நிதிப்பொருளியல் 12th Economics Lesson 7 Questions in Tamil
12th Economics Lesson 7 Questions in Tamil
7] நிதிப்பொருளியல்
1) நிதிப் பொருளியல் என்ற வார்த்தை கீழ்க்காணும் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
A) பொது நிதி
B) நிதியியல்
C) பொது நிதியியல்
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – ‘நிதிப்பொருளியல்’ என்ற பதம் புதிய ஒன்றாகும். இதன் பழைய மற்றும் பிரசித்தி பெற்ற பாடம் ‘பொதுநிதி’ என்பதாகும். பொதுநிதி என்ற பாடம் அரசு நிதி பற்றிய செயல்பாடுகளோடு தொடர்புடையது.)
2) பொது நிதி என்பது?
I. ஒரு அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது.
II. ஒரு அரசு தனது நிதி வளங்களை செலவழிப்பது.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – “பிசிகல்”என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான “கூடை” என பொருள்படும்.இது “பொதுவான பை” என்பதை குறிக்கிறது. எனவே “பொதுநிதி” என்பதை “நிதி பொருளியல்”என அழைக்கப்படுகிறது. பொது நிதி என்பது ஒரு அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது மற்றும் செலவழிப்பது பற்றி கூறுகிறது.)
3) “அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும் கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்” என்று கூறியவர் யார்?
A) ஆடம் ஸ்மித்
B) டால்டன்
C) கீன்ஸ்
D) வில்லியம் புரூனே
(குறிப்பு – பொது நிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக் கோடாக திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளை பற்றியும், அது ஒன்றோடொன்று சரி செய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது என்று டால்டன் பொதுநிதிக்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார்.)
4) பொது நிதியின் துணைபிரிவாக கருதப்படுபவை?
I. பொது வருவாய்
II. பொது செலவு
III. பொது கடன்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – நவீன காலத்தில் பொது நிதியியல் ஐந்து துணைப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை பொது வருவாய் பொது செலவு பொதுக் கடன் நிதி நிர்வாகம் மற்றும் நிதி கொள்கை என்பன ஆகும்.)
5) பொது வருவாய் என்பது கீழ்காணும் எவற்றை பற்றி விளக்குகிறது?
I. வரிக்கொள்கை
II. வரிவிகிதம்
III. வரியின் பளு
A) I, II மட்டும்
B) I, III மட்டும்
C) II, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – பொது வருவாய் என்பது வருவாயை பெருக்க கூடிய முறைகளான வரி மற்றும் வரியில்லா வருமானங்கள் பற்றியும் வரிக்கொள்கை, வரி விகிதம், வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது.)
6) உள்நாடு மற்றும் வெளிநாட்டில் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி கூறுவது?
A) பொது வருவாய்
B) பொது செலவு
C) பொதுக்கடன்
D) நிதி நிர்வாகம்
(குறிப்பு – பொதுக் கடன் என்ற பகுதியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி கூறுகிறது. இதில் பொதுக் கடன் சுமை, அதன் விளைவுகள் மற்றும் திரும்ப செலுத்தும் முறை பற்றி இத்தலைப்பின் கீழ் வருகிறது.)
7) பொது நிதியியலின் எந்த துணைப்பிரிவு அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி கூறுகிறது?
A) பொது வருவாய்
B) பொது செலவு
C) நிதி கொள்கை
D) நிதி நிர்வாகம்
(குறிப்பு – அரசின் வரவு செலவுத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி கூறுவது நிதி நிர்வாகம் ஆகும். வரவு செலவுத் திட்டம் என்பது ஒர் ஆண்டிற்கான அரசின் பேரளவு நிதி திட்டம் ஆகும். வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அதனை தயாரிப்பதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, மதிப்பீடு மற்றும் தணிக்கைபோன்றவை நிதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
8) கீழ்க்கண்டவற்றுள் எது நிதிக்கொள்கையின் கருவிகளாகும்?
I. வரிகள்
II. மானியங்கள்
III. பொதுக்கடன்
A) I, II மட்டும்
B) I, III மட்டும்
C) II, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – பொது நிதியியலின் துணைபிரிவுகள் ஆவன, பொது வருவாய், பொது செலவு, பொது கடன், நிதி நிர்வாகம் மற்றும் நிதிக் கொள்கை என்பதாகும். இவற்றுள் வரிகள், மானியங்கள், பொதுக் கடன் மற்றும் பொது செலவு ஆகியவைகள் நிதி கொள்கையின் கருவிகளாகும்.)
9) பொது நிதி மற்றும் தனியார் நிதி ஆகிய இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளுள் அல்லாதது எது?
A) பகுத்தறியும் தன்மை
B) கடனுக்கான வரையறை
C) வளங்களின் பயன்பாடு
D) பணம் அச்சடிக்கும் உரிமை
(குறிப்பு – பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது.பொது நிதி மற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்று போல் இருந்தாலும் அவற்றின் அளவு, நோக்கம், விளைவு, தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.)
10) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை.
கூற்று 2 – பொது நிதி மற்றும் தனியார் நிதி ஆகிய இரண்டுக்குமான கடன்கள் வரையறை கொண்டுள்ளது.
கூற்று 3 – அரசு பணத்தை உருவாக்க முடியும். ஆனால் தனியார் பணத்தை உருவாக்க முடியாது
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லாக் கூற்றுகளும் சரி
(குறிப்பு – பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தை பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டுக்குமான கடன்கள் வரையறை கொண்டுள்ளது. தனது வருவாய்க்கு அப்பால் அரசும் செல்வதில்லை. அரசின் பற்றாக்குறை வரவு செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.)
11) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது.
கூற்று 2 – நிர்வாகத் திறன் என்பது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனை பொறுத்து அமைகிறது.
கூற்று 3 – அரசானது பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனை பெறலாம்.ஆனால் தனியார் இவ்வாறு கடனை பெற முடியாது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லாக் கூற்றுகளும் சரி
(குறிப்பு – தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு உள்ளது. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களை பயன்படுத்த முனைகிறது. நிர்வாகத்திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல் திறனை பொருத்து அமைகிறது. செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நஷ்டங்கள் ஏற்படும்.)
12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. அரசு செலவின மதிப்பீடு செய்து அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது.
II. தனி நபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக்கொள்வார்கள்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – அரசு செலவின மதிப்பீடு செய்து அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது.தனி நபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக தனியார் நிதி என்பது இருக்கக்கூடிய துணி அளவிற்கு மேலங்கி (COAT) தைப்பது போன்றும், பொதுநிதி என்பது மேல் அங்கியின் தேவைக்கேற்ப துணி அளவை முடிவு செய்வது போன்றதாகும்.)
13) பணத்தை அச்சடிப்பது என்பது?
I. பணத்தை உருவாக்குதல்
II. பணத்தை பகிர்வு செய்தல்
III. பணத்தை நிர்வகித்தல்
A) I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். இது பணத்தை உருவாக்குதல், பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தனியார் பணத்தை உருவாக்க முடியாது. அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன் பெறலாம். மேலும் அரசானது பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம். ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனை பெற முடியாது.)
14) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. தனியார் நிதியானது குறுகியகால திட்டங்களுக்கான நிதியை கொண்டவையாகும்.
II. பொதுத் துறையின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தின் சமூக நன்மையை வழங்குவது.
III. தனிநபரின் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறைவாகும். ஆனால் அரசுக்கு அது அதிகமாகும்.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – அரசானது எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு நீண்டகால முடிவினை மேற்கொள்கிறது. அரசின் முதலீடானது பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுதல், மருத்துவமனை மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆனால் தனியார் நிதியானது குறுகிய கால திட்டங்களுக்கான நிதியை கொண்டவை ஆகும். பொதுத் துறையின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் சமூக நன்மையை வழங்குவதாகும். தனியார் துறையின் முக்கிய நோக்கம் லாபத்தை உச்சப்படுத்துவதாகும்.)
15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. அரசு தனது அதிகார வரம்பை பயன்படுத்தி வருவாயைப் பெறமுடியும். தனியாரால் இதை செய்ய முடியாது.
II. பொது நிதிக்கு வருவாய் சார்ந்த பெரிய முடிவுகளை எடுப்பதற்கான திறன் உண்டு. தனியார் நிதிக்கு அது இல்லை.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – தனிநபரின் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறைவாகும்,.ஆனால் அரசுக்கு அதிகமாகும். அரசு தனது அதிகார வரம்பை பயன்படுத்தி வருவாயைப் பெறமுடியும். பொது நிதிக்கு வருவாய் சார்ந்த பெரிய முடிவுகளை எடுப்பதற்கான திறனுண்டு. தனது வருவாயை திறமையாக மற்றும் வெளிப்படையாக அரசால் சரிக்கட்ட முடியும். ஆனால் தனி நபர்கள் அவ்வாறான பெரிய முடிவுகளை எடுக்க முடியாது.)
16) கீழ்க்கண்டவற்றுள் எது தற்கால அரசின் பணிகளுள் அல்லாதது?
A) பேரினப் பொருளாதார கொள்கை
B) முற்றுரிமை கட்டுப்பாடு
C) ஆக்கிரமிப்பு
D) சமூக நலன்
(குறிப்பு – தற்கால அரசானது காவல் அரசாக மட்டுமல்லாமல் நலம் பேணும் அரசாக உள்ளது. இது பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், நாட்டுக்கு உள்ளேயும் வெளியிலும் நிலைத்தன்மை உறுதிசெய்தல், நீடித்த வளர்ச்சிக்கான காரணிகளை பாதுகாத்தல் ஆகியவற்றை பெரிய அளவிலான பங்கினை ஆற்றுகிறது.)
17) கீழ்க்கண்டவற்றுள் எது அரசின் பணியாகும் ?
A) சமூக நீதி
B) பாதுகாப்பு
C) நீதி
D) இவை அனைத்தும்
(குறிப்பு – அரசின் பணிகளாக கருதப்படுபவை, முற்றுரிமை கட்டுப்பாடு, இராணுவம், நீதித்துறை, நிறுவனங்கள், சமூக நலன், கட்டமைப்பு, பேரின பொருளாதாரக் கொள்கை, சமூகநீதி போன்றவைகள் ஆகும்.)
18) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழிவிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது அரசின் முக்கிய பணியாகும்.
கூற்று 2 – நீதியை பரிபாலனம் செய்தல் மற்றும் தகராறுகளை தீர்த்தல் ஆகியவை அரசின் பணியாக கருதப்படுகிறது.
கூற்று 3 – தனி நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தற்கால அரசின் பணியின் கீழ் வருகிறது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லாக் கூற்றுகளும் சரி
(குறிப்பு – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழிவில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது அரசின் முக்கிய பணியாகும். அரசு போதுமான அளவில் காவல் மற்றும் ராணுவ நிலைகளை பராமரிப்பு பாதுகாப்பு பணிகளை செய்கிறது. நீதி பரிபாலனம் செய்தல், தகராறுகளை தீர்த்து வைத்தல் ஆகியவை அரசின் பணியாக கருதப்படுகிறது.எனவே அரசானது அனைத்து வகுப்பினரும் சம நீதி பெறும் வகையில் நீதி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.)
19) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையின் போது சமூகத்தின் சில பிரிவினர் மற்றவர்களைவிட கூடுதல் நன்மை அடைவர்.
II. நிதித்தீர்வை மூலம் வருவாயை மறு பகிர்வு செய்வதற்கு அரசானது தேவைப்படுகிறது.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையின் போது சமூகத்தின் சில பிரிவினர் மற்றவர்களைவிட கூடுதல் நன்மை அடைவர்.நிதித்தீர்வை மூலம் வருவாயை மறு பகிர்வு செய்வதற்கு அரசானது தேவைப்படுகிறது. ஒரு சிலரிடம் பொருளாதார சக்தி குவிந்து காணப்படும் தீமையை களைவது அரசின் முக்கிய பணியாகும். இதனை களைவதற்காக முற்றுரிமை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.)
20) அரசு கீழ்க்காணும் எந்த வழியில் பங்காற்றுகிறது?
I. பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்பவராக
II. பொது மற்றும் சமூக பண்டங்களை அளிப்பவராக
III. பொருளாதார முறையை ஒழுங்குபடுத்துபவராக
A) I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) இம்மூன்றாகவும்
(குறிப்பு – கடைசி மூன்று விதமான வழிகளில் பங்காற்றுகிறது.1)பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்பவராக,2)பொது மற்றும் சமூக பண்டங்களை அளிப்பவராக மற்றும் 3)பொருளாதார முறையை ஒழுங்குபடுத்துபவராக என மூன்று வழிகளில் பங்காற்றுகிறது.)
21) பொது செலவு என்பது கீழ்க்கண்டவருள் யார் செய்வது ஆகும்?
A) மத்திய அரசு
B) மாநில அரசு
C) உள்ளாட்சி அமைப்புகள்
D) இவைகள் அனைத்தும்
(குறிப்பு – மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினம் பொது செலவு ஆகும்.பொது செலவுக்கான வரைவிலக்கணம் “பொது அமைப்புகளான மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சமூகத்தின் பொதுவான விருப்பங்களை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளக்கூடிய செலவுகள் பொது செலவாகும்” என்பதாகும்.)
22) பொது செலவினை பணி அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்?
A) கான்
B) பிளின்
C) ஆடம்ஸ்மித்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – ஆடம் ஸ்மித் பொதுசெலவினை அரசின் பணிகள் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளார். அவை பாதுகாப்பு பணிகள், வணிக பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்பன ஆகும்.)
23) பொது செலவை தன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்தியவர்கள் யார்?
I. கான்
II. கீன்ஸ்
III. பிளின்
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – கான் மற்றும் பிளின் ஆகியோர் பொதுசெலவை நன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறார்கள்.ஆடம் ஸ்மித் பொதுசெலவினை அரசின் பணிகள் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளார்.)
24) கீழ்க்கண்ட செலவுகளுள் எது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய செலவாகும்?
A) போக்குவரத்துக்கான செலவு
B) நீதி நிர்வாக செலவு
C) ஓய்வூதியம்
D) ராணுவம்
(குறிப்பு – கான் மற்றும் பிளின் ஆகியோர் பொது செலவை தன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறார்கள். 1)அனைத்து சமூகத்திற்கும் பயன் அளிக்கின்ற பொது செலவு, 2)சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய செலவு, 3)ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய செலவு, 4)சில நபர்களுக்கு சிறப்பு நன்மைபயக்கும் வகையிலான செலவு என்பன அவையாகும்.)
25) கீழ்க்கண்டவற்றுள் எது சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய மற்றும் முழு சமுதாயத்திற்கும் பொது நன்மை தரக்கூடிய செலவாகும்?
A) ஓய்வூதியம்
B) வேலையின்மைக்கான நிவாரணம்
C) தொழிலுக்கான மானியம்
D) நீதி நிர்வாகம்
(குறிப்பு – சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய மற்றும் முழு சமுதாயத்திற்கும் நன்மை தரக்கூடிய செலவிற்கான எடுத்துக்காட்டு நீதி நிர்வாகம் ஆகும். ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய மற்றும் சமுதாயத்திற்கு மறைமுகமாக நன்மை தரக்கூடிய செலவாக சமூக பாதுகாப்பு, பொதுநலன், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மைக்கான நிவாரணம் ஆகியவை கருதப்படுகிறது.)
26) கீழ்க்கண்ட செலவுகளுள் எது ஆடம்ஸ்மித்தின் பாதுகாத்தல் பணிக்கான பொதுசெலவாக கருதப்படுகிறது?
I. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
II. காவல்துறை
III. நீதித்துறை
A) I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) II, III மட்டும்
(குறிப்பு – ஆடம்ஸ்மித் வகுத்த பாதுகாத்தல் பணிக்கான பொதுசெலவுகள் என்பது, நாட்டின் குடிமக்களை அந்நிய ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு சீரழிவு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதற்கான செலவை உள்ளடக்கியுள்ளது. காவல்துறை நீதிமன்றங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் இதனுள் அடங்கும். வணிகம் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளக் கூடிய பொது செலவை உள்ளடக்கியது வணிக பணிகள் ஆகும். உதாரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மேம்படுத்துவதற்கான செலவுகள்.)
27) 1951ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை என்ன?
A) 36 கோடி
B) 47 கோடி
C) 60 கோடி
D) 71 கோடி
(குறிப்பு – 67 ஆண்டுகால திட்டங்களில் இந்தியாவின் மக்கள்தொகை 1951ம் ஆண்டு 36.1 கோடியிலிருந்து 2011 ஆம் ஆண்டு 121 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்டம், ஒழுங்கு போன்றவற்றுக்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது.)
28) கீழ்க்கண்டவற்றுள் எது பொது செலவு அதிகரிப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது?
I. மக்கள் தொகை வளர்ச்சி
II. பாதுகாப்பு செலவு
III. அரசு மானியங்கள்
A) I, II மட்டும்
B) I, III மட்டும்
C) II, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மக்கள்தொகை வளர்ச்சி, பாதுகாப்பு செலவு, அரசு மானியங்கள், கடன் சேவைகள், வளர்ச்சி திட்டங்கள், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு போன்றவை பொது செலவு அதிகரிப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது.)
29) 1990-91 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புக்காக அரசு செலவு செய்த தொகை என்ன?
A) ரூ 7556 கோடி
B) ரூ 8354 கோடி
C) ரூ 9789 கோடி
D) ரூ 10874 கோடி
(குறிப்பு – இந்தியாவில் பாதுகாப்பிற்கான செலவு அதிகரித்த வண்ணம் உள்ளது. ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கல் ராணுவச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.1990-91களில் ரூ 10874 கோடியாக இருந்த அரசின் பாதுகாப்பு செலவு 2018-19களில் ரூ 2,95,511 கோடியாக அதிகரித்து உள்ளது.)
30) இந்திய அரசு கீழ்க்காணும் எந்த இனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது?
I. உணவு
II. உரங்கள்
III. கல்வி
IV. ஏற்றுமதி
A) I, II, III க்கு மட்டும்
B) II, III, IV க்கு மட்டும்
C) I, III, IV க்கு மட்டும்
D) இவை அனைத்திற்கும்
(குறிப்பு – இந்திய அரசானது உணவு, உரங்கள், முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல், ஏற்றுமதி மற்றும் கல்வி போன்ற பல இனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.மானியங்களுக்கான தொகை மிக அதிகமாக இருப்பதால் பொது செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.)
31) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அரசானது அதிகமான அளவில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஆதாரங்கள் மூலம் கடன் பெற்றுள்ளன. அதன் விளைவாக அரசு கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அதிக பணம் தேவைப்படுகிறது.
கூற்று 2 – மத்திய அரசின் வட்டி செலுத்தல்களுக்கான தொகை 1990-91இல் ரூ 21500 கோடியில் இருந்து 2018-19இல் ரூ 5,75,794 கோடியாக அதிகரித்துள்ளது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – 1991ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானியத்திற்கான செலவு ரூ 9581 கோடியிலிருந்து, 2018-19இல் ரூ 2,29,715 கோடியாக அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் பெரும் நிறுவனங்களுக்கு மானியமாக 5 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது. இது அனைத்தும் பொது செலவு அதிகரிப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது)
32) 1950-51களில் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் நகர்புறத்தில் வாழ்ந்தனர்?
A) 12 சதவீதம்
B) 13 சதவீதம்
C) 15 சதவீதம்
D) 17 சதவீதம்
(குறிப்பு – நகரங்களில் மக்கள் தொகை விரைவாக அதிகரித்து வருகிறது.1950 மற்றும் 1951 களில் மொத்த மக்கள் தொகையில் 17% பேர் நகர்ப்புறத்தில் வாழ்ந்தனர்.தற்பொழுது நகர மக்கள் தொகை 43% அளவிற்கு அதிகரித்துள்ளது.)
33) இந்தியாவில் தற்பொழுது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 36 நகரங்கள்
B) 48 நகரங்கள்
C) 54 நகரங்கள்
D) 61 நகரங்கள்
(குறிப்பு – இந்தியாவில் தற்பொழுது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் சுமார் 54 நகரங்கள் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, கல்வி மற்றும் குடிநீர் வசதிகளை மேற்கொள்ளவும் அதிக அளவில் செலவுகள் ஏற்படுகின்றன. மேலும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்கிறது. இந்த வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது. இது இந்தியாவின் பொது செலவு அதிகரிப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது.)
34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது.
கூற்று 2 – கனரக தொழில்கள் தனது உற்பத்திக்கு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது.மேலும் கனரக தொழில்கள் தனது உற்பத்திக்கு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளும். அரசானது இத்தகைய தொழிற்சாலைகளை திட்டமிட்ட பொருளாதாரத்தில் துவங்க வேண்டியுள்ளது. மேலும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, எரிசக்தி, எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் பொது செலவு கூடுவதற்கான காரணமாக கருதப்படுகிறது.)
35) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பொது வருவாய் என்பது, அனைத்து மூலங்களின் வழியாக அரசு பெரும் வருமானத்தை குறிக்கும்.
கூற்று 2 – பொது வருவாய் என்பது பொது வருமானம் என்றும் அழைக்கப்படுகிறது,
கூற்று 3 – பொது வருவாய் என்பது பொது நிதியியலில் முக்கிய இடம் வகிக்கிறது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – பொது வருவாய் என்பது பொது நிதியியலில் முக்கிய இடம் வகிக்கிறது. மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொது செலவுகள் உயர்ந்து வருவதால் அதனை பொது வருவாயின் மூலமே சரி செய்ய முடியும். பொது வருவாய் என்பது அனைத்து மூலங்களின் வழியாக அரசு பெரும் வருமானத்தை குறிக்கும்.)
36) பொது வருவாயை அதிகரிப்பது என்பது கீழ்க்கண்டவற்றில் எதன் அடிப்படையில் அமையும்?
I. பொது செலவின் அவசியம்
II. மக்களின் செலுத்தும் திறன்
A) I மட்டும்
B) II மட்டும்
C) இரண்டின் அடிப்படையிலும்
D) இரண்டும் அல்ல
(குறிப்பு – பொது வருவாயை அதிகரிப்பது என்பது பொது செலவின் அவசியம் மற்றும் மக்களின் செலுத்தும் திறன் அடிப்படையில் அமையும். பொது வருவாய் என்பது பொது வருமானம் எனவும் அழைக்கப்படும்.)
37) கீழ்காணும் யாருடைய கூற்றின்படி பொது வருமானம் என்பது குறுகிய மற்றும் பரந்த பொருளில் விளக்கப்படுகிறது?
A) டால்டன்
B) ஆடம்ஸ்மித்
C) கீன்ஸ்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – டால்டன் கூற்றுப்படி பொது வருமானம் என்பதை குறுகிய மற்றும் பரந்த பொருளில் விளக்கலாம். பரந்த பொருளில் பொதுவருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அதிகார அமைப்பினர் பெறும் அனைத்து வருவாய் அல்லது கடன் உள்பட உள்ள பெறுதல்களை குறிக்கும். குறுகிய கண்ணோட்டத்தில் பொது அதிகார அமைப்பின் வருமான வளங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது.)
38) குறுகிய கண்ணோட்டத்தில் பொது வருவாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
I. வருவாய் வளங்கள்
II. வருவாய் சாதனம்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – பொது வருவாயானது பரந்த பொருளில் பொது பெறுதல்கள் எனவும், குறுகிய கண்ணோட்டத்தில் பொதுவருவாய் எனவும் அழைக்கப்படுகிறது. குறுகிய பொருளில் பொதுவருவாய் என்பது அரசின் வருவாய். இது வருவாய் சாதனம் என்றும் பரந்த பொருளில் அரசு கடன் பெறுவதும் ஆகும்)
39) பொது வருவாய் எத்தனை வகைப்படுத்தப்பட்டுள்ளது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – பொது வருவாய் இருவகையாக வகைப்படுத்தப்படுகிறது.அவை 1) வரி வருவாய் மற்றும் 2) வரியற்ற வருவாய் என்பதாகும்.)
40) வரி என்பதற்கு “வரி என்பது பொது அதிகார அமைப்பினால் விதிக்கப்பட்டதை செலுத்த வேண்டிய ஒரு கட்டாய பங்களிப்பாகும்” என்னும் வரைவிலக்கணத்தை கூறியவர் யார்?
A) டால்டன்
B) ஆடம் ஸ்மித்
C) அனடோல் முராட்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – ” வரி என்பது பொது அதிகார அமைப்பினால் விதிக்கப்பட்டதை செலுத்த வேண்டிய ஒரு கட்டாய பங்களிப்பாகும். செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான பலனை எதிர்பாராமல் செலுத்த வேண்டியது ஆகும். இது தண்டத்தொகை அல்லது சட்டப்பூர்வமான குற்றத்திற்காக விதிக்கப்படுவதில்ல.” என்று வரைவிலக்கணம் வகுத்தவர் டால்டன் என்பவராவார்.)
41) வரி என்பது ” ஒரு நபர் அல்லது நிறுவனம் அரசிடமிருந்து எந்த ஒரு நன்மையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்த கூடியதாகும்” என்று வரைவிலக்கணம் வகுத்தவர் யார்?
A) டால்டன்
B) ஆடம் ஸ்மித்
C) அனடோல் முராட்
D) கீன்ஸ்
(குறிப்பு – வரி என்பது ” ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்த ஒரு நன்மையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்த கூடியதாகும்” என்று வரைவிலக்கணம் வகுத்தவர் அனடோல் முராட் என்பவராவார்.)
42) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – வரி என்பது அரசால் சட்டப்படி வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படுவது ஆகும்.
கூற்று 2 – வரி செலுத்த மறுப்பது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
கூற்று 3 – ஒவ்வொரு வரியும் வரி செலுத்துவோரின் தியாகத்தை உள்ளடக்கியதாகும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – வரி என்பது குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்தக் கூடியதாகும். இது அரசால் சட்டப்படி வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படுகிறது. இதனை வரி செலுத்துபவர் மறுக்காமல் செலுத்த வேண்டியது ஆகும். வரியை செலுத்த மறுப்பது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.)
43) கீழ்க்கண்டவற்றுள் எது வரிக்கு வரி என அழைக்கப்படுகிறது?
A) வருமான வரி
B) நிறுவன வரி
C) செஸ் வரி
D) விற்பனை வரி
(குறிப்பு – வரியானது சட்டத்தை மீறியதற்காக சுமத்தப்படும் தண்டத்தொகை போன்று விதிக்கப்படுவது அல்ல. ஒவ்வொரு வரியும் வரி செலுத்துவோரின் தியாகத்தை உள்ளடக்கியது. சில வரி வருவாய் மூலங்கள் ஆவன, வருமான வரி, நிறுவன வரி, விற்பனை வரி, கூடுதல் வரி, செஸ் வரி போன்றவை ஆகும்.)
44) கீழ்க்கண்டவற்றுள் எது வரி சாரா வருவாயாக கருதப்படுகிறது?
A) கட்டணம்
B) தண்டத் தொகை
C) மரண தீர்வை
D) இவை அனைத்தும்
(குறிப்பு – வரி அல்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்பட்ட வருவாயை, வரிசாரா வருவாய் என அழைக்கலாம். கட்டணம், தண்டத்தொகை, பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள், மேம்பாட்டுக்கான சிறப்பு தீர்வைகள், அன்பளிப்புகள், மானியங்கள், உதவிகள் மற்றும் மரண தீர்வை போன்றவைகள் வரிசாரா வருவாய் ஆகும்.)
45) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கட்டணம் என்பது வரி அல்ல.
கூற்று 2 – கட்டணம் என்பது கட்டாயம் அல்ல.
கூற்று 3 – கட்டணம் என்பது அரசுக்கான ஒரு வருவாய் ஆதாரம் ஆகும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – அரசுக்கான மற்றொரு முக்கியமான வருவாய் ஆதாரம் கட்டணம் ஆகும். பொது நிர்வாகத்தில் செய்யும் சேவைக்காக கட்டணம் விதிக்கப்படுகிறது. கட்டணம் என்பது வரியை போல் கட்டாயம் செலுத்தக் கூடியது அல்ல. அரசானது சில சேவை செய்வதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது.)
46) கீழ்கண்டவற்றுள் எது கட்டணம் என்பதை சாரும்?
I. பாஸ்போர்ட் வழங்குவதற்காக விதிக்கும் பணம்.
II. ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்காக விதிக்கும் பணம்.
A) I மட்டும்
B) II மட்டும்
C) இரண்டும்
D) இரண்டும் அல்ல
(குறிப்பு – அரசானது சில சேவைகளை செய்வதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது. எடுத்துக்காட்டாக கட்டணம் என்பது பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமங்கள் போன்றவற்றை வழங்குவதற்காக விதிக்கக்கூடியது ஆகும். கட்டணங்கள் என்பது வரியை போல் கட்டாயம் செலுத்தக் கூடியது அல்ல.)
47) சட்டத்தை மீறுவோர் மீது சுமத்தப்படுவது?
A) கட்டணம்
B) பழித்தொகை
C) தண்டத்தொகை
D) வரி
(குறிப்பு – சட்டத்தை மீறுபவர்கள் மீது சுமத்தப்படுவது தண்டத்தொகை ஆகும். எடுத்துக்காட்டாக சாலை விதிகளை மீறுதல் வருமான வரியை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் தாமதமாக செலுத்துபவர்கள் மீது விதிக்கப்படுவது தண்டத்தொகையாகும்.)
48) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அரசானது பொதுத் துறை நிறுவன அமைப்புகளில் உள்ள உபரியை வருமானமாக பெறுகிறது.
கூற்று 2 – மேம்பாட்டுக்கான சிறப்பு தீர்வைகள் என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரசு மேற்கொண்ட பொதுத் திட்டத்திற்காக அப்பகுதியினர் மீது சிறப்பு தீர்வைகள் விதிக்கப்படுவதாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மேம்பாட்டுக்கான சிறப்பு தீர்வைகள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரசு மேற்கொண்ட பொது திட்டத்திற்காக அப்பகுதியினர் மீது சிறப்பு தீர்வைகள் விதிக்கப்படுவது ஆகும். ஒரு பகுதியில் பொது பூங்காக்கள் அல்லது சாலை வசதி செய்வதால் அப்பகுதியில் நிலமதிப்பு உயரும்.எனவே அப்பகுதியில் சிறப்பு தீர்வைகள் விதிக்கப்படுகின்றன.)
49) ஒரு அரசிடம் இருந்து மற்றொரு அரசுக்கு வழங்கப்படுவது?
A) கட்டணம்
B) தண்டத் தொகை
C) உதவித்தொகை
D) அன்பளிப்பு
(குறிப்பு – உதவித் தொகை என்பது ஒரு அரசிடம் இருந்து மற்றொரு அரசுக்கு வழங்கப்படுவது ஆகும். மத்திய அரசு மாநில அரசுக்கும் மற்றும் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் தொகையானது உதவி தொகை என அழைக்கப்படுகிறது.)
50) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஒருவர் வாரிசு இல்லாமலோ அல்லது உயில் ஏற்படுத்தாமல் மரணமடைந்தால், அவரின் மரணத்திற்கு பிறகு அவர் விட்டுச்சென்ற உடைமைகளை அரசு எடுத்துக் கொள்ளும்.
கூற்று 2 – மரண தீர்வை என்பது, இறப்பதற்கு முன் ஒருவர் அரசுக்கு எழுதி வைக்கும் உயில் ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடிய உதவி அயல்நாட்டு உதவி என அழைக்கப்படுகிறது. வளரும் நாடுகள் ராணுவ உதவி, உணவு பொருட்கள் உதவி, தொழில்நுட்ப உதவி போன்றவற்றை இதர நாடுகளில் இருந்து பெறுகின்றன. இதுவும் வரி சாரா வருவாய் என அழைக்கப்படுகிறது. மரண தீர்வை என்பது ஒரு வரி சாரா வருவாய் ஆகும். ஒருவர் வாரிசு இல்லாமலோ அல்லது உயிர் ஏற்படுத்தாமல் மரணமடைந்தால் அவர் மரணத்திற்கு பிறகு விட்டுச்சென்ற உரிமைகளை அரசு எடுத்துக் கொள்ளும்.)
51) ஒரு வரி எத்தனை புனித விதிகளை கொண்டிருக்க வேண்டும் என்று ஆடம்ஸ்மித் கூறுகிறார்?
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு
D) ஏழு
(குறிப்பு – ஒரு நல்ல வரியில் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தன்மைகளை புனித விதிகள் என விவரிக்கப்படுகின்றது. புனித விதிகள் என்பது அனைத்து வரிகளுக்கும் பொதுவானதாக அல்லாமல் தனிப்பட்ட வரிக்கு மட்டும் அதன் தரத்தை குறிக்கிறது. ஆடம் ஸ்மித் கருத்துப்படி நான்கு புனித விதிகள் உள்ளன.)
52) கீழ்க்கண்டவற்றுள் எது ஆடம் ஸ்மித்தின் நான்கு புனித விதிகளுள் அல்லாதது?
A) நிச்சயத்தன்மை விதி
B) செலுத்தும் திறன் பற்றிய விதி
C) வாய்ப்புகளைப் பற்றிய விதி
D) சிக்கன விதி
(குறிப்பு – ஆடம் ஸ்மித் கருத்துப்படி நான்கு புனித விதிகள் உள்ளன. அவை 1) செலுத்தும் திறன் பற்றிய விதி, 2) நிச்சய தன்மை விதி, 3) வசதி விதி மற்றும் 4) சிக்கன விதி என்பன ஆகும்.)
53) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – புனித விதி என்பது அனைத்து வரிகளுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
கூற்று 2 – ஒரு நல்ல வரி அமைப்பு என்பது அனைத்து வகை வரிகளை சரியாக இணைத்து புனித விதிகளை பெற்றிருக்க வேண்டும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – ஒரு நல்ல வரியில் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தன்மைகளை புனித விதிகள் என விவரிக்கப்படுகின்றது. புனித விதிகள் என்பது அனைத்து வரிகளுக்கும் பொதுவானதாக இல்லாமல் தனிப்பட்ட வரிக்கு மட்டும் அதன் தரத்தை குறிக்கிறது. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது அனைத்து வகை வரிகளை சரியாக இணைத்து புனித விதிகளை பெற்றிருக்க வேண்டும்.)
54) மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும் என்பது?
A) செலுத்தும் திறன் பற்றிய விதி
B) நிச்சயத்தன்மை விதி
C) வசதி விதி
D) சிக்கன விதி
(குறிப்பு – மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்கவேண்டும். ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினரை ஒப்பிடும்போது செல்வந்தர் அதிக வரி செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பது, ஆடம்ஸ்மித் கூறிய நான்கு புனித விதிகளுள் செலுத்தும் திறன் பற்றிய விதியாகும்.)
55) பொதுவான வரிவிதிப்பு விதிகளுள் தவறானது கீழ்க்கண்டவற்றுள் எது?
A) சிக்கன விதி
B) சமத்துவ விதி
C) வசதி விதி
D) வாய்ப்பு விதி
(குறிப்பு – பொதுவான வரிவிதிப்பு விதிகள் ஆவன, 1) சிக்கன விதி, 2) சமத்துவ விதி, 3) வசதி விதி, 4) உறுதி விதி மற்றும் 5) திறன் மற்றும் நெகிழ்வு விதி என்பன ஆகும்)
56) அரசு தன் போக்கிற்கு வரிகளை விதிக்கக்கூடாது. அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும் என்பது?
A) செலுத்தும் திறன் பற்றிய விதி
B) நிச்சயத்தன்மை விதி
C) வசதி விதி
D) சிக்கன விதி
(குறிப்பு – நிச்சயத்தன்மை விதி என்பது, வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்றதன்மை இல்லாத வகையில் அரசு வரியை விதிக்க வேண்டும். அரசு தன் போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனை பாதிக்கும். இது ஆடம் ஸ்மித் கருத்துப்படி நான்கு புனித விதிகளில் ஒன்றாகும்.)
57) கீழ்காணும் ஆடம்ஸ்மித்தின் கூற்றுகளில் எது தவறானது?
A) வசூலிக்கும் செலவுகள் குறைவாக இருக்கும் வரிகளை மட்டுமே அரசு விதிக்க வேண்டும்.
B) வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் வரிகள் இருக்க வேண்டும்.
C) வரி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
D) வரி வசூலிக்கும் முறை மக்களின் வசதிக்கு ஏற்ப அமைய வேண்டும்.
(குறிப்பு – மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும், வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியை விதிக்க வேண்டும், வரி வசூலிக்கும் முறையானது மக்களின் வசதிக்கேற்ப அமைய வேண்டும், செலவுகள் குறைவாக இருக்கும் வரிகளை மட்டுமே அரசு விதிக்க வேண்டும் என்பன ஆடம் ஸ்மித் அவர்களின் கருத்தாகும்)
58) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்முக வரி என்பது ஒரு நபரின் வருமானம் அல்லது செல்வம் மீது விதிக்கப்படுவதாகும்.
கூற்று 2 – நேர்முகவரியின் சுமையை பிறருக்கு மாற்றலாம்.
கூற்று 3 – நேர்முக வரி என்பது வளர்வீதத்தன்மை கொண்டது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நேர்முக வரி என்பது நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்பட்டு அரசுக்கு நேரடியாக செலுத்த கூடியதாகும். அந்த வரியின் சுமையை பிறருக்கு மாற்ற முடியாது. நேர்முக வரி என்பது வளர்வீததன்மை கொண்டதாகும். நேர்முகவரி என்பது ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு விதிக்கப்படும்.)
59) கீழ்கண்டவற்றுள் எது நேர்முக வரியாகும்?
A) உற்பத்தி வரி
B) விற்பனை வரி
C) கேளிக்கை வரி
D) வருமான வரி
(குறிப்பு – வருமான வரி என்பது ஒரு நேர்முக வரி ஆகும். வருமானம் பெறும் போது வரி செலுத்துவதற்கான பொறுப்பும் ஏற்படும்.இறுதியான வரிச்சுமையை அவரே இருக்க வேண்டும். நேர்முக வரியானது ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு விதிக்கப்படும். அதாவது பணக்காரர்களிடம் இருந்து அதிகமான வரியும் மற்றும் ஏழை மக்களிடமிருந்து குறைவான வரியும் வசூலிக்கப்படும்.)
60) நேர்முக வரி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்முக வரி என்பது வளர்வீதம் கொண்டவை. அதாவது வரி அடிப்படையைப் பொறுத்து வரி வீதம் மாறும்.
கூற்று 2 – வருமானவரி சமத்துவ விதி அடிப்படையில் அமைந்துள்ளது.
கூற்று 3 – நேர்முக வரி நிச்சய தன்மை விதியை உறுதிசெய்கிறது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நேர்முக வரிகள் வளர் வீதம் கொண்டவை. நேர்முக வரி நிச்சய தன்மை விதியை உறுதிசெய்கிறது. உதாரணமாக வருமான வரி செலுத்துபவர் எங்கு எப்பொழுது எவ்வளவு வரியை செலுத்த வேண்டுமென அறிந்துள்ளார். நேர்முக வரிகள் நெகிழும் தன்மையை திருப்தி செய்கிறது.)
61) கீழ்க்கண்டவற்றில் எது நேர்முக வரிகளின் நன்மைகளாக கருதப்படுகிறது?
I. நிச்சயதன்மையோடு இருத்தல்
II. நெகிழும் தன்மையோடு இருத்தல்
III. பிரபலமின்மையாக இருத்தல்
IV. சிக்கனம்
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, II, IV மட்டும் சரி
(குறிப்பு – நேர்முக வரி வளர் வீதம் கொண்டவை. நேர்முக வரி நிச்சய தன்மை விதியை உறுதிசெய்கிறது. நேர்முகவரிகள் நெகிழும் தன்மையை உறுதிசெய்கிறது. நேர்முக வரிகளை வசூலிப்பதற்கான செலவு மற்ற வரிகளை ஒப்பிடுகையில் குறைவாகும். ஏனெனில் வரி செலுத்துபவர்கள் நேரடியாக அரசிற்கு வரி செலுத்துகின்றனர்)
62) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்முக வரியானது உற்பத்தி திறனை பாதிக்கிறது.
கூற்று 2 – நேர்முக வரி பிரபலம் இல்லாமல் உள்ளது.
கூற்று 3 – நேர்முக வரி வசதி குறைவானதாகவும், நெகிழ்ச்சி குறைவானதாகவும் உள்ளது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நேர்முக வரி பிரபலம் இல்லாமல் உள்ளது. மேலும் இது வசதி குறைவானதாகவும் நெகிழ்ச்சி குறைவானதாகவும் உள்ளது. பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கருத்துப்படி நேர்முக வரி உற்பத்தித் திறனை பாதிக்கிறது. குடிமக்கள் அதிக வரிதொகையை செலுத்த வேண்டியதால், வருமானம் அதிகம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் உள்ளனர்.).
63) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்முக வரியின் சுமை, கருப்பு பணம் உருவாவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
கூற்று 2 – மறைமுக வரி எனப்படுவது பொருளையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – நேர்முகவரியின் சுமை அதிகமாக இருப்பதால் வரி செலுத்துபவர்கள் வரியை ஏய்ப்பதற்கு முயல்கின்றனர். இது கருப்பு பணம் உருவாகுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. மறைமுக வரி எனப்படுவது பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படும் வரி ஆகும். இது அரசுக்கு மறைமுகமாக செலுத்தப்படுகிறது)
64) கீழ்க்கண்ட வரிகளில் எது மறைமுக வரி ஆகும்?
A) உற்பத்தி வரி
B) விற்பனை வரி
C) கேளிக்கை வரி
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மறைமுக வரி என்பதில் வரிச்சுமை எளிதாக மற்றொரு நபர் மீது மாற்ற முடியும். ஏழை அல்லது பணக்காரர் என யாராக இருந்தாலும் அந்த நபர்கள் மீது சமமாக சுமத்தப்படும். பல்வேறு மறைமுக வரிகள் உள்ளன. அவை உற்பத்தி வரி, விற்பனை வரி,சுங்கதீர்வை, கேளிக்கை வரி, சேவை வரி போன்றவைகள் ஆகும்.)
65) கீழ்க்கண்டவற்றுள் எது சேவை வரி ஆகும்?
I. வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடிய பொருட்களுக்கு செலுத்தப்படும் இறக்குமதி தீர்வை.
II. தொலைபேசி கட்டணம்
III. காப்பீட்டு கட்டணம்
IV. திரைப்பட டிக்கெட் கட்டணம்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) III, IV மட்டும்
D) I, IV மட்டும்
(குறிப்பு – தொலைபேசி, காப்பீட்டு, உணவு விடுதி போன்ற சேவைகளுக்காக செலுத்தக்கூடிய கட்டணங்கள் சேவை வரி எனப்படும். வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை செலுத்தப்படும். ஆனால் இதனை இறுதியாக நுகர்வோர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் மீது மாற்றப்படும். இது சுங்கத்தீர்வை என அழைக்கப்படுகிறது.)
66) மறைமுக வரி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மறைமுக வரி என்பது எல்லா நுகர்வோர்களும் செலுத்த வேண்டும்.அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் செலுத்தவேண்டும்.
கூற்று 2 – மறைமுக வரி என்பது ஆடம்பர பொருட்கள் மீது அதிகமாக சுமத்தப்படுகிறது.
கூற்று 3 – மறைமுக வரி என்பதை ஒருவர் மற்றொருவரின் மீது எளிதாக மாற்ற முடியும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – மறைமுக வரி என்பது எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் செலுத்த வேண்டிய ஒன்றாகும். இதனால்தான் நேர்முகவரிகளை விட மறைமுக வரிகள் அதிக நபர்களை உள்ளடக்கியுள்ளது. பணக்காரர்களால் பயன்படுத்தக் கூடிய ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால், மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது.)
67) இந்தியாவில் எத்தனை சதவீத நபர்கள் வருமான வரி செலுத்துகின்றனர்?
A) 2 சதவீதம் பேர்
B) 4 சதவீதம் பேர்
C) 5 சதவீதம் பேர்
D) 7 சதவீதம் பேர்
(குறிப்பு – இந்தியாவில் 2 சதவீத நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்ற நிலையில் மறைமுக வரியை அனைவரும் செலுத்துகின்றனர். 120 கோடி பேர் தொகையை கொண்ட இந்தியாவில் வெறும் இரண்டு கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்.)
68) மறைமுக வரியின் வரி வசூலிப்பாளர்கள் யார்?
A) மத்திய அரசு
B) மாநில அரசு
C) வணிகர்கள்
D) உள்ளாட்சி அமைப்புகள்
(குறிப்பு – மறைமுக வரியில் உற்பத்தியாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைகிறது. வணிகர்கள் மதிப்புமிக்க வரி வசூலிப்பவர்களாக செயலாற்றுகின்றனர்)
69) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மறைமுக வரி என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மீது விதிக்கப்படுவதில்லை.
கூற்று 2 – மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அரசானது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது. எடுத்துக்காட்டாக புகையிலை, மது போன்ற பொருட்கள் மீதான வரி. இது பாவ வரி என்று அழைக்கப்படுகிறது. மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுகிறது. நுகர்வோர் இதனை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்தி விடுவதால் வரி செலுத்துவதை உணர்வதில்லை.)
70) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நேர்முக வரியை ஒப்பிடும்போது மறைமுக வரியை வசூலிக்க ஆகும் செலவு அதிகமாகும்.
கூற்று 2 – நேர்முக வரியை ஒப்பிடும் போது மறைமுக வரிகள் குறைவான நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகும்.
கூற்று 3 – மறைமுக வரிகள் சில நேரங்களில் நீதியற்ற மற்றும் தேய்வீத தன்மை கொண்டதாகும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – நேர்முக வரியை ஒப்பிடும்போது மறைமுக வரியை வசூலிக்க ஆகும் செலவு அதிகமாகும். அரசு பெரும் தொகையை மறைமுக வரி வசூலுக்காக செலவு செய்கிறது. நேர் முகவரிகளை ஒப்பிடும் போது மறைமுக வரிகள் குறைவான நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகும். மறைமுக வரிகள் எப்பொழுதும் சமமான விகிதாச்சார விதத்தில் அமையும்.)
71) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மறைமுக வரிகள் உயரும்போது பொருட்களின் விலை உயரும்.
கூற்று 2 – மறைமுகவரியில் விலையுடன் வரியும் மறைந்துள்ளது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மறைமுக வரிகள் உயரும்போது விலை உயர்வதால் பொருள்களுக்கான தேவை குறைகிறது. ஆகையால் அரசு எதிர்பார்க்கக்கூடிய வருவாய் வசூல் பற்றி உறுதியற்று காணப்படுகிறது. எனவேதான் டால்டன் 2 + 2 என்பது நான்கு அல்ல, மூன்று அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என மறைமுக வரியை குறிப்பிடுகிறார்.)
72) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A) நேர்முக வரியில் சுமை மற்றும் தாக்கம் ஒரே நபர் மீது விழுகிறது.
B) மறைமுக வரி என்பது தேய்வீத இயல்பை கொண்டது.
C) நேர்முக வரியில், வரிஏய்ப்பு என்பது மிக கடினம்.
D) மறைமுக வரி என்பது பண்டங்கள் மற்றும் பணிகள் வாங்கும்போது, விற்கும்போது அல்லது உற்பத்தியின் போது விதிக்கப்படும் வரி ஆகும்.
(குறிப்பு – நேர்முக வரி என்பது ஒரு நபரின் வருமானம் மற்றும் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்கு செலுத்துவது ஆகும். மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செலுத்துவதாகும். நேர்முக வரியில், வரி ஏய்ப்புக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. மறைமுக வரியில் பொருளின் விலையிலேயே வரி சேர்ந்திருப்பதால் வரி ஏய்ப்பு கடினமாகும்.)
73) இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A) 2011 இல்
B) 2013 இல்
C) 2015 இல்
D) 2017 இல்
(குறிப்பு – இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று நிறைவேற்றப்பட்டது.)
74) இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்தது?
A) மார்ச் 29, 2017
B) ஏப்ரல் 30, 2017
C) ஜூன் 1, 2017
D) ஜூலை 1, 2017
(குறிப்பு – 2017 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள், சரக்கு மற்றும் சேவை வரி (Goods And Services Tax-GST) சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதல் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது.)
75) இந்தியாவில் நாடு முழுவதற்குமான ஒரே முகவரி எது?
A) விற்பனை வரி
B) சேவை வரி
C) சரக்கு மற்றும் சேவை வரி
D) சுங்க தீர்வை
(குறிப்பு – இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்பு கூட்டின் போது விதிக்கப்படுகிறது. சுருங்கக்கூறின், சரக்கு மற்றும் சேவை வரி யானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுக வரி ஆகும். நாடு முழுவதற்குமான ஒரே மறைமுக வரியாக சரக்கு மற்றும் சேவை வரி உள்ளது.)
76) கீழ்க்காணும் எந்த வரி மத்திய அரசால் விதிக்கப்படுவது இல்லை?
A) சேவை வரி
B) துணை கலால் வரி
C) பணி / கடமை வரி
D) பொழுதுபோக்கு வரி
(குறிப்பு – சுங்கவரி மீதான சிறப்பு கூடுதல் வரி, பணி / கடமை வரி, சேவை வரி, துணை கலால் வரி, மத்திய கலால் வரி போன்ற வரிகள் மத்திய அரசால் விதிக்கப்படும் வரி ஆகும்.)
77) கீழ்க்காணும் எந்த வரி மாநில அரசுகளால் விதிக்கப்படுகிறது?
I. பொழுதுபோக்கு வரி
II. நுழைவு வரி
III. வாங்குதல் மீதான வரி
A) I, II மட்டும்
B) I, III மட்டும்
C) II, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மாநில மதிப்பு கூட்டு வரி அல்லது விற்பனை வரி, பொழுதுபோக்கு வரி, மத்திய வருமான வரி, நுழைவு வரி, வாங்குதல் மீதான வரி போன்ற வரிகள் மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரி ஆகும்.)
78) சரக்கு மற்றும் சேவை வரி அல்லாதது எது?
A) GST
B) CGST
C) KGST
D) SGST
(குறிப்பு – GST யின்கீழ், இறுதி விற்பனையின் மேல் சுமத்தப்படும் வரியாகும். மாநிலத்திற்கு உட்பட்ட விற்பனையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி(CGST), மாநில சரக்கு மற்றும் சேவை வரி(SGST) விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் ஒருங்கிணைந்த GST விதிக்கப்படுகிறது)
79) மாநில அரசுகளுக்கு இடையேயான விற்பனையில், இந்திய அரசால் வசூலிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி எது?
A) GST
B) SGST
C) IGST
D) CGST
(குறிப்பு – சரக்கு மற்றும் சேவை வரி (GST) மூன்று வகைப்படும். அவை CGST- மாநிலத்துக்குள் நடைபெறும் விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது, SGST- மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது, IGST- மாநில அரசுகளுக்கு இடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது)
80) மத்திய விற்பனை வரி + சேவை வரி என்னும் பழைய ஆளுகையை தற்போது நடைமுறையில் இருக்கும் எந்த வரிக்கு மாற்றாக பயன்படுத்தி வந்தனர்?
A) GST
B) IGST
C) CGST
D) SGST
(குறிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் மத்திய அரசால் விதிக்கப்படும் வரி IGST ஆகும். இதில் முதலில் மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரியை கூட்டுவது என்ற நடைமுறையில் இருந்தது. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டு, மத்திய அரசு அந்த வருவாயை இட அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்.)
81) கீழ்க்காணும் எந்த வரி மதிப்புக்கூட்டு வரி என அழைக்கப்படுகிறது?
A) சேவை வரி
B) கட்டண வரி
C) VAT
D) சுங்க வரி
(குறிப்பு – மதிப்பு கூட்டு வரி ( Value Added Tax) எனப்படுவது அடித்தள விளைவில்லாத பல்முனை வரியாகும். GST என்பது அடித்தள விளைவில்லாத ஒருமுனை வரி ஆகும்.GST வரியானது சரக்கு மற்றும் சேவை விற்பனையில் உள்ள அடித்தள விளைவை நீக்கியது. இது பொருட்களுக்கான செலவில் நேரடி விளைவை ஏற்படுத்தியது.)
82) “கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுப்பதற்கான உத்தரவாதம் ஆகும்” என்று பொது கடனுக்கு வரைவிலக்கணம் வகுத்தவர் யார்?
A) ஆடம் ஸ்மித்
B) டால்டன்
C) கீன்ஸ்
D) டெய்லர்
(குறிப்பு – பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அரசின் செயல்பாடானது குறைவானதாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டிலிருந்து அரசிற்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே அரசு ஏற்கனவே உள்ள பாரம்பரியமான வருவாயுடன் தனிநபர் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறது. ” கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும் அசலும் கொடுப்பதற்கான உத்திரவாதம் ஆகும். நடப்பு நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும்” இன்று பொது கடனுக்கான வரைவிலக்கணத்தை வகுத்தவர் பிலிப் E.டெய்லர் என்பவராவார்.)
83) பொதுக்கடன் எத்தனை வகைப்படும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – பொதுக் கடன் இரண்டு வகைப்படும். அவை 1) உள்நாட்டு பொதுக்கடன் மற்றும் 2) வெளிநாட்டு பொதுக்கடன் என்பன ஆகும்)
84) கீழ்க்கண்டவற்றுள் எது உள்நாட்டு பொதுகடனை சார்ந்தது?
I. அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனிநபர்கள் வாங்குதல்
II. அரசிடமிருந்து பத்திரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல்.
A) I மட்டும்
B) II மட்டும்
C) இரண்டும் சரி
D) இரண்டும் அல்ல
(குறிப்பு – உள்நாட்டு கடன் என்பது ஒரு நாட்டிற்குள் குடிமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசினால் பெறப்படும் கடனாகும். உள்நாட்டு பொதுக்கடன் என்பது செல்வத்தை மாற்றிக்கொள்வது பற்றியதாகும். அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனிநபர்கள் வாங்குதல், அரசிடமிருந்து பத்திரங்களைப் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல் போன்றவைகள் பட்டு பொதுக்கடன் முக்கிய ஆதாரங்களாகும்.)
85) கீழ்க்கண்டவற்றுள் எது நிதி சாரா நிறுவனங்கள் ஆகும்?
A) LIC
B) UTI
C) GIC
D) இவை அனைத்தும்
(குறிப்பு – வீட்டு வசதி கடன் நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், போன்றவை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. LIC, UTI, போன்றவை நிதி சாரா நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அரசுப் பத்திரங்களை நிதி சாரா நிறுவனங்கள் பெறுவது உள்நாட்டு பொதுக்கடனின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.)
86) வெளிநாட்டு பொது கடனுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது எது?
I. IMF
II. உலக வங்கி
III. IDA
IV. ADB
A) I மட்டும்
B) II மட்டும்
C) I, II, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் கடன் அயல்நாட்டு கடன் என அழைக்கப்படுகிறது. IMF, உலக வங்கி, IDA, போன்றஅமைப்புகளிடமும், வெளி நாட்டு அரசுகளிடம் கடன் பெறுவது அயல்நாட்டு கடன்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.)
87) உலக வங்கி அறிக்கை மற்றும் இந்தியாவின் கடன் சார்ந்த அறிக்கை -2018ஆம் ஆண்டின்படி உலக அளவில் எந்த நாடு வெளிநாட்டு கடன்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது?
A) அமெரிக்கா
B) இங்கிலாந்து
C) பிரான்ஸ்
D) ரஷ்யா
(குறிப்பு – வெளிநாட்டு கடன்தொகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன.அமெரிக்கா 21,171,000 மில்லியன் டாலர் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் வீதமானது(GDP) 98 சதவீதமாக உள்ளது)
88) உலக வங்கி அறிக்கை மற்றும் இந்தியாவின் கடன் சார்ந்த அறிக்கை 2018ம் ஆண்டின் வெளிநாட்டு கடன் வாங்கும் நாடுகளின் தரவரிசையில் இந்தியாவின் இடம் என்ன?
A) 7 ஆம் இடம்
B) 13 ஆம் இடம்
C) 21 ஆம் இடம்
D) 22 ஆம் இடம்
(குறிப்பு – உலக வங்கி அறிக்கை மற்றும் இந்தியாவின் கடன் சார்ந்த அறிக்கை மார்ச் 2018யின்படி, வெளிநாட்டு கடன் பெறும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா இருபத்தி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா 529000 மில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பெற்றுள்ளது. இந்தியாவின் தலா வீத கடன் அளவு 380 மில்லியன் அமெரிக்க டாலரில் உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் வீதமானது 20 ஆக உள்ளது.)
89) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தை அந்தந்த நாட்டுடன் பொருத்துக
I. அமெரிக்கா – a) 40%
II. இந்தியா – b) 14%
III. சீனா – c) 98%
IV. ரஷ்யா – d) 20%
A) I-c, II-d, III-b, IV-a
B) I-b, II-a, III-d, IV-c
C) I-b, II-d, III-a, IV-c
D) I-c, II-b, III-a, IV-d
(குறிப்பு – மார்ச் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் சதவீதமானது அமெரிக்கா – 98%, இங்கிலாந்து – 313%, பிரான்சு – 213%, ஜெர்மனி -141%, ஜப்பான் -74%, சீனா – 14%, ரஷ்யா – 40%, இந்தியா – 20% என உள்ளன.)
90) கீழ்க்காணும் எந்த காரணங்களால் பொதுக்கடன் அதிகரிக்கிறது?
A) போர் மற்றும் போர்க்கால ஆயத்தம்
B) சமுதாய தேவைகள்
C) பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை
D) இவை அனைத்தும்
(குறிப்பு – போர் மற்றும் போர்க்கால ஆயத்தம், சமுதாய தேவைகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதிப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், மந்தத்தை தடுத்தல் போன்ற காரணங்களால் பொதுக்கடன் அதிகரிக்கிறது.)
91) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ரயில்வே கட்டுமானம், மின்சார திட்டங்கள், நீர்பாசன திட்டங்கள், கனரக தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்குத் தேவையான வளங்களை பொதுக்கடன் வாயிலாக அரசு பெறுகிறது.
கூற்று 2 – சமுதாய தேவைகளான பொது சுகாதாரம், தூய்மை, கல்வி, காப்பீடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்வதால் அரசு பொது கடன் பெற வேண்டியுள்ளது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அரசு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது. ரயில்வே கட்டுமானம், மின்சார திட்டங்கள், நீர்பாசன திட்டங்கள், கனரக தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்குத் தேவையான வளங்களை பொதுக்கடன் வாயிலாக அரசு பெறுகிறது. அதிக அளவில் பொது செலவின் காரணமாக அரசு எப்பொழுதும் பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறையை கடன்களால் மட்டுமே சரி செய்ய முடியும்.)
92) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பொதுக் கடன் தீர்வு என்பது பொது கடனை திரும்பச் செலுத்தும் வழிமுறையை குறிப்பதாகும்.
கூற்று 2 – அரசு விற்பனை செய்துள்ள பத்திரங்களை பொதுமக்கள் அதன் முதிர்வு காலத்தில் பத்திரங்களை ஒப்படைத்து அதற்கான தொகையை வட்டியுடன் பெறுவர். இது பொது கடனை திரும்ப செலுத்தும் முறையாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – பொதுக்கடன் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படுகிறது. மூழ்கும் நிதி, கடனை மாற்றுதல், வரவு செலவு திட்ட உபரி, பகுதியாக செல்லுதல், கடன் மறுப்பு, வட்டி வீதத்தை குறைத்தல் மற்றும் மூலதன தீர்வை போன்றவை மூலம் பொதுக்கடன் தீர்க்கப்படுகிறது)
93) கடலுக்கு என அரசு ஏற்படுத்தும் நிதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) கடன் நிதி
B) மூழ்கும் நிதி
C) வாரா நிதி
D) வைப்பு நிதி
(குறிப்பு – கடனுக்கு என அரசு தனி ஒரு நிதியை ஏற்படுத்தும். அதனை மூழ்கும் நிதி என்பர். அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது. கடன் முதிர்ச்சி அடையும்போது வட்டியும் அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்த நிதி பெருகிவிடும்.)
94) மூழ்கும் நீதி என்னும் முறையை முதன்முதலில் அறிமுகம் செய்த நாடு எது?
A) அமெரிக்கா
B) இங்கிலாந்து
C) பிரான்ஸ்
D) ஜெர்மனி
(குறிப்பு – கடனுக்கு என அரசு தனி ஒரு நிதியை ஏற்படுத்தும். அதனை மூழ்கும் நிதி என்பர். அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது. கடன் முதிர்ச்சி அடையும்போது வட்டியும் அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்த நிதி பெருகிவிடும். இந்த முறை முதன்முதலில் இங்கிலாந்தை சேர்ந்த வால்போல் என்பவரால் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.)
95) கடன் மாற்றுதல் முறை கடன் பளுவை குறைக்கிறது என்று கூறியவர் யார்?
A) வால்போல்
B) டால்டன்
C) ஆடம் ஸ்மித்
D) கீன்ஸ்
(குறிப்பு – பொது கடனை திரும்பச் செலுத்தப்படும் மற்றொரு முறை கடன் மாற்றுதல் ஆகும். இம்முறையில் பழைய கடனை புதிய கடனாக மாற்றப்படுகிறது. இந்த முறையின் கீழ் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பொதுகடனாக மாற்றப்படுகிறது. டால்டன், கடன் வாங்குதல் கடன் பளுவை குறைகிறது என்கிறார்.)
96) அரசானது பொது கடனை சம வருடாந்திர தவணைகளாக செலுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) வரவு செலவு திட்ட உபரி
B) கடனை மாற்றுதல்
C) பகுதியாக செலுத்தல்
D) வட்டி வீதத்தை குறைத்தல்
(குறிப்பு – பகுதியாக செலுத்தல் என்னும் முறையின் கீழ் அரசு பொது கடனை சம வருடாந்திர தவணைகளாக செலுத்துகிறது. இது பொது கடனை செலுத்தும் மிக சுலபமான முறையாகும். உபரி வரவு செலவு திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடனை திருப்பி செலுத்த பயன்படுத்திக்கொள்ளும். இதன் மூலம் அரசு பொது கடனை தீர்க்கிறது)
97) கீழ்க்காணும் எந்த பொதுக்கடன் தீர்க்கும் வழியானது சர்ச்சைக்குரிய கடன் தீர்வு முறை என கருதப்படுகிறது?
A) கடன் மறுப்பு
B) பகுதியாக செலுத்தல்
C) வட்டி வீதத்தை குறைத்தல்
D) மூலதன தீர்வை
(குறிப்பு – ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அல்லது வளர்ச்சிப் போக்கில் உள்ள மூலதன சொத்துக்கள் பெற்றிருப்பின் அதன் மீது அரசு வரி விதித்து அதனை போர்க்கால கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். ஆனால் இது சர்ச்சைக்குரிய கடல் தீர்வை முறையாகும்.)
98) பட்ஜெட் என்ற பதம் கீழ்க்காணும் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்
A) தமிழ்
B) பிரெஞ்சு
C) ஆங்கிலம்
D) லத்தீன்
(குறிப்பு – ‘பட்ஜெட்’ என்ற பதம் “பௌஜெட்” என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருளாவது சிறிய தோல் பை என்பதாகும். வரவு செலவுத் திட்டம் என்பது எதிர் நோக்குகிற நிதி ஆண்டிற்குரிய அரசின் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றைக் காட்டும் வருடாந்திர நிதி அறிக்கை ஆகும்.)
99) பட்ஜெட் என்பதற்கு “முதல் நிலையிலான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணம்” என்று வரைவிலக்கணம் வகுத்தவர் யார்?
A) பாஸ்டபிள்
B) ஆடம் ஸ்மித்
C) ரேனி ஸ்டோன்
D) டால்டன்
(குறிப்பு – முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணம் என்று பட்ஜெட்டுக்கு வரைவிலக்கணம் வகுத்தவர் ரேனி ஸ்டோன் என்பவராவார். வரவு செலவுத் திட்டமானது குறிப்பிட்ட காலத்தின் நிதி ஏற்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இது வழக்கமான ஒப்புதலுடன், சட்டமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது என்று பட்ஜெட்டுக்கான வரைவிலக்கணத்தை வகுத்தவர் பாஸ்டபிள் என்பவராவார்.)
100) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வருடாந்திர நிதி அறிக்கையை சமர்ப்பிப்பது?
A) குடியரசு தலைவர்
B) மத்திய அரசு
C) மாநில அரசு
D) உள்ளாட்சி அமைப்புகள்
(குறிப்பு – இந்தியா ஒரு கூட்டரசு பொருளாதாரமாக விளங்குவதால் அரசின் வரவு செலவுத் திட்டம் அரசின் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு வருடாந்திர நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.)
101) கீழ்க்காணும் எந்த சரத்தின்படி மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
A) ஷரத்து – 110
B) ஷரத்து – 111
C) ஷரத்து – 112
D) ஷரத்து – 113
(குறிப்பு – இந்தியா ஒரு கூட்டரசு பொருளாதாரமாக விளங்குவதால் அரசின் வரவு செலவுத் திட்டம் அரசின் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சரத்து 112 இன் படி மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.)
102) கீழ்க்காணும் எந்த சரத்தின் படி ஒவ்வொரு மாநில அரசும் வரவு செலவுத்திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
A) ஷரத்து – 200
B) ஷரத்து – 201
C) ஷரத்து – 202
D) ஷரத்து – 203
(குறிப்பு – ஷரத்து 202 இன் படி ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். இது ஆண்டு நிதிநிலை அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது.)
103) வரவு செலவுத் திட்டம்( Budjet) எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – வரவு செலவுத்திட்டம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருவாய் வரவு செலவுத் திட்டம் மற்றும் மூலதன பட்ஜெட் என்பதாகும்.)
104) வருவாய் வரவு செலவுத்திட்டம் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – வருவாய் வரவு செலவு திட்டம் என்பது, வருவாய் வரவுகள் மற்றும் வருவாய் செலவினங்களை கொண்டதாகும். இது வரி வருவாய் மற்றும் வாரிசாரா வருவாய் என இருவகைப்படுத்தப்படுகிறது. வருவாய் செலவினங்களை திட்டம் சார்ந்த செலவினம் மற்றும் திட்டம் சாராத செலவினங்களாக வகைப்படுத்தப்படுகிறது.)
105) மூலதன வரவின் முக்கிய ஆதாரம் எது?
I. கடன்
II. முன்பணம்
III. வட்டி
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மூலதன பட்ஜெட் என்பது மூலதன வரவுகள் மற்றும் மூலதன செலவுகளை உள்ளடக்கியதாகும். மூலதன வரவின் முக்கிய ஆதாரங்களாக கடன்கள் முன்பணம் போன்றவை உள்ளது. மூலதன செலவினத்தை திட்டம் சார் செலவினம் மற்றும் திட்டம் சாரா மூலதன செலவு என வகைப்படுத்தப்படுகிறது.)
106) கடன்களை வசூலித்தல் என்பது கீழ்க்காணும் எவற்றுள் அடங்கும்?
A) வருவாய் வரவுகள்
B) மூலதன வரவுகள்
C) வருவாய் செலவுகள்
D) மூலதனச் செலவுகள்
(குறிப்பு – கடன்களை வசூலித்தல், கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள், முதலீட்டை விலக்குதல் போன்றவை மூலதன வரவுகளுள் அடங்கும். கூடு தனவரவுகள் மற்றும் வருவாய் வரவுகள் என்பன பட்ஜெட் வரவுகள் என்பதுள் அடங்கும்.)
107) துணைவி வரவு செலவு திட்டம் என்பது கீழ்காணும் எந்த காலத்தின்போது தாக்கல் செய்யப்படுகிறது?
I. தேசிய பேரிடர் காலத்தின்போது
II. தேசிய விடுமுறையின்போது
III. ஆண்டுக்கு ஒரு முறை
A) I மட்டும் சரி
B) I, II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – போர்க்காலம் மற்றும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது செலவுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இருப்பதில்லை. இந்த எதிர்பாராத சூழ்நிலையில் சமாளிப்பதற்காக அரசினால் துணை வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும்.)
108) நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம் இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்தின்படி தாக்கல் செய்யப்படுகிறது?
A) ஷரத்து – 114
B) ஷரத்து – 115
C) ஷரத்து – 116
D) ஷரத்து – 117
(குறிப்பு – இதுக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு சரத்து – 116 இன் படி பட்ஜெட் வருட மத்தியில் சமர்ப்பிக்கப்படும். இதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. இருக்கக்கூடிய அரசானது தேர்தல் காரணமாக அந்த வருடம் முழுவதும் தொடர்ந்தோ தொடராமலோ இருக்கலாம். இதனால் அந்த அரசு தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டம், நிதிக்கு வாக்கெடுப்பு வரவுசெலவுத்திட்டம் என்பதாகும்.)
109) நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) நொண்டி குதிரை வரவு செலவு திட்டம்
B) நொண்டி மாடு வரவு செலவு திட்டம்
C) நொண்டி வாத்து வரவு செலவு திட்டம்
D) நொண்டி கழுதை வரவு செலவு திட்டம்
(குறிப்பு – நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம் என்பது, நொண்டி வாத்து வரவுசெலவுத்திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சிறப்பு நிகழ்வாக நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவுத்திட்டமான அவசியமான இனங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறும் வரை செலவு மேற்கொள்ள அனுமதி உள்ளது.)
110) நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் வரை தொகுப்பு நிதியிலிருந்து எத்தனை காலம் வரை பணம் பெற்றுக்கொள்ளலாம்?
A) இரண்டு மாதங்கள்
B) மூன்று மாதங்கள்
C) நான்கு மாதங்கள்
D) ஆறு மாதங்கள்
(குறிப்பு – சிறப்பு நிகழ்வாக நிதிக்கு வாக்கெடுப்பும் வரவு செலவுத்திட்டமான அவசியமான இனங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறும் வரை செலவு மேற்கொள்ள அனுமதி உள்ளது. வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் வரை தொகுப்பு நிதியிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள சட்டரீதியான அனுமதி உள்ளதை வாக்கெடுக்கும் வரவு செலவு திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய அனுமதி அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.)
111) இந்திய அரசு கீழ்க்காணும் எந்த ஆண்டு காலத்தில் பூஜ்ஜிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தது?
A) 1986-1987களில்
B) 1987-1988களில்
C) 1988-1989களில்
D) 1989-1990களில்
(குறிப்பு – இந்திய அரசு 1987-1988களில் பூஜ்ய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. இதில் ஒவ்வொரு செலவினமும் புதிதாக கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டை கொண்டுள்ளது.)
112) செயல்திறன் வரவு செலவுத் திட்டம் எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது?
A) அமெரிக்கா
B) பிரான்ஸ்
C) ஜப்பான்
D) இந்தியா
(குறிப்பு – செயல்திறன் வரவு செலவுத் திட்டம் என்பது எந்த ஒரு வரவு செலவுத்திட்டத்தின் வெளியீட்டின் அடிப்படையில் வரவு செலவுத்திட்டம் அமைந்தால் அது செயல்திறன் வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. இது உலகில் முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.)
113) இந்தியாவில் செயல்திறன் வரவு செலவு திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) அவசிய திட்டம்
B) சாதனை திட்டம்
C) சாதுரியமான திட்டம்
D) தீவிரமான திட்டம்
(குறிப்பு – செயல்திறன் வரவுசெலவுத்திட்டம் 1949 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சர்உப்பர் என்பவரின் தலைமையின் கீழ் அமைந்த நிர்வாக சீர்திருத்த குழுவால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் என்ன செய்தோம், எவ்வளவு செய்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். இந்தியாவில் செயல்திறன் வரவு செலவுத்திட்டத்தை “சாதனை திட்டம்” என்று அழைக்கின்றனர்)
114) சமநிலை வரவு செலவுத் திட்டம் என்பதில் கீழ்காணும் எந்த இரண்டு கருத்துருக்கள் சமமாக இருக்க வேண்டும்?
I. அரசின் திட்டமிட்ட வருவாய்
II. அரசின் எதிர்நோக்கும் செலவுகள்
III. அரசின் முதலீடு .
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – சமநிலை வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இருந்தால் அது சமநிலை வரவு செலவுத்திட்டம் எனப்படும். அதாவது அரசின் திட்டமிட்ட வருவாய் = அரசின் எதிர்நோக்கும் செலவுகள்)
115) வரவு செலவுத்திட்டத்தின் வகைகள் எத்தனை?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – வரவு செலவுத் திட்டம் மூன்று வகைப்படும். அவை, 1) பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம், 2) சமமான வரவுசெலவுத்திட்டம், 3) உபரி வரவு செலவு திட்டம் என்பன ஆகும்.)
116) செலவைவிட வருவாய் அதிகமாக இருப்பது?
A) பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்
B) சமமான வரவுசெலவுத்திட்டம்
C) உபரி வரவு செலவு திட்டம்
D) இது எதுவும் அல்ல.
(குறிப்பு – செலவை விட வருவாய் அதிகம் அதிகமாக இருப்பது உபரி வரவு செலவுத் திட்டம் ஆகும். வருவாயை விட செலவு அதிகமாக இருப்பது பற்றாக்குறை வரவு செலவு திட்டம் ஆகும். வருவாயும் செலவும் சமமாக இருப்பது சமமான வரவுசெலவுத்திட்டம் ஆகும்.)
117) வரவு செலவு திட்ட செயல்முறைகள் என்பது?
I. வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது
II. வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது
III. வரவு செலவு திட்டத்தை செயல்படுத்துவது
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – வரவு செலவு திட்ட செயல்முறைகள் என்பது வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பது, தாக்கல் செய்வது மற்றும் செயல்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மைய அரசு வரவுசெலவுத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் தயாரிக்கிறது. மாநில அரசு வரவு செலவு திட்டத்தை மாநில நிதித்துறை தயாரிக்கிறது.)
118) வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது கணக்கில் கொள்ளப்பட வேண்டியது கீழ்க்கண்டவற்றுள் எது?
I. வரவு செலவுத் திட்டத்தின் யுக்திகள்
II. பல்வேறு திட்டங்களுக்கான நிதி தேவைகள்
III. பேரியல் பொருளாதார கொள்கை இலக்குகளை திட்ட காலத்திற்குள் அடைதல்
IV. வரி மற்றும் வரியற்ற வருவாய் வரவுகளில் மதிப்பீடு.
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III, IV மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – பேரியல் பொருளாதார கொள்கை இலக்குகளை திட்ட காலத்திற்குள் அடைதல், வரவு செலவு திட்டத்தில் யுத்திகள், பல்வேறு திட்டங்களுக்கான நிதி தேவைகள், வரி மற்றும் வரியற்ற வருவாய் வரவுகளின் மதிப்பீடு, மூலதன செலவினத்தின் மதிப்பீடு போன்றவைகளை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் காலத்தில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.)
119) வருவாய் செலவினத்தை மதிப்பீடு என்பது கீழ்காணும் எதனை உள்ளடக்கியது?
A) பாதுகாப்பு செலவீனம்
B) மானியம்
C) கடனுக்கான வட்டி செலுத்தல்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – வருவாய் செலவினத்தின் மதிப்பீடு என்பன பாதுகாப்பு செலவினம், மானியம், கடனுக்கான வட்டி செலுத்துதல் போன்றவைகளாகும். மூலதன செலவினத்தின் மதிப்பீடு என்பன ரயில்வே, சாலை, பாசன வளர்ச்சி போன்றவற்றுக்காக அரசு செய்யும் செலவுகள் ஆகும்.)
120) மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் எங்கு தாக்கல் செய்வார்?
A) சட்டசபையில்
B) மக்களவையில்
C) மாநிலங்களவையில்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – நடுவன் அரசின் அங்கத்தினராக நிதி அமைச்சர் மைய அரசின் வரவு செலவுத்திட்டத்தை புதிய நிதி ஆண்டு துவங்கும் முதல் நாள் பாராளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்வார். மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களும் அவ்வாறு அங்கங்கே செய்வார்கள்.)
121) கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
கூற்று 1 – இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பண மசோதா மக்களவையில் முதலில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.
கூற்று 2 – இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி, மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.
கூற்று 3 – இந்திய அரசியல் அமைப்பின்படி, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுக்களும் சரி
(குறிப்பு – மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும். நடுவன் அரசின் அங்கத்தினராக நிதி அமைச்சர் மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தை புதிய நிதி ஆண்டு துவங்கும் முதல் நாள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார். பண மசோதா முதலில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.)
122) இந்தியாவில் அரசு கணக்குகள் எத்தனை முறைகளில் பராமரிக்கப்படுகிறது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – வரவு செலவுத்திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்துகிறது. வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தான் மிக முக்கியமானதாகும். இந்தியாவில் அரசு கணக்குகள் மூன்று முறைகளில் பராமரிக்கப்படுகிறது.)
123) இந்தியாவில் அரசு கணக்குகள் கீழ்க்காணும் எந்த முறையில் பராமரிக்கப்படுவதில்லை?
A) தொகுப்பு நிதி
B) வைப்பு நிதி
C) அவசர நிதி
D) பொதுக்கணக்கு
(குறிப்பு – இந்தியாவில் அரசு கணக்குகள் மூன்று முறைகளில் பராமரிக்கப்படுகிறது அவை தொகுப்பு நிதி, அவசர நிதி மற்றும் பொது கணக்கு என்பன ஆகும்.)
124) இந்தியாவில் வரவு செலவுத்திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழு எது?
I. பொது கணக்கு குழு
II. மதிப்பீட்டு குழு
III. நிதி குழு
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள் ஆவன, 1) பொது கணக்கு குழு மற்றும் 2) மதிப்பீட்டு குழு என்பன ஆகும். இந்தக் குழுக்கள் எந்த அமைச்சகமும் அல்லது துறையும் அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கும்.).
125) இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை வகையான பற்றாக்குறைகள் உள்ளன?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – வரவு செலவு திட்ட பற்றாக்குறை என்பது வரவு செலவுத் திட்டத்தில் உள்ள வருவாய், செலவை விட குறைவாக இருப்பது ஆகும். இந்த நிலை அரசு பற்றாக்குறை எனவும் அழைக்கப்படும். இந்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் நான்கு வகையான பற்றாக்குறைகள் உள்ளன.)
126) கீழ்க்காணும் எது இந்திய அரசின் வரவு செலவு பற்றாக்குறைகளுள் அல்லாதது?
A) வருவாய் பற்றாக்குறை
B) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
C) நிதி பற்றாக்குறை
D) முதலீடு பற்றாக்குறை
(குறிப்பு – இந்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் நான்கு வகையான பற்றாக் குறைகள் உள்ளன. அவை, 1) வருவாய் பற்றாக்குறை, 2) வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை, 3) நிதிப்பற்றாக்குறை மற்றும் 4) முதன்மைப் பற்றாக்குறை என்பன ஆகும்.)
127) அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவைவிட அதிகமாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
A) வருவாய் பற்றாக்குறை
B) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
C) நிதி பற்றாக்குறை
D) முதன்மைப் பற்றாக்குறை
(குறிப்பு – அரசின் வருவாய் செலவினம், வருவாய் வரவை விட அதிகமாக இருந்தால் அது வருவாய் பற்றாக்குறை எனப்படும். இதில் மூலதன வரவு மற்றும் மூலதன செலவை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. வருவாய் பற்றாக்குறை என்பது அரசின் அன்றாட பணிகளை நடத்துவதற்கு தேவையானதை விட குறைவாக உள்ளதை காட்டுவதாகும்.)
128) கீழ்க்காணும் எது வருவாய் பற்றாக்குறையை விளக்குகிறது?
A) RD = RE – RR
B) RE = RD – RR
C) RR = RE – RD
D) RD + RE – RR
(குறிப்பு – வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த செலவினம் (RE) – மொத்த வருவாய் வரவுகள் (RR) என்பது வருவாய் பற்றாக்குறையை விளக்குவதாகும். இதில் வருவாய் செலவினம் (RE) – வருவாய் வரவுகள் (RR) > 0 ஆக இருக்கும்.)
129) கீழ்காணும் எந்த பற்றாக்குறை வரவு செலவு பற்றாக்குறையை விட அதிகமானதாகும்?
A) வருவாய் பற்றாக்குறை
B) நிதிப் பற்றாக்குறை
C) முதன்மைப் பற்றாக்குறை
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – நிதிப் பற்றாக்குறை என்பது வரவு செலவு பற்றாக்குறையை விட அதிகமானதாகும். நிதி பற்றாக்குறை = வரவு செலவு திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடி கடன்களும் ஏனைய பொறுப்புகளும்).
130) முதன்மை பற்றாக்குறை எவ்வாறு விளக்கப்படுகிறது?
A) PD = FD – IP
B) PD = FD / IP
C) PD = FD + IP
D) PD = FD × IP
(குறிப்பு – முதன்மை பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையில் இருந்து வட்டி செலுத்தலை கழித்தபின் உள்ள பற்றாக்குறை ஆகும். அரசின் உண்மையான சுமையை காட்டும். மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியை கணக்கில் கொள்ளாது. முதன்மை பற்றாக்குறை (PD) = நிதி பற்றாக்குறை (FD) – வட்டி செலுத்துதல் (IP))
131) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
A) நிதி பற்றாக்குறை முதன்மை பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கும்
B) நிதிப் பற்றாக்குறை முதன்மை பற்றாக்குறையை விட குறைவாக இருக்கும்
C) நிதிப் பற்றாக்குறையும் முதன்மை பற்றாக்குறையும் சமமாக இருக்கும்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – முதன்மை பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையில் இருந்து வட்டி செலுத்தலை கழித்தபின் உள்ள பற்றாக்குறை ஆகும். அரசின் உண்மையான சுமையை காட்டும். மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியை கணக்கில் கொள்ளாது. முதன்மை பற்றாக்குறை என்பது அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையை குறிக்கும். எனவே நிதி பற்றாக்குறை முதன்மை பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கும்.)
132) இந்திய அரசியல் அமைப்பின் எந்த அட்டவணையில் அதிகாரங்களின் பிரிவு வைக்கப்பட்டுள்ளது?
A) ஐந்தாவது அட்டவணையில்
B) ஆறாவது அட்டவணையில்
C) ஏழாவது அட்டவணையில்
D) எட்டாவது அட்டவணையில்
(குறிப்பு – நமது அரசியல் அமைப்பில் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே அதன் வரம்புகளை மீறுவதும், மற்றவர்களின் செயல்பாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்த்து அவரவர் சொந்த பொறுப்புகளில் செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்கள் உள்ளன.அவை மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் இணைப்பு பட்டியல் என்பன ஆகும்.)
133) கீழ்கண்டவற்றுள் எது மத்திய பட்டியலில் இல்லை?
A) பாதுகாப்பு
B) காவல்
C) தபால்
D) ரயில்வே
(குறிப்பு – மத்தியப் பட்டியலில் பாதுகாப்பு, ரயில்வே, தபால் மற்றும் தந்தி முதலிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இனங்களை கொண்டுள்ளது. மத்திய பட்டியல் என்பது முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களை கொண்டதாகும்)
134) மாநிலப் பட்டியல் எத்தனை இனங்களைக் கொண்டது?
A) 100
B) 55
C) 61
D) 59
(குறிப்பு – மத்தியப் பட்டியலில் பாதுகாப்பு, ரயில்வே, தபால் மற்றும் தந்தி முதலிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இனங்களை கொண்டுள்ளது. மத்திய பட்டியல் என்பது முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களை கொண்டதாகும். மாநில பட்டியல் பொது நலன், காவல் போன்ற 61 இனங்களை கொண்டுள்ளது. இணைப்பு பட்டியல் 52 இனங்களைக் கொண்டது.)
135) மின்சாரம் கீழ்காணும் எந்தப் பட்டியலில் உள்ளது?
A) மத்திய பட்டியல்
B) மாநில பட்டியல்
C) இணைப்பு பட்டியல்
D) அனைத்திலும்
(குறிப்பு – பொதுப் பட்டியல் என்பது மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ளது. பொதுப் பட்டியல் 52 இனங்களை கொண்டது, இதில் மின்சாரம், தொழிற்சங்கம், பொருளாதார மற்றும் சமூக திட்டங்கள் போன்றவை உள்ளடங்கும்.)
136) மத்திய அரசின் வரி மற்றும் வரியில்லா வருமானம் வழிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. சுங்க வரி ஏற்றுமதி வரி
II. பணம், நாணயங்கள் மற்றும் அன்னிய செலவாணி
III. தொழில் நிறுவனங்கள் மீதான வரி
IV. வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) III, IV மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மைய அரசின் வரி மற்றும் வரியில்லா வருமான வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை, தொழில் நிறுவனங்கள் மீதான வரி, பணம் நாணயங்கள் மற்றும் அன்னிய செலவாணி, சுங்கவரி ஏற்றுமதி வரி உட்பட, வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி, நீதிமன்றங்கள் விதிக்காக மத்தியப் பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள், புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களுக்கான கலால் வரி போன்றவை அடங்கும்.)
137) கீழ்க்கண்டவற்றுள் எது மத்திய அரசின் வருமான வழியாகும்?
A) தபால் துறையின் சேமிப்பு வங்கி
B) தொலைத்தொடர்பு துறையின் வருவாய்கள்
C) மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – அயல்நாட்டு கடன்கள், இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள், தபால் துறையின் சேமிப்பு வங்கி, தொலைத்தொடர்பு துறையின் வருவாய், மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள், மத்திய அரசின் பொது கடன்கள், ரயில்வே, மாற்று சீட்டுகள் காசோலைகள் மற்றும் உறுதிப் பத்திரங்கள் மீதான வில்லை கட்டணம் போன்றவை மைய அரசின் வருவாய் மூலமாகும்.)
138) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A) சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரியானது, மத்திய அரசின் வருவாயாக கருதப்படுகிறது.
B) வேளாண் வருவாய் உள்பட வருமான வரி மைய அரசின் வருவாய் மூலமாகும்.
C) பங்கு சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரிகள் மைய அரசின் வருவாய் மூலதனம் ஆகும்.
D) செய்தித்தாள் மீதான வரி மத்திய அரசின் வருவாய் ஆகும்.
(குறிப்பு – வருமான வரி என்பது மைய அரசின் வருமான வழியாகும்.எனினும் வருமான வரியில் வேளாண் வருவாய் ஏற்கப்படுவதில்லை. ரயில், கடல்வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரியும் மத்திய அரசின் வருவாயாக கருதப்படுகிறது.
139) கீழ்க்காணும் எது மத்திய அரசுக்கான வருவாய் அல்ல?
A) செய்தித்தாள் மீதான வரி
B) வேளாண் வருவாய்
C) இந்திய ரிசர்வ் வங்கி
D) வருமான வரி
(குறிப்பு – வேளாண் வருவாய் என்பது மாநில அரசுகளுக்கான வருவாய் மூலதனம் ஆகும். வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி என்பது மத்திய அரசுக்கான வருவாய் மூலதனம் ஆகும்.)
140) கீழ்க்காணும் எந்த வருவாய்கள் மாநில அரசின் வருவாயாக கருதப்படுகிறது?
I. தல வரி
II. மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி
III. நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
IV. புகையிலை மீதான வரி
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) I, II, III மட்டும்
(குறிப்பு – தலவரி, வேளாண் நிலங்கள் மீதான வரி,மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி, நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி, மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி, செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி போன்றவை மாநில அரசுக்கான வருவாயாக கருதப்படுகிறது)
141) கீழ்க்காணும் எது மாநில அரசுக்கான வருவாயை அல்ல?
A) சாலை சுங்க கட்டணம்
B) வாகன வரி
C) சூதாட்டங்கள் மீதான வரி
D) புகையிலை மீதான வரி
(குறிப்பு – சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி, வாகன வரி, விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி அனைத்தும் மாநில அரசின் வருவாயாக கருதப்படுகிறது.)
142) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ரயில், கடல்வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி மத்திய அரசுக்கு சொந்தமானதாகும்.
கூற்று 2 – சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி மாநில அரசுகளை சாரும்.
கூற்று 3 – எனினும் சாலை சுங்க கட்டணம் மத்திய அரசுக்கு சேரும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுக்களும் சரி
(குறிப்பு – சாலை சுங்க கட்டணம் மாநில அரசுக்கு சேர வேண்டிய வருவாய் ஆகும். வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான தொழில்வரி, செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி, செய்தித்தாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி, உள்ளூர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருட்களுக்கான நுழைவு வரி போன்றவை மாநில அரசை சாரும்.)
143) மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து எது?
A) ஷரத்து – 266
B) ஷரத்து – 267
C) ஷரத்து – 268
D) ஷரத்து – 269
(குறிப்பு – மத்திய அரசால் விதிக்கப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வருவாய் என்பதை இந்திய அரசியலமைப்பின் சரத்து – 269 கூறுகிறது. இதன்படி விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துக்கள் மீதான வரி, பண்ணை வரி, செய்தித்தாள் மீதான வரி போன்றவை மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது ஆகும்.)
144) கீழ்க்கண்டவற்றுள் எது மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு அரசுகளுக்கு ஒதுக்கப்படுவது இல்லை?
A) ரயில்வே கட்டணங்கள்
B) சரக்கு கட்டணங்கள்
C) கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி
D) விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துக்கள் மீதான வரி
(குறிப்பு – விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துக்கள் மீதான வரி, வேளாண்மை நிலம் தவிர்த்த பண்ணை வரி, ரயில்வே கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்கள், பங்கு சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி போன்றவைகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்ககூடியவை ஆகும்.)
145) மத்திய அரசால் விதிக்கப்பட்டு ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
A) ஷரத்து – 266
B) ஷரத்து – 267
C) ஷரத்து – 268
D) ஷரத்து – 269
(குறிப்பு – மத்திய அரசால் விதிக்கப்பட்டு ஆனால் மாநில அரசு வசூலித்து மற்றும் பயன்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்பில் ஷரத்து – 268 இல் கூறப்பட்டுள்ளது. வில்லை கட்டணம் மற்றும் சுங்க வரி, மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரிகள் போன்றவை, மத்திய அரசால் விதிக்கப்படும் ஆனால் மாநில அரசுகள் வசூலித்து பயன்படுத்திக்கொள்ளும்.)
146) யூனியன் பிரதேசங்களில் சரத்து – 268 இன்படி யார் வரிகளை வசூல் செய்வார்கள்?
A) மத்திய அரசு
B) யூனியன் பிரதேச அரசு
C) நிதி அமைச்சர்
D) உள்ளாட்சி அமைப்புகள்
(குறிப்பு – வில்லை கட்டணம் மற்றும் சுங்க வரி மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி போன்ற வரிகளை மத்திய அரசு விதிக்கும் ஆனால் அவற்றை மாநில அரசு வசூலித்து பயன்படுத்திக் கொள்ளும். இது இந்திய அரசியலமைப்பில் ஷரத்து 268 ல் கூறப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் இந்திய அரசு வசூலிக்கும். மற்றவகையில் மாநிலங்களே அவைகளை விதிக்கும்.)
147) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிக்க கூடிய வரிகள் பற்றி கூறும் சரத்து எது?
A) ஷரத்து 270, 271
B) ஷரத்து 270, 272
C) ஷரத்து 270, 273
D) ஷரத்து 270, 274
(குறிப்பு – மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிக்க கூடிய வழிகள் பற்றி இந்திய அரசியலமைப்பின் ஷரத்து – 270 மற்றும் ஷரத்து – 272 கூறுகிறது.)
148) கீழ்க்காணும் எந்த வரி ஷரத்து – 270, 272 இன்படி செயல்படுகிறது?
A) வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய்
B) சாலை சுங்க கட்டணம்
C) கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி
D) நில வருவாய்
(குறிப்பு – வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய், இந்திய அரசின் மத்திய பட்டியலில் உள்ள மத்திய கலால் வரி( மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி தவிர்த்து) போன்றவைகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிக்க கூடிய வரிகள் ஆகும்.)
149) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – வருமான வரியில் நிறுவனங்கள் மீதான வரி உள்ளடக்கப்படவில்லை.
கூற்று 2 – வருமானவரி மாநகராட்சி வரியை உள்ளடக்கியது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – வருமான வரியில் நிறுவனங்கள் மீதான வரி உள்ளடக்கப்படவில்லை. வருமானவரி மாநகராட்சி வரியை உள்ளடக்கியது இல்லை. நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வருமான வரி மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது.)
150) கூட்டரசு நிதியின் கொள்கைகள் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?
A) சுதந்திரம்
B) சமத்துவம்
C) ஆக்கிரமிப்பு
D) நிர்வாக சிக்கனம்
(குறிப்பு – சுதந்திரம், சமத்துவம் ஒரே மாதிரியான தன்மை, போதுமான வளங்களை பெற்றிருத்தல், நிதி வசதி, ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுபடுதல், செயல்திறன், நிர்வாக சிக்கனம் பொறுப்பேற்பு போன்றவை கூட்டரசு நிதியில் பின்பற்றப்படும் முக்கிய கொள்கைகள் ஆகும்)
151) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கூட்டரசு நிதி முறையின் கீழ் ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
கூற்று 2 – சமத்துவ நீதியின் அடிப்படையில் மாநிலங்கள் நியாயமான வருவாய் பங்கினை பெரும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
கூற்று 3 – ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்தவேண்டும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுக்களும் சரி
(குறிப்பு – கூட்டரசு நிதி முறையின் கீழ் ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் பொருளாவது, ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்களை விதிப்பதற்கான அதிகாரம், பணத்தை கடன் வாங்குவது மற்றும் செலவை சமாளிப்பது போன்றவை பற்றி தன்னாட்சி பெற்று இருக்க வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் மாநிலங்கள் நியாயமான வருவாய் பங்கினை பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.)
152) வரி செலுத்தும் திறன் ஒவ்வொரு பகுதிக்கும் சமமாக இல்லாததால் கீழ்க்காணும் எந்த கூட்டரசு கொள்கையை பின்பற்ற முடியாது?
A) சுதந்திரம்
B) சமத்துவம்
C) ஒரே மாதிரியான தன்மை
D) நிதி வசதி
(குறிப்பு – கூட்டரசு முறையில் ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சமூக வரிசெலுத்தல்களை செய்ய வேண்டும். ஆனால் வரி செலுத்தும் திறன் ஒவ்வொரு பகுதிக்கும் சமமாக இல்லாததால் இந்த கொள்கையை பின்பற்ற இயலாது. போதுமான வளங்களை பெற்றிருத்தல் கொள்கை என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் அவற்றின் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் வளங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.போதுமான வளம் என்பது தற்போதைய மற்றும் எதிர்கால தேவையை கொண்டு குறிக்கப்படுகிறது.)
153) ஒரு ஆண்டில் ஒரு முறைக்கு மேல் ஒருவரும் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படகூடாது என்று கூறும் கூட்டரசு நிதிக்கொள்கை எது?
A) ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல்
B) நிதி வசதி
C) நிர்வாக சிக்கனம்
D) செயல்திறன்
(குறிப்பு – கூட்டரசு நிதி கொள்கையில், செயல்திறன் என்னும் கொள்கை என்பது நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து மற்றும் திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். ஏய்ப்பு மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் இருக்க கூடாது. ஒரு ஆண்டில் ஒரு முறைக்கு மேல் ஒருவரும் வரி விதிப்புக்கு உட்படுத்தபடக்கூடாது. இரட்டை வரி முறை கூடாது என்று கூறுவதாகும்.)
154) பொருத்துக
I. முதலாம் நிதிக்குழு – a) P.V.ராஜமன்னார்
II. இரண்டாம் நிதிக்குழு – b) K.C.நியோகி
III. மூன்றாம் நிதிக்குழு – c) K.சந்தானம்
IV. நான்காம் நிதிக்குழு – d) A.Kசந்தா
A) I-b, II-c, III-d, IV-a
B) I-d, II-b, III-a, IV-c
C) I-c, II-a, III-b, IV-d
D) I-d, II-c, III-a, IV-b
(குறிப்பு – முதல் 4 நிதி குழுக்களுக்கு முறையே K.C.நியோகி, K.சந்தானம், A.K.சந்தா, P.V.ராஜமன்னார் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். முதல் நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1951 ஆகும்.)
155) தவறான இணை எது?
A) முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1951
B) இரண்டாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1956
C) மூன்றாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1961
D) நான்காவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1964
(குறிப்பு – முதலாவது நிதிக்குழு 1951 ஆம் ஆண்டிலும் (1952-1957), இரண்டாவது நிதிக்குழு 1956 ஆம் ஆண்டிலும் (1957-1962), மூன்றாவது நிதிக்குழு 1960 ஆம் ஆண்டிலும் (1962-1966), நான்காவது நிதிக்குழு 1964 ஆவது ஆண்டிலும் (1966-1969) ஏற்படுத்தப்பட்டது)
156) பொருத்துக
I. ஐந்தாம் நிதிக்குழு – a) Y.B.சவான்
II. ஆறாம் நிதிக்குழு – b) மகாவீர் தியாகி
III. ஏழாம் நிதிக்குழ – c) K. பிரம்மானந்த ரெட்டி
IV. எட்டாம் நிதிக்குழு – d) J.M.சாலட்
A) I-b, II-c, III-d, IV-a
B) I-d, II-b, III-a, IV-c
C) I-c, II-a, III-b, IV-d
D) I-d, II-c, III-a, IV-b
(குறிப்பு – ஐந்தாவது(1968), ஆறாவது (1972), ஏழாவது (1977) மற்றும் எட்டாவது நிதிக்குழு(1983) ஆகியவற்றிற்கு தலைவர்களாக முறையே மகாவீர் தியாகி, பிரம்மானந்த ரெட்டி, J.M.சாலட் மற்றும் Y.B.சவான் ஆகியோர் இருந்தனர்.)
157) பொருத்துக
I. ஒன்பதாம் நிதிக்குழு – a) K.C.பந்த்
II. பத்தாம் நிதிக்குழு – b) A.Mகுஸ்ரோ
III. பதினோராவது நிதிக்குழு – c) C.ரங்கராஜன்
IV. பன்னிரண்டாவது நிதிக்குழு – d) N.K.P.சால்வே
A) I-d, II-a, III-b, IV-c
B) I-d, II-b, III-a, IV-c
C) I-c, II-a, III-b, IV-d
D) I-d, II-c, III-a, IV-b
(குறிப்பு – ஒன்பதாவது நிதி குழுவிற்கு(1987) NKP.சால்வே தலைவராக இருந்தார். பத்தாவது நிதி குழுவிற்கு (1992) K.C.பந்த் தலைவராக இருந்தார். 11வது மற்றும் 12வது நிதிக்குழுவின் தலைவர்களாக முறையே A.M. குஸ்ரோ மற்றும் C. ரங்கராஜன் ஆகியோர் இருந்தனர். பதின்மூன்றாவது, பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நிதி குழுவிற்கு முறையே Dr.விஜய், Y.ரெட்டி, N.K.சிங் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர்.)
158) இந்தியாவில் இதுவரை ஏற்படுத்தப்பட்ட நிதி குழுக்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 14
B) 15
C) 16
D) 17
(குறிப்பு – இந்தியாவின் முதல் நிதி குழு 1951 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக K.C.நியோகி இருந்தார். இதுவரை இந்தியாவில் 15 நிதி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் கடைசி நிதி குழு தலைவராக N.K.சிங் செயலாற்றினார்)
159) இந்தியாவில் கடைசியாக எந்த ஆண்டு நிதி குழு ஏற்படுத்தப்பட்டது?
A) 2015 ஆம் ஆண்டு
B) 2016 ஆம் ஆண்டு
C) 2017 ஆம் ஆண்டு
D) 2018 ஆம் ஆண்டு
(குறிப்பு – இந்தியாவின் முதல் நிதி குழு 1951 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக K.C.நியோகி இருந்தார். இதுவரை இந்தியாவில் 15 நிதி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 2017ஆம் ஆண்டு 15 ஆவது பிடி குழு ஏற்படுத்தப்பட்டது.இந்தியாவின் கடைசி நிதி குழு தலைவராக N.K.சிங் செயலாற்றினார்)
160) இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்தின் படி நிதிக்குழு என்பது சட்டபூர்வ அமைப்பாகும்?
A) ஷரத்து – 280 இன்படி
B) ஷரத்து – 281 இன்படி
C) ஷரத்து – 282 இன்படி
D) ஷரத்து – 283 இன்படி
(குறிப்பு – இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280 இன்படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும். இது 1951 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிதி உறவை வரையறுப்பதற்கு அமைக்கப்பட்டது.)
161) நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது?
A) 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
B) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை
C) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
D) 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை
(குறிப்பு – நிதிக்குழு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக அமைப்பாகும். நிதி குழு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையை குறைப்பதற்கும் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சமமின்மையை குறைப்பதற்கும் முயல்கிறது.)
162) பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது?
A) ஜனவரி 1, 2020
B) பிப்ரவரி 1, 2020
C) மார்ச் 1, 2020
D) ஏப்ரல் 1, 2020
(குறிப்பு – 14வது நிதிக்குழு 2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1 2015 முதல் மார்ச் 20 வரை செல்லதக்கதாகும். 15வது நிதிக்குழு 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.)
163) இந்திய நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறும் ஷரத்து எது?
A) ஷரத்து – 280 (1)
B) ஷரத்து – 280 (2)
C) ஷரத்து – 280 (3)
D) ஷரத்து – 280 (4)
(குறிப்பு – இந்திய அரசியலமைப்பின் ஷரத்து – 280(3) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது. இந்த சரத்தின் படி இக்குழு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்கிறது. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிகர வரி வருவாய் துறை ஒதுக்கீடு செய்து மாநிலங்களுக்கு அவற்றுக்கு உரிய பங்கை பகிர்ந்து அளித்தலை வலியுத்துகிறது)
164) மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கவுள்ள மானிய அளவு பற்றி கூறும் சரத்து எது?
A) ஷரத்து – 275 (1)
B) ஷரத்து – 276 (1)
C) ஷரத்து – 277 (1)
D) ஷரத்து – 278 (1)
(குறிப்பு – மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கவுள்ள மானிய அளவு பற்றி கூறும் சரத்து – 275 (1) ஆகும். இதனைப் பற்றியும் அந்த மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்தும், குடியரசு தலைவருக்கு நிதிக்குழு கூறுகிறது.)
165) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – வசூலிக்கப்படும் வரிகளில், 58% வரி மத்திய அரசுக்கு என்றும், 42% வரி மாநிலங்களுக்கு என்றும் பிரிக்கப்படுகிறது.
கூற்று 2 – ஜிஎஸ்டி யின்படி மாநில அரசுக்கு 50% வரை பெறுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – வசூலிக்கப்படும் வரிகளில், 58% வரி மத்திய அரசுக்கு என்றும், 42% வரி மாநிலங்களுக்கு என்றும் பிரிக்கப்படுகிறது.ஜிஎஸ்டி யின்படி மாநில அரசுக்கு 50% வரை பெறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு -280 இன் கீழ் நிதிக்குழு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்தப்பட்டு, அது மத்திய மற்றும் மாநில அரசின் வழி பகிர்வை பரிந்துரை செய்கிறது.)
166) கீழ்காணும் உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள் எது தவறானது?
A) மாநகராட்சி
B) நகராட்சி
C) கிராம ஊராட்சி
D) மண்டலம்
(குறிப்பு – உள்ளாட்சி நிதி எனப்படுவது இந்தியாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றியது ஆகும். இந்தியாவில் பல்வேறு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. கிராம ஊராட்சி, மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்பு, நகராட்சி மாநகராட்சி போன்றவை உள்ளாட்சி அமைப்பின் வகைகள் ஆகும்.)
167) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஊராட்சியின் எல்லை வரம்பு என்பது ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
கூற்று 2 – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிராமங்கள் ஒரு ஊராட்சியின் கீழ் குழுவாக செயல்படுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – ஊராட்சியின் எல்லை வரம்பு என்பது ஒரு வருவாய் கிராமம் ஆகும். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிராமங்கள் ஒரு ஊராட்சியின் கீழ் குழுவாக செயல்படுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவப்பட்டுள்ளது.)
168) கிராம ஊராட்சியின் பணிகளுள் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?
I. சாலைகள், தொடக்கப்பள்ளிகள், கிராம சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை நிர்வகித்தல்.
II. குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு நீர் வழங்குதல்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – ஊராட்சியின் செயல்பாடுகள் குடிமை பொருளாதார மற்றும் பலவற்றை உள்ளடக்கி இருக்கும். இதனால் சிறிய இடர்பாடுகள் ஊராட்சியிலேயே அகற்றப்படும். சாலைகள், தொடக்கப்பள்ளிகள், கிராம சுகாதார நிலையங்கள் ஆகியவை கிராம பஞ்சாயத்துக்களால் நிர்வகிக்கப்படுகிறது. குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு நீர் வழங்குதல் அவைகளின் எல்லைக்குள் பொறுப்பாகும்.)
169) கீழ்கண்டவற்றுள் எது கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரம் அல்ல ?
A) பொது சொத்து வரி
B) நிலம் மீதான வரி
C) சுங்க கட்டணம்
D) தொழில் வரி
(குறிப்பு – கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பின்வருவன ஆகும். பொது சொத்து வரி, நிலம் மீதான வரி, தொழில் வரி, விலங்குகள் மற்றும் வாகனங்கள் மீதான வரி ஆகியவை கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்களாகும். சேவை வரி, நுழைவு வரி, திரையரங்கு வரி, புனித ஸ்தலங்கள் வரி, திருமணம் மீதான வரி, பிறப்பு மற்றும் இறப்பு மீதான வரி மற்றும் உழைப்பாளர் மீதான வரி போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது கிராம ஊராட்சியின் வருவாய் ஆதாரங்கள்.)
170) மாவட்ட வாரியத்தின் வரம்பில்லை எது?
A) வருவாய் மாவட்டம்
B) நகராட்சி
C) மாநகராட்சி
D) இவை எதுவும் அல்ல
(குறிப்பு – மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்புகள் என்பன அனைத்து கிராம பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். மாவட்ட வாரியத்தின் வரம் வெள்ளை வருவாய் மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டில் ஜில்லா அமைப்பு என்பது மாவட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)
171) கீழ்கண்டவற்றுள் எது மாவட்ட வாரியத்தின் வருவாய் ஆதாரம் அல்ல?
A) மாநில அரசிடம் இருந்து பெரும் மானிய உதவி
B) நில தீர்வைகள்
C) சொத்து மீதான வரி
D) சுங்க கட்டணம்
(குறிப்பு – மாவட்ட வாரியங்களின் வருவாய் ஆதாரங்கள் ஆவன, மாநில அரசிடமிருந்து பெறும் மானிய உதவி, நில தீர்வைகள், சுங்க கட்டணம், சொத்திலிருந்து பெறுகிற வருமானம் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெறக்கூடிய கடன்கள், வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான மானியங்கள், மாநில அரசு ஏற்றுக் கொள்ளுகிற சொத்துவரி மற்றும் பிற வரிகள் போன்றவை மாவட்ட வாரியங்களின் வருமான ஆதாரங்களாகும்.)
172) கீழ்க்கண்டவற்றுள் எது நகராட்சி அமைப்புகளின் பணிகளாகும்?
I. துப்புறவு
II. பொது சுகாதாரம்
III. விளக்குகள்
IV. குடிநீர் வினியோகம்
V. கால்நடை மருத்துவமனைகள்
A) I, II மட்டும்
B) I, II, III மட்டும்
C) IV, V மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – நகரப்பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிற நகராட்சி அமைப்புகளின் பணிகளாவன, துப்புரவு, பொது சுகாதாரம், சாலைகள், விளக்குகள், குடிநீர் வினியோகம், பூங்காக்களை பராமரித்தல், சாலைகளை தூய்மைபடுத்துதல், சுகாதார நிலையங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள், பாதாள சாக்கடை வசதி, கல்வி வசதி பொருட்காட்சி மற்றும் கண்காட்சி அமைத்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது.)
173) கீழ்க்கண்டவற்றுள் எது நகராட்சி அமைப்புகளின் வருமான ஆதாரம் அல்ல?
A) சொத்து மீதான வரிகள்
B) திரையரங்கு வரி
C) பொருட்கள் மீதான வரி
D) வருமான வரி
(குறிப்பு – நகராட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரங்கள் ஆவன, சொத்து மீதான வரிகள், பொருட்கள் மீதான வரிகள், குறிப்பாக நுழைவு வரி, தனிப்பட்ட வரிகள், தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு போன்றவற்றின் மீதான வரிகள், வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரிகள், திரையரங்கு வரி, மாநில அரசிடமிருந்து பெறும் மானிய உதவி போன்றவை நகராட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரம் ஆகும், )
174) தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியின் எண்ணிக்கை எத்தனை?
A) 13
B) 14
C) 15
D) 16
(குறிப்பு – தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்)
175) தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி எது?
A) திண்டுக்கல்
B) ஆவடி
C) தூத்துக்குடி
D) மதுரை
(குறிப்பு – தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆவடி மாநகராட்சி ஆகும். இது ஜூன் 17, 2019 அன்று உருவானது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் ஆவன, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோயில், ஓசூர் மற்றும் ஆவடி.)
176) கீழ்க்கண்டவற்றுள் எது மாநகராட்சியின் வருவாய் ஆதாரம் அல்ல?
A) வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரி
B) சொத்து வரி
C) விளம்பரங்கள் மீதான வரி
D) வருமான வரி.
(குறிப்பு – சொத்து மீதான வரி, வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரி, வாணிபம் மற்றும் வேலைவாய்ப்பு மீதான வரி, திரையரங்கு மற்றும் காட்சி வரி, நகரத்திற்குள் கொண்டுவரும் பொருட்கள் மீதான வரிகள், விளம்பரங்கள் மீதான வரிகள், நுழைவு வரி மற்றும் முனைம வரி போன்றவை மாநகராட்சியின் வருவாய் ஆதாரம் ஆகும்.)
177) நிதிக் கொள்கை எனப்படுவது தேசிய வருமானத்தின் மீது விரும்பத்தகுந்த விளைவை ஏற்படுத்தும் மற்றும் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய கொள்கையாகும் என்று வரைவிலக்கணம் வகுத்தவர் யார்?
A) டால்டன்
B) ஆர்தர் ஸ்மிதீஸ்
C) பியுளேர்
D) கீன்ஸ்
(குறிப்பு – நிதிக் கொள்கைக்கான மேற்கண்ட வரைவிலக்கணத்தை வகுத்தவர் ஆர்தர் ஸ்மீதீஸ் என்பவராவார். பொதுவான கண்ணோட்டத்தில் நிதிக் கொள்கை என்பது உற்பத்தி, வேலைவாய்ப்பு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய பேரினப் பொருளாதார மாறிகளை பாதிக்கும் வரவுசெலவுத் திட்ட மதிப்பு ஆகும்.)
178) கீழ்க்கண்டவற்றுள் எது நிதி கருவிகள் அல்லாதவை?
A) வரி விதித்தல்
B) பொது செலவு
C) பொதுக்கடன்
D) பொது சேமிப்பு
(குறிப்பு – நிதிக் கொள்கையை சில நிதி கருவிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் செலவுகள், வரி விதிப்பு மற்றும் கடன் பெறுதல் போன்றவை நிதி கருவிகள் ஆகும்.)
179) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – வரி அதிகரிப்பு செலவிட தக்க வருமானத்தை குறைக்கிறது.
கூற்று 2 – பணவீக்கத்தை கட்டுப்படுத்த வரியை அதிகப்படுத்த வேண்டும்.
கூற்று 3 – பொது செலவு பின்னிறக்கம் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – வரிகள் மக்களிடமிருந்து வருமானத்தை அரசுக்கு மாற்றுகிறது. வரிகள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும். வரி அதிகரிப்பு செலவிடத் தக்க வருமானத்தை குறைகிறது. எனவே பண வீக்கத்தை கட்டுப்படுத்த வரியை அதிகப்படுத்த வேண்டும். மந்த காலத்தில் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.)
180) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – அரசானது, கடன் மூலம் பொதுமக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது.
கூற்று 2 – விரிவாக்க நிதிக்கொள்கை என்பதில் அரசு செலவுகள் அதிகமாகவும், வரிகள் குறைவாகவும் இருக்கும்.
கூற்று 3 – சுருக்கப்பட்ட நிதிக் கொள்கை என்பதில் அரசு செலவுகள் குறைவாகவும், வரிகள் அதிகமாகவும் இருக்கும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – பொது செலவு பணியாளர்களின் கூலி மற்றும் சம்பளங்களை அதிகரிக்கும்போது பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான மொத்த தேவை உயர்கிறது. ஆகையால் பொது செலவு பின்னிறக்கம் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அரசு கடன் மூலம் பொதுமக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது. அது பின்னர் மக்களுக்கு திரும்ப வட்டியோடு செலுத்தப்படுகிறது. இதனால் அரசிடம் இருந்து பணம் மக்களுக்கு மாற்றப்படுகிறது.)
181) கீழ்க்கண்டவற்றுள் எது நிதிக் கொள்கையின் நோக்கங்களுள் தவறானது?
A) விலை நிலைத்தன்மை
B) பொருளாதார வளர்ச்சி
C) மூலதன உருவாக்கம்
D) நிலையான வருமானம்
(குறிப்பு – நிதிக் கொள்கையின் நோக்கங்களாக கருதப்படுபவை, முழு வேலை வாய்ப்பு விலை நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, சமமான பகிர்வு, நாணய மாற்று வீத சமநிலை, மூலதன உருவாக்கம் மற்றும் சம வட்டார வளர்ச்சி போன்றவை ஆகும்.)
182) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனைப் பெருக்க நிதிக்கொள்கை பயன்படுகிறது.
கூற்று 2 – வரியானது முதலீட்டை ஊக்குவிக்கும் கருவியாக பயன்படுகிறது.
கூற்று 3 – வளர் வீத வரி முறை பணக்கார மற்றும் ஏழை ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்க உதவுகிறது.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனைப் பெருக்க நிதிக்கொள்கை பயன்படுகிறது. வரியானது முதலீட்டை ஊக்குவிக்கும் கருவியாக செயல்படுகிறது. வரி விடுமுறை மற்றும் வரி தள்ளுபடிகள் புதிய தொழிற்சாலைகள் மூலம் முதலீட்டை தூண்டுகிறது. பொதுத்துறை முதலீடு அதிகரிக்கபடும்போது தனியார் துறையினரால் நிரப்ப முடியாத இடைவெளியை நிரப்புகிறது. வளர் வீடு வழிமுறை பணக்கார மற்றும் ஏழை ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க உதவுகிறது.)
183) பொருளாதாரம் மந்தத்தில் இருந்து விடுபட அரசின் தலையீடு தேவை என வலியுறுத்தியவர் யார்?
A) டால்டன்
B) ஆடம் ஸ்மித்
C) பிரவுன்
D) கீன்ஸ்
(குறிப்பு – நிதிக் கொள்கை உலக பொருளாதார பெருமந்ததிற்குப் பின்னர் மிகவும் பிரபலமானது. பொருளாதாரம் மந்தத்தில் இருந்து விடுபட அரசின் தலையீடு தேவை என கீன்ஸ் வலியுறுத்தினார். அரசின் செலவிற்கும், தனியாரின் முதலீடு, வட்டி வீதம், நுகர்வு மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.)
184) பின்தங்கிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிதிஊக்கம் வழங்கும்போது வட்டார வேறுபாடு குறைகிறது. இது நிதிக்கொள்கையின் எந்த நோக்கத்தை குறிக்கிறது?
A) சமமான பகிர்வு
B) சம வட்டார வளர்ச்சி
C) மூலதன உருவாக்கம்
D) பொருளாதார வளர்ச்சி
(குறிப்பு – பின்தங்கிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிதி ஊக்கம் வழங்கும்போது வட்டார வேறுபாடு குறைகிறது. பின்தங்கிய பகுதியில் தொழிற்பேட்டைகள் துவங்க பொது செலவினை மேற்கொண்டால் அப்பகுதியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. இது நிதிக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்றான சம வட்டார வளர்ச்சியை குறிக்கிறது.)
185) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத் திரட்சி மிக முக்கியமானதாகும்.
II. வரி சலுகைகள் மற்றும் உதவித்தொகை வழங்குவதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கிறது.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – நாணயமாற்று வீதத்தின் நகர்விற்கு ஏற்ப பன்னாட்டு வாணிபத்தின் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. வரி சலுகைகள் மற்றும் உதவித்தொகை வழங்குவதின் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பதன் மூலம் இறக்குமதி செலவை குறைக்கலாம். ஜாப் பொருள்கள் மற்றும் இயந்திரங்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் செலவை குறைத்து ஏற்றுமதியில் நிறுவனங்கள் போட்டியிட உதவுகிறது.)