MCQ Questions

பேரியல் பொருளாதாரம் 12th Economics Lesson 1 Questions in Tamil

12th Economics Lesson 1 Questions in Tamil

1] பேரியல் பொருளாதாரம்

“பேரியல் பொருளாதாரம் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியதே” என்று கூறியவர்?

1. டான் புஸ் 2. சாமுவேல்சன்

3. பிஸ்சார் 4. ஸ்டார்டிஸ்

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

“மேக்ரோ” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஆடம் ஸ்மித்

B) J.M. கீன்ஸ்

C) ரேக்னர் ஃபிர்ஸ்ச்

D) கார்ல் மார்க்ஸ்

(குறிப்பு: ரேக்னர் ஃபிர்ஸ்ச் என்பவர் நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநரும் ஆவார். இவர் சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும் பதங்களை 1933 ல் உருவாக்கினார்.

பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது _____________ என்பவரால் தோன்றியதாகும்.

A) ரேக்னர்ஃபிர்ஸ்ச்

B) ஜான் மேனாட் கீன்ஸ்

C) ஸ்டார்டிஸ்

D) பிஸ்சார்

(குறிப்பு: பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் ஆல் 1936ம் ஆண்டு வெளியிட்ட “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலிலிருந்து தோன்றியதாகும்.)

நவீன பேரியல் பொருளாதரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

A) ஆடம் ஸ்மித்

B) ஆல்ஃபிரட் மார்ஷல்

C) சைமன் குஸ்நட்ஸ்

D) J.M. கீன்ஸ்

(குறிப்பு: உலக மகாமந்த காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார்.)

பெரிய என்று பொருள்படும் ‘Macro’ என்ற சொல் _____________மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது.

A) இலத்தீன்

B) கிரேக்கம்

C) ஆங்கிலம்

D) பிரெஞ்சு

(குறிப்பு: கிரேக்க மொழியில் உள்ள ‘Makros’ என்ற சொல்லில் இருந்து ‘Macro’ என்ற சொல் பெறப்பட்டது.)

____________ பொருளாதாரம் ‘வருவாய் கோட்பாடு’ எனவும் அழைக்கப்படுகிறது.

A) பேரியல் பொருளாதாரம்

B) நுண்ணியல் பொருளாதாரம்

C) முதலாளித்துவ பொருளாதரம்

D) காலனித்துவ பொருளாதாரம்

(குறிப்பு: பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையும் படிப்பது ஆகும். மாறாக கூறின், பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது.)

கூற்று 1: தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தேசிய வருவாயில் துறைகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும்.

கூற்று 2: பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும் அவைகளை ஒப்பிடவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பது

A) பண வாட்டம்

B) பண வீக்கம்

C) வாணிபச் சுழற்சி

D) வருவாயின் வட்ட ஓட்டம்

(குறிப்பு: மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.)

கீழ்க்கண்டவற்றுள் பேரியல் பொருளாதாரத்தின் குறைகளாகக் கருதப்படுபவை எவை?

1. பொருளாதாரம் முழுமைக்கும் மிகைப்படுத்தி பொதுமையாக்கும் ஆபத்து காணப்படுகிறது.

2. தனிப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஓரினத் தன்மை வாய்ந்தது என்ற எடுகோளை பேரியல் பொருளாதாரம் கொண்டுள்ளது.

3. தொகுத்தலில் தவறுகள் காணப்படும்.

4. பொருளாதார நடவடிக்கைகளை பலபொருளாதாரமற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால் பேரியல் பொருளாதார கோட்பாடுகளில் இக்காரணிகள் இடம்பெறவில்லை.

5. நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கவில்லை.

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4

C) 1, 3, 4, 5

D) 2, 3, 4, 5

(குறிப்பு: நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.)

பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை “மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்தவர்

A) ஜே.ஆர்.ஹிக்ஸ்

B) J.M.கீன்ஸ்

C) ஏ.ஜே.பிரவுண்

D) ஆடம் ஸ்மித்

“நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு என கூறியவர்

A) ஆடம் ஸ்மித்

B) ஆல்ஃபிரட் மார்ஷல்

C) சைமன் குஸ்நட்ஸ்

D) J.R.ஹிக்ஸ்

ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகளாக கருதப்படுபவை

1. வேளாண்மை 2. நெறிப்படுத்துதல்

3. உற்பத்தி 4. நுகர்வு

A) 1, 2 B) 2, 3 C) 3, 4 D) 1, 4

(குறிப்பு: உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரு நடவடிக்கைகளும் பல்வேறு பிற நடவடிக்கைகளால் உதவிப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் தலையான நோக்கம் வளர்ச்சியை அடைவதாகும். பகிர்வுப் பணியானது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன.)

கீழ்க்கண்டவற்றுள் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை?

1. போக்குவரத்து 2. விளம்பரம்

3. பொழுதுபோக்கு 4. அரசின் கொள்கைகள்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 3, 4 D) 2, 3, 4

(குறிப்பு: முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities)

போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள்.)

பொருளாதாரமற்ற நவடிக்கைகளில் தவறானது எது?

A) ஆரோக்கியம்

B) ஆட்சிமுறை

C) நெறிப்படுத்துதல்

D) திட்டமிடல்

(குறிப்பு: முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகள் (Non-Economic Activities)

சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுதுபோக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல்)

பொருளாதார அமைப்பு முறை _______________முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று வகைகள்

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)

சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்)

கலப்பு பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்))

உலகத்துவம் என்ற பதத்தை மேன்பிரட் டி ஸ்டீகர் ______________ ஆண்டு உருவாக்கினார்.

A) 1992 B) 2000 C) 2002 D) 2006

(குறிப்பு: உலகத்துவம் (Globalism) என்ற தத்துவம், விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை.

2. சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

3. கலப்பு பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம், சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கியது.

A) அனைத்தும் சரி

B) 1,3 சரி

C) 1, 2 சரி

D) 3 மட்டும் சரி

(குறிப்பு:

முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை. மாறாக உற்பத்தியில் அனைத்து செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும்.)

முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

A) ஜே.ஆர்.ஹிக்ஸ்

B) J.M.கீன்ஸ்

C) ஏ.ஜே.பிரவுண்

D) ஆடம் ஸ்மித்

(குறிப்பு: முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire – லேசிபேர், லத்தீனில் – Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் என்றும் அழைக்கிறோம்.)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு அதிகமாகவும், சந்தையின் பங்கு குறைவாகவும் இருக்கும்.

B) இந்த பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும்.

C) இங்கு பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள்.

D) தனிநபர் தங்களுக்கான வேலையைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாகச் செயல்படுவர்.

(குறிப்பு: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பு காணப்படும் நாடுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A) USA

B) மேற்கு ஜெர்மனி

C) ஆஸ்திரேலியா

D) ரஷ்யா

(குறிப்பு: ஜப்பான், USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி

A) ஏற்றுமதியை அதிகரித்தல்

B) உச்ச இலாபம் அடைதல்

C) சமூக நலனை பாதுகாத்தல்

D) இயற்கையை பாதுகாத்தல்

(குறிப்பு: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள்.)

கீழ்க்கண்டவற்றுள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள் எவை?

1. முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்.

2. இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது.

3. கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில்முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும்.

4. அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.

5. சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும்.

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4

C) 2, 3, 4, 5

D) 1, 3, 4, 5

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் குறைகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.

B) போட்டி விளம்பரங்களினாலும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன.

C) முதலாளித்துவமானது, சமுதாயத்தை முதலாளிகளாகவும், வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

D) உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.

சமத்துவ பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) ஆடம் ஸ்மித் சமத்துவத்தின் தந்தை ஆவார்.

B) அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும்.

C) சமத்துவ பொருளாதார அமைப்பு, திட்டமிட்ட பொருளாதாரம் அல்லது கட்டளைப் பொருளாதாரம் என்றும் அறியப்படுகிறது.

D) பொதுநலமே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்.

(குறிப்பு: கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவார்.)

சமத்துவ பொருளாதார அமைப்பு காணப்படும் நாடுகளில் தவறானது எது?

A) ரஷ்யா

B) சீனா

C) க்யூபா

D) ஜப்பான்

(குறிப்பு: ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் க்யூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும்.)

கீழ்க்கண்டவற்றுள் சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகளாக கருதப்படுபவை எவை?

1. ஏற்றத்தாழ்வுகளில் குறைவு

2. வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு

3. வகுப்பு சண்டைகள் இல்லாமை

4. வாணிக சூழலுக்கு முடிவு

5. சமூக நலன் முன்னேற்றம்

A) அனைத்தும்

B) 1, 2, 4, 5

C) 1, 3, 4, 5

D) 1, 2, 3, 4

கூற்று 1: சமத்துவ பொருளாதார அமைப்பில் அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகள் எடுப்பதாலும், அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

கூற்று 2: சமத்துவ பொருளாதாரத்தில் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோருக்கு உள்ளது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சமத்துவ பொருளாதாரத்தில் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.)

கீழ்க்கண்டவற்றுள் கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றும் நாடு எது?

A) வியட்நாம்

B) போலந்து

C) பிரேசில்

C) ரஷ்யா

(குறிப்பு: இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.)

கலப்பு பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) உற்பத்திச் சாதனங்களும் சொத்துக்களும் தனியார் மற்றும் பொதுத்துறைக்குச் சொந்தமாக இருக்கும்.

B) அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும்.

C) எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? மற்றும் எப்படி பகிர்ந்தளிப்பது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை விலை இயக்க முறை மற்றும் அரசின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்படும்.

D) அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு தேய்வு வீத வரி முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது.

(குறிப்பு: கலப்பு பொருளாதாரத்தில் அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர் வீத வரி முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது.)

பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

A) சொத்து மற்றும் நலம்

B) உற்பத்தி மற்றும் நுகர்வு

C) தேவையும் அளிப்பும்

D) நுண்ணியல் மற்றும் பேரியல்

பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

A) அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பது

B) தடைகளை முறியடிப்பது

C) வளர்ச்சியை அடைவது

D) மேலே கூறப்பட்ட அனைத்தும்

கூற்று 1: கலப்பு பொருளாதாரங்களில் தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூக நலனை உச்சப்படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.

கூற்று 2: கலப்பு பொருளாதாரத்தில் வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும் கூட, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கீழ்க்கண்டவற்றுள் கலப்புத்துவத்தின் நன்மைகள் எவை?

1. அதிவேக பொருளாதார வளர்ச்சி

2. சமமான பொருளாதார வளர்ச்சி

3. வளங்களைச் சரியாக பயன்படுத்துதல்

4. பொருளாதாரச் சமத்துவம்

5. சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள்

A) அனைத்தும்

B) 1, 2, 3, 5

C) 1, 2, 3, 4

D) 2, 3, 4, 5

தவறான இணையைத் தேர்ந்தெடு. (கலப்பு பொருளாதார அமைப்பு)

A) உற்பத்தி மூலங்களின் உரிமை – தனியார் மற்றும் பொது உரிமை

B) பொருளாதார நோக்கம் – சமூக நலன் மற்றும் இலாப நோக்கம்

C) மைய பிரச்சனைகளின் தீர்வு – மத்திய திட்ட முறை மற்றும் தடையில்லா சந்தை

D) அரசின் பங்கு – அதிகம்

(குறிப்பு: கலப்புத்துவத்தின் தன்மைகள்

வருவாய் பங்கீடு – குறைந்த சமநிலையற்ற நிலை

நிறுவன தன்மை – தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்

பொருளாதார சுதந்திரம் – கட்டுப்பாட்டுடன் சுதந்திரம்

முக்கிய பிரச்சனை – சமமின்மை மற்றும் திறனின்மை)

கீழ்க்கண்டவற்றுள் இருப்பு மாறிலிகள் எவை?

1. பண அளிப்பு

2. வேலை இல்லாமை அளவு

3. வெளிநாட்டு மாற்று இருப்பு

4. முதலீடு

5. மூலதனம்

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4

C) 1, 2, 3, 5

D) 1, 2, 4, 5

(குறிப்பு: இருப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும்.)

கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.

A) பண அளிப்பு

B) சொத்துக்கள்

C) வருவாய்

D) வெளிநாட்டுச் செலாவணி இருப்பு

(குறிப்பு: ஓட்ட மாறிலிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில் கணக்கிடப்படுபவையாகும். தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு, உற்பத்தி, முதலீடு போன்றவை ஓட்ட மாறிலிகளுக்கு உதாரணங்களாகும்.)

கூற்று 1: பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு பொருளாதார மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்.

கூற்று 2: பெரும்பாலான பொருளாதார மாதிரிகள், கணிதம், வரைபடங்கள் மற்றும் சமன்பாடுகளால் அமைக்கப்பட்டு, பொருளாதார மாறிலிகளுக்கிடையேயான உறவுகளை விளக்க உதவுகின்றன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. அளிப்பு-தேவை மாதிரிகள், வட்ட- ஓட்டம் மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் ஆகியவை பொருளாதார மாதிரிகளாகும்.)

இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.

A) தனியார் மற்றும் பொதுத்துறை

B) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள்

C) குடும்பங்களும் நிறுவனங்களும்

D) நிறுவனங்களும் அரசும்

மூன்று துறை மாதிரியில் உள்ள துறைகள் எவை?

1. இல்லத்துறை 2. வெளியுறவுத்துறை

3. நிறுவனத் துறை 4. பொதுத்துறை

5. அரசுத்துறை

A) 1, 2, 3 B) 2, 3, 5 C) 1, 3, 4 D) 1, 3, 5

(குறிப்பு: மூன்று துறை மாதிரி கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.)

பேரியல் பொருளாதாரம் என்பது _____________ பற்றிய படிப்பு.

A) தனிநபர்கள்

B) நிறுவனங்கள்

C) நாடு

D) மொத்தங்கள்

கீழ்க்கண்டவற்றுள் திறந்த பொருளாதார அமைப்புக்குரிய மாதிரி எது?

A) இரண்டு துறை மாதிரி

B) மூன்று துறை மாதிரி

C) நான்கு துறை மாதிரி

D) அளிப்பு தேவை மாதிரி

(குறிப்பு: நான்கு துறை மாதிரியில் உள்ள துறைகள்

இல்லத்துறை, நிறுவனத்துறை, அரசுத்துறை மற்றும் வெளியுறவுத் துறை.)

நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்திக் காரணிகளை அளிக்கும் ஒரே துறை

A) இல்லத்துறை

B) நிறுவனத் துறை

C) அரசுத்துறை

D) வெளியுறவுத்துறை

(குறிப்பு: இல்லத்துறை அதன் அனைத்து வருவாயையும் நிறுவனத்துறை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்துகிறது. இல்லத்துறையானது, அதற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது.)

இரு துறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை கீழ்க்கண்ட எந்த சமன்பாட்டின் மூலம் குறிப்பிடலாம்?

A) Y = C – I

B) Y = C + I

C) Y = C + I + G

D) Y = C + I + G + (X -M)

(குறிப்பு: Y என்பது வருவாய், C என்பது நுகர்வு, I என்பது முதலீடு ஆகும்.)

சரியான கூற்றை தேர்ந்தெடு. (இரு துறை பொருளாதாரம்)

1. இரு துறை பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும் வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும்.

2. வெளி வட்டமானது உற்பத்திக் காரணிகள் மற்றும் பொருட்கள் பிரதிபலிக்கும் உண்மை ஓட்டமாகவும், உள் வட்டமானது காரணி விலை மற்றும் பொருள் விலையை குறிக்கும் பண ஓட்டமாகவும் காணப்படும்.

3. உண்மை ஓட்டம் என்பது இல்லத்துறையிலிருந்து நிறுவனத்துறைக்கு மாறும் உற்பத்தி காரணி பணிகளையும், நிறுவனத்துறையிலிருந்து இல்லத்துறைக்கு மாறும் பொருட்கள் மற்றும் பணிகளையும் குறிப்பதாகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

மூன்று துறை மாதிரியில் தேசிய வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

A) Y = C – I + (X – M)

B) Y = C + I – G

C) Y = C + I + G

D) Y =C + I + G + (X – M)

(குறிப்பு: Y = வருவாய், C = நுகர்வுச் செலவு, I = முதலீட்டுச் செலவு, G = அரசின் செலவு

நான்கு துறை பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த செலவு என்பது எவற்றை உள்ளடக்கியது?

A) வெளிநாட்டு செலவுகள், நிகர ஏற்றுமதி

B) உள்நாட்டு செலவுகள், நிகர இறக்குமதி

C) வெளிநாட்டு செலவுகள், நிகர ஏற்றுமதி

D) உள்நாட்டு செலவுகள், நிகர ஏற்றுமதி

(குறிப்பு: Y = C + I + G + (X – M)

உள்நாட்டு செலவுகள் – C + I + G,

நிகர ஏற்றுமதி – (X – M).

தவறான இணையைத் தேர்ந்தெடு. (முதலாளித்துவம்)

A) பொருளாதார நோக்கம் – இலாபம்

B) மைய பிரச்சனைகளின் தீர்வு – தடையில்லா சந்தை முறை

C) அரசின் பங்கு – உள்ளீடு கட்டுப்பாடு மட்டும்

D) வருவாய் பங்கீடு – சமநிலை

(குறிப்பு: முதலாளித்துவத்தின் தன்மைகள்

உற்பத்தி மூலங்களின் உரிமை – தனியார் உரிமை

வருவாய் பங்கீடு – சமனற்ற நிலை

நிறுவன தன்மை – தனியார் நிறுவனம்

பொருளாதார சுதந்திரம் – முழுமையான சுதந்திரம்

முக்கிய பிரச்சனை – சமமின்மை)

சரியான இணையைத் தேர்ந்தெடு. (சமத்துவ பொருளாதார அமைப்பு)

1. மைய பிரச்சனைகளின் தீர்வு – மத்திய திட்டமுறை

2. அரசின் பங்கு – முழு ஈடுபாடு

3. நிறுவனத் தன்மை – அரசு நிறுவனம்

4. பொருளாதார நோக்கம் – சமூக நலன்

5. முக்கிய பிரச்சனை – திறனின்மை

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4, 5

C) 2, 3, 4, 5

D) 1, 3, 4, 5

(குறிப்பு: சமத்துவத்தின் தன்மைகள்

உற்பத்தி மூலங்களின் உரிமை – பொது உரிமை

வருவாய் பங்கீடு – சமநிலை

பொருளாதார சுதந்திரம் – சுதந்திரமின்மை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!