Ethics Questions

தமிழக பண்பாடு ஓர் அறிமுகம் 11th Ethics Lesson 1 Questions

11th Ethics Lesson 1 Questions

1] தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்

1) ‘பண்பாடு’ என்பதன் வேர்ச்சொல் என்ன?

A) பண்பு

B) பண்படு

C) பண்போடு வாழ்

D) கலாச்சாரம்

விளக்கம்: ‘பண்படு’ என்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும். ‘பண்பாடு’ என்பதற்குச் சீர்ப்படுத்துதல், செம்மைப்படுத்துதல் என்று பொருள்.

2) ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) டி. கே. சிதம்பரநாதனார்

B) வீரமாமுனிவர்

C) ஜி. யு. போப்

D) பாரதியார்

விளக்கம்: ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில் அறிமுப்படுத்தியவர் டி. கே. சிதம்பரநாதனார். பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையாகும்

3) ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்று கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) கலித்தொகை

C) திருக்குறள்

D) பரிபாடல்

விளக்கம்: ’உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்று தொல்காப்பியம் கூறுகிறது. இங்கு, உயர்ந்தோர் என்பது பண்பாடு உடையவர்களையே குறிக்கிறது.

4) ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று குறிப்பிடும் நூல்?

A) தொல்காப்பியம்

B) கலித்தொகை

C) திருக்குறள்

D) பரிபாடல்

விளக்கம்: “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதே இதன் பொருளாகும்

5) “பண்பு உடையார்ப் பட்டுஉண்டு உலகம்” என்று கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) கலித்தொகை

C) திருக்குறள்

D) பரிபாடல்

விளக்கம்: “பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்று வள்ளுவர் உரைக்கிறார். இவ்வுலகம், பண்புடையவர்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்பதே இதன் பொருளாகும்.

6) சரியான விடையைத் தேர்வு செய்க.

1. மனிதன் பேசும் மொழி, உணவு, வாழ்க்கை முறை, செய்யும் தொழில், எண்ணங்கள் ஆகியவை பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகள்

2. தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது எந்த வித மாற்றத்துக்கும் உட்படாமல் நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே ஆகும்.

A) 1 தவறு

B) 2 தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே ஆகும்.

7) கூற்று: நாகரிகம் என்பது, மாந்தரது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிக்கிறது.

காரணம்: மாந்தன் தன் அறிவுத்திறனாலும், ஆற்றல் திறனாலும் சுவையான உணவு, அழகிய ஆடை, கல்விச்சாலைகள் வளர்ந்து நிற்கும் வாணிகம் போன்றவற்றை வளர்த்து வருகிறான்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று சரி காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல

C) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

D) கூற்று சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

விளக்கம்: நாகரீகம் என்பது, மாந்தரது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையக் குறிப்பதாகும். மாந்தன் தன் அறிவுத் திறனால் மற்றும் ஆற்றல் திறனால் சுவையான உணவு, அழகான உடை, வசதியான உறையுள், வளம் மிகுந்த நாடு, கலைக்கூடங்கள், கல்விச்சாலைகள் விளையாட்டு, வளர்ந்து நிற்கும் வாணிகம் போன்றவற்றையெல்லாம் வளர்த்து வருகிறான்.

8) சரியான கூற்றைத் தேர்க

1. பண்பாடு என்பது, மாந்தரது அகவுணர்வு வளர்ச்சியையும் சீர்மையையும் குறிப்பது.

2. நாகரீகம் என்பது, மாந்தரது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையக் குறிப்பது.

A) 1 மட்டும் சரி

B) 1 தவறு 2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மாந்தன் தன் அறிவுத்திறனாலும், உள்ளுணர்வுத் திறனாலும் உள்ளத்தைப் பண்படுத்தி அன்புடையவன், ஈகையுடையவன், இரக்கமுடையவன், பண்புடையவன் போன்ற அகவுணர்வுகளை வளர்த்து வருவதால், பண்பாடு என்பது மாந்தரது அகவுணர்வு வளர்ச்சியையும் சீர்மையையும் குறிக்கும். இதேபோல் மனிதன் தன் அறிவுத்திறனால் சுவையான உணவு, அழகிய உடை, வசதியான உறையுள் போன்றவற்றை வளர்ப்பதால், நாகரீகம் என்பது மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிக்கும்

9) தமிழரின் தோற்றம் பற்றி எத்தனை வகையான கருதுகோள்கள் உள்ளன?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: தமிழில் தோற்றம் பற்றி 4 வகையான கருதுகோள்கள் உள்ளன. அவை

1. தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து வந்தார்கள்

2. தென் இந்தியாவின் பழங்குடிகள்

3. ஆதியில் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபிய கடல் வழியாகத் தென் இந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்

4. மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளிலிருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தவர்கள்

10) தமிழர்கள், தொன்றுதொட்டுப் பண்பாட்டில் சிறந்து விளங்கினர் என்பதற்கான சான்று எது?

A) இலக்கியச் சான்று

B) வெளிநாட்டவர் குறிப்புகள்

C) தொல்பொருள் சான்று

D) அனைத்தும்

விளக்கம்: தமிழர்கள், தொன்றுதொட்டுப் பண்பாட்டில் சிறந்து விளங்கினர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை இலக்கியச் சான்றுகள், வெளிநாட்டவரின் குறிப்புகள், தொல்பொருள் சான்றுகள் என 3-ஆக வகைப்படுத்தலாம்.

11) தமிழக் பண்பாட்டின் தொன்மையை அறிய பெரிதும் துணை புரிபவை எவை?

A) தொல்காப்பியம், திருக்குறள்

B) அகத்தியம், தொல்காப்பியம்

C) தொல்காப்பியம், சங்க இலக்கியம்

D) B மற்றும் C

விளக்கம்: தமிழகப் பண்பாட்டின் தொன்மையை அறிய பெரிதும் துணை புரிபவை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களாகும்.

12) எந்த நூலின் பொருளதிகாரம் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது?

A) தொல்காப்பியம்

B) அகத்தியம்

C) திருக்குறள்

D) நாலடியார்

விளக்கம்: தொல்காப்பியப் பொருளதிகாரம் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது. சங்க இலக்கிய நூலாகிய எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் அக்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

13) சங்க இலக்கியங்கள் எதை “அன்பின் ஐந்திணையாக” பகுத்துள்ளன?

A) அக வாழ்க்கை

B) புற வாழ்க்கை

C) அகம் மற்றும் புறம் இரண்டும் தழுவிய வாழ்க்கை

D) எதுவுமில்லை

விளக்கம்: சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையை முல்லை, மருதம், நெய்தல், பாலை என “அன்பின் ஐந்திணையாக” பகுத்துள்ளன

14) அன்பின் ஐந்திணைகளைக் கொண்டு பொருத்துக

அ. முதற்பொருள் – 1. தெய்வம், வழிபாட்டு முறை, வாழ்க்கைமுறை

ஆ. கருப்பொருள் – 2. காதல் வாழ்வு மற்றும் பல்வேறு உணர்வு நிலைகள்

இ. உரிப்பொருள் – 3. நிலம், பொழுது

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: முதற்பொருள் – நிலம், பொழுது

கருப்பொருள் – தெய்வம், வழிபாட்டு முறை, வாழ்க்கைமுறை

உரிப்பொருள் – காதல் வாழ்வு மற்றும் பல்வேறு உணர்வு நிலைகள்

15) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய பெருமை யாரைச் சேரும்?

A) தேசியக் கவி

B) கணியன் பூங்குன்றனார்

C) மகாகவி

D) பாரதிதாசன்

விளக்கம்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய பெருமை, சங்ககாலப் புலவராகிய கணியன் பூங்குன்றனாரைச் சாரும்

16) சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச் சிறப்பு பற்றி கூறும் நூல் எது?

A) பரிபாடல்

B) தொல்காப்பியம்

C) முல்லைப்பாட்டு

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம், முதலானவற்றைப் பற்றிப் பதிற்றுப்பத்து விரிவாக விளக்குகிறது.

17) மதுரையின் சிறப்பைப் பற்றி கூறும் நூல் எது?

A) பதிற்றுப் பத்து

B) புறநானூறு

C) பரிபாடல்

D) இசை நுணுக்கம்

விளக்கம்: இசைப்பாடலாகிய பரிபாடல், பாண்டியர்களின் தலைநகரமாகிய மதுரையின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும், திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடுகிறது.

18) பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்கள்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: பத்துபாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.

19) “ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” என்று குறிப்பிடுபவர் யார்?

A) நக்கீரர்

B) மோசிக்கீரனார்

C) கபிலர்

D) தொல்காப்பியர்

விளக்கம்: இப்பாடல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தில், பொருளாதிகாரத்தில் புறத்திணையில் 30-வது பாடலாக அமைந்துள்ளது.

20) “தம்மைப் போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறுகின்ற பெருமனம் படைத்தவர்கள் புலவர்கள்” என்று கூறும் நூல் எது?

A) ஆற்றுப்படை நூல்கள்

B) தொல்காப்பியம்

C) அகத்தியம்

D) திருக்குறள்

விளக்கம்: “அற்றிடைக் காட்சி உறழத் தோன்றி” என்ற தொல்காப்பியப் பாடல், மேற்கண்ட செய்தியை ஆற்றுப்படை நூல்கள் புலப்படுத்துவதைக் குறிப்பிடுகின்றன.

21) பொருத்துக.

அ. குறிஞ்சிப்பாட்டு – 1. காதலின் சிறப்பு

ஆ முல்லைப்பாட்டு – 2. நிலவளம்

இ. நெடுநல்வாடை – 3. பாண்டியன் நெடுஞ்செழியன்

ஈ. மதுரைக் காஞ்சி – 4. காதல், வீரம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 3, 4, 1, 2

D) 2, 1, 4, 3

விளக்கம்: குறிஞ்சிப்பாட்டு – நிலவளம் பற்றி கூறுகிறது

முல்லைப்பாட்டு – காதலின் சிறப்பு

நெடுநல்வாடை – காதல், வீரம்

மதுரைக் காஞ்சி – பாண்டியன் நெடுஞ்செழியன்

22) “நிலையாமை” குறித்த கருத்துகள் இடம் பெற்ற நூல் எது?

A) குறிஞ்சிப்பாட்டு

B) முல்லைப்பாட்டு

C) நெடுநல்வாடை

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: மதுரைக்காஞ்சி, பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பைக் கூறுகிறது. அதில் கூறப்பட்டுள்ள நிலையாமை குறித்த கருத்துகள் கூட, பாண்டிய மன்னன் காலத்தால் ஆற்ற வேண்டிய கடமைகளின் நினைவூட்டலாகவே அமைந்துள்ளன

23) “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்ற சொற்றொடர் இடம்பெற்ற நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பரிபாடல்

C) பதிற்றுப்பத்து

D) நெடுநல்வாடை

விளக்கம்: சோழநாடு தரைவழி வணிகத்தாலும் கடல் வழி வணிகத்தாலும் வளம் பெற்றிருந்தன. முட்டாச் சிறப்பின் பட்டினம் என்று பட்டினப் பாலைச் சொற்றொடர் குறிப்பிடுகிறது.

24) இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான எது தமிழர் ஆட்சிமுறை, ஆடல், பாடல், கலைவளம் பற்றிக் கூறுகிறது?

A) சீவக சிந்தாமணி

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம்

D) வளையாபதி

விளக்கம்: சிலப்பதிகாரம், தமிழர் ஆட்சிமுறை, ஆடல் பாடல் கலைவளம் மற்றும் புகார், மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்புகள், வணிகச் சிறப்பு, சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள், தனிமனித ஒழுக்கம், நீதி வழங்கும் முறைமை ஆகியவை பற்றி விரிவாகப் பேசும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

25) எது சமய அறக்கருத்துக்களையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கிறது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) B மற்றும் C

விளக்கம்: மணிமேகலை சமய அறக் கருத்துக்களையும், வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கின்றது. இது பசியைப் பிணியாக உருவகம் செய்து அதைப் போக்க வேண்டிய அலட்சியத்தையும் கூறுகின்ற புரட்சிக்காப்பியம் ஆகும்.

26) “குற்றங்களுக்கான காரணத்தை ஆராய்வதன் மூலமே குற்றச்செயலைத் தடுக்க முடியும்” என்பதை மையக் கருத்தாகக் கொண்ட நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) சீவக சிந்தாமணி

C) மணிமேகலை

D) குண்டலகேசி

விளக்கம்: பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது மணிமேகலையின் மையக் கருத்தாகும்.

27) கிரேக்க மக்கள் நாகரீக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தன எனக் கூறும் நூல் எது?

A) பூகோள நூல்

B) எரித்திரியக் கடலின் பெரிபுளுஸ்

C) பிளினியின் உயிரியல் நூல்

D) தொல்காப்பியம்

விளக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட “எரித்திரயக் கடலின் பெரிபுளுஸ்” என்னும் நூலின் பதிப்புரையில் மேற்கண்ட செய்தி கூறப்படுகிறது

28) பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் குறிப்படும் நூல் எது?

A) ஸ்டிரோபோ-ன் பூகோள நூல்

B) பிளினி-ன் உயிரியல் நூல்

C) தாலமி-ன் பூகோள நூல்

D) அனைத்தும்

விளக்கம்: மேற்கண்ட அனைத்து நூல்களும், பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் குறிப்பிடுகிறது. ஸ்டிராபோ என்பவர் ரோமாபுரி அரசன் அகஸ்டஸின் சமகாலத்தவர்.

29) கண்ணனூருக்கும் கொச்சிக்கும் இடையில் யாருடைய துறைமுகங்கள் அனைத்தும் அமைந்திருந்தன?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) தொண்டைமான்

விளக்கம்: சேரநாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்கும் இடையில் அமைந்திருந்தன. அரேபியாவிலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் வணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் செறிந்து கிடந்தனவென்று பெரிபுளுஸ் என்ற நூல் கூறுகின்றது.

30) எந்த நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள், தமிழகத்தின் வணித் தொடர்பு கொண்டிருந்தனர்?

A) 3ம் நூற்றாண்டு

B) 4-ம் நூற்றாண்டு

C) 5-ம் நூற்றாண்டு

D) 6-ம் நூற்றாண்டு

விளக்கம்: கி. மு(பொ. ஆ. மு) 5-ம் நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள், தமிழகத்துடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் பல தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றிருந்தன.

31) தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல்லைப் பொருத்துக

அ. அரிசி – 1. பெரிப்பெரி

ஆ. கருவா – 2. சின்ஞிபேராஸ்

இ. இஞ்சிவேர் – 3. கார்ப்பியன்

ஈ. பிப்பாலி – 4. அரிஸா

A) 4, 3, 2, 1

B) 4, 2, 3, 1

C) 4, 1, 2, 3

D) 4, 3, 1, 2

விளக்கம்: அரிசி – அரிஸா

கருவா(இலவங்கம்) – கார்ப்பியன்

இஞ்சிவேர் – சின்ஞிபேராஸ்

பிப்பாலி – பெர்ப்பெரி

32) “துகிம்” என்பதன் பொருள் என்ன?

A) சந்தனம்

B) மயில்தோகை

C) அகில்மரம்

D) அரிசி

விளக்கம்: சாலமன் மன்னனுக்கு அளிக்கப்பெற்ற துகிம்(மயில்தோகை) , ஆல்மக்(அகில் மரங்கள்) , பிற மதிப்புயர்ந்த பொருள்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ்பெயர்களின் சிதைவுகளே

33) தமிழத்திலிருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மிருகங்களில் எது தரத்தில் மேலானவை எனப் போற்றப்பட்டன?

A) மயில்

B) சிறுத்தை

C) யானை

D) வேட்டை நாய்

விளக்கம்: தமிழத்திலிருந்து புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டைநாய்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்தனர். அவற்றுள், தமிழகத்து வேட்டைநாய்கள் தரத்தில் மேலானவை எனப் போற்றப்பட்டன.

34) பொருத்துக

அ. தொண்டி – 1. கொமாரி

ஈ. முசிறி – 2. பகரி

இ. பொற்காடு – 3. முஸிரிஸ்

ஈ. குமரி – 4. திண்டிஸ்

A) 4, 2, 1, 3

B) 4, 2, 3, 1

C) 4, 3, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் ‘திண்டிஸ்’ என்றும், முசிறியை ‘முஸிரிஸ்’ என்றும், பொற்காட்டைப் ‘பகரி’ என்றும் குமரியை ‘கொமாரி’ என்றும் ரோமர்கள் குறிப்பிடுள்ளனர்.

35) பொருத்துக.

அ. கொற்கை – 1. கமரா

ஆ. நாகபட்டினம் – 2. கொல்சாய்

இ. காவிரிபூம்பட்டினம் – 3. நிகாமா

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்:

தமிழக துறைமுகம் யவணர்களால் அழைக்கப்பட்ட விதம்

கொற்கை – கொல்காய்

நாகப்பட்டினம் – நிகாமா

காவிரிபூம்பட்டினம் – கமரா

36) பொருத்துக

அ. புதுச்சேரி – 1. மசோலியா

ஆ. மரக்காணம் – 2. சோபட்மா

இ. மசூலிப்பட்டினம் – 3. பொதுகே

A) 1, 3, 2

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 3, 2, 1

விளக்கம்:

தமிழக துறைமுகம் யவணர்களால் அழைக்கப்பட்ட விதம்

புதுச்சேரி – பொதுகே

மரக்காணம் – சோபட்மா

மசூலிப்பட்டினம் – மசோலியா

கொற்கை, நாகப்பட்டினம், காவிரிபூம்பட்டினம், பதுச்சேரி, மரக்காணம், மசூலிப்பட்டினம் ஆகியவை தமிழகத்தின் கீழைக்கடற்கரைத் துறைமுகங்களாகும்.

37) ஹிப்பாகிரேட்டஸ் எந்த பொருளை “இந்திய மருந்து” என்று குறிப்பிட்டார்?

A) ஏலம்

B) இலவங்கம்

C) கடுகு

D) மிளகு

விளக்கம்: ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் கி. மு(பெ. ஆ. மு) 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் இந்திய மருத்துவ முறைகளையும் மருந்து வகைகளையும் கையாண்டு வந்தார். இவர் மிளகை “இந்திய மருந்து” என்றே குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய தமிழகத்திலிருந்து மஸ்லின் துணியும், ஏலக்காய், இலங்கம் போன்ற நறுமணப் பொருள்களும் ஏற்றுமதியாயின.

38) தொல்பொருள் சான்றுகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொல்பொருள் சான்றுகள் 3 வகைப்படும்

அவை, 1. கல்வெட்டுகளும் பட்டயங்களும்

2. நாணயங்கள்

3. நினைவுச்சின்னங்கள்

39) சரியான கூற்றைத் தேர்க

1. பெரும்பாலும் மன்னர்களின் துணைகள் அவர்களின் சாதனைகள் போன்றவை கல்வெட்டுகளில் இடம் பெறும்

2. திருப்பரங்குன்றம், நாகமலை, ஆனைமலை, கீழக்குயில்குடி ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுகள் சங்க காலத்திற்கு முற்பட்டவை

A) 1 சரி

B) 2 சரி

C) 1, 2, சரி

D) 1, 2 தவறு

விளக்கம்: திருப்பரங்குன்றம், நாகமலை, ஆனைமலை, கீழக்குயில்குடி ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் சங்க காலத்தவை.

40) காஞ்சி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் யாருடைய வரலாற்றை அறிய முடியும்?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: பல்லவர்காலக் கல்வெட்டுகள் குகைகள், இரதங்கள், கோயில்கள், கற்பாறைகள், தூண்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவற்றுள் மண்டகப்பட்டு மகேந்திரவாடி, திருச்சி, பல்லாவரம், மாமல்லபுரம், தளவானூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளவைக் குறிப்பிடத்தக்கவை.

41) கிராம ஆட்சிமுறையை தெளிவாக எடுத்துகாட்டும் கல்வெட்டு எது?

A) உத்திருமேரூர்க் கல்வெட்டு

B) டெல்லி இரும்புத்தூண்

C) அசோகர் கல்வெட்டு

D) பாபர் கல்வெட்டு

விளக்கம்: பரந்தகச் சோழனின் உத்திரமேரூர்க் கல்வெட்டு, சோழர்கால கிராம ஆட்சிமுறையைத் தெளிவாக எடுத்துகாட்டுகிறது. இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களில் தகுதிகள், தேர்;ந்தெடுக்கப்படும் முறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

42) குடவோலை முறை தேர்தல் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: கிராம ஊராட்சி சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க சோழர் காலத்தில் குடவோலை தேர்தல் முறை பயன்படுத்தப்பட்டது. இதனை, தற்கால தேர்தல் முறைக்கு முன்னோடியாகக் கருதலாம்.

43) எந்த இடங்களில் காணப்படும் கோயில் கல்வெட்டுகள் மக்களின் பண்பாடு, அரசில், சமூக உறவு போன்றவற்றை எடுத்துரைக்கிறது?

A) தஞ்சை, திருவொற்றியூர், மேலப்பழுவூர்

B) சிதம்பரம், திருவாரூர், மதுரை

C) கன்னியாகுமரி

D) அனைத்தும்

விளக்கம்: தஞ்சை, திருவொற்றியூர், மேலப்பழுவூர், சிதம்பரம், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற இடங்களிலுள்ள கோயில் கல்வெட்டுகள், மக்களின் பண்பாடு, அரசியல், வாழ்க்கைமுறை, நீதி, சமூக உறவு, பொருளாதார நிலை போன்றவற்றை எடுத்துரைக்கின்றன.

44) பட்டயங்கள் பொதுவாக எந்த மொழயில் காணப்படுகின்றன?

A) வடமொழி

B) தமிழ்

C) பிராகிருதம்

D) அனைத்தும்

விளக்கம்:பொன், செம்பு ஆகிய உலோகத் தகடுகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை பட்டயங்கள் எனப்பட்டன. இவை காலத்தையும் ஆட்சி முறையையும் அறிய உதவுகிறது. பட்டயங்கள் அரசனின் பெயர், அவனது காலம், பட்டயம் அளிக்கப்படும் நோக்கம் முதலியன பற்றிக் கூறுவதால், வரலாற்றை அறிய பெரிதும் துணைபுரிகிறது. இவை, பொதுவாக பிராகிருதமொழி, வடமொழி, தமிழில் காணப்படுகிறது.

45) தளவாயப்புரச்செப்பேடு, சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடு ஆகியவை யாருடைய காலப் பட்டயங்கள்?

A) சேர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: தளவாயப்புரச்செப்பேடு, சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடு ஆகியவை பாண்டியர் காலப் பட்டயங்கள்.

46) திருவாலங்காட்டுப் பட்டயங்கள் யாருடைய காலத்தவை?

A) சேர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: திருவாலங்காட்டுப் பட்டயங்கள், கரந்தைச் செப்பேடுகள், அன்பில் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் போன்றவை சோழர்காலப் பட்டயங்கள்.

47) மன்னர்கள் கொடையாக வழங்கிய இறையிலி நிலங்களையும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களைப் பற்றியும் கூறுபவை எவை?

A) கல்வெட்டுகள்

B) பட்டயங்கள்

C) A மற்றும் B

D) நாணயங்கள்

விளக்கம்: கல்வெட்டுகளும், பட்டயங்களும் மேற்கண்ட செய்தியைக் கூறுகின்றன. இவை பொதுவாக பிராமி, பிராகிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

48) சங்க காலத்தில் செப்பு நாணயங்கள் வழக்கில் இருந்தன. அவற்றின் ஒருபுறம் யானையும் மறுபுறம் எதுவும் காணப்பட்டது?

A) இரட்டை மீன்கள்

B) கப்பல்

C) நந்தி

D) புலி

விளக்கம்: சங்க கால செப்பு நாணயங்கள் சதுர வடிவமானவை. நாணயத்தின் ஒருபுறம் யானையும் மறுபுறம் இரட்டை மீன்களும் காணப்பட்டன.

49) யவனர்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்து தங்க நாணயங்களை வெளியிட்டனர்?

A) மதுரை, காஞ்சி

B) காஞ்சி, வஞ்சி

C) புகார், மதுரை

D) புகார், வஞ்சி

விளக்கம்: யவனர்கள் தமிழத்தில் புகார், மதுரை ஆகிய இடங்களிலிருந்து தங்க நாணயங்களை வெளியிட்டனர். அவை, அவர்களுடைய புழக்கத்திற்கே பயன்பட்டன.

50) யாருடைய காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இரட்டை மீன் கப்பல், நந்தி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன?

A) பாண்டியர்

B) பல்லவர்

C) சேரர்

D) சோழர்

விளக்கம்: பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இரட்டைமீன், கப்பல், நந்தி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன.

51) யார், பாண்டியர்களை அடக்கி வலிமை பெற்றவராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக நாணயம் உள்ளது?

A) முதலாம் ராஜராஜன்

B) முதலாம் குலோத்துங்கன்

C) முதலாம் இராசேந்திரன்

D) எவருமில்லை

விளக்கம்: முதலாம் இராஜராஜன் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் புலியும் அதனருகில் இரட்டை மீன் கொண்ட வடிவங்களும் காணப்படுகின்றன. இதனால் அவன் பாண்டியர்களை அடக்கி வலிமை பெற்றவராக வாழ்ந்தான் என்பது வெளிப்படுகிறது.

52) யாரடைய தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகிறது?

A) முதலாம் ராஜராஜன்

B) இரண்டாம் வரகுகுணன்

C) முதலாம் இராசேந்திரன்

D) எவருமில்லை

விளக்கம்: இரண்டாம் வரகுகுணனின் தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகிறது. நாணயங்கள் வாயிலாக வணிகத்தில் பண்டமாற்று முறையோடு பணப்பரிமாற்றமும் தொன்றுதொட்டு தமிழகத்தில் நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது.

53) மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடையது?

A) சேரர்

B) சோழர்

C) பாண்டியர்

D) பல்லவர்

விளக்கம்: மகேந்திரவர்ம பல்லவர்களின் மண்டகப்பட்டு கல்வெட்டில், அழியக்கூடிய பொருள்களான மரம், செங்கல், மண், சுண்ணாம்பு கொண்டு பல கோயில்கள், சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் களப்பிரர் காலத்திலும் கட்டப்பட்டதாக் குறிப்பிடப்பட்டுள்ளது.

54) யாருடைய காலம் முதற்கொண்டு கோயில்கள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன?

A) இராஷ்டிரக் கூடர்கள்

B) களப்பிரர்கள்

C) பல்லவர்கள்

D) பிற்காலச் சோழர்கள்

விளக்கம்: பல்லவரது காலம் முதற்கொண்டு கோயில்கள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் அவை இன்னும் நிலைத்து நின்று, தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

பல்லவர் கால் கல்வெட்டுகள்:

திருப்பரங்குன்றம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமல்லபுரம் – குகை கோயில்களும், கற்களால் ஆன இரதங்கள்.

காஞ்சி கைலாசநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை கங்கைகொண்ட சோழபுரம், தராசுரம், திருவெற்றியூர், லால்குடி, திருவாரூர், மதுரை, வேலூர், இராமேஸ்வரம் மற்றும் சுசீந்திரம் கோயில்கள்

55) வீரம், கொடை, புலமை, முதலியவற்றில் சிறந்தவர்களை நினைவுகூறும் பொருட்டு நடப்பட்டவை எவை?

A) கற்பதுகைகள்

B) நடுகற்கள்

C) தூண்கள்

D) A மற்றும் B

விளக்கம்: வீரம், கொடை, புலமை முதலியவற்றில் சிறந்தவர்களை நினைவுகூறும் பொருட்டு, நடப்பட்ட கற்பதுகைகளும், நடுகற்களும் தமிழ்ப் பண்பாட்டின் தொல்பொருள் சின்னங்களாக விளங்குகின்றன. மேலும், முதுமக்கள் தாழிகளில் இடம்பெற்றிருந்து பல்வகைப் பொருள்கள் இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட சடங்குகளுக்கான சான்றாக உள்ளன.

56) தமிழகத்தின் சிறப்பான சிற்பக்கலைக்கு அடையாளமாகத் திகழுவது எது?

A) சித்தனவாசல் குகைக்கோயில்

B) மாமல்லபுர ஒற்றைக்கல் இரதங்கள்

C) தஞ்சை பெரியக் கோயில்

D) ஸ்ரீரங்கம் கோயில்

விளக்கம்: மாமல்லபுர ஒற்றைக்கல் இரதங்கள், தமிழகத்தின் சிறப்பான சிற்பக்கலைக்கு அடையாளமாகத் திகழ்கின்றன. சமண முனிவர்களின் வாழ்விடங்களில் குகைகள் இருந்துள்ளன.

57) “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்தை” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) பரிபாடல்

B) பதிற்றுப்பத்து

C) இராமாயணம்

D) தொல்காப்பியம்

விளக்கம்: பழங்காலத் தமிழகம் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை பரவியிருந்தது என்பதே இதன் பொருள். மொழியின் அடிப்படையில் இந்நாடு “தமிழ்கூறும் நல்லுலகம்” என்றும் “தமிழ்நாடு” என்றும் வழங்கலாயிற்று

58) குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படும்?

A) மருதம்

B) நெய்தல்

C) பாலை

D) தரிசு

விளக்கம்: குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து நிலத்தை பாலை என்பர். பண்டையத் தமிழகத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இலக்கியங்கள் பகுத்தன.

59) பண்டையத் தமிழகத்தில் இருந்த அரசியல் பிரிவுகள் எவை?

A) பாண்டியநாடு, சோழ நாடு

B) சேர நாடு, கொங்கு நாடு

C) தொண்டைநாடு, குறுநில மன்னரின் ஆட்சிப் பகுதி

D) அனைத்தும்

விளக்கம்: பாண்டியநாடு , சோழநாடு, சேரநாடு, கொங்கு நாடு, தொண்டைநாடு ஆகிய நாடுகளும், குறுநில மன்னர்களின் அரசுகளும் தனிரயரசுகளாகவே இயங்குகின்றன. பழந்தமிழர் ஒன்றுபட்டு வாழாமல் தனித்தனி அரசியல் சமூகங்களாகப் பிரிந்து வாழ்ந்ததற்கு நாட்டின் இயற்கை அமைப்பே காரணம்.

60) மன்னர்களுக்கும், மக்களுக்கும் உரிய ஒழுக்கங்கள் எந்த நூலில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது?

A) சங்க இலக்கியங்கள்

B) தொல்காப்பியம்

C) திருக்குறள்

D) நாலடியார்

விளக்கம்: நெறிபிறழாத போர்முறை மக்களின் நிலையறிந்து வரி விதித்தல், நேர்மையாகப் பொருளீட்டல், சான்றோரை மதித்து அவரது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் முதலியன அரசர்களுக்குரிய மாண்புகளாகக் கருதப்பட்டன.

இதேபோல், தனிமனித வாழ்வில் நெறிகளை ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக கூறப்பட்டுள்ளது.

61) “வினையே ஆடவர்க்கு உயிரே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) குறுந்தொகை

B) தொல்காப்பியம்

C) திருக்குறள்

D) நாலடியார்

விளக்கம்: “வினையே ஆடவர்க்கு உயிரே” என்ற குறுந்தொகைத் தொடர், ஆண்களின் நிலையையும் அவர்கள் தங்களின் வாழ்விடங்களுக்குரிய தொழில்களைகச் செய்தனர் என்பதையும் விளங்குகின்றது. பெண்களுக்கு உயரிய பண்பாகக் கற்பொழுக்கம் கருதப்பட்டது. மக்கட்பேறு, விருந்தோம்பல், பெரியோரை மதித்தல் முதலியன குடும்ப வாழ்க்கைக்குரிய அடிப்படைப் பண்புகளாக வரையறுக்கப்பட்டன.

62) தமிழ் வளர்த்த சங்கங்கள் எத்தனை?

A) 1

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்ப்பதற்காகப் புலவர் பலரையும் ஒருங்கிணைத்துத் தமிழ்ச்சங்கங்களை நிறுவினர். இவை, கால அடிப்படையில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தன.

63) பொருத்துக.

அ. முதற்சங்கம் – 1. இன்றைய மதுரை

ஆ. இடைச்சங்கம் – 2. கபாடபுரம்

இ. கடைச்சங்கம் – 3. தென்மதுரை

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்:

சங்கம் இடம் வளர்த்தவர்கள்

முதற்சங்கம் தென்மதுரை காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை

இடைச்சங்கம் கபாடபுரம் வேண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை

கடைச்சங்கம் இன்றைய மதுரை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை

64) சங்க இலக்கியமாகிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எத்தiயாவது தமிழ்ச்சங்ககால நூல்கள்?

A) முதல்

B) 2-ம்

C) 3-ம்

D) எதுவுமில்லை

விளக்கம்: எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் மூன்றாம் தமிழ்ச்சங்ககால நூல்கள் என்று கூறுகின்றனர். எனினும் அவற்றைச் சங்க இலக்கியம் என்று குறப்பிடுகின்றனர்.

65) சங்கங்களைப் பற்றிய வரலாறு, இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் யார்?

A) உக்கிரப் பெருவழுதி

B) முடத்திருமாறன்

C) தாயுமானவர்

D) நக்கீரர்

விளக்கம்: தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய வரலாறு, நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையிலும் கூறப்பட்டுள்ளது.

66) தமிழர்கள், தம் வாழ்க்கையை எத்தனை கூறுகளாகப் பிரித்தனர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழர்கள் தம் வாழ்க்கையை அகம் மற்றும் புறம் என்று இரு வகையாகப் பிரித்தனர். இதனை அன்பின் வழிப்பட்டது அகவாழ்வு என்றும் வீரத்தின் வெளிப்பாடு புறவாழ்வு எனவும் கூறுவர்

67) அகத்திணை எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அகத்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைப்படும்.

68) புற ஒழுக்கம் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை(ஒருதலைக் காதல்) , பெருந்திணை (பொருந்தாக் காதல்) என புற ஒழுக்கம் 7 திணைகளாகக் கூறுவர்.

69) அகத்திணை, புறத்திணை சார்ந்த செய்திகளை விரிவாக விளக்கும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) திருக்குறள்

C) நாலடியார்

D) பரிபாடல்

விளக்கம்: அகத்திணை, புறத்திணை சார்ந்த செய்திகளை தொல்காப்பிய பொருளதிகாரம் தெளிவாக விரிவாக விளக்குகிறது.

70) எப்பொருளாகிய காதலைக் கற்பனை செய்து பாடும்போது அதற்குரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, பூ, மரம் முதலான கருப்பொருள்களைப் பிண்னணியாக அமைத்துப் பாடுவது மரபு?

A) முதற்பொருள்

B) கருப்பொருள்

C) உரிப்பொருள்

D) ஊடல் பொருள்

விளக்கம்: உரிப்பொருளாகிய காதலைக் கற்பனை செய்து பாடும் போது அதற்குரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, பூ, மரம் முதலான கருப்பொருளைப் பிண்னணியாக அமைத்துப் பாடுவது மரபு.

71) பொருத்துக

அ. குறிஞ்சி – 1. மணலும் மணல் சார்ந்த இடம்

ஆ. முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடம்

இ. மருதம் – 3. கடலும் கடல் சார்ந்த இடம்

ஈ. நெய்தல் – 4. காடும் காடு சார்ந்த இடம்

உ. பாலை – 5. மலையும் மலை சார்ந்த இடம்

A) 5, 4, 2, 1, 3

B) 5, 4, 2, 3, 1

C) 5. 3, 4, 2, 1

D) 5, 3, 2, 4, 1

விளக்கம்:

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடம்

முலலை – காடும் காடு சார்ந்த இடம்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடம்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடம்

பாலை – மணலும் மணல் சார்ந்த இடம்

72) பொருத்துக

அ. குறிஞ்சி – 1. வைகறை

ஆ. முல்லை – 2. ஏற்பாடு

இ. மருதம் – 3. நண்பகல்

ஈ. நெய்தல் – 4. யாமம்

உ. பாலை – 5. மாலை

A) 4, 3, 5, 1, 2

B) 4, 5, 2, 1, 3

C) 3, 4, 2, 3, 1

D) 4, 5, 1, 2, 3

விளக்கம்:

குறிஞ்சி – யாமம்

முல்லை – மாலை

மருதம் – வைகறை

நெய்தல் – ஏற்பாடு

பாலை – நண்பகல்

73) பொருத்துக.

அ. குறிஞ்சி – 1. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,

ஆ. முல்லை – 2. இளவேனில், முதுவேனில், பின்பனி

இ. மருதம் – 3. கூதிர், முன்பனி

ஈ. நெய்தல் – 4. கார்

உ. பாலை – 5. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

A) 3, 4, 5, 1, 2

B) 3, 5, 4, 1, 2

C) 3, 2, 5, 1, 4

D) 3, 4, 5, 2, 1

விளக்கம்:

குறிஞ்சி – கூதிர், முன்பனி

முல்லை – கார்

மருதம் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,

நெய்தல் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,

பாலை – இளவேனில், முதுவேனில், பின்பனி

74) திணைக்குரிய உரிப்பொருளைப் பொருத்துக.

அ. குறிஞ்சி – 1. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

ஆ. முல்லை – 2. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

இ. மருதம் – 3. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

ஈ. நெய்தல் – 4. பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

உ. பாலை – 5. ஊடலும் ஊடல் நிமித்தமும்

A) 2, 3, 4, 5, 1

B) 2, 4, 5, 3, 1

C) 2, 3, 5, 1, 4

D) 3, 4, 2, 1, 5

விளக்கம்:

குறிஞ்சி – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

75) புறத்திணைகளை பன்னிரண்டாகப் பகுத்த நூல் எது?

A) புறப்பொருள் வெண்பாமாலை

B) திருக்குறள்

C) தொல்காப்பியம்

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: தொல்காப்பியம் புறத்திணைகளை 7 ஆகப் பகுத்துள்ளது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை.

புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையை 12 ஆக பகுத்துள்ளது. அவை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை.

76) போருக்கான காரணங்களையும், போர் நடைபெறும் முறைகளையும் கூறும் புறத்திணைகள் எத்தனை?

A) 5

B) 7

C) 8

D) 12

விளக்கம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய 8 புறத்திணைகள் போருக்கான காரண்ங்களையும், போர் நடைபெறும் முறைகளையும் கூறுகின்றன.

77) மன்னின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைச் சிறப்பித்துப் பாடுவது எந்தத் திணை?

A) பாடாண் திணை

B) பொதுவியல் திணை

C) பெருந்திணை

D) கைக்கிளை

விளக்கம்: மன்னின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைச் சிறப்பித்துப் பாடுவது பாடாண் திணை ஆகும்.

78) “விருந்தே தானும் பதுவது புனைந்த யாப்பின் மேற்றே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) தொல்காப்பியம்

D) ஏலாதி

விளக்கம்: இவ்வரிகள் தொல்காப்பியம் நூற்பாவில் இடம்பெற்றுள்ளது. இதிலுள்ள ‘விருந்து’ என்னும் சொல் ‘புதியது’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம், தொல்காப்பியக் காலம் முதல் விருந்தோம்பல் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருவதை அறியலாம்.

79) “விருந்து புறத்ததாதத் தான் உண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டாற்பாற் நன்று” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) தொல்காப்பியம்

D) ஏலாதி

விளக்கம்: இக்குறளானது விருந்தோம்பல் பற்றிய உயரிய நெறியை விளக்குகிறது. தமிழர்கள் விரும்தோம்பலின் போது, உயிர் பிரிக்கும் விஷத்தைக் கொடுத்தாலும் அதனை வேண்டாம் எனக் கூறாது உண்பர் என்தே இதன் பொருள்.

80) “தொல்லோர் சிறப்பின்” என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியவர் யார்?

A) சீத்தலைச் சாத்தனார்

B) இளங்கோவடிகள்

C) திருவள்ளுவர்

D) நக்கீரர்

விளக்கம்: இளங்கோவடிகள் “தொல்லோர் சிறப்பின்” என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால், தமிழின் தொன்மையான பழக்கம் விருந்தோம்பல் என்பதை அறிவோம்

81) விருந்தோம்பும் பண்பு, கணவன், மனைவியின் தலையாய கடமை எனக் கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) சங்க இலக்கியங்கள்

C) அகத்தியம்

D) நெடுநல்வாடை

விளக்கம்: விருந்தோம்பும் பண்பு கணவன், மனைவியின் தலையாய கடமை என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

82) சங்க காலத் தமிழர்கள் இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனராக எனப் பார்த்து உணவளிப்பர் என்பதைக் கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) சங்க இலக்கியங்கள்

C) அகத்தியம்

D) நற்றிணை

விளக்கம்: சங்க காலத் தமிழர்கள் இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா எனப் பார்த்து உணவளிப்பர் என் செய்தியை நற்றிணைப் பாடல் மூலம் அறியலாம்

83) “…………………………. . கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளிச்

செவிஅடை தீர்த் தேக்கிலைப் பகுக்கும்

புல்லி நல் நாட்டு” – இப்பாடல் இடம்பெற்ற நூல்?

A) தொல்காப்பியம்

B) அகநானூறு

C) அகத்தியம்

D) நெடுநல்வாடை

விளக்கம்: “…………………………. . கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளிச்

செவிஅடை தீர்த் தேக்கிலைப் பகுக்கும்

புல்லி நல் நாட்டு” – அகநானூறு

84) இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு எது கலந்த இறைச்சியை சமைத்துக் கொடுப்பது அன்றைய தமிழரின் வழக்கமாகும்?

A) தேன்

B) நெய்

C) வெல்லம்

D) மிளகு

விளக்கம்: இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நெய் கலந்த இறைச்சியைச் சமைத்துக் கொடுப்பது அன்றைய தமிழரின் வழக்கமாகும். பசி என்று வந்தவர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உணவு உண்பதை விரும்ப மாட்டார்கள்

85) ஒரு நாள் சென்றாலும், இருநாள் சென்றாலும், பல நாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர் என்பதை யாருடைய பாடல் மூலம் அறியலாம்?

A) நக்கீரர்

B) ஒளவையார்

C) கபிலர்

D) பூதஞ்சேந்தனார்

விளக்கம்: தமிழர்கள். தமது வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்த பிறகே, தாம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஒரு நாள் சென்றாலும், இருநாள் சென்றாலும், பல நாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர் என்பதை ஒளவையார் பாடல் மூலம் அறியலாம்.

86) ஆயர்கள், மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை எதில் எடுத்துச் செலவர்?

A) தூக்கு சட்டி

B) பானை

C) குவளை

D) மூங்கில் குழாய்

விளக்கம்: ஆயர்கள், மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை மூங்கில் குழாயில் இட்டு மாட்டின் கழுத்தில் கட்டுவர். காட்டுவழியே செல்லும் போது, அவ்வழியாகப் பசியோடு வருபவர்களுக்கு தாம் வைத்திருக்கும் உணவினைப் பகிர்ந்துக் கொடுப்பர்.

87) பழந்தமிழர் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைப் பற்றி கூறும் நூல் எது?

A) சிறுபாணாற்றுப்படை

B) பெருங்கதை

C) மணிமேகலை

D) மடைநூல்

விளக்கம்: பழந்தமிழர் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை “மடைநூல்” குறிப்பிடுகிறது. உணவுப் பற்றிய செய்திகள் சிறுபாணற்றுப்படை, பெருங்கதை, மணிமேகலை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. காலத்திற்கும், நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை அந்நூல்கள் மூலம் அறியலாம்.

88) பெற்ற பெருவளத்தைத் தக்கோர்க்குப் பகிர்ந்தளிப்பதே வள்ளண்மையாகும். இப்பண்பு, யார் பின்பற்ற வேண்டிய பண்புகளுள் தலையாயது எனக் கருதப்பட்டது?

A) மனிதன்

B) அரசன்

C) அந்தணன்

D) நில உடைமையாளர்

விளக்கம்: பெற்ற பெருவளத்தைத் தக்கோர்க்குப் பகிர்ந்தளிப்பதே வள்ளண்மையாகும். இப்பண்பு, அரசர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளுள் தலையாயது எனக் கருதப்பட்டது. கல்வி, தறுகண், இசை, கொடை ஆகிய பெருமிதப் பண்புகளுள் ஒன்றாக வள்ளல் தன்மை விளங்குகிறது.

89) யார் வள்ளல்தன்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர்?

A) மூவேந்தர்கள்

B) கடையெழு வள்ளல்கள்

C) A மற்றும் B

D) அந்தணர்கள்

விளக்கம்: சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களுள் குறுநில மன்னர்களாகிய கடையெழு வள்ளல்களும் வாரி வழங்கும் வள்ளல்தன்மை கொண்டவர்களாக விளங்கினர் என்பதை இலக்கியங்கள் பெருமிதத்துடன் கூறுகின்றன.

90) குறுநில மன்னர்கள் மற்றும் அவர்களின் ஆட்சிப் பகுதியை பொருத்துக.

அ. பேகன் – 1. பொதிய

ஆ. பாரி – 2. பழனி மலை

இ. திருமுடிக்காரி – 3. மலையமா நாடு

ஈ. ஆய் ஆண்டிரன் – 4. பறம்பு மலை

A) 4, 3, 2, 1

B) 2, 4, 1, 3

C) 2, 4, 3, 1

D) 4, 2, 1, 3

விளக்கம்:

பேகன் – பழனிமலை

பாரி – பறம்பு மலை

திருமுடிக்காரி – மலையமா நாடு

ஆய் அண்டிரன் – பொதிய மலை

அதியமான் – தகடூர்

நள்ளி – கண்டீர மலை

வல்வில் ஓரி – கொல்லிமலை

91) பொருத்துக.

அ. மயிலுக்குப் போர்வை தந்தவர் – 1. திருமுடிக்காரி

ஆ. முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரை தந்தவர் – 2. பேகன்

இ. குதிரைகளைப் பரிசாக வழங்கியர் – 3. ஆய்

ஈ. நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர் – 4. பாரி

A) 3, 2, 1, 4

B) 3, 4, 2, 1

C) 2, 4, 3, 1

D) 2, 4, 1, 3

விளக்கம்: மயிலுக்குப் போர்வை தந்தவர் – பேகன்

முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரை தந்தவர் – பாரி

குதிரைகளைப் பரிசாக வழங்கியர் – திருமுடிக்காரி

நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர் – ஆய் ஆண்டிரன்

92) எந்த இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் மிக உயர்ந்த நாகரீகத்துடன் வாழ்ந்தனர்?

A) மொகஞ்சதாரோ

B) ஹரப்பா

C) A மற்றும் B

D) எதுவுமில்லை

விளக்கம்: மொகஞ்சதாரே, ஹரப்பா போன்ற இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் மிக உயர்ந்த நாகரீகத்துடன் வாழ்ந்ததை அறியலாம். வடநாட்டு மொழிகள் பலவற்றிலும், தென்னாட்டு மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்களை இன்றும் காணமுடிகிறது.

93) தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை எனப் போற்றப்படுபவை எவை?

A) பாண்டியர் மற்றும் பல்லவர் எழுப்பிய கோயில்கள்

B) சோழர் எழுப்பிய கோயில்கள்

C) விஜயநகர மன்னர்கள் எழுப்பிய கோயில்கள்

D) அனைத்தும்

விளக்கம்: பாண்டிய, பல்லவ, சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலைகள் ஆகியவை பெரிதும் போற்றப்பட்டு கோவில்கள் எழுந்தன. இவையனைத்தும் தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை எனலாம். இதே அமைப்பில் வடஇந்தியாவில் பல கோயில்கள் எழுந்துள்ளன. தமிழகக் கலைப் பாரம்பரியம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

94) எவை பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன?

A) கோயில்கள்

B) பள்ளிகள்

C) குரு போதனை நடைபெறும் இடங்கள்

D) கிராம சபை கூட்டம்

விளக்கம்: மனிதனை விலங்கு நிலையிலிருந்து உயர்த்த கோயில்களில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. தமிழர் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகள் கோயில்களில் நடைபெற்றதால், கோயில்கள் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன.

95) ஆன்மா லயமாகுமிடங்காளத் திகழ்ந்தவை எவை?

A) கோயில்கள்

B) பள்ளிகள்

C) குரு போதனை நடைபெறும் இடங்கள்

D) கிராம சபை கூட்டம்

விளக்கம்: வயது என்பது உயிரோடு கூடிய உடலுக்கும் என்றும் ஆன்மாவிற்கு இல்லை என்றும், ஆன்மா தான் எதிலிருந்து வந்ததோ அதிலே சேர முயன்று வருதலை ‘லயமாகுதல்’ என்பர். இவ்விடங்கள் பெரும்பாலும் கோயில்களாவே இருந்தன. ஆதலால், கோயில்கள் ஆன்மா லயமாகுமிடங்களாகத் திகழ்கின்றன. எனவே கோயில்கள் ஆலயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

96) சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. கோயில்கள் நுண்கலைகள் வளருகின்றன இடமாகத் திகழ்கின்றன. மேலும், கோயில் திருமுறைகள் வளருமிடமாக இருந்தன.

2. தேவார, திருவாசகப் பாடல்கள் திருமால் கோயில்களிலும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் சமணக் கோயிலிலும் பாடப்பெற்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தேவார, திருவாசகப் பாடல்கள் சிவபெருமான் கோயில்களிலும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் திருமால் கோயிலிலும் பாடப்பெற்றன.

மேலும், மழை, புயல், வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்குப் புகலிடமாகவும், திருமணம் விழாக்கள் போன்றவை கோயில்களில் நடைபெற்றமையால் சமுதாய புகலிடமாகவும், ஊர்ப்பணி மன்றங்களாகவும் கோயில்கள் இருந்தன.

97) ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது யாருடைய வாக்கு?

A) நக்கீரர்

B) வள்ளுவர்

C) கபிலர்

D) ஒளவையார்

விளக்கம்: தமிழர் வாழ்வு கோயிலோடு இணைந்து அமைந்திருந்தது. ஒளவையார் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றார். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. கோயில்கள் வாயிலாக ஆன்மீகம் வளர்ந்து மக்களிடையே ஒற்றுமை ஓங்கி, மனித நேயம் மலரும் இடமாகத் திருக்கோயில்கள் திகழ்ந்தன.

98) தமிழர் வருங்காலச் சந்ததியனருக்கு விட்டுச் சென்றுள்;;ள மிகப் பெரிய பொக்கிஷம் எது?

A) ஓவியக்கலை நுணுக்கம்

B) இசைக்கலை நுணுக்கம்

C) நாட்டியக்கலை நுணுக்கம்

D) சிற்பக்கலை நுணுக்கம்

விளக்கம்: இறைவன், இறைவி, திருமேனிகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கோபுரங்களில் அமைக்கப்பட்ட கதை சிற்பங்கள், புராண, இதிகாசக் கதைக்காட்சிகளை விளக்கும் சிற்பங்கள், பஞ்ச உலோக சிலைகள் போன்றவை தமிழர் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றுள்ள மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும்.

99) மொழி தோன்றுவதற்கு முன்பே தோன்றிய கலை எது?

A) ஓவியக்கலை

B) இசைக்கலை

C) நாட்டிக்கலை

D) சிற்பக்கலை

விளக்கம்: மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியம் தோன்றியது எனலாம். ஓவிய எழுத்துக்கள் இன்றும் மொழி எழுத்துகளாகப் பயன்படுத்தப்படுவதை ஜப்பான், சீன மொழிகளில் காணலாம்

100) எந்த நூல் கூத்து வகைகள் பற்றி இயம்புகிறது?

A) சிலப்பதிகாரம்

B) சீவக சிந்தாமணி

C) மணிமேகலை

D) வளையாபதி

விளக்கம்: நாட்டியம் என்பது இசையோடு கூடிய கூத்து. சிலப்பதிகாரம் கூத்து வகைகள் பற்றி இயம்புகிறது. கட்புலனாகும் இன்பத்தைத் தருவது ஆடற்கலை. உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கும் வடிகால் ஆடலும், பாடலும் என்றால் மிகையாகாது. பண்டையக் காலத்தே ஆடல் நிகழ்வதற்கு அரங்குகள் இருந்தன ‘கை வழிக்கண்களும் கண்வழி மனமும் செல்ல ஆடுதலே’ ஆடலின் நுட்பமாகும்.

101) ஆடவல்ல நடனமகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

A) கூத்தன்

B) விறலி

C) நடனமகள்

D) ஏதுவுமில்லை

விளக்கம்: ஆடவல்ல நடனமகள் ‘விறலி’ என்றும் நடனமகன் ‘கூத்தன்’ என்றும் அழைக்கப்பட்டார்

102) பொருத்துக.

அ. வள்ளிக்கூத்து, குன்றக்குரவை – 1. சிவபெருமான்

ஆ. ஆய்ச்சியர் குரவை – 2. முருகன்

இ. குரவைக் கூத்து – 3. திருமால்

ஈ. தாண்டவம் – 4. பெண்கள் கைகோத்தாடுவது

A) 2, 3, 4, 1

B) 2, 4, 3, 1

C) 2, 1, 3, 4

D) 2, 1, 4, 3

விளக்கம்: வள்ளிக்கூத்து, குன்றக்குரவை – முருகன்

ஆய்ச்சியர் குரவை – திருமால்

குரவைக் கூத்து, துணுக்கைக் கூத்து, குணவைக் கூத்து – பெண்கள் கைகோத்தாடுவது

தாண்டவம் – சிவபெருமான் ஆடுகின்ற கூத்து

வைணவப் பெருமக்கள் திருமாலை கோபியருடன் ஆடும் கண்ணனாகப் போற்றினர்.

103) இந்தியப் பெருநாட்டிற்கு எந்த கலை ஒரு சிறந்த கொடை என்றால் மிகையாகாது?

A) குச்சிப்புடி

B) ஒடிசா

C) பரதம்

D) கதகளி

விளக்கம்: நடனக்கலைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக காலைத் தூக்கி நின்றாடும் நடராசர் திருமேனி விளங்குகிறது. இந்தியப் பெருநாட்டிற்கு தமிழகப் பரதக்கலை ஒரு சிறந்த கொடை என்றால் மிகையாகாது.

104) உயிர்த்தொழில் எனப்படுவது எது?

A) சுரங்கத்தொழில்

B) கட்மானத் தொழில்

C) உழவுத் தொழில்

D) உரத்தொழில்

விளக்கம்: தமிழ் மக்கள் உழைப்பபையே செல்வமாக கொண்டு வாழ்ந்தனர். திரை கடலோடியும் திரவியம் தேடியப் பெருவெள்ளம் பெருக்கினர். உயிர்த்தொழிலாம் உழவுத்தொழில் செய்து மகிழ்ந்தனர். பயிர் வளர்வதற்கும் மழைக்கும் காரணமாக சூரியனை வணங்கி பொங்கல் மகரசங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய பெருநாட்டிற்குத் தமிழரது வழிபாட்டு முறையே வழிகாட்டியாக இருந்தது. காவிரி ஆற்றுக்கு ஆடிமாதம் 18-ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடி நாடும் வீடும் சிறக்க அருளுமாறு வேண்டு வழிபடுகின்றனர்.

105) சிற்றில், சிறுபறை, சிறுதேர் போன்றவை யார் விளையாடும் விளையாட்டு?

A) ஆண்கள்

B) பெண்கள்

C) ஆண் குழந்தைகள்

D) பெண் குழந்தைகள்

விளக்கம்: மற்போர், விற்போரும் வீர விளையாட்டாகவே திகழ்ந்தன. பெண் குழந்தைகளுக்கு அம்மானை, ஊசல் போன்றவையும், ஆண் குழந்தைகளுக்கு சிற்றில், சிறுபறை, சிறுதேர் போன்றவை விளையாட்டாக இருந்தது. தமிழர் கூடிச் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் மூலம் ஒற்றுமையும், கூடி வாழும் ஆர்வமும் பெருகி நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் வளர்த்தது.

106) தமிழகத்தில் ‘ஜல்லிக்கட்டு’ எந்த நாளன்று கொண்டாடப்படுகிறது?

A) தை 1

B) தை 2

C) தை 3

D) தை 4

விளக்கம்: ஜல்லிக்கட்டு, சங்க காலத்தில் ‘ஏறுதழுவுதல்’ என்பர். அடக்கமுடியாத காளைகளை அடக்கிப் பரிசாகப் பெண்களை மணப்பர். பண்டைத் தமிழர்கள் இவ்விழாவே தற்போதும் காணும் பொங்கலன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டாக நடைபெறுகிறது.

107) இந்திரன் எந்நிலக் கடவுள்?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்

விளக்கம்:

குறிஞ்சி – முருகன்

முல்லை – திருமால்

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை

108) இந்திரவிழா சங்க காலத்தில் சிறந்திருந்தது என்பதை எதன் வாயிலாக அறியலாம்?

A) நெடுநல்வாடை

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம்

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: மருத நிலக்கடவுளான இந்திரரை வழிபட்ட மக்கள், இந்திரன் கேளிக்கைகளில் மகிழ்ந்திருப்பதைப் போலவே தாங்களும், மகிந்திருக்க விரும்பி, வசந்த காலத்தின் – முழு நிலா நாளை இந்திரா விழாவாகக் கொண்டாடி மகிழந்தனர். இந்நாளில் பொருள் படைத்தோர் உணவும், பொருளும் அளித்து மகிழ்வர். பல மேடைகளில் இசையும், கூத்தும் நடைபெறும். இவ்விழா சங்க காலத்தில் சிறந்திருந்தது என்பதை சிலப்பதிகாரம் வாயிலாக அறிகிறோம்.

109) உலகப்பொதுமறை எனப்படுவது எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

C) குரான்

D) பகவத்கீதை

விளக்கம்: உலகப்பொதுமறையாம் திருக்குறள் தமிழர்களின் முக்கிய நூல்களில் ஒன்றாகும்.

110) சித்த மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) தெலுங்கர்கள்

B) கன்னடர்கள்

C) மலையாளிகள்

D) தமிழர்கள்

விளக்கம்: சித்த மருத்துவம் என்னும் மூலிகை மருத்துவத்தை உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள்.

111) தமிழர்களின் பண்பட்ட உணர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?

A) இயல்

B) இசை

C) நாடகம்

D) தமிழ்

விளக்கம்: தமிழிசை தமிழர்களின் பண்பட்ட உணர்விற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்

112) தமிழர்களின் உணர்ச்சியொத்து பழகுதலே________என்றனர்.

A) அன்பு

B) உறவு

C) நட்பு

D) எதுவுமில்லை

விளக்கம்: பழந்தமிழ் நட்பினை உயிரினும் மேலானதாய் மதித்துப் போற்றினர். உணர்ச்சியொத்தது பழகுதலே நட்பு என்றனர். மேலும் தமிழர் காதல் என்னும் சொல்லை அன்பு செலுத்துதல் என்ற நிலைகளில் பயன்படுத்தினர்

113) தனது உடலிலிருந்து ஒரு முடி விழுந்தாலும், தன் உயிரை விடும் மான் வகை எது?

A) புள்ளிமான்

B) கொம்பு மான்

C) ஆப்பிரிக்க மான்

D) கவரிமான்

விளக்கம்: “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்” என்று தமிழர்கள் மானத்தை உயிரினும் மேலானதாக போற்றினர்.

114) தமிழரின் உயரிய ஒழுக்க நெறி எது?

A) கல்வி

B) வீரம்

C) கொடை

D) கற்பு

விளக்கம்: கடவுள் நெறிக்கு மேலானதாக பெண்கள் கற்பு நெறியில் வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றனர். இக்கற்புடைமையே தமிழரின் உயரிய ஒழுக்க நெறியாகும்

115) அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கியவர் யார்?

A) பேகன்

B) நள்ளி

C) அதியமான்

D) ஆய்

விளக்கம்: நீண்ட நாள் வாழ்வைத் தரும் அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு வழங்கிய பெருமைக்குரிய வள்ளல் அதியமான் ஆவார். இவரின் நாடு தகடூர். தகடூர் என்பது இன்றைய தர்மபுரியை குறிக்கும்.

116) தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான கலை எது?

A) இசை

B) ஓவியம்

C) பரதநாட்டியம்

D) சிறபக்கலை

விளக்கம்: தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான கலை பரத நாட்டியம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தற்போதும் சிறப்புற்று விளங்குகிறது. நாட்டிய கலைஞரின் முகப்பாவனையில் நவரகங்களைக் காணலாம் .

117) “ஹஸ்தம்” என்பதன் பொருள் என்ன?

A) கை

B) கால்

C) முகப்பாவனை

D) தலை

விளக்கம்: கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. பரத நாட்டியத்திற்கு ஒரு முக்கிய கூறான கை அசைவுகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தம் என அழைப்பர். இதை தமிழில் ‘முத்திரை’என்பர் .

118) பரதநாட்டியத்தில் அடவு, அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது எது?

A) ஒற்றைக்கை

B) இரட்டைக் கை

C) முத்திரைகள்

D) அனைத்தும்

விளக்கம்: பரதநாட்டியதில் அடவு, அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகளாகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளிலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயத்தையே கைமுத்தரை அல்லது ஹஸ்தம் எனலாம். பரதத்தில் அபிநயத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக் கை (இணையாக கை) , இரட்டைக் கை (இணைந்த கை) என இரண்டாக பயன்படுத்துகின்றனர். இவை தவிர அபூர்வ முத்திரைகளும் உண்டு.

நூற்றுக்கால் மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபங்கள், இசைத்தூண்கள் போன்றவை தமிழர்களின் கொடையாகும்.

119) சரியானதைத் தேர்வு செய்க.

கூற்று: ‘உலகம் என்பது, உயர்ந்தோர் மேற்றே’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

காரணம்: நல்ல வழிமுறைகளைப் பின்பற்றிப் பண்பாட்டில் சிறந்து விளங்குபவர்களே உயர்ந்தவர்கள்

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று சரி காரணம் சரி

C) கூற்று தவறு காரணம் சரி

D) கூற்று தவறு காரணம் தவறு

விளக்கம்: ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்கிறது தொல்காப்பியம். இங்கு உயர்ந்தோர் என்பது பய்பாடு உடையவர்களையே குறிக்கிறது.

120) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1. தொல்காப்பியம் கூறும் புறத்திணைகளின் எண்ணிக்கை 12

2. புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது புறத்திணை

3. மன்னர்களின் வீரம், கொடை, புகழ் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுவது வாகைத்திணை

4. பொருந்தாக் காதலைப் பெருந்திணை என்பர்

A) 2, 4 சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 1, 2, 3, 4 சரி

விளக்கம்: தொல்காப்பியம் கூறும் புறத்திணைகள் 7. மேலும், மன்னரின் வீரம், கொடை, புகழ் முதலியவற்றைச் சிறப்பித்துபாடுவது பாடாண் திணையாகும்.

121) சோழர்கால கிராம ஆட்சிமுறைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு எது?

A) மண்டகப்பட்டு

B) தளவானுர்

C) மாமண்டூர்

D) உத்திரமேரூர்

விளக்கம்: சோழர்காலக் கிராம ஆட்சிமுறைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது.

122) யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர்

A) பேகன்

B) பாரி

C) காரி

D) ஓரி

விளக்கம்: யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர் கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி ஆவார்.

123) மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர்?

A) நள்ளி

B) ஓரி

C) பாரி

D) பேகன்

விளக்கம்: மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர் நள்ளி ஆவார். இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!