Ethics Questions

தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் 11th Ethics Lesson 3 Questions

11th Ethics Lesson 3 Questions

3] தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்

1) தமிழர்களின் பண்பாடு வளர்ச்சியின் ஊற்றுக் கண்களாகத் திகழுபவை எவை?

A) திருக்குறள், நன்னூல்

B) நாலடியார், ஐம்பெருங்காப்பியம்

C) கம்பராமாயணம், வில்லிபாரதம்

D) அனைத்தும்

விளக்கம்: தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியின் ஊற்றுக் கண்களாகத் திருக்குறள், நன்னூல், நாலடியார், ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்கள் அமைந்துள்ளன. உலகளவில் தமிழர் பண்பாடும் நாகரீகமும் சிறப்புப் பெற்றமைக்கு இந்நூல்களில் சொல்லப்பட்டுள்ள உயர்வான அறநெறிக் கருத்துக்களே காரணமாக அமைந்துள்ளன

2) எந்தக் கருவிகள் நிலத்திலும் நீரிலும் மனிதனின் போக்குவரத்திற்குப் பயன்பட்டன?

A) சக்கரம், படகு

B) மிதிவண்டி, படகு

C) மாட்டுவண்டி, கப்பல்

D) மாட்டுவண்டி, படகு

விளக்கம்: சக்கரம், படகு போன்ற கருவிகள் நிலத்திலும், நீரிலும் மனிதனின் போக்குவரத்திற்குப் பயன்பட்டன. இப்போக்குவரத்துக் கருவிகள் கிராமம், நகர், நாடுகளுக்கிடையேயான உற்பத்திப் பொருளைப் பரிமாற்றம் செய்து வணிகத்தை வளரச் செய்தன. இவ்வாறு புறநிலையில் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாகவும், வணிச் சமூகமாகவும் மாற்றம் பெறுவதற்கு மனித இனம் தனக்குள்ளாகவே உறவுநிலைகளை மேம்படுத்திக்கொண்டது.

3) மனிதனின் புற வளர்ச்சிக்கு எவை முதன்மையானவை?

A) உணவு

B) உடை

C) இருப்பிடம்

D) உற்பத்திக் கருவிகள்

விளக்கம்: புறவளர்ச்சிக்கு உற்பத்திக் கருவிகள் எவ்வளவு முதன்மையானவையோ அது போலவே உறவு மேம்பாட்டிற்கு மனிதர்கள் தமக்குள் வகுத்துக்கொண்ட நெறிமுறைகள் தவிர்க்க முடியாதவையாக விளங்கின. இந்நெறிமுறைகள் அடிப்படையாக விளங்கின. இந்நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே குடும்பம், சமூகம், நாடு போன்ற நிறுவனங்கள் தோன்றின. இந்நெறிமுறைகளுக்கு தன்னல மறுப்பும் பொதுநல விருப்புமே அடிப்படையாக இருந்தன. தமிழ் இலக்கியங்கள் தொன்று தொட்டு அறம், அன்பு, அருள், அடக்கம், அமைதி, அறிவு, ஆற்றல், உண்மை, உழைப்பு, நேர்மை, நாணயம், உயர்வு, ஒழுக்கம், இரக்கம், வீரம், ஈகை, தீரம், காதல், கடமை, நீதி, நெறி முதலானவற்றை உள்ளடக்கியதே ஆகும்.

4) “மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல், நிலைபேறு உடையதாக அமையும்” எனக் குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) அகநானூறு

விளக்கம்: மேற்கண்ட கருத்தினை தொல்காப்பியம்,

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்த காம வாயில்

நிறையே அருளே உணர்வோடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”. எனப் பத்து பொருத்தங்களாக விரித்துக் கூறுகிறது.

5) எந்த அன்புடைய தலைவனும் தலைவியும் காதல் வயப்படும்போது ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடைய நெஞ்சங்கள் கலந்தவர்களாக இருந்துள்ளனர்’ எனக் கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பத்துப்பாட்டு

C) குறுந்தொகை

D) நற்றிணை

விளக்கம்: ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் காதல் வயப்படும்போது ‘செம்புலப் பெயல் நீர்போல்’ அன்புடைய நெஞ்சங்கள் கலந்தவர்களோடு இருந்துள்ளனர் எனக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

6) தாமரை எந்த நிலத்தில் மலரும்?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்

விளக்கம்: மருத நிலத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. வண்டு அம்மலரிலிருந்து தேனை எடுக்கிறது. அத்தேனை யாராலும் தொட முடியாத குறிஞ்சி நில மலை உச்சியில், ஓங்கி வளர்ந்துள்ள சந்தன மரத்தில் தேனடையாக வைத்துப் பாதுகாத்து வைக்கிறது. அதுபோலத் தலைவியின் அன்பைப் பாதுகாத்து வைப்பவன் தலைவன்.

7) மருத நிலத்தில் வாழும் தலைவியின் காதலைக் குறிஞ்சி நிலத் தலைவன் பாதுகாத்து வைக்கும் நெறியை பற்றிக் கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பத்துப்பாட்டு

C) குறுந்தொகை

D) நற்றிணை

விளக்கம்: “நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்

என்றும் என்தோள் பிரிவு அறியலரே

தாமரைத் தண்தாது ஊதிமீ மிசைச்

சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற, புரையோர் கேண்மை” என்ற நற்றிணைப் பாடல் உயர்ந்த அன்பின் தூய்மையையும் மேன்மையையும் ஒரு சேரப் புலப்படுத்துகிறது.

8) மனித உறவுகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது எது?

A) இரத்த உறவு

B) நட்பு

C) காதல்

D) அனைத்தும்

விளக்கம்: உள்ளத்தால் ஒன்றியவர்களுக்கிடையே தோன்றும் அன்பின் உறவே நட்பாகும். மனித உறவுகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு. நட்பின் பெருமையைச் சங்க இலக்கியங்கள் போற்றிப் பதிவுசெய்துள்ளன. ஒருவருடைய உயர்வுக்கு உழைப்பும், விடா முயற்சியும் காரணமாக இருப்பது போல நல்லோர் நட்பும் காரணமாக அமைகிறது.

9) ‘உயிர்ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) நற்றிணை

B) அகநானூறு

C) புறநானூறு

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: நட்பின் இயல்பு குறித்து ‘உயிர்ஓர் அன்ன செயில் தீர் நட்பின்’ என நற்றிணைக் கூறுகிறது.

10) “…………. யாக்கைக்கு

உயிர்இயைந்து அன்ன நட்பின்” எனக் கூறும் நூல் எது?

A) நற்றிணை

B) அகநானூறு

C) புறநானூறு

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: “…………. யாக்கைக்கு

உயிர்இயைந்து அன்ன நட்பின்” என நட்பின் இயல்பு குறித்து அகநானூறு கூறுகிறது.

11) “புலிபசித் தன்ன மெலிலி லுள்ளத்

துரனுடை யாளர் கேண்மை யோடு

இயைந்த வைகல் உளவா கியரோ” என்ற பாடல் அடிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) மதுரைக்காஞ்சி

D) பட்டினப்பாலை

விளக்கம்: எலியைப்போல் சிறிய முயற்சி உடையவர்களோடு நட்புக்கொள்வதிலும் புலியைப்போன்ற வலிமையும் முயற்சியும் உடையவருடன் நட்புக் கொள்வதே சாலச் சிறந்தது என புறநானூறு கூறுகிறது.

12) “உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்

பொய்சேன் நீங்கிய வாய்நட் பினையே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) மதுரைக்காஞ்சி

D) பட்டினப்பாலை

விளக்கம்: பெறற்கரிய பெரும்பேறு கிடைப்பதாக இருந்தாலும் பொய்மை கலந்த நட்புப் பழியோடு முடியும். எனவே, வாய்மை நிறைந்த நட்பே தூய்மையானது, சிறந்தது, தகுதியானது என மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

13) பொருத்துக

அ. ஒளவை – 1. பாரி

ஆ. பிசிராந்தையார் – 2. அதியமான்

இ. கபிலர் – 3. கோப்பெருஞ்சோழன்

A) 2, 3, 1

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 1, 3

விளக்கம்: அரிதாகக் கிடைத்த நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்த அதியமான், கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருந்து உயிர்விட்ட பிசிராந்தையார், பாரியின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட கபிலர் போன்றோரை நட்பிற்கு இலக்கணங்களாகச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

14) ‘பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்’ என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) கலித்தொகை

C) நற்றிணை

D) குறுந்தொகை

விளக்கம்: பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி உதவுதல் பற்றி கலித்தொகையில் நல்லந்துவனார் குறிப்பிடுகிறார்.

15) உண்மையான செல்வம் என்பது ‘பிறர்துன்பம் தீர்ப்பதுதான்’ என்று உரைப்பவர் யார்?

A) நல்லந்துவனார்

B) நல்வேட்டனார்

C பெருங்கடுங்கோ

D) திருவள்ளுவர்

விளக்கம்: உண்மையான செல்வம் என்பது, ‘பிறர் துன்பம் தீர்ப்பதுதான்’ என்கிறார் நல்வேட்டனார்

16) “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே” இவ்வாறு கூறும் நூல் எது?

A) திருக்குறள்

B) கலித்தொகை

C) நற்றிணை

D) குறுந்தொகை

விளக்கம்: சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே என்று நற்றிணை உரைக்கிறது.

17) “உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்” என்று கூறும் நூல்?

A) திருக்குறள்

B) நற்றிணை

C) கலித்தொகை

D) குறுந்தொகை

விளக்கம்: உறவினர கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்(கலித்தொகை 34) உதவும் பண்பு, வாழ்வியல் நெறியாகத் திகழ்ந்தது என்பதை இப்பாடலால் அறிய முடிகிறது.

18) “வாய்மை பேசும் நாவே உண்மையான நா” என்பதனை கூறும் இலக்கியங்கள் எவை?

A) புறநானூறு, பரிபாடல்

B) புறநானூறு, பதிற்றுப்பத்து

C) அகநானூறு, பதிற்றுப்பத்து

D) அகநானூறு, பரிபாடல்

விளக்கம்: “பொய்யாச் செந்நா” – புறநானூறு

“பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின்” – பதிற்றுப்பத்து

19) ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) கலித்தொகை

D) நற்றிணை

விளக்கம்: ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையையும் ‘பொய்பொதி கொடுஞ்சொல்’ என்று பொய்மையையும் நற்றிணை குறிப்பிடுகிறது.

20) தவறான இணையைத் தேர்க

A) “பிழையா நன்மொழி”, “பொய்பொதி கொடுஞ்சொல்” – குறுந்தொகை

B) ‘நிலம்புடை பெயர்வது ஆயினும் கறிய சொற்புடை பெயர்தலோ இலரே’ – நற்றிணை

C) ‘நிலம்திளம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே’ – பதிற்றுப்பத்து

D) ‘நிலம் பெயரினும் நின்சொற் பெயரால்’ – புறநானூறு

விளக்கம்: “பிழையா நன்மொழி”, “பொய்பொதி கொடுஞ்சொல்” – நற்றிணை. மற்ற மேற்கோள்களில் பாடல் அடிகளில் நிலம் புடைபெயர்ந்தாலும் பொய்சொல்லக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

21) “அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

விளக்கம்: விருந்தோம்பல், இல்லறத்தாரின் தலையாய கடமை ஆகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் கோணாது வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் உயரிய பண்பாகும். இதனை மேற்கண்ட நற்றிணைப் பாடல் பாராட்டுகிறது.

22) ‘ஏதுமில்லா நிலையில் விதைத் திணையை’ உரலில் இட்டு இடித்து, உணவளித்த செய்தியை குறிப்பிடும் நூல் எது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

விளக்கம்: அமிழ்தமே கிடைத்தாலும் தாம் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் வழங்கி மகிழ்வர். ஏதுமில்லா நிலையில், விதைத் திணையை உரலில் இட்டு, இடித்து, உணவளித்த செய்தியை புறநானூறு குறிப்பிடப்பட்டுள்ளது.

23) ‘விருந்தினருக்கு உணவளிக்க, வரகினைக் கடனாகப் பெற்று வருவதை’ கூறும் நூல் எது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

விளக்கம்: விருந்தினருக்கு உணவளிக்க, வரகினைக் கடனாகப் பெற்று வருவதை ஒரு சங்கப்பாடல் காட்டுகிறது (புறம் 327)

24) ‘உணவிடுவதற்காக ஒருவன் தன் வீரவாளையும் ஈடுவைத்த’ செய்தியை குறிப்பிடும் நூல் யாது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

விளக்கம்: உணவிடுவதற்காக ஒருவன் வீரவாளையும் ஈடுவைத்த செய்தியை புறநானூறு குறிப்பிட்டுள்ளது.

25) “விருந்தினரின் தொடர்ச்சியான வருகையாலும் அவர்களுக்கு விரும்தோம்புவதாலும் ஒரு தலைவிக்கு ஊடல் கொள்ள நேரமில்லாமல் போன” செய்தியைக் கூறும் நூல் எது?

A) நற்றிணை

B) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

விளக்கம்: விருந்தினரின் தொடர்ச்சியான வருகையாலும் அவர்களுக்கு விரும்தோம்புவதாலும் ஒரு தலைவிக்கு ஊடல் கொள்ள நேரமில்லாமல் போன” செய்தியைக் கூறும் நூல் நற்றிணை.

26) விரும்தோம்பல் கைகூடாத வாழ்க்கையை, ‘விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை’ எனக் கூறுபவர் யார்?

A) கோவூர்கிழார்

B) பெருங்குன்றூரக்கிழார்

C) நக்கீரர்

D) கபிலர்

விளக்கம்: விருந்தோம்பல் கைகூடாத வாழ்க்கையை ‘விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை’ எனப் பெருங்குன்றூர்கிழார் புறநானூற்றில் குறிப்பிடுகிறார். தமிழர்களின் வீட்டுவாசலில் அமைக்கப்பட்ட திண்ணை, அவர்தம் விருந்தோம்பல் பண்புக்குச் சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது.

27) ஒரு தாய், ‘நின் மகன் யாண்டுளன்’ எனத் தன்னிடம் வினவிய பெண்ணிடம் என் மகன் எங்கு இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது, புலி தங்கிச் சென்ற கற்குகைபோல, அவனை ஈன்ற வயிறு மட்டும் இங்கு உள்ளது. அவனைக் காண வேண்டுமானால், போர்க்களத்தில்தான் பார்த்தால் முடியும் என்று கூறினாள் என்ற செய்தியைக் கூறும் நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) ஐங்குறுநூறு

D) நெடுந்தொகை

விளக்கம்: மேற்கண்ட செய்தியை புறநானூறு கூறுகிறது. இதேபோல் தன் மகன் மார்பில் விழுப்புண்பட்டு இறந்துகிடப்பதைக் கண்ட தாய், அவனைப் பெற்ற நாளினும் பெரிதும் உவந்தாள்.

28) எவை இல்லற வாழ்வின் கடமைகளாக கருதப்பட்டன?

A) விருந்தோம்பல்

B) கற்பொழுக்கம்

C) பெரியோரைப் பேணுதல்

D) அனைத்தும்

விளக்கம்: விருந்தோம்பலும், கற்பொழுக்கமும், பெரியோரைப்பேணுதலும், நன்மக்கட்பேறும் இல்லற வாழ்வின் கடமைகளாகும்.

29) “மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) புறநானூறு

B) கலித்தொகை

C) நற்றிணை

D) குறுந்தொகை

விளக்கம்: மக்கட் பேற்றையும் சமூகக் கடமையாகவே சங்க கால மகளிர் கருதினர். மக்கட்பேறே உயர்ந்த பேறு என்பதை மேற்கண்ட புறநானூறு பாடல் கூறுகிறது.

30) அதியமான் நெடுமான் அஞ்சிக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்?

A) ஒளவை

B) நச்சள்ளையார்

C) நன்முல்லையார்

D) ஆதிமந்தியார்

விளக்கம்: சங்க காலத்தில் ஒளவையார் நச்சள்ளையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நப்பசலையார், முடத்தாமக்கண்ணியார், காக்கைபாடினியார், ஒக்கூர் மாசத்தியார், பென்முடியார் முதலான பெண்பாற் புலவர்கள் பாடல்களிலிருந்து சங்ககால மகளிர் கல்வி நிலையிலும் மேம்பட்டு விளங்கினர் என்பதை அறியமுடிகிறது. பெண்கள் பொதுவாழ்க்கையிலும் பங்கேற்றனர் என்பதை அதியமான் நெடுமான் அஞ்சிக்காகத் தொண்டைமானிடம் ஒளவை தூது சென்றதிலிருந்து அறிய முடிகிறது. பாடினி, விறலி முதலானோர் ‘ஆடல் பாடல்’ கலைகளில் சிறந்து விளங்கினர்

31) “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) புறநானூறு

B) அகநானூறு

C) கலித்தொகை

D) பரிபாடல்

விளக்கம்: சங்க காலம் பொற்காலமாகத் திகழ்வதற்குப் பல காரணங்கள் இருப்பினும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’என்ற ஒளவையின் புறநானூற்றுப் பாடல் நாட்டை மேன்மைக்கு உரியதாக மாற்றுவது, அரசனின் மாண்புகளே என்பதை உணர்த்துகின்றது. சங்ககால மன்னர்கள் கல்வி, வீரம், கொடை, நட்பு, சான்றோரைப் புரத்தல் போன்ற மாண்புகளைப் பெற்றுத் திகழ்ந்தனர்.

32) “ஆவும் ஆனியிற் பார்ப்பன மாக்களும்……………” என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

A) முல்லைப்பாட்டு

B) மதுரைக்காஞ்சி

C) நெடுநல்வாடை

D) புறநானூறு

விளக்கம்: “ஆவும் அனியிற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யரூம் பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறக்கும்

பொன்போற் புதல்வரப் பெறாஅ திரும்

எம்மம்புக் கடிவிடுதும் நும்மரண் சேர்மின்”- புறநானூறு

இப்பாடல் வாயிலாகப் பசுக்களும், பார்ப்பனாரும், பெண்களும், நோயுற்றவரும், மக்கட்பேறு இல்லாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு போர் தொடங்குவதற்கு முன்னர் அறிவுறுத்தினர் என்ற செய்தி புலப்படுகிறது. வீரம் செறிந்த போரிலும்அறநெறி காத்தவர் தமிழர் என்பதற்கு இப்பாடல் எடுத்துகாட்டாகத் திகழ்ந்தது.

33) போருக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை யாருக்கு இருந்தது?

A) தளபதி

B) போர்வீரர்

C) ராஜகுரு

D) மன்னன்

விளக்கம்: சங்க காலத்தில் ஒருவருக்கொருவர் நாட்டு எல்லைகளைக் காப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் போர்புரிதல் தவிர்க்க முடியாததாக விளங்கியது. போருக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை மன்னனுக்கு இருந்தது. விழுப்புண் தாங்கிப் புறப்புண் நாணும் பண்புடையவர்களாக அரசர்கள் விளங்கினார்கள்.

34) கூற்றுகளை ஆராய்க

1. பழந்தமிழ் வேந்தர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மரத்தைத் தம் வெற்றியைச் சிறப்பிக்கும் மரமாகப் போற்றி வந்துள்ளனர்.

2. அம்மரம் இரவு பகலாக வீரரால் காவல் காக்கப்பட்டதால், அதற்குக் ‘கடிமரம்’ எனப் பெயர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்த மரத்தை வெட்டுபடாமல் பாதுகாப்பது மானமுடைய வேந்தர்க்கு மறப்பண்பாகும். வேங்கை, புன்னை, வேம்பு முதலிய மரங்களைக் காவல் மரங்களெனப் போற்றி வந்துள்ளனர். வேந்தன் ஒருவன், பகை மன்னனை வெற்றிகொண்டதற்கு அடையாளமாக அவன் நாட்டுக் காவல் மரத்தை வெட்டி வீழ்த்துவது மரபு.

35) வீரத்தில் சிறந்து விளங்கிய மன்னர்கள், கொடை வள்ளல்களாகவும் திகழ்நதனர். இவ்வள்ளல் தன்மையை விளக்கும் திணை எது?

A) வெட்சி

B) கரந்தை

C) பாடாண்

D) பொதுவியல்

விளக்கம்: வீரத்தில் சிறந்து விளங்கிய மன்னர்கள், கொடை வள்ளல்களாகவும் திகழ்ந்தனர். இவ்வள்ளல் தன்மையைப் பாடாண்திணைப் பாடல்கள் விளக்குகின்றன. இவர்களுள் கடையெழு வள்ளல்கள் குறுநில மன்னர்களாயினும், வரையாது பொருள் வழங்கும் இயல்பினர்

36) யானைகளின் எண்ணிக்கை, ‘வான்மீன் பல பூப்பினும் ஆனது மன்னே’ என முடமோசியார் யாரைப் புகழ்கிறார்?

A) காரி

B) ஓரி

C) பாரி

D) ஆய் அண்டிரன்

விளக்கம்: ஆய் அண்டிரன் என்னும் குறுநில மன்னன், தன்னை நாடிவந்த புலவர்களுக்கு வாரி வழங்கிய யானைகளின் எண்ணிக்கை ‘வான்மீன் பல பூப்பினம் ஆனாது மன்னே’ என முடமோசியார் என்னும் புலவர் புகழ்கிறார்.

37) ‘………………. . மசுஇல்

காம்புசொலித் தன்ன அறுவை உடீஇப்………’

என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

A) நன்னூல்

B) புறநானூறு

C) நெடுநல்வாடை

D) சிறுபாணாற்றுப்படை

விளக்கம்: “…………மாசுஇல்

காம்புசொலித் தன்ன அறுவை உடீஇப்

பாம்புவெகுண் டன்ன தேறல் நல்கிக்

…………………………………….

பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்

……………………………………

இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து

விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டித்” – சிறுபாணாற்றுப்படை

அரசர்கள் தம்மை நாடிவந்த புலவர், பாணன், பாடினி, கூத்தர், விறலி போன்றோர்க்குப் பொருள் கொடுப்பதோடு நின்றுவிடாமல், உடுக்க உடையும், உண்ண உணவும் கொடுத்து மகிழ்ந்தனர். மன்னர்களின் இத்தயை விருந்தோம்பல், புலவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

38) சேர மன்னர்களது வள்ளல் தன்மையும், விருந்தோம்பல் பண்பும் பெரிதும் பேசப்படும் நூல் எது?

A) ஆற்றுப்படை நூல்கள்

B) மதுரைக்காஞ்சி

C) பரிபாடல்

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களது வள்ளல் தன்மையும், விருந்தோம்பல் பண்பும் பெரிதும் பேசப்படுகின்றன.

39) அரசர்கள் வள்ளல்தன்மையைப் பாடுவதற்காக உருவாக்கப்பட்ட நூல் எது?

A) ஆற்றுப்படை நூல்கள்

B) மதுரைக்காஞ்சி

C) பரிபாடல்

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: ஆற்றுப்படை நூல்கள், அரசர்களின் வள்ளல்தன்மையைப் பாடுவதற்காகவே உருவாகப்பட்டன. மன்னரின் வள்ளல் தன்மை அந்நாட்டு மக்களிடமும் இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

40) கூற்றுகளை ஆராய்க.

1. அரசர்கள், புலவர்களைப் பரிசில் பெறுவோராக மட்டும் கருதவில்லை. அறநெறிகூறி வழிநடத்தும் தகுதி உடையவர்களாகவும் கருதினர்

2. இதனைப் பகைநாட்டு மன்னனின் புதல்வர்களை யானைக்கொண்டு இடறச் செய்யும் வேளையில் புலவர் சொல்கேட்டு நிறுத்திவிடுதல் மூலம் அறியலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இதேபோல், புலவரின் அறிவுரைக்கேற்ப வரிவிதிப்பைக் குறைத்துக் கொள்ளுதல், போரைத் தவிர்த்தல், பகைநாட்டு ஒற்றன் எனக் கருதி ஒரு புலவரைக் கழுவேற்றும் வேளையில், மற்றொரு புலவர் சொல்கேட்டு அதை நிறுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள், அக்கால மன்னர்களைத் திருத்தும் கடமையும் புலவர்களுக்கும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

41) அரசர்கள் அறிநெறியையே முதன்மையாகக் கொண்ட அரசாள வேண்டும் என்பதும், உழவு செழித்து, உணவு பெருக நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்த்தும் நூல் எது?

A) ஆற்றுப்படை நூல்கள்

B) குறிஞ்சிப்பாட்டு

C) புறநானூறு

D) கலித்தொகை

விளக்கம்: “அறநெறி முதற்றே அரசின் கொற்றம் ………” – புறநானூறு

“நிலன்நெறி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோரோ” – புறநானூறு

இப்பாடல்கள் மூலம் மேற்க்கண்ட செய்தியை அறியலாம்

42) பொருத்துக.

அ. ஏழைப் பெண்ணின் மானம் காக்கத்

தன் கையையே வெட்டிக்கொண்டவர் – 1. மனுநீதிச் சோழன்

ஆ. அடைக்கலம் புகுந்த புறாவினைக்

காக்கத் தன்மையே தராசுத் தட்டில் ஏற்றியவர் – 2. கொற்கைப் பாண்டியன்

இ. கன்றிழந்த ஆவின் கண்ணீருக்கு நீதி

வழங்கத் தன்மகனையே தேர்க்காலில் இட்டவர் – 3. சிபி

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 2, 3, 1

D) 3, 1, 2

விளக்கம்: இதன் மூலம், அரசர்களின் செயல்கள் நீதிக்கு முன் அனைவரும் சமம், நீதிவழங்கும் போது தாம், தமர், பிறர் என்ற பாகுபாடு கருதாமல் நீதி வழங்கி, அறநெறி வழுவாது ஆட்சி புரிய வேண்டும் என்ற விதிமுறைக்கு கட்டுப்பட்டு அரசாட்சி நடத்தினர் என்பதை அறியலாம்.

43) “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்

காவலர்ப் பழிக்குமிக் கண்ண்கன் ஞாலம்”

இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது?

A) தொல்காப்பியம்

B) அகநானூறு

C) ஏலாதி

D) புறநானூறு

விளக்கம்: வானம் பொய்ப்பினும் விளைச்சல் குறையினும், எதிர்பாராத இடையூறுகள் தோன்றினும் அரசன் நல்லாட்சி செலுத்தாததே காரணம் எனக் கருதுவது அன்றைய மரபு. இப்பழிச் சொல்லுக்கு அஞ்சி, நல்லாட்சி செலுத்தும் பொறுப்பு மன்னனுக்கு இருந்தது

44) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல்அடி இடம்பெற்ற நூல் எது?

A) தொல்காப்பியம்

B) அகநானூறு

C) ஏலாதி

D) புறநானூறு

விளக்கம்: சங்கத்தமிழர் பரந்த மனப்பான்மை உடையவராய்த் திகழ்ந்தனர். தந்நலம் கருதாது. பிறர்நலம் பேணும் பெற்றியுடையவராய் விளங்கினர். அனைவரும் தம் உறவினராகக் கருதும் அவர், தம் மனப்பாங்கை ‘யாதும் ஊரே யாருவம் கேளிர்’ எனப் பாடிய பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல்அடி உணர்த்துகிறது. இப்பாடல், கால எல்லை, நில எல்லைகளைக் கடந்து இன்றும் வாழ்கிறது

45) “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்” – இப்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தொல்காப்பியம்

B) அகநானூறு

C) திருக்குறள்

D) புறநானூறு

விளக்கம்: நன்மை செய்யவில்லை எனினும் தீமை செய்தல் கூடாது என்பதை இப் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது.

46) “உண்டால் அம்மஇவ் உலகம் – இந்திரர்…………. . ” என்ற பாடலடி இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) புறநானூறு

D) ஏலாதி

விளக்கம்: “உண்டால் அம்மஇவ் உலகம் – இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே முனிவுஇலர்

துஞ்சலும்இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின், உயிரும், கொடுக்குவர் பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்னமாட்சி அனையர் ஆகித் தமக்குஎன முயலா நோன்தாள்

பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே”- புறநானூறு

47) பதிணென் கீழக்கணக்கு நூல்களின் எத்தனை நூல்கள் அறநூல்கள் ஆகும்?

A) 11

B) 7

C) 6

D) 1

விளக்கம்: அறக்கருத்துக்களை கூறும் அறநூல்கள் – 11

அகப்பொருள் சார்ந்த நூல்கள் – 6

புறப்பொருள் சார்ந்த நூல்கள் – 1

‘நாலடி நான்மணி நானாநாற்பது ஐந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம்கீழக் கணக்கு’ என்னும் வெண்பா பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிடுகிறது.

48) பொறாமை, பேராசை, சினம், இன்னாச்சொல், ஆகிய நான்கையும் தீயதெனக் கருதிப் புறந்தள்ளி வாழ்வதே அறம் என்றவர் யார்?

A) கபிலர்

B) நக்கீரர்

C) அகத்தியர்

D) வள்ளுவர்

விளக்கம்: பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திருக்குறள், சிறந்த அறநூலாகும். உலகம், முழுமைக்குமான வாழ்வியல் நெறிகளை வள்ளுவம் கூறுகிறது. இந்தத் தன்மையால்தான், திருக்குறள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொறாமை, பேராசை, சினம், இன்னாச்சொல் ஆகிய நான்கனையும் தீயதெனக் கருதிப் புறந்தள்ளி வாழ்வதே அறம் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்”

49) “ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பவரின் நோன்மை உடைத்து” – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) புறநானூறு

B) நன்னூல்

C) நற்றிணை

D) திருக்குறள்

விளக்கம்: இல்லறத்தில் வாழ்பவர்கள் அறநெறிகளை பின்பற்றி வாழ்ந்தால், அவ்வாழ்க்கை துறவறத்தினும் சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார்.

50) இல்லறத்தார்க்கு உரிய கடமைகள் பல இருப்பினும், அவற்றுள் முதன்மையானது எது?

A) அன்பு காட்டுதல்

B) அறநெறி நடத்தல்

C) விருந்தோம்பல்

D) கல்வி பெற்றல்

விளக்கம்: இல்லறத்தார்க்கு உரிய கடமைகள் பல இருப்பினும், அவற்றுள் முதன்மையானது விருந்தோம்பல் பண்பாகும்.

“அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்” நல்ல முக மலரச்சியோடு விருந்திர்களைப் பேணுபவர்கள் இல்லத்தில் செல்வம் நிலைத்திருக்கும் என்பது திருவள்ளுவரின் நம்பிக்கையாகும்.

51) கல்வியின் பெருமையை வள்ளுவர் எந்தெந்த அதிகாரங்களில் குறிப்பிடுகிறார்?

A) கல்வி

B) கல்லாமை

C) கேள்வி

D) அனைத்தும்

விளக்கம்: கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய அதிகாரங்களில் கல்வியின் பெருமையை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நல்லனவற்றைப் படிக்க வேண்டும். படித்ததை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். தீயவழியில் செல்லாமல் மனத்தை நேர் வழிப்படுத்துவதே அறிவு என்பதும் மன்னுயிரின் துன்பத்தைத் தன்னுயிர்த் துன்பமாகக் கருதுவதே அறிவுடைமை என்பதும் வள்ளுவரின் கருத்தாகும்.

52) “யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு” – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) புறநானூறு

B) பதிற்றுப்பத்து

C) திருக்குறள்

D) பரிபாடல்

விளக்கம்: கல்வியைப் பெறுபவனுக்கு எல்லா ஊரும் அவர் ஊரே, எல்லா நாடும் அவன் நாடே என்பதை இக்குறள் மூலம் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

53) கூற்றுகளை ஆராய்க.

1. செல்வம் வாழக்கைக்கு இன்றியமையாதது. அச்செல்வத்தை அறவழியிலேயே சேர்க்க வேண்டும். பண்புடையவரிடம் சேர்ந்த செல்வம் பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தது போலவும், ஊருணியில் நீர்நிறைந்தது போலவும், மருத்துவப் பயன் நிறைந்த மரம் பலருக்கும் பயன்படுவது போலவும் பயன்தரும் என்கிறார் திருவள்ளுவர்.

2. இதேபோல், செல்வத்திற்கு என்று தனி இயல்பு கிடையாது, அதனைப் பெற்றிருப்பவரின் இயல்புக்கேற்ப அதன் பயன்பாடு அமைகிறது என்கிறார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும தவறு

விளக்கம்: இதுபோலவே பண்பில்லாத கொடிய மனம் படைத்தவர் செல்வர், நல்ல பாலானது தான் வைக்கப்பெற்ற பாத்திரத்தில் திரிந்து நஞ்சாவதுபோல மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

54) கூற்றுகளை ஆராய்க.

1. நல்லவர்களுடைய வறுமை, அவர்களுக்கு மட்டுமே மிகுந்த துன்பத்தைத் தரும் என திருவள்ளுவர் கூறுகிறார்

2. ஆனால், தீயவர்களிடம் இருக்கின்ற செல்வமோ மற்றவர்களுக்கும் பல மடங்கு தீமைகளை விளைவிக்கும் என பாரதி கூறுகிறார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தீயவர்களிடம் இருக்கின்றன செல்வம் மற்றவர்களுக்கும் பல மடங்கு தீமைகளை விளைவிக்கும் என திருவள்ளுவர் கூறுகிறார்.

55) “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப்படும்”- இக்குறளில் கூறப்படும் கருத்து என்ன?

A) நல்லவருடைய வறுமை அவருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்

B) தீயவரின் செல்வம், மற்றவர்களுக்கும் பல மடங்கு தீமைகளை விளைவிக்கும்

C) நல்லவர்கள் அல்லல்படுவதையும், செல்வம் தவறான இடத்தில் சேர்வதையும் சுட்டிக்காட்டி அது முறையாக எண்ணிப் பார்த்துக் களையப்பட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

D) செல்வம் அறிவழியில் சேர்க்கப்பட வேண்டும்

விளக்கம்: செல்வம் தவறான இடத்தில் சேர்வதையும் அதனால் நல்லவர்களும் அல்லல்படுவதையும் காட்டி, திருவள்ளுவர் இது இப்படித்தான் இருக்கும் என அமைதி அடையாமல் அது முறையாக எண்ணி களையப்பட வேண்டும் என்கிறார்.

56) சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான குரலாக விளங்கும் குறள் எது?

1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்

2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகஇயற்றி யான்

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) இரண்டும்

D) எதுவுமில்லை

விளக்கம்: “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகுஇயற்றி யான்” என்ற குறள் மூலம் பலர் நோக, சிலர் வாழும் ஏற்ற- இறக்கம் கொண்ட வாழ்வை வழங்குவது இறை விருப்பம் என்றால், அந்த இறைவனே தேவையில்லை என்று கூறித் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான குரலாகவே இக்குறட்பா விளங்குகிறது.

57) திருவள்ளுவரின் கருத்துகளில் பொருந்தாததைத் தேர்க.

A) ஒரு நாட்டின் வளத்தைப் பெருக்குவது அரசின் கடமை, அதற்கான வழிவகையாகப் பொருளை இயற்றுதல், ஈட்டல், காத்தல், அதனைப் பகிர்ந்தளித்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செயல்படுத்த வேண்டும்.

B) அரசன் முறைசெய்து காப்பாற்ற வேண்டும். இடித்துரைத்துத் திருத்தும் சான்றோர்களைத் தக்க துணையாகக் கொள்ள வேண்டும்.

C) அரசன் முறைதவறி ஆட்சி நடத்தினால் அவன் நாடு கெடும். வானம் பொய்த்துவிடும்.

D) அளவுக்கு அதிகமாக வரிவதிப்பது அரசனின் அறநெறிகள் ஒன்று.

விளக்கம்: மக்களை அச்சுறுத்தி, அளவுக்கு அதிகமாக வரிவிதிப்பது அறநெறியாகாது என்கிறார் திருவள்ளுவர்.

58) “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்” – இப்பாடலடி இடம்பெற்ற நூல் எது?

A) பரிபாடல்

B) நற்றிணை

C) நன்னூல்

D) திருக்குறள்

விளக்கம்: அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, இனியவைகூறல், செய்யநன்றி அறிதல் போன்ற நற்பண்புகள் மனித வாழ்க்கையில் இன்றியமையாதன என்று கூறும் திருவள்ளுவர், இத்தகைய வாழ்க்கையைத் தெய்வத்தன்மை பொருந்தியது என்கிறார்.

59) திருகுறளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் நூல் எது?

A) நன்னூல்

B) புறநானூறு

C) நாலடியார்

D) நற்றிணை

விளக்கம்: திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் நீதிநூல் ‘நாலடியார்;’ ஆகும். ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்னும் பழமொழி, நாலடியார் திருக்குறளோடு ஒத்த பெருமையுடையது என்பதை விளக்கும்.

60) நாலடியாரை தொகுத்தவர் யார்?

A) சமண முனிவர்கள்

B) பதுமனார்

C) திருவள்ளுவர்

D) நக்கீரர்

விளக்கம்: நாலடியார் சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டுப் ‘பதுமனார்’ என்பவரால் தொகுக்கப்பட்டது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் பலவற்றை நாலடியார் காணலாம். துறவறத்தைப் பாராட்டிப் பேசுதல், உலக இன்பத்தை வெறுத்தல், ஊழ்வினை, மறுபிறப்பு, புலால் உண்ணாமை, உயிர்க்கொலை புரியாமை முதலிய சமண சமயக் கொள்கைகளை நாலடியார் வலியுறுத்திக் கூறுகிறது.

61) “களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமீதாக் கொள்வர்,

கடைநிலத்தோ ராயினும் கற்றறிந்தோரை

தலைநிலத்தை வைக்கப் படும்”- இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

A) நான்மணிக்கடிகை

B) நன்னூல்

C) நற்றிணை

D) நாலடியார்

விளக்கம்: களர் நிலத்திலே விளைந்தாலும் உப்பை, நல்ல விளைநிலத்தில் பிறந்த நெல்லுக்கு இணையாவே கருதுவார். பிறப்பைக்கொண்டு மட்டும் ஒருவரை உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ கருதிவிடக்கூடாது. எங்குப் பிறந்தவராயினும் கற்றறிந்தவரே சிறந்தவர் அறிவும் ஒழுக்கமுமே மக்களுக்கு மதிப்பைத் தருவன என்ற சிறந்த கொள்கைகளை நாலடியார் எடுத்துரைக்கின்றது.

62) நாலடியார் கருத்துப்படி, கற்றிந்தவர்களுடைய நட்பு, எதைப் போன்றது?

A) அடிக்கரும்பை உண்பது

B) நுனிக்கரும்பை உண்பது

C) உப்பை உண்பது

D) நெல்லை உண்பது

விளக்கம்: வாழ்க்கையில் நிலையில்லாதது செல்வம். எனவே அறச்செயல்களைக் காலம், இடம் கருதாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். கரும்பின் சாற்றைப்போல மற்றவர்க்குப் பயன்படும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். செல்வத்தை நல்வழியில் சேர்க்க வே;ண்டும். அச்செல்வத்தைப் பலருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். கற்றறிந்தவர்களுடைய நட்பு, அடிக்கரும்பை உண்பது போலாகும், நற்பண்பும் அன்பும் இல்லாதவர் நட்பு, நுனிக்கரும்பை உண்பது போலாகும்.

63) பின்வருவனவற்றுள் எது நாலடியார் கூறும் கருத்து?

A) அறிவுத்தெளிவில்லாதவர்களுடைய நட்பைவிட அவர்களின் பகையே நல்லது

B) எவ்வகை மருந்தினாலும் தீர்க்க முடியாத நோய் கொடுமையானது.

C) ஒருவரிடம் இல்லாத பெருமைகளைக் கூறிப் புகழ்வதைவிட, அவரைப் பழித்தலே நல்லது

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட எளிய கருத்துக்கள் வாயிலாக நாலடியார் மனிதர்களின் மனத்தைப் பண்படுத்துகிறது.

64) ‘கொன்றைவேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) பாரதி

B) பாரதிதாசன்

C) ஒளவையார்

D) சுரதா

விளக்கம்: திருக்குறள் முதலான அறநூல்களுக்குப் பின்னரும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பல நூல்கள் தோன்றியுள்ளன. ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன அறம் உரைக்கும் நூல்கள். அவரைத் தொடர்ந்து, பலர் நீதிநூல்களை இயற்றியுள்ளனர். வெற்றிவேட்கை, நீதிநெறிவிளக்கம், அறநெறிச்சாரம், நீதி வெண்பா முதலானவை அவற்றுள் சிலவாகும்.

65) புதிய ஆத்திச்சூடிகளை இயற்றியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) A மற்றும் B

D) ஒளவையார்

விளக்கம்: பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் புதிய ஆத்திச்சூடி, மாணவர்களுக்குப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

66) தொல்காப்பியத்தின் வழிநூலாக விளங்கும் இலக்கணநூல் எது?

A) அகத்தியம்

B) நன்னூல்

C) நற்றிணை

D) நாலடியார்

விளக்கம்: அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பியம் தொல்காப்பியத்தின் வழிநூல் நன்னூல். இது ஓர் இலக்கண நூல் ஆகும்.

67) நன்னூல் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நன்னூலில் எழுத்து, சொல் என இரு அதிகாரங்கள் உள்ளன.

68) நன்னூலின் ஆசிரியர் யார்?

A) தொல்காப்பியர்

B) அகத்தியர்

C) நக்கீரர்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: நன்னூல், பவணந்தி முனிவரால் இயற்றப்பெற்றது. இந்நூலின் பொதுப்பாயிரம், நூலைப்பற்றியும் நல்லாசிரியர், நல்லாசிரியர் ஆகாதவர், நல்ல மாணக்கர், நன்மாணாக்கர் ஆகாதவர் இயல்புகள் பற்றியும் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர், நூலை மாணக்கர்க்குக் கற்பித்தல், மாணக்கர் கற்றுக்கொள்ளல் ஆகியன குறித்தும் விளக்கியுள்ளது.

69) தாம் கற்றுக் கொண்டதையே திருப்பிச் சொல்லும் இயல்புடையோர் எவ்வகை மாணக்கர்?

A) தலைமாணாக்கர்

B) இடை மாணாக்கர்

C) கடை மாணாக்கர்

D) எதுவுமில்லை

விளக்கம்: தலைமாணாக்கர் – அல்லதை நீக்கி நல்லதை நாடும் இயல்புடையோர். ஆசிரியர் கூறுவதை மனத்தில் நிறுத்தி, மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து சிந்திப்பவர்கள்.

கடை மாணாக்கர் – கற்றதை மறப்பவர், கற்பதில் முழுமையான கவனமின்றி மனம் அலை பாய்ந்து கொண்டிருப்பவர், கற்பனவற்றிலுள்ள நற்கருத்துக்களை மறந்துவிட்டுத் தீய கருத்துக்களைப் பற்றிக்கொண்டவர் ஆகியோர்.

70) அறியாமை நீக்கி, அறிவை வளர்த்து மனிதர்கள் மனக்கோணலை நீக்குவதையே நூலின் மாண்பாக கூறும் நூல் எது?

A) நன்னூல்

B) நற்றிணை

C) தொல்காப்பியம்

D) நான்மணிக்கடிகை

விளக்கம்: அறியாமை நீக்கி, அறிவை வளர்த்து மனிதரின் மனக்கோணலை நீக்குவதையே நூலின் மாண்பாக நன்னூலார் கருதுகிறார்(பொதுப்பாயிரம் – 25)

71) முழு அறிவு பெறுவதற்கான நெறிமுறைகளை கூறும் நூல் எது?

A) நன்னூல்

B) நற்றிணை

C) தொல்காப்பியம்

D) நான்மணிக்கடிகை

விளக்கம்: ஒரு முறைக்குப் பலமுறை படித்தாலே முழு அறிவு கிடைக்கும் என்பதே நன்னூலின் கருத்து. “ஆசிரியர் கூறுவதை அப்படியே உள்வாங்கிக் கொண்டால் கால்பகுதி அறிவே கிடைக்கும். உடன் பயில்வோருடன் அதுபற்றி உரையாடினால் கால்பகுதியும், உடன் பயிலும் மாணாக்காருக்கும், கற்றோர் நிறைந்த அவையிலும் விரித்து உரைக்கும்போது மீதி அரைப்பகுதியும் அறிவு நிறைவடையும்” என முழு அறிவு பெறுவதற்கான நெறிமுறைகளை நன்னூல் எடுத்துரைக்கிறது.

ஆசிரியர் மாணக்கர் உறவு:

நெருப்பில் குளிர் காய்வதுபோல ஆசிரியர் மாணாக்கர் உறவு என்பது, அகலாமலும் அணுகாமலும் இருத்தல் வேண்டும். கற்றல் கற்பித்தல் பணி சிறக்க இத்தகைய உறவு முறையே சிறப்பானது என்பது நன்னூலார் கருத்தாகும்.

72) காப்பிய மரபில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் நூல் எது?

A) இராமாயணம்

B) மகாபாரதம்

C) மணிமேகலை

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: காப்பிய மரபில், முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் சிலப்பதிகாரம், தமிழ்ப் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலைகளையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

73) கோவலனும், கண்ணகியும் எந்த நகரத்தில் பிறந்தவர்கள்?

A) பூம்புகார்

B) மதுரை

C) வஞ்சி

D) முசிறி

விளக்கம்: சிலப்பதிகாரத்தின் தலைமை மாந்தர்களான கோவலனும் கண்ணகியும், பூம்புகார் நகரத்தில் பெருவணிகக் குடும்பத்தில் பிறந்தவர்கள் கோவலன் பல கலைகளைகக் கற்றவன். உயர் பண்புடன் திகழ்ந்தவன்.

74) யாருடைய மூதாதையர் ஒருவர் நடக்கடலில் சென்றபோது மரக்கலம் உடைந்து அலைகடலில் தவிக்க, மணப்பல்லத்தீவில் வாழும் பெண் தெய்வம் கரை சேர்த்தது?

A) மாதவி

B) கண்ணகி

C) கோவலன்

D) மணிமேகலை

விளக்கம்: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் தருணத்தில், ‘ஒரு சமயம் என் மூதாதையர் ஒருவர் நடுக்கடலில் சென்றபோது மரக்கலம் உடைந்து அலைகடலில் தவிக்க மணிப்பல்லவத்தீவில் வாழும் பெண் தெய்வம் கரை சேர்த்தது. ஆதலால், என் முன்னோரைக் காப்பாற்றிய ‘மணிமேகலா’ என்ற தெய்வத்தின் நினைவாக மணிமேகலை என்னும் பெயரை என் மகளுக்குச் சூட்டுக எனக் கோவலன் கூறினான்’ இக்கூற்று கோவலன் செய்ந்நன்றி மறவாப் பண்பினன் என்பதைப் புலப்படுத்துகிறது.

75) ‘இல்லோர் செம்மலாக’ மாடல மறையோனால் புகழப்படுபவர் யார்?

A) மாதவி

B) கண்ணகி

C) கோவலன்

D) மணிமேகலை

விளக்கம்: கோவலன் யானையிடமிருந்து முதியவரைக் காத்த கருணை மறவனாகவும், பிரிந்த கணவன் மனைவியைப் பெரும்பொருள் கொடுத்து இல்லற வாழ்வில் இணைத்து வைத்த செல்லாச் செல்வனாகவும், தலைவனை இழந்து தடுமாறும் குடும்பத்தாரையும் அவர்தம் சுற்றத்தாரையும் ஆறுதல் கூறி அரவணைத்த ‘இல்லோர் செம்மலாகவும்’ மடல மறையோனால் புகழப்படுகிறான்.

76) கோவலனும் கண்ணகியும் மதுரையில் யாரிடம் அடைக்கலம் புகுந்தனர்?

A) மாதவி

B) மணிமேகலை

C) மாதரி

D) பாண்டிய மன்னன்

விளக்கம்: மதுரை மாநகரில் மாதரியிடம் அடைக்கலம் புகுந்து காற்சிலம்பை விற்கச் செல்லும் வேளையில், கோவலன் தன் தவறை உணர்ந்து கண்ணகியிடம் வருந்தினான்.

77) ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என கோவலனைக் குற்றம் சாட்டியவர் யார்?

A) மாதவி

B) மணிமேகலை

C) மாதரி

D) கண்ணகி

விளக்கம்: கோவலன் காற்சிலம்பை விற்கச் செல்லும் வேளையில், கோவலன் தன் தவறை உணர்ந்து கண்ணகியிடம் வருந்தினான். அப்போது, அவனைப் ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனக் கண்ணகியும் குற்றம் சாட்டுகிறான்.

78) நற்குடிப் பிறப்போ, பெருஞ்செல்வமோ ஒழுக்கம் பிறழ்ந்தவனைக் காப்பற்ற உதவாது என்பதைப் புலப்படுத்துவதாக யாருடைய வாக்குமூலம் அமைகிறது?

A) கவுந்தியடிகள்

B) மாதரி

C) பாண்டிய மன்னன்

D) கோவலன்

விளக்கம்: கோவலனின் ஒழுக்கப் பிறழ்வு அவன் இல்லறத்தைச் சிதைக்கிறது. பெற்றோரைத் துறவுக்குத் தள்ளுகிறது. மாதவியைத் தீக்குளிக்கச் செய்கிறது. கவுந்தியடிகளை வடக்கிருந்து உயிர்விடச் செய்கிறது. பாண்டியனைக் கொன்று மதுரையைத் தீக்கிரையாக்குகிறது. தனிமனித ஒழுக்கக் கேடு சமுதாயத்தைச் சீர்குலைக்கும் என்பதை கோவலனின் பாத்திரப்படைப்பு வாயிலாக இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.

79) “யானோ அரசன் யானே கள்வன்” எனக்கூறி உயிர்விட்டவர் யார்?

A) கவுந்தியடிகள்

B) கோவலன்

C) மாதரி

D) பாண்டிய மன்னன்

விளக்கம்: குற்றம் சுமத்தப்பட்டுக் கோவலன் கொல்லப்பட்டான். இச்செய்தி அறிந்த கண்ணகி, பண்டியனிடம் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதைச் சான்றுடன் மெய்பித்தார். பாண்டிய மன்னன் தன் தவற்றை உணர்ந்து “யானோ அரசன் யானே கள்வன்” எனக்கூறி உயிர்விட்டான்.

80) “பாண்டிய மன்னன், தனது வளைந்துவிட்ட தனது செங்கோலை உயிரைத் துறந்து நோக்கினான்” என்று கூறியவர் யார்?

A) கோப்பெருந்தேவி

B) கண்ணகி

C) சேரமன்னன்

D) சோழமன்னன்

விளக்கம்: பாண்டிய மன்னன் “யானோ அரசன் யானே கள்வன்” எனக்கூறி உயிர்விட்டதை கேள்விப்பட்ட சேரமன்னன், “பாண்டிய மன்னன், தனது வளைந்துவிட்ட தனது செங்கோலை உயிரைத் துறந்து நோக்கினான்” என்று கூறுகிறான். இதிலிருந்து, தமிழ் மன்னர்களின் நீதி தவறாத ஆட்சிமுறை புலப்படுகிறது.

81) “மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்

பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்

குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்பம் அல்லது தொழுதகவு இல்” – இப்பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது?

A) மணிமேகலை

B) சீவக சிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) மகாபாரதம்

விளக்கம்: மழை பொய்த்தாலோ, குடிமக்கள் தவறிழைத்தாலோ, மன்னனையே பழிப்பர், குடிமக்களைப் பசி, பிணி ஆகியவற்றினின்று பாதுகாத்தலும், கொடுங்கோலன் என்ற பழிச் சொல்லுக்கு அஞ்சியும் மன்னர்கள் ஆட்சி நடத்த வேண்டியிருந்ததை சிலப்பதிகார அடிகள் உணர்த்துகின்றன. இப்பாடல் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது.

82) “நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு

பரகதி இழக்கும் பண்பீங் கில்லை” என்ற பாடலடி இடம்பெற்ற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) பரிபாடல்

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: இப்பாடல் சிலப்பதிகாரத்தில் அடைக்கல காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. இளங்கோவடிகள் கற்பனையான காட்சியை அமைக்கிறார். அதில் அறவழியிலிருந்து விலகுபவரை தண்டிக்கும் சதுங்கபூதம் என்ற கற்பனை உருவம் இப்பாடலடி அமைந்துள்ளது.

83) தமிழ் மன்னர்களின் நீதி வழுவாத அறச்சிறப்பினைப் பதிவுசெய்த நூல் எது?

A) சீவக சிந்தாமணி

B) உதயகுமார காவியம்

C) சிலப்பதிகாரம்

D) கம்பராமாயணம்

விளக்கம்: சிலம்பு, பல கருத்துக்களைக் கூறினாலும் வழக்குரை காதை மூலம் தமிழ் மன்னர்களின் நீதி வழுவும் அறச்சிறப்பினைப் பதிவுசெய்கிறது.

84) அரசன் நீதி வழங்கும் முறையை பற்றிப் பேசும் நூல்?

A) சீவக சிந்தாமணி

B) உதயகுமார காவியம்

C) மணிமேகலை

D) கம்பராமாயணம்

விளக்கம்: மணிமேகலை அரசன் நீதி வழங்கும் முறைகளைப் பற்றி பேசுகிறது. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

85) உதயகுமாரன் யாரால் கொல்லப்படுகிறான்?

A) மணிமேகலை

B) காயசண்டிகை

C) காஞ்சனன்

D) மனுநீதிச் சோழன்

விளக்கம்: மணிமேகலையைப் பின்தொடர்ந்த உதயகுமாரன் காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் கொல்லப்படுகிறான். இதைக் கேட்ட உதயகுமாரனின் தந்தை, ‘அரசனது காவல் இல்லாமையால் மாமுனிவர் தவமும் மகளின் கற்பும் இல்லையாகும், கன்றை இழந்த பசுவின் துயரத்தைப் போக்க, தன்மகனைத் தோர்க்காலில் இட்டு முறைசெய்த மனுநீதிச் சோழனின் மரபில் ஒரு தீவினையாளன் தோன்றினான் என்னும் இச்செய்திப் பிற வேந்தரின் காதில் புகுவதற்கு முன்பு உதய்குமாரன் உடலை ஈமத்தீயில் ஏற்றி விடுக’ என்கிறான்.

86) ‘அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள், மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டதில்’ – இப்பாடலடி இடம்பெற்ற நூல் எது?

A) மணிமேகலை

B) உதயக்குமாரக் காவியம்

C) சிலப்பதிகாரம்

D) மகாபாரதம்

விளக்கம்: இப்பாடல் மணிமேகலையில், ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதையில் இடம்பெற்றுள்ளது. மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை வழங்குவதே அறம் என்பதை இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.

87) மணிமேகலையின் மையப்பொருள் என்ன?

A) அரசநீதி முறையை வகுத்தல்

B) கல்வியறிவின் தன்மையை உணர்த்துதல்

C) குற்றத்திற்கு பசியே காரணம் என்பதை உணர்ந்து அதைப் போக்குவதன் மூலம் குற்றங்களை தடுத்தல்

D) அனைத்தும்

விளக்கம்: உலகில் நடைபெறும் பல குற்றச் செயல்களுக்குப் பசிப்பிணியே காரணம் என்பதை உணர்ந்து அதைப் போக்குவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என்பது மணிமேகலையின் மையப்பொருளாகும்.

88) ‘கணிகைமகள்’ எனச் சோழ மன்னனில் குறிக்கப் பெற்ற பெண் யார்?

A) காயச்சண்டிகை

B) மாதவி

C) கண்ணகி

D) மணிமேகலை

விளக்கம்: அரசனுக்கு நிகரான செல்வச் செழிப்பு மிக்க கோவலன் ஒழுக்கக்கேட்டினால் தானும் அழிந்து தன் சுற்றுதையும் அழிக்கிறான். ‘கணிகைமகள்’ எனச் சோழ மன்னனால் குறிக்கப் பெற்ற மணிமேகலை ஒழுக்கத்தின் உயர்வினால் தன்னையும் வென்று, நாட்டையும் நல்வழிப்படுத்திச் சான்றோர் போற்றும் காப்பியத் தலைவி என்னும் உயர்நிலையை அடைகிறான்.

89) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி” என்ற குறளுக்கு இலக்கணமாக விளங்கும் இருகாப்பியங்கள் எவை?

A) சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்

B) சிலப்பதிகாரம், மணிமேகலை

C) மணிமேகலை, குண்டலகேசி

D) குண்டலகேசி, வளையாபதி

விளக்கம்: “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி” என்ற குறளுக்கு இலக்கணமாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விளங்குகிறது.

90) தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: தமிழில் விருத்தாப்பாவில் தோன்றிய முதல் காப்பியம் சீவக சிந்தாமணி. இது சமண சமயக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகிறது.

91) சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?

A) சீத்தலைச் சாத்தனார்

B) திருக்கத்தேவர்

C) இளங்கோவடிகள்

D) யாருமில்லை

விளக்கம்: சீவக சிந்தாமணி – திருத்தத்தேவர்

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

வளையாபதி – ஆசிரியர் அறியப்படவில்லை

குண்டலகேசி – நாதகுத்தனார்

92) திருத்தக்கதேவர் ஒரு சோலையில் நடந்த குரங்குகளின் மூலம் எக்கருத்தை விளக்குகிறார்?

A) அறியாமை

B) தெய்வ நம்பிக்கை

C) அறம்

D) நிலையாமை

விளக்கம்: ஒரு சோலையில் நடந்த காட்சியின் மூலம் ‘நிலையாமை’ என்னும் கருத்தை விளக்குகிறான். கடுவன் ஒன்று பெண் குரங்கிற்குப் பலாப்பழத்தை கீறிப் பிளந்து, நல்ல சுவைமிக்க பலாச்சுளையை கொடுத்தது. அதனை மந்தி வாங்கியது. அந்நேரத்தில் இரண்டு குரங்குகளையும் அடித்துத் துரத்திவிட்டுத் தோட்டக்காரன் பலாப் பழத்தைப் பறித்துக்கொண்டான்.

93) சீவகனின் தந்தை யார்?

A) மாசாத்துவான்

B) மாநாய்க்கன்

C) கோவலன்

D) சச்சந்தன்

விளக்கம்: சீவகனின் தந்தை சச்சந்தன் என்னும் மாமன்னன் ஆகும்.

94) சீவகன் எக்காட்சியைக் கண்டு நிலையாமையை உணர்ந்து தன் அரசு பதவியைத் துறந்தான்?

A) மணிமேகலையை கண்ட காட்சி

B) 8 மகளிரை மணந்த காட்சி

C) தோட்டக்காரன் பலாச்சுளைக்களை உண்ட குரங்குகளை அடித்து துரத்திவிட்டு பலாப்பழத்தை கைப்பற்றிக் காட்சி

D) எதுவுமில்லை

விளக்கம்: பலாச்சுளை உண்ட குரங்குளை அடித்துத் துரத்தி விட்டு பலாப்பழத்தை கைப்பற்றிய தோட்டக்காரனின் செயலைக் கண்ட சீவகன், தன் தந்தை சச்சந்தனிடம் இருந்து கட்டியக்காரன் தங்களது நாட்டைப் பறித்துக் கொண்டதையும் அவனிடமிருந்து தனது நாட்டை மீட்டதையும் நினைவுகூர்கிறான். மெலியவனிடமிருநது வலியவன் நாட்டைக் கைப்பற்றுதல், தொடர்ந்து நடத்துடம் அரச அதிகாரமோ செல்வமோ நிலையானதல்ல என்ற எண்ணமும் அச்சமயத்தில் அவனுக்கு ஏற்பட்டு அரச பதவியைத் துறந்துவிடுகிறான்.

95) சீவக சிந்தாமணி விளக்கும் அறச்செயல்கள் எவை?

A) அரசன், அமைச்சரைப் பலமுறை ஆராய்ந்து தெளிய வேண்டும்.

B) பகையை வெல்லக் கருதினோன் உரிய காலமும் இடமும் வாய்க்கும்வரை தன் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் காத்திருக்க வேண்டும் .

C) பிற உயிர்களுக்குத் துன்பம்வரின் அதைப் போக்க முயல வேண்டும். தான் வருந்தும்படி நேரினும் தனக்குப் பகையல்லாவதவரைச் சிறிதும் வருத்துதல் கூடாது.

D) அனைத்தும்

விளக்கம்: மேலும், தாய் தந்தை சொல்லை மதித்து நடத்தல் வேண்டும். எல்லா உயிர்களிடமும் எப்பேர்தும் அருளுடையவான இருத்தல் வேண்டும் . பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தீயவழிச் செல்வோரைக் காணின், இரங்கி உடனே அவரை நல்வழிப்படுத்த முயல வேண்டும் போன்ற அறச்செயல்களை விளக்கும் காப்பியமாகச் சீவக சிந்தாமணி திகழ்கிறது.

96) ‘உயிர்க்கொலை செய்து அதன் ஊனை உண்டு உங்கள் உயிரை வளர்க்க எண்ணாதீர்’ என்று கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) நாலடியார்

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: பொய் கூறாதீர், புறங்கூறாதீர், யாரையும் இகழ்ந்து பேசாதீர், தீயவற்றைப் பேசி உடல் வளர்க்காதீர் கள்வருடன் நட்புக் கொள்ளாதீர், களவு கொள்ளாதீர் எனப் பல அறங்களை வளையாபதி தொகுத்துக் கூறுகிறது.

97) உழவர்கள், தாம் விளைவித்த விளைச்சலில் ஒரு பகுதியை விதையாகச் சேமிப்பதுப்போல் மறுபிறவிக்கு நாள்தோறும் அறம் செய்ய வேண்டும் என்று கூறும் நூல் எது?

A) சீவக சிந்தாமணி

B) சிலப்பதிகாரம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: இளமையும் நிலையன்று, அனுபவிக்கும் இன்பமும் நிலையன்று, செல்வமும் நிலையன்று, நாள்தோறும் துன்ப வெள்ளமே மிகுதியாக உள்ளது. அதனால், இளமையும் இன்பமும், செல்வமும் நம்மிடம் உள்ளது எனக் கருத வேண்டா. வாழ்க்கை நிலையில்லாதது. எனவே அறம் ஒன்றே நிலைத்து நிற்கும் என்பதே வளையாபதி காட்டும் அறமாகும்.

98) “பாளையாம் தன்மை செத்தும்

பாலனாம் தன்மை செத்தும்

………………………. ” என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

A) சீவக சிந்தாமணி

B) சிலப்பதிகாரம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: நாம், தாயாரின் வயிற்றில் கருவாகி இருந்த நிலை முதற்கொண்டு பருவங்கள் பலவற்றைக் கடந்து மூப்படைகிறோம். இறுதியில் இறக்கப்போகிறோம் என வாழ்வின் நிலையாமை குறித்து.

‘பாளையாம் தன்மை செத்தும்

பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும்

காமுறும் தன்மை செத்தும்

நாளும் இளமை செத்தும்

நமக்கு நாம் அழாதது என்னோ’ என குண்டலகேசி எடுத்துக் கூறுகிறது.

99) எந்தப் பேரரசு எழுச்சிபெற்ற காலத்தில் கம்பராமாயணம் தோன்றியது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: சோழப்பேரரசு எழுச்சிப்பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் கம்பராமாயணம் ஆகும்.

100) ராமனின் தந்தை யார்?

A) தசரதன்

B) ஜனகன்

C) சுக்ரீவன்

D) விபீஷ்ணன்

விளக்கம்: கைகேயிக்கு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரனைய மகனைப் பிரியும் தந்தை தசரதன் ஆவார்.

101) முறை தவறிக் கிடைத்த அரசபதவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடும் இராமனின் இளவல் யார்?

A) லட்சுமணன்

B) பரதன்

C) சத்துருகனன்

D) குகன்

விளக்கம்: தந்தை, சொல் தவறாமல் அரச பதவியைத் துறந்து ராமன் காட்டுக்குச் சென்றதால், முறைதவறிக் கிடைத்த அரசபதவியை, இராமனின் இளவல் பரதன் மறுத்துவிட்டான்.

102) கம்பராமாயணத்தில், “நட்பிற்காக உயிரையும் துறப்பேன்” என்ற சொல்பவர் யார்?

A) பரதன்

B) குகன்

C) சுக்ரீவன்

D) வாலி

விளக்கம்: நட்பிற்காக உயிரையும் துறப்பேன் என்று உரைத்தவர் குகன்.

103) விருந்தோம்பலுக்கு இலக்கணமாகத் திகழும் பண்பாளராக ராமாயணத்தில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) சபரி

B) குகன்

C) சுக்ரீவன்

D) வாலி

விளக்கம்: கானகம் சென்ற இராமனுக்கு சுவைமிகுந்த பழங்களை விருந்தளிக்க எண்ணி, தான் சுவைத்துப் பார்த்து உபசரித்த உயர்ந்த பண்பாளர் சபரி என்னும் பெண் முனிவர் ஆவார்.

104) ‘பிரிவினும் பெருற்காடு சுடுமோ?’ என எண்ணி இராமனைப் பின்தொடர்ந்தவர் யார்?

A) சீதை

B) இலக்குவன்

C) குகன்

D) அனுமான்

விளக்கம்: ‘பிரிவினும் பெருங்காடு சுடுமோ’ என்று கணவனைத் தொடர்ந்து சீதையும் கானகம் சென்றாள்.

105) தமயனைப் பாதுகாப்பதே தனது இலக்கு என வாழ்ந்த கம்பராமயண பாத்திரம் யார்?

A) சுக்ரீவன்

B) இலக்குவன்

C) விபீஷ்ணன்

D) கும்பகர்ணன்

விளக்கம்: அண்ணணைப் பாதுகாப்பதே தனது இலக்கு என வாழ்ந்த பாசமிக்க இளவல் இராமனின் தம்பி இலக்குவன்.

106) கம்பராமாயணத்தில் தொண்டிற்கு உதாரணமாகச் சுட்டப்படுபவர் யார்?

A) குகன்

B) சுக்ரீவன்

C) அனுமன்

D) அஞ்சலை

விளக்கம்: கொண்ட பணியை முடிக்க, கடலாயினும், மலையாயினும் எதையும் கடக்கத் தயாராகும் தொண்டுள்ளம் கொண்டவர் அனுமன்

107) “ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, என்இல்

கேள்வி ஆகும் முதல் திண்பனை போக்கி ஆருந்தவத்தின்

காகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து

போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே” இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?

A) மகாபாரதம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) இராமாயணம்

விளக்கம்: இப்பாடல் கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் நகரப்படலத்தில் 75- வது பாடலாக அமைந்துள்ளது.

108) மரத்திற்கு ஒப்பாக கருதப்படும் அயோத்தி மாநகரைக் கருத்தில் கொண்டு கம்பராமாயணத்தின் படி பொருத்துக.

அ. கல்வி – 1. அரும்பு

ஆ. கேள்வி – 2. வித்து

இ. அரிய தியாகம் – 3. கிளை

ஈ. அன்பு – 4. இலை

A) 4, 3, 2, 1

B) 4, 1, 3, 2

C) 4, 2, 1, 3

D) 2, 3, 4, 1

விளக்கம்: இங்குக் கல்வி என்னும் வித்து, முளைத்து மேலெழுகிறது, எண்ணற்ற பல நூல் கேள்வியாகிய கிளைகளைப் பரவச் செய்கிறது. அரிய தவமாகிய இலைகளே தழைக்கிறது. பல உயிர்களிடத்தும் செலுத்தும் அன்பாகிய அரும்புகளோடு அம்மரம் முகிழ்க்கிறது. அறச்செயல்களாகிய மலர்களோடு விளங்குகிறது. இன்ப அனுபவம் என்ற பழங்கள் பழுத்த மரமே அயோத்தி மாநகர் எனச் சிறப்பிக்கப்படுகிறது.

109) எது அனைத்து அறத்திற்கும் அடிப்படை என்பது கம்பனின் உறுதிப்பாடு?

A) நட்பு

B) கொடை

C) ஒழுக்கம்

D) கல்வி

விளக்கம்: கல்வியால் அடக்கம் – அடக்கத்தால் நல்வாழ்வு – நல்வாழ்வால் பொருள் – நல்வழியில் பெற்ற அப்பொருளால் அறம் – அவ்வறத்தால் இன்ப அனுபவம் கிடைக்கும் கல்வியே அனைத்து அறத்திற்கும் அடிப்படை என்பது கம்பனின் உறுதிப்பாடு.

110) இராவணைப் பற்றிய தவறானக் கூற்று எது?

A) இசையில் வல்லவன்

B) சிறந்த சிவபக்தன்

C) தோள் வலிமை உடையவன்

D) எட்டுத்திக்கு யானைகளுடன் போரிட்டு மார்பில் விழுப்புண் பெற்று தோல்வியுற்றான்.

விளக்கம்: எட்டுத்திக்கு யானைகளுடன் போரிட்டு மார்பில் விழுப்புண் பெற்று வெற்றி கண்டவன்.

111) செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரையும் துறக்கத் துணிந்த இராவணின் இளவல் யார்?

A) விபிஷணன்

B) கும்பகர்ணன்

C) இந்திரஜித்

D) மேகநாதன்

விளக்கம்: தன் தமையன் செய்த தவற்றையும் இடித்துரைக்கத் தயங்காத துணிவு மிக்கவனாகச் செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரையும் துறக்கத் துணிந்தவர் கும்பகர்ணன்

112) இராவணின் மூத்த மகன் யார்?

A) விபிஷணன்

B) கும்பகர்ணன்

C) இந்திரஜித்

D) மேகநாதன்

விளக்கம்: இராவணின் மூத்த புதல்வன் இந்திரஜித் மேலும் மேகநாதன் போன்ற வீரமிக்க புதல்வர்களையும் தனது சுற்றமாக கொண்டார்.

113) இலங்கேஷ்வரன் கெட்டு ஒழியக் காரணம் என்ன?

A) அறநெறி தவறுதல்

B) மக்களை துன்புறுத்தல்

C) பிறன்மணை நயத்தலாகிய அறமற்ற செயல்

D) அனைத்தும்

விளக்கம்: செல்வ வளத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் நாடும் கொற்றமும் சுற்றமும் உடைய ராவணன் கொட்டு ஒழியப் பிறன்மனை நயத்தலாகிய அறமற்ற செயலே காரணமாகிறது.

114) மகாபாரத்தை வடமொழியில் இயற்றியவர் யார்?

A) வியாசர்

B) வில்லிபுத்தூரர்

C) வள்ளளார்

D) வால்மீகி

விளக்கம்: இந்திய மொழிகள் அனைத்திலும் காணப்படும். இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம். வடமொழியில் வியாசர் இயற்றிய பாரதத்தை அடிப்படையாகக் கொண்டு மற்ற மொழிகளில் பாரதக் கதைகள் இயற்றப்பட்டன. தமிழில் வழங்கப்படும் பாரதக் கதைகளில் வில்லிபுத்தூரர் பாரதமும் ஒன்று.

115) “நன்மை வெல்லும் தீமை தோற்கும்” என்பது எதன் மையக்கருத்து?

A) இராமாயணம்

B) மகாபாரதம்

C) வளையாபதி

D) யசோதரக் காவியம்

விளக்கம்: போட்டி, பொறாமை, சூது போன்ற அறத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர் தோல்வி அடைவர். அதற்கு மாறாகச் சான்றோர் வகுத்த நெறியில் நிற்போர் அறவழியில் வெற்றி பெறுபவர். நன்மை வெல்லும், தீமை தோற்கும் என்பதே மகாபாரத்தின் மையக்கருத்தாகும்.

116) “அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்” என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது?

A) நாலாடியார்

B) நான்மணிக்கடிகை

C) புறநானூறு

D) திருக்குறள்

விளக்கம்: உறவினர்க்கு இடையே ஏற்படும் பொறமைப் பண்பானது, வஞ்சகம், துரோகம் போன்ற இழி செயல்களுக்கு இட்டுச் சென்று போரில் ஈடுபட வைக்கிறது. அதுவே அழிவிற்குக் காரணமாக அமைகிறது.

117) யார் இடர்பாடுகள் வந்தபொழுதும் அறத்தின் மீது மாறாப்பற்றையும், ஒற்றுமையின் வலிமையையும் நிலைநிறுத்தினான்?

A) அர்ச்சுனன்

B) நகுலன்

C) தருமன்

D) துரியோதனன்

விளக்கம்: எத்தனையோ இடர்ப்பாடுகள் வந்தபொழுதும் தருமன், அறத்தின் மீது மாறாதப்பற்றையும், ஒற்றுமையின் வலிமையையும் நிலைநிறுத்தினான்.

118) பொருத்துக.

அ. தருமன் – 1. வில்லாற்றல்

ஆ. பீமன் – 2. அறவழி

இ. அர்சுனன் – 3. வலிமை

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: தருமன் – அறவழி

பீமன் – வலிமை

அர்சுனன் – வில்லாற்றல்

119) திருதராட்டிரனுக்கு எத்தனை புதல்வர்கள்?

A) 5

B) 400

C) 100

D) 20

விளக்கம்: பாண்டுவின் 5 புதல்வர்ளும் பஞ்சபாண்டவர்களாவர். திருதராட்டிரனின் 100 புதல்வர்களும் கௌரவர்கள் ஆவர்.

120) “தீங்கொடு வடிவமாம் திறன் சுயோதனன்” என்று வில்லிபுத்தூரர் யாரை அறிமுகப்படுத்தினார்?

A) அர்ச்சுனன்

B) திருதராட்டிரன்

C) துச்சாதனன்

D) துரியோதனன்

விளக்கம்: கௌரவர்களுள் மூத்தவன் துரியோதனன், தன் தீயக்குணங்களால் துன்பத்திற்கு ஆளாகிறான் “தீங்கொரு வடிவமாம் திறன் சுயோதனன்” என்று துரியோதனனை வில்லிபுத்தூரர் அறிமுகப்படுத்துகிறார்.

121) துரியோதனின் தோல்விக்கு காரணம் யார்?

A) விதுரன்

B) பீஷ்மர்

C) துரோணர்

D) சகுனி

விளக்கம்: துரியோதனன், விதுரன் உள்ளிட்ட சான்றோர்களின் அறிவுரைகளையும் தருமன், பீமனின் இடித்துரைகளையும் புறக்கணித்தான். பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், விதுரர் முதலிய சான்றோர்கள் போர்க்களத்தில் துரியோதனன் பக்கம் நின்றாலும் சகுனியின் கூடா நட்பினால் அறமல்லாச் செயல்களில் ஈடுபட்டதனால் இறுதியல் தோல்வியையும் மரணத்தையும் தழுவினான்

122) வில்லிபாரதத்தை எழுதியவர் யார்?

A) வில்லிபுத்தூரார்

B) வியாசர்

C) கபிலர்

D) வால்மீகி

விளக்கம்: வில்லிபாரதம் வில்லிபுத்தூரால் எழுதப்பட்டது. இது ‘பொறுமை’ என்னும் அறத்தைத் தருமன் மூலமாக வெளிப்படுத்துகிறது. நடுநிலைமையாக அறவழியில் செல்லக்கூடிய பொய்மை கூறாத பண்புள்ளவனாகத் தருமன் திகழ்கிறான்

123) அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டதாகப் பொய் உரைக்கும்படி யார் தருமனிடம் கூறியது?

A) குந்தி

B) கர்ணன்

C) அரச்சுனன்

D) கண்ணன்

விளக்கம்: அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டதாகப் பொய் உரைக்கும்படி கண்ணன் தருமனிடம் கூறுகிறான். இதை மறுக்கும் தருமன் இல்வாழ்க்கைத் துணை, சான்றோர், நெருங்கிய உறவினர், அன்பு, நிலையான புகழ், மிகுந்த செல்வம், திறமை, அறிவு இவற்றால் கிடைக்கும் பொருட்கள், தவம், புண்ணியம் ஆகியன பொய் உரைப்பதால் அழிந்துவிடும் என்று கூறுகிறான்.

124) யார் பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றது?

A) வாசுதேவன்

B) விதுரன்

C) கண்ணன்

D) துரோணாச்சாரியார்

விளக்கம்: கண்ணன் பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது செல்கிறான். அப்போது விதுரனின் மாளிகையில் தங்குகிறான்.

125) “…………. மதி அமைச்சர்

ஆய்அரசு அழிப்பினும்……………” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

A) மகாபாரதம்

B) வில்லிபாரதம்

C) இராமாயணம்

D) கந்தப்புராணம்

விளக்கம்: “…………. மதி அசைச்சர்

ஆய் அரசு அழிப்பினும்

குரவர் நல் உரை மறுக்கினும் பிறர்

புரிந்த நன்றியது கொல்லினும்

ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும்

அவருடன் அழன்று பொர உன்னினும்

இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும்

இவர்கள் நரகில் எய்துவார்” – வில்லிப்புத்தூரார்

இப்பாடல் துரியோதனிடம் பாண்டவருக்காக தூது சென்ற கண்ணன் பாடிய பாடலாக வில்லிபுத்தூரார் அமைத்துள்ளார்.

126) சூதாட அழைத்த துரியோதனனுக்கு மறுமொழியாகத் தருமன் கூறியது என்ன?

A) சினம் கொள்ளுதல், மற்றவரின் குற்றங்களை எடுத்துக் கூறித் தூற்றல் தீமை பயக்கும்

B) ஒருவரிடம் முதலில் நட்புக் கொண்டு பின்பு அவரிடம் ஐயம் கொள்ளுதல் தீமை பயக்கும்

C) மிகக் கொடுமையான செயலான தேடுதலை விரும்புதல், கூறிய உறுதிமொழியிலிருந்து தவறுதல் ஆகியவை தீமை பயக்கும்.

D) அனைத்தும்

விளக்கம்: இதன் மூலம் சூதாடுவது பல தீயச்செயல்களுக்கு நிகரானது என்பது தெளிவாகிறது.

127) பாரதப் போரில் நெறிமுறைகளை மீறி, பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்றவர் யார்?

A) துரியோதனன்

B) விதுரன்

C) அசுவத்தாமன்

D) அர்சுனன்

விளக்கம்: பாரதப் போரில் நெறிமுறைகளை மீறி, பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்ற அசுவத்தாமனிடம் துரியோதனன், “பாலர் மகுடம் துணிந்தது இன்று என்ன வீரியம், என்ன நினைத்து இச்செயலைச் செய்தாய், எங்கள் குலக்கொழுந்துகளைக் கொன்று விட்டாய். எங்களுக்குக் தலைமுறை இல்லாமல் போயிற்று மற்றும் இது அறச் செயலும் அல்ல” என்று கடிந்து கொள்கிறான். இதன் மூலம் போர்க்களத்திலும் அறம் பிறழா நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது.

128) பொருத்துக.

அ. தாய்மை – 1. கண்ணகி, சீதை , பாஞ்சாலி

ஆ. கற்பு – 2. தசரதன்

இ. தந்தை பாசம் – 3. விசையை, மாதவி, குந்தி

ஈ. பொறுமை – 4. தருமன், இராமன்

A) 4, 3, 2, 1

B) 3, 1, 2, 4

C) 3, 1, 4, 2

D) 3, 4, 2, 1

விளக்கம்: தாய்மைக்கு – விசையை, மாதவி, குந்தி

கற்புக்கு – கண்ணகி, சீதை, பாஞ்சாலி

தந்தை பாசத்திற்கு – தசரதன்

பொறுமைக்கு – தருமன், இராமன்

129) பொருத்துக.

அ. நட்பு – 1. கர்ணன்

ஆ. தொண்டு – 2. இலக்குவன், அனுமன்

இ. ஈகை – 3. குகன், கர்ணன்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 2, 1, 3

விளக்கம்: நட்புக்கு – குகன், கர்ணன்

தொண்டுக்கு – இலக்குவன், அனுமன்

ஈகைக்கு – கர்ணன்

130) பொருத்துக.

அ. நீதி வழுவா அரசாட்சி – 1. பீஷ்மர், பரதன்

ஆ. தியாகம் – 2. விதுரன்

இ. விவேகம் – 3. பாண்டியன்

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 1, 3

D) 2, 31

விளக்கம்: நீதி வழுவா அரசாட்சி – பாண்டியன்

தியாகத்திற்கு – பீஷ்வா, பரதன்

விவேகத்திற்கு – விதுரன்

131) பொருத்துக.

அ. கூடா நட்பிற்கு – 1. துரியோதனன், சூர்ப்பனகை

ஆ. ஒழுக்கப் பிறழ்விற்கு – 2. கூனி, சகுனி, கட்டியங்காரன்

இ. பொறாமைக்கு – 3. கோவலன், இராவணன்

A) 2, 3, 1

B) 2, 1, 3

C) 3, 2, 1

D) 1, 3, 2

விளக்கம்: கூடா நட்பிற்கு – கூனி, சகுனி, கட்டியங்காரன்

ஒழுக்கப் பிறழ்விற்கு – கோவலன், இராவணன்

பொறாமைக்கு – துரியோதனன், சூர்ப்பனகை, காந்தாரி

மேலும், வழி தவறிய மகனை நல்வழிப்படுத்தத் தவறிய திருதராட்டிரன், பெண்மையை இழிவுப்படுத்திய துச்சாதனன் போன்றோர் தீமையின் உருவகங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

132) திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்னும் பின்பும் என்ன ஆட்சி நிலவி வந்தது?

A) தன்னாட்சி

B) மை ஆட்சி

C) இரட்டை ஆட்சி

D) முடியாட்சி

விளக்கம்: திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் முடியாட்சியே நிலவிவந்தது. நாட்டையாளும் பின்பும் முடியாட்சியே நிலவிவந்தது. நாட்டையாளும் மன்னனே, தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும் செய்தான். நீதி வழங்குவதற்கென அறங்கூறு அவையங்களும் இருந்தன என்பதை இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

133) ‘அறங்கூறு அவையம்’ பற்றிக் கூறும் நூல் எது?

A) பத்துப்பாட்டு, பரிபாடல்

B) பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி

C) பத்துப்பாட்டு, புறநானூறு

D) பத்துப்பாட்டு, நற்றிணை

விளக்கம்: ‘அறங்கூறு அவையம்’ பற்றி பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி ஆகிய இரு நூல்களும் கூறுகின்றன.

134) ‘அறன்நிலை திரயா அன்பின் அவையம்’ என்று கூறும் நூல் எது?

A) பத்துப்பாட்டு

B) மதுரைக்காஞ்சி

C) புறநானூறு

D) நற்றிணை

விளக்கம்: ‘அறன்நிலை திரயா அன்பின் அவையம்’ எனக் கூறும் நூல் புறநானூறு.

135) ‘மறங்கொழு சோழர் உறத்தை அவையத்து

அறங்கெட அறியா தாங்கு’ எனக் கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) பத்துப்பாட்டு

C) நற்றிணை

D) அகநானூறு

விளக்கம்: ‘மறங்கெழு சோழன் உறத்தை அவையத்து

அறங்கெட அறியா தாங்கு’ எனக் கூறும் நூல் நற்றிணை.

136) ‘அறங்கெழு நல்லவை’ என்று கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) பத்துப்பாட்டு

C) நற்றிணை

D) அகநானூறு

விளக்கம்: ‘அறங்கெழு நல்லவை’ என்று கூறும் நூல் அகநானூறு

137) ‘முறையுடைய அரசன் செங்கோல் அவையத்து’ எனக் கூறும் நூல் எது?

A) குறுந்தொகை

B) புறநானூறு

C) பத்துப்பாட்டு

D) நற்றிணை

விளக்கம்: ‘முறையுடைய அரசன் செங்கோல் அவையத்து’ எனக் கூறும் நூல் குறுந்தொகை.

138) “அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையம்” எனக் கூறும் நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) குறுந்தொகை

D) நற்றிணை

விளக்கம்: “அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையம்” எனக் கூறும் நூல் சிலப்பதிகாரம். அறநூல்களை அடிப்படையாகக் கொண்ட நீதி வழங்கியமையை ‘அறங்கூறு அவையம்’ என்னும் சொல்லாட்சி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

139) சங்ககால பெண்பாற் புலவர் வரிசையில் இடம் பெறாதவரைத் தேர்ந்தெடுக்க?

A) ஒளவையார்

B) ஆதிமந்தியார்

C) காரைக்கால் அம்மையார்

D) நப்பசலையார்

விளக்கம்: ஒளவையார், நச்சௌ;ளையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நப்சலையார், முடத்தாமக்கண்ணியார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார் முதலான பெண்பாற் புலவர்கள் சங்ககால புலவர்களாவர்.

140) ‘கோவலன் செய்ந்நன்றி மறவாப் பண்பினன்’ என்பதை எக்கூற்று புலப்படுத்துகிறது?

A) யானையிடமிருந்து முதியவரைக் காத்த கருணை மறவன்.

B) கணவனுக்கும் மனைவிக்கும் பெரும் பொருள் கொடுத்து இல்லற வாழ்வில் இணைத்து வைத்த சொல்வளச் செல்வன்

C) ‘மணிமேகலா’ தெய்வத்தின் நினைவாகத் தன்மகளுக்கு மணிமேகலை எனப் பெயர் சூட்டல்

D) தலைவனை இழந்து தடுமாறும் குடும்பத்தாரையும் அவர்தம் சுற்றத்தையும் ஆறுதல் கூறி அரவணைத்த இல்லோர் செம்மல்

விளக்கம்: ‘மணிமேகலா’ என்ற தெய்வத்தின் நினைவாகத் தன்மகளுக்கு ‘மணிமேகலை’ எனப் பெயர் சூட்டக் கூறினான் கோவலன்.

141) பின்வருவனவற்றில் அக நூல் எது?

A) நாலடியார்

B) குறுந்தொகை

C) இன்னாநாற்பது

D) திருக்குறள்

விளக்கம்: குறுந்தொகை என்பது பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது அக நூலாகும். மற்றவை பதினெண் கீழக்கணக்கு நூல்கள். அவை நீதி நூல்கள்.

142) பொருத்துக

அ. வாக்குத்தவறாமை – 1. சபரி

ஆ செயல்வீரர் – 2. குகன்

இ. நட்பு – 3 அனுமன்

ஈ. விருந்து – 4. தசரதர்

A) 3, 4, 1, 2

B) 4, 3, 2, 1

C) 1, 2, 3, 4

D) 4, 3, 1, 2

விளக்கம்: வாக்குத்தவறாமை – தசரதர்

செயல்வீரர் – அனுமன்

நட்பு – குகன்

விருந்து – சபரி

143) பொருந்தாத இணையைச் சுட்டுக

A) தருமன் – பொறுமை

B) அரச்சுனன் – வில்லாற்றல்

C) பீமன் – கொடை

D) துரியோதனன் – பொறாமை

விளக்கம்: பீமன் – வலிமை

கர்ணன் – கொடை

144) பொருத்துக.

அ. பாண்டு – 1. காந்தரி

ஆ. இராமன் – 2. மண்டோதரி

இ. இராவணன் – 3. சீதை

ஈ. திருதராட்டிரன் – 4. குந்தி

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 2, 3, 4, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்:

பாண்டு – குந்தி

இராமன் – சீதை

இராவணன் – மண்டோதரி

திருதராட்டிரன் – காந்தரி

145) பொருந்தாத இணை எது?

A) கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்

B) ஒளவையார் – அதியமான்

C) பாரி – கபிலர்

D) கூனி – சகுனி

விளக்கம்: அனைத்திலும் அரசர்- புலவர் நட்பு பேசப்படுகிறது. ஆனால், கூனி- சகுனி என்பதில் அவ்வாறு பொருத்தப்படவில்லை.

பொருத்தமான இணை,

கூனி – கைகேயி

சகுனி – துரியோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!