வேற்றுமையில் ஒற்றுமை 12th Ethics Lesson 2 Questions
12th Ethics Lesson 2 Questions
2] வேற்றுமையில் ஒற்றுமை
1) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) இந்தியாவில் மொழி, இனம், சமயம், நிறம், வாழிடம் போன்ற பல்வேறு பிரிவுகளால் மக்கள் பிரிந்திருந்தாலும் இந்தியர் என்ற உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
B) உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்கக்காரணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பான்மையாகும்.
C) இந்தியாவில் மொழியும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும், விருந்தோம்பல் முறைகளும் மிகச்சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றன.
D) அனைத்தும் சரி.
விளக்கம்: இந்தியாவில் மொழி, இனம், சமயம், நிறம், வாழிடம் போன்ற பல்வேறு பிரிவுகளால் மக்கள் பிரிந்திருந்தாலும் இந்தியர் எனற் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்கக்காரணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பான்மையாகும்.
இந்தியாவில் மொழியும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும், விருந்தோம்பல் முறைகளும் மிகச்சிறப்பாகப் பின்பற்றப்படுகின்றன.
2) இந்திய மக்கள் எதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழந்தவர்கள்?
A) வேட்டையாடுதல்
B) வேளாண்மை
C) ஜீவகாருண்யம்
D) எதுவுமில்லை
விளக்கம்: நம் மக்கள் உயிரிரகத்தை (ஜீவகாருண்யம்) முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோருடைய கோட்பாடுகள் உயரிய ஆன்மீகத்தையே நோக்கமாகக் கொண்டு மக்களிடம் போதிக்கப்பட்டன.
3) “அதிசயம் அதுதான் இந்தியா” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A)மில்டன்
B) A.L.பாஷம்
C) சார்க்
D) சாட்விக்
விளக்கம்: எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும் புகழ்மிக்க வரலாற்று அதிஞர் A.L.பாஷம் அவர்கள் ‘அதிசயம் அதுதான் இந்தியா’(The Wonder that was India) என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் இந்திய கிராம மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள், பழம்பெருமையைப் பறைசாற்றுகின்றன.
4) உலகளவில் இந்திய எத்தனையாவது பெரிய நாடு?
A) 4-வது
B) 5-வது
C) 6-வது
D) 7-வது
விளக்கம்: உலகளவில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழைமையான நாடாகும். உலகில் காணும் பல்வேறு நாகரீகப் பண்பாடுகளின் ஒன்றிணைப்பை இங்கு காணலாம்.
5) இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
A) 28, 7
B) 29, 6
C) 30, 9
D) 29, 7
விளக்கம்: இந்திய 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டு திகழ்கிறது (சமச்சீர் புத்தகத்தின் படி). உண்மையில், ஜனவரி 26, 2020-ன் நிலவரப்படி இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 8 யூனியன் பிரதேசங்கள்:
1. டாமன், டையூ மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி (ஜனவரி 26, 2020 முதல் ஒரே யூனியன் பிரதேசம்).
2. அந்தமான் நிக்கோபார்
3. சண்டிகர்
4. டெல்லி
5. லடாக்
6. லட்சத்தீவு
7. ஜம்மு மற்றும் காஷ்மீர்
8. புதுச்சேரி.
6) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை எவ்வளவு?
A) 100 கோடிக்கு மேல்
B) 131 கோடிக்கு மேல்
C) 121 கோடிக்கு மேல்
D) 700 கோடிக்கு மேல்
விளக்கம்: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடிக்கு மேல் உள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்துக் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்பதை அறியலாம்.
7) எந்த ஆண்டு கங்கை நதி தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது?
A) 2008
B) 2012
C) 2010
D) 2020
விளக்கம்: 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை நதி அறிவிக்கப்பட்டது.
8) இந்தியாவின் நீளமான நதி எது?
A) கோதாவரி
B) சிந்து
C) பிரம்மபுத்திரா
D) கங்கை
விளக்கம்: இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப் பெற்றுள்ள நதி என்று பலச் சிறப்புகளைக் கங்கை நதி பெற்றுள்ளது.
9) கூற்றுகளை ஆராய்க.
1. நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நம் நாட்டில் நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான் தலைசிறந்து காணப்படுகிறது.
2. நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளை ஒருவர், மற்றவர் மீது ஆர்வமும் அக்கறையும் செலுத்துவதற்குக் காரணமாக அமைகின்றது.
3. வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட தேசியக் கொடி, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பறவை போன்றவை இந்தியா முழுமைக்கும் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன.
A)1, 2 சரி
B) 1, 3 சரி
C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நம் நாட்டில் நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான் தலைசிறந்து காணப்படுகிறது.
2. நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளை ஒருவர், மற்றவர் மீது ஆர்வமும் அக்கறையும் செலுத்துவதற்குக் காரணமாக அமைகின்றது.
3. வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட தேசியக் கொடி, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பறவை போன்றவை இந்தியா முழுமைக்கும் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன.
10) இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்பு எது?
A) பண்பாடு
B) கலாச்சாரம்
C) வேற்றுமையில் ஒற்றுமை கோட்பாடு
D) எதுவுமில்லை
விளக்கம்: நம் நாடு நிலவியல் அமைப்பு, இனம், மொழி, இலக்கியம், சமயம், சமுதாய அமைப்பு, பொருளாதாரம், வாழ்க்கைச்சடங்குகள், பாரம்பரியங்களால் வேறுபட்ட கூறுகளைக் கொண்டிருந்தாலும் ‘இந்தியர்’ என்ற ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடம் உள்ளது. இதனையே வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். இவ்வுயரிய கோட்பாடு இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்பு எனலாம்.
11) இந்தியாவை ஆசியக்கண்டத்தில் பிரித்துக் காட்டுவது எது?
A) இமயமலை
B) தார்பாலைவனம்
C) இந்தியப் பெருங்கடல்
D) கங்கை நதி
விளக்கம்: இந்தியா, வடக்கே இமயமலை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து காணப்படும் மிகப்பெரிய ஒரு நாடாகும். இமயமலை, இந்தியாவை ஆசியக்கண்டத்திலிருந்து பிரிக்கிறது.
12) இந்திய எல்லைகளில் தவறாகப் பொருந்தியதைத் தேர்க?
A) கிழக்கு – வங்காளவிரிகுடா
B) மேற்கு – அரபிக்கடல்
C) வடக்கு – இமயமலை
D) தெற்கு – தார் பாலைவனம்
விளக்கம்: தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லையாக அமைந்துள்ளது. இது இந்து மகா சமுத்திரம் எனவும் அழைக்கப்படும்.
13) இந்தியா ஒரு தீபகற்ப நாடு. காரணம் என்ன?
A) 2 பக்கம் நிலம், 2 பக்கம் நீர் சூழ்ந்துள்ளது.
B) 3 பக்கம் நிலம், 1 பக்கம் நீர் சூழ்ந்துள்ளது.
C) 1 பக்கம் நிலம், 3 பக்கம் நீர் சூழ்ந்துள்ளது.
D) 1 பக்கம் நிலம், 2 பக்கம் நீர் சூழ்ந்துள்ளது.
விளக்கம்: மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியே தீபகற்பம் ஆகும். எனவே, இந்தியா ஒரு தீபகற்க நாடாகும்.
14) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) இந்தியாவில் காலநிலை, தட்பவெப்பநிலை, மழைப்பொழிவு, மண் வகைகள் மற்றும் செடிகொடிகளில் வேற்றுமைக் கூறுகள் நிலவுகின்றன.
B) இந்தியாவில் வடபகுதி குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும், மனிதன் வாழவே இயலாத அளவுக்கு உறைபனி நிலையைக் கொண்டிருக்கவில்லை.
C) குளிர்மிகுந்த காஷ்மீர் போன்ற பகுதிகளில் மக்கள் வாழக் காரணம் அங்கு நிலவும் பருநிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்டதேயாகும்.
D) அனைத்தும்
விளக்கம்: இந்தியாவில் காலநிலை, தட்பவெப்பநிலை, மழைப்பொழிவு, மண் வகைகள் மற்றும் செடிககொடிகளில் வேற்றுமைக் கூறுகள் நிலவுகின்றன.
இந்தியாவில் வடபகுதி குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும், மனிதன் வாழவே இயலாத அளவுக்கு உறைபனி நிலையைக் கொண்டிருக்கவில்லை.
குளிர்மிகுந்த காஷ்மீர் போன்ற பகுதிகளில் மக்கள் வாழக் காரணம் அங்கு நிலவும் பருநிலைக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்டதேயாகும்.
15) ஆசியாவின் இத்தாலி என்றழைக்கப்படும் நாடு எது?
A) இந்தியா
B) சீனா
C) பாகிஸ்தான்
D) திபெத்
விளக்கம்: புவியியலாளர்கள் இந்தியாவை இத்தாலி நாட்டோடு ஒப்பிடுகின்றனர். ஐரோப்பாவிலுள்ள இத்தாலி, ஒரு தீபகற்ப நாடாகும். அந்நாட்டின் கிழக்கு எரித்திரியன் கடலும், மேற்கே தஸ்கான் கடலும், தெற்கே நன்னிலக் கடலும், வடக்கே அபினைன் மலைத் தொடரும் உள்ளது. இத்தாலியின் தெற்கே சிசிலித் தீவு உள்ளதுபோல் இந்தியாவின் அருகில் இலங்கைத் தீவு உள்ளது.
16) சரியான விடையைத் தேர்வு செய்க.
கூற்று: மனிதன் வாழச் சாதகமான பருவநிலைகளைக் கொண்ட நாடு இந்தியா.
காரணம்: காஷ்மீரைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் மக்களின் அன்றாட செயல்களைப் பாதிக்கும் நிலையில் காலநிலை இல்லை.
A) கூற்று சரி, காரணம் தவறு.
B) கூற்று தவறு, காரணம் சரி.
C) கூற்று சரி, மேலும் காரணம் சரியான விளக்கம்
D) கூற்று சரி, மேலும் காரணம் சரியான விளக்கமல்ல
விளக்கம்: காஷ்மீரைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் மக்களின் அன்றாட செயல்களைப் பாதிக்கும் நிலையில் காலநிலை இல்லை. எனவே, மனிதன் வாழச் சாதகமான பருவநிலைகளைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.
17) ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை எது?
A) பருவநிலை
B) தொழில்
C) மக்கள்
D) மேற்காண் எதுவுமில்லை
விளக்கம்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டின் பருவநிலையே அடிப்படையாகும்.
18) இந்தியாவில் அயல்நாடு வாணிபத்திற்கு அடிப்படையாக அமைவது எது?
A) வளமான கடற்கரை
B) இமயமலை
C) சமவெளி
D) பீடபூமி
விளக்கம்: இந்தியாவின் வளமான கடற்கரைகள் அயல்நாட்டு வாணிபத்திற்கும், பொருளாதார முன்னேற்றதிற்கும் காரணமாகின்றன.
19) இந்தியாவின் உள்நாட்டு வாணிகத்திற்கு துணைபுரிவது எது?
A) வளமான கடற்கரை
B) இமயமலை
C) சமவெளி
D) பீடபூமி
விளக்கம்: இந்தியாவின் உள்நாட்டு வாணிகத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் செழிப்பான சமவெளிகள் காரணமாகின்றன. ஒவ்வொரு, நிலப்பகுதியும், அமைவிட அமைப்பில் வேறுபட்டுள்ளது என்றாலும், பொருளாதார வளர்ச்சிக் குறியீடு சீராகவே உள்ளது.
20) பொருத்துக.
அ. பருத்தி – 1. கர்நாடகா
ஆ. கோதுமை – 2. அஸ்ஸாம்
இ. பருப்பு வகைகள் – 3. பஞ்சாப்
ஈ. தேயிலை – 4. மகாராஷ்டிரா, குஜராத்
உ. காபி – 5. மத்தியப்பிரதேசம்
A) 5, 4, 3, 2, 1
B) 4, 5, 1, 3, 2
C) 3, 4, 5, 2, 1
D) 4, 3, 5, 2, 1
விளக்கம்:
பயிர் – பயிரிடப்படும் பகுதி.
பருத்தி – குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
கோதுமை – பஞ்சாப்
பருப்பு வகைகள் – மத்தியப் பிரதேசம்
தேயிலை – அசாம்
காபி – கர்நாடகா
மிளகு, வாசைனை பொருள் – கேரளா
இவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.
21) மழை குறைந்த உயர் நிலங்கள் எவை?
A) சமவெளி
B) மலைகள்
C) பீடபூமிகள்
D) கடற்கரை
விளக்கம்: பீடபூமிகள் என்பவை மழை குறைந்த, உயர் நிலங்களாகும். இப்பகுதியில் கனிம வளங்களும் சில வேளாண் பொருட்களும் விளைகின்றன.
22) பொருத்துக.
அ. சோட்டாநாக்பூர் பீடபூமி – 1. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
ஆ. மாளவ பீடபூமி – 2. கனிம வளம்
இ. தக்காண பீடபூமி – 3. திணைப் பயிர்கள்
A) 2, 3, 1
B) 3, 2, 1
C) 1, 3, 2
D) 1, 2, 3
விளக்கம்: சோட்டாநாக்பூர் பீடபூமி – கனிம வளம்
மாளவ பீடபூமி – திணைப் பயிர்கள்
தக்காண பீடபூமி – பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
23) சிந்து கங்கை சமவெளிகளில் யார் வாழ்ந்து வந்ததை வேதங்கள் கூறுகின்றன?
A) ஆரியர்கள்
B) திராவிடர்கள்
C) மெசபடோமியர்கள்
D) அனைத்தும்
விளக்கம்: இந்தியாவில் ஆரியர்களது வருகைக்கு முன்னரே சிந்து நதிக்கரைப் பகுதியில் ஹரப்பா மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிந்து கங்கை சமவெளிகளில் ஆரியர்கள் வாழ்ந்து வந்ததை வேதங்கள் கூறுகின்றன. சங்ககால இலக்கியங்கள், தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது என்று தெரிவிக்கிறது.
24) இந்தியாவின் எந்தப் பகுதியில் பாரசீகர், கிரேக்கர், சாகர், குஷாணர், ஹணர் ஆகியோர் குடியேறினர்?
A) வடகிழக்கு
B) வடமேற்கு
C) தென்கிழக்கு
D) தென்மேற்கு
விளக்கம்: இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், சாகர்கள், குஷாணர்கள், ஹணர்கள் ஆகியோர் குடியேறினர்.
25) கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகையையும் பெற்றிருந்தது என்று கூறியவர் யார்?
A) அரிஸ்டாட்டில்
B) ஹெரோடோட்டஸ்
C) லின்னேயஸ்
D) ஜான்ரே
விளக்கம்: கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகைகையும் பெற்றிருந்தது என்று “ஹெரோடோட்டஸ்” குறிப்பிட்டுள்ளார்.
26) வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?
A) ஹெரோடோட்டஸ்
B) வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்
C) அரிஸ்டாட்டில்
D) ஜான்ரே
விளக்கம்: வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் ஆவார்.
27) இந்தியாவை பல இனங்களின் அருங்காட்சியம் என்று குறிப்பிடுபவர் யார்?
A) ஹெரோடோட்டஸ்
B) வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்
C) அரிஸ்டாட்டில்
D) ஜான்ரே
விளக்கம்: இடைக்கால இந்திய வரலாற்றில் அரேபியர்களும், துருக்கியர்களும், மங்கோலியர்களும், முகலாயர்களும் இந்தியாவிற்கு வந்து ஆட்சி செய்தனர். நவீனகால இந்திய வரலாற்றில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் முதலியோர் இந்தியாவில் வணிகநோக்கில் குடியேறினர். இதன் அடிப்படையில், டாக்டர் வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் இந்தியாவைப் பல ‘இனங்களின் அருங்காட்சியகம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
28) தக்க பகுதியுடன் அங்கு வாழ்ந்த இன மக்களைப் பொருத்துக.
அ. காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் – 1. மங்கோலிய இனம்
ஆ. தமிழகம், ஆந்திரா, மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் – 2. திராவிட இனம்
இ. அஸ்ஸாம், நோபாள எல்லை – 3. இந்தோ – ஆரிய இனம்
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 2, 3, 1
D) 2, 1, 3
விளக்கம்: காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் – இந்தோ-ஆரிய இனம்
தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள் சோட்டா நாக்பூர் – திராவிட இனம்
அஸ்ஸாம்-நேபாள எல்லை – மங்கோலிய இனம்
29) பொருத்துக.
அ. ஐக்கிய மாநிலங்கள், பீகார் – 1. இரானிய இனம்
ஆ. வங்காளம், ஒடிசா – 2. சிந்திய இனம்
இ. மராட்டியப் பகுதி – 3. மங்கோல்-திராவிட இனம்
ஈ. வடமேற்கு எல்லைபுறம் வாழும் துருக்கியர் – 4. ஆரிய-திராவிட இனம்
A) 4, 3, 2, 1
B) 4, 2, 3, 1
C) 4, 3, 1, 2
D) 3, 4, 2, 1
விளக்கம்: ஐக்கிய மாநிலங்கள், பீகார் – ஆரிய-திராவிட இனம்
வங்காளம், ஒடிசா – மங்கோல்-திராவிட இனம்
மராட்டியப் பகுதி – சிந்தியா இனம்
வடமேற்கு எல்லைபுறம் வாழும் துருக்கியர் – இரானிய இனம்
30) ‘ஒட்டரதேசம்’ எனப்படும் மாநிலம் எது?
A) பீகார்
B) ஒடிசா
C) வங்காளம்
D) ஆந்திரா
விளக்கம்: ‘ஒட்டரதேசம்’ என ஒடிசா மாநிலம் அழைக்கப்பட்டது.
31) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. இந்தியாவில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளே இந்தியப் பண்பாட்டிற்கான அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது. இதன் அடிப்படையிலேயே வலிமையான பண்பாடு கட்டமைக்கப்ட்டுள்ளது.
2. ஒவ்வோர் இனமும் தனக்கேயுரிய தனித்தன்மையைக் கொண்டுள்ளதால், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகத் திகழ்கிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்தியாவில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளே இந்தியப் பண்பாட்டிற்கான அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது. இதன் அடிப்படையிலேயே வலிமையான பண்பாடு கட்டமைக்கப்ட்டுள்ளது.
2. ஒவ்வோர் இனமும் தனக்கேயுரிய தனித்தன்மையைக் கொண்டுள்ளதால், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகத் திகழ்கிறது.
32) தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்?
A) கேரளா
B) தமிழ்நாடு
C) ஆந்திரா
D) கர்நாடகா
விளக்கம்: இந்தியாவில் மலைவாழ் பழங்குடியின மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் தொன்மையான வரலாற்றைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் கொண்டாடும் விழாக்கள் அவர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்களின் உழைப்பும், திறனும் பிறருக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்கள் தமிழகத்தின் தொன்மையின் அடித்தளமாக உள்ளனர். இம்மக்களின் பொருளாதார நிலைக்கும் மற்ற மக்களின் பொருளாதார நிலைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
33) மனிதன் தமது உள்ளத்து உணர்வுகளைப் பிறருக்கு உணர்த்த உதவும் மிகச்சிறந்த ஒரு கருவி எது?
A) பாவனை
B) கல்வி
C) அறிவு
D) மொழி
விளக்கம்: மொழி என்பது, மனிதன் தமது உள்ளத்து உணர்வுகளால் பிறருக்கு உணர்த்த உதவும் மிகச்சிறந்த ஒரு கருவியாகும். இதனையே Language is the Vehicle of Communication என்று அபெர் குரோம்பி குறிப்பிடுகிறார்.
34) எவை மனித குலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை?
A) எண், எழுத்து
B) பேச்சும், மொழியும்
C) பேச்சும், எழுத்தும்
D) எதுவுமில்லை
விளக்கம்: பேச்சும், எழுத்தும் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கொடையாகும். மனிதருடைய மொழிகளில் ஓவியம், கை அசைவும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்ற முடியும். ஆனால், சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாளுவதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
35) PLSI-விரிவாக்கம் என்ன?
A) Public Liguistic Survey of India
B) People’s Linguistic Survey of India
C) People’s Language survey of India
D) எதுவுமில்லை.
விளக்கம்: PLSI – People’s Lingustic Survey of India.
36) இந்திய மக்கள் எத்தனை மொழிகளை பேசி வருவதாக PLSI கூறுகிறது?
A) 121
B) 780
C) 570
D) 1050
விளக்கம்: இந்தியாவிலுள்ள 121 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் 780-க்கும் மேலான மொழிகளை பேசி வருவதாக PLSI (People’s Lingustic Survey of India) தெரிவிக்கிறது. இக்கணக்கெடுப்பு 2010-க்கும் 2013-க்கும் இடையில் எடுக்கப்படடது.
37) PLSI கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை மொழிகள் அழிந்துவருகிறது?
A) 10-க்கும் மேல்
B) 25-க்கும் மேல்
C) 5-க்கும் மேல்
D) 15-க்கும் மேல்
விளக்கம்: 1961-ஆம் ஆண்டில் தோராயமாக 1650 மொழிகள் இருந்ததாகவும் ஒவ்வோர் ஆண்டிற்கும் 10-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 500-க்கும் குறைவாகலாம் என்றும் இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது (இக்கணக்கெடுப்பு 2010-க்கும் 2013-க்கும் இடையில் PLSI-ஆல் எடுக்கப்படடது.)
38) இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் பேசும் மொழிகள் எத்தனை?
A) 22
B) 14
C) 33
D) 44
விளக்கம்: இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஒரு லட்சத்திற்கும் மேலான மொழிகள் பேசும் மொழிகள் 33 உள்ளன.
39) வட இந்திய மொழிகளின் தாயாகக் கருதப்படும் மொழி எது?
A) தமிழ்
B) பிராகிருதம்
C) பாலி
D) சமஸ்கிருதம்
விளக்கம்: பழங்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் பிராகிருத மொழியும், சமஸ்கிருத மொழியும் பயன்பட்டன. சமஸ்கிருத மொழி வடஇந்திய மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.
40) சமஸ்கிருதம் மற்றும் வடஇந்திய மொழிகளை எழுத______________என்னும் எழுத்து வடிவம் பயன்படுத்தப்படுகிறது?
A) டெரகோட்டா
B) சித்திர எழுத்து வடிவம்
C) தேவநாகரி
D) பாலி
விளக்கம்: சமஸ்கிருதம் மற்றும் வடஇந்திய மொழிகளை எழுத தேவநாகிரி என்னும் எழுத்து வடிவம் பயன்படுத்தப்படுகிறது. இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, காஷ்மீரி, உருது மற்றும் வங்காளம் ஆகியவை வடஇந்தியாவில் பேசப்படும் முதன்மையான மொழிகளாகும்.
41) வடகிழக்கு இந்தியாவில் பேசப்படும் மொழி எது?
A) பெங்காலி
B) அஸ்ஸாமி
C) கன்னடம்
D) ஹிந்தி
விளக்கம்: வடகிழக்கு இந்தியாவில் அஸ்ஸாமி மொழி பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முதன்மையான மொழிகளாகும்.
42) இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
A) 14
B) 22
C) 33
D) 780
விளக்கம்: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22. ஆங்கிலேயரின் 200 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், இந்தியாவில் ஆங்கில, மொழி பொதுவான இணைப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் பேசும் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை.
43) மனிதப் பண்பாட்டில் எது ஓர் இணைப்புக் கருவியாக பயன்படுகிறது?
A) கல்வி
B) வாழ்க்கைத்தரம்
C) மொழி
D) அனைத்தும்
விளக்கம்: மனிதப் பண்பாட்டில் மொழி என்பது ஓர் இணைப்புக் கருவியாக பயன்படுகிறது. ஏனெனில் மொழிதான் ஒருவருக்கு ஒருவர் கருத்தினைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாகப் பயன்படுகிறது. இந்தியாவில் தேசிய மொழி, இணைப்பு மொழி, வட்டார மொழி போன்றவை பேசப்படுகின்றன. மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அறிவியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் தீர்மானிக்கிறது.
44) இந்திய அரசியலைப்பில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை மொழிகளுள் மிகவும் பழைமையானது எது?
A) அஸ்ஸாமி
B) சமஸ்கிருதம்
C) தெலுங்கு
D) தமிழ்
விளக்கம்: 22 அட்டவணை மொழிகள்:
1. அஸ்ஸாமி 2. பெங்காலி 3. போடோ 4. டோக்ரி 5. குஜராத்தி
6. இந்தி 7. கன்னடம் 8. காஷ்மீரி 9. கொங்கிணி 10. மைதிலி
11. மலையாளம் 12. மணிப்புரி 13. மராத்தி 14. நேபாளி 15. ஒரியா
16. பஞ்சாபி 17. சமஸ்கிருதம் 18. சாந்தலி 19. சிந்தி 20. தமிழ்
21. தெலுங்கு 22. உருது.
இவற்றுள் தமிழ்மொழியே மிகவும் பழைமையுடையதாகும்.
45) உயர் கல்வி நிலையில் பெரும்பாலும் எந்த மொழி பயிற்று மொழியாக உள்ளது?
A) தமிழ்
B) ஆங்கிலம்
C) ஹிந்தி
D) கன்னடம்
விளக்கம்: வடஇந்திய மொழிகள் பல இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. பஞ்சாபி, சிந்தி, ஹிந்தி, உருது, குஜராத்தி, வங்காளம், ஒரியா, காஷ்மீரி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை இந்திய மக்களில் பெரும்பான்மையினர் பேசுகின்றனர். உயர்கல்வி நிலையில் பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது.
46) இந்தியாவில் போர்த்துகீசிய மொழி எங்கு பேசப்படுகிறது?
A) பாண்டிச்சேரி
B) கோவா
C) அந்தமான்
D) சிக்கிம்
விளக்கம்: பிரெஞ்சு மொழி – பாண்டிச்சேரி
போர்த்துக்கீசிய மொழி – கோவா.
47) 2011-மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் உள்ள கிறிஸ்துவரகள் எத்தனை பேர்?
A) 79.80 சதவீதம்
B) 14.23 சதவீதம்
C) 2.30 சதவீதம்
D) 1.72 சதவீதம்
விளக்கம்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினபடி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடி. அதில்,
இந்துக்கள் – 79.80 சதவீதம்
இஸ்லாமியர்கள் – 14.23 சதவீதம்
கிருத்துவர்கள் – 2.30 சதவீதம்
சீக்கியர்கள் – 1.72 சதவீதம்
பௌத்தர்கள் – 0.07 சதவீதம்
சமணர்கள் – 0.37 சதவீதம்
48) இந்தியாவில் தோன்றாத மதம் எது?
A) பௌத்தம்
B) சமணம்
C) சீக்கியம்
D) இஸ்லாம்
49) பொருத்துக.
அ. ஜம்மு-காஷ்மீர் – 1. சீக்கியர்கள்
ஆ. அருணாச்சலப்பிரதேசம் – 2. இஸ்லாமியர்கள்
இ. பஞ்சாப் – 3. கிறிஸ்துவர்கள்
A) 2, 3, 1
B) 1, 3, 2
C) 3, 2, 1
D) 2, 1, 3
விளக்கம்: ஜம்மு-காஷ்மீர் – இஸ்லாமியர்கள்.
அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் – கிருஸ்துவர்கள்
பஞ்சாப் – சீக்கியர்கள்
மற்ற மாநிலங்கள் – இந்துக்கள்.
அவரவர் சமயத்திற்கான வழிபாட்டு தலங்களை அமைத்துக்கொண்டு திருவிழாக்களை கொண்டாடியும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
50) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) வட இந்திய மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறை வேறுபட்டுள்ளது.
B) ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு, உடை, அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் போன்றவை மாறுபட்டு இருப்பதைக் காணலாம்.
C) ஆடை, அணிகலன்கள் அணியும் முறை, உணவு முறை ஆகியவற்றில் வேற்றுமைகள் காணப்படுகின்றன.
D) அனைத்தும்
விளக்கம்: வட இந்திய மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறை வேறுபட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு, உடை, அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் போன்றவை மாறுபட்டு இருப்பதைக் காணலாம்.
ஆடை, அணிகலன்கள் அணியும் முறை, உணவு முறை ஆகியவற்றில் வேற்றுமைகள் காணப்படுகின்றன.
இவை சமுதாய அமைப்பில் வேற்றுமைகள் உள்ளதைக் காட்டுகிறது.
51) உலகளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 2-ம் இடம்
B) 3-ம் இடம்
C) 4-ம் இடம்
D) 5-ம் இடம்
விளக்கம்: உலகளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் இந்திய 4-வது இடத்தில் உள்ளது. நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர்கள் விளைகின்றன.
52) அந்தந்த மாநிலத்தின் பொருளாதார நிலையுடன் தொடர்புடைய பயிர்களைப் பொருத்துக.
அ. பஞ்சாப் – 1. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
ஆ. மேற்கு வங்கம் – 2. பருத்தி
இ. மகாராஷ்டிரா, குஜராத் – 3. நெல், சணல்
ஈ. மத்தியப் பிரதேசம் – 4. கோதுமை
A) 3, 4, 2, 1
B) 2, 4, 3, 1
C) 4, 3, 2, 1
D) 2, 1, 3, 4
விளக்கம்: பஞ்சாப் – கோதுமை
மேற்கு வங்கம் – நெல், கோதுமை
மகாராஷ்டிரா, குஜராத் – பருத்தி
மத்தியப் பிரதேசம், கர்நாடகா – பருப்பு வகை, எண்ணெய் வித்து.
கேரளா – வாசனைத் திரவியம்
53) இந்தியா எந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகிறது?
A) தாராளமயமாதல்
B) உலகமயமாதல்
C) கலப்புப் பொருளாதாரம்
D) எதுவுமில்லை
விளக்கம்: இந்தியா முழுவதும் ஒரே விதமான வேளாண்பயிர்கள் விளைவிக்கப்படுவதில்லை. பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும் நாடாக இந்திய திகழ்கிறது. இப்பொருளாதாரக் கொள்கை அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்கெடுப்பைக் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானமே ஒரு குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. அந்த அடிப்படையில் மக்களிடையே பொருளாதார அடிப்படையில் ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி ஆகிய வேற்றுமைகள் நிலவுகின்றன.
54) இந்தியாவின் வடக்கு-தெற்கு நீளம் என்ன?
A) 2933 கி.மீ
B) 6000 கி.மீ
C) 7100 கி.மீ
D) 3214 கி.மீ
விளக்கம்: ஆசியக் கண்டத்தின் மத்திய தென்பகுதியில் அமைந்த நாடு இந்தியா. இது வடக்கு தெற்காக 3214 கி.மீ நீளம் கொண்டது.
55) இந்தியாவின் கிழக்கு – மேற்கு அகலம் என்ன?
A) 2933 கி.மீ
B) 6000 கி.மீ
C) 7100 கி.மீ
D) 3214 கி.மீ
விளக்கம்: இந்தியா கிழக்கு-மேற்காக 2933 கி.மீ நீளம் கொண்டது.
56) இந்தியாவில் நிலவியல் அடிப்படையில் எவ்வகை நிலங்கள் மிகுதியாக உள்ளன,
A) சமவெளி
B) மலைப்பகுதி
C) பீடபூமி
D) அனைத்தும்
விளக்கம்: இந்தியாவின் நிலவியல் அடிப்படையில் சமவெளி நிலங்கள் (விவசாய நிலங்கள்) மிகுதியாக உள்ளன.
57) எந்த நதியின் பெயரால் இந்தியாவிற்கு ‘ஹிந்த்’ என்ற பெயர் வந்தது?
A) கங்கை
B) சிந்து
C) பிரம்மபுத்திரா
D) ஹக்ளி
விளக்கம்: அயல்நாட்டவர்கள் இந்திய நிலப்பகுதிகளை ஒரே நாடாகக் கருதி வந்தனர். ‘ஹிந்த்’ என்ற பெயர் ‘சிந்து’ என்ற நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. கிரேக்கர்கள் முதன்முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும் பகுதி என்பதால் இத்துணைக் கண்டத்தை ‘சிந்து’ என்று அழைத்தனர்.
58) தொடக்ககாலத்தில் யாருடைய படையெடுப்புகளின் விளைவால் இந்தியா, இந்துஸ்தானம் என்ற பெயர்கள் உருவாயின?
A) பாரசீக படையெடுப்பு
B) இந்துஸ்தான் படையெடுப்பு
C) கிரேக்கப் படையெடுப்பு
D) A மற்றும் C
விளக்கம்: தொடக்க காலத்தில் பாரசீக, கிரேக்கப் படையெடுப்புகளின் விளைவால் இந்தியா, இந்துஸ்தானம் என்ற பெயர்கள் உருவாயின. சிந்து என்பதை அவர்கள் ஹிந்து என்று உச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை ‘ஹிந்துஸ்தான்’ என்று அழைத்தனர்.
59) புராண காலந்தொட்டே நமது நாடு______________என்ற பெயரினைக் கொண்டுள்ளது?
A) இந்தியா
B) ஹிந்துஸ்தான்
C) பாரதநாடு
D) பரத நாடு
விளக்கம்: புராண காலந்தொட்டே நமது நாடு ‘பாரத நாடு’ என்ற பெயரினைக் கொண்டுள்ளது.
60) வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் எது?
A) விந்திய சாத்புரா மலைத்தொடர்
B) இமய மலைத்தொடர்
C) ஆரவல்லி மலைத்தொடர்
D) A மற்றும் C
விளக்கம்: வடஇந்தியாவையும், தென்னிந்தியாவையும் விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் பிரித்தாலும், இந்தியாவைப் பாரதக் கண்டம் என்றே வழங்குகிறோம். அடிப்படையில் தான் பாரத நாட்டை பாரத மாதாவாக அனைவரும் கொண்டாடுகிறோம்.
61) பண்டைய தமிழர்கள் பண்பாட்டில் சிறந்து விளங்குகிறார் என்பதைக் கூறும் நூல் எது?
A) பத்துப்பாட்டு
B) எட்டுத்தொகை
C) A மற்றும் B
D) அகத்தியம்
விளக்கம்: பண்டைய தமிழர்கள் பண்பாட்டில் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க கால இலக்கியங்களாகிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் உணர்த்துகின்றன. இந்தியாவின் பழைமையான, உயர்வான பண்பாடே, அதன் ஒற்றுமைக்கும், வரலாற்றிற்கும் பின்னணியாக அமைந்துள்ளது.
62) அக்காலத்தில் சாதி, சமயம் வேற்றுமைகள் காணப்பட்டாலும் அந்நியர்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபட்டனர். அந்த அடிப்படையில் அரசியல் மற்றும் பண்பாடு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று யார் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்?
A) காந்தி
B) அப்துல்கலாம்
C) இராஜாஜி
D) ஜவஹர்லால் நேரு
விளக்கம்: ஜவஹர்லால் நேரு தன்னுடைய Discovery of India என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார். மன்னர்கள் இந்தியா முழுமைக்கும் வெற்றி கொண்டு ஆட்சி செய்தமையால் இராஜாதிராஜன், அதிராஜன், ஏக்ராட், சாம்ராட் போன்ற பட்டங்களைப் பெற்றுச் சீரும் சிறப்புமாக ஆட்சிப்புரிந்தமையை அறிய முடிகிறது.
63) நாடு முழுமைக்கும் பொதுவான இரயில்பாதை, தபால் தந்தித் துறையை ஏற்படுத்தி ஒற்றுமை உணர்வை வளர்த்தவர்கள் யார்?
A) அசோகர்
B) அக்பர்
C) ஒளரங்கசீப்
D) ஆங்கிலேயர்கள்
விளக்கம்: மௌரியப் பேரரசில் அசோகர், முகலாயப் பேரரசர்களில் அக்பர், ஒளரங்கசீப் போன்றோர் இந்தியா முழுமைக்கும் ஒரே மத்திய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். நாடு முழுமைக்கும் பொதுவான சட்டங்கள், பொது நாணயங்கள், அலுவலக மொழியாக பாரசீக மொழி நீண்ட நெடுஞ்சாலைகள் போன்றவற்றை உருவாக்கி இந்தியா முழுமைக்கும் அரசியல் ஒற்றுமையை நிலைநாட்டினார்கள். ஆங்கிலேயர்கள் நாடு முழுமைக்கும் பொதுவான இரயில்பாதை, தபால் தந்தி துறையை ஏற்படுத்தி ஒற்றுமை உணர்வை வளர்த்தனர்.
64) சமத்துவம், சகோதரத்துவம், தேசப்பற்று போன்றவற்றை மக்களிடையே பரப்பும் கருவிகளாக திகழந்தவை எவை?
A) மொழி
B) நாடகம்
C) திருவிழாக்கள்
D) எதுவுமில்லை
விளக்கம்: சமயங்களின் அடிப்படையில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்கிறது. சமயவேறுபாடுகளை மறந்து மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். சமய விழாக்களைக் கொண்டாட சமயங்களைக் கடந்து உதவி செய்கின்றனர். சமத்துவம், சகோதரத்துவம், தேசப்பற்று போன்றவற்றை மக்களிடையே பரப்பும் கருவிகளாக விழாக்கள் திகழ்கின்றன.
65) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. சமய விழாக்கள் மட்டுமின்றி பண்பாடு அடிப்படையிலான விழாக்களும் மக்கள் மனதில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையை விதைக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன.
2. கிராமிய விழாக்கள் சமயங்களின் அடிப்படையில் இருந்தாலும் பண்பாட்டு வகையிலான ஒற்றுமையை மக்கள் மனதில் விதைக்கின்றன
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சமய விழாக்கள் மட்டுமின்றி பண்பாடு அடிப்படையிலான விழாக்களும் மக்கள் மனதில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையை விதைக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன.
2. கிராமிய விழாக்கள் சமயங்களின் அடிப்படையில் இருந்தாலும் பண்பாட்டு வகையிலான ஒற்றுமையை மக்கள் மனதில் விதைக்கின்றன
66) ‘குருநானக் ஜெயந்தி’ எந்த மாநிலத்தில் நடைபெறும்?
A) தமிழ்நாடு
B) பஞ்சாப்
C) ஹரியானா
D) A மற்றும் B
விளக்கம்: ‘குருநானக் ஜெயந்தி’ பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. குருநானக் என்பவர் சீக்கிய மதகுரு ஆவார்.
67) தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விழாவில் அனைத்து மதத்தவரும் கலந்து கொள்கின்றனர்?
A) கந்தூரி விழா
B) வேளாங்கண்ணி மாதா ஆலயக் கொடியேற்ற விழா
C) சிக்கல் சிங்காரவேலர் ஆலய கந்தசஷ்டி விழா
D) அனைத்தும்
விளக்கம்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும், குருநானக் ஜெயந்தி, தமிழ்நாட்டின் நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழா, வேளாங்கண்ணி மாதா ஆலயக் கொடியேற்ற விழா, சிக்கல் சிங்காரவேலர் ஆலய கந்தசஷ்டி விழா போன்றவற்றில் சமயங்களைக் கடநது அனைத்து மதத்தவரும் கலந்து கொள்கின்றனர்.
68) தமிழகத்தில் கொண்டாடப்படும் எந்த விழா வடஇந்தியாவில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது?
A) தீபாவளி
B) நவராத்திரி
C) பொங்கல்
D) மாசிமகம்
விளக்கம்: இந்தியாவில் பல்வேறு விழாக்கள் சமயங்கள் அடிப்படையில் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்து சமயத்தவர்களால் தீபாவளி, நவராத்திரி, சித்திரைத் திருவிழா, ஸ்ரீஇராமநவமி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி, கும்பமேளா, மாசிமகம், தைப்பூசம், கார்த்திகைதீபம், கிருஷ்ணஜெயந்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல்விழா வடஇந்தியாவில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
69) பொருத்துக.
அ. கிறித்துவர்கள் – 1. மகாவீரர் ஜெயந்தி
ஆ. இஸ்லாமியர்கள் – 2. புத்தபூர்ணிமா
இ. பௌத்தர்கள் – 3. பக்ரீத்
ஈ. சமணர்கள் – 4. கிறிஸ்துமஸ்
A) 4, 3, 2, 1
B) 3, 4, 2, 1
C) 2, 4, 3, 1
D) 1, 4, 3, 2
விளக்கம்: கிறித்துவர்கள் – கிறிஸ்துமஸ்
இஸ்லாமியர்கள் – மிலாடிநபி, ரம்ஜான், பக்ரீத்
பௌத்தர்கள் – புத்தபூர்ணிமா
சமணர்கள் – மகாசிவராத்திரி
சீக்கியர்கள் – குருநானக் ஜெயந்தி
70) சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.
1. அனைத்து சமய மக்களும் தூய அன்பு, சகிப்புத் தன்மை, உண்மையான பக்தி ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்று நம்புகின்றனர்.
2. பல்வேறு விழாக்களை ஒற்றுமையுடனும், மகிச்சியுடனும் அனைவரும் கொண்டாடுவதால் இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை உலகிற்கு நிலைநாட்டுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. அனைத்து சமய மக்களும் தூய அன்பு, சகிப்புத் தன்மை, உண்மையான பக்தி ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்று நம்புகின்றனர்.
2. பல்வேறு விழாக்களை ஒற்றுமையுடனும், மகிச்சியுடனும் அனைவரும் கொண்டாடுவதால் இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை உலகிற்கு நிலைநாட்டுகிறது
71) தவறான கூற்றைத் தேர்வு செய்க.
A) இந்தியாவிலுள்ள சமயங்களில் ஒருகடவுள் கோட்பாடு, ஆன்மாவின் அழியாத்தன்மை, அவதாரக் கோட்பாடுகள், கர்மாவினைக் கோட்பாடுகள், வீடுபேறு போன்று எல்லா நிலைகளிலும் இந்தியச் சமயங்கள் ஒத்திருப்பதை அறிய முடிகிறது.
B) சமயச் சடங்குகளில் மற்றும் பழக்கவழக்கங்களில் அடிப்படையான தன்மைகள் வெவ்வேறாக உள்ளன.
C) தென்னிந்தியர்கள் வடக்கே காசி புனிதப்பயணம் மேற்கொள்வதும், வடஇந்தியர்கள் தெற்கே உள்ள இராமேஸ்வரத்திற்கும் புனிதப்பயணம் மேற்கொள்வதும் நமது நாட்டின் சமய மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தும்
D) A மற்றும் B
விளக்கம்: நாடு முழுவதும் சமயச் சடங்குகளில் மற்றும் பழக்கவழக்கங்களில் அடிப்படையான தன்மைகள் ஒன்றாகவே உள்ளன.
இந்தியாவிலுள்ள சமயங்களில் ஒருகடவுள் கோட்பாடு, ஆன்மாவின் அழியாத்தன்மை, அவதாரக் கோட்பாடுகள், கர்மாவினைக் கோட்பாடுகள், வீடுபேறு போன்று எல்லா நிலைகளிலும் இந்தியச் சமயங்கள் ஒத்திருப்பதை அறிய முடிகிறது.
தென்னிந்தியர்கள் வடக்கே காசி புனிதப்பயணம் மேற்கொள்வதும், வடஇந்தியர்கள் தெற்கே உள்ள இராமேஸ்வரத்திற்கும் புனிதப்பயணம் மேற்கொள்வதும் நமது நாட்டின் சமய மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தும்
72) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
A) வைதீக சமயநெறியில் சிவபெருமான், விஷ்ணு போன்ற கடவுளர்களை வணங்குவதும், இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்களைப் போற்றுவதும், வேதங்கள், பகவத்கீதை, புராணங்கள் போன்றவற்றைப் புனிதமாகக் கருதுகின்றன மனநிலை இந்தியா முழுமைக்கும் ஒன்றாகவே உள்ளது.
B) இந்துக்கள் தர்காவிற்கும், தேவாலயத்திற்கும் சென்று, வழிபடுவதும் இந்தியாவின் சமய ஒற்றுமையைக் காட்டுகிறது.
C) இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, ஒற்றுமையுடன் வாழ இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது
D) அனைத்தும் சரி
விளக்கம்: வைதீக சமயநெறியில் சிவபெருமான், விஷ்ணு போன்ற கடவுளர்களை வணங்குவதும், இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்களைப் போற்றுவதும், வேதங்கள், பகவத்கீதை, புராணங்கள் போன்றவற்றைப் புனிதமாகக் கருதுகின்றன மனநிலை இந்தியா முழுமைக்கும் ஒன்றாகவே உள்ளது.
இந்துக்கள் தர்காவிற்கும், தேவாலயத்திற்கும் சென்று, வழிபடுவதும் இந்தியாவின் சமய ஒற்றுமையைக் காட்டுகிறது.
இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, ஒற்றுமையுடன் வாழ இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது
மேலும் பிற சமய மக்கள் தங்களுக்குரிய இறைவழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொண்டு வழிபடவும் உரிமை வழங்குகிறது. சமயமும் சமயத்திருவிழாக்களும் மக்கள் மனதில் அறநெறிப்பண்புகளையும், ஒழுக்கநெறிகளையும் வளர்க்கின்றன.
73) எது இலக்கியங்களின் கருவூலமாகத் திகழ்கிறது?
A) இந்தியா
B) தமிழ்நாடு
C) இலங்கை
D) எதுவுமில்லை
விளக்கம்: இந்தியா இலக்கியங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. வேதங்கள், மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை, விவிலியம், திருக்குரான் மற்றும் திருக்குறள் போன்ற நூல்கள் பிற இந்திய மொழிகளிலும் கிடைக்கப்பெறுகின்றன.
74) ‘மேகதூதம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) இராமானுஜர்
B) காளிதாசர்
C) சங்கரர்
D) கபீர்
விளக்கம்: மேகதூதம் என்ற நூலின் ஆசிரியர் காளிதாசர்.
75) ‘சாகுந்தலம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) இராமானுஜர்
B) காளிதாசர்
C) சங்கரர்
D) கபீர்
விளக்கம்: காளிதாசரின் மேகதூதம், சாகுந்தலம் ஆகிய நூல்கள் இந்தியாவின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், சங்கரர், இராமானுஜர் கபீர், குருநானக் மற்றும் சைதன்யர் போன்றோர்களால் எழுதப்பட்ட தத்துவ கோட்பாடுகள் இந்தியா முழுமைக்கும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
76) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் நூலை எழுதியது யார்?
A) ஆழ்வார்கள்
B) நாயன்மார்கள்
C) திருமூலர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: ஆழ்வார்களால் எழுதப்பட்ட நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் மற்றும் நாயன்மார்களால் எழுதப்பட்ட தேவாரப் பாடல்கள் கோவில்களில் பாடப்பட்டு வருகிறது. இத்தகைய இலக்கியப் படைப்புகள் இந்தியர்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன. எனவே, இலக்கியங்களின் கருவூலமாகத் திகழ்கின்றது.
77) பொருத்துக
அ. பொங்கல் – 1. பீகார்
ஆ. மகரசங்கராந்தி – 2. தமிழ்நாடு
இ. ஓணம் – 3. மத்தியப்பிரதேசம்
ஈ. லொஹரி – 4. கேரளா
A) 4, 3, 2, 1
B) 2, 1, 4, 3
C) 3, 2, 4, 1
D) 1, 4, 3, 2
விளக்கம்: அறுவடைத் திருவிழா – மாநிலம்
பொங்கல் – தமிழ்நாடு
மகரசங்கராந்தி – கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பீகார்
ஓணம் – கேரளா
லொஹரி – மத்தியப் பிரதேசம்
78) பொருத்துக.
அ. பஞ்சாப் – 1. நபன்னா
ஆ. அசாம் – 2. போஹாலி பிஹீ
இ. வங்காளம் – 3. பைசாகி
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 3, 1, 2
D) 2, 3, 1
விளக்கம்: அறுவடைத் திருவிழா – மாநிலம்
பைசாகி – பஞ்சாப்
போஹாலி பீஹி – அசாம்
நபண்ணா – வங்காளம்
நாடு முழுவதும் விவசாயிகள் கொண்டாடும் அறுவடை திருவிழாக்கள் நமது பழைமையான நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை உலகிற்கு எடுத்தியம்புகின்றன.
79) தவறான கூற்றைத் தேர்வு செய்க.
1. இந்தியாவில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து உயரிய பண்பாட்டை உலகறிய செய்துள்ளனர்.
2. பண்பாடு என்பது ஒருமுகத்தன்மை வாய்ந்த வாழ்க்கை நெறியாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்:டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பண்பாடு என்பது ஒட்டு மொத்த மக்களின் பண்பட்ட சமுதாயத்தின் விளைவேயாகும். மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியம், நம்பிக்கைகள், ஒழுக்கக்கோட்பாடுகள், நுண்கலை மற்றும் கட்டடக்கலையின் வாயிலாக பண்பாட்டில் ஒற்றுமையை உணர முடிகிறது. எனவே, பண்பாடு என்பது பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கையின் நெறிமுறையாகும்.
80) சரியான கூற்றை தேர்வு செய்க.
A) இந்திய பண்பாட்டை வெளிப்படுத்தும் இலக்கியங்களில் ஒரே சீரான பண்பாட்டுக் கூறுகள், சிந்தனைகள் இருப்பதைக் காணலாம்.
B) நமது நாட்டிலுள்ள அனைத்து சமயத்தினரும் அவரவருக்குரிய பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.
C) இப்பண்பாடு பல மாற்றங்களைக் கடந்து வாழ்ந்தாலும் விட்டுக்கொடுத்தல், வந்தோரை வாழவைத்தல், சகிப்புத்தன்மை போன்ற பண்புகளால் இன்றுவரை சிதைவுறாமல் வளர்ந்து வருகிறது.
D) அனைத்தும் சரி.
விளக்கம்: இந்திய பண்பாட்டை வெளிப்படுத்தும் இலக்கியங்களில் ஒரே சீரான பண்பாட்டுக் கூறுகள், சிந்தனைகள் இருப்பதைக் காணலாம்.
நமது நாட்டிலுள்ள அனைத்து சமயத்தினரும் அவரவருக்குரிய பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.
இப்பண்பாடு பல மாற்றங்களைக் கடந்து வாழ்ந்தாலும் விட்டுக்கொடுத்தல், வந்தோரை வாழவைத்தல், சகிப்புத்தன்மை போன்ற பண்புகளால் இன்றுவரை சிதைவுறாமல் வளர்ந்து வருகிறது.
81) மாமல்லபுரச் சிற்பங்கள் யார் காலத்தவை?
A) பல்லவர்
B) சேரர்
C) சோழர்
D) பாண்டியர்
விளக்கம்: இந்தியக் கட்டடகக்கலையின் வளர்ச்சி பெரும்பாலும் சமயத் தொடர்புடையது. பல்லவர் காலத்து மாமல்லப்புரச் சிற்பங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் போன்றவை பழங்கால தென்னிந்தியக் கட்டக்கலைக்கு சான்றாகும்.
82) ஸ்தூபி என்ற கட்டட அமைப்பு முறை எங்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது?
A) வடஇந்தியா
B) தென்னிந்தியா
C) தமிழகம்
D) பாரசீகம்
விளக்கம்: காஞ்சி, சாராநாத் உள்ளிட்ட ப இடங்களில் பழைமையான ஸ்தூபிகள் காணப்படுகின்றன.
83) பாரசீகக் கட்டடப்பாணியின் கட்டடக்கலை எவை?
A) இந்திய தேவாலயம்
B) மசூதி
C) புத்தமடம்
D) இந்து கோயில்
விளக்கம்: பாரசீகக் கட்டடப்பாணியில் மசூதிகள் கட்டப்பட்டடன. பூரி ஜெகந்நாதர் கோயில், கோனார்க் கோயில, காசி விஸ்வநாதர் கோயில், வைஷ்ணவி தேவி கோயில், தாஜ்மஹால், செங்கோட்டை போன்றவை வடஇந்தியக் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும்.
84) செங்கோட்டை எங்கு உள்ளது?
A) ஆக்ரா
B) டெல்லி
C) காஷ்மீர்
D) ஒடிசா
விளக்கம்: டெல்லியிலுள்ள செங்கோட்டை வடஇந்தியக் கட்டடக்கலைக்குச் சான்றாகும்.
85) வைஷ்ணவிதேவி கோயில் எங்கு உள்ளது?
A) ஆக்ரா
B) டெல்லி
C) காஷ்மீர்
D) ஒடிசா
விளக்கம்: காஷ்மீரிலுள்ள வைஷ்ணவிதேவி கோயில் வடஇந்தியக் கட்டக்கலைக்கு ஒரு சான்றாகும்.
86) கூற்றுகளை ஆராய்க.
1. வட இந்தியா – கர்நாடக இசை
2. தென்னிந்தியா – இந்துஸ்தான் இசை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வடஇந்தியாவில் இந்துஸ்தானி இசையும், தென்னிந்தியாவில் கர்நாடக இசையும் மக்களை ஒன்றிணைக்கும் கருவிகளாகத் திகழ்கின்றன. இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய நடனங்கள் வேறுபட்டாலும் அவை இந்தியர் என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றன.
87) நம் நாட்டின் பழைமையான பண்பாட்டையும் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கருவி எது?
A) இசை
B) நாடகம்
C) நடனம்
D) மொழி
விளக்கம்: நமது நாட்டில் பல்வேறு மொழிகள் பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்களால் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனியாக இலக்கண, இலக்கிய மொழி வளம் உண்டு. மொழிகள் விதத்தால் வேறுபட்டாலும், நமது நாட்டின் பழைமையான பண்பாட்டையும் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கருவியாகப் பயன்படுகின்றன.
88) பழங்கால, வடஇந்திய மக்களால் பேசப்பட்ட மொழி எது?
A) பாலி
B) பிராகிருதம்
C) சமஸ்கிருதம்
D) அனைத்தும்
விளக்கம்: பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் பழங்கால வடஇந்திய மக்களால் பேசப்படுகின்றன.
89) பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தென்னிந்தியாவில் பரப்பியர் யார்?
A) சமண துறவிகள்
B) முஸ்லீம்கள்
C) பௌத்தத் துறவிகள்
D) A மற்றும் C
விளக்கம்: பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை சமண, பௌத்த துறவிகள் தென்னிந்தியாவில் பரப்பினர். இம்மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அறக்கோட்பாடுகளையும், மனிதப் பண்புகளையும் வலியுறுத்துகின்றன.
90) தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இல்;க்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டு வளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே____________மொழி எனப்படும்?
A) தனிமொழி
B) பொதுமொழி
C) செவ்வியல் மொழி
D) எதுவுமில்லை
விளக்கம்: 2004-ல் தமிழ் செவ்வியல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
91) ‘உலகப் பொதுமறை’ எது?
A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) பரணி இலக்கியம்
விளக்கம்: தமிழ் மொழியிலும் அறம், பொருள், இன்பம் ஆகிய நற்கருத்துக்களை வலியுறுத்தும் இறவாப் புகழ் கொண்ட எண்ணற்ற இலக்கியங்கள் இயற்றப்பட்டன. திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
92) தமிழரின் வாழ்வியலை உலகிற்கு உணர்த்துவது எது?
A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) பரணி இலக்கியம்
விளக்கம்: தொல்காப்பியம் தமிழரின் வாழ்வியலை உலகிற்கு உணர்த்துகிறது.
93) தென்னிந்தியாவில் மூத்த திராவிட மொழியிலிருந்து தோன்றிய மொழி எது?
A) கன்னடம்
B) மலையாளம்
C) தமிழ்
D) A மற்றும் B
விளக்கம்: தென்னிந்தியாவில் மூத்த திராவிட மொழியிலிருந்து கன்னடம், . மலையாளம் ஆகிய மொழிகள் தோன்றின. இம்மொழிகளிலும் புகழ்பெற்ற பல இலக்கியங்கள் இயற்றப்பட்டன. இவை தென்னிந்திய மக்களின் பண்பாடு, வாழ்வியல் நெறிகள் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.
94) பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன?
A) அராபி
B) பாரசீகம்
C) A மற்றும் B
D) பாலி
விளக்கம்: பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் அராபிக் மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்நிலை மொழிகளுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டுகிறது.
95) இந்தியாவின் வானவில், கணிதம், அறிவியல், தத்துவ நூல்கள் எந்த நாட்டில் மொழிபெயர்க்கப்பட்டன?
A) ஐரோப்பிய நாடுகள்
B) மேற்காசிய நாடுகள்
C) தெற்காசிய நாடுகள்
D) அரபு நாடுகள்
விளக்கம்: இந்தியாவின் வானவியல், கணிதம், அறிவியல் தத்துவங்கள் மேற்காசிய நாடுகளால் மொழிபெயர்க்கப்பட்டன.
96) யாருடைய வருகைக்குப் பின்னர் ஆங்கிலம் ஆட்சிமொழியாக்கப்பட்டது?
A) டச்சு
B) ஆங்கிலேயர்
C) போர்ச்சுகீசியர்
D) ஐரோப்பியர்
விளக்கம்: ஐரோப்பியர் வருகைக்கு பின்னர் ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. திருக்குறள், திருவாசகம் போன்ற ஒப்பற்ற தமிழ் நூல்கள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. உலக மக்களால் விரும்பி படிக்கப்பட்டன.
97) ‘The Secret Way’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) மனோன்மணியம் சுந்தரனார்
B) லிட்டன் பிரபு
C) ரிப்பன் பிரபு
D) மேயோ பிரபு
விளக்கம்: இந்தியரும் ஆங்கிலத்தைக் கற்று மேற்கத்திய தத்துவங்களையும், இலக்கியங்களையும் தங்கள் மொழியில் மொழிபெயர்த்தனர். லிட்டன் பிரபு எழுதிய நூல் ‘The Secret Way’..
98) லிட்டன் பிரபுவின் ‘The Secret Way’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A) மனோன்மணியம் சுந்தரனார்
B) பாரதிதாசன்
C) ந. காமராசன்
D) மேத்தா
விளக்கம்: The Secret Way என்ற நூலை மனோண்மணியம் சுந்தரனார் தமிழில் மொழிபெயர்த்தார், இராஜாராம்மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோரின் தத்துவங்கள் மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பானது.
99) பொருந்தாததைத் தேர்வு செய்க.
A) தெலுங்கு
B) குரூக்
C) மால்தோ
D) பிராகுயி
விளக்கம்: ‘தெலுங்கு’ என்பது நடுத்திராவிட மொழி, குரூக், மால்தோ, பிராகுயி ஆகியவை வடதிராவிட மொழிகள்.
100) எது தென்திராவிட மொழி?
A) துளு
B) கோண்டி
C) கோயா
D) கூயி
விளக்கம்: தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.
நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டி, நாயக்கி, பெங்கோ, முண்டா.
வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுயி.
101) கவிராஜமார்க்கம் யார் காலத்தில் எழுதப்பட்டது?
A) இராஷ்டிரகூடர்கள்
B) குப்தர்
C) அசோகர்
D) சோழர்
விளக்கம்: இராஷ்டிரகூடர்கள் காலத்தல் கவிராஜமார்க்கம் என்ற நூல் எழுதப்பட்டது.
102) கவிராஜமார்க்கம் எந்த மொழியில் எழுதப்பட்டது?
A) தமிழ்
B) தெலுங்கு
C) கன்னடம்
D) ஹிந்தி
விளக்கம்: கவிராஜமார்க்கம் இராஷ்டிரசுடர் காலத்தில் கன்னட மொழியில் எழுதப்பட்டது.
103) ஆமுக்தமால்யதா எந்த மொழியில் எழுதப்பட்டது?
A) தமிழ்
B) தெலுங்கு
C) கன்னடம்
D) ஹிந்தி
விளக்கம்: ஆமுக்தமால்யதா தெலுங்கில் எழுதப்பட்டது.
104) ஆமுக்தமால்யதா யார் காலத்தில் எழுதப்பட்டது?
A) இராஷ்டிரகூடர்கள்
B) குப்தர்
C) அசோகர்
D) விஜயநகரப் பேரரசு
விளக்கம்: விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா என்ற நூலை எழுதினார். ஆமுக்தமால்யதா மற்றும் கவிராஜமார்க்கம் ஆகியவை அந்தந்த மொழிகளின் வளமையை எடுத்து இயம்புகின்றன.
105) சிவந்த மேனியையும், நீலமான கண் விழிகளையும் கொண்டிருந்தவர் யார்?
A) ஆரியர்
B) கிரேக்கர்
C) சாகர்கள்
D) அனைத்தும்
விளக்கம்: ஆரியர்கள், கிரேக்கர், சாகர்கள் ஆகியோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். இவர்கள் சிவந்த மேனியையும், நீலமான கண் விழிகளையும் கொண்டிருந்தனர்.
106) வடகிழக்கு இந்தியாவில் எத்தகைய காலநிலை நிலவுகிறது?
A) கடும் குளிர்
B) மிதமான குளிர்
C) வறண்ட காலநிலை
D) ஆண்டு முழுவதும் கடும் மழைப்பொழிவு
விளக்கம்: மிதமான குளிர்ப்பகுதியான வடகிழக்கிந்தியாவில் வாழ்ந்த மக்கள் சிவந்த உடல் அமைப்பையும், குள்ளமான தோற்றத்தையும் கொண்டிருக்கின்றனர். தென்னிந்தியாவில் வாழும் மக்கள் மாநிற மேனியையும், நடுத்தரமான தோற்றத்தையும் கொண்டிருக்கின்றனர். உடலமைப்பாலும், உணவு மற்றும் பழக்கவழக்கங்களாலும் தாங்கள் வாழும் பகுதிக்கேறப வேறுபட்டிருந்தாலும், இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
107) கூற்று: இந்திய மக்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
காரணம்: சமூகத்தில் தொழில்கள் கட்டமைப்பைப் பொருத்தவரையில் இன்னார்க்கு இன்ன தொழில் என்ற நிலை மாறி, யார் வேண்டுமானலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது. இது சமூக ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது.
A) கூற்று சரி, காரணம் சரியான விளக்கம்
B) கூற்று சரி, காரணம் சரியான விளக்கமல்ல
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
விளக்கம்: தொடக்கக் காலத்திருந்தே சமுதாய அமைப்பில் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படையில் வேற்றுமைகள் இருப்பதாலும், வாழ்வியலிலும், அதையொத்த பண்பாட்டு நிலைகளிலும் ஒரே மாதிரியான தன்மையையே இந்திய மக்கள் கொண்டிருக்கின்றனர். பல்வேறு விதமான சமூக வேறுபாடுகள இருந்தாலும் அவற்றை மறந்து இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போது, ஒருவருக்கொருவர் தங்களிடையேயான இந்தியர் என்ற ஒற்றுமையுடன் உதவி செய்து வாழ்ந்து வருகின்றனர. சமூகத்தில் தொழில்கள் கட்டமைப்பைப் பொருத்த வரையில் இன்னார்க்கு இன்ன தொழில் என்ற நிலை மாறி யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது. இந்நிலை சமூக ஒற்றுமையை பறைசாற்றுகிறது. இந்தியப் பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்க துணைபுரியும் காரணிகள்:
1. அரசர்கள்
2. ஒரே சீரான நிர்வாகம்
3.மொழியும் சமயமும்
4. போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்
5. வரலாறும் நாட்டுப்பற்றும்
108) கூற்று: இந்திய பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்க அக்காலத்தில் அரசர்களும் ஒரு முக்கிய காரணங்கள்.
காரணம்: இவர்கள் மண்ணாசைக் காரணமாக இந்தியாவின் பெரும்பகுதியை வெற்றிக்கொண்டு ஆட்சி புரிந்தனர். இதனால் பல்வேறு சிற்றரசர்களை ஒன்றாக இணைத்து இந்தியாவை ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்தனர்
A) கூற்று சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
B) கூற்று சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
விளக்கம்: இந்தியப் பெருநாட்டை ஆட்சிபுரிந்து வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பேரரசர்கள் அசோகர், சந்திரகுப்தல், சமுத்திரகுப்தர், அக்பர் போன்றவர்கள். இவர்கள் மண்ணாசைக் காரணமாக இந்தியாவின் பெரும்பகுதியை வெற்றிக்கொண்டு ஆட்சி புரிந்தனர். பல்வேறு சிற்றரசர்கள் ஒன்றாக இணைந்து இந்தியாவை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தனர். அரசர்களைத் தொடர்ந்து வீரர்களும் தங்களின் தீரச்செயல்களை நிலைநாட்டினர். இவர்களுடைய செயல்களும் நமது பண்பாட்டை ஒற்றுமையை வளர்த்தன என்பதையும் அறியமுடிகிறது.
109) கூற்றுகளை ஆராய்க.
1. இந்தியாவை ஆண்ட மௌரியர்கள், குப்தர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோர் ஆட்சி காலத்தில் அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து ஒரே சீரான ஆட்சியமைப்பினால் நிர்வாகம் செய்தனர்.
2. இந்த சீரிய நிர்வாக அமைப்பு இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு வித்திட்டது எனலாம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்தியாவை ஆண்ட மௌரியர்கள், குப்தர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோர் ஆட்சி காலத்தில் அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து ஒரே சீரான ஆட்சியமைப்பினால் நிர்வாகம் செய்தனர்.
2. இந்த சீரிய நிர்வாக அமைப்பு இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு வித்திட்டது எனலாம்.
110) தற்காலத்தில் எந்தெந்த மொழிகள் பண்பாட்டு ஒற்றுமையை பேணிவளர்க்கத் துணைபுரிகின்றன?
A) ஆங்கிலம், தமிழ், வடமொழி
B) ஆங்கிலம், தமிழ், இந்தி
C) ஆங்கிலம், இந்தி, உருது
D) அனைத்தும்
விளக்கம்: பழங்காலத்தில் தமிழும், வடமொழியும், தற்காலத்தில் ஆங்கிலமும், இந்தியும், தமிழும் பண்பாட்டு ஒற்றுமையைக் பேணிவளர்க்கத் துணைபுரிகின்றன. இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்தும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. மூலக்கருத்துக்களைக் கொண்டு தத்தம் பண்பாட்டிற்கேற்ப எழுதப்பட்டன.
111) பொருத்துக. (இராமாயணத்தை எந்த மொழியில் யார் எழுதினார் என்பதைப் பொருத்துக)
அ. வடமொழி – 1. வால்மீகி
ஆ. தமிழ் – 2. கம்பர்
இ. இந்தி – 3.துளசிதாசர்
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 1, 2, 3
D) 2, 1, 3
விளக்கம்: வடமொழி – வால்மீகி
தமிழ் – கம்பர்
இந்தி – துளசிதாசர்
இதன் மூலமே மூலநூலின் மையக்கருத்து மாறாமல் தத்தம் பண்பாட்டிற்கு இணங்க தொடர்புடைய செய்திகளைக் கூறியுள்ளனர். இவற்றின் மூலம் இந்தியாவில் பண்பாடு ஒற்றுமையை நிலைநாட்ட முடிகிறது.
112) கவிச்சக்ரவர்த்தி எனப்படுபவர் யார்?
A) வால்மீகி
B) கம்பர்
C) துளசிதாசர்
D) சேக்கிழார்
விளக்கம்: தமிழில் இராமாயணத்தை இயற்றி கம்பர் கவிச்சக்ரவர்த்தி எனப் புகழப்படுகிறார்.
113) உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கும் நிலைகளனாகத் திகழும் சமயம் எது?
A) இந்து சமயம்
B) கிறித்துவ சமயம்
C) முஸ்லீம் சமயம்
D) சீக்கிய சமயம்
விளக்கம்: உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கும் நிலைகளனாகத் திகழும் இந்து சமயம் மக்களின் ஆன்மீக வாழ்விலும், அகச்சிந்தனையிலும் உயரிய ஒற்றுமையை பேணி வளர்க்க துணைபுரிகின்றன.
114) கூற்றுகளை ஆராய்க.
1. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இருப்புப்பாதைகள், தபால் தந்தி முறை, தொலைபேசி. வானொலி விரைவான தகவல் தொடர்பிற்கு வித்திட்டன. பயண நேரத்தைக் குறைத்தது.
2. இதனால் மக்கள் பல இடங்களுக்கு எளிதாக சென்று வருகின்றனர். இது பண்பாட்டு ஒற்றுமைக்கு வித்திட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மேலும் இன்று வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தின் காரணமாக தொலைக்காட்சி, கணினி, மின்னணு அஞ்சல் சேவை, தொலைநகலி, குறுஞ்செய்தி மற்றும் முகநூல் இவற்றின் பயன்பாடுகளை அறிந்து மேலும் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
115) பின்வருவனவற்றுள் எது பண்பாடு ஒற்றுமையை வளர்க்க துணைபுரிகின்றது?
A) வரலாற்று அறிவு
B) நாட்டுப்பற்று
C) தேசிய உணர்வு
D) அனைத்தும்
விளக்கம்: பொதுவாக வரலாற்று மரபுகளை நமது இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். வரலாற்று மரபுகளை அறிந்து நாமும் நமது பண்பாட்டு ஒற்றுமைக்கு உறுதுணை புரிகிறோம். விடுதலை இயக்க வரலாற்றை அறிந்து நாட்டுப்பற்று மிக்கவர்களாய் வாழ வேண்டும் என்ற உணர்வு மேம்படுகிறது. எனவே பண்பாட்டு ஒற்றுமை நமது வரலாற்று அறிவு, நாட்டுப்பற்று, தேசிய உணர்வு ஆகியவை வளர்க்கத் துணைபுரிகின்றன.
116) இந்தியரின் அடிப்படைக் கோட்பாடு எது?
A) வாய்மையே வெல்லும்
B) சத்யமேவ ஜெயதே
C) வேற்றுமையில் ஒற்றுமை காண்பது
D) அனைத்தும்
விளக்கம்: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியரின் அடிப்படைக் கோட்பாடு என்பதை உணர வேண்டும். இதனை எதார்த்தமாய் உணர்து நாம் நம் ஒற்றுமை உணர்வை போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களான புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்தின்போது உலகறியச் செய்கிறோம். இத்தகைய நெருக்கடி காலங்களைத் தவிரத்து அமைதி காலத்திலும் அன்றாட வாழ்விலும் அன்பு, அமைதி, சகோதர மனப்பான்மை, ஒற்றுமை, பிற சமயத்தவரை அரவணைத்துச் செல்லும் நல்லிணக்க மனப்பான்மை உடையவராய் வாழ வேண்டும்.
117) “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்” என்பது யாருடைய வாக்கு?
A) திருவள்ளுவர்
B) திருமூலர்
C) திருநாவுக்கரசர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: “பிறப்புக்கும் எல்லா வுயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க எவ்வித வேறுபாடும் கருதாமல் அனைவரையும் சமமாகக் கருதிப் பழக வேண்டும். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். குறிப்பாகத் தன்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.
118) பின்வருவனவற்றுள் “ஒற்றுமையை” வலியுறுத்தும் பொருளில் அமைவது எது?
A) யாதும் ஊரே யாவரும் கேளிர்
B) எம்மதமும் சம்மதம்
C) ஒன்றே குலம், ஒருவனே தேவன்’
D) அனைத்தும்
விளக்கம்: பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்து, நடக்க வேண்டும். “எம்மதமும் சம்மதம்”என்ற பரந்த சமய உணர்வு வேண்டும். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”என்ற உயரிய கோட்பாட்டினை நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டும். நாட்டுப்பற்று மிக்கவராய், “நாடு நமக்கு என்ன செய்தது என்பதைக் கருதாமல் நாம் நாட்டிற்கு என்ன செய்தோம்” என்ற உணர்வுடன் நாட்டின் நலனுக்குப் பாடு பட வேண்டும். நமது அறிவையும், ஒற்றுமையும் நம் நாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும். உலகின் அனைத்துத் துறைகளிலும் நம்நாடு வளம் வாய்ந்ததாகத் திகழ நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
119) நமது தேசிய பாடலை இயற்றியவர் யார்?
A) பக்கிம் சந்திர சாட்டர்ஜி
B) இரவீந்திரநாத் தாகூர்
C) பாரதி
D) மனோன்மணியம் பெ.சுந்தரனார்
விளக்கம்: தேசியப்படாலான வந்தே மாதரம் என்ற பாடலை இயற்றியவர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி. இவரது நூலான ஆனந்தமடம் என்ற நூலிலிருந்து இப்பாடல் தரப்பட்டுள்ளது.
120) நமது தேசிய கீதத்தை இயற்றியர் யார்?
A) பக்கிம் சந்திர சாட்டர்ஜி
B) இரவீந்திரநாத் தாகூர்
C) பாரதி
D) மனோன்மணியம் பெ.சுந்தரனார்
விளக்கம்: நமது தேசிய கீதமான ஜனகன மன என்ற பாடலை இரவீந்திரநாத் தாகூர் இயற்றினார். இந்தியாவின் தேசியக் கொடியாக தர்மச்சக்கரத்துடன் கூடிய மூவர்ணக்கொடியும், தேசியப்பாடல், தேசியகீதம் ஆகியவையும் இந்திய அரசிலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
121) பொருத்துக.
அ. தேசிய பறவை – 1. புலி
ஆ. தேசிய விலங்கு – 2. மயில்
இ. தேசிய மரம் – 3. தாமரை
ஈ. தேசிய மலர் – 4. ஆலமரம்
A) 2, 1, 4, 3
B) 2, 4, 1, 3
C) 2, 3, 4, 1
D) 4, 3, 2, 1
விளக்கம்: தேசிய பறவை – மயில்
தேசிய விலங்கு – புலி
தேசிய மலர் – தாமரை
தேசிய மரம் – ஆலமரம்
தேசிய நதி – கங்கை
தேசிய நீர் விலங்கு – டால்பின்
தேசிய பாரம்பரிய விலங்கு – யானை
ஆகியவை இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
122) பொருத்துக.
அ. சுதந்திர தினம் – 1. ஆகஸ்டு 15
ஆ. குடியரசுத்தினம் – 2. ஜனவரி 26
இ. காந்தி ஜெயந்தி – 3. அக்டோபர் 2
ஈ. குழந்தைகள் தினம் – 4. நவம்பர் 14
A) 3, 4, 2, 1
B) 1, 2, 4, 3
C) 1, 2, 3, 4
D) 1, 4, 3, 2
விளக்கம்: சுதந்திர தினம் – ஆகஸ்டு 15
குடியரசுத்தினம் – ஜனவரி 26
காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2
குழந்தைகள் தினம் – நவம்பர் 14
123) விவேகானந்தரின் பிறந்த தினம் என்ன?
A) ஜனவரி 12
B) ஜனவரி 23
C) அக்டோபர் 2
D) நவம்பர் 14
விளக்கம்: ஜனவரி 12 – விவேகானந்தரின் பிறந்த தினத்தை நாம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறோம். சுதந்திர தினம், குடியரசு தின் காந்தி பிறந்த நாள், நேரு பிறந்தநாள், விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகியவை இந்தியர் என்ற உணர்வுடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.
124) கூற்றுகளை ஆராய்க.
A) இன்று உலக அரங்கில் வேண்டப்படுவது சமாதாணம்
B) எத்தகைய வேற்றுமைக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் இடம் தராமல் சமாதான உணர்வுடன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
C) ‘உலக அமைதியே உயர்வுக்கு வழி’ என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கு அயராது பாடுபட வேண்டும். சமாதான வாழ்விற்கு அடிப்படை சகோதரத்துவ மனப்பான்மையாகும்.
D) அனைத்தும் சரி
விளக்கம்: இன்று உலக அரங்கில் வேண்டப்படுவது சமாதாணம்
எத்தகைய வேற்றுமைக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் இடம் தராமல் சமாதான உணர்வுடன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
‘உலக அமைதியே உயர்வுக்கு வழி’ என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கு அயராது பாடுபட வேண்டும். சமாதான வாழ்விற்கு அடிப்படை சகோதரத்துவ மனப்பான்மையாகும் இவ்வகை நாடும் நம் வேற்றுமைகளைக் களைந்து சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழவேண்டும்.
125) இந்தியரின் ஒருமைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது எது?
A) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உணர்வு
B) வாய்மையே வெல்லும் என்ற உணர்வு
C) A மற்றும் B
D) எதுவுமில்லை
விளக்கம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உணர்வு இந்திய ஒருமைப்பாட்டிற்கு வலிமை சேர்க்கிறது. இந்த உணர்வே ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெறக் காரணமாக அமைந்தது.