Ethics Questions

தமிழர் கலைகள் 11th Ethics Lesson 4 Questions

11th Ethics Lesson 4 Questions

4] தமிழர் கலைகள்

1) கலைகள் அறுபத்து நான்கு எனக் குறிப்பிடும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: மனித நாகரீகத்தின் வளர்ச்சி நிலையே கலைகளின் வெளிப்பாடுகள். தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த, கலைகள் வாயில்களாக அமைந்தன. மணிமேகலை காப்பியம், கலைகளை 64 எனக் குறிப்பிட்டுள்ளது.

2) எவை ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன?

A) பொருளாதரம்

B) நாகரீகம்

C) கல்வி

D) கலைகள்

விளக்கம்: கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன.

3) “ஆய கலைகள்” எனப்படுபவை எத்தனை?

A) 63

B) 64

C) 48

D) 9

விளக்கம்: தமிழகத்தில் 64 முதன்மைக் கலைகள் இருந்தன. “ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” என்ற கம்பரின் கூற்று இதனை தெரிவிக்கின்றது.

4) கலைகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கலைகள் பொதுக் கலைகள், அழகுக் கலைகள் என 2 வகைப்படும்.

5) கூற்றுகளை ஆராய்க

1. மனிதனின் வாழ்விற்குப் பயன்படும் அனைத்துமே கலைகள்

2. காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன இசைக்கலைகள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன அழகுக் கலைகள் ஆகும்.

6) அழகுக்கலைகளை 5-ஆக வகைப்படுத்திக் கூறிய தமிழ் அறிஞர் யார்?

A) மயிலை சீனிவாசன்

B) சிதம்பரம் நடராஜன்

C) மயிலை சீனி. வேங்கடசாமி

D) பாரதி

விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்தி தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார்.

7) கலை காலத்தைக் கடந்து தமிழின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்வது?

A) வீடு

B) மாளிகை

C) கோவில்கள்

D) அரண்மனைகள்

விளக்கம்: தமிழகத்திலுள்ள வீடு, மாளிகை, அரண்மணை, கோயில்கள் போன்றவை தமிழகக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இவற்றுள் கோயில்களே காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன.

8) “மனை நூல்களை நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று கூறியவர் யார்?

A) சீத்தலைச் சாத்தனார்

B) திருத்தக்கத் தேவர்

C) கௌந்தி அடிகள்

D) இளங்கோவடிகள்

விளக்கம்: சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான “மனை நூல்கள்” இருந்தன. இதனை “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்” என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

9) பச்சைக்குதிரை விளையாட்டின் இரண்டாம் நிலை உயரங்களை ஏறுவரிசைப்படுத்துக.

1. கால் கட்டை விரலைப் பிடித்து நிற்றல்

2. தொடையைப் பிடித்துக் கொண்டு நிற்றல்

3. மோளி

4. கரண்டை

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 1, 4, 3, 2

D) 1, 3, 4, 2

விளக்கம்: கால் தாண்டலுக்குப் பின் ஆள்தாண்டல் நடைபெறும் இதில் குனிந்துக்கொண்டு நிற்பவரை, அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்ட வேண்டும். குனிந்து கொண்டு நிற்பவர் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு குனிந்து இருக்க வேண்டும். தலையை உயர்த்தினால் தலையைத் தட்டிக் குனியச்செய்வர். தாண்டுபவர் தம் இருகால்களையும் அகற்றி ஒரு கால் அவரது தலையையும் மற்றொரு கால் அவரது இடுப்பையும் தாண்டி வருமாறு தாண்டுவர். தாண்டுபவர் ஓடிவந்து தாண்ட இயலாது.

படிநிலைகள்:

1. கால் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு நிற்றல்

2. கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (கரண்டை)

3. முழங்காலைப் பிடித்துக்கொண்டு நிற்றல் (மோளி)

4. தொடையைப் பிடித்துக்கொண்டு நிற்றல்

5. கைகளைக் கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக் கொண்டு குனிந்து நிற்றல்.

10) பொருத்துக.

அ. சபாநாயகர் மண்டபம் – 1. மண்டகப்பட்டு

ஆ. செங்கற்கோவில் – 2. சிதம்பரம்

இ. குடைவரைக் கோவில் – 3. அரியலூர்

A) 2, 3, 1

B) 2, 1, 3

C) 3, 2, 1

D) 2, 1, 3

விளக்கம்: சபாநாயகர் மண்டபம் – சிதம்பரம் நடராஜர் கோவில் பொன் கூரை மண்டபம்

செங்கற்கோவில் – அரியலூர்

குடைவரைக் கோவில் – மண்டகப்பட்டு.

11) எத்தனையாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டடங்களாலேயே இருந்தன?

A) 2-ம் நூற்றாண்டு

B) 5-ம் நூற்றாண்டு

C) 6-ம் நூற்றாண்டு

D) 9-ம் நூற்றாண்டு

விளக்கம்: கி. பி(பொ. ஆ) 6-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டடங்களாகவே இருந்தன. இவை மன்னர்களால் அவ்வப்போது செப்பனிடப்பட்டன. (எ. கா) அரியலூர் செங்கற்கோயில்.

12) தமிழகத்தில் முற்காலப் பாண்டியர் அமைத்த முதல் குடைவரைக் கோயில் எது?

A) மண்டகப்பட்டு குடைவரைக்கோயில்

B) நாமக்கல் நரசிம்மர் கோயில்

C) பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில்

D) சித்தன்னவாசல் கோயில்

விளக்கம்: பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும். இவை, கருவறை, முன் மண்டபம், தூண்கள் என்ற அமைப்பைக் கொண்டிருந்தன. முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில் ஆகும்.

13) மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டது?

A) மகேந்திரவர்ம பல்லவன்

B) ராஜராஜ சோழன்

C) ராசேந்திர சோழன்

D) மாமல்லன்

விளக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னுமிடத்தில் கி. பி (பொ. ஆ) 7-ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன், முதல் குடைவரைக் கோயிலை அமைத்தான்.

14) “மண்டபக் கோயில்கள்” என்று அழைக்கப்பட்டவை எவை?

A) குகைக் கோயில்கள்

B) மரத்தாலான கோயில்கள்

C) குடைவரைக் கோயில்கள்

D) அனைத்தும்

விளக்கம்: குடைவரைக் கோயில்கள் நீண்ட மண்டபம் போன்ற அமைப்பைப் பெற்றிருந்தன. எனவே, ‘மண்டபக் கோயில்கள்’ என்றும், பாறைகளைக் குடைந்து அமைத்தால் ‘பாறைக் கோயில்கள்’ என்றும் அழைக்கப்பட்டன.

15) ஒரே கல்லினால் ஆன ஒற்றைக்கல் கோயில் தமிழகத்தில் எங்கு காணப்படுகிறது?

A) தஞ்சை

B) மாமல்லபுரம்

C) சிதம்பரம்

D) தாராசுரம்

விளக்கம்: ஓரே கல்லினால் ஆன ஒற்றைக்கற் கோயில்கள் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் காணப்படுகின்றன. இவற்றை அமைக்க, பாறைகளை மேலிருந்து படிப்படியாகக் கீழே செதுக்கிக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தின் மகிசாசுரமர்த்தினி கோயிலின் முன் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாமல் உள்ள ஒற்றைக்கல் கோயில் இதற்குச் சான்றாகும்.

16) கூற்றுகளை ஆராய்க.

1. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிசச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் ‘கற்றளிகள்’ என்று பெயர்.

2. கி. பி. 7-ம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனமலை ஆகிய ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை. கி. பி(பெ. ஆ) 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கட்டடங்களில், பெரும்பான்மை கற்றளிகளாகவே இருந்தன.

17) செங்கற்களால் ஆன பழைய கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியவர்கள் யார்?

A) பாண்டியர்கள்

B) பல்லவர்கள்

C) முற்காலச் சோழர்கள்

D) பிற்காலச்சோழர்கள்

விளக்கம்: பிற்காலச் சோழர்கள் செங்கற்களால் ஆன பழைய கோயில்களைக் கற்றளிகளாக மாற்றினர்.

18) இந்தியக் கோவில் கட்டடக்கலை எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இந்தியக் கோயில் கட்டடக்கலை நாகரம், வேசரம். திராவிடம் என 3 வகைப்படும்.

19) பொருத்துக.

அ. நாகரம் – 1. வட்ட வடிவ சிகரம்

ஆ. வேசரம் – 2. சதுர வடிவ சிகரம்

இ. திராவிடம் – 3. எட்டுபட்டை அமைப்பு சிகரம்

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் – ‘நாகரம்’.

இதுவே, சிகரம் வட்டவடிவமாக இருப்பின் அந்த விமானம் – ‘வேசரம்’

சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் – திராவிடம்.

20) பொருத்துக

அ. நாகரம் – 1 மத்திய இந்தியா

ஆ. வேசரம் – 2. தென் இந்தியா

இ. திராவிடம் – 3. வட இந்தியா

A) 3, 1, 2

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: நாகரம் – வட இந்தியக் கட்டடக்கலை

வேசரம் – மத்திய இந்தியக் கட்டடக்கலை

திராவிடம் – தென் இந்தியக் கட்டடக்கலை.

21) பின்வருவவனவற்றுள் எது பௌத்த சமயக் கட்டடக்கலை?

A) நாகரம்

B) வேசரம்

C) திராவிடம்

D) எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமயக் கட்டடக்கலை ‘வேசரம்’ ஆகும்.

22) வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை எந்தக் கட்டடக்கலை பரவியுள்ளது?

A) நாகரம்

B) வேசரம்

C) திராவிடம்

D) எதுவுமில்லை

விளக்கம்: சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் ‘திராவிடம்’ எனப்படும். திராவிடம் என்பது தென்னிந்தியக் கோவில் கட்டடக் கலை ஆகும். வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை திராவிடக்கலை பரவியுள்ளது.

23) எந்தக் கட்டடக்கலை பர்மா, மலேசியா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது?

A) நாகரம்

B) வேசரம்

C) திராவிடம்

D) எதுவுமில்லை

விளக்கம்: திராவிடம் கலையானது இலங்கை, பர்மா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. தமிழகக் கட்டடக் கலையை பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர நாயக்கர்கள் ஆகியோரின் காலகட்டத்தவை எனத் தனித்தனியாக வகைப்படுத்தலாம்.

24) ஷடங்க விமானம் என்பது எத்தனை உறுப்புகளைக் குறிக்கும்?

A) 4

B) 5

C) 6

D) 8

விளக்கம்: இந்துக் கோயில்களில் கர்ப்பக்கிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலையை விமானம் என்பர். விமானத்தைப் பொதுவாக ‘ஷடங்க விமானம்’ என்பர். ஷடங்க விமானம் என்பது, 6 உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமை உடையவை.

25) பொருத்துக.

அ. அதிட்டானம் – 1. கழுத்து

ஆ. பித்தி – 2. தோள்

இ. பிரஸ்தரம் – 3. பாதம்

ஈ. கண்டம் – 4. கால்

A) 4, 3, 2, 1

B) 4, 1, 3, 2

C) 3, 4, 2, 1

D) 3, 4, 1, 2

விளக்கம்: ஷடங்க விமானம் என்பது, ஆறு உறுப்புகளைக் குறிக்கும். அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்புமையுடையவையாகும்.

அதிட்டானம் – பாதம்

பித்தி – கால்

பிரஸ்தம் – தோள்

கண்டம் – கழுத்து

சிகரம் – தலை

ஸ்தூபி – மகுடம்

விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரேயொரு கலசம் மட்டும் இடம்பெற்றிருக்கும். இவ்விமானங்கள் சோழர் காலத்தில்தான் மிக உயரமானவையாக அமைக்கப்பட்டன.

26) சாரங்கபாணி கோயில் எங்கு உள்ளது?

A) தஞ்சை

B) கோவை

C) கும்பகோணம்

D) மதுரை

விளக்கம்: சாரங்கபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

27) கூற்றுகளை ஆராய்க.

1. விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரேயொரு கலசம் மட்டும் இடம்பெற்றிருக்கும்

2. கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இடம்பெற்றிருக்கும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டம் தவறு

விளக்கம்: கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது கோபுரம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர். இக்கோபுரம் சுற்றுப்புறச் சுவரில் ஊடறுத்துச் செல்லும் நுழைவாயிலின் மேல் கட்டப்பட்டதாகும். கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இடம்பெற்றிருக்கும்.

28) கோயில்களில் கோபுரம் அமைத்தல் யாருடைய காலத்தில் தொடங்கியது?

A) பாண்டியர்கள்

B) பிற்காலச் சோழர்கள்

C) பல்லவர்கள்

D) விஜயநகர மன்னர்கள்

விளக்கம்: கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிகவும் உன்னத நிலையை அடைந்தது எனலாம்.

29) எந்த அரசன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன் முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது?

A) இராஜசிம்மன்

B) இராஜராஜ சோழன்

C) மாமல்லன்

D) கிருஷ்ணதேவராயர்

விளக்கம்: இராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில்தான் முதன்முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்டது. சோழர்களும் விமானத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

30) யாருடைய ஆட்சிக் காலத்தில் மிக உயரந்த கோபுரங்கள் அமைக்கத் தொடங்கினர்?

A) இராஜசிம்மன்

B) இராஜ ராஜ சோழன்

C) மாமல்லன்

D) கிருஷ்ணதேவராயர்

விளக்கம்: விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் விமானங்களைச் சிறியனவாகவும், கோபுரங்களைப் பெரியனவாகவும் அமைத்தனர். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில்தான், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் பெரிய கோபுரங்களை அமைத்தனர். பிற்காலத்தில் இவை’இராஜ கோபுரம்’ என்று அழைக்கப்பட்டன.

31) பல்லவர்கள் எதைத் தலைநகரக் கொண்டு ஆட்சி புரிந்தனர்?

A) தஞ்சை

B) மதுரை

C) காஞ்சிபுரம்

D) புகார்

விளக்கம்: பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். இவர்கள் மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் காலத்தால் அழிக்க இயலாத குடவரைக் கோயில்களை உருவாக்கினர்.

32) கூற்றுகளை ஆராய்க.

1. மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், வல்லம், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர், திருச்சி ஆகிய பகுதிகளில் பழமையான பல்லவர் காலத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றில் மகேந்திரவர்மன் கலத்தைச் சேர்ந்த கோயில்கள் மிகவும் தொன்மையானவை.

2. கடற்கரைக் கோயில்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. சாளுவன் குப்பத்தில் உள்ள குகைக்கோயிலில் வெளிமுகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது

A) 1 மடடும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. ‘சாளுவன் குப்பத்தில்’ உள்ள குகைக்கோயிலில் வெளிமுகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது. இது குகைக்கோயில்களின் அமைப்பிலேயே வியக்கத்தக்க வடிவை உடையது. இப்பகுதி தற்காலத்தில் ‘புலிக்குகை’ என்று அழைக்கப்படுகிறது.

33) காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?

A) மாமல்லன்

B) நரசிம்மவர்மன்

C) ராஜசிம்மன்

D) ராஜராஜசோழன்

விளக்கம்: பல்லவர்கள் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள் அமைத்ததோடு அன்றிக் கட்டுமானக் கோயில்களையும் எழுப்பியுள்ளனர். இவற்றுள், அழகும் தொன்மையும் வாய்ந்தது காஞ்சி கைலாசநாதர் கோயில். இது இராஜசிம்மனால் கட்டப்பட்டது.

34) பல்லவர்கள், தமிழகத்தில் வட பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தென் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) சாளுக்கியர்கள்

விளக்கம்: பல்லவர்கள், தமிழகத்தின் வட பகுதிளை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், தென் பகுதியைப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.

35) யாருடைய காலம் முதல் தோற்றுவித்த கோயில்கள் பாண்டியர்களின் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக உள்ளது?

A) செழியன்சேந்தன்

B) வீரபாண்டியன்

C) பாண்டியன் நெடுஞ்செழியன்

D) எதுவுமில்லை

விளக்கம்: செழியன்சேந்தன், காலம் முதல் வீரபாண்டியன் காலம்வரை அவர்கள் தோற்றவித்த குடைரைக் கோயில்கள், ஒற்றைக் கற்றளிகள், கட்டடக் கோயில்கள் ஆகியன பாண்டியர்கள் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

36) தமிழகத்தில் காணப்படும் பாண்டியர்களின் குடைவரைக் கோயில் எது?,

A) பிள்ளையார்பட்டி

B) மலையடிக்குறிச்சி

C) ஆனைமலை

D) அனைத்தும்

விளக்கம்: பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடுமியான் மலை, சித்தன்ன வாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரைவென்றான் போன்ற ஊர்களில் பாண்டியர்கள் காலக் குடைவரைக் கோயில்களைக் காணலாம்.

37) ‘வெட்டுவான் கோயில்’ எங்கு உள்ளது?

A) ஆனைமலை

B) முதுமலை

C) ஏலகிரி

D) கழுகுமலை

விளக்கம்: கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்குச் சான்றாகும். இது மலையின் மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.

38) ‘தென்னத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுவது எது?

A) வெட்டுவான் கோயில்

B) தஞ்சைபெரிய கோயில்

C) சாளுவன் குப்பம் புலிக்குகை

D) மாமல்லபுரம்

விளக்கம்: ‘தென்னத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுவது கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில். இதேபோல் திருப்பத்தூர் திருக்கற்றளிநாதர் கோயில் பாண்டியர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

39) தமிழக் கட்டடக்கலை வரலாற்றில் யாருடைய காலம் பொற்காலமாகும்?

A) முற்காலச் சோழர்கள் காலம்

B) பிற்காலச் சோழர்கள் காலம்

C) பாண்டியர்கள் காலம்

D) பல்லவர்கள் காலம்

விளக்கம்: தமிழக கட்டடக்கலைக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலம் பொற்காலமாகும். விஜயாலயசோழன் முதல் 3-ம் ராஜராஜசோழன் வரையிலான மன்னர்கள் அழகு வாய்ந்த எண்ணற்ற கோயில்கள் எழுப்பினர். செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்களை எல்லாம் கருங்கற்களாலான கோயில்களாக மாற்றி அமைத்தனர்.

40) புதுக்கோட்டை நார்த்தாமலைக் கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் இராஜராஜசோழன்

B) 2-ம் இராஜராஜசோழன்

C) ஆதித்திய சோழன்

D) விஜயாலய சோழன்

விளக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயாலய சோழனால் கட்டப்பட்ட நார்த்தாமலைக் கோயில் தனித்தன்மை வாய்ந்தது. இக்கோயிலின் வெளிச்சுவர் சதுர வடிவிலும் உட்சுவர் வட்ட வடிவிலும் உள்ளது.

41) காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டியவர் யார்?

A) முதலாம் இராஜராஜசோழன்

B) 2-ம் இராஜராஜசோழன்

C) ஆதித்திய சோழன்

D) விஜயாலய சோழன்

விளக்கம்: ஆதித்தசோழன் காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டினார். இக்கோயில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

42) பிரம்மபுரீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?

A) ஆதித்த சோழன்

B) பராந்தக சோழன்

C) செம்பியன்மாதேவி

D) விஜயாலய சோழன்

விளக்கம்: ‘பராந்தகசோழன்’எழுப்பிய பிரம்மபுரீசுவரர் கோயில், எறும்பூர் கடம்பவனேசுவரர் கோயில் ஆகியன சோழர் காலக் கட்டடக்கலையின் எழிலையும் எளிமையையும் விளக்குவன.

43) ‘தென்னகத்தின் மேரு’ என அழைக்கப்டும் சிறப்பைப் பெற்ற கோவில் எது?

A) ஸ்ரீரங்கம்

B) தஞ்சை பெரியகோவில்

C) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

D) நார்த்தாமலைக் கோவில்

விளக்கம்: இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோவில் ‘தென்னிந்தியாவின் மேரு’ எள அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றது.

44) தமிழக் கட்டடக் கலையின் மணிமகுடமாக விளங்குவது எது?

A) ஸ்ரீரங்கம்

B) தஞ்சை பெரியகோவில்

C) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

D) நார்த்தாமலைக் கோவில்

விளக்கம்: தஞ்சை பெரியகோவில் தமிழக் கட்டடக்கலையின் மணிமகுடமாக விளங்குகின்றது. தஞ்சையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் கருங்கற்களே இல்லாத நிலையில் முற்றிலும் கருங்கங்களைக் கொண்டே அமைக்கப்பட்டது.

45) தஞ்சை பெரியகோவிலின் உயரம் என்ன?

A) 216 அடி

B) 248 அடி

C) 206 அடி

D) 312 அடி

விளக்கம்: முற்றிலும் கருங்கற்களைக் கொண்டே 216அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட விமானத்தை அமைத்து ‘இராஜராஜேசுவரம்’ எனப் பெயரிட்டார் இராஜராஜன்.

46) தஞ்சை பெரியகோவிலின் எந்த வாசல் ‘இராஜராஜன் திருவாசல்’ என்று அழைக்கப்படுகிறது?

A) முதல் வாசல்

B) இரண்டாம் வாசல்

C) மூன்றாம் வாசல்

D) நான்காம் வாசல்

விளக்கம்: முதல் வாசல் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றும் 2-ம் வாசல் ‘இராஜராஜன் திருவாசல்’ என்றும் அழைக்கப்படுகிறது.

47) தஞ்சை பெரியகோவிலின் உச்சியிலுள்ள சிகரத்தின் எடை என்ன?

A) 80 டன்

B) 85 டன்

C) 90 டன்

D) 101 டன்

விளக்கம்: தஞ்சை பெரியகோவிலின் உச்சியிலுள்ள எண்கோண வடிவிலான சிகரத்தின் எடை 80 டன் ஆகும்.

48) UNESCO எப்போது தஞ்சை பெரியகோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது?

A) 1987

B) 1988

C) 1989

D) 1990

விளக்கம்: தஞ்சை பெரியகோவிலை 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (The United Nations Educational, Scientific and Cultural Organisation – UNESCO) உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. சோழர் காலக் கட்டடக் கலையில் ‘செம்பியன் மாதேவியின்’ பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் பாட பெற்ற பல தளங்களில் கற்றளிகளாக மாற்றியமைத்துப் பெரும் பொருள்களை வழங்கினார்.

49) பொருத்துக

அ. தஞ்சை பெரிய கோவில் – 1. 126 அடி

ஆ. கங்கை கொண்ட சோழபுரம் – 2. 216 அடி

இ. திரிபுவனம் கம்பகரேசுவரர் – 3. 170 அடி

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – 216 அடி

கங்கை கொண்ட சோழபுரம் – 170 அடி

திரிபுவனம் கம்பகரேசுவரர் – 126 அடி.

50) பொருத்துக.

அ. தஞ்சை பெரிய கோவில் – 1. முதலாம் இராஜேந்திர சோழன்

ஆ. கங்கை கொண்ட சோழபுரம் – 2. முதலாம் ராஜராஜ சோழன்

இ. திரிபுவனம் கம்பகரேசுவரர் – 3. மூன்றாம் குலோத்துங்க சோழன்

A) 2, 1, 3

B) 3, 2, 1

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: தஞ்சை பெரிய கோவில் – முதலாம் ராஜராஜ சோழன்

கங்கை கொண்ட சோழபுரம் – முதலாம் இராஜேந்திர சோழன்

திரிபுவனம் கம்பகரேசுவரர் – மூன்றாம் குலோத்துங்க சோழன்.

51) எந்தக் கோயில் சிற்பக் களஞ்சியமாக விளங்குகின்றது?

A) தஞ்சை பெரியகோவில்

B) கங்கை கொண்ட சோழபுரம்

C) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

D) நாயக்கர் மஹால்

விளக்கம்: இராஜேந்திரசோழன் தனது கங்கைப் படையெடுப்பு வெற்றியின் சின்னமாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ கோயிலை அமைத்தார். இது 170 அடி உயரம் கொண்டது. இக்கோயில் சிற்பக்களஞ்சிமாக விளங்குகின்றது.

52) திருவண்ணாமலை, மதுரை, இராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்கள் யாருடைய காலத்தவை?

A) சோழர் காலத்தவை

B) பல்லவர் காலத்தவை

C) பாண்டியர் காலத்தவை

D) விஜயநகரப் பேரரசின் காலத்தவை

விளக்கம்: விஜயநகரப் பேரரசின் காலத்தில் தமிழகக் கட்டடகக்கலையில் குறிப்பிட்டதக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சோழர், பாண்டியர் காலக் கட்டடக்கலையின் தொடர்ச்சியாகவே விஜயநகரப் பேரரசுக் காலக் கட்டடக்கலை விளங்குகிறது. நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் இக்காலக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளாகும். இக்கோயில்களில், விமானங்கள் சிறியதாகவும், கோபுரங்கள் உயரமாகவும் உள்ளன. திருவண்ணாமலை, மதுரை, இராமேசுரம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில் கோபுரங்கள் இக்காலத்தவையாகும்.

53) வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் யாருடைய காலத்தவை?

A) சோழர்

B) பாண்டியர்

C) பல்லவர்

D) விஜயநகர பேரரசு

விளக்கம்: வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசுக் காலத்தவை.

54) நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல் யாருடைய தனிச் சிறப்பு?

A) சேரர்

B) பல்லவர்

C) சோழர்

D) நாயக்கர்

விளக்கம்: நாயக்கர் காலக் கட்டடக்கலை விஜயநகரக் காலக் கட்டடக்கலையைப் பின்பற்றியே எழுந்தது. நூறுகால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்புதல், இவர்களின் தனிச் சிறப்பு.

55) பொருத்துக.

அ. திருமலை நாயக்கர் மகால் – 1. திருச்சி

ஆ. இராமநாதசாமி கோயில் – 2. மதுரை

இ. மீனாட்சியம்மன் கோயில் – 3. இராமேசுவரம்

ஈ. தாயுமானவர் கோயில் – 4. மதுரை

A) 4, 3, 2, 1

B) 2, 3, 4, 1

C) 3, 4, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் இராமநாதசாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சிம்மன் கோயில் புது மண்டபம், திருச்சி மலைமீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் ஆகியன நாயக்கர் கட்டடக்கலைக்குச் சிறந்த உதாரணமாகும். திருவரங்கம் குதிரை மண்டபமும் இவர்கள் காலத்தவையே.

56) தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில் எது?

A) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

B) திருவரங்கம் அரங்கநாதர் கோயில்

C) சிதம்பரம் நடராஜர் கோயில்

D) அனைத்தும்

விளக்கம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் ஆகியவை தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கவை.

57) நடுகல் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) அகநானூறு

C) புறநானூறு

D) அனைத்தும்

விளக்கம்: நடுகற்கள், சிற்பக்கலையின் தோற்றுவாயகாக் கருதப்படுகின்றன. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலானவற்றில் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

58) போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் எது?

A) நடுகல்

B) வீரக்கல்

C) நினைவுக்கல்

D) அனைத்தும்

விளக்கம்: போரில் வீரமரணமடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் ‘நடுகல்’. இது ‘வீரக்கல்’ அல்லது ‘நினைவுக்கல்’ என்றும் அழைக்கப்படும்.

59) விழாக்காலங்களில் களிமண்ணால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களைச் செய்து வைத்து வழிபடுவது எவ்வாறு அழைக்கப்படும்?

A) கதிரை எடுப்பு

B) உருவாரம்

C) நடுகல்

D) A மற்றும் B

விளக்கம்: தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த நடுகல் வழிபடும் முறை, பிற்காலத்தில் வீரர்களின் உருவத்தைச் செதுக்கி வழிபடும் முறையாக வளர்ந்தது. தெய்வங்களுக்குச் சுதை உருவங்கள் செய்து வழிபட்டனர். இதுவே, கல்லில் சிற்பம் செய்யும் கலையாக வளர்ச்சி பெற்றது. விழாக்காலங்களில் களிமண்ணால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களைச் செய்து வைத்து வழிபடுவது கதிரை எடுப்பு, உருவாரம் எனப்படும். கல்லினால் செய்யப்படுவது கற்சிற்பங்கள் எனவும் உலோகத்தால் செய்யப்படுவது படிம உருவங்கள் என்றும் அழைக்கப்படும்.

60) சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதை கூறும் நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) நற்றிணை

C) நன்னூல்

D) பரிபாடல்

விளக்கம்: சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதைப் பரிபாடல் மூலம் அறியலாம். கொற்கை, அரிக்காமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும் சிற்பங்களும் கிடைத்துள்ளன.

61) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சுதைச்சிற்பங்கள் இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் எனக்கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம்

D) B மற்றும் C

விளக்கம்: காவிரிப்பூம்பட்டினம் இருந்த சுதைச்சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என மணிமேகலை கூறுகிறது.

62) சிற்பக் கலைஞர்களை ‘மண்ணீட்டாளர்’ என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூலின் வாயிலாக அறியலாம்?

A) பட்டினப்பாலை

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம்

D) B மற்றும் C

விளக்கம்: சிற்பக் கலைஞர்களை ‘மண்ணீட்டாளர்’ என அழைக்கும் வழக்கம் இருந்ததை மணிமேகலையின் மூலம் அறியலாம்.

63) பௌத்தர்கள் தொடக்க காலத்தில் எதை வைத்து வணங்கினர்?

A) பாதபீடிகை

B) தருமச்சக்கரம்

C) A மற்றும் B

D) புத்த திரு உருவம்

விளக்கம்: கி. பி(பொ. ஆ) 3-ம் நூற்றாண்டு முதல் கி. பி(பொ. ஆ) 10-ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்த சமண சமயங்கள் பரவி இருந்தன. தொடக்க காலத்தில் பௌத்தர்கள் பாதபீடிகை, தருமச்சக்கரம் முதலியவற்றை வைத்து வணங்கினர். பின்னரே புத்தர் திரு உருவங்களை வணங்கும் முறை தோன்றியது.

64) தொடக்கத்தில் சமணர்கள் எதை வைத்து வணங்கினர்?

A) அருகப்பெருமானின் உருவம்

B) தீர்த்தங்கரர்களின் உருவம்

C) பாதபீடிகை

D) A மற்றும் B

விளக்கம்: சமண சமயத்தில் அருகப்பெருமானின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவங்களையும் வணங்கினர்.

65) ‘சுதை’ என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து அதனுடன் எதை கலந்து அரைப்பதாகும்?

A) கரும்புச்சாறு

B) வெல்லச்சாறு

C) நெல்லிக்காய்

D) அனைத்தும்

விளக்கம்: ‘சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு முதலியவற்றை கொண்டு உருவங்கள் செய்வது’ என அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார்.

66) சிற்பங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வளர்ப்பது சிற்பக்கலை எனப்படும். கல், சுதை (சுண்ணாம்புக் கரை) , மரம், மெழுகு, அரக்கு, தந்தம், உலோகம் ஆகியவற்றால் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. இவற்றைப் புடைப்புச்சிற்பங்கள், தனிச்சிற்பங்கள் என வகைப்படுத்துவர்.

67) கூற்றுகளை ஆராய்க.

1. கல், மரம், சுவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தில் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் தனிச்சிற்பம்.

2. ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறமும் முழுவடிவமாக வடித்தல் புடைப்புச்சிற்பம் எனப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 சரி

D) 1, 2 தவறு

விளக்கம்: கல், மரம், சுவர், பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் புடைப்புசிற்பம் ஓர் உருவத்தின் முன்புறமும் பின்புறம் முழு வடிவமாக வடித்தல் தனிச்சிற்பம் எனப்படும்.

68) தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு உள்ளது?

A) மாமல்லபுரம்

B) காஞ்சிபுரம்

C) மதுரை

D) திருநெல்வேலி

விளக்கம்: தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி மாமல்லபுரத்தில் உள்ளது.

69) பின்வருவனவற்றுள், எந்தக் கோயிலின் கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டவை?

A) சுந்தர வரதராஜப்பெருமாள்

B) பார்த்தசாரதிப் பெருமாள்

C) பாண்டவதூதப் பெருமாள்

D) அனைத்தும்

விளக்கம்: தமிழ்நாட்டுச் சிற்பக்கலை, கோயில்களை, அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது. தொடக்ககாலச் சிற்பங்கள் மரத்தினாலும் சுதையினாலும் செய்யப்பட்டவை. இப்பொழுதும் அத்தகைய சிற்பங்களைக் காணலாம். எடுத்துகாட்டாக சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள கடவுள் உருவங்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள் முதலிய உருவங்கள் சுதையினால் செய்யப்பட்டவை.

70) உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன?

A) சேரர்

B) முற்காலச் சோழர்

C) பல்லவர்

D) பிற்காலச் சோழர்

விளக்கம்: கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை பல்லவர் காலத்திலும், உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை பிற்காலச் சோழர் காலத்திலும் பின்பற்றப்பட்டன.

71) பிரதிமை உருவங்களில் பழைமையானது யாருடைய உருவங்கள்?

A) பல்லவ அரசர் உருவங்கள்

B) சேர அரசர் உருவங்கள்

C) சோழ அரசர் உருவங்கள்

D) பாண்டிய அரசர் உருவங்கள்

விளக்கம்: தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறே அமைப்பது பிரதிமைகள் எனப்படும். பிரதிமை உருவங்களில் பழமையானது பல்லவ அரசர் உருவங்கள் ஆகும்.

72) உலோகங்களினால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் யார் காலத்தில் தோன்றியது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: உலோகங்களினால் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் தோன்றியது.

73) கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம் என்பது யாருடைய காலம்?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: பல்லவர் காலம், கோயில் சிற்பக்கலையின் தொடக்க காலம் எனலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக் கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன. இவையே தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்களாகும். இவர் காலத்தில் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் மட்டுமே கற்களால் உருவாக்கப்பட்டவை. கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்படுகின்றன. பல்லவர் காலத்தில் கடவுள் போலவே அரசன் அரசி உருவங்களையும் உயரமாகச் செதுக்கும் வழக்கம் இருந்தது.

74) மாமல்லபுரத்தில் அமைத்துள்ள ‘பகீரதன் தவம்’ என்ற சிற்பத்தொகுதி உள்ள பாறையின் அகலம் என்ன?

A) 96 அடி

B) 43 அடி

C) 64 அடி

D) 63 அடி

விளக்கம்: மாமல்லபுரத்தில் கோவர்த்தன மலை மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ளது. இப்பாறையின் இடையில் இயற்கையாகவே கீழ் நோக்கிய பள்ளம் காணப்படுகிறது. சிற்பிகள் இந்த இயற்கையான வடிவமைப்பை பயன்படுத்த தம் கற்பனையையும் கலந்து ‘பகீரதன் தவம்’ என்ற சிற்பத்தொகுதியாக வடிவமைத்துள்ளனர். கங்கை பூமிக்கு வர பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்த காட்சியும், அந்தத் தவத்தின் பயனாகக் கங்கை பூமிக்கு வரும் நிகழ்வையும் அப்பாறைப் பகுதியில் வடிவைமத்துள்ளனர். இவர்கள் காலத்தில் புராணச் செய்திகளைச் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.

75) நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும் யார் காலத்துக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன?

A) மகேந்ததிரவர்ம பல்லவன்

B) நரசிம்மவர்ம பல்லவன்

C) மாமல்லன்

D) ராஜராஜ சோழன்

விளக்கம்: நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும் மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. மலையின் கிழக்குப் பகுதியில் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலும், மேற்குப் பகுதியில் நரசிம்மப் பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரே மலையில் இரண்டு குடைவரைக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு அம்சமாகும். இதன் சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் கூடியனவாகவும் இங்கு திருமாலின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்து ஒற்றைக்கல் இரதங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவை தனித்துவமானவையாக உள்ளன.

76) உலகின் மிகப்பெரிய நந்தி சிலை எங்கு உள்ளது?

A) தமிழ்நாடு

B) ஆந்திரா

C) கர்நாடகா

D) கேரளா

விளக்கம்: ஆந்திராவில் உள்ள அனந்தப்பூரில் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரிலுள்ள நந்தி சிற்பம் ஒரே கல்லால் வடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப்பெரிய நந்தியாகும்.

77) கூற்றுகளை ஆராய்க.

1. பல்லவர் காலச் சிற்பங்களின் வளர்ச்சியுற்ற நிலையே சோழர் காலச் சிற்பங்களாக இருந்தன. பல்லவர் காலத்தில் காலத்தில் தாழ்ந்த, புடைப்புச்சிற்பங்களாக அமைக்கப்பட்டிருந்தவை, சோழர் காலத்தில் உயர்ந்த புடைப்புச்சிற்பங்களாகவும் முழு உருவச்சிற்பங்களாகவும் அமைக்கப்பட்டன.

2. சோழர் காலத்தில் இச்சிற்பக்கலை உயர்ந்த நிலையை அடைந்தது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி, கஜுராகோ, உதயபுரி, புவனேஷ்வர் ஆகிய பகுதிகளிலும் சிற்பக்கலை வளர்ந்த நிலையில் இருந்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 சரி

D) 1, 2 தவறு

விளக்கம்: உயரமான மகுடங்கள், மெல்லிய நெடிய உடலமைப்பு போன்றவை சோழர் காலச் சிற்பங்களின் சிறப்பாகும். பிற்காலச் சோழர்களின் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் மிகுந்து காணப்பட்டன. மேலும், வட்டமான முக அமைப்பும் சற்று தடித்தும் குட்டையானதுமான உடல் அமைப்புகளுடன் சிற்பங்கள் காணப்பட்டன.

78) இந்தியாவில் உள்ள நந்திச் சிற்பங்களில் 2-வது பெரிய சிற்பம் எங்குள்ளது?

A) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

B) தஞ்சை பிரகதீசுவரர் கோயில்

C) சிதம்பரம் நடராஜர் கோயில்

D) அனந்தப்பூரிலுள்ள நந்தி சிற்பம், ஆந்திரா.

விளக்கம்: இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் தெற்கு நோக்கிய வாயிலின் கீழ்ப்புறம் பத்தரின் சிற்பமும் இக்கோயிலின் விமானத்தின் வலப்பக்கம் சமணர் உருவங்களும் உள்ளன. இக்கோயிலின் நந்தி சிற்பம் இந்தியாவிலுள்ள நந்திச் சிற்பங்களில் 2-வது பெரிய சிற்பமாகும்.

79) தஞ்சாவூரில் நந்தியின் உயரம் என்ன?

A) 12 அடி

B) 19.5 அடி

C) 8.25 அடி

D) 216 அடி

விளக்கம்: தஞ்சாவூர் நந்தியின் உயரம்,

உயரம் – 12 அடி

நீளம் – 19.5 அடி

அகலம் – 8.25 அடி.

80) தராசுரம் கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் இராஜராஜன்

B) இரண்டாம் இராஜராஜன்

C) முதலாம் இராஜேந்திரன்

D) மூன்றாம் குலோத்துங்கன்

விளக்கம்: இரண்டாம் இராஜராஜன் கட்டிய தாராசுரம் கோயிலில் நாயன்மார்களின் வாழ்க்கையைக் குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ளன.

81) தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய நன்கொடை எது?

A) கற்சிற்பம்

B) குகை ஓவியம்

C) மட்பாண்டம்

D) செப்புத்திருமேனிகள்

விளக்கம்: தமிழர்கள் உலகத்திற்கு வழங்கிய நன்கொடை, செப்புத்திருமேனிகள் ஆகும்.

82) சங்க காலத்திலும் உலோகச் சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை கூறும் நூல் எது?

A) மதுரைக்காஞ்சி

B) குறுந்தொகை

C) பட்டினப்பாலை

D) அனைத்தும்

விளக்கம்: சங்க காலத்திலும் உலோகச் சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இருப்பினும் சோழர் கால உலோகச் சிற்பங்கள் செப்புத்திருமேனிகளின் பொற்காலம்.

83) சோழர் காலச் செப்புத் திருமேனிகளுள் உலகப்புகழ் வாய்ந்தது எது?

A) முருகன் சிலை

B) திருமால் சிலை

C) நடராஜர் சிலை

D) பைரவர் சிலை

விளக்கம்: விஜயாலயன், பராந்தகன், செம்பியன் மாதேவி, முதலாம் இராஜராஜன் ஆகியோரது காலத்தில் செப்புத்திருமேனிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சோழர் காலச் செப்புத்திருமேனிகளுள் நடராஜர் சிலை உலகப்புகழ் வாய்ந்தது. சோழர் அரசர்களும் அவர்களது குடும்பத்தாரும் கோயில்களுக்குச் செப்புத் திருமேனிகளைக் கொடையாகக் கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.

84) பிற்காலப் பாண்டியரின் சிற்பக்கலை என்பது, யாருடைய காலத்து சிற்பக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது?

A) சேரர்

B) சோழர்

C) பல்லவர்

D) நாயக்கர்

விளக்கம்: பிற்காலப் பாண்டியர்களின் சிற்பக்கலை என்பது, சோழர் காலச் சிற்பக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இவர்கள் கோயில்களின் வெளிப்புறச் சுவர்களையும் சிற்பங்களையும் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.

85) உயர்ந்த தூண்களையுடைய மண்டபங்கள் அமைத்தல், மண்டபங்களின் தூண்களில் யாளி, குதிரை, மனித உருவங்கள், புராணத் தொன்மங்களை விளக்கும் சிற்பங்கள் போன்றவை யாருடைய காலச்சிற்பங்களின் தனித்தன்மை?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) விஜயநகர நாயக்கர்

விளக்கம்: விஜயநகர மன்னர்கள் கட்டக்கலையில் கொண்டிருந்த ஆர்வம் சிற்பக்கலையிலும் வெளிப்பட்டது. கோபுரங்களிலும், கோயில் விமானங்களிலும் ஏராளமான சிற்பங்களை அமைத்தனர்.

86) யாருயை காலச்சிற்பங்கள் இரும்பில் வளர்த்தது போன்ற உறுதி உடையவை?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) விஜயநகர நாயக்கர்

விளக்கம்: விஜயநகரச் சிற்பங்கள் மூக்குக் கூர்மையானதாகவும் வயிறு வட்டமானதாகவும் இருக்கும். மனித உருவச் சிற்பங்களில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகே கோயில்களில் சிற்பங்கள் அதிக அளவில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது

87) வேட்டையாடுதல், கோலட்டம், பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களைக் கோயில்களில் இடம்பெறச் செய்தல் யார் காலத்தில் வழக்கமாக இருந்தது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) விஜயநகர நாயக்கர்

விளக்கம்: வேட்டையாடுதல், கோலட்டம், பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களை மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் போன்ற இடங்களில் காணலாம். தற்காலத்தில் மெழுகு, மணல், கண்ணாடி போன்றவற்றினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன.

88) அழகினைப் பாராட்ட, புலவர்கள் எதை உவமைகளாகக் கூறுவர்?

A) சிற்பம்

B) ஓவியம்

C) இயற்கை

D) கடல்

விளக்கம்: அழகினைப் பாராட்ட, புலவர்கள் ஓவியத்தை உவமையாகக் கூறுவர். ஓவியக்கலை தொன்மையான வரலாற்றினை உடையது. தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டகளின் மேல், எழுத்துகளும், பல உருவங்களும் காணப்படுகின்றன. தொடக்க காலத்தில் ஓவிய எழுத்துகளே இருந்தன.

89) ஒவியம் என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?

A) ஒவ்வம்

B) ஓவம்

C) ஓவ்வு

D) எதுவுமில்லை

விளக்கம்: ‘ஒவ்வு’ என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியதே ஓவியம். ஒவ்வு என்பதற்கு ‘ஒன்றைப் பற்று’ அல்லது ‘ஒன்றைப் போலவே இருத்தல்’ என்று பொருள். இச்சொல்லிலிருந்து தோன்றியதே ஓவு, ஓவ்வு போன்ற சொற்கள் ஓவியத்தைக் குறிக்கின்றன.

90) கூற்றுகளை ஆராய்க.

1. தான் கண்ட காட்சியை அப்படியே வரைவது காட்சி ஓவியம்

2. மனத்தில் கற்பனை செய்ததை வரைதல் கற்பனை ஓவியம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தொல் பழங்கால மனிதர் சொற்களை அறியும் முன்பே தம் எண்ணங்களைக் காட்சிகளாக உணர்த்தக் கற்றுக் கொண்டனர். தமக்கு மகிழ்வளித்த வேட்டைக் காட்சிகளையும் பிறவற்றையும் ஓவியங்களாகக் குன்றுகளில் தீட்டியுள்ளனர். பச்சிலைச்சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகியனவற்றைக் கொண்டு அவ்வோவியங்களுக்கு வண்ணம் தீட்டினர்.

91) கோட்டோவியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

A) வட்டிகைச் செய்தி

B) சித்திரச் செய்தி

C) புனையா ஓவியம்

D) அனைத்தும்

விளக்கம்: ஓவியத்தை வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பழங்காலத்தில் சுவர் ஒவியங்களே பெரிதும் காணப்பட்டன. அதனால்தான் ‘சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை’ ‘சுவரை வைத்தல்லவா சித்திரம் வரைய வேண்டும்’ என்ற பழமொழிகள் தோன்றின. வளைந்தகோடு, கோணக்கோடு, நேர்க்கோடு ஆகியவற்றைக் கொண்டு ஓவியங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான கோட்டோவியங்களுக்குப் ‘புனையா ஒவியம்’ என்று பெயர். இதனை ‘வரி வடிவ ஓவியம்’ என்றும் அழைப்பர்.

92) எந்த நூலில் முதன்முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றன?

A) பதிற்றுப்பத்து

B) நாலடியார்

C) தொல்காப்பியம்

D) நெடுநல்வாடை

விளக்கம்: மடலேறுதலின் பொழுது பனை ஓலையில் வரைந்த கோடுகளால் ஆன ஓவியம் வரிவடிவ ஓவியமாகும். நெடுநல்வாடையில் முதன் முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றது. புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களால் புனைந்து அமைக்கும் ஓவியம் ‘முழுஓவியம்’ எனப்படும்.

93) ஓவியம் வரைவோரை எவ்வாறு அழைப்பர்?

A) கண்ணுள்வினைஞர்

B) ஓவியவல்லோன்

C) ஓவியப்புலவன்

D) அனைத்தும்

விளக்கம்: ஓவியம் வரைவோரை ஓவியன், கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவியவல்லோன், ஓவியப்புலவன் என்றும் அழைப்பர்.

94) எங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன?

A) காவிப்பூம்பட்டினம்

B) அரிக்காமேடு

C) காஞ்சிபுரம்

D) கீழடி

விளக்கம்: காவேரிப்பூம்பட்டினம், அரிக்காமேடு, காஞ்சிபுரம், செங்கம் முதலிய பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த காசுகள், ஓடுகள் முதலியவற்றின் மீது காணப்படும் புடைப்பு ஓவியங்களைக் கொண்டு தென்மைகால மக்களின் ஓவியத் திறனை வரையலாம். கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.

95) மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) புனையா ஓவியம்

B) முழு ஓவியம்

C) பிரதிமை

D) படிமை

விளக்கம்: மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஓவியங்கள் பிரதிமை எனவும், தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் பழமை எனவும் அழைக்கப்படுகின்றன. பெரிய வீடுகள். கோயில்கள், மாளிகைகள், அரண்மனைகள் போன்றவற்றின் சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் வெண்மையான சுதை பூசப்பட்ட சுவர்களில் சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தால் கோட்டோவியங்கள் வரையப்பட்டன. இவற்றின் மேல் பல வண்ணங்கள் தீட்டும் வழக்கம் இருந்தது.

96) கூற்றுகளை ஆராய்க.

1. தொல்காப்பியத்தில் ஓவியம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரனுக்கு நடுகல் வைக்கப்பட்டது.

2. நடுகல்லில் அவ்வீரனின் உருவத்தைச் செதுக்கும் முன்பே ஓவியமாக வரைந்து கொள்வர். அவ்வோயித்தைப் பார்த்துக் கல்லில் செதுக்குவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் சரி. மேலும், பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காகத் தங்கள் அரண்மனைகளிலும், கோயில்களிலும் ‘ஓவியமாடம்’ என்ற தனிப்பகுதியை அமைத்தனர்.

97) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்தததை கூறும் நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) பரிபாடல்

C) நெடுநல்வாடை

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: தலையங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்ததை நெடுநல்வாடையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

98) பனமலை, காஞ்சிபுரம், திருமலைபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்கள் எந்தக் காலக் கலைத் திறனைக் காட்டுவனவாக அமைந்துள்ளன?

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம்

D) பல்லவர் காலம்

விளக்கம்: பனமலை, காஞ்சிபுரம், திருமலைபுரம் ஆகிய இடங்களில் காணப்பட்ட ஓவியங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைக் காட்டுவனவாக உள்ளன. சங்க காலத்துக்குப் பின் பல்லவர் காலத்தில் கலைகள் தழைத்து ஓங்கின.

99) தஞ்சையில் வரையப்பட்டுள்ள சிவபெருமான், நாட்டியமாடும் பெண்கள், சேரமான் பெருமாள் நாயனார், இராஜராஜன், கருவூர்த்தேவர் ஓவியங்கள் யார் காலத்தவை?

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம்

D) பல்லவர் காலம்

விளக்கம்: தஞ்சையில் வரையப்பட்டுள்ள சிவபெருமான், நாட்டியமாடும் பெண்கள், சேரமான் பெருமாள் நாயனார், இராஜராஜன், கருவூர்த்தேவர் ஓவியங்கள் சோழர் காலத்தவை. விஜயநகர நாயக்கர் காலத்து ஓவியங்களைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காண முடிகின்றது.

100) அக்கால மக்கள், குகைகளின் சுவர்கள் கரடு முரடாக இருந்தபடியால் எந்த பொருளைப் பதப்படுத்தி பின் அச்சுதையை சுவர்களின் மேல் பூசி அதில் ஓவியம் வரைந்தனர்?

A) உமி

B) சாணம்

C) களிமண்

D) அனைத்தும்

விளக்கம்: மலைப்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைச்சுவர்களின் மேல் அக்கால மக்கள் ஓவியங்கள் வரைந்தனர். இக்குகைகளின் சுவர்கள் கரடு முரடாக இருந்தபடியால் உமி, சாணம், களிமண் முதலானப் பொருள்களைக் கொண்டு பதப்படுத்திய சுதையைச் சுவர்களின் மேல் பூசினார்கள். பின்னர், அச்சுதையைப் பூச்சின் மேல் ஓவியங்கள் வரையப்பட்டன.

101) ‘சித்திரக்காரப்புலி’ என அழைக்கப்பட்டவர் யார்?

A) மகேந்திரவர்மன்

B) நரசிம்மவர்மன்

C) மாமல்லன்

D) ஆதித்ய சோழன்

விளக்கம்: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பல குகைக் கோயில்களை அமைத்தான். அக்குகைக்கோயில் சுவர்களின் சித்திரங்களை எழுதுவித்தான். அவனே ஓவியக் கலையைப் பயின்றவன் என்பதை ‘சித்திரக்காரப்புலி’ என்ற அவன் பட்டப்பெயரின் மூலம் அறியலாம்.

102) எந்த மாவட்டத்தைச் சேர்ந்த மல்லப்பாடியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டிப்பாக அமைந்தது?

A) தருமபுரி

B) கிருஷ்ணகிரி

C) சேலம்

D) திருச்சி

விளக்கம்: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லபாடியில் சென்னனப் பல்கலைகழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது.

103) சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) புதுக்கோட்டை

D) தருமபுரி

விளக்கம்: தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் அமைந்துள்ள குகை ஓவியங்கள் புகழ் வாய்ந்தவை. இவை கி. பி. (பெ. ஆ) 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள். இவ்வோவியங்கள் மூலிகைகளால் ஆன வண்ணங்களைக் கொண்டவை. சித்தனவாசலின் ஏழடிப்பட்டம் பகுதியின் மேல்கூரைப் பகுதியிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

104) பாண்டியன் நன்மாறன், “பாண்டியன் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதை கூறும் நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) நெடுநல்வாடை

D) பரிபாடல்

விளக்கம்: பாண்டியன் நன்மாறன், தனது சித்திர மாடத்தில் இருந்த பொழுது உயிர்துறந்தமையால் “பாண்டியன் சித்திரமாடத்துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதைப் புறநானூற்றில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகின்றார்.

105) நக்கீரர் தமது எந்த நூலில் பாண்டியனின் சித்திரமாடத்தைப் பற்றிக் கூறுகிறார்?

A) நெடுநல்வாடை

B) திருமுருகாற்றுப்படை

C) பட்டினப்பாலை

D) பரிபாடல்

விளக்கம்: நக்கீரர் தமது நெடுநல்வாடையில் பாண்டியனின் சித்திரமாடத்தைப் பற்றிக் கூறுகிறார்.

106) திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் ‘எழு தொழில் அம்பலம்’ என்ற பெயரில் ஓவியச்சாலை இருந்த செய்தியினை எந்த நூல் மூலம் அறியலாம்?

A) பதிற்றுப்பத்து

B) பரிபாடல்

C) நெடுநெல்வாடை

D) புறநானூறு

விளக்கம்: திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் ‘எழு தொழில் அம்பலம்’ என்ற பெயரில் ஓவியச் சாலை இருந்த செய்தியினை பரிபாடல் மூலம் அறியலாம். இரதி, காமன், பூனை வடிவம் கொண்ட இந்திரன், அகலிகை, கௌதம முனிவர் முதலான ஓவியங்கள் இங்குக் காணப்பட்ட செய்தியினை இலக்கியங்களில் காணலாம். இந்த ‘எழு தொழில் அம்பலம்’ பிற்காலத்தில் அழிந்தது.

107) உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியை எந்த நூலில் காணலாம்?

A) தொல்காப்பியம்

B) பரிபாடல்

C) பெருங்கதை

D) பதிற்றுபத்து

விளக்கம்: உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியைப் பெருங்கதை மூலம் அறியலாம். திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் கோயிலில் காணப்பட்ட சித்திரக்கூடம் பற்றிச் செப்பேடுகள் கூறுகின்றன. இதேபோல், கோப்பெருந்தேவியின் பள்ளியறைச் சுவர் ஓவியங்கள் பற்றியும் இலக்கியங்களில் காணலாம்.

108) புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலையிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியைக் கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) வளையாபதி

C) குண்டலகேசி

D) மணிமேகலை

விளக்கம்: புத்த தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியினை மணிமேகலை கூறுகின்றது. இவை மட்டுமின்றிச் செல்வந்தர் வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.

109) ‘பட்டம்’ என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?

A) படாம்

B) பாடம்

C) ஓவியம்

D) ஓவம்

விளக்கம்: ‘படம்’ என்ற சொல் ‘படாம்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ‘படாம்’ என்பதற்குத் ‘துணி’ என்று பொருள். பழங்காலத்தில் துணிகளில் ஓவியங்களை வரைந்தார்கள் அவற்றிற்குச் சித்திரப்படாம், சித்திரைதிரை என்று பெயர்.

110) சித்திரம் எழுதும் கோலுக்கு என்ன பெயர்?

A) வட்டிகை

B) எழுதுகோல்

C) துகிலிகை

D) படாம்

விளக்கம்: சித்திரம் எழுதும் கோலுக்குத் துகிலிகை என்று பெயர்.

111) எந்த நூலில், சீத்தலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டது என்கிறார்?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: மணிமேகலையில், சீத்திலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்து உவவனம் என்னும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டது என்கிறார்.

112) தக்க நாட்டிலேயே ஆங்காங்கே தாமரைப் பூக்களும், தாமரை இலைகளும் அடர்ந்த குளங்களும் காணப்படும் காட்சியினை, கணியில் எழுதிய தாமரைக்குளத்தின் காட்சியைப் போலக் காணப்படுகிறது என்று வர்ணித்தவர் யார்?

A) திருத்தக்கத்தேவர்

B) இளங்கோவடிகள்

C) சீத்தலைச்சாத்தனார்

D) திருவள்ளுவர்

விளக்கம்: தக்க நாட்டிலே ஆங்காங்கே தாமரைப் பூக்களும் தாமரை இலைகளும் அடர்ந்த குளங்களும் காணப்படும் காட்சியினைத் திருத்தக்கதேவர் வருணிருக்கும் பொழுது, துணியில் எழுதிய தாமரைக்குளத்தின் காட்சியைப் போலக் காணப்படுகிறது என்கிறார்.

113) ஒவியம் வரையப்பட்ட துணியை ‘ஓவியாழினி’ என்றுக் கூறியவர் யார்?

A) திருத்தக்கத்தேவர்

B) இளங்கோவடிகள்

C) சீத்தலைச்சாத்தனார்

D) திருவள்ளுவர்

விளக்கம்: இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை ‘ஓவிய எழினி’ என்கிறார். பலகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. அவ்வாறு ஓவியம், வரையப்பட்ட பலகை ‘வட்டிகைப்பலகை’ எனப்பட்டது. திரை ஓவியம் ‘துகிலோவியம்’ எனவும் அழைக்கப்பட்டது.

114) எந்த காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: சோழர் காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. மராட்டிய மன்னன் சரபோஜியின் காலத்தில் தஞ்சாவூரில் இது வளர்ச்சி பெற்றது. இவ்வோவியங்கள் தமிழகத்தின் புவிசார் குறியீடுகளில் ஒன்றாகும்.

115) பச்சைக்குதிரை விளையாட்டின் முதல்நிலையின் உயரங்களை ஏறுவரிசைப்படுத்துக.

1. ஒரு கால் பாத உயரம் 2. இரு கால் பாத உயரம் 3. இரு கால் பாத உயரம் + ஒரு சாண் 4. இரு கால் பாத உயரம் + இரண்டு சாண்

A) 4, 3, 2, 1

B) 2, 4, 3, 1

C) 3, 2, 4, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்: பச்சைக்குதிரை விளையாட்டின் முதல்நிலை கால் தாண்டல். இதில் தாண்ட வேண்டிய உயரம் படிப்படியாக உயர்ந்துக் கொண்டே செல்லும். முதலில் ஒரு கால் பாதம், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கால் பாதம், இரண்டு பாத உயரத்தின் மேல் ஒரு சாண், இரண்டு பாத உயரத்தின் மேல் இரண்டு சாண் எனக் கால் தாண்ட வேண்டிய உயரம் உயர்ந்து கொண்டே போகும்.

116) பச்சைக்குதிரை விளையாட்டின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.

1. ஆள் தாண்டல் 2. கால் தாண்டுதல் 3. தவறியவர் 4. குனிதல்

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 2, 4, 1, 3

D) 2, 3, 1, 4

விளக்கம்: முதல் நிலை – கால் தாண்டல்

இரண்டாம் நிலை – ஆள் தாண்டல்

மூன்றாம் நிலை – குனிதல்

நான்காம் நிலை – தவறியவர்.

117) கூற்றுகளை ஆராய்க

1. பழங்கால மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது ஓவியம் வரைந்து மகிழ்ந்திருந்தனர்.

2. அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்கள், கேடயம், கட்டில், வாள் போன்றவற்றில் ஓவியங்கள் வரைந்தனர்.

3. தமிழன் நாற்கவிகளில் சித்திரக்கவியும் ஒன்றாகும். சித்திரக்கவி போலவே சித்திரநதி, சித்திரகலை, சித்திரதடாகம் எனப் பெயர் சூட்டியதிலிருந்து ஓவியத்திற்குத் தமிழர்கள் அளித்த முக்கியத்துவத்தை அறியலாம்.

A) 1 மற்றும் 2 தவறு

B) 1 மற்றும் 2 சரி

C) 1, 3 தவறு

D) 1, 2, 3 தவறில்லை

விளக்கம்: மேற்கண்ட மூன்று கூற்றுகளும் சரி. தற்காலத்தில் எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல் ஓவியம், செயற்கை வண்ணக் கூழ்ம ஓவிம், நீர் வண்ண ஓவியம், மை ஓவியம், பூச்சு ஓவியம், சூடான மெழுகு ஓவியம், நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் போன்ற ஒவியங்கள் காணப்படுகின்றன.

தமிழர்களின் மிகத் தொன்மைகளுள் ஒன்று ஓவியம். எழுத்தால் உணர்த்தப்பட இயலாத இடைவெளிகளை ஓவியங்கள் நிரப்பின. காலந்தோறும் ஓவியக் கலையிலும் வளர்ச்சிப்படி நிலைகள் உருவாகின. பாறை ஓவியங்களில் தொடங்கி இன்று பல்வேறு நாடுகளின் ஓவிய நுட்பங்களை உள்வாங்கிப் படிநிலை மாற்றம் பெற்று வளர்ந்துள்ளன.

118) இசை என்னும் சொல் எவ்வகைப் பெயர்?

A) இடுகுறிப் பெயர்

B) இடுகுறிப்பொதுப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப்பொதுப்பெயர்

விளக்கம்: இயற்றப்பட்ட செய்யுளை உரிய ஓசையோடு இசைப்பதால் இதற்கு இசை என்ற பெயர். இசை என்னும் சொல் காரணப்பெயர் ஆகும். இவ்விசைக்கு அடிப்படையானவை ஓசை என்று கூறுவர்.

119) “ஏழிசையாழ் நரம்பின் ஓசையை” எனக் கூறுவது எது?

A) திருவாசகம்

B) திருமூலம்

C) திருமந்திரம்

D) திருப்பதிகம்

விளக்கம்: “ஏழிசையாழ் நரம்பின் ஓசையை” என்ற திருப்பதிகத்தொடர் மூலம் இசை ஏழு என்பதையும் இவை தனித்தனி நரம்புகளில் இசைக்கப்பட்டன என்பதையும் அறியலாம்.

120) ஏழிசைகளுள் எது இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது?

A) குரல்

B) துத்தம்

C) கைக்கிளை

D) தாரம்

விளக்கம்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன 7 இசைகள் ஆகும். இதில் தாரம் என்னும் இசையே, இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது என்பர்.

121) இசையை அவை தோன்றும் இடங்களுடன் பொருத்துக.

அ. குரல் – 1. மூக்கு

ஆ. துத்தம் – 2. சிரம்

இ. உழை – 3. நா

ஈ. தாரம் – 4. மிடறு

A) 4, 3, 2, 1

B) 4, 2, 3, 1

C) 4, 1, 3, 2

D) 3, 4, 2, 1

விளக்கம்: மிடறு – குரல்

நா – துத்தம்

அண்ணம் – கைக்கிளை

சிரம் – உழையும்

நெற்றி – இளி

நெஞ்சு – விளரி

மூக்கு – தாரம்

122) ஏழிசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ‘ஆரோசை’ எனக் கூறியவர் யார்?

A) நக்கீரர்

B) கபிலர்

C) சேக்கிழார்

D) கம்பர்

விளக்கம்: ஏழிசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ‘ஆரோசை’ எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை ‘அமரோசை’ எனவும் சேக்கிழார் கூறுகிறார். ஆரோசை, அமரோசை ஆகியவற்றை இக்காலத்தில் ஆரோகணம், அவரோகணம் என்பர்.

123) இசைக்கு உரிய கருவிகளை எத்தனையாக வகைப்படுத்துவர்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: இசைக்கு உரிய கருவிகளைத் தோல்கருவிகள், துணைக்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள் என 4 வகைப்படுத்துவர்.

124) ‘குழலினது யாழினிது என்ப’ என்பது யாருடைய கூற்று?

A) நக்கீரர்

B) வள்ளுவர்

C) கபிலர்

D) சேக்கிழார்

விளக்கம்: பண்டைய நாளில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், குழலையும் யாழையும் கொண்டே ஏழிசைத்திறங்களை இசைத்துள்ளனர். இவை தனிச் சிறப்புடையனவாகக் கருதப்பட்டதைக் ‘குழலினிது யாழினிது என்ப’ என்ற வள்ளுவரின் தொடர் மூலம் அறியலாம்.

125) ‘வேய்ங்குழல்’ எந்த நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாகும்?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்

விளக்கம்: இசைக் கலைஞர்கள் துளைக்கருவிகளில் தொன்மையானது குழலே. இது புல் வகையாகிய மூங்கிலில் செய்யப்பட்டதால் ‘வேய்ங்குழல்’ என்றும், ‘புல்லாங்குழல்’ என்றும் அழைக்கப்பட்டது. முற்காலத்தில் மூங்கிலிலும், சந்தனம், கருங்காலி, செங்காலி ஆகிய மரங்களிலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டது. ‘வேய்ங்குழல்’முல்லை நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாக விளங்கியது.

126) ஆநிரைகளை மேய்கும் ஒருவன் குமிழ்மரக் கொம்புகளை வில்லாக வளைத்து அதில் மரல்நாரினை நரம்பாகக் கட்டி வில்யாழ் அமைத்துக் குறிஞ்சிப் பண்ணை வாசித்தான் என்று கூறும் நூல் எது?

A) பரிபாடல்

B) பதிற்றுப்பத்து

C) இசை நுணுக்கம்

D) பெரும்பாணாற்றுப்படை

விளக்கம்: மேற்கண்ட செய்தியைக் கூறுவது பெரும்பாணாற்றுப்படை ஆகும். வில் நாணின் ஓசையைக் கேட்டு, அதன் இசை நுட்பத்தை உணர்ந்து, நாணின் நீளத்தைக் கூட்டியும் குறைத்தும் பல்வேறு இசை ஒலிகளை உருவாக்கினர். இவ்வாறு இசைகளைத் தரும் வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்புக்கருவியே, ‘வில்யாழ்’ ஆகும்.

127) ‘பெரும்கலம்’ என்பது எது?

A) பேரியாழ்

B) மகரயாழ்

C) ஆதியாழ்

D) சகோடயாழ்

விளக்கம்: வில்யாழை அடிப்படையாகக் கொண்டு பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் ஆகியவையும் பெருங்கல் என்னும் ஆதியாழும் அமைக்கப் பெற்றன.

128) எது தோல் இசைக் கருவிகளின் தாயாக விளங்குகிறது?

A) பேரிகை

B) படகம்

C) உடுக்கை

D) பறை

விளக்கம்: தொல்காப்பியர் கூறும் தோல் இசைக் கருவிகளில் ஒன்று பறை. இது தோல் இசைக் கருவிகளின் தாயாகவும் கருதப்படுகிறது.

129) அடியார்க்கு நல்லார் உரை கூறும் தோல் கருவிகள் எத்தனை?

A) 7

B) 30

C) 17

D) 27

விளக்கம்: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தம், சிறுபறை, பெரும்பறை, நாழிகைப்பறை எனத்தோல் கருவிகள் முப்பது உள்ளதாக அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது.

130) அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோல் கருவி எது?

A) மத்தளம்

B) உடுக்கை

C) பறை

D) சிறுபறை

விளக்கம்: அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோல் கருவி மத்தளம் ஆகும்.

131) இடைக்கருவி எனப்படுவது எது?

A) இடக்கை

B) சலிகை

C) உடுக்கை

D) மத்தளம்

விளக்கம்: இசைக்கும்போது மத்தளத்தை முதற்கருவியாகவும் கொள்ளுவர். இடையிடையே வாசிக்கச் ‘சலிகை’ என்னும் கருவியைப் பயன்படுத்துவர். அதனால், இக்கருவியை ‘இடைக்கருவி’ என்றும் சொல்வர்.

132) இராசராசேச்சுரம் கோயிலைக் கட்டியவர் யார்?

A) முதலாம் இராஜராஜசோழன்

B) முதலாம் இராசேந்திரன்

C) மூன்றாம் குலோத்துங்க சோழன்

D) ஆதித்ய சோழன்

விளக்கம்: முதலாம் இராஜராஜசோழன் கட்டிய இராசராசேச்சுரக் கோயிலில் உடுக்கை வாசிப்பவரும், கெட்டிமேளம் வாசிப்பவரும் இருந்தனர் எனத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

133) இறையனார் களவியல் உரை கூறும் இசைநூல் எது?

A) முதுநரை

B) பெருங்குருகு

C) பெருநாரை

D) இந்திரகாளியம்

விளக்கம்: இறையனார் களவியல் உரை மூலம் முதுநாரை, முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்தன என்பதை அறியமுடிகிறது. இந்நூலின் உரைப்பாயிரம் சிற்றிசை, பேரிசை ஆகிய நூல்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.

134) அடியார்க்கு நல்லார் கூறும் இசை நூல் எது?

A) பஞ்சபாரதீயம்

B) முதுநாரை

C) பரிபாடல்

D) பதிற்றப்பத்து

விளக்கம்: பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் முதலான நூல்களைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

135) ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது?

A) சயந்தன்

B) அடியார்க்கு நல்லார்

C) ஆதித்யன்

D) எவருமில்லை

விளக்கம்: ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் ‘சயந்தன்’ என்னும் பாண்டிய இளவரசனால் இயற்றப்பட்டது என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

136) எந்த நூலில் ‘குலோத்துங்கன் இசைநூல்’ என்ற நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது?

A) தொல்காப்பியம்

B) அகத்தியம்

C) யாப்பெருங்கலங்காரிகை

D) திருமந்திரம்

விளக்கம்: யாப்பெருங்கலங்காரிகை உரைப்பாயிரத்தில், குலோத்துங்கன் இசைநூல் என்ற நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இசை தொடர்பான பல நூல்களின் பெயர் கிடைத்தபோதும் அறிவனார் இயற்றிய ‘பஞ்சமரபு’ என்னும் நூல் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. பசுந்தரேசனார் என்பவர் இந்நூலை உரையோடு வெளியிட்டுள்ளார்.

137) தமிழகத்தில் இசைத்தூண்கள் காணப்படும் இடங்கள் எத்தனை?

A) 10

B) 11

C) 12

D) 18

விளக்கம்: தமிழத்தில் திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, செண்பகநல்லூர், மதுரை, தாடிக்கொம்பு, அழகர் கோயில், கிருஷ்ணாபுரம், தென்காசி, குற்றாலம், சுசீந்திரம், களக்காடு போன்ற இடங்களில் இசைத்தூண்கள் காணப்படுகின்றன.

138) இசைக்கலைஞர்கள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாணர், பாடினி ஆகியோர் வாய்ப்பாட்டிலும் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவர்களாக விளங்கினார். பாணர் என்பவர், ஆண் இசைக்கலைஞர், பாடினி என்பவள், பெண் இசைக்கலைஞர். இவ்விசைக் கலைஞர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என வகைப்படுத்தப்பட்டனர்.

139) இசைக்கலைஞர்களை துளைக்கருவி வாசிப்போர், தோல்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் என வகைப்படுத்தும் நூல் எது?

A) முதுநாரை

B) பெருங்குருகு

C) மணிமேகலை

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: துளைக்கருவி வாசிப்போர், தோல்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் என இசைக்கலைஞர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதைச் சிலப்பதிகார இந்திரவிழாவூரையெடுத்த காதை கூறுகிறது.

140) பொருத்துக.

அ. வாய்ப்பாட்டு – 1. யாழ்ப்பாணர்

ஆ. யாழ் மீட்டல் – 2. மண்டைப்பாணர்

இ. மண்டை – 3. இசைப்பாணர்

A) 3, 1, 2

B) 2, 3, 1

C) 3, 2, 1

D) 2, 1, 3

விளக்கம்: இசைப்பாணர்கள் வாய்ப்பாட்டுப் பாடுவதில் வல்லவராக இருந்தனர். யாழ் என்னும் இசைக் கருவிகளை மீட்டுவதில் வல்லவர்களை ‘யாழ்ப்பாணர்’ என அழைத்தனர். மண்டை எனப்படும் ஓட்டினைக் கையில் ஏந்தி பாடியவர்கள், மண்டைப்பாணர் என அழைக்கப்பட்டனர். இக்கலைஞர்கள் திருவிழாக்களிலும் அவைக்களத்திலும் பாடிப் பிறரை மகிழ்வித்தனர். தலைமக்களுக்கு இடையே தூதுவர்களாகவும் இருந்துள்ளனர்.

141) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றப்படை ஆகிய இலக்கியங்களில் யாரைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன?

A) இசைப்பாணர்

B) யாழ்ப்பாணர்

C) மண்டைப்பாணர்

D) அனைத்தும்

விளக்கம்: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இலக்கியங்களில் யாழ்ப்பாணர் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன.

142) பொருத்துக.

அ. குறிஞ்சி – 1. பஞ்சுரப்பன்

ஆ. முல்லை – 2. மருதப்பன்

இ. மருதம் – 3. குறிஞ்சிப்பண்

ஈ. நெய்தல் – 4. சாதாரி

உ. பாலை – 5. செவ்வழிப்பண்

A) 3, 4, 2, 1, 5

B) 3, 2, 5, 1, 4

C) 3, 2, 4, 5, 1

D) 3, 4, 2, 5, 1

விளக்கம்: குறிஞ்சி – குறிஞ்சிப்பண்

முல்லை – சாதாரி

மருதம் – மருதப்பண்

நெய்தல் – செவ்வழிப்பண்

பாலை – பஞ்சுரப்பண்.

143) “தினைப்பயிரை உண்ணவந்த காட்டுயானை, குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு மெய் மறந்து நின்றதை” கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) அகநானூறு

C) பதிற்றுப்பத்து

D) பரிபாடல்

விளக்கம்: மலைச்சாரல் பகுதியில் விளைந்திருந்த திணைப்பயிரை உண்ணவந்த காட்டுயானை, அப்பயிரைக் காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சிப்பண்ணைக் கேட்டுப் பயிரை உண்ணாமல் இசையில் மெய் மறந்து நின்றதை அகநானூறு கூறுகிறது.

144) போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற எந்த பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது?

A) வஞ்சிப்பண்

B) வெட்சிப்பண்

C) காஞ்சிப்பண்

D) வானகப்பண்

விளக்கம்: போரில் புண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாகப் புறநானூறு கூறுகிறது.

145) யாழ் என்னும் இசைக் கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிய பொழுது விடிந்ததாக கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) நெடுநல்வாடை

C) மதுரைக்காஞ்சி

D) பரிபாடல்

விளக்கம்: யாழ் என்னும் இசைக் கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிப் பொழுது விடிந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. மேலும் அது ஆகுளி, முழவு என்னும் கருவிகளைக் கொண்டு செவ்வழிப்பண்ணை மாலை நேரத்தில் இசைத்தனர் என்பதையும் சுட்டுகிறது. இச்செவ்வழிப் பண்-ஐக் கேட்டுத் தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருத்தம் கொண்டனர் என்ற செய்தியும் உண்டு.

146) வண்டின் ஓசையைப் போல் இருப்பது எவ்வகை பண்?

A) காமரம்

B) நைவனம்

C) செவ்வழிப்பண்

D) இசைப்பண்

விளக்கம்: நிலத்தை அடிப்படையாக் கொண்ட பண்களைத் தவிர காமரம், நைவனம் போன்ற பண்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வண்டின் ஓசைபோல் இருப்பது காமரம் என்ற அழைக்கப்பட்டமைக்கான குறிப்புகளும் கிடைகின்றன.

147) வெறியாட்டப்பாடல், வள்ளைப்பாடல் முதலிய இசைப்பாடல்கள் காணப்படும் நூல் எது?

A) பரிபாடல்

B) பதிற்றுப்பத்து

C) பெருநாரை

D) இந்திரகாளியம்

விளக்கம்: பரிபாடலில் வெறியாட்டப்பாடல், வள்ளைப்பாடல் முதலிய இசைப்பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடலை இசைப்பதற்குரிய பண்ணும். இசை வகுத்த இசைக் கருவிகள் போன்ற தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

148) இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன், வேய்குழல் ஊதுவோன், யாழ் ஆசிரியன் எனப் பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்குத் துணை நின்றார்கள் எனக் கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன், வேய்குழ் ஊதுவோன், யாழ் ஆசிரியன் எனப் பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்குத் துணை நின்றார்கள் எனக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.

149) சிலப்பதிகாரத்தில் இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இசை எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முதல்நடை, வாரம், கூடை, திரள் என இசை நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

150) தவறானைத் தேர்க.

A) மந்த நடையாகத் தாழ்ந்து செல்லும் முறையில் இசைக்கப்படுவது முதல்நடை.

B) முடுகிச் செல்லும் விரைந்த நடை உடையது திரள்.

C) முதல்நடைக்கும் திரளுக்கும் இடைப்பட்ட இசை நடையை உடையது வாரம்.

D) சொற் செறிவும் இசைச் செறிவும் உடையது திரள்.

விளக்கம்: சொற் சொறிவும், இசைச் செறிவும் உடையது கூடை ஆகும்.

151) சிலப்பதிகாரத்தில் எந்தெந்தக் காதைகள் இசைக் குறிப்புகள் நிரம்பியவை?

A) அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர்குரவை, கானல்வரி

B) வேனிற்காதை, கடலாடுகாதை

C) புறஞ்சேரியிறுத்தக்காதை

D) அனைத்தும்

விளக்கம்: அரங்கேற்றுக்காதை, ஆய்ச்சியர்குரவை, கானல்வரி, வேணிற்காதை, கடலாடுகாதை, புறஞ்சேரியிறுத்தகாதை முதலிய பகுதிகள் இசைக்குறிப்புகள் நிரம்பியவை. மேலும் யாழ் அமைப்பு, யாழ் இசையின் அமைப்பு முதலியனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பெருங்கதை போன்ற காப்பியங்களிலும் இசை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

152) தேவாரங்களைப் “பண் சுமந்த பாடல்” என்று கூறியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: செய்யுளை பண் அமைப்போடு, படைப்பாளனே படைப்பது ஒருவகை. செய்யுளை எழுதிப் பின் வேறொருவர் பண்ணிசைப்பது மற்றொரு வகை, தேவாரம் முதல் வகையைச் சேர்ந்தது என்பர். மாணிக்கவாசகர் தேவாரங்களைப் “பண் சுமந்த பாடல்” என்று கூறுகிறார். எனவே, இறைவனின் அருளைச் சொற்களாக்கி இசைப்படுத்தியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் எனலாம்.

153) வேய்குழலை ஊதி இசையை எழுப்பி, அவ்விசையைக் கேட்டு துலைந்து எருமை ஒன்று, இசை எழுப்பப்பட்ட இடத்திற்கு வந்து, மற்ற மாடுகளோடு சேர்ந்து வீடு அடைந்ததாகக் கூறுபவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: ஆநிரைகளை மேய்க்கும் பணியை மேற்கொண்ட பொழுது காலையில் மேய்ச்சலுக்குப் போவதும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம். ஒருநாள் மாலைநேரம் வந்தவுடன் ஆநிரைகளும் எருமைகளும் வந்துவிட்டன. ஓர் எருமை மட்டும் காணவில்லை. தேடிப் பார்க்கிறார். கண்ணுக்குப் புலப்படவில்லை. எனினும், அவ்வெருமையின் கனைப்பொலி மட்டும் கேட்கிறது. கனைப்பொலியைக் கேட்ட அவர், தன்கையில் இருந்து வேய்ங்குழலை எடுத்து ஊதி இசையை எழுப்பினார். அவ்விசையைக் கேட்ட அந்த எருமை இசை எழுப்பப்பட்ட இடத்திற்கு வந்து, மற்ற மாடுகளோடு சேர்ந்து வீடு அடைந்ததாகத் திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

154) திருநாவுக்கரசர் வந்துசென்ற எந்த ஊரைத் தாம் காலால் மிதிக்கக்கூடாது என எண்ணிய சுந்தரர் ஊருக்கு வெளியே உள்ள ‘சித்தவடமடத்தில்’ தங்கி உறங்கினார்?

A) திருவாரூர்

B) திருநள்ளாறு

C) திருவதிகை

D) திருச்சி

விளக்கம்: திருநாவுக்கரசர் ‘திருவதிகை’ என்னும் ஊருக்குச் சென்று இறைத்தொண்டு புரிந்து வந்தார். அவ்வூரிலுள்ள சிவபெருமானை வணங்கச் சுந்தரர் ஒருமுறை செல்கிறார். திருநாவுக்கரசர் வந்துசென்ற அவ்வூரைத் தாம் காலால் மிதிக்கக்கூடாது என எண்ணிய சுந்தரர் ஊருக்குள் போகாமல் ஊருக்கு வெளியே உள்ள ‘சித்தவமடத்தில்’ தங்கி உறங்கினார். அப்போது சுந்தரர் தலைமீது சிவபெருமான் தன் பாதங்களை வைத்து அருள்புரிந்தார். சிவபெருமானின் இந்த அருளை எண்ணித் ‘தம்மானையறியாத’ என்னும் பதிகத்தைப் பாடினார் என்பது வரலாறு.

155) சுந்தரர் பாடிய ‘தம்மானையறியாத’ என்னும் பதிகம் எந்த பண்ணால் அமைந்தது?

A) கொல்லிக் கௌவாணம்

B) கொல்லிப்பண்

C) இசைப்பண்

D) எதுவுமில்லை

விளக்கம்: சுந்தரர் பாடிய ‘தம்மானையறியாத’ என்னும் பதிகம் ‘கொல்லிக் கௌவானம்’ என்னும் பண்ணில் அமைந்ததாகும்.

156) சுந்தரர் திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகம் எந்த பண்ணில் அமைந்தது?

A) கொல்லிக் கௌவாணம்

B) கொல்லிப்பண்

C) இசைப்பண்

D) எதுவுமில்லை

விளக்கம்: திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பற்றிப் பாடிய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்.

157) கொல்லிக் கௌவாணம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாகக் கூறியவர் யார்?

A) நக்கீரர்

B) கபிலர்

C) கம்பர்

D) சேக்கிழார்

விளக்கம்: கொல்லிக் கௌவாணம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாகச் சேக்கிழார் கூறுகிறார். இவை பழங்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பண்களோடு தொடர்புடையன.

158) கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் போன்ற பண் அமைப்புகளும், பாடல்களும் அழியும் நிலையில் இருந்தபோது யார் அதற்குப் புத்துயிர் அளித்தார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) திருமுறைகண்டசோழன்

விளக்கம்: கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் முதலிய பண் அமைப்புகளும், பாடல்களும் அழியும் நிலையில் இருந்தன. அப்போது திருமுறைக்கண்டசோழன் யாழ்ப்பாணம் மரபில் வந்த பாடினியைக் கொண்டு அப்பாடல்களின் பழைய பண் அமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தான். சில புதிய பண்களும் தோற்றுவிக்கப்பட்டன. இச்செய்தியைத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. இப்பண்களைக் கோவிலில் பாட ‘ஓதுவார்’ என்னும் இசைக் கலைஞர்களையும் நியமித்தவனும் இம்மண்ணனே. இவ்வோதுவார்களின் பணி இன்றும் தொடர்கிறது.

159) குடுமியான்மலைக் கல்வெட்டு எந்த மன்னனால் பொறிக்கப்பட்டது?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) திருமுறைகண்ட சோழன்

C) மூன்றாம் குலோத்துங்கன்

D) நரசிம்மவர்ம பல்லவன்

விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளில் வல்லவனாக இருந்துள்ளான். இம்மன்னனால் பொறிக்கப்பட்டதை குடுமியான்மலைக் கல்வெட்டு.

160) “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய” என்ற தொடர் இடம்பெற்ற கல்வெட்டு எது?

A) உத்திரமேரூர் கல்வெட்டு

B) அசோகர் கல்வெட்டு

C) குடுமியான்மலைக் கல்வெட்டு

D) அனைத்தும்

விளக்கம்: குடுமியான்மலைக் கல்வெட்டின் முடிவில் ‘எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய’ என்ற தொடர் உள்ளது. இத்தொடர் ‘சங்கீரணம்’ என்னும் இசையைப் பற்றிக் குறிப்பதாகும். தேவாரங்களில் காணப்படாத ‘சாளரப் பாணி’ என்ற பண் திருவிசைப்பாவில் உள்ளது. தேவாரங்களுக்குப் பின் வகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய இசையும் சேக்கிழார் காலத்தில் நிலவிய இசையும் ‘சாரங்கதேவர்’ குறிக்கும் தேவாரம் பண்களில் இசையும் இடைக்காலத்தில் தோன்றிய இசைமரபு என்கிறார் வெள்ளைவாரணர். கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் வடிவம் பிற்காலத்தில் தோன்றின. கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாச்சலக் கவிராயர் முதலியோரால் எழுதப்பட்ட கீர்த்தனைகள் குறிப்பிடத்தகுந்தவையாகும். பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து இசைக்கலை வளர்ந்து வந்துள்ளது. சங்க காலத்துப் பாணர்களும், பாடினிகளும், விறலியரும், இசையை வளர்த்து வந்துள்ளனர். ஆங்கே நிலப்பிரிவிற்கும் யாழ், பண், பறை முதலியன அமைந்திருந்தன.

161) சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் யார்?

A) இராஷ்டிரகூடர்கள்

B) சாளுக்கியர்கள்

C) களப்பிரர்கள்

D) சோழர்கள்

விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்கள் சமண சமயத்தை தழுவினர். அற இலக்கியங்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றின. இவை பெரும்பாலும் வெண்பா யாப்பிலேயே அமைந்தன. ஆனால் சங்க காலத்தில் வெண்பா யாப்பு வழக்கில் இல்லை.

162) பதினெண் கீழக்கணக்கு நூல்களில் எந்த நூலில் இசைக்கருவிகள் பற்றிச் செய்திகள் காணக்கிடைக்கின்றன?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) நான்மணிக்கடிகை

D) அனைத்தும்

விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலானவற்றில் இசைக்கருவிகள் பற்றிச் செய்திகள் காணக்கிடைக்கின்றன. சோழர்காலக் காப்பியங்களும் நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களும் தமிழோடு இசையையும் சுமந்து வந்து நால்வர் இசை மரபை உருவாக்கியது. இன்று பண்ணொடு இசைக்கூறுகளையும் உள்ளடக்கியதாக வளர்ச்சி பெற்றுள்ளது.

163) வெறிக்கூத்து, கருங்கூத்து போன்ற கூத்து வகைகளை குறிப்பிடும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) அகத்தியம்

C) நன்னூல்

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சில கூத்து வகைகள் கூறப்பட்டுள்ளன. அவை, வெறிக்கூத்து, கருங்கூத்து, வள்ளிக்கூத்து மற்றும் கழனிக்கூத்து.

164) பொருத்துக.

அ. வேலன் ஆடுவது – 1. கழனிக்கூத்து

ஆ. வீரர்கள் ஆடுவது – 2. வள்ளிக் கூத்து

இ. பெண்கள் ஆடுவது – 3. கருங்கூத்து

ஈ. இருபாலரும் ஆடுவது – 4. வெறிக்கூத்து

A) 4, 3, 2, 1

B) 4, 3, 1, 2

C) 3, 4, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: வேலன் ஆடுவது – வெறிக்கூத்து

வீரர்கள் ஆடுவது – கருங்கூத்து

பெண்கள் ஆடுவது – வள்ளிக்கூத்து

இளைய வீரனின் வெற்றியைப் பாராட்டி இருபாலரும் ஆடுவது – கழனிக்கூத்து

165) கூத்தர் இனப் பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) விறலி

B) ஆடுமகள்

C) ஆடுகளமகள்

D) அனைத்தும்

விளக்கம்: சங்க காலத்தில் கூத்துக்கலையை வளர்த்தவர்கள் கூத்தர்கள் எனப்பட்டனர். கூத்தர் இனப் பெண்கள் விறலி, ஆடுமகள், ஆடுகளமகள் என அழைக்கப்பட்டனர்.

166) கூத்தர் இன ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) கூத்தன்

B) ஆடுமகன்

C) ஆடுகளமகன்

D) அனைத்தும்

விளக்கம்: கூத்தர் இன ஆண்கள், கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் என அழைக்கப்பட்டனர். ‘விறலி’ கூத்தர் பெண்ணைக் குறிக்கும் சொல்.

167) அரசர்கள் விறலியர்க்குப் பரிசளித்த செய்தியினைப் பாராட்டிய புலவர் யார்?

A) கோவூர்கிழார்

B) மாங்குடி மருதனார்

C) A மற்றும் B

D) நக்கீரர்

விளக்கம்: பண்டைய அரசர்கள் கூத்தர்களைப் பாராட்டிப் பரிசளித்தனர். அரசர்கள் விறலியர்க்குப் பரிசளித்த செய்தியினைக் கோவூர்கிழார், மாங்குடி மருதனார் போன்ற புலவர்கள் பாராட்டிப் பாடியுள்ளனர்.

168) சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடாக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பொருளையே அளிப்பதாகக் கூறுபவர் யார்?

A) மா. இராசமாணிக்கனார்

B) வெ. ராமலிங்கனார்

C) அண்ணாமலையார்

D) அருணாச்சலக் கவிராயர்

விளக்கம்: சிலப்பதிகாத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடாக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர், விறலியர் என்னும் பொருளையே அளிப்பதாக மா. இராமாணிக்கனார் கூறுகின்றார்.

169) நடனம் கற்கும் பெண் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நடனக்கலைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்?

A) 5 ஆண்டுகள்

B) 6 ஆண்டுகள்

C) 7 ஆண்டுகள்

D) 8 ஆண்டுகள்

விளக்கம்: நடனம் கற்கும் பெண் தனது 7ஆம் வயது முதல் 12ஆம் வயது வரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடனக்கலைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

170) நடனக்கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் எத்தனை வகை கூத்துகளில் சிறந்தவராக இருத்தல் வேண்டும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: நடனக்கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் தலைக்கோல் ஆசான் என்று அழைக்கப்படுகிறார். இவர், வேத்தியல், பொதுவியல் என இருவகைக் கூத்துகளிலும் சிறந்தவனாக இருத்தல் வேண்டும்.

171) அடியார்க்குநல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: அடியார்க்குநல்லார் கருத்துப்படி, கூத்து 4 வகைப்படும். அவை, சொக்கம், மெய்க்கூத்து, அபிநயம், நாடகம் என்பன.

172) தவறான இணையைத் தேர்க.

A) சொக்கம் – இசையுடன் கூடிய தூய நடனம்

B) மெய்க்கூத்து – இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம்

C) அபிநயம் – இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம்

D) ஆடல் – இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம்

விளக்கம்: நாடகம் – இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம்

ஆடல் – எல்லா வகைக் கூத்துகளையும் குறிக்கும்

இவ்வாறு அடியார்க்குநல்லார் கூறுகிறார்.

173) ஆடல் வகை எத்தனை என சிலப்பதிகாரம் கூறுகிறது?

A) 6

B) 5

C) 10

D) 11

விளக்கம்: ஆடல்கள் 11 வகைப்படும். அதில் நின்றாடல் 6 வகையும், வீந்தாடல் 5 வகையும் உள்ளடக்கியது.

நின்றாடல் – 6

1. அல்லியம்

2. கொடுகொட்டி

3. குடைக்கூத்து

4. குடக்கூத்து

5. பாண்டரங்கம்

6. மல்லியம்

வீழ்ந்தாடல் – 5

1. துடி

2. கடையம்

3. பேடு

4. மரக்கால்

5. பாவை

சிலப்பதிகாரத்தில் மாதவி 11 ஆடல்களை ஆடினாள்.

174) கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல் எது?

A) அல்லியம்

B) கொடுகொட்டி

C) குடைக்கூத்து

D) குடக்கூத்து

விளக்கம்: கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆட அல்லியம்.

175) சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல் எது?

A) அல்லியம்

B) கொடிகட்டி

C) குடைக்கூத்து

D) குடக்கூத்து

விளக்கம்: கொடிகட்டி என்பது சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடலாகும்.

176) கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் எது?

A) அல்லியம்

B) கொடுகொட்டி

C) குடைக்கூத்து

D) குடக்கூத்து

விளக்கம்: கண்ணன் தன் பேரணான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் குடக்கூத்து ஆகும்.

177) முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் எது?

A) அல்லியம்

B) கொடுகொட்டி

C) குடைக்கூத்து

D) குடக்கூத்து

விளக்கம்: முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் குடைக்கூத்து ஆகும்.

178) சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நாண்முகன் காணும்படி ஆடிய ஆடல் எது?

A) பாண்டரங்கம்

B) மல்லியம்

C) துடி

D) கயைம்

விளக்கம்: சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் பாண்டரங்கம் ஆகும்.

179) கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து எது?

A) பாண்டரங்கம்

B) மல்லியம்

C) துடி

D) கயைம்

விளக்கம்: கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து மல்லியம் ஆகும்.

180) சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து எது?

A) பாண்டரங்கம்

B) மல்லியம்

C) துடி

D) கயைம்

விளக்கம்: சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து துடி ஆகும்.

181) இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது எது?

A) பாண்டரங்கம்

B) மல்லியம்

C) துடி

D) கடையம்

விளக்கம்: இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது ‘கடையம்’ எனப்படும். இது ‘உழத்திக்கூத்து’ என்றும் அழைக்கப்படுகிறது.

182) காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்கு வாணனுடைய ‘சோ’ என்னும் நகரத்தில் பேடியுருவம் கொண்டு ஆடியது எது?

A) பேடு

B) மரக்கால்

C) பாவை

D) கூத்து

விளக்கம்: காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய ‘சோ’ என்னும் நகரத்தில் பேடியருவம் கொண்டு ஆடியது ‘பேடு’ என்றும் ஆடல் ஆகும்.

183) கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் எது?

A) பேடு

B) மரக்கால்

C) பாவை

D) கூத்து

விளக்கம்: கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் மரக்கால் ஆகும்.

184) அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் எது?

A) பேடு

B) மரக்கால்

C) பாவை

D) கூத்து

விளக்கம்: அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் பாவை ஆகும்.

185) சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 ஆடல் வகைகளில் எது ‘தெய்வவிருத்தி’ என அழைக்கப்படுகிறது?

A) அல்லியம்

B) மல்லியம்

C) பாண்டரங்கம்

D) 11 ஆடல்களும்

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 11 ஆடல் வகைகளில் தெய்வங்களால் ஆடப்பெறுவதால் இவை ‘தெய்வவிருத்தி’ என்றும் அழைக்கப்படுகின்றன.

186) கூத்து எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கூத்து அகக்கூத்து, புறக்கூத்து என இரண்டு வகைப்படும். இருவகைக் கூத்துக்களுமே ஆடல் என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

187) எந்த இரண்டு முத்திரைகள் புறக்கூத்தில் காட்டப்படுவன?

A) பிண்டி, பினையல்

B) பினையல், எழிற்கை

C) எழிற்கை, தொழிற்கை

D) தொழிற்கை, பிண்டி

விளக்கம்: நடனத்தின் பொழுது ஒரு கையினால் காட்டப்படும் முத்திரைகளும், இரு கைகளினால் காட்டப்படும் முத்திரைகளும் கூறப்பட்டுள்ளன. அதில் பிண்டி, பினையல் ஆகிய இரண்டும் புறக்கூத்தில் காட்டப்படுவன. எழிற்கை, தொழிற்கை இரண்டும் அகக்கூத்தில் காட்டப்படுவன.

188) தவறானதைத் தேர்வு செய்க.

A) நடன முத்திரைகள் 4 ஆகப் பகுக்கப்பட்டுள்ளன.

B) அவை, பிண்டி, பினையல், எழிற்கை, தொழிற்கை ஆகியனவாகும்.

C) பிண்டி, ஒரு கையால் காட்டப்படும் முத்திரை. இது 24 வகையாக அமையும்.

D) பினையல் இரண்டு கைகளாலும் காட்டப்படுவது. இது 18 வகையாக உள்ளது.

விளக்கம்: பினையல் இரண்டு கைகளாலும் காட்டப்படுவது. இது 18 வகையாக உள்ளது.

189) ‘வந்த முறையின் வழிமுறை வழாமல்’ என்று கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து, ‘வந்த முறையின் வழிமுறை வழாமல்’ என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் நாட்டிய நூல்கள் இருந்தமை தெளிவாகின்றது.

190) 11 வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் எந்த நூலின் உரையில் கூறப்பட்டுள்ளது?

A) திருக்குறள்

B) பெரியபுராணம்

C) நன்னூல்

D) யாப்பெருங்கலம்

விளக்கம்: பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் யாப்பெருங்கலம் நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன.

191) கூத்து பற்றிய நூல்களில் எந்த இரண்டு அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்தன?

A) பரதம், அகத்தியம்

B) முறுவல், சயந்தம்

C) குணநூல், செயிற்றியம்

D) இசைநூணுக்கம், இந்திரகாளியம்

விளக்கம்: பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் ஆகியன கூத்து பற்றிய நூல்களாகும். இவற்றில் பரதமும் அகத்தியமும் அடியார்க்கு நல்லார் காலத்திலேயே மறைந்தன. இந்நூல்கள் இன்று கிடைக்கவில்லை.

192) ஏழு முதல் 9 பேர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது எவ்வகை கூத்து?

A) பாண்டரங்க கூத்து

B) குரவைக் கூத்து

C) மரக்கால் கூத்து

D) அனைத்தும்

விளக்கம்: மகளிரால் ஆடப்படுவது குரவைக்கூத்து. 7 முதல் 9 பேர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது. இது குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என இரு வகைப்படும். குன்றக்குரவை என்பது குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்கான ஆடும் ஆடல். ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்தில் வாழும் மகளிர் திருமாலுக்காக ஆடும் ஆடல்.

193) ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்மன்

B) நக்கீரர்

C) தொல்காப்பியர்

D) அகத்தியர்

விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற தனது நூலில் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றிக் குறிப்பிட்டள்ளார். பல்லவர் காலத்தில் நடனக்கலை சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது.

194) பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகிய சிவபெருமான் ஆடிய நடனங்கள் எங்கு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது?

A) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

B) தஞ்சை பெரிய கோவில்

C) காஞ்சி கைலாசநாதர் கோயில்

D) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்

விளக்கம்: ராஜசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படும் பதாகை நடனம், லதாவிருச்சிக நடனம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகியன சிற்பங்களாகச் செதுக்கப்பட்டள்ளமையைக் காணலாம்.

195) சுந்தரர் யார் காலத்தைச் சேர்ந்தவர்?

A) சோழர்

B) பாண்டியர்

C) பல்லவர்

D) சேரர்

விளக்கம்: காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலில் கூத்தன் கூத்தியர் உருவங்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தவரான சுந்தரர், நடன மாதரான பரவை நாச்சியாரை மணந்துகொண்ட செய்தியை இலக்கியங்களில் காணலாம். தில்லையிலுள்ள சிவபெருமான், ‘கூத்தப்பெருமான்’ என நாயன்மார்களால் பாடப்பட்டார்.

196) அக்காலத்தில் காஞ்சிபுரம் முக்திச்சுரர் கோயிலில் மட்டும் எத்தனை நடன மாதர் இருந்தனர் என்ற செய்தியினை ஆவணங்கள் தெரிவிக்கின்றன?

A) 42

B) 48

C) 56

D) 64

விளக்கம்: அக்காலத்தில் காஞ்சிபுரம் முக்தீச்சுரர் கோயிலில் மட்டும் 42 நடன மாதர் இருந்தனர் என்ற செய்தியை ஆவணங்கள் தெரிவிக்கின்றன பல்லவர் காலத்தில் நடனம் வகித்த இடத்தை இவற்றின் மூலம் அறியமுடிகின்றது.

197) எந்த காலம் காலைகளின் வளர்ச்சியால் பொற்காலமாகத் திகழ்ந்தது?

A) பல்லவர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம்

D) விஜயநகர பேரரசு காலம்

விளக்கம்: சோழர் காலம் கலைகளின் வளர்ச்சியால் பொற்காலமாகத் திகழ்ந்தது. சைவ, வைணவ சமயங்கள் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றன. பெரும்பான்மை கோயில்கள் கற்கோயில்களாக மாற்றப்பட்டன. நடனம் உட்பட அனைத்துக் கலைகளும் வளர்க்கப்பட்டன. கோயில் கருவறைகளின் அடிப்பகுதியில்கூட, நடன வகைகள் செதுக்கப்பட்டிருந்தன. இதற்கு சிதம்பரம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை கோயில்கள் சான்று.

198) ‘கூத்தியர்’ மட்டும் தனித்து நடனம் ஆடும்படியான சிற்பங்கள் யார் காலத்தவை?

A) பல்லவர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம்

D) விஜயநகர பேரரசு காலம்

விளக்கம்: சோழர்கள் காலச் சிற்பங்களில் கூத்தியர் மட்டும் தனித்து நடனம் ஆடும்படியான சிற்பங்களைப் பெரிதும் காணலாம். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் புறச்சுவரில் நடன மாதர்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியத்தில் நடனப் பெண்களின் கூந்தல் ஒப்பனை, உடை, இசைக்கருவிகள் முகப்பொழிவு, உருவ அமைப்பு ஆகியன நடனப் பெண்கள் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுகின்றன.

199) தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் நிகழ்த்துவதற்காகப் ‘பதியிலார்’ எனப்படும் நடனத்தில் சிறந்த பெண்களை நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுத்து வரச் செய்தவர் யார்?

A) முதலாம் மகேந்திரன்

B) இராஜராஜ சோழன்

C) இராசேந்திர சோழன்

D) மூன்றாம் குலோத்துங்க சோழன்

விளக்கம்: இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடல் நிகழ்த்துவதற்காகப் ‘பதியிலார்’ எனப்படும் நடனத்தில் சிறந்த பெண்களை நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுத்து வரச் செய்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் அளித்தான். இச்செய்தியினைத் தஞ்சைக் கல்வெட்டில் காணலாம்.

200) திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள காமரசவள்ளி என்னும் ஊரில், சிறப்பாகச் சாக்கைக் கூத்தாடும் ஒருவருக்கு ‘சாக்கை மாராயன்’ எனப் பட்டம், வழங்கியவர் யார்?

A) முதலாம் மகேந்திரன்

B) இராஜராஜ சோழன்

C) இராசேந்திர சோழன்

D) மூன்றாம் குலோத்துங்க சோழன்

விளக்கம்: திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள காமரசவள்ளி என்னும் ஊரில், சிறப்பாகச் சாக்கைக் கூத்தாடும் ஒருவருக்கு ‘சாக்கை மாராயன்’ என இராசேந்திரன் பட்டம் வழங்கிய செய்தியினைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

201) யார் காலத்தில் கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளரத் தொடங்கியது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியன்

D) நாயக்கர்

விளக்கம்: நாயக்கர் காலத்தில் கர்நாடக இசை வடிவம் தமிழகத்தில் வளரத் தொடங்கியது. இக்காலத்தில் வடமொழி நடன நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன.

202) இசைப்பாட்டிற்கேற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது எது?

A) கதகளி

B) பரதநாட்டியம்

C) மோகினி ஆட்டம்

D) குச்சுப்புடி

விளக்கம்: தமிழர்களால் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டு வரும் கலை பரதநாட்டியம். இது இசைப்பாட்டிற்கேற்ப அபிநயம் காட்டிப் பாவகம் தோன்ற ஆடப்படுவது. இதற்குக் கைக்குறியீடுகள் இன்றியமையாதன. இவை, இளங்கோவடிகள் கூறுவதைப் போன்றே ஒரு கை முத்திரை, இருகை முத்திரை என 2 வகைப்படுகிறது.

203) கூற்றுகளை ஆராய்க.

1. ஒருவகை முத்திரை இணையா வினைக்கை என்றும், பிணைக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

2. இருகை முத்திரை இணைக்கை, இரட்டைக்கை, பிண்டிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஒருகை முத்திரை இணையான வினைக்கை என்றும், பிண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.

இருகை முத்திரை இணைக்கை, இரட்டைக்கை, பிணைக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

இம்முத்திரைகள் பரதத்திற்கு உயிர் போன்றவை. இம்முத்திரைகளைப் புரிந்துகொள்ளாமல் பரதத்தைச் சுவைத்து இன்புறுவது கடினமாகும். தமிழர்களின் தொன்மைக் கலையான பரதம் பல வகையான முத்திரைகளையும் பாவங்களையும் உள்ளடக்கியது. இஃது உலகின் அதிக மக்களால் விரும்பிப் போற்றப்படும் கலையாகவும் உள்ளது.

204) உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றை நிலைநாட்டுவது எவற்றின் முதன்மை நோக்கம்?

A) நடனக்கலை

B) ஓவியக்கலை

C) இசைக்கலை

D) தமிழக விளையாட்டு

விளக்கம்: நாட்டுப்புற விளையாட்டுகள் என்பது, நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இவை நாட்டுப்புற மரபில் சிறப்பிடம் பெறுபவை. போலச் செய்தல், உடல்திறம் காணல், அறிவு வெளிப்பாடு, சமூக உறவு, வாழ்க்கைப் பயிற்சி, சிந்தனை ஆற்றல் முதலியவற்றை, உள்ளடக்கிய இவ்விளையாட்டுகள் பண்பாட்டை வெளிப்படுத்துவன ஆகும். உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றை நிலைநாட்டுவதே இவற்றின் முதன்மை நோக்கம். ஏறுதழுவுதல், ஓட்டப்போட்டிகள் முதலிய மரபு சார்ந்தவை. மரபு சார்ந்து ஆடப்படும் இவ்விளையாட்டுகள் வீரத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

205) ‘விளையாட்டு’- பிரித்துஎழுதுக.

A) விளை+ஆட்டம்

B) வினை+ஆட்டம்

C) விளை+ஆட்டு

D) வினை+ஆட்டு

விளக்கம்: விளையாட்டு என்பது விரும்பியாடும் ஆட்டு, விளை – விருப்பம், ஆட்டு – ஆட்டம். தமிழர் மரபில் சிறப்பிடும் பெறுபவை விளையாட்டுகள்.

206) கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி “கெடவரல் பண்ணை ஆகிரண்டும் விளையாட்டு” எனக் கூறும் நூல் எது?

A) அகத்தியம்

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) திருவதிகை

விளக்கம்: கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி ‘கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு’ எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. சிறுமிகளை விலங்குகளிடம் இருந்து காப்பது போல நடித்து விளையாடுவது கெடவரல் என்றும், உழவர்கள் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது பண்ணை விளையாட்டு என்று தேவநேயப்பாவாணர் கூறுகின்றனார்.

207) எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை, 4 வழிகளில் தோன்றும் எனக் கூறியவர் யார்?

A) அகத்தியர்

B) தொல்காப்பியர்

C) சமணமுனிவர்

D) நக்கீரர்

விளக்கம்: எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை, 4 வழிகளில் தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.

“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென

அல்லல் நீத்த உவகை நான்கே” – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்- 255.

208) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழக விiயாட்டுகள் அனைத்துமே இரண்டு குழுவாகப் பிரிந்து விளையாடும் பொதுத் தன்மையைப் பெற்று இருக்கும்.

2. விளையாட்டின் வெற்றி தோல்வியின் காரணமாக யாரும் பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது.

3. விளையாட்டில் பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும், எதிர் அணியாக இருப்பினும் தம் துன்பம் போல் கருதுதல் வேண்டும். இது தமிழில் விளையாட்டுகளுக்கான பொது விதியாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 2 தவறு, 1, 3 சரி

D) அனைத்தும்

விளக்கம்: தமிழர்கள் விளையாட்டில் கூட பிறருக்கு துன்பம் விளைவிக்க விரும்பவில்லை.

209) பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பிள்ளைத்தமிழ், குழந்தைகளுக்கான 10 பருவங்களைக் கூறுகின்றது. இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என 2 வகைப்படுகிறது. முதல் 7 பருவங்கள் ஆண் மற்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொதுவானவை. இறுதி 3 பருவங்கள் விளையாட்டைப் பற்றிக் கூறுகிறது.

210) பெண்கள் விளையாடும் விளையாட்டு எது?

A) சிற்றில்

B) ஊசல்

C) A மற்றும் B

D) சிறுபறை

விளக்கம்: சிற்றில், ஊசல் என்பன பெண்கள் விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.

211) சிறார்கள் சிறு வீடு கட்டி விளையாடுவது என்ன விளையாட்டு?

A) சிற்றில்

B) சிறுபறை

C) சிறுதேர்

D) ஊசல்

விளக்கம்: சிறார்கள் சிறு வீடு கட்டி விளையாடுவது சிற்றில், தெருவில் பறையடித்து விளையாடுவது சிறுபறை. சிறுதேர் செய்து விளையாடுவது சிறுதேர். இவை மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி 3 பருவங்களாகும்.

212) பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) அம்மானை

B) கழங்கு

C) ஊசல்

D) சிற்றில்

விளக்கம்: அம்மானை, கழங்கு, ஊசல் ஆகியவை பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரிய கடைசி 3 பருவங்களாகும். சிற்றில் என்பது ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவம்.

213) தவறானதைத் தேர்வு செய்க.

A) பெண்கள் இல்லத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மட்டுமே பெண்பாற் பிள்ளைத் தமிழில் கூறப்பட்டுள்ளது.

B) அம்மானை என்பது, சிறுமிகள் வட்டமாக அமர்ந்து பாடல் பாடி விளையாடுவது.

C) கழங்கு என்பது கைக்கோர்த்து விளையாடுவது

D) ஊசல் என்பது, சிறுமிகள் பாடல் பாடிக் கொண்டு ஊஞ்சல் ஆடுவதாகும்.

விளக்கம்: கழங்கு என்பது, சிறுமிகள் கல் வைத்து விளையாடும் விளையாட்டாகும்.

214) விளையாட்டு என்பதை உவகைச் சுவையில் ஒன்றாக யார் கூறுகிறார்?

A) தொல்காப்பியர்

B) திருவள்ளுவர்

C) கம்பர்

D) நக்கீரர்

விளக்கம்: விளையாட்டு என்பதை உவகைச் சுவையில் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறுகிறார். எனவே, விளையாட்டு என்பது, மகிழ்ச்சியைத் தரும் செயல் ஆகும். பிள்ளைத்தமிழ் கூறுவதைப் போலவே தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளையும் ஆண்கள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு என 2 வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலும் ஆண்கள் விளையாடுவன வீர விளையாட்டுகளாகவே உள்ளன.

215) கூற்றுகளை ஆராய்க.

1. மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான விளையாட்டு ஏறுதழுவுதல், பாரிவேட்டை

2. மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையேயான விளையாட்டு சிலம்பாட்டம், புலிவேடம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையிலான விளையாட்டு ஏறுதழுவுதல், பாரிவேட்டை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான விளையாட்டு சிலம்பாட்டம், புலிவேடம்.

216) வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளுள் முதன்மையானது எது?

A) ஏறுதழுவுதல்

B) பாரிவேட்டை

C) சிலம்பாட்டம்

D) புலிவேடம்

விளக்கம்: மஞ்சுவிரட்டு அல்லது ஏறுதழுவுதல் என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதனால் இவ்விளையாட்டு, பண்டைக் காலம் முதல் உள்ளது என்பதை அறியலாம். வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளுள் இது முதன்மையாகக் கருதப்படுகிறது. காளையின் கொட்டேறி என்னும் திமிலைப் பிடித்து அடக்குவது சங்க கால முறை. கொம்மைப் பிடித்து முறுக்கி அடக்குவதும் உண்டு. நாணயங்கள் அடங்கிய பையைக் காளையின் கொம்பில் வைத்துக் கட்டிவிடும் பழக்கம் பிற்காலத்தில் தோன்றியது. நாணயத்தைச் ‘சல்லி’ என்று கூறுவர். அதனால் இவ்விளையாட்டைச் சல்லிக்கட்டு என்றும் அழைப்பர். வாடி வாசல், திட்டி வாசல் முதலான பகுதிகளைக் கொண்ட இவ்விளையாட்டு வேலி மஞ்சுவிரட்டு, வாடிவாசல், மஞ்சுவிரட்டு, வடம் மஞ்சுவிரட்டு என வட்டாரத்திற்கு ஏற்றாற்போல் நடத்தப்படுகின்றது.

217) நடசாரி என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் எந்த விளையாட்டின் தோற்றம் பற்றிக் கதையாகக் கூறப்படுகிறது?

A) சல்லிக்கட்டு

B) சிலம்பாட்டம்

C) சடுகுடு

D) உரிமரம் ஏறுதல்

விளக்கம்: கம்புகளை அடித்து ஒலியெழுப்பும் விளையாட்டுக்குச் சிலம்பு என்று பெயர். கம்புகளின் ஒலியைத் தவிர இரும்பு ஆயுதங்களின் ஒலியும் இந்த ஆட்டத்தின்போது எழுப்பப்படும். நேர்த்தியாகக் கம்புகளைச் சுழற்றினால்தான் எதிரியை வீழத்த இயலும் என்பதால் போர் முறைகளுக்கு உரிய சில விதி முறைகளும் சிலம்பாட்டத்தில் இடம்பெற்றுள்ளன. உடற்பயிற்சி, தற்காப்பு, போராட்டம் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டது சிலம்பாட்டம். நடசாரி என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் பற்றிக் கதையாகக் கூறப்பட்டுள்ளது.

218) கூற்றுகளை ஆராய்க.

A) கம்பை வேகமாகச் சுழற்றுவதிலும் முன்பின் திரும்பி ஆடுவதிலும் கலை நயத்தைப் புகுத்தி உருவெடுக்கிறது இச்சிலம்பாட்டம்.

B) இவ்வாட்டத்தில் பலவிதமான சுவடுமுறைகள் கையாளப்படுகின்றன. உடலிலுள்ள வர்ம நாடிகளை நோக்கி அடிக்கும் சுவடுமுறைக்கு தட்டுவடச் சுவடு என்று பெயர்.

C) இதில் அடிச்சுப்பிரிவு, பூட்டுப்பிரிவு ஆகிய விளையாட்டு முறைகளும் உள்ளன.

D) ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும், அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் பூட்டுப்பிரிவாகும்.

விளக்கம்: ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும், அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் அடிச்சுப்பிரிவு ஆகும். ஒருவர் கைகொண்டு அடுத்தவரைப் பூட்டிப் பிடிப்பதும் அப்பூட்டிலிருந்து, பிடிப்பட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் பூட்டுப்பிரிவாகும்.

219) எந்த மாவட்டத்தில் சிலம்பாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) நாகை

D) குமரி

விளக்கம்: குமரி மாவட்டத்தில் சிலம்பாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாக்களில் சிலம்பாட்டம் ஆடி மகிழ்வர். அப்பகுதியில் சிலம்படி ஆசான்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இச்சிலம்பாட்டம் ஆகும்.

220) வெட்சி, கரந்தை ஆகிய திணைகளில் வரும் போர் முறையின் தொடர்ச்சியாகக் கூறப்படும் விளையாட்டு எது?

A) ஏறுதழுவுதல்

B) சிலம்பாட்டம்

C) சடுகுடு

D) இளவட்டக்கல்

விளக்கம்: பசுவைக் கவரந்து வருவதும், கவர்ந்து வந்த பசுக்களை மீட்டு வருவதுமான வெட்சி, கரந்தை ஆகிய திணைகளில் வரும் போர் முறையின் தொடர்ச்சியாகச் சடுகுடுவைக் குறிப்பர்.

221) பொருத்துக.

அ. பாண்டிய நாடு – 1. பளிச்சப்பிளான், பலீன் சடுகுடு

ஆ. சோழ நாடு – 2. சடுகுடு

இ. தென் சோழ நாடு – 3. குட்டி

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: சடுகுடு விளையாட்டு, பாண்டிய நாட்டில் குட்டி என்றும், சோழ நாட்டில் பளிச்சப்பிளான், பலீன் சடுகுடு என்றும், தென் சோழ நாட்டில் சடுகுடு என்றும் அழைக்கப்படுகிறது.

222) சடுகுடு-வில் மூச்சுப் பிடிப்பதை எவ்வாறு அழைப்பர்?

A) பாட்டம்

B) கொம்பு அற்றிப் பாடுபவன்

C) சஞ்சீவி

D) எதுவுமில்லை

விளக்கம்: மூச்சுப் பிடித்துக் கொண்டு பாடிச் சென்று மீள்வதும், பாடி வருபவரைப் பலரும் சூழ்ந்து பிடிப்பதும் பிடிபட்டவர் தம்மை விடுவித்துக்கொள்வதும் இவ்விளையாட்டின் திறம் ஆகும். மூச்சுப்பிடிப்பதைப் ‘பாட்டம்’ என்று அழைப்பர். பாடிச் செல்பவரைக் கொம்பு சுற்றிப் பாடுபவன் என்று சொல்வது உண்டு. பாடிச் செல்லும்போது தனி வீரமும், பிடிக்கும்போது கூட்டு வீரமும் உடையது இவ்விளையாட்டு. கபடி என்று இக்காலத்தில் அழைக்கப்படுகிறது.

223) சடுகுடுவில் விலக்காமலே, பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டத்தை எவ்வாறு அழைப்பர்?

A) சஞ்சீவி ஆட்டம்

B) ஆடாது அழியும் ஆட்டம்

C) கபடி ஆட்டம்

D) ஆடாது ஒழியும் ஆட்டம்

விளக்கம்: பிடிபட்டவரை விலக்காமலே பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டத்தைச் சஞ்சீவி ஆட்டம் என்றும் பிடிபட்டவரைக் கடைசிவரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்துக்கொள்வதை ஆடாது ஒழியும் ஆட்டம் என்றும் கூறுவர்.

224) சடுகுடு விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் எந்த நாட்டில் இருந்தது?

A) பாண்டிய நாடு

B) கொங்கு நாடு

C) சோழ நாடு

D) தென் சோழ நாடு

விளக்கம்: இவ்விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் பாண்டிய நாட்டில் இருந்தது. பின்கோடு, பக்கக்கோடு, நடுகோடு முதலான அரங்க அமைப்பில் போட்டு விளையாடும் பழக்கம் கொங்கு நாட்டில் காணப்படுகிறது.

225) தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்ட விளையாட்டு எது?

A) ஏறதழுவுதல்

B) சிலம்பாட்டம்

C) உரிமரம் ஏறுதல்

D) இளவட்டக்கல்

விளக்கம்: பண்டைய மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது கல்லைத் தூக்குதல், நகர்த்துதல் முதலிய பழக்கங்கள் நாளடைவில் வாழ்க்கையோடு இணைந்த பழக்கங்களாக மாறியிருக்கலாம். பின் நாகரீக வளர்ச்சியில் உடல் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டாக அவை மாறியிருக்கலாம் என்பர். இவ்விளையாட்டு, தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக ஆடப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் ஆட்டமாக மாறியிருக்கிறது. திருவிழாக்களின்போது ஊர்ப்பொது இடத்தில் இது நடத்தப்படும். மணமகனாக வருபவருக்குப் பொன், பொருள் போன்ற ஆடம்பர பொருள்களைவிட உடல்திறன் இன்றியமையாதது என்பதை இவ்விளையாட்டு வெளிப்படுத்துகிறது. இவ்விளையாட்டில் கலந்துகொள்பவர் இளவட்டக் கல்லைக் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துப் பின் கீழே போட வேண்டும். அப்படிச் செய்பவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுபவர். இப்போட்டிக்குக் கிராமத்துப் பெரியவர்கள் நடுவராக இருப்பர்.

226) கூற்றுகளை ஆராய்க.

1. பட்டை உரிக்கப்பட்ட மரத்தையே உரிமரம் என்பர். இவ்வுரிமரத்தில் ஏறி விளையாடுவதே உரிமரம் ஏறுதல் என்று அழைக்கப்படுகிறது.

2. இவ்விளையாட்டுக்கு எல்லா மரங்களையும் பயன்படுத்துவதில்லை. கைப்பிடிக்கு அடங்காது பருத்திருக்கும் உதியமரத்தை மட்டுமே பயன்படுத்துவர் .

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பட்டை உரிக்கப்பட்ட மரம் வழவழப்பாக இருக்கும். ஏற்கனவே வழுவழுப்பாக இருக்கும் அம்மரத்தில் விளக்கெண்ணெய் தடவப்பட்டு மேலும் வழுவழுப்பானதாக மாற்றப்படும். இவ்வாறு மாற்றப்பட்ட மரத்தின் உச்சியின் பரிசுப் பொருளையும் கட்டி நட்டுவிடுவர். இம்மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றுபவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவர்.

227) உரிமரம் ஏறுதல் எந்த மாவட்டத்தில் பரவலாக விளையாடப்படுகிறது?

A) திருநெல்வேலி

B) மதுரை

C) குமரி

D) தூத்துக்குடி

விளக்கம்: செங்குத்தான பாறைகள் மீது ஏறுதல், வழுக்குப் பாறைமேல் ஏறுதல் முதலிய பயிற்சிகளை உடையவர்கள், மலைவாழ் மக்கள் ஆவர். இவர்கள் சமவெளிப் பகுதியில் வாழ நேர்ந்தபோது இப்பயிற்சிகள் அவசியமில்லாமல் போகவே விழாக்காலங்களில் உடல்திறனை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாக இது மாறியது. இவ்விளையாட்டு மதுரை மாவட்டத்தில் பரவலாக விளையாடப்படுகிறது. தற்போது பெரிய இரும்புக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

228) அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் எவை?

A) கட்ட விளையாட்டு

B) பதினைந்தாம் புலி

C) நட்சத்திர விளையாட்டு

D) அனைத்தும்

விளக்கம்: அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே கருதப்படுகின்றன. கட்ட விளையாட்டு, பதினைந்தாம் புலி, நட்சத்திர விளையாட்டு, திரிகுத்து, பொம்மைச்சீட்டு, மூணு கட்டை, பானை உடைத்தல், உறிப்பானை விளையாட்டு போன்றவை இவ்விளையாட்டுகள் ஆகும்.

229) கூற்றுகளை ஆராய்க.

A) கில்லி விளையாட்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டில் ஒன்றாகும். இதைச் சிறுவர்களும், ஆடவர்களும் விளையாடுவர்.

B) இது கில்லி, புல்லுக்குச்சி, கில்லிதாண்டு, சில்லாங்குச்சி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

C) சிறிய குச்சி தாண்டல் எனவும், பெரிய குச்சி கில்லி எனவும் கூறப்படும்.

D) இவ்விளையாட்டில் குறைந்தது இருவர் இருப்பர். விளையாடுவோர் அதிகமாக இருப்பின் அணியாகப் பிரிந்து விளையாடுவர்.

விளக்கம்: சிறிய குச்சி ‘கில்லி’ எனவும், பெரிய குச்சி ‘தாண்டல்’ எனவும் கூறப்படும். ஒரு சாண் நீளத்தில் உள்ள சிறிய குச்சியின் இரு முனைகளும், கூர்மையாக்கப்பட்டிருக்கும். ஒரு முழம் நீளமுடைய பெரிய குச்சியின் ஒரு முனை மட்டும் கூர்மையாக்கப்பட்டிருக்கும். நிலத்தில் இரண்டு விரல் இடை அளவிற்குப் பள்ளம் பறிக்கப்படும். அப்பள்ளத்தின் நடுவில் குறுக்காகக் கில்லி வைக்கப்படும். இவ்வாறு வைத்த குச்சியைப் பெரிய குச்சியைக் கொண்டு தள்ளிவிடுவர். தள்ளிவிடப்படும் கில்லியை எதில் அணியினர் எங்கும் பிடித்துவிட்டால், கில்லி தள்ளுபவர் விளையாட்டில் தோற்றவராவர் அல்லது கில்லி வைக்கப்பட்ட குழியிலிருந்து தாண்டி மிதிக்கும் தொலைவில், கில்லி விழுந்திருந்தாலும் விளையாட்டில் தோற்றதாகக் கருதப்படும். கில்லி விழுந்த இடத்திலிருந்து எதிர் அணியின் கில்லியைப் பறிக்கப்பட்ட குழியை நோக்கி எறிவார். அந்தக் கில்லி குழியில் விழுந்தாலும் எதிர் அணியினர் தோற்றவர் ஆவர். இதன் பின்பு கில்லி 3 முறை அடிக்கப்படும். அதன் தொலைவு கில்லிக் குழியிலிருந்து தாண்டலால் அளவிடப்படும். அதுவே அவ்வணியினர் எடுக்கும் புள்ளியாகும். இவ்விளையாட்டை விளையாடப் பரந்த திடல் வேண்டும்.

230) சிறுவர்கள் ஒத்த பருவத்தினரோடு நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டு எது?

A) கில்லி

B) பச்சைக்குதிரை

C) உரிமரம்

D) சிலம்பாட்டம்

விளக்கம்: பச்சைக்குதிரை, சிறுவர்கள் ஒத்த பருவத்தினரோடு நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டாகும். இதன் முதல்படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால், இந்த விளையாட்டு ‘கால்தாண்டி விளையாட்டு’ என்றும் அழைப்பர். குனிந்து இருப்பவர் படிப்படியாகத் தம்நிலையை உயர்த்துவதால், தாண்ட வேண்டிய உயரம் கூடிக் கொண்டே போகும்.

231) பண்ணாங்குழி விளையாட்டில் மொத்தம் எத்தனை குழிகள் தோண்டப்படும்?

A) 10

B) 12

C) 14

D) 28

விளக்கம்: நெல் குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழி வெட்டி, அதில் கற்களை இட்டு ஆடும் ஆட்டம், பண்ணாங்குழி. பண்ணை – பள்ளம், பண்ணை பறித்தல் – குழி தோண்டுதல். பண்ணாங்குழி என்பதைப் பல்லாங்குழி, பள்ளாங்குழி, பன்னாங்குழி என்னும் பெயர்களால் வழங்குகின்றனர். பெரும்பாலும் 14 குழிகளை வைத்து ஆடுவதால் பதினாங்குழி, பன்னாங்குழி எனத் திரிந்ததாகக் கூறுவர். பன்னான்கு என்பதே இலக்கிய வழக்காக இருப்பதனால், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாகும். இவ்விளையாட்டை இருவர் ஆடுவர். நிலத்தில் சமமான இரு படுக்கை வரிசையாகத் தோண்டப்பட்ட குழிகளுள் கழற்சிக்காய் அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்கள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை, ஐந்தைந்தாய் இட்டு விளையாடுவர் – தமிழ்நாட்டு விளையாட்டுகள் (ஞா. தேவநேயன், 1952) .

232) பின்வருவனவற்றுள் இந்தியக் கோவில் கட்டக்கலை பாணியைச் சாராதது எது?

A) நாகரம்

B) வேசரம்

C) காந்தாரக்கலை

D) திராவிடம்

விளக்கம்: நாகரம், வேசரம், திராவிடம் ஆகிய 3 கலைப் பாணியும் இந்தியக் கோவில் கட்டடக்கலை பாணியைச் சேர்ந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!