Tnpsc Question And Answer Videos

ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவர் யார்?

ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவர் யார்?

இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ராஜதரங்கினி என்ற நூல் ஆகும்.

இராஜதரங்கிணி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதரான கல்ஹனர், என்பவர் 1148 -1149 கால கட்டத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு கவிதை நூலாகும். இராஜதரங்கிணி – மன்னர்களின் ஆறு எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனும், எட்டு தரங்கங்கள் எனும் அத்தியாயங்களுடன் கூடியது. தரங்கம் என்றால் அலை என பொருள்.

சமஸ்கிருத கவிதை வடிவில் உள்ள வரலாற்று நூலான “இராஜதரங்கிணி” ஜம்மு காஷ்மீரின் 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கூறுவதுடன், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றையும் விவரிக்கிறது.

இந்நூலில், கிபி 740-இல் கார்கோட மன்னர்கள் கன்னோசி மன்னர் யசோவர்மனை வீழ்த்தி, துருக்கியர்கள் மற்றும் திபெத்தியர்களை வென்றார்கள் என அறியப்படுகிறது. மேலும் இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சாரதா பீடம் கோயில் பற்றி இராஜதரங்கிணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!