நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் 12th Economics Lesson 4 Questions in Tamil
12th Economics Lesson 4 Questions in Tamil
4] நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்
1) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நுகர்வு சார்பு மற்றும் முதலீட்டு சார்பு நாட்டு வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.
கூற்று 2 – நாட்டு வருமான வளர்ச்சியை முடுக்கி விடுவதுதான் பேரியல் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
கூற்று 3 – முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நுகர்வு சார்பு மற்றும் முதலீட்டு சார்பு நாட்டு வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.நாட்டு வருமான வளர்ச்சியை முடுக்கி விடுவதுதான் பேரியல் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தேசிய வருவாயானது நுகர்வு பண்டங்கள் (C) மற்றும் முதலீட்டு பண்டங்களை (I) உள்ளடக்கி இருப்பதை நாம் உணர முடியும்.)
2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நுகர்வு சார்பு என்பது நுகர்வு செலவுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள தொடர்பாகும்.
கூற்று 2 – தேசிய வருவாயில் செலவிடப் படாமல் உள்ள தொகை முதலீடு ஆகும். இது பின் மூலதனமாக மாறுகிறது.
கூற்று 3 – முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நுகர்வு சார்பு என்பது நுகர்வு செலவுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள தொடர்பாகும்.தேசிய வருவாயில் செலவிடப் படாமல் உள்ள தொகை முதலீடு ஆகும். இது பின் மூலதனமாக மாறுகிறது.முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முதலீட்டை அதிகரிப்பதால் எந்த அளவுக்கு தேசிய வருவாய் அதிகரிக்கும் என்பதை “பெருக்கி” காட்டுகிறது.)
3) நுகர்வு சார்பு என்பது கீழ்காணும் எந்த இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பாகும்?
I. வருவாய்
II. நுகர்வு
III. செலவினம்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) எல்லாமே சரி
(குறிப்பு – வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பை நுகர்வு சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்கிறோம். இது மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்க்கிடையேயான சார்பு தொடர்பாகும்.)
4) நுகர்வு சார்பு என்பதை கீழ்க்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் விளக்கலாம்?
A) C = f (Y)
B) C= f / Y
C) C = f + Y
D) C = f – Y
(குறிப்பு -நுகர்வு சார்பு என்பதை C = f (Y) என்னும் சூத்திரத்தின் மூலம் விளக்க முடியும். இதில் C என்பது நுகர்வையும், Y என்பது வருமானத்தையும், f என்பது சார்பையும் குறிக்கும். எனவே நுகர்வு சார்பு, நுகர்வு மற்றும் வருமானத்திற்கு இடையேயான தொடர்பை விளக்குகிறது.)
5) இறுதிநிலை நுகர்வு நாட்டம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
A) MPC = Δc + Δy
B) MPC = Δc × Δy
C) MPC = Δc / Δy
D) MPC = Δc – Δy
(குறிப்பு – நுகர்வு சார்பு என்பது நுகர்வு மற்றும் வருமானத்திற்கு இடையேயான சார்பு தொடர்பை விளக்குகின்றது. ( C=f(Y)). C = சார்பு மாறி, y = சாரா மாறியாகவும் உள்ளது. இறுதிநிலை நுகர்வு நாட்டம் என்பது MPC = Δc / Δy என குறிப்பிடப்படுகிறது. இதில் Δc என்பது நுகர்வு மாற்றத்தையும், Δy என்பது வருவாய் மாற்றத்தையும் குறிக்கிறது. இறுதிநிலை நுகர்வு நாட்டம் என்பது நேர்மறை எண், ஆனால் ஒன்றுக்கும் குறைவானது.)
6) சராசரி சேமிப்பு நாட்டம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
A) சராசரி சேமிப்பு நாட்டம் = சேமிப்பு + வருவாய்
B) சராசரி சேமிப்பு நாட்டம் = சேமிப்பு – வருவாய்
C) சராசரி சேமிப்பு நாட்டம் = சேமிப்பு × வருவாய்
D) சராசரி சேமிப்பு நாட்டம் = சேமிப்பு / வருவாய்
(குறிப்பு – வருமானத்திற்கும் சேமிப்புக்கும் இடையேயான வீதமே சராசரி சேமிப்பு நாட்டம் எனப்படும். சராசரி சேமிப்பு நாட்டம் என்பது மொத்த சேமிப்பை மொத்த வருவாயால் வகுத்தால் கிடைக்ககூடியது ஆகும். வேறு வகையில் கூறினால் மொத்த வருவாய்க்கும், மொத்த சேமிப்பிற்கும் இடையே ஆன வீதமாகும்.)
7) இறுதிநிலை சேமிப்பு நாட்டம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A) வருமான மாற்றத்திற்கும் சேமிப்பு மாற்றத்திற்கும் இடையேயுள்ள வீதமே இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ஆகும்.
B) இறுதிநிலை சேமிப்பு நாட்டம் ‘MPS’ என வழங்கப்படுகிறது.
C) இறுதிநிலை சேமிப்பு நாட்டம் MPS=ΔS + ΔY என குறிப்பிடப்படுகிறது.
D) இறுதிநிலை நுகர்வு நாட்டம் + இறுதிநிலை சேமிப்பு நாட்டம் = 1 எனவும் அறியப்படுகிறது.
(குறிப்பு – இறுதிநிலை சேமிப்பு நாட்டம் MPS=ΔS / ΔY என குறிப்பிடப்படுகிறது. மேலும் இறுதிநிலை நுகர்வு நாட்டம் + இறுதிநிலை சேமிப்பு நாட்டம் = 1 எனவும் அறியப்படுகிறது. அதாவது MPC+MPS=1எனவும் MPS -1 = MPC எனவும், MPC-1=MPS எனவும் வழங்கப்படுகிறது)
8) நுகர்வு பற்றிய உளவியல் விதியை வகுத்தவர் யார்?
A) கீன்ஸ்
B) கீட்ஸ்
C) கிப்ஸ்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – கீன்ஸ் நுகர்வு பற்றிய உளவியல்(மன இயல்) விதி ஒன்றை முன்மொழிந்தார். அதனடிப்படையில் நுகர்வு சார்பை உருவாக்கினார்.” உலகியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன் அறிவு அனுபவம் மற்றும் விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும் போது நுகர்வை அதிகமாக்குவார்கள். ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது” என்பதாகும்.)
9) கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதி பற்றிய கீழ்க்காணும் அனுமானங்களில் எது சரியானது?
I. இந்த விதி நாட்டில் இயல்பான நிலை நிலவும் போது மட்டும் பொருத்தமானதாக அமையும்.
II. இந்த விதி வருமான பகிர்வு, சமூக காரணிகள் போன்றவை மாறாமல் நிலையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் வருமானத்தை மட்டும் சார்ந்ததாகும்.
III. இந்த விதியின்படி நாடும் செல்வமிக்கது மற்றும் முதலாளித்துவம் நிலவுகிறது.
A) I, II மட்டும் சரி
B) I, III மட்டும் சரி
C) II, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதியின் படி வருமான பகிர்வு, சுவை, பழக்கவழக்கம், சமூக காரணிகள், விலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்றவை மாறாமல் நிலையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நுகர்வு வருமானத்தை மட்டும் சார்ந்ததாகும். மேலும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்பது ஆகும்.)
10) கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதியின் படி கீழ்க்காணும் எந்த கருத்து தவறானது?
A) வருமானம் உயரும்போது நுகர்வு அதிகரிக்கும்.
B) அதிகரித்த வருமானம் நுகர்வு செலவிற்கும் சேமிப்புக்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படும்.
C) அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டை குறைக்கும்
D) வருமானம் உயரும்போது செலவு அதிகரிக்கும்.
(குறிப்பு – கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதியானது மூன்று கருத்துக்களை கூறுகிறது.1) வருமானம் உயரும்போது நுகர்வும், செலவும் அதிகரிக்கும், 2)அதிகரித்த வருமானம் நுகர்வு செலவிற்கும் சேமிப்புக்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படும், 3)அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டை அதிகரிக்கும் என்பன ஆகும்.)
11) கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதியின்படி கீழ்காணும் எந்த கூற்று சரியானது?
கூற்று 1 – நுகர்வு செலவானது வருமானம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும். ஆனால், குறைந்த அளவு அதிகரிக்கும்.
கூற்று 2 – வருமானம் அதிகரிக்கின்ற போது எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பு இரண்டையும் அதிகரிக்கச்செய்யும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – வருமானம் உயரும்போது நுகர்வு செலவும் அதிகரிக்கும். ஆனால் சிறிய அளவாக இருக்கும். காரணம் வருமானம் அதிகரிக்கும்போது பகுதி பகுதியாக நம் விருப்பமும் நிறைவேறும். ஆதலால் நுகர்வுப் பொருட்களின் மீது செய்கின்ற செலவு குறைகிறது. எனவே செலவானது வருமானம் அதிகரிக்கும்போது அதிகரிக்கும் ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.)
12) சேமிப்பு என்பது?
A) சேமிப்பு = வருமானம் + நுகர்வு
B) சேமிப்பு = வருமானம் – நுகர்வு
C) சேமிப்பு = வருமானம் / நுகர்வு
D) எல்லாமே தவறு
(குறிப்பு – சேமிப்பு என்பது வருமானத்திலிருந்து நுகர்வு செலவை கழித்தால் கிடைப்பது ஆகும். வருமானம் (Y), நுகர்வு (C), சேமிப்பு (S), எனில் சேமிப்பு S=Y-C என்பது சரியானதாகும்.)
13) நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்ஸ் எத்தனை வகைகளாக பிரிக்கிறார்?
A) இரண்டு வகை
B) மூன்று வகை
C) நான்கு வகை
D) ஐந்து வகை
(குறிப்பு – நுகர்வு சார்பு தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்ஸ் இரண்டாகப் பிரிக்கின்றார்.அதாவது அகவய காரணிகள் மற்றும் புறவய காரணிகள் என்பன ஆகும்.)
14) கீழ்க்கண்டவற்றுள் எது ஜே.எம்.கீன்ஸ் வகுத்த அகவய காரணிகளுள் இல்லாதவை?
A) முன்னெச்சரிக்கை நோக்கம்
B) எதிர்பார்க்கும் நோக்கம்
C) வருமான பகிர்வு
D) முன்னேறும் நோக்கம்
(குறிப்பு – அகவய காரணிகள் உளவியல் சிந்தனைகளுடன் தொடர்புடையது ஆகும். நுகர்வு சார்பை தூண்டுகின்ற முக்கிய அகவய காரணிகள் ஆவன, முன்னெச்சரிக்கை நோக்கம், எதிர்பார்க்கும் நோக்கம், கணிக்கும் நோக்கம், முன்னேறும் நோக்கம், பணவியல் நோக்கம், வாணிப நோக்கம், கர்வ நோக்கம், பேராசை நோக்கம் போன்றவைகள் ஆகும்.)
15) கீழ்க்கண்டவற்றுள் எது ஜே.எம்.கீன்ஸ் வகுத்த புறவய காரணிகள் ஆகும்?
I. வருமான பகிர்வு
II. விலை அளவு
III. நுகர்வோர் கடன்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – ஜே.எம்.கீன்ஸ் வகுத்த புறவய காரணிகள் ஆவன, வருமான பகிர்வு, விலை அளவு, கூலி அளவு, வட்டி விகிதம், நிதிக்கொள்கை, நுகர்வோர் கடன், மக்கள் தொகை காரணிகள், டூசன் பெரியின் அனுமானம் போன்றவைகளாம்.)
16) விபத்து, உடல்நலமின்மை போன்றவை ஜே.எம்.கீன்ஸின் நுகர்வு சார்பு தீர்மானிக்கின்ற காரணிகளில் எதனுள் அடங்கும்?
A) முன்னெச்சரிக்கை நோக்கம்
B) எதிர்பார்க்கும் நோக்கம்
C) வாணிப நோக்கம்
D) கணிக்கும் நோக்கம்
(குறிப்பு – ஜே.எம்.கீன்ஸ் நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற அகவய காரணிகளாக எட்டு காரணிகளை குறிப்பிடுகிறார். அவற்றுள் விபத்து, உடல் நலமின்மை போன்றவை முன்னெச்சரிக்கை நோக்கத்தில் அடங்கும். ஏனெனில் எதிர்பாராமல் நடக்கும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது முன்னெச்சரிக்கை நோக்கம் எனப்படுகிறது.)
17) கீன்ஸ் கூற்றுப்படி கீழ்க்கண்டவற்றுள் எது விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பமாக கருதப்படுகிறது?
A) முன்னெச்சரிக்கை நோக்கம்
B) எதிர்பார்க்கும் நோக்கம்
C) வாணிப நோக்கம்
D) கணிக்கும் நோக்கம்
(குறிப்பு – முன்னெச்சரிக்கை நோக்கம் என்பது எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது ஆகும். எதிர்பார்க்கும் நோக்கம் என்பது எதிர்காலத் தேவைக்கான விருப்பம் ஆகும் எ.கா- வயதான காலம். கணிக்கும் நோக்கம் என்பது விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பமாகும். முன்னேறும் நோக்கம் என்பது வாழ்க்கை தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம் ஆகும்.)
18) வாணிப நோக்கம், நீர்த்தன்மை நோக்கம், நிதிவிவேக நோக்கம் போன்ற காரணிகளுக்காக கீழ்க்காணும் எது சேமிக்கிறது?
A) அரசாங்கம்
B) நிறுவனங்கள் மற்றும் வாணிப கழகங்கள்
C) தொழிற்சாலைகள்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் வாணிப கழகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை வாணிப நோக்கம், நீர்த்தன்மை நோக்கம், முன்னேறும் நோக்கம், நிதி விவேக நோக்கம் போன்றவைகளுக்காக சேமிக்கிறது.)
19) விட்டுச் செல்வதற்கான விருப்பம் என்பது கீழ்கண்டவற்றுள் எது?
A) முன்னெச்சரிக்கை நோக்கம்
B) எதிர்பார்க்கும் நோக்கம்
C) கர்வ நோக்கம்
D) கணிக்கும் நோக்கம்
(குறிப்பு – வாணிப நோக்கம் என்பது வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம் ஆகும். கர்வ நோக்கம் என்பது விட்டு செல்வதற்கான விருப்பம் ஆகும். பேராசை நோக்கம் என்பது முற்றிலும் மோசமான உள்ளுணர்வு ஆகும். இவை அனைத்தும் கீன்சின் கூற்றுப்படி, நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற அகவயகாரணிகள் ஆகும்)
20) அவசர காலம், சிக்கல்களை சந்திப்பதற்காக நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கம் என்பது?
A) வாணிப நோக்கம்
B) நீர்த்தன்மை நோக்கம்
C) நிதிவிவேக நோக்கம்
D) முன்னேறும் நோக்கம்
(குறிப்பு – வாணிப நோக்கம் என்பது கடன் இல்லாமல் மூலதன முதலீடு மேற்கொள்வதற்காக வளங்களை பெரும் விருப்பம் ஆகும்.நீர்த்தன்மை நோக்கம் என்பது அவசர காலம் மற்றும் சிக்கல்களை சந்திப்பதற்காக நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கமாகும். நிதி விவேக நோக்கம் என்பது கடனை செலுத்த, தேய்மானம் மற்றும் பழங்கால தொழில்நுட்பத்தை மாற்றும் நோக்கம் போன்றவற்றிற்கு தேவையான நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தும் விருப்பம் ஆகும்)
21) வருமானத்தை அதிகரிப்பது என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனுள் அடங்கும்?
A) வாணிப நோக்கம்
B) நீர்த்தன்மை நோக்கம்
C) நிதிவிவேக நோக்கம்
D) முன்னேறும் நோக்கம்
(குறிப்பு – வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், வெற்றி பெறும் மேலாண்மையை நிரூபிக்க வேண்டிய நோக்கமாகவும் முன்னேறும் நோக்கம் கருதப்படுகிறது.நிதி விவேக நோக்கம் என்பது கடனை செலுத்த, தேய்மானம் மற்றும் பழங்கால தொழில்நுட்பத்தை மாற்றும் நோக்கம் போன்றவற்றிற்கு தேவையான நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தும் விருப்பம் ஆகும். இவைகள் கீன்சின் கூற்றுப்படி நுகர்வு சார்பை தீர்மானிக்கும் புறவய காரணிகளாக கருதப்படுகிறது.)
22) கீன்ஸ் கூற்றுப்படி புறவய காராணிகள் பற்றிய சரியான கீழ்க்கண்டவற்றுள் எது?
I. புறவய காரணிகள் உண்மையான மற்றும் அளவிடக் கூடியது.
II. புறவய காரணிகள் நீண்ட காலங்களில் எளிதாக மாற்றமடையும்
III. பெரும்பான்மையான புறக்காரணிகள் நுகர்வு சார்பபை தீர்மானிக்கின்றவகைகளாகும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – புறவய காரணிகள் உண்மையான மற்றும் அளவிடக் கூடியது. புறவய காரணிகள் நீண்ட காலங்களில் எளிதாக மாற்றமடையும்.பெரும்பான்மையான புறக்காரணிகள் நுகர்வு சார்பபை தீர்மானிக்கின்றவகைகளாகும்.வருமான பகிர்வு, விலை அளவு, கூலி அளவு, வட்டி விகிதம், நிதிக்கொள்கை, நுகர்வோர் கடன், மக்கள் தொகை காரணிகள், டூசன் பெரியின் அனுமானம் போன்றவைகள் புறவய காரணிகள் ஆகும்)
23) “சமநிலை வருமான பகிர்வு உடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும் “என்னும் கருத்து கீழ்கண்டவர்களுள் யாருடையதாகும்?
A) V.K.R.V.ராவ்
B) V.P.சந்த்
C) V.K.ரெட்டி
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் நுகர்வு குறைவாக இருக்கும்.காரணம் செல்வந்தர்கள் குறைவான நுகர்வு விருப்பமும், அதிகப்படியான சேமிப்பு விருப்பமும் கொண்டு இருப்பர். சமநிலை வருமான பகிர்வுடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும்.V.K.R.V.ராவ் அவர்களால் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.)
24) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – விலை வீழ்ச்சி அடையும் போது உண்மை வருமானம் அதிகரிக்கும். மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்.
கூற்று 2 – நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாக இருப்பது விலை அளவு ஆகும்.
கூற்று 3 – நுகர்வுக்கும், கூலிக்கும் இடையே நேர்மறையான தொடர்பு உள்ளது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாக இருப்பது விலை அளவு ஆகும்.விலை வீழ்ச்சி அடையும் போது உண்மை வருமானம் அதிகரிக்கும். மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும். நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கியமானதாக கூலி அளவு இருக்கிறது. நுகர்வுக்கும் கூலிக்கும் இடையே நேர்மறையான தொடர்பு உள்ளது.)
25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தை சேமிக்க ஊக்கமளிக்கும்.
கூற்று 2 – அதிக வட்டி விகிதம் மக்களின் நுகர்வை குறைக்கும்.
கூற்று 3 – கூலி அதிகரிக்கும்போது நுகர்வு செலவும் அதிகரிக்கும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – வட்டி விகிதமும் நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாகும். அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தை சேமிக்க ஊக்கமளிக்கும் மற்றும் நுகர்வை குறைக்கும். எதிர்பாராத லாபம் ஏற்படும்போதும் நுகர்வு செலவு அதிகரிக்கும்.)
26) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அரசாங்கம் வரியைக் குறைக்கும் போது செலவிடத் தக்க வருமானம் அதிகரிக்கும்.
கூற்று 2 – அரசாங்கம் வரியை குறைக்கும் போது சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அரசாங்கம் வரியைக் குறைக்கும் போது செலவிடத் தக்க வருமானம் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தின் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும். வளர்வீத கொள்கையானது ஏழைகளுக்கு சாதகமான வருமான பகிர்வை தருவதால் ஏழைகளின் விருப்பம் மாறும்.)
27) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – சுலப தவணைகளாக நுகர்வு கடன் அளிக்கும்போது நுகர்வு அதிகரிக்கும்.
கூற்று 2 – குடும்ப அளவு அதிகமாக இருந்தால் நுகர்வு அதிகரிக்கும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – சுலப தவணைகளாக நுகர்வு கடன் அளிக்கும் போது அவர்கள் நுகர்வோர் பொருட்களான கனரக வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டி கம்ப்யூட்டர் போன்றவற்றினை வாங்குவார்கள் இது நுகர்வை அதிகரிக்கும். மற்றவைகள் மாறாமல் இருக்கும் போது குடும்ப அளவு அதிகமாக இருந்தால் நுகர்வு அதிகமாக இருக்கும்.)
28) கீழ்க்கண்ட வகைகளில் எது நுகர்வு சார்பை பாதிக்கும்?
I. குடும்ப அளவு
II. குடும்ப வாழ்க்கை சுழற்சி நிலை
III. இருப்பிடம்
IV. வேலைவாய்ப்பு
A) I, II, III மட்டும்
B) II, III, IV மட்டும்
C) I, III, IV மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – குடும்ப அளவு அதிகமாக இருந்தால் நுகர்வு அதிகமாக இருக்கும். மேலும் குடும்ப அளவு, குடும்ப வாழ்க்கை சுழற்சி நிலை, இருப்பிடம் மற்றும் வேலைவாய்ப்பு நுகர்வு சார்பை பாதிக்கும். ஆரம்ப நிலைக் கல்வி பயிலும் மாணவர்களை விட குடும்பத்தில் கல்லூரி கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள். கிராமப்புறங்களை விட நகர்புற குடும்பங்கள் அதிகமாக செலவு செய்யும்.)
29) டூசன் பெரியின் அனுமானம் கீழ்கண்டவைகளுள் எது?
அனுமானம் 1 – நுகர்வு செலவானது தற்போதைய வருமானத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் முந்தைய வருமானத்தையும் வாழ்க்கை தரத்தையும் சார்ந்து இருக்கும்.
அனுமானம் 2 – வெளிக்காட்டும் விளைவின் காரணமாகவும் நுகர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைவான வருமானம் உடைய மக்களும், அதிக வருமானம் உடைய மக்களின் நுகர்வு தரத்தால் தூண்டப்படுவார்கள்.
A) அனுமானம் 1 மட்டும் சரி
B) அனுமானம் 2 மட்டும் சரி
C) இரண்டு அனுமானங்களும் சரி
D) இரண்டு அனுமானங்களும் தவறு
(குறிப்பு – நுகர்வு சார்வை பாதிக்கும் இரண்டு உற்று நோக்குதலை டூசன் பெரி ஏற்படுத்தியுள்ளார். நுகர்வு செலவானது தற்போதைய வருமானத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் முந்தைய வருமானத்தையும் வாழ்க்கை தரத்தையும் சார்ந்து இருக்கும். தனிநபர்கள் குறிப்பிட்ட வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்து பழக்கப்பட்டு இருப்பதால் தற்போதைய வருமானம் குறைந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக நுகர்வு செலவு மேற்கொள்வார்கள்.)
30) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – டூசன் பெரியின் அனுமானத்தின்படி குறைவான வருமானம் உடைய மக்களும் அதிக வருமானம் உடைய மக்களின் நுகர்வு தரத்தால் துன்பப்படுவார்கள்.ஏழை மக்கள் செல்வந்தர்களின் நுகர்வை போன்றே செலவு செய்வார்கள்.
கூற்று 2 – பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றம் லாபத்தையும் அல்லது நஷ்டத்தையும் ஏற்பட செய்து நுகர்வு சார்பில் மாற்றத்தைக் கொண்டுவரும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – டூசன் பெரியின் அனுமானத்தின்படி குறைவான வருமானம் உடைய மக்களும் அதிக வருமானம் உடைய மக்களின் நுகர்வு தரத்தால் துன்பப்படுவார்கள்.ஏழை மக்கள் செல்வந்தர்களின் நுகர்வை போன்றே செலவு செய்வார்கள். பங்குச்சந்தை நுகர்வு சார்பில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றம் லாபத்தையும் அல்லது நஷ்டத்தையும் ஏற்பட செய்து நுகர்வு சார்பில் மாற்றத்தைக் கொண்டுவரும்.)
31) முதலீட்டு சார்பு என்பது கீழ்காணும் எந்த இரண்டுக்கு இடையிலான தொடர்பை குறிப்பிடுகிறது?
I. முதலீடு
II. வட்டி வீதம்
III. லாப நஷ்டம்
A) I, II மட்டும் சரி
B) I, III மட்டும் சரி
C) II, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – முதலீட்டு சார்பு என்பது முதலீடு மற்றும் வட்டி வீதத்திற்கு இடையேயான தொடர்பை குறிப்பிடுகிறது. முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் உள்ள சார்பு தலைகீழ் தொடர்பு உள்ளது. முதலீட்டு சார்பானது கீழ்நோக்கி செல்லும்.)
32) முதலீட்டு சார்பு எவ்வாறு விளக்கப்படுகிறது?
A) I = f(r)
B) I = f / r
C) I = r / f
D) எல்லாமே தவறு
(குறிப்பு – முதலீட்டு சார்பானது கீழ்நோக்கி செல்லும். அது I=f(r) என்னும் பதத்தால் குறிக்கப்படுகிறது.இதில் I என்பது முதலீடு (சார்பு மாறிகள்), r என்பது வட்டி வீதம் (சார்பற்ற மாறிகள்) ஆகும்.)
33) கீன்ஸின் கூற்றுப்படி முதலீடு என்பது கீழ்கண்டவற்றுள் எது?
I. நிதி முதலீடு
II. உண்மையான முதலீடு
A) I மட்டும்
B) II மட்டும்
C) இரண்டும்
D) இரண்டும் அல்ல
(குறிப்பு – கீன்ஸின் கூற்றுப்படி முதலீடு என்பது நிதி முதலீட்டை மட்டுமே குறிக்கும், உண்மையான முதலீட்டை குறிக்காது. இது மாதிரியான முதலீடு நாட்டின் உண்மையான மூலதன இருப்பில் சேர்ப்பதில்லை.கீன்ஸின் பார்வையில் முதலீடு மூலதன முதலீடு செலவை உள்ளடக்கியதாகும்)
34) முதலீடு என்பது யாது?
A) பங்குகள்
B) கடன் பத்திரங்கள்
C) அரசாங்க பங்கு மற்றும் பத்திரங்கள்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – முதலீடு என்பதன் பொருள் பங்குகள், கடன் பத்திரங்கள், அரசாங்க பங்கு மற்றும் கடன் பத்திரங்களை வாங்குவது ஆகும்.கீன்ஸின் கூற்றுப்படி முதலீடு என்பது நிதி முதலீட்டை மட்டுமே குறிக்கும், உண்மையான முதலீட்டை குறிக்காது. இது மாதிரியான முதலீடு நாட்டின் உண்மையான மூலதன இருப்பில் சேர்ப்பதில்லை.)
35) முதலீட்டின் வகைகளுள் அல்லாதது எது?
I. தன்னிச்சையாக முதலீடு
II. தூண்டப்பட்ட முதலீடு
III. நிர்ப்பந்த முதலீடு
A) I மட்டும் தவறு
B) II மட்டும் தவறு
C) III மட்டும் தவறு
D) எல்லாமே தவறு
(குறிப்பு – முதலீடுகள் இரண்டு வகைப்படும் அவை தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு என்பதாகும். தன்னிச்சையான முதலீடு என்பது மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவாகும். நிலையான சொத்துக்கள் மற்றும் பங்குகள் மீதான செலவே தூண்டப்பட்ட முதலீடு ஆகும்.)
36) தன்னிச்சையான முதலீடு குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தன்னிச்சையான முதலீடு என்பது நாட்டு வருமானத்தை சார்ந்தது அல்ல.
கூற்று 2 – தன்னிச்சையான முதலீடு என்பது லாப நோக்கமின்றி நலத்துக்காக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
கூற்று 3 – தன்னிச்சையான முதலீடு என்பது உயரும் கச்சா பொருட்கள் மற்றும் உழைப்பாளர்களின் ஊதியம் ஆகியவற்றை பாதிக்காது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – தன்னிச்சையான முதலீடு என்பது மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவாகும். மாறுகின்ற வருமானம், வட்டி விகிதம், லாபத்தை சார்ந்து இருக்காது. தன்னிச்சையான முதலீடு நாட்டு வருமானத்தை சார்ந்து இருக்காது.)
37) கீழ்க்கண்டவகைகளில் எது தன்னிச்சை முதலீடுக்கான உதாரணம் அல்ல?
A) சாலைகள் அமைத்தல்
B) பாலங்கள் அமைத்தல்
C) தொண்டு நிறுவனங்கள்
D) கட்டிடம் கட்டுதல்
(குறிப்பு – தன்னிச்சை முதலீடு என்பது லாப நோக்கின்றி நலத்திற்காக முதலீடு மேற்கொள்ளப்படுவதாகும்.உதாரணமாக சாலைகள் அமைத்தல், பள்ளிக்கூடம் கட்டுதல், பாலங்கள் அமைத்தல், தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளாகும். நாட்டு வளர்ச்சிக்கும், பொருளாதார மந்தத்தில் இருந்து விடுபடுவதற்கும் தன்னிச்சை முதலீடு அவசியமாகிறது.)
38) தன்னிச்சை முதலீடு குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. தன்னிச்சை முதலீடு என்பது பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக எதையும் சாராத முதலீடாகும்.
II. தன்னிச்சையான முதலீடு வருமானம் நெகிழ்ச்சியானதாகும்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக எதையும் சாராத முதலீடு தன்னிச்சை முதலீடாகும். தன்னிச்சையான முதலீடு வருமானம் நெகிழ்ச்சியற்றது. தன்னிச்சையான முதலீடு அளவு எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.)
39) Y = 300 எனில், C = 340 எனில் இறுதிநிலை நுகர்வு நாட்டம் எவ்வளவு?
A) 0.8
B) 8
C) 0.08
D) 0.008
(குறிப்பு – Y = 300 எனில், C = 340 ஆக இருந்தால்,
இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ΔC/ΔY
MPC = 300/340 = 0.8
இறுதிநிலை நுகர்வு நாட்டம் = 0.8)
40) C= a + b Y என்பதில், a என்பதின் மதிப்பு?
A) < 0 ஆக இருக்கும்
B) > 0 ஆக இருக்கும்
C) = 0 ஆக இருக்கும்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – நுகர்வு சார்பு C = a + b Y என வழங்கப்படுகிறது.
இதில் C = நுகர்வு, Y = வருமானம், b = இறுதிநிலை நுகர்வு நாட்டம்(Δc/Δy)
a > 0 மற்றும் b < 1, ஆக இருக்கும்)
41) கீன்ஸின் நுகர்வு சார்பு C = 10 + 0.8 ஆக இருந்து, செலவிட கூடிய வருமானம் ரூ.1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?
A) ரூ 0.8
B) ரூ 800
C) ரூ 810
D) ரூ 0.81
(குறிப்பு – C = a + b Y
a = 10, b = 0.8, Y = 1000 எனில்
C = 10 + 0.8 (1000)
C = 10 + 800
C = 810
நுகர்வு C = ரூ 810 ஆகும்.)
42) கீன்ஸின் நுகர்வு சார்பு C= 10 + 0.8 Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் ரூ 100 ஆக இருந்தால், இறுதி நிலை நுகர்வு நாட்டம் எவ்வளவாக இருக்கும்?
A) 0.8
B) 800
C) 810
D) 0.81
(குறிப்பு – C = a + b Y எனில்
C = நுகர்வு, a = நிலையானது, b = இறுதி நிலை நுகர்வு நாட்டம், Y = வருமானம் ஆகும்,
எனில் C = 10 + 0.8 (100) என்பதில், இறுதி நிலைநுகர்வு நாட்டம் என்பது 0.8 ஆகும்.
எனவே, இறுதி நிலை நுகர்வு நாட்டம் = 0.8 ஆகும்.)
43) கீன்ஸின் நுகர்வு சார்பு C = 10 + 0.8 Y ஆக இருந்து, செலவிடக் கூடிய வருவாய் ரூ 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவாக இருக்கும்?
A) 0.8
B) 800
C) 810
D) 0.9
(குறிப்பு – C = 10 + 0.8 (100)
C = 10 + 80
நுகர்வு சார்பு C = 90
சராசரி நுகர்வு நாட்டம் = நுகர்வு / வருவாய் எனில்,
சராசரி நுகர்வு நாட்டம் = 90 / 100
சராசரி நுகர்வு நாட்டம் = 0.9 ஆகும். )
44) முதலீடு என்பது Y அச்சிலும், வருமானம் என்பது X அச்சிலும் வரைந்தால், தன்னிச்சை முதலீடு வரைகோடு எவ்வாறு இருக்கும்?
A) சாய்வாக இருக்கும்
B) Y அச்சுக்கு படிக்கிடை இணைகோடாக இருக்கும்
C) X அச்சுக்கு படிக்கிடை இணைகோடாக இருக்கும்
D) எல்லாமே தவறு.
(குறிப்பு – முதலீடு என்பது Y அச்சிலும், வருமானம் என்பது X அச்சிலும் வரைந்தால், தன்னிச்சை முதலீடு வரைகோடு X அச்சுக்கு படிக்கிடை இணைக்கோடாக இருக்கும்.)
45) தூண்டப்பட்ட முதலீடு குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தூண்டப்பட்ட முதலீடு லாபம் நோக்கம் உடையது.
கூற்று 2 – தூண்டப்பட்ட முதலீடு தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது.
கூற்று 3 – தேசிய வருமானத்திற்கும் தூண்டப்பட்ட முதலீட்டுக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது அதிகரிக்கின்ற வருமானம் மற்றும் தேவை உயர்வினால் ஏற்படும் நிலையான சொத்து மற்றும் பங்குகள் மீதான செலவே தூண்டப்பட்ட முதலீடு ஆகும். தூண்டப்பட்ட முதலீடு லாப நோக்கம் உடையது. தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது ஆகும்)
46) தேசிய வருமானம் குறையும்போது?
A) தூண்டப்பட்ட முதலீடு வளரும்
B) தூண்டப்பட்ட முதலீடு குறையும்
C) தூண்டப்பட்ட முதலீட்டில் மாற்றம் வராது
D) தூண்டப்பட்ட முதலீட்டில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்
(குறிப்பு – தேசிய வருமானத்திற்கும் தூண்டப்பட்ட முதலீட்டிற்கும் நேரிடையான தொடர்பு இருக்கிறது. தேசிய வருமானம் குறைந்தால் தூண்டப்பட்ட முதலீடும் குறையும் மற்றும் தூண்டப்பட்ட முதலீடு வருமான நெகிழ்ச்சி உடையது.)
47) முதலீடு X அச்சிலும், வருமானம் Y அச்சிலும் வரைந்தால், தூண்டப்பட்ட முதலீடு வரைவு கோடு எவ்வாறு இருக்கும்?
A) நேர்மறை சாய்வாக இருக்கும்
B) Y அச்சுக்கு படிக்கிடை இணைகோடாக இருக்கும்
C) X அச்சுக்கு படிக்கிடை இணைகோடாக இருக்கும்
D) எல்லாமே தவறு.
(குறிப்பு – தேசிய வருமானத்திற்கும் தூண்டப்பட்ட முதலீட்டிற்கும் நேரிடையான தொடர்பு இருக்கிறது. எனவே, முதலீடு X அச்சிலும், வருமானம் Y அச்சிலும் வரைந்தால், தூண்டப்பட்ட முதலீடு வரைவு கோடு, நேர்மறை சாய்வு கோடாக இருக்கும்.)
48) முதலீட்டு சார்பின் காரணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. வட்டி வீதம்
II. நிலையற்ற தன்மை
III. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்
IV. புதிய பொருட்களின் தேவை
A) I, II, III மட்டும்
B) II, III, IV மட்டும்
C) I, III, IV மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – தொன்மை பொருளியல் அறிஞர்கள் முதலீடு வட்டி வீதத்தை மட்டுமே சார்ந்தது என்று கூறினார்கள்.ஆனால் உண்மையில் முதலீடு பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. அவை வட்டி வீதம், நிலையற்ற தன்மை அரசியல் சூழல், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், மூலதன பொருட்களின் இருப்பு, புதிய பொருட்களின் தேவை, முதலீட்டாளர்களின் வருமான அளவு, கண்டுபிடிப்புகளும் புத்தாக்கமும், நுகர்வு தேவை, அரசு கொள்கை, மூலதனம் கிடைத்தல் மற்றும் முதலீட்டாளர்களின் சொத்துக்களின் ரொக்கத்தன்மை.)
49) கீன்ஸின் கூற்றுப்படி கீழ்கண்டவைகளுள் எது முதலீட்டு அளவை முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக விளங்குகின்றது?
I. வாணிப எதிர்பார்ப்பு
II. லாபம்
III. மக்கள் தொகை
A) I, II மட்டும் சரி
B) I, III மட்டும் சரி
C) II, III mat சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – கீன்ஸின் கருத்துப்படி, வாலிப எதிர்பார்ப்பு மற்றும் லாபம் ஆகியவை முதலீட்டு அளவை முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக விளங்குகின்றது. மேலும் அவர் முதலீடு மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் மற்றும் வட்டி வீதத்தை பொருத்து அமையும் என்கிறார்.)
50) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தனியார் முதலீடு என்பது மூலதன இருப்பை அதாவது தொழிற்சாலை அல்லது இயந்திரங்களை அதிகரிக்கச் செய்வது ஆகும்.
கூற்று 2 – மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் என்பது முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும், எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – தனியார் முதலீடு என்பது மூலதன இருப்பை அதாவது தொழிற்சாலை அல்லது இயந்திரங்களை அதிகரிக்கச் செய்வது ஆகும்.மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் என்பது முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும், எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகும். குறிப்பாக இருக்கின்ற ஆண்டு உற்பத்தியில் ஏற்படும் இறுதியாக அதிகரிக்கப்பட்ட ஒரு அலகு மூலதனத்தினால் ஏற்பட்ட உற்பத்தியாகும்.)
51) மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் 5% எனவும், வட்டி வீதம் 4% ஆக இருந்தால், 4% வட்டியில் கடன்_______________.
A) வாங்கலாம்
B) வாங்கக்கூடாது
C) கண்டிப்பாக வாங்கலாம்
D) கண்டிப்பாக வாங்கக்கூடாது
(குறிப்பு – கீன்ஸின் கூற்றுப்படி, வாணிப எதிர்பார்ப்பு மற்றும் லாபம் ஆகியவை முதலீட்டு அளவை முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் 5% எனவும், வட்டி வீதம் 4% ஆக இருந்தால், 4% வட்டியில் கடன் வாங்கலாம், ஏனெனில் 5% உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதால், 4% வட்டியில் கடன் வாங்கலாம்.)
52) கடன்களின் மீதான வட்டி வீதம் உயரும் போது?
A) முதலீடுகள் அதிகரிக்கும்
B) முதலீடுகள் குறையும்
C) சேமிப்பு அதிகரிக்கும்
D) செலவுகள் குறையும்
(குறிப்பு – வட்டி வீதத்திற்கும், முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவு பொருளாதாரத்தை பாதிக்கிறது. கடன்களின் மீதான வட்டி விகிதம் உயரும்போது குறைவான முதலீடு நடைபெறும். ஏனெனில் வட்டி வீதம் அதிகரிக்கும் போது கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். இதனால் அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும்.)
53) கடனுக்கான செலவு குறையும்போது?
A) முதலீடுகள் அதிகரிக்கும்
B) முதலீடுகள் குறையும்
C) செலவுகள் அதிகரிக்கும்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – கடனுக்கான செலவு உண்மையாக உயரும் போது குறைந்த அளவு முதலீட்டில் லாபம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்வர். கடனுக்கான செலவு குறையும் போது முதலீடுகள் அதிகரிக்கும். உதாரணமாக கடனுக்கான செலவு 7 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறையும் போது முதலீட்டின் அளவு 80 கோடியில் இருந்து 100 கோடியாக அதிகரிக்கும்.)
54) மூலதன இறுதிநிலை ஆக்கம் என்ற கருத்தினை அறிமுகம் செய்தவர் யார்?
A) கீன்ஸ்
B) ராவ்
C) தாமஸ்
D) ஹென்றி
(குறிப்பு – தன்னிச்சையான முதலீட்டை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியான மூலதன இறுதிநிலை ஆக்கம் என்ற கருத்தினை ஜே.எம்.கீன்ஸ் 1936ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். கூடுதலான மூலதன அலகிலிருந்து எதிர்பார்க்கப்படும் லாபமே மூலதன ஆக்கத்திறன் (MEC) ஆகும்.)
55) மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் கீழ்காணும் எதனைச் சார்ந்து இருக்கிறது?
I. மூலதன சொத்தின் மூலம் கிடைக்கும் வருங்கால லாபம்
II. மூலதன சொத்தின் அளிப்பு விலை.
A) I-ஐ மட்டுமே
B) II-ஐ மட்டுமே
C) இரண்டையும் சார்ந்துள்ளது
D) இவ்விரண்டையும் சார்ந்திருக்கவில்லை
(குறிப்பு – கீன்ஸின் கூற்றுப்படி மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் (MEC) இரண்டு காரணிகளை சார்ந்துள்ளது.அவை 1) மூலதன சொத்தின் மூலம் கிடைக்கும் வருங்கால லாபம் மற்றும் 2) மூலதன சொத்தின் அளிப்பு விலை என்பன ஆகும்.)
56) மூலதன இறுதிநிலை ஆக்கத் திறனை பாதிக்கும் காரணிகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?
I. மூலதனத்தின் செலவு
II. மூலதனத்தின் வாழ்நாளில் எதிர்பார்க்கப்படும் விளைவு விகிதம்.
III. அங்காடியில் உள்ள வட்டி விகிதம்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தையும்
(குறிப்பு – முதலீட்டு முடிவை மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட மூன்று காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.அவை 1) மூலதனத்தின் செலவு, 2) அதன் வாழ்நாளில் எதிர்பார்க்கப்படும் விளைவு விகிதம் மற்றும் 3) அங்காடியில் உள்ள வட்டி விகிதம் என்பன ஆகும். மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் குறுகியகால மற்றும் நீண்டகால காரணிகளால் தூண்டப்படுகிறது.)
57) மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை தூண்டும் குறுகிய கால காரணிகளுள் அல்லாதவை கீழ்க்கண்டவற்றில் எது?
A) பொருளுக்கான தேவை
B) நீர்மைத்தன்மையுள்ள சொத்துக்கள்
C) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்
D) நடைமுறை முதலீட்டு வீதம்
(குறிப்பு – மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை தூண்டும் குறுகிய கால காரணிகள் ஆவன, பொருளுக்கான தேவை, நீர்மைத்தன்மை உள்ள சொத்துக்கள் வருமானத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் நடைமுறை முதலீட்டு விகிதம், நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற அலைகள் என்பன ஆகும்.)
58) மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை தூண்டும் குறுகிய கால காரணிகளுள் அல்லாதவை கீழ்க்கண்டவற்றில் எது?
A) மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்
B) தொழில்நுட்ப முன்னேற்றம்
C) நடைமுறை முதலீட்டு வீதம்
D) பண மற்றும் நிதி கொள்கை
(குறிப்பு – மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை தூண்டும் நீண்டகால கால காரணிகள் ஆவன, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிதிக் கொள்கை, அரசியல் சூழ்நிலை, வளங்கள் கிடைப்பது போன்றவைகள் ஆகும்.)
59) தொழில்முனைவோர்கள் பொருள்களுக்கான தேவை குறையும் என்றும், செலவு கூடும் என்று எதிர்பார்த்தால் முதலீடு_____________.
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாற்றங்கள் இருக்கும்
D) எந்த மாற்றமும் இருக்காது
(குறிப்பு – மூலதன இருந்து நிலை ஆக்கத்திறனை மீண்டும் குறுகிய கால காரணியான, பொருளுக்கான தேவை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் சந்தை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பும் அதன் செலவு குறைந்து காணப்படும் போது முதலீட்டிலிருந்து எதிர்பார்க்கும் வருவாய் அதிகரிக்கும் என்று கூறுகிறது.தொழில்முனைவோர்கள் பொருள்களுக்கான தேவை குறையும் என்றும், செலவு கூடும் என்று எதிர்பார்த்தால் முதலீடு குறையும்.)
60) செயல்திறன் மூலதனத்தை அதிக அளவில் தொழில் முனைவோர் வைத்திருந்தால் தன் வழியே வரும் முதலீட்டு வாய்ப்புகளின் நன்மையை ஏற்றுக் கொள்வர் என்பது?
A) பொருளுக்கான தேவை
B) நீர்மை தன்மையுள்ள சொத்துக்கள்
C) வருமானத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்
D) நடைமுறை முதலீடு வீதம்
(குறிப்பு – மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை தூண்டும் குறுகிய கால காரணியான நீர்மைத்தன்மை உள்ள சொத்துக்கள் என்பது கூறுவது யாதெனில், செயல்திறன் மூலதனத்தை அதிக அளவில் தொழில் முனைவோர் வைத்திருந்தால் தன் வழியே வரும் முதலீட்டு வாய்ப்புகளின் நன்மையை ஏற்றுக் கொள்வர். இது மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத் திறனை அதிகரிக்கும்.)
61) வணிக சமூகம் எதிர்பாராமல் லாபமோ அல்லது வரி சலுகைகளோ பெற்றால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன்?
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாற்றம் இருக்காது
D) எல்லாமே தவறு
(குறிப்பு – தொழில் முனைவோரின் திடீர் வருமான மாற்றமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கும். வணிக சமூகம் எதிர்பாராமல் லாபமோ அல்லது வரி சலுகைகளையோ பெற்றால் மூலதனத்தின் இறுதிநிலை திறன் அதிகரிக்கும். மாறாக வருமானம் குறைந்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் குறையும்.)
62) மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் அதிகரித்தால் நாட்டில் முதலீடு?
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாறிக்கொண்டே இருக்கும்
D) மாற்றம் இருக்காது.
(குறிப்பு – தொழில் முனைவோரின் திரி வருமான மாற்றமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கும்.வணிக சமூகம் எதிர்பாராமல் லாபமோ அல்லது வரி சலுகைகளையோ பெற்றால் மூலதனத்தின் இறுதிநிலை திறன் அதிகரிக்கும். ஆதலால் நாட்டில் முதலீடு அதிகரிக்கும்.)
63) ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட நிலையில் அதே தொழிலில் மேலும் முதலீடு செய்வதால் மூலதனத்தின் இறுதி நிலை ஆக்கத்திறன் ____________.
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாறிக்கொண்டே இருக்கும்
D) மாற்றம் இருக்காது.
(குறிப்பு – குறிப்பிட்ட தொழில்களில் உள்ள நடைமுறை முதலீட்டு வீதமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கின்ற மற்றொறு காரணி ஆகும். குறிப்பிட்ட தொழில்கள் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட நிலையில் அதே தொழிலில் முதலீடு செய்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனை குறைக்கும்.)
64) தொழில் செய்பவர் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும் என்பது_____________ஆகும்.
A) பொருளுக்கான தேவை என்னும் காரணி
B) நீர்மை தன்மையுள்ள சொத்துக்கள் என்னும் காரணி
C) நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற அலைகள் என்னும் காரணி
D) நடைமுறை முதலீட்டு வீதம் என்ற காரணி
(குறிப்பு – வணிக சூழ்நிலையில் ஏற்படும் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற நிலைகள் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனை பாதிக்கிறது. தொழில் செய்பவர் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற அலைகள் என்னும் காரணி ஆகும். மாறாக நம்பிக்கையற்று இருந்தால் இறுதிநிலை உற்பத்தி திறன் குறைவாக இருக்கும்.)
65) மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தால்?
I. பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்
II. பொருள்களுக்கான தேவை குறையும்
III. மூலதன ஆக்கத்திறன் அதிகரிக்கும்
IV. மூலதன ஆக்கத்திறன் குறையும்
A) I, III மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, IV மட்டும் சரி
D) II, IV மட்டும் சரி
(குறிப்பு – மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருந்தால் வெவ்வேறு வகையான பொருள்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவான மக்கள்தொகை வளர்ச்சி மூலதன ஆக்கத் திறனை அதிகரிக்கும், குறைவான வளர்ச்சி முதலீட்டை குறைத்து அதன் மூலம் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை குறைக்கும்.)
66) இருபதாம் நூற்றாண்டில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் கீழ்காணும் எந்தத் துறைகளில் பெரிய அளவில் உந்துதல் ஏற்பட்டது?
I. ரப்பர் தொழிற்சாலை
II. எஃகு தொழிற்சாலை
III. எண்ணெய் தொழிற்சாலை
A) I, II இல் மட்டும்
B) II, III இல் மட்டும்
C) I, III இல் மட்டும்
D) இவை அனைத்திலும்
(குறிப்பு – தொழில்களில் முதலீடும், தொழில்நுட்ப முன்னேற்றமும் ஏற்பட்டால் நிகர லாபத்தின் சுபிட்சமான ஏற்றத்தை கொண்டுவரும். எடுத்துக்காட்டாக இருபதாம் நூற்றாண்டில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் ரப்பர் தொழிற்சாலை, எஃகு தொழிற்சாலை மற்றும் எண்ணெய் தொழிற்சாலை முதலியவற்றில் பெருமளவில் உந்துதல் ஏற்பட செய்தது. ஆதலால் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் பலவகையான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளித்து மூலதன இறுதிநிலை ஆக்கத் திறனை அதிகரிக்கிறது.)
67) கீழ்க்காணும் எது மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்காது?
A) மலிவு பணக் கொள்கை
B) தளர்வான வரிக் கொள்கை
C) அரசியல் நிலையற்ற தன்மை
D) சுமூகமான நிர்வாகம்
(குறிப்பு – மலிவு பணக் கொள்கை மற்றும் தளர்வான வரிக் கொள்கை அதிகப்படியான லாபத்தை ஈட்ட வழி செய்து அதனால் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை உயர்த்துகிறது. அரசியல் நிலை பெற்ற தன்மை, சுமூகமான நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவையும் மூலதன இறுதிநிலை ஆக்கத் திறனை அதிகரிக்கிறது.)
68) கீழ்க்கண்டவற்றுள் எது மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கிறது?
I. மலிவான இயற்கை வளங்கள்
II. மிகுதியான இயற்கை வளங்கள்
III. திறன்மிக்க உழைப்பாளர்கள்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மலிவான மற்றும் மிகுதியான இயற்கை வளங்கள், திறன்மிக்க உழைப்பாளர்கள் மூலதன இருப்பு போன்றவையும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கின்றது. இவை அனைத்தும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கும் நீண்டகால காரணி ஆகும்.)
69) முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறன் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மூலதனத்தின் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள், விலையை தூண்டும் மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது.
கூற்று 2 – முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தித் திறன் என்பது ஆரம்ப மூலதனத்திற்கு பின்னர் வந்த மூலதனத்தின் விளைவு விகிதத்தை காட்டுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – ஒரு குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் முதலீட்டிலிருந்து எதிர்பார்க்கப்படுகிற விளைவின் விகிதம் முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறன் ஆகும். கடனுக்கான வட்டி வீதம் அதிகமாக இருந்தால் பல்வேறு திட்டங்களில் தொழில் செய்வதற்கான ஆர்வம் குறையும். இதனால் நிறுவனங்களின் லாப விகிதம் குறையும்.)
70) கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A) மூலதனத்தின் இறுதி நிலை உற்பத்தி திறன் என்பது வரைபடத்தில் நிற்கும் அச்சில் மூலதன இருப்பு அளக்கப்படுகிறது.
B) முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தி திறன் ஆரம்ப மூலதனத்திற்கு பின்னர் வந்த மூலதனத்தின் விளைவு விகிதத்தை காட்டுகிறது.
C) மூலதனத்தின் இறுதி நிலை உற்பத்தி திறன் என்பது ஒரு “இருப்பு” கருத்துரு ஆகும்.
D) முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தி திறன் என்பது ஒரு “ஓட்ட” கருத்துரு ஆகும்.
(குறிப்பு – மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தி திறன் என்பது, ஆரம்பத்தில் உள்ள மூலதனத்தை கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு மூலதன அலகிலிருந்து கிடைக்கும் விளைவை குறைக்கிறது. முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தி திறன் என்பது, கொடுக்கப்பட்ட மூலதன இருப்பில் ஒவ்வொரு வட்டி வீத அளவிலும் நிகர முதலீடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்கிறது.)
71) பெருக்கி கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
A) ஜே.எம்.கீன்ஸ்
B) V.K.R.V.ராவ்
C) எப்.ஏ.கான்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – பெருக்கி (Multiplier) கோட்பாட்டை முதன் முதலில் எப்.ஏ.கான் வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கினார்.ஜே.எம்.கீன்ஸ் இதனை வருமானம் அல்லது முதலீட்டு பெருக்கியாக மாற்றி அமைத்தார்.)
72) பெருக்கி என்பது கீழ்காணும் இந்த சூத்திரத்தின் மூலம் விளக்கப்படுகிறது?
A) K = ΔY / ΔI
B) K = ΔI / ΔY
C) K = ΔY + ΔI
D) K = ΔY – ΔI
(குறிப்பு – தேசிய வருமானத்தின் மாற்றத்திற்கும், முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி (Multiplier) என்று வரையறுக்கலாம். ΔY என்பது வருமானத்தில் அதிகரிப்பையும், ΔI என்பது முதலீட்டில் அதிகரிப்பையும் குறிக்கிறது.)
73) பெருக்கியின் கோட்பாடுகளை வகுத்தவர் யார்?
A) ஜே.எம்.கீன்ஸ்
B) V.K.R.V.ராவ்
C) எப்.ஏ.கான்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – கீன்ஸின் பெருக்கியின் கோட்பாடு சில எடுகோள்களின் அடிப்படையில் செயல்படுகிறது.கீன்ஸ் பெருக்கியின் எடுகோள்களாக, ஒன்பது எடுகோள்களை வகுத்துள்ளார்.)
74) கீன்ஸ் பெருக்கியின் எடுகோள்களுள் தவறானது எது?
A) தன்னிச்சையான முதலீட்டில் மாற்றம் உண்டு
B) தூண்டப்பட்ட முதலீடு உண்டு.
C) இறுதிநிலை நுகர்வு நாட்டம் நிலையாக இருக்கும்.
D) பெருக்கியின் செயல்பாட்டில் கால இடைவெளி இல்லை.
(குறிப்பு – கீன்ஸின் பெருக்கியின் கோட்பாட்டின் எடுகோள்களாவன 1) தன்னிச்சையான முதலீட்டில் மாற்றம் உண்டு, 2) தூண்டப்பட்ட முதலீடு இல்லை, 3) இறுதிநிலை நுகர்வு நாட்டம் நிலையாக இருக்கும், 4) நுகர்வு நடப்பு வருமானத்தை சார்ந்து அமையும், 5) பெருக்கியின் செயல்பாட்டில் கால இடைவெளி இல்லை, போன்றவைகளாகும்.)
75) கீன்ஸ் பெருக்கியின் எடுகோள்களுள் சரியானது எது?
I. விலையில் மாற்றம் இல்லை.
II. இது நாடு மூடிய பொருளாதாரம் ஆகும்.அன்னிய நாட்டின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது.
III. உறுதி தேவைக்கேற்ப நுகர்வு பொருட்கள் கிடைக்கும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – 1)விலையில் மாற்றம் இல்லை, 2) இது நாடு மூடிய பொருளாதாரம் ஆகும், 3) அன்னிய நாட்டின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது, 4) உறுதி தேவைக்கேற்ப நுகர்வு பொருட்கள் கிடைக்கும், 5) முழு நிலை வேலைவாய்ப்பு நிலைக்கு கீழ் பொருளாதாரம் செயல்படுகிறது போன்றவைகளாகும்.)
76) இறுதிநிலை நுகர்வு நாட்டத்திற்கும், பெருக்கிக்கும் உள்ள உறவு எவ்வாறு விளக்கப்படுகிறது?
A) K = 1 / 1 – MPC
B) K = 1 / MPC – 1
C) K = MPC + 1
D) K = MPC – 1
(குறிப்பு – பெருக்கியின் மதிப்பு MPC யை பொருத்து அமையும். ஒன்றிலிருந்து இறுதிநிலை நுகர்வு நாட்ட மதிப்பை கழித்து பெறப்படும் மதிப்பின் தலைகீழ் விகிதமே பெருக்கி ஆகும். இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தின் மதிப்பு 1-MPC.(MPS+MPC=1) என்பதால் பெருக்கியின் மதிப்பு 1/MPS ஆகும்.)
77) எண் வடிவில் MPC யின் மதிப்பு 0.75 என்றால் MPS யின் மதிப்பு என்ன?
A) 0.25
B) 0.50
C) 0.75
D) 1
(குறிப்பு – எண் வடிவில் MPC யின் மதிப்பு 0.75 என்றால் MPS இன் மதிப்பு 0.25 ஆகவும், K வின் மதிப்பு 4 ஆகவும் இருக்கும்.அதாவது,
K = 1/1-MPC
K = 1 / 1- 0.75
K = 1 / 0.25
K = 4)
78) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்மறை பெருக்கி என்பது உட்செலுத்துதலில் துவக்க நிலையில் ஏற்படும் அதிகரிப்பானது( கசிவு குறையும்போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலை உயர்வை ஏற்படுத்தும்.
கூற்று 2 – எதிர்மறை பெருக்கி என்பது, உட்செலுத்துதல் துவக்க நிலையில் ஏற்படும் குறைவானது( கசிவு அதிகரிக்கும் போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலை குறைவை ஏற்படுத்தும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – நேர்மறை பெருக்கி என்பது உட்செலுத்துதலில் துவக்க நிலையில் ஏற்படும் அதிகரிப்பானது( கசிவு குறையும்போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலை உயர்வை ஏற்படுத்தும்.எதிர்மறை பெருக்கி என்பது, உட்செலுத்துதல் துவக்க நிலையில் ஏற்படும் குறைவானது( கசிவு அதிகரிக்கும் போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலை குறைவை ஏற்படுத்தும்.)
79) பெருக்கியின் வகையான இயங்கா பெருக்கியின் வேறு பெயர்களாவன கீழ்க்கண்டவற்றுள் எது?
I. உடன் நிகழ் பெருக்கி
II. காலமில்லா பெருக்கி
III. தொடர் பெருக்கி
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – இயங்கா பெருக்கி என்பதில், முதலீடு மாற்றமும் வருமான மாற்றமும் உடன் நிகழ்பவை ஆகும். காலதாமதம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இது உடன் நிகழ் பெருக்கி எனவும், காலமில்லா பெருக்கி எனவும், தர்க்கரீதி பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது.)
80) இயங்கா பெருக்கியின் அனுமானத்தின் படி, பொருளாதாரம் ஒரு சமநிலையில் இருந்து மறு சமநிலை வருமானத்திற்கு போகும்போது MPC யின் மதிப்பானது?
A) அதிகரிக்கும்
B) குறையும்
C) மாறிக்கொண்டே இருக்கும்
D) மாறாது.
(குறிப்பு – இயங்கா பெருக்கியின் அனுமானத்தின் படி, பொருளாதாரம் ஒரு சமநிலையில் இருந்து மறு சமநிலை வருமானத்திற்கு போகும்போது MPC யின் மதிப்பானது மாறாது. இயங்கா பெருக்கியில் முதலீடு மாற்றமும், வருமான மாற்றமும் உடன் நிகழ்பவை ஆகும்.)
81) இயங்கும் பெருக்கி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – இது தர்க்கரீதி பெருக்கி என அழைக்கப்படுகிறது.
கூற்று 2 – இதில் முதலீடு செய்த உடனே வருவாய் கூடி விடுவதில்லை. ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பணம் செல்ல கால தாமதம் ஆகலாம்.
கூற்று 3 – வருமானம் கூடுவதற்கும் நுகர்வு கூடுவதற்கும் இடையில் கால இடைவெளி அதிகம்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – இயங்கும் பெருக்கி என்பது தொடர்நிலை பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது. உண்மையில் முதலீடு செய்த உடனே வருவாய் கூடி விடுவதில்லை. ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பணம் செல்ல கால தாமதம் ஆகலாம்.ருமானம் கூடுவதற்கும் நுகர்வு கூடுவதற்கும் இடையில் கால இடைவெளி அதிகம்.)
82) மக்கள் அதிகரித்த வருமானத்தை வேறு ஒரு பொருளின் மீது செலவு செய்வார்கள் இவ்வகை செலவுகள்______________ எனப்படும்.
A) கழிவுகள்
B) கசிவுகள்
C) மாற்று செலவுகள்
D) மாற்று கசிவுகள்
(குறிப்பு – பெருக்கியின் எடுகோள் ஆனது அதிகரித்த வருமானத்தின் ஒரு பகுதி நுகர்விற்காக செலவிடப்படுகின்றது என்பதே. ஆனால் நடைமுறையில் மக்கள் அதிகரித்த வருமானத்தை வேறு ஒரு பொருள்களின் மீதும் செலவு செய்வார்கள். இவ்வகை செலவுகள் கசிவுகள் எனப்படும்.)
83) பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக அதிகரித்த வருமானம் பயன்படுமானால் MPC யின் மதிப்பு?
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாறிக்கொண்டே இருக்கும்
D) மாறாது
(குறிப்பு – பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக அதிகரித்த வருமானம் பயன்படுமானால், MPC குறைந்து அதன் காரணமாக பெருக்கியின் மதிப்பு தடைபடும். இது பெருக்கியின் கசிவுகள் என கருதப்படுகிறது.)
84) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அதிகரித்த வருமானம் நடைமுறையிலுள்ள செல்வங்களாக நிலம் மற்றும் கட்டிடம் வாங்குவதற்காக பயன்படுத்தினால், பணம் சுழன்று கொண்டு இருக்கும் நுகர்வுக்குள் வராது. இதனால் பெருக்கியின் மதிப்பு பாதிக்கும்.
கூற்று 2 – இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும், பணிகளுக்காகவும் வருமானத்தை செலவு செய்தால், நாட்டை விட்டு பணம் வெளியேறும். இது பெருக்கியின் மதிப்பை பாதிக்கும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அதிகரித்த வருமானம் நடைமுறையிலுள்ள செல்வங்களாக நிலம் கட்டிடம் மற்றும் பங்குகளை வாங்குவதற்கான பயன்படுத்தினால் பணம் மக்களிடையே சுழன்று கொண்டிருக்கும்.நுகர்வுக்குள் வராது.இதன் விளைவாக பெருக்கியின் மதிப்பு பாதிக்கும். அதேபோல இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும், பணிகளுக்காகவும் வருமானத்தை செலவு செய்தால் நாட்டை விட்டு பணம் வெளியேறும்.இதுவும் பெருக்கியின்மதிப்பை பாதிக்கும். இவை பெருக்கியின் கசிவுகள் எனக் கருதப்படுகிறது.)
85) பணவீக்கத்தினால் பெருக்கியின் மதிப்பு?
A) குறையும்
B) அதிகரிக்கும்
C) மாறிக்கொண்டே இருக்கும்
D) மாறாது
(குறிப்பு – பெருக்கி கோட்பாடு தேவை ஏற்பட்ட உடன் நுகர்வதற்கு பொருட்கள் அளிக்கப்படுவதாக அனுமானம் கொண்டுள்ளது. சில நேரங்களில் கால இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியில் தேவைக்கேற்ப அளிப்பு இருக்காது. அதனால் பண வீக்கம் ஏற்படும். இது நுகர்வு செலவையும், பெருக்கியின் மதிப்பையும் குறைத்து விடும். )
86) பெருக்கியின் பயன்களாக கருதப்படுபவைகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. பெருக்கி வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது.
II. பெருக்கி அரசாங்க கொள்கைகளை வழிவகுக்க உதவி புரிகிறது.
III. சேமிப்பை விட முதலீட்டை அதிகப்படுத்த பெருக்கி உதவுகிறது.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு கோட்பாட்டில் முதலீட்டின் முக்கியத்துவத்தை பெருக்கி சுட்டிக்காட்டுகிறது.வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது. சேமிப்பு (S) மற்றும் முதலீடு (I) இடையே சமநிலை ஏற்பட உதவுகிறது. வேலையில்லா நிலையை போக்கவும் முழு வேலைவாய்ப்பு நிலையை அடையவும் உதவுகின்றது.)
87) பெருக்கியின் வகைகளுள் அல்லாதது எது?
A) வரி பெருக்கி
B) வேலை வாய்ப்பு பெருக்கி
C) வெளிநாட்டு வர்த்தக பெருக்கி
D) லாப பெருக்கி
(குறிப்பு – பெருக்கி (MULTIPLIER)நான்கு வகைப்படும்.அவை 1) வரி பெருக்கி, 2) வேலை வாய்ப்பு பெருக்கி, 3) வெளிநாட்டு வர்த்தக பெருக்கி, 4) முதலீடு பெருக்கி என்பன ஆகும்.)
88) முடுக்கி கோட்பாடு என்னும் கருத்து தோன்ற அடிக்கோடிட்டவர்களுள் அல்லாதவர் யார்?
A) அஃடாலி
B) ஹாட்ரி
C) தாமஸ்
D) பிக்கர் டைக்
(குறிப்பு – முடுக்கி கோட்பாட்டின் தோற்றம் அஃடாலியின் (1909), ஹாட்ரி (1913) மற்றும் பிக்கர் டைக் (1914) போன்றவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பெறப்பட்டது)
89) முடுக்கி கோட்பாடு என்னும் கருத்தை 1917ஆம் ஆண்டு எளிமையாக தந்தவர் யார்?
A) ஹிக்ஸ்
B) ஜே.எம்.கிளார்க்
C) ஜே.எம்.கீன்ஸ்
D) பிக்கர் டைக்
(குறிப்பு – முடுக்கி கோட்பாட்டின் தோற்றம் அஃடாலியின் (1909), ஹாட்ரி (1913) மற்றும் பிக்கர் டைக் (1914) போன்றவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பெறப்பட்டது. இருந்த போதிலும் இந்தக் கருத்தை செம்மைப்படுத்தி மேம்படுத்தி எளிமையான முடுக்கி மாதிரியாக 1917ஆம் ஆண்டு தந்தவர் ஜே.எம்.கிளார்க் ஆவார். பின்னர் இதனை வணிக சூழலுடன் தொடர்புபடுத்தி மேம்படுத்தியவர்கள் ஹிக்ஸ், சாமுவேல்சன், ஹராடு போன்றவர்கள் ஆவர்.)
90) அதிகரித்த நுகர்வு மற்றும் அதன் விளைவினால் ஏற்படும் அதிகரிக்கும் முதலீட்டுக்கான தொடர்பை குறிப்பது?
A) முடுக்கி
B) வரைவிலக்கணம்
C) பெருக்கி
D) மிகை பெருக்கி
(குறிப்பு – பொருளாதாரத்தில் நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்கின்ற போது பொதுவாக இயந்திரங்களின் தேவையை முடுக்கிவிட்டு அதிகரிக்க வழி செய்யும். முடுக்கி என்பது அதிகரித்த நுகர்வு மற்றும் அதன் விளைவினால் ஏற்படும் அதிகரிக்கும் முதலீட்டிற்கான தொடர்பை குறிக்கும் எண் மதிப்பு ஆகும்.)
91) முடுக்கி கோட்பாட்டினை எவ்வாறு சூத்திரத்தில் விளக்கலாம்?
A) முடுக்கி (β) = Δ I / Δ C
B) முடுக்கி (β) = Δ I + Δ C
C) முடுக்கி (β) = Δ C / Δ I
D) முடுக்கி (β) = Δ C + Δ I
(குறிப்பு – முடுக்கி (β) = Δ I / Δ C. இதில் Δ I என்பது முதலீட்டு செலவில் மாற்றம் என்பதாகும், Δ C என்பது நுகர்வு தேவையில் மாற்றம் என்பதாகும். முடுக்கியானது முதலீட்டு மாற்றத்திற்கும் நுகர்வின் மாற்றத்திற்கும் உள்ள விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.)
92) ரூ.50 கோடி நுகர்வுப் பொருட்களின் தொழில்களில் செலவு செய்யும்போது, ரூ.100 கோடி முதலீட்டு பொருள்கள் தொழில்களில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது.அப்படியெனில் முடுக்கியின் மதிப்பு என்ன?
A) 2
B) 4
C) 0.5
D) 1
(குறிப்பு – முடுக்கி (β) = Δ I / Δ C எனில், முடுக்கி = 100 / 50, முடுக்கி மதிப்பு = 2 ஆகும். “தூண்டப் பெற்ற முதலீட்டிற்கும், தொடக்கத்தில் நுகர்வு செலவில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையே உள்ள விகிதம் தான் முடுக்கி ” என கே.கே.குரிஹாரா என்னும் அறிஞர் வரைவிலக்கணம் வகுத்துள்ளார்.)
93) முடுக்கி கோட்பாட்டின் எடுகோள்கள் ஆவன?
I. நுகர்வு பொருட்கள் தொழில்துறையில் எச்ச சக்தியின்மை.
II. நிலையான மூலதனம் – வெளியீடு விகிதம்
III. மூலதன பொருட்கள் தேவைப்படும் அளவுக்கு பகுக்க முடியும்.
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – முடுக்கி கோட்பாட்டின் எடுகோள்கள் ஆவன, நுகர்வு பொருட்கள் தொழில்துறையில் எச்ச சக்தியின்மை, நிலையான மூலதனம் – வெளியீடு விகிதம், மூலதன பொருட்கள் தேவைப்படும் அளவுக்கு பகுக்க முடியும், தேவையின் அதிகரிக்கும் தன்மை நிலையாக இருக்கும் என்று அனுமானித்தல், நிதி அளிப்பு மற்றும் மற்ற உள்ளீடுகள் நெகிழ்ச்சி உடையது என்பன ஆகும்.)
94) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. கடன் எளிதாகக் கிடைத்தால் மட்டுமே ஒடுக்கி செயல்படும்.
II. முடுக்கியானது தேவை அதிகரித்தல் நிலையானது என்ற நிலையில் மட்டுமே வேலை செய்யும்.
III. நுகர்வு பொருட்கள் தொழிலில் பயன்படுத்தாத அல்லது மிகுதியான திறன் இருந்தால், முடுக்கி கோட்பாடு செயல்படாது.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – முடுக்கி கோட்பாடு சில வரையறைகளை கொண்டுள்ளது. அவையாவன, 1) நிலையான மூலதனம் வெளியீடு விகிதம் என்ற எடுகோள் உண்மையானது அல்ல, 2) மூலதன பொருட்கள் தொழிற்சாலையில் உபரி சக்தி உள்ளதாக அனுமதிக்கப்படுகிறது, 3) கடன் எளிதாக கிடைத்தால் மட்டுமே முடுக்கி செயல்படும், 4) முடுக்கியானது தேவை அதிகரித்தல் நிலையானது என்ற நிலையில் மட்டுமே வேலை செய்யும் போன்றவைகளாகும்.)
95) மிகை பெருக்கி என்பதை உருவாக்கியவர் யார்?
A) ஹிக்ஸ்
B) ஜே.எம்.கிளார்க்
C) ஜே.எம்.கீன்ஸ்
D) பிக்கர் டைக்
(குறிப்பு – ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்தவிளைவை அறிய ஹிக்ஸ், K மற்றும் β வை அனைத்தும் இதில் பேருக்கு என்பதை கணித ரீதியில் உருவாக்கினார். மிகைபெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.)
96) நெம்புகோல் இயக்க விளைவு எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
A) Y = C + IA + IP
B) Y = C – IA + IP
C) Y = C + IA – IP
D) Y = C ( IA + IP )
(குறிப்பு – பெருக்கியின் தாக்கமும், முடுக்கியின் தாக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும் தாக்கம் நெம்புகோல் இயக்க விளைவு எனப்படும். இது பொருளாதாரத்தில் அதிகமான அல்லது குறைவான வருமானம் பெருக்குவதை கூறுகின்றது. குறியீடாக கூறினால் Y = C + IA + IP என்பது நெம்புகோல் இயக்க விளைவு என்பதாகும்.)
97) Y = C + IA + IP என்பதில் ” IP ” என்பது என்ன?
A) மொத்த வருவாய்
B) நுகர்வு செலவு
C) தன்னிச்சையான முதலீடு
D) தூண்டப்பட்ட தனியார் முதலீடு
(குறிப்பு – Y = C + IA + IP என்பதில் Y – மொத்த வருவாயையும், C – நுகர்வையும், IA – தன்னிச்சையான முதலீட்டையும், IP – தூண்டப்பட்ட தனியார் முதலீட்டையும் குறிக்கிறது.)
98) பொருத்துக
I. சராசரி நுகர்வு விருப்பு – a ) MPC
II. இறுதிநிலை நுகர்வு விருப்பு – b) MPS
III. சராசரி சேமிப்பு விருப்பு – c) APC
IV. இறுதிநிலை சேமிப்பு விருப்பு – d) APS
A) I-c, II-a, III-d, IV-b
B) I-b, II-a, III-d, IV-c
C) I-b, II-d, III-a, IV-c
D) I-c, II-d, III-a, IV-b
(குறிப்பு – நுகர்வு சார்பானது தேசிய வருவாய் மற்றும் நுகர்வு செலவுகளுக்கு இடையேயான தொடர்பினை சராசரி நுகர்வு விருப்பு(APC), இறுதிநிலை நுகர்வு விருப்பு(MPC), சராசரி சேமிப்பு விருப்பு(APS), இறுதிநிலை சேமிப்பு விருப்பு (MPS) என்பதன் வாயிலாக எடுத்துரைக்கிறது. உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற காரணிகள் நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன)
99) பொருத்துக.
I. சராசரி நுகர்வு விருப்பு – a ) s / y
II. இறுதிநிலை நுகர்வு விருப்பு – b) Δc / Δy
III. சராசரி சேமிப்பு விருப்பு – c) c / y
IV. இறுதிநிலை சேமிப்பு விருப்பு – d) Δs / Δy
A) I-c, II-b, III-a, IV-d
B) I-b, II-a, III-d, IV-c
C) I-b, II-d, III-a, IV-c
D) I-c, II-d, III-a, IV-b
(குறிப்பு – நுகர்வு செலவை வருவாயால் வகுக்கக் கிடைப்பது சராசரி நுகர்வு விருப்பு ஆகும். நுகர்வு செலவு மாற்றத்தை வருவாய் மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது இறுதிநிலை நுகர்வு விருப்பு ஆகும்.சேமிப்பை வருவாயால் வகுக்கக் கிடைப்பது சராசரி சேமிப்பு விருப்பு ஆகும். சேமிப்பு மாற்றத்தை வருவாய் மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது இறுதிநிலை சேமிப்பு விருப்பு ஆகும்.)
100) இறக்குமதி பெருக்கியின் மதிப்பை?
A) குறைக்கும்
B) அதிகரிக்கும்
C) மாற்றிக்கொண்டே இருக்கும்
D) மாற்றாது
(குறிப்பு – இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும் பணிகளுக்காகவும் உன் மானத்தை செலவு செய்தால் நாட்டை விட்டு பணம் வெளியேறும். எனவே இறக்குமதி பெருக்கியின் மதிப்பை குறைக்கும்.)