Book Back QuestionsTnpsc

மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Book Back Questions 7th Social Science Lesson 7

7th Social Science Lesson 7

7] மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.

யாத்திரைக் குடியிருப்பு: யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும். (எ. கா) தமிழ் நாட்டில் உள்ள பழனி – முருகன் கோவில்.

உலக சுகாதார நிறுவனம் (WHO): உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியம் இருக்க வேண்டியவையாவன. தூய்மையான பாதுகாப்பான சுற்றுச்சூழல். அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சியில் உள்ளுர் மக்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எளிதாக கிடைக்கக் கூடிய ஆரோக்கிய சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. காக்கசாய்டு இனத்தை ————– என்றும் அழைக்கலாம்.

(அ) ஐரோப்பியர்கள்

(ஆ) நீக்ரோய்டுகள்

(இ) மங்கோலியர்கள்

(ஈ) ஆஸ்திரேலியர்கள்

2. —————- இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.

(அ) காக்கசாய்டு

(ஆ) நீக்ரோக்கள்

(இ) மங்கோலியர்கள்

(ஈ) ஆஸ்திரேலியர்கள்

3. இந்தியாவின் ஆட்சி மொழி —————— ஆகும்.

(அ) மராத்தி

(ஆ) தமிழ்

(இ) ஆங்கிலம்

(ஈ) இந்தி

4. கிராமப்புறக் குடியிருப்புகள் —————- அருகில் அமைந்துள்ளது.

(அ) நீர்நிலைகள்

(ஆ) மலைப்பகுதிகள்

(இ) கடலோரப்பகுதிகள்

(ஈ) பாலைவனப்பகுதிகள்

5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.

(1) நகரம் (2) மீப்பெருநகரம் (3) தலைநகரம் (4) இணைந்த நகரம்

(அ) 4, 1, 3, 2

(ஆ) 1, 3, 4, 2

(இ) 2, 1, 3, 4

(ஈ) 3, 1, 2, 4

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தென் ஆப்பிரிக்காவின் ————- பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.

2. மொழியின் பங்கு என்பது ————— குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.

3. ————– குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

4. ————- நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.

5. ————- குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

III. பொருத்துக:

அ)

அ – ஆ

1. காக்கசாய்டு – அ) ஆசிய அமெரிக்கர்கள்

2. நீக்ராய்டு – ஆ) ஆஸ்திரேலியர்கள்

3. மங்கலாய்டு – இ) ஐரோப்பியர்கள்

4. ஆஸ்ட்ரோலாய்டு – ஈ) ஆப்பிரிக்கர்கள்

ஆ)

அ – ஆ

1. சட்லஜ் கங்கைச் சமவெளி – அ) சிதறிய குடியிருப்பு

2. நீலகிரி – ஆ) நட்சத்திர வடிவக் குடியிருப்பு

3. தென் இந்தியா – இ) செவ்வக வடிவ அமைப்பு

4. கடற்கரை – ஈ) குழுமிய குடியிருப்பு

5. ஹரியானா – வட்டக் குடியிருப்பு

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): உலகின் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.

காரணம் (R): மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

(அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(இ) கூற்றும் தவறு காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

2. கூற்று (A): பழனி – முருகன் கோவில். துமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

காரணம் (R): இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

(அ) காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்குகிறது

(ஆ) காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை

(இ) கூற்றும் தவறு காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

V. பொருந்தாததை வட்டமிடுக:

1. மீன் பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்.

2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை.

3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஐரோப்பியர்கள், 2. மங்கோலியர்கள், 3. இந்தி, 4. நீர்நிலைகள், 5. 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காலஹாரி, 2. மொழி, 3. நகர்ப்புற, 4. செயற்கைகோள், 5. யாத்திரை

III. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. அ, 4. ஆ

1. இ, 2. அ, 3. உ, 4. ஈ, 5. ஆ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது, 2. கூற்று சரி அனால் காரணம் தவறு

V. பொருந்தாததை வட்டமிடுக:

1. வங்கி அலுவல், 2. கங்கை, 3. காஞ்சிபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!