சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 2 Pdf Questions With Answers
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு – Tamil Literature from Sangam age till Contemporary times Part 2 Pdf Questions With Answers
1. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடனே” என்ற அடி இடம் பெற்ற நூல்
(அ) பதிற்றுப்பத்து (ஆ) பரிபாடல் (இ) பட்டினப்பாலை (ஈ) புறநானூறு
விளக்கம்:
புறநானூற்றில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை இயற்றியவர் பொன்முடியார்.
2. “குறுந்தொகை” என்ற நூலைத் தொகுத்தவர்
(அ) கூடலூர்க் கிழார் (ஆ)உருத்திரசன்மர் (இ) பூரிக்கோ (ஈ) பெருந்தேவனார்
விளக்கம்:
குறுந்தொகை என்ற தொகை நூலைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ. இத்தொகை நூலைப் பாடியோர் இரு நூற்றவைர். கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
3. “செல்வத்துப் பயனே ஈதல்” எனப் பாடியவர்
(அ) திருவள்ளுவர் (ஆ) நக்கீரனார் (இ) கபிலர் (ஈ) ஒளவையார்
விளக்கம்:
புறநானூறு
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உLப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஓக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – நக்கீரனார்
பொருள்: இவ்வுலகம், தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டது. இவ்வுலகம் முழுவதனையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடிவீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும். உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே; உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் இரண்டே. மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே, ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றித் தாமே நுகர்வோம் என எண்ணினால், பலவற்றை அவன் இழக்க நேரிடும்
4. பின்வருவனவற்றுள் எவை இணையில்லை?
(அ) முதல் கலம்பகம்-நந்திக் கலம்பகம்
(ஆ) முதல் பரணி-தக்கயாகப்பரணி
(இ) முதல் நாவல்-பிரதாப முதலியார் சரித்திரம்
(ஈ) முதல் உலா-திருக்கையிலாய ஞான உலா
விளக்கம்:
முதல் பரணி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி ஆகும்.
5. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி” – எனத் தமிழினத்தின் தென்மையைப் பற்றிக் கூறும் நூலின் பெயர்
(அ) புறநானூறு (ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
(இ) பதிற்றுப்பத்து (ஈ) தொல்காப்பியம்
6. பொருந்தாத பெயரைச் சுட்டுக:
(அ) பிங்கலம் (ஆ) திவாகரம் (இ) சூளாமணி (ஈ) சூடாமணி
விளக்கம்:
சூளாமணி – ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. ஏனைய மூன்றும் நிகண்டு வகை நூல்களாகும். “நிகண்டு” என்பது சொற்பொருள் விளக்கம் தரும் அகராதியாகும்
7. “குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர் தூங்கும் பரப்பின தாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப் பந்தர் வந்தணைந்தார்” – “இப்பாடலுக்குரிய கதாநாயகன்”
(அ) திருநாவுக்கரசர் (ஆ) ஞானசம்பந்தர் (இ) சுந்தரர் (ஈ) மணிவாசகர்
விளக்கம்:
பெரியபுராணம்-அப்பூதியடிகள் புராணம்
“அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உ ளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக்
குளம்நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்த்தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்
– சேக்கிழார்
பொருள்: அளவற்ற மக்கள் நடந்து செல்லும் வழியில், கோடையின் மிகுந்த வெப்பத்தினைப் போக்கியருளும் கருணைமிக்க பெரியோர் உள்ளம் போன்றும் நீர்த்தடாகம் போன்றும் அமைக்கப்ப பெற்ற குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்ப்பந்தல் அருகே திருநாவுக்கரசர் வந்து சேர்ந்தார்.
8. கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று A : கருப்பொருள்களுள் ஒன்று “பறை” ஆகும்.
காரணம் R : குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “தொண்டகப்பறையையும்” முல்லை நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “மணமுழாபறையையும்” குறிப்பிடுகிறது அகப்பொருள்.
(அ) கூற்று A தவறு. விளக்கம் R சரி (ஆ) கூற்று சரி. விளக்கம் R தவறு
(இ) விளக்கம் R தவறு. கூற்று A தவறு (ஈ) விளக்கம் R சரி. கூற்று A சரி.
விளக்கம்:
குறிஞ்சி நிலத்தின் பறை-தொண்டகப்பறை.
முல்லை நிலத்தின் பறை-ஏறுங்கோட்டுப்பறை.
மருதநிலத்தன் பறை-நெல்லரிக்கிணை, மணமுழவு.
நெய்தல் நிலத்தின் பறை-மீன்கோட்பறை.
பாலை நிலத்தின் பறை-துடி
9. “மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே” – இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்
(அ) சிலப்பதிகாரம் (ஆ) குண்டலகேசி (இ) மணிமேகலை (ஈ) வளையாபதி
விளக்கம்:
மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை அறவண அடிகளின்
கூற்று:
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே.
பொருள்: மூவுலகிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத் தொகுதி, பேய் என்னும் அறுவகைத்தாகும்.
10. “கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”
– இச்செய்யுளடிகளில் “இறைஞ்சினான்” – யார்?
(அ) சுக்ரீவன் (ஆ) குகன் (இ) இலக்குவன் (ஈ) அனுமன்
விளக்கம்:
கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம்.
குகப்படலம்
“கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”
பொருள்: இராமன் குகனை அழைக்கும் முன்னர், இளையனாகிய இலக்குவன் அவனை நெருங்கி “யார் நீ” என வினவினான். “இறைஞ்சினான்” என்பது குகனைக் குறிக்கிறது.
11. சரியானவற்றைத் தேர்க:
உரிபொருள் திணை
1. ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்
2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் முல்லை
3. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல்
4. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் பாலை
(அ) 1, 2ம் சரி (ஆ) 2, 3ம் சரி (இ) 1,3ம் சரி (ஈ) 3,4ம் சரி
விளக்கம்:
நிலம் உரிப்பொருள்
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் இரங்கல் இரங்கல் நிமித்தமும்
பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
12. சரியானவற்றைத் தேர்க:
தெய்வம் திணை
1. முருகன் குறிஞ்சி
2. இந்திரன் மருதம்
3. துர்க்கை நெய்தல்
4. திருமால் பாலை
(அ) 2,3ம் சரி (ஆ) 1,2ம் சரி (இ) 2,4ம் சரி (ஈ) 1,4ம் சரி
விளக்கம்:
நிலம் தெய்வம்
குறிஞ்சி முருகன் (சேயோன்)
முல்லை திருமால் (மாயோன்)
மருதம் இந்திரன்
நெய்தல் வருணன்
பாலை துர்க்கை
13. பின்வருவனவற்றுள் எது பொருந்தாதது?
(அ) நாககுமார காவியம் (ஆ) உதயண குமார காவியம்
(இ) குண்டலகேசி (ஈ) நீலகேசி
விளக்கம்:
குண்டலகேசி-ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். ஏனைய மூன்றும் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.
14. “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும்உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்” – எனத் தமிழின் பழஞ் சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பாடிய கவிஞர்
(அ) பாரதியார் (ஆ) கண்ணதாசன் (இ) சுரதா (ஈ) பாரதிதாசன்
15. கண்ணகி எனும் சொல்லின் பொருள்
(அ) கடும் சொற்களைப் பேசுபவள் (ஆ) கண் தானம் செய்தவள்
(இ) கண்களால் நகுபவள் (ஈ) கண் தானம் பெற்றவள்
விளக்கம்:
கண்களால் சிரிப்பவள் (நகுபவள்) என்னும் பொருள்படும் பெயரே கண்ணகியாகும். கண்+நகி
நிலைமொழியின் ஈற்றில் “ண” கர ஒற்று (ண்) வந்து வருமொழி முதலில் “ந”கரம் வந்தால் அது “ண”கரமாகத் திரியும். கண்+ணகி- கண்ணகி
16. பகுதி I உடன் பகுதி IIஐப் பொருத்துக:
பகுதி I பகுதி II
(அ) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(ஆ) முல்லை 2. கிழங்கழ்தல்
(இ) மருதம் 3. உப்பு விற்றல்
(ஈ) நெய்தல் 4. வரகு விதைத்தல்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 2 4
(இ) 3 2 4 1
(ஈ) 4 3 2 1
விளக்கம்:
குறிஞ்சி-கிழங்கு அகழ்தல் (மலை).
முல்லை-வரகு விதைத்தல் (காடு).
மருதம்-நெல்லரிதல் (வயல்).
நெய்தல்-உப்பு, விற்றல் (கடல்)
17. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
(அ) பள்ளு (ஆ) தூது (இ) கலம்பகம் (ஈ) அந்தாதி
விளக்கம்:
“பயிறங் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” – என்று இலக்கண விளக்க நூற்பா, தூதின் இலக்கணம் கூறுகிறது. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் தூது இலக்கியம் பாடப் பெற வேண்டும்
18. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
(அ) 9 (ஆ) 7 (இ) 10 (ஈ) 133
விளக்கம்:
திருக்குறள் “ஏழு” சீர்களால் அமைந்த குறள் வெண்பாக்களை உடையது. “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது. அதிகாரங்கள் 133🡪1+3+3=7. குறட்பாக்கள் 1330🡪1+3+3+0=7.
19. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
(அ) குறிஞ்சிப்பாட்டு (ஆ) முல்லைப்பாட்டு (இ) கலிப்பாடல் (ஈ) பரிபாடல்
விளக்கம்:
குறிஞ்சிப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது. இந்நூலில் செங்காந்தள் தொடங்கி மலை எருக்கம்பூ வரை 99 பூக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
20. குமரகுருபரர் எழுதாத நூல்
(அ) கந்தர் கலிவெண்பா (ஆ) மதுரைக்கலம்பகம்
(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (ஈ) நீதிநெறிவிளக்கம்
விளக்கம்:
திருச்செந்தூர் முருகுன் பிள்ளைத்தமிழ் – பகழிக் கூத்தரால் 15-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
21. “சீர்திருத்தக் காப்பியம்” என்று பாராட்டப்படுவது
(அ) சிலப்பதிகாரம் (ஆ) மணிமேகலை (இ) வளையாபதி (ஈ) குண்டலகேசி
22. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
(அ) நற்றிணை, கலித்தொகை (ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
(இ) குறுந்தொகை, ஐங்குநுறூறு (ஈ) பரிபாடல், மலைபடுகடாம்
விளக்கம்:
பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள். பட்டினப்பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணப்படுகின்றன. ஏற்றுமதியான பொருட்கள்: இரத்தினம், வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலானவை.இறக்குமதியான பொருட்கள்: சீனத்துப் பட்டு, சர்க்கரை முதலானவை. அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு பயிர் செய்யப்பட்டது.
23. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
(அ) பெருங்கதை (ஆ) குண்டலகேசி (இ) நாககுமார காவியம் (ஈ) மணிமேகலை
விளக்கம்:
மணிமேகலையில், கதமதியின் தந்தையின் சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரி செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
24. பொருத்துக:
(அ) நான்மணிமாலை 1. கவிதை
(ஆ) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(இ) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(ஈ) தேம்பாவணி 4. நீதிநூல்
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 3 2 1 4
(இ) 2 3 1 4
(ஈ) 3 4 2 1
விளக்கம்:
நான்மணிமாலை-96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. மலரும் மாலையும்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களின் கவிதை நூலாகும். நான்மணிக்கடிகை-பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள 11 நீதி நூல்களுள் ஒன்றாகும். தேம்பாவணி-காப்பிய வகை நூலாகும்.
25. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
(அ) சுதமதி (ஆ) மணிமேகலை (இ) ஆதிரை (ஈ) காயசண்டிகை
விளக்கம்:
காயசண்டிகை பசிநோய் சாபம் பெற்றவள். அவள் சாபம் மணிமேகலையால் நீங்குகிறது. மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்தில் கற்புக்கரசியான ஆதிரை தான் முதன் முதலில் பிச்சையிட்டாள். ஆதிரையிடம் முதன்முதலில் பிச்சையேற்குமாறு மணிமேகலையிடம் காயசண்டிகைதான் கூறுகிறாள். மணிமேகலையின் தோழி கதமதி.
26. “சதகம்” என்பது ——— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
(அ) ஐம்பது (ஆ) நூறு (இ) ஆயிரம் (ஈ) பத்தாயிரம்
27. “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்—” – இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
(அ) சொல்லின் நாயகன் (ஆ) சொல்லின் தலைவன்
(இ) சொல்லின் புலவன் (ஈ) சொல்லின் செல்வன்
28. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” – இவ்வடியைப் பாடியவர்
(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கவிமணி (ஈ) சுரதா
விளக்கம்:
வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்த வற்றுள்
பொல்லாத தில்லை புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
சொல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பானுக்கிந் நிலத்தே
29. பொருத்தமான விடையை எழுதுக: “துன்பதையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”
(அ) அந்தகக் கவி (ஆ) இராமச்சந்திர கவிராயர்
(இ) திருவள்ளுவர் (ஈ) உடுமலை நாராயணக்கவி
30. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – என்று கூறியவர்
(அ) ஒக்கூர் மாசாத்தியார் (ஆ) பொன்முடியார்
(இ) காவற்பெண்டு (ஈ) ஒளவையார்
விளக்கம்:
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல்
கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. – புறநானூறு-312ஆவது பாடல். ஆசிரியர்-பொன்முடியார்
31. அழுது அடியடைந்த அன்பர் ——
(அ) மாணிக்கவாசகர் (ஆ) வாகீசர் (இ) சரபேசர் (ஈ மதுரேசர்
விளக்கம்:
மாணிக்கவாசகர், இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். அதனால் இவரை ‘அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
32. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
(அ) சேர, சோழ, பாண்டியர் (ஆ) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
(இ) முகமதியார், ஆங்கிலேயர், மராட்டியர் (ஈ) குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
விளக்கம்:
முத்தொள்ளாயிரம்: இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது. ஆயினும் 130 பாடல்களே கிடைத்துள்ளன.
33. “மணிமேகலை வெண்பா”வின் ஆசிரியர் யார்?
(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) திரு.வி.க (ஈ) கவிமணி
விளக்கம்:
“மணிமேகலை வெண்பா” என்ற நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்.
34. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(அ) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(ஆ) திவ்வியகவி 2. வாணிதாசன்
(இ) கவிஞரேறு 3. பாரதியார்
(ஈ) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 4 2
(இ) 3 4 2 1
(ஈ) 4 3 2 1
35. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ———-
(அ) திருமங்கையாழ்வார் (ஆ) திருமழிசையாழ்வார்
(இ) குலசேகராழ்வார் (ஈ) நம்மாழ்வார்
விளக்கம்:
குலசேகர ஆழ்வார்: இவர் சேர நாட்டில் திருவஞ்சைக்களத்தில் மன்னர் குலத்தில் தோன்றியவர். இவர் தமிழ். வடமொழி இரண்டிலும் வல்லவர். வடமொழியில் “முகுந்தமாலை” என்னும் நூலினைப் படைத்துள்ளார். தமிழில் இவர் எழுதிய பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என அழைக்கப்படுகிறது. அவை மொத்தம் 105 பாடல்களாகும்.
36. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(அ) மணிமேகலை (ஆ) சிலப்பதிகாரம் (இ) சீவகசிந்தாமணி (ஈ) பெரியபுரணம்
விளக்கம்:
“ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க!
அடியில் தன்அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்ககத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் – 15வது பாடல்
37. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
(இ) சிவப்பிரகாசம் (ஈ) மணிவாசகர்
விளக்கம்:
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
38. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–
(அ) மகள் (ஆ) மகன் (இ) பெண் (ஈ) ஆண்
விளக்கம்:
மகடூஉ-பெண்
39. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர்
(அ) பாரதியார் (ஆ) சுரதா (இ) பாரதிதாசன் (ஈ) வாணிதாசன்
40. “ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” – இதனைப் பாடிய கவிஞர் யார்?
(அ) ந.பிச்சமூர்த்தி (ஆ) வல்லிக்கண்ணன்
(இ) புதுமைப்பித்தன் (ஈ) சி.சு.செல்லப்பா
41. “கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்” யாவர்?
(அ)இரட்டையர் (ஆ) சமணர் (இ) பரணர் (ஈ) பௌத்தர்
விளக்கம்:
திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் போன்ற நூல்களை இயற்றியவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான இரட்டையர்கள் ஆவர். அவர்களின் பெயர் இளஞ்சூரியர்-முதுசூரியர் ஆவர். இவர்களது காலம் 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும் மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் சிலேடையாகப் பாடுவதிலும் வல்லவர்கள்.
42. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
(அ) இரட்சணிய யாத்திரிகம் (ஆ) இரட்சணிய மனோகரம்
(இ) இரட்சணிய குறள் (ஈ) இரட்சணிய சரிதம்
விளக்கம்:
இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் உயிர், தன்னைக் காக்க வேண்டி, இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பதாகும்.
43. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
(அ) கல்யாண சுந்தரம் (ஆ) பாரதிதாசன் (இ) முடியரசன் (ஈ) தமிழ்ஒளி
44. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.
(அ) பரிதிமாற் கலைஞர் (ஆ) நாமக்கல் கவிஞர்
(இ) பாரதியார் (ஈ) பாரதிதாசன்
45. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
(அ) சைவரால் இயற்றப்பட்டன (ஆ) வைணவரால் இயற்றப்பட்டன
(இ) சமணரால் இயற்றப்பட்டன (ஈ) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
விளக்கம்:
ஐஞ்சிறு காப்பியங்கள்
சூளாமணி-தோலாமொழித்தேவர்.
நீலகேசி-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
உதயணகுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
நாககுமார காவியம்-ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
யசோதர காவியம்- ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
ஐந்து காப்பியங்களும் சமண சமயச் சார்புடையவை.
46. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ——- நூலின் புகழ்மிக்க தொடர்
(அ) திருமந்திரம் (ஆ) திருவாசகம் (இ) திருக்குறள் (ஈ) தேம்பாவணி
47. மருத நிலத்திற்குரிய தெய்வம்
(அ) இந்திரன் (ஆ) முருகன் (இ) திருமால் (ஈ) வருணன்
விளக்கம்:
நிலம் தெய்வம்
மருதம் இந்திரன்
குறிஞ்சி முருகன்
முல்லை திருமால்
நெய்தல் வருணன்
48. “தாண்டக வேந்தர்” என அழைக்கப்படுபவர் யார்?
(அ) சுந்தரர் (ஆ) திருநாவுக்கரசர் (இ) மாணிக்க வாசகர் (ஈ) திருஞான சம்பந்தர்
விளக்கம்:
“தாண்டகம்” என்ற விருத்த வகையை பாடியமையால் திருநாவுக்கரசர் “தாண்டகவேந்தர்” எனும் பெயர் பெற்றார்.
49. “சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர்
(அ) உமறுப் புலவர் (ஆ) குணங்குடி மஸ்தான்
(இ) பனு அகமது மரைக்காயர் (ஈ) அப்துல் ரகுமான்
விளக்கம்:
சீறாப்புரணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாக பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய வாழ்வு முழுமையும் பாடி முடித்தார். “அந்நூல் சின்னச்சீறா” என அழைக்கப்படுகிறது.
50. “ஆ” முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
(அ) குறிஞ்சி (ஆ) முல்லை (இ) நெய்தல் (ஈ) மருதம்