MCQ Questions

தேசிய வருவாய் 12th Economics Lesson 2 Questions in Tamil

12th Economics Lesson 2 Questions in Tamil

2] தேசிய வருவாய்

1) தேசிய வருவாய் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடும் ஒரு முழுமையான அளவுகோலை தேசிய வருவாய் தருகிறது.

கூற்று 2 – தேசிய வருவாய் ஒரு நாட்டின் வாங்கும் சக்தியை குறிப்பிடும் காரணியாக இருக்கிறது.

கூற்று 3 – தேசிய வருவாய் என்பது பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான ஒரு கருவியாக திகழ்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – உண்மையில் தேசிய வருவாயின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும் விகிதத்தைப் பொறுத்து பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. பொருளாதார திட்டமிடலுக்கான ஒரு கருவியாக இது திகழ்கிறது. மேலும் இது ஒரு முக்கிய பேரினப் பொருளியல் மாறியாகவும் இருக்கிறது. எனவே தேசிய வருவாயின் பொருள், பல்வேறு கருத்துகள், அளவிடும் முறைகள் மற்றும் பயன்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம்.)

2) தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) சைமன் குஷ்நெட்ஸ்

B) ஆல்ஃபிரட் மார்ஷல்

C) வில்லியம் ரூதர்போர்டு

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – தேசிய வருவாய் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நோபல் பரிசு பெற்றுள்ள சைமன் குஷ்நெட்ஸ் (Simon Kuznets) என்பவராவார்.)

3) “ஒரு நாட்டிலுள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துகின்றன” என்பது கீழ்கண்டவர்களில் யாருடைய கூற்றாகும்?

A) சைமன் குஷ்நெட்ஸ்

B) ஆல்ஃபிரட் மார்ஷல்

C) வில்லியம் ரூதர்போர்டு

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – ஒரு நாட்டிலுள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துகின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத்தொகை ஆகும். இவ்வாறு கூறியவர் ஆல்ஃபிரட் மார்ஷல் என்பவராவார்.)

4) தேசிய வருவாய் அளவிடுவதற்கு கீழ்க்காணும் எந்த கருத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன?

I. காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி

II. தனிநபர் வருமானம்

III. செலவழிக்கக் கூடிய வருமானம்

IV. GDP, GNP, NNP

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தேசிய வருவாய் அளவிடுவதற்கு கீழ்க்கண்ட கருத்துருக்கள் பயன்படுகின்றன.அவை GDP, GNP, NNP, காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானம், செலவழிக்கக் கூடிய வருமானம், தலா வருமானம், உண்மை வருமானம், GDP குறைப்பான் போன்றவைகள் ஆகும்.)

5) ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) GDP ( மொத்த உள்நாட்டு உற்பத்தி )

B) GNP ( மொத்த தேசிய உற்பத்தி )

C) NNP ( நிகர தேசிய உற்பத்தி )

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – GDP)ஆகும். இதற்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால் இது சந்தை விலையின் ஜிடிபி என அழைக்கப்படுகிறது.)

6) கீழ்கண்டவற்றுள் எது மொத்த உள்நாட்டு உற்பத்தியை கண்டறியும் சூத்திரம் ஆகும்?

A) GDP = C + I – G + (X- M)

B) GDP = C + I + G + (X- M)

C) GDP = C + I – G × (X- M)

D) GDP = C + I + G – (X- M)

(குறிப்பு – செலவு முறையை பயன்படுத்தி கணக்கிடப்படும் GDP = C + I + G + (X – M) என்பதாகும். இதில் C = நுகர்வு பண்டங்கள், I = முதலீட்டு பண்டங்கள், G = அரசின் வாங்குதல்கள் என்பனவாம்)

7) மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான சூத்திரத்தில் ( C + I + G + (X- M)), X-M என்பது கீழ்கண்டவற்றுள் எதை குறிக்கிறது?

A) நிகர ஏற்றுமதி

B) நிகர இறக்குமதி

C) நிகர லாபம்

D) நிகர நஷ்டம்

(குறிப்பு – செலவு முறையை பயன்படுத்தி கணக்கிடப்படும் GDP = C + I + G + (X – M) என்பதாகும். இதில் C = நுகர்வு பண்டங்கள், I = முதலீட்டு பண்டங்கள், G = அரசின் வாங்குதல்கள், X-ம் = நிகர ஏற்றுமதி ( இது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம்) என்பனவாம்)

8) நிகர உள்நாட்டு உற்பத்தியின் சரியான சூத்திரம் எது?

A) நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP – தேய்மானம்

B) நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP + தேய்மானம்

C) நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP / தேய்மானம்

D) நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP * தேய்மானம்

(குறிப்பு – நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி அளவு ஆகும். அது நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP – தேய்மானம் என்னும் சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.)

9) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டு கருவிகள் உற்பத்தி செய்யும் போது தேய்மானம் அடையலாம் பழுதாகி போகலாம் அல்லது பயனற்று போகலாம். அந்த தேய்மானத்தின் மதிப்பை GDPயில் இருந்து கழித்துவிட்டால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

கூற்று 2 – ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி என அழைக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டு கருவிகள் உற்பத்தி செய்யும் போது தேய்மானம் அடையலாம் பழுதாகி போகலாம் அல்லது பயனற்று போகலாம். அந்த தேய்மானத்தின் மதிப்பை GDPயில் இருந்து கழித்துவிட்டால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி ஆகும்.ர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி என அழைக்கப்படுகிறது.இது NDP என குறிப்பிடப்படுகிறது.)

10) ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) GDP ( மொத்த உள்நாட்டு உற்பத்தி )

B) GNP ( மொத்த தேசிய உற்பத்தி )

C) NNP ( நிகர தேசிய உற்பத்தி )

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த கணக்கிடுதல் ஆகும். இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் சேர்க்கப்படும்.)

11) மொத்த தேசிய உற்பத்தியில் எத்தனை வகையான முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன?

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு

(குறிப்பு – மொத்த தேசிய உற்பத்தி என்றழைக்கப்படும் GNP யில் ஐந்து வகையான முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன. அவை C, I, G, X-M, R-P என்று குறிப்பிடப்படுகின்றன. அவை முறையே நுகர்வு, மூலதனம், அரசு, நிகர ஏற்றுமதி மற்றும் நிகர இறக்குமதி என்பவாம்)

12) மொத்த தேசிய உற்பத்தி கீழ்க்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது?

A) GNP = C + I + G + (X-M) + (R-P)

B) GNP = C + I + G + (X-M) – (R-P)

C) GNP = C + I + G – (X-M) + (R-P)

D) GNP = C + I + G – (X-M) – (R-P)

(குறிப்பு – மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த கணக்கிடுதல் ஆகும். இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் சேர்க்கப்படும். மொத்த தேசிய உற்பத்தி ஆனது, GNP = C + I + G + (X-M) + (R-P) எனும் சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.)

13) மொத்த தேசிய உற்பத்தியில், வெளிநாடுகளில் இருந்து பெற்ற காரணிகளின் வருவாய்க்கும், நம் நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டுகாரர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) P – R

B) R – P

C) X – M

D) M – X

(குறிப்பு – நிகர ஏற்றுமதி என்பது வெளிநாடுகளிலிருந்து பெற்ற காரணிகளின் வருவாய்க்கும்( கூலி, வட்டி, லாபம்) நம் நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டுகாரர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு(R-P) ஆகும். சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிகர வருமானம்)

14) ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) GDP ( மொத்த உள்நாட்டு உற்பத்தி )

B) GNP ( மொத்த தேசிய உற்பத்தி )

C) NNP ( நிகர தேசிய உற்பத்தி )

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – நிகர தேசிய உற்பத்தி (Net National Product)என்பது ஒரு ஆண்டில் பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும்.GNP யிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டுச் சொத்தின் மாற்றுக் கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.)

15) நிகர தேசிய உற்பத்தி கீழ்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது?

A) NNP = GDP – தேய்மான கழிவு

B) NNP = GDP + தேய்மான கழிவு

C) NNP = GNP – தேய்மான கழிவு

D) NNP = GNP + தேய்மான கழிவு

(குறிப்பு – GNP யிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டுச் சொத்தின் மாற்றுக் கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும். NNP = GNP – தேய்மான கழிவு என குறிக்கப்படுகிறது. தேய்மானத்தை மூலதன நுகர்வு கழிவு ( Capital Consumption Allowance) என்றும் கூறலாம்.)

16) காரணி செலவில் NNP எவ்வாறு வழங்கப்படுகிறது?

A) காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி + மானியம்

B) காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP +மறைமுகவரி + மானியம்

C) காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP + மறைமுகவரி – மானியம்

D) காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி – மானியம்

(குறிப்பு – NNP என்பது உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும்.காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும். காரணி செலவில் நிகர தேசிய வருவாயை பெறுவதற்கு சந்தை விலையில் NNP யின் பண மதிப்பில் இருந்து மறைமுக வரியை கழிக்க வேண்டும், மேலும் மானியங்களை கூட்ட வேண்டும்.)

17) தனிநபர் வருமானம் என்பது ____________________ இருக்கலாம்.

A) வட்டியாக

B) வாரமாக

C) கூலியாக

D) வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ

(குறிப்பு – தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டிவாகவோ, வாராமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனிநபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும்.)

18) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தனிநபர் வருமானம் என்பது தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்காது.

கூற்று 2 – மாற்று செலுத்தல்கள் (Transfer payment)தனிநபர் வருமானத்தோடு சேர்க்கப்படுகிறது.

கூற்று 3 – அரசிடம் இருந்து கிடைக்கும் ஓய்வு ஊதியம் தனிநபர் வருமானத்தில் சேர்க்கப்படுவதில்லை.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டிவாகவோ, வாராமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனிநபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும். தனிநபர் வருமானம் என்பது தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்காது. மாற்று செலுத்தல்கள் (Transfer payment)தனிநபர் வருமானத்தோடு சேர்க்கப்படுகிறது. அரசிடம் இருந்து கிடைக்கும் ஓய்வு ஊதியம் தனிநபர் வருமானத்தில் சேர்க்கப்படுகிறது.)

19) தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முக வரிகளை கழித்தால் கிடைப்பது?

A) தலா வருமானம்

B) செலவிடக்கூடிய வருமானம்

C) உண்மை வருமானம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – செலவிடக் கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவிடக் கூடிய வருமானத்தை குறிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இருந்து நேர் முகவரிகளை கழித்தால் கிடைப்பது செலவிடக் கூடிய வருமானம் ஆகும். இந்த வருமானம்தான் தனிநபர்கள் நுகர்வுகாக செலவிடக் கூடிய பண அளவு ஆகும்.)

20) தேசிய வருமானத்தை___________________வகுக்கக்கிடைப்பது தலா வருமானம் ஆகும்.

A) தனிநபர் வருமானம்

B) செலவிடக் கூடிய வருமானம்

C) தலா வருமானம்

D) உண்மை வருமானம்

(குறிப்பு – தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது தலா வருமானம் ஆகும். தலா வருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை )

21) கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருமானத்தை ஓர் ஆண்டில் உள்ள பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது

A) தனிநபர் வருமானம்

B) செலவிடக் கூடிய வருமானம்

C) தலா வருமானம்

D) உண்மை வருமானம்

(குறிப்பு – பண வருவாய் என்பது தேசிய வருமானத்தை ஒரு ஆண்டில் இந்திய பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மாறாக தேசிய வருவாய் என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பல அளவுகளில் குறிப்பிடப்படுகிறது.)

22) உண்மை வருமானம் கீழ்க்காணும் இந்த சூத்திரத்தின் மூலம் வழங்கப்படுகிறது?

A) உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் + ( P1 / P0 )

B) உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் – ( P1 / P0 )

C) உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் × ( P1 / P0 )

D) உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் ÷ ( P1 / P0 )

(குறிப்பு – பண வருவாய் என்பது தேசிய வருமானத்தை ஒரு ஆண்டில் இந்திய பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மாறாக தேசிய வருவாய் என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பல அளவுகளில் குறிப்பிடப்படுகிறது.உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் + ( P1 / P0 ) எனும் சூத்திரத்தின் மூலம் நிலையான நிலையில் தேசிய வருமானம் கணக்கிடப்படுகிறது. இதில் P0 – அடிப்படை ஆண்ணின் விலை குறியீட்டையும், P1 என்பது நடப்பு விலை ஆண்டு குறியீட்டையும் குறிக்கிறது)

23) GDP குறைப்பான் கீழ்க்கண்ட எந்த சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது?

A) GDP குறைப்பான் = ( பணமதிப்பு GDP / உண்மை GDP ) × 100

B) GDP குறைப்பான் = ( பணமதிப்பு GDP – உண்மை GDP ) × 100

C) GDP குறைப்பான் = ( பணமதிப்பு GDP + உண்மை GDP ) × 100

D) GDP குறைப்பான் = ( பணமதிப்பு GDP × உண்மை GDP ) × 100

(குறிப்பு – GDP குறைப்பான் என்பது GDP யில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டெண் ஆகும். இதுவும் ஒரு விலை குறியீட்டு எண் ஆகும். கொடுக்கப்பட்ட ஆண்டில் பண மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்ட GDP யை உண்மை GDP யால் வகுத்து 100 ஆல் பெருக்கினால் GDP குறைப்பானை கண்டறிய முடியும்.(GDP குறைப்பான் = ( பணமதிப்பு GDP / உண்மை GDP ) × 100))

24) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஓர் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு பணமதிப்பில் மதிப்பிட்டால் கிடைப்பது தேசிய வருவாய் ஆகும்.

கூற்று 2 – நமது சுய நுகர்வுக்காகவோ அல்லது சேமிப்பிற்கு பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதன் பணமதிப்பையும் தேசிய வருவாயில் கணக்கிட வேண்டும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – – ஓர் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு பணமதிப்பில் மதிப்பிட்டால் கிடைப்பது தேசிய வருவாய் ஆகும்.அதாவது நமது சுய நுகர்வுக்காகவோ அல்லது சேமிப்பிற்கு பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதன் பணமதிப்பையும் தேசிய வருவாயில் கணக்கிட வேண்டும். தேசிய வருவாயை மூன்று முறைகளில் அளவிடலாம்.)

25) தேசிய வருவாய் அளவிடப் பயன்படும் முறைகளுள் தவறானது எது?

A) உற்பத்தி முறை

B) வருவாய் முறை

C) செலவு முறை

D) அளவு முறை

(குறிப்பு – தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம். அவை உற்பத்தி முறை, வருவாய் துறை மற்றும் செலவு முறை என்பன ஆகும். இந்த மூன்று முறைகளை சரியாக பயன்படுத்தி கணக்கிட்டால் உற்பத்தி, வருமானம், செலவு இம்மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும்.)

26) தேசிய வருவாய் கணக்கிடும்போது கீழ்காணும் எது சாத்தியம் ஆகிறது?

A) உற்பத்தி = வருமானம் + செலவு

B) செலவு = உற்பத்தி + வருமானம்

C) வருமானம் =செலவு + உற்பத்தி

D) செலவு = வருமானம் = உற்பத்தி

(குறிப்பு – உற்பத்தி முறை, செலவு முறை மற்றும் வருவாய்முறை இவற்றைக் கொண்டு தேசிய வருவாய் கணக்கிடும்போது உற்பத்தி, வருமானம், செலவு இந்த மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும். ஏனென்றால் இம் மூன்று முறைகளும் இயல்பாகவே ஒரு சுழற்சியாக இருக்கும்.

27) GDP செலவு கூட்டுமுறையில் கணக்கில் கொள்ளமுடியாது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) நுகர்ச்சி

B) மக்களின் சம்பளம்

C) ஏற்றுமதி

D) அரசு செலவினங்கள்

(குறிப்பு – GDP செலவு கூட்டு முறையில் நுகர்ச்சி, அரசு செலவினங்கள், முதலீட்டு செலவினங்கள், இருப்புகளின் மதிப்பு மாறல், ஏற்றுமதி, இறக்குமதி மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.)

28) GDP காரணி வருவாய் முறையில் கணக்கில் கொள்ளப்படாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மக்களின் சம்பளம் மற்றும் கூலி

B) சுயவேலை செய்வோருக்கான சம்பளம்

C) நில உரிமையாளர்கள் பெறும் வாடகை

D) மொத்த உள்நாட்டு உற்பத்தி

(குறிப்பு – GDP காரணி வருவாய் முறையை கணக்கிடும்போது, மக்களில் சம்பளம், கூலி, சுய வேலை செய்வோருக்கான சம்பளம், தனியார்துறை வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் நில உரிமையாளர்கள் பெறும் வாடகை ஆகியவை மட்டும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.)

29) கீழ்காணும் எந்த முறை சரக்கு முறை என்று அழைக்கப்படுகிறது?

A) செலவு முறை

B) உற்பத்தி முறை

C) வருமான முறை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு மறை என்றும் அழைக்கப்படுகிறது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளில் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும்.)

30) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உற்பத்தி முறை கணக்கிடும்போது ஒரு துறையின் வெளியீடு (output) மற்றொரு துறையின்(input) உள்ளீடாக செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.

கூற்று 2 – இந்தியாவில் 64 வகை விவசாய பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு மறை என்றும் அழைக்கப்படுகிறது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளில் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும்.உற்பத்தி முறை கணக்கிடும்போது ஒரு துறையின் வெளியீடு (output) மற்றொரு துறையின்(input) உள்ளீடாக செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க இறுதி பொருட்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக்கூட்டையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

31) இந்தியாவில் பண்ணை உற்பத்தியின் மொத்த மதிப்பு கணக்கிடும் முறையில் கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் 64 வகை விவசாய பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பயிரின் அதன் ஒரு ஹெக்டருக்குக்கான சராசரி உற்பத்தியை கணக்கிட்டு அந்த அந்த பயிர்கள் பயிரிடப்பட்ட மொத்த நிலப்பரப்பால் பெருக்கி பயிரின் உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

கூற்று 2 – 64 வகை பயிர்களின் மொத்த உற்பத்தி மதிப்பை கணக்கில் கொண்டு, விவசாயத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு கணக்கிடப்படுகிறது.

கூற்று 3 – ஒவ்வொரு பொருளின் மொத்த மதிப்பு உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் இருந்து விதை, உரம், அங்காடி கட்டணம், சரி செய்தல் மற்றும் தேய்மானம் போன்ற செலவுகள் கழிக்கப்படுகின்றன.)

32) உற்பத்தி மூலம் தேசிய வருவாய் முறையை கணக்கீடு செய்தல் இந்தியாவில் கீழ்க்காணும் எந்த துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?

I. விவசாயம்

II. சுரங்கம்

III. தயாரிப்பு

IV. கைவினை பொருள்கள்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – பின்தங்கிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி முறை கையாளப்படுகிறது. இதில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு.இந்தியாவில் இந்த முறை விவசாயம், சுரங்கம், தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.)

33) உற்பத்தி முறை கணக்கிடுதல் மூலம் மதிப்பிடுதல் முறையில் கீழ்காணும் எந்த கூற்று சரியானது?

கூற்று 1 – இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப்பொருளாகவோ அல்லது இடைநிலை பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கூற்று 2 – சொந்த நுகர்வுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கூற்று 3 – இரண்டாம் முறையாக கை மாற்றப்பட்ட நீடித்த பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக்கூடாது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – 1)இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப்பொருளாகவோ அல்லது இடைநிலை பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது 2)சொந்த நுகர்வுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.3)இரண்டாம் முறையாக கை மாற்றப்பட்ட நீடித்த பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக்கூடாது.)

34) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஜவுளியின் விலைக்குள் துணியின் விலையும், துணியின் விலைக்குள் நூலின் விலையும், நூலின் விலைக்குள் பஞ்சின் விலையும் உள்ளது. எனவே பஞ்சு, நூல், துணி, ஆடைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பினை கூட்டுவது பலமுறை கணக்கில் சேர்த்தல் என்ற பிழைக்கு வழிவகுக்கும்.

கூற்று 2 – கைபேசி, கார் போன்ற பொருட்கள் இருமுறைகள் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – சொந்த நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பலவற்றை சந்தைப்படுத்தாமல் தனிப்பட்ட சொந்த நுகர்வுக்காக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அளவையும் சந்தைவிலையுடன் பெருக்கி மதிப்பை கண்டு தேசிய வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும்.)

35) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – வருமானம் முறை என்பது தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது.

கூற்று 2 – உற்பத்தி நிலைகளில் உற்பத்தி காரணிகள் பெற்ற அனைத்துவித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தை கணக்கிடலாம்.

கூற்று 3 – வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும்முறை என்றும் அழைக்கப்படுகிறது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – வருமானம் முறை என்பது தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது.உற்பத்தி நிலைகளில் உற்பத்தி காரணிகள் பெற்ற அனைத்துவித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தை கணக்கிடலாம்.வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும்முறை என்றும் அழைக்கப்படுகிறது. வருமான முறையைக் கணக்கிடும்போது மொத்த நிறுவனங்களும் வெவ்வேறு தொழில் குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.)

36) காரணிகளின் வருவாய் எத்தனை இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – காரணிகளின் வருவாய் மூன்று வகையான இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் கலப்பு வருமானம் என்பன ஆகும்.)

37) கீழ்காணும் எது உழைப்பாளர் வருமானம் அல்ல?

A) உற்பத்தித் திறன் ஊக்கு

B) கூலி மற்றும் சம்பளம்

C) இலாப ஈவு

D) சமூகப் பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு

(குறிப்பு – காரணிகளின் வருவாய் மூன்று இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் கலப்பு வருமானம் என்பன ஆகும்.அவற்றுள் உழைப்பாளர் வருமானம் என்பது கூலி மற்றும் சம்பளம், சமூக பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு, உற்பத்தி திறன் ஊக்கு (Fringe) மற்றும் ஊதியங்கள் போன்றவைகள் ஆகும்).

38) Y = w + r + i + π + (R-P) என்பதில், சின்னங்களை சரியான விளக்கத்துடன் பொருத்துக.

I. கூலி – a) P

II. வாடகை – b) i

III. வட்டி – c) w

IV. இறக்குமதி – d) r

A) I-c, II-d, III-b, IV-a

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-c, III-a, IV-b

D) I-a, II-d, III-b, IV-c

(குறிப்பு – உள்நாட்டு காரணி வருவாய்களுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. அதாவது தேசிய வருவாய் = = w + r + i + π + (R-P) எனும் சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது. இவற்றுள் w=கூலி, r=வாடகை, i=வட்டி, π=லாபம், P=இறக்குமதி, R=ஏற்றுமதி என்பன ஆகும்.)

39) மொத்த தேசிய வருவாயை கணக்கிடுவதில் கீழ்க்காணும் எந்த துறைகளின் வருமானங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன?

I. வங்கி மற்றும் காப்பீடு

II. பொது நிறுவனங்கள்

III. வீட்டு வேலை செய்பவர்கள்

IV. வீட்டு சொத்து வருமானம்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மொத்த தேசிய வருவாய் கணக்கிடுவதில் பிற துறைகளான சிறு நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு, வாணிபம் மற்றும் போக்குவரத்து, கலை, வீட்டுவேலை செய்பவர்கள், பொது நிறுவனங்கள், வீட்டு சொத்து வருமானம் மற்றும் அயல்நாட்டு வாணிபம் பரிமாற்றம் போன்றவைகளின் வருமானம் மதிப்பிடப்படுகிறது.)

40) தேசிய வருவாய் கணக்கிடும் முறையான வருமானமுறை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப்பொருளாகவோ அல்லது இடைநிலை பொருளாகவோ இருந்தால் அந்த பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கூற்று 2 – இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் மதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக்கூடாது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – தேசிய வருவாயில் கணக்கிடப்படும் முறையான வருமான முறையில், சொந்த நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பொருள் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இந்த முறையில் இருக்கிறது.)

41) தேசிய வருவாய் கணக்கிட பயன்படும் செலவு முறையில் கீழ்காணும் எந்த செலவு கூட்டப்பட்டு தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

A) நிகர உள்நாட்டு முதலீடு

B) பொருள் வாங்கும் செலவு

C) அரசின் கொள்முதல் செலவு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தேசிய வருவாய் கணக்கிட பயன்படும் செலவு முறையில், ஓர் ஆண்டில் சமுதாயத்திலுள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. தனிநபர் சுய நுகர்வு செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசு கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி செலவு முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.)

42) செலவு முறை மூலம் தேசிய வருவாயை கணக்கிடுதல் பற்றிய கீழ்க்காணும் எந்த கூற்று சரியானது?

கூற்று 1 – ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி மற்றும் இயந்திரம் போன்ற பொருள்களை இரண்டாம் முறை வாங்கும்போது மேற்கொள்ளப்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக்கூடாது.

கூற்று 2 -+ பழைய பங்கு, பத்திரங்களை இரண்டாம்நிலை அங்காடிகளில் வாங்கும் போது ஏற்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக்கூடாது.

கூற்று 3 – அரசாங்கம் செய்யும் மாற்று செலுத்தல்களான முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு செய்யும் செலவுகளை சேர்க்கக் கூடாது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – விவசாயிகள் விதை மற்றும் உரம் வாங்க செய்யும் செலவுகள், துணி தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பருத்தி மற்றும் நூல்களுக்கு செய்யும் செலவுகள் போன்றவற்றை தேசிய வருவாய் கணக்கிடுதல் சேர்க்கக்கூடாது முடிவடைந்த பொருட்களின் செலவுகளை மட்டுமே தேசிய வருவாயில் சேர்க்க வேண்டும்.)

43) பொருள்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் துறைகளில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. நிலம்

II. உழைப்பு

III. முதலீடு

IV. தொழில் முனைவு

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பொருள்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் துறைகளில் பல வகையான உள்ளீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உள்ளீடுகள் உற்பத்தி காரணிகள் என அழைக்கப்படுகிறது. அவையாவன, நிலம், உழைப்பு, முதலீடு மற்றும் தொழில் முனைவு போன்றவைகள் ஆகும். உற்பத்தியாளர்கள் மேற்கூறிய உற்பத்தி காரணிகளுக்கு பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய செலவு செய்கின்றனர். இந்த செலவுகள் பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது.)

44) கீழ்க்கண்ட வகைகளில் எது உற்பத்தி செலவிற்கான உதாரணமாகும்?

A) இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல்

B) நிலம் மற்றும் இயந்திரம் வாங்குதல்

C) கூலி மற்றும் சம்பளம் கொடுத்தல்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், நிலம் மற்றும் இயந்திரம் வாங்குதல், கூலி மற்றும் சம்பளம் கொடுத்தல், மூலதனத்தை பெற செய்யும் செலவு மற்றும் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் லாபம் போன்றவை உற்பத்தி செலவிற்கான உதாரணங்கள் ஆகும்.)

45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காரணி செலவு என்பது ஒரு நிறுவனம் பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் போது உற்பத்தி காரணிகளுக்கு செய்யும் செலவை குறிப்பதாகும்.

கூற்று 2 – அரசுக்கு செலுத்தும் வரிகள் உற்பத்தி செலவில் சேர்ப்பதில்லை.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – அரசுக்கு செலுத்தும் வரிகள் உற்பத்தி செலவில் சேர்ப்பதில்லை. ஏனெனில் வரிகள் நேரடியாக உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கு பெறுவது இல்லை. உற்பத்தியில் உதவித்தொகைகள் (Subsidies) நேரடியான விளைவை ஏற்படுத்துவதால் இந்த தொகைகள் காரணி செலவில் சேர்க்கப்படுகின்றன)

46) சந்தை விலை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் சந்தையில் விலைக்கு விற்கப்படுவதை சந்தை விலை (MARKET PRICE )என்பது குறிக்கிறது.

கூற்று 2 – சந்தை விலை என்பது நுகர்வோர்கள் பொருளுக்கான விலையை விற்பனையாளர்களிடம் செலுத்தி பொருளை பெறுவதாகும்.

கூற்று 3 – சந்தை விலையில் பொருள்களுக்கான வரிகள் சேர்க்கப்படுகின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் சந்தையில் விலைக்கு விற்கப்படுவதை சந்தை விலை (MARKET PRICE) என்பது குறிக்கிறது.சந்தை விலை என்பது நுகர்வோர்கள் பொருளுக்கான விலையை விற்பனையாளர்களிடம் செலுத்தி பொருளை பெறுவதாகும். சந்தை விலையில் பொருள்களுக்கான வரிகள் சேர்க்கப்படுகின்றன.)

47) சந்தை விலை என்பது கீழ்க்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் விளக்கப்படுகிறது?

A) சந்தை விலை = காரணி செலவு + உதவித்தொகைகள்

B) சந்தை விலை = காரணி செலவு – உதவித்தொகைகள்

C) சந்தை விலை = காரணி செலவு ÷ உதவித்தொகைகள்

D) சந்தை விலை = காரணி செலவு × உதவித்தொகைகள்

(குறிப்பு – அரசு விதிக்கும் வரிகள் உற்பத்தியாளர்களுக்கு செலவாக இருப்பதால் அவர்கள் நிலையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக அரசு செலுத்திய உதவித் தொகைகள் ஏற்கனவே காரணி செலவில் சேர்க்கப்பட்டுள்ளதால் இத்தொகைகள் விலையில் சேர்க்கப்படுவது இல்லை. ஆகவே சந்தை விலை(Market Price) = காரணி செலவு (FC) – உதவி தொகைகள் எனும் சூத்திரத்தின் மூலம் விளக்கப்படுகின்றன.)

48) காரணி செலவு கீழ்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது?

A) காரணி செலவு = சந்தை விலை – மறைமுக வரி + உதவித்தொகைகள்

B) காரணி செலவு = சந்தை விலை + மறைமுக வரி + உதவித்தொகைகள்

C) காரணி செலவு = சந்தை விலை + மறைமுக வரி – உதவித்தொகைகள்

D) காரணி செலவு = சந்தை விலை – மறைமுக வரி -உதவித்தொகைகள்

(குறிப்பு – காரணி செலவு = சந்தை விலை (Market Price) – மறைமுக வரி + உதவித்தொகைகள் எனும் சூத்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.அரசு விதிக்கும் வரிகள் உற்பத்தியாளர்களுக்கு செலவாக இருப்பதால் அவர்கள் நிலையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக அரசு செலுத்திய உதவித் தொகைகள் ஏற்கனவே காரணி செலவில் சேர்க்கப்பட்டுள்ளதால் இத்தொகைகள் விலையில் சேர்க்கப்படுவது இல்லை.)

49) கீழ்க்கண்ட வகைகளில் எது தவறானது?

A) நிகர மறைமுக வரிகள் = மறைமுகவரிகள் – உதவித்தொகைகள்

B) மொத்த மதிப்பு கூட்டல் = உற்பத்தியின் மதிப்பு – இடைநிலை நுகர்வு

C) உற்பத்தியின் மதிப்பு = விற்பனை – இருப்பில் மாற்றம்

D) இருப்பில் மாற்றம் = முடியும் இருப்பு – தொடக்க இருப்பு

(குறிப்பு – தேசிய வருவாய்(NNPfc) = ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து உற்பத்தி துறைகளும் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு – தேய்மானம் – நிகர மறைமுக வரி + நிகர வெளிநாட்டு காரணிகளின் வருமானம் என்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது)

50) ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பொருள்களும் விற்கப்பட்டால் மொத்த உற்பத்தி விற்பனைக்கு சமமாக இருக்கும். அது கீழ்காணும் எந்த சூத்திரத்தின் மூலம் விளக்கப்படுகிறது?

A) உற்பத்தியின் மதிப்பு = விலை × விற்பனை அளவு

B) உற்பத்தியின் மதிப்பு = விலை – விற்பனை அளவு

C) உற்பத்தியின் மதிப்பு = விலை + விற்பனை அளவு

D) உற்பத்தியின் மதிப்பு = விலை / விற்பனை அளவு

(குறிப்பு – ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பொருள்களும் விற்கப்பட்டால் மொத்த உற்பத்தி விற்பனைக்கு சமமாக இருக்கும். அதாவது உற்பத்தியின் மதிப்பு = விலை × விற்பனை அளவு)

51) தேசிய வருவாய் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தேசிய அளவிலான பணவியல் மற்றும் பொதுநிதி கொள்கைகளை உருவாக்க தேசிய வருவாய் பகுப்பாய்வு பயன்படுகிறது.

கூற்று 2 – திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் தேசிய வருவாய் மதிப்பீடு உதவுகிறது.

கூற்று 3 – குறுகிய கால மற்றும் நீண்டகால பொருளாதார மாதிரிகளை உருவாக்க தேசிய வருவாய் கணக்கீடு பயன்படுகிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – தேசிய வருவாய் கணக்கீட்டின் மூலம் பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும், தேசிய வருமானத்தில் துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறியமுடிகின்றது. மேலும் பொருள்கள் மற்றும் பணிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, பகிரப்படுகின்றன, செலவு செய்யப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன மற்றும் வரிவிதிக்கப்படுகின்றன போன்றவைகளை அறியமுடிகிறது.)

52) கீழ்காணும் எந்த புள்ளிவிவரங்களை தேசிய வருவாய் கணக்கீடு அளிக்கின்றது?

I. ஒரு நாட்டின் மொத்த வருமானம்

II. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி

III. ஒரு நாட்டின் மொத்த சேமிப்பு

IV. ஒரு நாட்டின் மொத்த நுகர்ச்சியின் அளவு

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) IV மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – துறைவாரியான பொருளாதார விபரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், தேசிய வருவாய் விபரங்கள் பயன்படுகின்றன. தேசிய வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.)

53) தேசிய வருவாய் பகுப்பாய்வின் மூலம் கீழ்க்கண்டவற்றுள் எதை அறிய முடியும்?

A) நடப்பு கணக்கு பற்றாக்குறை

B) நிதிப்பற்றாக்குறை

C) GDP விகிதம்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – தேசிய வருவாய் பகுப்பாய்வு பேரியல் பொருளாதார காரணிகளான வரி, GDP விகிதம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை, GDP கடன் விகிதம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமான பகிர்வை தெரிந்துகொள்ள தேசிய வருவாய் பயன்படுகிறது.)

54) இந்தியாவில் தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மாற்று செலுத்துதல்கள்

II. மூலதன லாபம்

III. புள்ளிவிபர சிக்கல்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்தியாவில் தேசிய வருவாய் கணக்கீட்டின் உள்ள சிரமங்கள் ஆவன, மாற்று செலுத்துதல்கள், தேய்மானங்கள் மதிப்பீடு செய்வதில் சிரமம், பணம் செலுத்தப்படாத சேவைகள், சட்டவிரோத நடவடிக்கைகளில் கிடைக்கும் வருமானம், சொந்த நுகர்வுக்கான உற்பத்தி மற்றும் விலை மாற்றம், மூலதன லாபம் மற்றும் புள்ளிவிபர சிக்கல்கள் போன்றவைகள் ஆகும்.)

55) கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருவாயில் சேர்க்கப்படுவதில்லை?

A) ஓய்வூதியம்

B) வேலையின்மைக்கான உதவித்தொகை

C) அரசு மானியங்கள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவைகள் அரசின் செலவுகள் ஆகும். ஆனால் இவைகளை தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. தேசிய கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே ஆகும். இது தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்களாக கருதப்படுகிறது.)

56) கீழ்க்கண்ட வகைகளில் எது தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவதில்லை?

A) சூதாட்டம்

B) மது கடத்துதல்

C) சட்டவிரோத மது தயாரித்தல்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சூதாட்டம், கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக மதுவை தயாரித்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை. இந்த நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்தாலும் சமுதாய ரீதியில் உற்பத்தி சார்ந்தது என்று எடுத்துக்கொள்ள முடியாது.)

57) கீழ்க்கண்டவற்றுள் எவற்றை தேசிய வருவாயில் இருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல?

I. தேய்மானம் கொடுப்பளவு

II. விபத்து இழப்பீடு

III. பழுது கட்டணங்கள்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தேய்மானம் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை தேசிய வருவாயிலிருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல. இவைகளை அதிக கவனத்துடன் சரியாக மதிப்பீடு செய்து கழிக்க வேண்டும். தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமமாக இது கருதப்படுகிறது.)

58) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர்.

கூற்று 2 – உணவு தயாரித்தல் தையல் பழுதுபார்த்தல் துவைத்து சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை எந்தவித பண வருமானம் இன்றி செய்கின்றனர்.

கூற்று 3 – இவைகள் பணம் செலுத்தப்படாத சேவைகள் என அழைக்கப்படுகின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாக் கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர். உணவு தயாரித்தல், தையல், பழுதுபார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளை எந்தவித பண வருமானம் இன்றி நட்பு, பாசம், அன்பு, மரியாதை போன்ற பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் செய்கின்றனர்.இவைகள் பணம் செலுத்தப்படாத சேவைகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.)

59) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மூலதன லாபம் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.

கூற்று 2 – விவசாயிகள் விற்பனை செய்யாமல் தங்களுக்கென ஒதுக்கிய உற்பத்திகள், தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவதில்லை.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – விவசாயிகள் தங்களின் சுயநுகர்வுக்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர்.சந்தையில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடுதல் என்பது சந்தை விலையில் முடிவடைந்த பொருள்கள் மற்றும் மதிப்பீடு ஆகும். மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துகள், பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன லாபம் கிடைக்கிறது. இது தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படுவது இல்லை.)

60) தேசிய வருவாய் கணக்கீடு செய்வதில் புள்ளிவிபர சிக்கல்களாக அறியப்படுவது கீழ்க்கண்டவற்றுள் எது?

I. விவசாய துறையில் உற்பத்தி அளவை கணக்கிடுவது சிரமமாக உள்ளது. மேலும் கால்நடை துறையின் உற்பத்தி போன்றவை பற்றிய புள்ளிவிபரங்கள் சரியாகவும் முழுமையாகவும் கிடைக்காது.

II. பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் போன்ற காரணத்தினாலும் புள்ளிவிபரங்களை மதிப்பிடுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

III. புள்ளி விவரங்களை சேகரிக்கும் பெரும்பான்மையான அலுவலர்கள் பயிற்சி அற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அரசு அலுவலர்கள் மற்றும் மக்களிடையே நம் நாட்டில் சுமூகமான உறவு இல்லாத நிலையில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதில் பிரச்சனைகள் வருகின்றன. மக்கள் உண்மையான புள்ளிவிவரங்கள் தருவதில்லை. மேற்கண்ட அவைகள் அனைத்தும் தேசிய வருவாயை கணக்கீடு செய்வதில், புள்ளிவிபர சிக்கல்களாக அறியப்படுகின்றன.)

61) தேசிய வருவாய் கணக்கீடுகள் செய்வதில் சமூக கணக்கீடுகளாக கீழ்க்கண்டவற்றுள் எதன் பரிமாற்றங்கள் பதியப்படுகிறது?

A) நிறுவனங்களின் பரிமாற்றங்கள்

B) குடும்பங்களின் பரிமாற்றங்கள்

C) அரசு அமைப்புகளின் பரிமாற்றங்கள்

D) இவை அனைத்தின் பரிமாற்றங்களும்.

(குறிப்பு – சமூக கணக்கிடுதல் மூலமாகவும் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. சமூக கணக்கிடுதல் முறையில் நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு மற்றும் இது போன்ற அமைப்புகளின் பரிமாற்றங்கள் பதியப்பட்டு இவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளும் கண்டறியப்படுகின்றன.)

62) சமூக கணக்கிடுதல் முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்காணும் எந்த துறைகளாக பிரிக்கப்படுகிறது?

I. நிறுவனங்கள்

II. குடும்பங்கள்

III. அரசு

IV. வெளிநாட்டுக்கு வாணிபம்

V. மூலதன துறை

A) I, II, III மட்டும்

B) I, II, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சமூக கணக்கிடுதல் முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாக பிரிக்கப்படுகிறது. அவை நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிநாட்டு வாணிபம் மற்றும் மூலதன துறை என்பன ஆகும். தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதார பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம்.)

63) கீழ்க்கண்டவற்றுள் எது அரசு துறையில் உள்ள படி நிலைகள் ஆகும்?

I. கிராமம்

II. வட்டம்

III. மாவட்டம்

IV. மாநிலம்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அரசு துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. அரசு வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக நிதியை திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது. பாதுகாப்பு பொது சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுதான் அரசின் முக்கிய பணியாக உள்ளது.)

64) “அரசு என்பது ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள் ” என்று குறிப்பிட்டவர்கள் யார்?

I. எடி (Eddy)

II. பீகாக் (Peacock)

III. ரூதர் (Ruther)

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – எடி மற்றும் பீகாக் (Eddy and Peacock) கூற்றுப்படி “அரசு என்பது ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள்” என்பதாகும்.அரசு துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. அரசு வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக நிதியை திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது. பாதுகாப்பு பொது சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுதான் அரசின் முக்கிய பணியாக உள்ளது. பொது நிறுவனங்களான அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில்வே துறைகள் அரசு துறையாக சேர்க்கப்படாமல் நிறுவனங்களாக கருதப்படுகின்றன.)

65) கீழ்க்கண்ட வகைகளில் எது மூலதன துறையை சார்ந்தது அல்ல?

A) காப்பீட்டு நிறுவனம்

B) வங்கிகள்

C) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

D) நிதி நிறுவனங்கள்

(குறிப்பு – மூலதன துறை சேமிப்பையும், முதலீட்டையும் உள்ளடக்கியது ஆகும். காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பண பரிமாற்றங்கள் இவற்றுள் அடங்கும். மூலதனதுறை, நிறுவனங்களாக கருதப்படுவது இல்லை. மாறாக தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றன.)

66) கீழ்க்கண்ட வைகளில் எது வெளிநாட்டு வாணிபமாக கருதப்படுகிறது?

A) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கல் மூலம் கிடைக்கும் வருமானம்

B) வெளிநாட்டு கடன்கள்

C) வெளிநாட்டு மூலதன வருமானம்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மூலதனம் மற்றும் செலுத்துதல்கள் போன்றவை வெளிநாட்டு துறையாக கருதப்படுகிறது. குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து, கூலியைப் பெற்று, அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினை பெற்று பொருட்களை வாங்குகின்றது. எனவே அவை சமூக கணக்கீடுகளில் குடும்பங்கள் துறையில் வருகின்றன.)

67) GDP யில் துறைகளில் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரம் எத்தனை துறைகளாக பிரிக்கப்படுகிறது?

A) நான்கு துறைகளாக

B) மூன்று துறைகளாக

C) ஐந்து துறைகளாக

D) இரண்டு துறைகளாக

(குறிப்பு – GDP யில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை என பிரிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்த நாட்டின் தேசிய வருவாயில் பொறுத்தே அமைகிறது.GDP யில் தலைவீத வருமானம் மற்றும் அதன் ஆண்டு வளர்ச்சி வீதம் அடிப்படையில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் அளவிடப்படுகிறது.)

68) கீழ்காணும் கூற்றுகளில் எது?

கூற்று 1 – ஒரு நாட்டின் GDP அல்லது தலைவீத வருமானம் அதிகரித்தால் பொருளாதார நலனும் அதிகரிக்க வேண்டும்.

கூற்று 2 – அதிக தலைவீத வருமானம் உடைய நாடு நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனை பெற்றதாக இருக்கும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – அதிக தலைவீத வருமானம் உடைய நாடு நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனை பெற்றதாக இருக்கும்.ஆனால் ஒரு நாட்டின் GDP அல்லது தலைவீத வருமானம் அதிகரித்தால் பொருளாதார நலனும் அதிகரிக்க வேண்டும் என்பது இல்லை.)

69) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இயற்கை வளங்களான காற்று நீர் மற்றும் மண் போன்றவற்றை மாசுபடுத்தி அதிகமான GDP யை பெற்றால் பொருளாதார நலன் குறையும்.

கூற்று 2 – பொருட்கள் மற்றும் பணிகள் அளிப்பை பொது நலன் சார்ந்து உள்ளது. நுகர்வுப் பொருட்களை காட்டிலும், மூலதன பொருட்கள் அதிகமாக இருந்தால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் குறைவாக இருக்கும்

கூற்று 3 – ராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிப்பதால் தேசிய உற்பத்தி அதிகரித்தாலும் பொருளாதார நலன் குறையும்..

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பெண்களுக்கு வேலை வாய்ப்பை தருதல் மற்றும் உழைப்பாளர்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலமாக தலைவீத வருமானத்தை அதிகரிக்கலாம், ஆனால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்காது.மேற்கண்டவை அனைத்தும் பொருளாதார நலன் குறியீட்டெண்னாக தலைவீத தன்மானம் உள்ள போதிலும் உள்ள குறைகள் ஆகும்.)

70) PQLI (Physical Quality of Life Index) என்பதை கணக்கிட தேவையானவை கீழ்கண்டவற்றுள் எது?

I. மக்களின் வாழ்க்கை தரம்

II. மக்களின் வாழும் காலம்

III. மக்களின் கல்வியறிவு.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – PQLI என்பது பொருளாதார நலனில் கணக்கிடுவதில் முக்கிய குறியீட்டெண்ணாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், வாழும் காலம் மற்றும் கல்வி அறிவு போன்றவை PQLI ( physical quality of life index) உள்ளடங்கி இருக்கிறது.)

71) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – அதிகமான GDP யை அடைய வேண்டும் என்பதற்காக நாட்டின் இயற்கை வளங்கள் அதிக அளவில் அரிக்கப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன.

கூற்று 2 – தேசிய வருவாயை குறிப்பிடும் பணத்தின் மதிப்பை வைத்தும் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை அறியலாம்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – தேசிய வருவாயில் குறிப்பிடும் பணத்தின் மதிப்பை வைத்தும் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை அறியலாம். உதாரணத்திற்கு இந்திய தேசிய வருவாயை அமெரிக்க பணமான டாலரில் சொல்லவேண்டும். இதன் விளைவாக இந்திய வருமானம் மிகக்குறைவாக தோன்றலாம். ஆனால் வாங்கும் சக்தியின் அடிப்படையில் அளவிட்டால் இந்திய தேசிய வருமானம் அதிகமாக தோன்றும்.)

72) தேசிய வருவாய் பற்றிய புள்ளிவிவரத்தை பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) பொருளாதார வல்லுனர்கள் மற்றும் அரசு

B) பொருளாதார திட்டமிடுபவர்கள்

C) வியாபாரிகள் மற்றும் IMF

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை தேசிய வருவாய் விளக்குகிறது. பொருளாதார வல்லுனர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள் மற்றும் IMF, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய வருவாய் பற்றிய புள்ளிவிவரத்தை பயன்படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த புள்ளி விவரங்களை பகுத்தாய்வு செய்கின்றன.)

73) ஒரு தனிநபரின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) தனிநபர் வருமானம்

B) செலவிடக் கூடிய வருமானம்

C) தலை வீத வருமானம்

D) உண்மையான வருமானம்

(குறிப்பு – ஒரு நாட்டிலுள்ள தனிநபர்கள் நேர்முக வரி செலுத்துவதற்கு முன்பாக பெற்ற மொத்த வருமானம் தனிநபர் வருமானம் என அழைக்கப்படுகிறது. நேர்முக வரி செலுத்திய பிறகு தனிநபர்களின் நுகர்வு மற்றும் சேமிப்பைக் ஒட்டுமொத்தமாக பெறுவது செலவிடக் கூடிய வருமானம் ஆகும். ஒரு தனிநபரின் ஆண்டு சராசரி வருமானம் தலை வீத வருமானம் ஆகும்.)

74) கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை துறையாக கருதப்படுகிறது?

A) விவசாயம்

B) வியாபாரம்

C) தொழில்

D) பண்டமாற்று

(குறிப்பு – விவசாயம் என்பது முதன்மை துறை ஆகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான அனைத்து உற்பத்திப் பொருட்களையும், உருவாக்குதலின் காரணம் பொருட்டு விவசாயம் முதன்மை துறையாக கருதப்படுகிறது.)

75) ஒரு நாட்டின் ________________செயலை தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.

A) தொழில்

B) விவசாயம்

C) பொருளாதாரம்

D) நுகர்வு

(குறிப்பு – ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை தேசிய வருவாய் விளக்குகிறது. பொருளாதார நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி செய்யும் போது பல சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய கேடுகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய வருவாய் கணக்கிடும்போது இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!