Tnpsc

10th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நடப்பாண்டின் (2021) லோகமான்ய திலக் தேசிய விருதினை வென்றவர் யார்?

அ) சஞ்சை குப்தா

ஆ) தீபக் திலக்

இ) சைரஸ் பூனாவல்லா 

ஈ) ஆதார் பூனாவல்லா

  • லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தலைவரான தீபக் திலக், சமீபத்தில், சீரம் இந்தியா நிறுவனத்தின் (SII) தலைவர் Dr சைரஸ் பூனாவல்லா, நடப்பாண்டுக்கான (2021) லோகமான்ய திலக் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
  • கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்திவழியில் சமூகத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டடுள்ளது. லோகமான்ய திலக் தேசிய விருது, கடந்த 1983’இலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஆண்டுதோறும், லோகமான்ய திலகரின் நினைவு நாளான ஆக.1 அன்று வழங்கப்படுகிறது.

2. இந்தியாவில் முதன்முறையாக “இசுலாமிய பெண்கள் உரிமை நாள்” கடைப்பிடிக்கப்பட்ட தேதி எது?

அ) ஆகஸ்ட் 12

ஆ) ஜூலை 30

இ) ஆகஸ்ட் 1 

ஈ) ஜூலை 26

  • ஆக.1 அன்று, “இசுலாமிய பெண்கள் உரிமைகள் நாள்” முதல்முறையாக நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. ‘முத்தலாக்’கிற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டு ஈராண்டுகள் நிறைவானதை அடுத்து, இந்த நாள் கொண்டாடப்பட்டது. சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் கூற்றுப்படி, 2019 ஆக.1 அன்று முத்தலாக் முறைக்கு எதிராக அரசு சட்டம் இயற்றியது. அச்சட்டம், ‘முத்தலாக்’ சமூக முறைகேட்டை ஒரு கடுங்குற்றமாக மாற்றியது.

3. 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

அ) தீபிகா குமாரி

ஆ) மனிகா பத்ரா

இ) P V சிந்து 

ஈ) சாய்னா நேவால்

  • 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப்பெண்மணி P V சிந்து ஆவார். அவர் தனது முதல் ஒலிம்பிக் பதக்கமான வெள்ளிப்பதக்கத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வென்றார்.
  • சீனாவின் ஹீ பிங் ஜியாவோவை வீழ்த்தி 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலத்தை வென்றார். P V சிந்து, தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் பார்க் டே சாங் மற்றும் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆவார். 2020’இல் அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘பத்மஸ்ரீ’ (2015), இராஜீவ் காந்தி கேல் ரத்னா (2016) அர்ஜுனா (2013) ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

4. 2021 ஆகஸ்ட்டில் புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) V N கௌல்

ஆ) ராஜீவ் மகரிஷி

இ) சோமா ராய் பர்மன்

ஈ) தீபக் தாஸ் 

  • தீபக் தாஸை இந்தியாவின் புதிய தலைமைக்கணக்குக்கட்டுப்பாட்டாளர் ஆக இந்திய அரசு நியமித்துள்ளது. இந்தப் பொறுப்பானது நடுவண் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் வருகிறது. தீபக் தாஸ், 25 ஆவது தலைமைக்கணக்குக்கட்டுப்பாட்டாளர் ஆவார்.
  • இந்த நியமனத்திற்கு முன்பு வரை, மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் முதன்மை கணக்குக் கட்டுப்பாட்டாளராக அவர் பணியாற்றினார்.

5. கொரோனா சிகிச்சையில், ‘அஸ்வகந்தா’ மூலிகையின் பயன் குறித்த ஆய்வை நடத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள நிறுவனம் எது?

அ) கௌதம புத்தர் பல்கலைக்கழகம்

ஆ) IIT தில்லி

இ) பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரி

ஈ) லண்டன் சுகாதாரம் & வெப்பமண்டல மருத்துவப்பள்ளி 

  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘அஸ்வகந்தா’ மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்து எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், பிரிட்டனைச் சேர்ந்த லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ மையமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளன. இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளன.
  • இதன்படி, பிரிட்டனில் உள்ள லெஸ்டர்ஷைர், பர்மிங்ஹாம், லண்டன் ஆகிய மூன்று நகரங்களைச் சேர்ந்த 2000 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர் என ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பீரங்கிப்படையின் புதிய தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

அ) மேஜர் ஜெனரல் விகாஸ் ஜோஷி

ஆ) லெப்டினன்ட் ஜெனரல் J P சிங்

இ) லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் சாவ்லா 

ஈ) லெப்டினன்ட் ஜெனரல் வினோத் நாயனார்

  • பீரங்கிப்படை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் சாவ்லா, 2021 ஆகஸ்ட்.1 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இராணுவத்தில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஜூலை.31 அன்று ஓய்வு பெறும் லெப்டினன்ட் ஜெனரல் கே இரவி பிரசாத்திடமிருந்து அவர் இந்தப் பொறுப்பைப் பெற்றுக்கொள்வார்.
  • லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் சாவ்லா, டேராடூனில் உள்ள புனித தோமையார் உயர்நிலைப்பள்ளி, கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவராவார். அவர் கடந்த 1984ஆம் ஆண்டு பீரங்கிப் படையில் இணைந்தது முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர், லைபீரியாவில் உள்ள ஐநா இயக்கத்தின் ராணுவ பார்வையாளராக பணியாற்றினார்.

7. எந்த நாட்டின் தலைமையின்கீழ், BRICS பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்குழு கூட்டம், 2021 ஏற்பாடு செய்யப்பட்டது?

அ) பிரேசில்

ஆ) இரஷ்யா

இ) இந்தியா 

ஈ) சீனா

  • அண்மையில், ஜூலை 28-29 அன்று இந்தியாவின் தலைமையில், மெய்நிகர் முறையில், “BRICS பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்குழு” கூட்டம் நடந்தது. இது BRICS பயங்கரவாதத்திற்கு எதிரான செயற் குழுவின் ஆறாவது கூட்டமாகும்.
  • BRICS தலைவர்களால் கடந்த 2020’இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ‘BRICS பயங்கரவாதத்திற்கு எதிரான உத்தி’யை செயல்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய BRICS பயங்கரவாத எதிர்ப்பு செயல்திட்டம் இக்கூட்டத்தில் இறுதியாக்கம் செய்யப்பட்டது.

8. பாலர்பள்ளிக்குழந்தைகளுக்காக இந்திய அரசு தொடங்கியுள்ள முன்னெடுப்பின் பெயர் என்ன?

அ) NDEAR

ஆ) SAFAL

இ) வித்யா பிரவேஷ் 

ஈ) கல்வி வங்கி

  • ஜூலை.29 அன்று தேசிய கல்விக்கொள்கை, 2020’இன் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக சில முன்னெடுப்புகளை பிரதமர் மோடி தொடங்கினார்.
  • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக, பாலர்பள்ளிக்குழந்தைகளுக்காக ‘வித்யா பிரவேஷ்’ என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின்கீழ், குழந்தைகளை பள்ளிக்குத் தயார்செய்யும் நோக்கில் 3 மாத விளையாட்டு அடிப்படையிலான பாடத்தொகுதி உருவாக்கப்படும். இது இரண்டாம் நிலை மட்டத்தில், இந்திய சைகை மொழி பாடத்தையும் உள்ளடக்கும்.

9. தென்மேற்கு இரயில்வேயின் (SWR) புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) இராகுல் ஜைன்

ஆ) சஞ்சை குமார் மொகந்தி

இ) சஞ்சீவ் மிட்டல்

ஈ) சஞ்சீவ் கிஷோர் 

  • கர்நாடக மாநிலம், ஹூப்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தென்மேற்கு இரயில்வேயின் புதிய பொதுமேலாளராக சஞ்சீவ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன்பாக, இரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினராக (உற்பத்தி அலகுகள்) பணியாற்றி வந்தார். தென்மேற்கு இரயில்வே ஆனது இந்தியாவின் 18 இரயில்வே மண்டலங்களுள் ஒன்றாகும். இது, 2003’இல் தெற்கு ரயில்வே மற்றும் தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.

10. பார்வையற்றோருக்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தின் பெயர் என்ன?

அ) திங்க் பேட்

ஆ) இண்டி டிரஸ்ட்

இ) கின்டில்

ஈ) திவ்ய நயன் 

  • சண்டிகரில் அமைந்துள்ள CSIR – மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு ஆனது பார்வைக்குறைபாடுள்ளவர்களுக்காக “திவ்ய நயன்” என்ற தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனத்தில், எந்தவொரு அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் பேச்சு வடிவத்தில் அணுகலாம். பயனர் படிக்கவேண்டிய ஆவணத்தின்மீது சாதனத்தை வைத்து கைமுறையாகவும் மேவி பயன்படுத்தலாம்.
  • மொழி அடிப்படையிலான ஒளியியல் உரு நுட்ப உதவியுடன் படம் உரையாகவும், உரை பேச்சு மற்றும் ஒலிவடிவமாகவும் மாற்றப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமானது (CSIR) 1942 செப்டம்பர் மாதத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பாக இது உள்ளது. சாந்தி ஸ்வரூப் பட்நாகரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தின் கடன்சுமை `5.70 லட்சம் கோடி: நிதிநிலை வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் வரிவருவாயில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை வரும் மார்ச் மாதத்தில் `5.70 இலட்சம் கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி:

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சொந்த வரி வருவாய் விகிதத்தில் அனைத்து மாநிலங்களின் சராசரி வீழ்ச்சியைவிட, தமிழ்நாட்டில் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டில் முதல் முறையாக தேசிய சராசரி அளவை விட தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த வரி வருவாயின் விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை `61,320 கோடியாக உள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.16 சதவீதமாகும். 2006-11ஆம் ஆண்டு வரையில் வருவாய் உபரியாக இருந்தது. இதன்பின்பு, அதிமுக ஆட்சிக் காலத்தில் `17 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது.

மொத்த கடன் சுமை: பொதுத்துறை நிறுவனங்களுக்கான கடன் சுமை உள்பட ஒட்டுமொத்தமான கடன்கள் வரும் மார்ச் மாதத்தில் `5 லட்சத்து 70,189 கோடியாக இருக்கும். கடந்த காலங்களில் ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை அளிக்க வருவாய்கள் போதிய அளவுக்கு வந்தன. ஆனால், இப்போது அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் போன்ற செலவுகளைக்கூட கடன்கள் பெற்று பூர்த்திசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை, கடன்கள் அதிகரிப்புக்கு கரோனா நோய்த் தொற்றை மட்டும் காரணம் கூற முடியாது. தமிழ்நாட்டில் கரோனாவுக்கு முன்பாகவே வருவாயில் சரிவு ஏற்படத் தொடங்கிவிட்டது. வருமானம் வராத காரணத்தால், நிதிப்பற்றாக்குறையும் உயர்ந்துள்ளது.

குடும்பத்துக்கு `2.64 இலட்சம் கடன்: தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமையை ஒரு தனி நபருக்கு பிரித்து அளித்தால், அது ஒரு நபருக்கு `1.10 லட்சமாக இருக்கும். அதன்படி, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் `2 லட்சத்து 63,976 கடன் உள்ளது. இந்தக் கடன் சுமையை, வருவாயை ஈட்டுவதன் மூலமாகவே குறைக்க முடியும். மாநிலத்துக்கு 4 வகைகளில் வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தின் வரி வருவாய், வரியல்லாத வருமானம், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய பங்கு, மானியங்கள்-திட்டங்கள்மூலமாக வர வேண்டியது என நான்கு அம்சங்களின் வழியாக வருவாய் கிடைக்கிறது.

இதில், மாநில வரிகள் மூலமாகக் கிடைக்கக்கூடிய வருவாயில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. 2008-09ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் வரவுகளின் நிலை 13.35 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில் (2020-21) 4.19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2. மூன்று மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல்

மூன்று மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் கடந்த 1942ஆம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கியது. அந்த இயக்கத்தின் 79ஆவது ஆண்டு தினம் ஆக.9ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.

தேசிய ஹோமியோபதி ஆணைய சட்டத் திருத்த மசோதா, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில அரசுகளே கண்டறிவதற்கு வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (127ஆவது திருத்தம்) மசோதா, வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைச் சட்டத்திருத்த மசோதா மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டத் திருத்த மசோதா ஆகியன தாக்கல் செய்யப்பட்டன.

3. புவி வெப்பமயமாதல் வேகமாகி உள்ளது: ஐ.நா. அறிக்கை

புவி வெப்பமயமாதல் எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாகி வருவதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புவி வெப்பமயமாதல் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நிகழ்ந்து வருகிறது.

இதனை கருத்தில்கொள்ளும்போது, உலக நாடுகளின் தலைவர்கள் 10 ஆண்டுகளில் நிர்ணயித்துள்ள வரம்பைக் காட்டிலும் புவி அதிக வெப்பம் அடைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மனித குலத்துக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தும். புவிவெப்பமயமாதலிலிருந்து தப்பித்துவிடுவோம் என எண்ணும் வகையில், உலகின் எந்தப் பகுதியும் பாதுகாப்பானதாக இல்லை. எனவே, எங்கும் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவர்கள் வரம்பை நிர்ணயம் செய்தனர். ஆனால், ஏற்கனவே புவியின் வெப்ப அதிகரிப்பு அளவு 1.1 டிகிரி செல்ஷியஸை எட்டிவிட்டது. இந்த நிலையில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இது நிர்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை தாண்டிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைவதால் ஏற்கனவே கடல்மட்டம் உயர்வு, பனிக்கட்டி உருகுதல், வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம், புயல் போன்ற மோசமான இயற்கைப் பேரழிவுகளை சந்தித்து வருகிறோம். மேலும், ஆர்டிக் கடலின் பனிப் பாறைகள் கோடையில் வேகமாக உருகி வருவது சுற்றுச்சூழல் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது.

இவற்றை கருத்தில்கொள்ளும்போது, புவி மேலும் வெப்பமடையுமானால் நிலைமை இன்னும் மோசமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

4. டோக்கியோ ஒலிம்பிக்: ஏற்றங்களும்… ஏமாற்றங்களும்…

சாதித்துக் காட்டியிருக்கிறது டோக்கியோ. கரோனா சூழலில் பொது இடங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடினாலே அது பாதிப்பை அதிகரிக்கும் எனும் நிலையில், சுமார் 30,000 பேரை ஒரு (ஒலிம்பிக்) கிராமத்தில் திரட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக். அதற்காக மேற்கொண்ட முயற்சிகளும், முன்னேற்பாடுகளும் நிச்சயம் அபாரமானவை, பாராட்டுக்குரியவை. கரோனா சூழலில் மனித இனத்துக்கான மிகப்பெரிய நம்பிக்கையும், உத்வேகமும் அளித்திருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்.

ஏற்கெனவே ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டிலும் இந்த ஒலிம்பிக்கை நடத்துவதற்கு தடைகள் ஏற்படாமல் இல்லை. உலக நாடுகளில் கரோனா ‘அலை’யடித்துக் கொண்டிருக்கும் சூழலில், ஆயிரக் கணக்கானோரை கூட்டி போட்டியை நடத்துவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. ஏன், போட்டி நடத்தப்பட்ட டோக்கியோ நகரிலேயே பலத்த எதிர்ப்பு இருந்தது.

ஆனாலும், ஒலிம்பிக் கனவுடன் ஓயாமல் தங்களை தயார்படுத்தியிருந்த போட்டியாளர்களின் கனவுகளை கலைக்க விரும்பவில்லை டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள்.

ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நிலையில் டோக்கியோவில் கரோனா சூழல் சற்று தீவிரமடைந்தது அச்சத்தை ஏற்படுத்தியது. சவால்களைக் கடந்து போட்டியை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளன அந்தக் கமிட்டிகள். கரோனா சூழலில் சுமார் இரு ஆண்டுகளாக வழக்கமான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த சர்வதேச போட்டியாளர்களுக்கு இந்த ஒலிம்பிக் வரப்பிரசாதமாக இருந்தது.

அத்தகைய ஒலிம்பிக்கில் இந்தியாவும் உத்வேகத்துடன் பங்கேற்று, புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 7 பதக்கங்களை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக்கில் இது இந்தியாவுக்கு முன்னேற்றமே. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா கண்ட சாதனைகளை பார்ப்போம்.

பதக்கம்

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல் – தங்கம்)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பிரம்மாஸ்திரம். இந்தியாவின் 124 போட்டியாளர்களில் கடைசியாக களம் கண்டு வரலாற்றுத் தங்கம் வென்றவர். சர்வதேச போட்டிகளில் ஏற்கனவே தங்கம், வெள்ளியாக தட்டித்தூக்கியிருந்த நீரஜ் மீதான நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அது எந்தவிதத்திலும் பொய்த்து விடாதபடி வென்றுள்ளார்.

தகுதிச்சுற்றிலேயே முதலிடம் பிடித்து பதக்கத்துக்கு முன்பதிவு செய்த நீரஜ், இறுதிச்சுற்றில் எறிந்த இரண்டாவது முயற்சி, ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கமாக மாறியது. பாராட்டுகளாலும், பரிசுகளாலும் நிறைக்கப்படும் நீரஜ் சோப்ரா, நிச்சயம் அடுத்த போட்டிகளிலும் இந்தியாவுக்காக சாதனைகள் படைப்பார்.

சாய்கோம் மீராபாய் சானு (பளுதூக்குதல் – வெள்ளி)

இந்தியாவுக்காக முதல் நாளிலேயே முதல் பதக்கம் வென்றவர். சிட்னி ஒலிம்பிக்கில் (2000) கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்ற பிறகு, ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் 21 ஆண்டுகால பதக்க தாகத்தை தீர்த்தவர்.

சானு பதக்கம் வெல்வது ஏற்கனவே கணிக்கப்பட்டது. 49 கிலோ எடைப் பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி 2ஆம் இடம்பிடித்தார். ரியோ ஒலிம்பிக்கில் சரிவைச் சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு இதில் சாதனை படைத்தார்.

குஞ்சராணி தேவியைப் பார்த்து இந்த விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சானுவின் வசமே, கிளீன் & ஜெர்க் பிரிவு உலக சாதனை (119 கிலோ) உள்ளது. பளுதூக்குதலில் இந்தியாவின் நம்பகமான வீராங்கனை.

ரவிகுமார் தாஹியா (மல்யுத்தம் – வெள்ளி)

57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் போராடித்தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஏற்கெனவே ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த சுஷீல்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோரை உருவாக்கிய தில்லி சத்ரசால் மைதானமே இவருக்குமான பயிற்சி களம்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அடிப்படையில் தனது முதல் ஒலிம்பிக்கிற்கு வந்து, அதையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் சனாயேவ் கையில் கடித்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியும், அதை பொருட்படுத்தாமல் இறுதிச்சுற்றில் விளையாடினார்.

பி வி சிந்து (பாட்மிண்டன் – வெண்கலம்)

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதால், இதில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனாலும், விடாமல் போராடி வெண்கலம் வென்று, தொடர்ந்து இருஒலிம்பிக்குகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை எட்டினார்.

சிந்துவுக்கு எப்போதும் சவாலாக இருக்கும் சீன தைபேவின் டை ஸு யிங்கிடம் அரையிறுதியில் தோற்று, பிறகு வெண்கலப்பதக்கத்துக்கான சுற்றில் வெற்றிபெற்றார். இந்த ஒலிம்பிக்கில் 6 ஆட்டங்களில் விளையாடிய சிந்து, அதில் அரையிறுதி ஆட்டம் தவிர இதர ஆட்டங்களில் நேர் செட்களில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை – வெண்கலம்)

முதல் ஒலிம்பிக்கிலேயே வெண்கலம் (69 கிகி பிரிவு) வென்றிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம். கிக் பாக்ஸராக இருந்து, பின்னர் குத்துசண்டைக்கு மாறியவர். ஒலிம்பிக் பயிற்சிக்காக ஐரோப்பா செல்ல இருந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த வாய்ப்பு தடைபட்டபோதும், திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ளார்.

முதல் சுற்றில் ஜெர்மனியின் நாடினே அபெட்ஸ் (3-2), காலிறுதியில் சீன தைபேவின் நீன் சின் சென் (4-1) ஆகியோரை வென்ற லவ்லினா, அரை இறுதியில் துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியிடம் போராடி வீழ்ந்து வெண்கலம் பெற்றார்.

பஜ்ரங் புனியா (மல்யுத்தம் – வெண்கலம்)

தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், சற்றே சறுக்கி வெண்கலத்துடன் திரும்புகிறார். இவருக்கும் இது முதல் ஒலிம்பிக் போட்டி. 65 கிலோ பிரிவில் முதலிரு சுற்றுகளில் அபாரமாக வென்றாலும், அரையிறுதியில் உலக சாம்பியனான அஜர்பைஜானின் ஹாஜி அலியேவிடம் வீழ்ந்தார் (5-12). பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் கஜகஸ்தானின் தௌலத் நியாஸ்பெகோவை 8-0 என முழுமையாக வீழ்த்தினார். 34 கிகி எடை இருந்தபோது, ஒரு போட்டியில் 60 கிகி பிரிவில் பங்கேற்று அந்த எடைப்பிரிவு எதிராளியை சாய்த்தவர்.

ஆடவர் ஹாக்கி அணி (வெண்கலம்)

41 ஆண்டுகால தவத்துக்கு, கிடைத்தது வரம். முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி அட்டகாசமாக தொடங்கிய ஆடவர் அணி, அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது. மூன்றாவது ஆட்டத்தில் மீண்டு ஸ்பெயினை வீழ்த்த, நான்காவது ஆட்டத்தில் அர்ஜென்டீனாவையும், 5ஆவது ஆட்டத்தில் ஜப்பானையும் தோற்கடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதியில் இங்கிலாந்தை வென்றாலும், அரையிறுதியில் பெல்ஜியத்திடம் தோற்றது. பிறகு 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியை வென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் 8 முறை தங்கம் வென்ற வரலாற்றைக் கொண்ட இந்திய ஹாக்கி அணி, இந்த வெற்றியின்மூலம் மீண்டும் புதிய சகாப்தத்தை தொடங்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேப்டன் மன்பிரீத் சிங், கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், சிம்ரன்ஜீத் சிங் ஆகியோரின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது.

1. Who won the Lokmanya Tilak National Award 2021?

A) Sanjay Gupta

B) Deepak Tilak

C) Cyrus Poonawalla 

D) Adar Poonawalla

  • Deepak Tilak, the president of the Lokmanya Tilak Trust recently announced that Dr. Cyrus Poonawalla, chairman of Serum Institute of India (SII) will be honoured with the prestigious “Lokamanya Tilak Award 2021”. He will be awarded for his contribution towards the society by manufacturing Covisheild and hence helping in saving many lives during the coronavirus pandemic.
  • Lokmanya Tilak National Award was started in 1983. The award is annually given on August 1, the death anniversary of Lokmanya Tilak.

2. On which date, “Muslim Women Rights Day” was observed in India for the first time?

A) August 12

B) July 30

C) August 1 

D) July 26

  • On August 1, “Muslim Women Rights Day” was observed across the country for the first time. This day was observed to celebrate the enactment of the law against ‘Triple Talaq’ for completing its two years.
  • According to Mukhtar Abbas Naqvi, Minister of Minority Affairs, the Government enacted the law against Triple Talaq on 1st August, 2019 and this law made the social malpractice of Triple Talaq as a criminal offense.

3. Who is the first Indian woman to win two Olympic medals?

A) Deepika Kumari

B) Manika Batra

C) P V Sindhu 

D) Saina Nehwal

  • P V Sindu is the first Indian woman to win two Olympic medals. She won her first Olympic medal, which was a silver medal, at Rio Olympics 2016. She won a bronze medal at Tokyo Olympics 2021 after defeating He Bing Jiao of China. PV Sindhu belongs to Hyderabad, Telangana.
  • Her Personal coach is Park Tae Sang and the national coach of Badminton is Pullela Gopichand. She got Padma Bhushan Award in 2020. She has been also awarded with Pamda Shri (2015), Rajiv Gandhi Khel Ratna Award in 2016 and Arjuna Award in 2013.

4. Who has been appointed as the new Controller General of Accounts (CGA) in August, 2021?

A) V.N. Kaul

B) Rajiv Mehrishi

C) Soma Roy Burman

D) Deepak Das 

  • Government of India has appointed Deepak Das as the new Controller General of Accounts (CGA) of India. CGA comes under the Department of Expenditure, Ministry of Finance. Deepak Das is the 25th CGA. He is a 1986–batch Indian Civil Accounts Service (ICAS) officer.
  • He earlier served as the Principal Chief Controller of Accounts in the Central Board of Direct Taxes.

5. Which institute has collaborated with the Ministry of Ayush to conduct a study on ‘Ashwagandha’ for promoting recovery from Covid–19?

A) Gautam Buddha University

B) IIT Delhi

C) Patanjali Ayurveda College

D) London School of Hygiene and Tropical Medicine 

  • All India Institute of Ayurveda (AIIA) and London School of Hygiene and Tropical Medicine (LSHTM) signed a Memorandum of Understanding (MoU) to conduct study on ‘Ashwagandha’ for promoting recovery from Covid–19. Clinical trials will be conducted on 2000 participants in three U.K. Cities: Birmingham, Leicester and London.

6. Who has been appointed as the new Director General Artillery?

A) Major General Vikas Joshi

B) Lt Gen J P Singh

C) Lt Gen Tarun Kumar Chawla 

D) Lt Gen Vinod Nayanar

  • On 1 August 2021, Lt Gen Tarun Kumar Chawla has been appointment as the Director General of Artillery. He takes over the appointment from Lt Gen K Ravi Prasad, PVSM, VSM who completed thirty–nine years of distinguished service in the army. Lt Gen Tarun Kumar Chawla, AVSM is an alumnus of St. Thomas High School and National Defence Academy, Khadakwasla.
  • He was commissioned into a Field Regiment of Artillery in June 1984. He has also served as a Military observer at the United Nations Mission in Liberia (UNOMIL).

7. Under whose chairmanship, the BRICS Counter Terrorism Working Group Meeting, 2021 was organized recently?

A) Brazil

B) Russia

C) India 

D) China

  • A virtual meeting “BRICS Counter Terrorism Working Group” was oraganised recently on July 28–29 under the chairmanship of India. It was the 6th meeting of the BRICS Counter Terrorism Working Group.
  • The main outcome of the meeting was the finalisation of the BRICS Counter Terrorism Action Plan containing specific measures for the implementation of the BRICS Counter Terrorism Strategy adopted by BRICS leaders in 2020.

8. Which initiative has been launched by the Government of India for Pre–school kids?

A) NDEAR

B) SAFAL

C) Vidya Pravesh 

D) Academic Bank

  • Prime Minister Narendra Modi launched some initiatives as a part of the extension to the National Education Policy 2020 on July 29th, 2021. Vidya Pravesh initiative has been launched for Pre School Kids, basically for Grade 1 students. Under this initiative, three–month play module will be set for the children to prepare them for school. It will also include a subject of Indian Sign language at the Secondary Level.

9. Who has been appointed as the new General Manager of South Western Railway (SWR)?

A) Rahul Jain

B) Sanjay Kumar Mohanty

C) Sanjeev Mittal

D) Sanjeev Kishore 

  • Sanjeev Kishore has been appointed as the new General Manager of South Western Railway (SWR). Earlier, he served as Additional Member (Production Units) of Railway Board. South Western Railway is one of the 18 Railway zones in India. It is headquartered at Hubballi in Karnataka state. It was carved out from Southern Railways and South–Central Railways in 2003.

10. Which personal reading machine has been designed by CSIR for visually impaired people?

A) Think Pad

B) Inditrust

C) Kindle

D) Divya Nayan 

  • CSIR – Central Scientific Instruments Organisation, Chandigarh developed a personal reading machine “Divya Nayan” for visually impaired people. In this device, any printed or digital document can be accessed in the form of speech output. User can place the device over the document to be read and manually scan it.
  • The image is converted into text, text is converted to speech and audio with the help of language dependent optical character. Council of Scientific & Industrial Research (CSIR) was established by the Government of India in September 1942. It is an autonomous body and has emerged as the largest research and development organisation in India. The institute was founded by Shanti Swaroop Bhatnagar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!