பக்தி இயக்கம் 12th Ethics Lesson 6 Questions
12th Ethics Lesson 6 Questions
6] பக்தி இயக்கம்
1) பக்திநெறி, கருமநெறி, ஞானநெறி, யோகநெறி ஆகியவற்றுள் மிகவும் எளிமையானது எது?
A) பக்திநெறி
B) கருமநெறி
C) ஞானநெறி
D) யோகநெறி
விளக்கம்: மனிதன் மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு இந்துசமயம் பல்வேறு நெறிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளது. இந்நெறிமுறைகள் மனிதனின் உள்ளம், சிந்தனை, செயல்திறன் ஆகியவற்றிற்கேற்ப வேறுபடுகின்றன. அவரவர் மனநிலைக்கு எந்த நெறி எளியது, இனியது என்று தோன்றுகின்றதோ அதனைப் பின்பற்றி நல்வழி அடையலாம். இத்தகைய பல நெறிகளுள் மிகச் சிறப்பாகக் கருதப்படுவன
1. பக்திநெறி
2. கருமநெறி
3. ஞானநெறி
4. யோகநெறி ஆகியனவாகும்.
இவற்றுள் மிகவும் எளிமையானது பக்திநெறியாகும்.
2) சமணர்களை வென்று சைவசமயத்தை நிலைநாட்டியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: திருஞானசம்பந்தர், வடமொழி வேதங்களின் முக்கிய கருத்துகளை தாம் இயற்றிய பக்திப் பாடல்களில் பயன்படுத்தினார். இந்த அடிப்படையில் வேதத்தின் சாரங்கள் தமிழில் கொண்டுவரப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார். தேவாரத்தில், முதல் மூன்று திருமுறைகளைப் பாடியுள்ளார். இவர் சமணர்களை வென்று சைவசமயத்தை நிலைநாட்டினர்.
3) எவை பக்தி மார்க்கத்தின் கோட்பாடுகளாகும்?
A) தூய பக்தி, தூய அன்பு
B) தூய பக்தி, தூய எண்ணம்
C) தூய பக்தி, ஆழ்ந்த நம்பிக்கை
D) தூய அன்பு, ஆழ்ந்த நம்பிக்கை
விளக்கம்: பக்திநெறிக்கு அடிப்படையாகத் திகழ்வன சமயங்களாகும். எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான கொள்கைகள் உண்டு. மனிதனுக்குப் பிறப்பால் மட்டுமே உயர்வில்லை என்று எல்லா சமயங்களும் கூறுகின்றன. சடங்குகள், சம்பிரதாயங்கள் மனிதர்களுக்குத் தேவையில்லை. இறைவன்மீது தூய பக்தி, கொள்ளுதலே வாழ்வின் சிறந்த வழிபாடாகும். தூய பக்தியும், ஆழ்ந்த நம்பிக்கைகளும் பக்தி மார்க்கத்தின் கோட்பாடுகளாகும். இந்தப் பக்தியே அன்பு, எளிமை போன்றவற்றைப் போதித்து, மனிதன் வீடுபேறு அடைய வழிவகுக்கிறது.
4) பக்தி எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: பக்தி இரு வகைப்படும். அவை,
1. அபரபக்தி
2. பரபக்தி என்பதாகும்.
இவ்விருவகைகளும் பக்தியின் இருவேறுபட்ட மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.
உலகம் தழுவிய அன்பு நெறியே பரபக்தியாகும்.
குறுகிய சிந்தனையுடன் குறிப்பிட்ட ஒரு கடவுளை மட்டுமே வழிபாடு செய்வது அபரபக்தி ஆகும்.
5) தருமசேனர் என அழைக்கப்பட்டவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: சமண சமயத்தைத் தழுவிய பிறகு அப்பர் (திருநாவுக்கரசர்) ‘தருமசேனர்’ என்று அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் ‘மருள் நீக்கியார்’ ஆகும்.
6) சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
A) பக்தன் அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவதுடன் பக்தியின் உயர்ந்த நிலையில் செயல்படுவது பரபக்தி ஆகும்.
B) உலகம் தழுவிய அன்பு நெறியே பரபக்தியாகும்.
C) அபரபக்தி மற்றும் பரபக்தி ஆகிய இரண்டும் தொன்றுதொட்டு வந்தவையாகும்
D) அனைத்தும் சரி
விளக்கம்: பக்தன் அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவதுடன் பக்தியின் உயர்ந்த நிலையில் செயல்படுவது பரபக்தி ஆகும். உலகம் தழுவிய அன்பு நெறியே பரபக்தியாகும். அபரபக்தி மற்றும் பரபக்தி ஆகிய இரண்டும் தொன்றுதொட்டு வந்தவையாகும்.
7) பக்தி இயக்கம் தோன்றுவதற்கான காரணம் என்ன?
A) இந்து சமயம், தன் செல்வாக்கை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.
B) உயர் குடியினராகக் கருதப்பட்டவர்கள், பிற பிரிவினரிடம், பாகுபாடு காட்டினர்
C) சமய, பௌத்த சமயங்கள் இந்து சமயத்தில் காணப்பட்ட சடங்குகளை வெறுத்தன. எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நெறிகளை எடுத்துக் கூறிப் பின்பற்றச் செய்தன.
D) அனைத்தும் சரி
விளக்கம்: இந்து சமயம், தன் செல்வாக்கை படிப்படியாக இழக்கத் தொடங்கியது. உயர் குடியினராகக் கருதப்பட்டவர்கள், பிற பிரிவினரிடம், பாகுபாடு காட்டினர். சமய, பௌத்த சமயங்கள் இந்து சமயத்தில் காணப்பட்ட சடங்குகளை வெறுத்தன. எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நெறிகளை எடுத்துக் கூறிப் பின்பற்றச் செய்தன.
8) பக்தி இயக்கம் தோன்றுவதற்கான காரணம் என்ன?
A) சமயக் கோட்பாடுகள், பாமர மக்கள் புரிந்துக்கொள்ளும்படி அமையவில்லை.
B) பிற சமயத்தவர்கள் வெளிப்படையாக அறிவித்துச் செயல்பட்ட ‘ஒரு கடவுள் கோட்பாடு’, ‘உலகில் பிறந்தவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரே’ என்ற கொள்கைகள் மக்களைக் கவர்ந்திழுத்தன.
C) பிற சமயங்களில் காணப்பட்ட சமத்துவக் கோட்பாடுகள், இந்து சமயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவர்ந்தன
D) அனைத்தும்
விளக்கம்: சமயக் கோட்பாடுகள், பாமர மக்கள் புரிந்துக்கொள்ளும்படி அமையவில்லை. பிற சமயத்தவர்கள் வெளிப்படையாக அறிவித்துச் செயல்பட்ட ‘ஒரு கடவுள் கோட்பாடு’, ‘உலகில் பிறந்தவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரே’ என்ற கொள்கைகள் மக்களைக் கவர்ந்திழுத்தன. பிற சமயங்களில் காணப்பட்ட சமத்துவக் கோட்பாடுகள், இந்து சமயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவர்ந்தன.
9) பக்தி இயக்கத்தின் சீரிய தன்மைகளுள் சரியானதைத் தேர்க.
A) பல்வேறு வடிவங்களில் கடவுளை வணங்கினாலும் அவை அனைத்தும் ‘கடவுள் ஒருவரே’ என்று பக்தி இயக்கம் வெளிக்காட்டியது.
B) தெளிவான ஆன்மிகக் கோட்பாடுகள், முறையான பக்திநெறி ஆகியவற்றின் வாயிலாக, ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்பவர்கள், வீடுபேற்றை அடையலாம் என்று பக்தி இயக்கம் வலியுறுத்தியது.
C) இறைவனை அடைய நல்வழிகாட்டலும், நல் உபதேசமும் வழங்கும் குருவின் துணை அவசியம்.
D) அனைத்தும்
விளக்கம்: பல்வேறு வடிவங்களில் கடவுளை வணங்கினாலும் அவை அனைத்தும் ‘கடவுள் ஒருவரே’ என்று பக்தி இயக்கம் வெளிக்காட்டியது.
தெளிவான ஆன்மிகக் கோட்பாடுகள், முறையான பக்திநெறி ஆகியவற்றின் வாயிலாக, ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்பவர்கள், வீடுபேற்றை அடையலாம் என்று பக்தி இயக்கம் வலியுறுத்தியது.
இறைவனை அடைய நல்வழிகாட்டலும், நல் உபதேசமும் வழங்கும் குருவின் துணை அவசியம்.
10) பாண்டிய நாட்டிற்குச் சென்று, மாறவர்மன் அரிகேசரியைச் சமணசமயத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: பாண்டிய நாட்டிற்குச் சென்று, மாறவர்மன் அரிகேசரியைச் சமணத்திலிருந்து, சைவத்திற்கு மாற்றியதுடன் சமணர்களை அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் வெற்றி பெற்றார் திருஞானசம்பந்தர். இது சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
11) பக்தி இயக்கத்தின் சீரிய தன்மைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
A) ஒற்றுமை உணர்வு, சமய நல்லிணக்கம் ஆகிய வலிமைபெற, பக்தி இயக்கம் பெரும் பங்காற்றியது.
B) பக்தி நெறியைப் பின்பற்றுவதன் மூலம் மக்களிடையே மன அமைதி ஏற்பட்டது.
C) மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் இன்ப, துன்பங்களில் எவ்வித வேற்றுமையுமின்றிப் பங்கேற்றனர்.
D) அனைத்தும்
விளக்கம்: ஒற்றுமை உணர்வு, சமய நல்லிணக்கம் ஆகிய வலிமைபெற, பக்தி இயக்கம் பெரும் பங்காற்றியது.
பக்தி நெறியைப் பின்பற்றுவதன் மூலம் மக்களிடையே மன அமைதி ஏற்பட்டது. மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் இன்ப, துன்பங்களில் எவ்வித வேற்றுமையுமின்றிப் பங்கேற்றனர்.
12) கூற்றுகளை ஆராய்க.
1. இறைவனிடம் பக்தன், தன்னையே அர்ப்பணிக்கும் சரணாகதித் தத்துவக்கோட்பாடு பக்தி இயக்கத்தால் வலுப்பெற்றது.
2. ஞானநெறி, கர்மநெறி, யோகநெறி ஆகிய நெறிகளைவிடப் பக்திநெறியே சிறந்தது என்ற ஆன்மிகக் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
A) 1 மட்டும்
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இறைவனிடம் பக்தன், தன்னையே அர்ப்பணிக்கும் சரணாகதித் தத்துவக்கோட்பாடு பக்தி இயக்கத்தால் வலுப்பெற்றது
2. ஞானநெறி, கர்மநெறி, யோகநெறி ஆகிய நெறிகளைவிடப் பக்திநெறியே சிறந்தது என்ற ஆன்மிகக் கருத்து வலியுறுத்தப்படுகிறது. இவை பக்தி இயக்கத்தின் சீரிய தன்மையாகும்.
13) கூற்றுகளை ஆராய்க.
1. கடவுளை இடைவிடாது வழிபட வேண்டும். அவரின் திருநாமத்தை ஓதுதல் வேண்டும். என்ற நன்னெறியைப் பக்தி இயக்கம் பரப்பியது.
2. துறவிகளால் பக்திநெறியைப் பரப்ப ஏற்படுத்தப்பட்ட மடங்கள் பக்தி இயக்கத்தின் கோட்பாடுகளால் முறைப்படுத்தப்பட்டன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. கடவுளை இடைவிடாது வழிபட வேண்டும். அவரின் திருநாமத்தை ஓதுதல் வேண்டும். என்ற நன்னெறியைப் பக்தி இயக்கம் பரப்பியது.
2. துறவிகளால் பக்திநெறியைப் பரப்ப ஏற்படுத்தப்பட்ட மடங்கள் பக்தி இயக்கத்தின் கோட்பாடுகளால் முறைப்படுத்தப்பட்டன.
14) பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் யார்?
A) மருள்நீக்கியார்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: பல அற்புதச் செயல்களுக்குப் பின், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து, சைவத்திற்கு மாற்றினர். பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று, பதிகங்கள் பாடி, சைவ சமயத்தையும், தமிழிலக்கியத்தையும் வளர்த்தார். மருள்நீக்கியார் என்பது திருநாவுக்கரசரின் இயற்பெயராகும்.
15) சைவ சமயக் குரவர்கள் எத்தனை பேர்?
A) 3
B) 4
C) 63
D) 64
விளக்கம்: சைவ சமயக் குரவர்கள் நால்வர்.
1. திருநாவுக்கரசர்
2. திருஞானசம்பந்தர்
3. சுந்தரர்
4. மாணிக்கவாசகர்
16) ‘சமயாச்சாரியார்கள்’ எனப்படுபவர்கள் எத்தனைப் பேர்?
A) 3
B) 4
C) 63
D) 72
விளக்கம்: 63 நாயன்மார்களுள், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்’சமயாச்சாரியார்கள்’ அல்லது ‘சைவ சமயக் குரவர்கள்’ என அழைக்கப்பட்டனர். தேவாரத் தொகுப்பில் முதல் 8 திருமுறைகளை இவர்கள் பாடியுள்ளனர்.
17) 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் யார்?
A) நம்பியாண்டார் நம்பி
B) கம்பர்
C) சேக்கிழார்
D) அப்பர்
விளக்கம்: நாயன்மார்களின் பாடல்களைத் தொகுத்தவர் ‘நம்பியாண்டார் நம்பி’ என்பவராவார். பிற்காலச் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அருளினார்.
18) திருத்தொண்டர் புராணம் – இயற்றியவர் யார்?
A) நம்பியாண்டார் நம்பி
B) கம்பர்
C) சேக்கிழார்
D) அப்பர்
விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அருளினார். இத்தொகுப்பே ‘பெரியபுராணம் அல்லது ‘திருத்தொண்டர்புராணம்’ என்றழைக்கப்படுகிறது. இவர்கள், தம் எளிய வாழ்க்கைமுறையில், தியாக மனப்பான்மையால் மக்களிடம் அன்புநெறி, அருள்நெறியினைப் பரப்பியவர்கள் ஆவர்.
19) “திருக்கடைக்காப்பு” என்றழைக்கப்பட்ட திருமுறைகள் எவை?
A) 1, 2, 3 திருமுறைகள்
B) 4, 5, 6 திருமுறைகள்
C) 7, 8, 9 திருமுறைகள்
D) 10, 11, 12 திருமுறைகள்
விளக்கம்: பன்னிரு திருமுறைகளுள் முதன் மூன்று திருமுறைகள் (1, 2, 3 திருமுறைகள்) “திருக்கடைக்காப்பு” என அழைக்கப்படுகின்றன. முதல் 7 திருமுறைகளும் ‘தேவாரம்’ எனப்படுகிறது.
20) பொருத்துக
அ. திருஞானசம்பந்தர் – 1. 1, 2, 3 திருமுறைகள்
ஆ. திருநாவுக்கரசர் – 2. 4, 5, 6 திருமுறைகள்
இ. சுந்தரர் – 3. 7-ஆம் திருமுறை
ஈ. மாணிக்க வாசகர் – 4. 8-ஆம் திருமுறை
A) 4, 3, 2, 1
B) 1, 34, 2
C) 1, 2, 3, 4
D) 3, 1, 4.2
விளக்கம்: திருஞானசம்பந்தர் – 1, 2, 3 திருமுறைகள்
திருநாவுக்கரசர் – 4, 5, 6 திருமுறைகள்
சுந்தரர் – 7-ஆம் திருமுறை
மாணிக்க வாசகர் – 8-ஆம் திருமுறை
21) ‘திருவாசகம்’ எனப்படுவது எத்தனையாவது திருமுறை?
A) 7-ஆம் திருமுறை
B) 8-ஆம் திருமுறை
C) 9-ஆம் திருமுறை
D) 10-ஆம் திருமுறை
விளக்கம்: 8-ஆம் திருமுறை ‘திருவாசகம்’ என அழைக்கப்படுகறிது. இது ‘மாணிக்கவாசகர்’ –ஆல் இயற்றப்பட்டது.
22) திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என அழைக்கப்படும் திருமுறை எது?
A) 7-ஆம் திருமுறை
B) 8-ஆம் திருமுறை
C) 9-ஆம் திருமுறை
D) 10-ஆம் திருமுறை
விளக்கம்: திருமாளிகைத் தேவர், சேந்தனார் மற்றும் அருளாளர்கள் ஆகியோரின் பாடல்கள் 9-ஆம் திருமுறை எனப்படுகிறது. இது திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனவும் அழைக்கப்படும்.
23) ‘திருமந்திரம் என அழைக்கப்படும் திருமுறை எது?
A) 7-ஆம் திருமுறை
B) 8-ஆம் திருமுறை
C) 9-ஆம் திருமுறை
D) 10-ஆம் திருமுறை
விளக்கம்: 10-ஆம் திருமுறையை ‘திருமூலர்’ இயற்றினார். இது, ‘திருமந்திரம்’ என அழைக்கப்படுகிறது.
24) ‘பெரியபுராணம் எத்தனையாவது திருமுறை?
A) 9-ஆம் திருமுறை
B) 10-ஆம் திருமுறை
C) 11-ஆம் திருமுறை
D) 12-ஆம் திருமுறை
விளக்கம்: 12-ஆம் திருமுறையை சேக்கிழார் இயற்றினார். பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என அழைககப்படுகிறது.
25) சூலை நோயால் தாக்கப்பட்டு தம் சகோதரி திலகவதி திருநீர் பூச குணமாக்கப்பட்டவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: சூலைநோயால் தாக்கப்பட்ட திருநாவுக்கரசர் தம் சகோதரி திலகவதியாரால் சமணத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டு சூலைநோய் நீங்கப்பெற்றார். மருள்நீக்கியார் என்பது இவரது இயற்பெயராகும்.
26) தமது 3-வது வயதில், இறைவி உமாதேவியரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: சோழநாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர் என்பாரின் மகனாகத் திருஞானசம்பந்தர் பிறந்தார். தமது 3-ஆவது வயதில், இறைவி உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பெற்றார். சைவ சமயத்தைப் பரப்ப, இவர் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
27) ‘தமிழ் செய்த மாறன்’ என அழைக்கப்படுபவர் யார்?
A) நம்மாழ்வார்
B) மதுரகவியாழ்வார்
C) குலசேகர ஆழ்வார்
D) பெரியாழ்வார்
விளக்கம்: நம்மாழ்வார் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரி என்ற ஊரில் பிறந்தவர். இவர் நான்கு வேதங்களையும் தமிழில் பாடியதால் ‘தமிழ் செய்த மாறன்’ எனப்படுகிறார்.
28) சம்பந்தர் பதிகம் பாடி எந்த ஊரிலிருந்த சிவாலய கதவுகளை திறந்தார்?
A) திருமறைக்காடு
B) செய்யாறு
C) திருவாரூர்
D) திருவோத்தூர்
விளக்கம்: சம்பந்தர் பதிகத்தால் திருமறைக்காடு (வேதாரண்யம்) சிவாலயத்தின் கதவுகளை திறந்தார். இது திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
29) அப்பூதி அடிகளாரின் மகனைப் பாம்பு தீண்ட, அவ்விஷத்தை நீக்கி அருளியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: அப்பூதி அடிகளாரின் மகனைப் பாம்பு தீண்ட, சிவனருளால் திருநாவுக்கரசர் அவ்விஷத்தை நீக்கி அருளினார். மேலும், திருவையாற்றில் சிவபெருமானின் கைலாயக் காட்சியைக் கண்டுகளித்தார்.
30) சம்பந்தர் எந்த ஊரில் ஆண்பனையைப் பெண்பனையாக்கினார்?
A) திருமறைக்காடு
B) செய்யாறு
C) திருவாரூர்
D) திருவோத்தூர்
விளக்கம்: திருவோத்தூரில் (செய்யாறு) ஆன்பனையைப் பெண்பனையாக்கினார். இது, சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
31) ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று கூறியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: அப்பர், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கருத்தை தெரிவித்ததன் மூலம் சைவ சமயத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். திருப்பூந்துருத்தியில் ஒரு சைவ மடத்தை நிறுவினார்.
32) சம்பந்தர் எந்த ஆற்றின் நீரினை எதிர்த்தோடும்படி செய்தார்?
A) காவிரி
B) கங்கை
C) வைகை
D) யமுனை
விளக்கம்: திருஞானசம்பந்தர் வைகையாற்று நீரினை எதிர்த்தோடும்படி செய்தார். இது சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
33) பக்தி இயக்கத்தின் சீரிய தன்மைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.
A) கடவுளின் முன் அனைவரும் சமம். மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்துகிறது.
B) சமூகத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள், மூடப்பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுவதற்குப் பக்தி இயக்கம் காரணமாயிற்று.
C) பக்தி இயக்கங்களுள், வேத இலக்கியங்களை வட்டார மொழியில் மொழிபெயர்த்ததன் மூலம் அவற்றைப் பாமர மக்களும் அறியும்படி செய்தனர்.
D) அனைத்தும்
விளக்கம்: கடவுளின் முன் அனைவரும் சமம். மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்துகிறது.
சமூகத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் மூடப்பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுவதற்குப் பக்தி இயக்கம் காரணமாயிற்று.
பக்தி இயக்கங்களுள், வேத இலக்கியங்களை வட்டார மொழியில் மொழிபெயர்த்ததன் மூலம் அவற்றைப் பாமர மக்களும் அறியும்படி செய்தனர்.
34) எந்த இடத்தில், திருஞானசம்பந்தர் பௌத்தர்களை வாதத்தால் வென்றார்?
A) காஞ்சிபுரம்
B) மதுரை
C) திருநெல்வேலி
D) திருவாரூர்
விளக்கம்: மதுரையில் ‘போதிமங்கை’ என்ற இடத்திற்கு சென்று, பௌத்தர்களை வாதத்தால் வென்றார் திருஞானசம்பந்தர். இதுவே பௌத்தர்கள் பலரைப் பௌத்தத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறக் காரணமாயிற்று. இது சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
35) சம்பந்தர் பக்திமார்க்கத்தைக் கையாண்ட நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) ஞானமார்க்கம்
B) தொண்டர்மார்க்கம்
C) தோழ மார்க்கம்
D) சகமார்க்கம்
விளக்கம்: திருஞானசம்பந்தரின் பாடல்கள் இசைத்தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவர் தம் பக்திமார்க்கத்தை கையாண்ட நிகழ்வு ‘ஞானமார்க்கம் எனப்படுகின்றது.
36) சிவபெருமான் பற்றி சம்பந்தரின் பாடல்கள் கூறுவதில் சரியானதைத் தேர்வு செய்க.
A) சிவபெருமானே முழுமுதற்கடவுள்
B) அவர் பிறப்பு, இறப்பு இல்லாதவர்
C) உலகத்திலும், உயிர்களிடத்திலும் ஒன்றாகவும், வேறாகவும், உடலாகவும் இருப்பவர்.
D) அனைத்தும்
விளக்கம்: சிவபெருமானே முழுமுதற்கடவுள். அவர் பிறப்பு, இறப்பு இல்லாதவர். உலகத்திலும், உயிர்களிடத்திலும் ஒன்றாகவும், வேறாகவும், உடலாகவும் இருப்பவர். இவை அனைத்தும் சிவபெருமான் பற்றி சம்பந்தரின் பாடல்கள் கூறும் செய்திகளாகும்.
37) சிவபெருமான் பற்றி சம்பந்தரின் பாடல்கள் கூறுவதில் சரியானதைத் தேர்வு செய்க.
A) உயிர்களின் பிறவிப் பணியைத் தீர்ப்பவர்.
B) தம்மை வந்தடைபவர்களின் இன்னல்களை நீக்கி, வீடுபேறு தருபவர்.
C) தாம் இன்புறுவதுபோல், பிற உயிர்களையும் இன்புறச் செய்பவர். தம்மை (சிவபெருமானை) எந்நேரமும் நினைக்கும் மனப்பாங்கைத் தரக்கூடியவர்
D) அனைத்தும் சரி
விளக்கம்: உயிர்களின் பிறவிப் பணியைத் தீர்ப்பவர்.
தம்மை வந்தடைபவர்களின் இன்னல்களை நீக்கி, வீடுபேறு தருபவர்.
தாம் இன்புறுவதுபோல், பிற உயிர்களையும் இன்புறச் செய்பவர். தம்மை (சிவபெருமானை) எந்நேரமும் நினைக்கும் மனப்பாங்கைத் தரக்கூடியவர்
38) ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயர் கொண்டவர் திருநாவுக்கரசர். இவர் ‘அப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர், திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில், புகழனார்-மாதினியார் தம்பதியினருக்கு மகானகப் பிறந்தார்.
39) சரியான கூற்றை ஆராய்க
A) பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் குறிப்பிட்ட ஒரு கடவுளை மட்டுமே வழிபாடு செய்வது அபரபக்தி ஆகும்.
B) தன் சுயநலத்தையோ, தன்னைச் சார்ந்தோரின் சுயநலத்தையோ மையப்படுத்தி, ஒருவன் பக்தி என்ற பெயரில் மற்றவர்களை வெறுக்கிறான். இது அபர பக்தி ஆகும்.
C) தான் வழிபடும் தெய்வத்தையும், வழிபாட்டு முறையையும் தவிர பிற தெய்வத்தையும், வழிபாட்டு முறையையும் அபரபக்தியினர் ஏற்பதில்லை.
D) அனைத்தும் சரி
விளக்கம்: பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் குறிப்பிட்ட ஒரு கடவுளை மட்டுமே வழிபாடு செய்வது அபரபக்தி ஆகும்.
தன் சுயநலத்தையோ, தன்னைச் சார்ந்தோரின் சுயநலத்தையோ மையப்படுத்தி, ஒருவன் பக்தி என்ற பெயரில் மற்றவர்களை வெறுக்கிறான். இது அபர பக்தி ஆகும்.
தான் வழிபடும் தெய்வத்தையும், வழிபாட்டு முறையையும் தவிர பிற தெய்வத்தையும், வழிபாட்டு முறையையும் அபரபக்தியினர் ஏற்பதில்லை.
40) திருநாவுக்கரசரை ‘அப்பர்’ என அழைத்தவர் யார்?
A) மாணிக்கவாசகர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: திருஞானசம்பந்தரால், திருநாவுக்கரசர் ‘அப்பர்’ என அழைக்கப்பட்டார். இவர் சமண சமயத்தைத் தழுவிய பிறகு ‘தருமசேனர்’ எனவும் அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் ‘மருள்நீக்கியார்’ ஆகும்.
41) ‘தோத்திரப் பாடல்கள் எனப்படுபவை எவை?
A) 9-ஆம் திருமுறை
B) 10-ஆம் திருமுறை
C) 11-ஆம் திருமுறை
D) 12-ஆம் திருமுறை
விளக்கம்: திருவாலவாயுடையார், பட்டினத்தடிகள், காரைக்காலம்மையார், நம்பியாண்டார் நம்பி பாடல்கள் ஆகியவை 11-ஆம் திருமுறை ஆகும். இது ‘தோத்திரப் பாடல்கள்’ எனப்படும்.
42) நாயன்மார்கள் எத்தனை பேர்?
A) 63
B) 64
C) 66
D) 72
விளக்கம்: சை சமயத்தைப் பின்பற்றிச் சிவ வழிபாட்டையும், தமிழ் மொழியையும் வளர்த்த 63 சிவனடியார்கள், ‘நாயன்மார்கள்’ எனப்பட்டனர். இவர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.
43) முற்கால ஆழ்வார் யார்?
A) பொய்கையாழ்வார்
B) நம்மாழ்வார்
C) திருப்பாணாழ்வார்
D) அனைவரும்
விளக்கம்: முற்காலத்து ஆழ்வார்கள்:
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
44) யாருடைய நூல்கள் ‘சர்வமூலம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன?
A) மத்துவர்
B) நிம்பார்க்கர்
C) ஜெயதீர்த்தர்
D) இராமானந்தர்
விளக்கம்: மத்துவரால் எழுதப்பட்ட துவைத வேதாந்த நூல்கள் ‘சர்வமூலம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன. ஹரி என்ற கடவுளின் உண்மைத்தன்மையை அறிய முயற்சிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றார். தன் பக்திக் கோட்பாடுகளை மையமாக வைத்து மத்துவர் 37 நூல்களை எழுதியுள்ளார்.
45) நம்மாழ்வாரை தம் குருவாகக் கொண்டவர் யார்?
A) மதுரகவியாழ்வார்
B) பெரியாழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) பேயாழ்வார்
விளக்கம்: மதுரக்கவியாழ்வார் பாண்டிய நாட்டின் திருக்கோளுர் என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றவராதலால் “மதுரகவி” எனப் புகழப் பெற்றார். யோக நிலையிலிருந்த நம்மாழ்வாரைக் கண்ட மதுரகவி “இவர் எல்லாமறிந்த ஞானி” என்பதை உணர்ந்தார். பின்னர் அவரையே குருவாக ஏற்றுக்கொண்டார்.
46) எல்லாவற்றிற்கும் சரியானது எது என்ற தீர்வு திருமாலிடமே உள்ளது என்று உரைத்தவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமாலின் மீது மிகுந்த பக்தி கொண்டு மனம் சோர்ந்து, கண் சுழன்று, அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தார் போல இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் ‘பேயாழ்வார்’ என்றழைக்கப்படுகிறார். இவருடைய பாசுரங்கள் மூலம், எல்லாவற்றிற்கும், சரியானது எது என்ற தீர்வு துளசிமாலையணிந்த திருமாலிடமே உள்ளது என்றார்
47) இறந்த பெண்ணின் எலும்பை எடுத்து அப்பெண்ணை உயிர்ப்பித்தவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: மையிலாப்பூரில் இறந்த பெண்ணின் எலும்பை எடுத்து பெண்ணுருவாக்கியவர் திருஞானசம்பந்தர். இது சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
48) திருநாவுக்கரசரின் பக்தி நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது,
A) ஞானமார்க்கம்
B) தொண்டுநெறி
C) தோழமார்க்கம்
D) அடிமைநெறி
விளக்கம்: திருநாவுக்கரசரின் பக்தி நெறி ‘தொண்டுநெறி’ எனப்படுகிறது. ஆலயத்திற்கும், மக்களுக்கும், தொண்டு செய்வதன் மூலம் சிவபெருமான் அருளைப் பெறலாம் என்றார்.
49) ‘ஆனாத செலவத்து அரம்பையர்கள் தற்சூழ’ என்னும் பாடலைப் பாடியவர் யார்?
A) நம்மாழ்வார்
B) குலசேகர ஆழ்வார்
C) பெரியாழ்வார்
D) ஆண்டாள்
விளக்கம்: ‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாயப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே’ என்று நாடாளும் மன்னனாக இருப்பதைவிடத் திருவேங்கடச்சுனையில் மீனாக இருத்தலே மேல் என்று திருவேங்கடப் பெருமாள் மீதுள்ள தமது ஈடுபாட்டை குலசேகர ஆழ்வார் வெளிப்படுத்துகிறார்.
50) திருக்கொள்ளம்புதூரில் பதிகம்பாடி ஓடத்தை ஓடச்செய்தவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: திருக்கொள்ளம்புதூரில் பதிகம்பாடி ஓடத்தை ஓடச்செய்தார் திருஞானசம்பந்தர். இது சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
51) கோயிலின் ஆலமரத்தடியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசையே வடதாளிபூசை என்பவர் யார்?
A) உ.வே.சா
B) வ.உ.சி
C) மு.வ
D) பெரியார்
விளக்கம்: ‘வடம்’ என்ற சொல்லிற்கு, ஆலமரத்தடி என்று பொருள். கோயிலின் ஆலமரத்தடியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசையே ‘வடதாளிபூசை’ என்பவர் உ.வே.சா (உ.வே.சாமிநாதர்).
52) ‘தாண்டகவேந்தர்’ என அழைக்கப்பட்டவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருநாவுக்கரசர் தேவாரத்தில் 4, 5, 6-ஆம் திருமுறைகளைப் பாடியுள்ளார். இவர் ‘தாண்டகம்’ என்ற இலக்கிய வகையைக் கையாண்டதால், தாண்டகவேந்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் நாகப்பட்டினம் அருகே ‘திருப்புகலூர் என்ற இடத்தில் முக்தியடைந்தார்.
53) “விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை” தோற்றுவித்தவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) இராமானுஜர்
D) தேசிகர்
விளக்கம்: “விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை தோற்றுவித்தவர் இராமானுஜர். இந்தியத் தத்துவங்களில் ‘விசிஷ்டாத்வைதம் மட்டுமே தத்துவத்துடன் பக்தியையும் இணைத்துள்ளது.
54) ‘திருப்பல்லாண்டு’ என்ற நூலை இயற்றியவர் யார்?
A) பெரியாழ்வார்
B) பேயாழ்வார்
C) பொய்கையாழ்வார்
D) பூதத்தாழ்வார்
விளக்கம்: பெரியாழ்வார் இயற்றிய பாசுரங்கள்:
1. திருப்பல்லாண்டு
2. பெரியாழ்வார் திருமொழி
55) சிவபெருமானைத் தவிர, வேறு யாருக்கும் தான் தலைவணங்குவதில்லை என்று தம் பாடல்களில் பாடியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சிவபெருமானைத் தவிர, வேறு யாருக்கும் தான் தலைவணங்குவதில்லை என்று தம் பாடல்களில் பாடியவர் திருநாவுக்கரசர். சிவபெருமான் தம்முன் இருப்பதால் நரகத்தையும், எமனையும் ஒரு பொருட்டாகவே தாம் கருதுவதில்லை என்று கூறினார்.
56) யாருடைய பாசுரங்களின் அமைப்பைப் பின்பற்றி பிற்காலப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தோன்றின?
A) பெரியாழ்வார்
B) நம்மாழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) பேயாழ்வார்
விளக்கம்: பெரியாழ்வார், பெருமாளைத் தமது குழந்தையாகக் கருதி பாசுரங்களைப் பாடினார். இப்பாசுரங்களின் அமைப்பைப் பின்பற்றியே பிற்காலப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தோன்றின எனத் தமிழ் அறிஞர்கள் கூறுவர்.
57) யாருடைய திருமணத்தின்போது இறைவன் அடிமை ஓலையைக் காட்டி அவரைத் தடுத்தாட்கொண்டார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சுந்தரர், சடையனார்-.இசைஞானியார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். இளமையிலேயே சிவபக்தியிலும் தமிழ்ப்பற்றிலும் சிறந்து விளங்கினார். இவரது திருமணத்தின்போது, இறைவன் அடிமை ஓலையைக் காட்டி இவரைத் தடுத்தாட் கொண்டார்.
58) “சிறிய திருமடல்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) திருப்பாணாழ்வார்
B) திருமழிசையாழ்வார்
C) திருமங்கையாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வார் இயற்றிய நூல்கள்:
1. பெரிய திருமொழி
2. திருக்குறுந்தாண்டகம்
3. திருநெடுந்தாண்டகம்
4. திருவெழுக்கூற்றிருக்கை
5. சிறிய திருமடல்
6. பெரிய திருமடல்
59) ‘யோக ரகசியம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) ஆளவந்தார்
D) இராமானுஜர்
விளக்கம்: நாதமுனிகள் இயற்றிய நூல்கள்:
1. நியாயதத்துவம்
2. யோக இரகசியம்
60) ‘மணிப்பிரவாளநடை தோன்ற காரணமானவர்கள் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) ஆழ்வார்கள்
C) நாதமுனிகள்
D) நாயன்மார்கள்
விளக்கம்: ஆச்சாரியார்கள் வடமொழி, தமிழ்மொழி ஆகிய இருமொழிப் புலமை பெற்றிருந்தனர். ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்துள்ள வைணவத் தத்துவக் கருத்துகளை விளக்கி, வேதத்தோடு ஒப்பீடு செய்து உரை எழுதியுள்ளனர். இவ்விளக்க உரைகளின் விளைவால், வடமொழியும் தமிழ்மொழியும் கலந்த ‘மணிப்பிரவாளநடை’ புதிதாகத் தோன்றியது.
61) சுந்தரர் நிகழ்த்திய அருஞ்செயல்களில் சரியானதை தேர்வு செய்க.
A) நாகப்பட்டினம் அருகே திருக்குண்டையூரில் இவர் நெல்மலை பெற்றார்.
B) திருப்புகலூரில் செங்கல்லை பொன்னாக்கினார்.
C) திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பொன்னை ஆற்றில் போட்டுத் திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்துக்கொண்டார்
D) அனைத்தும்
விளக்கம்: நாகப்பட்டினம் அருகே திருக்குண்டையூரில் இவர் நெல்மலை பெற்றார். திருப்புகலூரில் செங்கல்லை பொன்னாக்கினார். திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பொன்னை ஆற்றில் போட்டுத் திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்துக்கொண்டார்
62) சுந்தரர் நிகழ்த்திய அருஞ்செயல்களில் சரியானதைத் தேர்வு செய்க
A) திருவொற்றியூரில் சங்கிலியாரையும், திருவாரூரில் பரவை நாச்சியாரையும் மணந்தார்
B) திருவையாற்றில் காவிரி நீரின் வெள்ளத்தைத் தடுத்து வழிவிட பதிகம் பாடினார்.
C) அவிநாசியில் முதலைவாய் பிள்ளையை மீட்டருளினார்
D) அனைத்தும் சரி
விளக்கம்: திருவொற்றியூரில் சங்கிலியாரையும், திருவாரூரில் பரவை நாச்சியாரையும் மணந்தார். திருவையாற்றில் காவிரி நீரின் வெள்ளத்தைத் தடுத்து வழிவிட பதிகம் பாடினார். அவிநாசியில் முதலைவாய் பிள்ளையை மீட்டருளினார்
63) ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுபவர் யார்?
A) ஆண்டாள்
B) மங்கையர்கரசியார்
C) காக்கைப்பாடினியார்
D) ஒளவையார்
விளக்கம்: கோதை நாச்சியார், பெருமாளுக்குத் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளைத் தாம்சூடி அழகுப்பார்த்தபின், பெருமாளுக்கு அளித்ததால் ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டார்;
64) சுந்தரரின் பதிகங்கள் மூலம் அறியலாகும் செய்திகள் என்ன?
A) சிவபெருமானே எல்லா உயிர்களுக்கும் தலைவர்
B) அருளையே செல்வமாக உடையவர் சிவபெருமான்
C) பிறப்பில்லாத சிவபெருமான் பிறவிப்பிணியையும் தீர்ப்பவர்.
D) அனைத்தும்
விளக்கம்: சிவபெருமானே எல்லா உயிர்களுக்கும் தலைவர். அருளையே செல்வமாக உடையவர் சிவபெருமான். பிற்பில்லாத சிவபெருமான் பிறவிப் பிணியையும் தீர்ப்பவர்.
65) சுந்தரரின் பதிகங்கள் மூலம் அறியலாகும் செய்திகள் என்ன?
A) தான், இன்ன தன்மை என்று உயிர்களால் அறியப்படாதவர் சிவபெருமான்
B) ஓராயிரம் பெயர் உடையவர்
C) ஆண், பெண் என எந்த வடிவமும் இல்லாதவர். சிவனடியார் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவர்.
D) அனைத்தும்
விளக்கம்: தான், இன்ன தன்மை என்று உயிர்களால் அறியப்படாதவர் சிவபெருமான். ஓராயிரம் பெயர்கள் உடையவர். ஆண், பெண் என எந்த வடிவமும் இல்லாதவர். சிவனடியார் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவர்.
66) சோழநாட்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற எத்தனை சிவதலங்கள் ‘சப்தவிடங்கத் தலங்கள்’ எனப்படுகின்றன?
A) 4
B) 5
C) 6
D) 7
விளக்கம்: சோழநாட்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற 7 சிவதலங்கள் சப்தவிடங்கத் தலங்கள் எனப்படுகின்றன. அவை,
1. ஆரூர் (திருவாரூர்)
2. திருநள்ளாறு
3. திருநாகைகாரோகணம் (நாகை)
4. திருகாறாயில் (திருக்காரவாசல்)
5. திருகோளிலி (திருக்குவளை)
6. வாய்மூர் (திருவாய்மூர்)
7. திருமறைக்காடு (வேதாரண்யம்)
67) பொருத்துக
தலம் விடங்கர்
அ. ஆரூர் – 1. வீதி விடங்கர்
ஆ. திருநள்ளாறு – 2. நகர விடங்கர்
இ. திருநாகைகாரோகணம் – 3. சுந்தர விடங்கர்
ஈ. திருகாறாயில் – 4. ஆதி விடங்கர்
A) 1, 2, 3, 4
B) 3, 4, 2, 1
C) 1, 4, 3, 2
D) 3, 1, 4, 2
விளக்கம்: ஆரூர் (திருவாரூர்) – வீதி விடங்கர்
திருநள்ளாறு – நகர விடங்கர்
திருநாகைகாரோகணம் (நாகை) – சுந்தர விடங்கர்
திருகாறாயில் (திருக்காரவாசல்) – ஆதி விடங்கர்
68) பொருத்துக.
தலம் விடங்கர்
அ. திருகோளிலி – 1. புவன விடங்கர்
ஆ. வாய்மூர் – 2. அவனி விடங்கர்
இ. திருமறைக்காடு – 3. நீல விடங்கர்
A) 3, 2, 1
B) 2, 3, 1
C) 2, 1, 3
D) 1, 3, 2
விளக்கம்: திருகோளிலி (திருக்குவளை) – அவனிவிடங்கர்
வாய்மூர் (திருவாய்மூர்) – நீல விடங்கர்
திருமறைக்காடு (வேதாரண்யம்) – புவன விடங்கர்
69) பொருத்துக
அ. ஆரூர் – 1. வீசிநடனம்
ஆ. திருநள்ளாறு – 2. உன்மத்தநடனம்
இ. திருநாகைகாரோகணம் – 3. அஜபா நடனம்
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 3, 1, 2
D) 2, 1, 3
விளக்கம்:
தலம் நடனம்
அரூர் (திருவாரூர்) – அஜபா நடனம்
திருநள்ளாறு – உன்மத்த நடனம்
திருநாகைகாரோகணம் (நாகை) – வீசி நடனம்
70) பொருத்துக
அ. திருகாறாயில் – 1. கூக்குட நடனம்
ஆ. திருகோளிலி – 2. பிருங்க நடனம்
இ. வாய்மூர் – 3. கமல நடனம்
ஈ. திருமறைக்காடு – 4. ஹம்சபாத நடனம்
A) 3, 2, 4, 1
B) 1, 4, 3, 2
C) 1, 2, 3, 4
D) 4, 1, 2, 3
விளக்கம்: திருகாறாயில் – கூக்குட நடனம்
திருகோளிலி – பிருங்க நடனம்
வாய்மூர் – கமல நடனம்
திருமறைக்காடு – ஹம்சபாத நடனம்
71) பொருத்துக
அ. வீதி விடங்கர் – 1. கூக்குட நடனம்
ஆ. நகர விடங்கர் – 2. வீசி நடனம்
இ. சுந்தர விடங்கர் – 3. உன்மத்த நடனம்
ஈ. ஆதி விடங்கர் – 4. அஜபா நடனம்
A) 1, 4, 3, 2
B) 1, 2, 3, 4
C) 4, 3, 2, 1
D) 4, 1, 2, 3
விளக்கம்: விடங்கர் இறைநடனம்
வீதி விடங்கர் – அஜபா நடனம்
நகர விடங்கர் – உன்மத்த நடனம்
சுந்தர விடங்கர் – வீசி நடனம்
ஆதி விடங்கர் – கூக்குட நடனம்
72) பொருத்துக.
அ. அவனி விடங்கர் – 1. ஹம்சபாத நடனம்
ஆ. நீல விடங்கர் – 2. கமல நடனம்
இ. புவன விடங்கர் – 3. பிருங்க நடனம்
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 2, 1, 3
D) 1.2, 3
விளக்கம்: விடங்கர் இறைநடனம்
அவனி விடங்கர் – பிருங்க நடனம்
நீல விடங்கர் – கமல நடனம்
புவன விடங்கர் – ஹம்சபாத நடனம்
சோழ நாட்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற 7 சிவத்தலங்கள் சப்தவிடங்கத் தலங்கள் எனப்படுகிறது. அவை,
தலம் விடங்கர் இறைநடனம்
ஆரூர் (திருவாரூர்) – வீதி விடங்கர் – அஜபா நடனம்
திருநள்ளாறு – நகர விடங்கர் – உன்மத்த நடனம்
திருநாகைகாரோகணம் (நாகை) – சுந்தர விடங்கர் – வீச நடனம்
திருகாறாயில் (திருக்காரவாசல்) – ஆதி விடங்கர் – கூக்குட நடனம்
திருகோளிலி (திருக்குவளை) – அவனி விடங்கர் – பிருங்க நடனம்
வாய்மூர் (திருவாய்மூர்) – நீல விடங்கர் – கமல நடனம்
திருமறைக்காடு (வேதாரண்யம்) – புவன விடங்கர் – ஹம்சபாத நடனம்
73) திருவாதவூரில் பிறந்து வரகுணப் பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்தவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருவாதவூரில் பிறந்து வரகுணப் பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். சைவ சமயத்தின் சிறப்பை பரப்ப, தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று பதிகம் பாடினார்.
74) நாலாயிரத்திவ்வியப்பிரபந்த பாசுரங்களைத் தொகுத்தவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) ஆளவந்தார்
C) நாதமுனிகள்
D) இராமானுஜர்
விளக்கம்: நாலாயிரத்திவ்யப்பிரபந்த பாசுரங்களைத் தொகுத்தவர் ‘நாமுனிகள்’ ஆவார். இவர் பக்தி யோகத்தைத் தம் மாணர்க்கர்களுக்குக் கற்பித்தார். வைணவத்தையும் பிரபந்தத்தையும் பரப்பும்படி மாணவர்களிடம் கூறினார்.
75) “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சிவபெருமானே பஞ்சபூதமாக இருப்பவர். எங்கும் நிறைந்திருப்பவர் என்பதைப் பின்வரும் தமது பதிகத்தின் மூலம் மாணிக்கவாசகர் உணர்த்துகிறார்.
‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்(று) அவர் அவரைக் கூத்தாடு
ஊன்ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே’ – திருவாசகம் 14
76) நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தின் ‘முதல் திருவந்தாதி’ யாரால் இயற்றப்பட்டது?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: பொய்கையாழ்வார், திருமாலின் 10 அவதாரங்களைப் பற்றிய பாசுரங்களை இயற்றினார். இவர் பாடிய பாசுரங்கள் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தின் ‘முதல் திருவந்தாதி’ எனப்படுகிறது. இத்திருவந்தாதி 100 பாடல்களைக் கொண்டது. இவர் பல வைணவத் திருத்தலங்களில் மங்களாசனம் செய்துள்ளார்.
77) சுந்தரரின் தாயார் யார்?
A) காரைக்கால் அம்மையார்
B) இசைஞானியார்
C) மங்கையர்க்கரசியார்
D) நாச்சியார்
விளக்கம்: இசைஞானியார், சுந்தரரின் தயார் ஆவார். சிவபெருமான் அருள் பெற்ற பெண்மணியாவார். சுந்தரரை இறைநெறிப்படி வளர்க்கப்பட்டதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
78) மாணிக்கவாசகரின் பாடல்களின் வாயிலாக அறியலாகும் செய்திகளில் சரியானதைத் தேர்வு செய்க
A) சிவபெருமான் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள்
B) சிவபெருமான், பிறரால் இன்ன தன்மையன என அறியமுடியாதவர்
C) ஆண், பெண் என்ற வடிவில்லாதவர்
D) அனைத்தும்
விளக்கம்: சிவபெருமான் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள். சிவபெருமான், பிறரால் இன்ன தன்மையன் என அறியமுடியாதவர். ஆண், பெண் என்ற வடிவில்லாதவர்.
79) மாணிக்கவாசகரின் பாடல்களின் வாயிலாக அறியலாகும் செய்திகளில் சரியானதைத் தேர்வு செய்க
A) சிவபெருமான், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற தொழில்களைச் செய்பவர்
B) உயிர்களின் பிறப்பை நீக்குபவர் சிவபெருமான்
C) பிறப்பு, இறப்பு இல்லாதவர்
D) அனைத்தும் சரி
விளக்கம்: சிவபெருமான், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற தொழில்களைச் செய்பவர். உயிர்களின் பிறப்பை நீக்குபவர் சிவபெருமான். பிறப்பு, இறப்பு இ;ல்லாதவர்.
80) திருநீலகண்டர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. திருநீலகண்டர் தில்லையில் வாழ்ந்தவர். இளமையும், அருந்ததிக்கு நிகரான கற்புமிக்க மனையிருந்தும், இன்பத் துறையில் எளியராய் பரத்தைபால் சென்று வந்தார்.
2. அதைக் கண்ட அவர் மனைவியார், “தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டமென்றார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. திருநீலகண்டர் தில்லையில் வாழ்ந்தவர். இளமையும், அருந்ததிக்கு நிகரான கற்புமிக்க மனையிருந்தும், இன்பத் துறையில் எளியராய் பரத்தைபால் சென்று வந்தார்.
2. அதைக் கண்ட அவர் மனைவியார், “தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டமென்றார்.
81) திருநீலகண்டர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இறைவன் மீது ஆணை கேட்ட (“தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டமென்றார்” அவரது மனைவி) திருநீலகண்டர், எம்மை என்றதனால் மற்ற பொது மாதர்களையும் என் மனத்தினாலும் தீண்டேன் எனக் கூறி விலகினார்.
2. மாதர் மீது வைத்த காதலை அறவே துறந்து இறைவன் மீது வைத்த பேரன்பினைப் பெரிதாய் மதித்ததால் இவர் போற்றப்பட்டார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இறைவன் மீது ஆணை கேட்ட (“தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டமென்றார்” அவரது மனைவி) திருநீலகண்டர், எம்மை என்றதனால் மற்ற பொது மாதர்களையும் என் மனத்தினாலும் தீண்டேன் எனக் கூறி விலகினார்.
2. மாதர் மீது வைத்த காதலை அறவே துறந்து இறைவன் மீது வைத்த பேரன்பினைப் பெரிதாய் மதித்ததால் இவர் போற்றப்பட்டார். இவ்விரதத்தை இனிது பேணிய இவரது இறை அன்பின் திறத்தை, உலகிற்கு அறிவித்து இறைவன் அருள் புரிந்தார். உலக இன்பங்களில் இறையின்பமே ஏற்றமுடையது என்பதை, இவரது வரலாறு நமக்கு விளக்குகிறது.
82) தமிழை ‘ஞானத்தமிழ்’ எனப் புகழ்ந்து பாடியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: பூதத்தாழ்வார் தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று புகழ்ந்துப் பாடுகிறார். இவர் பாடிய 100 பாசுரங்கள் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தில் 2-வது திருவந்தாதியாகப் போற்றப்படுகின்றன.
83) திருவாசகம் எத்தனை பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: திருவாசகத்தின் 4 பெரும் பகுதிகள்:
1. சிவபுராணம்
2. கீர்த்தித் திருஅகவல்
3. திருவண்டப்பகுதி
4. போற்றித்திரு அகவல்.
84) முதன் முதலில் ஆலய நுழைவுப் போரட்டத்தை நடத்தியவர் யார்?
A) ஆச்சாரியர்கள்
B) இராமானுஜர்
C) நாதமுனிகள்
D) தேசிகர்
விளக்கம்: ஆலய வழிபாட்டில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்ய, இராமானுஜர் முதன் முதலில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார். இவர் தென்னிந்திய சமூக மற்றும் சமயச்சீர்த்திருத்தத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
85) ‘திருச்சந்த விருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) திருமழிசையாழ்வார்
B) பேயாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
விளக்கம்: திருமழிசையாழ்வார் அருளிய நூல்கள்:
1. நான்முகன் திருவந்தாதி
2. திருச்சந்த விருத்தம்
86) ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து.’ என்ற பாடலடிகள் எதைப் பற்றி கூறுகிறது?
A) கருவியல்
B) பரிணாம வளர்ச்சி
C) குடலியல்
D) உடலியல்
விளக்கம்: ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து ஈரமில் கிருமி செறிவினில் பிழைத்தும் எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் அறிவை நமக்கு தெரிவிக்கின்றன. இப்பாடல் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளது.
87) சிவனடியார் போன்று மாறுவேடம் பூண்டுவந்த முத்தநாதனை வரவேற்று அவனிடம் உபதேசம் பெறக் காத்திருந்தவர் யார்?
A) திருநீலகண்டர்
B) மெய்ப்பொருள் நாயனார்
C) அதிபத்தநாயனார்
D) கண்ணப்ப நாயனார்
விளக்கம்: மெய்பொருள் நாயனார், சிவனடியார் போன்று மாறுவேடம் பூண்டுவந்த முத்தநாதனை வரவேற்று அவனிடம் உபதேசம் பெறக் காத்திருந்தார். ஆனால் அவர் தன் புத்தகப்பையினை அவிழ்ப்பது போன்று அதிலிருந்த ஆயுதத்தால் இவரைத் தாக்கியபோதும் சிவனடியார்போல் வந்ததன் காரணத்தால், அப்போதும் உடலில் ரத்தத்துடன் சிவமெனக்கூறி அவரைத் தொழுது நின்றதிலிருந்து சிவனடியார்களைச் சிவனாகவே கருதும் இவரது உயர்ந்த பண்பு வெளிப்படுகிறது. இவரை “வெல்லுவமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” என்று திருத்தொண்டர்தொகை கூறுகிறது.
88) தாம் பிடித்த மீன்களில் ஒன்றைத் தினமும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் யார்?
A) திருநீலகண்டர்
B) மெய்ப்பொருள் நாயனார்
C) அதிபத்தநாயனார்
D) கண்ணப்ப நாயனார்
விளக்கம்: அதிபத்தர் என்ற சொல்லிற்கு சிறந்த பக்தர் என்று பொருள். இவர் திருநாகைக்காரோகணம் (நாகப்பட்டினம்) என்ற ஊரில் பிறந்தவர். இளமை முதலலே சிவபெருமானின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். தாம் பிடித்த மீன்களில் ஒன்றைத் தினமும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் ஒரு மீன் மட்டுமே கிடைக்கிறது (சிவபெருமானின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று) அம்மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார் சிவபெருமான் அருள் பெற்றதாக சைவ மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வறுமையிலும் பசியிலும் வாடிய பொழுதும்தான் பிடித்த ஒற்றை மீனைக்கூட சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து இறையருள் பெற்றார்.
89) நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோயிலில் அதிபத்தர் இறைவனுக்கு தங்கமீனை அர்பணிக்கும் விழா எப்போது நடைபெறும்?
A) ஆடி
B) ஆவணி
C) தை
D) சித்திரை
விளக்கம்: விழாவன்று அதிபத்தர் உற்சவர சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கிறார். அப்போது மீனவர்கள் வலையில் தங்கமீனை வைத்து கட்டி கடலில் பிடித்தது போன்று கூறுவார்கள். இது அதிபத்த நாயனார் தங்க மீனைப் பிடித்ததாகக் கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும்போது தங்கமீனை அவருக்குப் படைத்துப் பூசை செய்வார்கள். பிறகு, சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்வு நடைபெறும்.
90) திண்ணப்ப நாயனார் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.
A) ‘திண்ணன்’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் நாணன், காடன் ஆகியரோடு வேட்டையாட சென்றபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டு, அச்சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தும், மலர்கள், இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து இறைச்சியை லிங்கத்திற்கு படைத்தும் வந்தார்.
B) இதனைக் கண்ட அந்தணர் ஒருவர், திண்ணின் செய்கையை எதிர்த்தார். திண்ணனின் உண்மையான பக்தியை அந்தணனுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து குருதி (இரத்தம்) வரச்செய்தார்.
C) அதைக் கண்ட திண்ணன் தன் இரு கண்களையும் பிடுங்கி, அந்த சிவலிங்கத்தின் மீது வைத்துப் பொருத்தியதால், கண்ணப்பன் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டார்.
D) அனைத்தும் சரி
விளக்கம்: ‘திண்ணன்’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் நாணன், காடன் ஆகியோரோடு வேட்டையாடச் சென்றபோது, சிவலிங்கம் ஒன்றைக் கண்டு, அச்சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தும், மலர்கள், இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து, இறைச்சியை சிவலிங்கத்திற்கு படைத்தும் வந்தார்.
இதனைக் கண்ட அந்தணர் ஒருவர், திண்ணனின் செய்கையை எதிர்த்தார். திண்ணனின் உண்மையான பக்தியை, அந்தணர்க்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து குருதி (இரத்தம்) வரச்செய்தார். அதைக் கண்ட திண்ணன் தன் இரு கண்களையும் பிடுங்கி, சிவலிங்கத்தின் மீது வைத்துப் பொருத்தியதால், கண்ணப்பன் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டார்.
91) ‘புனிதவதி’ என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A) காலைக்கால் அம்மையார்
B) இசைஞானியார்
C) மங்கையர்கரசியார்
D) சந்தனாச்சாரியார்
விளக்கம்: புனிதவதி என்ற இயற்பெயர் கொண்டவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் பிறந்து பரமதத்தன் என்பவரை மணந்தார். இவர் சிவத்தொண்டில் சிறந்து விளங்கினார். இவர் இசைத்தமிழால் இறைவனை வணங்கினார்.
92) யதோத்தகாரி என்ற திருமால் கோயிலின் பொற்றாமரைக் குளத்தில் தோன்றியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூததத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்ற ஊரில் யதோத்தகாரி என்ற திருமால் கோயிலின் பொற்றாமரைக் குளத்தில் தோன்றியதால் ‘பொய்கையாழ்வார்’ எனப்பட்டார்.
93) ‘மாங்கனித் திருவிழா’ எந்த ஊரில் கொண்டாடப்படுகிறது?
A) காரைக்கால்
B) புதுச்சேரி
C) ஏனாம்
D) கன்னியாக்குமரி
விளக்கம்: காரைக்கால் அம்மையார், தன் கணவன் ஒரு நாள் கொடுத்தனுப்பிய மாம்பழத்தைச் சிவனடியார்க்குப் படைத்துவிட்டார். அந்த மாம்பழத்தை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தைப் பெற்றார். இந்நிகழ்வு காரைக்காலில் ‘மாங்கனித் திருவிழா’ –ஆக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
94) திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பெரியாழ்வார்
C) பெரியாழ்வார்
D) திருமழிசையாழ்வார்
விளக்கம்: திருமழிசையாழ்வார் தொண்டை நாட்டில் ‘திருமழிசை’ என்ற ஊரில் பிறந்தார். திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார். இவர் வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த ‘கணிக்கண்ணன்’ என்பவரை தம் சீடராகக் கொண்டார்.
95) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிப்பட்டவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: மாணிக்கவாசகர் வைகை நதியை வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டார். இவை மாணிக்கவாசகரின் அருஞ்செயல்களில் சிலவாகும்.
96) சந்தனாச்சாரியார் என அழைக்கப்படுபவர்கள் எத்தனைப் பேர்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: சந்தனாச்சாரியார் என்ற அழைக்கப்படுகிறவர்கள் மொத்தம் 4 பேர்.
1. மெய்கண்டார்
2. அருணந்தி சிவாச்சாரியார்
3. மறைஞானசம்பந்தர்
4. உமாபதிசிவம்.
97) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) ஆழ்வார்களின் சமய, சமூகப் பணியே பிற்காலத்தில், இராமானுஜர் வழியாகப் ‘பக்தி இயக்கம்’ வட இந்தியாவில் பரவ வழிவகுத்தது எனலாம்.
B) அந்த அடிப்படையில், ஆன்மிகம் மற்றும் சக அரும்பணிகள் தமிழகத்தில் தோன்றி, அதன் பிறகே வட இந்தியாவிற்குச் சென்று பக்தி இயக்கமாக உச்ச நிலையடைந்தன.
C) ஆழ்வார்கள் உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இது பாமர மக்களை நல்வழிப்படுத்த உதவியது
D) அனைத்தும்
விளக்கம்: ஆழ்வார்களின் சமய, சமூகப் பணியே பிற்காலத்தில், இராமானுஜர் வழியாகப் பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவ வழிவகுத்தது எனலாம். அந்த அடிப்படையில், ஆன்மிகம் மற்றும் சமூக அரும்பணிகள் தமிழகத்தில் தோன்றி, அதன் பிறகே வட இந்தியாவிற்குச் சென்று பக்தி இயக்கமாக உச்சநிலையடைந்தன. ஆழ்வார்கள் உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இது பாமர மக்களை நல்வழிப்படுத்த உதவியது.
98) அகச்சந்தானம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
A) அகச்சந்தானத்தார் கயிலைமலையில் வாழ்வோராவார்.
B) இவர்கள் ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவஞான உபதேசம் பெற்றவர்கள்.
C) நந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசனங்கள், பரஞ்சோதியார் ஆகியோர் அகச்சந்தான பிரிவை சார்ந்தவர்கள்
D) அனைத்தும் சரி
விளக்கம்: அகச்சந்தானத்தார் கயிலைமலையில் வாழ்வோராவர். இவர்கள் ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவஞான உபதேசம் பெற்றவர்கள். நந்திதேவர்;, சனற்குமாரர், சத்தியஞான தரிசனங்கள், பரஞ்சோதியார் ஆகியோர் அகச்சந்தான பிரிவைச் சார்ந்தவர்கள்.
99) மெய்கண்ட தேவர் யாரிடம் ஆன்மீக அறிவு பெற்றார்?
A) பரஞ்சோதி முனிவர்
B) அருணந்தி சிவம்
C) மறைஞான சம்பந்தர்
D) எவருமில்லை
விளக்கம்: பரஞ்சோதி முனிவரிடம் மெய்கண்ட தேவரும், மெய்கண்ட தேவரிடம் அருணந்தி சிவமும், அருணந்தி சிவத்திடம் மறைஞான சம்பந்தரும் ஆன்மீக அறிவு பெற்றனர்.
100) ‘சித்தாந்த அஷ்டகம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) பரஞ்சோதி முனிவர்
B) அருணந்தி சிவம்
C) மறைஞான சம்பந்தர்
D) உமாபதிசிவம்
விளக்கம்: மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம்
அருணந்தி சிவாச்சாரியார் – சிவஞான சித்தியார் மற்றும் இருபா இருஃபது.
உமாபதிசிவம் – சிவப்பிரகாசம் முதலிய ‘சித்தாந்த அஷ்டகம்’ என்ற எட்டு நூல்களையும் எழுதினார்.
101) நாயன்மார்கள் செய்த சமயத்தொண்டு என்ன?
A) பக்தி நெறியை வளர்;க்க, நாயன்மார்கள் பெருந்துணை புரிந்தனர்.
B) திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்கள் சமயப்பணிக்கே தம்மை அர்பணித்;துடன் சமூகப் பணியும் செய்தனர்.
C) ஆலயங்களின் தூய்மையிலும், சமயச் சடங்குகளுடன் குடமுழுக்கு நடத்துவதிலும் நாயன்மார்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
D) அனைத்தும்
விளக்கம்: பக்தி நெறியை வளர்;க்க, நாயன்மார்கள் பெருந்துணை புரிந்தனர்.
திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்கள் சமயப்பணிக்கே தம்மை அர்பணித்;துடன் சமூகப் பணியும் செய்தனர்.
ஆலயங்களின் தூய்மையிலும், சமயச் சடங்குகளுடன் குடமுழுக்கு நடத்துவதிலும் நாயன்மார்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
102) கூற்றுகளை ஆராய்க.
1. ஆண், பெண் சமத்துவத்தைச் சைவ சமயத்தில், நிலவச்செய்வதன் மூலம் சமூகத்தில் சமத்துவம் நிலவ நாயன்மார்கள் வழிகாட்டினர்.
2. சைவ சமய நெறிமுறைகளையும் அவற்றைப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் நாயன்மார்கள் தமிழகமெங்கும் பரப்பினர்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஆண், பெண் சமத்துவத்தைச் சைவ சமயத்தில், நிலவச்செய்வதன் மூலம் சமூகத்தில் சமத்துவம் நிலவ நாயன்மார்கள் வழிகாட்டினர்.
2. சைவ சமய நெறிமுறைகளையும் அவற்றைப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் நாயன்மார்கள் தமிழகமெங்கும் பரப்பினர்.
103) ‘திருப்பள்ளியெழுச்சி’ என்ற பாசுரத்தை இயற்றியவர் யார்?
A) தொண்டரடிப் பொடியாழ்வார்
B) பேயாழ்வார்
C) பொய்கையாழ்வார்
D) பூதத்தாழ்வார்
விளக்கம்: தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய பாசுரங்கள்:
1. திருமாலை
2. திருப்பள்ளியெழுச்சி
“திருமலை அறியாதார் திருமலை அறியாதாரே” என்ற முதுமொழி இப்பிரபந்தத்தின் பெருமைக்குச் சான்றாகும்.
104) நாயன்மார்களின் சமயத் தொண்டில் சரியானதைத் தேர்வு செய்க
A) நாயனமார்கள் பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆனால், சாதி வேறுபாடின்றி இறைவனை வழிபட்டனர். இதனால் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற சமூகக் கோட்பாடு வலுப்பெற இவர்கள் காரணமாயினர்.
B) நாயன்மார்களின் சமூக நல்வாழ்வுப் பணிகள், ஆலயப் பணிகள் ஆகியவை மக்கள் மனத்தில் ஆன்மீக மற்றும் சமூகச் சேவை உணர்வை வளர்த்தது.
C) பக்தி இயக்கத்தில் புதிய கோட்பாடுகளான ஞான மார்க்ககோட்பாடு, தொண்டு மார்க்கக்கோட்பாடு, நட்பு மார்க்கக்கோட்பாடு போன்றவை தோன்ற காரணமாயினர்.
D) அனைத்தும்
விளக்கம்: நாயன்மார்கள் பல்வேறு சாதிப் பிரிகளைச் சார்ந்தவர்கள். ஆனால் சாதி வேறுபாடின்றி இறைவனை வழிபட்டனர். இதனால் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற சமூகக் கோட்பாடு வலுப்பெற இவர்கள் கராரணமாயினர்.
நாயன்மார்களின் சமூக நல்வாழ்வுப் பணிகள், ஆலயப் பணிகள் ஆகியவை மக்கள் மனத்தில் ஆன்மிக மற்றும் சமூகச் சேவை உணர்வை வளர்த்தது.
பக்தி இயக்கத்தில் புதிய கோட்பாடுகளான ஞான மார்க்கக்கோட்பாடு, தொண்டு மார்க்கக்கோட்பாடு, நட்பு மார்க்கக்கோட்பாடு போன்றவை தோன்ற இவர்கள் காரணமாயினர்.
105) நாயன்மார்களின் சமயத் தொண்டு பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
A) தமிழகத்தின் பண்பாட்டைப் பாதுகாக்க நாயன்மார்கள் பல்வேறு விழாக்களைக் கொண்டாடினர்
B) அயல்நாடுகளில் சைவ மரபு பரவ, மன்னர்கள் உதவினர்
C) பிற்காலச் சோழர்கள் சைவ சமயத்தை இலங்கை உட்பட பல நாடுகளில் பரப்பினர். இதனால் தமிழர் பண்பாடும், சைவ மரபும் அயல்நாடுகளில் பரவியதன் மூலம் உலக ஆன்மீக நெறிக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்ந்தனர்
D) அனைத்தும் சரி
விளக்கம்: தமிழகத்தின் பண்பாட்டைப் பாதுகாக்க நாயன்மார்கள் பல்வேறு விழாக்களைக் கொண்டாடினர்
அயல்நாடுகளில் சைவ மரபு பரவ, மன்னர்கள் உதவினர்
பிற்காலச் சோழர்கள் சைவ சமயத்தை இலங்கை உட்பட பல நாடுகளில் பரப்பினர். இதனால் தமிழர் பண்பாடும், சைவ மரபும் அயல்நாடுகளில் பரவியதன் மூலம் உலக ஆன்மீக நெறிக்கும் எடுத்துகாட்டாகத் திகழ்ந்தனர்.
106) திராவிடாச்சாரியார்கள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
A) நாயன்மார்கள்
B) ஆழ்வார்கள்
C) சிவனடியார்கள்
D) A மற்றும் B
விளக்கம்: திராவிட வேதமென போற்றப்பட்ட நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தை அருளியதால் ஆழ்வார்கள் ‘திராவிடச்சாரியார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். வைணவ மரபுப்படி சிந்தையின் அடிப்படையில் திருமாலைப் பற்றிய ஆழ்ந்த தேடல்கள் கொண்டவர்கள்.
107) ஆழ்வார்கள் எத்தனை பேர்?
A) 72
B) 63
C) 64
D) 12
விளக்கம்: ஆழ்வார்கள் 12 பேர். இறைவனின் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர்கள். இறைவனின் அன்பிலும் இன்பத்திலும் மூழ்கி இருப்பவர்கள் ஆழ்வார் எனப்பட்டனர். திருமாலின் புகழையும், தத்துவத்தையும் வாழ்வியலோடு பொருத்தி, நாடு முழுவதும் பரப்பியவர்கள்.
108) ஆழ்வார்கள் காலத்தின் அடிப்படையில் எத்தனை நிலைகளில் பிரிக்கப்படுகின்றனர்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ஆழ்வார்கள் அவதரித்த கால அடிப்படையில், 3 நிலைகளில் பிரிக்கப்படுகின்றனர்.
1. முற்காலத்தவர்கள்
2. இடைக்காலத்தவர்கள்
3. பிற்காலத்தவர்கள்.
109) திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த சிவாலயக் கதவினைப் பதிகம்பாடி திறந்தவர் யார்?
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) A மற்றும் B
D) சுந்தரர்
விளக்கம்: சம்பந்தர் பதிகத்தால், திருமறைக்காடு (வேதாரண்யம்) சிவாலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டது.
இதேபோல், திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த சிவாலயக் கதவினைப் பதிகம்பாடி திறந்தார்.
110) இடைக்கால ஆழ்வார் யார்?
A) பொய்கையாழ்வார்
B) நம்மாழ்வார்
C) திருப்பாணாழ்வார்
D) அனைவரும்
விளக்கம்: இடைக்கால ஆழ்வார்கள்:
1. நம்மாழ்வார்
2. மதுரகவியாழ்வார்
3. குலசேராழ்வார்
4. பெரியாழ்வார்
5. ஆண்டாள்
111) பிற்கால ஆழ்வார் யார்?
A) பொய்கையாழ்வார்
B) நம்மாழ்வார்
C) திருப்பாணாழ்வார்
D) மேற்காணும் அனைவரும்
விளக்கம்: பிற்கால ஆழ்வார்கள்:
1. தொண்டரடிப் பொடியாழ்வார்
2. திருப்பாணாழ்வார்
3. திருமழிசையாழ்வார்.
112) தமிழகத்தில் ‘மங்களாசனம்’ செய்தவர்களில் முதன்மையாகக் கருதப்படுபவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: ‘மங்களாசனம்’ என்பது வைணவத் திருத்தலங்களில் பக்திப்பாடல்களை இயற்றி அங்கேயே இறைவன் முன் அரங்கேற்றுவதாகும். தமிழகத்தில் மங்களாசனம் செய்தவர்களில் பொய்கையாழ்வாரே முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
113) தமிழுக்கு ‘அந்தாதி’ என்ற இலக்கியமுறையை அறிமுகம் செய்தவர் யார்?
A) காரைக்கால் அம்மையார்
B) இசைஞானியார்
C) மங்கையர்கரசியார்
D) சந்தனச்சாரியார்
விளக்கம்: அற்புத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்தப்பதிகம், திருவிரட்டை மணிமாலை போன்றவை காரைக்காலம்மையாரின் படைப்புகளாகும்.
114) திருச்சங்கின் அவதாரமாக அவதரித்தவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமாலின் கையிலுள்ள ‘பஞ்சசன்யம்’ என்ற திருச்சங்கின் அவதாரமாக அவதரித்தவர் பொய்கையாழ்வார். ஆழ்ந்த இறைநிலையைப் போதித்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.
115) நரியைப் பரியாக மாற்றியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: மாணிக்கவாசகர் தில்லையில் பௌத்தர்களை வாதத்தில் வென்றார். ஊமையைப் பேசுமாறு செய்தார். மேலும் நரிகளை பரி (குதிரை) களாக்கினார். இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் அருஞ்செயல்களாகும்.
116) யாருடைய பாடல்கள், வைணவ சமயத்தின் தத்துவக் கருவூலங்களாகத் திகழ்கின்றன?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழவார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: பொய்கையாழ்வார் தம் இயல்புகளையும், பக்தியையும் முதல் திருவந்தாதியில் கூறுகிறார். தான் பிறர்ப்பொருளை விரும்பமாட்டேன்., குணத்தால் தீயவருடனும், கீழ்க்குணமுடையவருடனும் சேரமாட்டேன், தான் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன். திருமாலைத் தவிர வேறெந்த இறைவனையும் வழிபட மாட்டேன் என்று கூறுகிறார். உயர்ந்த வைணவ சமயத்தின் தத்துவக் கருவூலங்களாகப் பொய்கையாழ்வாரின் பாடல்கள் திகழ்கின்றன. 12 ஆழ்வார்களில் இவரே முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
117) மாமல்லபுரத்தில் குருகத்தி மலரில் தோன்றியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: மாமல்லபுரத்தில் குருக்கத்தி மலரில் தோன்றியவர் பூதத்தாழ்வார் ஆவார். இவர் அங்குள்ள ஸ்தல சயனப் பெருமாளைப் புகழ்ந்து பாடிய பிறகு காஞ்சிபுரம் சென்று அங்குள்ள திருமாலின் புகழைப் பாடினார்.
118) திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
A) 51
B) 656
C) 56
D) 516
விளக்கம்: மாணிக்கவாசகர் எழுதிய ஒப்பற்ற, சைவ நூல் திருவாசகம். இந்நூல் 8-ஆம் திருமுறையாகும். இந்நூலில் 51 திருப்பதிகங்களும், 656 பாடல்களும் உள்ளன.
119) திருமாலின் கையிலுள்ள கௌமோதகி-ன் அம்சமாக பிறந்தவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூததத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமால் மீதான பக்தியும், தமிழ் மீதான பக்தியும் பூதத்தாழ்வாரின் இரு கண்களாகத் திகழ்ந்தன. இவர் திருமாலின் கையிலுள்ள ‘கௌமோதகி’ என்ற கதையின் (ஆயுதம்) அம்சமாகக் கருதப்படுகிறார்.
120) “அன்பபே தகளியா, ஆர்வமே நெய்யாக” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: அன்பு, சிந்தனை இவற்றால் இவர் ஞானத்தைப் பெற்ற நிலையைப் பின்வரும் பாடலால் அறியலாம்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகுஞ் சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாராணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்” (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் – 2182).
இதன் பொருள்: அறிவைப் பெருக்கும் தமிழை விரும்பிய நான் அன்பையே அகலாக எண்ணெய், திரி முதலியவற்றைத் தாங்கும் கருவியாக அமைத்து அறிவாகிய சுடர்விளக்கை ஏற்றினேன். ஆசையை நெய்யாக்கிக் கொண்டேன். எம்பெருமானை எண்ணி இன்பத்தால் உருகுகின்றன உள்ளத்தையே எண்ணெயில் இட்ட திரியாக்கிக் கொண்டேன். நன்றாக மனமுருகி ஞான ஒளியாகிய விளக்கைத் திருமாலுக்கு ஏற்றினேன்.
121) திருமாலின் வாளின் அம்சமாகப் பிறந்தவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: பேயாழ்வார் சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். திருமாலின் 5 ஆயுதங்களில் ஒன்றான ‘நாந்தகம்’ என்ற வாளின் அம்சமாகப் பிறந்தவர். இவர் பாடிய பாசுரங்கள் ‘மூன்றாம் திருவந்தாதி ஆகும்.
122) திருத்தூங்கானை மாடத்தில் தமது தோளில் ரிஷப, சூல முத்திரைகளைப் பொறித்தவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: திருத்தூங்கானை மாடத்தில் தமது தோளில் ரிஷப, சூல முத்திரைகளைப் பொறித்தவர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர் ஆவார்.
123) மாறவர்மன் அரிகேசரி யாருடைய கணவர்?
A) காரைக்கால் அம்மையார்
B) இசைஞானியார்
C) மங்கையர்கரசியார்
D) நாச்சியார்
விளக்கம்: காரைக்கால் அம்மையாரைப் போல, மங்கையர்க்கரசியாரும் ஒரு பெண் நாயன்மார் ஆவார். திருஞானசம்பந்தரை திருமறைக்காட்டிலிருந்து பாண்டிய அரசவைக்கு அழைத்ததில் இவரே முக்கிய பங்கு வகித்தார். திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னான தம் கணவன் மாறவர்மன் அரிகேசரியைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்ற இவரே காரணமாவார்.
124) ‘வதவாலி’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) மத்துவர்
B) நிம்பார்க்கர்
C) ஜெயதீர்த்தர்
D) இராமானுஜர்
விளக்கம்: ஆன்மிகம் தொடர்பாக ஆழ்ந்த அறிவு ஜெயதீர்த்தரிடம் இருந்தது. ‘வதவாலி’ என்ற நூலை எழுதிய இவர் மத்துவரின் 18 நூல்களுக்கும் விளக்கவுரை எழுதியுள்ளார். ஜெயதீர்த்தரின் ‘நியாயசுதா’ என்ற நூலிற்கு புவனகிரியில் பிறந்த இராகவேந்திரர் விளக்கவுரை எழுதினார்.
125) “அமலனாதிபிரான் பாசுரங்கள்” யாரால் இயற்றப்பட்டது?
A) தொண்டராப்பொடியாழ்வார்
B) திருப்பாணாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
விளக்கம்: திருப்பாணழ்வார் திருச்சியை அடுத்துள்ள உறையூரில் பிறந்தவர். இவர் இயற்றியது ‘அமலனாதிபிரான் பாசுரங்கள்’ ஆகும். இப்பாசுரங்கள் திருவரங்கத்து அரங்கனின் அழகை விவரிக்கிறது.
126) புல்லாகி பூடாய்..என்ற பாடல் வரிகள் யாருடையது?
A) மாணிக்கவாசகர்
B) அப்பர்
C) சுந்தரர்
D) சம்பந்தர்
விளக்கம்: புல்லாகிப் பூடாய்.என்ற பாடல் வரிகள் பல்வகை உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறுகின்றன. இப்பாடல் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளது.
127) ‘திருமங்கை மன்னன்’ என அழைக்கப்பட்டவர் யார்?
A) திருமங்கையாழ்வார்
B) திருமழிசையாழ்வார்
C) திருப்பாணாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகரில் பிறந்தவர். சோழ, மன்னனிடம் படைத்தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றி பெற்று ‘பரகாலன்’ (எதிரிகளுக்கு எமன்) என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இவரைச் சிறப்பிக்க விரும்பிய மன்னன் திருமங்கை நாட்டிற்கே மன்னராக்கி ‘திருமங்கை மன்னன்’ என்னும் பெயரைச் சூட்டினார்.
128) ‘திருவாய்மொழி’ என்ற நூலை இயற்றியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பெரியாழ்வார்
C) பேயாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: நம்மாழ்வார் இயற்றிய பாடல்கள்:
1. திருவாசிரியம்
2. பெரிய திருவந்தாதி
3. திருவாய்மொழி.
இந்நூல்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையானவை என்று கருதப்படுகிறது.
129) திருநாவுக்கரசர் தம் பதிகங்களில் எத்தனை வகைப் பண்புகளைப் பயன்படுத்தியுள்ளார்?
A) 4
B) 5
C) 8
D) 10
விளக்கம்: திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும், உதவும் வகையில் பதிகங்களைப் பாடியுள்ளார். பதிகங்களில், பத்து வகைப் பண்புகளைப் பயன்படுத்தியுள்ளார்.
130) ‘விப்ரநாராயணர்’ என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A) தொண்டரடிப்பொடியாழ்வார்
B) திருப்பாணாழ்வார்
C) திருமங்கையாழ்வார்
D) ஆண்டாள்
விளக்கம்: தொண்டரடிப்பொடியாழ்வார் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தார். ‘விப்ரநாராயணன்’ என்பது இவருடைய இயற்பெயராகும். திருவரங்கம் சென்று நந்தவனம் அமைத்து அரங்கநாதப் பெருமாளுக்குத் தொண்டு புரிந்து வந்தார். இதனால் ‘தொண்டரடிப்பொடி’ என்று பெயர் பெற்றார். திருமாலைப் பாசுரத்தில் பல நீதிக் கருத்துக்களைக் கூறுகிறார்.
131) ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
A) நம்மாழ்வார்
B) பேயாழ்வார்
C) பெரியாழ்வார்
D) மதுரகவியாழ்வார்
விளக்கம்: இறைவனைப் பாடாமல் தம் குருவாகிய நம்மாழ்வாரையே இறைவானகக் கொண்டு ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ என்ற பாசுரத்தை மதுரகவியாழ்வார் பாடியுள்ளார்.
132) சேரநாட்டில் ‘திருவஞ்சைக்களம்’ என்னும் இடத்தில் அரச குலத்தில் பிறந்த ஆழ்வார் யார்?
A) திருமழிசையாழ்வார்
B) நம்மாழ்வார்
C) பெரியாழ்வார்
D) குலசேகர ஆழ்வார்
விளக்கம்: குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ‘திருவஞ்சைக்களம்’ என்னும் இடத்தில் அரச குலத்தில் பிறந்தவர். அரச பதவியைவிடப் பக்தியும் இறைத் தொண்டுமே சிறந்தன என்னும் நோக்கில் வைணவ அடியார் ஆனார்.
133) நம்மாழ்வார் ஒரு நாட்டிற்கோ, ஒரு சமயத்திற்கோ, ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவர் அல்லர். அவர் எல்லா நாட்டிற்கும், எல்லா சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர் என்று கூறுபவர் யார்?
A) திரு.வி.க
B) மு.வ
C) பெரியார்
D) உ.வே.சா
விளக்கம்: நம்மாழ்வார் – நம் ஆழ்வார், ஒரு நாட்டிற்கோ, ஒரு சமயத்திற்கோ, ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவர் அல்லர். அவர் எல்லா நாட்டிற்கும், எல்லா சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர். எல்லாரும் ‘நம்மாழ்வார்’ எனப் போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ்நாட்டை மனத்தால் நினைக்கிறேன், வாயால் வாழ்த்துகிறேன். கையால் தொழுகிறேன் – திரு.வி.க
134) பாழடைந்து காணப்பட்ட சிவாலயங்களையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்த ‘உழவாரப்படை’ என்ற குழுவை ஏற்படுத்தியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: பாழடைந்து காணப்பட்ட சிவாலயங்களையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்த ‘உழவாரப்படை’ என்ற குழுவை அக்காலத்திலேயே ஏற்படுத்தியவர் திருநாவுக்கரசர். இதன் மூலம் திருநாவுக்கரசர் பக்தி நெறிக்குத் ‘தொண்டு வடிவம்’ கொடுத்தார்.
135) “அடியாரும் வானவரும் அரம்பையரும்….” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) நம்மாழ்வார்
B) குலசேகர ஆழ்வார்
C) பெரியாழ்வார்
D) போயாழ்வார்
விளக்கம்: “அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாயக் கிடந்துண்பவளவாய்க் காண்பேனே” எனக் குலசேகர ஆழ்வார் பாடியதால் இன்றும் திருமால் கோயில்களில் உள்ள கருவறையின் படி, “குலசேகரப்படி” எனக் கூறப்படுகிறது. இவர் இயற்றிய பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ ஆகும்.
136) பொருத்துக
அ. பூதத்தாழ்வார் – 1. கதை (ஆயுதம்)
ஆ. பொய்கையாழ்வார் – 2. சங்கு
இ. பேயாழ்வார் – 3. வாள்
ஈ. திருமழிசையாழ்வார் – 4. சக்கரம்
A) 1, 2, 3, 4
B) 2, 3, 1, 4
C) 1, 4, 3, 2
D) 2, 4, 3, 1
விளக்கம்: பூதத்தாழ்வார் – கதை (ஆயுதம்)
பொய்கையாழ்வார் – சங்கு
பேயாழ்வார் – வாள்
திருமழிசையாழ்வார் – சக்கரம்
137) பொருத்துக
அ. பஞ்சசன்யம் – 1. சங்கு
ஆ கௌமோதகி – 2. கதை (ஆயுதம்)
இ. நாந்தகம் – 3. வாள்
A) 1, 2, 3
B) 2, 3, 1
C) 1, 3, 2
D) 1, 2, 3
விளக்கம்: பஞ்சசன்யம் – சங்கு
கௌமோதகி – கதை (ஆயுதம்)
நாந்தகம் – வாள்
138) பொருத்துக
அ. முதல் திருவந்தாதி – 1. பேயாழ்வார்
ஆ. இரண்டாம் திருவந்தாதி – 2. பூதத்தாழ்வார்
இ. மூன்றாம் திருவந்தாதி – 3. பொய்கை ஆழ்வார்
A) 3, 2, 1
B) 1, 3, 2
C) 2, 1, 3
D) 1, 2, 3
விளக்கம்: முதல் திருவந்தாதி – பொய்கை ஆழ்வார்
இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார்
139) ‘பட்டபிரான்’ என அழைக்கப்பட்டவர் யார்?
A) பெரியாழ்வார்
B) ஆண்டாள்
C) தொண்டரடிப்பொடியாழ்வார்
D) திருபாணாழ்வார்
விளக்கம்: பெரியாழ்வார் திருவில்லிபுத்தூரில் பிறந்தவர். இவருக்கு ‘விஷ்ணுசித்தர்’, ‘பட்டர்பிரான் ஆகிய பெயர்களுமுண்டு. இவர் பெருமாளைத் தமது குழந்தையாகக் கருதிப் பாசுரங்களைப் பாடினார்.
140) “மாசில் வீனையும் மாலை மதியமும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருநாவுக்கரசர், இறைவனின் திருவடியே தமது நிழல் என்கிறார். அதன் அடிப்படையில் இவர் பாடிய பாடல்,
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைபொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”
சுண்ணாம்பு நீற்றறையிலிருந்து வெளியேறிய பின் பாடிய இப்பாடலிருந்து இவர் சிவபெருமானின் மீது கொண்டிருந்த பற்றை அறியமுடிகிறது
141) பக்தி இயக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகள் அகல பக்தி இயக்கம் அடித்தளமிட்டது.
2. பக்தி இயக்கச் சிந்தனைகளே பிற்காலத்தில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் உருவாக வழிவகுத்தன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: சமூகத்திலுள்ள, மூடநம்பிக்கைகள் அகல பக்தி இயக்கம் அடித்தளமிட்டது. பக்தி இயக்கச் சிந்தனைகளே பிற்காலத்தில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் உருவாக வழிவகுத்தன.
142) யார் எழுதிய “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடலை பிற்காலத்தில் மகாகவி பாரதியார் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடல் எழுதக் காரணமாக அமைந்தது?
A) சம்பந்தர்
B) மாணிக்கவாசகர்
C) சுந்தரர்
D) திருநாவுக்கரசர்
விளக்கம்: திருநாவுக்கரசர் எழுதிய “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடலை பிற்காலத்தில் மகாகவி பாரதியார் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடல் எழுதக் காரணமாக அமைந்தது.
143) ஆண்டாளை வளர்த்தவர் யார்?
A) பெரியாழ்வார்
B) நம்மாழ்வார்
C) பேயாழ்வார்
D) பூதத்தாழ்வார்
விளக்கம்: பெரியாழ்வார் தமது நந்தவனத்தில் துளசிச் செடியின் அருகில் கண்டெத்து வளர்த்த பெண் குழந்தையே ‘ஆண்டாள்’ என்பர். இவருக்குப் பெரியாழ்வார் சூட்டிய பெயர் “கோதை நாச்சியார்.
144) “பித்தாபிறை சூடிபெருமானே” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சுந்தரர், தம்மைச் சிவபெருமானின் அடிமை என்று கூறுகிறார். அவருடைய இக்கருத்தைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது.
“பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தாவுனக் காளாய்இனி அல்லேன் எனலாமே”
145) ‘திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?
A) ஆண்டாள்
B) நம்மாழ்வார்
C) மங்கையர்கரசியார்
D) ஒளவையார்
விளக்கம்: திருமால்மீது கொண்ட அன்பையும் காதலையும் ஆண்டாளின் படைப்புகளில் காணமுடிகிறது. இவர் இயற்றிய பாசுரங்கள்:
1. திருப்பாவை
2. நாச்சியார் திருமொழி
146) யாருடைய பாடல் தொகுப்புகள் ‘தோஹாக்கள்’ எனப்படுகிறது?
A) இராமானந்தர்
B) கபீர்
C) நாமதேவர்
D) பசவர்
விளக்கம்: கபீருடைய போதனைகளில் உயர்ந்தது, இந்து-முஸ்லீம் மெய்யுணர்வுக் கோட்பாடுகளும், உயர்ந்த மரபுத் தத்துவங்களும் ஆகும். இவர் சமயச் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளைம் எதிர்த்தார். அன்புநெறியைப் பின்பற்றி, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வித்திட்டார். கபீருடைய பாடல் தொகுப்பு ‘தோஹாக்கள்’ எனப்படுகின்றன.
147) ‘ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்’ என்ற பாடலை இயற்றியவர் யார்?
A) ஆண்டாள்
B) நம்மாழ்வார்
C) மங்கையர்கரசியார்
D) ஒளவையார்
விளக்கம்: ‘ஆழிமழைக் கண்ண ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து
பாழியந் தோளுடை பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழந்;தேலோர் எம்பாவாய்’
என மழை, கருக்கொண்டு பொழிவதைத் தமது பாசுரங்களில் ஆண்டாள் காட்சிப்படுத்தியுள்ளார்.
148) திருப்பாலியூரில் இருந்த சமணப்பள்ளியை இடித்து, அக்கற்களைக் கொண்டு திருவதிகையில் குணபர ஈஸ்வரம் என்ற சிவாலயத்தைக் கட்டியவர் யார்?
A) ராஜராஜசோழன்
B) முதலாம் மகேந்திரவர்மன்
C) ராஜசிம்மன்
D) இரண்டாம் மகேந்திரவர்மன்
விளக்கம்: பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், திருநாவுக்கரசரைச் சுண்ணாம்பு நீற்றறையில் வைத்தும், விஷம் கொடுத்தும், கடலில் எறிந்தும் கொடுமைப்படுத்தினார். ஆனால் சிவபெருமான் அருளாள் அத்தனை கொடுமையிலிருந்தும் திருநாவுக்கரசர் உயிர் பிழைத்தார். பிறகு உண்மையறிந்த மன்னனே சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினார். பின், இம்மன்னன் திருப்பாபுலியூரில் இருந்த சமணப்பள்ளியை இடித்து, அக்கற்களைக் கொண்டே திருவதிகையில் குணபர ஈஸ்வரம் என்ற சிவாலயத்தைக் கட்டினார்.
149) “ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) தொண்டரடிப்பொடியாழ்வார்
B) பொய்கையாழ்வார்
C) பேயாழ்வார்
D) பூதத்தாhழ்வார்
விளக்கம்: “ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவன் இல்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே! என் கண்ணே! கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா! அரங்கமா நகர் உளானே!” – தொண்டரடிப்பொடியாழ்வார்.
இதில் தமக்குக் கடவுளைத் தவிர, வேறு துணையில்லை என்று குறிப்பிடுகிறார்.
150) நாயன்மார்களின் சமயத் தொண்டில் சரியானதைத் தேர்வு செய்க
A) நாயன்மார்களின் சில வழிபாட்டைப் பின்பற்றியே, கர்நாடகாவில் “பசவர்” லிங்காயத் என்னும் புதிய சமயப் பிரிவைத் தோற்றுவித்தார்.
B) இடைக்காலத்தில் பசவரின் சீடர்கள் இந்தியா முழுவதும் சிவ வழிபாட்டைப் பரப்பினர். இந்த அடிப்படையில் சிவ வழிபாடு தமிழகத்திலிருந்தே வட இந்தியாவிற்குச் சென்றது.
C) நாயன்மார்கள் சைவ சமயத்தை வளர்த்ததுடன் தமது பதிகங்களால் தமிழ்மொழியையும் வளர்த்தனர். தமிழிலக்கியத்தை இந்தியா முழுவதும் பரப்பினர்.
D) அனைத்தும்
விளக்கம்: நாயன்மார்களின் சிவ வழிபாட்டைப் பின்பற்றியே, கர்நாடகத்தில் ‘பசவர்’ லிங்காயத் என்னும் புதிய சமயப் பிரிவைத் தோற்றுவித்தார்.
இடைக்காலத்தில் பசவரின் சீடர்கள் இந்தியா முழுவதும் சிவ வழிபாட்டைப் பரப்பினர். இந்த அடிப்படையில் சிவ வழிபாடு தமிழகத்திலிருந்தே வட இந்தியாவிற்குச் சென்றது.
நாயன்மார்கள் சைவ சமயத்தை வளர்த்ததுடன் தமது பதிகங்களால் தமிழ்மொழியையும் வளர்த்தனர். தமிழிலக்கியத்தையும் இந்தியா முழுவதும் பரப்பினர்.
151) பக்திசாரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) திருமழிசையாழ்வார்
B) பொய்கையாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
விளக்கம்: திருமழிசையாழ்வாரின் வேறு பெயர்கள்:
1. பக்திசாரர்
2. திருமழிசைபிரான்
3. குடமுக்கிற்புலவர்
152) “கொண்டல் வண்ணனைக் கோவல.” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) தொண்டரடிப்பொடியாழ்வார்
B) திருப்பாணாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
விளக்கம்: “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே” – திருப்பாணாழ்வார்.
இப்பாசுரங்கள் திருவரங்கத்து அரங்கனின் விவரிக்கிறது.
153) ‘பரகாலன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
A) திருமழிசையாழ்வார்
B) திருபாணாழ்வார்
C) திருமங்கையாழ்வார்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகரில் பிறந்தவர். சோழ, மன்னனிடம் படைத்தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றி பெற்று ‘பரகாலன்’ (எதிரிகளுக்கு எமன்) என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
154) இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ‘ஆழ்ந்த அன்பே’ —————எனப்படுகிறது?
A) பக்தி
B) கர்மம்
C) ஞானம்
D) யோகம்
விளக்கம்: இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ‘ஆழ்ந்த அன்பே’ பக்தி எனப்படுகிறது. பக்தி என்ற சொல் ‘பஜ்’ என்ற சொல்லிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்கு ‘வழிபாடு’ என்று பொருள். மேலும் பக்தி என்பது, உள்ளார்ந்த அன்பபோடு இறைவனை வழிபடுதல் என்ற பொருளைத்தரும். எனவே, பக்திநெறி ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
155) “சகமார்க்கம்” என்ற நெறியைப் பின்பற்றியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சுந்தரர், பக்தி மார்க்கத்தில் ‘சகமார்க்கம்’ என்ற நட்பு மார்க்கத்தைப் பின்பற்றினார். இறைவனையே தம்தோழராக கருதியதால், ‘தம்பிரான் தோழர்’ என்றழைக்கப்பட்டார். இவர் தேவராத்தின் 7-ஆம் திருமுறையைப் பாடியுள்ளார்.
156) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) ஆழ்வார்கள் தாங்கள் இயற்றிய பாசுரங்கள் மூலம் வைணவ பக்தி இயக்கத்தை, மக்களிடையே பரப்பினர்.
B) வாழ்வியலில் பக்திநெறியை இணைப்பதில் முக்கிய பங்காற்றினர்.
C) தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஆழ்வார்களின் பங்களிப்பு போற்றத்தக்கது
D) அனைத்தும் சரி
விளக்கம்: ஆழ்வார்கள் தாங்கள் இயற்றிய பாசுரங்களின் மூலம் வைணவ பக்தி இயக்கத்தை, மக்களிடையே பரப்பினர். வாழ்வியலில் பக்திநெறியை இணைப்பதில் முக்கிய பங்காற்றினர். தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஆழ்வார்களின் பங்களிப்பு போற்றத்தக்கது.
157) யாரைப் பின்பற்றுபவர்கள் ‘வீரசைவர்கள்’ எனப்பட்டனர்?
A) வித்யாபதி
B) பசவர்
C) ஞானேஷ்வர்
D) நாமதேவர்
விளக்கம்: பசவரைப் பின்பற்றுபவர்கள் ‘வீரசைவர்கள்’ அல்லது ‘லிங்காயத்துகள்’ என்றழைக்கப்பட்டனர். இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் மற்றும் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
158) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) ஆழ்வார்களால்; அக இலக்கியங்களுக்குப் புதிய வடிவம் தரப்பட்டது
B) அதன்படியே கடவுளை கணவனாக, மகனாக, நண்பனாக நினைக்கும் மனநிலை வளர்ந்தது.
C) இறைவனிடம் சரணாகதி அடையும் தத்துவத்தைப் போதித்தவர்கள் ஆழ்வார்கள்
D) அனைத்தும்
விளக்கம்: ஆழ்வார்களால் அக இலக்கியங்களுக்குப் புதிய வடிவம் தரப்பட்டது. அதன்படியே கடவுளை கணவனாக, மகனாக, நண்பனாக நினைக்கும் மனநிலை வளர்ந்தது. இறைவனிடம் சரணாகதி அடையும் தத்துவத்தைப் போதித்தவர்கள் ஆழ்வார்கள்.
159) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) தமது பாசுரங்கள் மூலம் பக்திநெறியுடன் இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை வளர்ச்சியடைய ஆழ்வார்கள் உதவினர்.
B) வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காப்பியங்கள் உள்ளிட்ட பலவற்றை மக்களின் மொழியான தமிழிலேயே ஆழ்வார்கள் விளக்கிக் கூறினர்.
C) ஆழ்வார்களின் வழிபாட்டுமுறை சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
D) அனைத்தும்
விளக்கம்: தமது பாசுரங்கள் மூலம் பக்திநெறியுடன் இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை வளர்ச்சியடைய ஆழ்வார்கள் உதவினர். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காப்பியங்கள் உள்ளிட்ட பலவற்றை மக்களின் மொழியான தமிழிலேயே ஆழ்வார்கள் விளக்கிக் கூறினர். ஆழ்வார்களின் வழிபாட்டுமுறை, சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
160) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) உலக இன்பங்கள் நிலையற்றவை. பிறப்பு, இறப்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை என போதித்தனர்.
B) பொருளாசை தேவையற்றது. எனவே மறுபிறவியற்ற நிலை வேண்டும். அதற்குத் திருமாலின் அருள் தேவை என எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர்.
C) ‘ஆலயப்பணியே சமூகப்பணிக்கு அடிப்படை’ என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார்கள் ஏற்படுத்தினர்.
D) அனைத்தும்
விளக்கம்: உலக இன்பங்கள் நிலையற்றவை. பிறப்பு, இறப்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை என போதித்தனர். பொருளாசை தேவையற்றது. எனவே மறுபிறவியற்ற நிலை வேண்டும். அதற்குத் திருமாலின் அருள் தேவை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தினர். ‘ஆலயப்பணியே சமூகப்பணிக்கு அடிப்படை’ என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார்கள் ஏற்படுத்தினர்.
161) ‘சந்தானம்’ எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ‘சந்தானம் என்ற சொல்லிற்கு வம்சாவழி, பரம்பரை என்று பொருள். இது, இரண்டு வகைப்படும். அவை,
1. அகச்சந்தானம்
2. புறச்சந்தானம்
162) கூற்றுகளை ஆராய்க.
1. வைணவ ஆச்சாரியார்கள் என்போர் கடவுள்மீது கொண்ட அன்பின் உணர்வுகளை அறவழியில் விளக்கியவர்கள் ஆவர்.
2. வைணவ பக்தி தழைக்க ஆழ்வார்கள் காரணம் எனில், வைணவ நடைமுறையும் தத்துவமும் தோன்ற ஆச்சாரியர்களே காரணம்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வைணவ ஆச்சாரியார்கள் என்போர் கடவுள்மீது கொண்ட அன்பின் உணர்வுகளை அறவழியில் விளக்கியவர்கள் ஆவர். வைணவ பக்தி தழைக்க ஆழ்வார்கள் காரணம் எனில், வைணவ நடைமுறையும் தத்துவமும் தோன்ற ஆச்சாரியர்களே காரணம்.
163) ‘சித்தவமடம்’ என்ற இடத்தில் இறைவனின் திருவடி சூட்டப்பெற்றவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: ‘சித்தவமடம்’ என்ற இடத்தில் இறைவனின் திருவடி சூட்டப்பெற்றவர் சுந்தரர் ஆவார். இவர் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று சிவாலயங்களில் பதிகங்களைப் பாடியுள்ளார்.
164) ‘பிரவாளம்’ என்றால் என்ன?
A) முத்துவமணி
B) பவளமணி
C) மாணிக்கம்
D) வைடூரியம்
விளக்கம்: மணி என்பது முத்துமணி, பிரவாளம் என்பது பவளமணி. வெண்ணிற முத்துமணியையும், சிவந்த பவளமணியையும் சேர்த்து கோர்த்தார் போல் அமைந்தது ‘மணிபிரவளாம்’. அதுபோல தமிழ்ச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்து எழுதப்பட்ட உரைநடையே ‘மணிப்பிரவாளநடை’ எனப்பட்டது.
165) ஆழ்வார்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்த பெருமை யாரைச் சேரும்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) ஆளவந்தார்
D) இராமானுஜர்
விளக்கம்: வைணவம் தழைக்கப் பாடுபட்டவர்களுள் நாதமுனிகள், ஆளவந்தார், வேதாந்த தேசிகர் பிள்ளை லோகாச்சாரியார், இராமானுஜர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ஆழ்வார்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்த பெருமை ஆச்சாரியார்களையே சாரும்.
166) ஆழ்வார்களின் பிரபந்தகளுக்கு இசை அமைத்து அளித்தவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) ஆளவந்தார்
D) இராமனுஜர்
விளக்கம்: நாதமுனிகள் காட்டுமன்னார் கோயிலில் பிறந்தவர். தமது ஊர்க்கோயிலில் இருவர் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடியதைக் கேட்டார். அப்பாடல்கள் மீது கொண்ட ஈர்ப்பால் நம்மாழ்வாரிடம் இருந்து பிரபந்தங்களைப் பெற்றார். இவர், ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கு இசை அமைத்து அளித்தவர் ஆவார்.
167) ‘திருக்கோவையார்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருப்பெருந்துறையில் குருவருள் பெற்றுத் ‘திருவாசகம், திருக்கோவையார்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் மாணிக்கவாசகர். சிவபெருமானே முதன்மையான கடவுள் என்ற கருத்தையே தன் பக்தி மார்க்கமாகக் கொண்டார்.
168) திருத்தொண்டர் தொகையை அருளியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: சுந்தரருடைய பதிகங்கள் ஆழ்ந்த இறைபக்தியையும். தமிழின் இலக்கியச் சிறப்பையும் வெளிபடுத்துகின்றன. இவர் திருத்தொண்டர்த் தொகையை அருளினார். இந்நூல் 63 தனியடியார்களையும் 9 தொகையடியார்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் இந்நூலை மூலமாகக் கொண்டே சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது.
169) இராமானுஜரின் குரு யார்?
A) நாதமுனிகள்
B) ஆளவந்தார்
C) தேசிகர்
D) ஆச்சாரியார்கள்
விளக்கம்: இராமானுஜர் திருப்பெரும்புதூரில் பிறந்தார். இவர் ‘ஆளவந்தாரின்’ மாணவர் ஆவார். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியுள்ளார்.
170) இராமானுஜர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. ஆளவந்தாரின் மாணவரான இவர், ‘பிரம்ம சூத்திரத்திற்கு’ உரை எழுதினார்.
2. திருக்குருகைபிரான் பிள்ளையைக் கொண்டு, திருவாய் மொழிக்கு ‘ஆறாயிரப்படி’ உரை எழுதினார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஆளவந்தாரின் மாணவரான இவர், ‘பிரம்ம சூத்திரத்திற்கு’ உரை எழுதினார்
2. திருக்குருகைபிரான் பிள்ளையைக் கொண்டு, திருவாய் மொழிக்கு ‘ஆறாயிரப்படி’ உரை எழுதினார்.
171) மறைபொருளாகிய ‘திருவெட்டெழுத்தை’ அனைவரும் அறியும்படி கோபுரத்தின் மீதேறி நின்று உரக்க மொழிந்தவர் யார்?
A) இராமானுஜர்
B) ஆளவந்தார்
C) ஆச்சாரியார்கள்
D) தேசிகர்
விளக்கம்: இராமானுஜர் யமுனாச்சாரியார் மற்றும் திருக்கோட்டியூர் நம்பிகளிடமிருந்து மறை பொருளாகிய ‘திருவெட்டெழுத்தை’ கற்றார். இதனை அனைவரும் அறியும்படி கோபுரத்தின் மீதேறி நின்று உரக்க மொழிந்தார்.
172) தனது சமயத்தைப் பின்பற்றுபவர்கள் ‘புலால் உண்ணுதல் கூடாது’ என கடுமையாக நிபந்தனை விதித்தவர் யார்?
A) வித்யாபதி
B) பசவர்
C) ஞானேஷ்வர்
D) நாமதேவர்
விளக்கம்: பசவரின் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் ‘புலால் உண்ணுதல்’, ‘மது அருந்துதல்’ போன்றவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அப்பழக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கடுமையான நிபந்தனை விதித்தார்.
173) ‘சீதாபாஷ்யம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) இராமானுஜர்
D) தேசிகர்
விளக்கம்: இராமனுஜர் இயற்றிய நூல்கள்:
1. வேதாந்தசாரம்
2. வேதாந்ததீபம்
3. வேதாந்தசங்கிரகம்
4. ஸ்ரீபாடியம் (ஸ்ரீபாஷ்யம்)
5. கீதாபாடியம் (கீதாபாஷ்யம்)
6. கத்யதிரயம் சரணாகதி கத்தியம்
7. திருவரங்க கத்தியம்
8. வைகுண்ட கத்தியம்
இராமானுஜரின் காலத்திற்குப் பின் வைணவம் “வடகலை, தென்கலை” என இரு பிரிவாகப் பிரிந்தது.
174) திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
A) வீரமாமுனிவர்
B) தைரியநாதன்
C) ஜி.யூ.போப்
D) பெஸ்கி
விளக்கம்: ஜி.யூ.போப் என்ற மேலைநாட்டு அறிஞர் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்தார். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசத்திற்கும் உருகார்” என்ற முதுமொழி இந்நூலின் பெருமையை உணர்த்துகின்றது. இந்நூல், இறையாகிய பரம்பொருளை நாடுபவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளுதல், அருளைப் பெறுதல், பக்தி பெருக்கு இறைவனோடு இரண்டறக் கலத்தல் ஆகிய நிலைகளைக் கூறுகிறது.
175) ‘ஆன்மாவே பரம்பொருளின் சாரம்’ என்று கூறியவர் யார்?
A) ஆச்சாரியார்கள்
B) நாதமுனிகள்
C) இராமானுஜர்
D) தேசிகர்
விளக்கம்: ‘ஆன்மாவே பரம்பொருளின் சாரம்’ என்று கூறிய இராமானுஜர், அறிவாகவுள்ள ஆன்மா மாற்றமடைவதில்லை என்றார். இறைவனையே தஞ்சமடைந்து அவரை, முற்றிலும் சரணடைதலே விசிஷ்டாத்வைதம் (பிரபக்தி மார்க்கம்) என்று இராமானுஜர் கூறினார். இராமானுஜர் திருச்சியின் ஒருபகுதியான திருவரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோயிலில் இறுதிவரை இறைப்பணி செய்தார்.
176) ‘எல்லாரையும் சமமாகக் கருதுபவரே, உண்மையான பக்தர்’ எனக் கூறியவர் யார்?
A) கபீர்
B) இராமனந்தர்
C) இராமானுஜர்
D) குருநானக்
விளக்கம்: எல்லாரையும் சமமாகக் ‘கருதுபரே உண்மையான பக்தர்’ எனக் குருநானக் கூறுகிறார். மேலும், ஞானிகளின் கல்லறைகளுக்குச் செல்வதாலோ, கடுந்தவம் செய்வதாலே மட்டுமே இறையருள் பெற முடியாது. அறத்தூய்மையற்ற இவ்வுலகில் மனத்தூய்மையுடன் வாழ்பவரே இறையருள் பெற முடியும் எனக் கூறினார்.
177) ‘துவைதம்’ என்ற பக்தி கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) மத்துவர்
B) இராமானுஜர்
C) நிம்பார்க்கர்
D) ஜெயதீர்த்தர்
விளக்கம்: மத்துவர் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் கல்யாண்பூர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் மஹாவிஷ்ணு, இலட்சுமி அவதாரத்தைத் தம் பக்திக் கோட்பாட்டின் ஆதாரமாகக் கொண்டவர். இவர் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று தம்முடைய பக்திக் கோட்பாட்டைப் பரப்பியவர். இவர் அறிமுகப்படுத்திய பக்திக் கோட்பாடு ‘துவைதம்’ எனப்படுகிறது.
178) ‘துவைதம்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) ஒருமைக் கொள்கை
B) அமைதி
C) இருமைக் கொள்கை
D) ஞானஒளி
விளக்கம்: ‘துவைதம்’ என்ற சொல்லிற்கு ‘இருமைக் கொள்கை’ என்று பொருள். (பரம்பொருள் ஒன்றே. அவரை அடைய மக்களின் முயற்சிகள் பல்வேறானவை). ஆதிசங்கரரின் அத்வைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றிலிருந்து இக்கோட்பாடு மாறுபட்டது.
179) பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், யாரை சுண்ணாம்பு நீற்றறையில் வைத்துக் கொடுமைப்படுத்தினார்?
A) மருள்நீக்கியார்
B) சுந்தரர்
C) சம்பந்தர்
D) திருமூலர்
விளக்கம்: பல்லவ மன்னம் முதலாம் மகேந்திரவர்மன், திருநாவுக்கரசரைச் சுண்ணாம்பு நீற்றறையில் வைத்தும், விஷம் கொடுத்தும், கடலில் எறிந்தும் கொடுமைப்படுத்தினார். ஆனால் சிவபெருமான் அருளாள் அத்தனை கொடுமையிலிருந்தும் திருநாவுக்கரசர் உயிர் பிழைத்தார். பிறகு உண்மையறிந்த மன்னனே சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.
180) ஜெயதீத்தர் யாருடைய சீடர்?
A) மத்துவர்
B) நிம்பார்க்கர்
C) இராமானுஜர்
D) இராமானந்தர்
விளக்கம்: மத்துவருக்குப் பின் அவருடைய சிந்தனைகளைப் பரப்பியவர் அவரது சீடர் ‘ஜெயதீர்த்தர்’ ஆவார். இவர் “ஜெயதீர்த்தர் திகாச்சாரியா” என்றும் அழைக்கப்பட்டார்.
181) வேதாந்த சூத்திரங்களுக்குப் ‘பாஷ்யம்’ என்ற விளக்கவுரை எழுதியவர் யார்?
A) இராமனுஜர்
B) இராமானந்தர்
C) ஜெயதீர்த்தர்
D) மத்துவர்
விளக்கம்: ஜெயதீர்த்தர் வேதாந்த சூத்திரங்களுக்குப் ‘பாஷ்யம்’ என்ற விளக்கவுரையை எழுதினார். அத்வைதத்தை உருவாக்கிய ஆதிசங்கரருக்கு ‘வசஸ்பதி மிஸ்ரா (அத்தைவதப் பரப்பாளர்) எவ்வாறு முக்கியமோ அதேபோல் மத்துவருக்கு ஜெயதீர்;த்தர் முக்கியமானவர் என்று பக்தி இயக்கத்தவர்கள் கூறுகின்றனர்.
182) திருமழிசையாழ்வார் யாரிடம் உபதேசம் பெற்றார்?
A) பொய்கையாழ்வார்
B) பெரியாழ்வார்
C) பேயாழ்வார்
D) பூதத்தாழ்வார்
விளக்கம்: பேயாழ்வாரிடம் உபதேசம் பெற்ற திருமழிசையாழ்வார், வளர்ப்புப் பெற்றோருக்கு பிறந்த ‘கணிக்கண்ணன்’ என்பவரை தம் சீடராகக் கொண்டு திருவெஃகா என்ற இடத்திலுள்ள திருமாலைத் தரிசித்தார். அதன் பிறகு, கும்பகோணம் சென்று அங்குள்ள திருமாலையும் தரிசித்தார்.
183) ‘இந்துவும் முஸ்லீமும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் போன்றவர்கள்’ என்றவர் யார்?
A) இராமானந்தர்
B) கபீர்
C) நாமதேவர்
D) பசவர்
விளக்கம்: ‘இந்துவும் முஸ்லீமும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் போன்றவர்கள் என்றவர் கபீர். மனத்தூய்மையில்லாமல் கங்கையில் நீராடுவதாலோ, கல்லாலான உருவங்களை வணங்குவதாலோ, நோன்பிருந்து மெக்கா செல்வதாலோ எந்தப் பயனுமில்லை என்று கபீர் போதித்தார்.
184) இராமானந்தர் தமது கொள்கைகளை எந்த மொழியில் பரப்பினார்?
A) தமிழ்
B) தெலுங்கு
C) இந்தி
D) சமஸ்கிருதம்
விளக்கம்: இராமானந்தர், இராமர் – சீதை வழிபாட்டையும், தமது கொள்கைகயையும் இந்தி மொழியில் பரப்பினார். இவர் சாதி முறையையும் குலப் பிரிவுகளில் வேறுபாடுகளையும் வெறுத்தார். அன்பான உள்ளமே இறைவனின் இருப்பிடம் என்றும், கடவுளுக்கு முன் ஆண், பெண், உயரந்தோர், தாழ்ந்தோர் என வேறுபாடு கிடையாது எனவும் கூறினார்.
185) இராமானந்தரின் சீடர்கள் எத்தனை பேர்?
A) 9
B) 10
C) 11
D) 12
விளக்கம்: அன்பான உள்ளம் கொண்ட எவரிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்று கூறிய இவர் பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பன்னிருவரைச் சீடராக்கிக் கொண்டார். இராமானந்தரின் சீடர்கள்:
1. கபீர்
2. ராய்சதாசர்
3. சேனா
4. சாதனா
5. தன்னா
6. நரஹரி
7. பிபர்
8. ஆனந்தனந்தர்
9. சுர் சுரானந்தர்
10. சூர் ஆனந்த்
11. சர்கரி
12. பத்யாவதி
186) இராமானந்தரின் சீடர்களில் யார் செருப்பு தைக்கும் தொழிலாளி?
A) கபீர்
B) ராய்தாசர்
C) கேனா
D) சாதனா
விளக்கம்: கபீர் – முஸ்லீம் நெசவாளி
ராய்தார் – செருப்பு தைக்கும் தொழிலாளி
சேனா – முடிதிருத்தும் தொழிலாளி
சாதனா – மாமிசம் வெட்டுபவர்.
187) இராமானந்தரின் சீடர்களில் யார் இராஜபுத்திர இளவரசர்?
A) கபீர்
B) தன்னா
C) நரஹரி
D) ஃபிபர்
விளக்கம்: கபீர் – முஸ்லீம் நெசவாளி
தன்னா – ஜாட் இனக் குடியானவர்
நரஹரி – பொற்கொல்லர்
ஃபிபர் – இராஜபுத்திர இளரவசர்.
188) பொருத்துக.
அ. இராமானுஜர் – 1. விசிஷ்டாத்வைத தத்துவம்
ஆ. நிம்பாரக்கர் – 2. பேதாபேதம் கொள்கை
இ. மத்துவர் – 3. துவைத கோட்பாடு
ஈ. ஆதிசங்கரர் – 4. அத்வைத கோட்பாடு
A) 1, 2, 3, 4
B) 3, 2, 1, 4
C) 4, 1, 3, 2
D) 2, 4, 1, 3
விளக்கம்: இராமானுஜர் – விசிஷ்டாத்வைத தத்துவம்
நிம்பார்க்கர் – பேதாபேதம் கொள்கை
மத்துவர் – துவைத கோட்பாடு
ஆதிசங்கரர் – அத்வைத கோட்பாடு
189) அக்பர் தம்மைப் புகழ்ந்து பாடுமாறு கேட்டுக் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடிய வாயால் யாரையும் புகழ்ந்து பாடமாட்டேன் என்று கூறியவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: முகலாய மாமன்னர் அக்பர், தம்மைப் புகழ்ந்து பாடுமாறு சூர்தாசரைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடிய வாயால் யாரையும் புகழ்ந்து பாடமாட்டேன் என்று பணிவுடன் சூர்தாசர் மறுத்தார்.
190) யாருடைய பக்திக் கோட்பாடு ‘மகாராஷ்டிர தர்மம்’ எனப்பட்டது?
A) வித்யாபதி
B) ஞானேஷ்வர்
C) பசவர்
D) நாமதேவர்
விளக்கம்: மகாராஷ்டிராவல் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர் ‘ஞானேஷ்வர்’ ஆவார். இவரது பக்திக் கோட்பாடுகள் “மகாராஷ்டிர தர்மம்” எனப்பட்டது. இவர் மகாராஷ்டிரம் முழுவதும் சென்று தமது பக்திக் கோட்பாடுகளைப் பரப்பினார்.
191) தென்னிந்தியாவையும், வடஇந்தியாவையும் தமது பக்திநெறியின் மூலம் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் யார்?
A) மத்துவர்
B) நிம்பார்க்கர்
C) இராமானுஜர்
D) இராமானந்தர்
விளக்கம்: தென்னிந்தியாவையும் வடஇந்தியாவையும் தமது பக்திநெறியின் மூலம் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். அலகாபாத் என்ற இடத்தில் பிறந்த இராமானந்தர், இராமானுஜரின் விசிஷ்டாத்வைத கோட்பாட்டை நன்று கற்று அவரையே தமது குருவாகக் கொண்டவர்.
192) ‘புஷ்டிமார்க்கம்’ என்ற ஆன்மீகக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
A) கபீர்
B) இராமனந்தர்
C) இராமானுஜர்
D) வல்லபாச்சாரியார்
விளக்கம்: ‘புஷ்டிமார்க்கம்’ என்ற ஆன்மீகக் கோட்பாட்டை உருவாக்கியவர் வல்லபாச்சாரியார் ஆவார். இவருடைய பக்தி மார்க்கம், ‘சுத்த அத்வைதம்’ எனப்படுகிறது. இவர், முக்தியடைய கிருஷ்ணர் வழிபாட்டோடு கூடிய உலகியல் வாழ்வு அவசியம் என்றார்.
193) சடகோபன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்;?
A) பெரியாழ்வார்
B) நம்மாழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) பேயாழ்வார்
விளக்கம்: நம்மாழ்வாரின் இயற்பெயர்கள்:
1. சடகோபன்
2. குடிபெயர் மாறன் சிறப்புப்பெயர்கள்:
1. குருகூர் நம்பி
2. வகுளாபரணன்
3. பராங்குசன்
4. காரிமாறன்
5. வழுதிவளநாடன்.
194) தமிழகப் பண்பாட்டிற்கு ஆழ்வார்களின் கொடை என்ன?
A) வைணவ சமயத்தைத் தமிழ்மயமாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது.
B) ஆழ்வார்களின் ஆன்மிகக் கோட்பாடுகள், தத்துவங்கள் தமிழகத்தில் சங்ககாலத் திருமால் வழிபாட்டு முறையைச் சில மாற்றங்களுடன் பரப்பி, வைணவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
C) தமிழகத்தில் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஆன்மீகம், இடைக்காலத்தில் வளர ஆழ்வார்களே வித்திட்டனர்.
D) அனைத்தும்
விளக்கம்: வைணவ சமயத்தைத் தமிழ்மயமாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு மகத்தானது. ஆழ்வார்களின் ஆன்மிகக் கோட்பாடுகள் தத்துவங்கள் தமிழகத்தில் சங்ககாலத் திருமால் வழிபாட்டு முறையைச் சில மாற்றங்களுடன் பரப்பி, வைணவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. தமிழகத்தில் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஆன்மிகம், இடைக்காலத்தில் வளர ஆழ்வார்களே வித்திட்டனர்.
195) ‘நதியின் சங்கமத்தலைவன்’ என்று போற்றப்படும் கடவுள் யார்?
A) சிவபெருமான்
B) விஷ்ணு
C) பிரம்மா
D) இந்திரன்
விளக்கம்: ‘நதியின் சங்மத்தலைவன்’ என்று சிவபெருமானைப் ‘பசவர்’ போற்றுகிறார். அனைத்து பிரிவினரும் இவரது சமயப் பிரிவில் இணைந்தனர். தமது போதனைகளைக் கன்னட மொழியில் பரப்பினர்.
196) ‘விநோபா’ என்ற பக்திக் கோட்பாட்டைப் பின்பற்றியவர் யார்?
A) வித்யாபதி
B) பசவர்
C) நாமதேவர்
D) கபீர்
விளக்கம்: மகாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பிறந்த நாமதேவர் ‘விதோபா’ என்ற பக்திக் கோட்பாட்டைப் பின்பற்றினார். பல்வேறு இனத்தவர்களைத் தமது சீடராக்கிக் கொண்டார்.
197) யாருடைய கருத்துகள் ‘மகாராஷ்டி தங்கம்’ எனப்பட்டது?
A) வித்யாபதி
B) பசவர்
C) நாமதேவர்
D) கபீர்
விளக்கம்: நாமதேவரின் கருத்துகள் ‘மகாராஷ்டிர தங்கம்’ எனப்பட்டது. சாதியை, உருவ வழிபாட்டை, பொருளற்ற சடங்குகளை வன்மையாக எதிர்த்தார். உண்மையான பக்தியும், கடவுள் வழிபாடும், இவரது முக்கிய கொள்கையாகும்.
198) ‘இராமனும் இரஹீம் ஒன்றே’ என்று மக்களுக்குப் போதித்தவர் யார்?
A) இராமானந்தர்
B) கபீர்
C) நாமதேவர்
D) பசவர்
விளக்கம்: இராமானந்தரின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவர் கபீர், தொடக்கம் முதலே இந்து முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தவர். கடவுள் ஒருவரே என்று போதித்த இவர் “இராமனும் இரஹீமும் ஒன்றே, கிருஷ்ணரும் கரீமும் ஒன்றே, அல்லாவும் ஈஸ்வரனும் ஒருவரே” என்று மக்களுக்குப் போதித்தார்.
199) ‘அம்ருதானுபவ’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) வித்யாபதி
B) ஞானேஷ்வர்
C) பசவர்
D) நாமதேவர்
விளக்கம்: ஞானேஷ்வரர், பகவத் கீதையின் விளக்கவுரையாக ‘ஞானேஷ்வரி’ என்ற நூலை எழுதினார். பின் அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் ‘அம்ருதானுபவ’ என்ற நூலையும் எழுதினார்.
200) ‘பாவை நோன்பு’ எந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது?
A) சித்திரை
B) தை
C) மார்கழி
D) ஆடி
விளக்கம்: பண்டைய தமிழகத்தில் திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு மேற்கொள்வர். இதனை அடிப்படையாகக் கொண்டு, திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். மார்கழி மாதத்தில் இப்பாசுரங்கள் வைணவத் திருத்தலங்களில் இன்றும் பாடப்படுகின்றன. இவரது பாடல்கள் நாயக-நாயகி பாவத்தை உணர்த்துகின்றன.
201) குருநானக் எப்போது பிறந்தார்?
A) கி.பி.1479
B) கி.பி.1489
C) கி.பி.1459
D) கி.பி.1469
விளக்கம்: பஞ்சாபில் உள்ள லாகூர் மாவட்டத்தில் ‘தால்வண்டி’ என்ற இடத்தில் கி.பி.(பொ.ஆ) 1469-ஆம் ஆண்டில் பிறந்த குருநானக் இளம்வயதிலேயே சமயநெறியில் நாட்டம் கொண்டவர். இவர், கடவுள் ஒருவரே என்று கூறினார்.
202) யாருடைய படைப்புகளில் ‘மகன் தன் பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமையின்’ முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: துளசிதாசரின் படைப்புகளில் ‘மகள் தம் பெற்றோர்க்கு ஆற்ற வேண்டிய கடமை, ஒரு மாணவன் தம் குருவிற்கு புரிய வேண்டிய கடமை, ஒரு அரசன் தம் குடிமக்களுக்கு புரிய வேண்டிய கடமை’ போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.
203) குருநானக் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இந்து புராணங்களையும், இஸ்லாமியரின் புனித நூலான குரானில் உள்ள கருத்துகளையும் படித்த இவருக்கு, இந்து-முஸ்லீம் வேற்றுமை பயனற்றது எனத் தோன்றியது.
2. உருவமற்ற ஒரே கடவுளை வணங்குமாறும் தேவையற்ற சமயச் சடங்குகளைத் தவிர்க்குமாறும் குருநானக் போதித்தார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்து புராணங்களையும், இஸ்லாமியரின் புனித நூலான குரானில் உள்ள கருத்துகளையும் படித்த இவருக்கு, இந்து-முஸ்லீம் வேற்றுமை பயனற்றது எனத் தோன்றியது.
2. உருவமற்ற ஒரே கடவுளை வணங்குமாறும் தேவையற்ற சமயச் சடங்குகளைத் தவிர்க்குமாறும் குருநானக் போதித்தார்.
204) மைதிலி மொழியில் ‘கோரக்ச விஜயா’ என்ற நாடக நூலை எழுதியவர் யார்?
A) வித்யாபதி
B) ஞானேஷ்வர்
C) பசவர்
D) நாமதேவர்
விளக்கம்: வித்யாபதி தம் பக்திப் பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் வங்காளப் பகுதிகளில், சிவ வழிபாட்டைப் பரப்பியவர். ‘புருஷபக்சா’ என்ற நீதிபோதனைக் கதைகளை எழுதிய இவர், மைதிலி மொழியில் ‘கோரக்ச விஜயா’ என்ற நாடக நூலையும் எழுதினார்.
205) ‘சாகித்ய ரத்னா’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: சூர்தாசர் எழுதிய நூல்கள்:
1. சூர் சாகர்
2. சாகித்ய ரத்னா.
இவர் பாடிய கிருஷ்ண பக்திப் பாடல்கள், வட இந்தியாவின் பக்தி மார்க்கத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
206) ‘ஆதிகிரந்தம்’- யாருடைய போதனைகள் அடங்கிய தொகுப்பு?
A) கபீர்
B) இராமனந்தர்
C) இராமானுஜர்
D) குருநானக்
விளக்கம்: குருநானக்-ன் போதனைகள், அடங்கிய தொகுப்பு ‘ஆதிகிரந்தம்’ ஆகும். இதுவே சீக்கிய சமயத்தின் புனித நூலாகும். சீக்கிய சமயத்தின் முதல் முழுவான இவரைப் பின்பற்றி, ஒன்பது சீக்கிய சமயகுருமார்கள் இவரது போதனைகளை உலகறியச் செய்தனர்.
207) யாருடைய பாடல் தொகுப்பு “கீர்த்தனை” எனப்பட்டது?
A) துக்காராம்
B) ஏக்நாதர்
C) குரு ராம்தாசர்
D) மீராபாய்
விளக்கம்: ‘துக்காராம்’ –ன் பாடல் தொகுப்பு ‘கீர்த்தனை’ எனப்பட்டது. இசைப் பாடலுடன் கூடிய பக்தியின் மூலம் மக்களை ஒருங்கிணைக்க முயன்றார். வேத வேள்விகள், சடங்குகள், புனிதப் பயணங்கள், உருவ வழிபாடு போன்றவற்றை நிராகரித்தார். கடவுள்பற்று, மன்னிக்கும் பக்குவப்பட்ட மனநிலை, மனஅமைதி ஆகியவற்றை போதித்தார். சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகளையும் பரப்பினார்.
208) வல்லபாச்சாரியார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
A) வல்லபாச்சாரியார், வாராணாசிக்குச் சென்று பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, கிருஷ்ணர் வழிபாட்டைப் பரப்பினார்
B) மக்களிடையே நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றப் பாடுபட்டார்.
C) முக்தியடைய கிருஷ்ணர் வழிபாட்டோடு கூடிய உலகியல் வாழ்வு அவசியம் என்றார்.
D) அனைத்தும்
விளக்கம்: வல்லபாச்சாரியார், வாரணாசிக்குச் சென்று பல ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, கிருஷ்ணர் வழிபாட்டைப் பரப்பினார். மக்களிடையே நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றப் பாடுபட்டார். முக்தியடைய கிருஷ்ணர் வழிபாட்டோடு கூடிய உலகியல் வாழ்வு அவசியம் என்றார்.
209) பசவர் எங்கு தோன்றினார்?
A) கர்நாடகா
B) ஆந்திரா
C) தமிழகம்
D) கேரளா
விளக்கம்: கர்நாடகாவில் தோன்றிய பசவர், சாளுக்கிய மன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். ‘சிவபெருமானே முழுமுதற் கடவுள்’ என்பதை இவரது பக்திநெறி வலியுறுத்தியது. சாதிப் பாகுபாடுகள், சமயச் சடங்குகள், உருவ வழிபாடு ஆகியவற்றைக் களைய பாடுபட்டார். இதுவே மோட்சம் அடையும் வழி என்று கூறினார்.
210) வல்லபாச்சாரியார், வடமொழி மற்றும் எந்த மொழியில் நூல்களை எழுதினார்?
A) சமஸ்கிருதம்
B) பாலி
C) ப்ரிஷ்
D) துளு
விளக்கம்: வல்லபாச்சாரியார், வடமொழி மற்றும் ப்ரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவர் உருவாக்கிய கிருஷ்ணப் பக்திப் பாடல்கள் இன்றும் இராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் பாடப்படுகின்றன.
211) ‘சுபோதினி’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) சைதன்யர்
B) வல்லபாச்சாரியார்
C) குருநானக்
D) கபீர்
விளக்கம்: வல்லபாச்சாரியார் எழுதிய நூல்கள்:
1. சுபோதினி
2. சித்தாந்த ரகசியா
உணர்ச்சி மிகுந்த ஆழ்ந்த இறை பக்தியை இவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
212) ‘சைதன்யர்’தமது எத்தனையாவது வயதில் துறவியானார்?
A) 25
B) 28
C) 30
D) 31
விளக்கம்: வங்காளத்தில் பிறந்த ‘சைதன்யர்’ தம் 25-ஆம் வயதிலேயே துறவியானார். இவர் ‘ஸ்ரீசைதன்ய மகாபிரபு’ என்றும் அழைக்கப்பட்டார். சிறந்த மொழியறிவும், இலக்கிய அறிவையும் பெற்றவர்.
213) ‘சைதன்யர்’ பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. கிருஷ்ணர் மீதான பக்தியே முக்திக்கு வழி என்று போதித்தவர் ‘சைதன்யர்.
2. அன்பு, பக்தி ஆகிய நெறிகள் மூலமே பரம்பொருளான கிருஷ்ணரை அடைய முடியும் என்றார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. கிருஷ்ணர் மீதான பக்தியே முக்திக்கு வழி என்று போதித்தவர் ‘சைதன்யர்.
2. அன்பு, பக்தி ஆகிய நெறிகள் மூலமே பரம்பொருளான கிருஷ்ணரை அடைய முடியும் என்றார்.
214) ‘அசிந்திய பேதாபேதம்’ என்பது யாருடைய தத்துவம்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) மீராபாய்
D) குருராம்தாசர்
விளக்கம்: சமூகத்தில் நிலவிய சாதி, சமய வேறுபாடுகளை எதிர்த்த சைதன்யர், மனிதரில் ஏற்றத்தாழ்வு கிடையாது. கிருஷ்ணரின் முன் அனைவரும் சமம் என்று கூறினார். கிருஷ்ண பக்தி தொடர்பான இவரது தத்துவம் ‘அசிந்திய பேதாபேதம்’ எனப்படுகிறது.
215) துக்காராம் எந்த மொழியில் பாடிய பாடல் ‘அபங்கம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது?
A) இந்தி
B) மராத்தி
C) சமஸ்கிருதம்
D) பாலி
விளக்கம்: துக்காராம் தம் ஆன்மிகக் கோட்பாட்டின் மையமாக ‘பந்தர்பூர்’ என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இவர் மராத்தி மொழியில் பாடிய பாடல் ‘அபங்கம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
216) பொருத்துக.
அ. மகாராஷ்டிர தர்மம் – 1. நாமதேவர்
ஆ. மகாராஷ்டிர தங்கம் – 2. ஞானேஷ்வர்
இ. தோஹாக்கள் – 3. குருநானக்
ஈ. லங்கர் – 4. கபீர்
A) 4, 3, 2, 1
B) 1, 4, 3, 2
C) 2, 1, 4, 3
D) 2, 1, 3, 4
விளக்கம்: மகாராஷ்டிர தர்மம் – ஞானேஷ்வரின் பக்திக் கோட்பாடுகள்
மகாராஷ்டிர தங்கம் – நாமதேவரின் கருத்துகள்
தோஹாக்கள் – கபீருடைய பாடல் தொகுப்பு
லங்கர் – குருநானக்-ன் சமபந்தி உணவுக்கூடம்
217) ‘ராமசரித மானஸ்’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: கோஸ்சுவாமி துளசிதாஸ் என்றழைக்கப்பட்ட துளசிதாசர் வைணவ சமயத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். வட இந்தியாவில் இராமவழிபாடு முறையைப் பரப்பியதுடன் இராமாயணத்தை ‘ராமசரித மானஸ்’ என்ற பெயரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்தார்.
218) ‘கீதாவளி’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: துளசிதாசரின் நூல்கள்:
1. வினயபத்திரிக்கா
2. கீதாவளி
3. தோகாவளி
4. பார்வதி மங்கள்
5. ஜானகி மங்கள்
6. ராமசரித மானஸ்
219) குருநானக் யாரைத் தமது, குருவாக ஏற்றுக்கொண்டார்?
A) இராமானந்தர்
B) கபீர்
C) நாமதேவர்
D) பசவர்
விளக்கம்: குருநானக் கபீரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் ‘கடவுள் ஒருவரே’ என்று கூறினார். டெல்லி சுல்தானியர் காலத்திலிருந்தே இந்து-முஸ்லீம் சமய வெறுப்பைத் தணிக்கும் பொருட்டு தம் பக்திக் கொள்கையை வகுத்துக் கொண்டார். அதன் அடிப்படையில், பிற்காலத்தில் அவர் சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தார்.
220) ‘ஆக்ராவின் பார்வையற்ற கவிஞர்’ என அழைக்கப்பட்டவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: கிருஷ்ணர், ராதை வழிபாட்டில் ஈடுபட்டுப் பக்தி இயக்கத்தைப் பரப்பியர் ‘சூர்தாசர்’. கிருஷ்ணரை வழிபடுவதே ‘முக்திக்கு வழி’ என்று கருதினார். இவர் “ஆக்ராவின் பார்வையற்ற கவிஞர்” எனப்பட்டார்.
221) யாருடைய கொள்கைகள் ‘பேதாபேதம்’ என அழைக்கப்படுகின்றன?
A) மத்துவர்
B) நிம்பார்க்கர்
C) ஜெயதீர்த்தர்
D) இராமானுஜர்
விளக்கம்: இராமானுஜருக்குப் பிறகு புகழ்பெற்ற பக்தி இயக்க ஞானி நிம்பார்க்கர். இவர் வடஇந்தியாவில் தன் பக்திக் கருத்துக்களைப் பரப்பினார். மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் இராதை ஆகியோரை பரம்பொருள் என்றார். இராதாகிருஷ்ணரை அடைய ஆழ்ந்த பக்தி அவசியம் என்றார். உத்திரப்பிரதேசத்தில் இவருடைய இராதாகிருஷ்ண வழிபாட்டைப் பலர் பின்பற்றினர். இவருடைய கொள்கை ‘பேதாபேதம்’ என்று அழைக்கப்படுகிறது.
222) லாங்கர்’ என்ற உணவுக் கூடத்தை நிறுவி, சமபந்தி உணவருந்தும் முறையைத் தொடங்கி வைத்தவர் யார்?
A) கபீர்
B) இராமனந்தர்
C) இராமானுஜர்
D) குருநானக்
விளக்கம்: ‘லாங்கர்’ என்ற உணவுக் கூடத்தை நிறுவி, சமபந்தி உணவருந்தும் முறையைத் தொடங்கி வைத்தவர் ‘குருநானக். அறம் நிறைந்த வாழ்வைப் பின்பற்றுமாறும், பிற கோட்பாடுகளின் மீது சகிப்புத்தன்மை காட்டுமாறும் தமது போதனைகளில் கூறினார்.
223) ‘ராதா வல்லபி’ என்ற பக்திப் பிரிவைத் தோற்றுவித்தவர் யார்?
A) சைதன்யர்
B) துளசிதாசர்
C) சூர்தாசர்
D) குரு ராம்தாசர்
விளக்கம்: அக்பரின் அவையில் கிருஷ்ண பக்திப் பாடலைப் பாடிய சூர்தாசர் மதுரா, கௌஹா ஆகிய நகரங்களுக்குச் சென்று கிருஷ்ண பக்தியைப் பரப்பினார். கிருஷ்ணர் மீதான ராதையின் காதலை விளக்கிக் கூறும் ‘ராதா வல்லபி’ என்ற பக்திப் பிரிவைத் தோற்றுவித்தார்.
224) மீராபாய் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க.
A) இராஜபுத்திர அரச குடும்பத்தை சார்ந்த இவர், வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார்.
B) கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப்பருவம் முதலே ஏற்பட்டது.
C) பிறப்பு, இறப்பு என்னும சுழற்சியின்றி விடுபட்டுப் பேரின்ப நிலையை அடைய, கிருஷ்ண பக்தி அவசியம் என்றார்
D) அனைத்தும் சரி
விளக்கம்: இராஜபுத்திர அரச குடும்பத்தை சார்ந்து இவர், வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப்பருவம் முதலே ஏற்பட்டது. பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டுப் பேரின்ப நிலையை அடைய கிருஷ்ண பக்தி அவசியம் என்றார்.
225) தமது கருத்துகளை வட்டார மொழியான எந்த மொழியில் ‘மீராபாய்’ பரப்பினார்?
A) ப்ரிஜ்
B) துளு
C) பாலி
D) உருது
விளக்கம்: மீராபாய் தமது கருத்துக்களை வட்டார மொழியான ‘ப்ரிஜ்’ மொழியில் பரப்பினார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை, பக்திநெறியை சுவையான பாடல்கள் மூலமாகப் பரப்பினார். எளிய பக்தியும் நம்பிக்கையுமே வீடுபேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவரில்லை. உயர்வுக்குக் காரணம் அவரவரது செயல்களே என்று கூறினார்.
226) சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குருவாக விளங்கியவர் யார்?
A) குரு ராம்தாசர்
B) மீராபாய்
C) சூர்தாசர்
D) துளசிதாசர்
விளக்கம்: மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குருவாக விளங்கினார். சமூக சமத்துவத்திற்கு இராம வழிபாடு, அனுமன் வழிபாடு ஆகியவற்றைப் பரப்புவதன் மூலம் உதவ முடியும் என்றார்.
227) ‘தசபோதா’ என்ற நூலை எழுதியவர் யார்?
A) குரு ராம்தாசர்
B) மீராபாய்
C) சூர்தாசர்
D) துளசிதாசர்
விளக்கம்: சாதாரண மக்களும் வாழ்க்கைத் தத்துவத்தை அறியும் வகையில் ‘தசபோதா’ என்ற நூலை எழுதினார். ‘பகவான்ராம்’ என்பவரைத் தம் குருவாகக் கொண்டு மகாராஷ்டிரம் முழுவதும் ராம வழிபாட்டையும், சமத்துவக் கோட்பாடுகளையும் பரப்பினார்.
228) ‘சஜ்ஜன்காட்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) துறவிகளின் கோட்டை
B) அரசனின் கோட்டை
C) வெற்றிக் கோட்டை
D) எதிரியின் கோட்டை
விளக்கம்: குரு ராம்தாஸ் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி உருவாக்கிய பகுதி சஜ்ஜன்காட்’ என்பதாகும். இச்சொல்லிலிற்குத் ‘துறவிகளின் கோட்டை’ என்று பொருள்.
229) கூற்றுகளை ஆராய்க.
1. ‘ஏக்நாதர்’ மகாராஷ்டிர மாநிலத்தில் வைத்தான் என்னும் ஊரில் பிறந்தார்.
2. சிறுவயதிலேயே கிருஷ்ணபக்தி மிகுந்து காணப்பட்டார். அனைத்து பிரிவினரையும் நேசித்தார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ‘ஏக்நாதர்’ மகாராஷ்டிர மாநிலத்தில் வைத்தான் என்னும் ஊரில் பிறந்தார்.
2. சிறுவயதிலேயே கிருஷ்ணபக்தி மிகுந்து காணப்பட்டார். அனைத்து பிரிவினரையும் நேசித்தார்
230) விஷ்ணுவை ‘விட்டலா’ என்ற பெயரில் வழிபட்டுத் தம் கொள்கைகளை வடிவமைத்தவர் யார்?
A) துக்காராம்
B) ஏக்நாதர்
C) குருராம்தாசர்
D) மீராபாய்
விளக்கம்: மகாராஷ்டிராவில் பிறந்த துக்காராம் சிவாஜி, ஏக்நாத் ஆகியோரின் சமகாலத்தவர். பக்தியின் மூலமாகத் தம் போதனைகளைப் பரப்பினார். விஷ்ணுவை ‘விட்டலா’ என்ற பெயரில் வழிபட்டுத் தம் கொள்கைகளை வடிவமைத்தார்.
231) பொருத்துக.
அ. விதோபா – 1. வல்லபாச்சாரியார்
ஆ. புஷ்டிமார்க்கம் – 2. சைதன்யர்
இ. அசிந்திய பேதாபேதம் – 3. நாமதேவர்
A) 3, 2, 1
B) 3, 1, 2
C) 2, 3, 1
D) 1, 3, 2
விளக்கம்: விதோபா – நாமதேவர்
புஷ்டிமார்க்கம் – வல்லபாச்சாரியார்
அசிந்திய பேதாபேதம் – சைதன்யர்
232) விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்குச் சென்று, கிருஷ்ண வழிபாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தவர் யார்?
A) கபீர்
B) இராமனந்தர்
C) இராமானுஜர்
D) வல்லபாச்சாரியார்
விளக்கம்: வல்லபாச்சாரியார், காசியில் பிறந்து தென்னிந்தியாவிற்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தார். விஜயநரகப் பேரரசின் தலைசிறந்த மன்னரான கிருஷ்ணதேவராயரின் அவைக்குச் சென்று, கிருஷ்ண வழிபாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
233) ‘சூபியிசம்’ என்பது எந்த மதத்தின் பக்திப் பிரிவு?
A) இந்து
B) முஸ்லீம்
C) கிறித்துவம்
D) சீக்கியம்
விளக்கம்: சூபிசம் – என்பது அன்பு, ஆழ்ந்த அறிவு, அறநெறி வழிபாட்டை மட்டுமே கொண்ட இஸ்லாமின் பக்திப் பிரிவு ஆகும். இஸ்லாமிய மதத்தை அடிப்படையாகக் கொண்டு பக்திச் சீர்த்திருத்தங்களைப் பரப்பியது. இஸ்லாமிய சமயநூல் கூறும் சமயச் சடங்குகளைப் புறக்கணித்து, சாதி, சமய வேறுபாடுகளை எதிர்த்தது. அசைவ உணவு, உயிர்களைப் பலியிடுதல் போன்றவற்றையும் புறக்கணித்தது. “இறைவனை மனக் கண்ணால் அழகு ஆராதனை வடிவமாகக் காண்பதே சூபியிசம்” என்று “கே.டி.பார்சவா” குறிப்பிடுகிறார்.
234) சூபியிசத்தின் தோற்றம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க
A) சூஃபி என்ற சொல் சஃபா, என்ற சொல்லிலிருந்து வந்தது. இதற்குத் ‘தூய’ என்பது பொருளாகும்.
B) ஒழுக்கமான சமய நெறிகளுடைய வாழ்க்கையை வலியுறுத்தியது.
C) இஸ்லாமிய சமயத்தில் தாராள ஆன்மிகத்தை மையப்படுத்திய கோட்பாட்டைக் கூறுகிறது. இதன் மூலம் இந்து, முஸ்லீம் ஒற்றுமையைச் சூபிக்கள் நிலைநாட்டினர்.
D) அனைத்தும்
விளக்கம்: சூஃபி என்ற சொல் சஃபா, என்ற சொல்லிலிருந்து வந்தது. இதற்குத் ‘தூய’ என்பது பொருளாகும். ஒழுக்கமான சமய நெறிகளுடைய வாழ்க்கையை வலியுறுத்தியது. இஸ்லாமிய சமயத்தில் தாராள ஆன்மிகத்தை மையப்படுத்திய கோட்பாட்டைக் கூறுகிறது. இதன் மூலம் இந்து, முஸ்லீம் ஒற்றுமையைச் சூபிக்கள் நிலைநாட்டினர்.
235) சூபிசத்தின் பிரிவுகள் எத்தனை?
A) 5
B) 4
C) 3
D) 6
விளக்கம்: சூபிசத்தில் பக்தியின் அடிப்படையில் 5 பிரிவுகள் உள்ளன. அவை, 1. சிஸ்தி
2. சுகலார்தி
3. குவாதிரி
4. நக்சாபந்தி
5. ஷாதாரி.
இப்பிரிவுகள் இந்தியாவில் இந்து மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டு இணைப்பிற்குப் பாலமாகச் செயல்பட்டன.
236) ஷேக்ஸ்பரீத் என்பவர் எந்த மதப் பிரிவின் ஞானி ஆவார்?
A) சீக்கியம்
B) பௌத்தம்
C) சமணம்
D) சூபியிசம்
விளக்கம்: குவாஜா மெய்னுதீன் சிஸ்தி, ஷேக்ஃபரீத், ஷேக் நிசாமுதீன் அவுலியா ஆகியோர் புகழ்பெற்ற சூபி ஞானிகள் ஆவர். சூபியிசம் என்பது இஸ்லாமிய மதப்பிரிவாகும்.
237) சூபிஸிசத்தின் முதன்மையான கொள்கைகளில் சரியானதைத் தேர்வு செய்க.
A) கடவுள் ஒருவரே
B) உலகம் இறைவனின் பிரதிபலிப்பு
C) மனிதர்களுக்குச் சேவை செய்வதே உயரிய ஆன்மீகம்
D) அனைத்தும்
விளக்கம்: கடவுள் ஒருவரே. உலகம் இறைவனின் பிரதிபலிப்பு. மனிதர்களுக்குச் சேவை செய்வதே உயரிய ஆன்மீகம்.
238) சூபியிசத்தின் முதன்மையான கொள்கைகளில் சரியானதைத் தேர்வு செய்க
A) அன்பே கடவுள், அச்சம் தவிர்க்கும் சொற்களைவிட அச்சம் தவிர்க்கும் செயல்களே முக்கியம்.
B) இறைவனை அடைய மனிதன் உலகப் பற்று, பாசங்களிலிருந்து விடுபட வேண்டும்.
C) அனைவரும் அன்பே உருவான இறைவனின் குழந்தைகள் என்ற கருத்தை ஏற்க வேண்டும்
D) அனைத்தும்
விளக்கம்: அன்பே கடவுள், அச்சம் தவிர்க்கும் சொற்களைவிட அச்சம் தவிர்க்கும் செயல்களே முக்கியம். இறைவனை அடைய மனிதன் உலகப்பற்று, பாசங்களிலிருந்து விடுபட வேண்டும். அனைவருமே அன்பே உருவான இறைவனின் குழந்தைகள் என்ற கருத்தை ஏற்க வேண்டும்.
239) சூபியிசத்தின் தாக்கங்களில் சரியானதைத் தேர்வு செய்க
A) சமூகம் மற்றும் சமயத்தில் தாராளமயக் கருத்துகள் உருவாக வழிவகுத்தது.
B) மனிதநேயத்துடன் கூடிய தேசப்பற்று, சமயப்பற்று போன்றவற்றை, மக்களிடம் வளர்த்தது
C) சூபியிசத்தைப் பின்பற்றியோர், ஆதரவற்றோர், விதவைகள், ஏழைகள் போன்றோருக்கு சேவை செய்தனர். அதனால், ஆன்மிக உணர்வையும் மக்களிடத்தில் கொண்டிருந்தனர்.
D) அனைத்தும் சரி
விளக்கம்: சமூகம் மற்றும் சமயத்தில் தாராளமயக் கருத்துகள் உருவாக வழிவகுத்தது. மனிதநேயத்துடன் கூடிய தேசப்பற்று, சமயப்பற்று போன்றவற்றை, மக்களிடம் வளர்த்தது. சூபியிசத்தைப் பின்பற்றியோர், ஆதரவற்றோர், விதவைகள், ஏழைகள் போன்றோருக்கு சேவை செய்தனர். அதனால், ஆன்மிக உணர்வையும் மக்களிடத்தில் கொண்டிருந்தனர்.
240) சூபியிசத்தின் தாக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இசை, இலக்கியம், கட்டடக்கலை, வட்டாரமொழிகள், புதிய சமய முறை போன்றவை இவர்களால் வளர்ச்சி பெற்றன.
2. இந்தியாவில் பன்முகப்பண்பாடு பரவ அடித்தளமிட்டது சூபி இயக்கமாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இசை, இலக்கியம், கட்டடக்கலை, வட்டாரமொழிகள், புதிய சமய முறை போன்றவை இவர்களால் வளர்ச்சி பெற்றன.
2. இந்தியாவில் பன்முகப்பண்பாடு பரவ அடித்தளமிட்டது சூபி இயக்கமாகும்.
241) ‘இந்துஸ்தானத்தின் பறவை எனப்பட்டவர் யார்?
A) மெகஸ்தனிஸ்
B) சாணக்கியர்
C) அக்பர்
D) அமீர்குஸ்ரு
விளக்கம்: இந்துஸ்தானத்தின் பறவை எனப்பட்ட ‘அமீர்குஸ்ரு’ சிறந்த கவிஞராகவும், சூபியிச ஞானியாகவும் திகழ்ந்தார். பாரசீக, பிரிஜ் மொழிகளில் இசைப்புலமை பெற்ற இவர் ‘குவாலிஸ்’ என்ற இசை முறையை உருவாக்கிப் பயன்படுத்தினார். ‘சிதார்’ என்ற இசைக் கருவியை உருவாக்கினார். சூபியிச வழிபாடு முறை மக்களிடையே பரவ, இசை முக்கியப் பங்காற்றியது.
242) யோகா பற்றி சரியானக் கூற்றை தெரிவு செய்
A) யோகா என்பது நம் முன்னோர்களான ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் பின்பற்றிய ஒரு வாழ்வியல் நெறியாகும்.
B) உடமையும், உயிரையும் ஒன்றாக இணைத்து பரம்பொருளுடன் ஒன்றிணையச் செய்யும் செயல் எனவும் இது கருதப்படுகிறது.
C) யோகாவில் பல்வேறு முறைகள் இருந்தாலும் சிறப்புமிக்க யோகமுறை ‘நாதயோகா’ ஆகும்
D) அனைத்தும் சரி
விளக்கம்: யோகா என்பது நம் முன்னோர்களான ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் பின்பற்றிய ஒரு வாழ்வியல் நெறியாகும். உடமையும், உயிரையும் ஒன்றாக இணைத்து பரம்பொருளுடன் ஒன்றிணையச் செய்யும் செயல் எனவும் இது கருதப்படுகிறது. யோகாவில் பல்வேறு முறைகள் இருந்தாலும் சிறப்புமிக்க யோகமுறை ‘நாதயோகா’ ஆகும்.
243) கூற்றுகளை ஆராய்க
1. யோகாவில் பல்வேறு முறைகள் இருந்தாலும் சிறப்புமிக்க யோகமுறை ‘நாதயோகாவாகும்’
2. இறைவனை வழிபடும்போது, குரல் நாண்களின் மூலம் மந்திரங்களை ஒலியாக எழுப்பி ராகத்துடனோ, சப்தமாகவோ, மனத்திற்குள்ளேயோ பாடி ஆன்மா, உடல், மனம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைக்கின்ற செயலே ‘நாதயோகா’ எனப்படும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. யோகாவில் பல்வேறு முறைகள் இருந்தாலும் சிறப்புமிக்க யோகாமுறை ‘நாதயோகாவாகும்.
2. இறைவனை வழிபடும்போது, குரல் நாண்களின் மூலம் மந்திரங்களை ஒலியாக எழுப்பி ராகத்துடனோ, சப்தமாகவோ, மனத்திற்குள்ளேயோ பாடி ஆன்மா, உடல், மனம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைக்கின்ற செயலே ‘நாதயோகா’ எனப்படும்.
244) நாதயோகாவில் ஏற்படும் பயன்பகள் என்ன?
A) நாதயோகா பயிற்சியை மேற்கொள்வதால், பிராணம் என்ற உயிராற்றல் அதிகரிக்கிறது.
B) மன அமைதி பெற்று உடல் நலத்தைப் பேணுவதற்கு உதவுகிறது
C) தீர்க்க முடியாத மனப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது
D) அனைத்தும் சரி
விளக்கம்: நாதயோகா பயிற்சியை மேற்கொள்வதால், பிராணம் என்ற உயிராற்றல் அதிகரிக்கிறது. மன அமைதி பெற்று உடல் நலத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. தீர்க்க முடியாத மனப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
245) நாதாயோகவில் ஏற்படும் பயன்கள் என்ன?
A) வலது மற்றும் இடப்பக்க மூளைப் பகுதியின் செயல்பாட்டைச் சமன்செய்து, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தித் தடையில்லா உறக்கம் ஏற்பட உதவுகிறது.
B) நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டச் செய்கிறது
C) சுயவெளிப்பாட்டை தைரியத்துடன் வெளிப்படுத்தி பேசுகின்றன ஆற்றலைத் தருகிறது.
D) அனைத்தும்
விளக்கம்: வலது மற்றும் இடப்பக்க மூளைப் பகுதியின் செயல்பாட்டைச் சமன்செய்து, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தித் தடையில்லா உறக்கம் ஏற்பட உதவுகிறது. நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டச் செய்கிறது. சுயவெளிப்பாட்டை தைரியத்துடன் வெளிப்படுத்தி பேசுகின்றன ஆற்றலைத் தருகிறது.
246) நாதயாகாவினால் ஏற்படும் பயன்கள் என்ன?
A) சமூகத்தில் தூண்டப்படுகின்றன தவறான நிகழ்வுகளிலிருந்து மனிதன் விடுபட உதவுகிறது.
B) தனிமனிதனின் ஒட்டுமொத்த உடலையும் புரிந்துகொண்டு செவித்திறன் அதிகரிக்க உதவுகிறது.
C) செவிப்புலன் புரிதலை முழு உடல் கவனிப்பிற்கு ஏதுவாக்குகிறது (இசைக்குத் தகுந்த உடலசைவுகள்)
D) அனைத்தும்
விளக்கம்: சமூகத்தில் தூண்டப்படுகின்றன தவறான நிகழ்வுகளிலிருந்து மனிதன் விடுபட உதவுகிறது. தனிமனிதனின் ஒட்டுமொத்த உடலையும் புரிந்துகொண்டு செவித்திறன் அதிகரிக்க உதவுகிறது. செவிப்புலன் புரிதலை முழு உடல் கவனிப்பிற்கு ஏதுவாக்குகிறது (இசைக்குத் தகுந்த உடலசைவுகள்).
247) நாதயோகா பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. நனவுநிலையை அதிகரிக்கச் செய்கிறது (பாடலுக்கேற்ற உடல் அசைவுகளை நினைவில் வைத்து ஆடல் அசைவை வெளிப்படுத்தும் தன்மையை மேம்படுத்துதல்).
2. தன்னையறிதல் என்ற நிலையை மேம்பட்டதாக்க உதவுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. நனவுநிலையை அதிகரிக்கச் செய்கிறது (பாடலுக்கேற்ற உடல் அசைவுகளை நினைவில் வைத்து ஆடல் அசைவை வெளிப்படுத்தும் தன்மையை மேம்படுத்துதல்).
2. தன்னையறிதல் என்ற நிலையை மேம்பட்டதாக்க உதவுகிறது.
248) நாதாயோக பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ஒருவர் தனித்திருக்காமல் தெய்வீகத் தன்மையுடன் இணைந்திருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2. பாலினப் பாகுபாட்டுத் தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. (நடன அசைவுகள், அபிநயங்கள் மூலம்)
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஒருவர் தனித்திருக்காமல் தெய்வீகத் தன்மையுடன் இணைந்திருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2. பாலினப் பாகுபாட்டுத் தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. (நடன அசைவுகள், அபிநயங்கள் மூலம்)
249) பக்தி இயக்கத்தின் விளைவுகள் என்ன?
A) பக்தி இயக்கத்தின் மூலம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், இராமானுஜர், இராமானந்தர், கபீர், குருநானக் உள்ளிட்ட பலரது போதனைகளும், பக்தி நெறிகளும் மக்களைக் கவர்ந்தன.
B) விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்த அத்வைதம் போன்ற பக்திக்கோட்பாடுகள் இந்து சமயத்தில் புதிய சீர்த்திருத்தத்தை உருவாக்கின
C) பக்தி இயக்கத்தின் விளைவாகப் பஞ்சாபில் கபீரின் சீடர், குருநானக் என்பவரால் சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டது.
D) அனைத்தும்
விளக்கம்: பக்தி இயக்கத்தின் மூலம் ஆழ்வார்கள். நாயன்மார்கள், இராமானுஜர், இராமானந்தர், கபீர், குருநானக் உள்ளிட்ட பலரது போதனைகளும், பக்தி நெறிகளும் மக்களைக் கவர்ந்தன. விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்த அத்வைதம் போன்ற பக்திக்கோட்பாடுகள் இந்து சமயத்தில் புதிக சீர்த்திருத்தத்தை உருவாக்கின. பக்தி இயக்கத்தின் விளைவாகப் பஞ்சாபில் கபீரின் சீடர், குருநானக் என்பவரால் சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டது.
250) பக்தி இயக்கத்தின் விளைவுகள் என்ன?
A) சமய, சாதி வன்முறைகள் குழைந்து சமூக நல்லிணக்கம் ஏற்படத் தொடங்கிய நிகழ்வு பக்தி இயக்கத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்றாகும்.
B) வட்டாரமொழிகளின் வளர்ச்சியும், கலை, கட்டடக்கலை போன்றவற்றின் வளர்ச்சியும் பக்தி இயக்கத்தின் முக்கிய விளைவாகும்.
C) கோயில்களில் 63 நாயன்மார்களின் சிலைகளும், 12 ஆழ்வார்களின் சிலைகளும் அழகுற அமைக்கப்பட்டன.
D) அனைத்தும்
விளக்கம்: சமய, சாதி வன்முறைகள் குழைந்து சமூக நல்லிணக்கம் ஏற்படத் தொடங்கிய நிகழ்வு பக்தி இயக்கத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்றாகும். வட்டாரமொழிகளில் வளர்ச்சியும், கலை, கட்டடக்கலை போன்றவற்றின் வளர்ச்சியும் பக்தி இயக்கத்தின் முக்கிய விளைவாகும். கோயில்களில் 63 நாயன்மார்களின் சிலைகளும், 12 ஆழ்வார்களின் சிலைகளும் அழகுற அமைக்கப்பட்டன.
251) பக்தி இயக்கத்தின் விளைவுகள் என்ன?
A) சமபந்தி உணவுமுறை, ஆலய வழிபாட்டில் சம உரிமை போன்றவைகளைச் சீர்திருத்த முறையில் பக்தி இயக்கம் முன்னெடுத்தது.
B) இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்கும் பாடுபட்ட பக்தி இயக்கம் மன்னர்களுக்கு ஆன்மிக நம்பிக்கை வளரக் காரணமானது.
C) மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை வளரவும் சமூக நடவடிக்கைகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யவும் பக்தி இயக்கம் வழி வகுத்தது.
D) அனைத்தும்
விளக்கம்: சமபந்தி உணவுமுறை, ஆலய வழிபாட்டில் சம உரிமை போன்றவைகளைச் சீர்திருத்த முறையில் பக்தி இயக்கம் முன்னெடுத்தது.
இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்கும் பாடுபட்ட பக்தி இயக்கம் மன்னர்களுக்கு ஆன்மிக நம்பிக்கை வளரக் காரணமானது. மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை வளரவும் சமூக நடவடிக்கைகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்யவும் பக்தி இயக்கம் வழி வகுத்தது.
252) பக்தி இயக்கத்தின் விளைவுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. மக்களிடையே அறக்கோட்பாடுகள் அடிப்படையிலான வாழ்வியல் நெறிகளை வளர்க்க பக்தி இயக்கம் உதவியது
2. இந்து மக்களிடையே பக்தி இயக்கத்திற்குக் கிடைத்த வரவேற்பானது பிற்காலத்தில் இந்தியா மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட நாடாக மாறுவதற்கு வழி வகுத்தது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. மக்களிடையே அறக்கோட்பாடுகள் அடிப்படையிலான வாழ்வியல் நெறிகளை வளர்க்க பக்தி இயக்கம் உதவியது. 2. இந்து மக்களிடையே பக்தி இயக்கத்திற்குக் கிடைத்த வரவேற்பானது பிற்காலத்தில் இந்தியா மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட நாடாக மாறுவதற்கு வழி வகுத்தது.
253) பக்தி இயக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இந்தியாவில் சமயம், சமூகம், இலக்கியம் ஆகியவற்றிற்குப் பக்தி இயக்கம் மிகுந்த தொண்டாற்றி உள்ளது.
2. சமணம், பௌத்தம், இஸ்லாம், சமயங்கள் வேகமாகப் பரவிய காலத்தில் இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கும் இவ்வியக்கம் வித்திட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்தியாவில் சமயம், சமூகம், இலக்கியம் ஆகியவற்றிற்குப் பக்தி இயக்கம் மிகுந்த தொண்டாற்றி உள்ளது.
2. சமணம், பௌத்தம், இஸ்லாம், சமயங்கள் வேகமாகப் பரவிய காலத்தில் இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கும் இவ்வியக்கம் வித்திட்டது.
254) பக்தி இயக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. வேதங்கள், தத்துவம் மொழிபெயர்க்கப்பட்டு, மக்களிடம் சென்றடைய, பக்தி இயக்கம் காரணமாயிற்று.
2. சமூகத்தில் நிலவிய வேற்றுமைகள் களையப்பட்டு, கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு பரவ வித்திட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வேதங்கள், தத்துவம் மொழிபெயர்க்கப்பட்டு, மக்களிடம் சென்றடைய, பக்தி இயக்கம் காரணமாயிற்று. சமூகத்தில் நிலவிய வேற்றுமைகள் களையப்பட்டு, கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு பரவ வித்திட்டது.