MCQ Questions

தமிழ்நாட்டுப் பொருளாதாரம் 11th Economics Lesson 5 Questions in Tamil

11th Economics Lesson 5 Questions in Tamil

5] தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

1) மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு இந்திய அளவில் எந்த இடத்தில் உள்ளது?

A) ஐந்தாவது இடத்தில்

B) ஆறாவது இடத்தில்

C) ஏழாவது இடத்தில்

D) எட்டாவது இடத்தில்

(குறிப்பு – இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் முறையே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகும்.)

2) தமிழ்நாடு மாநிலம், இந்திய அளவில் கீழ்காணும் எவற்றில் மூன்றாமிடத்தில் உள்ளது?

I. மொத்த உள்நாட்டு உற்பத்தி

II. தலா வருமான முதலீடு

III. நேரடி அந்நிய முதலீடு

IV. தொழில்துறை உற்பத்தி

A) I, II, III இல் மட்டும்

B) II, III, IV இல் மட்டும்

C) I, III, IV இல் மட்டும்

D) I, II, IV இல் மட்டும்

(குறிப்பு – இந்தியாவில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் இரண்டாவது இடத்திலும், தலா வருமான முதலீடு, நேரடி அன்னிய முதலீடு மற்றும் தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.)

3) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சமூக மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் தமிழ்நாடு உள்ளது.

கூற்று 2 – உடல்நலம், உயர்கல்வி, குழந்தை இறப்பு விகிதம் மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது.

கூற்று 3 – பூகோள ரீதியாக தமிழ்நாடு இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாக உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஒரே மாதிரியானவை அல்ல.மண்டலங்கள் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஏனைய பகுதிகளை விட சிறப்பாக உள்ளன. பூகோள ரீதியாக தமிழ்நாடு பதினோராவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் ஐந்தாவது பெரிய மாநிலமாகும்.)

4) எந்த ஆண்டு முதல் இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது மிக விரைவாக உள்ளது?

A) 2004 முதல்

B) 2005 முதல்

C) 2006 முதல்

D) 2007 முதல்

(குறிப்பு – 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது. தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. இந்திய அளவில் ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏழை மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிக குறைவாக உள்ளது)

5) இந்தியாவின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு கீழ்க்கண்டவற்றில் எது?

A) 5.75 லட்சம் கோடி

B) 6.19 லட்சம் கோடி

C) 7.24 லட்சம் கோடி

D) 8.63 லட்சம் கோடி

(குறிப்பு – இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மனித வளர்ச்சி குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது. மூலதன முதலீட்டிலும் (2.92லட்சம் கோடி), மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் (6.19லட்சம் கோடி) தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது.)

6) தமிழ்நாட்டின் சிறப்புகளில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 17 சதவீத பங்களிப்புடன் (37000அலகுகள்) இரண்டாமிடம் வகிக்கிறது.மேலும் தொழில்துறையில் உள்ள வேலைவாய்ப்பில் 16 சதவீத பங்களிப்பினை கொண்டுள்ளது.

II. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது. மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

III. தமிழ்நாட்டின் வணிக வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளும் உள்ள கடன் வாய்ப்பு விகிதம் மிக சிறப்பாக உள்ளது

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது. புதுப்பிக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யில் 17 சதவீத பங்களிப்புடன் முதலிடம் வகிக்கிறது)

7) நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?

A) இரண்டாம் இடம்

B) மூன்றாமிடம்

C) நான்காமிடம்

D) ஐந்தாமிடம்

(குறிப்பு – நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா குஜராத் போன்ற மாநிலங்கள்.சில பொருளாதார குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது.கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. தமிழ்நாடு சுகாதார மேற்கல்வி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவற்றில் சிறப்பானதாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது)

8) தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு வீதம் எத்தனை?

A) 12

B) 13

C) 14

D) 15

(குறிப்பு – தமிழ் நாட்டின் சுகாதார குறியீடானது கேரளம், பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு வீதம் 14 ஆகும். இது பிற மாநிலங்களை காட்டிலும் மிகக்குறைவு. மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 2014 ஆம் ஆண்டில் 21 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 20 ஆகவும் குறைந்துள்ளது.)

9) இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நீர் வளத்தில் எத்தனை சதவீதம் கொண்டுள்ளது?

A) 3 சதவீதம்

B) 4 சதவீதம்

C) 5 சதவீதம்

D) 6 சதவீதம்

(குறிப்பு – பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவாகும். இந்திய மாநிலங்களுக்கிடையில் மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த போதிலும், நீர் வளத்தில் 3 சதவீதமும், நிலப் பரப்பளவில் நான்கு சதவீதமும் கொண்டுள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான மக்களுக்கான சமூக நல கொள்கைகளை கொண்டிருப்பதே தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்கு பரவலாக்கப்பட்டு உள்ள பொது வினியோகத் திட்டம், மதிய உணவு திட்டம், பொது சுகாதார கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு குறிப்பிடலாம்)

10) தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் எண்ணிக்கை எத்தனை?

A) 17 ஆறுகள்

B) 18 ஆறுகள்

C) 19 ஆறுகள்

D) 20 ஆறுகள்

(குறிப்பு – தென்மேற்கு பருவக்காற்றை தொடர்ந்து வரும், வடகிழக்கு பருவக்காற்று மழைப் பொழிவுக்கான மிகப் பெரிய ஆதாரமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 17 ஆறுகள் உள்ளன. பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, சிறுவாணி, நொய்யல், வைப்பாறு, குண்டாறு போன்றவை முக்கிய ஆறுகளாகும்)

11) தமிழகத்தில் கீழ்காணும் எந்தப் பாசனம் அதிக அளவில் உள்ளது?

A) ஆற்றுபாசனம்

B) சொட்டுநீர் பாசனம்

C) கிணற்று பாசனம்

D) வாய்க்கால் பாசனம்

(குறிப்பு – தமிழகத்தில் கிணற்று பாசனம் அதிக அளவில் உள்ளது. கிணற்று பாசனம் 56 சதவீதம் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு அரசு அறிக்கை 2012ன்படி தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டுகள் எண்ணிக்கை 81 ஆகும்.தமிழ்நாட்டில் உள்ள வாய்க்கால்களின் எண்ணிக்கை 2239 ஆகும்.தமிழ்நாட்டில் உள்ள மொத்த குளங்களின் எண்ணிக்கை 41262 ஆகும்)

12) தமிழ்நாட்டில் உள்ள சுரங்கங்களின் இடங்களை பொருத்துக.

I. மாங்கனீசு – a) ஏற்காடு

II. பாக்சைட் – b) கரடிக்குட்டம்

III. இரும்புத்தாது – c) சேலம்

IV. மாலிப்டினம் – d) கஞ்சமலை

A) I-c, II-a, III-d, IV-b

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – டைட்டானியம் லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத்திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் முன்னோடி திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தை (NLC) குறிப்பிடலாம். இதன் வளர்ச்சியினால், மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன)

13) கீழ்காணும் எந்த உலோகம் இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்திலுள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது?

A) யுரேனியம்

B) கேட்மியம்

C) மாலிப்டினம்

D) பிரான்சியம்

(குறிப்பு – மாலிப்டினம் எனும் இரசாயன தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்திலுள்ள கரடிக்கூட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது. இதேபோல் சேலத்தில் மாங்கனீசு சுரங்கமும், ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்பு தாது சுரங்கங்கமும் அமைந்துள்ளன)

14) கீழ்காணும் கனிமங்களையும், நாட்டின் இருப்பில் தமிழகத்தின் பங்கினையும் பொருத்துக.

I. லிக்னைட் – a) 17%

II. வேர்மிகுலைட் – b) 87%

III. கிராபைட் – c) 66%

IV. மேக்னசைட் – d) 33%

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – லிக்னைட் 87%, வேர்மிக்குலைட் 66%, கார்னெட் 42%, ஜேர்கான் 38%, கிராஃபைட் 33%, லெமனைட் 28%, ரூட்டைல் 27%, மோனசைட் 25% மற்றும் மேக்னசைட் 17%. தமிழ்நாட்டில் உள்ள கனிமங்களின் பங்கினை இந்திய நிலவியல் மற்றும் சுரங்கத்துறை அறிக்கையின் மூலம் அறியலாம்.)

15) தமிழ்நாடு கீழ்க்காணும் எந்த நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளது?

I. இங்கிலாந்து

II. பிரான்ஸ்

III. தென் அமெரிக்கா

IV. ஸ்பெயின்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 121 கோடி மக்கள் தொகையில் 7.21 கோடி மக்கள் தொகையுடன் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி தனித்த தேசிய இனமாக இயங்கக்கூடிய நாடுகளின் மக்கள் தொகையைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை கூடுதலாக உள்ளது)

16) மக்கள் தொகை அடர்த்தி இயல் தேசிய சராசரி எவ்வளவு?

A) 380

B) 382

C) 384

D) 386

(குறிப்பு – மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2001 ஆம் ஆண்டில் 480 ஆக இருந்தது. அதுவே 2011ம் ஆண்டில் 555 ஆகவும் உள்ளது. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில், தமிழ்நாடு 12 வது இடத்தில் உள்ளது.மக்கள் தொகை அடர்த்தியின் தேசிய சராசரி 382 ஆகும்)

17) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5 சதவீதமாக உள்ளது.

கூற்று 2 – தமிழகத்தில் நகரமயமாதலின் சராசரி அளவு 48.4 சதவீதமாக உள்ளது.

கூற்று 3 – இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதத்தை தமிழகம் கொண்டுள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் சராசரி அளவு 42.4 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதத்தை தமிழகம் கொண்டுள்ளது. நகர மக்கள் மக்கள்தொகையில் தமிழகம் 9.6 சதவீதத்தைக் கொண்டுள்ளது)

18) தமிழ்நாட்டின் பாலின விகிதம் கீழ்கண்டவற்றுள் எது?

A) 990

B) 995

C) 997

D) 999

(குறிப்பு – சமச்சீர் பாலின விகிதம் என்பது பெண்களின் வாழ்வியல் மேம்பாடு அடைந்து இருப்பதைக் குறிக்கிறது.தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போதும், இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது)

19) பொருத்துக

I. இந்தியாவின் கல்வியறிவு விகிதம் – a) 67.9%

II. தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் – b) 74.04%

III. தமிழ்நாட்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு – c) 80.33%

IV. இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு – d) 70.6%

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – IMR குறியீட்டில் தமிழகம் 17, இந்தியா 34 கொண்டுள்ளது.MMR குறியீட்டில் தமிழகம் 79, இந்தியா 159 கொண்டுள்ளது. பாலின விகிதத்தில் தமிழ்நாடு 995, இந்தியா 940 ம் கொண்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு வீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது)

20) நிதி ஆயோக் அறிக்கையின்படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?

A) முதலிடம்

B) இரண்டாமிடம்

C) மூன்றாமிடம்

D) நான்காம் இடம்

(குறிப்பு – நிதி ஆயோக் அறிக்கையின்படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 79 எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 159 சரிபாதி அளவாகும். மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 61, மகாராஷ்டிரா 67 என முதலிரண்டு இடங்களில் உள்ளது.)

21) பொருத்துக

I. இந்திய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் – a) 68.6 ஆண்டுகள்

II. இந்திய பெண்களின் சராசரி ஆயுட்காலம் – b) 66.4 ஆண்டுகள்

III. தமிழ்நாடு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் – c) 72.7 ஆண்டுகள்

IV. தமிழ்நாடு பெண்களின் சராசரி ஆயுட்காலம் – d) 69.6 ஆண்டுகள்

A) I-b, II-d, III-a, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவு ஆயுட்காலம் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக உள்ளது.இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 67.9 ஆண்டுகள் ஆகும்(ஆண் -66.4ஆண்டுகள், பெண் – 69.6ஆண்டுகள்). ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஆயுட்காலம் 70.6 ஆண்டுகளாக (ஆண் – 68.6ஆண்டுகள், பெண் – 72.7ஆண்டுகள்) உள்ளது)

22) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தமிழ்நாட்டின் எழுத்தறிவு நிலை, மற்ற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது முன்னேறிய நிலையில் உள்ளது.

கூற்று 2 – மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, ஒரு மாநிலத்தின், ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.

கூற்று 3 – தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்கத்தின் ஆய்வின்படி நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2016-2017 ஆம் நிதியாண்டில் 207.8 பில்லியன் டாலராக உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலக அளவில் குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகவும், வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சமமாக உள்ளது. பிற நாடுகளுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது)

23) தமிழ் நாடு மற்றும் உலக நாடுகளின் GSDP யினை பொருத்துக.

I. தமிழ்நாடு – a) 184 டாலர்

II. ஈராக் – b) 207.8 டாலர்

III. நியூசிலாந்து – c) 81 டாலர்

IV. இலங்கை – d) 171 டாலர்

A) I-b, II-d, III-a, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – தமிழ்நாடு 207.8 டாலர், ஈராக் 171 டாலர், நியூசிலாந்து 184 டாலர், இலங்கை 81 டாலர் என GSDPயினை கொண்டுள்ளது.இதனை IMF outlook 2017ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையானது 63.70 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது)

24) தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறையின் பங்களிப்பு எந்த இடத்தில் உள்ளது?

A) முதலிடம்

B) இரண்டாமிடம்

C) மூன்றாமிடம்

D) நான்காமிடம்

(குறிப்பு – தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையானது முதலிடத்திலும், தொழில்துறை 28.5 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. வேலைவாய்ப்பை பொருத்தமட்டில், வேளாண்மை முக்கியப் பங்கு வகித்தாலும் அதனுடைய மாநில உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பானது 7.6 சதவீதமாக குறைந்துள்ளது)

25) தமிழ்நாட்டின் தனிநபர் வருமானத்தை பிற நாடுகளுடன் பொருத்துக.

I. தமிழ்நாடு – a) 1443 டாலர்

II. நைஜீரியா – b) 2200 டாலர்

III. பாகிஸ்தான் – c) 1358 டாலர்

IV. வங்கதேசம் – d) 2175 டாலர்

A) I-b, II-d, III-a, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 2700 டாலர்களுடன், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை காட்டிலும் உயர்வாக உள்ளது. தமிழ்நாட்டின் தலா வருமானம் 2018 ஆம் ஆண்டில் உள்ள புள்ளிவிவரங்களின் படி, இந்திய சராசரி அளவை விட 1.75 மடங்கு அதிகமாக உள்ளது. அதே போல் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது அந்நாடுகளை விடவும் அதிகமாக உள்ளது. மேற்கண்ட விவரங்கள் உலக வங்கியின் தேசிய கணக்குகள் அறிக்கையின் மூலம் பெறப்பட்டுள்ளது)

26) இந்திய மாநிலங்களின் தலா வருமானத்தை பொருத்துக

I. தமிழ்நாடு – a) 1,55,516 ரூபாய்

II. கேரளா – b) 1,46,416 ரூபாய்

III. கர்நாடகா – c) 1,57, 116 ரூபாய்

IV. தெலுங்கானா – d) 1,58,360 ரூபாய்

A) I-c, II-a, III-b, IV-d

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – இந்திய ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 17, 2017ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மாநிலங்களின் தலா வருமானம் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ரூபாயின் அடிப்படையில் 2010-2011இல் தமிழ்நாட்டின் தலா வருமானம் ரூபாய் 1,03,600 ஆக இருந்தது.2017-2018இல் ரூபாய் 1,88,492 ஆக உயர்ந்துள்ளது)

27) தமிழகத்திலுள்ள வேளாண் காலநிலை மண்டலங்களின் எண்ணிக்கை என்ன?

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

(குறிப்பு – வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும்.தற்போது தமிழகத்தில் 7 வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது(Agro Climatic Zones). இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளது. தமிழக அளவில் உதிரிப்பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது)

28) இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

A) தமிழ்நாடு

B) கர்நாடகம்

C) மேற்கு வங்காளம்

D) உத்தரப் பிரதேசம்

(குறிப்பு – தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்று நீர் மற்றும் பருவ மழையை நம்பி உள்ளது. தற்போது இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக, மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக உள்ளது.மிகப்பெரிய அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் உள்ளது. கம்பு, சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது)

29) தமிழகத்தின் உற்பத்திநிலையை பொருத்துக.

I. கரும்பு – a) முதல் இடம்

II. மிளகு – b) இரண்டாம் இடம்

III. ரப்பர் – c) மூன்றாம் இடம்

IV. வாழை – d) நான்காம் இடம்

A) I-d, II-c, III-b, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. கம்பு, சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள் கரும்பு போன்றவை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. தோட்டக்கலைப் பயிர், வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலும், ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், மிளகு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், கரும்பு உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது.)

30) தமிழக அரசின் வேளாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2017-2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி மொத்த தானியங்களின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) ஐந்தாவது இடம்

B) ஆறாவது இடம்

C) ஏழாவது இடம்

D) எட்டாவது இடம்

(குறிப்பு – மக்காச்சோளம், கம்பு, கடலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தி அளவில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்திலும், தேங்காய், நெல் போன்றவற்றின் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், கரும்பு, சூரியகாந்தி, சோளம் போன்றவற்றின் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், திடமான தானியங்களின் உற்பத்தி அளவில் தேசிய அளவில் நான்காம் இடத்திலும், மொத்த தானியங்களின் உற்பத்தி அளவில் தேசிய அளவில் எட்டாம் இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.)

31) இந்தியாவின் மருத்துவ தலை நகரம் என்று அழைக்கப்படுவது கீழ்க்கண்டவற்றுள் எது

A) கல்கத்தா

B) மும்பை

C) சென்னை

D) ஹைதராபாத்

(குறிப்பு – சென்னை, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் எனவும், வங்கி தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது)

32) தமிழ்நாட்டில் பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக விளங்குவது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) அரியலூர்

B) சேலம்

C) கரூர்

D) கோயம்புத்தூர்

(குறிப்பு – மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மையமிட்டுள்ளன. சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது. பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக கரூர் விளங்குகிறது. தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிற்க்கான பங்களிப்பில் 80 சதவீதத்தை கரூர் வழங்குகிறது)

33) தமிழ்நாட்டில் தொழில்களையும், அதற்கு பெற்று விளங்கும் மாவட்டங்களையும் பொருத்துக.

I. தோல் பதனிடுதல் – a) சிவகாசி

II. பின்னலாடை – b) ராணிப்பேட்டை

III. மஞ்சள் உற்பத்தி – c) திருப்பூர்

IV. தீப்பெட்டி – d) ஈரோடு

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலுக்கு புகழ்பெற்று விளங்கும் இடங்களாக ராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி திகழ்கிறது. சேலம் விசைத்தறி, கைத்தறி, ஜவுளி, எஃகு, மரவள்ளி போன்றவற்றின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. லாரி கலங்களை உற்பத்தி செய்வதில் சங்ககிரி பெயர் பெற்று விளங்குகிறது. ஆள்த்துளை இடும் பணிகள் திருச்செங்கோட்டிலும், கோழிப்பண்ணை நாமக்கல்லிலும், விசைத்தறி கரூர் மாவட்டத்திலும் புகழ் பெற்று விளங்குகின்றன)

34) தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் கீழ்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?

A) ஓசூர்

B) சேலம்

C) கரூர்

D) கோயம்புத்தூர்

(குறிப்பு – கரூரில் உள்ள தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. எஃகு நகரம் என்று அழைக்கப்படும் சேலத்தில், பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும், கனிம செல்வங்களும் உள்ளன. சிவகாசி அச்சு தொழில், பட்டாசு நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது)

35) இந்தியாவின் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசியின் பங்களிப்பு எத்தனை சதவீதமாக இருக்கிறது?

A) 60 சதவீதம்

B) 70 சதவீதம்

C) 80 சதவீதம்

D) 90 சதவீதம்

(குறிப்பு – சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு நிறுவனங்கள் தீப்பெட்டி தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 90 சதவீத பங்கு சிவகாசியில் உற்பத்தி ஆகிறது.தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக வேதி பொருட்கள் உற்பத்தியில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் உள்ளது)

36) கீழ்காணும் எந்த மாநிலம் இந்தியாவின் ‘நூல் கிண்ணம்’ என அழைக்கப்படுகிறது

A) குஜராத்

B) கர்நாடகா

C) தமிழ்நாடு

D) ஜார்கண்ட்

(குறிப்பு – தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும். தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது. இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 40 சதவீத நூல் உற்பத்தி தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது)

37) கீழ்காணும் எந்த மாவட்டத்தில் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல்(Blended Yarn) உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லை?

A) திருப்பூர்

B) ஈரோடு

C) நாமக்கல்

D) திண்டுக்கல்

(குறிப்பு – தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் நூல் (Blended Yarn) உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன. இங்கிருந்து சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது)

38) கீழ்காணும் எந்த மாவட்டம் பின்னலாடைகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது?

A) ஈரோடு

B) திருப்பூர்

C) கோயம்புத்தூர்

D) கரூர்

(குறிப்பு – பின்னலாடைகளின் நகரம் என அழைக்கப்படும் திருப்பூர், 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது. திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை விரிப்புகள், மேஜை விரிப்புகள், சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் திருப்பூர் முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் தென் இந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கு முக்கிய சந்தையாக உள்ளது.)

39) இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் எத்தனை சதவீதம் தமிழ்நாடு வழங்குகிறது?

A) 20 சதவீதம்

B) 30 சதவீதம்

C) 40 சதவீதம்

D) 50 சதவீதம்

(குறிப்பு – இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீதமும், தோல் பொருட்கள் தயாரிப்பில் 80 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது.நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது)

40) ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?

A) சென்னை

B) குவஹாத்தி

C) அலகாபாத்

D) லக்னோ

(குறிப்பு – ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னை, மிகப்பெரிய அளவிலான வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது. தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 28 சதவீதமும், லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும், பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீதமும் கொண்டுள்ளது)

41) இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முதல் 4 இடங்களில் இல்லாத மாநிலம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) தமிழ்நாடு

B) ஆந்திர பிரதேசம்

C) ராஜஸ்தான்

D) மேற்கு வங்காளம்

(குறிப்பு – சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களில் முறையே ஆந்திரப் பிரதேசமும், ராஜஸ்தான் மாநிலமும் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டை சார்ந்த ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், 35 அலகுகளுடன் ஆந்திரப்பிரதேசம் முதல் இடத்திலும் உள்ளது)

42) சிவகாசி நகரத்திற்கு குட்டி ஜப்பான் என்று பெயர் சூட்டியவர் யார்?

A) மஹாத்மா காந்தி

B) இந்திரா காந்தி

C) ஜவஹர்லால் நேரு

D) ராஜீவ் காந்தி

(குறிப்பு – சிவகாசி நகரம் அச்சுத்தொழில், பட்டாசு பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாக செயல்படுகிறது.ஜவகர்லால் நேரு அவர்களால் குட்டி ஜப்பான் என்று சிவகாசி அழைக்கப்பட்டது. இந்திய பட்டாசு உற்பத்தியில் 80 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் அச்சுத்துறை தீர்வுகளில் 60 சதவீதம் சிவகாசியில் இருந்து பெறப்படுகிறது)

43) BHEL நிறுவனம் கீழ்க்காணும் எந்த இடங்களில் அமைந்துள்ளது?

I. திருச்சி

II. ஓசூர்

III. ராணிப்பேட்டை

A) I, II இல் மட்டும்

B) II, III இல் மட்டும்

C) I, III இல் மட்டும்

D) இந்த மூன்றிலும்

(குறிப்பு – உலக அளவில் மின் பொருட்கள் தயாரிப்பில் மிகப்பெரிய ஒன்றான பெல் நிறுவனம்(BHEL) திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. கரூரில் அமைந்துள்ள தமிழக அரசின் தமிழ்நாடு காகிதத் தயாரிப்பு நிறுவனம், உலகின் மிகப்பெரிய காகிதத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது)

44) இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL, தனது எஃகு ஆலையை எந்த இடத்தில் நிறுவியுள்ளது?

A) சேலம்

B) கான்பூர்

C) ஜாம்ஷெட்பூர்

D) கரூர்

(குறிப்பு – சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL, தனது ஆலையை சேலத்தில் நிறுவியுள்ளது. தங்க ஆபரணங்கள், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் வாகன உதிரி பாகம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதால் கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீடு பெற்றுள்ளது)

45) காற்றழுத்த விசை குழாய் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கரூர்

B) புதுக்கோட்டை

C) திருநெல்வேலி

D) கோயம்புத்தூர்

(குறிப்பு – இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை கோயம்புத்தூர் வழங்குகிறது. எனவே கோயம்பத்தூர் காற்றழுத்த விசைக்குழாய் நகரம் (Pump City)என்று அழைக்கப்படுகிறது. மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் வாகன உதிரி பாகம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதால், கோயம்புத்தூர் மாவு அரைக்கும் இயந்திரத்திற்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.)

46) இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உப்பு உற்பத்தியில் தூத்துக்குடியின் பங்களிப்பு எத்தனை சதவீதம் ஆகும்?

A) 20 சதவீதம்

B) 25 சதவீதம்

C) 30 சதவீதம்

D) 35 சதவீதம்

(குறிப்பு – தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.மாநிலத்தின் வேதிப்பொருள் உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் 30%, தூத்துக்குடியில் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது.)

47) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு __________ தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

A) 15.07 சதவீதத்துடன்

B) 25.07 சதவீதத்துடன்

C) 35.07 சதவீதத்துடன்

D) 45.07 சதவீதத்துடன்

(குறிப்பு – MSMED-2006, சட்டத்தின்படி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் தளவாட பொருட்கள் மீதான முதலீட்டில் அடிப்படையில் உற்பத்தி நிறுவனம், வணிக நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது)

48) இந்தியாவின் மின்னாற்றல் உற்பத்தி திறனை, மாநிலங்களுடன் பொருத்துக.

I. ஆந்திரா – a) 18,641 MW

II. தெலுங்கானா – b) 17,289 MW

III. தமிழ்நாடு – c) 12,691 MW

IV. கர்நாடகா – d) 26,865 MW

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – மின்னாற்றலை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. நிறுவப்பட்ட திறன் அளவில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது.முப்பந்தல் காற்றாலை மையம் கிராம மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் தவிர, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிதாக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன)

49) தமிழ்நாட்டில் கீழ்காணும் எந்த இடங்களில் அணு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

I. கல்பாக்கம்

II. கூடங்குளம்

III. நெய்வேலி

A) I, II இல் மட்டும்

B) I, III இல் மட்டும்

C) I இல் மட்டும்

D) II இல் மட்டும்

(குறிப்பு – தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் இந்தியாவின் 2 சதவீத மின் தேவைகள் நிறைவு செய்யப்படுகிறது. இது இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதி அளவு ஆகும்(2000 மெகாவாட்கள்). கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய அணுமின் நிலையங்கள் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையம் 1834 மெகாவாட்கள் உற்பத்தியையும், கல்பாக்கம் அனுமின் நிலையம் 470 மெகாவாட்கள் உற்பத்தியும் அளிக்கிறது)

50) தமிழ்நாட்டில் மிக அதிக அளவு வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்யும் இடங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. எண்ணூர்

II. கோயம்புத்தூர்

III. மேட்டூர்

IV. நெய்வேலி

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு(வட சென்னை), எண்ணூர், மேட்டூர், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகிறது. டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் உற்பத்தியில், தமிழ்நாடு, தேசிய உற்பத்தியில் 34 சதவீதத்திற்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது)

51) வெப்ப ஆற்றல்களின் ஆதாரங்களையும், அதன் உற்பத்தி சதவீதத்தினையும் பொருத்துக.

I. அனல் – a) 03.67 சதவீதம்

II. புனல் – b) 38.61 சதவீதம்

III. அணு – c) 08.20 சதவீதம்

IV. பிற (காற்று, சூரிய ஒளி) – d) 49.52 சதவீதம்

A) I-d, II-c, III-a, IV-b

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – மத்திய மின் துறை அமைச்சகத்தின் 2017 ஆம் ஆண்டு ஜனவரி அறிக்கையின்படி, அனல் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் 49.52 சதவீதமாகவும், புனல் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் 8.20 சதவீதமாகவும், அணு மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் 3.67 சதவீதமாகவும், காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் 38.61 சதவீதமாகவும் உள்ளன. டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் உற்பத்தியில் தமிழ்நாடு, தேசிய உற்பத்தியில் 34 சதவீதத்திற்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது)

52) தமிழ்நாட்டில் புனல் மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் தவறான இடம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) குந்தா

B) மேட்டூர்

C) தூத்துக்குடி

D) மரவகண்டி

(குறிப்பு – தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக குந்தா, மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி ஆகியன முக்கியமானவை ஆகும். சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.தென்தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த உகந்த மண்டலமாக கருதப்படுகிறது)

53) வங்கிகளையும் அதன் கிளைகளின் எண்ணிக்கையையும் பொருத்துக.

I. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் – a) 537 கிளைகள்

II. தனியார் வணிக வங்கிகள் – b) 5337 கிளைகள்

III. SBI மற்றும் அதன் துணை நிறுவனங்கள் – c) 3060 கிளைகள்

IV. வட்டார கிராமிய வங்கிகள் – d) 1364 கிளைகள்

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கி சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52 சதவீத பங்குகளுடன்(5337 கிளைகள்)பணியாற்றுகின்றன.தனியார் வணிக வங்கிகள் 30 சதவீத பங்குகளுடனும் (3060 கிளைகள்), பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13 சதவீத பங்குகளுடனும்(1364 கிளைகள்), வட்டார கிராமிய வங்கிகள் 5 சதவீத பங்குகளுடனும்(537 கிளைகள்) மற்றும் இரண்டு அயல்நாட்டு வங்கி கிளைகளும் சேவையில் உள்ளன)

54) தமிழ்நாட்டு வங்கிகளின் மொத்த வைப்புநிதியானது ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது?

A) 10.57 சதவீதம்

B) 12.83 சதவீதம்

C) 14.32 சதவீதம்

D) 16.63 சதவீதம்

(குறிப்பு – தமிழ்நாட்டு வங்கிகளின் மொத்த வைப்புநிதி யானதும் ஒவ்வொரு ஆண்டும் 14.32 சதவீத உயர்வுடன் மார்ச் 2017-ம் ஆண்டில் ரூ.6,65,068.59 கோடியை எட்டியுள்ளது. கடன் தொகை ஒவ்வொரு ஆண்டும் 13.5 சதவீதம் அதிகரித்து மார்ச் 2015 ஆம் ஆண்டில் ரூ.6,95,500.31 கோடியாக எட்டியுள்ளது. முதன்மை துறைகளுக்கான கடன் தொகையானது 45.45 சதவீதமாகவும், வேளாண்மை துறைகளுக்கான கடன் வழங்கல் அளவு 2017ம் ஆண்டில் 19.81சதவீதமாக உள்ளது

55) நிதி ஆயோக் அறிக்கையின்படி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் துவக்கநிலை அளவில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதமாக இருக்கிறது?

A) 85.43%

B) 88.67%

C) 89.24%

D) 93.47%

(குறிப்பு – நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது நிதி ஆயோக் அறிக்கையின்படி 2015 மற்றும் 2014 ஆம் ஆண்டில் துவக்கநிலை அளவில் நிகர மாணவர் சேர்க்கை வீதம் தமிழ்நாட்டில் 89.24 சதவீதமாகவும், கேரளாவில் 79.94 சதவீதமாகவும் மற்றும் தேசிய சராசரியைவிட (74.74%) அதிகமாகவும் உள்ளது. இது உலக அளவில் 59 சதவீதமாகவும் உள்ளது)

56) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 2016 மற்றும் 2017 ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துவக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 35,414 மற்றும் நடுநிலை பள்ளிகளின் எண்ணிக்கை 9,708 ஆகும்

கூற்று 2 – தொடக்கப்பள்ளிக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் தமிழ்நாட்டில் 118.8 சதவீதமாக இருக்கிறது.

கூற்று 3 – நடுநிலை பள்ளிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை வீதம் 112.3 சதவீதமாக இருக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தொடக்கப் பள்ளிகள் என்பவை வகுப்பு 1 முதல் 5 வரையாகவும், நடுநிலைப் பள்ளிகள் என்பவை வகுப்பு 6 முதல் 8 வரையாகவும், உயர்நிலைப் பள்ளிகள் என்பவை வகுப்பு 9 முதல் 10 வரையாகவும், மேல்நிலைப் பள்ளிகள் என்பவை வகுப்பு 11 மற்றும் 12 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கான மொத்தச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களை காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது)

57) பொருத்துக

I. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் – a) 20

II. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் – b) 59

III. தமிழ்நாட்டில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகள் – c) 517

IV. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் – d) 40

A) I-b, II-d, III-a, IV-c

B) I-d, II-b, III-a, IV-c

C) I-a, II-b, III-d, IV-c

D) I-b, II-a, III-d, IV-c

(குறிப்பு – தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும், 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 20 பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 லட்சம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர். இது இந்திய அளவில் உச்சபட்ச அளவாகும்.)

58) கல்விக் கடனை தனியார் வங்கிகள் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வழங்கியுள்ளது?

A) 20 சதவீதம்

B) 24.8 சதவீதம்

C) 32.5 சதவீதம்

D) 37.4 சதவீதம்

(குறிப்பு – 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தனியார் வங்கிகள் கேரளாவில் 37.8 சதவீதமும் தமிழ்நாட்டில் 24.8 சதவீதமும் வழங்கியுள்ளது. மொத்த தனியார் வங்கி வழங்கியுள்ள கல்வி கடன்களில் கர்நாடகம் மற்றும் கேரளா 60 சதவீதம் அளவிற்கு வழங்கியுள்ளது.நாடு முழுமைக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தனியார் வங்கிகள் கல்விக் கடனில் ஒரு சதவீத அளவே வழங்கியுள்ளது.)

59) தமிழ்நாட்டின் உடல்நல அடிப்படைக் கட்டமைப்பில் அமையப்பெற்றுள்ளவை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மருத்துவமனை

B) ஆரம்ப சுகாதார நிலையம்

C) சமூக னால மையங்கள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ளன. அவை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நிலையங்கள் ஆகியன ஆகும். மார்ச் 2015 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 34 மாவட்ட மருத்துவமனைகளும், 229 துணை மருத்துவ மனைகளும், 1254 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7555 துணை நிலையங்களும், 313 சமூகநல மையங்களும் உள்ளன)

60) இந்தியாவில் இணைய பயன்பாட்டில் கீழ்காணும் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

A) மத்திய பிரதேசம்

B) மகாராஷ்டிரா

C) தமிழ்நாடு

D) கர்நாடகா

(குறிப்பு – இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 29.47 பில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன. மார்ச் 2016 ஆம் ஆண்டு அரசு புள்ளிவிவரப்படி இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர்)

61) 2016 மார்ச் ஆண்டு, அரசு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் உள்ள இணையதள சந்தாதாரர்களின் எண்ணிக்கை என்ன?

A) 28.01 மில்லியன்

B) 24.87 மில்லியன்

C) 22.63 மில்லியன்

D) 25.45 மில்லியன்

(குறிப்பு – 2016 ஆம் ஆண்டு அரசு புள்ளிவிவரப்படி இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் சந்தாதாரர்களும், அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 24.87 மில்லியனும், கர்நாடகாவில் 22.63 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்)

62) தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் எண்ணிக்கை கீழ்கண்டவற்றுள் எது?

A) 26

B) 27

C) 28

D) 29

(குறிப்பு – தமிழ் தமிழ்நாட்டில் மொத்தம் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கிலோ மீட்டர் தொலைவினை இணைகின்றன. தங்க நாற்கர திட்டம் முனையமாக நமது மாநிலம் உள்ளது. சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்திய பேருந்து நிலையங்கள், நம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கிலோ மீட்டர் ஆகும்)

63) சாலைப் போக்குவரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?

A) முதலாமிடம்

B) இரண்டாமிடம்

C) மூன்றாமிடம்

D) நான்காமிடம்

(குறிப்பு – தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இதில் 60 ஆயிரத்து 628 கிலோ மீட்டர் தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. பொது மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் 20 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது)

64) தென்னக ரயில்வேயின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை

B) கொச்சின்

C) திருவனந்தபுரம்

D) பெங்களூரு

(குறிப்பு – தமிழ்நாடு நன்கு மேம்படுத்தப்பட்ட இருப்புப்பாதை அமைப்பைக் கொண்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்னக ரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் 6 ஆயிரத்து 693 கிலோமீட்டர் ஆகும்)

65) தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 600

B) 630

C) 660

D) 690

(குறிப்பு – தமிழ்நாட்டில் மொத்தம் 690 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகியவை முக்கிய தொடர்வண்டி நிலையங்கள் ஆகும். சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதிவிரைவு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சி 2017 முதல் தொடங்கி செயப்படுத்தப்பட்டு வருகிறது)

66) தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

(குறிப்பு – தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை சிறந்து விளங்குகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலும் சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன)

67) தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையம் இல்லாத இடம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கோயம்புத்தூர்

B) சேலம்

C) மதுரை

D) திருச்சிராப்பள்ளி

(குறிப்பு – தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. தூத்துக்குடி, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இத்துறையின் தொடர் நடவடிக்கையின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 18% இது வளர்கிறது.)

68) கீழ்க்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் அல்ல?

A) சென்னை

B) நாகப்பட்டினம்

C) எண்ணூர்

D) தூத்துக்குடி

(குறிப்பு – சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்கள் ஆகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகம் ஆகும். மேலும் 23 சிறிய துறைமுகங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இவை தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய திறன் கொண்டவை ஆகும்)

69) இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகம் எது?

A) சென்னை

B) மும்பை

C) விசாகப்பட்டினம்

D) கொச்சின்

(குறிப்பு -தமிழ்நாட்டின் துறைமுகங்கள், தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் கன்டெய்னர்களை கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகம் ஆகும். இது 4,00,000 வாகனங்களை கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு, அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிம போக்குவரத்துகளை கையாள்கிறது.)

70) 2016ஆம் ஆண்டின் சுற்றுலா பயணிகளின் வருகை அறிக்கையின்படி இந்தியாவில் எந்த மாநிலம் சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் வகிக்கிறது?

A) ஆந்திரப் பிரதேசம்

B) தமிழ்நாடு

C) மத்திய பிரதேசம்

D) கர்நாடகா

(குறிப்பு – முற்காலத்திலிருந்தே தமிழ்நாடு ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வருகிறது. நவீன காலங்களில் நமது மாநிலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதன்மை புகலிடமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு மேற்ப்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத் துறை(TTDC) தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது.இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலா பயணிகளுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது)

71) தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 50

B) 55

C) 60

D) 65

(குறிப்பு – இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி 50 ஆக உள்ளது(1000 பேருக்கு). தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். தேசிய அளவில் தமிழ்நாடு 22 ஆவது இடத்தில் உள்ளது. பலவகையான வேலையின்மை பொருளாதார நிலைக்கேற்ப உள்ளது. அவற்றை முழுமையாக அறிவதன் மூலமே வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள முடியும்)

72) தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?

A) தேனி

B) மதுரை

C) நீலகிரி

D) கன்னியாகுமரி

(குறிப்பு – தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் நீலகிரி ஆகும்.(1041 பெண்கள்) அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி (1031 பெண்கள்) மற்றும் நாகப்பட்டினம் (1025 பெண்கள்) ஆகியவை உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 7,21,38,958 ஆகும்.இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,61,58,871ஆகும்.பெண்களின் எண்ணிக்கை 3,59,80,087 ஆகும்)

73) பொருத்துக

I. அதிக எழுத்தறிவு உள்ள மாவட்டம் – a) நீலகிரி

II. அதிக பாலினவிகிதமுள்ள மாவட்டம் – b) தருமபுரி

III. குறைந்த எழுத்தறிவு உள்ள மாவட்டம் – c) சென்னை

IV. அதிக மக்களடர்த்தி மாவட்டம் – d) கன்னியாகுமரி

A) I-d, II-a, III-b, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-d, III-c, IV-a

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை உடைய மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர் போன்றவை ஆகும். தமிழ்நாட்டில் குறைவான மக்கள்தொகை உடைய மாவட்டங்கள் பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், தேனி ஆகியன ஆகும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 555 ஆகும். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாவட்டம் சென்னை (26903)ஆகும்)

74) கீழ்க்காணும் மாவட்டங்களின் எழுத்தறிவு விகிதத்தை பொருத்துக.

I. கன்னியாகுமரி – a) 64.71%

II. சென்னை – b) 71.99%

III. அரியலூர் – c) 92.14%

IV. தருமபுரி – d) 90.33%

A) I-c, II-d, III-b, IV-a

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-d, III-c, IV-a

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.33 சதவீதம் ஆகும்.ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 86.81 சதவீதம் ஆகும்.பெண்களின் எழுத்தறிவு விகிதம் 73.86%ஆகும். தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி, சென்னை போன்றவை ஆகும். தமிழ்நாட்டில் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் தருமபுரி, அரியலூர் போன்றவை ஆகும்.

75) குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம் கீழ்கண்டவற்றுள் எது?

A) I-வது

B) II-வது

C) III-வது

D) IV-வது

(குறிப்பு – குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம் I-வதுஆகும்.தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன், தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன இவை 8000 வகையான பொருட்களை 32 கோடிரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin