Tnpsc

நவீனத்தை நோக்கி Online Test 11th History Lesson 14 Questions in Tamil

நவீனத்தை நோக்கி Online Test 11th History Lesson 14 Questions in Tamil

Congratulations - you have completed நவீனத்தை நோக்கி Online Test 11th History Lesson 14 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம்?
A
மும்பை
B
வங்காளம்
C
சென்னை
D
டெல்லி
Question 1 Explanation: 
இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலப்பகுதியில் ஆங்கில நிர்வாகத்துடனும் ஆங்கில வர்த்தகத்துடனும் நெருக்கமான தொடர்புடைய ஆங்கிலக் கல்வி பயின்ற சிறிய அறிவுஜீவிகளின் கூட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது. கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் பணிகளும் சிந்தனைகளும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம் வங்காளமாகும்
Question 2
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை அலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தன.
  • (ii) அச்சுத் தொழில்நுட்பம், சிந்தனைகள் பரவுவதில் முக்கியப் பங்கை வகித்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 2 Explanation: 
பல சீர்திருத்தக் கருத்துக்கள் வங்காளத்திலிருந்தே உருவாயின. ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை அலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தன. அவை மரபு சார்ந்த அறிவுக்குச் சவால் விடுத்தன. பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிச் சிந்தனைகள் மனித இனத்தின் பரிணாமம், வளர்ச்சி குறித்த சிந்தனைகள், அறிவொளியோடு தொடர்புடைய இயற்கை உரிமைகள் கோட்பாடு ஆகிய சிந்தனைகள் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அச்சுத் தொழில்நுட்பம், சிந்தனைகள் பரவுவதில் முக்கியப் பங்கை வகித்தது
Question 3
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச் சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர்.
  • (ii) ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி, அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத் தூண்டியவை ஆகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 3 Explanation: 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச் சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர். அவர்களின் கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி, அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத் தூண்டியவை ஆகும். அதற்கு இணையாகச் சமூகச் சூழலும் உயிரோட்டமில்லாமல் தாழ்ந்த நிலையில் இருந்தது
Question 4
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கிலேயர், தங்களின் தலையீடு இல்லாமல் சமூக தீமைகளிலிருந்து இந்தியர் விடுபட வாய்ப்பில்லை என வாதிட்டனர்.
  • (ii) பிறப்பின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகளும் அதன் விளைவான சாதி முறையும் விமர்சனம் செய்யப்பட்டது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 4 Explanation: 
பெண்களின் நிலையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது. உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கம் மிகவும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறப்பின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகளும் அதன் விளைவான சாதி முறையும் விமர்சனம் செய்யப்பட்டது. மிக முக்கியமாக ஆங்கிலேயர், தங்களின் தலையீடு இல்லாமல் இத்தகைய தீமைகளிலிருந்து இந்தியர் விடுபட வாய்ப்பில்லை என வாதிட்டனர். இது ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகக் கிறித்துவ மதப் பரப்பாளர்களும் பயனெறி முறை பண்பாட்டாளர்களும் முன்வைத்த கருத்தென்பதைச் சொல்லத் தேவையில்லை
Question 5
மிக அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்பட்ட மகிழ்ச்சியைக் கோரிய நவீனச் சிந்தனையாளர்கள் முறை எது?
A
பண்பாளர் முறை
B
நன்னெறி முறை
C
பயனீட்டாளர் முறை
D
பயனெறி முறை
Question 5 Explanation: 
பயனெறிமுறை (Utilitarianism): மிக அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்பட்ட மகிழ்ச்சியைக் கோரிய நவீனச் சிந்தனையாளர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா மிகப்பெரிய, மிகவும் சிக்கலான பல்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்ட நாடாக இருந்தது. இடத்திற்கு இடம் நிலைமை மிகவும் மாறுபட்டிருந்தன. காலந்தோறும் சமூகப் பண்பாட்டுத் தீமைகளுக்கு எதிராக இந்தியச் சீர்திருத்தவாதிகள் போராடியிருந்தனர். ஆனால் ஆங்கிலேயரின் அறிவொளிச் சிந்தனைகளுடன் கூடிய வரவு சந்தேகத்திற்கிடமின்றிப் புதிய சவாலை முன்வைத்தது
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபு சார்ந்த நிறுவனங்கள் தங்களை உயிர்த்துடிப்புள்ளனவாக மாற்றிக் கொள்ளக் கட்டாயப்படுத்தின.
  • (ii) இயக்கங்கள் இந்திய மக்களின் மதக் கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களையும் சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 6 Explanation: 
மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபு சார்ந்த நிறுவனங்கள் தங்களை உயிர்த்துடிப்புள்ளனவாக மாற்றிக் கொள்ளக் கட்டாயப்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எ தி ர்ப்புகளின் வெளிப்பா டுகளும் , மாற்றத்திற்கான வேட்கையும் பல்வகைப்பட்ட சீர்திருத்த இயக்கங்களின் மூலம் வெளிப்பட்டன. இவ்வியக்கங்கள் இந்திய மக்களின் மதக் கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களையும் சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன
Question 7
கீழ்க்கண்டவற்றுள் சமூக சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு வலுசேர்த்தவை எவை?
  • ⅰ) புதிய பொருளாதார சக்திகளின் தோற்றம்
  • ⅱ) கல்வியின் பரவல்
  • ⅲ) தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி
  • ⅳ) நவீன மேற்கத்திய சிந்தனைகள்
A
ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
B
ⅰ), ⅱ), ⅲ)
C
ⅱ), ⅲ)
D
ⅲ), ⅳ)
Question 7 Explanation: 
புதிய பொருளாதார சக்திகளின் தோற்றம், கல்வியின் பரவல், தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி, நவீன மேற்கத்திய சிந்தனைகள்-தத்துவங்கள்- பண்பாட்டின் செல்வாக்கு, ஐரோப்பாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு வலுசேர்த்தன
Question 8
வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தவர்?
A
ராஜா ராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
அன்னிபெசன்ட்
D
கேசவ் சந்திர சென்
Question 8 Explanation: 
இச்சீர்திருத்த இயக்கங்களுக்குக் கருத்தொற்றுமை வழங்கியது பகுத்தறிவு, மனிதநேயம், உலகளாவிய மத உணர்வு ஆகியனவாகும். இக்கண்ணோட்டம் மரபு சார்ந்தவற்றைப் பகுத்தறிவோடு அணுகவும் சமகால சமூக-சமய நடைமுறைகளைச் சமூகப் பயன்பாடு எனும் பரிமாணத்தில் பார்க்கவும் உதவின. எடுத்துக்காட்டாக பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன் ராய் வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தார்
Question 9
“எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே" என்று கூறியவர்?
A
ராஜா ராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
அன்னிபெசன்ட்
D
கேசவ் சந்திர சென்
Question 9 Explanation: 
அலிகர் இயக்கத்தின்போது சையது அகமதுகான் மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்றப்பட முடியாதவை என்பதை மறுத்தார். “எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே” எனக் கேசவ் சந்திர சென் கூறினார்
Question 10
சமூக சீர்திருத்த இயக்கங்கள் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 10 Explanation: 
இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு நீரோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட இவ்வியக்கங்கள் மொழி, மதம், கலை, தத்துவம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. விரிந்த கண்ணோட்டத்தில் இச்சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். 1. சீர்திருத்த இயக்கங்கள் 2. மீட்பியக்கங்கள்
Question 11
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச் சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது.
  • (ii) சமூகத் தீமைகளான சாதியும், ஆண் பெண் சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கான நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 11 Explanation: 
இவ்வகைப்பட்ட இயக்கங்களு ம் தாங்கள் மீட்டெடுக்கவுள்ள மதம் இழந்துவிட்ட தூய்மையைப்பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன. ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச் சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது. அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதச்சீர்திருத்தங்களோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனெனில் சமூகத் தீமைகளான சாதியும், ஆண் பெண் சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கான நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன.
Question 12
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை சேர்ந்த இயக்கங்கள் தங்களின் நவீன சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு இணைந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.
  • (ii) சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத் துவங்கின.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 12 Explanation: 
தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒரு குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்டிருந்தன. சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை சேர்ந்த அவ்வியக்கங்கள் தங்களின் நவீன சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு இணைந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அதன் பின்னர் சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத் துவங்கின
Question 13
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தொடக்கத்தில் சமூகப் பேரவை, இந்தியப் பணியாளர்கள் போன்ற அமைப்புகளும், கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களுமே சமுகச் சீர்திருத்த இயக்கங்களை துரிதப்படுத்தக் காரணங்களாய் இருந்தன.
  • (ii) அறிவுஜீவிகளிடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் பழைய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் பெரும்பங்கு வகித்தன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 13 Explanation: 
பொது விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைகள் ஆகிய வடிவங்களில் அறிவுஜீவிகளிடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் பழைய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் பெரும்பங்கு வகித்தன. தொடக்கத்தில் சமூகப் பேரவை, இந்தியப் பணியாளர்கள் போன்ற அமைப்புகளும், கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களுமே சமுகச் சீர்திருத்த இயக்கங்களை துரிதப்படுத்தக் காரணங்களாய் இருந்தன. அதற்குத் தெளிவான அறிவுத்திறன் கொண்ட பல தனி நபர்களும் துணை நின்றனர்
Question 14
ராஜா ராம்மோகன் ராய் எந்த ஆண்டு பிரம்ம சமாஜத்தை நிறுவினார்?
A
1827
B
1828
C
1875
D
1866
Question 14 Explanation: 
பிரம்ம சமாஜம் (1828) ராஜா ராம்மோகன் ராய் பல்துறை புலமை பெற்றவராவார். அவர் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். “எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்ம சமாஜம் உறுதியாயிருந்தது
Question 15
ராஜா ராம்மோகன் ராயின் நீண்டகாலத் திட்டம்/கள் எது/எவை?
A
இந்து மதத்தைத் தூய்மைபடுத்தல்
B
ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல்
C
மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல்
D
இவை அனைத்தும்
Question 15 Explanation: 
இந்து மதத்தைத் தூய்மைபடுத்தல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய நீண்டகாலத் திட்டங்களாகும். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் பாரசீகம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் உரையாடக் கூடியவர்
Question 16
“கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்” எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையை எழுதியவர்?
A
கேசவ் சந்திர சென்
B
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
C
தேவேந்திரநாத் தாகூர்
D
ராஜாராம்மோகன்ராய்
Question 16 Explanation: 
அவர் மனித நேயமற்ற சமூகப்பழக்கமான உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான மனவுறுதிமிக்க போராளியாவார். 1818 இல் அவர் எழுதிய “கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்” எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களைச் சுட்டிக்காட்டி நிரூபித்தார்
Question 17

சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

A
1827
B
1828
C
1861
D
1829
Question 17 Explanation: 
கம்பெனி 1829இல் ஒரு சட்டத்தை இயற்றி அதன்மூலம் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என அறிவித்ததன் மூலம் அவருடைய முயற்சிகள் வென்றன. அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் சமூக சீர்திருத்தங்களின் வழியாக மக்களை அரசியல் ரீதியாக உயர்வடையச் செய்வதை இலக்காகக் கொண்டிருந்தன
Question 18
பிரம்மசமாஜம் பின்வரும் எதனை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது?
A
உருவ வழிபாடு
B
பலதெய்வ வழிபாடு
C
தெய்வ அவதாரங்கள் மீதான நம்பிக்கை
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
பிரம்ம சமாஜத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறலாம். 1. பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, தெய்வ அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது. 2. சாதிமுறை, மூடநம்பிக்கைக ள் , ஆகியவற்றைக் கண்டனம் செய்தது
Question 19
பின்வருவனவற்றுள் பிரம்மசமாஜம் எதனை ஆதரித்தது?
A
குழந்தைத் திருமணம்
B
பர்தா முறை
C
உடன்கட்டை ஏறுதல்
D
கைம்பெண் மறுமணம்
Question 19 Explanation: 
குழந்தைத் திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரியது. கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தது
Question 20
ராஜா ராம்மோகன் ராய் எந்த நாட்டுப் புரட்சியின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பா சென்றார்?
A
பிரான்ஸ்
B
ஆப்பிரிக்கா
C
அமெரிக்கா
D
இங்கிலாந்து
Question 20 Explanation: 
பிரெஞ்சுப் புரட்சியின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பா சென்ற ராஜா ராம்மோகன் ராய் பிரிஸ்டல் நகரில் மரணத்தைத் தழுவினார்
Question 21
1857 முதல் பிரம்மசமாஜத்தை முன்னெடுத்துச் சென்றவர்?
A
கேசவ் சந்திர சென்
B
தேவேந்திரநாத்தாகூர்
C
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
D
ரானடே
Question 21 Explanation: 
தக்க சமயத்தில் தேவேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத் தாகூரின் தந்தையார்) புத்துயிர் ஊட்டாமல் இருந்திருந்தால் இவ்வியக்கம் விரைவாக வீழ்ந்திருக்கும். அவருக்குப்பின் 1857 முதல் கேசவ் சந்திர சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்
Question 22
பிரம்மசமாஜம் 1865இல் எத்தனை கிளைகளைப் பெற்றிருந்தது?
A
52
B
45
C
65
D
54
Question 22 Explanation: 
இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த 54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் –1 என மொத்தம் 54 கிளைகள்)
Question 23
இந்திய பிரம்ம சமாஜம் யாருடைய தலைமையில் இயங்கியது?
A
கேசவ் சந்திர சென்
B
தேவேந்திரநாத்தாகூர்
C
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
D
ரானடே
Question 23 Explanation: 
காலப்போக்கில் பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்தது. அவை தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கிய ‘இந்திய பிரம்ம சமாஜம்’, கேசவ் சந்திர சென்னுடைய ‘சதாரன் பிரம்ம சமாஜ்’ என்பனவாகும்
Question 24
‘பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர்?
A
காசி விஸ்வநாத முதலியார்
B
பிரதாப முதலியார்
C
டம்பாச்சாரியார்
D
சிவ சுப்பிரமணியர்
Question 24 Explanation: 
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்க ‘பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்
Question 25
1864இல் எந்த நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது?
A
குழந்தைத் திருமணம்
B
பர்தா முறை
C
உடன்கட்டை ஏறுதல்
D
கைம்பெண் மறுமணம்
Question 25 Explanation: 
கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையை விஸ்வநாத முதலியார் எழுதினார். 1864இல் இதே நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது
Question 26
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) பிரம்ம சமாஜம் வங்காள சமூகத்தின் வைதீகப் பிரிவினரிடமிருந்தும், இந்து தர்மசபை போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. (ii) ஈஸ்வரசந்திர வித்யாசாகர் இந்து நூல்களைத் தமக்கு ஆதாரமாக கொண்டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 26 Explanation: 
பிரம்ம சமாஜம் வங்காள சமூகத்தின் வைதீகப் பிரிவினரிடமிருந்தும், இந்து தர்மசபை போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இருந்தபோதிலும் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளும் இருந்தனர்; ஆனால் அவர் இந்து நூல்களைத் தமக்கு ஆதாரமாக கொண்டார்
Question 27
யாருடைய குடும்பம் ஒரு பிரம்ம சமாஜக் குடும்பம் ஆகும்?
A
கேசவ் சந்திர சென்
B
தேவேந்திரநாத்தாகூர்
C
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
D
ரானடே
Question 27 Explanation: 
பிரம்ம சமாஜம் பெருமளவிலான மக்களை ஈர்க்கவில்லை எனினும், அது அறிவு ஜீவிகளின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் முற்போக்குக் கருத்துகளால் கவரப்பட்ட பல இளைஞர்கள் ஆர்வத்தோடு அவற்றைப் பரப்பினர். தாகூரின் குடும்பம் ஒரு பிரம்ம சமாஜக் குடும்பம். அதன் செல்வாக்கை தாகூருடைய கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் காணலாம்
Question 28
பின்வருவனவற்றுள் பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு எது?
A
பிரார்த்தனை சமாஜம்
B
இளம் இந்தியா இயக்கம்
C
ஆரிய சமாஜ்
D
சுத்தி அமைப்பு
Question 28 Explanation: 
பிரார்த்தனை சமாஜம் (1867): பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான பிரார்த்தனை சமாஜம் 1867இல் பம்பாயில் ஆத்மராம் பாண்டுரங் என்பவரால் நிறுவப்பட்டது
Question 29
எம்.ஜி. ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் ஆகியோர் எந்த இயக்கத்திற்கு வலிமை சேர்த்தனர்?
A
பிரார்த்தனை சமாஜம்
B
இளம் இந்தியா இயக்கம்
C
ஆரிய சமாஜ்
D
சுத்தி அமைப்பு
Question 29 Explanation: 
எம்.ஜி. ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் ஆகியோர் பிரார்த்தனை சமாஜத்தில் சேர்ந்து அமைப்புக்கு வலிமை சேர்த்தனர். பிரார்த்தனை சமாஜம் ஓர் அமைப்பு என்ற அளவில் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவ்வமைப்பின் உறுப்பினர்களான ரானடே, பண்டார்க்கர், கே.டி. தெலங் போன்றோர் மகாராஷ்டிராவின் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களாவர்
Question 30
மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவிகளின் பக்தி மரபுகளோடு உளப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தது எது?
A
பிரார்த்தனை சமாஜம்
B
இளம் இந்தியா இயக்கம்
C
ஆரிய சமாஜ்
D
சுத்தி அமைப்பு
Question 30 Explanation: 
பிரார்த்தனை சமாஜம் பிரம்ம சமாஜத்தைப் போன்றதே என்றாலும் அது மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவிகளின் பக்தி மரபுகளோடு உளப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தது. பிரார்த்தனை சமாஜம், சமூகத்தின் கடைநிலையிலுள்ள பெண்கள், தொழிலாளர் ஆகியோருக்குக் கல்வி வழங்குவதன் மூலம் தனது பணியைத் தொடர்ந்தது
Question 31
பிரார்த்தனை சமாஜம் பின்வரும் எந்தப் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது?
A
சமபந்தி விருந்து
B
சாதி மறுப்புத் திருமணம்
C
விதவை மறுமணம்
D
இவை அனைத்தும்
Question 31 Explanation: 
சமபந்தி விருந்து, சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாடு ஆகிய சமூக சீர்திருத்தப் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது
Question 32
யாருடைய வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயலூக்கமிக்க மையமானது?
A
கேசவ் சந்திர சென்
B
தேவேந்திரநாத்தாகூர்
C
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
D
ரானடே
Question 32 Explanation: 
ரானடேயின் (1852-1901) முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று முடிந்தவுடன் கூடும். ஆழமான அறிவும் கூர்மைத்திறனும் கொண்ட நீதியரசர் ரானடேயின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயலூக்கமிக்க மையமானது
Question 33
தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ் பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவர்?
A
கேசவ் சந்திர சென்
B
தேவேந்திரநாத்தாகூர்
C
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
D
ரானடே
Question 33 Explanation: 
ரானடே: விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். மேலும் தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ் பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார். நாட்டுக்குத் தன்னலமற்றச் சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது
Question 34
ரானடே எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
A
1901
B
1905
C
1906
D
1902
Question 34 Explanation: 
ரானடே 1901இல் இயற்கை எய்திய போது சந்தரவர்க்கர் தலைமைப் பொறுப்பேற்றார்
Question 35
தயானந்த சரஸ்வதி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
A
மகாராஷ்டிரா
B
வங்காளம்
C
குஜராத்
D
பீகார்
Question 35 Explanation: 
ஆரிய சமாஜம் (1875) ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி (1824-1883) ஆவார். குஜராத் தை சேர்ந்த அவர் துறவியாகும் எண்ணத்தில் இளமையிலேயே வீட்டைவிட்டு வெளியேறினார். பதினேழு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார்
Question 36
தயானந்த சரஸ்வதி எங்கு பிரம்மசமாஜ உறுப்பினர்களைச் சந்தித்தார்?
A
மகாராஷ்டிரா
B
கல்கத்தா
C
குஜராத்
D
பூனா
Question 36 Explanation: 
1863இல் பல ஊர்களுக்குச் சென்று தனது கருத்துக்களைப் போதித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் சில கல்வி நிலையங்களையும் நிறுவினார். 1872இல் கல்கத்தாவில் பிரம்மசமாஜ உறுப்பினர்களைச் சந்தித்தார்
Question 37
தயானந்த சரஸ்வதி ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் தனது முக்கிய நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
A
1863
B
1872
C
1875
D
1878
Question 37 Explanation: 
1875இல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது. ஆகவே அவர் புராணங்கள், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு, பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள், புனிதப் யாத்திரைகள் ஆகியவற்றை நிராகரித்தார்
Question 38
தயானந்த சரஸ்வதி எந்த மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தார்?
A
சமஸ்கிருதம்
B
இந்தி
C
ஆங்கிலம்
D
பாரசீகம்
Question 38 Explanation: 
விதவைத் திருமணத்திற்கான தடையை எதிர்த்தார். சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த அவர் “வேதங்களை நோக்கித் திரும்புக” என அழைப்பு விடுத்தார். வேதங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வடிவமைக்க விரும்பிய அவர் அதே சமயம் புராணங்களைப் புறக்கணித்தார்
Question 39
சுவாமி தயானந்த சரஸ்வதி எந்தப்பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்?
A
வங்காளம்
B
பஞ்சாப்
C
உத்திரப்பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 39 Explanation: 
ஏனைய சீர்திருத்தவாதிகளைப் போலவே பெண் கல்வி, கைம்பெண் திருமணம் ஆகியவற்றை ஊக்குவித்தார். சுவாமி தயானந்த சரஸ்வதி பஞ்சாப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்
Question 40
காலனிய காலத்தில் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருந்த ‘கத்ரி’ எனப்படும் வணிகச் சமூகம் எங்கு காணப்பட்டது?
A
வங்காளம்
B
பஞ்சாப்
C
உத்திரப்பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 40 Explanation: 
அங்கிருந்த ‘கத்ரி’ எனப்படும் வணிகச் சமூகம் காலனிய காலத்தில் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் பஞ்சாபில் இந்து, முஸ்லீம், சீக்கியரிடையே பெருமளவில் வகுப்புவாத மோதல் நடைபெற்று வந்தது. தயானந்தரின் ‘சுத்தி’ இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்று பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது
Question 41
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது. (ii) தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் நிறுவப்பட்டதின் மூலம் தயானந்தரின் செல்வாக்கு இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 41 Explanation: 
ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது. தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் நிறுவப்பட்டதின் மூலம் தயானந்தரின் செல்வாக்கு இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்தது
Question 42
இராமகிருஷ்ண பரமஹம்சர் செய்து வந்த தொழில் எது?
A
தச்சர்
B
நெசவாளி
C
செருப்பு தைப்பவர்
D
பூசாரி
Question 42 Explanation: 
வங்காளத்தில் இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நினைவாக இராமகிருஷ்ண மிஷன் உதயமானது. இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவின் அருகேயுள்ள தட்சினேஸ்வர் எனும் ஊரிலுள்ள கோவிலின் ஏழைப் பூசாரி ஆவார்
Question 43
“அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்” என்று கூறியவர்?
A
விவேகானந்தர்
B
ராஜாராம் மோகன்ராய்
C
இராமலிங்க அடிகள்
D
ராமகிருஷ்ண பரமஹம்சர்
Question 43 Explanation: 
இராமகிருஷ்ண பரமஹம்சர் முறையான கல்வி கற்றவரில்லை. ஆனால் தீவிர ஆன்மீக வாழ்வை மேற்கொண்டவர். அனைத்து மதங்களிலும் இயல்பாக உள்ள உண்மைகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சமயப் பணிகளை மேற்கொண்டு அம்மதங்கள் சார்ந்த நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்த்தார். அவரைப் பொருத்த அளவில் “அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்” என்பதாகும்
Question 44
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) இராமகிருஷ்ணருடைய பரந்த பார்வையும், இறைநிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் பெருவாரியான மக்களைக் கவர்ந்தன. (ii) இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் கருத்துகளை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 44 Explanation: 
இராமகிருஷ்ணருடைய பரந்த பார்வையும், இறைநிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் பெருவாரியான மக்களைக் கவர்ந்தன. தன் கருத்துகளை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார். அவர்மேல் வியப்புற்ற ஒருவர் இவையனைத்தையும் ‘இராமகிருஷ்ண காதாமிர்தா’ எனும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார்
Question 45
இராமகிருஷ்ணருடைய சீடர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
A
நரேந்திரநாத் தத்தா
B
மூல் சங்கர்
C
சாரதா தேவி
D
ரமா தேவி
Question 45 Explanation: 
அவருடைய சீடர்களுள் மிகவும் புகழ் பெற்றவர், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த இளைஞர் நரேந்திரநாத் தத்தா என்பவராவார். இவரே சுவாமி விவேகானந்தர் (1863-1902) எனப் புகழடைடைந்தார்
Question 46
இராமகிருஷ்ணருடைய கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்?
A
நரேந்திரநாத் தத்தா
B
மூல் சங்கர்
C
சாரதா தேவி
D
நிவேதிதா
Question 46 Explanation: 
அவர் தன் குருவின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார். அவருடைய கல்வியறிவும் பேச்சாற்றலும், ஆன்மீக தோற்றமும், அவருடைய வியத்தகு ஆளுமையும் அவருக்கு நாடு முழுவதும் சீடர்களை உருவாக்கியது. அவர்களில் பலர் தேசிய இயக்கத்திலும் இணைந்தனர்
Question 47
1893இல் புகழ்பெற்ற உலகச்சமய மாநாடு எங்கு நடைபெற்றது?
A
அமெரிக்கா
B
ஆப்பிரிக்கா
C
ஜப்பான்
D
ஆஸ்திரேலியா
Question 47 Explanation: 
விவேகானந்தர் 1893இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச்சமய மாநாட்டில் பங்கேற்று அங்கு கூடியிருந்தோர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்
Question 48
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) இராம கிருஷ்ண இயக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர்க்கான இல்லங்கள் ஆகியவற்றையும் நிறுவியது. (ii) இராம கிருஷ்ண இயக்கம் இயற்கை பேரழிவுகளாலும் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவுகளாலும் மக்கள் துயருற்றபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 48 Explanation: 
இராம கிருஷ்ண இயக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர்க்கான இல்லங்கள் ஆகியவற்றையும் நிறுவியது. இயற்கை பேரழிவுகளாலும் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவுகளாலும் மக்கள் துயருற்றபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது
Question 49
நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிப்பிடப்படுபவர்?
A
தயானந்த சரஸ்வதி
B
ராஜா ராம் மோகன் ராய்
C
சுவாமி விவேகானந்தர்
D
அன்னி பெசன்ட்
Question 49 Explanation: 
சுவாமி விவேகானந்தர் இளமை, தைரியம் ஆகியவற்றின் மறுவடிவமாவார். நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார். வாலன்டைன் சிரோல் என்பாரின் வார்த்தைகளில் “தனது ஆளுமைத் திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாகப் பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமைக் கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தைப் பெற்று தந்த முதல் இந்தியர்” ஆவார்
Question 50
1875 இல் பிரம்மஞான சபை எங்கு நிறுவப்பட்டது?
A
ஆப்பிரிக்கா
B
ஜப்பான்
C
ஆஸ்திரேலியா
D
அமெரிக்கா
Question 50 Explanation: 
பிரம்மஞான சபை இந்திய அறிவுஜீவிகள், தாங்கள் மேற்கத்திய அறிவொளி மற்றும் பகுத்தறிவு இயக்கங்களால் விழிப்புணர்வு அடைந்ததாக உணர்ந்த நேரத்தில் மேலை நாடுகளின் சிந்தனையில் ஒரு சோர்வு எற்பட்டு அது ஆன்மவிடுதலைக்கு கிழக்கு நாடுகளை அணுகியது. இச்சிந்தனைப் போக்கிலிருந்தே பிரம்ம ஞான சபை உதயமானது. இவ்வமைப்பு 1875இல் பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட் ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது
Question 51
பிரம்மஞான சபை யின் தலைமையிடம் எந்த ஆண்டு அடையாரில் அமைக்கப்பட்டது?
A
1879
B
1886
C
1887
D
1889
Question 51 Explanation: 
1879இல் இந்தியா வந்த அவர்கள் 1886இல் அமைப்பின் தலைமையிடத்தைச் சென்னை அடையாரில் அமைத்தனர்
Question 52
இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு எது?
A
சத்ய சோதக் சமாஜம்
B
இராம கிருஷ்ண இயக்கம்
C
பிரம்மஞான சபை
D
பிராமணரல்லாதோர் இயக்கம்
Question 52 Explanation: 
இந்துப் பாரம்பரியத்தை மேற்கத்திய அறிவுஜீவிகள் ஒத்துக்கொண்டதில் அவர்கள் பெருமை கொண்டனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் உருவாயின. பல முரண்பாடுகளுக்கு உள்ளானாலும் இவ்வமைப்பு இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது
Question 53
அயோத்திதாச பண்டிதர் யாருடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார்?
A
அன்னி பெசன்ட்
B
ஹென்றி ஆல்காட்
C
வாலன்டைன் சிரோல்
D
சுவாமி விவேகானந்தர்
Question 53 Explanation: 
முற்போக்குச் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர், ஹென்றி ஆல்காட்டுடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார்
Question 54
ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கிய மிக முக்கியமான இயக்கம்?
A
பிரம்மஞான சபை
B
ஆரிய சமாஜ்
C
சத்ய சோதக் சமாஜம்
D
பிரார்த்தன சமாஜ்
Question 54 Explanation: 
சத்யசோதக் சமாஜம் (1873): இதுவரை விவாதிக்கப்பட்ட இயக்கங்கள் பெரும்பாலும் மேல்சாதியாகக் கருதப்பட்ட சமூகங்களின் மேல் அதிக கவனம் செலுத்தின. ஆனால் சில குறிப்பிட்ட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கின. அவற்றுள் மிக முக்கியமான இயக்கம் ஜோதிபா பூலேயின் சத்ய சோதக் சமாஜமாகு
Question 55
ஜோதிபா பூலே எந்த சமூகத்தைச் சேர்ந்தவராவார்?
A
தெரு பெருக்குவோர்
B
தோட்ட வேலை செய்வோர்
C
மர வேலை செய்வோர்
D
கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண் டோர்
Question 55 Explanation: 
1827இல் பிறந்த ஜோதிபா பூலே மாலி (தோட்ட வேலை செய்வோர்) சமூகத்தைச் சேர்ந்தவராவார். தொடக்கக் கல்வியைக் கிறித்தவ சமய நிறுவனப் பள்ளியில் கற்ற அவர் இடையில் கல்வியைத் தொடர முடியாமல் நின்றுவிட்டார்
Question 56
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) ஜோதிபா பூலேமேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். (ii) வேதங்கள், மனுசங்கிதை, புராணங்கள், புத்தர், தீர்த்தங்கரர் ஆகியோரின் கருத்துகள், இடைக்கால பக்தி இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோர்கள் என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார் .
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 56 Explanation: 
ஜோதிபா பூலேமேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தாகத்தினால் வேதங்கள், மனுசங்கிதை, புராணங்கள், புத்தர், தீர்த்தங்கரர் ஆகியோரின் கருத்துகள், இடைக்கால பக்தி இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோர்கள் என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார்
Question 57
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஜோதிபா பூலே மேற்கத்திய சிந்தனைகளோடும் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார்.
  2. பூலே ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக்கொண்டு சீர் தூக்கிப் பார்த்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 57 Explanation: 
விளக்கம்: மேற்கத்திய சிந்தனைகளோடும் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார். ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக்கொண்டு சீர் தூக்கிப் பார்த்தார்.
Question 58
உண்மை தேடும் சங்கம் என்ற அமைப்பு  எந்த ஆண்டில் நிறுவபட்டது?
A
1872
B
1873
C
1875
D
1886
Question 58 Explanation: 
விளக்கம்: அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளில் அவர் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார். சாதி முறையானது பிராமணர் அல்லாதோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் சமத்துவமின்மை, சமூகத் தாழ்வு நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் புரட்சி செய்ய ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொள்ளச் செய்தார். இந்த லட்சியங்களை அடைவதற்காக சத்ய சோதக் சமாஜம் (உண்மை தேடும் சங்கம்) என்ற அமைப்பை 1873இல் நிறுவினார்.
Question 59
பின்வருவனவற்றுள் ஜோதிபா பூலே எழுதிய நூல் எது?
A
சாதி ஒழிப்பு
B
அடிமைத்தனம்
C
பெண் ஏன் அடிமை ஆனாள்
D
சமய மலர்ச்சி
Question 59 Explanation: 
விளக்கம்: மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும் என்று கூறினார். இவர் எழுதிய முக்கிய நூல் ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) என்பதாகும்.
Question 60
பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஏனைய வர்க்கங்களின் விடுதலையோடு இணைந்துள்ளது என்று வாதிட்டவர்?
A
பண்டித ரமாபாய்
B
ராஜா ராம் மோகன் ராய்
C
பெரியார்
D
ஜோதிபா பூலே
Question 60 Explanation: 
விளக்கம்: சமூகத்தில் பெண்களும் வறுமையில் உழல்வோரும் நசுக்கப்பட்டோருமே மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஏனைய வர்க்கங்களின் விடுதலையோடு இணைந்துள்ளது என்று வாதிட்டார்.
Question 61
தொடக்கக் கல்வியை  எந்த வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு  கற்பிக்குமாறு ஆங்கில அரசாங்கத்தைப் பூலே வற்புறுத்தினார்?
A
விவசாயம்
B
வணிகர்
C
செல்வந்தர்
D
ஆரிய வர்க்கம்
Question 61 Explanation: 
விளக்கம்: பூலே தன்னுடைய கருத்துக்களை உண்மையான போராட்டங்களாக மாற்ற விரும்பினார். மக்களுக்குக் கட்டாய தொடக்கக் கல்வியை விவசாய வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்குமாறு ஆங்கில அரசாங்கத்தைப் பூலே வற்புறுத்தினார்.
Question 62
பிற்காலத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம்  பூலேவின்  பணிகளால் எங்கு தோன்றியது?
A
மகாராஷ்டிரா
B
தமிழ்நாடு
C
குஜராத்
D
பஞ்சாப்
Question 62 Explanation: 
விளக்கம்: தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும் நிறுவினார். பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது.
Question 63
பின்வருபவர்களுள் சரஸ்வத் எனும் பட்டம் பெற்ற பெண்மணி யார்?
A
பண்டித ரமாபாய்
B
அன்னிபெசன்ட்
C
சாரதா தேவி
D
நிவேதிதா
Question 63 Explanation: 
விளக்கம்: பண்டித ரமாபாய் (1858-1922) இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராவார். சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு ‘பண்டித்’, ‘சரஸ்வத்’ எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
Question 64
பண்டித ரமாபாய்  எந்த ஆண்டு கல்கத்தா சென்றார்?
A
1872
B
1873
C
1886
D
1878
Question 64 Explanation: 
விளக்கம்: பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் ரமாபாயும் அவருடைய சகோதரரும் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். 1878இல் அவர்கள் கல்கத்தா சென்றனர். இரண்டாண்டிற்குப் பின்னர் அவருடைய சகோதரரும் காலமானார்.
Question 65
பண்டித ரமாபாய் எந்த மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார்?
A
மகாராஷ்டிரா
B
தமிழ்நாடு
C
வங்காளம்
D
ஆந்திரா
Question 65 Explanation: 
விளக்கம்: 1880இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார். அக்காலத்திலேயே வேற்று சாதியைச் சேர்ந்த வேற்று மொழி பேசக்கூடிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் நெஞ்சுரம் அவருக்கிருந்தது.
Question 66
பண்டித ரமாபாய் யாருடைய  உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்?
A
ரானடே
B
பண்டார்க்கர்
C
தயானந்த சரஸ்வதி
D
a) மற்றும் b)
Question 66 Explanation: 
விளக்கம்: இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் 300 பெண்கள் இவ்வமைப்பில் கல்வி கற்றனர்.
Question 67
பண்டித ரமாபாய் தொடங்கிய வீடற்றவர்களுக்கான இல்லம் எது?
A
சாரதா சதன்
B
முக்தி சதன்
C
ஆரிய மகிளா சமாஜ்
D
கேத்கான்
Question 67 Explanation: 
விளக்கம்: ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (வீடற்றவர்களுக்கான இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார். வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார்.
Question 68
பண்டித ரமாபாய்  முக்தி சதன்  எனும் அமைப்பை எங்கு நிறுவினார்?
A
வங்காளம்
B
புனே
C
புரந்தர்
D
கேத்கான்
Question 68 Explanation: 
விளக்கம்: கேத்கான் எனும் இடத்தில் அங்கு ‘முக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்தில் 2000 பெண்களும்குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.
Question 69
ஸ்ரீ நாராயண குரு எந்த சமூக இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கினார்?
A
தெரு பெருக்குவோர்
B
தோட்ட வேலை செய்வோர்
C
மர வேலை செய்வோர்
D
கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண் டோர்
Question 69 Explanation: 
விளக்கம்: கேரளத்தை மையமாகக் கொண்ட இந்த, ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வ ர்க்கத்தா ரு க் குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளிலிருந்து தோன்றியது. இவ்வியக்கத்தை தோற்றுவித்த ஸ்ரீநாராயணகுரு, கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண்ட கேரளத்து ஈழவ சமூக இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கினார்.
Question 70
ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்” எனும் அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1900
B
1899
C
1908
D
1902
Question 70 Explanation: 
விளக்கம்:ஈழவர்கள் கேரள மக்கள் தொகையில் தனிப் பெரும்பான்மையாக 26 விழுக்காடு உள்ளனர். ஸ்ரீநாராயண குரு 1902இல் “ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayanaguru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார்.
Question 71
ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்பின்வரும் எந்த  பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது?
A
பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
B
அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்
C
அரசியல் பிரதிநிதித்துவம்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 71 Explanation: 
விளக்கம்: ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம் பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை ii) அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல் iii) சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை iv) அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது.
Question 72
ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம் கொணர்ந்த கூட்டமைப்பு மாற்றங்கள் எவை?
A
சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல்
B
பாரம்பரியமான அதிகார விநியோக முறையில் மாற்றம்
C
பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்துப் பெருவடிவிலான சம்மேளனமாக மாற்றுதல்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 72 Explanation: 
விளக்கம்: இவ்வியக்கம் சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல், பாரம்பரியமான அதிகார விநியோக முறையில் மாற்றம், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்துப் பெருவடிவிலான சம்மேளனமாக மாற்றுதல் போன்ற கூட்டமைப்பு மாற்றங்களைக் கொணர்ந்தது.
Question 73
பின்வருபவர்களுள் ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோக அமைப்பை சேர்ந்தோர் யாவர்?
A
கவிஞர் குமரன்
B
எம். சி. ராஜா
C
இரட்டைமலை சீனுவாசன்
D
சிங்கார வேலர்
Question 73 Explanation: 
விளக்கம்: கோவில்களுக்குள் ஈழவர்கள நுழைவதற்கிருந்த தடைகளுக்கு எதிராக ஸ்ரீநாராயண குரு புதிய கோவில்களை நிறுவியதோடு ஈழவ சமூகம் தன்னைத்தானே நவீனப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சக்தி கொண்டதாக மாற்றினார். கவிஞர் குமரன் ஆசான் டாக்டர் பல்பு, சகோதரன் ஐயப்பன் போன்ற மகத்தான ஆளுமைகள் இவ்வியக்கத்திலிருந்து தோன்றி, கேரளச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தினர்.
Question 74
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. ஸ்ரீநாராயண குரு கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் நுழைவதற்கான தடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தார்.
  2. அவை எதிர்கால கோவில் நுழைவு இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 74 Explanation: 
விளக்கம்: வைக்கம் சத்யாகிரகத்தில் நேரடியாகப் பங்கு பெறாவிட்டாலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் நுழைவதற்கான தடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தார். அவை எதிர்கால கோவில் நுழைவு இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.
Question 75
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  1. 1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின.
  2. முஸ்லீம்கள் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியிருந்தனர்
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 75 Explanation: 
விளக்கம்: 1857 பெருங்கிளர்ச்சியும், அது ஆங்கிலேயரால் கொடூரமாக அடக்கப்பட்டதும் தெற்காசிய முஸ்லிம்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தின. 1857 எழுச்சிக்கு முஸ்லீம்களே காரணம் என்று ஆங்கிலேயர் சந்தேகித்த நிலையில், முஸ்லீம்களும் காலனிய நவீனத்துவம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வீடுகளுக்குள்ளேயே சுருங்கியிருந்தனர். இதன் விளைவாக முஸ்லீம்கள் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கியிருந்தனர். இச்சூழலில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கிடையே சில சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.
Question 76
அலிகர் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1875
B
1872
C
1878
D
1902
Question 76 Explanation: 
விளக்கம்: அலிகர் இயக்கம் (1875) அலிகர் இயக்கம் 1875இல் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது. மேற்கத்திய அறிவியல் கல்விக்கும் குரானின் போதனைகளுக்குமிடையே ஒத்திசைவை ஏற்படுத்த அவர் விரும்பினார்.
Question 77
சையது அகமது கானின்  முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய  எந்த பத்திரிகையின் மூலம் பரப்பப்பட்டது?
A
தத்கிப்-ஒல்-அக்லுக்
B
சவுத் இந்தியன் மெயில்
C
மெட்ராஸ் ஸ்டாண்டார்ட்
D
குலாம்கிரி
Question 77 Explanation: 
விளக்கம்: சையது அகமது கா னின் முற்போக்கான சமூகக் கருத்துக்கள் அவருடைய பத்திரிகையான தத்கிப்-ஒல்-அக்லுக் (பழக்க வழக்கங்களையும் ஒழுக்க நெறிகளையும் மேம்படுத்துதல்) மூலம் பரப்பப்பட்டது.
Question 78
பின்வருவனவற்றுள் அலிகர் இயக்கத்தின் கொள்கைகளைத் தேர்ந்தெடு?
  1. முஸ்லீம்கள் இஸ்லாமின் மேல் கொண்டிருக்கும் பற்றினைப் பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்.
  2. பர்தா முறை, பலதார மணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 78 Explanation: 
விளக்கம்: அலிகர் இயக்கத்தின் கொள்கைகள் (i) முஸ்லீம்கள் இஸ்லாமின் மேல் கொண்டிருக்கும் பற்றினைப் பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல். (ii) பர்தா முறை, பலதார மணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்தது.
Question 79
அறிவியல் கழகம் எனும் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
A
1864
B
1865
C
1866
D
1886
Question 79 Explanation: 
விளக்கம்: சையது அகமத் கானின் கல்வி குறித்த திட்டம் தொடக்கத்திலிருந்தே ஆங்கில வழிக் கல்வியின் சாதக அம்சங்களை வலியுறுத்திக் கூறியது. இயற்பியல் அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூலமும் இருமொழிப் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலமும் மேற்கத்திய அறிவியலை அறிமுகம் செய்வதற்காக 1864இல் அவர் அறிவியல் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
Question 80
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சையது அகமது கான் 1868 இல் காஜிப்பூரில் நவீனப் பள்ளியொன்றை நிறுவினார்
  2. 1864இல் முஸ்லீம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 80 Explanation: 
விளக்கம்: 1864 இல் காஜிப்பூரில் நவீனப் பள்ளியொன்றை நிறுவினார். 1868இல் முஸ்லீம் மக்களிடையே நவீனக் கல்வியைத் தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஊக்கப்படுத்தினார்.
Question 81
முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக  ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார்.
A
அலிகர்
B
புனே
C
கல்கத்தா
D
கேத்கான்
Question 81 Explanation: 
விளக்கம்: 1869-1870இல் அவர் ஐரோப்பா சென்றபோது இந்திய முஸ்லீம்களுக்காக ஒரு மாபெரும் கல்வி நிறுவனம் என்ற தனது வாழ்நாள் பணிக்கான திட்டத்தை உருவாக்கினார். முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக 1875இல் அலிகரில் ஒரு நவீன முகமதியப் பள்ளியை தொடங்கினார்.
Question 82
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. முகமதியப் பள்ளி  1877 இல் முகமதியன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிபெற்றது.
  2. இதுவே முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கும் மையமாகத் திகழ்ந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 82 Explanation: 
விளக்கம்: முகமதியப் பள்ளி 1877இல் முகமதியன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சிபெற்றது. அவருடைய மறைவிற்குப் பின்னர் இக்கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக வளர்ந்தது. இதுவே முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கும் மையமாகத் திகழ்ந்தது.
Question 83
சையது அகமது கான் ஆங்கிலேய கீழை தேயவிய கல்வி மாநாட்டை எந்த ஆண்டு தொடங்கினார்?
A
1882
B
1884
C
1886
D
1885
Question 83 Explanation: 
விளக்கம்: இந்திய முஸ்லீம்களிடையே தாராளவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக 1886இல் சையது அகமது கான் ஆங்கிலேய கீழை தேயவிய கல்வி மாநாட்டை (Anglo-oriental Educational Conference) தொடங்கினார். சமயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார்.
Question 84
பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிச்சத்தில் குரானில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர்?
A
சையது அகமது கான்
B
மிர்சா குலாம் அகமது
C
சலீமுல்லா கான்
D
சாதத் துல்லா கான்
Question 84 Explanation: 
விளக்கம்: மாறிவரும் காலச் சூழலுக்கேற்றவாறு பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிச்சத்தில் குரானில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றார். இந்திய முஸ்லீம் மதத்தை தாராளமாக்கி, புதிய சிந்தனைகளுக்கும் விளக்கங்களுக்கும் ஏற்புடையதாய் மாற்றும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் வைதீக இறையியலாளர்களின் தீவிரத் தாக்குதல்களை அவர் உடனடியாக எதிர்கொள்ள நேர்ந்தது.
Question 85
குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறியவர் யார்?
A
சையது அகமது கான்
B
பீர்பால் சஹானி
C
சலீமுல்லா கான்
D
சாதத் துல்லா கான்
Question 85 Explanation: 
விளக்கம்: அகமதியா இயக்கம் (1889) 1889இல் மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம்ஒரு மாறுபட்ட போக்கை ஏற்படுத்தியது. குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது கூற்று மதத்திற்கு எதிரானது என மைய நீரோட்ட இஸ்லாமியர் கருதினர். ஆனாலும் பலர் அவருடைய கொள்கைக்கு மாறினர்.
Question 86
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மிர்சா குலாம் அகமது டைய முக்கியப் பணி ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர் கொண்டு மறுத்ததாகும்.
  2. அகமதியா இயக்கம் பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 86 Explanation: 
விளக்கம்: மிர்சா குலாம் அகமது டைய முக்கியப் பணி ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர் கொண்டு மறுத்ததாகும். சமூக நெறிமுறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டதுடனே பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.
Question 87
பின்வருவனவற்றுள் தியோபந்த் இயக்கத்தின் நோக்கம் எது/எவை?
  1. ஒன்று குரானின் தூய்மையான கருத்துக்களையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல்.
  2. அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக ஜிகாத் (புனிதப்போர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமுடையதாக வைத்திருப்பது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 87 Explanation: 
விளக்கம்: தியோபந்த் இயக்கம் (1866): தியோபந்த் இயக்கம் முஸ்லீம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்களால் மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒன்று குரானின் தூய்மையான கருத்துக்களையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல். மற்றொன்று அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக ஜிகாத் (புனிதப்போர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமுடையதாக வைத்திருப்பது.
Question 88
முஸ்லீம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கும் அமைப்பு எங்கு உருவாக்கப்பட்டது?
A
அலிகர்
B
புனே
C
தியோபந்த்
D
கேத்கான்
Question 88 Explanation: 
விளக்கம்: இவ்வியக்கம் நிறுவன வடிவம் பெற்று சரண்பூருக்கு அருகேயுள்ள தியோபந்த் என்னுமிடத்தில் முகமது காசிம் நாநோதவி (1833- 1877), ரஷித் அகமத் கங்கோரி (1828-1905) ஆகியோரால் முஸ்லீம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
Question 89
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. தியோபந்த் இயக்கம்  இஸ்லாமிய சமூகத்தாரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  2. தியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 89 Explanation: 
விளக்கம்: அலிகர் இயக்கத்தின் நோக்கங்களான மேலைக் கல்வியின் மூலம் முஸ்லீம்களின் நலனை மேம்படுத்துதல், ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தல் ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தாரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே.
Question 90
தியோபந்த்தில் இறையியல் கல்லூரி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1867
B
1868
C
1869
D
1870
Question 90 Explanation: 
விளக்கம்: வாலி அல்லா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த இறையியலாளர்களால் 1867இல் தியோபந்த்தில் இறையியல் கல்லூரி ஒன்றுநிறுவப்பட்டது. அவர்களுள் மிக முக்கியமானவர் முகமது காசிம் நாநோதவி ஆவார். கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களும் ஆரிய சமாஜமும் முன்வைத்த வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
Question 91
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இறையியல் கல்லூரியின் மிக முக்கியமான நோக்கம் பழமைவாதிகளுக்கு இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கும் இறை யியலாளர்களுக் கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது
  2. ஒரு சமயப் பல்கலைக்கழகமாக தியோபந்த், முஸ்லீம் இந்தியாவில் மட்டுமல்லாமல் முஸ்லீம் உலகத்திற்கே பெருமதிப்புமிக்க நிறுவனமாயிற்று.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 91 Explanation: 
விளக்கம்: இவ்விறையியல் கல்லூரியின் மிக முக்கியமான நோக்கம் பழமைவாதிகளுக்கு இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கும் இறை யியலாளர்களுக் கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, சமய, இறையியலை மீள்வாசிப்பு செய்ய வைப்பது என்பனவாகும். ஒரு சமயப் பல்கலைக்கழகமாக தியோபந்த், முஸ்லீம் இந்தியாவில் மட்டுமல்லாமல் முஸ்லீம் உலகத்திற்கே பெருமதிப்புமிக்க நிறுவனமாயிற்று.
Question 92
நட்வத்-அல்- உலாமா குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. நவீனகாலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது.
  2. இறைமறுப்புக் கொள்கை, லோகாயதவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 92 Explanation: 
விளக்கம்: நட்வத்-அல்- உலாமா: தியோபந்த்தைக் காட்டிலும் குறைந்த அளவு பழமைவாதப் போக்குடைய அதே சமயம் நவீனகாலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது. நவீன மேற்கத்தியக் கல்வியின் வருகையைத் தொடர்ந்துவந்த இறைமறுப்புக் கொள்கை, லோகாயதவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
Question 93
நட்வத்-அல்-உலாமா பள்ளி எங்கு அமைந்துள்ளது?
A
அலிகர்
B
பிரங்கி மஹால்
C
நவ்கான்
D
கேத்கான்
Question 93 Explanation: 
விளக்கம்: பிரங்கி மஹால்: மூன்றாவதாகப் புகழ்பெற்ற ஆனால் மற்றவற்றைக் காட்டிலும் காலத்தால் மூத்த இச்சிந்தனைப் பள்ளி லக்னோவிலுள்ள பிரங்கிமஹாலில் உருவானது. மற்ற இரண்டைப் போலல்லாமல் பிரங்கிமஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது. மற்றொரு மரபுசார்ந்த இயக்கம் அல்-இ-ஹதித் அல்லது நபிகள் நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.
Question 94
ஜொராஸ்டிரியர்கள் எந்த  நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில்இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர்?
A
பத்தாம் நூற்றாண்டு
B
ஒன்பதாம் நூற்றாண்டு
C
எட்டாம் நூற்றாண்டு
D
ஏழாம் நூற்றாண்டு
Question 94 Explanation: 
விளக்கம்: தங்கள் தாயகமான பாரசீகத்தில் அடக்குமுறைக்கு உள்ளானதால் ஜொராஸ்டிரியர்கள் பத்தாம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில்இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினார். ஒரு வணிக சமூகமாக அவர்கள் நூற்றாண்டுகளின் போக்கில் செல்வச் செழிப்படைந்தனர். நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட அச்சமூகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்தக் காற்று தழுவத் தவறவில்லை.
Question 95
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. 1851இல் கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானது “ரக்னுமய் மத்யஸ்னன் சபா”  எனும் அமைப்பை உருவாக்கியது.
  2. நௌரோஜி பர்தோன்ஜி, தாதாபாய் நௌரோஜி, காமா, பெங்காலி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டிருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 95 Explanation: 
விளக்கம்: 1851இல் கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானது “ரக்னுமய் மத்யஸ்னன் சபா” (Rahnumai Madyasnam Sabha, சமய சீர்திருத்த சங்கம்) எனும் அமைப்பைப் பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கங்களுடனும் உருவாக்கியது. இவ்வியக்கம் நௌரோஜி பர்தோன்ஜி, தாதாபாய் நௌரோஜி, காமா, பெங்காலி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டிருந்தது.
Question 96
பார்சிகளின் சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக வெளியிடப்பட்ட செய்தித்தாள் எது?
A
ராஸ்ட்-கோப்தார்
B
சம்வாத் கௌமுகி
C
மிராத் உல் அக்பர்
D
இந்தியாவின் குரல்
Question 96 Explanation: 
விளக்கம்: சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட்-கோப்தார் (உண்மை விளம்பி) எனும் செய்தித்தாளும் வெளியிடப்பட்டது. பார்சிகளின் மத நடவடிக்கைகளும் சடங்குகளும் சீர்திருத்தப்பட்டன. பார்சி மதத்திற்கு மறு விளக்கமும் தரப்பட்டது.
Question 97
பார்சி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை/கள்  எது/எவை?
A
கல்வி கற்பித்தல்
B
பர்தா முறையை நீக்குவது
C
திருமண வயது வரம்பை அதிகரிப்பது
D
இவை அனைத்தும்
Question 97 Explanation: 
விளக்கம்: சமூகத் தளத்தில் பார்சி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காகக் கல்வி கற்பித்தல், பர்தா முறையை நீக்குவது, திருமண வயது வரம்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. படிப்படியாகப் பார்சிகள் இந்திய சமூகத்திலேயே அதிக அளவு மேற்கத்தியமயப்பட்ட பிரிவினராக மாறினர். தேசிய இயக்கத்திலும் இந்தியாவைத் தொழில்மயம் ஆக்கியதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
Question 98
சிங் சபா இயக்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A
1873
B
1872
C
1878
D
1875
Question 98 Explanation: 
விளக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலெழும்பிய பகுத்தறிவு முற்போக்கு அலைகள் சீக்கியரையும் தொட்டுத் தழுவின. 1873இல் சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது.
Question 99
சிங் சபா இயக்கத்தின்  முக்கிய நோக்கம் எது/எவை?
A
நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்
B
கிறித்தவச் சமயப்பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு இயக்கவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்வது.
C
சீக்கிய குருத்வாராவை மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
D
a) மற்றும் b)
Question 99 Explanation: 
விளக்கம்: 1) நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல் 2) கிறித்தவச் சமயப்பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு இயக்கவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்வது.
Question 100
சீக்கியர் குருத்துவாரா சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A
1922
B
1924
C
1926
D
1927
Question 100 Explanation: 
விளக்கம்: அகாலி இயக்கம் சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கமே. அகாலி இயக்கம் சீக்கிய குருத்வாராவை ஊழல் மிகுந்த உதாசி மகந்த் என்றறியப்பட்ட மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. அரசு 1922இல் சீக்கியர் குருத்துவாரா சட்டத்தை (1925 திருத்தப்பட்டது) இயற்றியது. அதன்படி சீக்கிய குருத்துவாரா, சிரோன்மணி குருத்தவாரா பிரபந்தக் கமிட்டி எனும் அமைப்பின் கீழ் வந்தது.
Question 101
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன.
  2. தேவேந்திரநாத் தாகூர்  சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 101 Explanation: 
விளக்கம்: வட இந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன. கேசவ சந்திர சென் சென்னைக்கு வருகை தந்து உரையாற்றினார். ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.
Question 102
ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு எந்த ஆண்டு  நிறுவப்பட்டது?
A
1830
B
1809
C
1842
D
1866
Question 102 Explanation: 
விளக்கம்: ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830களில் நிறுவப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. தென்திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) சாஸ்தா கோவில்விளை (தற்போது சாமித்தோப்பு என்றழைக்கப்படுகிறது) எனும் சிறிய ஊரில் 1809இல் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.
Question 103
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. முத்துக்குட்டி, தனது குழந்தைப் பருவத்தில் கிராமத்திலிருந்த உயர்நிலை பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களைக் கற்றார்.
  2. விவிலியத்தைக் கற்ற அவர் கிறித்தவ இறையியலிலும் சிறந்து விளங்கினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 103 Explanation: 
விளக்கம்: முத்துக்குட்டி, தனது குழந்தைப் பருவத்தில் கிராமத்திலிருந்த திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களைக் கற்றார். விவிலியத்தைக் கற்ற அவர் கிறித்தவ இறையியலிலும் சிறந்து விளங்கினார்.
Question 104
கடலில் புனித நீராடும் போது வைகுண்ட சாமிகள்  நீங்கப்பெற்ற நோய் எது?
A
இருதய நோய்
B
சருமநோய்
C
சூலை நோய்
D
கழலை நோய்
Question 104 Explanation: 
விளக்கம்:தனது 22வது வயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற அவர் கடலில் புனித நீராடும் போது தனது சருமநோய் நீங்கப்பெற்றார்.
Question 105
எந்தக்கடவுள் தன்னை  மகனாகப் பாவித்து மறுபிறவி அளித்ததாக வைகுண்ட சாமிகள் அறிவித்தார்?
A
திருச்செந்தூர் முருகன்
B
சிவ பெருமான்
C
விஷ்ணு
D
அம்மன்
Question 105 Explanation: 
விளக்கம்: கடவுள்விஷ்ணு தன்னை மகனாகப் பாவித்து மறுபிறவி அளித்ததாக அறிவித்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பிய பின்னர் இரண்டு ஆண்டுகள் துறவற வாழ்வை மேற்கொண்டார். விரைவில் அவரது புகழ் அனைத்து இடங்களுக்கும் பரவியது.
Question 106
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. வைகுண்ட சாமிகள் திருவிதாங்கூர் சமூகத்தின் மரபு வழிப்பட்ட சாதிமுறையையும், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அதிக வரி வசூல் செய்யும் அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
  2. அரசுக்கு எதிராகப் பேசினார் என்பதற்காக அவர் திருவாங்கூர் அரசரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 106 Explanation: 
விளக்கம்: வைகுண்ட சாமிகள் தனது போதனைகளில் திருவிதாங்கூர் சமூகத்தின் மரபு வழிப்பட்ட சாதிமுறையையும், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அதிக வரி வசூல் செய்யும் அரசையும் கடுமையாக விமர்சித்தார். அரசுக்கு எதிராகப் பேசினார் என்பதற்காக அவர் திருவாங்கூர் அரசரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Question 107
வைகுண்ட சாமிகளின் சீடர்கள் அவரை  எவ்வாறு அழைக்கலாயினர்?
A
ஐயா
B
கடவுள்
C
பெரியவர்
D
அப்பன்
Question 107 Explanation: 
விளக்கம்: வைகுண்ட சாமிகள் 1838இல் அவர் விடுதலை செய்யப்பட்டபோது ஒடுக்கபட்ட மக்களிடையே மிகவும் பிரபலமானார். அவருடைய சீடர்கள் அவரை ஐயா (தந்தை) என்று அழைக்கலாயினர். அவரைப் பின்பற்றிய நடைமுறைகள் “ஐயா வழி” என்றழைக்கப்பட்டது.
Question 108
வைகுண்ட சாமிகளின் போதனைகள் தொகுக்கப்பட்டு எந்த பெயரில்  வெளிவந்தது?
A
புறத்திரட்டு
B
பொன்வண்ணத்து அந்தாதி
C
அகிலத்திரட்டு
D
வைகுண்ட சாமிகள் கோவை
Question 108 Explanation: 
விளக்கம்: வைகுண்ட சாமிகளின் போதனைகள் தொகுக்கப்பட்டு ‘அகிலத்திரட்டு’ என்னும் வழிபாட்டு நூலாக வெளிவந்தது. வைகுண்டசாமி “பூடம்” (பீடம்) வழிபாட்டு முறையை கைவிடும்படி தன்னைப் பின்பற்றுவோரிடம் கூறினார்.
Question 109
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. வைகுண்ட சாமிகள் விலங்குகளைப் பலியிடும் பழக்கத்தையும் கைவிடும்படி வலியுறுத்தினார்
  2. சைவ உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள அறிவுறுத்தினார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 109 Explanation: 
விளக்கம்: விலங்குகளைப் பலியிடும் பழக்கத்தையும் கைவிடும்படி வலியுறுத்தினார். சைவ உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள அறிவுறுத்தினார்.
Question 110
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அயோத்திதாசப்பண்டிதர் தன்னைப் பின்பற்றுவோரை எதிர்ப்பின் அடையாளமாக தலைப்பாகை அணியும்படி வற்புறுத்தினார்
  2. அக்காலத்தில் தலைப்பாகை அணியும் உரிமை உயர் சாதியினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 110 Explanation: 
விளக்கம்: தன்னைப் பின்பற்றுவோரை எதிர்ப்பின் அடையாளமாக தலைப்பாகை அணியும்படி வற்புறுத்தினார். அக்காலத்தில் தலைப்பாகை அணியும் உரிமை உயர் சாதியினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.
Question 111
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. அயோத்திதாசப்பண்டிதர் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
  2. ‘நிழல் தாங்கல்’ என்றழைக்கப்பட்ட பண்டிதர்  உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக்கட்டுபாடுகள் உடைக்கப்பட்டன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 111 Explanation: 
விளக்கம்: சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக வைகுண்ட சாமிகள் தனது சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார். ‘நிழல் தாங்கல்’ என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக்கட்டுபாடுகள் உடைக்கப்பட்டன.
Question 112
ஸ்ரீவைகுண்ட சாமிகள்  எந்த ஆண்டு  இறந்தார்?
A
1830
B
1809
C
1851
D
1866
Question 112 Explanation: 
விளக்கம்: 1851இல் அவருடைய இறப்பிற்குப் பின்னரும், வைகுண்ட சாமிகள் வழிபாடானது தென் திருவாங்கூர் பகுதியில் கிறித்தவ சமயம் பரவுவதற்குப் பெரும் சவாலாக விளங்கியது.
Question 113
இராமலிங்க அடிகள்  தன் இளமைக்காலத்தில் எங்கு வாழ்ந்தார்?
A
காஞ்சிபுரம்
B
சென்னை
C
கடலூர்
D
சிதம்பரம்
Question 113 Explanation: 
விளக்கம்: இராமலிங்க அடிகள் (வள்ளலார்) (1823-1874) இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து தன் இளமைக்காலத்தில் சென்னையில் வாழ்ந்தார்.
Question 114
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. முறையான கல்வியைப் பெறாத இராமலிங்க அடிகள் பெரும் புலமையை வெளிப்படுத்தினார்.
  2. இராமலிங்க அடிகள்  காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 114 Explanation: 
விளக்கம்: முறையான கல்வியைப் பெறாத இராமலிங்க அடிகள் பெரும் புலமையை வெளிப்படுத்தினார். தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார். அவருடைய காலத்தில் சைவ சமயமானது திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
Question 115
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன.
  2. உள்ளுணர்வு சார்ந்த இறைநிலைக்கு ஆட்பட்ட இராமலிங்க அடிகள் அவ்வனுபவங்களைத் தனது பாடல்களில் பதிவு செய்தார்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 115 Explanation: 
விளக்கம்: இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன. அவர் மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார். உள்ளுணர்வு சார்ந்த இறைநிலைக்கு ஆட்பட்ட அவர் அவ்வனுபவங்களைத் தனது பாடல்களில் பதிவு செய்தார். இதனால் வைதீக சைவ சமயத்தினர் இவர்பால் வெறுப்புக் கொண்டனர்.
Question 116
இராமலிங்க அடிகள் வடலூரில் ஏழைகளுக்கு எந்த அமைப்பின் மூலம்  உணவளிக்கத் தொடங்கினார்?
A
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
B
சத்திய ஞான சபை
C
சத்திய தர்ம சாலை
D
இவை அனைத்தும்
Question 116 Explanation: 
விளக்கம்: அவர் சத்திய தர்ம சாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினார். முக்கியமாக 1860களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார்.
Question 117
இராமலிங்க அடிகள் தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக  ஏற்படுத்திய அமைப்பு எது?
A
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
B
சத்திய ஞான சபை
C
சத்திய தர்ம சாலை
D
இவை அனைத்தும்
Question 117 Explanation: 
விளக்கம்: தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும் அமைப்பை நிறுவினார். இதனால் நிறுவனபடுத்தப்பட்டிருந்த சைவ அமைப்புகளோடு அவர் மோதல் துவங்கியது. இவருடைய சீடர்கள் அவருடைய பாடல்களைத் திரட்டித் ’திருவருட்பா’ எனும் பெயரில் 1867இல் வெளியிட்டபோது மோதல் உச்சத்தை எட்டியது.
Question 118
எந்த நாட்டைச் சேர்ந்த வைதீக சைவர்கள் இராமலிங்க அடிகளின் பாடல்களை தெய்வநிந்தனை எனக் கூறினர்?
A
சிங்கப்பூர்
B
தாய்லாந்து
C
இலங்கை
D
மலேசியா
Question 118 Explanation: 
விளக்கம்:இலங்கையைச் சேர்ந்த வைதீக சைவர்கள் சீர்திருத்தவாதி ஆறுமுக நாவலரின் தலைமையில் இதைத் தெய்வநிந்தனை எனக் கூறி இவருக்கு எதிராக கட்டுரை எழுதும் போரில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் இராமலிங்க அடிகளின் பணி அங்கீகரிக்கப்பட்டது. அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவ சமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளை மதிப்பிழக்கச் செய்தன.
Question 119
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது.
  2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 119 Explanation: 
விளக்கம்: பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது.
Question 120
மணிமேகலை எந்த ஆண்டு முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது?
A
1891
B
1893
C
1863
D
1898
Question 120 Explanation: 
விளக்கம்: 1867இல் சீவகசிந்தாமணி, 1898இல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிகமுக்கியமான ஆளுமை அயோத்திதாச பண்டிதராவார்.
Question 121
அயோத்தி தாசப்பண்டிதர் மேற்கொண்ட தொழில் எது?
A
மருத்துவர்
B
வழக்குரைஞர்
C
ஆசிரியர்
D
தச்சர்
Question 121 Explanation: 
விளக்கம்: (1845-1914) ஒரு சுதேசி மருத்துவராகத் தொழில் செய்தாலும் அவர் பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தார். பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹென்றி ஆல்காட்டின் செல்வாக்கிற்கு அவர் உள்ளானவர்.
Question 122
ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்று கூறியவர் யார்?
A
இராமலிங்க அடிகள்
B
அயோத்திதாசப்பண்டிதர்
C
வைகுண்ட சுவாமிகள்
D
இரட்டைமலை சீனுவாசன்
Question 122 Explanation: 
விளக்கம்: 1890களில் ஆதிதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார். தனது கருத்துக்களைமெய்ப்பிப்பதற்காகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களையும் பிறவற்றையும் மறுவாசிப்பு செய்தார்.
Question 123
பின்வருபவர்களுள் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதை  ஊக்குவித்தவர் யார்?
A
இராமலிங்க அடிகள்
B
அயோத்திதாசப்பண்டிதர்
C
வைகுண்ட சுவாமிகள்
D
இரட்டைமலை சீனுவாசன்
Question 123 Explanation: 
விளக்கம்: மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார். அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர். கோலார் தங்கவயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் இவரது கொள்கையைப் பின்பற்றினர். இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கியப் பங்கு வகித்தனர்.
Question 124
அயோத்திதாச பண்டிதர் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிகையை எந்த ஆண்டு தொடங்கினார்?
A
1902
B
1900
C
1907
D
1908
Question 124 Explanation: 
விளக்கம்: அயோத்திதாச பண்டிதர் 1908 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.
Question 125
  • கூற்று (கூ): ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மக்களின் மத விஷயங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது.
  • காரணம் (கா): போர்த்துகீசியரின் கட்டாய மதமாற்ற முயற்சிகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமென அவர்கள் நம்பினர்.
A
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
B
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
C
கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
D
கூற்று தவறு; காரணம் சரி.
Question 125 Explanation: 
விளக்கம்: இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர்களைப் போலவே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்திய மக்களின் மத விஷயங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது. அதற்கான காரணம் போர்த்துகீசியரின் கட்டாய மதமாற்ற முயற்சிகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமென அவர்கள் நம்பினர். அதன் விளைவாகக் கம்பெனி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமயப் பரப்பாளர்கள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது
Question 126
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. 1793 இல் பாப்டிஸ்டுகளான வில்லியம் கேரி, ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர்.
  2. சமயப்பரப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் டேனியர்களுக்குச் சொந்தமான கல்கத்தாவிற்கு வடக்கேயுள்ள மிட்னாபூரில் தங்கினர்.
A
(i) மட்டும் சரி
B
(ii) மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 126 Explanation: 
விளக்கம்: 1793 இல் பாப்டிஸ்டுகளான வில்லியம் கேரி, ஜான் தாமஸ் ஆகிய இருவரும் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் இந்தியா வந்தனர். சமயப்பரப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் டேனியர்களுக்குச் சொந்தமான கல்கத்தாவிற்கு வடக்கேயுள்ள செராம்பூரில் தங்கினர்.
Question 127
செராம்பூர் மிஷன் எனும் அமைப்பு எந்த ஆண்டு  ஏற்படுத்தப்பட்டது?
A
1799
B
1793
C
1822
D
1893
Question 127 Explanation: 
விளக்கம்: கேரி, வேறு இரு சமயப்பரப்பாளர்களான ஜோசுவா மார்ஷ்மேன், வில்லியம் வார்டு ஆகியோருடன் இணைந்து 1799இல் செராம்பூர் மிஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தினர்.
Question 128
முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப் பணியாளர்கள் யாவர்?
A
செராம்பூர் மதப்பரப்பாளர்கள்
B
மிட்னாபூர் மதப்பரப்பாளர்கள்
C
காசியாபாத் மதப்பரப்பாளர்கள்
D
பூனே மதப்பரப்பாளர்கள்
Question 128 Explanation: 
விளக்கம்:செராம்பூர் மதப்பரப்பாளர்களே முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை தந்த நற்செய்தி மறைப் பணியாளர்கள் (Evangelical Babtist) ஆவர். இவர்களைத் தொடர்ந்து சீர்திருத்தக் கிறித்தவ சமயத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர்.
Question 129
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. மிட்னாபூர் மதப்பரப்பாளர்களின் வருகைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல கிறித்தவ மதப் பரப்பு நிறுவனங்கள் செயல்பட்டனர்.
  2. மதமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 129 Explanation: 
விளக்கம்: செராம்பூர் மதப்பரப்பாளர்களின் வருகைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல கிறித்தவ மதப் பரப்பு நிறுவனங்கள் போர்த்துகீசியருக்குச் சொந்தமான கோவாவிலும், மலபார் கடற்கரைப் பகுதிகளிலும், சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளிலும் செயல்பட்டனர். மதமாற்றம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
Question 130
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. விரிவான, பெருமளவிலான மதமாற்ற நடவடிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கின
  2. மதப் பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 130 Explanation: 
விளக்கம்: விரிவான, பெருமளவிலான மதமாற்ற நடவடிக்கைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கின. மதப் பரப்புக் குழுவினர் சமூகப் பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினர். அரசுப் பணிகளில் அவர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்றனர்.
Question 131
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமயப் பரப்புக் குழுவினர் போராடினர்.
  2. அனாதைக் குழந்தைகளையு ம் ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்க வைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 131 Explanation: 
விளக்கம்: பொதுச் சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்வது போன்ற சமூக உரிமைகளுக்காகவும் சமயப் பரப்புக் குழுவினர் போராடினர். அனாதைக் குழந்தைகளையு ம் ஆதரவற்றோரையும் தங்கள் நிறுவனங்களில் தங்க வைத்து தங்களது உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி வழங்கினர்.
Question 132
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. பஞ்சங்களின் போது சமயப் பரப்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  2. தங்குமிடம் வழங்கி உதவி செய்யும்போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 132 Explanation: 
விளக்கம்: பஞ்சங்களின் போது சமயப் பரப்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தங்குமிடம் வழங்கி உதவி செய்யும்போது மக்களை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
Question 133
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலப் பகுதியில்  எந்த மாவட்டத்தில் பல கிராமங்கள் கிறித்தவ மதத்தைத் தழுவின?
A
தூத்துக்குடி
B
கன்னியாக்குமரி
C
திருநெல்வேலி
D
சென்னை
Question 133 Explanation: 
விளக்கம்: பஞ்சக் காலங்களில் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்கள் கிறித்தவ மதத்தைத் தழுவின. இதைப் போன்ற சூழலில் ஆந்திராவில் மாலா, மடிகா சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் மதம் மாறினர்.
Question 134
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பைக் கிறித்தவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்டன.
  2. மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 134 Explanation: 
விளக்கம்: கம்பெனி அரசு இந்தியர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதில் சிறு முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டது. நீண்ட காலத்திற்கு உள்ளூர் மக்களுக்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பைக் கிறித்தவ சமய நிறுவனங்களே தன்னார்வத்துடன் ஏற்றுக்கொண்டன. மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் கிறித்துவ சமய நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
Question 135
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமூகத்தின் வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால், சமய-சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவியல் சித்தாந்த எதிர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
  2. சீர்திருத்தவாதிகள் தூற்றப்பட்டனர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களுக்கு எதிராக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, பிற்போக்குவாதிகளால்கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 135 Explanation: 
விளக்கம்:சமூகத்தின் வைதீகப் பிரிவைச் சார்ந்தோரால், சமய-சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவியல் சித்தாந்த எதிர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் விளைவாகச் சீ ர் திருத்தவாதிகள் தூற்றப்பட்டனர் , அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களுக்கு எதிராக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, பிற்போக்குவாதிகளால்கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
Question 136
இறைவழிபாட்டைத் தனிப்பட்ட அனுபவமாக மாற்றியவை எவை?
A
சமய நூல்கள் பிராந்திய மொழிகளில் மொ ழி பெயர்க்கப்பட்டமை
B
சமய நூல்களில் காணப்படும் கருத்துகளுக்குப் புதுவிளக்கம் அளிக்கும் உரிமை
C
சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டமை
D
இவை அனைத்தும்
Question 136 Explanation: 
விளக்கம்: எதிர்ப்புகளை மீறி இவ்வியக்கங்கள், அச்சத்தின் காரணமாக இணங்கிச் சென்ற தனிமனிதர்களின் விடுதலைக்குப் பங்களிப்பைச் செய்தன. சமய நூல்கள் பிராந்திய மொழிகளில் மொ ழி பெயர்க்கப்பட்டமை, ச ம ய நூல்களில் காணப்படும் கருத்துகளுக்குப் புதுவிளக்கம் அளிக்கும் உரிமை, சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டமை ஆ கி ய ன இறைவழிபாட்டைத் தனிப்பட்ட அனுபவமாக மாற்றின.
Question 137
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சிந்திக்கவும் பகுத்தறியவும் தெரிந்த மனித அறிவின் திறமைக்குச் சீர்திருத்தவாதிகள் முக்கியத்துவம் கொடுத்தனர்.
  2. தங்கள் சமூகமும் மதமும் கீழானவை, பின்தங்கியவை என்ற குற்றச்சாட்டுக்கும் பழிப்புரைக்கும் எதிராகப் பதில்தர தங்களைப் பின்பற்றுவோர்க்கு சீர்திருத்தவாதிகள் உதவினர்.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 137 Explanation: 
விளக்கம்: சிந்திக்கவும் பகுத்தறியவும் தெரிந்த மனித அறிவின் திறமைக்குச் சீர்திருத்தவாதிகள் முக்கியத்துவம் கொடுத்தனர். சமய நடவடிக்கைகளிலிருந்த ஊழல்களைக் களைந்து தங்கள் சமூகமும் மதமும் கீழானவை, பின்தங்கியவை என்ற குற்றச்சாட்டுக்கும் பழிப்புரைக்கும் எதிராகப் பதில்தர தங்களைப் பின்பற்றுவோர்க்கு சீர்திருத்தவாதிகள் உதவினர். உருவாகிவந்த மத்தியதர வர்க்கம் பற்றிக்கொள்வதற்கான பண்பாட்டு வேர்களை இவ்வியக்கங்கள் வழங்கின.
Question 138
அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு எந்த ஆண்டு வந்தார்?
A
1890
B
1894
C
1893
D
1897
Question 138 Explanation: 
விளக்கம்: 1893இல் இந்தியாவிற்கு வந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்மஞானசபை வலுப்பெற்று குறிப்பாகப் பல தென்னிந்திய ஆதரவாளர்களைப் பெற்றது.
Question 139
அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றவர் யார்?
A
அன்னிபெசன்ட்
B
பிளாவட்ஸ்கி
C
திலகர்
D
ஆல்காட்
Question 139 Explanation: 
விளக்கம்: ஆல்காட் அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மீட்பு வாதிகளான அனகரிகா தர்மபாலா, ஆச்சாரிய சுமங்களா உட்பட பல பௌத்த பிட்சுக்களைச் சந்தித்தார்.
Question 140
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1. சமத்துவம் எனும் கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க கோரியது.
  2. பகுத்தறிவு எனும் கொள்கை மூட நம்பிக்கைகளும் சடங்குகளும் நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
A
(i) சரி
B
(ii) சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 140 Explanation: 
விளக்கம்: சமத்துவம் எனும் கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க கோரியது. பகுத்தறிவு எனும் கொள்கை மூட நம்பிக்கைகளும் சடங்குகளும் நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
Question 141
திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும்படி கூறியவர்?
A
அயோத்தி தாசப்பண்டிதர்
B
இராமலிங்க அடிகள்
C
வைகுண்ட சுவாமிகள்
D
ஜோதிபா பூலே
Question 141 Explanation: 
விளக்கம்: ஜோதிபா பூலே வர்க்கங்களுக்கிடையேயான சமத்துவம் மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை முன்வைத்தார். திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும்படி கூறினார்.
Question 142
1851இல் பெண்களுக்கென்று ஒரு பள்ளியை தொடங்கியவர்?
A
அயோத்தி தாசப்பண்டிதர்
B
இராமலிங்க அடிகள்
C
வைகுண்ட சுவாமிகள்
D
ஜோதிபா பூலே
Question 142 Explanation: 
விளக்கம்: ஜோதிபா பூலே 1851இல் புனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தனது துணைவியார் சாவித்ரியின் உதவியோடு தொடங்கினார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 142 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!