MCQ Questions

புவித் தகவலியல் 12th Geography Lesson 6 Questions in Tamil

12th Geography Lesson 6 Questions in Tamil

6] புவித் தகவலியல்

1) புவித் தகவலியல் என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடைய ஒரு பாடப்பிரிவு அல்ல?

A) உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS)

B) தொலை நுண்ணுணர்வு

C) புவித்தகவல் தொகுப்பு (GIS)

D) புகைப்படக்கருவி

விளக்கம்: புவித் தகவலியல் என்பது இடம் சார் தகவல்கள் குறித்து விளக்கும் தொலை நுண்ணுணர்வு, உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS) மற்றும் புவித்தகவல் தொகுப்பு (GIS) போன்றவை ஒருங்கிணைந்த ஒரு பாடப்பிரிவாகும்.

2) புவித் தகவலியல் என்பது கீழ்க்கண்ட எதை/எவற்றை மேற்கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது?

I. நில அளவாய்வு

II. போக்குவரத்து

III. நீரியல்

IV. பேரிடர் மேலாண்மை

A) 1 மட்டும்

B) 1 மற்றும் 2 மட்டும்

C) 1,2 மற்றும் 3

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நில அளவாய்வு மற்றும் நிலவரைபடம் வரைதலில் புவி தகவலியல் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. புவி தகவலியல் கூறுகளின் அடிப்படை புரிதலானது நில அளவாய்வு, போக்குவரத்து, நீரியல், பேரிடர் மேலாண்மை போன்றவற்றை மேற்கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதாகும்.

3) தொலை நுண்ணுணர்வின் மின்காந்த கதிர்வீச்சை இலக்கு நோக்கி செலுத்த ஆற்றலை அளிப்பது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மின்சாரம்

B) எரிபொருள்

C) பேட்டரிகள்

D) சூரியன்

விளக்கம்: தொலை நுண்ணுணர்வின் முக்கிய தேவையானது மின்காந்த கதிர்வீச்சை இலக்கு நோக்கி செலுத்தும் ஆற்றல் மூலமாகும். இந்த ஆற்றலை அளிப்பது சூரியன் ஆகும்.

4) தொலை நுண்ணுர்வு என்பது கீழ்க்கண்ட எதைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பமாகும்?

A) கோள்கள்

B) விண்வெளி பொருட்கள்

C) புவிசார் பொருட்கள்

D) சூரியன்

விளக்கம்: தொலை நுண்ணுணர்வு என்பது புவிசார் பொருட்களைப் பற்றியத் தகவல்களைப் புகைப்படக் கருவி மற்றும் உணர்விகளின் மூலம் சேகரிக்கும் ஒருங்கிணைந்த கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவாகும்.

5) தொலை நுண்ணுணர்வியின் முக்கியத் தேவை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) புவியால் பிரதிப்பலிக்கப்படும் சூரிய ஆற்றலை புகைப்படக் கருவிகள் மூலம் பதிவு செய்தல்

B) மினகாந்த கதிர்வீச்சை இலக்கு நோக்கி செலுத்துவதாகும்.

C) சூரிய ஆற்றலை பெற்று புவிக்கு பிரதிபலித்தல்

D) புவியால் பிரதிப்பலிக்கப்படும் சூரிய ஆற்றலை படச்சுருள்கள் மூலம் பதிவு செய்தல்

விளக்கம்: தொலை நுண்ணுணர்வின் முக்கிய தேவை சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெற்று மின்காந்த கதிர் வீச்சை இலக்கு நோக்கி செலுத்துதல் ஆகும்.

6) கீழ்க்கண்டவற்றுள் தொலை நுண்ணுணர்வுடன் தொடர்பில்லாதது எது?

A) வான்வெளிப்புகைப்படம்

B) வெப்பம்

C) புவிப்படவியல்

D) ரேடார்

விளக்கம்: தொலை நுண்ணுணர்வின் கூறுகள்: வான்வெளிப் புகைப்படம், செயற்கைக் கோள், வெப்பம், ரேடார், ஜி.பீ.ஆர். புவிப்படவியல் என்பது புவித்தகவல் தொகுப்புடன் தொடர்புடைய கூறு ஆகும்.

7) மின் காந்த கதிர்வீச்சு வாயு மூலக்கூறுகளின் மூலம் வளிமண்டலம் ஈர்ப்பதை குறிப்பது கீழக்கண்டவற்றுள் எது?

A) சிதறடிப்பு

B) உட்கிரகிப்பு

C) ஒளி விலகல்

D) ஒளி ஈர்ப்பு

விளக்கம்: உட்கிரகிப்பு: என்பது மின்காந்த கதிர்வீச்சை வாயு மூலக்கூறுகளின் மூலம் வளிமண்டலம் ஈர்ப்பதைக் குறிக்கும்.

ஒளிச்சிதறடிப்பு: என்பது மின் காந்த அலைகள் திருப்பி அனுப்பபடுவதாகும்.

ஒளி விலகல்: என்பது ஒளியானது தன் பதையை விட்டு விலகி செல்வதாகும்.

8) ஒளிச்சிதறல் என்பது கீழ்க்கண்ட எது/எவையால் மின்காந்த ஆற்றல் திருப்பி அனுப்பபடுவதாகும்?

A) வளிமண்டலத்தில் உள்ள துகள்களால்

B) வளிமண்டல காற்று மூலக்கூறுகளால்

C) வளிமண்டல துகள்கள் மற்றும் வளிமண்டல காற்று மூலக்கூறுகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொலை நுண்ணுணர்வில் மொத்த ஆற்றலானது ஒளிச்சிதறடிப்பு, உட்கிரகிப்பு மற்றும் ஒளி விலகல் போன்ற இயற்கை செயல்பாடுகளின் மாறுபாடுகளுக்கு உட்பட்டது. இதில் ஒளிச் சிதறல் என்பது வளிமண்டல துகள்கள் மற்றும் வளிமண்டல காற்று மூலக்கூறுகளால் மின்காந்த ஆற்றல் திருப்பி அனுப்பப்படுவதாகும்.

9) ஒளிச்சிதறலின் அளவானது வளிமண்டலத்தில் உள்ள

எதை/எவற்றைச் சார்ந்திருக்கும்?

A) துகள்களின் பருமன்

B) வாயுக்களின் அடர்த்தி

C) A மற்றும் B

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒளிச்சிதறல் என்பது வளிமண்டல துகள்கள் மற்றும் வளிமண்டல காற்று மூலக்கூறுகளால் மின்காந்த ஆற்றல் திருப்பி அனுப்பப்படுவதாகும். சிதறலின் அளவானது வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் பருமன் மற்றும் வாயுக்களின் அடர்த்தியை சார்ந்திருக்கும். கதிர்வீச்சின் அலைநீளம் அவை பயனிக்கும் வளிமண்டல தூரத்திற்கு ஏற்றாற்போல் அமையும்.

10) புவித்தகவல் தொகுப்புடன் தொடர்புடைய கூறுகளில் பொருந்தாததைத் தேர்க

A) கைப்பேசி கண்காணிப்பு

B) கணிணி

C) இணையம்

D) புவிப்படவியல்

விளக்கம்: புவித்தகவல் தொகுப்புடன் தொடர்புடைய கூறுகள்:

புவிப்படவியல், தகவல் வெடிப்பு, கணினி, இணையம். தொலை நுண்ணுணர்வுடன் தொடர்புடைய கூறுகள்: வான்வெளிப் புகைப்படம், செயற்கைக்கோள், வெப்பம், ரேடார், ஜி.பீ.ஆர் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்புடன் தொடர்புடைய கூறுகள்: நில அமைப்பு, செயற்கைக் கோள் அளவாய்வு, கைப்பேசி கண்காணிப்பு

11) புவியினால் திருப்பி அனுப்பட்ட மின்காந்த கதிர்வீச்சைச் சேகரிக்கவும் பதிவு செய்யவும் தேவைப்படுவது?

A) உணர்வி

B) ஜி.பீ.ஆர்

C) புகைப்படக் கருவி

D) கைப்பேசி

விளக்கம்: உணர்விகளே ஆற்றலை பதிவு செய்கின்றன. புவியினால் திருப்பி அனுப்பப்பட்ட மின்காந்த கதிர்வீச்சைச் சேகரிக்கவும் பதிவு செய்யவும் உணர்வி தேவைப்படுகிறது.

12) உணர்வியினால் பதிவு செய்யப்பட்ட ஆற்றலானது எந்த வடிவில் புவிக்கு செலுத்தப்படுகிறது?

A) அலை வடிவில்

B) மின்னனு வடிவில்

C) ஒளி வடிவில்

D) ரகசிய கோடு வடிவில்

விளக்கம்: புவியினால் அனுப்பப்பட்ட மின்காந்த கதிர்வீச்சைச் பதிவு செய்த உணர்வி அதனை மின்னனு வடிவிலேயே புவிக்கு திருப்பி அனுப்புகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் முறைப்படுத்தப்பட்டு செயல்முறைப்படுத்தபடும் நிலையங்களில் பதிமமாக தயாரிக்கப்படுகிறது.

13) கூற்று: அனைத்து இடம்சார் தரவுகளையும் தெளிவாக உணர்வி தருகிறது.

காரணம்: உணர்வியானது அலைநீளக் கதிர்வீச்சுகளையும் பதிவு செய்யும் திறன் பெற்றது.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: புவியினால் திருப்பி அனுப்படும் கதிர்வீச்சைச் சேரிக்கும் போது அனைத்து அலைநீளக் கதிர்வீச்சுகளையும் பதிவு செய்யும் திறன் பெற்ற உணர்வி அனைத்து இடம் சார் தரவுகளையும் தெளிவாக தருகின்றனது.

14) மின்காந்த கதிர்வீச்சு மூலத்தின் அடிப்படையில் உணர்வி எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: மின்காந்த மூலத்தின் அடிப்படையில் உணர்வியனாது உயிர்ப்புள்ள உணர்வி மற்றும் உயிர்ப்பற்ற உணர்வி என வகைப்படுத்தப்படுகிறது.

15) சக்தியினை தானாகவே உற்பத்தி செய்து இலக்குகளை ஒளியூட்டி, பிரதிபலிக்கப்பட்ட சக்தியை பதியும் உணர்வி எது?

A) உயிர்ப்பற்ற உணர்வி

B) உயிர்புள்ள உணர்வி

C) அலை நீள உணர்வி

D) மின் காந்த உணர்வி

விளக்கம்: உணர்வியின் இரண்டு வகைகளில் உயிர்ப்புள்ள உணர்வி மட்டுமே சக்தியினை தானாகவே உற்பத்தி செய்து இலக்குகளை ஒளியூட்டி, பிரதிபலிக்கப்பட்ட சக்தியை பதிகின்றது. இவற்றின்

செயலாக்கம் மின்காந்த நிறமாலையின் நுண்ணலை பகுதியில் நடைபெறுகின்றது.

16) உயிர்ப்புள்ள உணர்வியின் அலைநீளம் எத்தனை மில்லி மீட்டருக்கும் அதிகமாக அளவிடப்படுகிறது?

A) 4

B) 3

C) 2

D) 1

விளக்கம்: உயிர்ப்புள்ள உணர்வியின் செயலாக்கம் மின்காந்த நிறமாலையின் நுண்ணலைப் பகுதியில் நடைபெறுகிறது. இவற்றின் அலைநீளம் 1 மில்லி மீட்டருக்கும் அதிகம்.

17) பதிம முறைப்படுத்தல் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 3

D) 1

விளக்கம்: உணர்வி மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் முறைப்படுத்தப்பட்டு செயல்முறைப்படுத்தப்படும் நிலையங்களில் செயற்கைகோள் பதிமமாக தயாரிக்கப்படுகிறது. இந்த பதிம முறைப்படுத்துதல் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அவை 1.

பதிம மீட்பு 2. பதிம மேம்பாடு 3. தகவல் ஈட்டல்

18) எந்த முறையில் ஒவ்வொரு அலைக்கற்றையிலும் உள்ள படப்புள்ளிகள் தனித்தனியே சீரமைக்கப்படுகிறது?

A) பதிம மேம்பாடு

B) பதிம மீட்பு

C) தகவல் ஈட்டல்

D) விவரணம் மற்றும் ஆய்வு

விளக்கம்: தகவல்கள் ஸ்கேன் மற்றும் பதிவு செய்தலின்போது ஏற்படும் தவறுகள், தெளிவற்ற நிலை மற்றும் உருதிரிபு போன்றவற்றை அடையாளம் கண்டு சரி செய்யும் முறையே பதிம மீட்பாகும். பதிமத்தை அசல் காட்சி போல் செய்வதே இதன் நோக்கமாகும். இம்முறையில் ஒவ்வொரு அலைக்கற்றையிலும் உள்ள படப்புள்ளிகள் தனித்தனியே சீரமைக்கப்படுவதால் இப்பணியைச் செய்வது எளிதான ஒன்றாகும்.

19) பதிமத்தில் மாறுதல் செய்து அவற்றை பார்ப்பவரின் மீதான பதிம தாக்கத்தை மாற்றியமைப்பது?

A) பதிம மேம்பாடு

B) பதிம மீட்பு

C) தகவல் ஈட்டல்

D) விவரணம் மற்றும் ஆய்வு

விளக்கம்: பதிமத்தில் மாறுதல் செய்து அவற்றை பார்ப்பவரின் மீதான பதிமத் தாக்கத்தை மாற்றியமைப்பதே பதிம மேம்பாடாகும்.

பொதுவான பதிம மேம்பாடு அசல் இலக்க எண்களை மாற்றமடையச் செய்யும் என்பதால் பதிமத்தை மீட்க பின் பதிம மேம்பாடு மேற்கொள்ளப்படும்.

20) விவரணம் செய்தலின் முக்கிய நோக்கம்?

A) சுற்றுச்சூழலுக்கும் கலாச்சாரக் காரணிகளுக்கும் இடையேயான தொடர்பை வெளிக்கொணர்தல்

B) பதிமத்தில் உள்ள தகவல்களை அறிதல்

C) சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல்

D) கலாச்சார காரணிகளை ஆய்தல்

விளக்கம்: விவரணம் செய்பவர் தொலை நுண்ணுணர்வு தரவுகளை ஆராய்ந்து அவற்றை அடையாளம் கண்டு சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து சுற்றுச்சூழலுக்கும் கலாச்சார

காரணிகளுக்கும் இடையேயான தொடர்பை வெளிக்கொணர்வதே விவரணம் செய்தலின் முக்கிய நோக்கமாகும்.

21) பதிமத்தின் தரம் கீழ்க்கண்ட எதைப் பொறுத்து அமைவதில்லை?

A) உணர்வியின் தன்மை

B) படம் எடுக்கப்டும் பருவம் மற்றும் நாளின் நேரம்

C) வளிமண்டல விளைவுகள்

D) மின்காந்த கதிர்வீச்சின் தன்மை

விளக்கம்: பதிமத்தின் தரம் அவற்றிலுள்ள தகவல்களின் தன்மையை பொறுத்து அமைகிறது. மேலும் உணர்வியின் தன்மை, படம் எடுக்கப்படும் பருவம் மற்றும் நாளின் நேரம், வளிமண்டல விளைவுகள், செயற்கைகோள் பதிமத்தின் பகுதிறன், பதிம நகர்வு போன்றவற்றை பொருத்ததும் அமைகிறது.

22) மின்காந்த கதிர்வீச்சு மூலத்தின் அடிப்படையில் தொலை நுண்ணுணர்வு எத்தனை வகைப்படும்?

A) 4

B) 2

C) 3

D) 1

விளக்கம்: மின்காந்த கதிர்வீச்சு மூலத்தின் அடிப்படையில் தொலை நுண்ணுணர்வு உயிர்ப்புள்ள தொலை நுண்ணுணர்வு மற்றும் உயிர்ப்பற்ற தொலையுணர்வு என வகைப்படுத்தப்படுகிறது.

23) சரியான கூற்றை காண்க:

1. சாதாரண புகைப்படக் கருவி உயிர்புள்ள தொலையுணர்வு போன்றது.

2. செயற்கை ஒளியூட்டி கொண்ட புகைப்படக் கருவி மூலம் படமெடுத்தல் உயிர்ப்பற்ற தொலையுணர்வை ஒத்தது

3. உயிர்ப்புள்ள தொலை நுண்ணுணர்வு சுயசக்தியின் மூலம் பொருட்கள் ஒளியூட்டப்பட்டு பிரதிபலிக்கும் சக்தியை பதிவு செய்யக்கூடியதாகும்

4. உயிர்ப்பற்ற தொலையுணர்வு நுண்ணலை மின்காந்த நிறைமலை மூலம் செயல்படும்

A) 1 மட்டும்

B) 1 மற்றும் 2

C) 3 மற்றும் 4

D) 3 மட்டும்

விளக்கம்: சாதாரண புகைப்படக் கருவி உயிர்ப்பற்ற தொலையுணர்வு போன்றது. செயற்கை ஒளியூட்டி கொண்ட புகைப்படக் கருவி மூலம் படமெடுத்தல் உயிர்ப்புள்ள தொலையுணர்வை ஒத்தது. உயிர்ப்புள்ள தொலை நுண்ணுணர்வு சுயசக்தியின் மூலம் பொருட்கள் ஒளியூட்டப்பட்டு பிரதிபலிக்கும்

சக்தியை பதிவு செய்யக்கூடியதாகும். உயிர்ப்புள்ள தொலையுணர்வு நுண்ணலை மின்காந்த நிறைமலை மூலம் செயல்படும்

24) உயிர்ப்புள்ள மற்றும் உயிர்ப்பற்ற தெலை நுண்ணுணர்வின் அலைநீளம் முறையே?

A) 1 மி.மீக்கு அதிகமாகவும், 0.4 மி.மீ வரையிலும் உள்ளது

B) 1 மி.மீ வரையிலும், 0.4 மி.மீக்கு அதிகமாகவும் உள்ளது

C) 0.4 மி.மீக்கு அதிகமாகவும், 1 மி.மீ வரையிலும் உள்ளது

D) 0.4 மி.மீ வரையிலும், 1 மி.மீக்கு அதிகமாகவும் உள்ளது

விளக்கம்: உயிர்ப்புள்ள தொலைநுண்ணுணர்வியின் அலைநீளம் 1 மி.மீக்கு அதிகமாகவும் உயிர்பற்ற தொலையுணர்வியின் அலைநீளம் 0.4 மி.மீ வரையிலும் உள்ளது.

25) கூற்று: உயிர்ப்பற்ற உணர்விகள் பகல் நேரங்களில் மட்டுமே தகவல்களை சேகரிக்கும்

காரணம்: உயிர்ப்பற்ற உணர்விகள் சூரியனிடமிருந்து மட்டுமே ஆற்றலை பெற்று இயங்கும்

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: உயிர்ப்பற்ற உணர்வி தானாக சக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றல் இல்லாததல் இவை சூரியனிடமிருந்து ஆற்றலை பெற்று இயங்குகிறது. எனவே இவை பகல் நேரங்களில் மட்டுமே செயல்படும் உணர்வியாக உள்ளது.

26) கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?

I. நுண்ணலை மின்காந்த நிறமலை மூலம் செயல்படுவது – உயிர்ப்பற்ற தொலைநுண்ணுணர்வு

II. அகச்சிவப்பு மற்றும் புலப்படும் கதிர்வீச்சு மூலம் செயல்படுவது –

உயிர்ப்புள்ள தொலைநுண்ணுணர்வு

III. ஒளிரும் உணர்வி மற்றும் செயற்கை துவார ரேடார் – உயிர்ப்புள்ள உணர்வி

IV. சூரிய சக்தியின் மூலம் மட்டுமே இயங்குவது – உயிர்ப்பற்ற உணர்வி

A) 1 மற்றும் 2

B) 3 மற்றும் 4

C) 1 மற்றும் 3

D) 2 மற்றும் 4

விளக்கம்: அகச்சிவப்பு மற்றும் புலப்படும் கதிர்வீச்சு மூலம் செயல்படுவது – உயிர்ப்பற்ற தொலை நுண்ணுணர்வு நுண்ணலை மின்காந்த நிறமலை மூலம் செயல்படுவது உயிர்ப்பற்ற தொலை நுண்ணுணர்வு

27) இந்தியாவின் IRNSS-ன் வேறுபெயர் என்ன?

A) IRNSS-1A

B) IRNSS-1B

C) NavIC

D) IRNSS-1C

விளக்கம்: IRNSS (Indian Regional Navigation Satellite system) என்பது NavIC (Navigation with India Constellation) எனவும் அழைக்கப்படுகிறது. இது 8 செயற்கைகோள்களின் தொகுப்பாகும். இந்தியா மற்றும் அதன் எல்லையிலிருந்து 1500 கிலோ மீட்டர் வரை இதன் சேவை பயனளித்தது.

28) தொலை நுண்ணுணர்வு மேடைகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொலை நுண்ணுணர்வு மேடைகள் பொறுத்தப்படும் உயரத்தைப் பொறுத்து நில மேடை, வான்வெளி மேடை மற்றும் விண்வெளி மேடை என மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

29) எவ்வகை தொலை நுண்ணுணர்வு மேடை, மற்ற நடைமேடைகளின் வாயிலாக சேகரிக்கப்படும் தகவல்களைவிட விரிவான தகவல்களை தரவல்லது?

A) நிலமேடை

B) வான்வெளி மேடை

C) விண்வெளி மேடை

D) அனைத்தும்

விளக்கம்: நிலத்தின் மீதமைந்த ஏணிகள், உயரமான கட்டடம் மற்றும் மின்தூக்கி போன்றவை நில மேடைகள். இவை நிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் விரிவான தகவல்களைத் தரவல்லது.

30) நிலையான நில மேடைகள் எதன் தன்மையை கண்டறியும் புவிபரப்பு தோற்றங்களில் நெடுங்கால கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது?

A) இயற்கை

B) கடல்

C) சூரியக் கதிர்வீச்சு

D) வளிமண்டலம்

விளக்கம்: நிலையான நில மேடைகள் வளிமண்டல தன்மை கண்டறியும் புவிப்பரப்பு தோற்றங்களின் நெடுங்கால கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கையில் நிலைநிறுத்தப்படும் உபகரணங்கள், முக்காலிகள், உயரமான கோபுரங்கள் மற்றும் மின்தூக்கி போன்ற நிலமேடைகள், இலக்கின் மிக நுண்ணிய தகவல்கள், சூரியக் கதிர் வீச்சின் அளவு மற்றும் தன்மை சார்ந்த தகவல் சேகரிப்பிற்கு பயன்படுத்தபடுகின்றன.

31) வான்வெளி மேடை என்பது என்ன?

A) இலக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கப் பயன்படும் புகைப்படக் கருவி மற்றும் உணர்வி போன்றவை மண்ணில் நிலைநிறுத்தப்படும் இடம்.

B) வான்வெளிப் புகைப்படங்கள் எடுக்கவும், புகைப்படத்தை அளவீடு செய்யவும் வான்வெளியில் அமைக்கப்படும் தொலைநுண்ணுணர்வு மேடை.

C) வான்வெளிப் புகைப்படம் எடுக்க, புவியின் சுற்றுப் பாதையில் அமைக்கப்படும் தொலைநுண்ணர்வு மேடை.

D) வளிமண்டல ஆய்விற்காக கடலடியில் அமைக்கப்படும் தொலைநுண்ணுணர்வு மேடை.

விளக்கம்: வானூர்திகள் விவரணத்திற்கான வான்வெளிப் புகைப்படங்கள் எடுக்கவும், புகைப்படத்தை அளவீடு செய்யவும், பலூன் மற்றும் ட்ரோன் மூலம் வான்வெளியில் அமைக்கப்படும் பகுதியே வான்வெளி மேடை ஆகும்.

32) வான்வெளி தொலை நுண்ணுணர்வின் வகைகள் எத்தனை?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: வான்வெளி தொலைநுண்ணுணர்வு

(i) தாழ்மிகு தொலைநுண்ணுணர்வு மற்றும்

(ii) உயர்மிகு தொலைநுண்ணுணர்வு என இரண்டாக வகைப்படுத்தபடுகிறது.

தாழ்மிகு தொலைநுண்ணுணர்வு: கடல்மட்டத்திலிருந்து உயரத்தில் அமைக்கப்படும் வான்வெளி மேடை

உயர்மிகு தொலைநுண்ணுணர்வு – கடல்மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைக்கப்படும் வானவெளி மேடை.

33) வான்வெளியிலான முதல் புவிநிலத்தோற்ற அமைப்பு பலூனில் பொறுத்தப்பட்ட கேமரா மூலம் எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?

A) 1855

B) 1858

C) 1859

D) 1860

விளக்கம்: வான்வெளியிலுள்ள முதல் புவி நிலத்தோற்ற அமைப்பு பலூனில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் 1859-ல் எடுக்கப்பட்டது. பலூன் சுமார் 30 கி.மீ. உயரத்தில் நிலையாக மிதக்கும் . வான்வெளி புகைப்படத்திற்கும் இயற்கை பாதுகாப்பு ஆய்விற்கும் பலூன்கள் பயன்படுகின்றன.

34) ட்ரோன்களின் சிறப்பம்சம் என்ன?

A) மலிவான மேடை, நெடுந்தூர பயணம், மிதமான தாங்கும் திறன் மற்றும் ஒடுபாதையின்றி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

B) புகைப்படம் எடுத்தல், அகச்சிவப்பு கதிரின் தன்மை கண்டறிதல் ரேடார் கண்காணிப்பு மற்றும் தொலைக்காட்சி கண்காணிப்பு

C) உணர்வி மற்றும் பிறக் கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

D) தகவல் தேவைப்படும் புவிப்பரப்பிற்கு மேலே பறந்து இரவு பகலாக தரவுகளை தரும் திறன் கொண்டது.

விளக்கம்: ட்ரோன் என்பது ஒரு சிறிய தொலைநுண்ணுணர்வால் பயணிக்கும் வானூர்தி. இதில் உள்ள கணினி அவற்றின் பாரம் தாங்கும் திறனை கட்டுப்படுத்துவதன் உணர்வு மற்றும் பிற கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை சேமித்து வைக்கின்றது. தகவல் தேவைப்படும் புவிப்பரப்பிற்கு மேலே பறந்து இரவு பகலாக தரவுகளைத் தரும் திறன் இவற்றின் சிறப்பம்சமாகும்

35) ட்ரோன்கள் பற்றிய தவறான கூற்றை தேர்க.

A) ட்ரோன்கள் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய மற்றும் ஓடுபாதையின்றி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் வானூர்தி

B) இவை புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமின்றி விவசாய நிலத்திற்கு மருந்து தெளித்தல், அணுகுண்டு வீச்சு போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

C) ட்ரோன்கள் ரேடார் கண்காணிப்பு மற்றும் தொலைக்காட்சி கண்காணிப்பு போன்ற பணிகளை செய்யும் திறன் கொண்டது

D) ட்ரோன்கள், இராணுவ மற்றும் அரசியல் சார்ந்த தகவல்களுக்கு புவியைச் சுற்றி வரும் கண்காணிப்பு மேடைகளாகப் பயன்படுகிறது.

விளக்கம்: ட்ரோன்கள் ஒரு குறிப்பிட்ட சிறிய பரப்பில் மட்டுமே செயல்படும் திறன் கொண்டவை. இராணுவ மற்றும் அரசியல் சார்ந்த தகவல்களுக்கு புவியைச் சுற்றி வரும் கண்காணிப்பு மேடைகளாகப் பயன்படுகிறது.

36) உலகின் முதல் வான்வெளி புகைப்படத்தை எடுத்தவர் யார்?

A) நடார்

B) கஸ்பர் ஃபெலிக்ஸ் டூர்னகோன்

C) A மற்றும் B

D) எவருமில்லை

விளக்கம்: 1858-ல் நடார் என்றழைக்கப்படும் பலூன் வல்லுநரும், காஸ்பர் ஃபெலிக்ஸ் டூர்னசோன் என்ற பிரான்சின் புகைப்படக் கலைஞரும் முதல் விண்வெளி புகைப்படத்தை எடுத்தனர். 1855-ல் புகைப்படக்கருவி உணர்விகள் மற்றும் அதிர்வற்ற மேடைகளானது விண்வெளி புகைப்படம் மற்றும் பதிமம் பெற பயன்படுத்தப்பட்டது.

37) பின்வரும் கூற்றுகளை ஆராய்க.

1. உயரம் குறைவான பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிப்பரப்பின் விரிவான விவரங்களை தரவல்ல பெரிய அளவை புகைப்படத்தை தரவல்லது.

2. உயரம் அதிகமுள்ள இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறைந்த பரப்புசார் பகுதிறன் கொண்ட சிறிய அளவை புகைப்பட்டங்களை தரவல்லது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மற்றும் 2 சரி

D) 1 மற்றும் 2 தவறு

விளக்கம்: உயரம் குறைவான பகுதியிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் குறைந்த பரப்பை உற்று நோக்குவதால் விரிவான விளக்கங்களையும், உயரம் அதிகமாக பகுதியிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிக பரப்பையும் நோக்குவதால் குறைவான விவரங்களையும் தருகிறது.

38) விண்வெளி தொலைநுண்ணுணர்விற்கு எவை பயன்படுத்தப்படுகின்றன?

A) செயற்கைகோள்

B) ஏவுகணை

C) ட்ரோன்கள்

D) பலூன்

விளக்கம்: விண்வெளி தொலை நுண்ணுணர்விற்கு செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. புவியைச் சுற்றியுள்ள நீள் வட்டப் பாதையே செயற்கைக் கோளின் சுற்றுப்பாதையாகும்.

39) புவியைச் சுற்றிவரும் எவை விண்வெளி மேடைகளாக பயன்படுத்தப்படுகிறது?

A) கோள்கள்

B) விண்கலன்கள்

C) செயற்கைக்கோள்

D) சந்திரன்

விளக்கம்: விண்கலன்கள் விண்வெளி மேடைகளாக பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி மேடைகள் தங்குதடையின்றி சுற்றுப்பாதையில் செல்வதால் புவியின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் படமெடுத்து அனுப்புகிறது. செயற்கைகோள் தொலைநுண்ணுணர்வு மேடைகள் மூலமே அதிக தரவுகள் சேகரிக்கப்படுகிறது.

40) விண்வெளி தொலைநுண்ணுணர்வு பற்றிய தவறான கூற்று எது?

A) பெரும் பரப்பை உள்ளடக்கிய தகவல்

B) தேவைப்படும் இடத்தகவல்களை குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி அளித்தல்

C) கதிர் வீச்சளவிய கொண்ட உணர்விகள் மூலம் நிலத்தோற்றங்களின் அளவு சார் தகவலை அளித்தல்

D) முழுமையாக தானியங்கி கணினி மயமாக்கப்பட்ட செய்முறை பகுப்பாய்வை உடையது.

விளக்கம்: விண்வெளி தொலைநுண்ணுணர்வு, பகுதி தானியங்கி கணினி மயமாக்கப்பட்ட செய்முறை பகுப்பாய்வை உடையது. இது ஓரளவிற்கு மலிவான ஒன்றும் கூட.

41) செயற்கைகோள்களின் சுற்று வட்டப்பாதைகள் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன?

A) உணர்வியின் செயல்படும் திறன்

B) செயற்கைக்கோளுடன் பொருத்தப்பட்ட கணினியின் தரவு சேமிக்கப்படும் திறன்

C) செயற்கைக்கோளின் நோக்கம்

D) A மற்றும் C

விளக்கம்: செயற்கைகோளின் சுற்று வட்டப்பாதைகள் அதனுடன் பொருத்தப்பட்ட உணர்வியின் செயல்படும் திறன் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது

42) செயற்கைக்கோள்களை எத்தனையாக வகைப்படுத்தலாம்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: செயற்கைக் கோள்களின் உயரம், முறைப்படுத்துதல் மற்றும் புவித்தொடர்பு சார்ந்த சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் 1. புவிநிலை செயற்கைகோள் 2. துருவ/சூரிய நிலை செயற்கைகோள் 3. உளவு செயற்கைகோள் என 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது.

43) புவிநிலை செயற்கைகோள்கள் எந்தத் திசையில் சுற்றும்?

A) கிழக்கிலிருந்து மேற்காக

B) மேற்கிலிருந்து கிழக்காக

C) வடக்கிலிருந்து தெற்காக

D) தெற்கிலிருந்து வடக்காக

விளக்கம்: புவிநிலை செயற்கைகோள்ககள், புவியின் திசையிலேயே அதாவது மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. இது புவியின் வேகத்தில் சுற்றுவதால் ஒரு முழுச்சுற்றை முடிக்க 24 மணி நேரம்

எடுத்துக் கொள்கிறது. இவை, புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் தொடர்ந்து கண்காணித்து தகவலை சேகரிக்கிறது.

44) புவிநிலை செயற்கைக் கோள்கள் எங்கு, எவ்வளவு உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது?

A) துருவப்பகுதியில் 35000 கி.மீ உயரத்தில்

B) நிலநடுக்கோட்டுப்பகுதியில் 35000 கி.மீ உயரத்தில்

C) துருவப் பகுதியில் 1000 கி.மீ உயரத்தில்

D) சூரியநிலையில் 200 கி.மீ உயரத்தில்

விளக்கம்: புவிநிலை செயற்கைக்கோள்கள், புவிநடுக்கோட்டுப் பகுதியில் சுமார் 35000 கி.மீ உயரத்தில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிவரும்

45) புவிநிலை செயற்கைகோளின் படம்பிடிக்கும் பரப்பளவு என்ன?

A) 70O வடக்கு முதல் 70O தென் அட்சம் வரை

B) 70O கிழக்கு முதல் 70O மேற்கு தீர்க்கம் வரை

C) 66O 30’ வடக்கு முதல் 66O 30’ தென் அட்சம் வரை

D) 90O வடக்கு முதல் 90O தென் அட்சம் வரை

விளக்கம்: புவிநிலை செயற்கைகோள் 70O வட அட்சம் முதல் 70O தெற்கு அட்சம் வரை உள்ள பகுதிகளை மட்டுமே படம் பிடிக்கும் பரப்பாக எடுத்துக்கொள்கிறது. ஒரு செயற்கைக் கோள் புவியின்

மூன்றில் ஒரு பகுதியை ஒரே நேரத்தில் கண்காணிக்க வல்லது.

46) பொருந்தாத ஒன்றை தேர்க

A) GOES

B) METEO SAT

C) INTEL SAT & INSAT

D) SPOT

விளக்கம்: SPOT என்பது துருவநிலை செயற்கைக்கோள். GOES, METEO SAT, INTEL SAT, INSAT ஆகியவை புவிநிலை செயற்கைக் கோள்கள். தகவல் தொடர்பிற்காகவும் வானிலைசார் தகவலுக்காகவும் இவ்வகை செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

47) இந்தியாவின் முதல் புவிநிலைச் செயற்கைக்கோள் எது?

A) INSAT

B) APPLE

C) METEO SAT

D) GEOS

விளக்கம்: இந்தியா தன் முதல் புவிநிலைச் செயற்கைக் கோளான APPLE-யை ஜுன் 19,1981-ல் ஏவியது. இது C-அதிர்வெண் பட்டை செலுத்தி வாங்கியை கொண்ட இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்ட முதல் உள்நாட்டு தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.

48) மாட்டு வண்டியில் வைத்து சோதனையிடப்பட்ட புவி நிலை செயற்கைக்கோள் எது மற்றும் அது எந்த நாட்டுடையது?

A) INSAT, இந்தியா

B) IRNSS, இந்தியா

C) APPLE, இந்தியா

D) BeiDou, இந்தியா

விளக்கம்: இந்தியா தனது முதல் உள்நாட்டு தகவல் தொடர்பு செயற்கைக்கோளான APPPLE-யை மாட்டு வண்டியில் வைத்து சோதித்தது. இது ISRO-ஆல் மேற்க்கொள்ளப்பட்டது.

49) தன் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த ஒரே நாடு எது?

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

விளக்கம்: இந்தியா தன் முதல் முயற்சியிலேயே மங்கள்யான் என்ற செயற்கைகோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வெற்றி பெற்றது. இது நவம்பர் 5, 2013 அன்று ISRO-ஆல் அனுப்பட்டு செப்டம்பர்

24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

50) அனைத்து புவிவள செயற்கைகோள்களும் எவ்வகையைச் சார்ந்தவை?

A) புவிநிலை செயற்கைக்கோள்

B) சூரிய நிலை செயற்கைகோள்

C) உளவுச் செயற்கைக்கோள்

D) B & C

விளக்கம்: அனைத்து புவிவள செயற்கைக் கோள்களும் துருவ செயற்கைக்கோள்கள் அல்லது சூரிய நிலை செயற்கை கோள்களாகும். இவ்வகைச் செயற்கைக்கோள்கள் ஒரு துருவத்திருந்து மற்றொரு துருவத்தை சுற்றி வருகின்றன.

51) துருவ செயற்கைக்கோள்களின் எந்த அமைவிடம் புவி புவிச்சுழலாமல் இருந்தால் கூட மாறாமல் இருக்கும்?

A) வடக்கு-தெற்கு அமைவிடம்

B) கிழக்கு-மேற்கு அமைவிடம்

C) வடகிழக்கு-தென்மேற்கு அமைவிடம்

D) வடமேற்கு-தென்கிழக்கு அமைவிடம்

விளக்கம்: புவிச்சுழலாமல் இருந்தால் கூட துருவ செயற்கைகோளின் கிழக்கு-மேற்கு அமைவிடம் மாறமல் இருக்கும். புவியிலிருந்து பார்த்தால் இவை மேற்கு நோக்கி தொடர்வது போன்று தெரியும். இவ்வகை நகர்வு புவியின் அடுத்த பரப்பை பிடிப் பகுதியாக கொள்வதன் மூலம் புவிப்பரப்பு முழுவதும் இவற்றால் உரித்திரிபு செய்ய முடியும்.

52) தவறான இணையைத் தேர்க.

A) METEO SAT – புவிநிலை செயற்கைக் கோள்

B) LAND SAT – துருவநிலை செயற்கைக்கோள்

C) NOAA – சூரியநிலை செயற்கைக்கோள்

D) சால்ட் I – துருவநிலை செயற்கைக் கோள்

விளக்கம்: சால்ட் I என்பது உளவுச் செயற்கைக் கோள். LAND SAT, SPOT, IRS, NOAA, SEASAT, TIROS, HCMM, SKYLAB மற்றும் விண்வெளிக்கலன்கள் (SPACE SHUTTLE) ஆகியவை துருவநிலை அல்லது சூரியநிலைச் செயற்கைக்கோள்கள் ஆகும்.

53) சரியான இணையைத் தேர்க

A) துருவச் சுற்றுப்பாதை – 100-200 கி.மீ உயரம்

B) சூரியநிலை சுற்றுப்பாதை – 35,800 கி.மீ உயரம்

C) புவிநிலை சுற்றுப்பாதை – 200 – 1,000 கி.மீ உயரம்

D) துருவச் சுற்றுப்பாதை – 200 – 1,000 கி.மீ உயரம்

விளக்கம்: துருவச் சுற்றுப்பாதை – 200 – 1,000 கி.மீ உயரம்

சூரியநிலை சுற்றுப்பாதை – 100-200 கி.மீ உயரம்

புவிநிலை சுற்றுப்பாதை – 35,800 கி.மீ உயரம்

54) இராணுவ மற்றும் அரசியல் சார்ந்த தகவல்களுக்காக புவியைச் சுற்றி வரும் கண்காணிப்பு மேடைகள் எவை?

A) புவிநிலை செயற்கைக்கோள்

B) சூரியநிலை செயற்கைக்கோள்

C) உளவுச் செயற்கைக்கோள்

D) அனைத்தும்

விளக்கம்: இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசியக் கொள்கை உருவாக்கத்திற்கு மட்டுமல்லாமல் தளவாட கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளான SALT – I, SALT – II போன்றவற்றை சரிபார்க்கவும் பயன்படுகிறது

55) உளவுச் செயற்கைக்கோள் அனுப்பும் தகவலை குறிக்கீடு செய்து சேமிக்கும் நாடு எது?

A) USA

B) UK

C) இந்தியா

D) சீனா

விளக்கம்: உளவுச் செயற்கைக்கோளால் புவிக்கு அனுப்பப்படும் தகவல்களை வாசிங்டன்-ல் அமைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டின் ரகசிய வசதி கொண்ட புகைப்பட விவரண மையத்தில்

உள்ள நிபுணர்களால் குறிக்கீடு செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

56) உளவுச் செயற்கைக்கோளில் எத்தனை அடிப்படை வகைகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 1.புலப்படும் மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் மூலமான சமிக்ஞைகளை படப்பதிவு செய்யும் அமைப்பு 2. ஏவுகணைகளை கண்டறிய வடிவமைக்கப்பட்ட அகச்சிவப்பு தொலைநோக்கி

3. இரவு நேரம் மற்றும் மேக கூட்டத்தின் போதும் நிலத்தோற்றம் மற்றும் நீர்நிலைகளை படமாக்கும் ரேடார் 4. ஃபெர்ரட் எனப்படும் சமிக்ஞை நுண்ணறிவு (SIGNIT) சோதனை செயற்கைக்கோள்.

இவை நான்கும் உளவுச் செயற்கைக்கோள்களின் 4 அடிப்படை வகைகளாகும்.

57) சரியானதை தேர்க.

A) SINGNIT – Signal Inteligence Satellite

B) SINGNIT – Significance Inteligence Satellite

C) SINGNIT – Significance Interface Satellite

D) SINGNIT – Signal Interface Satellite

விளக்கம்: SINGNIT – Significance Inteligence Satellite என்றால் சமிக்ஞை நுண்ணறிவு சோதனை செயற்கைகோள் என்று பொருள். ஃபெர்ரட் எனப்படும் செயற்கைக்கோள் இவ்வகையைச் சார்ந்தது.

58) உளவுச் செயற்கைக்கோளின் எந்தெந்த வகைகளை ஒன்றிணைத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் திறவுகோல் தொடர் போன்ற பெரிய அளவிலான மேடைகளும் பயன்படுத்தப்படுகின்றன?

A) 1 மற்றும் 2

B) 1 மற்றும் 3

C) 2 மற்றும் 4

D) 1 மற்றும் 4

விளக்கம்: உளவுச் செயற்கைக்கோள்களின் முதல் மற்றும் நான்காம் வகைகளை ஒன்றிணைத்து. அமெரிக்க ஐக்கிய நாட்டின் திறவுகோல் தொடர் போன்ற பெரிய அளவிலான மேடைகளும் பயன்படுத்தப்படுகிறது

59) அதிக அளவிலான உளவு செயற்கைகோள்களை ஏவிய நாடுகள் எவை?

A) ரஷ்யா-அமெரிக்கா

B) அமெரிக்கா-சீனா

C) அமெரிக்கா-இந்தியா

D) சீனா-ரஷ்யா

விளக்கம்: அநேக நாடுகள் உளவுச் செயற்கைக்கோள்களை ஏவியிருந்து போதியிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இரஷ்யா மட்டுமே அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை ஏவியுள்ளன.

60) 1991-க்கு பிறகு சோவியத் கூட்டமைப்பின் பெரும்பான்மையான விண்வெளி அமைப்புகளை தனதாக்கிக் கொண்ட நாடு எது?

A) பிரான்ஸ்

B) இரஷ்யா

C) ருளுயு

D) ஜப்பான்

விளக்கம்: சோவியத் கூட்டமைப்பின் பெரும்பான்மையான விண்வெளி அமைப்புகளை 1991-ற்கு பிறகு இரஷ்யா தனதாக்கிக் கொண்டது. எனினும், இச்செயற்கைக்கோள்களின் திறன் மற்றும் வலைத்தொடர்பை மேம்படுத்த தேவையான செலவினங்களை இரஷ்யாவில் மேற்கொள்ள இயலவில்லை.

61) தற்போதுள்ள திறன் மிகுந்த உளவு செயற்கைகோள்களில் பெரும்பான்மையானவை எந்நாட்டைச் சேர்ந்தவை?

A) இரஷ்யா

B) சீனா

C) அமெரிக்கா

D) இந்தியா

விளக்கம்: அமெரிக்கா ஐக்கிய நாடு, மிக நவீன உளவு செயற்கை கோள்களை அதிக எண்ணிக்கையில் ஏவியுள்ளது. கொரோனா, மிடாஸ் (MIDAS), சாமாஸ் (SAMAS) போன்றவை USA-ஆல் முன்பு ஏவப்பட்ட உளவு செயற்கைகோளாகும்.

62) கூற்று (A): செயற்கைகோள்கள் மூலம் வயல் சார்ந்த தகவல்களான பயிர் அடையாளம், பயிரிடப்பட்ட பரப்பு, பயிர்களின் நிலை அல்லது திறன் போன்ற தகவலைப் பெறலாம்.

காரணம் (R): செயற்கைக்கோள்களின் மறுபார்வையிடுதல் சுழற்சியின் மூலம் ஒரு சிறு வயல் முதல் பெரிய நாடு வரையிலான பரப்பளவிற்கான தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டவை.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

B) கூற்று சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல.

C) கூற்று சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம்

D) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

விளக்கம்: செயற்கை கோள் தகவல்களைக் கொண்டு வேளாண்மையை கண்காணித்து அவற்றை நிர்வாகம் செய்தல் போன்ற நுட்ப பணிகளை மேற்கொள்ள முடியும்.

63) கூற்று (A): வனமேலாண்மைக்கு செயற்கைகோள் தகவல்கள் உதவிபுரிந்தன

காரணம் (R): காட்டுத்தீ, காடுகள் அழிப்பு, காடுகள் ஆக்கிரமிப்பு போன்றவை செயற்கைகோள் தகவல் மூலம் எளிதில் பெறப்படுகிறது.

A) கூற்று சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம்

B) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

C) கூற்று சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விளக்கம்: காட்டுத்தீ, காடுகள் அழிப்பு, காடுகள் ஆக்கிரமிப்பு போன்றவை சமீப காலமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளன. இச்செயல்களை சுலபமாக அடையாளம் கண்டு இவைகளை தடுப்பதற்கு செயற்கைகோள் பதிமங்கள் உதவிகரமாக உள்ளன.

64) T Gaoten 4 புவி உளவு செயற்கைகோள் பற்றிய தவறான கூற்றைத் தேர்க

A) புவியின் அதிக சக்தி வாய்ந்த புவி உளவு செயற்கைக்கோள்

B) இச்செயற்கைக்கோள் புவி அதிர்வு மற்றும் சூறாவளியால் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு உடனடி தகவலை தரவல்லது.

C) இது 2015-ல் ஏவப்பட்டது.

D) இது அயல்நாடுகளின் போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கண்காணிக்க அமெரிக்காவிற்கு உதவியது

விளக்கம்: T Gaoten 4 உளவு செயற்கைக்கோள் அயல்நாடுகளின் போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கண்காணிக்க சீனாவிற்கு உதவியது. இது கடற்படை தளமும் போர் முக்கியத்துவம் வாய்ந்த

பகுதியில் அடங்கும்.

65) மண்ணியலில் நுண்ணுணர்வின் பயன்பாடுகள் எவை என்பதை தேர்க.

1. பாறைகள் சார்ந்த வரைபடம் தயார் செய்தல்

2. புவிக்கட்டமைப்பு வரைபடம் தயார் செய்தல்

3. படிகப்படம் வரைதல் மற்றும் அவற்றின் கண்காணிப்பு

4. புவிப்பேரிடர் படம் வரைதல்

A) 1 மற்றும் 2

B) 1,2 மற்றும் 3

C) 2,3 மற்றும் 4

D) அனைத்தும்

விளக்கம்: பாறைகள், புவிக்கட்டமைப்பு, புவிப்பேரிடர் பற்றிய படம் வரைதல், படிகப்படம் வரைதல், கனிம ஆய்வுகள், ஹைட்ரோ கார்பன் ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ள நுண்ணுணர்வு

தொழில்நுட்பம் பயன்படுகிறது.

66) பேராழியில் நுண்ணுணர்வின் பயன்படுகள் என்ன?

A) கடலின் ஆழத்தை கண்காணித்தல்

B) தாவரப்பச்சையத்தின் அளவை கணித்தல்

C) படிந்துள்ள மண்துகளின் அளவை அறிதல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கடற்கரை பிரதேச மேலாண்மையில் தொலை நுண்ணுணர்வின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. பாத்திமெட்ரிக் போல கடல் ஆழத்தில் அளவு மற்றும் அவற்றில் அமைவிடத்தை கண்டறியவும், தாவரப்பச்சையத்தின் அளவு மற்றும் படிந்துள்ள மண்துகளின் அளவு போன்றவற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது.

67) புவியின் எடை குறைந்த செயற்கைக்கோளை ஏவிய அமைப்பு எது? அதன் பெயர் என்ன?

A) ISRO கலாம் சாட்

B) DRDO கலாம் சாட்

C) NASA கலாம் சாட்

D) ESA கலாம் சாட்

விளக்கம்: உலகின் மிக எடை குறைந்த செயற்கைக்கோளை நாசா ஏவியுள்ளது. இதற்கு அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு “கலாம் சாட்” என்று அழைக்கப்படுகிறது. கலாம் சாட்-ன் எடை 64 கிராம் ஆகும்.

68) கலாம் சாட்-ஐ உருவாக்கியவர் யார்

A) NASA

B) ரிஃப்பாத் சரூக்

C) ISRO

D) ஸ்ரீமதி கேசவன்

விளக்கம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது மாணவன் ரிஃப்பாத் சரூக் மற்றும் அவரின் அணியினரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது. இது NASA-ஆல் ஜுன் 22, 2017-ல் ஏவப்பட்டது. இதன் இயக்குனர் ஸ்ரீமதி கேசவன் ஆவார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இவரது வீட்டில் இந்த விண்கலம் தொகுக்கப்பட்டது

69) செயற்கைகோளனது ஏவப்பட்ட எத்தனையாது நிமிடத்தில் ஏவூர்தியிலிருந்து பிரிக்கப்பட்டது?

A) 240

B) 125

C) 360

S) 420

விளக்கம்: செயற்கைகோளானது ஏவப்பட்ட 124 நிமிடத்தில் விண்வெளியின் ஈர்ப்பு விசை சூழலில் ஏவூர்தியிலிருந்து பிரிக்கப்பட்டது. சாரூக்கின் இத்திட்டம் முதல் முப்பரிமாண அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்டு போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். சாரூக் குழுவின் இயக்குரான ஸ்ரீமதிகேசவன் கூறும்போது இந்த ஏவூர்தி பறக்கும் மொத்த நேரம் 240 நிமிடங்கள் எனக் கூறினார்.

70) Cube in Space என்ற போட்டியை நடத்திய அமைப்பு எது?

A) NASA

B) ISRO

C) ESA

D) NASA & I Doodle Learning

விளக்கம்: NASA & I Doodle Learning என்ற இரு நிறுவனங்களின் உபயத்தால் Cube in Space என்னும் போட்டி நடத்தப்பட்டது. இதில் சாரூக்-ன் கலாம்சாட் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் நோக்கம், தொழில்நுட்பத்தின் புதிய செயல்திறனை விண்வெளிக்கு கொண்டு சேர்ப்பதாகும்.

71) பொருத்துக.

அ. வேளாண்மை – 1. Gealogy

ஆ. வன மேலாண்மை – 2. Oceanography

இ. மண்ணியல் – 3. Agriculture

ஈ. பேராழியியல் – 4. Forestry

A) 3,4,1,2

B) 4,3,1,2

C) 3,2,1,4

D) 1,4,3,2

விளக்கம்: Gealogy – மண்ணைப் பற்றிய அறிவியல்

Oceanography – பெருங்கடல் பற்றிய ஆய்வு

Agriculture – வேளாண்மை பற்றிய அறிவியல்

Forestry – வன மேலாண்மை பற்றிய அறிவியல்

72) சில நூறு கிலோ மீட்டர்களுக்கும் மேலிருந்து பெறப்படும் தொலையுணர்வின் பெருபகுதிறன் கொண்ட பதிமங்கள் எத்தனை மீட்டருக்கும் அல்லது அவற்றிற்கும் குறைவான பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு பொருள்களையும் பதிவு செய்ய வல்லது?

A) 4 மீட்டர்

B) 1 மீட்டர்

C) 3 மீட்டர்

D) 2 மீட்டர்

விளக்கம்: புவிப்படவியல், உயரமான பகுதிகளிலிருந்து அளவாய்வு செய்யப்படும் தொலை நுண்ணுணர்வின் மூலம் நகர்ப்பகுதிகள், கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள், பாலைவனங்கள் போன்ற பெரிய பரப்பிற்கான தகவல்கள் பெறப்படுவதால் இவற்றை வரைபடமாக்கும் வரைபட வல்லுனர்களுக்கு எளிதாகின்றது.

73) வானிலையியல் பற்றிய கூற்றுகளை ஆய்க.

1. தொலை நுண்ணுணர்வின் ரோடர் அமைப்பு வானிலை சார்ந்த அடிப்படை தகவல்களை பெற உதவுகிறது.

2. தொலையுணர்வானது ஆளில்லா தொலைதொடர்பு செயற்கைகோள்களின் மூலம் நிலம் மற்றும் கடல் சார்ந்த வானிலை தகவல்களை சேகரிக்கிறது.

3. தொலையுணர்வானது, வானிலை மையங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கும் துரித தகவல் பரப்புதலுக்கும் வானிலை முன்னறிவிப்பிற்கும் பயன்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 1 மற்றும் 2 சரி

C) 1 மற்றும் 3 சரி

D) 1,2 மற்றும் 3 சரி

விளக்கம்: தொலை நுண்ணுணர்வானது, வானிலையியலில் பெரிதும் உதவுகிறது. வானிலையில் ஏற்படப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே கணித்து மக்களை எச்சரிக்கும் விதத்தில் தகவல்களை சேகரித்துத் தருகிறது.

74) தவறான இணையைத் தேர்க.

A) இடவியல் – Topography

B) நகர திட்டமிடல் – Urabanplanning

C) வானிலையியல் – Aerology

D) புவிப்படவியல் – Cartography

விளக்கம்: இடவியல் – Topography

நகர திட்டமிடல் – Urabanplanning

வானிலையியல் – Meteorology

வளிமண்டலவியல் – Aerology

75) இடவியலில், பொதுவான இயற்கை மற்றும் செயற்கை அம்சங்களை கொண்டுள்ள படங்கள் எவை?

A) கோட்டுப்படங்கள்

B) தலப்படங்கள்

C) இயற்கை அமைப்பு வரைபடம்

D) எதுவுமில்லை

விளக்கம்: முப்பரிமாண தோற்றமுடைய புவிப்பரப்பின் மீதான நிலத்தோற்றங்களை பதிவு செய்து அவற்றை அடையாளங்கான உதவுவது தொலை நுண்ணுணர்வாகும். தலப்படங்கள் பொதுவான இயற்கை மற்றும் செயற்கை அம்சங்களை கொண்டுள்ளது. அவை மலைகள், பள்ளதாக்கு, சமவெளிகள், ஆறுகள் மற்றும் இயற்கை தாவரங்களின் தோற்றங்களை பெயருடன் காட்டுகிறது. இவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட சாலைகள், எல்லைகள், தகவல் மற்றும் மின்சாரம் செலுத்தப்படும் பாதை மற்றும் கட்டடங்களையும் காட்டுகிறது.

76) இரு வேறுபட்ட அளவைகள் கொண்ட இயக்க வரைபடங்களை அடுக்கி ஆய்தல் எதன் மூலம் சாத்தியமாகிறது?

A) தொலை நுண்ணுணர்வு

B) செயற்கை நுண்ணுணர்வு

C) நகர திட்டமிடல்

D) எதுவுமில்லை

விளக்கம்: தொலை நுண்ணுணர்வின் மூலம் நகர்ப்பகுதிகளில் உள்ள இயற்கை, சமூக மற்றும் பொருளாதாரம் தொடர்பாக சேகரிக்கப்படும் தகவல்கள் நகரத்திட்டமிடலுக்கு பயனுள்ளதாக விளங்குகிறது. அடிப்படை வரைபடங்களை இயக்குமாக்குதல் மூலம் தேவைப்படும் சமயங்களில் இவ்வரைபடங்களை தேவைக்கேற்ப மாற்றியமைக்கவும், மேம்படுத்த இயலும்.

77) கடந்த 20 ஆண்டுகளாக நகர திட்டமிடல், வன திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு ஒரு மிகச்சிறந்த சாதனமாக விளங்குவது எது?

A) செயற்கை நுண்ணறிவு

B) கணினி தொழில்நுட்பம்

C) செயற்கைகோள்

D) புவித் தகவல் தொகுப்பு (GIS)

விளக்கம்: புவித் தகவல் தொகுப்பு (GIS) ஆனது தரவு உள்ளீடு, தரவு காண்பித்தல், தரவு மேலாண்மை, தகவல் மீட்பு மற்றும் ஆய்வு போன்ற பணிகளை உள்ளடக்கியது.

78) புவித் தகவல் தொகுப்பு(GIS) பற்றிய தவறான கூற்றை தேர்க

A) GIS ஆனது கடல், வளிமண்டலம், நிலம் போன்றவற்றின் அனைத்து புவியியல் அம்சங்களையும் உள்ளடக்கியது

B) கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற புவித்தகவல் சேகரிப்பு, சேமிப்பு, செயல்பாடு, உற்பத்தி, முன்னிலைப்படுத்துதல் மற்றும் பரவச் செய்தல் போன்ற பணிகளை செய்தலும் GIS ஆகும்.

C) பூமிக்கு அருகிலுள்ள பிற கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய தகவலை அளிக்க வல்லது.

D) சமீப காலமாக நகரத்திட்டமிடல், கிராமப்புற வளர்ச்சி திட்ட ஆய்வுக்காக தேவையான தகவலை அளித்து வருகிறது.

விளக்கம்: GIS ஆனது புவியியல் அம்சங்கள் பற்றிய தகவலை அளிப்பதால், புவியியல், சுற்றுச்சூழலியல், நகரத்திட்டமிடல், கிராமப்புற வளர்ச்சி திட்ட ஆய்வு, பாதுகாப்பு மற்றும் வேளாண்மையை மேம்படுத்துதல் போன்றவற்றை சுலபமாக கையாள முடிகிறது.

79) எந்த கால இடைவெளியில் மூன்றாம் தலைமுறை கணினி பிரசித்திப் பெற்றது?

A) 2010

B) 1972-2010

C) 1964-1971

D) 1940-1956

விளக்கம்: முதல் தலைமுறை கணினி – 1940 – 1956

இரண்டாம் தலைமுறை கணினி – 1956 – 1963

மூன்றாம் தலைமுறை கணினி – 1964 – 1971

நான்காம் தலைமுறை கணினி – 1972 – 2010

ஐந்தாம் தலைமுறை கணினி – 2010 – இன்றுவரை

80) “நுண்செயலி” எந்த தலைமுறைக் கணினியில் பயன்படுத்தப்பட்டது?

A) 4

B) 5

C) 1

D) 2

விளக்கம்: முதல் தலைமுறை – வெற்றிடக்குழாய்

இரண்டாம் தலைமுறை – சிறிய மின்மப்பொறி

மூன்றாம் தலைமுறை – ஒருங்கிணைந்த மின்சுற்று

நான்காம் தலைமுறை – நுண்செயலி

ஐந்தாம் தலைமுறை – செயற்கை நுண்ணறிவு

81) புவித் தகவல் தொகுப்பு எத்தனை பெரும் கூறுகளாக பிரிக்கப்படுகிறது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: புவித் தகவல் தொகுப்பு, வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள், செய்முறைகள் என 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

82) புவித்தகவல் தொகுதி மென்பொருள் இயங்கும் கணினி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வன்பொருள்

B) மைக்ரோ கணினி

C) மடிக்கணினி

D) சூப்பர் கம்ப்யூட்டர்

விளக்கம்: வன்பொருள் என்பது புவித்தகவல் தொகுதி மென்பொருள் இயங்கும் கணினியாகும். தற்போது பல்வேறு கணினிகள் உள்ள. இது டெஸ்க்டாப் அல்லது இணைய சேவையின் அடிப்படையிலானதாக இருக்கலாம்.

83) நெட்வொர்க் கணினியில் அல்லது கிளவுட் அடிப்படையில் இயங்கும் GIS மென்பொருளைக் கொண்ட கணினி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) GIS இணைய சேவை

B) ஆர்க் GIS இணைய சேவை

C) RGIS இணைய சேவை

D) WGIS இணைய சேவை

விளக்கம்: ஆர்க் GIS இணைய சேவை என்பது நெட்வொர்க் கணினியில் அல்லது கிளவுட் அடிப்படையில் இயங்கும் GIS மென்பொருளைக் கொண்ட கணினியாகும். கணினி திறம்பட செயல்பட வன்பொருள் பாகங்கள் அதிக திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

84) பொருத்தாத விடையைத் தேர்க

A) மதர் போர்டு

B) செயலி

C) பெயிண்ட்

D) அச்சுப்பொறி

விளக்கம்: பெயிண்ட் என்பது கணினியில் இயங்கும் மென்பெருள், மதர் போர்டு, வன்பொருள் தட்டு, செயலி,வரைபட அட்டை, அச்சுப்பொறி போன்றவை வன்பொருள்.

85) GIS ஆனது தரவுகளை வினாவி, தொகுக்க, இயக்க மற்றும் காட்சிப்படுத்த உதவுவது எது?

A) செயலி

B) வன்பொருள்

C) மதர்போர்டு

D) மென்பொருள்

விளக்கம்: பரப்புசார் தகவல்களை தொகுக்கவும் கருவிகளை வழங்கிடும் GIS மென்பொருள், தரவுகளை வினாவி, தொகுக்க, இயக்க மற்றும் காட்சியப்படுத்துவதற்கு உதவுகிறது.

86) GIS ஆனது தரவுகளை சேமிக்க எந்த தரவுத் தளத்தைப் பயன்படுத்துகிறது?

A) RDBMS

B) SQL

C) DBMS

D) My SQL

விளக்கம்: GIS ஆனது தரவுகளை சேமிக்க RDBMS (Regional Database Management System) என்ற தரவுத்தள மென்பொருளைப் பயன்படுத்துகிறது.

87) பொருந்தாததை தேர்க.

A) ஆர்க் ஜி ஐ எஸ்

B) ஆர்க் வீயுவ் 3.2 கியூ ஜி ஐ எஸ்

C) சாகா ஜி ஐ எஸ்

D) QZSS

விளக்கம்: ஆர்க் ஜி ஐ எஸ், ஆர்க் வீயுவ் 3.2 கியூ ஜி ஐ எஸ், சாகா ஜி ஐ எஸ் போன்றவை GIS மென்பொருள்கள் ஆகும். QZSS என்பது ஒரு பிராந்திய செயற்கைகோள் அமைப்பு. இது ஜப்பான் விண்வெளி ஆய்வு முகைமை (QZSS Japan) எனவும் அழைக்கப்படும்.

88) தரவு என்பது என்ன?

1. கணினியை இயக்கத் தேவைப்படும் ஒருங்கிணைந்த கட்டளைகளின் தொகுப்பு.

2. கணினியால் சேகரிக்கப்படும் தகவல்களே தரவுகள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கணினி அமைப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களே தரவுகள் எனப்படும். புவியியல் மற்றும் அவை சார்ந்த தரவுகளை வணிக ரீதியாக அளிப்பவரிடமிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட

தேவையான தரவுகளை அதன் விபரம் குறிப்பிட்டு பெற முடியும்.

89) தரவுகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகிறது?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: தரவுகள் பண்புசார் தரவுகள், பரப்புசார் தரவுகள், தொலை நுண்ணுணர்வு தரவுகள் மற்றும் உலகளாவிய தரவுதளம் என 4 வகையாகப் பிரிக்கப்படுகிறது

90) பரப்புகள் தரவுகளை பெரு நிறுவன தரவு மேலாண்மை அமைப்பில் உள்ள மற்ற தரவுகளுடன் ஒருங்கிணைப்பது எது?

A) தொலை நுண்ணுணர்வு

B) புவித் தகவல் தொகுப்பு

C) செயற்கை நுண்ணறிவு

D) அனைத்தும்

விளக்கம்: பரப்புசார் தரவுகளை பெரு நிறுவன தரவு மேலாண்மை அமைப்பிலுள்ள மற்ற தரவுகளுடன் புவித் தகவல் தொகுப்பு (GIS) ஒருங்கிணைக்கிறது.

91) தகவல் கட்டமைப்பு, திட்டமிடல், வடிவமைத்தல், பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்க பெரிதும் பயன்படுவது எது?

A) ட்ரோன்கள்

B) செயற்கைகோள்

C) தொலைநுண்ணுணர்வு

D) புவித் தகவல் தொழில்நுட்பம்

விளக்கம்: புவித் தகவல் தொழில் நுட்பத்தை அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முகமைகள் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும் தகவல் கட்டமைப்பு, திட்டமிடல், வடிவமைத்தல், பொறியியல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது

92) தொழில்நுட்பத் திறன் மிகுந்ததாக விளங்கும் நவீன கருவிகளை ஒருங்கிணைத்து ஆவண வடிவிலுள்ள நன்கு வரையறுக்கப்ட்ட செயல்முறைகளை வர்த்தக யுக்தியில் புகுத்த ஒரு திறவுகோலாக விளங்குவது எது?

A) தரவுகள்

B) செய்முறைகள்

C) மீத்தொகுப்பு

D) எதுவுமில்லை.

விளக்கம்: மீத்தொகுப்பு என்பது ஒரு தரவைப் பற்றிய தகவலை அளிப்பதாகும்.

93) நன்கு வரையறுக்கப்பட்ட நிலையான செயல்முறைகளை எவ்வாறு அழைக்கிறோம்?

A) மீத்தொகுப்பு

B) தரவுத்தளம்

C) செய்முறைகள்

D) தகவல்கள்

விளக்கம்: நுட்பமான பிரதிகளை உருவாக்க தேவைப்படும் நன்கு வரையறுக்கப்பட்ட நிலையான செயல்முறைகள், செய்முறைகள் எனப்படும். ஒரு நல்ல நோக்கத்தோடு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் மற்றும் வர்த்தக விதிமுறைகள், மாதிரிகளாகவும், இயக்கச் செயல்முறைகளாகவும் உள்ளது.

94) புவித் தகவல் தொகுப்பின் செயல்பாட்டு நிலைகள் எத்தனை?

A) 3

B) 2

C) 6

D) 4

விளக்கம்: புவித் தகவல் தொகுப்பின் செயல்பாடு என்பது அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள 3 நிலைகளை விவாதிப்பதாகும். முறையான ஒரு நல்ல அமைப்பை பெற சேமிப்பு, GIS தரவு மாதிரிகளை கையாளுதல் மற்றும் ஆய்தல் இதன் நிலைகளாகும்.

95) பொருந்தாததைத் தேர்க

1. தரவு பிடிப்பு – Data Capture

2. தகவல் சேமிப்பு – Data Manipulation

3. விசாரணை மற்றும் ஆய்வு – Query and Analysis

4. தரவு மாற்றியமைப்பு – Data Exchange

A) 1 மற்றும் 2

B) 2 மற்றும் 3

C) 2 மற்றும் 4

D) 4 மற்றும் 1

விளக்கம்: 1. தரவு பிடிப்பு – Data Capture

2. தகவல் சேமிப்பு – Data Storage

3. விசாரணை மற்றும் ஆய்வு – Query and Analysis

4. தரவு மாற்றியமைப்பு – Data Manipulation

இவை நான்கும் புவித்தகவல் தொகுப்பின் செயல்பாடுகள் ஆகும்.

96) வரைபட தகவல்களை கணினியில் சேமிக்கக்கூடிய எளிமையான புள்ளிகள், கோடுகள் மற்றும் களத்தொகுப்புகளாக மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும்?

A) ஸ்கேன் செய்தல்

B) தரவு பிடிப்பு

C) GNSS

D) இலக்கமாக்கல்

விளக்கம்: இலக்கமாக்கல் என்பது புவிப்பட தாள்களை கணினியில் சேமித்து வைக்கப்பட கூடிய எண் இலக்கமாக மாற்றுதல் ஆகும். இச்செயல் வரைபட தகவல்களை கணினியில் சேமிக்கக்கூடிய எளிமையான புள்ளிகள், கோடுகள் மற்றும் களத்தொகுப்புகளாக மாற்றுகின்றது.

97) இலக்கமாக்கல் எத்தனை முறைகளில் செய்யப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இலக்கமாக்கல் கைமுறை மற்றும் ஸ்கேன் செய்தல் என இருமுறைகளில் செய்யப்படுகின்றது. இலக்கமாக்கல் என்பது தரவுகளை கணினியில் சேமிக்கும் வகையில் எண் இலக்கமாக மாற்றுதலாகும்.

98) புவித் தகவல் தொகுப்பின் தரவு உள்ளீடு செய்யும் முறைகள் எவை?

1. வான்வெளிப் புகைப்படம், இலக்கமாக்கல்

2. ஸ்கேன் செய்தல், GNSS

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) இரண்டும்

D) எதுவுமில்லை

விளக்கம்: வான்வெளி புகைப்படம், ஸ்கேன் செய்தல், இலக்கமாக்கல் மற்றும் GNSS போன்றவை புவித் தகவல் தொகுப்பின் தரவு உள்ளீடு செய்யும் முறைகளாகும்.

100) பெருமளவில் பயன்படக்கூடிய தரவு மாதிரிகள் எத்தனை

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: ராஸ்டர் மற்றும் வெக்டர் இரண்டும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய தரவு மாதிகளாகும். இவை இரண்டும் வரைபடத்திலுள்ள தரவுகளை எளிதாக்கி சாதாரண வடிவில் கணினியில் சேமித்து வைக்க உதவுகிறது.

101) எது வரைபடத்தின் தரவுகளை இலக்கமாக மாற்ற பயன்படுத்தப்படும் இனம்சார் தரவு மாதிரிகளின் (Generic Data Model) அடிப்படையில் அமைந்ததாகும்?

A) தரவு மாற்றியமைப்பு

B) தகவல் சேமிப்பு

C) தரவு பிடிப்பு

D) தரவு ஆய்வு

விளக்கம்: தகவல் சேமிப்பு என்பது வரைப்படத்தின் தரவுகளை இலக்கமாக மாற்ற பயன்படுத்தப்படும் இனம்சார் தரவு மாதிரிகளின் அடிப்படையில் அமைந்தது.

102) தரவுகள் எவ்வாறு தொகுக்கப்பட்ட பின் மின்காந்த நாடா அல்லது மற்ற இலக்க ஊடகங்களில் சேமிக்கப்படுகின்றது?

A) செயல்முறைகள்

B) இலக்கம்

C) தகவல்கள்

D) செய்முறைகள்

விளக்கம்: தரவுகள் இலக்கமாக தொகுக்கப்பட்ட பின் மின்காந்த நாடா அல்லது மற்ற இலக்க ஊடகங்களில் சேமிக்கப்படுகின்றது. சில தகவல்கள் இழுப்பறையில் உள்ள புவிப்டத்தைப் போலவும்

மற்றவை இலக்க தரவு, அச்சு நகல் குறுந்தகடு மற்றும் வண்ணத் தட்டுகளிலும் சேமிக்கப்படுகிறது.

103) தரவு மாற்றியமைப்பு (Data Manipulation) என்பதன் பொருள் என்ன?

A) தரவுகளை ஸ்கேன் செய்தல்

B) தரவுகளை இலக்கமாக மாற்றுதல்

C) தரவுகளை ஒருங்கிணைத்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைத்தல்

D) தரவுகளை அனுப்புதல்

விளக்கம்: இலக்கமாக்கப்பட்ட புவியியல் தகவல்கள் திருத்தி அமைக்கப்படும் நிலையில் இருக்கலாம். இதனால் பண்புசார் தகவல்களை சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றிமைத்தல் போன்ற பணிகளை செய்தலே தரவு மாற்றயமைப்பு ஆகும்.

104) எது புவியியல் தரவுகளை கையாளவும், ஆய்வு செய்யவும் GIS-யை கையாளுபவர் பயன்படுத்தும் ஒரு இனம்சார் செயற்பாடு?

A) விருப்பத்தேர்வு

B) ராஸ்டர்

C) வெக்டர்

D) கருவித்தொகுதி

விளக்கம்: தரவு GIS-ல் சேமித்தவுடன், தரவை கையாள்வதற்கான பல விருப்பத்தேர்வுகள் உள்ளன. இச்செயற்பாடுகள் கருவித்தொகுதி (Toolkors) வடிவிலுள்ளன. கருவித்தொகுதி என்பது புவியியல் தரவுகளை கையாளவும் ஆய்வு செய்யவும் GIS-யை கையாளுபவர் பயன்படுத்தும் ஒரு இனம்சார் செயற்பாடாகும்.

105) எது தொகுதி தரவை மீட்டுப்பெறல், பரப்பு மற்றும் சுற்றளவு காணல், வரைபடங்களை சுருக்கி ஆய்தல், வரைபட இயற்கணித செயல் மற்றும் தரவு மறுவகைப்பாடு போன்றவற்றை செய்ய வல்லது?

A) ராஸ்டர்

B) வெக்டர்

C) கருவித்தொகுதி

D) A மற்றும் B

விளக்கம்: கருவித்தொகுதி தரவை மீட்டுப்பெறல், பரப்பு மற்றும் சுற்றளவு காணல், வரைபடங்களை சுருக்கி ஆய்தல், வரைபட இயற்கணித செயல் மற்றும் தரவு மறுவகைப்பாடு போன்றவை செய்ய வல்லது.

106) புவி ஆய்வகங்களை மாற்றியமைத்தல், பொருந்தாத பகுதிகளை பொருத்துதல் போன்ற பணிகளின் மூலம் ஒழுங்கற்ற வரைபடங்களை அவற்றின் தொடர்ச்சியான மற்ற வரைபடங்களோடு ஒத்துபோகச் செய்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தரவு மாற்றியமைப்பு

B) தரவு மறுவகைப்பாடு

C) தரவு சேமிப்பு

D) தரவு படிப்பு

விளக்கம்: தரவு மாற்றியமைப்பு என்பது ஒழுங்கற்ற வரைபடங்களை அவற்றின் தொடர்ச்சியான மற்ற

வரைபடங்களோடு ஒத்துப்போகச் செய்தலாகும். கூகுள் மேப் போன்ற வரைபடங்களை முழுமையாக தொகுக்க இது உதவுகிறது.

107) புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகள் சார்ந்த திட்டமிடல் முறைகளில் எது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது?

A) தகவல் தொடர்பு

B) தொலை நுண்ணுணர்வு

C) புவித் தகவல் தொடர்பு

D) செயற்கை நுண்ணறிவு

விளக்கம்: உதாரணமாக அனைத்துப் பிரிகளிலிருந்தும் சமமான மக்கள் பிரதிநிதித்துவம் அளிக்கும்படியான ஒரு உதவியை புவித் தகவல் தொகுப்பு மூலம் நம்மால் பெற முடியும். இந்த ஆய்வு

செய்யும் திறன் அமைப்பே GIS-ன் கருவாகும்.

108) பொருந்தாத இணையை தேர்வு செய்க.

A) அமெரிக்க ஐக்கிய நாடு – GIS

B) இரஷ்யா – GLONASS

C) ஐரோப்பிய கூட்டமைப்பு – IRNSS

D) சீனா – BEIDOU

விளக்கம்: ஜப்பான் – QZSS

இந்தியா – IRNSS

ஐரோப்பிய கூட்டமைப்பு – GALILEO

இவை அனைத்தும் புவியின் பல்வேறுப்பட்ட GPS அமைப்புகள். இவை அனைத்தும் இணைந்த அமைப்பே GNSS. அதாவது உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு ஆகும்.

109) தவறை சரிசெய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் விலை மலிவான கிரகிப்பான் மூலம் எத்தனை சென்டிமீட்டர் அளவிலான பொருளையும் துல்லியமாக காட்டும் திறன் பெற்றது GNSS?

A) 4 செ.மீ

B) 1 செ.மீ

C) 2 செ.மீ

D) 3 செ.மீ

விளக்கம்: 1 செ.மீ அளவிலான பொருளையும் துல்லியமாக காட்டும் திறன் பெற்றது GNSS. திறந்த வெளி சூழலாய்வில் பயன்படுத்தப்படும் அமைப்புகளில் GNSS அமைப்பு ஒரு சிறந்த தெரிவாகும்.

110) புவியின் GNSS எந்த நாட்டின் பாதுகாப்புத் துறையில் 1960-ல் ஏவப்பட்ட ட்ரான்சிட் (Transit) ஆகும்?

A) இந்தியா

B) சீனா

C) ரஷ்யா

D) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விளக்கம்: புவியின் GNSS அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்புத்துறையில் 1960-ல் ஏவப்பட்ட ட்ரான்சிட் ஆகும். செயற்கைக்கோள்கள் தம் சுற்று வட்டப்பாதை தரவு மற்றும் துல்லிய நேரம் சார்ந்த சமிக்ஞைகளை கடத்துகின்றது.

111) ட்ரான்சிட் எந்த வினையின் அடிப்படையில் இயங்குகிறது?

A) விளிம்பு விளைவு

B) வெப்ப விளைவு

C) டாப்ளர் விளைவு

D) மின்காந்த விளைவு

விளக்கம்: டாப்ளர் விளைவின் அடிப்படையில் ட்ரான்சிட் இயங்குகிறது. இவ்வமைப்பில் செயற்கைகோள் அறிந்த பகுதிகளில் பயணம் செய்து அறிந்த வானொலி அதிர்வெண்களில் ஒலிப்பரப்பியது. கிடைக்கப்பெற்ற அதிர்வெண்ணானது ஒளிபரப்பட்ட அதிர்வெண்ணிலிருந்து சற்றே மாறுபட்டு காணப்பட்டது. செயற்கைகோளின் நகர்வு கிரகப்பொறியிலிருந்து விலகிச் செல்வதே இதற்கு காரணமாகும்.

112) GNSS செயற்கைகோள் Block IIF-ன் எடை என்ன?

A) 2600 கிலோ கிராம்

B) 3900 கிலோ கிராம்

C) 1000 கிலோ கிராம்

D) 1400 கிலோ கிராம்

விளக்கம்: அண்மைக் கால GNSS செயற்கைகோள் Block IIF ஆனது 1400 கிலோ கிராம் எடை கொண்டது. GNSS-ன் பல குழுமங்கள் புவியை சுற்றி வருகின்றன.

113) GNSS செயற்கைகோள்கள் புவியிலிருந்து சுமார் எத்தனை கி.மீ உயரத்தில் சுற்றி வருகின்றன?

A) 2000 கிலோ மீட்டர்

B) 1000 கிலோ மீட்டர்

C) 3000 கிலோ மீட்டர்

D) 4000 கிலோ மீட்டர்

விளக்கம்: GNSS செயற்கைகோள்கள் புவியிலிருந்து சுமார் 2000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகின்றன. அவற்றின் வேகம் ஒரு நொடிக்கு பல 100 கிலோ மீட்டர் ஆகும்.

114) GPS குழுமம் எத்தனை செயற்கைகோள்களுடன் முழு புவிப்பரப்பையும் செயல் எல்லையாகக் கொண்டது?

A) 12

B) 21

C) 24

D) 32

விளக்கம்: புவியின் முதல் GNSS அமைப்பு GPS ஆகும். இது 1970-களின் இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்புத் துறையால் ஏவப்பட்ட ஒன்று. இது 24 செயற்கைகோளுடன் முழு புவிப்பரப்பையும் செயல் எல்லையாகக் கொண்டது

115) இரஷ்யாவின் முதன்மை இராணுவ கடற்பயண வலையமைப்பு எது?

A) GPS

B) GNONASS

C) GALILEO

D) BELDOU

விளக்கம்: இவை உரகன் செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இவை பனிப்போருக்கு பிறகு GNONASS என்ற வகைப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

116) GNONASS -ன் ஆயுட்காலம் என்ன?

A) 5-7 வருடம்

B) 4-6 வருடம்

C) 5-8 வருடம்

D) 3-7 வருடம்

விளக்கம்: இச்செயற்கைகோள்களின் ஆயுட் காலம் 5-7 வருடங்கள் வயது முதிர்ந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக புது செயற்கைகோள்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஏவப்படுகிறது. Global Navigation Satellite System என்பதன் சுருக்கமே GNONASS. இது ஒரு இரஷ்ய விண்வெளி பாதுகாப்புத் துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.

117) GNONASS எந்த ஆண்டு முதல் முழு புவிப்பரப்பையும் செயல் எல்லையாக கொண்டவாறு மேம்படுத்தப்பட்டது?

A) 2010

B) 2011

C) 2007

D) 2017

விளக்கம்: 2010 வரை இது இரஷ்ய பகுதிக்கு மட்டும் பயனுள்ளதாக இருந்தது. 2011-ல் இது முழு புவிப்பரப்பையும் செயல் எல்லையாக கொண்டவாறு மேம்படுத்தப்பட்டது.

118) GPS மற்றும் GNONASS – உடன் இணைந்த இயங்கும் தன்மை கொண்ட GPS எது?

A) BIDOU

B) QZSS

C) IRNSS

D) GALILEO

விளக்கம்: GALILEO ஐரோப்பாவின் உலகளாவிய செயற்கைகோள் அமைப்பாகும். இது மிக துல்லியமான தகவலை அளிக்கும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ளது. இரட்டை அதிர்வெண் அளிப்பு செயல் மூலம் நிகழ்கால இட அமைவை ஒரு மீட்டர் அளவில் துல்லியமாக தரவல்லது.

119) GALILEO அமைப்பில் மொத்தம் எத்தனை செயற்கைகோள்கள் உள்ளன?

A) 24

B) 30

C) 6

D) 32

விளக்கம்: மொத்தம் 30 செயற்கைக்கோள்களில் 24 இயங்கும் செயற்கைகோள்களும் மீதி உயரத்தில் இயங்கும் 6 செயற்கைகோள்களும் அடங்கும்.

120) சீனாவின் 2-வது செயற்கைகோள் அமைப்பு எது?

A) BeiDou

B) BeiDou-1

C) BeiDou-2

D) BeiDou-3

விளக்கம்: சீனா இருவேறு செயற்கைகோள் குழுமங்களை கொண்டது. இவற்றில் முதல் அதிகாரப்பூர்வமான BeiDou உலகளாவிய செயற்கைகோள் சோதனை அமைப்பு BeiDou-1 ஆகும். 2-வது அமைப்பு BeiDou-3 ஆகும்.

121) BeiDou-3 எப்போது அதிகாரப்பூர்வமாக புவிச்சேவையில் இறங்கியது?

A) டிசம்பர் 24, 2004

B) டிசம்பர் 26, 2004

C) டிசம்பர் 27, 2018

D) டிசம்பர் 29, 2018

விளக்கம்: டிசம்பர் 27, 2018 அன்று சீனாவின் 2-வது செயற்கைக்கோள் அமைப்பான BeiDou-3 அதிகாரப்பூர்வமான புவிச்சேவையில் இறங்கியது. BeiDou-3M/G/I செயற்கைகோள் சுற்றுப்பாதை பாகத்தின் 3-ம் நிலையை குறிப்பவையாகும்.

122) மித உயர் சுற்றுப்பாதையில் பயணிக்கும் திசைக்காட்டியாக விளங்கும் செயற்கைகோள்கள் அமைப்பு எது?

A) BeiDou-1

B) GLONASS

C) GALILEO

D) BeiDou-3

விளக்கம்: புவிநிலையொத்த மித உயர சுற்றுப்பாதையில் பயணிக்கின்ற திசைக்காட்டி உலகளாவிய செயற்கைகோள் அமைப்பு BeiDou-1 ஆகும். BeiDou-1 சீனாவின் முதல் அதிகாரப்பூர்வமான உலகளாவிய செயற்கைகோள் சோதனை அமைப்பாகும்.

123) ஜப்பான் விண்வெளி ஆய்வுப்பயண முகைமை (QZSS-Japan) எந்தெந்த நாடுகளுக்கு சேவை அளிக்கிறது?

A) ஜப்பான்

B) ஆசியா

C) நியூசிலாந்து

D) அனைத்தும்

விளக்கம்: QZSS என்பது ஒரு பிராந்திய செயற்கைகோள் அமைப்பாகும். இது ஜப்பான், ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளுக்கு சேவை அளிக்கக்கூடியது. இது Michibiki என்பதன் செல்லப்பெயர்-இதன் அர்த்தம் வழிகாட்டி

124) QZSS அமைப்பு எத்தகைய சுற்றுப்பாதையில் பயணிக்கும் செயற்கைக்கோள்களைக் கொண்டது?

A) மிக உயர சுற்றுப்பாதை

B) தாழ் உயர சுற்றுப்பாதை

C) மித உயர சுற்றுப்பாதை

D) A மற்றும் B

விளக்கம்: QZSSஅமைப்பு மித உயர சுற்றுப்பாதையில் பயணிக்கும் செயற்கைக்கோளைக் கொண்டது. QZS (Quasi zenith Satellite) என்பது மித உயர மற்றும் புவிநிலையொத்த செயற்கைக்கோள்கள் இரண்டையும் குறிக்கும்.

125) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் (ISRO) நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பிராந்திய செயற்கைகோள் கடற்பயண அமைப்பு எது ?

A) INS

B) BeiDou

C) IRNSS

D) GLONASS

விளக்கம்: IRNSS இந்திய நிலப்பரப்பு அமைப்பு தகவல்களை அளிக்க வடிவமைக்கப்பட்டது. இவற்றை பயன்படுத்துபவர்களுக்கு தங்களின் இருப்பிட தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது. GLONASS-ன்

முக்கிய நோக்கம், இந்தியா தன் கடற்பயணம் சார்ந்த தகவல்களுக்கு அயல்நாட்டின் சார்பு நிலையை குறைத்துக் கொள்வதாகும்.

126) GLONASS எப்பகுதிகளுக்கு சேவை வழங்குகிறது?

A) இந்தியா

B) இந்தியாவைச் சுற்றி 1500 கி.மீ

C) இந்தியாவைச் சுற்றி 2000 கி.மீ

D) A மற்றும் B

விளக்கம்: இந்தியா மற்றும் இந்தியாவைச் சுற்றி 1500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு IRNSS தன் சேவையை வழங்குகிறது. இப்பகுதியின் பிராதான GPS இதுவேயாகும்.

127) IRNSS எத்தகையச் சேவைகளை அளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது?

A) வாணிப ரீதியான பயன்பாட்டிற்கு திறன்மிகு இட அமைவை அளிப்பது.

B) இச்சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்குதல்

C) விரைவு தகவல் சேகரிப்பு

D) அனைத்தும்

விளக்கம்: பொதுமக்கள், அலுவலகங்கள், ஆராய்ச்சி மற்றும் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு திறன்மிக இட அமைவை அளிக்கவும். ஒரு குறிப்பிட்ட சேவையை குறிப்பட்டவர்களுக்கு அளிக்கவும்,

விரைவான தகவல் சேரிப்பிற்கும் IRNSS வடிவமைக்கப்பட்டது.

128) கடைகள் மற்றும் உணவகங்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிகளை வரைபடங்கள் மூலம் காண்பிக்கும் பயன்பாட்டிற்கு எது பயன்படுத்தப்படுகிறது?

A) IRNSS

B) BeiDou

C) GALILEO

D) GNSS

விளக்கம்: இருப்பிடங்கள் மற்றும் வழிகளை வரைபடங்கள் மூலம் காண IRNSS கிரகிப்பான்கள் தற்போது ஸ்மார்ட் தொலைபேசி உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

129) கூற்று: இரயில்சார் பொருட்களின் துல்லிய இட அமைவை தெரிந்து கொள்வதன் மூலம் இரயில் விபத்துக்களை குறைத்தல், இரயில்பாதை திறனை மேம்படுத்ததுதல் போன்றவற்றை செய்ய இயலும்.

காரணம்: இரயில் போக்குவரத்தில் இரயில் எஞ்சின்கள், இரயில் தளவாடங்கள் உள்ள இடங்கள் ஆகியவை GNSS மூலம் தெரிந்து கொள்ள இயலும்.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

B) கூற்று மட்டும் சரி

C) காரணம் மட்டும் சரி

D) கூற்று சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

விளக்கம்: GNSS மூலம் இரயில் தொடர்பான அனைத்து இட அமைவுகளையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் இரயில் விபத்துக்களை குறைத்தல் மற்றும் இரயில்பாதையை மேம்படுத்துதல் போன்றவற்றை செய்ய இயலும்.

130) கூற்று: சரக்கு கப்பல்களின் இயக்கம், பாதை மற்றும் முற்றத்திலிருந்து அவை உள்ள தூரம் போன்றவற்றை GNSS மூலம் கண்டறியப்படுகிறது.

காரணம்: விமானம் புறப்படும் இடம், பயணிக்கும் பாதை மற்றும் நிலத்தில் இறங்குமிடம் போன்ற தகவல்களை GNSS அளிக்கின்றது.

A) கூற்று மட்டும் சரி

B) காரணம் மட்டும் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

விளக்கம்: கடல் மற்றும் வான் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் மற்றும் விமானங்களின் இருப்பிடத்தை GNSS முன்கூட்டியே காண்பிப்பதால் அதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இயலும்.

131) தவறானக் கூற்றைத் தேர்க.

1. GNSS தொழில்நுட்பம், நிலச்சமன் எந்திரம் போன்ற இயந்திர கட்டுப்பாடு துறையில் அச்சூழல் குறித்த தகவல்களை அளிக்கிறது.

2. GNSS மூலமான மிகத் துல்லிய உரமிடல் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடுகள் செலவினத்தையும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைக்கின்றது.

3. GNSS மூலம் பெறப்படும் தகவல்கள் சுரங்கத்தில் உள்ள தாதுவை திறன்பட தோண்டி எடுக்கவும், தேவையற்ற பொருட்களின் நகர்வினை அறியவும் பயன்படுகிறது.

A) 1,2 மற்றும் 3 சரி

B) 1 மற்றும் 2 சரி

C) 1 மற்றும் 3 சரி

D) 1 மட்டும் சரி

விளக்கம்: GNSS -ன் பயன்பாடானது அளவாய்வு துறையில் பயனளிக்கிறது. 3 நில அளவியலாளர்கள் ஒரு வார காலத்திற்கு செய்யும் பணியை GNSS உதவியுடன் ஒரு ஆய்வாளர் ஒரே நாளில் செய்து முடிக்க இயலும்.

132) உலகின் மிக அதிவேக கணினிக்கான போட்டியின் புதிய வெற்றியாளர் எது?

A) சோபியா

B) சம்மிட்

C) சன்வே டை ஹ லைட்

D) எதுவுமில்லை

விளக்கம்: உலகின் மிக அதிவேக கணினிக்கான போட்டியின் புதிய வெற்றியாளர் சம்மிட். இது தற்போது உலகின் அதிவேக கணினியாக இருக்கும் சன்வே டை ஹ லைட்-யை விட ஒரு குறிப்படத்தக்க திறன் பெற்றுள்ளது.

133) IBM-ன் கூற்றுப்படி, சம்மிட் (Summit)-ன் செயல்திறன் என்ன?

A) 200 பீட்டாப்ளஸ்

B) 200 குவாட்ரில்லியன்/வினாடி

C) A மற்றம் B

D) 87 பீட்டா ப்ளாப்

விளக்கம்: சம்மிட்-ன் செயல்திறன் 200 பீட்டா ப்ளாப் அல்லது 300 200 குவாட்ரில்லியன்/வினாடி. சன்வே டை ஹீ லைட்-ன் செயல்திறன் 87 பீட்டா ப்ளாப்

134) சம்மிட்-ன் ஒவ்வொரு 4,608 முனையங்களும் எத்தனை IBM Power 9 சிப்ஸ்களுடன் 3.1GHZ-இல் இயங்குகிறது?

A) 2

B) 3

C) 4

D) 1

விளக்கம்: சம்மிட் இன்னும் அதிகமாக ரேம் 10 மீட்டர் பைட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் அதிவேக செயல்பாடு அதன் 325 மில்லியன் டாலர் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக வந்துள்ளது. இதற்கான நிதி, அமெரிக்க ஐக்கிய நாடுகளால் அளிக்கப்பட்டது.

135) பொருத்துக

அ. கணினியின் மைய செயலி – 1. செயற்கை நுண்ணறிவு

ஆ. ரேடியோ சமிக்ஞையை வேறு சமிக்ஞையாக மாற்றுவது – 2. இயற்கைகூறுகள்

இ. பாறைகளின் பொதுவான இயற்பண்பு – 3. அலையாங்கி

ஈ. யோசிக்கும் திறன் கொண்ட கணினி – 4. நுண்ணிய செயலி

A) 4,3,2,1

B) 3,4,2,1

C) 4,3,1,2

D) 3,2,1,4

விளக்கம்: கணினியின் மைய செயலியின் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ள ஒருங்கிணைந்த மினகற்றை நுண்ணிய செயலி ஆகும். அதே போல், மனித நுண்ணறிவைக் கொண்டு செயல்படும் வேலையை செய்யும் கணினி அமைப்பு செயற்கை நுண்ணறிவு ஆகும்.

136) உரை, படம் மற்றும் ஒலி போன்றவற்றை எண்ணிலக்கமாக மாற்றும் முறை எது?

A) எண்ணிலக்க முறையாக்கம்

B) இரும எண் முறையாக்கம்

C) தசம எண் முறையாக்கம்

D) எண்ம எண் முறையாக்கம்

விளக்கம்: எண்ணிலக்க முறையாக்கம் என்பது உரை, படம் மற்றும் ஒலி போன்றவற்றை எண்ணிலக்கமாக கணினிக்கு புரியும் விதத்தில் மாற்றும் முறை

137) கப்பல் விமானம் போன்றவற்றை கண்காணிக்கும் அமைப்பு எது?

A) SONAR

B) LASER

C) RADAR

D) பெரிஸ்கோப்

விளக்கம்: RADAR என்பது கப்பல் மற்றம் விமானம் ஆகியவற்றின் இருப்பிடத்தை காண உதவுகிறது. மேலும், வேகமாகச் செல்லும் வாகனங்களை கண்டறியவும் பயன்படுகிறது.

138) வான்வெளி புகைப்படத்தில் உள்ள பொருட்கள் மற்றும் நிலத்தோற்றங்களின் அளவுகளை மேற்கொள்ளும் படிப்பாய்வு எது?

A) காஸ்மாலஜி

B) போட்டோகிராமேட்ரி

C) ஏரோலஜி

D) ஜியாலஜி

விளக்கம்: காஸ்மாலஜி – அண்வியல் பற்றிய படிப்பாய்வு

ஏராலஜி – வளிமண்டலம் பற்றிய படிப்பாய்வு

ஜியாலஜி – புவியியல் பற்றிய படிப்பாய்வு

139) நிலையொத்த சுற்றுப்பாதை என்பது என்ன?

A) புவியின் நீள்வட்டப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்தது

B) புவியின் வட்டப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்தது

C) புவியின் துருவப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்தது

D) சந்திரனின் வட்டப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்தது

விளக்கம்: புவியின் நீள் வட்டப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்த சுற்றுப்பாதையே நிலையொத்த சுற்றுப்பாதை ஆகும்.

140) களைக் கொல்லி என்பது என்ன?

A) தேவையற்ற செடிகளை அழிக்கும் இரசாயன உரம்

B) பூச்சிகளை அழிக்கும் இரசாயன உரம்

C) பூஞ்சைகளை அழிக்கும் இரசாயன உரம்

D) பாக்டீரியாக்களை அழிக்கும் இரசாயன உரம்

விளக்கம்: களைக்கொல்லி – தேறையற்ற செடிகளை அழிக்க

பூச்சிக்கொல்லி – பூச்சிகளை அழிக்க

பூஞ்சைக்கொல்லி – பூஞ்சைகளை அழிக்க

உயிர்க்கொல்லி – வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை அழிக்க

141) உற்பத்தி அல்லது பிற செயல்முறைகளில் செயல்படும் தானியக்கச் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஆட்டமேட்டிக்

B) ஆட்டோ புரொடக்ஸன்

C) ஆட்டோமேஷன்

D) அனிமேசன்

விளக்கம்: உற்பத்தி அல்லது பிற செயல்முறைகளில் செயல்படும் தானியக்கச்செயல்கள் ஆட்டோமேஷன் எனப்படும்.

142) ஒரு புதிய நில அளவாய்வு இடத்திற்கும், ஏற்கனவே உள்ள அளவாய்வு இடத்திற்கும் இடையேயான தூரம் மற்றும் கோணங்களை அமைக்க தகவலை அளிப்பது எது?

A) GNSS

B) GPS

C) GNSS

D) QZSS

விளக்கம்: தேவைப்படும் புதிய நில அளவாய்வு இடத்தை நிர்ணயித்து ஏற்கனவே உள்ள அளவாய்வு இடத்திற்கும் இடையேயான தூரம் மற்றும் கோணங்களை அமைப்பதன் மூலம் ஒரே ஒரு நில அளவியலாளர் 3 பேர் 1 வாரத்தில் செய்யும் பணியை ஒரே நாளில் முடிக்க முடியும். இதற்கான தகவலலை GNSS அளிக்கிறது.

143) கூற்று: GNSS மூலம் மிகத்துல்லிய உரமிடல், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாட்டு செலவினத்தை குறைக்கலாம்

காரணம் : வேளாண் திட்டமிடல், வேளாண் நில வரைபடம் வரைதல், மண் கூறெடுத்தல், பயிர் மதிப்பீடு செய்தல் போன்றவற்றிற்கான தகவலை புNளுளு வழங்குகிறது

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம்

கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விளக்கம்: GNSS ஆனது வேளாண் திட்டமிடல் மற்றும் நிலவரைபடத்திற்கான தகவலை அளிப்பதால் துல்லியமாக பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் உரமிடலோ அல்லது உயிர்க்கொல்லி மருந்துகளை தெளிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin