Samacheer NotesTnpsc

மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை Notes 9th Social Science

9th Social Science Lesson 7 Notes in Tamil

7. மேம்பாட்டை அறிவோம் : தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை

அறிமுகம்

  • நாம் பரவலாக ‘மேம்பாடு’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறிக்கிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே அதன் ‘பொருளாதார மேம்பாடு’ என்று அறியப்படுகிறது. இருப்பினும் இக்கருத்தாக்கத்தின் விளக்கம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதும் நபருக்கு நபர் அதன் பொருள் மாறுவதும் தொடர் நிகழ்வாக அமைகின்றது.

மேம்பாடு பற்றிய பல்வேறு நோக்கங்கள்

  • ஒவ்வொரு உயிரும் தங்களின் குறிக்கோள் அல்லது விருப்பத்தை அடைய அவரவர் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறார்கள். அதேபோல், ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
  • இதற்கான காரணங்களைக் கண்டறிந்தால் நமது இலக்குகளை அடைவதற்கான வழிகள் நாட்டினை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். இதுவே மேம்பாடு எனப்படும்.
  • மேலே உள்ள வரைபடத்தை நீங்கள் கவனித்தால் வருமானம் தவிர மக்கள் அவர்களுடைய சுடமான வளர்ச்சியை நாடுவதை அறியலாம்.
  • உயர்ந்த வருவாய், தரமானக் கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைவான வறுமை, நிலத்தச் சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கிறது.

பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள்

  • பொருளாதார மேம்பாம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் , புதிய தொழில் நுட்பங்களையும் ஏற்றுக் கொள்வதாகும்.
  • “பொருளாதார மேம்பாடு” என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.
  • நிகர நாட்டு உற்பத்தி (NNP), தனிநபர் வருமானம் (PCI), வாங்கும் திறன் சமநிலை (PPP), மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI) ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையானக் குறியீடுகளாகும்.

G -8 நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) (2018) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) (2018)
இங்கிலாந்து 40,03,000 ஆப்கானிஸ்தான் 610.24
ரஷ்யா 10,63,000 பங்களாதேஷ் 1,66,000
கனடா 47,66,000 பூடான் 3,22,000
பிரெஞ்சு 42,42,000 இந்தியா 1,99,000
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 61,69,000 மாலத்தீவுகள் 1,32,000
இத்தாலி 33,73,000 நேபாளம் 882.93
ஜப்பான் 40,06,000 பாகிஸ்தான் பொருந்தாது
ஜெர்மனி 47,54,000 இலங்கை 4,05,000
  • ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்டக் காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பே, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

நிகர நாட்டு உற்பத்தி

  • நிகர நாட்டு உற்பத்தி தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுகிறது. இது நாட்டு வருமானம் என்றும் அறியப்படுகிறது.
  • தனி நபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தின் உயர்வு என்று பொருள்படும். எனவே, தனிநபர் வருமானமே நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.
  • நாடுகளின் மேம்பாட்டை அளவிடுவதற்கு வருமானம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • அதிக வருமானம் கொண்ட நாடுகள் குறைவான வருமானத்தைக் கோண்ட நாட்டைவிட அதிக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படுகின்றது. எனவே, நாட்டு வருமானமே பொருளாதார மேம்பாட்டின் குறியீடாகக் கருதப்படுகிறது.

பிரிக்ஸ் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) (2018)
பிரேசில் 10,51,000
ரஷ்யா 10,63,000
இந்தியா 1,99,000
சீனா 9,38,000
தென் ஆப்பிரிக்கா 6,29,000

தலா வருமானம்

  • நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட, மொத்த வருவாயைக் கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள்.
  • நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதென்று சொல்ல முடியாது.
  • ஒரு நாட்டிலுள்ள மக்களைவிட வேறொரு நாட்டில் உள்ள மக்களிடையே நல்ல வருமானம் உள்ளது.
  • நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். சராசரி வருவாயை தலா வருமானம் என்று அழைக்கப்படுகிறது,
  • அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அமெரிக்க டாலரில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

  • உலக வங்கியின் அறிக்கையின்படி, நாடுகளின் வருமான அளவீடுகள் கீழ்க்கண்டவாறு புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (2017-18)
வ.எண் நாடுகளின் வகைகள் தலா வருமானம் (அமெரிக்க டாலரில்)
1 குறைந்த வருவாய் < 1005
2 குறைந்த நடுத்தர வருவாய் 1006 – 3955
3 உயர் நடுத்தர வருவாய் 3956 – 12,235
4 உயர்ந்த வருவாய் 12,235

வாங்கும் திறன் சமநிலை

  • வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கேற்றவாறு, உள்நாட்டு சந்தையில் அதே அளவிலானப் பொருட்களையும் வாங்குவதற்குத் தேவைப்படுகிறது.
  • வாங்கும் திறன் சமன்பாட்டின் நுட்பம் என்பது இரு நாடுகளின் இரண்டு நாணயங்களுக்கிடையேயானப் பரிமாற்றம் அந்தந்த நாடுகளில் உள்ள இரண்டு நாணயங்களின் துல்லியமான வாங்கும் திறனை வெளிப்படுத்தத் தேவை என்பதை மதிப்பிடுவதற்கு உதவுகிறது.
  • சமீபத்தில், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக ஊள்ளது.
  • மேலும் சீனா முதலிடத்திலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மனிதவள மேம்பாட்டு குறியீடு

  • எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும். உற்பத்தித் துறையில் பயன்படுத்தக் கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனித வளம் என்ற சொல் குறிக்கிறது.
  • மனித வளமேம்பாடு என்பது மனிதனின் உடல்திறன் மற்றும் சுகாதாரத் திறன்களை கல்வியின் மூலம் மேம்படுத்துவதாகும். எனவே மனித வளத்தில் கல்வி மற்றும் உடல்நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.
  • எடுத்துக்காட்டாக ஒரு குழந்தைக்கு அளிக்கப்படும் நல்ல கல்வி, சிறந்த சுகாதாரம் எதிர்காலத்தில் அவர்களுக்கு அதிக வருமானம் பெறக்கூடிய முதலீடு ஆகும்
  • இது உற்பத்தியின் மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புத் தந்து அதிக வருமானம் அளிக்க முடியும்.
  • மனித வளர்ச்சி குறியீடு என்பது சமூகத்தின் மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் குறிக்கிறது.
  • இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும். அதன் தலைமையகம் புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.
வ.எண் நாடுகள் மனிதவள மேம்பாடு குறியீடு 2010 மனிதவள மேம்பாடு குறியீடு 2015
1 இந்தியா 0.580 0.624
2 ரஷ்யா 0.785 0.804
3 சீனா 0.700 0.738
4 பாகீஸ்தான் 0.525 0.550
5 நேபாளம் 0.529 0.558
6 பங்களாதேஷ் 0.545 0.579
7 தென் ஆப்பிரிக்கா 0.638 0.666
8 இலங்கை 0.746 0.766
  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் உலகின் மனித வளர்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
  • கடந்த காலங்களில் பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்தை, மக்களின் உடல் உழைப்பை மூலதனம் ஆக்குவதன் மூலமே முதலீட்டை அதிகரிக்க முடியும் என்று நம்பினர்.
  • ஆனால் மனித உழைப்பின் முதலீடு என்பது உடல்நலத்தின் மீது செய்யப்படும் முக்கியமான முதலீடு என்பதை பின் நாட்களில் அவர்கள் உணர்ந்தனர்.

நிலையான மேம்பாடு

  • நிலையானப் பொருளாதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும். எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
வ.எண் அளவுகள் மாநிலங்கள்
ஆந்திரப் பிரதேசம் கர்நாடகம் கேரளா குஜராத் உத்திரப் பிரதேசம் தமிழ்நாடு இந்தியா
1 கல்வியறிவு விகிதம் % (2011) 67.02 75.36 94 78.03 69.72 80.09 74.04
2 பாலின விகிதம் (1000 ஆண்டுகளுக்கு தலா பெண்களின் எண்ணிக்கை) (2011) 993 973 1084 919 912 996 943
3 உயர்கல்வியில் சேர்க்கை% (2015 –16 ) 30.8 26.1 30.8 20.7 24.5 44.3 24.5
  • தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென்மாநிலங்களின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசியச் சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • தமழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவில் மிக உயர்ந்ததாகும்.
  • சுற்றுச்சூழல் சீரழிவின் விளைவுகள் தேசிய, மாநில எல்லைகளுக்கு உட்பட்டு உள்ளது.
  • அறிவியல் அறிஞர்கள் பொருளாதார வல்லுநர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிற சமூகவியலாளர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து உழைப்பதன் விளைவாக நிலையான மேம்பாடு அமையும்.

  • இயற்கை வளங்களைப் புதுப்பிக்கத் தக்க மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • நிலத்தடிநீர் என்பது புதுப்பிக்கத் தகுந்த வளங்களின் ஒரு எடுத்துக்காட்டாகும்.
  • வளங்களை மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாகச் செலவு செய்து விட்டால் எவ்வாறு நிலையான மேம்பாடு சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது.
  • புதுப்பிக்கத் தகாத வளங்கள் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தியப் பிறகு தீர்ந்து விடும். மேலும் அவற்றைப் பூர்த்தி செய்ய இயலாது.

  • நாம் இந்த உலகத்தை நமது முன்னோர்களுக்காக பெற்றிருக்கவில்லை. மாறாக நாம் நமது குழந்தைகளுக்காகப் பெற்றிருக்கிறோம்.
  • நிலையான மேம்பாட்டை அடைவதற்கு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தன்மையை சம நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • பொதுவாக மேம்பாடு அல்லது முன்னேற்றம் பற்றிய கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.
  • சமூக உறுப்பினராகவும் தனிப்பட்ட நபராகவும் நாம் செல்ல வேண்டிய பாதை மற்றும் இலக்குகள் பற்றி தெளிவானக் கருத்துக்களுடன் இருக்க வேண்டும். இவ்வாறு வளர்ச்சியைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

புதுப்பிக்கத் தக்க வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள்
  • புதுப்பிக்கத் தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.
  • இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
  • எடுத்துக்காட்டு: சூரியசக்தி, காற்று சக்தி, நீர், மரம், காகிதம்
  • புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்தவும் சேதப்படுத்தவும் செய்கின்றன.
  • இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பலநூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: உலோகங்கள், கண்ணாடி, புதைப்படிவ எரிபொருட்கள் (நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு, டீசல்)

நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்

மரபு சாரா வளங்களை பயன்படுத்துதல்

  • இந்தியாவின் மின்சார தேவைகளைப் பூர்த்திசெய்ய அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களைச் சார்ந்திருக்கிறது.
  • இந்த இரண்டு உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன.
  • அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு கார்பன் டைஆக்டைடு வெளியேற்றிச் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.

இந்தியாவில் சூரிய சக்தி

  • சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுத்துவதாகும்.
  • சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின் சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேதி வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.
  • சூரிய மின் தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த சூரிய மின்சக்தி அமைப்புகள் பெரும்பாலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் செலவைக் குறைக்க அவர்களால் நிறுவப்படுகின்றன.
  • தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு (Solar Panels) கொண்ட மாநிலமாக உள்ளது.
  • இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.
  • தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின்ன் திறன் 1697 மெகாவாட் ஆகும்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் கொள்கைகள்

  • இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த 30ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
  • காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
  • நிலையற்ற காலநிலை குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு அணுகு முறைகளில் மாற்றம் கொண்டு, இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
  • இந்தியாவின் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A(g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.
  • நாட்டின் பொருளாதார மேம்பாடே வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது. இதன் பொருள் மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்கக் கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகும். இதற்கான சங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகும்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள்
வ.எண் சட்டம் செயல்பாடு
1 தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டன், 2010 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது.
2 பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல்
3 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்
4 வன (பாதுகாப்பு) சட்டம், 1980 காடுகளை அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல்
5 நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல்
6 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972 காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி

  • தமிழ்நாடு கூறைந்த காலகட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய சில மாநிலங்களுள் ஒன்று ஆகும். வறுமை, அடிப்படை வசதி, சமத்துவமின்மை போன்ற மிக மோசமான நிலையிலிருந்து மிக வேகமாகத் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
  • தற்காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
  • தற்காலத்தில் தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது. அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொழுதுபோக்குவரத்து, குடிநீர் வசதி, மின் இணைப்பு வழங்கள் போன்றப் பல திட்டங்களைக் குறிப்பிடலாம்.
  • பிறமாநிலங்களை விட தமிழ்நாட்டில் இன்று சிறப்பான பொதுச் சேவைகள் உள்ளது. அந்தச் சேவைகளில் பெரும்பாலானவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.
  • வளர்ச்சிப் பாதையை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
  • முதாலவது: செயலூக்கம் மிகுந்த சமூகநலக் கொள்கைகளைக் கொண்ட பொதுக் கல்வியின் மூலம் மிகவும் துல்லியமாக நமக்குப் புலப்படுகிறது. அதேபோல மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை, சமூகப் பாதுகாப்பு, பொதுநல வசதிகள் போன்றவற்றிலும் இந்த அம்சத்தைக் காணலாம்.
  • இரண்டாவது: மேற்கூறிய மூன்று மாநிலங்களும் அடிப்படையான பொதுச்சேவை வழங்குவதில் பொதுவானக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. மேற்கண்ட மாநிலங்களை விட பல்வேறு பொதுச் சேவைகளைத் தமிழ்நாடு இலவசமாக வழங்குகிறது என்பது முக்கியமானது.
  • மூன்றாவது: மேற்கண்ட முயற்சிகளைச் சாத்தியமாக்கிய, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பான நிர்வாக தீறமைதான் வெற்றிகரமான இந்த நிலையைச் சாத்தியப்படுத்தியது. மர[பு ரீதியாக அமைந்த சில அமைப்புகள், சுகாதார மையங்கள், அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்துக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவைதான் அவை. பாரம்பரியமிக்க இந்த அரசு அமைப்புகள் தான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தின.
  • நான்காவது: சாதி மற்றும் சமத்துவமின்மையைக் களைவதில் தமிழகம், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் காட்டிய அக்கறை, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. தமிழகமும் கேரளமும் சமத்துவமின்மையைக் களைவதில் அரும்பாடுபட்டு வெற்றியடைந்தன. இதில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவினர் மிகச் சிறந்த அளவில் பயனடைந்திருக்கிறார்கள்.
  • ஐந்தாவது: விரைவான வளர்ச்சி என்பது மாநில அரசுகளின் நடவடிக்கைகளின் விளைவு மட்டுமல்ல. மக்களாட்சி அரசியலில் பொது மக்கள் பங்கேற்பின் விளைவு ஆகும். சாதிப் பாகுபாடு உள்ளிட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடிய இயக்கங்களும் இதில் முக்கியமான பங்கு உண்டு.
  • இறுதியாக ஒரு முக்கியமான ஒன்று: மனிதத் திறன்களைப் பயன்படுத்தாமல் இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட மிஉயன்ற பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிட மனிதத் திறன்களைப்பயன்படுத்திய தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் அதிகமாகும் வறுமைநிலையும் பெரும்பாலான மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைவாகும் பொருளாதார வளர்ச்சியும் அக்கள் ஆதரவும் ஒண்றுக்கொன்று இணக்கமாக செயல்படுவதே முக்கியமான காரணம் ஆகும்.

ஆதாரம்: An Uncertain Glory புத்தகத்திலிருந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!