TnpscTnpsc Current Affairs

10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் குடிமக்களால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான பறவைகள் விவரப்படத்தை வெளியீடு செய்துள்ள மாநிலம் / UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) கர்நாடகா

ஈ) மேற்கு வங்கம்

  • அண்மையில் வெளியிடப்பட்ட கேரள பறவைகள் அட்லஸ் ஆனது ‘ஆசியாவின் மிகப்பெரிய பறவை அட்லஸ்’ என்று கூறப்படுகிறது. இந்தியாவிலேயே இதன்வகையில் முதலாவதாக தயார்செய்யப்பட்டுள்ள இந்த மாநில அளவிலான பறவைகள் விவரப்படம், 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டது.

2. புதிய இராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கிஜாடியா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ) ஹரியானா

ஆ) பீகார்

இ) குஜராத் 

ஈ) உத்தரகாண்ட்

  • உலக சதுப்பு நில நாளை முன்னிட்டு இரு புதிய இராம்சர் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் கிஜாடியா வனவுயிரி சரணாலயம், உபியில் பகீரா வனவுயிரி சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் ராம்சரில் சேர்கப்பட்டுள்ளன.
  • இந்தியா 10,93,636 ஹெக்டேர் பரப்பளவைக்கொண்ட 49 தளங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக அதிகமாகும். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஜஜ்ஜாரில் உள்ள சுல்தான்பூர் தேசியப் பூங்கா மற்றும் பிந்தாவாஸ் வனவுயிரி சரணாலயத்தை ஹரியானாவில் உள்ள இராம்சார் தளங்களாக முன்னர் அறிவித்தது.

3. சத்தீஸ்கரின் ஒருங்கிணைப்புடன், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்’திட்டம் எத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது?

அ) 15

ஆ) 20

இ) 28

ஈ) 35 

  • சத்தீஸ்கர் மாநிலம் சமீபத்தில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’த்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்கீழ் அந்த மாநில மக்கள் தங்கள் உணவு தானிய ஒதுக்கீட்டை நாடு முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலைக்கடைகளில் இருந்தும் வாங்கிக்கொள்ளலாம்.
  • சத்தீஸ்கரின் ஒருங்கிணைப்புடன், நாட்டில் உள்ள சுமார் 77 கோடி NFSA பயனாளிகளில் கிட்டத்தட்ட 96.8 சதவீதத்தை உள்ளடக்கிய 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதனை உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

4. தலையில்லா குதிரைக்கருகே புதைக்கப்பட்ட மனிதனி -ன் எலும்புக்கூடு, எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ) ரஷ்யா

ஆ) கிரீஸ்

இ) ஜெர்மனி 

ஈ) சீனா

  • தலையில்லா குதிரைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த மனிதனின் எலும்புக்கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். தெற்கு ஜெர்மனியில் உள்ள நிட்லிங்கனில் இந்த எலும்புக்கூட்டடின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மெரோவிங்கியன் வம்சத்தால் ஆளப்பட்டபோது இம்மனிதனும் குதிரையும் புதைக்கப்பட்டிருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

5. அண்மையில் IT துறைக்காக பிரத்யேக ‘தொழில்நுட்ப பூங்கா’வைத் திறந்த வடகிழக்கு மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மேகாலயா 

இ) மணிப்பூர்

ஈ) மிசோரம்

  • மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, ‘ஷில்லாங் தொழில்நுட்ப பூங்கா’வைச் சமீபத்தில் திறந்துவைத்தார். இதில் பல நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளன. தற்போது, மேகாலயாவில் 35 வயதுக்குட்பட்டோர் 70 சதவீதம் உள்ளனர். தொழில்நுட்ப பூங்காவின் முதல்கட்டம் நேரடியாக 1,500 பேருக்கு பணி வாய்ப்பை உருவாக்கும். மேலும் மறைமுகமாகவும் இது அதிக வேலைகளை உருவாக்கும்.

6. 2021இல் இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) நெதர்லாந்து

ஈ) ஜெர்மனி

  • இந்தியாவின் மின்னணுப்பொருட்களின் ஏற்றுமதி 2021 டிசம்பரில் 1.67 பில்லியன் அமெரிக்க டாலரைத் எட்டியது. இது கடந்த 2020 டிசம்பரில் காணப்பட்ட 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்களைவிட 33.99% அதிகமாகும்.
  • கடந்த நிதியாண்டில் மின்னணுப்பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி $11.11 பில்லியன்டாலர்களாக இருந்தது. 2021 ஏப்ரல்-நவம்பரில் இந்திய மின்னணுப் பொருட்களின் முதல் 5 ஏற்றுமதி இடங்கள்: அமெரிக்கா (18%), UAE (16.6%), சீனா (7.6%), நெதர்லாந்து (4.5%) & ஜெர்மனி (4.2%). இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் துறை ஏற்றுமதியில் மொபைல் போன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

7. கடந்த பத்தாண்டுகளில் 0.93% என்ற மிகக்குறைந்த வளர்ச்சியைக்கண்ட இந்திய அண்டை நாடு எது?

அ) இலங்கை

ஆ) நேபாளம் 

இ) பங்களாதேஷ்

ஈ) மியான்மர்

  • நேபாளத்தின் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 இன் ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, அந்நாட்டின் மக்கள் தொகை 29,192,480’ஐ எட்டியுள்ளது. இது வெறும் 0.93% வளர்ச்சியாகும். இது கடந்த எண்பதாண்டுங்களில் மிகக் குறைந்த வளர்ச்சியாகும். நேபாளத்தின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் உலக மக்கள்தொகையின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிடவும் குறைவாக உள்ளது.
  • நேபாளிகள் வேலைக்காகவும் படிப்புக்காகவும் வெளியில் குடியேறுவதே இதற்குக் காரணமாகும். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.35 சதவீதமாக இருந்தது.

8. “A Little Book of India: Celebrating 75 years of Independence” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) ரஸ்கின் பாண்ட் 

ஆ) அருந்ததி ராய்

இ) சுதா மூர்த்தி

ஈ) விக்ரம் சேத்

  • மூத்த எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், “A Little Book of India: Celebrating 75 years of Independence” என்ற தலைப்பில் தனது சமீபத்திய நூலை வெளியிட்டார்.
  • பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த 87 வயதான இந்திய எழுத்தாளர், இந்தியாவின் ஆன்மீக சித்தாந்த பண்புகளை இதில் சித்தரித்துள்ளார். ரஸ்கின் பாண்ட் சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

9. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

அ) ஈரோடு 

ஆ) கோயம்புத்தூர்

இ) திண்டுக்கல்

ஈ) சேலம்

  • தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் புலிகளை இரட்டிப்பாக்கியதற் -கான ‘TX2’ விருதைப் பெற்றுள்ளது. இந்தப் புலிகள் காப்பகம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியும் புலிகளின் காப்பகமுமாகும்.
  • இந்தக் காப்புக்காடு நீலகிரி உயிர்க்கோள நிலப்பரப்பின் ஒருபகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய புலிகள் வாழிடமாகும். IUCN, UNDP, உலக இயற்கை நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.

10. தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் (HRIDAY) திட்ட காலம் என்ன?

அ) 2014-2018

ஆ) 2015-2019 

இ) 2016-2020

ஈ) 2017-2021

  • நடுவணரசின் தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித்திட்டமானது (HRIDAY) கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 12 நகரங்களில் செயல்படுத்தப்பட்டது.
  • `453.90 கோடி மதிப்பீட்டில் 77’க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. `18.34 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்கள் – பாதாமி (கர்நாடகா) திட்டம் மற்றும் வாரங்கல் (தெலுங்கானா) திட்டம் செயல்ப -டுத்தப்பட்டு வருகின்றன. இதன் திட்ட காலம் கடந்த 2019ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கரோனா நோயாளிகளில் 70% பேர் உயிரிழக்கின்றனர்.

10 கோடி தடுப்பூசி இலக்கு

இதுவரை 4 லட்சத்து 99,408 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 26 லட்சத்து 92,917 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 40,383 சிறுவர்களுக்கு 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடியே 71 லட்சத்து 61,368 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 10 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வின் (சீரோ சர்வே) 4ஆம்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 2ஆம் கட்ட ஆய்வில் 29% பேருக்கும், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான 3ஆம்கட்ட ஆய்வில் 70% பேருக்கும் தமிழகத்தில் நோயெதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.

அதேபோல், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வெளியான 4ஆம் கட்டஆய்வில் 10 வயதுக்கு மேற்பட்ட 87 சதவீதம் பேருக்கு நோயெதிர்ப்புசக்தி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு 30 குழுக்களைக் கொண்ட 1,706 பேர், 32,245 கிராமமற்றும் நகர்ப்புற மக்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகளாகும்.

திருவாரூர் மாவட்டம் முதலிடம்

இதில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69 சதவீதமாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 91 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 90 சதவீதம் பேருக்கும், நெல்லை, நாமக்கல், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 88 சதவீதம் பேருக்கும், நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 87 சதவீதம் பேருக்கும், தேனி, திருச்சி, திருப்பூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், புதுக் கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 86 சதவீதம் பேருக்கும்,

திருவண்ணாமலை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 85% பேருக்கும், தருமபுரி, காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் முறையே 84, 83, 82% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2. சூரிய புயலில் சிக்கிய 40 செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்தன

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவிவட்டப்பாதையிலிருந்து விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன.

இதுதொடர்பாக ஸ்பேக்ஸ்X நிறுவனம் தெரிவித்ததாவது:

சமீபத்தில் ஏற்பட்ட சூரிய புயல், வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக் கோள்களில் (ஒரு செயற்கைக்கோளின் எடை 260 கிகி) 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன. சில செயற்கைக்கோள்கள் புவிவட்டப்பாதையில் இருந்து விலகும் தறுவாயில் உள்ளன. இந்த விபத்தைத் தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இந்தச் சம்பவத்தால் புவி வட்டப்பாதையிலோ, பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஸ்பேஸ்X நிறுவனத்தின் சுமார் 2,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின்மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகிறது. இச்செயற்கைக்கோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றிவருகின்றன என்று தெரிவித்துள்ளது.

3. சென்னை – விளாடிவோஸ்க் நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம்: விரைவில் செயல்படுத்தப்படும் என ரஷ்ய துணைத் தூதர் தகவல்

சென்னை – விளாடிவோஸ்க் (ரஷ்யா) நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் என் அவ்தீவ் கூறினார்.

இந்தியா, ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த கலாச்சாரம், வர்த்தகம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தக சபை மற்றும் ரஷ்ய பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் இரு நாடுகளுக்கு இடையே புதிய தொழில் வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணையவழியில் நேற்று கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தக சபை நிறுவனர் V M லட்சுமி நாராயணன், பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் போரிஸ் ஸ்டுப்நட்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1. Which state/UT has released India’s first citizen–driven state–level Bird Atlas?

A) Tamil Nadu

B) Kerala 

C) Karnataka

D) West Bengal

  • The Kerala Bird Atlas released recently is said to be Asia’s largest bird atlas in terms of geographical extent, sampling efforts, and species coverage. It is also the first–of–its–kind state–level bird atlas in India, and was conducted as a citizen–driven exercise with the participation of over 1000 volunteers.

2. Khijadiya wildlife sanctuary, is a new Ramsar site, located in which state/UT?

A) Haryana

B) Bihar

C) Gujarat 

D) Uttarakhand

  • Two new Ramsar sites were announced on the occasion of World Wetlands Day. They are: Khijadiya wildlife sanctuary in Gujarat and Bakhira wildlife sanctuary in Uttar Pradesh.
  • India has a network of 49 such sites covering 10,93,636 hectares, which is the highest in South Asia. The Union Environment Ministry had earlier notified the Sultanpur National Park and Bhindawas wildlife sanctuary in Jhajjar as Ramsar sites in Haryana.

3. With the integration of Chhattisgarh, the ‘One Nation One Ration Card’ plan is operational in how many states/UT?

A) 15

B) 20

C) 28

D) 35 

  • Chhattisgarh has recently implemented ‘One Nation One Ration Card’ (ONORC) plan, under which the people of the state can lift their food–grains quota from any ration shops across the country.
  • With the integration of Chhattisgarh, the ONORC plan is now operational in 35 States/UTs covering almost 96.8 percent of about 77 crore NFSA beneficiaries in the country. This was announced by the Department of Food & Public Distribution.

4. Skeletal remains of a man buried near a headless horse have been found in which country?

A) Russia

B) Greece

C) Germany 

D) China

  • Researchers have recently found skeletal remains of a man buried near a headless horse. The remains have been found in Knittlingen in southern Germany. Researchers estimate that the man and the horse must have been buried 1400 years ago when the area was ruled by Merovingian dynasty.

5. Which North–Eastern state recently inaugurated a dedicated ‘Technology Park’ for IT sector?

A) Assam

B) Meghalaya 

C) Manipur

D) Mizoram

  • Meghalaya Chief Minister Conrad K. Sangma recently inaugurated the ‘Shillong Technology Park’. Several companies have submitted their assent to open their branches. At present, Meghalaya has 70% population below the age of 35 years. The first phase building of the Technology Park will create employment for more than 1,500 people directly, will generate more jobs indirectly.

6. Which country is the top export destination of India’s electronic goods in 2021?

A) USA 

B) China

C) The Netherlands

D) Germany

  • India’s exports of electronic goods touched USD 1.67 Billion in December 2021, registering a growth of 33.99% over USD 1.25 bn seen in December 2020. The overall exports of electronics goods in the last financial year were USD 11.11 Billion.
  • The top 5 export destinations of Indian electronics goods in April–November 2021 are: USA (18%), UAE (16.6%), China (7.6%), Netherland (4.5%) & Germany (4.2%). Mobile phones form a major part of India’s Electronics Goods sector exports.

7. Which neighbouring country of India witnessed a record low growth of 0.93 per cent in the last decade?

A) Sri Lanka

B) Nepal 

C) Bangladesh

D) Myanmar

  • As per the preliminary results of Nepal’s National Census 2021, the country’s population has reached 29,192,480, which is a growth of mere 0.93 per cent. This is also the lowest growth in the last eight decades. The population growth rate in Nepal is less than the average growth rate of the global population.
  • This is due to the outward migration of Nepalis for jobs and studies. In the last Census 2011, the average population growth rate was 1.35%.

8. Who is the author of the book titled “A Little Book of India: Celebrating 75 years of Independence”?

A) Ruskin Bond 

B) Arundhati Roy

C) Sudha Murty

D) Vikram Seth

  • Veteran Author Ruskin Bond released his latest book titled, “A Little Book of India: Celebrating 75 years of Independence” The 87–year–old Indian author of British descent has depicted the physical and spiritual attributes of India. It is a record of some of the author’s memories and impressions of the country.
  • Ruskin Bond is the recipient of Sahitya Akademi Award, Sahitya Akademi’s Bal Sahitya Puraskar, Padma Shri and Padma Bhushan.

9. The Sathyamangalam Tiger Reserve is located in which district?

A) Erode 

B) Coimbatore

C) Dindigul

D) Salem

  • The Sathyamangalam Tiger Reserve (STR) of Tamil Nadu has been awarded the prestigious TX2 Award after its tiger number doubled since 2010. STR is a protected area and tiger reserve in the Western Ghats in the Erode District of Tamil Nadu.
  • The reserve is a part of the Nilgiri biosphere landscape, which is the home to world’s largest tiger population. The awards are presented by the Conservation Assured Tiger Standards (CATS), Global Tiger Forum (GTF), IUCN’s ITHCP, UNDP, WWF among other stakeholders.

10. What was the mission period of National Heritage City Development and Augmentation Yojana (HRIDAY)?

A) 2014–2018

B) 2015–2019 

C) 2016–2020

D) 2017–2021

  • The National Heritage City Development and Augmentation Yojana (HRIDAY), a central sector scheme was launched in 2015 and was implemented in 12 cities. As many as 77 projects have been implemented with an outlay of Rs 453.90 crores.
  • 2 projects amounting to Rs 18.34 crore – Project in Badami (Karnataka) and Project in Warangal (Telangana) are under implementation. The mission period ended in 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!