10th Tamil Questions – Unit 6
10th Tamil Questions – Unit 6
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 6 With Answers Uploaded Below.
1. இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் – கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) தஞ்சாவூர்
B) கழுகு மலை
C) திருப்புடை மருதூர்
D) ஆதிச்சநல்லூர்
2. நிகழ்கலை பற்றிய சரியான கூற்று எது?
I. கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன; கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன;
II. ஆடல், பாடல், இசை, நடிப்பு, ஒப்பனை, உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன; சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன; நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவைதாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.
III. நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன; உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன; மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
IV. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
3. கரகாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. பன்னெடுங் காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
II. கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி செய்கின்றனர்.
III. தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர். இதற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
IV. ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர் தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை உண்டு.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
4. “நீரற வறியாக் கரகத்து” – என்ற _______________ நூலின் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது.
A) அகநானூறு
B) புறநானூறு
C) கலித்தொகை
D) திருக்குறள்
5. சிலப்பதிகாரத்தில் _______________ ஆடிய _______________ வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது. இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
A) மாதவி, பதினொரு
B) ஆதிரை, நூறு
C) கண்ணகி, ஐம்பது
D) அறவண அடிகள், முப்பது
6. மயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
II. மயிலாட்டம் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தில் விளக்கிக் கூறுகிறார்.
III. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
IV. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
A) I, II, III மட்டும் சரி
B) I, III, IV மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
7. காவடியாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. கா – என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.
II. மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர். அந்த அரைவட்டப் பகுதியைப் பட்டுத்துணியால் மூடி அழகுபடுத்துகின்றனர். மேலும் மயிலிறகுக் கற்றைகளை இரு புறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர்.
III. காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர். இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
IV. காவடியாட்டம் தமிழ்நாட்டை விட, ஜப்பானில் மிகப் பிரபலமானதாக விழாக்களில் ஆடப்படுகிறது.
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
8. ஒயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. ஒயிலாட்டம் – ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
II. உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும். இதில் கம்பீரத்துடன் ஆடுதல் என்பது தனிச்சிறப்பானது.
III. ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும் இந்த ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.
IV. இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
9. தேவராட்டம், சேர்வையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
I. தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் ‘தேவதுந்துபி’, தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி.
II. இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
III. தேவராட்டம் குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது.
IV. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம். ஆட்டக் கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர். இதனை இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
A) I, II, III, IV அனைத்தும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, IV மட்டும் சரி
10. பொய்க்கால் குதிரையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
I. பொய்க்கால் குதிரையாட்டம் கரகாட்டத்தின் தாய் ஆட்டமாகக் கருதப்படுகிறது.
II. “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
III. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
IV. கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
A) I, II, III, IV அனைத்தும் சரி
B) I, II, III மட்டும் சரி
C) II, III, IV மட்டும் சரி
D) I, IV மட்டும் சரி
11. பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. பொய்க்கால் குதிரையாட்டம் _______________ மாநிலத்தில் கச்சிகொடி என்றும் _______________ மாநிலத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
A) பீகார், ஒடிசா
B) இராஜஸ்தான், கேரளம்
C) பஞ்சாப், கர்நாடகம்
D) ஆந்திரா, குஜராத்
12. தப்பு ஆட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. ‘தப்பு’ என்ற தோற் கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது.
II. இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.
III. ‘தப் தப்’ என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
IV. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப அதன் இசைப்பு முறைகளும் ஆட்ட முறைகளும் வேறுபடுகின்றன. வட்டமாக ஆடுதல், இரண்டு வரிசையாக எதிர் எதிர்த் திசையில் நின்று ஆடுதல், அனைவரும் நேர் வரிசையில் நின்று ஆடுதல், குதித்துக் குதித்து ஆடுதல், உட்கார்ந்து எழுதல், நடையாட்டம் ஆகிய ஆட்டக் கூறுகளை இன்றைய கலைஞர்களிடம் காணமுடிகின்றது. தப்பாட்டத்தில் கலைஞர்கள் குழுவாகப் பங்கேற்கின்றனர்.
A) I, II, III, IV அனைத்தும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, IV மட்டும் சரி
13. “தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்று, தப்பாட்ட இசை குறித்து _______________ நூலில் ______________ ஆசிரியர் கூறியுள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
A) கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்
B) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
C) திருவாசகம், மாணிக்கவாசகர்
D) திருப்புகழ், அருணகிரிநாதர்
14. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை. ________________ நூல் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது. மேலும் பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) புறநானூறு
D) அகநானூறு
15. புலி ஆட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
II. விழாக்களில் புலிவேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக்கோடுகளையிட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் கொள்வர். தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர்.
III. புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.
IV. பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
V. புலி ஆட்டம் என்பது ஒரு வளையைச் சுற்றி ஆடக்கூடிய ஆட்டம் ஆகும்.
A) I, II, III மட்டும் சரி
B) II, III, IV, V மட்டும் சரி
C) I, II, III, IV மட்டும் சரி
D) III, IV, V மட்டும் சரி
16. தெருக்கூத்து சரியானது எது?
I. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது.
II. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. களத்து மேடுகளில் நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து, தெருச் சந்திப்புகளிலும் நிகழ்த்தப்படுகிறது; பின்னர்க் கோவில் சார்ந்த கலையாகவும் ஆக்கப்பட்டது.
III. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
IV. தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. கூத்துக்கலைஞர், கூத்தைக் கற்றுக் கொடுப்பவர் ஆகியோரின் அடிப்படையிலும் காலம், இடம் போன்றவற்றின் அடிப்படையிலும் கூத்து நிகழ்த்தப்படுவதில் சிறுசிறு மாறுபாடுகள் உள்ளன. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
A) I, II, III, IV அனைத்தும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, IV மட்டும் சரி
17. யார் இவர்? தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புது விதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். அவர்தான் கூத்துப்பட்டறை _______________. இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
A) ந. முத்துசாமி
B) நா. பிச்சமூர்த்தி
C) சி.சு. செல்லப்பா
D) ராஜம் கிருஷ்ணன்
18. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? கலைஞாயிறு என்று இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர், இவர்.
A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B) நா. பிச்சமூர்த்தி
C) சி.சு. செல்லப்பா
D) ந. முத்துசாமி
19. தோற்பாவைக் கூத்து சரியான கூற்று எது?
I. தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
II. தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது. இதில் இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன. ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
III. கூத்து நிகழ்த்தும் திரைச்சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
IV. தோற்பாவைக் கூத்து பற்றி கம்பர் ஒரு பாடலில் முழுமையாக விவரிக்கிறார்.
A) I, II மட்டும் சரி
B) II, III, IV மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
20. பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. _______________ நூலில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) வளையாபதி
B) மணிமேகலை
C) நாலடியார்
D) திருக்குறள்
21. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் ______________ பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
A) ஒயிலாட்டம்
B) மயிலாட்டம்
C) தோற்பாவைக் கூத்து
D) கரகாட்டம்
22. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
A) இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
B) மூன்றாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
C) நான்காம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
D) ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
23. பொருத்தமானதைத் தேர்ந்தெடு – ஆட்டம் மற்றும் இசைக்கருவிகள்.
I. கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
II. மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலக், தப்பு
III. ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
IV. தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
A) 4, 3, 2, 1
B) 1, 2, 3, 4
C) 3, 4, 1, 2
D) 2, 1, 4, 3
24. பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
I. மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
II. ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
III. புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
IV. தெருக்கூத்து – 4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை
A) 4, 1, 3, 2
B) 3, 4, 2, 1
C) 1, 2, 4, 3
D) 4, 3, 1, 2
25. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபு?
A) மூன்று முதல் பதின்மூன்று
B) எட்டு முதல் பத்து
C) பத்து முதல் பதின்மூன்று
D) எட்டு முதல் பதின்மூன்று
26. கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
A) தலை ஆட்டம்
B) கும்பாட்டம்
C) சதுராட்டம்
D) சாமியாட்டம்
27. கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
A) 12
B) 2
C) 24
D) வரையறை இல்லை
28. கரகாட்டத்தின் துணையாட்டம் _______________?
A) மயிலாட்டம்
B) ஒயிலாட்டம்
C) காவடியாட்டம்
D) தேவராட்டம்
29. காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் _______________?
A) சோலை
B) பாரந்தாங்கும் கோல்
C) கால்
D) காவல்
30. இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது _______________?
A) கரகாட்டம்
B) மயிலாட்டம்
C) காவடியாட்டம்
D) ஒயிலாட்டம்
31. ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர்.
A) இரண்டு
B) நான்கு
C) ஆறு
D) எட்டு
32. தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
A) ஆண்கள்
B) பெண்கள்
C) சிறுவர்கள்
D) முதியவர்கள்
33. தேவராட்டம், _______________ ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
A) அரசர்கள்
B) புலவர்கள்
C) பாணர்கள்
D) வானத்துத் தேவர்கள்
34. உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது _______________?
A) டோலக்
B) சிங்கி
C) தேவதுந்துபி
D) தப்பு
35. தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை _______________?
A) கரகாட்டம்
B) மயிலாட்டம்
C) சேர்வையாட்டம்
D) தேவராட்டம்
36. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை _______________?
A) கரகாட்டம்
B) மயிலாட்டம்
C) சேர்வையாட்டம்
D) பொம்மலாட்டம்
37. சேர்வையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
I. சேவைப்பலகை
II. சேமக்கலம்
III. ஜால்ரா
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) II, III மட்டும் சரி
D) I, II, III அனைத்தும் சரி
38. _______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
A) போலச் செய்தல்
B) இருப்பதைச் செய்தல்
C) மெய்யியல்
D) நடப்பியல்
39. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
A) மயிலாட்டம்
B) ஒயிலாட்டம்
C) பொய்க்கால் குதிரையாட்டம்
D) காவடியாட்டம்
40. கீழ்க்கண்டவற்றுள், மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம் எது?
A) காவடியாட்டம்
B) மயிலாட்டம்
C) ஒயிலாட்டம்
D) பொய்க்கால் குதிரையாட்டம்
41. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி _______________?
A) பறை
B) தவில்
C) டோலக்
D) உறுமி
42. _______________ அம்மன் வழிபாடடின் ஒரு பகுதியாகவும் தெருக்கூத்து இருக்கிறது.
A) புலி ஆட்டம்
B) காவடியாட்டம்
C) தெருக்கூத்து
D) குடக்கூத்து
43. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் _______________ வெளிப்படுத்தப்படுகிறது?
A) புலி ஆட்டம்
B) காவடியாட்டம்
C) தெருக்கூத்து
D) ஒயிலாட்டம்
44. அருச்சுனன் தபசு என்பது _______________?
A) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
B) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
C) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
D) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
45. இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள். இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும், தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும், வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும் இந்தப் பூவை எப்படித் தொடுக்க நான் – ஒருவேளை, என் மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) உமா மகேஸ்வரி. (பூத்தொடுத்தல்)
B) சுஜாதா (வண்ணத்துப்பூச்சி வேட்டை)
C) ராஜம் கிருஷ்ணன் (கூடுகள்)
D) வை.மு. கோதைநாயகி (புதுமைக் கோலம்)
46. கவிஞர் உமா மகேஸ்வரி _______________ மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது ______________ யில் வாழ்ந்து வருகிறார்.
A) தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
B) மதுரை, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி
C) இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை
D) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
47. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைந்துள்ளார்; கவிதை, சிறுகதை புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
A) அநுத்தமா
B) கலை இலக்கியா
C) தாமரை
D) உமா மகேஸ்வரி
48. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) ஆறுமுக நாவலர்
B) தாயுமானவர்
C) மனோன்மணியம்
D) குமரகுருபரர்
49. சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய, இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது _______________! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது _______________!
A) நாட்டுப்புறத்தமிழ், பிள்ளைத்தமிழ்
B) சிற்றிலக்கியம், சங்க இலக்கியம்
C) அற இலக்கியங்கள், நீதி நூல்கள்
D) இவற்றில் ஏதுமில்லை
50. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குற்றாலக் குறவஞ்சி
B) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
C) தாயுமானவர் பாடல்கள்
D) திருவாசகம்
51. கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை – இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) மாணிக்கவாசகர்
B) கம்பர்
C) குமரகுருபரர்
D) ஒட்டக்கூத்தர்
52. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக – இப்பாடல் வரியுடன் தொடர்புடைய பருவம் எது?
A) சப்பாணி
B) தால்
C) காப்பு
D) செங்கீரை
53. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. பண்டி – வயிறு
II. அசும்பிய – ஒளிவீசுகிற
III. முச்சி – தலையுச்சிக் கொண்டை
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) II, III மட்டும் சரி
D) I, II, III அனைத்தும் சரி
54. திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும் – இந்த கூற்றில் கூறப்படும் பருவம் எது?
A) செங்கீரை
B) வருகை
C) அம்புலி
D) முத்தம்
55. கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக – இப்பாடல் வரிகளை ஆராய்ந்து, கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது எனச் சரியாகப் பொருத்துக.
A) அற நூல்கள்
B) நீதி நூல்கள்
C) சிற்றிலக்கியம்
D) சங்க இலக்கியம்
56. இலக்கணக்குறிப்பு தருக? குண்டலமும் குழைகாதும்.
A) உவமைத்தொகை
B) உம்மைத்தொகை
C) முற்றும்மை
D) எண்ணும்மை
57. இலக்கணக்குறிப்பு தருக? ஆடுக.
A) வினைத்தொகை
B) வியங்கோள் வினைமுற்று
C) வினையெச்சம்
D) தொழிற்பெயர்
58. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. பதிந்து – பதி + த் (ந்) + த் + உ
II. பதி – பகுதி; த் – சந்தி (ந் – ஆனது விகாரம்)
III. த் – இறந்தகால இடைநிலை
IV. உ – வினையெச்ச விகுதி
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
59. செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
D) ஒன்று
60. செங்கீரைப் பருவம்: செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை _______________ ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
A) 2-3
B) 4-5
C) 5-6
D) 6-7
61. அணிகலன்கள் – சரியாகப் பொருந்தியது எது?
I. சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
II. அரைநாண் – இடையில் அணிவது
III. சுட்டி – நெற்றியில் அணிவது
IV. குண்டலம், குழை – காதில் அணிவது
V. சூழி – தலையில் அணிவது
A) I, II, III, IV, V அனைத்தும் சரி
B) I, II, IV மட்டும் சரி
C) III, V மட்டும் சரி
D) II, III, V மட்டும் சரி
62. _______________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
A) 50
B) 63
C) 96
D) 100
63. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது _______________? பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
A) பிள்ளைத்தமிழ்
B) உலா
C) தூது
D) பரணி
64. குமரகுருபரரின் காலம் _______________ ஆம் நூற்றாண்டு.
A) 14
B) 15
C) 16
D) 17
65. குமரகுருபரர் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?
A) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
B) தமிழ், அரேபிக், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
C) தமிழ், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
D) தமிழ், வங்காள, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
66. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் எவை?
I. கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
II. மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை
III. நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
IV. சிலையெழுபது, ஆசாரக்கோவை
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
67. பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் _______________?
A) 8
B) 10
C) 12
D) 7
68. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
A) சிற்றில்
B) சிறுபறை
C) சிறுதேர்
D) கழங்கு
69. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
A) கழங்கு
B) அம்மானை
C) ஊசல்
D) சிறுபறை
70. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் _______________?
A) 6
B) 7
C) 8
D) 10
71. பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் _______________?
A) 6
B) 9
C) 7
D) 3
72. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் – கடைசி மூன்று பருவம் கூறுக?
A) கழங்கு, அம்மானை, ஊசல்
B) சப்பாணி, முத்தம், வருகை
C) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
D) செங்கீரை, தால், சப்பாணி
73. பெண்பாற் பிள்ளைத்தமிழ் – கடைசி மூன்று பருவம் கூறுக?
A) கழங்கு, அம்மானை, ஊசல்
B) சப்பாணி, முத்தம், வருகை
C) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
D) செங்கீரை, தால், சப்பாணி
74. குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடி அருள்க என வேண்டுகிறார்?
A) சுவாமிமலையில் எழுந்தருளிய முருகன்
B) வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகன்
C) திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளிய முருகன்
D) திருச்செந்தூரில் எழுந்தருளிய முருகன்
75. ‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் _______________?
A) வயிறு
B) பெருக்கம்
C) தலை
D) சுருக்கம்
76. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
A) 1
B) 2
C) 3
D) 4
77. ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுகிறவர் யார்?
A) ஆறுமுக நாவலர்
B) திரு.வி.க
C) பாரதிதாசன்
D) பாரதியார்
78. தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B) கம்பராமாயணம், கம்பர்
C) நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D) மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
79. மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது _______________ ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.
A) கங்கை
B) மகாநதி
C) சரயு
D) காவிரி
80. தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ – கீழ்க்கண்டவற்றுள், இந்த பாடல் வரிகளுடன் தொடர்புடையது எது?
A) பாலகாண்டம் – ஆற்றுப்படலம்
B) பாலகாண்டம் – நாட்டுப்படலம்
C) பாலகாண்டம் – கங்கைப்படலம்
D) அயோத்தியா காண்டம் – கங்கை காண் படலம்
81. _______________, கவிஞன் மூலம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது. அது எப்படி வருகின்றதோ அதை மாற்றினால் அழகு குன்றும் மீண்டும் மீண்டும் மறிதரும் சந்தம் உணர்வுகளை நம்முள் செலுத்துகிறது. உள்ளம் சூறையாடப்படுகிறது.
A) உரைநடை
B) இலக்கணம்
C) இலக்கியம்
D) கவிதை
82. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
A) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
B) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
C) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
D) சுந்தர காண்டம் – குகப் படலம்
83. உறங்குகின்ற கும்பகன்ன வுங் கண்! என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள காண்டம் _______________ படலம் _______________?
A) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
B) பாலகாண்டம், நாட்டுப்படலம்
C) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
D) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
84. ‘தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடு தோறும்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
A) பாலகாண்டம், நாட்டுப்படலம்
B) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
C) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
D) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப்படலம்
85. சரியாகப் பொருந்தியவற்றை வரிசைப்படுத்துக?
I. தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
II. தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
III. வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
IV. ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
A) 1, 2, 3, 4
B) 2, 3, 4, 1
C) 4, 3, 2, 1
D) 1, 4, 3, 2
86. சரியாகப் பொருந்தியது எது?
I. விரிதாமரை மலர்கள் – எற்றிய விளக்குகள்
II. சூழும் மேகங்கள் – மத்தள ஒலி
III. மலரும் குவளை மலர்கள் – கண்கள் விழித்துப் பார்ப்பது
IV. நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் – திரைச்சீலை
V. மகர யாழின் தேனிசை – வண்டுகளின் ரீங்காரம்
A) I, II, III, IV, V அனைத்தும் சரி
B) I, II, III மட்டும் சரி
C) II, III, IV மட்டும் சரி
D) III, IV, V மட்டும் சரி
87. கோசல நாட்டில் கொடைக்கு அங்கே இடமில்லை? காரணம் என்ன?
A) வறுமை சிறிதும் இல்லாததால்
B) நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால்
C) உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை, ஆதலால்
D) பொய்மொழி இல்லாமையால்
88. வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற் றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால் உண்மை யில்லை பொய் யுரையி லாமையால் வெண்மை யில்லை பல் கேள்வி மேவலால் – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
A) பாலகாண்டம், நாட்டுப்படலம்
B) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
C) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
D) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப்படலம்
89. இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், _______________, _______________ என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘_______________’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.
A) இளஞ்சிவப்பு, மாணிக்கம், ஆஹா
B) வெண்மை, வைடூரியம், அருமை
C) மை, மரகதம், ஐயோ
D) இவற்றில் ஏதுமில்லை
90. வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென் பதொ ரழியாவழ குடையான் – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
A) பாலகாண்டம், நாட்டுப்படலம்
B) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
C) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
D) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப்படலம்
91. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) நாமக்கல் கவிஞர்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) திரு.வி.க
92. கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று ______________. பொருள் புரியாவிடினும் இது மகிழ்ச்சியூட்டுகிறது.
A) உவமை
B) சாரியை
C) சந்த இன்பம்
D) உவமேயம்
93. ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்அன்றோ ஏழமை வேடனிறந்தில னென்றெனை யேசாரோ – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
A) பாலகாண்டம், நாட்டுப்படலம்
B) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
C) அயோத்தியா காண்டம், கங்கை காண் படலம்
D) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப்படலம்
94. உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம் இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய் கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய் – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
A) பாலகாண்டம், நாட்டுப்படலம்
B) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
C) அயோத்தியா காண்டம், கங்கை காண் படலம்
D) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப்படலம்
95. கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி இராமாவதாரம் எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது _______________ காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) ஏழு
96. “கல்வியில் பெரியவர் இவர்” “இவர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் யார்?
A) ஒட்டக்கூத்தர்
B) ஒளவையார்
C) பாரதியார்
D) கம்பர்
97. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர். திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
A) கம்பர்
B) ஒளவையார்
C) பாரதியார்
D) ஒட்டக்கூத்தர்
98. “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் ______________” என்று புகழ்பெற்றவர் யார்?
A) ஒளவையார்
B) கம்பர்
C) பாரதியார்
D) ஒட்டக்கூத்தர்
99. கீழ்க்கண்டவற்றுள் கம்பர் எழுதிய நூல்கள் எவை?
I. சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி
II. திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது
III. ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம்
IV. தக்கயாகப் பரணி, நாலாயிரக் கோவை
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
100. “_______________” என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
A) கிழித்த கோடு
B) ஒளியிலே தெரிவது
C) தக்கையின் மீது நான்கு கண்கள்
D) பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
101. சா.கந்தசாமி அவர்கள் பற்றிய சரியான கூற்று எது?
I. மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
II. இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.
III. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
IV. தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.
V. இவர் இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
A) I, II மட்டும் சரி
B) I, II, III மட்டும் சரி
C) I, II, III, IV மட்டும் சரி
D) I, II, III, IV, V அனைத்தும் சரி
102. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” – (இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி) என்று கூறும் நூல்?
A) சிலப்பதிகாரம், ஊர்காண்காதை
B) நன்னூல்
C) கலித்தொகை
D) புறநானூறு
103. அகப்பொருள் இலக்கணம் – கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.
II. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.
III. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.
IV. நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். இதில் நிலம் ஐந்து வகைப்படும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை). பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
104. ஐவகை நிலங்கள் – சரியாகப் பொருந்தியது எது?
I. குறிஞ்சி – 1. வயலும் வயல் சார்ந்த இடமும்
II. முல்லை – 2. சுரமும் சுரம் சார்ந்த இடமும்
III. மருதம் – 3. மலையும் மலைசார்ந்த இடமும்
IV. நெய்தல் – 4. கடலும் கடல்சார்ந்த இடமும்
V. பாலை – 5. காடும் காடு சார்ந்த இடமும்
A) I – 3, II – 5, III – 1, IV – 4, V – 2
B) I – 2, II – 4, III – 1, IV – 5, V – 3
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 1, II – 5, III – 2, IV – 3, V – 4
105. ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர். பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) – சரியாகப் பொருந்தியது எது?
I. கார்காலம் – 1. ஐப்பசி, கார்த்திகை
II. குளிர்காலம் – 2. ஆவணி, புரட்டாசி
III. முன்பனிக் காலம் – 3. மார்கழி, தை
IV. பின்பனிக் காலம் – 4. சித்திரை, வைகாசி
V. இளவேனிற் காலம் – 5. மாசி, பங்குனி
VI. முதுவேனிற் காலம் – 6. ஆனி, ஆடி
A) I – 3, II – 5, III – 1, IV – 4, V – 2, VI – 6
B) I – 2, II – 1, III – 3, IV – 5, V – 4, VI – 6
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5, VI – 6
D) I – 1, II – 5, III – 2, IV – 3, V – 4. VI – 6
106. ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறு பொழுது என்று பிரித்துள்ளனர். சிறுபொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) – சரியாகப் பொருந்தியது எது?
I. காலை – 1. காலை 6 மணி முதல் 10 மணி வரை
II. நண்பகல் – 2. காலை 10 மணி முதல் 2 மணி வரை
III. எற்பாடு – 3. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
IV. மாலை – 4. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
V. யாமம் – 5. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
VI. வைகறை – 6. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
A) I – 3, II – 5, III – 1, IV – 4, V – 2, VI – 6
B) I – 2, II – 1, III – 3, IV – 5, V – 4, VI – 6
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5, VI – 6
D) I – 1, II – 5, III – 2, IV – 3, V – 4. VI – 6
107. எற்பாடு என்றால் என்ன? சரியான கூற்று எது?
I. ‘எல்’ என்றால் ஞாயிறு
II. ‘பாடு’ என்றால் மறையும் நேரம்
III. எல் + பாடு = எற்பாடு
IV. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
108. குறிஞ்சி திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
A) குளிர்காலம், முன்பனிக்காலம், யாமம்
B) கார்காலம், மாலை
C) ஆறு பெரும்பொழுதுகள், வைகறை
D) ஆறு பெரும்பொழுதுகள், எற்பாடு
109. முல்லை திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
A) குளிர்காலம், முன்பனிக்காலம், யாமம்
B) கார்காலம், மாலை
C) ஆறு பெரும்பொழுதுகள், வைகறை
D) ஆறு பெரும்பொழுதுகள், எற்பாடு
110. மருதம் திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
A) குளிர்காலம், முன்பனிக்காலம், யாமம்
B) கார்காலம், மாலை
C) ஆறு பெரும்பொழுதுகள், வைகறை
D) ஆறு பெரும்பொழுதுகள், எற்பாடு
111. நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
A) குளிர்காலம், முன்பனிக்காலம், யாமம்
B) கார்காலம், மாலை
C) ஆறு பெரும்பொழுதுகள், வைகறை
D) ஆறு பெரும்பொழுதுகள், எற்பாடு
112. பாலை திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
A) இளவேனில், முதுவேனில், பின்பனி, நண்பகல்
B) கார்காலம், மாலை
C) ஆறு பெரும்பொழுதுகள், வைகறை
D) ஆறு பெரும்பொழுதுகள், எற்பாடு
113. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
I. ஒவ்வொரு நிலத்திற்கும், பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.
II. ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) I, II இரண்டுமே சரி
D) I, II இரண்டுமே தவறு
114. கருப்பொருள் (தெய்வம்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. திருமால்
II. முல்லை – 2. இந்திரன்
III. மருதம் – 3. வருணன்
IV. நெய்தல் – 4. கொற்றவை
V. பாலை – 5. முருகன்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
115. கருப்பொருள் (மக்கள்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. எயினர், எயிற்றியர்
II. முல்லை – 2. சேர்ப்பன், பரதன், பரத்தியர்
III. மருதம் – 3. ஊரன், உழவர், உழத்தியர்
IV. நெய்தல் – 4. தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
V. பாலை – 5. வெற்பன், குறவர், குறத்தியர்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
116. கருப்பொருள் (உணவு), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. மலைநெல், தினை
II. முல்லை – 2. வரகு, சாமை
III. மருதம் – 3. செந்நெல், வெண்ணெல்
IV. நெய்தல் – 4. மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
V. பாலை – 5. சூறையாடலால் வரும் பொருள்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
117. கருப்பொருள் (விலங்கு), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. முயல், மான், புலி
II. முல்லை – 2. புலி, கரடி, சிங்கம்
III. மருதம் – 3. வலியிழந்த யானை
IV. நெய்தல் – 4. முதலை, சுறா
V. பாலை – 5. எருமை, நீர்நாய்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
118. கருப்பொருள் (பூ), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. முல்லை, தோன்றி
II. முல்லை – 2. செங்கழுநீர், தாமரை
III. மருதம் – 3. தாழை, நெய்தல்
IV. நெய்தல் – 4. குரவம், பாதிரி
V. பாலை – 5. குறிஞ்சி, காந்தள்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
119. கருப்பொருள் (மரம்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. இலுப்பை, பாலை
II. முல்லை – 2. புன்னை, ஞாழல்
III. மருதம் – 3. காஞ்சி, மருதம்
IV. நெய்தல் – 4. கொன்றை, காயா
V. பாலை – 5. அகில், வேங்கை
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
120. கருப்பொருள் (பறவை), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. கிளி, மயில்
II. முல்லை – 2. காட்டுக்கோழி, மயில்
III. மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
IV. நெய்தல் – 4. கடற்காகம்
V. பாலை – 5. புறா, பருந்து
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
121. கருப்பொருள் (ஊர்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. பாடி, சேரி
II. முல்லை – 2. சிறுகுடி
III. மருதம் – 3. குறும்பு
IV. நெய்தல் – 4. பட்டினம், பாக்கம்
V. பாலை – 5. பேரூர், மூதூர்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
122. கருப்பொருள் (நீர்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. காட்டாறு
II. முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
III. மருதம் – 3. மணற்கிணறு, உவர்க்கழி
IV. நெய்தல் – 4. வற்றிய சுனை, கிணறு
V. பாலை – 5. அருவி நீர், சுனைநீர்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
123. கருப்பொருள் (பறை), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. துடி
II. முல்லை – 2. மீன் கோட்பறை
III. மருதம் – 3. மணமுழா, நெல்லரிகிணை
IV. நெய்தல் – 4. ஏறு கோட்பறை
V. பாலை – 5. தொண்டகம்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
124. கருப்பொருள் (யாழ்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. குறிஞ்சி யாழ்
II. முல்லை – 2. முல்லை யாழ்
III. மருதம் – 3. மருத யாழ்
IV. நெய்தல் – 4. விளரி யாழ்
V. பாலை – 5. பாலை யாழ்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
125. கருப்பொருள் (பண்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. முல்லைப்பண்
II. முல்லை – 2. குறிஞ்சிப்பண்
III. மருதம் – 3. பஞ்சுரப்பண்
IV. நெய்தல் – 4. செவ்வழிப்பண்
V. பாலை – 5. மருதப்பண்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
126. கருப்பொருள் (தொழில்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
I. குறிஞ்சி – 1. ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
II. முல்லை – 2. நெல்லரிதல், களை பறித்தல்
III. மருதம் – 3. மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
IV. நெய்தல் – 4. வழிப்பறி, நிரை கவர்தல்
V. பாலை – 5. தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
A) I – 5, II – 1, III – 2, IV – 3, V – 4
B) I – 5, II – 4, III – 3, IV – 2, V – 1
C) I – 1, II – 2, III – 3, IV – 4, V – 5
D) I – 2, II – 1, III – 5, IV – 4, V – 3
127. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______________?
A) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
B) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
C) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
D) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
128. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
C) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
129. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
A) அள்ளி முகர்ந்தால்
B) தளரப் பிணைத்தால்
C) இறுக்கி முடிச்சிட்டால்
D) காம்பு முறிந்தால்
130. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
A) கரகாட்டம் என்றால் என்ன?
B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
C) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
D) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
131. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
A) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
B) ஊரில் விளைச்சல் இல்லாததால்
C) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
D) அங்கு வறுமை இல்லாததால்
132. சிறு நண்டு மணல்மீது படமொன்று கீறும் சிலவேளை அதைவந்து அலை கொண்டு போகும் கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல்மீது இவள் கொண்ட பயமொன்று காணும், வெறுவான வெளி மீது முகில் வந்து சூழும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும் நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும் நிலையான கரை நீரில் அலைபோய் உலைந்தாடும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) மகாகவி (இலங்கை)
B) ராஜு சுந்தரம்
C) சி. சு. செல்லப்பா
D) சூரியன்
133. கலைச்சொல் அறிவோம் சரியானது எது?
I. Aesthetics – அழகியல், முருகியல்
II. Terminology – கலைச்சொல்
III. Artifacts – கலைப் படைப்புகள்
IV. Myth – தொன்மம்
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
134. நூல் மற்றும் ஆசிரியர் சரியானது எது?
I. தேன்மழை – சுரதா
II. திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
III. நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III அனைத்தும் சரி
D) I, II, III அனைத்தும் தவறு
135. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
(எ.கா.) அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார். ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
II. தொடர்சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்.
(எ.கா.) அ) இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார். ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
III. கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
(எ.கா.) அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான். பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் – முதன்மைத் தொடர்; மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்.
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) I, II, III அனைத்தும் சரி
D) I, II, III அனைத்தும் தவறு
136. சந்தக் கவிதையில் சிறக்கும் _______________?
A) ஆறுமுக நாவலர்
B) பெருஞ்சித்திரனார்
C) கம்பன்
D) ஒளவையார்
137. விடுபட்டதை நிரப்புக.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் _______________ _______________ _______________?
A) அருவினையும் மாண்ட தமைச்சு
B) டைந்துடன் மாண்ட தமைச்சு
C) யாவுள முன்நிற் பவை
D) தியற்கை அறிந்து செயல்
138. விடுபட்டதை நிரப்புக.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ _______________ _______________ _______________?
A) அருவினையும் மாண்ட தமைச்சு
B) டைந்துடன் மாண்ட தமைச்சு
C) யாவுள முன்நிற் பவை
D) தியற்கை அறிந்து செயல்
139. விடுபட்டதை நிரப்புக.
மதிதுட்பம் நூலோ டுடையார்க் கதிதுட்பம் _______________ _______________ _______________?
A) அருவினையும் மாண்ட தமைச்சு
B) டைந்துடன் மாண்ட தமைச்சு
C) யாவுள முன்நிற் பவை
D) தியற்கை அறிந்து செயல்
140. விடுபட்டதை நிரப்புக.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் _______________ _______________ _______________?
A) அருவினையும் மாண்ட தமைச்சு
B) டைந்துடன் மாண்ட தமைச்சு
C) யாவுள முன்நிற் பவை
D) தியற்கை அறிந்து செயல்
141. விடுபட்டதை நிரப்புக.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் _______________ _______________ _______________?
A) பொருளல்ள தில்லை பொருள்
B) தீதின்றி வந்த பொருள்
C) புல்லார் புரள விடல்
D) றுண்டாகச் செய்வான் வினை
142. விடுபட்டதை நிரப்புக.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து _______________ _______________ _______________?
A) பொருளல்ள தில்லை பொருள்
B) தீதின்றி வந்த பொருள்
C) புல்லார் புரள விடல்
D) றுண்டாகச் செய்வான் வினை
143. விடுபட்டதை நிரப்புக.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் _______________ _______________ _______________?
A) பொருளல்ள தில்லை பொருள்
B) தீதின்றி வந்த பொருள்
C) புல்லார் புரள விடல்
D) றுண்டாகச் செய்வான் வினை
144. விடுபட்டதை நிரப்புக.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் _______________ _______________ _______________?
A) பொருளல்ள தில்லை பொருள்
B) தீதின்றி வந்த பொருள்
C) புல்லார் புரள விடல்
D) றுண்டாகச் செய்வான் வினை
145. விடுபட்டதை நிரப்புக.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் _______________ _______________ _______________?
A) எஃகதனிற் கூரிய தில்
B) அழுதகண் ணீரும் அனைத்து
C) என்பரியும் ஏதிலான் துப்பு
D) தஞ்சம் எளியன் பகைக்கு
146. விடுபட்டதை நிரப்புக.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் _______________ _______________ _______________?
A) எஃகதனிற் கூறிய தில்
B) அழுதகண் ணீரும் அனைத்து
C) என்பரியும் ஏதிலான் துப்பு
D) தஞ்சம் எளியன் பகைக்கு
147. விடுபட்டதை நிரப்புக.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் _______________ _______________ _______________?
A) எஃகதனிற் கூறிய தில்
B) அழுதகண் ணீரும் அனைத்து
C) என்பரியும் ஏதிலான் துப்பு
D) தஞ்சம் எளியன் பகைக்கு
148. விடுபட்டதை நிரப்புக.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் _______________ _______________ _______________?
A) எஃகதனிற் கூறிய தில்
B) அழுதகண் ணீரும் அனைத்து
C) என்பரியும் ஏதிலான் துப்பு
D) தஞ்சம் எளியன் பகைக்கு
149. விடுபட்டதை நிரப்புக.
ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின் _______________ _______________ _______________?
A) நீள்வினையால் நீளும் குடி
B) சுற்றமாச் சுற்றும் உலகு
C) இன்மையே இன்னா தது
D) எல்லாம் ஒருங்கு கெடும்
150. விடுபட்டதை நிரப்புக.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் _______________ _______________ _______________?
A) நீள்வினையால் நீளும் குடி
B) சுற்றமாச் சுற்றும் உலகு
C) இன்மையே இன்னா தது
D) எல்லாம் ஒருங்கு கெடும்
151. விடுபட்டதை நிரப்புக.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் _______________ _______________ _______________?
A) நீள்வினையால் நீளும் குடி
B) சுற்றமாச் சுற்றும் உலகு
C) இன்மையே இன்னா தது
D) எல்லாம் ஒருங்கு கெடும்
152. விடுபட்டதை நிரப்புக.
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை _______________ _______________ _______________?
A) நீள்வினையால் நீளும் குடி
B) சுற்றமாச் சுற்றும் உலகு
C) இன்மையே இன்னா தது
D) எல்லாம் ஒருங்கு கெடும்
153. விடுபட்டதை நிரப்புக.
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் _______________ _______________ _______________?
A) உள்ளுள் உவப்ப துடைத்து
B) ஒப்பாரி யாம்கண்ட தில்
C) மேவன செய்தொழுக லான்
D) கொல்லப் பயன்படும் கீழ்
154. விடுபட்டதை நிரப்புக.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன _______________ _______________ _______________?
A) உள்ளுள் உவப்ப துடைத்து
B) ஒப்பாரி யாம்கண்ட தில்
C) மேவன செய்தொழுக லான்
D) கொல்லப் பயன்படும் கீழ்
155. விடுபட்டதை நிரப்புக.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம் _______________ _______________ _______________?
A) உள்ளுள் உவப்ப துடைத்து
B) ஒப்பாரி யாம்கண்ட தில்
C) மேவன செய்தொழுக லான்
D) கொல்லப் பயன்படும் கீழ்
156. விடுபட்டதை நிரப்புக.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் _______________ _______________ _______________?
A) உள்ளுள் உவப்ப துடைத்து
B) ஒப்பாரி யாம்கண்ட தில்
C) மேவன செய்தொழுக லான்
D) கொல்லப் பயன்படும் கீழ்
157. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) உவமையணி
B) பொருள் பின்வருநிலையணி
C) சொல் பின்வருநிலை அணி
D) சொற்பொருள் பின் வருநிலையணி
158. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) உவமை அணி
B) உருவக அணி
C) வேற்றுமை அணி
D) பிறிது மொழிதல் அணி
159. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) சொல்பின்வருநிலையணி
B) சொற்பொருள் பின்வருநிலையணி
C) உவமையணி
D) உருவக அணி
160. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) உவமையணி
B) உருவக அணி
C) வேற்றுமை அணி
D) பிறிதுமொழிதல் அணி
161. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) தற்குறிப்பேற்ற அணி
B) உவமை அணி
C) வஞ்சப்புகழ்ச்சி அணி
D) உருவக அணி
162. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
A) வேற்றுமை அணி
B) உருவக அணி
C) பிறிதுமொழிதல் அணி
D) உவமையணி
163. எவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்?
A) ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருத்தல்
B) இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும்
C) மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி
D) தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை
164. திருவள்ளுவர் கூறும் எந்த ஐந்து, சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்?
A) செயற்கையறிவு, இயற்கையறிவு, நுண்ணறிவு, அன்பு, ஆற்றல்
B) இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு, அன்பு, ஆற்றல், கோபம்
C) மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி
D) தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை, இரக்க குணம்
165. ________________ உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).
A) ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருத்தல்
B) இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும்
C) மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி
D) தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை
166. எவ்வாறு சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்?
A) அன்பினால் சேர்த்த பொருள்
B) அறிவினால் சேர்த்த பொருள்
C) முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள்
D) இவற்றில் ஏதுமில்லை
167. எந்த பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும், என்று வள்ளுவர் கூறுகிறார்?
A) அன்பினால் சேர்த்த பொருள்
B) மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருள்
C) முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள்
D) அறிவினால் சேர்த்த பொருள்
168. மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு, யானைப்போரைக் காண்பது போன்றது எது?
A) தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது
B) மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருள்
C) முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள்
D) அறிவினால் சேர்த்த பொருள்
169. கீழ்க்கண்டவற்றுள் திருவள்ளுவர் கூறிய கூற்றுகளில் சரியானது எது?
I. ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை
II. பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.
III. சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
IV. மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
170. எவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்?
A) சுற்றத்தாரிடம் அன்புடன் இருப்போர், வஞ்சகர்
B) இரக்ககுணம், செல்வம்
C) விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல்
D) இவற்றில் ஏதுமில்லை
171. உலகத்தார் யாரை, உறவாகக் கொண்டு போற்றுவர்?
A) விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் உடையவரை
B) குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை
C) அன்பு மற்றும் செல்வம் மிக்கவரை
D) இவற்றில் ஏதுமில்லை
172. கீழ்க்கண்ட கூற்றுகளுள் திருக்குறள் கூறும் சரியனான கூற்று எது?
I. கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை.
II. இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
III. தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.
IV. ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையே ஆகும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, III, IV அனைத்தும் சரி
173. கீழ்க்கண்ட கூற்றுகளுள் திருக்குறள் கூறும் சரியனான கூற்று எது?
I. ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவி செய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.
II. தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) I, II இரண்டுமே சரி
D) I, II இரண்டுமே தவறு