Ethics Questions

திருவிழாக்கள் 11th Ethics Lesson 5 Questions

11th Ethics Lesson 5 Questions

5] திருவிழாக்கள்

1) திருவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் என்ன?

A) வழிபாடு

B) வீரம்

C) ஒற்றுமை

D) பொதுபோக்கு

விளக்கம்: விழாக்கள் என்பவை, சமுதாயத்தின் கூட்டுச் செயல்பாட்டையும் வளத்தையும் காட்டும் குறியீடுகள், மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்குவதே இதன் முதல் நோக்கமாகும். இவ்விழாக்கள் பண்பாட்டு மரபுகளையும் பாரம்பரிய அடையாளங்களையும் விளக்கும் வகையில் உள்ளன. இவ்விழாக்களை இயற்கை சார்ந்தவை, இனம் சார்ந்தவை, சமயம் சார்ந்தவை என வகைப்படுத்தலாம். விழாக்கள், ஒருமைப்பாட்டு உணர்வினை வளர்ப்பதற்கும், வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுகின்றன.

2) “மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வரணன் மேய பெருமணல் உலகமும்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) வில்லிபாரதம்

D) தொல்காப்பியம்

விளக்கம்: இப்பாடலில் தொல்காப்பியர் பாலை நிலம் தவிர நால்வகை நிலத்துக்குரிய தெயவங்களைக குறிப்பிடுள்ளார். அதனால், பாலைநில மக்கள் “கொற்றவையைத் தெய்வமாக வழிபடுகின்றனர்”

3) பொருத்துக.

அ. குறிஞ்சி – 1. கொற்றவை

ஆ. முல்லை – 2 வருணன்

இ. மருதம் – 3. இந்திரன்

ஈ. நெய்தல் – 4. திருமால்

உ. பாலை – 5. முருகன்

A) 5, 4, 3, 1, 2

B) 5, 4, 2, 1, 3

C) 5, 4, 3, 2, 1

D) 5, 3, 4, 2, 1

விளக்கம்: குறிஞ்சி – முருகன்

முல்லை – திருமால்

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை

4) பொருத்துக.

அ. குறிஞ்சி – 1. மணலும் மணல் சார்ந்த இடமும்

ஆ. முல்லை – 2 வயலும் வயல் சார்ந்த இடமும்

இ. மருதம் – 3. மலையும் மலை சார்ந்த இடமும்

ஈ. நெய்தல் – 4. காடும் காடு சாரந்த இடமும்

உ. பாலை – 5. கடலும் கடல் சார்ந்த இடமும்

A) 5, 4, 3, 2, 1

B) 3, 4, 5, 2, 1

C) 3, 4, 2, 1, 5

D) 3, 4, 2, 5, 1

விளக்கம்: குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை – மணலும் மணல் சார்ந்த இடமும்.

5) “வேலன்வெறியாட்டு விழா” எந்த இடத்தில் நடைபெற்றது?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்

விளக்கம்: இது குறிஞ்சிநில விழாவாகும். குறிஞ்சி நிலக் கடவுள், சேயோன், முருகன், வேலன் எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார். இந்நிலப்பகுதியில் வேலன்வெறியாட்டு விழா நடைபெற்ற செய்தியினைத் திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப்பாட்டு, ஐங்குநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் வழி அறிகின்றோம். குறிஞ்சி நிலப் பெண்களின் நோயினைத் தீர்ப்பதற்காக பாராய்கடனாக நிழ்த்தப்பட்டது.

6) வேலன்வெறியாட்டு விழா என்பது என்ன, அது எவ்வாறு நடைபெற்றது என்பதை கூறும் நூல் எது?

A) திருமுருகாற்றுப்படை

B) குறிஞ்சிப்பாட்டு

C) ஐங்குறுநூறு

D) பரிபாடல்

விளக்கம்: வேலன்வெறியாட்டின் பொழுது குறிஞ்சி நிலத்தவர் பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்துக்கொண்டு, கையில் வேலை ஏந்தி தன்மீது முருகக் கடவுள் ஏறியது போல ஆடுவர். இவ்விழா நடைபெறும் இடம் “வெறியாடுகளம்” எனப்படும். அங்கு சேவல் கொடி நடப்பட்டிருக்கும். பல வகையான நறுமணப்புகைகள் எழுப்பப்படும். பலவகையான இசைக்கருவிகள் இசைக்கப்படும் என இவ்விழாப் பற்றி பரிபாடல் கூறுகின்றது. இவ்விழாவின் போது, குறிஞ்சி நில மக்கள் தொண்டகப்பறை இசைக்க நடனமாடுவர். இதுவே, “குன்றக் குரவைக் கூத்து” எனப்பட்டது.

7) முல்லை நில மக்களின் முக்கிய தொழில் என்ன?

A) கிழங்கு அகழ்வது

B) கால்நடை வளர்ப்பு

C) வேளாண்மை

D) மீன் பிடித்தல்

விளக்கம்: காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும் முல்லை நிலமாகும். முல்லை நிலக்கடவுள் ‘மாயோன்’ ஆவார். இந்நில மக்களின் முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பு ஆகும்.

8) முல்லைநில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்ப மரத்தைத் தாய்த் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) அகநானூறு

C) ஐங்குறுநூறு

D) பரிபாடல்

விளக்கம்: முல்லைநில மக்கள் பால் சுரக்கும், மரமான வேப்ப மரத்தைத் தாய் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை அகநானூறு கூறியுள்ளது. இந்நிலப் பகுதியில் உடைமையான கால்நடைகளை எயினர்களிடமிருந்தும் வேடர்களிடமிருந்தும் வழிதவறினாலும் காப்பவர் கருப்பசாமி. இருண்ட கானகத்திற்கு உரியவர், கரிய நிறம் உடையவர் என்ற பொருளில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. இவர் ‘மயோன்’ எனவும் அழைக்கப்பட்டார். இதையே ‘மாயோர் மேய் காடுறை உலகம்’ என்று தொல்காப்பியம் கூறுகின்றது. ஆயர் குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் துன்பம் நேராமல் காக்கும்படி திருமாலைக்(மாயோனை) குரவைக் கூத்தாடி வழிபட்டனர். இவ்வழிபாடே “ஆய்ச்சியர் குரவை” ஆகும்.

9) ‘இந்திர விழா’ என்பது எது?

A) குறிஞ்சி நில விழா

B) முல்லை நில விழா

C) மருத நில விழா

D) பாலை நில விழா

விளக்கம்: மருத நிலத்தில் கொண்டாடப்படும், மிகப்பெரிய விழா ‘இந்திர விழா’பசி, பிணி, பகை போக்குவதற்காக இந்திரனை மக்கள் வழிபட்டனர்.

10) எந்த விழா சாதிப் பெருவிழா, தீவகசாந்தி என்றும் அழைக்கப்பட்டது?

A) வேலன் வெறியாட்டு விழா

B) ஆய்ச்சியர் குரவை

C) இந்திர விழா

D) நாவாய் விழா

விளக்கம்: மருத நில மக்களால் கொண்டாடப்படும் இந்திர விழா, சாந்திப்பெருவிழா, தீவகச்சாந்தி என்றும் அழைக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவூரெடுத்த காதையிலும், மணிமேகலையில் விழாவறை காதையிலும் இந்திர விழா நடைபெற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11) இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றது?

A) 24 நாட்கள்

B) 14 நாட்கள்

C) 28 நாட்கள்

D) 16 நாட்கள்

விளக்கம்: இந்திர விழா 28 நாட்கள் நடைபெற்றது. சமயக்கணக்கர், காலம் கணிப்போர். சான்றோர்கள், ஐம்பெரும் குழுவினர், எண்பேராயத்தினர் ஆகியோர் ஒன்றுகூடி இந்திரவிழா நடக்கும் நாளை முடிவு செய்வர்.

12) புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியினைக் கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) மதுரைகாஞ்சி

D) ஐங்குறுநூறு

விளக்கம்: நால்வகைப் படையினரும் சூழ்ந்து வர ‘இந்திரவிழா’ நடைபெறும் செய்தியினை முரசு அறைந்து மக்களுக்கு அறிவிப்பர். மக்கள் வீதிகளிலும் கோயில்களிலும் பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவை விளக்குகளும் வைத்தனர். வாழை, கரும்பு, கழுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி முதலானவற்றைக் கொண்டு நகரை அலங்கரித்தனர். வீதிகளிலும் மன்றங்களிலும், பழைய மணலை மாற்றிப் புதுமணல் பரப்பினர். தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைச் செய்தனர். விழா நாளில் பொது இடங்களில் சான்றோர், நல்லுரை ஆற்றினர். பட்டிமண்டபங்கள் நகரின் பல இடங்களில் ஆங்காங்கே நடைபெற்றன. இவ்வாறு புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியினைச் சிலப்பதிகாரம் கூறுகின்றன.

13) புகார் நகரில் மட்டுமல்லாமல் எந்த ஊரிலும் இந்திரவிழா நடைபெற்றதாகச் சின்னமனூர்ச் செப்பேடு தெரிவிக்கின்றது?

A) மதுரை

B) வஞ்சி

C) காஞ்சி

D) குமிலி

விளக்கம்: புகார் நகரில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திரவிழா நடைபெற்றதாகச் சின்னமனூர்ச் செப்பேடு தெரிவிக்கின்றது. ஐங்குறுநூற்றிலும் இந்திரவிழா பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

14) தொடித்தோட்செம்பினால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திரவிழா, விருந்தாட்டுவிழா ஆகிய பெயர்களில் குறிப்பிடும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) ஐங்குறுநூறு

D) சின்னமனூர்ச் செப்பேடு

விளக்கம்: தொடித்தோட்செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திரவிழா, விருந்தாட்டுவிழா ஆகிய பெயர்களில் மணிமேகலை குறிப்பிடுகின்றது. மருதநில மக்கள் போருக்குச் செல்லும் போது, தங்கள் அரசனை வாழ்த்தி விழாக் கொண்டாடுவர். இவ்விழாவில், தங்கள் வாளை உயர்த்திப் பிடித்துத் ‘தன்ணுமை’ என்னும் போர்ப்பறை ஒலிக்க ஆடியும் பாடியும் குரவை நிகழ்த்துவர்.

15) முந்நீர் விழா, நாவாய் விழா போன்றவை எந்நிலத்தில் கொண்டாடப்படும்?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்

விளக்கம்: கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இந்நிலத்துக்கு உரிய கடவுள் ‘வருணன்’. இந்நில மக்களால் கொண்டாடப்படும் விழா, முந்நீர் விழா, நாவாய் விழா என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

16) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியன் நெய்தல் விழாவினைக் கொண்டாடிய செய்தியினை எந்த நூலின் உரை கூறுகிறது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பதிற்றுப்பத்து

D) பரிபாடல்

விளக்கம்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியன் நெய்தல் விழா கொண்டாடிய செய்தியினையும், கரிகாலனின் முன்னோர் நாவாய்த் திருவிழா கொண்டாடிய செய்தியினையும் புறநானூற்று உரையின் மூலம் அறியலாம்.

17) வருணனுக்கு நெய்தல் நில மக்கள் எதை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்?

A) முத்து

B) வலம்புரிச்சங்கு

C) A மற்றும் B

D) பவளம்

விளக்கம்: வருணன்-மேகம், கடல், ஆறு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டமையால், இவர் நீர்க்கடவுளாக அறியப்பட்டார். இவரை, உலகம் முழுவதும் பரந்து இருப்பவர், உலகத்தையே ஆள்பவர் என்றும் கூறுவர். நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.

18) குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்த _________ நிலம் என்று அழைக்கப்படும்?

A) மருதம்

B) நெய்தல்

C) பாலை

D) B மற்றும் C

விளக்கம்: குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் பாலை எனப்பட்டது. கொற்றம் என்றால் வெற்றி. இந்நில மக்கள், வெற்றியைத் தருபவள் என்ற பொருளில் ‘கொற்றவை’ என்னும் பெண்தெய்வத்தை வழிபட்டனர்.

19) எந்த நூல் ‘சாலினி’ என்ற தெய்வம் ஏறப்பட்ட பெண்ணிற்குக் கொற்றவையின் கோலம் புனையப்பட்ட செய்தியைக் கூறுகிறது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) மகாபாரதம்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் ‘சாலினி’ என்ற தெய்வம், ஏற்றப்பட்ட பெண்ணிற்குக் கொற்றவையின் கோலம் புனையப்பட்டது. இவ்வாறு கொற்றவையைப் போலவே அலங்கரிக்கப்பட்ட சாலினியை மான்மீது அமரச்செய்து உலாவரச் செய்தனர். அவ்வாறு உலா வரும்போது காணிக்கைப் பொருள்களுடன் பெண்கள் பின்தொடர்ந்தனர். வழிப்பறியின் போது கொட்டும் பறை, சூறையாடும்போது ஊதப்படும் கொம்பு, புல்லாங்குழல் போன்றவை அச்சமயத்தில் இசைக்கப்பட்டன. இவ்வாறு பாலை நில மக்கள் தங்கள் நிலக்கடவுளான கொற்றவைக்கு விழா எடுத்தனர்.

20) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழர் பண்பாட்டின் உயரிய விழுமியமான வீரக்கை அடிப்படையாகக் கொண்டதே நடுகல் வழிபாடு.

2. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைந்த வீரனது உடலை அடக்கம் செய்யும் முன், அவன் பயன்படுத்திய போர்கருவிகளையும், பொருள்களையும் புதை குழியிலேயே அடக்கம் செய்தனர். பிறகு அவ்விடத்தில் ஒரு கல்லை நட்டனர். இது நடுகல் எனப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நடுகல்லின் மீது அவ்வீரனது உருவம், பெயர், வீரம், புகழ், தியாகம் போன்றவற்றைப் பொறித்தனர். மேலும், அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபட்டனர். தற்போதும் கிராமங்களிலும் மக்கள் வழிபடும் காவல் தெய்வங்களை இந்நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகக் கருதலாம்.

21) “மேலோர் வினவும் நூல்நெறிமாக்கள்

பாலம்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) பெருங்கதை

D) மகாபாரதம்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில், நாடுகாண்காதையில், கண்ணகிக்காகப் பத்தினிக் கோட்டம் அமைக்கப்பட்டதை,

“மேலோர் வினவும் நூல்நெறிமாக்கள்

பாலம்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” என்று குறிப்பிடப்படுவதிலிருந்து பத்தினை வழிபாட்டின் தொன்மையை அறியலாம்.

22) பத்தினி வழிபாடு என்பது யார் வழிபாட்டையே குறிப்பிடுகிறது?

A) சீதை

B) ராதை

C) கண்ணகி

D) பாஞ்சாலி

விளக்கம்: பத்தினை வழிபாடு என்பது கண்ணகி வழிபாட்டைக் குறிப்பிடுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களால் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

23) கண்ணகி எந்த நாட்டில் பத்தினித் தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்படுகிறார்?

A) சேரநாடு

B) சோழநாடு

C) பாண்டிய நாடு

D) கொங்கு நாடு

விளக்கம்: சிலப்பதிகாரத்தின் காப்பியத் தலைவி, பொய்யான குற்றச்சாட்டின் மூலம் தனது கணவன் கோவலன் கொலைத் தண்டணைக்கு உட்பட்டதை அறிந்து சினமுற்றாள். பாண்டிய அரசனான நெடுஞ்செழியனிடம் வாதிட்டு, தன் கனவன் குற்றமற்றவன் என்பதை நிலைநாட்டினாள். அரசனின் பிழையால் சீற்றம் அடைந்து கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரையே எரித்தாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கண்ணகி சோழ நாட்டில் பிறந்தார். பாண்டிய நாட்டில் பத்தினி தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்படுகிறார்.

24) பாவை நோன்பு எந்த தமிழ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

A) தை

B) மாசி

C) மார்கழி

D ) ஆடி

விளக்கம்: மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்பர். இது ‘மார்கழி நோன்பு’ என்றழைக்கப்படும். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ யையும், மாணிக்கவாசகர் அருளிய ‘திருவெம்பாவை’ யையும் பாடி இறைவனை வழிபடுவர்.

25) கண்ணிப்பெண்கள், நல்ல கணவன் கிடைக்க வேண்டுமெனவும், மணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டுமெனவும் விரதம் மேற்கொள்ளும் நோன்பு எது?

A) ஆடிப்பெருக்கு

B) பாவை நோன்பு

C) மகாசிவராத்திரி

D) ஆதிரைத் திருவிழா

விளக்கம்: இந்நோன்பு பழங்காலந்தொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும், மழை பெய்து நாடு செழிக்கவும், மக்கள் வளமுடன் நோய் நொடியின்றி வாழவும், பசு மற்றும் கால்நடைகள் சிறக்கவும் வேண்டி, ஆண்டாளும் மாணிக்கவாசகர் பெருமானும் பாடிய பாடல்களைப் பாடுவர்.

26) பாவை நோன்பு இருப்பவர்கள் தம்மை அழகுப்படுத்திக் கொள்ளாமல், இறைவனை நினைத்து நோன்பு இருந்தது, தங்களால் இயன்றளவு தானமும், தருமமும் செய்து அறவழி நிற்பர் என திருப்பாவையின் எத்தனையாவது பாடல் கூறுகிறது?

A) முதல் பாடல்

B) இரண்டாம் பாடல்

C) மூன்றாம் பாடல்

D) நான்காம் பாடல்

விளக்கம்: பாவை நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, உணவு உண்ணாமல், மலர் சூடாமல், தம்மை அழகுப்படுத்திக் கொள்ளாமல், இறைவனை நினைத்து நோன்பு இருந்து, தங்களால் இயன்றளவு தானமும், தருமமும் செய்து அறவழியில் நிற்பர் எனத் திருப்பாவை இரண்டாம் பாடல் கூறுகிறது.

27) எந்த விழா, உலகில் வாழும், தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது?

A) சித்திரைத் திருவிழா

B) மகா மகத்திருவிழா

C) தீபத்திருவிழா

D) பொங்கல் திருவிழா

விளக்கம்: பொங்கல் விழா, உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயம் செழிக்கவும், விளைச்சல் பெருகவும், கதிரவனே முதன்மைக் காரணமாக விளங்கின்றார். எனவே, உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

28) பொங்கல் விழா எத்தனை நாட்கள் கொண்டாடப்படும்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: போகி, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் விழா 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

29) போகிப் பண்டிகை எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) தை 1

B) தை 2

C) தை கடைசி நாள்

D) மார்கழி கடைசி நாள்

விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பயனற்ற பழைய பொருள்களையும், மனித மனத்தில் உள்ள தேவையில்லாத எண்ணங்களையும் போக்குவதே போகிப்பண்டிகையின் நோக்கமாகும். இப்பண்டிகை, நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, வீட்டின் தலைவாசல் உள்ளிட்ட நிலைக்கதவுகளுக்கு மஞ்சளும், சந்தனமும் பூசுவர். அன்றைய மாலைப்பொழுதில் வாசற்கூரையில் வேப்பிளை, புளைப்பூ, ஆவாரம் பூ ஆகியவற்றைக் கொண்டு காப்புக் கட்டுவர்.

30) உழவர் பெருமக்கள் எந்த மாதத்தில் விதைத்த பயிர்களைத் ‘தை’ மாதம் அறுவடை செய்வர்?

A) வைகாசி

B) ஆடி

C) ஐப்பசி

D) கார்த்திகை

விளக்கம்: உழவர் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களைத் தை மாதம் அறுவடை செய்வர். முதல் விளைச்சலை கதிரவனுக்குக் காணிக்கையாகப் படைப்பதே பொங்கல் திருவிழா ஆகும். பொங்கல் அன்று பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்துமே, புதியனவாக இருக்க வேண்டும் என்பதற்காகப் புதிய, கற்களாலான அடுப்பு, புதிய மண்பானை, புதிய அகப்பை, தூய பசு சாணத்தலான வறட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவர்.

31) ‘ஜல்லிக்கட்டு’ விழா எந்த நாள் நடைபெறும்?

A) மார்கழி கடைசி நாள்

B) தை 1

C) தை 2

D) தை 3

விளக்கம்: மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரித்து அவற்றுக்குப் பொங்கலைக் கொடுத்து மகிழ்வர். இதனைத்தொடர்ந்து மலையில் மஞ்சுவிரட்டு எனப்படும் “ஜல்லிக்கட்டு விழா” நடைபெறும். அப்பொழுது இளைஞர்கள் காளைகளை அடக்கித் தமது வீரத்தை வெளிப்படுத்துவர். உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

32) “கொல்லேற்றுக் கோடஞ்வானே மறுமையும் புல்லாலே ஆயமகள்” என்ற சங்க இலக்கியப் பாடல் எந்த வீர விளையாட்டைப் பற்றிக் கூறுகிறது?

A) ஜல்லிக்கட்டு

B) சடுகுடு

C) உரிமரம் ஏறுதல்

D) கில்லி

விளக்கம்: “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்” என்ற சங்க இலக்கிய பாடல் மூலம் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டின் தொன்மையை அறியலாம்.

33) பழங்காலத்தில் எவை தமது செல்வத்தின் அடையாளமாகத் திகழ்ந்தன?

A) ஆடு

B) பசு

C) எருது

D) கால்நடைகள்

விளக்கம்: பழங்காலத்தில் கால்நடைகளே நமது, செல்வங்களின் அடையாளமாக திகழ்ந்தன. “ஆயிரம் பசுவுடைய, கோ நாயகர்” என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.

34) “ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கின்றது” என்று கூறியவர் யார்?

A) கம்பர்

B) கபிலர்

C) வள்ளுவர்

D) நக்கீரர்

விளக்கம்: “ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கிறது” என்று திருவள்ளுவர் கூறுகிறார். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே. இதன் மூலம் மாடுகளை உழவர்கள் உயிர்ப்போடு வைத்துள்ளனர் என்று கூறினாலும் மிகையாகாது.

35) எந்த நாள் பகையை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது?

A) பொங்கல் திருநாள்

B) மாட்டுப் பொங்கல்

C) காணும் பொங்கல்

D) போகி நாள்

விளக்கம்: காணும் பொங்கல், பகையை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நாளாகும். அன்றைய தினம் மக்கள் தமது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள பெரியவர்களை வணங்கி, வாழ்த்துப்பெறும் நாளாகும். இவ்விழா நாளில் பட்டிமன்றங்கள் நடத்தியும், பாரம்பரிய விளையாட்;டுகள் விளையாடியும் மகிழ்வார்கள். இவ்வாறு பண்டைய காலம் முதல் இன்று வரை பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும் சிறப்பான முறையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

36) சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா எது?

A) சித்திரைத் திருவிழா

B) ஆடிப்பெருக்கு

C) மகா மகத்திருவிழா

D) மகாசிவராத்திரி

விளக்கம்: சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா. சைவ சமய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணமும், வைணவ சமய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் ஒன்றாக நடைபெறும். திருமலை நாயக்கர் காலத்தில் இவ்விரு சமய விழாக்களும் ஒன்றாக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டன.

37) சித்திரைத் திருவிழா எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) வளர்பிறை 5ம் நாள்

B) தேய்பிறை 4ம் நாள்

C) தேய்பிறை 5ம் நாள்

D) வளர்பிறை 4ம் நாள்

விளக்கம்: சித்திரை மாதம் வளர்பிறை 5ம் நாள் இவ்விழா தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

38) ஆடி மாதத்தில் பெய்யும் எந்த பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ‘ஆடிப்பெருக்கு’ என்று கூறுவர்?

A) வடகிழக்கு

B) தென்மேற்கு

C) சூறாவளி மழை

D) A மற்றும் B

விளக்கம்: ஆடி மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ‘ஆடிப்பெருக்கு’ என்று கூறுவர். காவிரி பாயும் பகுதிகளில் வாழும் மக்கள் காவிரியாற்றை அன்னையாகவும் தெய்வமாகம் வழிபடுவர். அதற்காக வற்றாத நதிகளைக் கடவுகளாகப் போற்றி மகிழ்ந்து, வழிபட்டு உழவு வேலையைத் தொடங்குவார்கள் என்ற பழமொழி உருவானது. இப்பகுதிகளில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று ‘ஆடிப் பெருக்கு’ கொண்டாடப்படுகிறது.

39) மாசி மாதத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும்போது, மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாள் என்ன நாள்?

A) மகா சிவராத்திரி

B) மகா மகத்திருவிழா

C) ஆதிரைத் திருவிழா

D) வைகுண்ட திருவிழா

விளக்கம்: மாசி மாதத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசிமகம் ஆகும். நவகிரகங்களில் குரு ஓர் இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு இடம்பெயரே ஒரு வருடம் ஆகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் குரு பெயர்ச்சி விழாவும், மாசிமக விழாவும் நடைபெறுகிறது. இதுபோலவே, 12 இராசிகளையும் குரு கடந்து வர 12 ஆண்டுகளாகும். ஆகவேதான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகம் ‘மகாமகம்’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் புனித இடங்களில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். எனவே, கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி அன்று பக்தர்கள் புனித நீராடுகின்றனர். மேலும், வடநாட்டில் நடைபெறும் ‘கும்பமேளா’வைப் போன்று ‘தென்னகத்தின் கும்பமேளா’ என்றும் அழைப்பர்.

40) ‘மகாசிவராத்திரி’ விழா ஒவ்வொர் ஆண்டும் எந்த மாதத்தில நடைபெறும்?

A) சித்திரை

B) வைகாசி

C) மாசி

D) பங்குனி

விளக்கம்: ‘மகாசிவராத்திரி’ விழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவர். அன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளிலும் சிவபுராணங்களைப் பாட வேண்டும். மேலும், ஒரு வருடத்தில் 12 மாதங்களிலும் வரும் சிவராத்திரியில் மாசி மாதத்து சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ ஆகும்.

41) ‘விநாயகர் சதுர்த்தி’ தமிழ் மாத்தில் கொண்டாடப்படுகிறது?

A) ஆடி

B) ஆவணி

C) மாசி

D) வைகாசி

விளக்கம்: ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஆலயங்களிலும், ஆலயமில்லாத இடங்களிலும், வீடுகளிலும் கொண்டாடுவர். ஆலயமில்லாத இடங்களிலும் தற்காலிகமாகக் களிமண்ணால் ஆன விநாயகர் உருவம் செய்து வழிபடுவர். இவ்விழாவை வட இந்தியாவில் ‘கணேஷ்சதுர்த்தி’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

42) நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய இயற்கைப் பொருள்களைப் பெரும் ஆற்றலாகக் கருதி மக்கள் வழிபட்ட வந்தததன் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் விழா எது?

A) தீபத்திருவிழா

B) ஆதிரைத் திருவிழா

C) மகாசிவராத்திரி

D) விநாயகர் சதுர்த்தி

விளக்கம்: கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதுவே, கார்த்திகைத் திருவிழாவாகும். இவ்விழா தொன்றுதொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றி இறைவனை ஒளி வடிவில் வழிபடும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கைப் பொருள்களைப் பெரும் ஆற்றலாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்ததன் தொடர்ச்சியாகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது.

43) “ஆநிரைத் திருவிழா” எந்த தமிழ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

A) கார்த்திகை

B) மார்கழி

C) தை

D) மாசி

விளக்கம்: திருவாதிரை என்பது, ஆண்டுதோறும் மார்கழி மாத முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவினைப் பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்திலும், சம்பந்தர், நாவுக்கரசர் தேவராத்திலும் பாடியுள்ளனர். சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, உத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருமுல்லைவாயில் போன்ற புகழ்பெற்ற சிவத்தலங்களில் திருவாதிரை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

44) திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு எதைப் படைத்துக் பக்தர்களுக்கும் வழங்குவர்?

A) பொங்கல்

B) தயிர்சாதம்

C) களி

D) அனைத்தும்

விளக்கம்: திருவாதிரை அன்று சிவபெருமானுக்குக் “களி”யைப் படைத்துப் பக்தர்களுக்கும் வழங்குவர். இதனால், ‘திருவாதிரைக் களி’ என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. மேலும், சிதம்பரம் கோயிலில் இறைவனை ஆடல் கோலத்தில் கண்டு வழிபடுவர். கோயிலில் இறைவனை ஆடல் கோலத்தில் கண்டு வழிபடுவர்.

45) சிவபெருமானுக்குரிய சபைகள் எத்தனை?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: சிவபெருமானுக்கு பொற்சபை, வெள்ளிசபை, இரத்தினைச்சபை, தாமிரசபை, சித்திரசபை ஆகிய 5 சபைகள் உரியது.

46) பொருத்துக.

அ. பொற்சபை – 1. மதுரை

ஆ. வெள்ளிசபை – 2. சிதம்பரம்

இ. இரத்தினைசபை – 3. குற்றாலம்

ஈ. தாமிரசபை – 4. திருவலங்காடு

உ. சித்திரசபை – 5. திருநெல்வேலி

A) 1, 5, 4, 3, 2

B) 3, 4, 2, 5, 1

C) 2, 1, 4, 5, 3

D) 2, 5, 4, 1, 3

விளக்கம்: பொற்சபை – சிதம்பரம்

வெள்ளிசபை – மதுரை

இரத்தினசபை – திருவாலங்காடு

தாமிரசபை – திருநெல்வேலி

சித்திரசபை – குற்றாலம்.

47) பொருத்துக.

அ. நடராஜர் கோயில் – 1. குற்றலாம்

ஆ. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் – 2. திருநெல்வேலி

இ. வடவாரண்யேசுவரர் கோயில் – 3. திருவாலங்காடு

ஈ. நெல்லையப்பர் கோயில் – 4. மதுரை

உ. குற்றாலநாதர் கோயில் – 5. சிதம்பரம்

A) 5, 4, 3, 2, 1

B) 5, 3, 4, 2, 1

C) 5, 4, 2, 3, 1

D) 5, 2, 4, 3, 1

விளக்கம்: சிவபெருமானுக்குரிய 5 சபைகள்:

1. பொற்சபை (நடராஜர் கோயில்) – சிதம்பரம்

2. வெள்ளிசபை (மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்) – மதுரை

3. இரத்தினசபை (வடவாரண்யேசுவரர்) – திருவாலங்காடு

4. தாமிரசபை (நெல்லையப்பர்) – திருநெல்வேலி

5. சித்திரசபை (குற்றாலநாதர் கோயில்) – குற்றாலம்.

48) மார்கழி மாதம் வளர்பிறை எத்தனையாவது நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்?

A) 5-வது நாள்

B) 7-வது நாள்

C) 9-வது நாள்

D) 11-வது நாள்

விளக்கம்: மார்கழி மாதம் வளர்பிறை 11-ம் நாள் ‘வைகுண்ட ஏகாதசி’ ஆகும். இது வைணவர்கள் மற்றும் திருமாலை வழிபடுபவர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

49) திருவோணம் திருவிழா எந்த தமிழ் மாதம் கொண்டாடப்படுகிறது?

A) புரட்டாசி

B) மார்கழி

C) ஆவணி

D) ஆனி

விளக்கம்: திருமாலின் பிறந்தநாளான ஆவணி மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் விழா திருவோணம் ஆகும். இது திருமாலுக்கு உகந்த நாளாக் கருதப்படுவதால் அந்நாளில் மக்கள் பல கோயில்களுக்கும் சென்று திருமாலை வழிபடுவர். இந்நாளில், மகாபலி மன்னர் வருவதாகக் கருதி மக்கள் வீதிகளிலும் வீட்டின் முற்றத்திலும், பல வண்ணப்பொடிகளால் பெரிய கோலங்களைப் போட்டு அவரை வரவேற்பர். இதை ‘அத்திப்பூ’ என்றழைப்பர். இவ்விழாவைப் பற்றிய செய்திகளை மதுரைக்காஞ்சியிலும், தேவாரத்திலும், நாலாயிரத்திவ்விப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளன.

50) பிரித்தெழுதுக. தீபாவளி

A) தீபம்+ஒளி

B) தீபம்+வளி

C) தீபம்+ஆவளி

D) எதுவுமில்லை

விளக்கம்: தீபாவளி என்றால்(தீபம்+ஆவளி) ‘தீபங்களின் வரிசை’என்பது பொருள். இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளித் திருநாளாகும். இத்திருநாளன்று மக்கள் அதிகாலையில் எண்ணெய்த் தேய்த்துக் குளித்து, வீடு முழுவதும் விளக்கேற்றிப் பூஜை செய்து, பட்டாசுகள் வைத்துப் புத்;தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படுகின்றனர். வட இந்தியாவில் இத்திருநாளைத் தீபஒளித் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

51) வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றைத் தரும் முப்பெரும் கடவுளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரைப் போற்றி வணங்கும் விழா எது?

A) அம்மன் திருவிழா

B) மகாசிவராத்திரி விழா

C) நவராத்திரி விழா

D) ஆதிரைத் திருவிழா

விளக்கம்: நவராத்திரி என்பதற்கு 9 இரவுகள் என்பது பொருளாகும். இவ்விழா புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பின்வரும் 9 நாள்களும் கொண்டாடப்படுகிறது. 9-வது நாள் நடக்கும் வழிபாடு கலைமகளுக்கு உரியதாகக் கருதி புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் பல தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து வழிபடுவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கருத்தில் மக்கள் தமது தொழிலைப் போற்றிக் கொண்டாடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

52) நவராத்திரி விழாவின் எத்தனையாவது நாள் ‘விஜயதசமி’ கொண்டாடப்படுகிறது?

A) 5ம் நாள்

B) 9-ம் நாள்

C) 10-ம் நாள்

D) 12-ம் நாள்

விளக்கம்: பத்தாம் நாள் விழாவாக ‘விஜயதசமி’ கொண்டாடப்படுகிறது. விஜயதசமி என்றால் ‘வெற்றியைத் தருகின்ற நாள்’ என்பது பொருள். அன்று குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கையாகும். வடதமிழ்நாட்டிலும், தென்னாட்டிலும் உள்ள எல்லா ஆலயங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

53) எந்த மாவட்டத்தில் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது?

A) ஈரோடு

B) கோவை

C) கரூர்

D) சேலம்

விளக்கம்: அம்மன் வழிபாடானது, ஊர்தோறும் நடைபெறும் முக்கிய வழிபாடாகும். மாரி என்றால் மழை, கோடைகாலத்தில் மக்களுக்கு அம்மை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்நோய்கள் வராமல் தடுப்பதற்காக மழைதர வேண்டி மாரியம்மனுக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர்.

54) மாரியம்மனுக்கு ‘தலவிருட்சம்’ எது?

A) அரசமரம்

B) ஆலமரம்

C) வேம்பு

D) வன்னிமரம்

விளக்கம்: பலநோய்களுக்கு மருந்தாக உள்ள வேப்பமரமே மாரியம்மனுக்கான ‘தலவிருச்சமாகும்’. இவ்விழா, காப்புக் கட்டுதல் தொடங்கி 7 நாள்முதல், 15 நாள்வரை நடைபெறும். பூவோடு எடுத்தல், பூவாரி கொட்டுதல், அலகு குத்துதல், சாட்டை அடித்தல், மொட்டை அடித்தல், மாவிளக்கு எடுத்தல், தீமிதித்தல் போன்றவை மாரியம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஆகும். ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியம்மன் கோயில் தீமித் திருவிழா குறிப்பிபடத்தக்கதாகும். இவ்விழா, மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவடையும். இவ்விழா, கிரமங்கள்தோறும் உள்ள மக்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

55) சிவத் தலங்களில் அம்மனுக்கும், திருவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கொண்டாடப்படும் விழா எது?

A) அம்மன் விழா

B) ஆடிப்பூரம்

C) நவராத்திரி

D) நாட்டார் விழா

விளக்கம்: அம்மனுக்கு உகந்த திருநாள்களில் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூரத்திருநாள் மிகவும் சிறப்புடையது. சிவத் தலங்களில் அம்மனுக்கும், திருவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து ஆடிக்கூழ் படைத்து இவ்விழாவை மக்கள் கொண்டாடுகின்றனர்.

56) கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?

A) மாரியம்மன்

B) முப்பெரும் தேவியர்

C) முருகன்

D) நாட்டார் தெய்வங்கள்

விளக்கம்: நாட்டார் தெய்வங்கள் கிராம மக்களால் வணங்கப்படுபவை ஆகும். இவை சிறு தெய்வங்கள், கிராம தேவதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டார் தெய்வ வழிபாடுகள் கிராம மக்களின் பண்பாட்டுடனும் பழக்க வழக்கங்களுடனும் ஒன்றிணைந்தவையாக உள்ளன. பெண்ணியம்மன், போத்திராஜா அண்ணமார், அய்யனார், காத்தவராயன், நாடியம்மன், கருப்பசாமி, சுடலைமான், இசக்கியம்மன் போன்ற பல்வேறு நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்கள் முன்னோர்களாகவே கருதுவர். இவ்விழாக்கள் மூலம் நாட்டுப்புறக் கலைகள் உயிர்த்திருக்க இவ்விழாக்கள் பேருதவி புரிகின்றன.

57) தமிழ்க் கடவுள் எனப்படும் தெய்வம் எது?

A) சிவபெருமான்

B) திருமால்

C) முருகன்

D) முனியப்பன்

விளக்கம்: தமிழ்க்கடவுளாக முருகனை வணங்கும் விழாவை கந்த சஷ்டி விரத விழா ஆகும். ஐப்பசி மாதம் வளர்பிறை 6-ம் நாள் சஷ்டியே ‘கந்த சஷ்டி’ விழாவாகும். முருகப்பெருமான் அரக்கனை ஒடுக்கப் போர் புரிந்த நிகழ்வையே கந்த சஷ்டி என்கிறோம்.

58) ‘வைகாசி விசாகம்’ எந்த தெய்வத்திற்காக கொண்டாடப்படுகிறது?

A) சிவபெருமான்

B) திருமால்

C) முருகன்

D) முனியப்பன்

விளக்கம்: வைகாசி மாத முழுநிலவு நாளில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் இவ்விழா நடைபெறுகிறது.

59) முருகனின் திருமண நாளாகக் கொண்டாடப்படும் விழா எது?

A) வைகாசி விசாகம்

B) பங்குனி உத்திரம்

C) ஆடிக்கிருத்திகை

D) கந்தசஷ்டி

விளக்கம்: பங்குனி உத்திரம் என்பது, பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இது முருகனின் திருமணநாளாகக் கருதப்படும்.

60) ஆடிக்கிருத்திகை எந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?

A) திருப்பதி

B) திருத்தணி

C) பழனி

D) திருப்பரங்குன்றம்

விளக்கம்: ஆடி மாதம் காரத்திகை நட்சத்திரத்தை முருகனுக்குரிய நாளாகக் கருதி வழிபடுவர். இந்நாளன்று, அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

61) ‘திருவேரகம்’ என்பது எந்த ஆறுபடை வீட்டைக் குறிக்கும்?

A) திருப்பரங்குன்றம்

B) பழனி

C) சுவாமிமலை

D) திருத்தணி

விளக்கம்: முருகனுக்குரிய அறுபடை வீடுகள்:

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்

3. திருவாவினன்குடி (பழனி)

4. திருவேரகம் (சுவாமி மலை)

5. திருத்தணி (குன்றுதோறாடல்)

6. பழமுதிர்சோலை

62) 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் எந்த நாளில் கோயிலில் தோரோட்டம் நடைபெறும்?

A) இறுதிநாளில் மஞ்சள் நீராட்டு அன்று

B) இறுதிநாளில் மஞ்சள் நீராட்டுக்கு முதல் நாள்

C) 5-ம் நாள்

D) 8-ம் நாள்

விளக்கம்: 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் இறுதி நாளில் மஞ்சள் நீராட்டிற்கு முதல் நாள் தேரோட்டம் நடைபெறும். முதன்மைத் தெய்வத்திற்குப் பெரிய தேரும், பிற தெய்வங்களுக்குச் சிறிய தேரும் ஆகும்.

63) ஆசியாவிலேயே மிக உயரமான தேர் எது?

A) திருவாரூர் தியாகராசப் பெருமாள் கோயில் தேர்

B) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேர்

C) மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர்

D) சிதம்பரம் நடராஜர் கோயில் தெரு

விளக்கம்: திருவாரூரில் தியாகராசப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமைக்கு உரியது. இத்தேர் 96அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது. நான்கு நிலைகளைக் கொண்டதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் இக்கோயிலின் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.

64) கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என அழைக்கப்படுவது எது?

A) ஸ்ரீரங்கம்

B) மதுரை

C) இராமேஸ்வரம்

D) வேளர்கண்ணி

விளக்கம்: கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுவது வேளாங்கண்ணி ஆகும். வேளாங்கண்ணிமாதா தேர்த்திருவிழா அனைத்து சமய மக்களும் கலந்து கொள்ளும் ஒரு விழாவாகும்.

65) நடமாடும் கலைக்கருவூலமாகத் திகழ்வது எது?

A) நாட்டிய மங்கை

B) கோயில்

C) தேர்

D) A மற்றும் C

விளக்கம்: இராமாயணம், மகாரபாரதம் போன்ற புராணக்கதைகளையும், சமுதாயத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் சிற்பங்களாகச் செதுக்கித் தேரை அழகுப்படுத்துவர். எனவே, தேர் என்பது நடமாடும் கலைக்கருவூலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் திருவாரூர், பழனி, அவினாசி, திருவில்லிப்புத்தூர், சிதம்பரம், கும்பகோணம், மதுரை, திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

66) ஏசுபெருமான் எப்போது பிறந்தார்?

A) டிசம்பர் 20

B) டிசம்பர் 25

C) டிசம்பர் 15

D) டிசம்பர் 30

விளக்கம்: மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இறைத்தூதராக ஏசு பெருமானைக் கருதி வழிபடுவர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் நாட்டில் பெத்தலேகம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் ஏசு பெருமான் பிறந்தார். ஏசுபெருமான் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் நாள் உலக அளவில் கிருஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் மக்கள் தேவலாயங்களுக்குச் சென்று வழிபடுவர். கிறிஸ்துவர்கள் வீடுகள்தோறும், நட்சத்திர விளக்குகள் அமைத்தும் புத்தாடை அணிந்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்வர்.

67) ஏசு பெருமான் அடைந்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தமையையும் நினைவுகூறும் நிகழ்வு எது?

A) கிறிஸ்துமஸ்

B) புனித வெள்ளி

C) உயிர்ப்பு பெருவிழா

D) ஈஸ்டர்

விளக்கம்: புனிதவெள்ளி (Good friday) அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் கிறித்துவர்கள் இதனை அழைப்பர். ஏசு பெருமானைச் சிலுவையைச் சுமக்கச் செய்து, சவுக்கால் அடித்துக் கடைசியாக அதே சிலுவையில் அவரை அறைந்து கொடுமைப்படுத்தினர். மன்னின் ஆணைக்குப் பயந்த யூதேயா நாட்டு மக்கள், எதையுமே சொல்லமுடியாமல் வேதனையுடன் கண்ணீர விட்டனர். ஏசு பெருமான் அடைந்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தமையையும் நினைவுகூறும் நிகழ்வே ‘புனித வெள்ளி’ ஆகும். ஏசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட இந்நாளை கிறித்துவர்கள் நினைவு நாளாகக் கருதி வழிபடுகின்றனர்.

68) ஈஸ்டர் என்பது எதைக் குறிக்கும்?

A) கிறிஸ்துமஸ்

B) புனித வெள்ளி

C) மொகரம்

D) உயிர்ப்பு பெருவிழா

விளக்கம்: ஏசு பெருமான் இறப்பதற்கு முன்னர் ‘நான் மீண்டும் உயிர் பெற்று வருவேன்’ எனத் தமது சீடர்களுக்குச் சொல்லிச் சென்றார். சிலுவையில் கொடியவர்களால் உயிருடன் அறையப்பட்ட ஏசு பிரான், 3-ம் நாள் உயிர்பெற்று மக்களுக்கு ஆசியும், சீடர்களுக்கு அறிவுரையும் வழங்கி மீண்டும் மறைந்தார். அவர் உயிர்த்தெழுந்த மூன்றாவது நாளைப் ‘உயீர்ப்பு பெருவிழா’(ஈஸ்டர்) என்பர்.

69) இசுலாமிய நாள்காட்டி எது?

A) சூரிய நாட்காட்டி

B) சந்திர நாட்காட்டி

C) புனல் நாட்காட்டி

D) வளி நாட்காட்டி

விளக்கம்: இசுலாமிய நாட்காட்டி சந்திர நாட்காட்டியாகும். ‘மொகரம்’ என்ற மாதம் இசுலாமிய நாட்காட்டியின் (அரபு) மாதங்களில் முதல் மாதமாகும். இது இவர்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் சண்டைகள், புனிதப்போர்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனத் திருக்குரான் கூறுகின்றது. இப்பண்டிகை தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

70) ‘ஈகைத்திருநாள்’ எனப்படுவது எது?

A) மொகரம் பண்டிகை

B) ரமலான் பண்டிகை

C) பக்ரீத் பண்டிகை

D) எதுவுமில்லை

விளக்கம்: ரமலான் பண்டிகை ஈகைத் திருநாள். இதனை ஈத் பெருநாள் என்றும் அழைப்பர். ‘ஈத்’ என்னும் அரபுச் சொல்லிற்குத் ‘தடுத்து விடுவது’ என்பது பொருள். இந்நோன்பு தங்களைத் தீமைகளில் இருந்து தடுத்துக் காப்பதாக இசுலாமியர்கள் கருதுகிறார்கள். வைகறைப் பொழுதின் தொடக்கத்திலிருந்து பொழுது மறையும் வரை அல்லாவை நினைத்தபடி இசுலாமியர்கள் நோன்பு மேற்கொள்வர்.

71) ரம்ஜான் திருவிழா பற்றிய செய்திகளைப் பொருத்துக.

அ. முதல் பத்து நாள் நோன்பு – 1. மன்னிப்பு பெற

ஆ. இரண்டாம் பத்து நாள் நோன்பு – 2. ரம்ஜான்

இ. மூன்றாம் பத்து நாள் நோன்பு – 3. இறையருள் கிடைக்க

ஈ. இறுதி நாள் – 4. நரகத்திலிருந்து விடுதலை பெற

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 3, 1, 4, 2

D) 3, 4, 1, 2

விளக்கம்: ரம்ஜான் அல்லது ரமலான் நோன்பின் முதல் 10 நாள்கள் இறையருள் கிடைக்கவும், 2-வது 10 நாள்கள் இறைவனிடத்தில் மன்னிப்பைப் பெறுவதற்கும், 3வது 10 நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். இந்நோன்பின் இறுதி நாளே ரமலான் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

72) “துவ்ஹஜ்” என்பது இசுலாமியரின் நாட்காட்டியில் எத்தனையாவது மாதம்?

A) முதல் மாதம்

B) இரண்டாம் மாதம்

C) 12-ம் மாதம்

D) 10-ம் மாதம்

விளக்கம்: இசுலாமியர்களின் 12-வது மாதமான ‘துல்ஹஜ்’ என்ற மாதத்தில் பக்ரீத் பண்டிகை வருகின்றது. இசுலாமியர் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவிற்கு ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்பயணத்தால், தாம் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகர் போன்று புனிதமாகவும், தீமை நீங்கியவராகவும் திரும்பிவிடுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

73) யார் அல்லாவின் வீட்டிற்கு விருந்தாளியாகச் செல்கிறார்கள்?

A) ஹாஜிக்கள்

B) குர்பாணி

C) யூதர்கள்

D) அனைத்தும்

விளக்கம்: ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் ‘ஹாஜிக்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். ஹாஜிக்கள் அல்லாவின் வீட்டிற்கு விருந்தாளியாகச் செல்கிறார்கள். இப்பயணம் மேற்கொள்ள இயலாதவர்கள் ‘குர்பானி’ கொடுத்துப் பக்ரீத் தொழுகை செய்வார்கள்.

74) ‘மகாவீர் ஜெயந்தி’ என்பது எவ்வகை திருவிழா?

A) சைவத் திருவிழா

B) வைணவத் திருவிழா

C) சமணத் திருவிழா

D) பௌத்தத் திருவிழா

விளக்கம்: மகாவீரர் கி.மு(பொ.ஆ.மு). 546-இல் வைசாலி நாட்டில் ‘குண்டாகிராமம்’ என்னும் இடத்தில் பிறந்தார். அரச குமாரனாகிய இவர் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறித் தியானம் செய்து உயர்நிலையை அடைந்தார். இவர், தாம் கண்டறிந்த உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து நல்வழிப்படுத்தினார். இவர் அன்பு, அமைதி, அகிம்சை போன்ற நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். இவரது பிறந்த நாள் ‘மகாவீரர் ஜெயந்தி’ யாகக் கொண்டாடப்படுகிறது.

75) சமண சமயத்தின் எத்தனையாவது தீர்த்தங்கரரர் மகாவீரர்?

A) 18

B) 20

C) 22

D) 24

விளக்கம்: சமண சமயத்தில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார்.

76) சமண சமயப் பிரிவுகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சமண மதத்தில் திகம்பரர், சுவேதாம்பரர் என்ற இரு பிரிவுகள் உண்டு.

திகம்பரர் – திசைகளையே ஆடையாக அணிபவர்.

சுவேதாம்பரர் – வெண்ணிற ஆடை அணிபவர்

77) புத்தபூர்ணிமா எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

A) சித்திரை

B) வைகாசி

C) ஆனி

D) ஆடி

விளக்கம்: புத்தபூர்ணிமா வைகாசி மாதம் முழுநிலவு நாளில் உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நன்னாளில் நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள ‘லும்பினி’ என்னும் கிராமத்தில் அரச குடும்பத்தில் புத்தர் பிறந்தார். மக்கள் நலன் கருதிப் பெற்றோரையும் மனைவியையும் மகனையும் அரசாட்சியையும் துறந்தார்.

78) பௌத்தர்கள் புத்தபூர்ணிமா அன்று எந்த நிற ஆடையை அணிந்து பௌத்த சைத்தியங்களுக்குச் சென்று மலர்களைத் தூவி வழிபாடு செய்கின்றனர்?

A) காவி

B) வெண்மை

C) பச்சை

D) நீலம்

விளக்கம்: புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளான பெருந்துறவு, நிருவாண நிலை அடைந்தது, முதல் போதனையை நிகழ்த்தியது. பரிதிருவான நிலையை அடைந்தது என அனைத்தும் நிகழ்ந்த இந்நாளையே ‘புத்தபூர்ணிமா’ என்று பௌத்தர்கள் கொண்டாடி வருகின்றனர். பௌத்தர்கள் புத்தபூர்ணிமா அன்று வெண்ணிற ஆடை அணிந்து பௌத்த சைத்தியங்களுக்குச் சென்று மலர்களைத்தூவி வழிபாடு செய்கின்றனர்.

79) புத்த பூர்ணிமா எந்த இடத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது?

A) புத்தகயா, பீகார்.

B) சாரநாத், உத்திரப்பிரதேசம்

C) லக்னோ, உத்திரப்பிரதேசம்

D) A மற்றும் B

விளக்கம்: இவ்விழா பீகாரிலுள்ள புத்க கயாவிலும் உத்தரப்பிரதேசத்திலுள்ள சாரநாத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

80) புத்த பூர்ணிமா குறித்து எந்த காப்பியத்தில் செய்தி உள்ளது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: புத்த பெருமானின் இப்புனித நன்னாள் குறித்த செய்தி மணிமேகலை என்ற காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. அக்காப்பியத்தில் தீவதிலகை என்பாள், மணிமேகலையிடம் தன்னுடைய வரலாற்றைக் கூறியதோடு, ஆபுத்திரனையும், அமுதசுரபியையும் பற்றி எடுத்துரைத்துப் “பசிப்பிணி போக்கும் அமுதசுரபியானது பௌத்தர்களின் புனித நன்னாளான புத்த பூர்ணிமா அன்று மணிமேகலையிடம் வந்து சேரும்” என்றும் கூறுகின்றாள்.

81) ‘குருநானக் ஜெயந்தி’ யாரால் கொண்டாடப்படுகிறது?

A) கிறிஸ்துவர்

B) பௌத்தர்

C) சமணர்

D) சீக்கியர்

விளக்கம்: குருநானக் பிறந்த நாள் சீக்கியர்களால் ‘குருநானக் ஜெயந்தியாகக்’ கொண்டாடப்படுகிறது. குருநானக் லாகூருக்கு அருகேயுள்ள ‘தால்வண்டி’ என்ற கிராமத்தில் பிறந்தார். இளம்வயது முதலே இறையனுபவங்களில் திளைத்திருந்தார். தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றார். தொடக்கத்தில் பல்வேறு அருள்செயல்களை நிகழ்த்தி மக்களை நல்வழிப்படுத்தினார். ஆன்மீகக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார். மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தார். இவர் அன்புநெறியை வலியுறுத்தினார். இவரது அருளுரைகள் அடங்கிய புனித நூல் ‘ஆதிகிரந்தம்’ ஆகும்.

82) குருநானக் ஜெயந்திக்கு எத்தனை நாள்களுக்கு முன்பாக குருத்வாரங்களில் தொடர்ந்து 48 மணி நேரம் புனித நூலான ‘ஆதிகிரந்தம்’ வாசிக்கப்படும்?

A) ஒரு நாள் முன்பு

B) 2 நாள் முன்பு

C) 4 நாள் முன்பு

D) 6 நாள் முன்பு

விளக்கம்: குருநானக் ஜெயந்திக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே குருத்வாரங்களில் தொடர்ந்து 48 மணி நேரம் புனித நூலான ‘ஆதிகிரந்தம்’ வாசிக்கப்படும். குருநானக் பிறந்தநாள் அன்று அதிகாலை 4 மணி முதலே பக்திப்பாடல்களும், புனித உரைகளும் வாசிக்கப்பட்டு விழா தொடங்கும். அன்றைய நாள் முழுவதும் குருத்வாரங்களில் மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படும். இந்நாளில் உலகெங்கும் உள்ள சீக்கிய குருத்துவாரங்கள் வண்ண வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்படும்.

83) அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் யாருடைய புனிதத் தலமாகும்?

A) சீக்கியர்கள்

B) முகலாயர்கள்

C) இந்துக்கள்

D) கிறிஸ்துவர்கள்

விளக்கம்: அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத்தலமாகும். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த நாளில் சிறப்பு அணிவகுப்புகளும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். இறை வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைத்துச் சீக்கியர்களும் தமது வழக்கப்படி, தலைப்பாகை, வாள், புத்தாடை அணிவார்கள், பின்னர், ஊர்வலம் நடைபெறும். நீண்ட, பட்டை தீட்டப்பட்ட வாள்களை வைத்துக் கொண்டு, அதைச்சுற்றிப் பல்வேறு வீரதீரச் செயல்களைச் செய்துகொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள்.

84) பொருத்துக.

அ. நடுகல் வழிபாடு – 1. கேரளா

ஆ. சூரசம்ஹாரம் – 2. நேபாளம்

இ. திருவோணம் – 3. முருகன்

ஈ. சித்தார்த்தர் – 4. வீரர் வழிபாடு

A) 4, 3, 1, 2

B) 1, 2, 4, 3

C) 3, 2, 4, 1

D) 3, 4, 2, 1

விளக்கம்: நடுகல் வழிபாடு – வீரர் வழிபாடு

சூரசம்ஹாரம் – முருகன்

திருவோணம் – கேரளா

சித்தார்த்தர் – நேபாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!