சிந்து வெளி நாகரிகம் 6th Social Science Lesson 3 Questions in Tamil
6th Social Science Lesson 3 Questions in Tamil
3. சிந்து வெளி நாகரிகம்
1) மக்கள் நதிக்கரையில் குடியேற காரணம் என்ன?
1) வளமான மண்
2) போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன
A. 1
B. 2
C. 1 & 2
D. அனைத்தும்
விளக்கம்: C. 1 & 2
ஆறுகளில் பாயும் தண்ணீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும் மற்றும் நீர் பாசனத்திற்கும் பயன்படுகிறது.
2) ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?
A. ஜான் மார்ஷல்
B. சார்லஸ் மேசன்
C. அலெக்சாண்டர் கன்னிங்காம்
D. ஜான் சார்லஸ்
விளக்கம்: B. சார்லஸ் மேசன்
இவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படை வீரரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பார்வையிட்டபோது, சில செங்கல் திட்டுக்கள் இருப்பதை கண்டறிந்தார்.
3) கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் எது?
A. பாழடைந்த செங்கற்கோட்டை
B. பாழடைந்த குகைக் கோயில்
C. பாழடைந்த பளிங்கு கோட்டை
D. பாழடைந்த மண் கோட்டை
விளக்கம்: A. பாழடைந்த செங்கற் கோட்டை
அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான கோபுரங்களுடனும், சுவர்களுடனும், ஒரு மலை மீது அமைந்துள்ளது என ஜான் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார். இதுவே ஹரப்பா இதற்கான முதல் ஆதாரமாகும்.
4) 1856 ல் எந்த இரண்டு நகரங்களுக்கிடையில் ரயில் பாதை அமைக்கும் போது சுட்ட செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
A. கன்னுஜ் மற்றும் குவாலியர்
B. பாட்னா மற்றும் உஜ்ஜெயின்
C. ஆக்ரா மற்றும் வாரணாசி
D. லாகூர் மற்றும் கராச்சி
விளக்கம்: D. லாகூர் மற்றும் கராச்சி
இந்த செங்கற்களின் முக்கியத்துவம் உணராமல் அவற்றை ரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்கு பதிலாக பயன்படுத்தினர். 1920 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.
5) நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
A. கிரேக்கம்
B. இலத்தீன்
C. ஆங்கிலம்
D. அரபு
விளக்கம்: B. இலத்தீன்
நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நகரம் ஆகும்.
6) கீழ்கண்டவற்றுள் தொல்லியலாளர்கள் புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்க எவற்றை பயன்படுத்துகின்றனர்?
1. காந்தப்புலம் வருடி
2. ரேடார் கருவி
3. பண்டைய இலக்கியங்கள்
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: D. அனைத்தும்
மேலும் வான்வழி புகைப்படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பை கண்டறிந்து கொள்கிறார்கள். நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை பயன்படுத்துகின்றனர். எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் கண்டறிகின்றனர்.
7) 1924 ல் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தவர் யார்?
A. ஜான் மார்ஷல்
B. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
C. சார்லஸ் ஆலன்
D. சார்லஸ் மேசன்
விளக்கம்: A. ஜான் மார்ஷல்
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் ஆவார். இந்த இரண்டு நகரங்களும் ஒரு பெரிய நாகரிகத்தை சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.
8) கீழ்க்கண்டவற்றுள் மிகப் பழமையான நாகரீகம் எது?
1. ஹரப்பா 2. மொகஞ்சதாரோ
A. 1
B. 2
C. 1 & 2
D. எதுவும் இல்லை
விளக்கம்: A. 1
ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களுக்கு இடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விட பழமையானது என முடிவுக்கு வருகின்றனர்.
9) எந்த ஆண்டில் இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது?
A. 1845
B. 1896
C. 1861
D. 1876
விளக்கம்: C. 1861
1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.
10) கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
1. தோலாவிரா – குஜராத்
2. லோத்தல் – குஜராத்
3. காலிபங்கன் – பாகிஸ்தான்
A. 1
B. 2
C. 3
D. எதுவும் இல்லை
விளக்கம்: C. 3
மேலும் கோட்டிஜி, அம்ரி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ – பாகிஸ்தான், காலிபங்கன்- ராஜஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
11) கீழ்கண்டவற்றுள் ஹரப்பன் நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதற்கான காரணங்கள் யாவை?
1. விவசாயம் மற்றும் கைவினை தொழில்களுக்கான திடமான அடித்தளம்
2. தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
3. சிறப்பான கட்டிடக் கலை வேலைப்பாடு
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: D. அனைத்தும்
மேலும் சிறப்பான நகரத் திட்டமிடல், தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவையும் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என அறியப்பட காரணமாக இருந்தது.
12) சிந்துவெளி நாகரிகத்தில் நகரத்தின் மேற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. பெருங்குளம்
B. தானியக் களஞ்சியம்
C. கோட்டை
D. பொதுமக்கள் வசிக்கும் இடம்
விளக்கம்: C. கோட்டை
ஹரப்பா நகரின் திட்டமிடப்பட்ட மேல் நகர அமைப்பில் நகரத்தின் மேற்குப் பகுதி சற்று உயரமானது. அது கோட்டை எனப்பட்டது. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர். மேலும் பெருங்குளமும் தானியக் களஞ்சியங்களும் காணப்பட்டன.
13) ஹரப்பா நகரில் பொது மக்கள் வசிக்கும் இடம் எது?
A. கோட்டை
B. மேல் நகர அமைப்பு
C. மைய நகர அமைப்பு
D. கீழ் நகர அமைப்பு
விளக்கம்: D. கீழ் நகர அமைப்பு
ஹரப்பா நகரின் திட்டமிடப்பட்ட இரண்டு பகுதிகளில் கீழ் நகர அமைப்பு மக்கள் வசிக்கும் இடமாக இருந்தது. இது நகரத்தின் கிழக்குப் பகுதியாக இருந்தது. சற்று தாழ்ந்த உயரமுடையது. அதிக பரப்பு கொண்டதாக இருந்தது.
14) மெஹெர்கர் எந்த கால மக்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது?
A. பழைய கற்காலம்
B. புதிய கற்காலம்
C. இடைக் கற்காலம்
D. செம்பு காலம்
விளக்கம்: B. புதிய கற்காலம்
இது சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடி என்று அறியப்படுகிறது. பொ.ஆ.மு 7000 ஒட்டிய காலத்திலேயே மெஹர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
15) மெஹெர்கர் எந்த ஆற்று பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
A. போலன்
B. கைபர்
C. டூன்
D. சம்பல்
விளக்கம்: A. போலன்
இது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது தொடக்க கால மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று. மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று இங்கு கிடைத்துள்ளது.
16) ஹரப்பா நாகரீக தெருக்கள் எந்த வடிவமைப்பை கொண்டிருந்தன?
A. சட்டகம்
B. முக்கோணம்
C. சதுரம்
D. வட்டம்
விளக்கம்: A. சட்டகம்
மேலும் தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
17) கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகத்தின் தனித்தன்மை எது?
1. வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.
2. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும் குளியலறையும் இருந்தன.
3. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை கொண்டவையாக இருந்தன.
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: D. அனைத்தும்
மேலும் சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளை கொண்டதாகவும் இருந்தன. கூரைகள் சமதளமாக இருந்தன. வீடுகள் தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன.
18) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1. கட்டடங்கள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்துவதற்கான காரணம் அவை நீரில் கரைவதில்லை.
2. ஹரப்பா நாகரீகத்தில் ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு காணப்பட்டது.
A. 1
B. 2
C. 1 & 2
D. எதுவும் இல்லை
விளக்கம்: C. 1 & 2
சுட்ட செங்கற்கள் வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை. நெருப்பை கூட தாங்குபவை. வடிகால்கள் செங்கற்களை கொண்டும் கல் தட்டைகளை கொண்டும் மூடப்பட்டிருந்தன.
19) ஹரப்பாவின் பெருங்குளம் எந்த வடிவத்தில் அமைந்திருந்தது?
A. சதுரம்
B. செவ்வகம்
C. சாய்சதுரம்
D. வட்டம்
விளக்கம்: B. செவ்வகம்
இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இதை நீர் கசியாத கட்டுமானத்திற்கான மிகப் பழமையான சான்று எனலாம். சுவர்கள் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டிருந்தது. வடபுறத்தில் இருந்தும் தென்புறத்தில் இருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
20) குளத்தில் பக்கவாட்டில் எத்தனை புறத்தில் அறைகள் அமைந்திருந்தன?
A. 1
B. 2
C. 3
D. 4
விளக்கம்: C. 3
குளத்தின் அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டு பெரியகுளத்தில் விடப்பட்டது. உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.
21) கீழ்கண்ட எந்த இடத்தில் தானியக்களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A. காலிபங்கன்
B. லோத்தல்
C. ராகிகர்கி
D. அம்ரி
விளக்கம்: C. ராகிகர்கி
செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
22) மொகஞ்சதாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரிய பொது கட்டிடமான கூட்ட அரங்கு எத்தனை தூண்களை கொண்டிருந்தது?
A. 10
B. 20
C. 30
D. 40
விளக்கம்: B. 20
மேலும் இதை நான்கு வரிசைகளைக் கொண்ட ஒரு பரந்து விரிந்த கூடம் ஆகும்.
23) சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட அரசன் நாரம்- சின் சிந்துவெளிப் பகுதியில் உள்ள _____ என்னும் இடத்திலிருந்து அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்?
A. ஹரப்பா
B. மொஹஞ்சதாரோ
C. மெலுக்கா
D. அம்ரி
விளக்கம்: C. மெலுக்கா
மேலும் இக்காலத்தில் மெசபடோமியா உடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது.
24) கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகத்தின் வணிகம் மற்றும் போக்குவரத்து பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1. ஹரப்பா மக்கள் பெரு வணிகர்களாக இருந்தனர்.
2. தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகளை பயன்படுத்தினர்.
3. சக்கர வண்டிகளை பயன்படுத்தினர்.
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: D. அனைத்தும்
பொருட்களின் நேரத்தை அளவிட, அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளை பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத திடமான சக்கரங்களை பயன்படுத்தினர்.
25) சிந்துவெளியின் எந்த பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?
A. லோத்தல்
B. காலிபங்கன்
C. அம்ரி
D. கோட் டிஜி
விளக்கம்: A. லோத்தல்
மேலும் பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகிறது. இதை இந்த இரு பகுதிகளிலும் வணிகம் நடந்ததை காட்டுகிறது.
26) அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை சிந்து வெளிப் பகுதியின் எந்த பகுதியில் காணப்படுகிறது?
A. ஹரப்பா
B. லோத்தல்
C. மொஹஞ்சதாரோ
D. காலிபங்கன்
விளக்கம்: C. மொஹஞ்சதாரோ
அது நெற்றியில் ஒரு தலை பட்டையுடனும் வலது கை மேல் பகுதியில் ஒரு சிறிய அணிகலனுடனும் காணப்படுகிறது. அதன் தலை முடியும் தாடியும் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்படுகிறது.
27) சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட அமர்ந்த நிலையில் உள்ள ஆண் சிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1. காதுகளின் கீழ் இரு துளைகள் காணப்படுகிறது.
2. வலது தோள் மேல் அங்கியால் மூடப்பட்டுள்ளது.
A. 1
B. 2
C. 1 & 2
D. எதுவும் இல்லை
விளக்கம்: A. 1
காதுகளின் கீழ் காணப்படும் இரண்டு துளைகள் தலையில் அணியப்படும் அணிகலன்கள் காதுவரை இணைக்க ஏற்படுத்தபட்டிருக்கலாம். எனது தோல் பூக்களாலும் வளையல்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலங்கியால் மூடப்பட்டிருந்தது. இது போன்ற வடிவமைப்பு அப்பகுதியில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுவது இன்றளவும் குறிப்பிடத்தக்கது.
28) குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட _____ அளவுகோல் 1704 மி.மீ வரை சிறிய அளவீடுகளை கொண்டிருந்தது?
A. தங்கம்
B. தகரம்
C. செம்பு
D. தந்தம்
விளக்கம்: D. தந்தம்
சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கினர். அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிக சிறிய பிரிவு ஆகும்.
29) மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
A. செம்பு
B. இரும்பு
C. தங்கம்
D. வெண்கலம்
விளக்கம்: A. செம்பு
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு ஆகும்.
30) மொஹஞ்சதாரோவில் _____ ஆல் ஆன சிறிய பெண்சிலை கிடைத்தது.
A. இரும்பு
B. வெண்கலம்
C. செம்பு
D. வெள்ளி
விளக்கம்: B. வெண்கலம்
இது நடனமாது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சிலையை பார்த்த சர் ஜான் மார்ஷல் முதலில் இந்த சிலையை பார்த்த பொழுது இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையை சார்ந்தது என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இது போன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். இச் சிலைகளை அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன என்றார்.
31) காவிரி வாலா என்ற தமிழ் பெயரால் அழைக்கப்படும் ஆறு எங்கு காணப்படுகிறது?
A. ஆப்கானிஸ்தான்
B. பர்மா
C. பாகிஸ்தான்
D. சீனா
விளக்கம்: C. பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்திரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்ககால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பொருனை ஆகிய பெயர்கள் தமிழ் சொற்களை முழுமையாக பிரதிபலிக்கின்றன.
32) சிந்துவெளி மக்கள் எதனால் ஆன உடையை பயன்படுத்தினர்?
1. பருத்தி 2. கம்பளி 3. பட்டு
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: A. 1 & 2
பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நூலை சுற்றி வைப்பதற்கான சூழல் அச்சுகள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது. கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
33) சிந்துவெளி நாகரிகம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1. அவர்களிடம் படை இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.
2. ஆண் பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர்.
A. 1
B. 2
C. 1 & 2
D. எதுவும் இல்லை
விளக்கம்: C. 1 & 2
சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் அவர்களிடம் படை இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் சில ஆயுதங்கள் மட்டுமே அங்கிருந்து கிடைத்துள்ளன. கழுத்தணிகள், கை அணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர்.
34) சிந்துவெளி நாகரிகம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1. சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது.
2. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிறக் கற்களை பயன்படுத்தினர்.
A. 1
B. 2
C. 1 & 2
D. எதுவும் இல்லை
விளக்கம்: C. 1 & 2
தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.
35) சிந்துவெளி நாகரீகத்தில் மண்பாண்டங்கள் எந்த நிறத்தில் இருந்தன?
A. சிவப்பு
B. கருப்பு
C. பச்சை
D. நீலம்
விளக்கம்: A. சிவப்பு
மண்பாண்டங்கள் சக்கரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. அவை தீயிலிட்டு சுடப்பட்டன. அங்கு கிடைத்த உடைந்த பானை துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடனும், வடிவியல் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
36) சிந்துவெளி மக்களைப் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1. சிந்துவெளி மக்களிடையே தாய் வழிபாடு இருந்திருக்கலாம்.
2. கால்நடை வளர்ப்பு அவர்களுக்கு தொழிலாக இருந்தது.
3. அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்துள்ளனர்.
A. 1 & 2
B. 2 & 3
C. 1 & 3
D. அனைத்தும்
விளக்கம்: D. அனைத்தும்
சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி எதுவும் தெரியவில்லை. எனினும் வேளாண்மை, கைவினைப் பொருட்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். சிந்துவெளி மக்களின் வழிபாடு மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அங்கு கிடைக்கப்பெற்ற பெண் சிலைகள் மூலம் சிந்துவெளி மக்களிடையே தாய் வழிபாடு இருந்திருக்கலாம் என தெரிகிறது.
37) ஹரப்பா நாகரீகம் எந்த ஆண்டு முதல் சரிய தொடங்கியது?
A. பொ.ஆ.மு 1900
B. பொ.ஆ.மு 1850
C. பொ.ஆ.மு 1800
D. பொ.ஆ.மு 1750
விளக்கம்: A. பொ.ஆ.மு 1900
அதற்கு அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுற்றுச் சூழல் மாற்றம், அந்நியர் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அளித்தல் மற்றும் தொற்று நோய் தாக்குதல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.
38) உலகின் பழமையான 4 நாகரீகங்களில் மிகப் பெரிய பரப்பளவு கொண்டது எது?
A. சீன நாகரிகம்
B. மெசபடோமிய நாகரீகம்
C. எகிப்து நாகரிகம்
D. சிந்துவெளி நாகரிகம்
விளக்கம்: D. சிந்துவெளி நாகரிகம்
மேலும் இது உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்களை கொண்டிருந்தது. இங்கு மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகாலமைப்பு காணப்பட்டதுடன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உணர்வு மேலோங்கி இருந்தது.
39) முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
A. எகிப்தியர்கள்
B. சுமேரியர்கள்
C. கிரேக்கர்கள்
D. சீனர்கள்
விளக்கம்: B. சுமேரியர்கள்
மொஹஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
40) பொருத்துக.
1. குஃபு மன்னன் – அபு சிம்பல்
2. ஊர் நம்மு – கிசே பிரமிடு
3. இரண்டாம் ராமெசிஸ் – ஜிகரட்
A. 1 2 3
B. 2 3 1
C. 3 1 2
D. 3 2 1
விளக்கம்: B. 2 3 1
பொ.ஆ.மு 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பு கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு ஒவ்வொன்றும் 15 டன் எடையுடையது. மெசபடோமியா ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் ஜிகரட். அபு சிம்பல் என்பது எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் உள்ள இடம் ஆகும்.
41) பொருத்துக.
1. மேற்கு – பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரை வரை
2. கிழக்கு – காகர் – ஹாக்ரா நதி பள்ளத்தாக்கு வரை
3. வடகிழக்கு – ஆப்கானிஸ்தான்
4. தெற்கு – மகாராஷ்டிரா
A. 1 2 3 4
B. 2 3 4 1
C. 4 1 3 2
D. 3 4 2 1
விளக்கம்: A. 1 2 3 4
சிந்துவெளி நாகரிகம் மேற்கண்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டிருந்தது.