10th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1
10th Std Science Lesson Wise Questions in Tamil
10th Science Lesson 1 Questions in Tamil
1] இயக்கவியல்
1. கூற்று (A): நம்மை சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. அவற்றில் சில ஓய்வு நிலையிலும் சில இயங்கும் நிலையிலும் உள்ளன.
கூற்று (B): ஓய்வும் இயக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: நம்மை சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. அவற்றில் சில ஓய்வு நிலையிலும் சில இயங்கும் நிலையிலும் உள்ளன. ஓய்வும் இயக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
2. ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்க்கும், இயக்கத்தில் உள்ள ஒரு பொருளை ஓய்வுநிலைக்கும், இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், அப்பொருளின் வேகத்தை குறைப்பதற்கும், நகரும் பொருளின் திசையினை மாற்றவும் உதவுவது__________
A) உந்தம்
B) முடுக்கம்
C) திசைவேகம்
D) விசை
விளக்கம்: ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்க்கும், இயக்கத்தில் உள்ள ஒரு பொருளை ஓய்வுநிலைக்கும், இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், அப்பொருளின் வேகத்தை குறைப்பதற்கும், நகரும் பொருளின் திசையினை மாற்றவும் உதவுவது விசையாகும்.
3. பொதுவாக விசை என்பது________
A) உதைத்தல்
B) தள்ளுதல்
C) இழுத்தல்
D) B, C இரண்டும்
விளக்கம்: பொதுவாக விசை என்பது ‘தள்ளுதல்’ அல்லது ‘இழுத்தல்’ என்ற பதத்திலேயே பொருள் கொள்ளப்படுகிறது.
4. விசை என்பதை தன் மூன்று இயக்க விதிகள் மூலம் விளக்கிய அறிவியல் அறிஞர்___________
A) கலிலியோ
B) ப்ஃளமிங்
C) சர் ஐசக் நியூட்டன்
D) அரிஸ்டாட்டில்
விளக்கம்: அறிவியல் பூர்வமாக விசை என்பதை சர் ஐசக் நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மூலம் விளக்க இயலும். இவ்விதிகள் மூலம் பொருளின் இயக்கத்தினை தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், இயக்கத்தில் உள்ள பொருளின் மீது செயல்படும் விசை மதிப்பைக் கொண்டு, அப்பொருள் எவ்வாறு இயங்கப்போகின்றது? என்பதை முன்பே தெரிந்து கொள்ளவும் உதவியாக உள்ளது.
5. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும் அறிவியல் பாடம்___________
A) நிலையியல்
B) இயந்திரவியல்
C) இயங்கியல்
D) இயக்கவியல்
விளக்கம்: விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும் அறிவியல் பாடம் இயந்திரவியல் ஆகும். இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவை நிலையியல் மற்றும் இயங்கியல் ஆகும்.
6. கூற்று (A): விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் நிலையியல் ஆகும்.
கூற்று (B): விசையின் செயல்பாட்டால் இயக்கநிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியல் இயக்கவியல் ஆகும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
7. கூற்று (A): இயக்கவியல் என்பது இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் அதனால் ஏற்படும் இடப்பெயர்ச்சியை மட்டுமே விளக்குவது இயக்கவியல் ஆகும்.
கூற்று (B): பொருளின் இயக்கத்தையும், அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்குவது இயக்கவிசையியல் ஆகும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: இயக்கவியல் என்பது இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் அதனால் ஏற்படும் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது இயக்கவியல் ஆகும். பொருளின் இயக்கத்தையும், அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்குவது இயக்கவிசையியல் ஆகும்.
8. இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வுநிலைக்கு வந்து சேரும். அவற்றினை ஓய்வு நிலைக்கு கொண்டு வர புறவிசை எதுவும் தேவையில்லை என்றுக் கூறிய அறிவியல் அறிஞர்_______
A) கலிலியோ
B) நியூட்டன்
C) அரிஸ்டாட்டில்
D) ப்ளஃமிங்
விளக்கம்: அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர் ஆவார். அவரது கூற்றுப்படி, இயங்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வுநிலைக்கு வந்து சேரும். அவற்றினை ஓய்வு நிலைக்கு கொண்டு வர புறவிசை எதுவும் தேவையில்லை எனக் கூறினார்.
9. கூற்று (A): புறவிசை ஏதும் இல்லாமல் இயங்கும் பொருட்களின் இயக்கத்தினை “இயற்கையான இயக்கம்” (விசை சார்பற்ற இயக்கம்) எனக் கூறியவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
கூற்று (B): இயங்கும் பொருட்களை ஓய்வுநிலைக்குக் கொண்டு வர புறவிசை தேவைப்படும் எனில், அவ்வகை இயக்கத்தினை “ இயற்கைக்கு மாறான இயக்கம்” (விசை சார்பு இயக்கம்) எனக் கூறியவர் கலிலியோ ஆவார்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: புறவிசை ஏதும் இல்லாமல் இயங்கும் பொருட்களின் இயக்கத்தினை “இயற்கையான இயக்கம்” (விசை சார்பற்ற இயக்கம்) எனக் கூறியவர் அரிஸ்டாட்டில் ஆவார். இயங்கும் பொருட்களை ஓய்வுநிலைக்குக் கொண்டு வர புறவிசை தேவைப்படும் எனில், அவ்வகை இயக்கத்தினை “ இயற்கைக்கு மாறான இயக்கம்” (விசை சார்பு இயக்கம்) எனக் கூறியவரும் அரிஸ்டாட்டிலே ஆவார்.
10. இரு வேறு நிறை கொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும்போது, அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும் என்றுரைத்தவர்________
A) கலிலியோ
B) அரிஸ்டாட்டில்
C) ஐசக் நியூட்டன்
D) கெப்ளர்
விளக்கம்: இரு வேறு நிறை கொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும்போது, அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும் என்றுரைத்தவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
11. இயக்கம், விசை மற்றும் நிலைமம் பற்றிய கலிலியோ கூற்றுக்களில் தவறானதைக் கண்டுபிடி.
1) இயற்கையில் உள்ள புவிசாராத பொருள்கள் யாவும் தத்தமது இயல்பான ஓய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
2) புறவிசை ஏதும் செயல்படாத வரை பொருள்கள் யாவும் தத்தமது முந்தைய நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.
3) பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும்போது, தம் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை அதன் நிலைமம் எனப்படும்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: இயற்கையில் உள்ள புவிசார் பொருள்கள் யாவும் தத்தமது இயல்பான ஓய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
12. வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள் யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும்போது, அவை ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று கூறிய அறிவியல் அறிஞர்_____________
A) அரிஸ்டாட்டில்
B) கலிலியோ
C) ஐசக் நியூட்டன்
D) கெப்ளர்
விளக்கம்: வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள் யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும்போது, அவை ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று கூறிய அறிவியல் அறிஞர் கலிலியோ ஆவார்.
13. கூற்று (A): தொடர்ந்து இயங்கி கொண்டுள்ள வாகனத்தில் திடீரென வேகத்தடை ஏற்படும்போது பேருந்த நின்றுவிட்டாலும், பயணியர் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்க முயற்சிப்பதால் பயணியர் பின்னோக்கி தள்ளப்படுகின்றார்.
கூற்று (B): ஓய்வு நிலையில் உள்ள பேருந்து, திடீரென நகர ஆரம்பிக்கும் பொழுது, அவற்றுடன் இணைந்த பயணியர், தொடர்ந்து ஓய்வில் இருக்க முயல்கின்றனர். எனவே பேருந்து நகர்ந்தாலும, அவர்கள் தமது பழைய நிலையை தக்க வைக்க முன்னோக்கி சாய்கின்றனர்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: தொடர்ந்து இயங்கி கொண்டுள்ள வாகனத்தில் திடீரென வேகத்தடை ஏற்படும்போது பேருந்து நின்றுவிட்டாலும், பயணியர் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்க முயற்சிப்பதால் பயணியர் முன்னோக்கி விழுகின்றார். அதேபோல் ஓய்வு நிலையில் உள்ள பேருந்து, திடீரென நகர ஆரம்பிக்கும் பொழுது, அவற்றுடன் இணைந்த பயணியர், தொடர்ந்து ஓய்வில் இருக்க முயல்கின்றனர். எனவே பேருந்து நகர்ந்தாலும், அவர்கள் தமது பழைய நிலையை தக்க வைக்க பின்னோக்கி சாய்கின்றனர்.
14. ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன் செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை___________
A) உந்தம்
B) முடுக்கம்
C) திசைவேகம்
D) நிலைமம்
15. கண்ணாடி குவளை ஒன்று நாணயம் வைக்கப்பட்ட காகித அட்டையால் மூடப்பட்டுள்ளது. காகித அட்டை நகர்த்தப்பட்டவுடன் நாணயமானது குவளையில் விழுவதற்கான காரணம்.
A) இயக்கத்தில் நிலைமம்
B) ஓய்வில் நிலைமம்
C) புவி ஈர்ப்பு விசை
D) B, C இரண்டும்
விளக்கம்: நாணயம் வைக்கப்பட்ட காகித அட்டையால் மூடப்பட்ட கண்ணாடி குவளையில். காகித அட்டை நகர்ந்தாலும், நாணயமானது தொடர்ந்து தமது ஓய்வின் நிலைப்புத் தன்மையை நீட்டிக்க முயற்சிக்கிறது. இந்த ஓய்விற்கான நிலைமப் பண்பினால், அட்டை நகர்ந்தவுடன் புவி ஈர்ப்பு விசையினால் நாணயம் குவளையில் விழுகிறது.
16. கீழ்க்கண்டவற்றுள் நிலைமத்தின் வகைகளுல் பொருந்தாதது.
A) விசையின் திசையில் நிலைமம்
B) ஓய்வில் நிலைமம்
C) இயக்கத்தில் நிலைமம்
D) திசையில் நிலைமம்
17. பொருத்துக:
நிலைமம் பண்பு
A) ஓய்வில் நிலைமம் – 1. இயற்கைக்கு மாறான இயக்கம்
B) இயக்கத்தில் நிலைமம் – 2. இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
C) திசையில் நிலைமம் – 3. திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
D) விசை சார்பு இயக்கம் – 4. ஓய்வு நிலை மாற்றத்ததை எதிர்க்கும் பண்பு
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 4 2 3 1
D) 1 3 2 4
விளக்கம்:
A) ஓய்வில் நிலைமம் – 1. ஓய்வு நிலை மாற்றத்ததை எதிர்க்கும் பண்பு
B) இயக்கத்தில் நிலைமம் – 2. இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
C) திசையில் நிலைமம் – 3. திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
D) விசை சார்பு இயக்கம் – 4. இயற்கைக்கு மாறான இயக்கம்
18. பொருத்துக:
A) இயக்கத்தில் நிலைமம் – 1. பழுத்தபின் விழும் பழங்கள்
B) திசையில் நிலைமம் – 2. நீளம் தாண்டுதல்
C) ஓய்வில் நிலைமம் – 3. வளைபாதையில் செல்லும் மகிழுந்து
D) விசை சார்பற்ற இயக்கம் – 4. இயற்கையான இயக்கம்
A) 1 2 3 4
B) 2 3 1 4
C) 4 2 3 1
D) 1 3 2 4
விளக்கம்:
A) இயக்கத்தில் நிலைமம் – 1. நீளம் தாண்டுதல்
B) திசையில் நிலைமம் – 2. வளைபாதையில் செல்லும் மகிழுந்து
C) ஓய்வில் நிலைமம் – 3. பழுத்தபின் விழும் பழங்கள்
D) விசை சார்பற்ற இயக்கம் – 4. இயற்கையான இயக்கம்
19. திசைவேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம்_________
A) குறையும்
B) மாறாது
C) அதிகமாகும்
D) திசைவேகத்தை பொறுத்து மாறுபடும்
விளக்கம்: திசைவேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் அதிகமாகும். விசையின் விளைவானது திசைவேகத்தையும், நிறையினையும் சார்ந்து அமைகிறது. ஒரு பொருளின் செயல்படும் விசையின் தாக்கத்தை நேர்க்கோட்டு உந்தத்தின் மூலம் அளவிடலாம்.
20. இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்__________
A) முடுக்கம்
B) திசைவேகம்
C) உந்தம்
D) இடப்பெயர்ச்சி
விளக்கம்: இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும். இதன் திசையானது பொருளின் திசைவேக திசையிலேயே அமையும். இது ஒரு வெக்டார் அளவாகும். விசையின் எண் மதிப்பானது உந்தத்தால் அளவிடப்படுகிறது.
உந்தம்(p) = நிறை(m) = திசைவேகம்(v)
p = mv
21. நியூட்டனின் எந்த விதி ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும் என கூறுகிறது.
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் இரண்டாம் விதி
C) நீயூட்டனின் மூன்றாம் விதி
D) விசையின் விதி
விளக்கம்: நியூட்டனின் முதல் விதி ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும் என கூறுகிறது. இவ்விதி விசையினை வரையறுக்கிறது. அது மட்டுமன்றி, பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.
22. எண் மதிப்பும் திசையும் கொண்ட விசை ஒரு________
A) ஸ்கேலார்
B) வெக்டார்
C) கோணஉந்தம்
D) முடுக்கம்
விளக்கம்: விசையானது எண்மதிப்பும் திசையும் கொண்ட ஒரு வெக்டார் அளவாகும். ஓய்வில் உள்ள பொருளை இயக்குவதற்கு அல்லது இயக்க முயற்சிப்பதற்கு விசை தேவைப்படுகிறது. இயங்கி கொண்டிருக்கும் பொருளை நிறுத்த அல்லது நிறுத்த முயற்சிப்பதற்கு தேவைப்படுவது விசையாகும்.
23. கூற்று (A): இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை ஒத்த இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
கூற்று (B): இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள், எதிர் எதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்பட்டால் அவை மாறுபட்ட இணைவிசைகள் என்றழைக்கப்படுகின்றன.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
24. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை________
A) தொகுபயனற்ற விசை
B) தொகுபயன் விசை
C) நேர்க்கோட்டு உந்தம்
D) கோண உந்தம்
விளக்கம்: ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை ‘தொகுபயன் விசை’ என்றழைக்கப்படுகிறது. இதன் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டார் கூடுதலுக்குச்(விசைகளின் எண்மதிப்பு மற்றும் திசை ஆகியவற்றின் கூடுதல்) சமமாகும்.
25. கூற்று (A): தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் பொருள் சமநிலையில் உள்ளதென அறியலாம். இவ்விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள் எனப்படும்.
கூற்று (B): தொகுபயன் விசை மதிப்பு சுழியில்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. இது சமன் செய்யப்படாத விசைகள் எனப்படும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
26. கீழ்க்கண்டவற்றுள் சமன்செய்யப்படாத விசைகளுடன் தொடர்பில்லாதது எது.
A) கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும் விசை
B) நெம்புகோலின் மீது செயல்படும் விசை
C) தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை
D) புவி ஈர்ப்பு விசை
விளக்கம்: தொகுபயன் விசை மதிப்பு சுழியில்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. இது சமன் செய்யப்படாத விசைகள் எனப்படும். எ.கா. கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை முதலியன சமன் செய்யப்படாத விசைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
27. தொகுபயன் விசைக்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது, பொருட்களை சம நிலைக்கு கொண்டுவர உதவுகிறது இவ்விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A) நேர் சமனி
B) எதிர்சமனி
C) முன்னோக்கு சமனி
D) பின்னோக்கு சமனி
விளக்கம்: தொகுபயன் விசைக்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது, பொருட்களை சம நிலைக்கு கொண்டுவர உதவுகிறது இவ்விசையை ‘எதிர்சமனி’ என்று அழைக்கப்படுகிறது.
28. கூற்று: கதவினை திறக்க அல்லது மூட, விசையினை விளிம்புகளில் செலுத்துவது எளிதானதாகும்.
காரணம்: கதவின் இணைப்பு அச்சிலிருந்து விளிம்பானது தொலை தூரத்தில் உள்ளது. எனவே அங்கு செயல்படும் விசை அதிக சுழல் விளைவினை ஏற்படுத்துகிறது.
A) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.
B) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
29. பொருத்துக:
A) சுழற் அச்சு – 1. (1 கி செ.மீ-2)
B) சுழற் புள்ளி – 2. (105 டைன்)
C) 1 டைன் – 3. கதவில் உள்ள நிலையான இணைப்பு அச்சு
D) 1 நியூட்டன் – 4. தண்டானது மையமாக வைத்து சுழலும் புள்ளி
A) 1 2 3 4
B) 2 3 1 4
C) 3 4 1 2
D) 1 3 2 4
விளக்கம்:
A) சுழற் அச்சு – 1. கதவில் உள்ள நிலையான இணைப்பு அச்சு
B) சுழற் புள்ளி – 2. தண்டானது மையமாக வைத்து சுழலும் புள்ளி
C) 1 டைன் – 3. (1 கி செ.மீ-2)
D) 1 நியூட்டன் – 4. (105 டைன்)
30. இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை _________
A) இரட்டை விசைகள்
B) ஒற்றை விசைகள்
C) இரட்டை
D) A மற்றும் C இரண்டும்
விளக்கம்: இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை ‘இரட்டை விசைகள்’ அல்லது ‘இரட்டை’ என்றழைக்கப்படும் அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
31. இரட்டைகளின் தொகுபயன்விசை மதிப்பு சுழியாதலால் கீழ்க்கண்ட எந்த விளைவினை ஏற்படுத்தும்.
A) நேர்க்கோட்டு இயக்கம்
B) சுழல்விளைவு
C) எதிர் சுழல் விளைவு
D) கோண இயக்கம்
விளக்கம்: இரட்டைகளின் தொகுபயன்விசை மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல்விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்றழைக்கப்படும்.
32. கீழ்க்கண்டவற்றுள் இரட்டைகளின் திருப்புத்திறனுடன் பொருந்தாதது எது.
A) நெம்புகோல்
B) நீர் குழாய் திறத்தல் மற்றும் மூடுதல்
C) திருகின் சுழற்சி
D) பம்பரத்தின் சுழற்சி
விளக்கம்: இரட்டைகளின் தொகுபயன்விசை மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல்விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்றழைக்கப்படும். எ.கா. நீர் குழாய் திறத்தல் மற்றும் மூடுதல், திருகின் சுழற்சி, பம்பரத்தின் சுழற்சி முதலானவை.
33. இரட்டையின் சுழற்விளைவானது எதனைக் கொண்டு அளவிடப்படுகிறது.
A) சுழல் மதிப்பு
B) திருப்புத்திறன் மதிப்பு
C) நேர்க்கோட்டு உந்த மதிப்பு
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: இரட்டையின் சுழற்விளைவு, அதன் திருப்புத் திறன் மதிப்பு கொண்டு அளவிடப்படுகிறது. இம்மதிப்பு ஏதேனும் ஒரு விசையின் எண்மதிப்பு மற்றும் இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருகற்பலனுக்கு சமமாகும்.
இரட்டையின் திருப்புத்திறன்(M) = விசையின் எண் மதிப்பு(F) × இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு(S)
M = F×S
34. கூற்று (A): திருப்புத்திறனின் திசை, பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் நேர்க்குறியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கூற்று (B): திருப்புத்திறனின் திசை, பொருட்களின் சுழற்சி இடஞ்சுழியாக இருப்பின் எதிர்க்குறியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: திருப்புத்திறனின் திசை, பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் எதிர்க்குறியாகவும், இடஞ்சுழியாக இருப்பின் நேர்க்குறியாகவும் எடுத்துக்கொள்ளப்படுவது மரபாகும்.
35. விசையின் திருப்புத்திறனை பயன்படுத்தி செயல்படும் செயல்பாடுகளுல் பொருந்தாதது எது.
A) பற்சக்கரங்கள்
B) ஏற்றப்பலகை
C) பம்பரத்தின் சுழற்சி
D) திருப்புச்சக்கரம்
36. சமநிலையில் உள்ள பொருள் ஒன்றின் மீது சம மதிப்புள்ள அல்லது சம மதிப்பற்ற விசைகள் இணையாகவோ அல்லது எதிர் இணையாகவோ செயல்பட்டால், அப்பொருளின் மீது செயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புதிறனும், மொத்த இடஞ்சுழி திருப்புத்திறனும்_______ஆக இருக்கும்.
A) ஒன்றுக்கொன்று மாறுபட்டு
B) முடிவிலியாக அமையும்
C) சமமாக
D) மாறிலி
விளக்கம்: சமநிலையில் உள்ள பொருள் ஒன்றின் மீது சம மதிப்புள்ள அல்லது சம மதிப்பற்ற விசைகள் இணையாகவோ அல்லது எதிர் இணையாகவோ செயல்பட்டால், அப்பொருளின் மீது செயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புதிறனும், மொத்த இடஞ்சுழி திருப்புத்திறனும் சமமாக இருக்கும்.
37. நியூட்டனின் எந்த விதி ‘விசையின் விதி’ என்று அழைக்கப்படுகிறது.
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் இரண்டாம் விதி
C) நீயூட்டனின் மூன்றாம் விதி
D) நிலைம விதி
விளக்கம்: பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும். இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. எனவே இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
38. பொருத்துக: (பன்னாட்டு அலகு)
A) உந்தம் – 1. நியூட்டன்
B) விசையின் திருப்புத்திறன் – 2. கிகி மீவி-1
C) ஈர்ப்பியல் விசை – 3. நியூட்டன் மீட்டர்
D) விசை – 4. கிலோகிராம் விசை
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 3 4 1 2
D) 1 3 2 4
விளக்கம்:
A) உந்தம் – 1. கிகி மீவி-1
B) விசையின் திருப்புத்திறன் – 2. நியூட்டன் மீட்டர்
C) ஈர்ப்பியல் விசை – 3. கிலோகிராம் விசை
D) விசை – 4. நியூட்டன்
39. ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு___________
A) 1 நியூட்டன்
B) 1 நியூட்டன் மீட்டர்
C) 105 டைன்
D) A, C இரண்டும்
விளக்கம்: ஒரு கிலோகிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன்(1N) ஆகும். 1 நியூட்டன் 1 கிகி மீவி-1.
40. 1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ.மீ-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு_________
A) 1 நியூட்டன்
B) 1 டைன்
C) 1 கி செ.மீ-2
D) B, C இரண்டும்
விளக்கம்: 1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ.மீ-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 டைன் ஆகும்.
1 டைன் = 1 கி செ.மீ-2
1 நியூட்டன் = 105 டைன்
41. ஓரலகு விசை என்றழைக்கப்படுவது_________
A) 1 நியூட்டன்
B) 1 டைன்
C) 1 முடுக்கம்
D) மேற்கண்ட எதுமில்லை
விளக்கம்: 1 கிலோகிராம் நிறையுள்ள பொருளொன்றை 1 மிவி-2 அளவிற்கு முடுக்கவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் (1N) ஆகும். இது ஓரலகு விசை என்றழைக்கப்படுகிறது.
42. ஓரலகு நிறையுள்ள (1 கி கி) பொருளொன்றை புவியின் ஈர்ப்பு முடுக்கதிற்கு இணையாக முடுக்கவிக்க தேவைப்படும் விசையின் அளவு_________
A) ஓரலகு விசை
B) ஈர்ப்பியல் விசை
C) ஈர்ப்பியல் முடுக்கம்
D) 1 நியூட்டன்
விளக்கம்: ஓரலகு நிறையுள்ள (1 கி கி) பொருளொன்றை புவியின் ஈர்ப்பு முடுக்கதிற்கு(9.8 மீ வி-2) இணையாக முடுக்கவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஈர்ப்பியல் அலகுவிசை எனப்படும். ஈர்ப்பியல் அலகுவிசையின் பன்னாட்டு அலகு, கிலோகிராம் விசை (kgf) ஆகும்.
43. பொருத்துக: ( CGS அலகு)
A) உந்தம் – 1. கிராம் விசை
B) இரட்டையின் திருப்புத்திறன் – 2. டைன்
C) விசை – 3. டைன் செ.மீ
D) ஈர்ப்பியல் விசை – 4. கி செ.மீ வி-1
A) 4 3 1 2
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 4 3 2 1
விளக்கம்:
A) உந்தம் – 1. கி செ.மீ வி-1
B) இரட்டையின் திருப்புத்திறன் – 2. டைன் செ.மீ
C) விசை – 3. டைன்
D) ஈர்ப்பியல் விசை – 4. கிராம் விசை
44. பொருத்துக:
A) 1 நியூட்டன் – 1. (9.8 நியூட்ட ன்)
B) 1 kg f – 2. (980 டைன்)
C) 1 g f – 3. நிறை முடுக்கம்
D) விசை – 4. (1 கிகி மீவி-2)
A) 4 3 1 2
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 4 3 2 1
விளக்கம்:
A) 1 நியூட்டன் – 1. (1 கிகி மீவி-2)
B) 1 kg f – 2. (9.8 நியூட்டன்)
C) 1 g f – 3. (980 டைன்)
D) விசை – 4. நிறை முடுக்கம்
45. மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை_________
A) ஓரலகு விசை
B) ஈர்ப்புயல் விசை
C) கணத்தாக்கு விசை
D) புவி ஈர்ப்பு விசை
விளக்கம்: மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை, கணத்தாக்கு விசை எனப்படும். கணத்தாக்கு என்பது உந்த மாறுபாட்டிற்கு சமமான அளவாகும். இதன் அலகு கிகி மீவி-1 அல்லது நியூட்டன் விநாடி ஆகும்.
46. உந்தம் மாற்றம் அல்லது கணத்தாக்கு செயல்படும் வழிகளுல் தவறானது எது.
1) பொருளின் மோதல் காலம் குறையும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு குறையும்.
2) பொருளின் மோதல் கால மதிப்பு அதிகமாகும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு அதிகமாகும்.
A) 1, 2 இரண்டும் சரி
B) 1, 2 இரண்டும் தவறு
C) 1 மட்டும் தவறு
D) 2 மட்டும் தவறு
விளக்கம்: பொருளின் மோதல் காலம் குறையும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு அதிகமாகும். பொருளின் மோதல் கால மதிப்பு அதிகமாகும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு குறையும்.
47. சீரற்ற பரப்பில் இருசக்கர வாகன பயணத்தின் போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுவது_____________
A) சுருள்வில்
B) அதிர்வுறிஞ்சிகள்
C) மசக்கி எண்ணெய்
D) A, B இரண்டும்
விளக்கம்: சீரற்ற பரப்பில் இருசக்கர வாகன பயணத்தின் போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு சுருள்வில் அமைப்புகளும் அதிர்வுறிஞ்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.
48. கிரிக்கெட் விளையாட்டு வீரர் வேகமாக வரும் பந்தினை பிடிக்க கையை பின்னோக்கி இழுத்து மோதல் காலத்தை அதிகரிக்கிறார். இது அவரது கையில், பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை____________
A) இயல்பு நிலையில் வைக்கிறது
B) அதிகரிக்கிறது
C) குறைக்கிறது
D) மிக அதிகபடுத்துகிறது.
விளக்கம்: கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும் பந்தினை பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை பினனோக்கி இழுத்து மோதல் காலத்தை அதிகரிக்கிறார். இது அவரது கையில், பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை குறைக்கிறது.
49. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு என்பதை கூறும் நியூட்டனின் விதி.
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் இரண்டாம் விதி
C) நீயூட்டனின் மூன்றாம் விதி
D) நிலைம விதி
விளக்கம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
50. கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாவது விதியுடன் பொருந்தாதது எது.
A) பறவைகள் மேலே பறப்பது
B) நீச்சல் வீரர்
C) துப்பாக்கி சுடுதல்
D) திருகின் சுழற்சி
51. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கும் சமன்பாடு.
A) m1v1 + m2v2 = m1u1 + m2u2
B) m1v1 – m2v2 = m1u1 + m2u2
C) m1v1 + m2v2 = m1u1 – m2u2
D) m1v1 = m2v2 + m1u1 + m2u2
விளக்கம்: இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் ஏதும் இல்லாதபோது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.
52. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதி___________
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் மூன்றாம் விதி
C) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
D) B, C இரண்டும்
விளக்கம்: ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, இவை இரண்டும் பயன்படுகின்றன. ராக்கெட்டுகளில் உந்து கலனில் எரிபொருள்கள் (திரவ அல்லது திட) நிரப்பப்படுகின்றன. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன. அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் உருவாக்கி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
53. ராக்கெட்டின் திசைவேகம் கீழ்க்கண்ட எந்த விதியின் படி அதிகரிக்கிறது.
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் மூன்றாம் விதி
C) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
D) உந்த அழிவின்மை விதி
விளக்கம்: ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும்வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது. உந்த அழிவின்மை விதியின் படி நிறை குறைய குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
54. ராக்கெட்டானது புவி ஈர்ப்பு விசையினை தவிர்த்து உச்சத்தை அடையும் வேகம் அதன்___________
A) திசைவேகம்
B) விடுபடு வேகம்
C) முடுக்கம்
D) உந்தம்
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில் அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடு வேகம் எனப்படுகிறது.
55. கூற்று (A): அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும் அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.
கூற்று (B): G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (பன்னாட்டு அலகுகளில்) 6.674 × 10-18 N m2 kg-2
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும் அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (பன்னாட்டு அலகுகளில்) 6.674 × 10-11 N m2 kg-2
56. கூற்று (A): பொருளொன்றை மேல்நோக்கி வீசினால் புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தால், அதன் திசைவேகம் படிப்படியாக அதிகமாகும். ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அம்மதிப்பு முழுமையாக சுழி ஆகிறது.
கூற்று (B): ஈர்ப்பு விசையினால் கீழே விழும் போது அதன் திசைவேகம் தொடர்ந்து மாற்றம் பெறுகிறது. இது அப்பொருளுக்கு முடுக்கத்தினை ஏற்படுத்தும். இம்முடுக்கம் புவி ஈர்ப்பு விசையினால் ஏற்படுவதால் புவிஈர்ப்பு முடுக்கம் என்றழைக்கப்படுகிறது.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: பொருளொன்றை மேல்நோக்கி வீசினால் புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தால், அதன் திசைவேகம் படிப்படியாக குறையும். ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அம்மதிப்பு முழுமையாக சுழி ஆகிறது. ஈர்ப்பு விசையினால் கீழே விழும் போது அதன் திசைவேகம் தொடர்ந்து மாற்றம் பெறுகிறது. இது அப்பொருளுக்கு முடுக்கத்தினை ஏற்படுத்தும். இம்முடுக்கம் புவி ஈர்ப்பு விசையினால் ஏற்படுவதால் புவிஈர்ப்பு முடுக்கம் என்றழைக்கப்படுகிறது.
57. புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு_________
A) 6.674 × 10-11 N m2 kg-2
B) 9.8 மீ வி-2
C) 9.8 மீ வி-1
D) 9.8 மீ வி-3
விளக்கம்: புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு (கடல் மட்டத்தில்) 9.8 மீ வி-2 ஆகும். இதன் பொருளானது, தடையின்றி கீழே விழும் பொருளின் திசைவேகம், ஒரு வினாடிக்கு 9.8 மீ வி-1 என்ற அளவில் மாற்றம் பெறும் என்தாகும். ‘g’ இன் மதிப்பு புவியில் அனைத்து இடங்களிலும் ஒரே மதிப்பாய் இருக்காது.
58. பொருத்துக:
A) புவியின் ஆரம் – 1. (9.8 மீ வி-2)
B) புவியின் நிறை – 2. (6.674 10-11)
C) ஈர்ப்பியல் மாறிலி() – 3. (5.972 × 1024)
D) புவி ஈர்ப்பு முடுக்கம் – 4. (6378 கி.மீ)
A) 4 3 1 2
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 4 3 2 1
விளக்கம்:
A) புவியின் ஆரம் – 1. (6378 கி.மீ)
B) புவியின் நிறை – 2. (5.972 × 1024)
C) ஈர்ப்பியல் மாறிலி(G) – 3. (6.674 10-11)
D) புவி ஈர்ப்பு முடுக்கம் – 4. (9.8 மீ வி-2)
59. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிப்படி, புவிக்கும் பொருளுக்கும் உள்ள ஈர்ப்பு விசை____________
A)
B)
C)
D)
60. பொருள் மீது செயல்படும் விசையை கீழ்க்கண்ட எந்த விதியின் படி கணக்கிடலாம்.
A) நியூட்டனின் முதல் விதி
B) நியூட்டனின் இரண்டாம் விதி
C) நியூட்டனின் மூன்றாம் விதி
D) உந்த அழிவின்மை விதி
விளக்கம்: பொருள் மீது செயல்படும் விசை மதிப்பை நியூட்டனின் இரண்டாம் விதிப்படி கணக்கிடலாம். இவ்விதிப்படி விசையானது பொருளின் நிறைக்கும், முடுக்கத்திற்கும் உள்ள பெருக்கற்பலனாகும்.
61. கூற்று (A): புவிஈர்ப்பு முடுக்கம் ‘g’ ன் மதிப்பு பூமியின் துருவப்பகுதியை சார்ந்து அமையும். புவியின் ஆரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு குறைவாக இருக்கும்.
கூற்று (B): துருவப் பகுதியில் ஆர மதிப்பு குறைவாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கம் அதிகமாக இருக்கும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: புவிஈர்ப்பு முடுக்கம் ‘g’ ன் மதிப்பு பூமியின் ஆரத்தை சார்ந்து அமையும். புவியின் ஆரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு குறைவாக இருக்கும். துருவப் பகுதியில் ஆர மதிப்பு குறைவாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கம் அதிகமாக இருக்கும்.
62. கூற்று (A): நாம் புவியின் தரைப்பகுதியில் இருந்து உயரச் செல்லச் செல்ல புவி ஈர்பபு முடுக்கம் படிப்படியாக குறையும். அதேபோல் புவியின் அடி ஆழத்திற்கு செல்லச் செல்ல புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு அதிகமாகிறது.
கூற்று (): புவியின் மையத்தில் ‘g’ ன் மதிப்பு சுழியாகும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: நாம் புவியின் தரைப்பகுதியில் இருந்து உயரச் செல்லச் செல்ல புவி ஈர்பபு முடுக்கம் படிப்படியாக குறையும். அதேபோல் புவியின் அடி ஆழத்திற்கு செல்லச் செல்ல புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு குறைகிறது. புவியின் மையத்தில் ‘g’ ன் மதிப்பு சுழியாகும்.
63. பொருட்களில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவு_________
A) எடை
B) நிறை
C) மூலக்கூறு
D) அணுக்கள்
விளக்கம்: நிறை என்பது பொருடகளின் அடிப்படை பண்பாகும். பொருட்களின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவாகும். இதன் அலகு கிலோகிராம் ஆகும்.
64. ஒரு பொருளின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் ___________ என்றழைக்கப்படுகிறது.
A) நிறை
B) எடை
C) புவி ஈர்ப்பு முடுக்கம்
D) புவி ஈர்ப்பு விசை
விளக்கம்: ஒரு பொருள் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை என்றழைக்கப்படுகிறது. எடை ஓர் வெக்டார் அளவாகும். அது எப்போதும் புவியின் மையத்தை நோக்கி செயல்படும். அதன் அலகு நியூட்டன்(N). எடையானது புவிஈர்ப்பு முடுக்கத்தைச் சார்ந்தது.
65. கூற்று (A): புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும்.
கூற்று (B): பொருட்களின் எடை துருவப்பகுதியில் குறைவாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாகவும் இருக்கும்.
A) கூற்று A, B இரண்டும் சரி
B) கூற்று A, B இரண்டும் தவறு
C) கூற்று A சரி, B தவறு
D) கூற்று A தவறு, B சரி
விளக்கம்: புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும். பொருட்களின் எடை துருவப்பகுதியில் அதிகமாகவும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
66. புவிஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் ஏற்படும் மாற்றம்________
A) உண்மை எடை
B) தோற்ற எடை
C) எடை இழப்பு
D) மேற்கண்ட எதுமில்லை
விளக்கம்: ஓய்வு நிலையில் உள்ள போது உள்ள நமது உண்மை எடை, மேலே அல்லது கீழே நாம் நகரும் போது அதே மதிப்பில் இருக்காது. புவிஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும். இந்த எடை தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
67. தடையில்லாமல் தானே விழும் நிலை எப்பொழுது ஏற்படுகிறது.
A) மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமமாக உள்ள போது.
B) மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு நேர்மாறாக உள்ள போது.
C) மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு எதிர்மாறாக உள்ள போது.
D) மேலிருந்து கீழே வரும் பொருளின் முடுக்கம் புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு மாறிலியாக உள்ள போது.
68. தோற்ற எடை இழப்பு மற்றும் தோற்ற எடை அதிகரிப்பை கீழ்க்கண்ட எதன் மூலம் உணரலாம்.
A) வேகமாக சுழலும் பெரிய ராட்டினம்
B) ஊஞ்சல் ஆட்டம்
C) உருண்டோடும் தொடர் வண்டி
D) மேற்கண்ட அனைத்தும்
69. கீழ்க்கண்ட விண்வெளி வீரரின் எடை இழப்புப் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A) விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
B) அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
C) அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் ‘தடையின்றி விழும் நிலை’யில் உள்ளார்.
D) அப்போது அவரது உண்மை எடை மதிப்பு சுழியாகும். எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.
விளக்கம்: அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.
70. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட கீழ்க்கண்ட எந்த விதி பயன்படுகிறது.
A) கெப்ளர் விதி
B) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
C) நேர்க்கோட்டு உந்த அழிவிண்மை விதி
D) உந்த அழிவின்மை விதி
விளக்கம்: அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட பொது ஈர்ப்பியல் விதி பயன்படுகிறது. புவியின் நிறை, ஆரம், புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட இவ்விதி உதவுகிறது.
71. கீழ்க்கண்ட எந்த விதி புதிய விண்மீண்கள் மற்றும் கோள்களை கண்டறிய பயன்படுகிறது.
A) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
B) கெப்ளர் விதி
C) நேர்க்கோட்டு உந்த அழிவிண்மை விதி
D) ப்ஃளமிங் விதி
72. நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகளுல் பொருந்தாதது எது.
A) இவ்விதி விண்மீண்களின் நிறையினை அளவிட பயன்படுகிறது.
B) தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ‘புவிதிசை சார்பியக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை விளக்க இவ்விதி பயன்படுகிறது.
C) விண்வெளி வீரரின் உண்மை மற்றும் தோற்ற எடையை கண்டறிய இவ்விதி பயன்படுகிறது.
D) விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.
73. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) நிலவில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு 1.625 மீவி2 ஆகும். இது புவியின், ஈர்ப்பு முடுக்கத்தில் 0.1654 மடங்கிற்கு சமமான அளவாகும்.
2) 60 கிகி நிறையுள்ள ஒருவர் பூமியில் 588 N எடையுடன் ( W= mg = 60 × 9.8 =588 N ) நிலவில் 97 N எடையுடன் இருப்பார்.
3) ஆனால் அவரது எடை மதிப்பு (60 kg) புவியிலும் நிலவிலும் மாறாது இருக்கும்.
A) அனைத்தும் சரி
B) 1, 3 மட்டும் சரி
C) 1, 2 மட்டும் சரி
D) 1 மட்டும் சரி
விளக்கம்: அவரது நிறை மதிப்பு (60 kg) புவியிலும் நிலவிலும் மாறாது இருக்கும்.
74. ( 5 )கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகம்?
A) 0.5 மீ வி-2
B) 0.5 மீ வி-1
C) 0.10 மீ வி-2
D) 0.12 மீ வி-1
விளக்கம்: (5) கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகம்?
75. கீழ் முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீழ் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பு?
A) 26 நியூட்டன்
B) 30 நியூட்டன்
C) 36 நியூட்டன்
D) 40 நியூட்டன்
விளக்கம்: கீழ் முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீழ் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பு?
76. புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் ¼ மடங்காக அமையும்?
A) இருமடங்கு தொலைவில்
B) மூன்று மடங்கு தொலைவில்
C) நான்கு மடங்கு தொலைவில்
D) கண்டறிய இயலாது
விளக்கம்: புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் ¼ மடங்காக அமையும்?
10th Science Lesson 2 Questions in Tamil
2] ஒளியியல்
1. கூற்று (A): ‘ஒளி’ என்பது ஒரு வகை ஆற்றல். இது அலைவடிவில் பரவுகிறது. ஒளி செல்லும் பாதை, ‘ஒளிக்கற்றை’ என்றும் ஒளிக்கதிர்களின் தொகுப்பு ‘கதிர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கூற்று (B): ஒளியை வெளியிடும் பொருள்கள் ‘ஒளிமூலங்கள்’ எனப்படுகின்றன. சில ஒளிமூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை ஒளிரும் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. சூரியன், விண்மீன்கள்.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: ‘ஒளி’ என்பது ஒரு வகை ஆற்றல். இது அலைவடிவில் பரவுகிறது. ஒளி செல்லும் பாதை, ‘ஒளிக்கதிர்’ என்றும் ஒளிக்கதிர்களின் தொகுப்பு ‘ஒளிக்ற்றை’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை வெளியிடும் பொருள்கள் ‘ஒளிமூலங்கள்’ எனப்படுகின்றன. சில ஒளிமூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை ஒளிரும் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. சூரியன், விண்மீன்கள்.
2. பொருள்களைக் காண நமக்கு தேவைப்படுவது_________
A) ஒலி
B) ஒளி
C) பிம்பம்
D) கண்ணாடி
விளக்கம்: பொருள்களைக் காண நமக்கு ஒளி தேவை. ஒரு விளக்கிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பொருள்களின் மீது பட்டு அவற்றிலிருந்து எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் நம் கண்களை அடைந்தால்தான் பொருள்களைக் காண இயலும்.
3. ஒளியின் பண்புகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
A) ஒளி என்பது ஒரு வகை ஆற்றல்.
B) ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
C) ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவை.
D) காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C= 3 × 108 மீவி-1.
விளக்கம்: ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும். ஒளி என்பது ஒரு வகை ஆற்றல். ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C= 3 × 108 மீவி-1.
4. ஒளியின் பண்புகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
A) ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C= v λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப் படுகிறது.
B) ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
C) ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.
D) கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் அதிக அலை நீளத்தையும், சிவப்பு நிறம் குறைந்த அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
விளக்கம்: கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும். ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C= v λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப் படுகிறது. ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும். ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.
5. பொருத்துக:
A) இயற்கை ஒளி மூலம் – 1. (3 × 108 மீவி-1)
B) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் – 2. குறைந்த அலைநீளம்
C) சிவப்பு – 3. சூரியன்
D) ஊதா – 4. அதிக அலைநீளம்
A) 3 1 4 2
B) 3 1 2 4
C) 1 3 4 2
D) 1 2 3 4
விளக்கம்:
A) இயற்கை ஒளி மூலம் – 1. சூரியன்
B) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் – 2. (3 × 108 மீவி-1)
C) சிவப்பு – 3. அதிக அலைநீளம்
D) ஊதா – 4. குறைந்த அலைநீளம்
6. ஒளிக்கதிர் ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போது, ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்லும் நிகழ்வு____________
A) நிறமாலை
B) நிறப்பிரிகை
C) ஒளிவிலகல்
D) ஒளிச்சிதறல்
விளக்கம்: ஒளிக்கதிரானது ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போது, ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்லுகிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் ‘ஒளிவிலகல்’ எனப்படுகிறது. ஒளியானது வெவ்வேறு ஊடகத்தில், வெவ்வேறு திசைவேகத்தில் செல்வதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.
7. கூற்று (A): ஒளியின் திசைவேகம், அடர்வு குறைந்த ஊடகத்தில் அதிகமாகவும், அடர்வு மிகுந்த ஊடகத்தில் குறைவாகவும் இருக்கும்.
கூற்று (B): ஒளிவிலகலானது, இரு ஒளிவிலகல் விதிகளுக்கு உட்பட்டு அமைகிறது.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
8. ஒளிவிலகலின் விதிகளைப் பற்றியக் கூற்றுகளுல் தவறானதைத் தேர்ந்தெடு:
i) ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது, படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
ii) ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது, படுகோணத்தின் சைன் மதிப்பானது விலகு கோணத்தின் சைன் மதிப்பைவிட அதிகமாகும்.
A) i சரி, ii தவறு
B) i தவறு, ii சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது, படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன்மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமமாகும். இவ்விதி ‘ஸ்நெல் விதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
9. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு_______
A) ஒளிவிலகல்
B) ஒளிவிலகல் எண்(µ)
C) முழு அக எதிரொலிப்பு
D) அலைநீளம்
விளக்கம்: ஒளிவிலகல் எண்ணானது ஓர் ஊடகத்தில் ஒளிக்கதிரின் திசைவேகம் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றது. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) என்றும் வரையறுக்கப்படுகிறது.
10. கீழ்கண்டவற்றுள் ஒளிவிலகலின் இரண்டாம் விதிப்படி பொருந்தாததைத் தேர்ந்தெடு.
1) ஒளியின் திசைவேகமானது ஒளிவிலகல் எண் அதிகம் உள்ள ஊடகத்தில் குறைவாகவும், ஒளிவிலகல் எண் குறைவாக உள்ள ஊடகத்தில் அதிகமாகவும் அமையும்.
2) ஓர் ஒளிக்கதிரானது அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது விலகு கதிர் செங்குத்து கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.
3) ஒளிக்கதிர் அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து, அடர்வு மிகு ஊடகத்திற்குச் செல்லும்போது செங்குத்து கோட்டை விட்டு விலகிச்செல்லும்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 2, 3 மட்டும் தவறு
விளக்கம்: ஓர் ஒளிக்கதிரானது அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது விலகு கதிர் செங்குத்து கோட்டை விட்டு விலகிச்செல்லும். ஒளிக்கதிர் அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து, அடர்வு மிகு ஊடகத்திற்குச் செல்லும்போது செங்குத்து கோட்டை நோக்கி விலகிச்செல்லும்.
11. கூற்று (A): ஓர் ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தைக் கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது ‘ஒற்றைநிற ஒளிமூலம்’ என்றழைக்பபடுகிறது.
கூற்று (B): ஓர் ஒளி மூலமானது பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய வெள்ளொளியைத் தருமானால் அது கூட்டொளி மூலங்கள் எனப்படுகிறது. எ.கா. சூரியன்
A) கூற்று A, சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
12. பாதரச ஆவி விளக்கு ஒரு___________
A) ஒற்றைநிற ஒளிமூலம்
B) கூட்டொளி ஒளிமூலம்
C) ஒளிமூலமற்றது
D) எதிரொலிப்பான்
விளக்கம்: ஓர் ஒளி மூலமானது பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய வெள்ளொளியைத் தருமானால் அது கூட்டொளி மூலங்கள் எனப்படுகிறது. எனவே சூரிய ஒளியானது பல்வேறு நிறங்களை அல்லது அலை நீளங்களைக் கொண்ட கூட்டொளி ஆகும். கூட்டொளி மூலத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு பாதரச ஆவிவிளக்கு ஆகும்.
13. வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும்போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாக பிரிகை அடையும் நிகழ்வு____________
A) ஒளிவிலகல்
B) ஒளிச்சிதறல்
C) நிறப்பிரிகை
D) முழு அக எதிரொலிப்பு
விளக்கம்: வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும்போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாக பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.
14. கூற்று: நிறங்களின் தொகுப்பானது ‘நிறமாலை’ என்று அழைக்கப்படுகிறது. நிறமாலையானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டுள்ளது. இந்நிறங்கள் ‘ VIBGYOR ‘ என்ற சுருக்கக் குறியீட்டின் மூலம் குறிப்படப்படுகிறது.
காரணம்: வெள்ளொளியானது ஒளிபுகும் ஊடகத்தில் செல்லும் போது வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு கோண அளவுகளில் விலகல் அடைவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது.
A) கூற்று காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
B) கூற்று காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
15. ஊடகத்தில் ஒளிக்கதிரின் விலகு கோணமானது கீழ்க்கண்ட எதனைப் பொறுத்து மாறுபடுகிறது.
A) நிறங்கள்
B) அலைநீளம்
C) அதிர்வெண்
D) ஒளிச்சிதறல்
16. கூற்று (A): கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் அதிக அலை நீளத்தையும், சிவப்பு நிறம் குறைந்த அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
கூற்று (B): கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம், மிக அதிகமான விலகு கோணத்தையும், ஊதா நிறம் மிகக் குறைந்த விலகு கோணத்தையும் பெற்றுள்ளன.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும். கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம், மிகக் குறைந்த விலகு கோணத்தையும், ஊதா நிறம் மிக அதிகமான விலகு கோணத்தையும் பெற்றுள்ளன.
17. ஸ்நெல் விதிப்படி, விலகுகோணமானது கீழ்க்கண்ட எதனைச் சார்ந்து அமையும்___________
A) ஒளிச்சிதறல்
B) ஒளிவிலகல் எண்
C) நிறமாலை
D) அதிர்வெண்
விளக்கம்: ஸ்நெல் விதிப்படி, விலகுகோணமானது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைச் சார்ந்து அமையும். வெவ்வேறு நிறங்குளுக்கு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் வெவ்வேறாக இருக்கும்.
18. ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் கீழ்க்கண்ட எதனைச் சார்ந்தது.
A) ஒளிச்சிதறல்
B) ஒளிவிலகல்
C) அதிர்வெண்
D) அலைநீளம்
19. சூரிய ஒளி, புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படும் நிகழ்வு________
A) ஒளிவிலகல்
B) நிறப்பிரிகை
C) ஒளிச்சிதறல்
D) முழு அத எதிரொலிப்பு
விளக்கம்: சூரிய ஒளி, புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு ‘ஒளிச்சிதறல்’ எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத் திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது. இடைவினையில் ஈடுபடும் துகள் சிதறலை உண்டாக்கும் துகள் எனப்படுகிறது.
20. ஒளிக்கற்றையானது தொடக்க மற்றும் இறுதி ஆற்றலை அடிப்படையாக கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகிறது.
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
விளக்கம்: ஒளிக்கற்றையானது தொடக்க மற்றும் இறுதி ஆற்றலை அடிப்படையாக கொண்டு ஒளிச்சிதறலை இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை முறையே மீட்சிச் சிதறல் மற்றும் மீட்சியற்ற சிதறல் ஆகியனவாகும்.
21. கூற்று (A): சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் மீட்சிச் சிதறல் எனப்படும்.
கூற்று (B): சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமற்று இருப்பின் அச்சிதறல் மீட்சியற்ற சிதறல் எனப்படும்.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
22. சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறலடிக்கப்படும் நிகழ்வு_______
A) மீ ஒளிச்சிதறல்
B) டிண்டால் விளைவு
C) இராமன் ஒளிச்சிதறல்
D) ராலே ஒளிச்சிதறல்
விளக்கம்: சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறலடிக்கப்படுவதே ‘ராலே ஒளிச்சிதறல்’ ஆகும்.
23. ராலே ஒளிச்சிதறல் விதியின்படி கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு.
A) ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் இருமடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்.
B) இவ்விதியின்படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.
C) சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாக செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
D) சூரிய உதயம் மற்றும் மறைவின்போது, சூரிய ஒளியானது, நண்பகலில் இருப்பதை விட வளிமண்டலத்தில் அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே நீல நிற ஒளியானது முற்றலுமாகச் சிதறலடைந்து சென்றுவிடுவதால் குறைவாகச் சிதறல் அடைந்த சிவப்பு நிற ஒளியே நம்மை அடைகிறது. எனவே சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கிறது.
விளக்கம்: ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்.
24. சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாகக் காட்சியளிப்பதற்கான காரணம்.
A) நீல நிறம் முற்றிலுமாக சிதறலடைவதால்
B) சிவப்பு நிறம் குறைவாக சிதறலடைவதால்
C) A மற்றும் B இரண்டும்
D) சிவப்பு நிறம் அதிகமாக சிதறலடைவதால்
விளக்கம்: சூரிய உதயம் மற்றும் மறைவின்போது, சூரிய ஒளியானது, நண்பகலில் இருப்பதை விட வளிமண்டலத்தில் அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே நீல நிற ஒளியானது முற்றலுமாகச் சிதறலடைந்து சென்றுவிடுவதால் குறைவாகச் சிதறல் அடைந்த சிவப்பு நிற ஒளியே நம்மை அடைகிறது. எனவே சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கிறது.
25. மீ – ஒளிச்சிதறல் பற்றிய கருத்துக்களுல் தவறானதைத் தேர்ந்தெடு.
i) ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின் விட்டமானது, படும் ஒளிக்கதிரின் அலைநீளத்திற்கு சமமாகவோ அல்லது அலைநீளத்தை விட அதிகமாகவோ இருக்கும்.
ii) இச்சிதறல் அளவானது ஒளிக்கதிரின் அலைநீளத்தைச் சார்ந்து அமைகிறது.
A) i சரி, ii தவறு
B) i தவறு, ii சரி
C) i, ii இரண்டும் சரி
D) i, ii இரண்டும் தவறு
விளக்கம்: ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின் விட்டமானது, படும் ஒளிக்கதிரின் அலைநீளத்திற்கு சமமாகவோ அல்லது அலைநீளத்தை விட அதிகமாகவோ இருக்கும். இச்சிதறல் அளவானது ஒளிக்கதிரின் அலைநீளத்தைச் சார்ந்தது அன்று.
26. வளிமண்டலத்தின் கீழ் அடுக்குப்பகுதியில் உள்ள தூசு, புகை, நீர்த்துளிகள் மற்றும் சில துகள்களால் ஏற்படும் சிதறல்.
A) ராலே ஒளிச்சிதறல்
B) மீ – ஒளிச்சிதறல்
C) டிண்டால் ஒளிச்சிதறல்
D) இராமன் ஒளிச்சிதறல்
விளக்கம்: வளிமண்டலத்தின் கீழ் அடுக்குப்பகுதியில் உள்ள தூசு, புகை, நீர்த்துளிகள் மற்றும் சில துகள்களால் மீ – சிதறல் ஏற்படுகிறது.
27. மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை________என்கிறோம்.
A) சேர்மம்
B) கலவை
C) தனிமம்
D) கூழ்மம்
விளக்கம்: மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை கூழ்மம் என்கிறோம். எ.கா. பால், புக, ஐஸ்கிரீம் மற்றும் கலங்கலான நீர்.
28. ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு__________
A) ராலே ஒளிச்சிதறல்
B) மீ – ஒளிச்சிதறல்
C) டிண்டால் விளைவு
D) இராமன் ஒளிச்சிதறல்
விளக்கம்: ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு எனப்படும். சூரிய ஒளிக்கற்றையானது, தூசுகள் நிறைந்த ஓர் அறையின் சாளரத்தின் வழியே நுழையும் போது ஒளிக்கற்றையின் பாதை நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. அறையில் உள்ள காற்றில் கலந்திருக்கும் தூசுகளால் ஒளிக்கற்றையானது சிதறலடிக்கப் படுவதால் ஒளிக்கற்றையின் பாதை புலனாகிறது. இந்நிகழ்வு டிண்டால் ஒளிச்சிதறலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
29. ராமன் ஒளிச்சிதறல் பற்றிய கூற்றுகளுல் சரியானதைக் கண்டறி.
1) வாயுக்கள் அல்லது திரவங்கள் அல்லது ஒளி புகும் தன்மை கொண்ட திண்மங்களின் வழியாக ஒற்றை நிற ஒளியானது இணைக் கற்றைகளாகச் செல்லும் போது அவற்றின் ஒரு பகுதி சிதறல் அடைகிறது.
2) சிதறலடைந்த கதிரானது, படுகின்ற கதிரின் அதிர்வெண்ணைத் தவிர சில புதிய அதிர்வெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்நிகழ்வு ‘இராமன் ஒளிச்சிதறல்’ எனப்படுகிறது.
3) ஒளிக்கதிரானது, தூய திரவங்கள் மற்றும் ஒளி புகும் தன்மை கொண்ட திண்மங்களில் உள்ள துகள்களுடன் இடைவினை புரிவதன் காரணமாக ஒளிக்கதிரின் அலைநீளம் மற்றும் அதிர்வெண்ணில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வை ‘இராமன் ஒளிச்சிதறல்’ எனப்படுகிறது.
A) 1, 2 மட்டும் சரி
B) 3 மட்டும் சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
30. படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள்_________
A) இராமன் வரிகள்
B) ராலே வரிகள்
C) ஸ்டோக் வரிகள்
D) ஆண்டிஸ்டோக் வரிகள்
விளக்கம்: படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ராலே வரிகள் என்றும், புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் ‘இராமன் வரிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
31. கீழ்க்கண்ட நிறமாலைவரிகளை படுகதிரின் அதிர்வெண்ணுடன் தொடர்புபடுத்தி பொருத்துக:
A) ராலே வரிகள் – 1. அதிகமான அதிர்வெண் கொண்ட வரிகள்
B) இராமன் வரிகள் – 2. புதிய அதிர்வெண் கொண்ட வரிகள்
C) ஸ்டோக் வரிகள் – 3. சமமான அதிர்வெண் கொண்ட வரிகள்
D) ஆண்டிஸ்டோக் வரிகள் – 4. குறைவான அதிர்வெண் கொண்ட வரிகள்
A) 3 1 4 2
B) 3 2 4 1
C) 1 3 4 2
D) 1 2 3 4
விளக்கம்:
A) ராலே வரிகள் – 1. சமமான அதிர்வெண் கொண்ட வரிகள்
B) இராமன் வரிகள் – 2. புதிய அதிர்வெண் கொண்ட வரிகள்
C) ஸ்டோக் வரிகள் – 3. குறைவான அதிர்வெண் கொண்ட வரிகள்
D) ஆண்டிஸ்டோக் வரிகள் – 4. அதிகமான அதிர்வெண் கொண்ட வரிகள்
32. பொருத்துக:
A) ராலே ஒளிச்சிதறல் – 1. மேகக்கூட்டங்களின் வெண்மைக் காட்சி
B) மீ – ஒளிச்சிதறல் – 2. தெளிவாக புலனாகும் ஒளிக்கற்றை
C) டிண்டால் ஒளிச்சிதறல் – 3. அலைநீளம் (ம) அதிர்வெண் மாற்றம்
D) இராமன் ஒளிச்சிதறல் – 4. வானம் நீல நிறமாக தோன்றுதல்
A) 3 1 4 2
B) 3 2 4 1
C) 1 3 4 2
D) 4 1 2 3
விளக்கம்:
A) ராலே ஒளிச்சிதறல் – 1. வானம் நீல நிறமாக தோன்றுதல்
B) மீ – ஒளிச்சிதறல் – 2. மேகக்கூட்டங்களின் வெண்மைக் காட்சி
C) டிண்டால் ஒளிச்சிதறல் – 3. தெளிவாக புலனாகும் ஒளிக்கற்றை
D) இராமன் ஒளிச்சிதறல் – 4. அலைநீளம் (ம) அதிர்வெண் மாற்றம்
33. கூற்று (A): இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகா தன்மை கொண்ட ஊடகம் ‘லென்சு’ எனப்படும்.
கூற்று (B): இப்பரப்புகள் இரண்டும் கோளகப் பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப் பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும்.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் ‘லென்சு’ எனப்படும். இப்பரப்புகள் இரண்டும் கோளகப் பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப் பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும். பொதுவாக லென்சுகள் 1. குவிலென்சு 2. குழிலென்சு என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
34. குவிலென்சு அல்லது இருபுறக் குவிலென்சு பற்றிய கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
1) இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது.
2) இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.
3) இவற்றின் வழியாகச் செல்லும் இணையற்ற ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. எனவே இவை ‘குவிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன.
A) 1, 3 மட்டும் தவறு
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) 3 மட்டும் தவறு
விளக்கம்: இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும். எனவே இவை ‘குவிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன.
35. குழிலென்சு அல்லது இருபுறக் குழிலென்சு பற்றிய கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) இவை இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த கோளகப் பரப்புகளைக் கொண்டது.
2) இவை மையத்தில் மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
3) இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் குவிந்து செல்கின்றன.
4) எனவே இவை ‘குவிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன.
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) 1, 4 மட்டும் சரி
D) 1, 2 மட்டும் சரி
விளக்கம்: இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் விரிந்து செல்கின்றன. எனவே இவை ‘விரிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
36. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி:
i) தட்டக் குவிலென்சு: ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குவிலென்சு எனப்படும்.
ii) தட்டக் குழிலென்சு: ஓர் இருபுற குழிலென்சின் இரு பரப்பும் சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குழிலென்சு எனப்படும்
A) i சரி, ii தவறு
B) i தவறு, ii சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: தட்டக் குவிலென்சு- ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குவிலென்சு எனப்படும்.
தட்டக் குழிலென்சு- ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குழிலென்சு எனப்படும்
37. லென்சினால் தோற்றுவிக்கப்படும் பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மை ஆகியவற்றை அரிய பயன்படுத்தும் அடிப்படை விதிகளுல் பொருந்தாதது.
1) ஒளக்கதிரானது ஒரு குவிலென்சு அல்லது குழிலென்சின் ஒளியியல் மையத்தின் வழியாகச் செல்லும் போது விலகலடையாமல் அதே பாதையில் செல்கிறது.
2) முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள், குவிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்திலிருந்து விலகலடைந்து செல்வது போலும், குழிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்தில் குவிக்கப்படுவது போலும் தோன்றும்.
3) முதன்மைக்குவியம் வழியாகச் சென்று குவிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும், முதன்மைக் குவியத்தை நோக்கிச் சென்று குழிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும் விலகலடைந்த பிறகு முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும்.
A) 1, 3 தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 1 மட்டும் தவறு
விளக்கம்: முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள், குவிலென்சின் மீது படும்போது, முதன்மைக் குவியத்தில் குவிக்கப்படும். குழிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்திலிருந்து விலகலடைந்து செல்வது போல் தோன்றும்.
38. பொருத்துக: (குவிலென்சு)
பொருள் வைக்கப்படும் நிலை – தோன்றும் பிம்பம்
A) ஈரிலாத் தொலைவு – 1. அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம்
B) C க்கு அப்பால் – 2. அதே அளவிலான தலைகீழான மெய்பிம்பம்
C) வளைவு மையம்(C) – 3. தலைகீழான மெய்பிம்பம்
D) F க்கும் C க்கும் இடையே – 4. மெய்பிம்பம்
A) 3 1 4 2
B) 3 2 4 1
C) 1 3 4 2
D) 4 3 2 1
விளக்கம்:
பொருள் வைக்கப்படும் நிலை – தோன்றும் பிம்பம்
A) ஈரிலாத் தொலைவு – 1. மெய்பிம்பம்
B) C க்கு அப்பால் – 2. தலைகீழான மெய்பிம்பம்
C) வளைவு மையம்(C) – 3. அதே அளவிலான தலைகீழான மெய்பிம்பம்
D) F க்கும் C க்கும் இடையே – 4. அளவில் பெரிய தலைகீழான மெய்பிம்பம்
39. பொருத்துக:
பொருள் வைக்கப்படும் நிலை – தோன்றும் பிம்பம்
A) ஈரிலாத் தொலைவு – 1. லென்சின் மறுபுறத்தில் C க்கு அப்பால்
B) C க்கு அப்பால் – 2. லென்சின் மற்றொரு பக்கத்தின் C யில்
C) வளைவு மையம்(C) – 3. பல மடங்கு சிறியதாக
D) F க்கும் C க்கும் இடையே – 4. C க்கும் F க்கும் இடையே
A) 3 4 2 1
B) 3 2 4 1
C) 1 3 4 2
D) 3 1 4 2
விளக்கம்:
பொருள் வைக்கப்படும் நிலை – தோன்றும் பிம்பம்
A) ஈரிலாத் தொலைவு – 1. பல மடங்கு சிறியதாக
B) C க்கு அப்பால் – 2. C க்கும் F க்கும் இடையே
C) வளைவு மையம்(C) – 3. லென்சின் மற்றொரு பக்கத்தின் C யில்
D) F க்கும் C க்கும் இடையே – 4. லென்சின் மறுபுறத்தில் C க்கு அப்பால்
40. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி: (குவிலென்சு)
கூற்று 1: பொருளொன்று, குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது, அளவில் பெரிய தலைகீழான, மெய்ப்பிம்பம் ஈறிலாத் தொலைவில் உருவாக்கப்படுகிறது.
கூற்று 2: பொருளொன்று, குவிலென்சின் முதன்மைக் குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே வைக்கப்படும் போது, அளவில் பெரிய, நேரான மாயப்பிம்பத்தைப் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் உருவாக்குகிறது.
A) கூற்று 1 சரி, 2 தவறு
B) கூற்று 1 தவறு, 1 சரி
C) கூற்று 1, 2 இரண்டும் சரி
D) கூற்று 1, 2 இரண்டும் தவறு
41. கீழ்க்கண்டவற்றுள் குவிலென்சின் பயன்பாடுகளுல் பொருந்தாததைக் கண்டறி.
A) இவை ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
B) இவை உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.
C) இவை நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட்ட வீழ்த்திகள் போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.
D) கிட்டப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டைக் சரி செய்யப் பயன்படுகின்றன.
விளக்கம்: தூரப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டைக் சரி செய்யப் பயன்படுகின்றன. இவை நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட்ட வீழ்த்திகள் போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன. இவை உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன. இவை ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
42. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி: (குழிலென்சு)
கூற்று 1: பொருளொன்று, குழி லென்சின் முன்பாக, ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, நேரான மிகப்பெரிய மாயப்பிம்பம் குழிலென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
கூற்று 2: பொருளொன்று குழிலென்சிற்கு முன்பாக, அளவிடக்கூடிய தொலைவில் வைக்கப்படும்போது, குழிலென்சின் ஒளியியல் மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடையே நேரான, சிறிய மாயப்பிம்பத்தை உருவாக்குகிறது.
A) கூற்று 1 சரி, 2 தவறு
B) கூற்று 1 தவறு, 1 சரி
C) கூற்று 1, 2 இரண்டும் சரி
D) கூற்று 1, 2 இரண்டும் தவறு
விளக்கம்: பொருளொன்று, குழி லென்சின் முன்பாக, ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, நேரான மிகசிறிய மாயப்பிம்பம் குழிலென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
43. கீழ்க்கண்டவற்றுள் குழிலென்சின் பயன்பாடுகளுல் பொருந்துவதைக் கண்டறி.
1) இவை கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகிறது.
2) இவை வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துறைகளில் பொருத்தப்படுகின்றன.
3) இவை கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுகின்றன.
4) இவை ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
A) 4 மட்டும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
விளக்கம்: ஒளிப்படக் கருவியில் பயன்படுவது குவிலென்சாகும்.
44. லென்சுகளின் கதிர் வரைபடங்களின் தொலைவுகளை அளவிடப் பயன்படும் குறியீடு__________
A) லென்சு சமன்பாடு
B) ஆடிச் சமன்பாடு
C) கார்டீசியன் குறியீடு
D) மேற்கண்ட எதுமில்லை
விளக்கம்: லென்சுகளின் கதிர் வரைபடங்களின் தொலைவுகளை அளவிடுவதற்குக் கார்டீசியன் குறியீட்டு மரபு பயன்படுத்தப்படுகிறது.
45. கீழ்க்கண்டவற்றுள் காரிடீசியன் மரபு குறியீட்டுடன் பொருந்தாதது எது.
A) பொருள் எப்போதும் லென்சிற்கு வலப்பக்கம் வைக்கப்பட வேண்டும்.
B) அனைத்து தொலைவுகளும், ஒளியியல் மையத்திலிருந்தே அளக்கப்பட வேண்டும்.
C) படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
D) படுகதிரின் திசைக்கு எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
விளக்கம்: பொருள் எப்போதும் லென்சிற்கு இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும். அனைத்து தொலைவுகளும், ஒளியியல் மையத்திலிருந்தே அளக்கப்பட வேண்டும். படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும். படுகதிரின் திசைக்கு எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
46. கீழ்க்கண்ட கார்ட்டீசியன் மரபுக் குறியீட்டினை கவனி:
1) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக மேல்நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
2) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக கீழ்நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
A) கூற்று 1 சரி 2 தவறு
B) கூற்று 1 தவறு 1 சரி
C) கூற்று 1, 2 இரண்டும் சரி
D) கூற்று 1, 2 இரண்டும் தவறு
விளக்கம்: முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக மேல்நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேர்க்குறியாகக் கொள்ள வேண்டும். முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக கீழ்நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
47. கோளக லென்சுகளில் பிம்பத்தின் உயரத்திற்கும், பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு_______
A) ஒளிவிலகல்
B) ஒளிச்சிதறல்
C) உருப்பெருக்கம்
D) நிறப்பிரிகை
விளக்கம்: கோளக ஆடிகளைப் போலவே, கோளக லென்சுகளும் உருப்பெருக்கம் செய்கின்றன. பிம்பத்தின் உயரத்திற்கும், பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு ‘உருப்பெருக்கம்’ எனப்படுகிறது.
48. கூற்று (A): லென்சின் உருப்பெருக்கத்திறனில் உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால், பொருளை விடப் சிறிய பிம்பம் கிடைக்கும்.
கூற்று (B): லென்சின் உருப்பெருக்கத்திறனில் உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட குறைவாக இருந்தால், பொருளை விடப் பெரிய பிம்பமும் கிடைக்கும்.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: லென்சின் உருப்பெருக்கத்திறனில் உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால், பொருளை விடப் பெரிய பிம்பம் கிடைக்கும். லென்சின் உருப்பெருக்கத்திறனில் உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட குறைவாக இருந்தால், பொருளை விடப் சிறிய பிம்பமும் கிடைக்கும்.
49. லென்சை உருவாக்கும் ஒருவர் கீழ்க்கண்ட எதனைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
A) லென்சின் வளைவு ஆரம்
B) லென்சின் திறன்
C) ஒளிவிலகல் எண்
D) A மற்றும் C இரண்டும்
விளக்கம்: அனைத்து லென்சுகளும் ஒளிபுகும் ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன. இந்த ஊடகங்கள் வேறுபட்ட ஒளிவிலகல் எண்களைக் கொண்டவை. லென்சை உருவாக்கும் ஒருவர் லென்சின் வளைவு ஆரம் மற்றும் ஒளிவிலகல் எண் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
50. லென்சு சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு கீழ்க்கண்ட எந்த லென்சிற்கு பயன்படுத்தப்படுகிறது.
A) தடிமனான லென்சு
B) மெல்லிய லென்சு
C) குவி லென்சு
D) குழி லென்சு
விளக்கம்: லென்சு சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை மெல்லிய லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. தடிமனான லென்சுகளுக்கு இவ்விரு சமன்பாடுகளும் சிறிய மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
51. ஒரு ஒளிக்கதிர் லென்சின் மீது படும்போது அக்கதிரானது குவிக்கப்படும் அல்லது விரிக்கப்படும் அளவானது கீழ்க்கண்ட எதனைப் பொறுத்தது.
A) அலைநீளம்
B) அதர்வெண்
C) ஒளிமூலம்
D) குவியத்தொலைவு
விளக்கம்: ஒரு ஒளிக்கதிர் லென்சின் மீது படும்போது அக்கதிரானது குவிக்கப்படும் அல்லது விரிக்கப்படும் அளவானது லென்சின் குவியத்தொலைவைப் பொறுத்தது.
52. லென்சு ஒன்று தன்மீது விழும் ஒளிக்கதிர்களைக் குவிக்கும் அல்லது விரிக்கும் அளவு அதன்_________
A) அதிர்வெண்
B) லென்சின் திறன்
C) அலைநீளம்
D) குவியத்தொலைவு
விளக்கம்: லென்சு ஒன்று தன்மீது விழும் ஒளிக்கதிர்களைக் குவிக்கும் அல்லது விரிக்கும் அளவு லென்சின் திறன் எனப்படுகிறது. எனவே, லென்சின் திறன் என்பது ஒரு லென்சின் குவிக்கும் அல்லது விரிக்கும் திறன் என வரையறுக்கப்டுகிறது. லென்சின் திறன் என்பது எண்ணளவில் அந்த லென்சின் குவியத் தொலைவின் தலைகீழ் மதிப்பிற்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.
53. லென்சின் திறனின் SI அலகு___________
A) டெசிபல்
B) டையாமீட்டர்
C) டையாப்டர்
D) டைன்
விளக்கம்: லென்சின் திறனின் அலகு ‘டையாப்டர்’ ஆகும். இது ‘D’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. லென்சின் குவியத்தொலைவு மீட்டர் (m) என்ற அலகாலும் லென்சின் திறனானது டையாப்டர் (D) என்ற அலகாலும் குறிக்கப்படும் போது 1 D = 1 m-1.
54. ஒரு டையாப்டர் என்பது________
A) ஒரு சென்டிமீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன்
B) ஒரு மீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன்
C) ஒரு மில்லிமீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன்
D) ஒரு கிலோமீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன்
55. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி: (குறியீட்டு மரபுப்படி)
i) குவிலென்சின் திறன் – எதிர்குறி
ii) குழிலென்சின் திறன் – நேர்க்குறி
A) கூற்று i சரி, ii தவறு
B) கூற்று i தவறு, ii சரி
C) கூற்று i, ii இரண்டும் சரி
D) கூற்று i, ii இரண்டும் தவறு
விளக்கம்: குறியீட்டு மரபின் படி, குவிலென்சின் திறன் நேர்க்குறியாகவும், குழிலென்சின் திறன் எதிர்க் குறியீடாகவும் கொள்ளப்படுகிறது.
56. குவிலென்சின் பண்புகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
A) மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும்.
B) இது குவிக்கும் லென்சு
C) பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்.
D) கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
விளக்கம்: தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
57. குழிலென்சின் பண்புகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
A) மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும்.
B) இரு விரிக்கும் லென்சு
C) மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்
D) தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
விளக்கம்: கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
58. கண்ணின் அமைப்புப் பற்றிய கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
1) விழியானது ஏறத்தாழ 2.3 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ அமைப்புடையதாகும்.
2) ‘ஸ்கிளிரா’ என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
A) கூற்று 1 சரி, 2 தவறு
B) கூற்று 1 தவறு, 2 சரி
C) கூற்று 1, 2 இரண்டும் சரி
D) கூற்று 1, 2 இரண்டும் தவறு
விளக்கம்: விழியானது ஏறத்தாழ 2.3 செ.மீ விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையதாகும். ‘ஸ்கிளிரா’ என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
59. பொருத்துக:
A) கார்னியா – 1. கண்ணின் நிறமுடைய பகுதி
B) ஐரிஸ் – 2. மெல்லிய ஒளி புகும் படலம்
C) கண்பாவை – 3. மிக அதிக உணர் நுட்பம் உடைய பகுதி
D) விழித்திரை – 4. ஐரிஸின் மையப்பகுதி
A) 3 4 2 1
B) 3 2 4 1
C) 2 1 4 3
D) 3 1 4 2
விளக்கம்:
A) கார்னியா – 1. மெல்லிய ஒளி புகும் படலம்
B) ஐரிஸ் – 2. கண்ணின் நிறமுடைய பகுதி
C) கண்பாவை – 3. ஐரிஸின் மையப்பகுதி
D) விழித்திரை – 4. மிக அதிக உணர் நுட்பம் உடைய பகுதி
60. கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி_________
A) கார்னியா
B) ஐரிஸ்
C) கண்பாவை
D) விழித்திரை
விளக்கம்: கார்னியாவானது விழிக்கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளி புகும் படலம் ஆகும். இதுவே கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி ஆகும். கார்னியாவை அடையும் ஒளிக்கதிர்கள் ஒளிவிலகல் அடையச் செய்யப்பட்டு விழி லென்சின் மீது குவிக்கப்படுகிறது.
61. மனிதனின் கண் உறுப்பில் ஒளிப்படக் கருவியின் முகப்பைப் போன்று செயல்பட்டு கண்பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துவது.
A) கார்னியா
B) ஐரிஸ்
C) கண்பாவை
D) விழித்திரை
விளக்கம்: இது கண்ணின் நிறமுடைய பகுதியாகும். இது நீலம், பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் காணப்படலாம். ஒது ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை வாய்ந்த நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டிருக்கும். இது ஒளிப்படக் கருவியின் முகப்பைப் போன்று செயல்பட்டு கண்பாவையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
62. பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கீழ்க்கண்ட எதன் வழியாக விழித்திரையை அடைகின்றன.
A) கார்னியா
B) ஐரிஸ்
C) கண்பாவை
D) விழித்திரை
விளக்கம்: இது ஐரிஸின் மையப்பகுதியாகும். பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்பாவையின் வழியாகவே விழித்திரையை அடைகின்றன.
63. கண்ணில் உள்ள விழித்திரையில் உருவாக்கப்படும் பிம்பம்
A) நேரான மாயபிம்பம்
B) நேரான மெய்பிம்பம்
C) தலைகீழான மெய்பிம்பம்
D) தலைகீழான மாயபிம்பம்
விளக்கம்: இது விழிக் கோளத்தில் பின்புற உட்பரப்பு ஆகும். மிக அதிக உணர் நுட்பம் உடைய இப்பகுதியில் பொருளின் தலைகீழான மெய்ப்பிம்பம் உருவாக்கப்படுகிறது.
64. பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிலென்சு தன் குவியத் தூரத்தை மாற்றிக் கொள்ள உதவும் தசை
A) வரிதசை
B) வரியற்ற தசை
C) குருத்தெலும்பு தசை
D) சிலியரித் தசை
விளக்கம்: விழி லென்சானது சிலியரித்தசைகளால் தாங்கப்பட்டுள்ளது. பொருள்களின் தொலைவிற்கு ஏற்ப, விழிலென்சு தன் குவியத் தூரத்தை மாற்றிக் கொள்ள இத்தசைகள் உதவுகின்றன.
65. மனிதக் கண்ணின் மிக முக்கியமான பகுதி_________
A) விழிலென்சு
B) விழித்திரை
C) கண்பாவை
D) சிலியரித் தசைகள்
விளக்கம்: இது கண்ணின் மிக முக்கியமான பகுதியாகும். இது இயற்கையில் அமைந்த குவிலென்சாகச் செயல்படுகிறது.
66. கீழ்க்கண்டவற்றுள் கண்ணின் செயல்பாட்டுடன் பொருந்தாதது.
A) கண்ணில் உள்ள ஒளி புகா படலமான கார்னியா தன் மீது படும் ஒளிக்கதிர்களை, ஐரிஸின் மையப்பகுதியில் உள்ள கண்பாவையை நோக்கித் திருப்புகிறது.
B) இக்கதிர்கள் விழிலென்சை அடைகின்றன.
C) விழிலென்சானது குவி லென்சாகச் செயல்படுவதால், இக்கதிர்கள் குவிக்கப்பட்டு விழித்திரையில் தலைகீழான, மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
D) இப்பிம்பம் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதியாக மூளையானது நேரான பிம்பத்தை உணர்கிறது.
67. அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை___________
A) தூரப்பார்வை
B) கிட்டப்பார்வை
C) மையோபியா
D) விழி ஏற்பமைவுத் திறன்
விளக்கம்: அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, ‘விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது. விழி லென்சு தன்னுடைய குவியத் தொலைவை மாற்றியமைப்பதற்கு சிலியரித் தசைகள் உதவுகிறது.
68. நமது கண்ணில் நெகிழும் தன்மை கொண்ட ஜெல்லி போன்ற பொருளால் ஆனப் பகுதி_________
A) விழிலென்சு
B) விழித்திரை
C) கண்பாவை
D) சிலியரித் தசைகள்
விளக்கம்: விழி லென்சானது, நெகிழும் தன்மை கொண்ட, ஜெல்லி போன்ற பொருளால் ஆனது. சிலியரி தசைகள் சுருங்கி, விரிவடையும் போது, லென்சின் வளைவும், குவியத் தொலைவும் மாற்றியமைக்கப்படுகிறது.
69. கூற்று (A): நாம் தொலைவில் உள்ள பொருள்களைக் காணும் போது சிலியரித் தசைகள் விரிவடைவதன் மூலம் விழி லென்சின் தடிமன் குறைந்து மெல்லியதாக மாற்றப்படுகிறது. இதனால் விழி லென்சின் குவியதூரம் அதிகரிக்கப்பட்டு பொருள் தெளிவாக புலனாகிறது.
கூற்று (B): நாம் அருகில் உள்ளப் பொருள்களைக் காணும் போது சிலியரித்தசைகள் சுருங்குவதால் விழி லென்சின் தடிமன் அதிகரிக்கிறது. இதனால் விழி லென்சின் குவியதூரம் குறைந்து பொருளின் தெளிவான பிம்பம் விழித்திரையில் வீழ்த்தப்படுகிறது.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
70. மனித கண் உறுப்பின் பார்வை நீட்டிப்பு கால அளவு_______
A) 1/14
B) 1/16
C) 1/18
D) 1/20
விளக்கம்: இரு அடுத்தடுத்த ஒளித்துடிப்புகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி 1/16 வினாடியை விட குறைவாக இருந்தால், மனிதக் கண்களால் அவற்றைத் தனித்தனியாக வேறுபடுத்தி அறிய இயலாது. இது ‘பார்வை நீட்டிப்பு’ எனப்படும்.
71. மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணக்கூடிய மிகச்சிறியத் தொலைவு___________
A) தெளிவுறுக் காட்சியின் மீச்சிறு தொலைவு
B) சேய்மைப் புள்ளி
C) அண்மைப் புள்ளி
D) A, C இரண்டும்
விளக்கம்: மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணக்கூடிய மிகச்சிறியத் தொலைவு ‘தெளிவுறுக் காட்சியின் மீச்சிறு தொலைவு’ எனப்படும் இது அண்மைப் புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
72. மனித கண்ணின் தெளிவுறு காட்சியின் அளவு________
A) 25 மீ
B) 25 செ.மீ
C) 20 செ.மீ
D) 20 மீ
விளக்கம்: மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணக்கூடிய மிகச்சிறியத் தொலைவு ‘தெளிவுறுக் காட்சியின் மீச்சிறு தொலைவு’ எனப்படும் இது அண்மைப் புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் கண்ணிற்கு பொதுவாக 25 செ.மீ என்ற அளவில் இருக்கும்.
73. கண் ஒன்றினால் எவ்வளவுத் தொலைவில் உள்ளப் பொருள்களைத் தெளிவாகக் காணமுடிகிறதோ அப்புள்ளி__________
A) சேய்மைப்புள்ளி
B) அண்மைப்புள்ளி
C) தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு
D) மேற்கண்ட எதுமில்லை
74. பொருத்துக:
A) விழித்திரை – 1. (25 செ.மீ)
B) பார்வை நீட்டிப்பு – 2. ஈரிலாத் தொலைவு
C) சேய்மைப்புள்ளி – 3. (1/16)
D) அண்மைப்புள்ளி – 4. ஸ்கிளிரா
A) 3 4 2 1
B) 3 2 4 1
C) 2 1 4 3
D) 4 3 2 1
விளக்கம்:
A) விழித்திரை – 1. ஸ்கிளிரா
B) பார்வை நீட்டிப்பு – 2. (1/16)
C) சேய்மைப்புள்ளி – 3. ஈரிலாத் தொலைவு
D) அண்மைப்புள்ளி – 4. (25 செ.மீ)
75. மனிதர்களின் பார்வையில் குறைபாடு ஏற்படக் முக்கிய காரணம்___________
A) ஊட்டச்சத்தின்மை
B) வயது முதிர்வு
C) தாது உப்புக்கள் குறைபாடு
D) இரும்புச்சத்து குறைபாடு
76. பொருத்துக:
A) கிட்டப் பார்வை – 1. அஸ்டிக்மேட்டிசம்
B) தூரப் பார்வை – 2. ப்ரஸ்பயோஃபியா
C) விழி ஏற்பமைவுத் திறன் – 3. ஹைபர்மெட்ரோஃபியா
D) பார்வைச் சிதரல் குறைபாடு – 4. மையோஃபியா
A) 4 3 2 1
B) 3 2 4 1
C) 2 1 4 3
D) 3 4 2 1
விளக்கம்:
A) கிட்டப் பார்வை – 1. மையோஃபியா
B) தூரப் பார்வை – 2. ஹைபர்மெட்ரோஃபியா
C) விழி ஏற்பமைவுத் திறன் – 3. ப்ரஸ்பயோஃபியா
D) பார்வைச் சிதரல் குறைபாடு – 4. அஸ்டிக்மேட்டிசம்
77. கீழ்க்கண்டவற்றுள் கிட்டப்பார்வை தொடர்பான கருத்துகளுல் தவறானதைக் கண்டறி:
A) மையோபியா என்று அழைக்கப்படும் ‘கிட்டப்பார்வை’ என்னும் குறைபாடானது விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது.
B) இக்குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது. ஆனால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணமுடியும்.
C) விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
D) இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாக்கப்படுகின்றன.
விளக்கம்: இக்குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். ஆனால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணமுடியாது.
78. கீழ்க்கண்டவற்றுள் தூரப்பார்வை தொடர்பான கருத்துகளுல் தவறானதைக் கண்டறி:
A) தூரப்பார்வை என்று அழைக்கப்படும், ஹைபர்மெட்ரோஃபியா குறைபாடானது விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
B) இக்குறைபாடு உடைய மனிதர்களால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது. ஆனால் அருகில் உள்ளப் பொருள்களைக் காண முடியும்.
C) விழிலென்சின் குவியத்தொலைவு அதிகரிப்பதாலும், விழி லென்சுக்கும் விழித் திரைக்கும் இடையே உள்ளத் தொலைவு குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
D) இதனால் அண்மைப்புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் அமையாமல், சேய்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. எனவே, அருகில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு அப்பால் உருவாக்கப்படுகின்றன.
79. ‘வயது முதிர்வு தூரப்பார்வை’ என்றும் அழைக்கப்படும் கண் குறைபாடு________
A) கிட்டப்பார்வை
B) தூரப்பார்வை
C) விழி ஏற்பமைவுத் திறன்
D) பார்வைச் சிதறல் குறைபாடு
விளக்கம்: இக்குறைபாடு உடைய சில வயது முதிர்ந்த பெரியவர்களால் அருகில் உள்ள பொருளைத் தெளிவாகக் காண முடியாது. எனவே இக்குறைபாடு ‘வயது முதிர்வு தூரப்பார்வை’ என்றும் அழைக்கப்படுகிறது.
80. சிலியரித் தசைகள் வலுவிழக்க முக்கிய காரணம்___________
A) ஊட்டச்சத்தின்மை
B) வயது முதிர்வு
C) தாது உப்புக்கள் குறைபாடு
D) இரும்புச்சத்து குறைபாடு
விளக்கம்: மனிதரில் ஏற்படும் வயதுமுதிர்வு காரணமாக, சிலியரித் தசைகள் வலுவிழக்கின்றன. மேலும் விழிலென்சு தன் நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால் விழியின் ஏற்பமைவுத் திறனில் குறைபாடு ஏற்படுகிறது.
81. கூற்று (A): சில மனிதர்கள் ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படலாம். இக்குறைபாடானது ‘உருளை லென்சு’ மூலம் சரி செய்யப்படுகிறது.
கூற்று (B): இந்த லென்சின் மேல்புறம் குழி லென்சும் (கிட்டப்பார்வையை சரி செய்து நீண்ட தொலைவில் உள்ள பொருள்களைக் காணவும்), கீழ் புறம் குவி லென்சும் (தூரப்பார்வை சரி செய்து படிப்பதற்கு ஏற்ற வகையிலும்) கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: சில மனிதர்கள் ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படலாம். இக்குறைபாடானது ‘இரு குவிய லென்சுகள்’ மூலம் சரி செய்யப்படுகிறது.
82. இணையான மற்றும் கிடைமட்டக் கோடுகளைத் தெளிவாக காண இயலாமைக்கான கண் குறைபாடு____________
A) கிட்டப்பார்வை
B) தூரப்பார்வை
C) விழி ஏற்பமைவுத் திறன்
D) பார்வைச் சிதறல் குறைபாடு
விளக்கம்: இக்குறைபாடு உடைய கண்களால், இணையான மற்றும் கிடைமட்டக் கோடுகளைத் தெளிவாக காண இயலாது. இக்குறைபாடு மரபு ரீதியாகவோ அல்லது கண்ணில் ஏற்படும் பாதிப்புகளினாலோ தோன்றலாம்.
83. அஸ்டிக்மேட்டிசம் (பார்வை சிதறல் குறைபாடு) ஏற்படுவதற்கான காரணம்______________
A) கண்புரை
B) கார்னியாவில் உருவாகும் புண்கள்
C) விழியின் மேற்பரப்புகளில் உண்டாகும் காயங்கள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: விழிலென்சில் ஏற்படும் கண்புரை, கார்னியாவில் உருவாகும் புண்கள், விழியின் மேற்பரப்புகளில் உண்டாகும் காயங்கள் போன்றவற்றால் இக்குறைபாடு ஏற்படுகிறது. உருளை லென்சுகள் மூலம் இக்குறைபாட்டைச் சரி செய்யலாம்
84. பொருத்துக:
A) மையோபிஃயா – 1. உருளை லென்சுகள்
B) ஹைபர் மெட்ரோபிஃயா – 2. குவிலென்சு
C) ப்ரஸ்பயோபிஃயா – 3. குழிலென்சு
D) அஸ்டிக்மேட்டிசம் – 4. இரு குவிய லென்சுகள்
A) 4 3 2 1
B) 3 2 4 1
C) 2 1 4 3
D) 3 4 2 1
விளக்கம்:
A) மையோபிஃயா – 1. குழிலென்சு
B) ஹைபர் மெட்ரோபிஃயா – 2. குவிலென்சு
C) ப்ரஸ்பயோபிஃயா – 3. இரு குவிய லென்சுகள்
D) அஸ்டிக்மேட்டிசம் – 4. உருளை லென்சுகள்
85. எளிய நுண்ணோக்கியாக செயல்படும் குவிய லென்சானது________
A) அதிக குவியத் தொலைவு கொண்டது
B) ஈரிலா குவியத் தொலைவு கொண்டது
C) குறைந்த குவியத் தொலைவு கொண்டது
D) மீச்சிறுத் தொலைவு கொண்டது
விளக்கம்: குறைந்த குவியத் தொலைவு கொண்ட குவி லென்சானது எளிய நுண்ணோக்கியாகச் செயல்படுகிறது. குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப் பார்க்கும் போது. பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
86. எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகளுல் பொருத்தமானதை தேர்வு செய்க.
A) கடிகாரம் பழுது பார்ப்பவர்கள்
B) சிறிய எழுத்துக்களை படிக்க
C) பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்று நோக்க
D) மேற்கண்ட அனைத்தும்
87. தடய அறிவியல் துறை மற்றும் கைரேகைகளை பகுத்தறியப் பயன்படும் நுண்ணோக்கி___________
A) கூட்ட நுண்ணோக்கி
B) எளிய நுண்ணோக்கி
C) நகரும் நுண்ணோக்கி
D) தொலை நுண்ணோக்கி
88. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்திறன் எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்கதிறனைவிட_________
A) குறைவு
B) அதிகம்
C) மிகக் குறைவு
D) தொடர்பு படுத்த இயலாது
89. குவிலென்சின் குவியத் தொலைவினைக் குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறனை____________
A) குறைக்கலாம்
B) எந்த மாற்றமும் செய்ய இயலாது
C) அதிகரிக்கலாம்
D) ஓரளவு மாற்ற இயலும்
விளக்கம்: குவிலென்சின் குவியத் தொலைவினை குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறனை அதிகரிக்கலாம். ஆனால் லென்சுகளை வடிவமைப்பதில் உள்ள இடர்பாடுகளால், குவிய தூரத்தினை ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் குறைக்க இயலாது.
90. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்கத்தை அதிகரிக்க பயன்படுவது_______
A) இரண்டு குழிலென்சு
B) இரண்டு குவிலென்சு
C) ஒற்றை குவிலென்சு
D) ஒற்றை குழிலென்சு
91. கூற்று (A): கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது. இவற்றில் பொருளுக்கு அருகில் உள்ள அதிக குவிய தூரம் கொண்ட குவிலென்சானது, ‘பொருளருகு லென்சு’ அல்லது பொருளருகு வில்லை என்றும் அழைக்கப்படுகிறது.
கூற்று (B): உற்று நோக்குபவருடைய கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும், கொண்ட குவிலென்சு ‘கண்ணருகு லென்சு’ அல்லது கண்ணருகு வில்லை என்றும் அழைக்கப்படுகின்றது.
A) கூற்று A சரி, B தவறு
B) கூற்று A தவறு, B சரி
C) கூற்று A, B இரண்டும் சரி
D) கூற்று A, B இரண்டும் தவறு
விளக்கம்: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது. இவற்றில் பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவிய தூரம் கொண்ட குவிலென்சானது, ‘பொருளருகு லென்சு’ அல்லது பொருளருகு வில்லை என்றும் அழைக்கப்படுகிறது.
92. கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனானது, எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனைக் காட்டிலும் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்.
A) 50 முதல் 100 மடங்கு
B) 60 முதல் 100 மடங்கு
C) 50 முதல் 200 மடங்கு
D) 50 முதல் 220 மடங்கு
93. (0.01 மி.மீ) என்ற அளவிளான மிகச்சிறியத் தொலைவுகளை மிகத் துல்லியமாக அளந்தரிய பயன்படும் நுண்ணோக்கி___________
A) நகரும் நுண்ணோக்கி
B) எளிய நுண்ணோக்கி
C) கூட்டு நுண்ணோக்கி
D) தொலை நுண்ணோக்கி
விளக்கம்: இது 0.01 மி.மீ என்ற அளவிலான மிகச்சிறியத் தொலைவகளை மிகத்துல்லியமாக அளந்தறியக்கூடிய மிகச் சிறந்த கருவிகளுல் ஒன்றாகும். இது வெரினியர் தத்துவத்தின் அடிப்படையில் செய்ல்படுகிறது. இதன் மீச்சிற்றளவு 0.01 மி.மீ ஆகும்.
94. 1608 – ஆம் ஆண்டு முதன் முதலில் தொலைநோக்கியை உருவாக்கியவர்.
A) கலிலியோ
B) அரிஸ்டாட்டில்
C) ஜோகன் லிப்ரஷே
D) ஜோகன் பிரிட்டன்
விளக்கம்: தொலைவில் உள்ள பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவிகள் தொலைநோக்கிகள் எனப்படுகின்றன. 1608 ஆம் ஆண்டு ஜோகன் லிப்ரஷே என்பவரால் முதன் முதலில் தொலை நோக்கி உருவாக்கப்பட்டது.
95. விண்மீண்களை உற்று நோக்குவதற்காக தொலைநோக்கியை கண்டறிந்தவர்___________
A) கலிலியோ
B) அரிஸ்டாட்டில்
C) ஜோகன் லிப்ரஷே
D) ஜோகன் பிரிட்டன்
விளக்கம்: விண்மீண்களை உற்று நோக்குவதற்காக கலிலியோ ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார் அவர் கண் கண்ணாடிகள் செய்யும் கடைக்காரர் ஒருவரின் கடையில் வைக்கப்பட்டிருந்த லென்சின் வழியாகத் தொலைவில் உள்ள கால நிலைக்காட்டியின் பெரிதாக்கப்பட்ட பிம்பத்தைக் கண்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கியை உருவாக்கினார். இத்தொலைநோக்கி மூலம் வியாழன் கோளையும், சனி கோளைச் சுற்றியுள்ள வளையங்களையும் ஆராய்ந்தார்.
96. கெப்ளர் என்ற இயற்பியலாளர் தொலைநோக்கியை உருவாக்கிய ஆண்டு_______
A) 1600
B) 1608
C) 1611
D) 1621
விளக்கம்: கெப்ளர் என்ற இயற்பியளாலர் 1611 ஆம் ஆண்டு ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். இது அடிப்படையில் தற்கால வானியல் தொலைநோக்கியை ஒத்திருந்தது.
97. ஒளி விலகல் தொலைநோக்கிளாக பயன்படுபவை________
A) கலிலியோ தொலைநோக்கி
B) கெப்ளர் தொலைநோக்கி
C) நிறமற்ற ஒளி விலக்கிகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகள் ஒளி விலகல் தொலை நோக்கிகள் மற்றும் ஒளி எதிரொளிப்புத் தொலை நோக்கிகள் என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஒளிவிலகல் தொலைநோக்கிகளில் ‘லென்சுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. கலிலியோ தொலைநோக்கி, கெப்ளர் தொலைநோக்கி, நிறமற்ற ஒளி விலக்கிகள் ஆகியவை ஒளிவிலகல் தொலை நோக்கிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
98. ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் பயன்படுத்தபடும் ஆடிகள்__________
A) குவி ஆடி
B) குழி ஆடி
C) கோளக ஆடிகள்
D) சமதள ஆடிகள்
99. ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளாக பயன்படுபவை________
A) கிரியேரயன் தொலைநோக்கிகள்
B) நியூட்டன் தொலைநோக்கிகள்
C) கேஸ்கிரைன் தொலைநோக்கிகள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: ஒளிஎதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ‘கோளக ஆடிகள்’ பயன்படுத்தப்படுகின்றன. கிரியேரயன் தொலைநோக்கிகள், நியூட்டன் தொலைநோக்கிகள், கேஸ்கிரைன் தொலைநோக்கிகள் போன்றவை ஒளிஎதிரொளிப்பு தொலை நோக்கிகளுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி காணக் கூடிய பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொலை நோக்கிகள் வானியல் தொலை நோக்கிகள் மற்றும் நிலப்பரப்பு தொலை நோக்கிகள் என இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
100. வான்பொருட்களான கோள்கள், விண்மீன்கள், விணிமீன் திரள்கள், துணைக்கோள்கள் போன்றவற்றைக் காணப் பயன்படும் தொலை நோக்கி_________
A) ஒளி விலகல் தொலைநோக்கி
B) ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கி
C) வானியல் தொலைநோக்கி
D) நிலப்பரப்பு தொலைநோக்கி
101. நிலப்பரப்பு தொலைநோக்கி உருவாக்கும் பிம்பம்……
A) தலைகீழ் பிம்பம்
B) தலைகீழ் மாயபிம்;பம்
C) நேரான இறுதி பிம்பம்
D) பிம்பம் தோன்றுவதில்லை
விளக்கம்: வானியல் தொலை நோக்கிகளில் கிடைக்கும் இறுதி பிம்பமானது தலை கீழ் பிம்பமாக இருக்கும். எனவே, இத்தொலைநோக்கிகள் புவிப்பரப்பில் உள்ள பொருள்களைக் காண்பதற்கு ஏற்றவை அல்ல என்பதால் நிலப்பரப்பு தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரான இறுதி பிம்பத்தை உருவாக்குவது மட்டுமே வானியல் தொலை நோக்கிகளுக்கும், நிலப்பரப்பு தொலைநோக்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.
102. தொலைநோக்கி பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாதது எது.
A) கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
B) தொலைநோக்கியுடன் ஒளிப்படக்கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
C) குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலை நோக்கியைப் பயன்படுத்தலாம்.
D) இவற்றை எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
103. ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 300 எனில் விலகு கோணம் என்ன?
A) 19.450
B) 20.100
C) 22.450
D) 25.450
விளக்கம்: ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 300 எனில் விலகு கோணம் என்ன?
104. ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக் கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொகையில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் காண்க.
A) -0.6 மீ
B) 0.9 மீ
C) 0.6 மீ
D) 0.3 மீ
விளக்கம்: ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக் கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொகையில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் காண்க.
105. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்பட வேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?
A) 0.2 D
B) -0.2 D
C) 0.4 D
D) -0.4 D
விளக்கம்: கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்பட வேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?
106. தூரப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவைக் கணக்கிடு.
A) -0.3 மீ
B) 0.6 மீ
C) 0.3 மீ
D) -0.6 மீ
விளக்கம்: தூரப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவைக் கணக்கிடு.
107. லென்ஸின் சமன்பாடு___________
A) 1/f = 1/v – 1/u
B) 1/f = 1/v + 1/u
C) 1/v =1/f – 1/u
D) 1/v = 1/f + 1/u
10th Science Lesson 3 Questions in Tamil
3] வெப்ப இயற்பியல்
1. அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான முதன்மையான வெப்ப ஆற்றல் ________ இருந்து கிடைக்கிறது
A) லாவா
B) சூரியன்
C) நெருப்பு
D) இவை அனைத்தும்
விளக்கம்: வெப்ப ஆற்றல் என்பது காரணி மற்றும் வெப்பநிலை என்பது விளைவு. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது.
2. கூற்று 1: ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன் வெப்பச் சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பு வெப்பநிலை.
கூற்று 2: ஒரு பொருளின் வெப்பம் எத்திசையில் பரவுகிறது என்பதை குறிப்பிடும் பண்பு வெப்பநிலை.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒரு பொருளில் இருக்கும் வெப்பம் அல்லது குளிர்ச்சி நிலையின் அளவு வெப்பநிலை என வரையறுக்கப்படுகிறது. குளிர்ச்சியான பொருளைவிட சூடான பொருளின் வெப்பநிலை அதிகம். ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன் வெப்பச் சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பையும் வெப்பநிலை என வரையறுக்கலாம் (மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் வெப்பநிலை ஆகும்). வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பம் எத்திசையில் பரவுகிறது என்பதை குறிப்பிடும் பண்பு ஆகும்.
3. வெப்பம் என்பது ஓர் _______ அளவு வெப்பநிலை என்பது ஒரு _________ அளவு ஆகும்.
A) ஸ்கேலார், வெக்டார்
B) வெக்டார், ஸ்கேலார்
C) ஸ்கேலார், ஸ்கேலார்
D) வெக்டார், வெக்டார்
விளக்கம்: வெப்பம், வெப்பநிலை ஸ்கேலார் அளவு. வெப்பநிலையின் SI அலகு கெல்வின்.மேலும் செல்சியஸ் (°C) மற்றும் ஃபாரன்ஹீட் (°F) ஆகிய அலகுகளும் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.
4. கெல்வின் அளவுகோலிலுள்ள தனிச்சுழி வெப்பநிலையைப் பொறுத்து அளவிடப்படும் வெப்பநிலை
A) தனித்த அளவுகோல்
B) வெப்ப அளவுகோல்
C) சுழி அளவுகோல்
D) A மற்றும் B
விளக்கம்: வெப்பநிலையின் தனித்த அளவுகோல் என்பது பண்டைய எந்திரவியல் கருத்துப்படி, வெப்ப இயக்கவியலின் இயக்கங்கள் முடிவுக்கு வருகின்ற வெப்பநிலையான சுழி வெப்பநிலையை கொண்ட ஒரு முழுமையான வெப்பநிலை அளவுகோல் ஆகும். இது வெப்ப இயக்கவியலின் வெப்பநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
5. வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையின் ஓர் அலகு என்பது நீரின் மும்மைப்புள்ளியில்
A) 273.16 பங்கு
B) 1/73.16 பங்கு
C) 1/273.16 பங்கு
D) 1/2.7316 பங்கு
விளக்கம்: வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையின் ஓர் அலகு என்பது நீரின் மும்மைப்புள்ளியில் 1/273.16 பங்கு ஆகும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடு ஒரு கெல்வினுக்கு சமமாகும்.
6. கெல்வின் மற்றும் செல்சியஸ் இடையேயான தொடர்பு
A) K = C + 273
B) C = K + 273
C) K = C – 273
D) K = 2C + 273
விளக்கம்: செல்சியஸிலிருந்து கெல்வின் K = C + 273. 0 K = – 273°C
7. 50 0F என்பதை கெல்வினுக்கு மாற்றுக
A) 283.15 K
B) 253.85 K
C) 283 K
D) 320 K
விளக்கம்: ஃபாரன்ஹீட்டிலிருந்து கெல்வின் K = (F + 459.67) × 5/9
8. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே எந்த வெப்பஆற்றல் பரிமாற்றமும் இல்லை
A) வெப்பச் சமநிலை
B) வெப்பநிலை வேறுபாடு
C) வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்
D) வெப்பநிலை சிறிது குறையும்
விளக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே எந்த வெப்பஆற்றல் பரிமாற்றமும் இல்லை எனில் அந்தப் பொருள்கள் வெப்பச் சமநிலையில் உள்ளது என்று பொருள். வெப்பநிலை வேறுபாட்டினால் வெப்ப ஆற்றல் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குப் பரவுகிறது. ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருள்கள் வெப்பசமநிலையில் உள்ளது எனவும் வரையறுக்கலாம்.
9. மாறுபட்ட வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்றோடொன்று தொடுமாறு வைக்கப்பட்டால் என்ன நிகழும்?
A) வெப்ப ஆற்றல் பரிமாற்றம்
B) வெப்பநிலை குறையும்
C) வெப்பநிலை அதிகரிக்கும்
D) எதுவுமில்லை
விளக்கம்: மாறுபட்ட வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்றோடொன்று தொடுமாறு வைக்கப்பட்டால் இரண்டு பொருட்களும் வெப்பச் சமநிலையினை அடையும் வரை சூடான பொருளிலிருந்து குளிர்ந்த நிலையில் உள்ள பொருளுக்கு தொடர்ந்து வெப்ப ஆற்றல் பரிமாற்றம் நடைபெறும்.
10. குளிர்ச்சியான பொருள், சூடான பொருள் உடன் தொடர்பில் உள்ள போது,
A) வெப்ப ஆற்றல் சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு பரிமாற்றம் அடையும்
B) குளிர்ச்சியான பொருளின் வெப்பநிலை உயரவும், சூடான பொருளின்
வெப்பநிலை குறையவும் செய்கிறது
C) இரண்டு பொருள்களும் சம வெப்பநிலையினை அடையும் வரை தொடரும்
D) அனைத்தும்
விளக்கம்: வெப்ப ஆற்றல் சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு பரிமாற்றம் அடையும் இதனால் குளிர்ச்சியான பொருளின் வெப்பநிலை உயரவும், சூடான பொருளின் வெப்பநிலை குறையவும் செய்கிறது. இந்த இரண்டு பொருள்களும் சம வெப்பநிலையினை அடையும் வரை இது தொடர்ந்து நிகழும்.
11. ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்தப் பொருள் வெப்பம் அடைவதற்கும் காரணியாக செயல்படுவது
A) வெப்ப ஆற்றல்
B) ஆற்றல் மாற்றம்
C) A மற்றும் B
D) இரண்டுமில்லை வெப்ப ஆற்றல்
விளக்கம்: சூடான பொருள் குளிர்ச்சியான பொருளிற்கு அருகில் வைக்கப்பட்டால், சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றலே வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது. எனவே, வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ஆற்றல். இது இருவேறு வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக ‘வெப்பம்’ எனவும் அழைக்கலாம். ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்தப் பொருள் வெப்பம் அடைவதற்கும் வெப்ப ஆற்றல் ஓர் காரணியாக செயல்படுகிறது.
12. வெப்பப்பரவல் நடைபெறும் விதம்
A) வெப்பச் சலனம்
B) வெப்பக் கடத்தல்
C) வெப்பக் கதிர்வீசல்
D) அனைத்தும்
விளக்கம்: வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்றுபெயர். வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம் மற்றும்
வெப்பக் கதிர்வீசல் ஆகிய ஏதாவது ஒரு வழிகளில் வெப்பப்பரவல் நடைபெறுகிறது.
13. வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு
A) வாட்
B) ஜுல்
C) நியூட்டன்
D) பாஸ்கல்
விளக்கம்: வெப்பம் என்பது ஓர் ஸ்கேலார் அளவு ஆகும். வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜுல் (J) ஆகும்.
14. வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது
A) குளிர்வித்தல்
B) வெப்பப்படுத்துதல்
C) இரண்டும்
D) இரண்டுமில்லை
விளக்கம்: வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. இதுபோல அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது குளிர்வித்தல் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல நிகழ்வுகளில் குளிர்வித்தல் என்பதற்குப் பதிலாக வெப்பப்படுத்துதல் என்றே பயன்படுத்தப்படுகிறது. ஒரு பொருளிலிலிருந்து மற்றொரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும்போது, இரண்டு பொருள்களில் ஒன்றில் வெப்பநிலை குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்கிறது.
15. கூற்று 1: வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்குப் பரவும்.
கூற்று 2: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
16. ஒரு வெப்ப பரிமாற்றத்தில் ஏற்கப்பட்ட வெப்பம் 10 ஜூல் எனில் இழக்கப்பட்ட வெப்பம்
A) 10 ஜூல்
B) 5 ஜூல்
C) 20 ஜூல்
D) 15 ஜூல்
விளக்கம்: எந்த ஒரு வெப்ப பரிமாற்றத்திலும், குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம், சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்குச் சமம். ஏற்கப்பட்ட வெப்பம் = இழக்கப்பட்ட வெப்பம்
17. ஆற்றலின் அலகு
A) ஜுல்
B) கலோரி
C) கிலோ கலோரி
D) அனைத்தும்
விளக்கம்: வெப்ப ஆற்றலின் SI அலகு ஜுல். நடைமுறையில் சில இதர அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவை கலோரி, கிலோ கலோரி.
18. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 °C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு
A) ஜுல்
B) கலோரி
C) கிலோ கலோரி
D) அனைத்தும்
விளக்கம்: ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 °C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
19. ஒரு கிலோ கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு
A) ஜுல்
B) கலோரி
C) கிலோ கலோரி
D) அனைத்தும்
விளக்கம்: ஒரு கிலோ கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கிலோ கலோரி என வரையறுக்கப்படுகிறது.
20. ஒரு பொருளிற்கு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றலை அளிக்கும்போது ஏற்படும் மாற்றத்தில் தவறானது எது
A) பொருளின் வெப்பநிலை உயரும்
B) பொருளானது விரிவடையும்
C) நிறையில் மாற்றம் ஏற்படும்
D) திரவ நிலை பொருள் வாயு நிலைக்கு மாற்றம்
விளக்கம்: ஒரு பொருளிற்கு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றலை அளிக்கும்போது, அப்பொருளானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீழ்க்கண்ட மாற்றங்களுக்கு உட்படும். பொருளின் வெப்பநிலை உயரும். திட நிலையிலுள்ள ஒரு பொருள் திரவ நிலைக்கோ அல்லது திரவ நிலையிலுள்ள ஒரு பொருள் வாயு நிலைக்கோ மாற்றம் அடையும். வெப்பப்படுத்தும் போது பொருளானது விரிவடையும். ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வானது அப்பொருளிற்கு அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலைச் சார்ந்தது. மேலும் இது பொருளின் தன்மை மற்றும் நிறையைப் பொறுத்து மாறுபடும்.
21. கூற்று 1: வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் வெப்ப விரிவு
கூற்று 2: திட, திரவ மற்றும் வாயு பொருட்கள் வெப்பத்தினால் விரிவடையும்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒரு பொருளிற்கு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அந்த பொருளின் பரிமாணம் (நீளம் அல்லது பரப்பு அல்லது பருமன் ) அதிகரிக்கும். வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றமே அப்பொருளின் வெப்ப விரிவு என அழைக்கப்படுகிறது. திரவங்களில் (எ.கா. மெர்குரி) ஏற்படும் வெப்ப விரிவினை சூடான நீரில் வைக்கப்பட்ட
வெப்ப நிலைமானியில் காணலாம். எனவே, அனைத்து விதமான பொருட்களும்(திட, திரவ மற்றும் வாயு) வெப்பத்தினால் விரிவடையும்.
22. வெப்ப விரிவு திரவ மற்றும் வாயுப் பொருள்களை ஒப்பிடும் போது திடப்பொருளில்
A) குறைவு
B) அதிகம்
C) சமம்
D) இருமடங்கு
விளக்கம்: திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது அணுக்கள் ஆற்றலினைப் பெற்று வேகமாக அதிர்வுறுகிறது. இதனால் திடப் பொருளானது விரிவடைகிறது. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயுப் பொருள்களை ஒப்பிடும் போது திடப்பொருளில் குறைவு. இதற்குக் காரணம் திடப்பொருளின் கடினத்தன்மையே ஆகும்.
23. திடப்பொருளில் ஏற்படும் வெப்ப விரிவின் வகைகள்
A) 2
B) 3
C) 4
D) 6
விளக்கம்: நீள் வெப்ப விரிவு, பரப்பு வெப்ப விரிவு, பரும வெப்ப விரிவு. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக, அப்பொருளின் நீளம்,பரப்பு, பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு முறையே நீள் வெப்ப விரிவு,பரப்பு வெப்ப விரிவு,பரும வெப்ப விரிவு எனப்படும்.
24. நீள் வெப்ப விரிவு நீள மாறுபாட்டுக்கும், வெப்பநிலை மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பு
A) = αL∆T
B) = αL∆T
C) = ∆LαT
D) = αL∆T
விளக்கம்: நீள மாறுபாட்டுக்கும், வெப்பநிலை மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பினை பின்வருமாறு குறிப்பிடலாம் = αL∆T
∆L – நீளத்தில் ஏற்படும் மாற்றம்
L0 – உண்மையான நீளம்
∆T – வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
αL – நீள்வெப்ப விரிவு குணகம்.
25. நீள் வெப்ப விரிவு குணகம் SI அலகு
A) கெல்வின்
B) கெல்வின்-1
C) கெல்வின்-2
D) கெல்வின்2
விளக்கம்: ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1. நீள் வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு பொருளுக்கு பொருள் மாறுபடும்.
26. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு
A) நீள் வெப்ப விரிவு குணகம்
B) பரப்பு வெப்ப விரிவு
C) நீள் வெப்ப விரிவு
D) பரப்பு வெப்ப விரிவு குணகம்
விளக்கம்: பரப்பு வெப்ப விரிவு குணகம். இதன் மதிப்பு பொருளுக்கு பொருள்
மாறுபடும். இதன் SI அலகு கெல்வின்-1.
27. பரப்பு வெப்ப விரிவு பரப்பு மாற்றத்திற்கும் வெப்பநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பு
A) = αL ∆T
B) = αA ∆T
C) = αL ∆T
D) = αL ∆T
விளக்கம்: பரப்பு மாற்றத்திற்கும் வெப்பநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பினை பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறியலாம். = αA ∆T
∆A – பரப்பில் ஏற்படும் மாற்றம்
Ao – உண்மையான பரப்பு
ΔT – வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
αA – பரப்பு வெப்ப விரிவு குணகம்
28. பொருத்துக
பொருட்கள் பரும விரிவு குணகம்
a) அலுமினியம் 1) 6 × 10-5
b) பித்தளை 2) 2.5 × 10-5
c) கண்ணாடி 3) 7 × 10-5
d) நீர் 4) 20.7 × 10-5
a b c d
A) 3 1 2 4
B) 2 1 3 4
C) 1 2 3 4
D) 2 3 1 4
விளக்கம்: ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு பரும வெப்ப விரிவு என எனப்படும். ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1.
29. கூற்று 1: திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலினைப் பெற்று ஈர்ப்பு விசைக்கு உட்படுகிறது.
கூற்று 2: பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு திரவத்தில் வெப்பநிலையைச்
சார்ந்ததல்ல. ஆனால் வாயுவில், இதன் மதிப்பு வெப்ப நிலையைச் சார்ந்து அமையும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலினைப் பெற்று விலக்கு விசைக்கு உட்படுகிறது. பொருள் விரிவடைவதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது வாயுவில் ஏற்படும் வெப்ப விரிவு திட மற்றும் திரவப் பொருள்களை விட அதிகமாகவும், திடப் பொருளை ஒப்பிடும் போது திரவப் பொருள்களில் அதிகமாகவும் இருக்கும். பரும வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு திரவத்தில் வெப்பநிலையைச் சார்ந்ததல்ல. ஆனால் வாயுவில், இதன் மதிப்பு வெப்ப நிலையைச் சார்ந்து அமையும்.
30. தவறான கூற்றை காண்க
1) திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இருவழிகளில் வரையறுக்கலாம்
2) ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தினை வெப்பப்படுத்தும்போது கொள்கலனின் வழியாக வெப்ப ஆற்றலானது திரவத்திற்கு அளிக்கப்படுகிறது.
3) இதிலிருந்து திரவத்தில் ஏற்படும் உண்மையான விரிவை நேரடியாக கணக்கிடலாம்.
4) ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப
விரிவு குணகம் என அழைக்கப்படும்.
A) 1,2,3 சரி 4 தவறு
B) 2,3,4 சரி 1 தவறு
C) 1,2,4 சரி 3 தவறு
D) அனைத்தும் சரி
விளக்கம்: ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தினை வெப்பப்படுத்தும்போது கொள்கலனின் வழியாக வெப்ப ஆற்றலானது திரவத்திற்கு அளிக்கப்படுகிறது.
எனவே, வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலன் விரிவடைவதற்கும், மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து திரவத்தில் ஏற்படும் உண்மையான விரிவை நேரடியாக கணக்கிட இயலாது. எனவே திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இருவழிகளில் வரையறுக்கலாம். எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும். ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
31. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு
A) உண்மை வெப்ப விரிவு
B) தோற்ற வெப்ப விரிவு
C) உண்மை விரிவு குணகம்
D) தோற்ற விரிவு குணகம்
விளக்கம்: கொள்கலன் இல்லாமல் திரவத்தினை நேரடியாக வெப்பப்படுத்த முடியாது. இதனால் நடைமுறையில் கொள்கலனில் வைத்தே திரவத்தினை வெப்பப்படுத்த வேண்டும். அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி
கொள்கலனை விரிவடைய செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு என அழைக்கப்படும். ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
32. உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட _______ இருக்கும்
A) அதிகமாக
B) குறைவாக
C) சமமாக
D) மும்மடங்காக
விளக்கம்: நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L3 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
33. வாயுக்களின் அழுத்தம்,கன அளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் விதி
A) பாயில் விதி
B) சார்லஸ் விதி
C) அவகேட்ரோ விதி
D) அனைத்தும்
34. P ∝ 1/V
A) பாயில் விதி
B) சார்லஸ் விதி
C) அவகேட்ரோ விதி
D) எதுவுமில்லை
விளக்கம்: மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும். P ∝ 1/V
மாறா வெப்பநிலையில், மாறா நிறையுடைய நல்லியல்பு வாயுவின் அழுத்தம்(P) மற்றும் பருமன்(V) ஆகியவற்றின் பெருக்குத் தொகை மாறிலி எனவும் வரையறுக்கலாம். அதாவது PV = மாறிலி
35. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
A) பரும விதி
B) சார்லஸ் விதி
C) 1 அல்லது 2
D) எதுவுமில்லை
விளக்கம்: சார்லஸ் விதி (பரும விதி) பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஜேக்கஸ்
சார்லஸ் என்பவர் இவ்விதியினை நிறுவினார். இவ்விதியின்படி, மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன்(V) அவ்வாயுவின் வெப்பநிலைக்கு(T) நேர்த்தகவில் அமையும். V ∝ T , V/T = மாறிலி
36. அவோகேட்ரோ விதியின்படி,மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின்
எண்ணிக்கைக்கு ____ தகவில் இருக்கும்.
A) நேர்
B) எதிர்
C) 1 அல்லது 2
D) எதுவுமில்லை
விளக்கம்: அவோகேட்ரோ விதியின்படி,மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன்(V) அவ்வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
V ∝ n (V/n = மாறிலி)
37. அவோகேட்ரோ எண் மதிப்பு
A) 6.023 × 1023 / மோல்
B) 6.023 × 10-23 / மோல்
C) 6.023 × 1023 / மோல்2
D) 6.023 × 1023 மோல்
விளக்கம்: ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவோகேட்ரோ எண் என வரையறுக்கப்படும். இதன் மதிப்பு 6.023 × 1023 / மோல்.
38. குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால், ஒன்றோடொன்று இடை வினை புரிந்து
கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள்
A) நல்லியல்பு வாயுக்கள் Bவா VDGZFSயுக்கள்
B) இயல்பு வாயுக்கள்
C) வலு குறைந்த வாயுக்கள்
D) அனைத்தும்
விளக்கம்: வாயுக்களை இயல்பு வாயுக்கள் மற்றும் நல்லியல்பு வாயுக்கள் என்று பிரிக்கலாம்.குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால், ஒன்றோடொன்று இடை வினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் இயல்பு வாயுக்கள் என அழைக்கப்படும்.
39. அணுக்கள் (அ) மூலக்கூறுகளுக்கிடையே எவ்வித கவர்ச்சி விசையும் செயல்படாத போது இயல்பு வாயுக்கள் ____ ஆக செயல்படும்.
A) நல்லியல்பு வாயுக்கள் Bவா VDGZFSயுக்கள்
B) வாயுக்கள்
C) வலு மிகுந்த வாயுக்கள்
D) அனைத்தும்
விளக்கம்: மிக அதிகளவு வெப்பம் அல்லது மிகக் குறைந்த அளவு அழுத்தத்தை உடைய இயல்பு வாயுக்கள் நல்லியல்பு வாயுக்களாக செயல்படும். ஏனெனில் இந்நிலையில் அணுக்கள் (அ) மூலக்கூறுகளுக்கிடையே எவ்வித கவர்ச்சி விசையும் செயல்படுவது இல்லை.
40. இயல்பு வாயுவை ____ அழுத்தம் மற்றும் ____ வெப்ப நிலையில் நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்.
A) உயர், உயர்
B) உயர், குறைவான
C) குறைவான, உயர்
D) குறைவான, குறைவான
விளக்கம்: நல்லியல்பு வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையின் வலிமை குறைவு. எனவே இயல்பு வாயுவை குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்ப
நிலையில் நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்.
41. கூற்று 1: எல்லா வாயுவின் மூலக்கூறுகளும் அவைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு இடை வினை புரிகின்றன.
கூற்று 2: நடைமுறையில் எந்த வாயுக்களும் நல்லியல்பு தன்மை வாய்ந்தது அல்ல.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஒன்றோடொன்று இடை வினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் என அழைக்கப்படும். ஆனால் நடைமுறையில் எந்த வாயுக்களும் நல்லியல்பு தன்மை வாய்ந்தது அல்ல. எல்லா வாயுவின் மூலக்கூறுகளும் அவைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு இடை வினை புரிகின்றன. ஆனால் இந்த இடை வினைகள் குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் வலு குறைந்து காணப்படுகின்றன. ஏனெனில் நல்லியல்பு வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையின் வலிமை குறைவு. எனவே இயல்பு வாயுவை குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்.
42. கூற்று 1: ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள நல்லியல்பு வாயுவில் அழுத்தம், பருமன்,வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டிருக்கும்.
கூற்று 2: அதன் நிலையில் ஏற்படும் மாற்றத்தை பாயில் விதி, சார்லஸ் விதி
மற்றும் அவகேட்ரோ விதி தொடர்புபடுத்துகின்றன.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நல்லியல்பு வாயுக்கள் பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படுகின்றன. இந்த விதிகள் யாவும் வாயுவின் அழுத்தம், பருமன்,வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை
ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை தருகின்றன. ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள நல்லியல்பு வாயுவில் மேற்கண்ட அனைத்து காரணிகளும் ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டிருக்கும். அதன் நிலையில் மாற்றம் ஏற்படும் போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளின் மதிப்புகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தை மேற்காணும் மூன்று விதிகளும் தொடர்புபடுத்துகின்றன.
43. வாயுக்களின் நிலைச்சமன்பாடு
A) PV = nT
B) PV = RT
C) PR = VT
D) PV = 1/RT
விளக்கம்: நல்லியல்பு வாயுக்களின் பண்புகளை (அழுத்தம், பருமன், வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை) தொடர்புபடுத்தும் சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும். ஒரு நல்லியல்பு வாயுவானது பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படும். நல்லியல்பு வாயுச் சமன்பாடு, குறிப்பிட்ட நிலையில் உள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இது வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும் அழைக்கப்படும். மேலும் இச்சமன்பாடு எந்தவொரு வாயுக்களின் நிலையினையும் விவரிக்கப் பயன்படுகிறது.
44. போல்ட்ஸ்மேன் மாறிலி
A) 1.381 X 10-23 JK-1
B) 6.023 × 1023 / மோல்
C) 8.31 J mol-1 K-1
D) 1.31 X 10-23 JK-1
விளக்கம்: நல்லியல்பு வாயு சமன்பாடு PV = RT.
R = 𝛍NAKB இதில் KB போல்ட்ஸ்மேன் மாறிலி
45. நல்லியல்பு வாயு சமன்பாடு PV = RT என்பதில் R = 𝛍NAKB இதில் 𝛍NA
A) போல்ட்ஸ்மேன் மாறிலி
B) அவகேட்ரோ மாறிலி
C) பொது வாயு மாறிலி
D) பொது ஈர்ப்பு மாறிலி
விளக்கம்: R = 𝛍NAKB இதில் KB போல்ட்ஸ்மேன் மாறிலி
𝛍NA பொது வாயு மாறிலி இதன் மதிப்பு 8.31 J mol-1 K-1
46. வாயு இணைச்சமன்பாடு
A) PV = RT
B) PV = 1/RT
C) PV = nT
D) PV / nT = மாறிலி
விளக்கம்: PV/nT = மாறிலி இந்த சமன்பாடு வாயு இணை சமன்பாடு என அழைக்கப்படும். μ மோல் அளவுள்ள வாயுவினைக் கொண்டிருக்கும் வாயுக்களில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவகேட்ரோ எண்ணின் (NA) μ மடங்கிற்கு சமமாகும். அதாவது n = μNA.
47. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
A) 1.2 மிலி 2.7 மிலி
B) 2.7 மிலி 1.2 மிலி
C) 51.2 மிலி 2.7 மிலி
D) 48.5 மிலி 1.2 மிலி
விளக்கம்: திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 – L1
= 51.2 மிலி – 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 – L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
48. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக
மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.
A) 5 cm3
B) 5 cm2
C) 15 cm3
D) 20 cm2
விளக்கம்: தொடக்க அழுத்தம் (P1) = P இறுதி அழுத்தம் (P2) = 4 P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ .மீ3 இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின் படி, PV = மாறிலி P1 V1 = P2 V2
V2 = 20P / 4P = 20/4 = 5 cm3
49. ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
A) X அல்லது –X
B) Y அல்லது –Y
C) (A) மற்றும் (B)
D) (A) அல்லது (B)
50. மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
A) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
B) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
C) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
D) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
விளக்கம்: K.E = T.E – P.E (மொத்த ஆற்றல் T.E = நிலை ஆற்றல் P.E + இயக்க ஆற்றல் K.E)
51. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
A) A → B, A → C, B → C
B) A → B, A ← C, B → C
C) A ← B, A → C, B ← C
D) A ← B, A ← C, B ← C
விளக்கம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிக்கு பரவும்.
52. கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிக்கு பரவும்.
A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான
விளக்கமல்ல.
C) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
D) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
53. கூற்று : திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.
காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
A) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கு சரியான
விளக்கம்
B) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான
விளக்கமல்ல .
C) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
D) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
54. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதிவெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
A) 47.62 K
B) 137.62 K
C) 42.38 K
D) 13.76 K
விளக்கம்:
A0 = A1 = 10 m2 ∆A = A2 – A1 = 11-10 = 1 m2 t1 = 90K αA = 0.0021 K-1
αA∆T = ∆A / A0 αA(t2-t1) = ∆A / A0
0.0021( t2 – 90 ) = 1 / 10
t2 = 47.62 + 90 = 137.62
55. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3 ஆக உயருகிறது எனில், அந்த துத்த நாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.
A) 0.0033 K-1
B) 0.033 K-1
C) 0.33 K-1
D) 0.05 K-1
விளக்கம்: ∆V = V2-V1 = 0.25 – 0.30 = 0.05m3
∆T = 50K, αV = ∆V / V0∆T = 0.05 / 0.3 x 50 = 0.0033 K-1
56. உங்களுடை ய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு
குளிர்ச்சியினை உணரும்?
A) பனி
B) குளிர்ந்த நீர்
C) இரண்டும்
D) இரண்டுமில்லை
விளக்கம்: பனியால் உறிஞ்சப்படும் ஆவியாதல் வெப்பம் அதே வெப்பநிலையில் தண்ணீரை விட அதிகமாகும்.
10th Science Lesson 4 Questions in Tamil
4] மின்னோட்டவியல்
1) ஒரு கடத்தி வழியாக பாயும் எலக்ட்ரான்களின் இயக்கம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a) மின்னூட்டம்
b) மின்சுற்று
c) மின்திறன்
d) மின்னோட்டம்
விளக்கம்: ஒரு கடத்தி (தாமிரக்கம்பி) வழியாக பாயும் மின்னூட்டங்களின் (எலக்ட்ரான்களின்) இயக்கமே மின்னோட்டம் ஆகும்.
2) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.
I) மின்னோட்டத்தின் திசையானது எலக்ட்ரான்களின் இயக்கத்திற்கு நேர் திசையில் இருக்கும்.
II) ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் ஆகும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) I தவறு II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின்னோட்டத்தின் திசையானது எலக்ட்ரான்களின் இயக்கத்திற்கு எதிர் திசையில், உயர் மின்னழுத்தத்தில் இருக்கும் நேர்மின் முனையில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தில் இருக்கும் எதிர்முனை நோக்கி இருக்கும்.
ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறை செய்யப்படுகிறது.
3) மின்னோட்டத்தை குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்து எது?
a) E
b) J
c) I
d) K
விளக்கம்: மின்னோட்டம் I என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
4) கடத்தியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
a) மின்னூட்டம்
b) மின்திறன்
c) மின்சுற்று
d) மின்னோட்டம்
விளக்கம்: கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும். ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ‘t’ காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது
I = Q/ t (4.1)
5) பின்வருவனவற்றுள் மின்னோட்டத்தின் SI அலகு எது?
a) ஆம்பியர் (A)
b) கெல்வின் (K)
c) ஜூல் (J)
d) கூலும் (C)
விளக்கம்: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறை செய்யப்படுகிறது. எனவே
1 ஆம்பியர் = 1 கூலும்/1 விநாடி .
6) மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று எவ்வாறு அறியப்படுகிறது?
a) மின்திறன்
b) மின்சுற்று
c) மின்னோட்டம்
d) மின்னூட்டம்
விளக்கம்: மின்சுற்று என்பது மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதையாகும். மின்சாதனங்களையும் மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும் இணைக்கும் பாதைகளாக மின்கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
7) மின்சாதனங்களையும் மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும் இணைக்கும் பாதைகளாக எவை பயன்படுத்தப்படுகின்றன?
a) மின்கம்பிகள்
b) மின்சுற்று
c) மின்னோட்டம்
d) மின்னூட்டம்
விளக்கம்: மின்சுற்று என்பது மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதையாகும். மின்சாதனங்களையும் மின்னூட்டத்தின் மூலமான மின்கலத்தையும் இணைக்கும் பாதைகளாக மின்கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
8) பொருத்துக:-
மின்கூறு மின்கூறின் பயன்பாடு
A.அம்மீட்டர் 1. மின்னோட்டத்தை அளவிட
B.வோல்ட் மீட்டர் 2. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
C.கால்வனோ மீட்டர் 3. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
D.டையோடு 4. மின்னணு கருவிகளில் பயன்படுகிறது
A B C D
a) 3 1 4 2
b) 1 2 3 4
c) 3 1 2 4
d) 4 3 2 1
விளக்கம்:
மின்கூறு மின்கூறின் பயன்பாடு
மின்தடையாக்கி மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது.
மின்தடை மாற்றி மின்னோட்டத்தின் அளவை தேர்ந்தெடுக்க பயன்படுகிறது.
அம்மீட்டர் மின்னோட்டத்தை அளவிட
வோல்ட் மீட்டர் மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
கால்வனோ மீட்டர் மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
டையோடு மின்னணு கருவிகளில் பயன்படுகிறது
ஒளிமின் டையோடு (LED) ஏழு துண்டு காட்சி பலகையில் பயன்படுகிறது
தரை இணைப்பு மின் சாதனங்களை பாதுகாக்க பயன்படுகிறது. மின்னழுத்தத்தை அளவிட குறிப்பு புள்ளியாக செயல்படுகிறது.
9) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின்சுற்றில் சாவி மூடியிருக்கும் போது மின்விளக்கு ஒளிர்கிறது.
II) மின்சுற்றில் சாவி திறந்திருக்கும் போது மின்விளக்கு ஒளிராது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின்சுற்றில் சாவி மூடியிருக்கும் போது மின்விளக்கு ஒளிர்கிறது. சாவி திறந்திருக்கும் போது மின்விளக்கு ஒளிராது. எனவே, மின்னோட்டம் செல்வதற்கு அதன் சுற்றுப்பாதை மூடப்பட வேண்டும். மின்னோட்டம் பாய்வதற்கு தேவையான மின்னழுத்த வேறுபாட்டினை மின்கலம் வழங்குகிறது.
10) மின்னோட்டம் பாய்வதற்கு தேவையான மின்னழுத்த வேறுபாட்டினை எது வழங்குகிறது?
a) டையோடு
b) அம்மீட்டர்
c) மின்கலம்
d) கால்வனோ மீட்டர்
விளக்கம்: மின்சுற்றில் சாவி மூடியிருக்கும் போது மின்விளக்கு ஒளிர்கிறது. சாவி திறந்திருக்கும் போது மின்விளக்கு ஒளிராது. எனவே, மின்னோட்டம் செல்வதற்கு அதன் சுற்றுப்பாதை மூடப்பட வேண்டும். மின்னோட்டம் பாய்வதற்கு தேவையான மின்னழுத்த வேறுபாட்டினை மின்கலம் வழங்குகிறது. எலக்ட்ரான்கள் மின்கலத்தின் எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனைக்கு செல்கிறது.
11) எவற்றின் திசை ஒரு மின்சுற்றில் நேர்மின் முனையிலிருந்து எதிர்மின் முனையை நோக்கி இருக்கும்?
a) எலக்ட்ரான்கள்
b) புரொட்டான்கள்
c) மின்னோட்டம்
d) மின்னூட்டம்
விளக்கம்: மின்னோட்டத்தின் திசையானது நேர்மின் மின்னூட்டத்தின் திசையில் இருக்கும். அல்லது எதிர் மின்னோட்டம் செல்லும் திசைக்கு எதிர் திசையில் அமைந்திருக்கும் எனவும் கூறலாம். எனவே,மின்னோட்டத்தின் திசையானது ஒரு மின்சுற்றில் நேர்மின் முனையிலிருந்து எதிர்மின் முனையை நோக்கி இருக்கும்.
12) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) ஒரு கடத்தியில் மின்னூட்டமானது குறைந்த மின்னழுத்த புள்ளியிலிருந்து உயர் மின்னழுத்த புள்ளிக்கு பாயும்.
II) ஒரு கடத்தியில் இரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே அந்த கடத்தியில் மின்னூட்டம் பாயும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) I தவறு II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: ஒரு திண்ம பொருளில் இரண்டு புள்ளிகளுக்கிடையே வெப்பநிலை வேறுபாடு இருந்தால் மட்டுமே அதன் வழியாக வெப்பம் பாயும். இதே போன்று ஒரு கடத்தியில் இரு புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே அந்த கடத்தியில் மின்னூட்டம் பாயும். ஒரு கடத்தியில் மின்னூட்டமானது உயர் மின்னழுத்த புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்த புள்ளிக்கு பாயும்.
13) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை ஆகும்..
II) இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு ஆகும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்தங்களின் வேறுபாட்டையும் மின்னழுத்த வேறுபாடு என கூறலாம்.
14) வோல்ட் (V) எதனுடைய அலகு?
a) மின்னழுத்தம்
b) மின்னழுத்த வேறுபாடு
c) மின்னோட்டம்
d) a மற்றும் b
விளக்கம்: மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட்(V) ஒரு கூலும் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச்செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜுல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.
1 வோல்ட் = 1 ஜுல்/1 கூலும்
15) ஓம் விதியை நிறுவியர் யார்?
a) ஜார்ஜ் சைமன்
b) அலெக்சாண்டர் லோடின்
c) வில்லியம் கிரினர்
d) பென்சமின் பிராங்கிளின்
விளக்கம்: ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
16) ஜார்ஜ் ஓம் மின்னோட்டம் மற்றும் _____________ ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார்?
a) மின்னழுத்தம்
b) மின்னழுத்த வேறுபாடு
c) மின் திறன்
d) எலக்ட்ரான்
விளக்கம்: ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
17) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின்னழுத்த வேறுபாடு V யும் மின்னோட்டம் I யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில் அமைவதால் V மற்றும் I இடையேயான வரைபடம் ஒரு நேர்கோடு ஆகும்.
II) ஓம் விதியின்படி மாறா வெப்பநிலையில், கடத்தி வழியே பாயும் மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின்னழுத்த வேறுபாடு V யும் மின்னோட்டம் I யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில் அமைவதால் V மற்றும் I இடையேயான வரைபடம் ஒரு நேர்கோடு ஆகும். ஓம் விதியின்படி மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
18) ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் மின்தடை _________ ஆகும்.
a) ஒரு ஜூல்
b) ஒரு எண்
c) இரு மாறிலிகள்
d) ஒரு மாறிலி
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு (எ.கா நிக்ரோம்) குறிப்பிட்ட வெப்பநிலையில் மின்தடை ஒரு மாறிலி ஆகும்.
19) ஒரு பொருளின் வழியாக மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பு அந்த பொருளின் ________ ஆகும்?
a) மின்னழுத்த வேறுபாடு
b) மின்தடை
c) மின்னழுத்தம்
d) மின் திறன்
விளக்கம்: ஒரு பொருளின் மின்தடை என்பது ஒரு பொருளின் வழியே மின்னூட்டம் பாய்வதை (அதாவது மின்னோட்டம் செல்வதை) எதிர்க்கும் பண்பாகும். இது வெவ்வேறு பொருள்களுக்கு வெவ்வேறாக இருக்கும்.
ஓம் விதியிலிருந்து V/I = R என எழுதலாம்.
கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையேயுள்ள தகவு கடத்தியின் மின்தடை என வரையறுக்கப்படுகிறது.
20) மின்தடையின் SI அலகு என்ன?
a) ஓம்
b) கெல்வின் (K)
c) ஜூல் (J)
d) கூலும் (C)
விளக்கம்: மின்தடையின் SI அலகு ஓம் ஆகும். இது Ω என்னும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒரு கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டாக இருக்கும் போது கடத்தியில் செல்லும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனில் அதன் மின்தடை ஒரு ஓம் ஆகும்.
1 ஓம் = 1 வோல்ட்/1 ஆம்பியர்
21) ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்வெட்டு பரப்பும் கொண்ட கடத்தி ஒன்று மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை __________என வரையறுக்கப்படுகிறது.
a) மின்னழுத்த வேறுபாடு
b) தன்மின்தடை
c) மின்னழுத்தம்
d) மின் திறன்
விளக்கம்: ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்வெட்டு பரப்பும் கொண்ட கடத்தி ஒன்று மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை அக்கடத்தி பொருளின் தன்மின்தடை எண் என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு ஓம் மீட்டர் (Ω m).
22) ஒரு பொருளின் வழியாக மின்னோட்டம் பாய்வதை அனுமதிக்கும் பண்பு அந்த பொருளின் __________ஆகும்.
a) மின்னழுத்த வேறுபாடு
b) மின்தடை
c) மின்னழுத்தம்
d) மின்கடத்து திறன்
விளக்கம்: ஒரு பொருளின் வழியாக மின்னூட்டங்கள் பாய்ந்து செல்வதை அல்லது மின்னோட்டம் பாய்வதை அனுமதிக்கும் பண்பு அந்த பொருளின் மின்கடத்து திறன் ஆகும்.
23) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின் தடையின் தலைகீழி மின்கடத்து திறன் என வரையறுக்கப்படுகிறது.
II) மின்தடை எண்ணின் தலைகீழி மின்கடத்து எண் எனப்படும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின் தடையின் தலைகீழி மின்கடத்து திறன் என வரையறுக்கப்படுகிறது.
இதன் அலகு ohm–1. இது mho எனவும் குறிப்பிடப்படுகிறது.
மின்தடை எண்ணின் தலைகீழி மின்கடத்து எண் எனப்படும்.
இதன் அலகு ஓம்-1 மீ-1 இது மோ மீ-1 எனவும் குறிப்பிடப்படுகிறது.
24) ஒரு கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தினை அனுமதிக்கும் திறனை குறிக்கும் அளவு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a) மின்கடத்து திறன்
b) மின் தடை எண்
c) மின் கடத்தி எண்
d) a மற்றும் b
விளக்கம்: மின் கடத்தி எண் என்பது ஒரு கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தினை அனுமதிக்கும் திறனை குறிக்கும் அளவு ஆகும். சில பொருள்கள் மின்னோட்டத்தை நன்கு கடத்தும்.
25) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) காப்பான்களை விட கடத்திகளுக்கு மின் கடத்தி எண் அதிகம்.
II) மின் தடை எண்ணானது காப்பான்களை விட கடத்திகளுக்கு குறைவு.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: காப்பான்களை விட கடத்திகளுக்கு மின் கடத்தி எண் அதிகம். ஆனால் மின் தடை எண்ணானது காப்பான்களை விட கடத்திகளுக்கு குறைவு.
26) பின்வருவனவற்றுள் மின்னோட்டத்தை நன்கு கடத்தும் பொருள்கள் எது?
a) மரக்கட்டை
b) இரப்பர்
c) அலுமினியம்
d) கண்ணாடி
விளக்கம்: மின் கடத்தி எண் என்பது ஒரு கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தினை அனுமதிக்கும் திறனை குறிக்கும் அளவு ஆகும். சில பொருள்கள் மின்னோட்டத்தை நன்கு கடத்தும் எ.கா. தாமிரம், அலுமினியம் முதலியன. சில பொருள்கள் மின்சாரத்தை கடத்தாது (காப்பான்கள்) எ.கா கண்ணாடி, மரக்கட்டை, இரப்பர் முதலியன.
27) பின்வருவனவற்றுள் மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட கடத்தி எது?
a) தாமிரம்
b) அலுமினியம்
c) வெள்ளி
d) நிக்ரோம்
விளக்கம்: நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும். இதன் மதிப்பு 1.5 × 10-6 Ω m. எனவே இது மின் சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது.
28) விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகளில் எந்த வகை மின்தடையாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன?
a) தொடரிணைப்பில் மின் தடையாக்கிகள்
b) தொடர் பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள்
c) பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள்
d) எவையுமில்லை
விளக்கம்: விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
29) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின் தடையாக்கிகள் தொடராக உள்ளபோது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
II) தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கிகளுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின் தடையாக்கிகள் தொடராக உள்ளபோது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கிகளுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும். இந்த தொகுபயன் மின்தடை RS எனப்படும்.
30) நமது வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் எந்த வகை மின்தடையாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன?
a) தொடரிணைப்பில் மின் தடையாக்கிகள்
b) தொடர் பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள்
c) பக்க இணைப்பில் மின்தடையாக்கிகள்
d) எவையுமில்லை
விளக்கம்: பக்க இணைப்பு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூடிய சுற்று இருக்கும். ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும். நமது வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தனித்தனி மின்தடையாக்கிகளின் மின் தடையின் தலைகீழிகளின் கூடுதல் தொகுபயன் மின்தடையின் தலைகீழிகளுக்கு சமம்.
31) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின்தடைகள் தொடரிணைப்பில் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.
II) மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.
மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுக்கள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது நமக்கு தொடர் – பக்க இணைப்புச் சுற்றுகள் கிடைக்கும்.
தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது நமக்கு பக்க – தொடர் இணைப்புச் சுற்றுகள் கிடைக்கும்.
32) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எதில் பயன்படுத்தப்படுகிறது?
a) மின்விளக்கு
b) சலவைப் பெட்டி
c) மின் சூடேற்றி
d) b மற்றும் c
விளக்கம்: மின்னாற்றல் மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்தடை ஒன்றின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு உருவாகிறது. இந்த மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாக மின்தடை வழியாக ஒரு மின்னோட்டம் பாய்கிறது. மின்னோட்டம் தொடர்ந்து மின்தடை வழியாக பாய்வதற்கு மின்னாற்றல் மூலமானது தொடர்ந்து ஆற்றலை மின்தடைக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். பெற்றுக் கொண்ட ஆற்றலின் ஒரு பகுதி பயனுள்ள வேலையாக (மின்விளக்கு எரிவதற்கு) மாற்றப்படுகிறது. மற்றொரு பகுதி வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. எனவே, மின் கம்பியின் வழியே மின்னோட்டம் செல்வதால் வெப்பம் உருவாகிறது. இந்த நிகழ்வு மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எனப்படுகிறது. மின்னோட்டத்தின் இந்த வெப்ப விளைவு மின் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி போன்றவைகளில் பயன்படுகிறது.
33) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
ஜுல் வெப்ப விதியின் படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பம்
I)அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இரு மடிக்கு நேர்விகிதத்திலும்
II) மின் தடைக்கு நேர் விகிதத்திலும்
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: ஜுல் வெப்ப விதியின் படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது
• அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இரு மடிக்கு நேர்விகிதத்திலும்
• மின் தடைக்கு நேர் விகிதத்திலும்
• மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர்விகிதத்திலும் இருக்கும்.
34) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களில் வெப்பத்தினை உண்டாக்க எது பயன்படுத்தப்படுகிறது?
a) நிக்கல்
b) குரோமியம்
c) நிக்ரோம்
d) எவையுமில்லை
விளக்கம்: மின் சலவைப் பெட்டி , ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் வெப்பத்தினை உண்டாக்க நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுகிறது. எனெனில் இப்பொருள்
(i)அதிக மின்தடையை கொண்டது,
(ii) அதிக உருகுநிலை கொண்டது,
(iii) விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.
35) பின்வருவனவற்றுள் நிக்ரோமின் பண்பு எது?
a) அதிக மின்தடையை கொண்டது
b) விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது
c) அதிக உருகுநிலை கொண்டது
d) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: மின் சலவைப் பெட்டி , ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் வெப்பத்தினை உண்டாக்க நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுகிறது. எனெனில் இப்பொருள்
I)அதிக மின்தடையை கொண்டது,
(ii) அதிக உருகுநிலை கொண்டது,
(iii) விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.
36) சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது மின்சுற்றை துண்டிக்க எது பயன்படுத்தப்படுகிறது?
a) மின் இழை
b) உருகு இழை
c) மின் உருகு இழை
d) எவையுமில்லை
விளக்கம்: மின் உருகு இழை மின் சுற்றோடு தொடராக இணைக்கப்படும். சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது ஜுல் வெப்பவிளைவு காரணமாக மின் உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.
37) மின் விளக்கில் வெப்பத்தை உருவாக்கி வெளிச்சத்தை கொடுக்க எது உதவுகிறது?
a) மின் இழை
b) உருகு இழை
c) மின் உருகு இழை
d) எவையுமில்லை
விளக்கம்: மின் விளக்கில் மின் இழை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கம்பி பயன்படுத்தபடுகிறது. இது மிக அதிக உருகுநிலை கொண்ட பொருளால் உருவாக்கப்படுகிறது. மின்னோட்டம் இதன் வழியாக செல்லும் போது வெப்பம் உருவாகிறது. மின் இழை சூடுபடுத்தும்போது இது ஒளிர்ந்து வெளிச்சத்தை கொடுக்கிறது. பொதுவாக டங்ஸ்டனான மின் விளக்குகளில் மின் இழையாக பயன்படுகிறது.
38) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருளால் செய்யப்படுகிறது.
II) மின் இழை மிக அதிக உருகுநிலை கொண்ட பொருளால் உருவாக்கப்படுகிறது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருளால் செய்யப்படுகிறது.
மின் இழை மிக அதிக உருகுநிலை கொண்ட பொருளால் உருவாக்கப்படுகிறது. மின்னோட்டம் இதன் வழியாக செல்லும் போது வெப்பம் உருவாகிறது.
39) மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a) மின்னழுத்த வேறுபாடு
b) தன்மின்தடை
c) மின்னழுத்தம்
d) மின் திறன்
விளக்கம்: வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் செலவிடப்படும் வீதம் திறன் என வரையறைச் செய்யப்படுகிறது. இது போல மின்னாற்றல் நுகரும் வீதம் தான் மின்திறன். மின்னாற்றல் வேறு எந்த ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகிற வீதத்தைத் தான் இது குறிக்கிறது. மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு மின்திறன் எனப்படும்.
40) மின் திறனின் SI அலகு என்ன?
a) வாட்
b) கிலோ வாட்
c) கூலும்
d) ஜூல்
விளக்கம்: மின் திறனின் SI அலகு வாட். ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில், ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில் செயல்படும் மின்கருவி பயன்படுத்திக் கொள்ளும் மின்திறன் ஒரு வாட் ஆகும்.
P = 1 வோல்ட் × 1 ஆம்பியர் = 1 வாட்
நடைமுறையில் மின் திறனின் பெரிய அளவு அலகாக கிலோ வாட் பயன்படுத்தபடுகிறது.
41) நடைமுறையில் மின் திறனின் பெரிய அளவு அலகாக எது பயன்படுத்தபடுகிறது?
a) வாட்
b) கிலோ வாட்
c) கூலும்
d) ஜூல்
விளக்கம்: மின் திறனின் SI அலகு வாட். ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில், ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில் செயல்படும் மின்கருவி பயன்படுத்திக் கொள்ளும் மின்திறன் ஒரு வாட் ஆகும்.
P = 1 வோல்ட் × 1 ஆம்பியர் = 1 வாட்
நடைமுறையில் மின் திறனின் பெரிய அளவு அலகாக கிலோ வாட் பயன்படுத்தபடுகிறது.
42) ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படும் அலகு எது?
a) வாட்
b) கிலோ வாட்
c) கூலும்
d) குதிரை திறன்
விளக்கம்: குதிரை திறன்: குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1 குதிரை திறன் என்பது 746 வாட் ஆகும்.
43) ஒரு குதிரை திறன் என்பது எத்தனை வாட் ஆகும்?
a) 467 வாட்
b) 746 வாட்
c) 1000 வாட்
d) 100 வாட்
விளக்கம்: குதிரை திறன்: குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1 குதிரை திறன் என்பது 746 வாட் ஆகும்.
44) வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு எதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?
a) மின்திறனின் அளவு
b) பயன்படுத்தப்படும் கால அளவு
c) பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு
d) a அல்லது b
விளக்கம்: வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு இரண்டு காரணிகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அவை (i) மின்திறனின் அளவு மற்றும் (ii) பயன்படுத்தப்படும் கால அளவு. நுகர்வு செய்யப்படும் மின்னாற்றலின் மதிப்பினை மின் திறனையும் பயன்படுத்தப்படும் கால அளவையும் பெருக்கி வரும் மதிப்பினைக் கொண்டு கணக்கிடலாம். எ.கா. 100 வாட் மின் திறனானது இரண்டு மணி நேரம் நுகரப்பட்டால் நுகர்வு செய்யப்பட்ட மின் ஆற்றல் = 100 x 2 = 200 வாட் மணி ஆகும்.
45) நடைமுறையில் நுகரப்படும் மின்னாற்றலின் SI அலகு எவ்வாறு அளவிடப்படுகிறது?
a) வாட் விநாடி
b) வாட்மணி
c) கிலோ வாட்மணி
d) a மற்றும் b
விளக்கம்: நுகரப்படும் மின்னாற்றலின் SI அலகு வாட் விநாடியாக இருந்த போதிலும் நடைமுறையில் வாட்மணி என்ற அலகால் அளவிடப்படுகிறது. நுகரப்படும் மின்னாற்றலை நடைமுறையில் பயன்படுத்த பெரிய அலகு தேவைப்படுகிறது. இந்த பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh). ஒரு கிலோ வாட் மணி என்பதனை ஒரு யூனிட் மின்னாற்றல் எனவும் கூறலாம்.
46) நுகரப்படும் மின்னாற்றலை நடைமுறையில் பயன்படுத்த எந்த பெரிய அலகு பயன்படுத்தப்படுகிறது?
a) வாட் விநாடி
b) வாட்மணி
c) கிலோ வாட்மணி
d) a மற்றும் b
விளக்கம்: நுகரப்படும் மின்னாற்றலின் SI அலகு வாட் விநாடியாக இருந்த போதிலும் நடைமுறையில் வாட்மணி என்ற அலகால் அளவிடப்படுகிறது. நுகரப்படும் மின்னாற்றலை நடைமுறையில் பயன்படுத்த பெரிய அலகு தேவைப்படுகிறது. இந்த பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh). ஒரு கிலோ வாட் மணி என்பதனை ஒரு யூனிட் மின்னாற்றல் எனவும் கூறலாம்.
47) மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது?
a) பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கம்பிவடங்கள்
b) மின் கோபுரங்கள் மூலம்
c) மின்கம்பங்களின் மீது வரும் கம்பிகள்
d) a மற்றும் c
விளக்கம்: மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கம்பிவடங்கள் அல்லது மின்கம்பங்களின் மீது வரும் கம்பிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
48) எந்த பொருள் வீடுகளில் எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்தபடுகிறது என்பதனை அளவிடுகிறது?
a) மின்னளவி
b) மின்னளவி பெட்டி
c) மீட்டர் பெட்டி
d) a மற்றும் b
விளக்கம்: நமது வீடுகளில் மின்னியல் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மின்சுற்றுக்கள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கபடுகிறது. மின்மாற்றி போன்ற மின்பகிர்மான செய்யும் இடத்திலிருந்து மின்னோட்டமானது முதன்மை மின்னளவி பெட்டிக்கு கொண்டுவரப்படுகிறது. முதன்மை மின்னளவிப் பெட்டியில் இரண்டு முக்கிய பாகங்கள் இருக்கும். (i) மின் உருகு இழை (ii) மின்னளவிப் பெட்டி.
மின்னளவிப் பெட்டி எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்தபடுகிறது என்பதனை அளவிடுகிறது. மின் உருகு இழை என்பது ஒரு சிறிய கம்பி இழை அல்லது ஒரு சிறிய மின்சுற்று உடைப்பி (MCB). வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாப்பதே மின் உருகு இழை அல்லது மின்சுற்று உடைப்பியின் பணி ஆகும்.
மின்சுற்று உடைப்பி என்பது தானாகவோ அல்லது கைமுறை உள்ளீடு மூலமாகவோ செயல்படுத்தக் கூடிய ஒரு சாவி ஆகும். இந்த சாவியைச் சுற்றி சிறிய கம்பிச் சுருள் சுற்றியிருக்கும். மின் சுற்றில் அதிகப்படியாக மின்னோட்டம் செல்லும் போது சுற்றியுள்ள கம்பி சுருளானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. எனவே, மின் சுற்று உடைக்கப்பட்டு மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
49) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) சிவப்பு காப்புறை கொண்ட கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.
II) கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி மின்னோட்ட கம்பி எனப்படும்.
III) பச்சை காப்புறை பெற்ற கம்பி புவித் தொடுப்புக் கம்பி என்று எனப்படும்.
a) I மற்றும் II சரி
b) I, II சரி
c) II சரி
d) I, II தவறு III சரி
விளக்கம்: வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும். கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும். வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள்.
50) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின்னோட்ட கம்பி மின் உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
II) நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும். இவ்விரு கம்பிகளும் வாட்- மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன. மின்னோட்ட கம்பி மின் உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.
51) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) மின் பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 15 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
II) மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 25 A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின் பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15 A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.
52) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
I) இந்தியாவில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 220/230 வோல்ட் மின்னழுத்தமும், 50Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்படுகிறது.
II) USA மற்றும் UK போன்ற நாடுகளில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 110 / 120 வோல்ட் மின்னழுத்தமும் 60Hz அதிர்வண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.
a) I மற்றும் II சரி
b) I சரி
c) II சரி
d) I மற்றும் II தவறு
விளக்கம்: இந்தியாவில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 220/230 வோல்ட் மின்னழுத்தமும், 50Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்படுகிறது. USA மற்றும் UK போன்ற நாடுகளில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 110 / 120 வோல்ட் மின்னழுத்தமும் 60Hz அதிர்வண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.
53) ஒரு மின் கம்பியில் அதிகப்படியான மின்னோட்டம் பாயும் போது மின்கம்பி சூடாகி தீ ஏற்படும் நிகழ்ச்சி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
a) குறுக்குத் தடச் சுற்று
b) பளுவாதல்
c) a மற்றும் b
d) a அல்லது b
விளக்கம்: அதிக பளுவாதல் அல்லது குறுக்குத் தடச் சுற்று ஏற்பட்டால் மின் உருகு இழை அல்லது சிறிய மின்சுற்று உடைப்பி மின்சுற்றை முறித்துவிடும். ஒரே மின் மூலத்தில் அதிக அளவிலான மின்சுற்றுக்களை தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அதிக பளு ஏற்படுகிறது. இது சுற்றின் வழியாக அதிகப்படியான மின்னோட்டம் பாய்வதற்கு வழிவகை செய்கிறது. ஒரு மின் கம்பியில் அதன் எல்லையை தாண்டி அதிகப்படியான மின்னோட்டம் பாயும் போது மின்கம்பி சூடாகி தீ ஏற்படுகிறது. இதுவே, அதிக பளுவாதல் எனப்படும்.
54) மின்னோட்ட கம்பி நடுநிலை கம்பியோடு தொடும் போது ஏற்படும் நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a) குறுக்குத் தடச் சுற்று
b) பளுவாதல்
c) a மற்றும் b
d) a அல்லது b
விளக்கம்: சிலநேரங்களில் வெப்பநிலை மாற்றம் அல்லது வேறு காரணங்களால் மின்னோட்ட கம்பியில் போடப்பட்டுள்ள மின் காப்புறை பழுதாகிப் போய்விடுகிறது. இதன் காரணமாக மின்னோட்ட கம்பியானது நடுநிலை கம்பியை தொடும் நிலை ஏற்படும். மின்னோட்ட கம்பி நடுநிலை கம்பியோடு தொடும் போது ஏற்படுவது தான் குறுக்குத் தடச் சுற்று. குறுக்குத் தடச்சுற்று காரணமாக கம்பியின் மின்தடை மிக சிறியதாகிறது. இதனால் அதிக அளவு மின்னோட்டம் கம்பி வழியாக பாய்கிறது. இதன் காரணமாக கம்பி சூடாகி தீ ஏற்பட்டு வீடுகளுக்குப் பரவுகிறது.
55) புவித் தொடுப்புக் கம்பி எந்த நிறத்தில் காணப்படும்?
a) சிவப்பு
b) மஞ்சள்
c) பச்சை
d) கருப்பு
விளக்கம்: வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள். புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த கம்பியானது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையை தருகிறது. உலோகப்பரப்புடைய மின்சலவைப்பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்கருவிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும். மின்கசிவினால் உருவாகும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பி வழியாக புவிக்கு செல்கிறது. எனவே, புவித் தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.
56) பின்வரும் வாக்கியங்களை கவனி
கூற்று (A): புவித் தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.
காரணம்(R): புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள். புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த கம்பியானது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையை தருகிறது. உலோகப்பரப்புடைய மின்சலவைப்பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்கருவிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும். மின்கசிவினால் உருவாகும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பி வழியாக புவிக்கு செல்கிறது. எனவே, புவித் தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.
57) வண்ணங்களை உமிழக்கூடிய LED பல்புகளின் உற்பத்தியில் எந்த வேதிச் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது?
a) கேலியம் ஆர்சைனைடு
b) கேலியம் பாஸ்பைடு
c) கேலியம் பொட்டாசியம்
d) a மற்றும் b
விளக்கம்: LED பல்பு என்பது மின்சாரம் செல்லும் போது கண்ணுறு ஒளியை உமிழக்கூடிய ஒரு குறைகடத்தி சாதனமாகும். உமிழப்படும் ஒளியின் வண்ணம் பயன்படுத்தப்படும் பொருளின் தன்மையை பொறுத்து அமையும். சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை உமிழக்கூடிய LED பல்புகளை தயாரிப்பாளர்கள் கேலியம் ஆர்சைனைடு மற்றும் கேலியம் பாஸ்பைடு போன்ற வேதிச் சேர்மங்கள் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள்.
58) LED எதில் பயன்படுத்தப்படுகிறது?
a) டிஜிட்டல் கடிகாரங்கள்
b) கணக்கீட்டு கருவிகள்
c) அலங்கார விளக்குகள்
d) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கீட்டு கருவிகள், போக்குவரத்து சமிக்கைகள், தெருவிளக்குகள், அலங்கார விளக்குகள் போன்றவைகளில் LED பயன்படுத்தப்படுகிறது.
59) ஏழு துண்டு காட்சிப் பலகை ஏழு துண்டுகள் கொண்ட ஒளி உமிழ் __________ன் தொகுப்பு ஆகும்?
a) மின்தடை மாற்றி
b) மின்தடையாக்கி
c) டையோடு
d) a மற்றும் b
விளக்கம்: ஏழு துண்டு காட்சிப் பலகை என்பது எழுத்து அல்லது எண்களை டிஜிட்டல் வடிவில் வெளியீடு செய்யும் ஒரு காட்சிக் கருவி ஆகும். டிஜிட்டல் மீட்டர், டிஜிட்டல் கடிகாரங்கள், நுண்ணலை அடுப்பு போன்றவைகளில் எண்கள் அல்லது எழுத்துக்களை வெளியீடு செய்ய இது பயன்படுகிறது. இது 8 என்ற எண் வடிவில் அமைந்த ஏழு துண்டுகள் கொண்ட ஒளி உமிழ் டையோடுகளின் தொகுப்பு ஆகும். ஏழு ஒளி உமிழ் டையோடுகளுக்கும் a, b, c, d, e, f மற்றும் g என பெயரிடப்பட்டுள்ளது. எட்டாவது ஒளி உமிழ் டையோடு புள்ளியைகாட்சிப்படுத்தவைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு துண்டுகளுக்கு மின்னழுத்தம் கொடுக்கும் போது துண்டுகள் ஒளியினை உமிழும். தேவைப்படும் துண்டுகளுக்கு மின்னழுத்தம் கொடுத்து அதனைமட்டும் உமிழச் செய்யலாம்.
60) பின்வருவனவற்றுள் LED மின் விளக்குகளின் பயன் எது?
a) அதிக வெப்பநிலை
b) மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம்
c) பாதரசம் பயன்படுத்தப்படுகிறது
d) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: LED மின் விளக்குகளின் நன்மைகள்
1. LED ல் மின் இழையில்லாத காணரத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின்விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
2. ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
3. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
4. பல நிறங்களில் வெளியீட்டினைபெற்றுக்கொள்ள சாத்தியமாகிறது.
5. மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
6. பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
மின்னாற்றல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிகளில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான LED மின் விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.
61) LCD-ன் விரிவாக்கம் காண்க
a) Luminance Crystal Display
b) Lowest Common Divisor
c) Liquid Crystal Display
d) Liquid Common Display
விளக்கம்: ஒளி உமிழ் டையோடின் மற்றுமொரு முக்கியமான பயன்பாடு LED தொலைகாட்சி ஆகும். LED தொலைகாட்சி உண்மையில் ஒளி உமிழ் டையோடை பயன்படுத்தி செய்யப்பட்ட LCD (Liquid Crystal Display) தொலைக்காட்சி ஆகும். LED காட்சி சாதனத்தில் ஒளி உமிழ் டையோடுகளை மின்னொளிக்காக பயன்படுத்துகின்றனர். ஒளி உமிழ் டையோடுகளின் வரிசை படப்புள்ளிகளாக (pixel) செயல்படும். இந்த படப்புள்ளிகளே டிஜிட்டல் படம் அல்லது காட்சிக்கு அடிப்படை ஆகும். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் வெள்ளை நிற ஒளியை உமிழும் ஒளி உமிழ் டையோடுகளைப் பயன்படுத்துகின்றனர். சிகப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களை உமிழும் ஒளி உமிழ் டையோடுகளைப் பயன்படுத்தி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை தயாரிக்கின்றனர்.
62) முதல் LED தொலைக்காட்சியை உருவாக்கியவர் யார்?
a) பீலோ பார்ன்ஸ்வர்த்
b) ஜெம்ஸ் P. மிட்சல்
c) ஜான் லோகி பெயர்டு
d) சார்லஸ் பிரன்சிஸ்
விளக்கம்: 1997 ல் ஜெம்ஸ் P. மிட்சல் என்பவரால் முதல் LED தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. இது ஓரியல் மூல நிறக்காட்சிப் பெட்டி. 2009 இல் வணிக ரீதியலான LED தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
63) பின்வருவனவற்றுள் LED தொலைகாட்சியின் நன்மை எது?
a) பிரகாசமாக இருக்கும்
b) ஆயுட்காலம் அதிகம்.
c) குறைவான சக்தியை பயன்படுத்துகிறது
d) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: LED தொலைகாட்சியின் நன்மைகள்
• இதன் வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
• இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
• குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
• இதன் ஆயுட்காலம் அதிகம்.
• இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.
64) பின்வரும் வாக்கியங்களை கவனி
கூற்று (A): உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காரணம்(R): இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும். கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும். வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள்.
65) பின்வரும் வாக்கியங்களை கவனி
கூற்று (A): LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம்(R): LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
a) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம்
b) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல
c) A சரி ஆனால் R தவறு
d) A தவறு ஆனால் R சரி
விளக்கம்: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது. LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
10th Science Lesson 5 Questions in Tamil
5] ஒலியியல்
1. கூற்று(A): ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும் இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது எதிரொளிப்பினால் உருவாகின்றது என்பதை அறியலாம்.
காரணம்(R): எதிரொளிக்கும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும் இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது அதிர்வுகளால் உருவாகின்றது என்பதை அறியலாம். அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது. அதுவே ஒலி அலைகளாகும்.
2. கூற்று(A): நிலவில் வளிமண்டலம் உள்ளது.
காரணம்(R): எனவே நிலவில் ஒலியை கேட்க முடியும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R விளக்கம்
விளக்கம்: நிலவில் வளி மண்டலம் இல்லாததால் ஒலியைக் கேட்க இயலாது.
3. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
2] அவை அனைத்து ஊடகங்களிலும் (திண்ம, திரவ, வாயு) பரவும்.
3] அவற்றின் திசை வேகம் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையாது.
A) 1, 2, 3 சரி
B) 1, 3 தவறு 2 சரி
C) 1, 2 சரி 3 தவறு
D) 1 சரி 2, 3 தவறு
விளக்கம்: ஒலி அலைகள் நெட்டலைகளாகும். அவை அனைத்து ஊடகங்களிலும் (திண்ம, திரவ, வாயு) பரவும். அவற்றின் திசை வேகம் பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையும்.
4. ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை ____________ எனலாம்.
A) குறுக்கலைகள்
B) நெட்டலைகள்
C) நீட்டலளவை
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை நெட்டலை எனலாம்.
5. ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது ____________ உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது ____________ உள்ள பகுதியாகும்.
A) குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம்
B) அதிக அழுத்தம், குறைந்த அழுத்தம்
C) குறைந்த அழுத்தம், நடுநிலையான
D) நடுநிலையான, அதிக அழுத்தம்
விளக்கம்: ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.
6. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒவ்வொரு மூலக்கூறும் அதன்மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது.
2] இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும் உருவாகின்றன.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒவ்வொரு மூலக்கூறும் அதன்மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது. இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும் உருவாகின்றன.
7. கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] இவை 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
2] இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
A) குற்றொலி அலைகள்
B) மீயொலி அலைகள்
C) செவியுணர் ஒலி அலைகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: செவியுணர் ஒலி அலைகள் 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
8. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் ____________
A) குற்றொலி அலைகள்
B) மீயொலி அலைகள்
C) செவியுணர் ஒலி அலைகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
9. கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க கூடிய அலைகள் ____________
A) குற்றொலி அலைகள்
B) மீயொலி அலைகள்
C) செவியுணர் ஒலி அலைகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: மீயொலி அலைகளை கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் கேட்க இயலும்.
10. கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] இவை 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
2] மனிதர்களால் கேட்க இயலாது.
3] கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
A) குற்றொலி அலைகள்
B) மீயொலி அலைகள்
C) செவியுணர் ஒலி அலைகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: குற்றொலி அலைகள் 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
11. கீழ்க்கண்டவை எந்த அலைகள் என கண்டறிக?
1] மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும்.
2] மனிதர்களால் கேட்க இயலாது.
3] வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
A) குற்றொலி அலைகள்
B) மீயொலி அலைகள்
C) செவியுணர் ஒலி அலைகள்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
12. ஒலி அலைகளின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை இருக்கும்.
A) 1.65 மீ முதல் 1.65 செ.மீ
B) 1.6 மீ முதல் 1.65 செ.மீ
C) 1.60 மீ முதல் 1.65 செ.மீ
D) 1.65 செ.மீ முதல் 1.65 மீ
விளக்கம்: ஒலி அலைகளின் அலைநீளம் 1.65 செ.மீ முதல் 1.65 மீ வரை இருக்கும்.
13. ஒலி அலைகள் ____________ திசைவேகத்தில் பரவும்.
A) 350 மீவி-1
B) 345 மீவி-1
C) 360 மீவி-1
D) 340 மீவி-1
விளக்கம்: ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
14. ஒளி அலைகளின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை இருக்கும்.
A) 4 × 10-7 மீ முதல் 7 × 10-7 மீ
B) 5× 10-7 மீ முதல் 7 × 10-7 மீ
C) 4 × 10-7 மீ முதல் 8× 10-7 மீ
D) 4 × 10-7 மீ முதல் 7 × 10-7 மீ
விளக்கம்: ஒளி அலைகளின் அலை நீளம் 4 × 10-7 மீ முதல் 7 × 10-7 மீ வரை இருக்கும்.
15. ஒளி அலைகள் ____________ திசைவேகத்தில் பரவும்.
A) 3.5 × 108மீவி-1
B) 3 × 108மீவி-1
C) 4× 108 மீவி-1
D) 5 × 108 மீவி-1
விளக்கம்: ஒளி அலைகள் 3 × 108மீவி-1 திசைவேகத்தில் பரவும்.
16. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை.
2] ஒளி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒளி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி அலைகள் குறுக்கலைகள் ஆகும்.
17. திசைவேகத்தின் அலகு ____________
A) வினாடி-1
B) மீட்டர் வினாடி-1
C) சென்டிமீட்டர் வினாடி-1
D) சென்டிமீட்டர்/ விநாடி
விளக்கம்: திசைவேகத்தின் அலகு மீட்டர் வினாடி-1 ஆகும்.
18. ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் ____________
A) அலைத் திசைவேகம்
B) துகள் திசைவேகம்
C) ஒலி திசைவேகம்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் துகள் திசைவேகம் எனப்படும்.
19. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது.
2] இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எனவும் குறிப்பிடலாம். அலைத் திசைவேகம் = தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது. இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எனவும் குறிப்பிடலாம். அலைத் திசைவேகம் = தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
20. கூற்று(A): திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு குறைவு.
காரணம்(R): ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
21. கூற்று(A): வாயுக்களுக்கு மீட்சிப்பண்பு குறைவு.
காரணம்(R): ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: வாயுக்களுக்கு மீட்சிப் பண்பு குறைவாக இருப்பதால் ஒலியலை வாயுக்கள் வழியாக செல்லும் போது அதன் திசைவேகம் குறைவாக இருக்கும்.
22. திடப்பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் ____________ ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
A) திசைவேகம்
B) அடர்த்தி
C) அலைநீளம்
D) வேகம்
விளக்கம்: திடப்பொருட்களின் வழியாக ஒலி செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் அடர்த்தி ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது.
2] ஒலியின் திசைவேகமானது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும், அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும் அமையும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது. ஒலியின் திசைவேகமானது மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும், அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும் அமையும்.
24. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம் அதிகரிக்கிறது.
2] மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் குறைகிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம் குறைகிறது. மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
25. வாயுக்களில் கீழ்கண்ட எந்த காரணிகளால் ஒலியின் திசைவேகம் பாதிக்கின்றன?
A) அடர்த்தியின் விளைவு
B) வெப்பநிலையின் விளைவு
C) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு
D) இவை அனைத்தும்
விளக்கம்: வாயுக்களைப் பொறுத்தவரையில் கீழ்கண்ட காரணிகள் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கின்றன. அடர்த்தியின் விளைவு, வெப்பநிலையின் விளைவு, ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு ஆகும்.
26. கீழ்க்கண்டவை எந்த விளைவு என கண்டறிக?
1] வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும்.
2] எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
A) அடர்த்தியின் விளைவு
B) வெப்பநிலையின் விளைவு
C) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு
D) நிறையின் விளைவு
விளக்கம்: வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
27. மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க காரணமான விளைவு ____________
A) அடர்த்தியின் விளைவு
B) வெப்பநிலையின் விளைவு
C) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு
D) நிறையின் விளைவு
விளக்கம்: ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவின் காரணமாக தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
28. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
2] இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில் நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும்.
3] இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர் எதிரொலித்தக் கதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் படுகதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
A) 1, 2, 3 சரி
B) 1 தவறு 2, 3 சரி
C) 1, 2 சரி 3 தவறு
D) 1 சரி 2, 3 தவறு
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில் நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும். இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர் படுகதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் எதிரொலித்தக் கதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
29. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] படுகதிர், எதிரொலிக்கும் தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
2] படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை எதிரெதிராக இருக்கும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: படுகதிர், எதிரொலிக்கும் தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும். படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை சமமாக இருக்கும்.
30. அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை எதிரொலிப்புத் தளத்தில் ____________ வழியாகச் செல்லும்.
A) வெவ்வேறு புள்ளி
B) ஒரே தளம்
C) வெவ்வேறு தளம்
D) ஒரே புள்ளி
விளக்கம்: அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை எதிரொலிப்புத் தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும்.
31. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] எதிரொலிப்பு தளத்துக்குச் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது.
2] செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக் கோணம் ஆகும்.
3] செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் எனவும் அழைக்கப்படுகிறது.
A) 1, 2, 3 சரி
B) 1 தவறு 2, 3 சரி
C) 1, 2 சரி 3 தவறு
D) 1 சரி 2, 3 தவறு
விளக்கம்: எதிரொலிப்பு தளத்துக்குச் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது. செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் (i) ஆகும். அதே போல செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக் கோணம் (r) எனவும் அழைக்கப்படுகிறது.
32. கூற்று(A): கோல்கொண்டா கோட்டையின் மேற்புறம் உள்ள ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும்.
காரணம்(R): இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு கேட்கிறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: கோல்கொண்டா கோட்டையின் மேற்புறம் உள்ள ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும். எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது, அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின் தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு கேட்கிறது.
33. கூற்று(A): அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குகின்றன.
காரணம்(R): எனவே விளிம்பு பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
34. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்மிகு ஊடகம் ஆகும்.
2] காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்)
35. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்குறை ஊடகம் ஆகும்.
2] நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும். நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு அடர்மிகு ஊடகம் ஆகும்.
36. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது.
2] ஒலி அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது. அவ்வாறு ஒலி அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது.
2] குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் அதிகரிக்கிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது.
38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
2] எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
39. கூற்று(A): பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
காரணம்(R): பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
40. கூற்று(A): ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காரணம்(R): வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக் குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.
41. மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள ____________ ஆலயம் ஆகும்.
A) புனித பால் கேதிட்ரல்
B) புனித சேவியர்
C) புனித அந்தோனியார்
D) புனித தோமையார்
விளக்கம்: மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது.
42. கூற்று(A): சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது.
காரணம்(R): . ஏனெனில் சிறிய அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
A) A சரி ஆனால் R தவறு
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது. சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது என்பதால் அங்கு எதிரொலிப்பு நடைபெறவில்லை என்பது பொருளல்ல. ஏனெனில் சிறிய அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
43. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் ____________ விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
A) 0.1
B) 0.2
C) 0.3
D) 0.4
விளக்கம்: மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் 0.1 விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
44. ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு ____________ ஆகும்.
A) 17.1 மீ
B) 17.2 மீ
C) 17.3 மீ
D) 16.2 மீ
விளக்கம்: ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.
45. எதிரொலித் தத்துவம் மகப்பேறியல் துறையில் ____________ கருவி பயன்படுகிறது.
A) ரேடியோக்ராபி
B) ரேபிலேஸ் ஹாம்மேர்
C) அல்ட்ராகிராபி
D) அல்ட்ரா சோனோ கிராபி
விளக்கம்: எதிரொலித் தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ரா சோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது ஏனெனில் இதில் தீங்க விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
46.எதிரெலாலியின் பயன்பாடுகள் யாவை?
A) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
B) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும் போது தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
C) ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது. சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும் போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
47. ஒலியின் திசைவேகம் (v) ____________
A) 2d/ t
B) 2t/ d
C) d/ t
D) t/ d
விளக்கம்: ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு/ எடுத்துக் கொண்ட நேரம். ஒலியின் திசைவேகம் (v) = 2d/ t
48. அரங்ககங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுவது ____________
A) கூம்பு ஒலிப்பெருக்கி
B) காது கேட்க உதவும் கருவி
C) ஒலி எதிரொலிப்பு அட்டை
D) ஒலிப்பெருக்கி
விளக்கம்: ஒலி எதிரொலிப்பு அட்டை அரங்ககங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
49. கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
2] . ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப் படுகிறது.
3] ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
A) கூம்பு ஒலிப்பெருக்கி
B) காது கேட்க உதவும் கருவி
C) ஒலி எதிரொலிப்பு அட்டை
D) ஒலிப்பெருக்கி
விளக்கம்: இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும். ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப் படுகிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
50. கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இது காது கேட்டலுக்குத் துணைபுரியும் கருவி.
2] இந்தக் கருவியின் ஒரு முனை அகன்றும் மறுமுனை குறுகலாகவும் இருக்கும்.
3] ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலித்துக் குறுகலானப் பகுதியை அடைகிறது.
A) கூம்பு ஒலிப்பெருக்கி
B) காது கேட்க உதவும் கருவி
C) ஒலி எதிரொலிப்பு அட்டை
D) ஒலிப்பெருக்கி
விளக்கம்: இது காது கேட்டலுக்குத் துணைபுரியும் கருவி. இந்தக் கருவியின் ஒரு முனை அகன்றும் மறுமுனை குறுகலாகவும் இருக்கும். ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலித்துக் குறுகலானப் பகுதியை அடைகிறது. இந்தக் கருவியானது ஒலியைக் குவிக்கவும், அதிகச் செறிவோடு செவிப்பறையை அடையவும் பயன்படுகிறது. இந்தக் கருவியால் குறைபாடு உள்ளவர்களால் நன்றாகக் கேட்க இயலுகிறது.
51. கீழ்க்கண்டவை எவற்றின் பயன்பாடுகள் என கண்டறிக?
1] இதன் ஒரு முனை அகன்றும், மற்றொரு முனைக் குறுகலாகவும் காணப்படும்.
2] குறுகலானப் பகுதியில் பேசும் ஒலியானது பன்முக எதிரொலிப் படைகிறது. எனவே ஒலியானது அகன்றப் பகுதியின் வழியே வெகு தொலைவில் அதிக செறிவுடன் கேட்க இயலுகிறது
A) கூம்பு ஒலிப்பெருக்கி
B) காது கேட்க உதவும் கருவி
C) ஒலி எதிரொலிப்பு அட்டை
D) ஒலிப்பெருக்கி
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி இதன் ஒரு முனை அகன்றும், மற்றொரு முனைக் குறுகலாகவும் காணப்படும். குறுகலானப் பகுதியில் பேசும் ஒலியானது பன்முக எதிரொலிப் படைகிறது. எனவே ஒலியானது அகன்றப் பகுதியின் வழியே வெகு தொலைவில் அதிக செறிவுடன் கேட்க இயலுகிறது.
52. சிறிய அளவுக் கூட்டத்தினரிடையே உரையாட உதவும் கருவி ____________
A) கூம்பு ஒலிப்பெருக்கி
B) காது கேட்க உதவும் கருவி
C) ஒலி எதிரொலிப்பு அட்டை
D) ஒலிப்பெருக்கி
விளக்கம்: கூம்பு ஒலிப்பெருக்கி என்பது சிறிய அளவுக் கூட்டத்தினரிடையே உரையாட உதவும் குழல் வடிவ கருவியாகும்.
53. டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள் யாவை?
A) ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது
B) ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
C) ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது, ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது, ஒலி மூலமானது வட்டப்பாதையின்மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது,
54. ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v – vs) n
B) n’ = (v – vL/ v – vs) n
C) n’ = (v + vL/ v + vs) n
D) n’ = (v + vL/ v – vs)
ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v – vs) n ஆகும்.
55. ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒலி மூலமும், கேட்குநரும் ஒருவருக்கொருவர் விலகிச் செல்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v – vs) n
B) n’ = (v – vL/ v + vs) n
C) n’ = (v + vL/ v + vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒலி மூலமும், கேட்குநரும் ஒருவருக்கொருவர் விலகிச் செல்கின்றனர் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v + vs) n ஆகும்.
56. ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் கேட்குநரை ஒலி மூலம் பின் தொடர்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v – vs) n
B) n’ = (v – vL/ v + vs) n
C) n’ = (v – vL/ v – vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் கேட்குநரை ஒலி மூலம் பின் தொடர்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v – vs) n ஆகும்.
57. ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் ஒலி மூலத்தை கேட்குநர் பின் தொடர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v + vs) n
B) n’ = (v – vL/ v + vs) n
C) n’ = (v – vL/ v – vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: ஒலி மூலமும், கேட்குநரும் இயக்கத்தில் உள்ளனர் மற்றும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றனர் மற்றும் ஒலி மூலத்தை கேட்குநர் பின் தொடர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v + vs) n ஆகும்.
58. ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v ) n
B) n’ = (v – vL/ v + vs) n
C) n’ = (v – vL/ v – vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v + vL/ v ) n ஆகும்.
59. ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v ) n
B) n’ = (v – vL/ v ) n
C) n’ = (v – vL/ v – vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: ஒலி மூலம் ஓய்வு நிலையில் உள்ளது மற்றும் கேட்குநர் ஒலி மூலத்தை நோக்கி நகர்கிறார் மற்றும் ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v – vL/ v ) n ஆகும்.
60. கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v ) n
B) n’ = (v – vL/ v ) n
C) n’ = (v / v – vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு குறைகிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v – vs) n ஆகும்.
61. கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண்____________
A) n’ = (v + vL/ v ) n
B) n’ = (v – vL/ v ) n
C) n’ = (v / v + vs) n
D) n’ = (v + vL/ v – vs)
விளக்கம்: கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ளார் மற்றும் ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது மற்றும் ஒலி மூலத்திறகும், கேட்குநருக்கும் இடைப்பட்டத் தொலைவு அதிகரிக்கிறது எனில் தோற்ற அதிர்வெண் n’ = (v / v + vs) n ஆகும்.
62. கூற்று(A): காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்(R): ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காது. ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
63. கூற்று(A): ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும். காரணம்(R): திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களைவிட அதிகம்.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
64. பொருத்துக
a) குற்றொலி – 1] இறுக்கங்கள்
b) எதிரொலி – 2] 22 kHz
c) மீயொலி – 3] 10 Hz
d) அழுத்தம் மிகுந்த பகுதி – 4] அல்ட்ராசோனோ கிராபி
a b c d
A) 3 1 2 4
B) 4 1 2 3
C) 2 4 3 1
D) 3 4 2 1
65. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியானது திட,திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
2] நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒலியானது வெற்றிடத்தில் பரவாது. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
66. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
2] ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது. ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.
67. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது நெட்டலைகள் ஆகும்.
2] ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது நெட்டலைகள் ஆகும். ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.
68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மெதுவாக பேசும் கூடத்தில் ஏற்படும் நிகழ்வு பல்முனை எதிரொலிப்பு ஆகும்.
2] டாப்ளர் விளைவு என்பது கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: மெதுவாக பேசும் கூடத்தில் ஏற்படும் நிகழ்வு பல்முனை எதிரொலிப்பு ஆகும். டாப்ளர் விளைவு என்பது கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் ஆகும்.
69. பொருத்துக
a) சோனார் – 1] ஆகாய விமானம்
b) ரேடார் – 2] துணைக்கோள்
c) மின்காந்த அலை – 3] கடல்வாழ் உயிரினம்
d) ரேடியோ அலை – 4] வாகன வேகம்
a b c d
A) 3 1 2 4
B) 4 1 2 3
C) 2 4 3 1
D) 3 1 4 2
70. பொருத்துக
a) தாமிரம் -1] 5010
b) இரும்பு – 2] 5950
c) அலுமினியம் – 3] 6420
d) மண்ணெண்ணெய் – 4] 1324
a b c d
A) 1 2 3 4
B) 4 1 2 3
C) 2 4 3 1
D) 3 1 4 2
விளக்கம்: நீர்- 1493, கடல் நீர்- 1533.
71. கூற்று(A): வேகமாக இயங்கும் ரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள இயக்குனரை நெருங்கும் பொழுது அதன் ஊதல் ஒளியின் சுருதி கருதி அதிகரிப்பது போன்று விட்டு விலகி செல்லும் போது சுருதி குறைவது போன்றும் தோன்றும்.
காரணம்(R): ஒலியின் அதிர்வெண்ணிற்கும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: வேகமாக இயங்கும் ரயில் வண்டியானது ஓய்வு நிலையிலுள்ள இயக்குனரை நெருங்கும் பொழுது அதன் ஊதல் ஒளியின் சுருதி கருதி அதிகரிப்பது போன்று விட்டு விலகி செல்லும் போது சுருதி குறைவது போன்றும் தோன்றும். ஒலியின் அதிர்வெண்ணிற்கும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்குமான வேறுபாடு டாப்ளர் விளைவு ஆகும்.
72. கூற்று(A): வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது திசைவேகம் குறைகிறது.
காரணம்(R): வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
A) A தவறு ஆனால் R சரி
B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல
C) A மற்றும் R தவறு
D) A சரி மற்றும் R சரியான விளக்கம்
விளக்கம்: வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது திசைவேகம் குறைகிறது. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
73. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] எதிரொளிப்பு விதிகள், எதிரொலிப்பு விதிகளுக்கு சமம்.
2] எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
A) 1, 2 சரி
B) 1 தவறு 2 சரி
C) 1, 2 தவறு
D) 1 சரி 2 தவறு
விளக்கம்: எதிரொளிப்பு விதிகள், எதிரொலிப்பு விதிகளுக்கு சமம். எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
74. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் _________
A)20 kHz
B) 50 kHz
C)10000 kHz
D) 15000 kHz
விளக்கம்: மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் 20 kHz ஆகும்.
75. இரும்பில் ஒலியின் திசைவேகம் _________
A) 5950 மீவி-1
B) 165 மீவி-1
C) 330 மீவி-1
D) 4550 மீவி-1
விளக்கம்: இரும்பில் ஒலியின் திசைவேகம் 5950 மீவி-1 ஆகும்.
76. ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
A) Vவாயு < Vதிட< Vதிரவ
B) Vதிட< Vதிரவ < Vவாயு
C) Vதிரவ < Vவாயு<Vதிட
D) Vதிட> Vதிரவ> Vவாயு
விளக்கம்: ஒலி அலைகளின் திசைவேகத்தின் அடிப்படையிலான வரிசை: Vதிட> Vதிரவ> Vவாயு.
10th Science Lesson 6 Questions in Tamil
6] அணுக்கரு இயற்பியல்
1. பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதியவர் ____________
A) ஜான் டால்டன்
B) டெமாகிரிட்டஸ்
C) J.J. தாம்சன்
D) கோல்ஸ்டின்
விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 400 இல் கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமாகிரிட்டஸ் என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதினார். இவை அணுக்கள் என அழைக்கப்பட்டன. அதாவது நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை.
2. தனிமங்கள் அனைத்தும் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதியவர்____________
A) ஜான் டால்டன்
B) டெமாகிரிட்டஸ்
C) J.J. தாம்சன்
D) கோல்ஸ்டின்
விளக்கம்: 1803 – இல் ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார்.
3. பொருத்துக:
A) J.J. தாம்சன் – 1. ஆனோடு
B) கோல்ட்ஸ்டீன் – 2. புரோட்டான் எனப் பெயரிட்டவர்
C) ரூதர்போர்டு – 3. நியூட்ரான்
D) ஜேம்ஸ் சாட்விக் – 4. கேத்தோடு
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 4 1 2 3
D) 4 1 3 2
விளக்கம்:
A) J.J. தாம்சன் – 1. கேத்தோடு
B) கோல்ட்ஸ்டீன் – 2. ஆனோடு
C) ரூதர்போர்டு – 3. புரோட்டான் எனப் பெயரிட்டவர்
D) ஜேம்ஸ் சாட்விக் – 4. நியூட்ரான்
4. பொருந்தாததைக் கண்டுபிடி:
1) கேத்தோடு – நேர்மின்
2) ஆனோடு – எதிர்மின்
3) நியூட்ரான் – மின்சுமையற்றவை
A) 1 மட்டும் தவறு
B) 3 மட்டும் தவறு
C) 1, 3 மட்டும் தவறு
D) 1, 2 மட்டும் தவறு
விளக்கம்:
1) கேத்தோடு – எதிர்மின்
2) ஆனோடு – நேர்மின்
3) நியூட்ரான் – மின்சுமையற்றவை
5. அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கியவர்____________
A) எர்னஸ்ட் ரூதர்போர்டு
B) ஜான் டால்டன்
C) ஜேம்ஸ் சாட்விக்
D) ஹென்றி பெக்கொரல்
விளக்கம்: 1911 இல் பிரிட்டிஸ் அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ரூதர்போர்டு அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கினார். இது அணுக்கள் என்றழைக்கப்படுகிறது.
6. தற்போது அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள அடிப்படைத் துகள்கள்.
A) ஃபோட்டான்கள்
B) மீசான்கள்
C) பாசிட்ரான்கள்
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: தற்போது ஃபோட்டான்கள், மீசான்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்ரினோ துகள்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
7. ஹென்றி பெக்கொரலின் கதிரியக்க கண்டுபிடிப்பு பற்றிய கூற்றுக்களுள் தவறானதைக் கண்டறி:
1) பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றிபெக்கொரல் 1896 இல் ஆய்வுப் பணிகளை முடித்து, வாரத்தின் இறுதியில் புளோட்டோனியம் கூட்டுப்பொருள்களை மேசையில் விட்டுச்சென்றார்.
2) மேசையில் அவர் விட்டுச் சென்றிருந்த ஒளிப்படத்தகடானது ஒரு வாரத்திற்குப் பிறகு கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார்.
3) இதைப் போலவே யுரோனியத்திற்கு அருகில் ஒளிப்படத் தகடு வைக்கப்படும் போதெல்லாம் ஒளிப்படத்தகடு பாதிக்கப்படுவதைக் கண்டார்.
4) யுரேனியம் ஒளிப்படத்தகட்டினைப் பாதிக்கும் அளவிற்கு சில கதிர்களை வெளியிடுகிறது என்பதனை உணர்ந்தார். இந்நிகழ்வு ‘கதிரியக்கம்’ என அழைக்கப்படுகிறது.
விளக்கம்: பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றிபெக்கொரல் 1896 இல் ஆய்வுப் பணிகளை முடித்து, வாரத்தின் இறுதியில் யுரோனியம் கூட்டுப்பொருள்களை மேசையில் விட்டச்சென்றார்.
8. பிட்ச் பிளண்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர்கள்.
A) மேரி கியூரி
B) ஜிலியட் கியூரி
C) பியரி கியூரி
D) A, C இரண்டும்
விளக்கம்: போலந்து நாட்டு இயற்பியலாளர் மேரி கியூரி மற்றும் அவருடைய கணவர் பியரி கியூரியுடன் இணைந்து, பிட்ச் பிளண்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்தனர். ஆனால் அதனை யுரேனியத்தின் தாதுவெனக் கருதியதால் இதுகுறித்து அவர்கள் வியப்படையவில்லை. இதிலிருந்து வெளியாகும் கதிர்கள் தூய்மையான யுரேனியத்திலிருந்து வரும் கதிர்களைவிட அதிக செறிவுடன் இருப்பதை அறிந்தனர். இருப்பினும் பிட்ச் பிளண்ட் எனப்படும் கதிரியக்கத் தாதுவானது யுரேனியத்தைவிட குறைந்த செறிவுடையது என்பதனை உணர்ந்தனர். அவற்றைப் பிரித்தெடுக்கும் போது அதில் தெரிந்திராத வேதிப்பண்புகள் கொண்ட புதிய பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
9. ரேடியத்தை கண்டறிந்தவர் _______
A) மேரி கியூரி
B) பியரி கியூரி
C) ஜிலியட் கியூரி
D) A, B இரண்டும்
விளக்கம்: மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் பிட்ச் பிளண்டிலிருந்து கண்டறிந்த புதிய பொருளானது யுரேனியத்தை போன்று கதிரியக்கத்தை வெளியிடுகிறது என்பதை கண்டறிந்தனர். இப்புதிய பொருளுக்கு ரேடியம் எனப் பெயரிட்டு அழைத்தனர். இந்தக் கதிரியக்கத் தனிமங்கள் செறிவுமிகுந்த கதிர்களான ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளிவிடுகின்றன.
10. கூற்று (i): தனிமங்களின் அணுக்கருக்கள் சிதைவடைந்து ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளியிடும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படுகிறது.
கூற்று (ii): இந்நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் அனைத்தும் ‘கதிரியக்க தனிமங்கள’எனவும் அழைக்கப்படுகின்றன.
A) இரண்டும் தவறு
B) இரண்டும சரி
C) கூற்று ii மட்டும் சரி
D) கூற்று i மட்டும் சரி
11. எவ்வித மனிதக் குறுக்கீடுளுமின்றி கதிர்வீச்சுகளை வெளியிடும் தனிமங்கள்________
A) யுரேனியம்
B) பாசிட்ரான்
C) ரேடியம்
D) A C இரண்டும்
விளக்கம்: யுரேனியம் மற்றும் ரேடியம் போன்ற சில தனிமங்கள் கதிரியக்கத்திற்கு உட்பட்டு எவ்வித மனிதக் குறுக்கீடுகளுமின்றி கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. சில தனிமங்கள் புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சகளை வெளியிடுகின்றன. இதனை இயற்கைக் கதிரியக்கம் என்று அழைக்கிறோம்.
12. கூற்று (i): அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. எ.கா. யுரேனியம், ரேடியம்.
கூற்று (ii): அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
A) கூற்று i சரி ii தவறு
B) கூற்று i தவறு ii சரி
C) கூற்று i, ii இரண்டும் சரி
D) கூற்று i, ii இரண்டும் தவறு
விளக்கம்: அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. எ.கா. யுரேனியம், ரேடியம். அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
13. பொருத்துக:
A) நியுட்ரான் கண்டுபிடிப்பு – 1. 1896
B) கதிரியக்கம் கண்டுபிடிப்பு – 2. அணு எண் 43
C) டெக்னிட்டியம் – 3. 1932
D) புரோமித்தியம் – 4. அணு எண் 61
A) 3 1 2 4
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 2 1 3 4
விளக்கம்:
A) நியுட்ரான் கண்டுபிடிப்பு – 1. 1932
B) கதிரியக்கம் கண்டுபிடிப்பு – 2. 1896
C) டெக்னிட்டியம் – 3. அணு எண் 43
D) புரோமித்தியம் – 4. அணு எண் 61
14. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கப் பொருள்கள்________
A) 19
B) 29
C) 39
D) 28
விளக்கம்: இதுவரையில் 29 கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன.
15. இலேசான தனிமங்களை செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறை________
A) இயற்கை கதிரியக்கம்
B) செயற்கை கதிரியக்கம்
C) தூண்டப்பட்ட கதிரியக்கம்
D) B, C இரண்டும்
விளக்கம்: செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் சில இலேசான தனிமங்களை கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறைக்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர். இதனை மனிதர்கள் மூலம் உருவாக்கும் கதிரியக்கம் எனவும் கூறலாம்.
16. செயற்கை கதிரியக்கம் அல்லது தூண்டப்பட்ட கதிரியக்கத்தை கண்டறிந்தவர்கள்__________
A) மேரி கியூரி
B) ஐரின் கியூரி
C) F. ஜோலியட்
D) B, C இரண்டும்
விளக்கம்: 1934 இல் இம்மாதிரியான கதிரியக்கத்தினை ஐரின் கியூரி மற்றும் F.ஜோலியட் ஆகியோர் கண்டறிந்தனர்.
17. கீழ்க்கண்டவற்றுள் செயற்கை கதிரியக்கம் பற்றிய கூற்றுக்களுள் தவறானதைக் கண்டறி.
A) போரான், அலுமினியம் போன்ற சில இலேசான தனிமங்களின் உட்கருக்களை பீட்டாத்துகளைக் கொண்டு மோதும்போது அவை தூண்டப்பட்ட செயற்கைக் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இக்கதிரியக்கத்தில் கட்புலனாகும் கதிர்வீச்சுகளும், அடிப்படைத்துகள்களும் வெளியாகின்றன.
B) கதிரியக்கச் சிதைவின் போது, கதிரியக்கச் சிதைவிற்கு உட்படும் உட்கரு ‘தாய் உட்கரு’ என்றும் சிதைவிற்கு பிறகு உருவாகும் உட்கரு ‘சேய் உட்கரு’ என்றும் அழைக்கப்படுகிறது.
C) செயற்கைக் கதிரியக்கத்தைத் தூண்டப் பயன்படும் துகள் ‘எறிதுகள்’ அல்லது எறிபொருள் என்றும் சிதைவிற்குப் பிறகு உருவாகும் துகள் ‘விடுதுகள்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
D) எறிதுகள், நிலையற்ற தாய் உட்கருவினில் மோதும்போது தன்னிச்சையாக விடுதுகளை வெளியேற்றி சேய் உட்கருவாக மாறுகிறது.
விளக்கம்: போரான், அலுமினியம் போன்ற சில இலேசான தனிமங்களின் உட்கருக்களை ஆல்பாத்துகளைக் கொண்டு மோதும்போது அவை தூண்டப்பட்ட செயற்கைக் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இக்கதிரியக்கத்தில் கட்புலனாகாத கதிர்வீச்சுகளும், அடிப்படைத்துகள்களும் வெளியாகின்றன.
18. இயற்கை கதிரியக்கம் பற்றிய கருத்துக்களுள் தவறானதைக் கண்டறி.
A) இது அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு நிகழ்வாகும்.
B) ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்கள் உமிழப்படுகின்றன.
C) இவை பொதுவாக 83 ஐ விட குறைந்த அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
D) இதனைக் கட்டுப்படுத்த முடியாது.
விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
19. செயற்கை அல்லது தூண்டப்பட்ட கதிரியக்கம் பற்றிய கருத்துக்களுள் தவறானதைக் கண்டறி.
A) இது அணுக்கருவின் தூண்டப்பட்ட சிதைவு நிகழ்வாகும்.
B) பெரும்பாலும் அடிப்படை துகள்களான நியூட்ரான், பாசிட்ரான் போன்ற துகள்கள் உமிழப்படுகின்றன.
C) இவை பொதுவாக 83 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
D) இதனை கட்டுபடுத்த முடியும்.
விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட குறைவாக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
20. ஒரு கதிரியக்கப்பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால் அது________எனப்படும்
A) ஒரு ரூதர்போர்டு
B) ஒரு பெக்கோரல்
C) ஒரு ராண்ட்ஜன்
D) ஒரு கியூரி
விளக்கம்: இது கதிரியக்கத்தின் தொன்மையான அலகாகும். ஒரு கதிரியக்கப்பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால், அது ஒரு கியூரி எனப்படும். இது தோராயமாக 1 கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமாகும்.
1 கியூரி = ஒரு வினாடி நேரத்தில் 3.7 × 1010 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு
21. ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது______________
A) ஒரு ரூதர்போர்டு
B) ஒரு பெக்கோரல்
C) ஒரு ராண்ட்ஜன்
D) ஒரு கியூரி
விளக்கம்: இது கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகாகும். கதிரியக்கப் பொருளானது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது ஒரு ரூதர்போர்டு என வரையறுக்கப்படுகிறது.
ஒரு ரூதர்போர்டு (Rd) = ஒரு வினாடி நேரத்தில் சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு.
22. ஒரு ராண்ட்ஜன் என்பது___________
A) 2.58 × 104 கூலும்
B) 2.58 × 10-4 கூலும்
C) 4.58 × 104 கூலும்
D) 4.58 × 10-4 கூலும்
விளக்கம்: ராண்ட்ஜன் என்பது காமா(γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு. ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான, வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 × 10-4 கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.
23. கதிரியக்கத்தின் பன்னாட்டு அலகு____________
A) கியூரி
B) ராண்ட்ஜன்
C) பெக்கோரல்
D) ரூதர்போர்டு
விளக்கம்: கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு பெக்கொரல் ஆகும். இது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு பெக்கொரல் என வரையறுக்கப்படுகிறது.
24. கதிரியக்கத்திற்கு உட்படும் கதிரியக்க உட்கரு உமிழும் செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்கள்.
A) ஆல்பா
B) பீட்டா
C) காமா
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: கதிரியக்கத்திற்கு உட்படும் கதிரியக்க உட்கரு உமிழும் செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்களை உமிழ்கின்றன. வழக்கமாக அவை மூன்று கதிரியக்கத் தூண்களாகத் தரப்பட்டுள்ளன. அவை ஆல்பா(α), பீட்டா(β) மற்றும் காமா(γ) கதிர்களாகும்.
25. பிட்ச் பிளண்ட் என்ற கதிர்யக்ககக் கனிமத்தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்தவர்.
A) பெக்கொரல்
B) ரூதர்போர்டு
C) மார்ட்டின் கிலாபிராத்
D) ஜான் டால்டன்
விளக்கம்: யுரேனஸ் கோள் பெயரிட்ட பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுலிருந்து யுரேனியத்தை ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார்.
26. பொருத்துக:
A) ஆல்பா – 1. ஜெர்மன்
B) பீட்டா – 2. நேர்மின் சுமை
C) காமா – 3. எதிர்மின் சுமை
D) மார்ட்டின் கிலாபிராத் – 4. மின்சுமையற்றவை
A) 3 1 2 4
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 2 3 4 1
விளக்கம்:
A) ஆல்பா – 1. நேர்மின் சுமை(+2e)
B) பீட்டா – 2. எதிர்மின் சுமை(-e)
C) காமா – 3. மின்சுமையற்றவை(சுழி)
D) மார்ட்டின் கிலாபிராத் – 4. ஜெர்மன்
27. கீழ்க்கண்டவற்றுள் ஆல்பாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் கொண்ட ஹீலியம் அணுவின் உட்கரு(2He4) ஆகும்.
B) ஆல்பாத்துகளின் அயனியாக்கும் திறன் பீட்டாத் துகள்களை விட 100 மடங்கும், காமாத் துகள்களைவிட 10,000 மடங்கும் அதிகம்
C) மிகவும் குறைந்த ஊடுருவும் திறன் உடையது. (அதாவது தடிமனான தாளைக் கொண்டு இவற்றைத் தடுத்து விட முடியும்.
D) மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையவதில்லை.
விளக்கம்: ஆல்பாக் கதிர்கள் மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையும் (ஃப்ளமிங் இடக்கை விதிப்படி)
28. கீழ்க்கண்டவற்றுள் பீட்டாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்துவதைத் தேர்ந்தெடு.
A) இவை அனைத்து அணுக்களிலும் காணப்படும் அடிப்படைத் துகள்களாலான எலக்ட்ரான்கள் ஆகும்(-1e0).
B) இதன் அயனியாக்கும் திறன் மிகவும் அதிகம்.
C) ஆல்பாக் கதிர்களை விட அதிக ஊடுருவும் திறன் கொண்டவை (மெல்லிய தகட்டின் வழியே இவை ஊடுருவிச் செல்லும்).
D) மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையும். ஆனால் ஆல்பாத் துகள்கள் விலகலடையும் திசைக்கு எதிரான திசையில் விலகலடையும் (ஃப்ளமிங் இடக்கை விதிப்படி)
A) அனைத்தும் சரி
B) 1, 2 மட்டும் சரி
C) 1, 3, 4 மட்டும் சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: பீட்டா துகள்களின் அயனியாக்கும் திறன் மிகவும் குறைவு.
29. கீழ்க்கண்டவற்றுள் காமாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) இவை ஃபோட்டான்கள் எனப்படும் மின்காந்த அலைகளாகும்.
B) இவை மின்சுமையற்றவை (0) நடுநிலைத்துகள் காமாத்துகளின் மின்சுமை = சுழி
C) பீட்டாக் கதிர்களை விட மிக அதிக ஊடுருவும் திறன் கொண்டவை (தடிமனான உலோகங்களின் வழியே ஊடுருவிச் செல்லும்)
D) மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகலடையும்.
விளக்கம்: காமாக் கதிர்கள் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகலடையாது.
30. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி:
1) ஆல்பா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 1/10 முதல் 1/20 மடங்கு வரையிலான திசைவேகத்தில் செல்லும்.
2) பீட்டாக் கதிர் – ஒளியின் திசைவேகத்தில் செல்லும்.
3) காமா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 9/10 மடங்கு திசைவேகத்தில் செல்லும்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 2, 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: பீட்டாக் கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 9/10 மடங்கு திசைவேகத்தில் செல்லும்.
காமா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் செல்லும்.
31. ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் விளக்கியவர்____________
A) ஹென்றி பெக்கொரல்
B) சாடி மற்றும் ஃபஜன்
C) ரூதர்போர்டு
D) மார்ட்டின் கிலாபிராத்
விளக்கம்: ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் 1913 இல் சாடி மற்றும் ஃபஜன் விளக்கினர்.
32. கீழ்க்கண்ட கதிரியக்க இடம்பெயர்வு விதி பற்றிய கருத்துக்களுள் சரியானதைக் கண்டறி:
1) கதிரியக்கத் தனிமம் ஒன்று ஆல்பா துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் இரண்டும், அணு எண்ணில் நான்கும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
2) கதிரியக்கத் தனிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.
A) 1 மட்டும் சரி
B) 1 சரி, 2 தவறு
C) 1 தவறு, 2 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: கதிரியக்கத் தனிமம் ஒன்று ஆல்பா துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
கதிரியக்கத் தினிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.
33. கீழ்க்கண்ட கூற்றினை கவனி: (தவறானதைக் காண்க)
1) அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மையுள்ள தாய் உட்கருவானது, ஆல்பா துகளை உமிழ்ந்து நிலையற்ற சேய் உட்கருவாக மாறுவது ஆல்பா சிதைவு என்றழைக்கபடுகிறது.
2) உதாரணமாக யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம் 234 (Th234) ஆக மாறுகிறது.
A) 12 இரண்டும் சரி
B) 12 இரண்டும் தவறு
C) 1 மட்டும் தவறு
D) 2 மட்டும் தவறு
விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது, ஆல்பா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆல்பா சிதைவு என்றழைக்கபடுகிறது.
உதாரணமாக யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம் 234 (Th234) ஆக மாறுகிறது.
92U238 → 90Th234 + 2He4 (α- சிதைவு)
34. கீழ்க்கண்ட கூற்றினை கவனி: (சரியானதைக் காண்க)
1) அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது பீட்டா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது பீட்டா சிதைவு என்றழைக்கப்படுகிறது.
2) அணுக்கரு வினையில் தோன்றும் புதிய தனிமத்தின் உட்கருவானது அணு எண்ணால் அல்லாமல் நிறைஎண்ணால் அறியப்படுகிறது.
A) 12 இரண்டும் சரி
B) 1, 2 இரண்டும் தவறு
C) 1 மட்டும் சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது பீட்டா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது பீட்டா சிதைவு என்றழைக்கப்படுகிறது.
அணுக்கரு வினையில் தோன்றும் புதிய தனிமத்தின் உட்கருவானது நிறை எண்ணால் அல்லாமல் அணுஎண்ணால் அறியப்படுகிறது.
35. காமா சிதைவின் போது உட்கருவில் ஏற்படும் மாற்றம்__________
A) நிறை எண்ணில் மாற்றம்
B) ஆற்றல் மட்டம் மாற்றம்
C) அணு எண்ணில் மாற்றம்
D) மாற்றங்கள் நிகழ்வதில்லை
விளக்கம்: காமாச் சிதைவின் போது உட்கருவின் ‘ஆற்றல் மட்டம்’ மட்டுமே மாற்றம் அடைகிறது. அதன் அணுஎண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் எதுமில்லாமல் அதே அளவில் இருக்கும்.
36. யுரேனியம் உட்கருவினை, நியூட்ரான் கொண்டு தாக்கும் போது சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களும் ஆற்றலும் வெளிப்படுவதை கண்டறிந்தவர்கள்.
A) ஆட்டோஹான்
B) மார்ட்டின் கிலாபிராத்
C) க. ஸ்ட்ராஸ்மன்
D) A, C இரண்டும்
விளக்கம்: யுரேனியம் உட்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்பதனை 1939 இல் ஜெர்மன் அறிவியல் அறிஞர்கள் ஆட்டோஹான் மற்றும் F.ஸ்ட்ராஸ்மன் கண்டறிந்தனர்.
37. கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வு_____________
A) அணுக்கரு இணைவு
B) அணுக்கரு பிளவு
C) அணுப் பிளவு
D) அணு இணைவு
விளக்கம்: கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என்றழைக்கப்படுகிறது.
எ.கா. யுரேனியம் 235 (U235) இன் அணுக்கரு பிளவு
92U235 + 0N1 → 56Ba141 + 36Kr92 + 30n1 + Q (ஆற்றல்)
38. அணுக்கருப் பிளவின்போது வெளியாகும் சராசரி ஆற்றல்_______
A) 3.2 × 1011 J
B) 3.2 × 1014 J
C) 3.2 × 10-11 J
D) 3.2 × 10-14 J
விளக்கம்: ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × 10-11 J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது.
39. கீழ்க்கண்டவற்றுள் பிளவுக்குட்படும் பொருள்களை கண்டறி:
A) யுரேனியம் 235
B) புளுட்டோனியம் 239
C) புளுட்டோனியம் 241
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: கதிரியக்கப் பொருள் ஒன்று நியூட்ரான்களை உட்கவர்ந்து நிலைநிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்துமானால் அப்பொருள் பிளவுக்குட்படும் பொருள் என்ப்படும். எ.கா. யுரேனியம் 235 (U235), புளுட்டோனியம் 239 (U239) மற்றும் புளுட்டோனியம் 241 ( Pu239 மற்றும் Pu241)
40. இயற்கையில் கிடைக்கப்பெறும் யுரேனியம் 238 ன் அளவு__________
A) 0.72 சதவீதம்
B) 99.28 சதவீதம்
C) 1.72 சதவீதம்
D) 98.28 சதவீதம்
விளக்கம்: யுரேனியத்தின் எல்லா ஐசோடோப்புகளும் நியூட்ரான்களை உட்கவர்ந்து பிளவுக்குட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, இயற்கையில், 99.28% யுரேனியம் 238 தனிமமும். மீதமுள்ள 0.72% யுரேனியம் 235 தனிமமும் கிடைக்கிறது. இவற்றில் யுரேனியம் 238 பிளவுக்குட்படுவதில்லை. அதே வேலையில் யுரேனியம் 235 பிளவுக்குட்படும் பொருளாகும்.
41. பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை கீழ்க்கண்ட எதனை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும்__________
A) நியூட்ரான்
B) எலக்ட்ரான்
C) புரோட்டான்
D) யுரேனியம்
விளக்கம்: பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும், இதனை வளமிக்க பொருள்கள் (வளமைப் பொருள்கள்) என்றழைக்கப்படுகின்றன.
எ.கா. யுரேனியம் 238, தோரியம் 232, புளுட்டோனியம் 240.
42. கீழ்க்கண்ட தொடர்வினைப் பற்றிய கருத்துக்களுள் தவறானதைக் கண்டறி:
A) யுரேனியம் (U-235) அணுக்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது பிளவுக்குட்பட்டு மூன்று நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
B) வெளியேற்றப்பட்ட இந்த மூன்று நியூட்ரான்களும் அடுத்து வரும் மூன்று யுரேனியம் உட்கரு பிளவிற்குக் காரணமாக அமைந்து ஒன்பது நியூட்ரான்களைத் தருகின்றன.
C) இந்த ஒன்பது நியூட்ரான்களும் மீண்டும் அடுத்த 27 நியூட்ரான்கள் உருவாகக் காரணமாகின்றன. இதேபோல் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே இது தொடர்வினை என்றழைக்கப்படுகிறது.
D) தொடர்வினையில் தன்பரவுதல் நிகழ்வின் மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை கூட்டுத் தொடர்வரிசையில் மிகவேகமாக பெருக்கமடைகிறது.
விளக்கம்: தொடர்வினையில் தன்பரவுதல் நிகழ்வின் மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்குத் தொடர்வரிசையில் மிகவேகமாக பெருக்கமடைகிறது.
43. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க பயன்படுத்தப்படும் தொடர்வினை________
A) கட்டுப்பாடான தொடர்வினை
B) கட்டுபாடற்ற தொடர்வினை
C) மூடிய வினை
D) கட்டுக்கடங்கா வினை
விளக்கம்: கட்டுப்பாடான தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. ஆகையால் இவ்வினையானது கட்டுப்பாடான வினையாக தொடர்கிறது. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது.
44. அணு குண்டு வெடித்தல் கீழ்க்கண்ட எந்த வினையின்படி நிகழ்த்தப்படுகிறது.
A) கட்டுப்பாடான தொடர்வினை
B) கட்டுபாடற்ற தொடர்வினை
C) மூடிய வினை
D) கட்டுக்கடங்கா வினை
விளக்கம்: இவ்வகை தொடர்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமான பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன் முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது. இவ்வகை தொடர்வினையைப் பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது.
45. மாறுநிலை நிறை பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி:
A) அணுக்கரு பிளவின்போது 2 அல்லது 3 நியூட்ரான்கள் வெளியாகின்றன. இவ்வாறு பிளவு அமைப்பிலிருந்து வெளியேறும் நியூட்ரான் ‘நியூட்ரான் கசிவு’ எனப்படுகிறது.
B) தொடர்வினை நிகழ்வதற்கு அணுக்கரு பிளவு மூலம் உருவாகும் நியூட்ரான்களின் உற்பத்தி, இழப்பை விட அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு நிகழ, பிளவுக்கு உட்படும் பொருளின் நிறையானது, ஒரு குறிப்பிட்ட நிறை மதிப்பிற்குச் சமமாக இருக்க வேண்டும். இந்நிறை மாறுநிலை நிறை எனப்படுகிறது.
C) தொடர்வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் அதிக அளவு நிறையை ‘மாறுநிலை நிறை’ என அழைக்கலாம்.
D) மாறுநிலை நிறையை விடப் பிளவுப் பொருள்களின் நிறை குறைவாக இருந்தால் அதனை குறைமாறுநிலை நிறை எனலாம். மாறுநிலை நிறையை விடப் பிளவுப் பொருள்களின் நிறை அதிகமாக இருந்தால் அதனை மிக மாறுநிலை நிறை அல்லது மீமாறுநிலை நிறை என அழைக்கலாம்.
விளக்கம்: தொடர்வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை ‘மாறுநிலை நிறை’ என அழைக்கலாம்.
46. கட்டுபாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், கீழ்க்கண்ட எந்த முறையில் பெருகுகின்றன.
A) கூட்டுத்தொடர்
B) பெருக்குத்தொடர்
C) முடிவிலித்தொடர்
D) மாறாமல் இருக்கும்
விளக்கம்: கட்டுப்பாடற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது. கட்டுப்பாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், பெருக்குத்தொடர் முறையில் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.
47. அணுகுண்டு வெடிப்பு பற்றிய கூற்றுகளுள் தவறானதைத் தேர்ந்தெடு.
A) அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின் போது மிக அதிக அளவு ஆற்றலுடன் வெப்பமும் ஒளியும், கதிரியக்கமும் வெளியாகின்றன.
B) மேலும் மிகக்குறுகிய வினாடிகளுக்குள் கட்டுக்கடங்காத அழுத்தமும், வெப்பமும் மிக அதிக அளவில் உயர்கிறது.
C) அனைத்து வித உயிரிகளுக்கும் தீங்கிழைக்கக்கூடிய காமாக் கதிர்களைப் போன்ற கதிர்வீச்சுகளும் இத்துடன் வெளியாகின்றன.
D) 1955 இல் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் இவ்வகையான அணுகுண்டுகள் வீசப்பட்டன.
48. அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு ____________
A) எலக்ட்ரான் வோல்ட்
B) எலக்ட்ரான் திறன்
C) எலக்ட்ரான் ஓட்டம்
D) எலக்ட்ரான் இறக்கம்
விளக்கம்: அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப் பயன்படுத்தி முடுக்கவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும்.
49. பொருத்துக:
A) 1 eV – 1. (2.58 ×10-4 கூலும்)
B) 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் – 2. (1.602 × 10-19 ஜீல்)
C) 1 கியூரி – 3. (106 eV)
D) 1 ராண்ட்ஜன் – 4. (3.7 × 1010)
A) 3 1 2 4
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 2 3 4 1
விளக்கம்:
A) 1 eV – 1. (1.602 × 10-19 ஜீல்)
B) 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் – 2. (106 eV)
C) 1 கியூரி – 3. (3.7 × 1010)
D) 1 ராண்ட்ஜன் – 4. (2.58 ×10-4 கூலும்)
50. இரு இலேசான உட்கருக்கள் இணைந்து கனமான உட்கரு உருவாகும் போது ஆற்றல் வெளியாகும் நிகழ்வு___________
A) அணுக்கரு இணைவு
B) அணுக்கரு பிளவு
C) ஆற்றல் மட்டம்
D) அணு இணைவு
51. ஒவ்வொரு அணுக்கரு இணைவின் போதும் வெளியாகும் சராசரி ஆற்றல்____________
A) 3.814 × 10-12 J
B) 3.814 × 1012 J
C) 4.814 × 10-12 J
D) 4.814 × 1012 J
52. அணுக்கரு வினை பற்றிய கூற்றுக்களுள் தவறானதைக் கண்டறி:
A) அணுக்கருவினையின் போது உருவாகும் சேய் உட்கருவின் நிறையானது இரண்டு தாய் உட்கருக்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாக இருக்கும்.
B) தாய் உட்கருவின் நிறைக்கும், சேய் உட்கருவின் நிறைக்கும் இடையே உள்ள நிறைவேறுபாடு ‘நிறைவழு’ என அழைக்கப்படுகிறது.
C) இந்த நிறை வேறுபாடானது ஆற்றலாக மாற்றமடைகிறது.
D) இந்தக்கருத்தினை 1910 இல், நிறை ஆற்றல் சமன்பாடு மூலமாக ஐன்ஸ்டின் முன்மொழிந்தார். அதாவது நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு வலியுறுத்துகிறது.
விளக்கம்: இந்தக்கருத்தினை 1905 இல், நிறை ஆற்றல் சமன்பாடு மூலமாக ஐன்ஸ்டின் முன்மொழிந்தார். அதாவது நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு வலியுறுத்துகிறது.
53. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
A) 3 × 108 மீவி-1
B) 3 × 108 மீவி1
C) 6 × 108 மீவி-1
D) 6 × 108 மீவி1
54. கூற்று (i): இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும்.
கூற்று (ii): அதனை தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு யுரோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும்.
A) கூற்று i, ii இரண்டும் சரி
B) கூற்று i, ii இரண்டும் தவறு
C) கூற்று i சரி, ii தவறு
D) கூற்று i தவறு, ii சரி
விளக்கம்: இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது யுரோனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும்.
அதனை தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும்.
55. புமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவு உள்ள வாயு________
A) நைட்ரஜன்
B) ஆக்ஸிஜன்
C) ஹைட்ரஜன்
D) கார்பன் டை ஆக்ஸைடு
56. அணுக்கரு இணைவு பற்றிய கருத்தக்களுள் பொருந்தாதது.
1) 107 முதல் 109K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும், குறைந்த அழுத்தத்திலும் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும்
2) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுவின் உட்கருக்கள் ஒன்றோடு ஒன்று அருகருகே சென்று அணுக்கரு இணைவு நடைபெறும்
3) அதனால் இதனை வெப்ப அணுக்கரு இணைவு என்றழைக்கின்றோம்;.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: 107 முதல் 109K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும், உயர் அழுத்தத்திலும் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும்.
57. அணுக்கரு இணைவு பற்றிய கருத்தக்களுள் பொருந்துவது.
1) இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும்.
2) இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் எதிர்மின்சுமைக் கொண்டிருப்பதால் நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்பொது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும்.
3) உயர் வெப்பநிலையின் (அதாவது 107 முதல் 109K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது.
A) அனைத்தும் சரி
B) அனைத்தும் தவறு
C) 1, 3 மட்டும் சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் நேர்மின்சுமைக் கொண்டிருப்பதால் நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்பொது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும். உயர் வெப்பநிலையின் (அதாவது 107 முதல் 109K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது.
58. சூரியனைப் போன்று விண்மீண்களும் அதிக அளவு ஆற்றலை கீழ்க்கண்ட எந்த வடிவில் உமிழ்கின்றன.
A) ஒலி
B) ஒளி
C) வெப்பம்
D) B மற்றும் C இரண்டும்
59. சரியற்ற கூற்றினை தேர்ந்தெடு.
A) அனைத்து விண்மீண்களும் அதிக அளவில் நைட்ரஜனை தன்னகத்தேக் கொண்டுள்ளன.
B) விண்மீண்களின் புறப்பரப்பு வெப்பநிலை மிக அதிகம். எனவே இந்த வெப்பநிலையானது ஹைட்ரஜனின் அணுக்கரு இணைவிற்கு போதுமானதாக இருக்கும்.
C) சூரியன் மற்றும் விண்மீண்களின் உள் அடுக்கில் அணுக்கரு இணைவு நடைபெறுவதால் அதிக அளவு ஆற்றல் உருவாகிறது. இது விண்மீன் ஆற்றல் எனப்படும்
D) இதனை அணுக்கரு இணைவு அல்லது வெப்ப அணுக்கரு வினை எனவும் அழைக்கலாம்.
60. ஹைட்ரஜன் குண்டு கீழ்க்கண்ட எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
A) அணுக்கரு பிளவு
B) அணுக்கரு இணைவு
C) ஒளிமின் விளைவு
D) உருகுதல் வினை
விளக்கம்: அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது. இதற்குத் தேவையான உயர் வெப்பநிலையையும், அழுத்தத்தையும் உருவாக்க, அணு குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்படுகிறது. இதன்பிறகு, ஹைட்ரஜனில் அணுக்கரு இணைவானது நடைபெற்று, கட்டுக்கடங்காத அளவு அதிக ஆற்றல் வெளியாகிறது.
61. அணுக்கரு பிளவு பற்றிய கூற்றுக்களுள் சரியற்றதைக் கண்டறி:
1) கனமான அணுக்கருக்கள் பிளவுற்று இலேசான அணுக்கருக்களாக மாறும் நிகழ்வு ‘அணுக்கரு பிளவு’ என்றழைக்கப்படுகிறது.
2) அறை வெப்பநிலையிலும் இந்நிகழ்வு நிகழக்கூடும்.
3) எந்தவொரு கதிர்களும் இந்நிலையில் ஏற்படுவதில்லை.
4) அணுக்கரு பிளவு காமாக் கதிர்களை வெளியிடுவதால் இவை மனித ஜீன்களைத் தூண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்கி பரம்பரை நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
விளக்கம்: இந்நிலையில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற கதிர்கள் வெளியாகின்றன.
62. அணுக்கரு பிளவு பற்றிய கூற்றுகளுள் சரியானதைக் கண்டறி:
1) இரண்டு இலேசான அணுகருக்கள் இணைந்து கனமான அணுக்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கரு இணைவு எனப்படும்.
2) அணுக்கரு இணைவிற்கு குறைந்த வெப்பநிலை மற்றும் அழுத்தம் போதுமானது.
3) ஆல்பாக் கதிர்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்டிரினோக்கள் வெளியாகின்றன.
4) வெப்பமும் ஒளியும், உமிழப்படுகின்றன.
A) அனைத்தும் சரி
B) அனைத்தும் தவறு
C) 2 மட்டும் சரி
D) 1, 3, 4 மட்டும் சரி
விளக்கம்: அணுக்கரு இணைவிற்கு அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவை.
63. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி: (பொருந்தாததைத் தேர்ந்தெடு)
A) ஒவ்வொரு வினாடியிலும் 620 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு சூரியனில் நடைபெறுகிறது.
B) ஒரு வினாடியில் 3.8 × 1026 ஜீல் ஆற்றல் கதிரியக்கமாக வெளியாகிறது.
C) கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி வரும்போது படிப்படியாகக் அதிகரிக்கிறது.
D) பூமியை அடையும்போது ஒரு வினாடியில், ஓரலகுப் பரப்பில் இதன் மதிப்பு 1.4 கிலோ ஜீல் ஆகும்.
விளக்கம்: கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி வரும்போது படிப்படியாகக் குறைகிறது.
64. பயிர் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கதிரியக்க ஐசோடோப்_________
A) பாஸ்பரஸ் – 32
B) இரும்பு – 59
C) சோடியம் – 24
D) பாஸ்பரஸ் – 23
விளக்கம்: கதிரியக்கம் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப்பயன்படுகிறது. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள கெட்டுப்போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்கவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
65. பொருத்துக:
கதிரியக்க ஐசோடோப் மருத்துவ பயன்கள்
A) சோடியம் – 24 – 1. தோல் நோய் சிகிச்சை
B) அயோடின் – 131 – 2. இரத்த சோகை அடையாளம் காண
C) இரும்பு – 59 – 3. முன்கழுத்துகழலை குணப்படுத்த
D) பாஸ்பரஸ் – 32 – 4. இதயத்தை சீராக செயல்பட வைக்க
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 4 3 1 2
விளக்கம்:
A) சோடியம் – 24 – 1. இதயத்தை சீராக செயல்பட வைக்க
B) அயோடின் – 131 – 2. முன்கழுத்துகழலை குணப்படுத்த
C) இரும்பு – 59 – 3. இரத்த சோகை அடையாளம் காண
D) பாஸ்பரஸ் – 32 – 4. தோல் நோய் சிகிச்சை
66. கீழ்க்கண்டவற்றுள் தோல் புற்றுநோயைக் குணபடுத்தப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப் எவை.
A) கோபால்ட் – 60
B) இரும்பு – 59
C) தங்கம் – 198
D) A மற்றும் C இரண்டும்
விளக்கம்: கோபால்ட் – 60 (Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம் – 198 (Au198) தோல் புற்றுநோயைக் குணப்படுத்தப்பயன்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்கு பயன்படும் சாதனங்களில் காணப்படும் நுண்கிருமிகளைக் கதிரியக்கத்தின் மூலம் நீக்கி தூய்மை செய்யப்படுகிறது.
67. பொருத்துக:
கதிரியக்க ஐசோடோப் பயன்கள்
A) தங்கம் – 198 – 1. வெடி பொருள்கள் கண்டுபிடிக்க
B) கலிபோர்னியம் – 252 – 2. வயது கணிப்பு
C) அமர்சியம் – 241 – 3. தோல்புற்று நோயைக் குணப்படுத்த
D) கார்பன் – 14 – 4. புகை உணரும் கண்டுணர்வி
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 1 4 2
விளக்கம்:
கதிரியக்க ஐசோடோப் பயன்கள்
A) தங்கம் – 198 – 1. தோல்புற்று நோயைக் குணப்படுத்த
B) கலிபோர்னியம் – 252 – 2. வெடி பொருள்கள் கண்டுபிடிக்க
C) அமர்சியம் – 241 – 3. புகை உணரும் கண்டுணர்வி
D) கார்பன் – 14 – 4. வயது கணிப்பு
68. நமது பூமியின் வயது தோராயமாக__________
A) 4.54 × 10-9 ஆண்டுகள்
B) 4.54 × 109 ஆண்டுகள்
C) 45 கோடியே 40 இலட்சம் ஆண்டுகள்
D) B, C இரண்டும்
69. கூற்று (i): மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி அலை பேசி மற்றும் மருத்துவ துறையின் பயன்படும் X கதிர்கள் ஆகயவற்றிலிருந்து கதிரியக்கம் வெளியாகின்றன.
கூறறு (ii): இவை மிகக் குறைந்த செறிவை பெற்றுள்ளதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
A) கூற்று i, ii இரண்டும் சரி
B) கூற்று i, ii இரண்டும் தவறு
C) கூற்று i சரி ii தவறு
D) கூற்று i, தவறு ii சரி
விளக்கம்: மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி அலை பேசி மற்றும் மருத்துவ துறையின் பயன்படும் X கதிர்கள் ஆகயவற்றிலிருந்து கதிரியக்கம் வெளியாகின்றன. இவை மிகக் குறைந்த செறிவை பெற்றுள்ளதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.
70. மனித உடலின்மீது கதிர்வீச்சுப் படும்போது பாதிப்பை ஏற்படுத்தாத கதிர்வீச்சின் பெரும அளவை பரிந்துரை செய்த அமைப்பு___________
A) உலக சுகாதார நிறுவனம்
B) மனித பண்பாட்டு கழகம்
C) பன்னாட்டு அலகியல் முறை அமைப்பு
D) பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம்
71. பொருத்துக: (கதிரியக்க அளவு)
A) 20 மில்லி சிவர்ட் – 1. ரத்தப் புற்றுநோய்
B) 100 மில்லி ராண்ட்ஜன் – 2. இறப்பு
C) 100 R – 3. ஓர் ஆண்டிற்கான பாதுகாப்பான அளவு
D) 600 R – 4. ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான அளவு
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 3 4 1 2
D) 3 1 4 2
விளக்கம்:
A) 20 மில்லி சிவர்ட் – 1. ஓர் ஆண்டிற்கான பாதுகாப்பான அளவு
B) 100 மில்லி ராண்ட்ஜன்- 2. ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான அளவு
C) 100 R – 3. ரத்தப் புற்றுநோய்
D) 600 R – 4. இறப்பு
72. அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம்________
A) ஸ்பிக்மோ மானோமீட்டர்
B) பாரோமீட்டர்
C) அனிமோமீட்டர்
D) டோசிமீட்டர்
விளக்கம்: அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் டோசிமீட்டர் ஆகும். அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியவும் மருத்துவ நிழலுறு தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. X மற்றும் காமா(γ) கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்சுவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.
73. கதிரியக்க பாதிப்பினை தடுக்கும் வழிமுறைகளுள் பொருந்தாதது எது,
A) கதிரியக்கப் பொருள்களைத் தடிமன் குறைந்த காரீயச் சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்க வேண்டும்
B) அபாயகரமான கதிரியக்கப்பகுதிகளில் பணிபுரியோர் காரீய கையுறைகளையும் காரீயத்தினாலான மேலாடையையும் கட்டாயமாக அணிய வேண்டும்.
C) கதிரியக்கப் பொருள்களைக் கையாளும் போது உணவருந்துவதை தவிர்க்க வேண்டும்.
D) கதிரியக்கப் பொருள்களை இடுக்கிகள் அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை பயன்படுத்தி மட்டுமே கையாளவேண்டும். நேரடியாக தொட்டுப் பயன்படுத்திக் கூடாது.
விளக்கம்: கதிரியக்கப் பொருள்களைத் தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்க வேண்டும்
74. முதல் அணுக்கரு உலை எங்கு கட்டப்பட்டது.
A) அமெரிக்கா
B) இந்தியா
C) பிரான்ஸ்
D) சீனா
விளக்கம்: அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுபடுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை நடைபெற்று மின் உற்பத்திச் செய்யும் இடமாகும். 1942 இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது.
75. அணுக்கரு உலைகளின் பகுதிக்கூறுகள் பற்றிய தவறான கருத்தினைக் கண்டறி:
A) எரிபொருள் – பிளவுக்குட்படாத பொருளே எரிபொருளாகும்.
B) தணிப்பான் – உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களைக் குறைந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாகக் குறைப்பதற்குத் தணிப்பான் பயன்படுகிறது.
C) கட்டுப்படுத்தும் கழி – தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுவது கட்டுப்படுத்தும் கழியாகும்.
D) குளிர்விப்பான் – அணுக்கரு உலையினுள் உருவாகும் வெப்பத்தை நீக்குவதற்காகக் குளிர்விப்பான் பயன்படுகிறது. இதில் உருவாகும் நீராவியைக் கொண்டு விசையாழியை இயக்கி மின உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
விளக்கம்: எரிபொருள் – பிளவுக்குட்படும் பொருளே எரிபொருளாகும்.
76. பொருத்துக: (அணுக்கரு உலையில் பகுதிப்பொருள்கள்)
A) எரிபொருள் – 1. நீர், காற்று மற்றும் ஹீலியம்
B) தணிப்பான் – 2. போரான் மற்றும் காட்மியம்
C) கட்டுப்படுத்தும் கழி – 3. கிராஃபைட் மற்றும் கனநீர்
D) குளிர்விப்பான் – 4. யுரேனியம்
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 1 4 2
விளக்கம்:
A) எரிபொருள் – 1. யுரேனியம்
B) தணிப்பான் – 2. கிராஃபைட் மற்றும் கனநீர்
C) கட்டுப்படுத்தும் கழி – 3. போரான் மற்றும் காட்மியம்
D) குளிர்விப்பான் – 4. நீர், காற்று மற்றும் ஹீலியம்
77. கீழ்க்கண்டவற்றுள் அணுக்கரு உலையின் பயன்களுடன் தொடர்பில்லாததைக் கண்டறி.
A) அணுக்கரு உலையானது அதிக அளவில் மின் உற்பத்திக்காகப் பயன்படுகிறது.
B) பல விதமான பயன்பாடுகளை உடைய கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.
C) அணுக்கரு இயற்பியல் துறையில் ஆய்வினை மேற்கொள்வதற்காகச் சில அணுக்கரு உலைகள் பயன்படுகின்றன.
D) பிளவுக்கு உட்படும் பொருட்களைப் பிளவுக்கு உட்படாத பொருள்களாக மாற்றுவதற்கு உற்பத்தி உலைகள் பயன்படுகின்றன.
விளக்கம்: பிளவுக்கு உட்படாத பொருட்களைப் பிளவுக்கு உட்படும் பொருள்களாக மாற்றுவதற்கு உற்பத்தி உலைகள் பயன்படுகின்றன.
78. இந்திய அணுமின் நிலையம் பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.
A) 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம் (AEC) மும்பையில் அமைக்கப்பட்டது.
B) இதன் தலைவராக டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா முதன்முதலில் பொறுப்பு வகித்துள்ளார்.
C) அணுசக்தி துறையில் நடைபெறும் அனைத்து ஆய்வுகளும் இந்த நிறுவனத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
D) இது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என அழைக்கப்படுகிறது,
விளக்கம்: 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம் () மும்பையில் அமைக்கப்பட்டது.
79. இந்தியாவின் முதன் அணுமின் நிலையம்
A) கல்பாக்கம்
B) நெய்வேலி
C) தாராப்பூர்
D) கூடங்குளம்
விளக்கம்: இந்தியமின் உற்பத்தியில், அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது. தாராப்பூர் அணுமின் நிலையம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையமாகும். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு அணுமின்நிலையமும் தமிழ்நாட்டில் இரண்டு அணுமின் நிலையங்கள் என ஏழு அணுமின் நிலையங்கள் உள்ளன.
80. தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்__________
A) கல்பாக்கம்
B) சென்னை
C) கூடங்குளம்
D) A, C இரண்டும்
விளக்கம்: தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரண்டு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ளன.
81. ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை______
A) அப்சரா
B) சென்னை
C) கூடங்குளம்
D) கல்பாக்கம்
82. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகள்….
A) சைரஸ்
B) துருவா
C) பூர்ணிமா
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட அணுக்கரு உலை அப்சரா ஆகும். இந்தியாவில் தற்போது 22 அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் சைரஸ், துருவா, பூர்ணிமா.
83. ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 103 GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவின் கியூரி அலகு_______
A) 50 கியூரி
B) 100 கியூரி
C) 150 கியூரி
D) 200 கியூரி
விளக்கம்: ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 103 GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவின் கியூரி அலகு_________
84. 92U235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை___________
A) 110
B) 120
C) 130
D) 140
விளக்கம்: 92U235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
85. (2 கிகி) நிறையுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியிடும் மொத்த ஆற்றல் எவ்வளவு______________
A) 1.8 × 1017 J
B) 1.8 × 10-17 J
C) 1.4 × 1017 J
D) 1.4 × 10-17 J
விளக்கம்: (2 கிகி) நிறையுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியிடும் மொத்த ஆற்றல் எவ்வளவு
10th Science Lesson 7 Questions in Tamil
7] அணுக்களும் மூலக்கூறுகளும்
1. கிரேக்கத் தத்துவவியலாளர்கள் அணுவைப் பற்றிய தங்களது கொள்கையை வெளியிட்டக் காலம்_______________
A) கி.மு 5ம் நூற்றாண்டு
B) கி.பி 5ம் நூற்றாண்டு
C) கி.மு 6ம் நூற்றாண்டு
D) கி.பி 6ம் நூற்றாண்டு
விளக்கம்: நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. கி.மு. (பொ.ஆ.மு) 5ம் நூற்றாண்டில் கிரேக்கத் தத்துவவியலாளர்கள் அணுவைப் பற்றிய தங்களது கொள்கையை வெளியிட்டனர். அவர்களது கொள்கையானது முற்றிலும் தத்துவம் சார்ந்ததாகவே அமைந்தது.
2. அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்ட அறிவியல் அறிஞர்___________
A) ஜே.ஜே. தாம்சன்
B) ஜான் டால்டன்
C) நீல்ஸ்போர்
D) ரூதர்போர்டு
விளக்கம்: ஜான் டால்டன் அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டார். டால்டனின் சில கோட்பாடுகள் ஜே.ஜே. தாம்சன், ரூதர்போர்டு, நீல்ஸ்போர், ஷிரோடிஞ்சர் போன்ற பிந்தைய அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகளால் தவறு என கண்டறியப்பட்டது. அவர்களது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் டால்டன் கோட்பாட்டின் குறைகள் நீக்கப்பட்டு ‘நவீன அணுக்கொள்கை’ என்ற கோட்பாடு முன் மொழியப்பட்டது.
3. நவீன அணுக்கொள்கைப் பற்றிய கருத்துக்களுல் தவறானதைத் தேர்ந்தெடு.
A) எலக்ட்ரான, புரோட்டான் மற்றும் நியூட்ரான் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணு என்பது பிளக்கக்கூடிய துகள் என உறுதிசெய்யப்பட்டது.
B) ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
C) வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன.
D) அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
விளக்கம்: அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
4. பொருத்துக:
A) ஐசோடோப்பு – 1. (16Ar40, 20Ca40)
B) ஐசோபார் – 2. (17Cl35, 17Cl37)
C) குளுக்கோஸ் – 3. (C6H1206)
D) சுக்ரோஸ் – 4. (C12H22O11)
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 1 2 3 4
D) 1 3 2 4
விளக்கம்:
A) ஐசோடோப்பு – 1. (17Cl35, 17Cl37)
B) ஐசோபார் – 2. (16Ar40, 20Ca40)
C) குளுக்கோஸ் – 3. (C6H1206)
D) சுக்ரோஸ் – 4. (C12H22O11)
5. நவீன அணுக்கொள்கைப் பற்றிய கருத்துக்களுல் சரியானதைத் தேர்ந்தெடு.
1) அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்றமுடியும். (செயற்கை மாற்று தனிமமாக்கல் முறை)
2) அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகப்பெரிய துகள்.
3) ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும். (E=mc2)
A) 1 மட்டும் சரியானது
B) 3 மட்டும் சரியானது
C) 1, 3 மட்டும் சரியானது
D) அனைத்தும் சரி
6. நவீன அணுக்கொள்கையானது அணுக்களின் கீழ்க்கண்ட எந்த பண்புகளுக்கு அடிப்படையாது.
A) இயற்பியல்
B) உயிரியல்
C) வேதியியல்
D) A, C இரண்டும்
7. பருப்பொருள்களின் அடிப்படைத் துகள்_____________
A) அணுக்கள்
B) மூலக்கூறுகள்
C) தனிமம்
D) சேர்மம்
விளக்கம்: எந்த ஒரு பொருள் நிறை மற்றும் பருமனைப் பெற்றுள்ளதோ, அப்பொருள் பருப்பொருள் எனப்படும். பருப்பொருள்களின் அடிப்படைத் துகள்கள் அணுக்கள் ஆகும்.
8. கீழ்க்கண்டவற்றுள் அணுக்கள் பற்றிய கருத்துக்களுல் பொருந்தாததைக் கண்டறி.
1) பருப்பொருள்களின் அடிப்படைத் துகள்கள் அணுக்கள் ஆகும்.
2) மூலக்கூறுகளே பருப்பொருள்களின் நிறைக்குக் காரணம் ஆகும்.
3) நவீன அணுக்கொள்கையின் படி அணுவானது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற உபதுகள்களைத் தன்னுள் கொண்டுள்ளது.
A) 1, 3 இரண்டும் தவறு
B) 1 மட்டும் தவறு
C) 2 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்: அணுக்களே பருப்பொருள்களின் நிறைக்குக் காரணம் ஆகும். பருப்பொருள்களின் அடிப்படைத் துகள்கள் அணுக்கள் ஆகும். நவீன அணுக்கொள்கையின் படி அணுவானது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற உபதுகள்களைத் தன்னுள் கொண்டுள்ளது.
9. எலக்ட்ரானின் நிறையை புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் நிறையுடன் ஒப்பிடும்போது__________
A) குறைவு
B) அதிகம்
C) மிக அதிகம்
D) மிக குறைவு
விளக்கம்: புரோட்டான்களும் நியூட்ரான்களும் குறிப்பிடத்தக்க நிறையைப் பெற்றுள்ளன. இவற்றுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரான்களின் நிறை மிகவும் குறைவாகும். எனவே அணுவின் நிறைக்கு புரோட்டான்களும் நியூட்ரான்களுமே காரணமாக உள்ளன.
10. அணுவின் நிறைஎண் என்பது கீழ்க்கண்ட எவற்றின் கூடுதல்.
A) எலக்ட்ரான்
B) புரோட்டான்
C) நியூட்ரான்
D) B, C இரண்டின் கூடுதல்
விளக்கம்: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதலே அந்த அணுவின் “நிறை எண்” எனப்படும்.
11. பெருமப் பொருள்களின் நிறையை அளவிடப் பயன்படும் அலகு முறை________
A) மில்லி கிராம்
B) சென்டி கிராம்
C) கிராம் மற்றும் கிலோகிராம்
D) அணு நிறை அலகு
விளக்கம்: தனித்த அணுவானது மிகவும் சிறியது எனவே அதன் நிறையைக் கணக்கிடுவது மிகவும் சிரமமானது. நாம் பெரும பொருள்களின் நிறையைக் கிராம் மற்றும் கிலோகிராமில் கணக்கிடுறோம். அதுபோல அணுவின் நிறையானது அணு நிறை அலகினால் அளக்கப்படுகிறது.
12. ஒரு புரோட்டானின் நிறை அல்லது நியூட்ரானின் நிறையானது____________
A) 1 கிராம்
B) 1 மில்லி கிராம்
C) 1 அணு நிறை அலகு
D) 1 கிலோகிராம்
விளக்கம்: கார்பன் ஐசோடோப்புகளில் 6 புரோட்டான்களையும் 6 நியூட்ரான்களையும் பெற்றுள்ள C-12 அணுவின் நிறையில் 12 இல் ஒரு பகுதியே அணு நிறை அலகு ஆகும். தற்காலத்தில் அணுநிறையைக் குறிப்பிட amu என்ற குறியீட்டிற்கு பதில் ‘u’ என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ ஒரு புரோட்டானின் நிறை அல்லது நியூட்ரானின் நிறையானது 1 amu ஆகும்.
13. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி: (ஒப்பு அணு நிறை பற்றிய கருத்துகளில் சரியானதைத் தேர்ந்தெடு)
1) முற்காலத்தில் அணுநிறையைக் கணக்கிடுவதற்கு, அதனோடு தொடர்புடைய மற்றொரு தனிமத்தின் நிறையோடு ஒப்பிட்டு கணக்கிட்டார்கள்.
2) இம்முறையின் போது ஒரே மாதிரியான நிறையைக் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு, அவற்றில் ஒரு தனிமத்தின் அணுநிறைக்கு குறிப்பிட்ட மதிப்பை அளித்து அதனை திட்ட அளவாகக் கொண்டு அதனுடன் ஒப்பிட்டு மற்ற தனிமங்களின் அணுநிறைகள் கணக்கிடப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட அணுநிறை, ஒப்பு அணுநிறை எனப்படும்.
3) முதலில் ஆக்ஸிஜன் அணுவின் நிறையை திட்ட அளவாகக் கொண்டு மற்ற அணுக்களின் நிறைகள் கணக்கிடப்பட்டன.
4) பின்னர் ஆக்ஸிஜன் அணுவிற்குப் பதில் ஹைட்ரஜன் அணுவானது திட்ட அளவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
A) அனைத்தும் சரி
B) 1, 2 மட்டும் சரி
C) 3, 4 மட்டும் சரி
D) அனைத்தும் தவறு
விளக்கம்: முதலில் ஹைட்ரஜன் அணுவின் நிறையை திட்ட அளவாகக் கொண்டு மற்ற அணுக்களின் நிறைகள் கணக்கிடப்பட்டன. ஹைட்ரஜனின் (1H1,1H2,1H3) ஐசோடோப் பண்புகளால் பின்னர் ஹைட்ரஜன் அணுவிற்குப் பதில் ஆக்சிஜன் அணுவானது திட்ட அளவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
14. தற்போது ஒப்பிட்டு அணு நிறையைக் கணக்கிட திட்ட அளவாக பயன்படுத்தப்படும் நிலைத்த ஐசோடோப்பு__________
A) கார்பன் – 14
B) இரும்பு – 59
C) பாஸ்பரஸ் – 32
D) கார்பன் – 12
விளக்கம்: அணுநிறை 12 கொண்ட கார்பனின் நிலைத்த ஐசோடோப்பான C – 12 ஐசோடோப்பானது ஒப்பீட்டு அணு நிறையைக் கணக்கிட திட்ட அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
15. ஒரு தனிமத்தின் திட்ட அணு எடை(Ar)____________
A) அத்தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 3/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்
B) அத்தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/10 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்
C) அத்தனிமத்தின் ஐசோடோப்புகளின் அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்
D) அத்தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்
16. அணு நிறையைக் கணக்கிடக்கூடிய நவீன முறை__________
A) வெப்பமானி
B) அணு நிறமாலைமானி
C) நிறை நிறமாலைமானி
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: அணு நிறையைக் கணக்கிடக்கூடிய நவீன முறையான “நிறை நிறமாலைமானி” முறையில் C-12 திட்ட அளவாகப் பயன்படுத்தப்படுகிறது.
17. பொருத்துக:
தனிமம் திட்ட அணு எடை
A) ஹைட்ரஜன் – 1. (12)
B) கார்பன் – 2. (1)
C) நைட்ரஜன் – 3. (16)
D) ஆக்ஸிஜன் – 4. (14)
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 1 2 3 4
D) 4 3 2 1
விளக்கம்:
தனிமம் திட்ட அணு எடை
A) ஹைட்ரஜன் – 1. (1)
B) கார்பன் – 2. (12)
C) நைட்ரஜன் – 3. (14)
D) ஆக்ஸிஜன் – 4. (16)
18. கீழ்க்கண்ட தனிமங்களை அவற்றின் ஒப்பு அணுநிறையுடன் தொடர்புபடுத்தி தவறானதைக் கண்டறி.
1) சோடியம் – 23
2) மெக்னீசியம் – 24
3) சல்பர் – 23
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு
விளக்கம்:
1) சோடியம் – 23
2) மெக்னீசியம் – 24
3) சல்பர் – 32
19. பொருத்துக:
தனிமம் – கிராம் அணுநிறை
A) ஹைட்ரஜன் – 1. (14 கிராம்)
B) கார்பன் – 2. (16 கிராம்)
C) நைட்ரஜன் – 3. (12 கிராம்)
D) ஆக்ஸிஜன் – 4. (1 கிராம்)
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 1 2 3 4
D) 4 3 1 2
விளக்கம்:
A) ஹைட்ரஜன் – 1. (1 கிராம்)
B) கார்பன் – 2. (12 கிராம்)
C) நைட்ரஜன் – 3. (14 கிராம்)
D) ஆக்ஸிஜன் – 4. (16 கிராம்)
20. ஒரு தனிமத்தின் சராசரி அணு நிறை என்பது___________
A) இயற்கையில் கிடைக்கக்கூடிய கணக்கிடப்பட்ட ஐசோடோப்புகளின் நிறையை குறிப்பதாகும்.
B) இயற்கையில் கிடைக்கக்கூடிய கணக்கிடப்பட்ட ஐசோடோப்புகளின் சராசரி நிறையை குறிப்பதாகும்.
C) இயற்கையில் கிடைக்கக்கூடிய கணக்கிடப்பட்ட ஐசோபார்களின் சராசரி நிறையை குறிப்பதாகும்.
D) இயற்கையில் கிடைக்கக்கூடிய கணக்கிடப்பட்ட ஐசோடோன்களின் சராசரி நிறையை குறிப்பதாகும்.
விளக்கம்: ஒரு தனிமத்தின் சராசரி அணு நிறை என்பது இயற்கையில் கிடைக்ககூடிய கணக்கிடப்பட்ட ஐசோடோப்புகளின் சராசரி நிறையைக் குறிப்பதாகும்.
21. (9 amu) அணுநிறை உள்ள ஐசோடோப்பு 50 விழுக்காடும் 10 amu அணுநிறை உள்ள ஐசோடோப்பு 50 விழுக்காடும் எடுத்துக் கொள்ளப்பட்டால் அதனுடைய சராசரி அணுநிறை எவ்வளவாக இருக்கும்.
A) 5.5 amu
B) 7.5 amu
C) 9.5 amu
D) 10.5 amu
விளக்கம்: (9 amu) அணுநிறை உள்ள ஐசோடோப்பு 50 விழுக்காடும் 10 amu அணுநிறை உள்ள ஐசோடோப்பு 50 விழுக்காடும் எடுத்துக் கொள்ளப்பட்டால் அதனுடைய சராசரி அணுநிறை எவ்வளவாக இருக்கும்.
22. இயற்கையில் கிடைக்கக்கூடிய கார்பன் – 12 மற்றும் கார்பன் – 13 ஆகியவற்றின் அளவுகள் முறையே_______
A) 98.90%, 1.10%
B) 1.10%, 98.90%
C) 98.90%, 10.1%
D) 1.10%, 9.90%
23. கார்பனின் சராசரி அணு நிறை_______
A) 12.011 amu
B) 120.11 amu
C) 11.121 amu
D) 11.152 amu
விளக்கம்: கார்பனின் சராசரி அணு நிறை_______
24. பொருத்துக:
தனிமம் – அணு நிறை
A) ஹைட்ரஜன் – 1. (6.941)
B) ஹீலியம் – 2. (4.003)
C) லித்தியம் – 3. (1.008)
D) பெரிலியம் – 4. (9.012)
A) 2 1 3 4
B) 3 2 1 4
C) 1 2 3 4
D) 4 3 1 2
விளக்கம்:
தனிமம் – அணு நிறை
A) ஹைட்ரஜன் – 1. (1.008)
B) ஹீலியம் – 2. (4.003)
C) லித்தியம் – 3. (6.941)
D) பெரிலியம் – 4. (9.012)
25. போரானின் அணு நிறை எண்________
A) 11.811
B) 10.811
C) 12.811
D) 9.811
விளக்கம்: போரானின் அணு நிறை எண்________
26. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் அவைகளுக்கிடையேயான ஒரு வலுவான வேதிக்கவர்ச்சி விசையால் ஒன்றிணைந்து உருவாகக் கூடியது.
A) தனிமம்
B) சேர்மம்
C) மூலக்கூறு
D) கலவை
விளக்கம்: மந்த வாயுக்கள் தவிர பெரும்பாலான தனிமங்களின் அணுக்களானது அதே தனிமத்தின் அணுக்களுடனோ அல்லது பிற தனிமங்களின் அணுக்களுடனோ இணைந்தே காணப்படும். இதற்கு மூலக்கூறு என்று பெயர்.
27. மூலக்கூறுப் பற்றிய கருத்துக்களுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
A) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமத்தின் அணுக்களோ அல்லது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களோ மாறா விகிதப் விதிப்படி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றினைந்து உருவாவதே மூலக்கூறு எனப்படும்.
B) மூலக்கூறு என்பது தனிமமாகவோ அல்லது கலவையாகவோ இருக்கலாம்.
C) ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது ஒத்த அணு மூலக்கூறு என அழைக்கப்படும்.
D) ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது வெவ்வேறு மூலக்கூறு என அழைக்கப்படும்.
விளக்கம்: மூலக்கூறு என்பது தனிமமாகவோ அல்லது சேர்மமாகவோ இருக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமத்தின் அணுக்களோ அல்லது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களோ மாறா விகிதப் விதிப்படி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றினைந்து உருவாவதே மூலக்கூறு எனப்படும். ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது ஒத்த அணு மூலக்கூறு என அழைக்கப்படும். ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது வெவ்வேறு மூலக்கூறு என அழைக்கப்படும்.
28. அணுக்கட்டு எண் என்பது____________
A) அணுக்களில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை
B) மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
C) பருப்பொருள்களில் உள்ள மூலக்கூறின் எண்ணிக்கை
D) பருப்பொருள்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
29. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது.
A) H2
B) N2
C) CO2
D) O3
விளக்கம்: ஒரு ஓசோன்(O3) மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன. எனவே அது ‘ஒத்த மூவணு மூலக்கூறு’ என அழைக்கப்படுகிறது. மற்றவற்றில் இரண்டு அணுக்கள் மாதிரியாக இருப்பதால் அவை ‘ஒத்த ஈரணு மூலக்கூறு’ எனப்படும்.
30. ஹைட்ரஜன் குளோரைடின் அணுக்கட்டு எண்__________
A) 1
B) 2
C) 3
D) 4
விளக்கம்: ஹைட்ரஜன் குளோரைடை எடுத்துக் கொண்டால் அது ஹைட்ரஜன் மற்றும் குளோரின் ஆகிய இரண்டு வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் ஆனவை. எனவே இதன் அணுக்கட்டு எண் 2. இது வேற்று ஈரணு மூலக்கூறு ஆகும். அதுபோல் நீர் மூலக்கூறு இரு ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் கொண்டது. எனவே இதன் அணுக்கட்டு எண் 3. இது வேற்று மூவணு மூலக்கூறு ஆகும்.
31. பொருத்துக:
A) கார்பன் டைஆக்ஸைடு – 1. H2S04
B) அம்மோனியா – 2. C02
C) சல்பூரிக் அமிலம் – 3. NH3
a) 2 3 1
b) 1 2 3
c) 2 1 3
விளக்கம்:
A) கார்பன் டைஆக்ஸைடு – 1. H2S04
B) அம்மோனியா – 2. C02
C) சல்பூரிக் அமிலம் – 3. NH3
32. பொருத்துக:
மூலக்கூறு கிராம் மூலக்கூறு நிறை
A) நீர் – 1. (18 கி)
B) கார்பன் டைஆக்ஸைடு – 2. (36.5 கி)
C) அம்மோனியா – 3. (17 கி)
D) ஹைட்ரோ குளோரிக் அமிலம் – 4. (44 கி)
A) 1 4 3 2
B) 1 3 4 2
C) 1 4 2 3
D) 1 2 3 4
விளக்கம்:
A) நீர் – 1. (18 கி)
B) கார்பன் டைஆக்ஸைடு – 2. (44 கி)
C) அம்மோனியா – 3. (17 கி)
D) ஹைட்ரோ குளோரிக் அமிலம் – 4. (36.5 கி)
33. சல்பூரிக் அமிலமானது இரண்டு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஒரு சல்பர் அணுவாலும் நான்கு ஆக்சிஜன் அணுக்களாலும் ஆனது. எனவே சல்பூரிக் அமிலத்தின் ஒப்பு மூலக்கூறு நிறை________
A) 90
B) 92
C) 96
D) 98
விளக்கம்: சல்பூரிக் அமிலமானது இரண்டு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஒரு சல்பர் அணுவாலும் நான்கு ஆக்சிஜன் அணுக்களாலும் ஆனது. எனவே சல்பூரிக் அமிலத்தின் ஒப்பு மூலக்கூறு நிறை________
அதாவது ஒரு சல்பூரிக் அமிலத்தின் மூலக்கூறு நிறையானது 1/12 பங்கு C-12 அணுவின் நிறையை விட 98 மடங்கு அதிகமானது.
34. நீர் மூலக்கூறானது 2 ஹைட்ரஜன் அணுவையும் 1 ஆக்ஸிஜன் அணுவையும் கொண்டுள்ளது. எனவே நீரின் ஒப்பு மூலக்கூறு நிறை_________
A) 18
B) 28
C) 38
D) 48
விளக்கம்: நீர் மூலக்கூறானது 2 ஹைட்ரஜன் அணுவையும் 1 ஆக்ஸிஜன் அணுவையும் கொண்டுள்ளது. எனவே நீரின் ஒப்பு மூலக்கூறு நிறை_________
ஒரு நீர் மூலக்கூறு நிறையானது 1/12 பங்கு C-12 அணுவின் நிறையை விட 18 மடங்கு பெரியது.
35. அணுக்கள் பற்றிய கருத்துக்களில் பொருந்தாதது.
A) ஒரு தனிமத்தின் மிகப் பெரிய பகுதி அணு ஆகும்.
B) மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் தனித்த நிலையில் இருப்பதில்லை.
C) மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் வினைத்திறன் மிக்கவை.
D) அணுக்களில் வேதிப் பிணைப்புகள் இல்லை.
விளக்கம்: ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி அணு ஆகும். மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் தனித்த நிலையில் இருப்பதில்லை. மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் வினைத்திறன் மிக்கவை. அணுக்களில் வேதிப் பிணைப்புகள் இல்லை.
36. மூலக்கூறுகள் பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி:
1) தனிமம் அல்லது சேர்மத்தின் மிகப் பெரிய பகுதி மூலக்கூறு ஆகும்.
2) மூலக்கூறுகள் இணைந்த நிலையில் இருக்கும்.
3) மூலக்கூறுகள் வினைத்திறன் குறைந்தவை.
4) மூலக்கூறுகளில் வேதிப் பிணைப்புகள் உள்ளன.
A) 1, 2 மட்டும் சரி
B) 3, 4 மட்டும் சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
விளக்கம்: தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறிய பகுதி மூலக்கூறு ஆகும். மூலக்கூறுகள் தனித்த நிலையில் இருக்கும். மூலக்கூறுகள் வினைத்திறன் குறைந்தவை. மூலக்கூறுகளில் வேதிப் பிணைப்புகள் உள்ளன.
37. பொருத்துக
A) ஜோடி – 1. இத்தாலி
B) டஜன் – 2. (2 உறுப்படிகள்)
C) மோல் – 3. (12 உறுப்படிகள்)
D) அவகட்ரோ – 4. துகள்களின் எண்ணிக்கை
A) 2 3 4 1
B) 2 3 1 4
C) 2 4 3 1
D) 1 2 3 4
விளக்கம்:
A) ஜோடி – 1. (2 உறுப்படிகள்)
B) டஜன் – 2. (12 உறுப்படிகள்)
C) மோல் – 3. துகள்களின் எண்ணிக்கை
D) அவகட்ரோ – 4. இத்தாலி
38. அவக்டரோ எண் என்பது________
A) 6.023 × 1023
B) 6.023 × 10-23
C) 6.723 × 1026
D) 6.723 × 10-26
39. மோல் என்பதனை எண்ணிக்கை அலகாகப் பயன்படுத்தி மூலக்கூறுகளின் நிறை மற்றும் பருமனை கணக்கீடும் முறை_________
A) வெர்னியர் தத்துவம்
B) பெரினௌலி தத்துவம்
C) மோல் தத்துவம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: மோல் என்பதனை எண்ணிக்கை அலகாகப் பயன்படுத்தி மூலக்கூறுகளின் நிறை மற்றும் பருமனை கணக்கீடும் முறையே மோல் தத்துவம் ஆகும்.
40. மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடும் தரவுகளிலிருந்து வேறுபட்டதைக் காண்க.
A) திரவங்களின் மோல்களின் எண்ணிக்கை
B) அணுக்களின் மோல்களின் எண்ணிக்கை
C) மூலக்கூறுகளின் மோல்களின் எண்ணிக்கை
D) வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை
விளக்கம்: மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடப் பயன்படும் தரவுகள்:
அணுக்களின் மோல்களின் எண்ணிக்கை
மூலக்கூறுகளின் மோல்களின் எண்ணிக்கை
வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை (திட்ட வெப்ப அழுத்த வெப்பநிலையில் (S.T.P) திட்ட மோலார் பருமன் 22.4 லிட்டர்.
அயனிகளின் மோல்களின் எண்ணிக்கை
41. திட்ட வெப்பநிலை அல்லது அழுத்த நிலை என்பது__________
A) 273.15 ம
B) 173.15 ம
C) 1 வளிமண்டல அழுத்தம்
D) A மற்றும் C இரண்டும்
42. கூற்று (i): ஒரு மோல் மூலக்கூறு என்பது 6.023 × 1023 மூலக்கூறுகளை கொண்டது. இது அந்த மூலக்கூறின் கிராம் மூலக்கூறுநிறைக்கு சமம்.
கூற்று (ii): உதாரணமாக ஒரு மோல் மூலக்கூறு ஆக்சிஜன் என்பது 6.023 × 1023 ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்டது அதன் கிராம் மூலக்கூறு நிறை 32 கி.
A) கூற்று i சரி, ii தவறு
B) கூற்று i தவறு, ii சரி
C) i, ii இரண்டும் சரி
D) i, ii இரண்டும் தவறு
43. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் வாயுவின் மோலார் பருமனானது____________
A) 22.4 லி
B) 2,24,000 மிலி
C) 22,400 மிலி
D) A, C இரண்டும்
விளக்கம்: திட்ட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மிலி பருமனை ஆக்கிரமிக்கும். இது மோலார் பருமன் எனவும் அழைக்கப்படும்.
44. மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறைகளுல் தவறானதைக் கண்டறி:
A) மோல்களின் எண்ணிக்கை = நிறை/அணுநிறை
B) மோல்களின் எண்ணிக்கை = நிறை/மூலக்கூறு நிறை
C) மோல்களின் எண்ணிக்கை = அணுக்களின் எண்ணிக்கை/6.023 × 1023
D) மோல்களின் எண்ணிக்கை = 6.023 × 1023/மூலக்கூறுகளின் எண்ணிக்கை
விளக்கம்:
(i) மோல்களின் எண்ணிக்கை = நிறை/அணுநிறை
(ii) மோல்களின் எண்ணிக்கை = நிறை/மூலக்கூறு நிறை
(iii) மோல்களின் எண்ணிக்கை = அணுக்களின் எண்ணிக்கை/6.023 × 1023
(iv) மோல்களின் எண்ணிக்கை = மூலக்கூறுகளின் எண்ணிக்கை / 6.023 × 1023
45. நீரில்(H2O) உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் சதவீத இயைபினைக் காண்க.
A) ஹைட்ரஜனின் சதவீத இயைபு 11.11%
B) ஆக்சிஜனின் சதவீத இயைபு 88.89%
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நீரில்(H2O) உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் சதவீத இயைபினைக் காண்க.
46. மீத்தேனில்(CH4) உள்ள தனிமங்களின் சதவீத இயைபை காண்க.
A) கார்பனின் சதவீத இயைபு 75%
B) ஹைட்ரஜனின் சதவீத இயைபு 25%
C) இரண்டும் சரி அ
D) இரண்டும் தவறு
விளக்கம்: மீத்தேனில்(CH4) உள்ள தனிமங்களின் சதவீத இயைபை காண்க.
47. அவகட்ரோ மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும் இடையேயான தொடர்பினை வெவ்வேறு நிலையில் கண்டறிந்து வெளியிட்ட ஆண்டு____________
A) 1711
B) 1811
C) 1911
D) 1821
விளக்கம்: 1811 இல் அவகட்ரோ என்ற அறிவியல் அறிஞர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும் இடையேயான தொடர்பினை வெவ்வேறு நிலையில் கண்டறிந்து அவரது கருதுகோள்களை வெளியிட்டார்.
48. கூற்று: அவகட்ரோ கூற்றின்படி, ‘மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
காரணம்: இதன்படி கொடுக்கப்பட்ட வாயுக்களின் பருமனானது அவ்வாயுவின் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் தொடர்புடைதாக இருக்கும். எனில் ‘V’ என்பது பருமனையும் ‘n’ என்பது வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையையும் குறிக்கிறது.
A) கூற்று காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
B) கூற்று காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
C) கூற்று காரணம் இரண்டும் தவறு
D) கூற்று சரி காரணம் தவறு
49. அவகட்ரோ விதியின் பயன்பாடுகளுல் பொருந்தாதது.
A) கே-லூசாக் விதியினை விவதிக்கிறது.
B) வாயுக்களின் அணு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
C) அவகட்ரோ விதியினைப் பயன்படுத்தி வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிடலாம்.
D) மூலக்கூறுநிறைக்கும். ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவுகிறது.
விளக்கம்: வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
கே-லூசாக் விதியினை விவதிக்கிறது.
அவகட்ரோ விதியினைப் பயன்படுத்தி வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிடலாம். மூலக்கூறுநிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவுகிறது.
மேலும் அனைத்து வாயுக்களின் கிராம் மோலார் பருமனை (22.4 லிட்டர் திட்ட வெப்ப அழுத்த நிலையில்) கணக்கிடவதில் பயன்படுகிறது.
50. ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதம்.
A) ஒப்பு மூலக்கூறு நிறை
B) ஒப்பு அணு நிறை
C) ஆவி அடர்த்தி
D) மேற்கண்ட எதுவுமில்லை.
விளக்கம்: ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
51. மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதம்_________
A) ஒப்பு மூலக்கூறு நிறை
B) ஒப்பு அணு நிறை
C) ஆவி அடர்த்தி
D) மேற்கண்ட எதுவுமில்லை.
விளக்கம்: மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
52. பொருத்துக:
மூலக்கூறு மோலார் நிறை
A) நீரின் மோலார் நிறை – 1. (44 கி)
B) CO2 மோலார் நிறை – 2. (308 கி)
C) Ca3(PO4)2 மோலார் நிறை – 3. (18 கி)
A) 3 1 2
B) 2 3 1
C) 1 2 3
விளக்கம்:
மூலக்கூறு மோலார் நிறை
A) நீரின் மோலார் நிறை – 1. (18 கி)
B) CO2 மோலார் நிறை – 2. (44 கி)
C) Ca3(PO4)2 மோலார் நிறை – 3. (308 கி)
53. கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
A) குளுக்கோஸ்
B) ஹீலியம்
C) கார்பன் டை ஆக்ஸைடு
D) ஹைட்ரஜன்
54. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்
A) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
B) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
C) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
D) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்