டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் கட் ஆப் மதிப்பெண் என்ன?
வணக்கம் நண்பர்களே!
குரூப் 2 தேர்வின் கட் ஆப் மதிப்பெண் என்ன? இதுவரை எப்போதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கட் ஆப் மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளதா என்றால் இல்லை. தேர்வானவர்கள் பட்டியலைத்தான் வெளியிடுவார்கள். எனவே கட் ஆப் மதிப்பெண் என்பது நம்மால் உத்தேசமாக கணிக்கப்படும் மதிப்பெண். அது முந்தய தேர்வுகளின் அடிப்படையில் தனியார் தேர்வு மய்யங்களால் கணிக்கப்படுகிறது.
இந்தமுறை குரூப் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தது. பொது அறிவுப் பகுதி மிகவும் கடினமாக இருந்தது. இந்த தேர்வில் 150+ கேள்விகள் சரியாக விடையளித்திருந்தால் ஒரு சிறந்த முயற்சி எனலாம். கடந்த தேர்வுகளில் 160 கேள்விகள் சரியாக விடையளித்த நபர் 2000 ஒட்டுமொத்த தரத்தினை பெற்றிருந்தார்.
எனவே இந்த முறையும் அதேபோல் தான் இந்த கடினமான தேர்வில் தரவரிசை அமையும். எனவே 160+ கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் 2000 பேர் என வைத்துக்கொண்டால், 150 முதல் 160 கேள்விகள் வரை சரியாக விடையளித்தவர்கள் 10000 பேர் இருக்கலாம். 140 – 150 வரை கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர்கள் 20000 பேர் இருக்கலாம். 130 – 140 வரை கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர்கள் 20000 பேர் இருக்கலாம். இதை வைத்து பார்க்கும்போது, இந்த முறை அதிகமான காலிப்பணியிடங்கள் என்பதால், 50000 வரை மெய்ன்ஸ் தேர்வுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள். 135+ கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர்கள் கண்டிப்பாக மெய்ன்ஸ் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.