Book Back QuestionsTnpsc

தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back Questions 10th Science Lesson 14

10th Science Lesson 14

14] தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அதிகாலைப் பொழுதில் புற்களின் மேல் பனித்துளிகள் போல நீர்த்துளிகளைப் பார்த்திருப்போம். தாவரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நீராவிப்போக்கின் வீதம் குறையும். உறிஞ்சப்படும் நீர் தாவரத்தின் வேரில் ஒரு அழுத்தத்தை உருவாக்கும். இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதற்கு நீர் வடிதல் (guttation) எனப்படும். இவ்வாறு நீர் வடிதல் ஒரு சிறப்பான துளை வழியாக வெளியேறுகிறது. இத்துளை நீர் சுரப்பி அல்லது ஹைடதோடு எனப்படும்.

பாலூட்டிகளின் RBC – யில் செல் நுண்ணுறுப்புகளும் உட்கருவும் காணப்படுவதில்லை ஏன்?

பாலூட்டிகளின் RBC-யில் உட்கரு இல்லாதிருப்பதினால் அச்செல்லானது இருபுறமும் குழிந்த அமைப்பைப் பெற்று, அதிகளவு ஆக்சிஜன் இணைவதற்கான மேற்பரப்பினைப் பெற்றுள்ளது. RBC-ல் மைட்டோகாண்ட்ரியா இல்லாதிருப்பதால் அதிக அளவு ஆக்சிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது. எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாதிருப்பதினால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று RBC எளிதாக ஊடுருவுகிறது.

அனீமியா: இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்.

லியூக்கோசைட்டோசிஸ்: இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

லியூக்கோபினியா: இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைதல்.

திராம்போசைட்டோபினியா: இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்.

வில்லியம் ஹார்வி (1628): நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கபடுகிறார். இவர் மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தினைக் கண்டறிந்தார்.

முதுகெலும்பிகளின் இதய அறைகள்:

இரண்டு அறைகள்: மீன்கள்

மூன்று அறைகள்: இருவாழ்விகள்

முழுமையுறா நான்கு அறைகள்: ஊர்வன

நான்கு அறைகள்: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் முதலை (ஊர்வன).

நியூ ரோஜெனிக் மற்றும் மையோஜெனிக் இதயத் துடிப்பு: நரம்புத் தூண்டலினால் நியூரோஜெனிக் இதயத்துடிப்பு உண்டாகிறது. இத்தூண்டல் இதயத்தின் அருகில் உள்ள நரம்பு முடிச்சினால் தூண்டப்படுகிறது. எ.கா. வளைதசைப்புழுக்கள், பெரும்பாலான கணுக்காலிகள். மையோஜெனிக் இதயத் துடிப்பானது மாறுபாடடைந்த சிறப்புத் தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுகிறது. எ.கா. மெல்லுடலிகள், முதுகெலும்பிகள்.

ஹிஸ் (1893) ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளைக் கண்டறிந்தார். அதனால் இது ஹிஸ் கற்றை என்று அழைக்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) _______________

(அ) மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.

(ஆ) ஆற்றல் செலவிடப்படுகிறது.

(இ) அவை மேல் நோக்கி கடத்துத்தல் முறையாகும்.

(ஈ) இவை அனைத்தும்

2. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ____________

(அ) புறணி

(ஆ) பறத்தோல்

(இ) புளோயம்

(ஈ) சைலம்

3. நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது

(அ) கார்பன்டை ஆக்ஸைடு

(ஆ) ஆக்ஸிஜன்

(இ) நீர்

(ஈ) இவை ஏதுவுமில்லை

4. வேர்த் தூவிகளானது ஒரு

(அ) புணறி செல்லாகும்

(ஆ) புறத்தோலின் நீட்சியாகும்.

(இ) ஒரு செல் அமைப்பாகும்

(ஈ) ஆ மற்றும் இ

5. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை

(அ) செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)

(ஆ) பரவல்

(அ) சவ்வூடு பரவல்

(ஈ) இவை அனைத்தும்

6. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

(அ) எண்டோகார்டியம்

(ஆ) எபிகார்டியம்

(இ) மையோகார்டியம்

(ஈ) மேற்கூறியவை அனைத்தும்

7. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

(அ) வெண்ட்ரிக்கிள் 🡪 ஏட்ரியம் 🡪 சிரை 🡪 தமனி

(ஆ) ஏட்ரியம் 🡪 வெண்ட்ரிக்கிள் 🡪 சிரை 🡪 தமனி

(இ) ஏட்ரியம் 🡪 வெண்ட்ரிக்கிள் 🡪 தமனி 🡪 சிரை

(ஈ) வெண்ட்ரிக்கிள் 🡪 சிரை 🡪 ஏட்ரியம் 🡪 தமனி

8. விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

(அ) ‘O’ வகை

(ஆ) ‘AB’ வகை

(இ) A அல்லது B வகை

(ஈ) அனைத்து வகை

9. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது _____________

(அ) SA கணு

(ஆ) AV கணு

(இ) பர்கின்ஸி இழைகள்

(ஈ) ஹிஸ் கற்றைகள்

10. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

(அ) பிளாஸ்மா = இத்தம் + லிம்ஃபோசைட்

(ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

(இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

(ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி __________ எனப்படும்.

2. நீரானது வேர் தூவி செல்லின் _____________ பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது.

3. மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி _____________

4. இயல்பான இரத்த அழுத்தம் _____________

5. சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ____________ முறைகள் ஆகும்.

பொருத்துக:

பிரிவு I

1. சிம்பிளாஸ்ட் வழி – அ. இலை

2. நீராவிப்போக்கு – ஆ. பிளாஸ்மோடெஸ்மேட்டா

3. ஆஸ்மாஸிஸ் – இ. சைலத்திலுள்ள அழுத்தம்

4. வேர் அழுத்தம் – ஈ. சரிவு அழுத்த வாட்டம்

பிரிவு II

1. லியூக்கேமியா – அ. திராம்போசைட்

2. இரத்த தட்டுகள் – ஆ. ஃபேகோசைட்

3. மோனோசைட்டுகள் – இ. லியூக்கோசைட் குறைதல்

4. லூயூக்கோபினியா – ஈ. இரத்தப்புற்று நோய்

5. AB இரத்த வகை – உ. ஒவ்வாமை நிலை

6. O இரத்த வகை – ஊ. வீக்கம்

7. ஈசினோ ஃபில்கள் – எ. ஆன்டிஜனற்ற இரத்த வகை

8. நியூட்ரோஃபில்கள் – ஏ. ஆன்டிபாடி அற்ற இரத்த வகை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. உணவைக் கடத்துதலுக்கு காரணமாக திசு புளோயமாகும்.

2. தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன.

3. புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை – குளுக்கோஸ்.

4. அபோபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.

5. காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை திறந்து கொள்ளும்.

6. இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது நரம்புகளின் மூலமாக நடைபெறும்.

7. அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தை கடத்துபவையாகும்.

8. WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

9. வெண்டரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் லப் எனும் ஒலி தோன்றுகிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

வழிமுறைகள்: கீழ்கண்ட கேள்வியில் கூற்று (A) மற்றும் அதற்குரிய காரணம் (R) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான பதிலை குறிப்படுக.

(அ) கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) (A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.

(ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

1. கூற்று (A): சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது.

காரணம் (R): RBC-ல் செல் நுண்ணுறுப்புகளும் உட்கருவும் காணப்படுவதில்லை.

2. கூற்று (A): ‘AB’ இரத்த வகை உடையோர் “அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக” கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்

காரணம் (R): AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. இவை அனைத்தும், 2. சைலம், 3. நீர், 4. ஆ மற்றும் இ, 5. செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்), 6. மேற்குறிய அனைத்தும், 7. ஏட்ரியம் – வெண்ட்ரிக்கிள் – தமனி – சிரை, 8. “O” வகை, 9. SA கணு, 10. இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: ( விடைகள்)

1. நீராவிப்போக்கு, 2. அரை கடத்து, 3. வேர்த்தூவி, 4. (120/80 mmHg), 5. (72 – 75)

பொருத்துக: (விடைகள்)

பிரிவு I

1. சிம்பிளாஸ்ட் வழி – பிளாஸ்மோடெஸ்மேட்டா

2. நீராவிப்போக்கு – இலை

3. ஆஸ்மாஸிஸ் – சரிவு அழுத்த வாட்டம்

4. வேர் அழுத்தம் – சைலத்திலுள்ள அழுத்தம்

பிரிவு II

1. லுயூக்கேமியா – இரத்தப்புற்று நோய்

2. இரத்த தட்டுகள் – திராம்போசைட்

3. மோனோசைட்டுகள் – ஃபேகோசைட்

4. லுயூக்கோபினியா – லியூக்கோசைட் குறைதல்

5. AB இரத்த வகை – ஆன்டிபாடி அற்ற இரத்த வகை

6. O இரத்த வகை – ஆன்டிஜனற்ற இரத்த வகை

7. ஈசினோஃபில்கள் – ஒவ்வாமை நிலை

8. நியூட்ரோபில்கள் – வீக்கம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறானதை திருத்தி எழுதுக)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை – சுக்ரோஸ்

4. தவறு

சரியான விடை: சிம்பிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைக்கிறது.

5. தவறு

சரியான விடை: காப்பு செல்களில் நீர் புகுவதால் இலைத்துளை திறந்து கொள்ளும்.

6. தவறு

சரியான விடை: இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது சைனோ ஏட்ரியல் கணு மூலமாக நடைபெறும்.

7. தவறு

சரியான விடை: நுரையீரல் சிரையினைத் தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை கடத்துபவையாகும்.

8. சரி

9. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றினைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!