக V ஆனந்த நாகேஸ்வரனை நியமனம் செய்துள்ளது. அவர் IFMR வணிகப்பள்ளியின் தலைவராக பணியிலிருந்தார். 2019-2021 வரை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் பகுதிநேர உறுப்பி -னராகவும் இருந்தார். வரவிருக்கும் கருத்துக்கணிப்பு முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டதாகும்.

6. சியோமாரா காஸ்ட்ரோ, பின்வரும் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) பகாமாஸ்

ஆ) கோண்டுராஸ் 

இ) மொராக்கோ

ஈ) துனிசியா

  • நடுவமெரிக்க நாடான கோண்டுராஸ், ஆளுங்கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டதையடுத்து, அதன் முதல் பெண் அதிபரான சியோமாரா காஸ்ட்ரோவை தேர்வு செய்யவுள்ளது. இடதுசாரி லிப்ரே கட்சியின் வேட்பாளரான திருமதி காஸ்ட்ரோ, எதிர்க்கட்சி வேட்பாளரைவிட 20% புள்ளிகள் முன்னிலை பெற்றார். வலதுசாரி தேசியக்கட்சி அதன் 12 ஆண்டுகால ஆட்சி முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்டது.

7. ஆண்டுதோறும் ‘உலக சமய நல்லிணக்க வாரம்’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ) ஜனவரி

ஆ) பிப்ரவரி 

இ) டிசம்பர்

ஈ) நவம்பர்

  • 2010ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபை அறிவித்ததிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாத முதல் வாரத்தின்போது ‘உலக சமய நல்லிணக்க வாரம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு மக்களிடையே அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக உலக சமய-சர்வமத நல்லிணக்க வாரத்தை பொதுச்சபை, நிறுவியது.
  • இந்த ஆண்டு, “Interfaith Pandemic Recovery” என்னும் முழக்கத்தின்கீழ் இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

8. ‘ஸ்வச்சதா சாரதி பெல்லோஷிப்-2022’ஐ அறிவித்த நிறுவனம்/அலுவலகம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் 

இ) IIT – மெட்ராஸ்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • ‘ஸ்வச்சதா சாரதி பெல்லோஷிப் – 2022’ ஆனது இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் அதன் ‘வேஸ்ட் டூ வெல்த்’ திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டது.
  • ‘ஸ்வச்சதா சாரதிகள்’ என்ற பாத்திரத்தில், கழிவு மேலாண்மை சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேஸ்ட் டூ வெல்த்’ பணி என்பது பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவின் 9 தேசிய பணிகளில் ஒன்றாகும்.

9. “ராஷ்ட்ரிய யுவ சசக்திகரன் காரியக்ரம்” என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?

அ) இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டமைச்சகம் 

ஆ) கல்வி அமைச்சகம்

இ) திறன் மேம்பாட்டமைச்சகம்

ஈ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

  • “ராஷ்ட்ரிய யுவ சசக்திகரன் காரியக்ரம்” 15ஆவது நிதி ஆணைய சுழற்சியில் (2021-22 முதல் 2025-26 வரை) `2,710.65 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. RYSK திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மையான திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் பயனாளிகள் 15-29 வயதுக்குட்பட்ட இளையோராவர். அந்தந்த துறைகளில் சிறந்து விளங்க இளைஞர்களை ஊக்குவிப்பதும், அவர்களின் ஆற்றலை தேசியககட்டமைப்பிற்கு பயன்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

10. 2022’இல் நேரு டிராபி படகுப்போட்டி நடைபெறும் இடம் எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஆ) இலங்கை

இ) மாலத்தீவுகள்

ஈ) மொரிஷியஸ்

  • கேரளத்தின் ஆலப்புழையில் நடைபெறும் புகழ்பெற்ற நேரு டிராபி படகுப்போட்டி, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் நடைபெறவுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மர்ஜான் தீவில் பன்னாட்டு கடல்சார் விளையாட்டுக்கள் சங்கம் ராஸ் அல் கைமாவுடன் இணைந்து மார்ச்சில் இந்தப் பந்தயத்தை நடத்தவுள்ளது. ஜவகர்லால் நேரு, கடந்த 1952இல் கேரள படகுப்போட்டிக்கு வருகை தந்ததை அடுத்து இந்தப் பந்தயத்தின் பெயர் இவ்வாறு அமைக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கரோனா எதிரொலி: பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடு 7.8%ஆக குறைப்பு

கரோனா இடர்ப்பாடுகளின் காரணமாக வரும் நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.8%ஆக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

பணவியல் கொள்கைக்குழுவின் முடிவுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கை குழுவில் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களில் பழைய நிலையே தொடர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4%ஆக தொடரும். அதேபோன்று இதர வணிக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாகவே நீடிக்கும்.

பொருளாதார வளர்ச்சி: COVID பேரிடர், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுபோன்ற சாதகமற்ற அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8%ஆகவே இருக்கும் எனக்கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் எதிர்பார்க்க -ப்பட்ட 9.2% சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான விகிதமாகும்.

பணவீக்கம்: நடப்பு நிதியாண்டில் நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது 5.3%ஆக இருக்கும் எனத்தெரிவிக்கப்ப -ட்டுள்ள நிலையில், வரும் மார்ச்சில் தொடங்கவுள்ள 2022-23ஆம் நிதியாண்டில் இது 4.5%ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாதகமான பருவநிலை, புதிய பயிர்களின் வரத்து ஆகியவை பணவீக்கம் குறைவதற்கு முக்கிய காரணிகளாக விளங்கும்.

எண்ம பற்றுச்சீட்டு: ஈ-ரூபி எனப்படும் எண்ம (டிஜிட்டல்) பற்றுச்சீட்டுக்கான (வௌச்சர்) உச்சவரம்பு தற்போதைய `10,000இலிருந்து `1 இலட்சமாக அதிகரிக்கப்படுவதுடன், பன்முறை பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி அச்சுறுத்தல்: நாட்டின் பொருளாதாரம் & நிதி ஸ்திரத்தன்மைக்கு தனியார்களின் கிரிப்டோகரன்சி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த 2 முனைகளிலிருந்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்
-கான திறனை கிரிப்டோகரன்சி குறைப்பதாக உள்ளது.

எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நீர்க்குமிழியாக இருக்கும் கிரிப்டோகரன்சி போன்ற சொத்து முதலீடுகளில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கைக் குழுக் கூட்டம் ஏப்.6 முதல் 8ஆம் தேதி வரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.

அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

3. நிகழாண்டின் முதல் செயற்கைக்கோள்: பிப்.14-இல் செலுத்துகிறது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிகழாண்டின் முதல் செயற்கைக்கோளை வரும் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளது.

‘EOS-04’ என்ற இந்த ரிசாட்-1ஏ புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து PSLV-C52 ஏவுகலம் மூலமாக பிப்.14 அன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

PSLV-C52 ராக்கெட் EOS-04 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் 1710 கிகி எடைகொண்ட ஏவுகலமாகும்.

இத்திட்டத்தில் EOS-04 செயற்கைக்கோளுடன் மேலும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.

அதில் ஒன்று ‘INSPIRE SAT-1’ என்ற மாணவர் செயற்கைக்கோளாகும். இது இந்திய விண்வெளி அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனமும், அமெரிக்காவின் கொலரடோ பல்கலைக்கழகத்தில் உள்ள வளிமண்டலம் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வகமும் இணைந்து உருவாக்கியதாகும்.

மற்றொன்று நிலம் & நீர்நிலைகளின் தட்பவெப்பநிலை ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்ட INS-2டிடி செயற்கைக்கோளாகும்.

EOS-04 பயன் என்ன? நாட்டில் எல்லைப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக EOS-04 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

‘ரேடார் உதவியுடன் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் உயர்தர நிழற்படங்களை எடுத்து அனுப்பும் வகையிலான தொழில்நுட்பம் இந்தச் செயற்கைக்கோளில் இடம்பெற்று உள்ளது. வேளாண், வனம், பயிரிடுதல், மண் ஈரப்பதம், நீர்வளம், வெள்ளபாதிப்பை படமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான தரவுகளையும் செயற்கைக்கோள் மூலம் பெறமுடியும்’ என ISRO தெரிவித்துள்ளது.

4. கீழடி 8ஆம் கட்ட அகழாய்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8ஆம் கட்ட அகழாய்வுப்பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது.

2018ஆம் ஆண்டு நடந்த 4ஆம் கட்ட அகழாய்விலிருந்து இதுவரை 18,000க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக்கண்டறிப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப்பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8ஆம்கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் இன்று தொடங்கவுள்ளனர்.

இந்தப்பணியினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கவுள்ளார்.

1. Punaura Dham, which was seen in the news recently, is located in which state?

A) Bihar 

B) Uttar Pradesh

C) Madhya Pradesh

D) Odisha

  • Punaura Dham located in Bihar has been included in the Ramayana circuit of Swadesh Darshan Scheme. It has been recently included under PRASHAD Scheme of the Ministry of Tourism. Bihar has several tourist places in the scheme including Thirthankar Circuit in Vaishali– Arrah– Masad– Patna– Rajgir– Pawapuri– Champapuri, Spiritual Circuit at Sultanganj – Dharmshala – Deoghar and Buddhist circuit at Bodh Gaya.

2. Who is the author of the book titled “The $10 Trillion Dream”?

A) Raghuram Rajan

B) Subhash Chandra Garg 

C) Urjit Patel

D) Arvind Subramanian

  • Former Finance Secretary Subhash Chandra Garg has authored a book titled, “The $10 Trillion Dream”. It explores the policy issues that India faces today and suggests reforms for it to become a USD 10 trillion economy by the mid–2030s. S C Garg is an Indian Administrative Service (IAS) and was appointed as Finance Secretary in 2019.

3. ‘LockBit 2.0’ Group launched a cyber–attack on the Justice Ministry of which country?

A) USA

B) France 

C) Russia

D) China

  • France’s Justice Ministry has been hit by cyber–attack from a group known as LockBit 2.0. The group locked the ministry’s files and asking for ransom from the Government. The country has launched investigation on the attack. As per government sources, no criminal records have been affected.

4. ‘National Institute of Pharmaceutical Education and Research (NIPER)’ is research institution under which Ministry?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Chemicals and Fertilizers 

C) Ministry of Education

D) Ministry of Science and Technology

  • National Institute of Pharmaceutical Education and Research (NIPER) is a public pharmaceutical research institution under India’s Ministry of Chemicals and Fertilizers. Union Minister for Chemicals and Fertilizers Mansukh Mandaviya launched NIPER Research Portal, to disseminate the information about all seven NIPERs and their research activities.

5. Who has succeeded Krishnamurthy Subramanian as the chief economic advisor (CEA) of India?

A) Urjit Patel

B) Jean Dreze

C) Kaushik Basu

D) V Anantha Nageswaran 

  • The Government has appointed V Anantha Nageswaran as its Chief Economic Advisor (CEA). He was Dean of IFMR Graduate School of Business. He was also a part–time member of the Economic Advisory Council to the Prime Minister from 2019 to 2021.
  • The upcoming Survey has been drafted by a team led by Principal Economic Advisor Sanjeev Sanyal.

6. Xiomara Castro, has been elected as the first female President of which country?

A) Bahamas

B) Honduras 

C) Morocco

D) Tunisia

  • Central American country Honduras is set to elect its first female president, Xiomara Castro, after the ruling party conceded defeat. Ms Castro is the candidate for the left–wing Libre (Free) Party, and has a preliminary lead of almost 20 percentage points over her rival.
  • The 12–year reign of the right–wing National Party was accused for scandals and corruptive practices.

7. In which month the ‘World Interfaith Harmony Week’ is observed every year?

A) January

B) February 

C) December

D) November

  • ‘World Interfaith Harmony Week’ is an annual event observed during the first week of February, after General Assembly designation in 2010. The General Assembly established World Interfaith Harmony Week as a way to promote harmony between all people regardless of their faith. This year, the slogan for the observance is ‘Interfaith Pandemic Recovery’.

8. Which institution/office announced the ‘Swachhta Saarthi Fellowship 2022’?

A) NITI Aayog

B) Office of the Principal Scientific Adviser 

C) IIT– Madras

D) Ministry of Housing and Urban Affairs

  • The ‘Swachhta Saarthi Fellowship 2022’ was announced by the Office of the Principal Scientific Adviser to the government of India under its ‘Waste to Wealth’ mission. This fellowship has been announced for empowering young innovators– who are engaged in community work of waste management– in the role of ‘Swachhta Saarthis’.
  • ‘Waste to Wealth’ mission is one of the nine national missions of the Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council (PM–STIAC).

9. “Rashtriya Yuva Sashaktikaran Karyakram” is a scheme of which Union Ministry?

A) Ministry of Youth Affairs & Sports 

B) Ministry of Education

C) Ministry of Skill Development

D) Ministry of Labour and Employment

  • “Rashtriya Yuva Sashaktikaran Karyakram” has been extended over the 15th Finance Commission Cycle (2021–22 to 2025–26) at an outlay of Rs 2,710.65 Crore. The RYSK Scheme is the flagship Central Sector Scheme of the Ministry of Youth Affairs & Sports.
  • The Scheme beneficiaries are the youth in the age–group of 15–29 years. Its objective is to motivate youth to strive for excellence in their respective fields and use their energy for national building.

10. Which is the venue of the Nehru Trophy Boat Race in 2022?

A) UAE 

B) Sri Lanka

C) Maldives

D) Mauritius

  • Nehru Trophy Boat Race, a famous event held in Alappuzha of Kerala, is set to be held in Ras al Khaimah in the United Arab Emirates (UAE) this year. The race will be held in the month of March in partnership with International Marine Sports Club Ras Al Khaimah at the Al Marjan Island, UAE. The name of the water race was set after Jawaharlal Nehru’s visit to Kerala Boat Race in 1952.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!