கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் 12th Geography Lesson 5 Questions in Tamil
12th Geography Lesson 5 Questions in Tamil
5] கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்
1) தீ மிதித்தல் இயற்கை பேரிடரை தடுக்கும் ஒரு வழியாக எந்த நாட்டு மக்களால் நம்பப்படுகிறது?
A) சீன மக்கள்
B) நேபாள மக்கள்
C) இலங்கை மக்கள்
D) இந்திய மக்கள்
(குறிப்பு – தீ மிதித்தல் இயற்கை பேரிடரை தடுக்கும் ஒருவழியாக சீன மக்களால் நம்பப்படுகிறது. சைப்ராய்டு கலாச்சாரத்தில் இறுதி சடங்கில் வெள்ளை குவளைப்பூ (White Lily) பயன்படுத்துவதால் யாருக்கும் வெள்ளை குவளைப்பூ கொடுக்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. இவை வெவ்வேறு நாட்டிலுள்ள கலாச்சாரமாகும்.)
2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மக்கள் கலாச்சார ரீதியாக பல்வேறு வழிகளில் வேறுபட்டு காணப்படுகின்றனர்.
கூற்று 2 – ஒரு கலாச்சாரம் பல மாறுபட்ட கலாச்சார கூறுகளை கொண்டுள்ளது.
கூற்று 3 – மதம், மொழி, கட்டிடக்கலை, உணவு, தொழில்நுட்பம், இசை, சட்டம் போன்றவை கலாச்சாரத்தின் சில அடிப்படைக் கூறுகள் ஆகும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – கலாச்சாரம் என்பது மக்களுடைய வாழ்க்கை முறையின் பண்புகளை விவரிப்பதாகும். இன்று ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் உலகளாவிய பன்முகத்தன்மையில் பங்களிக்கின்றன. மதம், மொழி, கட்டிடக்கலை, உணவு, தொழில்நுட்பம், இசை, சட்டம் போன்றவை கலாச்சாரத்தின் சில அடிப்படைக் கூறுகள் ஆகும்)
3) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஒரு கலாச்சார மண்டலம் என்பது பொதுவான மற்றும் தனித்துவம் வாய்ந்த கலாச்சார அதிகாரம் கொண்ட புவியின் ஒரு பகுதியாகும்.
கூற்று 2 – கலாச்சார பிரதேசங்களை வரையறுக்க எவ்வளவு எண்ணிக்கையிலான கலாச்சார கூறுகளும் பயன்படுத்தப்படலாம்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – ஒரு கலாச்சார மண்டலம் என்பது பொதுவான மற்றும் தனித்துவம் வாய்ந்த கலாச்சார அதிகாரம் கொண்ட புவியின் ஒரு பகுதியாகும். கலாச்சார பிரதேசங்களை வரையறுக்க எவ்வளவு எண்ணிக்கையிலான கலாச்சார கூறுகளும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக உலக மதங்களின் நிலவரைபடத்தில் தெற்காசியாவின் பகுதியை வண்ணம் தீட்டுவது அங்கு இந்துமதம் பெரும்பான்மையாக இருப்பதைக் குறிக்கிறது.)
4) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – இஸ்லாமிய கலாச்சாரம் மண்டலம் வடஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் மில்லியன் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகின்றது.
கூற்று 2 – மன்ஹாட்டனில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படும் ஸ்பானிஷ் ஹார்லெம் கலாச்சாரம் மண்டலம், மிக சிறிய கலாச்சாரம் மண்டலம் ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் மண்டலம் வடஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் மில்லியன் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகின்றது. மன்ஹாட்டனில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காணப்படும் ஸ்பானிஷ் ஹார்லெம் கலாச்சாரம் மண்டலம், மிக சிறிய கலாச்சாரம் மண்டலம் ஆகும். மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒரு பகுதியான கார்ன்பெல்ட் போன்றவை நடுத்தர அளவுடைய கலாச்சாரமாகும்.)
5) ___________ என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பரவுதல் ஆகும்.
A) கலாச்சார சீரழிவு
B) கலாச்சார பரவல்
C) கலாச்சார நிலத்தோற்றம்
D) கலாச்சார பிரதேசம்
(குறிப்பு – கலாச்சார பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பரவுதல் ஆகும். பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் பல்வேறு நாட்டவர்கள் மூலம் உலக கலாச்சாரம் கலப்பது மேம்பட்ட தொலைதொடர்பு, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் அதிகரித்துள்ளது)
6) இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளை குறிக்கும் கலாச்சார பண்பு என்று கீழ்க்கண்டவற்றுள் எது அழைக்கப்படுகிறது?
A) கலாச்சார சீரழிவு
B) கலாச்சார பரவல்
C) கலாச்சார நிலத்தோற்றம்
D) கலாச்சார பிரதேசம்
(குறிப்பு – கலாச்சார நிலத்தோற்றம் என்பது இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளை குறிக்கும் கலாச்சாரப் பண்புகள் என உலக பாரம்பரிய குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது.)
7) உலக பாரம்பரியக் குழு எத்தனை வகையான கலாச்சார நிலத்தோற்றங்களை கண்டறிந்து ஏற்றுக்கொண்டுள்ளது?
A) இரண்டு வகை
B) மூன்று வகை
C) நான்கு வகை
D) ஐந்து வகை
(குறிப்பு – உலக பாரம்பரியக் குழு மூன்று வகையான கலாச்சார நிலத்தோற்றங்கள் கண்டறிந்து ஏற்றுக்கொண்டுள்ளது. அம்மூன்று பிரிவுகள் பின்வருமாறு, ஒரு நிலத்தோற்றம் ஆனது மனிதனால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, இயற்கையான முறையில் வளர்ந்து வரும் நிலத்தோற்றம், ஒரு இணையான கலாச்சார நிலத்தோற்றம் ஆகும்.)
8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – குறிப்பிட்ட சமூகத்தின் தன்மையை குறிக்கும் கலாச்சார கூறுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை கலாச்சார தொடர்பு வெளிப்படுத்துகிறது.
கூற்று 2 – வெவ்வேறு காரணிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதால் பரவலான பண்புகள் உருவாகின்றன.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – குறிப்பிட்ட சமூகத்தின் தன்மையை குறிக்கும் கலாச்சார கூறுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை கலாச்சார தொடர்பு வெளிப்படுத்துகிறது. வெவ்வேறு காரணிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதால் பரவலான பண்புகள் உருவாகின்றன. கலாச்சாரம் நம் அடையாளத்தை வடிவமைக்கிறது மற்றும் நடத்தைகளை பாதிக்கிறது.)
9) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கலாச்சாரம் என்பது மொழி, நம்பிக்கைகள், மதிப்புகள், நெறிகள், நடத்தை மற்றும் பொருட்களை பகிர்ந்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கிறது.
கூற்று 2 – கலாச்சார புவியியல் என்பது மனித புவியியலில் ஒரு பிரிவாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – கலாச்சாரம் என்பது மொழி, நம்பிக்கைகள், மதிப்புகள், நெறிகள், நடத்தை மற்றும் பொருட்களை பகிர்ந்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கிறது. கலாச்சார புவியியல் என்பது மனித புவியியலில் ஒரு பிரிவாகும். இது மொத்த சுற்றுசூழலுடன் தொடர்புடைய பல்வேறு கலாச்சார கூறுகளின் பரம்பரை அமைப்பு பற்றி விவரிப்பது ஆகும்.)
10) கீழ்கண்டவற்றுள் எது கலாச்சார கூறு ஆகும்?
A) மொழி
B) பழக்கவழக்கம்
C) மதிப்புகள்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – மொழி, பழக்கவழக்கம், நெறிமுறை, மதிப்புகள் கலாச்சார பாரம்பரியம், கலாச்சார பாரம்பரிய வகைகள், கலாச்சார பன்முகத்தன்மை கலாச்சாரப் பண்புகள் போன்றவை கலாச்சாரக் கூறுகள் ஆகும்.)
11) உலகில் அதிக மொழிகளை கொண்ட நாடு எது?
A) அமெரிக்கா
B) இந்தியா
C) பப்புவா நியூ கினியா
D) சீனா
(குறிப்பு – மொழிகள் என்பது எழுத்து அல்லது பேச்சு வடிவத்தில் உள்ளன. உலகில் அதிக அளவிலான மொழி உள்ள நாடு பப்புவா நியூ கினியா ஆகும். இது 839 மொழிகளை கொண்டது.)
12) இந்திய நாடு எத்தனை மொழிகளை கொண்டது?
A) 700 மொழிகள்
B) 720 மொழிகள்
C) 760 மொழிகள்
D) 780 மொழிகள்
(குறிப்பு – உலகில் அதிக அளவிலான மொழி உள்ள நாடு பப்புவா நியூ கினியா ஆகும். இது 839 மொழிகளை கொண்டது. இந்தியா உலக அளவில் இரண்டாவது அதிக மொழிகளைக் கொண்ட நாடு ஆகும். இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் உள்ளன.)
13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்.
கூற்று 2 – மொழி வரலாற்று பரிமாற்றத்திலும் பெரும்சக்தியாக உள்ளது.
கூற்று 3 – எந்த ஒரு மக்கள் குழுவையும் தொடர்பு வலை மூலம் இணைக்க முடியும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். மொழி வரலாற்று பரிமாற்றத்திலும் பெரும்சக்தியாக உள்ளது. எந்த ஒரு மக்கள் குழுவையும் தொடர்பு வலை மூலம் இணைக்க முடியும். மொழிகள் எழுத்து அல்லது பேச்சு வடிவத்தில் உள்ளன.)
14) பழக்கவழக்கம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பழக்கம் என்பது சட்டப்படி நிறுவப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் காணப்படும் நடத்தை நெறிமுறை ஆகும்?
கூற்று 2 – பழக்கவழக்கம் என்பது ஒரு நபரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – பழக்கம் என்பது சட்டப்படி நிறுவப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் காணப்படும் நடத்தை நெறிமுறையாகும். பழக்க வழக்கம் என்பது ஒரு நபரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகும். இது ஒரு இனம் மற்றும் சமுதாயத்தின் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.)
15) நெறிமுறை என்பதைப்பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நெறிமுறை என்பது ஒரு குழுவில் காணப்படும் இயல்பான வழக்கமான அல்லது சராசரியான நல்ல அணுகுமுறை மற்றும் நடத்தையை குறிப்பதாகும்.
கூற்று 2 – கலாச்சார நெறிமுறைகள் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – நெறிமுறை என்பது ஒரு குழுவில் காணப்படும் இயல்பான வழக்கமான அல்லது சராசரியான நல்ல அணுகுமுறை மற்றும் நடத்தையை குறிப்பதாகும். நெறிமுறை என்பது சமுதாயத்தில் உள்ள மக்களின் நடத்தையை வழிநடத்தும் பங்கிடப்படும் எதிர்பார்ப்புகள் மற்றும் விதிமுறைகள் ஆகும். கலாச்சார நெறிமுறைகள் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடுகிறது. இது கலாச்சாரங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது.)
16) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மதிப்புகள் என்பது ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரம் அல்லது நம்பிக்கைகள் ஆகும்.
கூற்று 2 – ஒரு கலாச்சார மதிப்பு என்பது எது நல்லது, சரியானது, நியாயமானது என்ற கருத்தாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மதிப்புகள் என்பது ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரம் அல்லது நம்பிக்கைகள் ஆகும். ஒரு கலாச்சார மதிப்பு என்பது எது நல்லது, சரியானது, நியாயமானது என்ற கருத்தாகும். எனினும், மதிப்புகளைக் கருத்தாக்கம் செய்வதில் சமூகவியலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.)
17) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கலாச்சார பாரம்பரியம் என்பது பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், இடங்கள், பொருள்கள், கலை வெளிப்பாடுகள் மற்றும் மதிப்புகள் உள்ளிட்டவை தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சமூகம் உருவாக்கிய வாழ்க்கை முறையின் வெளிப்பாடு ஆகும்.
கூற்று 2 – கலாச்சார பாரம்பரியம் பெரும்பாலும் அறிமுகமில்லாத அல்லது உறுதியான கலாச்சார பாரம்பரியமாக வெளிப்படுத்தப்படுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மனித நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கலாச்சார பாரம்பரிய மதிப்பு அமைப்புகள், நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையில் உறுதியான பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் முக்கியப் பகுதியாக கலாச்சார பாரம்பரியம் இங்கு காணக்கூடிய மற்றும் உறுதியான தடயங்கள் சமீப காலத்தவை.)
18) கலாச்சார பாரம்பரியத்தை கீழ்காணும் எதைக்கொண்டு வேறுபடுத்தி காணலாம்?
I. உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்
II. இயற்கை சுற்றுச்சூழல்
III. கலைப் பொருள்கள்
IV. ஆவணங்கள்
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழல் (கட்டிடம், நகரஅமைப்பு, தொல்பொருள் எச்சங்கள்) இயற்கை சூழல் (கிராமப்புற நிலத்தோற்றம், கடற்கரைகள் மற்றும் கரையோர பொருட்கள், விவசாய பாரம்பரியம்) மற்றும் கலைப்பொருட்கள் (புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் மற்றும் படங்கள்) என கலாச்சார பாரம்பரியத்தை வேறுபடுத்திக் காணலாம்.)
19) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கலாச்சார பன்முகத்தன்மை வெவ்வேறு கலாச்சாரங்களை குறிக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்கிறது.
கூற்று 2 – கலாச்சார பன்முகத்தன்மை முக்கியமானது ஏனெனில் பணிபுரியும் இடங்களில் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இன குழுக்கள் காணப்படுகின்றன.
கூற்று 3 – கலாச்சார பண்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ளலாம்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – கலாச்சாரப் பண்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ளலாம். ஆனால் முதலில் நமக்கு புரிதல் நிலை வேண்டும். கலாச்சார பன்முகத்தன்மை பல நாடுகளில் காணப்படுகிறது. ஆனால் அது சவாலாகவும் சில நேரங்களில் சிக்கலானதாகவும் உள்ளது.)
20) கலாச்சாரப் பண்புகள் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கலாச்சார பண்புகள் என்பது சமூக மக்களால் பெறப்பட்ட மனித செயல்களின் தன்மையாகும். இது பல்வேறு தகவல் தொடர்புகள் வழியாக பரவுகிறது.
கூற்று 2 – கலாச்சாரத்தின் ஒரு பகுதியை இன்னொருவருக்கு பரிமாற அனுமதிக்கும் செயல்கள் கலாச்சார பண்புகளாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மில்லியன் கணக்கான கலாச்சார பண்புகள் உள்ளன, அப்பண்புகள் ஒரு பொருளாகவோ, ஒரு நுட்பமாகவோ, ஒரு நம்பிக்கையாகவோ அல்லது ஒரு அணுகுமுறையாகவோ காணப்படுகின்றன. கலாச்சார பண்புகள் ஒவ்வொன்றும் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்தி, அவர்களின் கூட்டு செயல்பாடுகள் கலாச்சார கலவையை உருவாக்குகிறது)
21) கலாச்சார மண்டலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – கலாச்சார மண்டலங்கள் கலாச்சாரம் மண்டலத்தின் வகையாகும். கலாச்சாரம் மண்டலம் ஒரே கலாச்சார தன்மையை கொண்ட தொடர்ச்சியான புவியியல் பகுதியாகும். இது மிகப் பெரிய, நடுத்தர மற்றும் மிகச்சிறிய மண்டலங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது.)
22) கலாச்சார பகுதிகள் கீழ்காணும் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
I. மொழி
II. இனக்குழு
III. தொழில்நுட்ப வளர்ச்சி
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – கலாச்சார மண்டலங்கள் கலாச்சாரப் மண்டலத்தின் வகையாகும். கலாச்சாரப் மண்டலம் ஒரே கலாச்சார தன்மையைக் கொண்ட தொடர்ச்சியான புவியியல் பகுதியாகும். இது மிகப்பெரிய, நடுத்தர மற்றும் மிகச்சிறிய மண்டலங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. கலாச்சாரப் பகுதிகள் அணுகுமுறை, மத நம்பிக்கை, மொழி, இனக் குழு, தொழில்நுட்பவளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன)
23) நவீன உலகில் எத்தனை கலாச்சார மண்டலங்கள் உள்ளன?
A) 10
B) 11
C) 12
D) 13
(குறிப்பு – கலாச்சாரப் பகுதிகள் அணுகுமுறை, மத நம்பிக்கை, மொழி, இனக் குழு, தொழில்நுட்பவளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நவீன உலகில் 12 கலாச்சார மண்டலங்கள் உள்ளன.)
24) எந்த சமூகத்தின் கலாச்சாரத்தை மேலைநாட்டு கலாச்சாரம் என அழைக்கிறோம்?
A) அமெரிக்க சமூகம்
B) சீன சமூகம்
C) ஐரோப்பிய சமூகம்
D) ஆப்பிரிக்க சமூகம்
(குறிப்பு – ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரத்தைமேலைநாட்டு கலாச்சாரம் என்கிறோம். இது கிறிஸ்துவ மதத்தால் ஒரு பெரிய அளவிற்கு ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இது தொழில்மயமாக்கல், அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, குடியேற்ற நிலை, வணிகமயமாக்கல், நகரமயமாக்கல், மற்றும் போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சி, சமூக, அரசியல் மற்றும் பொ ருளாதார நிறுவனங்களின் நில வளர்ச்சி போன்ற பல்வேறு நிலைகளின் அடிப்படையில் வட்டார மாற்றங்களைக் கொண்டுள்ளது.)
25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மேலைநாட்டு கலாச்சாரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக நவீன மயமாக்கல் போன்ற மதச் சார்பற்ற காரணிகளின் தாக்கத்தால் மதம் சார்ந்த மதிப்புகள் புறந்தள்ளப்பட்டுள்ளன.
கூற்று 2 – தொழில்துறையில் வளர்ச்சியடைந்த ஐரோப்பா பாரம்பரிய மதிப்புகளை கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒரு சமூகமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மேலைநாட்டு கலாச்சாரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக நவீன மயமாக்கல் போன்ற மதச் சார்பற்ற காரணிகளின் தாக்கத்தால் மதம் சார்ந்த மதிப்புகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. தொழில்துறையில் வளர்ச்சியடைந்த ஐரோப்பா பாரம்பரிய மதிப்புகளை கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒரு சமூகமாக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலைநாட்டு கலாச்சாரம் ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது.)
26) மேலை நாட்டு கலாச்சார மண்டலம் எத்தனை துணை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
A) ஐந்து
B) ஆறு
C) ஏழு
D) எட்டு
(குறிப்பு – மேலை நாட்டு கலாச்சாரம் ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது. வட்டார சுற்றுச்சூழலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இது மேலும் ஆறு துணை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.)
27) பொருத்துக.
I. மேற்கு ஐரோப்பிய கலாச்சாரம் – a) அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகள்
II. கண்ட ஐரோப்பிய கலாச்சாரம் – b) தொழில் வளர்ச்சி அடைந்தது
III. மத்தியதரைக்கடல் ஐரோப்பிய கலாச்சாரம் – c) ஆல்ப்ஸ் மலைக்கு தெற்கே உள்ளது
IV. ஆஸ்திரேலிய கலாச்சாரம் – d) மேற்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் குழந்தைகள்
A) I-b, II-a, III-c, IV-d
B) I-d, II-a, III-c, IV-b
C) I-c, II-a, III-b, IV-d
D) I-b, II-a, III-d, IV-c
(குறிப்பு – மேலைநாட்டு கலாச்சாரம் ஆறு துணை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேற்கு ஐரோப்பிய கலாச்சாரம், கண்ட ஐரோப்பிய கலாச்சாரம், மத்தியதரைக்கடல் ஐரோப்பிய கலாச்சாரம், ஆங்கிலோ அமெரிக்கன் கலாச்சாரம், ஆஸ்திரேலிய கலாச்சாரம், லத்தீன் அமெரிக்க கலாச்சாரம் என்பன ஆகும்)
28) அயன மண்டல பகுதியில் அமைந்திருக்கும் பின்தங்கிய ஒரே மேலைநாட்டு கலாச்சார பகுதி எது?
A) மத்திய தரைக்கடல் ஐரோப்பிய கலாச்சாரம்
B) ஆங்கிலோ அமெரிக்கன் கலாச்சாரம்
C) இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம்
D) ஆஸ்திரேலிய கலாச்சாரம்.
(குறிப்பு – லத்தீன் அமெரிக்க கலாச்சாரம் மத்தியதரைக்கடல் கலாச்சாரத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது அயனமண்டல பகுதியில் அமைந்திருக்கும் பின்தங்கிய ஒரே மேலைநாட்டு கலாச்சார பகுதி ஆகும். பழங்குடியினரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றியதன் விளைவாக இது மேலை நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியது.)
29) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஆஸ்திரேலிய கலாச்சார பகுதிகள் நடைமுறையில் மேற்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் குழந்தைகள் எனலாம்.
கூற்று 2 – மத்திய தரைக்கடல் ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டுள்ள நாடுகள் ஆல்ப்ஸ் மலைக்கு தெற்கே காணப்படுகின்றன. இந்த பகுதி கிறிஸ்தவ மதத்தின் ஆதிக்கத்தில் உள்ளது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மேற்கு ஐரோப்பிய கலாச்சாரம் அதிக தொழில் வளர்ச்சி அடைந்த மற்றும் நகர்ப்புற கலாச்சாரம் ஆகும். கண்ட ஐரோப்பிய கலாச்சாரம் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் வேளையில் கிறிஸ்தவமதம் முக்கியமானதாக காணப்படுகிறது.)
30) இலத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தின் தேசிய மொழிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. ஆங்கிலம்
II. ஸ்பானிஷ்
III. போர்த்துகீசியம்
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – லத்தீன் அமெரிக்க கலாச்சாரம் மத்திய தரைக்கடல் கலாச்சாரத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது அயனமண்டலப் பகுதியில் அமைந்திருக்கும் பின்தங்கிய ஒரே மேலைநாட்டு கலாச்சாரப் பகுதி இதுதான். ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீசியம் ஆகியவை இப்பகுதியின் தேசிய மொழிகளாகும்.)
31) மேற்கில் மொரோக்கோவில் இருந்து கிழக்கே பாகிஸ்தான் வரையிலான பகுதியை உள்ளடக்கியது?
A) மேற்கத்திய கலாச்சார மண்டலம்
B) இஸ்லாமிய கலாச்சாரம் மண்டலம்
C) ஆஸ்திரேலிய கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சாரம் மண்டலம்
(குறிப்பு – இஸ்லாமிய கலாச்சார மண்டலம் இஸ்லாமிய மதிப்புகளால் செல்வாக்கு பெறுகிறது. இது மேற்கில் மொராக்கோவிலிருந்து கிழக்கே பாக்கிஸ்தான் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கியது. மக்கள் வாழத் தகுதியற்றச் சூழலால் இங்கு மக்கட்தொகை மிகவும் குறைவாகக் காணப்படுகிறது)
32) இஸ்லாமிய கலாச்சார மண்டலத்தில், அரேபிய கலாச்சாரத்தின் தொட்டிலாக அமைந்துள்ளவை எது?
I. பாலைவனம்
II. கடற்கரைகள்
III. ஆற்று வடிநிலங்கள்
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – இஸ்லாமிய கலாச்சார மண்டலம் இஸ்லாமிய மதிப்புகளால் செல்வாக்கு பெறுகிறது. இது மேற்கில் மொராக்கோவிலிருந்து கிழக்கே பாக்கிஸ்தான் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கியது. கடற்கரைகள், ஆற்று வடிநிலங்கள் மற்றும் பாலைவனச் சோலைகள் போன்றவை இப்பகுதியின் அரேபிய கலாச்சாரத்தின் தொட்டிலாக இருக்கின்றன.)
33) இஸ்லாமிய கலாச்சார மண்டலத்தை ஜெர்மனியர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்?
A) மத்தியகிழக்கு கலாச்சார மண்டலம்
B) கிழக்கத்திய கலாச்சார மண்டலம்
C) தென்கிழக்கு கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் மண்டலத்தை, ஆங்கிலேயர்கள் மத்தியகிழக்கு கலாச்சாரம் எனவும் ஜெர்மானியர்கள் இதை கிழக்கத்திய கலாச்சாரம் எனவும் அழைக்கிறார்கள். இந்த கலாச்சாரப் பகுதி கிழக்கில் பாரம்பரிய இந்திய கலாச்சார பகுதிக்கும் மேற்கில் நவீன ஐரோப்பிய கலாச்சாரப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது)
34) அதிகமான கல்வியற்ற பெண்களின் விகிதங்களை எந்த கலாச்சார மண்டலத்தில் காணமுடிகிறது?
A) இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
B) இந்திய கலாச்சார மண்டலம்
C) ஆப்பிரிக்க கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது, இதன் தாக்கத்தை இங்கு காணப்படும் அதிகமான கல்வியறிவற்ற பெண்களின் விகிதங்களில் காண்கிறோம். இந்த நாடுகளில் தனிநபர் வருமானம் மிக அதிகமாக உள்ளது. ஆனால் நவீனமயமாக்கலின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.)
35) இந்திய கலாச்சாரம் மண்டலத்தை குறிப்பதற்கு “நெல் கலாச்சாரம்” என்பதை பயன்படுத்தியவர் யார்?
A) பேக்கர்
B) ஸ்டாம்ப்
C) வில்லியம்
D) ராபர்ட்
(குறிப்பு – இந்திய துணைக் கண்டத்தின் கலாச்சாரப்பகுதிகளை உள்ளடக்கியதே இந்திய கலாச்சார மண்டலமாகும். பேக்கர் (Baker) இதனை ஒரு துணை கண்ட கலாச்சாரம் என்று அழைத்தார் அதேசமயம், டி. ஸ்டாம்ப் ( D. Stamp) இதற்கு நெல் கலாச்சாரம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.)
36) வடக்கில் இமயமலைக்கும், தெற்கே இந்திய பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கலாச்சார மண்டலம் எது?
A) இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
B) இந்திய கலாச்சார மண்டலம்
C) ஆப்பிரிக்க கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – இந்திய கலாச்சார மண்டலம் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இது வடக்கில் இமயமலைக்கும் தெற்கே இந்திய பெருங்கடலுக்கும் மற்றும் மேற்கில் ஹிந்துகுஷ் மலைக்கும் இடையில் அமைந்துள்ளது.)
37) இந்திய கலாச்சார மண்டலத்தின் அமைவுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. கூட்டுக்குடும்பம்
II. கிராமப்புற சமூகம்
III. தன்னிறைவு விவசாயம்
IV. வேளாண் பருவங்கள்
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – கூட்டுக் குடும்பம், கிராமப்புற சமூகம், சாதிஅமைப்பு, பாதி நிலப்பிரபுத்துவ தொடர்பு, தன்னிறைவு விவசாயம், நெல் விவசாயம், பருவகால காலநிலை மாற்றங்கள் மற்றும் வேளாண்பருவங்கள் போன்றவை இந்திய கலாச்சார மண்டலத்தில் அமைந்துள்ளன. இந்த கலாச்சார பகுதிகளில் வேதமதிப்புகள் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளன.)
38) கீழ்க்கண்டவற்றுள் எது பௌத்த கலாச்சாரத்தை கொண்டுள்ளது?
A) இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
B) இந்திய கலாச்சார மண்டலம்
C) கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம் அடிப்படையில் வட்டார மாற்றங்களுடன் பௌத்த கலாச்சாரத்தை கொண்டுள்ளது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் உண்மையான பெளத்த கலாச்சாரத்தைக் காணலாம். இந்த இருநாடுகளும் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலின் தாக்கத்தைக் கண்டிருக்கின்றன)
39) உண்மையான பௌத்த கலாச்சாரம் கீழ்க்காணும் எந்த நாடுகளில் காணப்படுகிறது?
I. வடகொரியா
II. தென்கொரியா
III. ஜப்பான்
IV. சீனா
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி
D) I, IV மட்டும் சரி
(குறிப்பு – ழக்கு ஆசிய கலாச்சார மண்டலம் அடிப்படையில் வட்டார மாற்றங்களுடன் பௌத்த கலாச்சாரத்தை கொண்டுள்ளது. தென்கொரியா மற்றும் ஜப்பானில் உண்மையான பெளத்த கலாச்சாரத்தைக் காணலாம். இந்த இருநாடுகளும் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலின் தாக்கத்தைக் கண்டிருக்கின்றன)
40) கீழ்க்காணும் எந்த இடத்தில் வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து அமைந்துள்ளது?
A) இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
B) இந்திய கலாச்சார மண்டலம்
C) கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – தென்கிழக்கு ஆசிய கலாச்சாரம் மண்டலத்தில் வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து அமைந்துள்ளதால் இதை ஒரு இடைநிலை கலாச்சாரம் என்று அழைக்கிறோம்.)
41) கீழ்க்காணும் எந்த நாட்டில் புத்த மதம் மேலாதிக்கம் செலுத்தும் செலுத்துவதில்லை?
A) மியான்மர்
B) தாய்லாந்து
C) வியட்நாம்
D) இந்தோனேஷியா
(குறிப்பு – ஒரே இடத்தில் வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து அமைந்துள்ளதால் இதை ஒரு இடைநிலை கலாச்சாரம் என்கிறோம். மியான்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் புத்தமதம் மேலாதிக்கம் செலுத்துவதை காணலாம். இந்திய கலாச்சாரம் கொண்ட இந்தோனேசியா தீவு மற்றும் பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கை காணலாம்.)
42) கீழ்க்காணும் எந்த தீவுகளில் இஸ்லாமிய செல்வாக்கு தெளிவாக காணப்படுகிறது?
I. மலேசியா
II. இந்தோனேஷியா
III. இலங்கை
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – இந்திய கலாச்சாரம் கொண்ட இந்தோனேசியா தீவு மற்றும் பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவத்தின்செல்வாக்கை காணலாம். மலேசியா மற்றும் இந்தோனேசிய தீவுகளில் இஸ்லாமிய செல்வாக்கு தெளிவாக காணப்படுகிறது. வேறு எந்தப் பகுதியும் அத்தகைய தனித்துவங்களைக் கொண்டிருக்கவில்லை)
43) நீக்ரோ கலாச்சாரம் என்று அழைக்கப்படுவது எது?
A) இஸ்லாமிய கலாச்சார மண்டலம்
B) மத்திய ஆப்பிரிக்க கலாச்சார மண்டலம்
C) கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
D) தென்கிழக்கு ஆசிய கலாச்சார மண்டலம்
(குறிப்பு – மத்திய ஆப்பிரிக்க கலாச்சாரம் மண்டலம் நீக்ரோ கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது முதன்மையாக வெப்பமண்டல ஆப்பிரிக்கவில் காணப்படுகிறது. இதே கலாச்சார அமைப்பு அமெரிக்க சிவப்பு இந்தியர்கள், லத்தீன் அமெரிக்க பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் பல்வேறு பழங்குடியினர் போன்றோரிடம் காணப்படுகிறது.)
44) மத்திய ஆப்பிரிக்க கலாச்சாரம் மண்டலத்திற்கு ” ஒதுக்கப்பட்ட கலாச்சாரம்” என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் யார்?
A) பேக்கர்
B) ஸ்டாம்ப்
C) வில்லியம்
D) டாய்ன்பே
(குறிப்பு – வரலாற்று ஆய்வாளர் டாய்ன்பே (Toynbee) இந்த மத்திய ஆப்பிரிக்க கலாச்சார குழுவிற்கு ‘ஒதுக்கப்பட்டக் கலாச்சாரம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். சில புவியியலாளர்கள் எஸ்கிமோ இன மக்களை இந்த கலாச்சாரப் பகுதியின் கீழ் கொண்டு வருகின்றனர். இதனால், இது பரவலாக சிதறடிக்கப்பட்ட கலாச்சாரப் பகுதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களாக காணப்படுகின்றன.)
45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – நாட்டுப்புற கலாச்சாரம் என்பவை பாரம்பரியமானவை.
கூற்று 2 – நாட்டுப்புற கலாச்சாரம் என்பது தற்போது பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுவதில்லை.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – நாட்டுப்புற கலாச்சார பண்புகள் பாரம்பரியமானவை. இது தற்போது பெரும்பாலான மக்களால் பின்பற்றப் படுவதில்லை. இது பொதுவாக, சிறிய அளவில், கிராம பகுதிகளில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒன்றாகக் காணப்படுகிறது)
46) கீழ்க்காணும் இவற்றின் அடிப்படையில் மக்களின் இனங்களை அறியமுடியும்?
I. தோலின் நிறம்
II. முடியின் நிறம்
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – இனம் என்பது ஏறக்குறைய நிரந்தரமான தனித்துவமான தன்மை கொண்ட மக்கள் குழு ஆகும். ஒரு நபரின் தோலின் நிறம் மற்றும் முடியின் நிறம் ஆகியவற்றை கொண்டு இனங்களை விவரணம் செய்யலாம். மூதாதையரிடம் இருந்து பெறப்பட்ட உடல்ரீதியான அம்சங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் இனக்குழுக்களாக மனிதர்களை வகைப்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கம் மற்றும் அறிவியல் வகைப்பாடு ஆகும்.)
47) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை மற்றும் ரத்தத்தின் வகை போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இனங்கள் கண்டறிந்து வகைப்படுத்தப்படுகின்றன.
கூற்று 2 – மனித இனங்கள் ஐந்து பெரிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை மற்றும் ரத்தத்தின் வகை போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இனங்கள் கண்டறிந்து வகைப்படுத்தப்படுகின்றன. மனித இனங்கள் நான்கு பெரிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை நீக்ராய்டு, மங்கோலாய்டு, காகசாய்டு மற்றும் ஆஸ்ட்ராலாய்டு என்பன ஆகும்.)
48) கீழ்க்கண்டவர்களுள் யார் கறுப்பு இனத்தவர் என்று அழைக்கப்படுகிறார்கள்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – நீக்ராய்டு இனத்தவர் பொதுவாக கறுப்பு இனத்தவர் என்று அழைக்கப்படுகிறார்கள். பிற இனத்தவர்களை காட்டிலும் அதிக கருப்பு நிற தோலினை கொண்டுள்ளவர்கள் இவர்கள் ஆவர். சாய்ந்த நெற்றி தடித்த உதடுகள் பரந்த மூக்கு மற்றும் கருத்த முடி போன்றவை இவர்களின் மற்ற பொதுவான பண்புகள் ஆகும்.)
49) பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் எஸ்கிமோ இன மக்கள் கீழ்க்காணும் எந்த இனத்தவரை சேர்ந்தவர் ஆவர்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – மடிந்த கண் இமைகள், பாதாம் வடிவக் கண்கள், மஞ்சள் நிற தோல் மற்றும் V வடிவ கண்ணங்கள் உடையவர்கள் மங்கோலாய்டு இனத்தவர்கள் ஆவர். பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் எஸ்கிமோ இனமக்களும் மங்கோலாய்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.)
50) கீழ்காணும் எந்த இனத்தவர்கள் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – மங்கோலாய்டு இனத்தவர்கள் மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த உடல் முடி, குறைந்த உடல் நாற்றத்தையும் மற்றும் சிறிய மூட்டு விகிதத்தையும் கொண்டுள்ளனர். மிதமான குளிர் காற்றுக்கு ஏற்றவாறு இவர்களின் முக அமைப்பு அமைந்துள்ளது. இவர்கள் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர்.)
51) கீழ்க்கண்டவற்றுள் எந்த இனத்தவர்கள் வெள்ளையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – கூரான மூக்கு, செங்குத்தான நெற்றி, இளஞ்சிவப்பு நிற தோல், புலப்படக்கூடிய புருவமுகடு மற்றும் வண்ணமயமான கண்கள் அல்லது முடியை கொண்டவர்கள் வெள்ளையர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் காகசாய்டு இனத்தவர்கள் ஆவர். ஐரோப்பாவின் காலநிலை காரணமாக அதிக சூரிய ஒளியை பெறுவதற்கு ஏற்றவாறு அவர்களின் தோல் நிறம் அமைந்துள்ளது.)
52) கீழ்க்காணும் எந்த இனத்தவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் பாப்பு நியூ கினியாவில் வசிக்கின்றனர்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – ஆஸ்ட்ரலாய்டு இனத்தவர்கள் புலப்படக்கூடிய புருவ முகடு, பரந்த மூக்கு, சுருள்முடி, கருப்பு நிற தோல் மற்றும் குறைவான உயரம் போன்ற அமைப்பு உடையவர்கள் ஆவர். இவர்களது தடித்த உதடு விரைப்பாக உணவை சாப்பிட உதவுகிறது. இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் வசிக்கின்றனர்.)
53) இனங்களையும் அவர்களின் உருவ அமைப்புகளையும் பொருத்துக.
I. நீக்ராய்டு – a) பாதாம் வடிவக் கண்கள்
II. மங்கோலாய்டு – b) கருப்பு நிறத்தோல்
III. காகசாய்டு – c) பரந்த மூக்கு, சுருள்முடி
IV. ஆஸ்ட்ரலாய்டு – d) வண்ணமயமான கண்கள்
A) I-b, II-a, III-d, IV-c
B) I-a, II-d, III-b, IV-c
C) I-d, II-b, III-a, IV-c
D) I-c, II-b, III-a, IV-d
(குறிப்பு – மனித இனங்கள் நான்கு பெரிய குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை நீக்ராய்டு, மங்கோலாய்டு, காகசாய்டு மற்றும் ஆஸ்ட்ராலாய்டு என்பன ஆகும்.)
54) கீழ்க்காணும் எந்த இனத்தவருக்கு ரத்த வகை B-ஐ விட A அதிகம்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு – காகசாய்டு இன மக்களுக்கு ரத்த வகை B-ஐ விட A அதிகம். மங்கோலாய்டு இன மக்களுக்கு ரத்தவகை B அதிகம். நீக்ராய்டு இன மக்களுக்கு இரத்த வகையில் RH(D) அதிகமாக இருக்கும்.)
55) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – இனக்குழு என்பது வாழ்வின் நெறி வழிமுறையை குறிக்கும் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும்.
கூற்று 2 – இனக்குழு என்பது மொழி, மதம் மற்றும் ஆடை, உணவு போன்ற பொருள்சார் கலாச்சாரம் மற்றும் இசை, கலை போன்ற கலாச்சார பொருள்களில் பிரதிபலிக்கிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – இனக்குழு என்பது வாழ்வின் நெறி வழிமுறையை குறிக்கும் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும். இனக்குழு என்பது மொழி, மதம் மற்றும் ஆடை, உணவு போன்ற பொருள்சார் கலாச்சாரம் மற்றும் இசை, கலை போன்ற கலாச்சார பொருள்களில் பிரதிபலிக்கிறது. இனக்குழு பெரும்பாலும் சமூக ஒற்றுமை மற்றும் சமூக மோதல்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது.)
56) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – உலகின் மிகப்பெரிய இனக்குழு ஹான் சைனீஸ் என்பதாகும்.
கூற்று 2 – சில இன குழுக்கள் சில பன்னிறு மக்களை மட்டுமே கொண்டுள்ளது.
கூற்று 3 – இந்திய நாகரீகம் உலகின் மிக பழமையான ஒன்றாகும்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லா கூற்றுகளும் சரி
(குறிப்பு – உலகின் மிகப்பெரிய இனக்குழு ஹான் சைனீஸ் என்பதாகும். சில இன குழுக்கள் சில பன்னிறு மக்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த குழுக்களுக்கு என கிட்டத்தட்ட ஒரு பொதுவான வரலாறு, மொழி, மதம், கலாச்சாரம் போன்ற பொது அடையாளத்துடன் கூடிய குழு உறுப்பினர்களை கொண்டுள்ளது.)
57) இந்தோ ஆரியர்கள் எந்த ஆண்டு விவசாயத்திற்காக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தனர்?
A) பொ. ஆ. மு 1500 இல்
B) பொ. ஆ. மு 1600 இல்
C) பொ. ஆ. மு 1700 இல்
D) பொ. ஆ. மு 1800 இல்
(குறிப்பு – இந்திய நாகரிகம் உலகின் மிகப் பழமையான ஒன்றாகும். இது சிந்து சமவெளி நாகரிகத்தின் வட இந்தியாவில் இந்தோ ஆரியர்களையும் மற்றும் தென்னிந்தியாவில் திராவிடர்களையும் முதன்மையாக கொண்டுள்ளது. இந்தோ ஆரியர்கள் பொ. ஆ. மு 1800 இல் விவசாயத்திற்காக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தனர்.)
58) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – இந்திய துணை கண்டத்தில் உள்ள திராவிட மொழியை தாய் மொழியாக பேசும் உள்ளூர் மக்களே திராவிடர்கள் ஆவர்.
கூற்று 2 – பெரும்பாலும் திராவிடர்கள் அனைவரும் இந்தியாவின் தென் பகுதியில் வசிக்கின்றனர்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – இந்திய துணை கண்டத்தில் உள்ள திராவிட மொழியை தாய் மொழியாக பேசும் உள்ளூர் மக்களே திராவிடர்கள் ஆவர். பெரும்பாலும் திராவிடர்கள் அனைவரும் இந்தியாவின் தென் பகுதியில் வசிக்கின்றனர். இந்தியாவில் திராவிட இனக் குழுவில் ஐந்து முக்கிய பிரிவுகள் உள்ளன அவை தெலுங்கு, கன்னடம், துளு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்.)
59) தென்னிந்தியாவை சேர்ந்த திராவிட பேரரசுகளுள் அல்லாதது எது?
A) பல்லவர்
B) சேரர்
C) சோழர்
D) பாண்டியர்
(குறிப்பு – இந்தியாவில் உள்ள பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் வட இந்தியாவின் திராவிட வம்சத்தை சேர்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் இந்தோ ஆரியர்கள் வந்த பின் மற்றும் வட இந்தியா முழுவதும் குரு ராஜ்யம் உருவானபோது திராவிடர்கள் தெற்கே தள்ளப்பட்டனர். பின்னர் தென்னிந்தியா சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் என மூன்று திராவிட பேரரசர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.)
60) பிராமி எழுத்து வடிவில் எழுதப் படாத ஒரே திராவிட மொழி எது?
A) துளு
B) தெலுங்கு
C) பிரஹி
D) இவை எதுவும் அல்ல
(குறிப்பு – பிராமி எழுத்து வடிவில் எழுதப்படாத ஒரே திராவிடமொழி அரேபிய எழுத்தான பிரஹி மொழிதான். இது அதற்கு பதிலாக ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.)
61) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மதம் என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன் கொண்ட சட்டம் மற்றும் தார்மீக ஒழுங்கை பாதுகாப்பது ஆகும்.
கூற்று 2 – சமுதாயத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் வாழ்க்கைக்கு மதம் ஒரு தனித்துவமான அணுகுமுறையை வழங்குகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – மதம் ஒரு தெளிவற்ற பயம் அல்ல அல்லது அறியப்படாத சக்திகள் மற்றும் பயங்கரவாதத்தின் குழந்தை அல்ல, ஆனால் ஒரு சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன் கொண்ட சட்டம் மற்றும் தார்மீக ஒழுங்கை பாதுகாப்பது ஆகும். சமுதாயத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் வாழ்க்கைக்கு மதம் ஒரு தனித்துவமான அணுகுமுறையை வழங்குகிறது.)
62) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கடவுள் நம்பிக்கை அடிப்படையில் மதம் வகைப்படுத்தப்படுகிறது.
கூற்று 2 – ஒரே கடவுள் கோட்பாடு, பல கடவுள் கோட்பாடு என்பன மதங்களின் வகைகள் ஆகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – கடவுள் நம்பிக்கை அடிப்படையில் மதம் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு கடவுளை வழிபடுபவர்கள் ஒரே கடவுள் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆவர். பல கடவுள்களை வழிபடுபவர்கள் பல கடவுள் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆவர்.)
63) கீழ்காணும் எந்த மதம் பல கடவுள் கோட்பாட்டை கொண்டது?
A) இந்து
B) இஸ்லாம்
C) கிறித்துவம்
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை ஒரே கடவுள் கோட்பாட்டை கொண்டது. இந்து மதம் பல கடவுள்களை வழிபடுவதினால் உலக கடவுள் கோட்பாட்டை பின்பற்றுவது ஆகும்.)
64) கீழ்க்கண்டவற்றுள் எது உலகளாவிய மதம் அல்ல?
A) இஸ்லாம்
B) புத்த மதம்
C) கிறிஸ்தவம்
D) இந்துமதம்
(குறிப்பு – மதம் தோன்றிய பகுதிகளின் அடிப்படையில் மற்றொரு வகைப்பாடு உள்ளது. கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம் போன்றவை உலகளாவிய மதங்கள் ஆகும்.)
65) கீழ்க்கண்டவற்றுள் எது இன மதம் அல்ல?
A) இந்து மதம்
B) சீன நம்பிக்கை
C) யூதம்
D) பௌத்தம்
(குறிப்பு – கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம் போன்றவை உலகளாவிய மதங்கள் ஆகும். இந்துமதம், ஷிண்டோயிசம், சீன நம்பிக்கை, யூதம் போன்றவை இன மதங்களாகும். இயற்கையை வழிபடும் மதம், மாய நம்பிக்கை போன்றவை பழங்குடி அல்லது பாரம்பரிய மதங்கள் ஆகும்.)
66) எந்த மதத்தை உலகிலேயே மிக அதிகமான மக்கள் பின்பற்றுகின்றனர்?
A) இந்துமதம்
B) இஸ்லாம்
C) கிறிஸ்துவம்
D) புத்த மதம்
(குறிப்பு – கிறிஸ்தவம் என்பது உலகளாவிய மதமாகும். உலகிலேயே மிக அதிகமான மக்கள் இம்மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் ஐரோப்பா, ஆங்கிலோ அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளில் பரவி காணப்படுகின்றனர்.)
67) உலகின் இரண்டாவது மிகப்பெரிய மதம் எது?
A) இந்துமதம்
B) இஸ்லாம்
C) கிறிஸ்துவம்
D) புத்த மதம்
(குறிப்பு – இஸ்லாம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மதம் ஆகும். வட ஆப்பிரிக்காவை தொடர்ந்து தென்மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இஸ்லாம் மிகவும் செறிந்து காணப்படுகிறது.)
68) மதங்களையும் அதன் புனித நூல்களையும் பொருத்துக.
I. இஸ்லாம் – a) பைபிள்
II. கிறிஸ்துவம் – b) பகவத்கீதை
III. இந்து மதம் – c) திரிபிடகம்
IV. புத்தமதம் – d) குர்ரான்
A) I-d, II-a, III-b, IV-c
B) I-a, II-d, III-b, IV-c
C) I-c, II-d, III-b, IV-a
D) I-a, II-d, III-c, IV-b
(குறிப்பு – இஸ்லாம் மதத்தின் புனித நூல் குரான் ஆகும். கிறிஸ்துவ மதத்தின் புனித நூல் பைபிள் ஆகும். இந்து மதத்தின் புனித நூல் பகவத் கீதை ஆகும். புத்த மதத்தின் புனிதநூல் திரிபிடகம் ஆகும்.)
69) இந்து மதத்தைப் பின்பற்றுவோர் அதிகமாக எந்த நாடுகளில் வசிக்கின்றனர்?
I. இந்தியா
II. நேபாளம்
III. இலங்கை
IV. மலேசியா
A) I, II மட்டும் சரி
B) II, III மட்டும் சரி
C) I, III மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – இந்தியாவில் பொ. ஆ. மு 3000 ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழமையான மதமாக இந்து மதம் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் முதன்மையாக செறிந்து காணப்படுகிறது. மொத்த இந்து மக்களில் 99 சதவீதம் பேர் தெற்காசியாவில் காணப்படுகின்றனர்.)
70) புத்த மதம் தோன்றிய ஆண்டு எது?
A) பொ. ஆ. மு 500
B) பொ. ஆ. மு 510
C) பொ. ஆ. மு 515
D) பொ. ஆ. மு 525
(குறிப்பு – புத்தமதம் இந்தியாவின் பழமையான மதங்களில் ஒன்றாகும். இது பொ. ஆ. மு 525 இல் புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இது கட்டுப்பாடற்ற தத்துவத்தின் காரணமாக பல ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.)
71) ஹீனயானம், மஹாயானம் என்பவை எந்த மதத்தின் பிரிவு ஆகும்?
A) புத்த மதம்
B) சீக்கிய மதம்
C) ஜெயின மதம்
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – புத்தமதம் புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. புத்த மதம் தனது கட்டுப்பாடற்ற தத்துவத்தின் காரணமாக சீனா, மியன்மார், இந்தியா, இலங்கை, ஜப்பான், மங்கோலியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. இதன் இரண்டு முக்கிய பிரிவுகள் ஹீனயானம் மற்றும் மஹாயானம் என்பதாகும்.)
72) கன்ஃபுஷியனிஸம் என்னும் மதம் எந்த நாட்டைச் சார்ந்தது?
A) ஜப்பான்
B) சீனா
C) மங்கோலியா
D) தென்கொரியா
(குறிப்பு – கிறிஸ்துவத்தின் தாய் மதமாக கருதப்படுகிற பழமையான ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட மதம் யூதமதமாகும். கன்ஃபுஷியனிஸம் மற்றும் டாவோயிசம் என்பவை சீன மதங்கள் ஆகும். கன்ஃபுஷியனிஸம், கன்பூசியஸ் (551-479பொ. ஆ. மு) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. தாவோயிசம், லா சே (604-517பொ. ஆ. மு.) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.)
73) சமண மதத்தை நிறுவியவர் யார்?
A) புத்தர்
B) சமணர்
C) மகாவீரர்
D) குருநானக்
(குறிப்பு – இந்தியாவில் தோன்றிய சமண மதம் மரபு வழியில் இந்து மதத்தைச் சார்ந்து இருக்கிறது. இது புத்தரின் சமகாலத்திய மகாவீரரால் நிறுவப்பட்டது. இம் மதத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் காணப்படுகின்றனர். சமண மதம் இந்துமதத்தின் ஒரு கிளை ஆகும்.)
74) இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினரின் சதவீதம் எத்தனை ஆகும்?
A) 17. 5 சதவீதம்
B) 9. 4 சதவீதம்
C) 8. 2 சதவீதம்
D) 6. 5 சதவீதம்
(குறிப்பு – இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் 8. 2 சதவீதம் ஆவர். சில நேரங்களில் பழங்குடியின மக்கள் நான்காவது உலகம் என அழைக்கப்படுகிறார்கள்.)
75) உலகின் மொத்த பழங்குடியினர் மக்கள்தொகையில் அதிகம் பேர் எந்த நாட்டில் வசிக்கின்றனர்?
A) பொலிவியா
B) பெரு
C) கிரீன்லாந்து
D) இவை எதுவும் அல்ல
(குறிப்பு – உலகின் மொத்த பழங்குடியினர் மக்கள் தொகையில் 90% கிரீன்லாந்து நாட்டிலும், 66% பொலிவியா நாட்டிலும் மற்றும் 40% பெரு நாட்டிலும் உள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் 8. 2 சதவீதம் ஆக உள்ளனர்.)
76) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – இனக்குழு மதத்தின் சிறப்பு வடிவங்களாக பழங்குடியின மதங்கள் அமைந்துள்ளது.
கூற்று 2 – பழங்குடி மக்கள் பொதுவாக சமூக முன்னேற்றத்தில் கற்கால நிலையிலேயே உள்ளனர்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – இனக்குழு மதத்தின் சிறப்பு வடிவங்களாக பழங்குடியின மதங்கள் அமைந்துள்ளது. பழங்குடி மக்கள் பொதுவாக சமூக முன்னேற்றத்தில் கற்கால நிலையிலேயே உள்ளனர். பழங்குடி மக்கள் தங்கள் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மிகவும் வித்தியாசமாகவும், மாறுபட்டும் காணப்படுகின்றனர். அவர்கள் தங்கள் தனித்தன்மையை மதிக்கிறார்கள். மேலும் நிலம் மற்றும் இயற்கை சூழலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள்.)
77) உலக அளவில் காணப்படும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 200 மில்லியன்
B) 300 மில்லியன்
C) 400 மில்லியன்
D) 500 மில்லியன்
(குறிப்பு – பழங்குடியின மக்களின் முக்கிய தொழிலாக உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பழங்கால வேளாண்மை ஆகியவை உள்ளன. உலக மக்கள் தொகையில் பழங்குடியினர் 300 மில்லியன் அளவு நிறைந்துள்ளனர்.)
78) உலகின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியின மக்களின் சதவீதம் எத்தனை?
A) 3 சதவீதம்
B) 4 சதவீதம்
C) 5 சதவீதம்
D) 6 சதவீதம்
(குறிப்பு – உலக அளவில் 300 மில்லியன் பழங்குடியினர் காணப்படுகின்றனர். 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் இவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் 4% அளவு உள்ளனர்.)
79) பழங்குடியினரையும் அவர்கள் வாழும் இடங்களையும் பொருத்துக.
I. பூமத்திய ரேகை – a) குஜ்ஜார்
II. புல்வெளி – b) செமாங்
III. வெப்ப மண்டல பாலைவனம் – c) மசாய்
IV. மலை பிரதேசம் – d) புஷ்மென்
A) I-b, II-d, III-a, IV-a
B) I-d, II-a, III-b, IV-c
C) I-c, II-b, III-a, IV-d
D) I-a, II-b, III-c, IV-d
(குறிப்பு – பூமத்திய ரேகை காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியின குழுக்கள் பிக்மீக்கள், செமாங், சகாய், போரோ, பாப்புவான் மற்றும் பலர் ஆவர். புல்வெளி வாழும் பழங்குடியினர் கிர்கிஸ், மசாய் போன்றவர்கள் ஆவர்.)
80) கீழ்கண்டவர்களில் யார் வெப்பமண்டல பாலைவனங்களில் வாழும் பழங்குடியினர் அல்ல?
A) பெடோயின்
B) புஷ்மென்
C) குஜ்ஜார்
D) அபாரிஜென்ஸ்
(குறிப்பு – வெப்பமண்டல பாலைவனப் பகுதிகளில் வாழும் பழங்குடி இன மக்கள் பெடோயின், புஷ்மென், அபாரிஜின்ஸ் போன்றவர்கள் ஆவர். மலைப் பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பூட்டியா, குஜ்ஜார், நாகா போன்றவர்கள் ஆவர்.)
81) பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளையும் அவர்கள் இனங்களையும் பொருத்துக.
I. வெப்பமண்டல பாலைவனம் – a) குஜ்ஜார்
II. மலைப்பிரதேசம் – b) சாந்தல்ஸ்
III. பருவக்காற்று பிரதேசம் – c) சுக்கி
IV. துருவ குளிர்பிரதேசம் – d) புஷ்மென்
A) I-d, II-a, III-b, IV-c
B) I-d, II-a, III-c, IV-b
C) I-c, II-b, III-a, IV-d
D) I-a, II-b, III-c, IV-d
(குறிப்பு – பருவக்காற்று பிரதேசங்களில் வாழும் பழங்குடி இன மக்கள் கோண்டுகள், சாந்தல்ஸ், தோடர்கள், பில்ஸ் என்பவர்கள் ஆவர். துருவ குளிர் பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் என்பவர்கள் எஸ்கிமோக்கள், லாப், அலுட், சுக்கி போன்றவர்கள் ஆவர்.)
82) குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
A) மசாய் மக்கள்
B) பிக்மீக்கள்
C) பிடோயின்
D) சாந்தல்ஸ்
(குறிப்பு – பிக்மீக்கள், நீக்ராய்டு மக்கள் எனவும் நீக்ரோல்லிஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குள்ளமான, தட்டையான மூக்கு, சுருண்ட முடி, நீண்ட நெற்றி கொண்ட கருப்பு மக்கள் ஆவர். இவர்களின் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி உயரம் 150 சென்டி மீட்டர் ஆகும். எனவே இவர்கள் குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.)
83) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பிக்மீக்கள் வெப்பமண்டல மத்திய ஆப்பிரிக்கா பகுதியில் சிதறி காணப்படுகிறார்கள்.
கூற்று 2 – பிக்மீக்கள் ஆப்பிரிக்காவின் பூமத்தியரேகை காடுகளில் பல துணை குழுக்களாக காணப்படுகின்றனர்.
கூற்று 3 – பிக்மீக்கள் குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – பிக்மீக்கள் வெப்பமண்டல மத்திய ஆப்பிரிக்கா பகுதியில் சிதறி காணப்படுகிறார்கள். பிக்மீக்கள் ஆப்பிரிக்காவின் பூமத்தியரேகை காடுகளில் பல துணை குழுக்களாக காணப்படுகின்றனர். முதன்மையாக பூமத்திய ரேகையின் இருபுறங்களிலும் 3°வ மற்றும் 3°தெ அட்சரேகை நிலப்பகுதிகளில் உள்ள காங்கோ தீவில் காணப்படுகின்றனர்.)
84) கால்நடை மேய்க்கும் சமூகம் என அழைக்கப்படும் பழங்குடியினர் யார்?
A) மசாய் மக்கள்
B) பிக்மீக்கள்
C) பிடோயின்
D) சாந்தல்ஸ்
(குறிப்பு – மசாய் பழங்குடியின மக்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் கால்நடை மேய்க்கும் சமூகம் ஆவர். இவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பொதுவாக மிகவும் சிறந்த மற்றும் தனித்துவம் வாய்ந்த கால்நடை மேய்ப்பவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் தோல் நிறம் மெல்லிய சாக்லேட் கலரில் இருந்து கரும் பழுப்பு நிறம் வரை காணப்படுகிறது.)
85) மசாய் பிரதேசம் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
A) 1°வ முதல் 3°தெ அட்சரேகையில்
B) 1°வ முதல் 5°தெ அட்சரேகையில்
C) 1°வ முதல் 6°தெ அட்சரேகையில்
D) 1°வ முதல் 9°தெ அட்சரேகையில்
(குறிப்பு – மசாய் மக்கள் உயர்ந்த மற்றும் நீண்ட தலை, மெல்லிய முகம் மற்றும் மூக்கு கொண்டவர்கள். இவர்களின் உதடுகள் நீக்ராய்டு மக்களை விட தடிமன் குறைவாகவே உள்ளது. ஆப்பிரிக்காவின் மத்தியப் பீடபூமியில் மசாய் மக்கள் காணப்படுகின்றனர்.)
86) அரேபிய மொழியில் ‘ பிடோயின் ‘ என்றால் என்ன?
A) பாலைவனத்தில் வசிப்போர்
B) ஒட்டகம் மேய்ப்போர்
C) வணிகம் செய்வோர்
D) கடற்பயணம் செய்வோர்
(குறிப்பு – அரபி மொழியில், பிடோயின் (Bedouin) என்றால் பாலைவனத்தில் வசிப்போர் என்று பொருள். தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கும் பழங்குடியினரில் பிடோயின்கள் மிக முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் ஒட்டகம், செம்மறி ஆடு, ஆடு, குதிரை முதலியவற்றை பராமரிக்கும் மேய்ச்சல் நாடோடிகள் ஆவர்.)
87) புஷ்மென் (Bushman) பழங்குடியினர் கீழ்காணும் எந்த இடத்தில் வசிக்கவில்லை?
A) போட்ஸ்வானா
B) நமீபியா
C) அங்கோலா
D) அலாஸ்கா
(குறிப்பு – தென்னாப்பிரிக்காவில் உள்ள கலகாரி பாலைவனத்தின் பழங்குடி மக்களான புஷ்மென் இப்பொழுதும் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நிலையாக உணவு மற்றும் நீரை தேடி செல்கிறார்கள். இவர்களின் தாயகமான கலகாரி பாலைவனமானது போட்ஸ்வானா, நமீபியா மற்றும் தெற்கு அங்கோலாவில் பரவி காணப்படுகிறது.)
88) கீழ்க்காணும் எந்த பிரதேசமானது கடல் மட்டத்திற்கு மேலே 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது?
A) புஷ்மென்
B) எஸ்கிமோக்கள்
C) மசாய்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – புஷ்மென் பிரதேசமானது கடல் மட்டத்திற்கு மேலே 2, 000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள துணை வெப்பமண்டல காலநிலையை கொண்ட பரந்த பீடபூமி ஆகும். புஷ்மென் இனத்தவர்கள் நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் குள்ளமான, நீண்ட தலை, குறுகிய மற்றும் தட்டையான காதுகள் மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு தோல் நிறத்தை கொண்டவர்கள்.)
89) கீழ்க்காணும் எந்த பழங்குடியினர் இன்யூட் (Inuit) என அழைக்கப்படுகிறார்கள்?
A) மசாய்
B) புஷ்மென்
C) எஸ்கிமோக்கள்
D) பிக்மீக்கள்
(குறிப்பு – எஸ்கிமோக்கள் (Eskimos) என்னும் பழங்குடியினர் இன்யூட் (Inuit) எனவும் அழைக்கப்படும், துருவ குளிர் பிரதேசத்தின் கனடாவின் வடக்கு பகுதி, அலாஸ்கா, கிரீன்லாந்து மற்றும் வடகிழக்கு சைபீரிய கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றனர்.)
90) எஸ்கிமோக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்?
A) நீக்ராய்டு
B) மங்கோலாய்டு
C) காகசாய்டு
D) இது எதுவும் அல்ல
(குறிப்பு – எஸ்கிமோக்கள் மங்கோலாயிடு இனத்தை சார்ந்தவர்கள். குள்ளமான, தட்டையான குறுகிய முகம், சிறிய புடைத்த மூக்கு, மஞ்சள் அல்லது பழுப்பு நிற தோல் மற்றும் கரடுமுரடான நேரான கருப்பு முடி ஆகியவை எஸ்கிமோக்களின் முக்கிய உடல் அமைப்பாகும்.)
91) இக்லூ என்று அழைக்கப்படும் குடியிருப்பில் வசிப்பவர்கள் யார்?
A) மசாய்
B) புஷ்மென்
C) எஸ்கிமோக்கள்
D) பிக்மீக்கள்
(குறிப்பு – எஸ்கிமோக்கள் என்னும் பழங்குடியினர் இக்லூ என்னும் குடியிருப்பில் வசிப்பவர்கள் ஆவர். இவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகும். இவர்கள் மாபக் என அழைக்கப்படும் வேட்டையாடுதல் முறையை பின்பற்றுகிறார்கள்.)
92) இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 76. 3 மில்லியன்
B) 78. 9 மில்லியன்
C) 84. 4 மில்லியன்
D) 87. 3 மில்லியன்
(குறிப்பு – இந்தியா அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களை கொண்டுள்ளது. இவர்கள் நவீன உலக வாழ்க்கை முறையை இன்னமும் அறியாதவர்களாக உள்ளனர். இந்தியா 84. 4 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகையை கொண்டுள்ளது.)
93) உலகிலேயே அதிக அளவிலான பழங்குடியின மக்கள் வாழும் நாடு எது?
A) இந்தியா
B) சீனா
C) கனடா
D) தென் ஆப்பிரிக்கா
(குறிப்பு – உலகிலேயே அதிக அளவிலான பழங்குடியின மக்களை கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும். ஆதிவாசிகள் என்று அறியப்படும் இந்த பழங்குடியின மக்கள் நாட்டின் மிக வறுமையான நிலையில் உள்ளனர். இவர்கள் இன்னும் வேட்டையாடுதல் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் போன்ற தொழிலை சார்ந்து இருக்கின்றனர்.)
94) கீழ்கண்டவர்களில் யார் இந்தியாவை சார்ந்த பழங்குடி இன மக்கள் அல்ல?
A) சாந்தல்ஸ்
B) பூட்டியாஸ்
C) கோன்டுகள்
D) புஷ்மென்
(குறிப்பு – இந்தியாவில் உள்ள சில முக்கியமான பழங்குடியின குழுக்கள் ஆவன, கோன்டுகள், சாந்தலர்கள், காசி அங்காமிகள், பில்ஸ், பூட்டியாஸ் மற்றும் கிரேட் அந்தமானிஸ் போன்றவர்கள் ஆவர். இந்த பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களுக்கு என சொந்த கலாச்சாரம், பாரம்பரியம், மொழி மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.)
95) இந்தியாவில் உள்ள பழங்குடியினர் குழுக்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 20க்கு மேல்
B) 30க்கு மேல்
C) 40க்கு மேல்
D) 50க்கு மேல்
(குறிப்பு – இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்கள் காணப்படுகின்றன. இப்பழங்குடியினர்களில் பெரும்பாலோனோர் நீக்ராய்டு, ஆஸ்ட்ரலாய்டு மற்றும் மங்கோலாய்டு இனங்களை சார்ந்தவர்கள் ஆவர்)
96) ராஜஸ்தானின் பிரபலமான வில் மனிதர்கள் என அறியப்படுபவர்கள் யார்?
A) பில்ஸ்
B) கோன்டுகள்
C) சாந்தலர்கள்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – பில்ஸ் (Bhils) ராஜஸ்தானின் பிரபலமான வில் மனிதர்கள் என அறியப்படுகிறார்கள். இவர்கள் இந்தியாவில் மிகவும் பரவலாக காணப்படும் பழங்குடியினர் குழு ஆகும். இவர்கள் தெற்காசியாவின் மிகப்பெரிய பழங்குடியினர் ஆவர்)
97) பில்ஸ் (Bhils) பழங்குடியின குழு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – பில்ஸ் (Bhils) பழங்குடியினர் குழு, மத்திய அல்லது தூய பில்ஸ் மற்றும் கிழக்கத்திய அல்லது ராஜபுத்திர பில்ஸ் என இரண்டு முக்கியக் குழுக்களாக பிரிக்கப்படுகிறது. இவர்கள் இந்தியாவில் மிகவும் பரவலாக காணப்படும் பழங்குடியினர் ஆவர்.)
98) கீழ்க்காணும் எந்த பழங்குடியினர் இந்துத்துவ தாக்கத்தைக் கொண்டுள்ளனர்?
A) பில்ஸ்
B) கோன்டுகள்
C) சாந்தலர்கள்
D) செஞ்சு
(குறிப்பு – கோன்டுகள் (Gonds) என்ற பழங்குடி இன மக்கள் பெரும்பாலும் மத்திய இந்தியாவின் கோன்டு காடுகளில் காணப்படுகிறார்கள் இவர்கள் உலகின் மிகப்பெரிய பழங்குடி இன குழுக்களில் ஒன்றாவர். இவர்கள் பெருமளவில் இந்துத்துவ தாக்கத்தை கொண்டிருக்கின்றனர். நீண்ட காலமாக இந்து கலாச்சாரம் மற்றும் மரபுகளை பின்பற்றி வருகின்றனர்.)
99) ஆரிய காலத்தை சார்ந்த பழங்குடியினர் கீழ்க்கண்டவர்களுள் யார்?
A) பில்ஸ்
B) கோன்டுகள்
C) சாந்தலர்கள்
D) செஞ்சு
(குறிப்பு – சாந்தலர்கள் (Santhals) இந்தியாவின் மூன்றாவது பெரிய பழங்குடியினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், மற்றும் அசாம் மாநிலங்களில் காணப்படுகின்றனர். முந்தைய ஆரிய காலத்தைச் சார்ந்தவகளான இவர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பெரும் போராளிகளாக இருந்திருக்கின்றனர்.)
100) இந்தியாவின் ஜார்க்கண்ட் பகுதியில் அதிகமாக காணப்படும் பழங்குடியினர் யார்?
A) பில்ஸ்
B) கோன்டுகள்
C) சாந்தலர்கள்
D) முண்டா
(குறிப்பு – முண்டா (Munda) பழங்குடியினர் மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பரவலாக இருப்பினும் முக்கியமாக ஜார்கண்ட் பகுதியில் வசிக்கின்றனர். முண்டா என்றால் பொதுவாக கிராமத்தின் தலைவன் என்று பொருள். முண்டா பழங்குடி இனத்தின் முக்கிய தொழில் வேட்டையாடுதல் ஆகும்.)
101) நாகாலாந்து மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் காணப்படும் பழங்குடியினர் யார்?
A) சாந்தலர்கள்
B) பூட்டியாஸ்
C) செஞ்சு
D) அங்காமி
(குறிப்பு – அங்காமி எனும் பழங்குடியினர், நாகாலாந்து மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் கடைக்கோடியில் காணப்படுகின்றனர். அங்காமியின் மொத்த மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் ஆகும். இவர்கள் மரத்தாலான கைவினை மற்றும் கலைப் படைப்புகளில் மிகவும் பிரபலமானவர்கள் ஆவர்)
102) அங்காமி இன பழங்குடியினரிடையே கொண்டாடப்படும் முக்கிய திருவிழா எது?
A) மோப்பின்
B) சீக்ரேனி
C) கம்பட்ராயர்
D) எல்லாமே தவறு
(குறிப்பு – அங்காமி எனும் பழங்குடியினர், நாகாலாந்து மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் கடைக்கோடியில் காணப்படுகின்றனர். அங்காமியின் மொத்த மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் ஆகும். இவர்கள் மரத்தாலான கைவினை மற்றும் கலைப் படைப்புகளில் மிகவும் பிரபலமானவர்கள் ஆவர். சீக்ரேனி நாகாலாந்தில் உள்ள அங்காமிகளிடையே கொண்டாடப்படும் முக்கிய திருவிழா ஆகும்.)
103) கீழ்காணும் எந்த பழங்குடியினர் திபெத்திய மரபில் தோன்றியவர்கள் ஆவர்?
A) கோன்டுகள்
B) பூட்டியா
C) செஞ்சு
D) அங்காமி
(குறிப்பு – பூட்டியா பழங்குடியினர் திபெத்திய மரபுகளில் தோன்றியவர்கள். 16ஆம் நூற்றாண்டில் சிக்கிம் பகுதிக்கு குடிபெயர்ந்த இவர்கள் சிக்கிமின் வடக்கு பகுதியில் லாச்சேன்பாஸ் மற்றும் லாச்சுங்பாஸ் என்று அறியப்படுகிறார்கள்.)
104) பூட்டியா இனப் பழங்குடியினர் சிக்கிமின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் உள்ளனர்?
A) 12 சதவீதம்
B) 13 சதவீதம்
C) 14 சதவீதம்
D) 15 சதவீதம்
(குறிப்பு – பூட்டிய இனப் பழங்குடியினர் சிக்கிம் மாநிலத்தில் அதிகமாக உள்ளனர். இவர்கள் சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 14% ஆவர். பூட்டியா பழங்குடியினர் மத்தியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் லாசர் ( Losar) மற்றும் லாசூங் (Lasoong) என்பதாகும்.)
105) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காணப்படும் பழங்குடியினர் யார்?
A) கோன்டுகள்
B) பூட்டியா
C) செஞ்சு
D) அங்காமி
(குறிப்பு – இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுன சாகர் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நல்லமலைப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக செஞ்சு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் முதன்மையாக மகபூப்நகர், நல்கொண்டா, பிரகாசம், குண்டூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் காணப்படுகின்றனர்)
106) பொருத்துக
I. சாந்தலர்கள் – a) வில் வீரர்கள்
II. பில்ஸ்கள் – b) சீக்ரேனி திருவிழா
III. முண்டா – c) போராளிகள்
IV. அங்காமி – d) கிராமத்தின் தலைவன்
A) I-c, II-a, III-d, IV-b
B) I-b, II-a, III-c, IV-d
C) I-c, II-d, III-a, IV-b
D) I-a, II-d, III-c, IV-b
(குறிப்பு – இந்தியாவில் காணப்படும் முக்கிய பழங்குடி இனக்குழுக்கள் ஆவன, பில்ஸ்கள், கோன்டுகள், சாந்தலர்கள், காசி, அங்காமி, பூட்டியா போன்றவர்கள் ஆவர்.)
107) காசி இனப் பழங்குடியினர் பெரும்பாலும் எந்த மாநிலத்தில் அதிகமாக காணப்படுகின்றனர்?
A) சிக்கிம்
B) மேகாலயா
C) மணிப்பூர்
D) அசாம்
(குறிப்பு – காசி பழங்குடியின மக்கள் முதன்மையாக மேகாலயாவின் காசி ஜெயந்தியா மலையிலும் மற்றும் பஞ்சாப் உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் காணப்படுகின்றனர். இவர்கள் மேகாலயா மாநிலத்தில் அதிக அளவில் காணப்படுகின்றனர்.)
108) பதினாறாம் நூற்றாண்டில் சிக்கிம் பகுதிக்கு குடிபெயர்ந்த பழங்குடியினர் யார்?
A) கோன்டுகள்
B) பூட்டியா
C) செஞ்சு
D) அங்காமி
(குறிப்பு – பூட்டியா இனப் பழங்குடியினர் சிக்கிம் மாநிலத்தில் அதிகமாக உள்ளனர். இவர்கள் 16ஆம் நூற்றாண்டில் சிக்கிம் பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள். சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 14% ஆவர். பூட்டியா பழங்குடியினர் மத்தியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் லாசர் ( Losar) மற்றும் லாசூங் (Lasoong) என்பதாகும்.)
109) உலகின் மிக ஆபத்தான பழங்குடியினராக கருதப்படுபவர்கள் யார்?
A) சென்டினல்ஸ்
B) புஷ்மென்
C) மசாய்
D) பிக்மீக்கள்
(குறிப்பு – இந்திய பெருங்கடலில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு புவியின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாகும். தொலைவில் அமைந்துள்ள சென்டினல் தீவு உலகின் மிக ஆபத்தான பழங்குடியினரான சென்டினல் பழங்குடியினரின் வசிப்பிடமாகும். இவர்களுக்கு வேளாண்மை தெரியாததால் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்போர்களாகவும் இருக்கிறார்கள்.)
110) வடக்கு சென்டினல் தீவில் மக்கள் தொகை எவ்வளவு என கணிக்கப்பட்டுள்ளது?
A) 200 பேர்
B) 250 பேர்
C) 300 பேர்
D) 350 பேர்
(குறிப்பு – சென்டினல் தீவு இந்திய பெருங்கடலில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. வடக்கு சென்டினல் தீவின் மக்கள் தொகை 250 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீவில் வசிக்கும் பழங்குடியினர் சென்டினல் என அழைக்கப்படுகிறார்கள்.)
111) அந்தமான் தீவுக் கூட்டத்தில் வாழும் கிரேட் அந்தமானிஸ் கீழ்காணும் எந்த இனத்தை சார்ந்தவர்கள் ஆவர்?
A) நீக்ராய்டு
B) காகசாய்டு
C) ஆஸ்ட்ரலாய்டு
D) எல்லாமே தவறு
(குறிப்பு – அந்தமான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடிய கிரேட் அந்தமானிஸ் (Great Andamanese) என்னும் பழங்குடியினர் நீக்ரோ பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இவர்கள் இந்த தீவுகளில் காணப்படும் மற்ற பழங்குடி மக்களை விட அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிரேட் அந்தமானீஸ் இனத்தின் தற்போதைய மக்கள் தொகை சில பேர் மட்டுமே உள்ளார்கள்.)
112) தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக காணப்படுகின்றனர்?
A) திண்டுக்கல்
B) உதகை
C) கோவை
D) திருப்பூர்
(குறிப்பு – தமிழ்நாட்டில் பழங்குடியினர்கள் நீலகிரி மாவட்டத்தில் முதன்மையாக காணப்படுகின்றனர். அனைத்து தனித்துவமான பழங்குடியினர்களில் கோடர்கள், தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் மற்றும் படுகர் போன்றோர் பெரிய குழுக்களாக காணப்படுகின்றனர்.)
113) 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள பழங்குடியினரின் மக்கள் தொகை கீழ்க்கண்டவற்றுள் எது?
A) 7, 90, 697 பேர்
B) 7, 92, 697 பேர்
C) 7, 94, 697 பேர்
D) 7, 96, 697 பேர்
(குறிப்பு – தமிழ்நாட்டில் பழங்குடியினர்கள் நீலகிரி மாவட்டத்தில் முதன்மையாக காணப்படுகின்றனர். அனைத்து தனித்துவமான பழங்குடியினர்களில் கோடர்கள், தோடர்கள், இருளர்கள், குரும்பர்கள் மற்றும் படுகர் போன்றோர் பெரிய குழுக்களாக காணப்படுகின்றனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பழங்குடியின மக்கள் தொகை 7, 94, 697 பேர் ஆவர்.)
114) தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியினர் குழுக்களின் எண்ணிக்கை எத்தனை?
A) 32
B) 34
C) 36
D) 38
(குறிப்பு – 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பழங்குடியின மக்கள் தொகை 7, 94, 697 பேர் ஆவர். தமிழ்நாட்டில் சுமார் 38 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியினர் குழுக்கள் உள்ளனர். இவர்கள் வன நிலங்களை மிகவும் சார்ந்திருக்கின்ற விவசாயிகள் ஆவர்.)
115) கீழ்க்கண்டவற்றுள் எந்த பழங்குடியினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல?
A) தோடர்
B) செஞ்சு
C) படுகர்
D) குறும்பர்
(குறிப்பு – தமிழ்நாட்டில் பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் முதன்மையாக காணப்படுகின்றனர். அனைத்து தனித்துவமான பழங்குடியினர்களில் கோடர்கள், தோடர்கள், படுகர், குரும்பர் போன்றவர்கள் முதன்மையானவர்கள் ஆவர். காட்டு நாயக்கர் மற்றும் பாலியான் போன்றவர்கள் மற்ற பழங்குடியினர்கள் ஆவர்.)
116) கீழ்க்காணும் யாருடைய குடியிருப்புகள் முண்ட்ஸ் (Munds) என அழைக்கப்படுகின்றது?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) குரும்பர்கள்
(குறிப்பு – தோடர்கள் பழங்குடியின குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் எருமை மந்தைகள் மேய்ப்பதையும், பால் கறப்பதும் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களின் குடியிருப்புகள் முண்ட்ஸ் (Munds) என அழைக்கப்படுகின்றன. இவர்கள் எந்த கடவுளையும் வணங்குவதில்லை.)
117) தோடர்கள் கீழ்காணும் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள்?
A) திருப்பூர்
B) உதகை
C) திண்டுக்கல்
D) தேனி
(குறிப்பு – தோடர்கள் பழங்குடியின குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் எருமை மந்தைகள் மேய்ப்பதையும், பால் கறப்பதும் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களின் குடியிருப்புகள் முண்ட்ஸ் (Munds) என அழைக்கப்படுகின்றன. இவர்கள் எந்த கடவுளையும் வணங்குவதில்லை. இவர்கள் நீலகிரியில் வசிக்கிறார்கள். இன்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோடர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.)
118) கீழ்க் கண்டவர்கள் யார் சைவ பிரிவை சார்ந்த இந்து பழங்குடியினர் ஆவர்?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) குரும்பர்கள்
(குறிப்பு – படுகர் இனத்தவர் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள், ஆனால் பழங்குடி இனத்தவர்களாக வகைபடுத்தப்படவில்லை. இவர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உயர்பீட பூமியில் வாழ்கின்ற ஒரு விவசாய சமூகத்தினர் ஆவர். இவர்கள் தேயிலை மற்றும் உருளைக் கிழங்கு சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்கள் சைவ பிரிவை சார்ந்த இந்து பழங்குடியினர் ஆவர்.)
119) கீழ்க் கண்டவர்கள் யார் படா (Badaa) இறுதி சடங்கில் இசை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) குரும்பர்கள்
(குறிப்பு – கோடாக்கள் பிரதானமாக நீலகிரி மலைகளில் உள்ள திருச்சிகடி கைகளில் அதிக அளவில் காணப்படுகிறார்கள். இவர்கள் தங்களின் வண்ணமயமான நாட்டுப்புற நடனங்கள் மூலம் புகழ் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அடிப்படையில் படா (Badaa) இறுதி சடங்கில் இதை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்.)
120) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கோடாக்கள் முதன்மையாக கைவினை பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
கூற்று 2 – தமிழ்நாட்டில் உள்ள இந்த பழங்குடியினர் கொல்லர், குயவர் மற்றும் தச்சு நிபுணர்களாக உள்ளனர்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – கோடாக்கள் பிரதானமாக நீலகிரி மலைகளில் உள்ள திருச்சிகடி பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறார்கள். சமுதாயத்தில் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக கோடாக்கள் பெரிய அளவில் பச்சை குத்திக் கொள்கிறார்கள்.)
121) கீழ்க் கண்டவர்கள் யார் கடந்த காலத்தில் மாயவித்தை மற்றும் மந்திரங்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர்?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) குரும்பர்கள்
(குறிப்பு – குறும்பர்கள் மாநிலத்தின் இடைப்பட்ட பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளில் வசிக்கிறார்கள். கடந்த காலத்தில் இவர்கள் மாயவித்தை மற்றும் மந்திரங்களை நன்கு அறிந்திருந்தனர். இன்றைய வாழ்க்கை முறையானது உண்மையான சேகரிப்பாளர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் என்ற நிலையிலிருந்து காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.)
122) தமிழ்நாட்டில் படுகர்களுக்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய பழங்குடியினர் யார்?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) இருளர்கள்
(குறிப்பு – தமிழ்நாட்டின் நீலகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழ்வான சரிவுகளிலும் காடுகளிலும் இருளர் பழங்குடியினர் காணப்படுகின்றனர். இவர்கள் படுகர்களுக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய பழங்குடியினர் ஆவர். மேலும் இவர்கள் பல வழிகளில் குரும்பர்களைப் போன்றவர்கள்.)
123) கீழ்க்கண்ட அவர்களில் யார் பாம்புகளைப் பிடித்து பாம்பு விஷத்தை சேகரிக்கும் பணியை மேற்கொள்கிறார்கள்?
A) தோடர்கள்
B) படுகர்கள்
C) கோடா
D) குரும்பர்கள்
(குறிப்பு – குரும்பர்கள் இன பழங்குடியினர்கள் தேன், பழங்கள், மூலிகைகள், வேர்கள், பசை, சாயங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர். சமீப காலங்களில் பாம்புகளை பிடித்து பாம்பு விஷத்தை சேகரிக்கின்றனர்.)
124) பாலியான் பழங்குடியினர் கீழ்க்காணும் எந்த மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றனர்?
I. மதுரை
II. தஞ்சாவூர்
III. புதுக்கோட்டை
IV. திருநெல்வேலி
A) I, II, III மட்டும் சரி
B) I, II, IV மட்டும் சரி
C) II, III, IV மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – பாலியான் பழங்குடியினர் தமிழ்நாட்டில் உணவு சேகரிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பாலியன்கள் பழனி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றியவர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றனர்.)
125) தமிழ் இலக்கியத்தின் முந்தைய காலம்?
A) பொ. ஆ. மு. 200 முதல் பொ. ஆ. 200 வரை
B) பொ. ஆ. மு. 300 முதல் பொ. ஆ. 300 வரை
C) பொ. ஆ. மு. 400 முதல் பொ. ஆ. 400 வரை
D) பொ. ஆ. மு. 500 முதல் பொ. ஆ. 500 வரை
(குறிப்பு – தமிழ் உலகின் மிக நீண்ட பாரம்பரியமான செம்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் இலக்கியத்தின் முந்தைய காலம் பொ. ஆ. மு. 300 முதல் பொ. ஆ. 300 வரை உடைய சங்க இலக்கியம் காலமாகும். திராவிட மொழிகளில் தமிழ்தான் மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ளது.)
126) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – மொழி பல்வேறு கலாச்சாரங்களின் அடையாள குறியீடாக இருக்கிறது.
கூற்று 2 – தகவல் தொடர்புக்கு மொழி இன்றி அமையாததால் நாம் உருவாக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை மொழி வலுவாக பாதிக்கிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – பொருளாதார மற்றும் மத அமைப்புகள் பெரும்பாலும் மொழி பரவல் மற்றும் அரசியல் எல்லைகளின் வடிவங்களை பின்பற்றுவதால் மொழிசார் எல்லைகளுக்கு இணையாக காணப்படுகின்றன. இந்த நவீன முறை மொழி பரவல், வர்த்தகம், சுற்றுலா, ஊடகம் மற்றும் சர்வதேச அமைப்புகளால் எளிதாக்கப்பட்டுள்ளது.)
127) உலக மொழிகளை 7 மொழி தொகுதி மற்றும் 30 மொழி குடும்பங்களாக வகைப்படுத்தியவர் யார்?
A) K. N. ஜான்
B) G. L. ட்ரேஜ்
C) M. N. ஷா
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – தோற்றம் மற்றும் வரலாற்று வளர்ச்சியால் மொழிகளின் வகைப்பாட்டை ஒரு மரபுவழி வகைப்பாடு என்கிறோம். பொதுவாக முன்னோர்களின் மொழியில் வழி தோன்றிய மொழிகளை நெறிமுறை மொழி என்று அழைக்கிறோம். G. L. ட்ரேஜ்(G. L. Trage) என்பவர் உலக மொழிகளை ஏழு மொழித் தகுதி மற்றும் 30 மொழி குடும்பங்களாக வகைப்படுத்தி உள்ளார்.)
128) கீழ்க்கண்டவற்றுள் எது இந்தோ-ஐரோப்பிய மொழித்தொகுதியை சார்ந்தது அல்ல?
A) லத்தீன் மொழி
B) பால்ட்டோ – ஸ்லாவிக் மொழி
C) செல்டிக் மொழி
D) சைனீஸ்
(குறிப்பு – இந்தோ-ஐரோப்பிய மொழி தொகுதியை சார்ந்தவை, இந்தோ ஈரானிய மொழி, இலத்தீன் அல்லது வீரம் நிறைந்த மொழி, ஜெர்மானிய மொழி, பால்ட்டோ – ஸ்லாவிக் மொழி, செல்டிக் மொழி மற்றும் ஹெலனிக் மொழி ஆகும்)
129) கீழ்க்கண்டவற்றுள் எது ஆப்ரோ-ஆசியாடிக் மொழித்தொகுதியை சார்ந்தது அல்ல?
A) செமிட்டிக் மொழி
B) எகிப்திய மொழி
C) குஷிடிக் மொழி
D) சொடுக்கு மொழி
(குறிப்பு – சீன திபெத்திய மொழித்குதியை சார்ந்தவை சைனீஸ், திபெத்தியன் மற்றும் பர்மன் என்பதாகும். ஆப்ரோ-ஆசியாட்டிக் மொழித்தொகுதியை சார்ந்தவை செமிட்டிக் மொழி, எகிப்திய மொழி, குஷிடிக் மொழி மற்றும் சாடிக் மொழி என்பதாகும்.)
130) நைஜீர் காங்கோ மொழி கீழ்காணும் எந்த மொழி தொகுதியை சார்ந்ததாகும்?
A) ஆப்பிரிக்கன்
B) ஆப்ரோ-ஆசியாட்டிக்
C) யூரல்-அல்டாயிக்
D) திராவிடியன்
(குறிப்பு – ஆப்பிரிக்கன் மொழிதொகுதியை சார்ந்தவை நைஜீர் காங்கோ ( அட்லாண்டிக், வோல்டிக், பெனு-நாகர்) மொழி ஆகும். சூடானிக் ஒளி தொகுதியை சார்ந்தவை சாரி-நைல், சஹாரான், சொடுக்கு மொழிகள் ஆகும்.)
131) கீழ்க்கண்டவற்றுள் எது யூரல்-அல்டாயிக் மொழி தொகுதியை சார்ந்தது அல்ல?
A) துருக்கிய மொழி
B) மங்கோலிய மொழி
C) பாலினேசிய மொழி
D) துங்குயுசிக் மொழி
(குறிப்பு – யூரல்-அல்டாயிக் மொழி தொகுதியை சார்ந்தவை ஃபின்னோ-இக்ரிக் மொழி, துருக்கிய மொழி, மங்கோலிய மொழி, துங்குசிக் மொழி போன்றவையாகும்.)
132) கீழ்க்கண்டவற்றுள் எது திராவிடியன்-மலாயோ-பாலினேசியன் மொழித்தொகுதியை சார்ந்தது?
I. திராவிட மொழி
II. மலாயி மொழி
III. மெலனீசிய மொழி
A) I, II மட்டும்
B) II, III மட்டும்
C) I, III மட்டும்
D) இவை அனைத்தும்
(குறிப்பு – திராவிடியன்-மலாயோ-பாலினேசியன் மொழித்தொகுதியை சார்ந்தது திராவிட மொழி, மலாயி மொழி, மெலனீசிய மொழி, மைக்ரோனேசிய மொழி, பாலினேசிய மொழி என்பவையாகும்.)
133) பொருத்துக
I. சீன திபெத்திய மொழி – a) எகிப்திய மொழி
II. ஆப்ரோ-ஆசியாட்டிக் மொழி – b) பாலினேசிய மொழி
III. யூரல்-அல்டாயிக் மொழி – c) சைனீஸ்
IV. திராவிடியன் மொழி – d) மங்கோலிய மொழி
A) I-c, II-a, III-d, IV-b
B) I-b, II-a, III-c, IV-d
C) I-d, II-b, III-a, IV-c
D) I-b, II-c, III-a, IV-d
(குறிப்பு – ஜி. எல். ட்ரேஜ் என்பவர் உலக மொழிகளை ஏழு மொழி தொகுதிகளாக வகை படுத்தியுள்ளார். அவை இந்தோ-அரேபிய மொழி, சீன திபெத்திய மொழி, ஆப்ரோ-ஆசியாட்டிக் மொழி, ஆப்பிரிக்கன் மொழி, யூரல்-அல்டாயிக் மொழி, திராவிடியன்-மலாயோ-பாலினேசியன் மொழி மற்றும் பாலியோ ஆசியாட்டிக் மொழி என்பன ஆகும்.)
134) எத்தனை நாட்களுக்குள் ஒருமுறை ஒரு மொழி அழிந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது?
A) 10 நாட்களுக்குள்
B) 12 நாட்களுக்குள்
C) 14 நாட்களுக்குள்
D) 16 நாட்களுக்குள்
(குறிப்பு – இந்த நூற்றாண்டின் முடிவில் உலகில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது ஏறக்குறைய 7000 மொழிகள் அழிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக 14 நாட்களுக்குள் ஒரு மொழி அழிந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது)
135) 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
A) 180 மொழிகள்
B) 183 மொழிகள்
C) 185 மொழிகள்
D) 187 மொழிகள்
(குறிப்பு – இந்தியா ஒரு வளமான மொழியியல் பாரம்பரியம் கொண்ட நாடாகும். இது பலவகைப்பட்ட மொழிகளையும் பேச்சுவழக்கு மொழியையும் கொண்ட இன மற்றும் சமூகக் குழுக்களை கொண்டுள்ளது. 1961ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் 187 மொழிகள் பேசப்படுகின்றன.)
136) இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?
A) 20 மொழிகள்
B) 21 மொழிகள்
C) 22 மொழிகள்
D) 23 மொழிகள்
(குறிப்பு – இந்தியாவில் 97 சதவிகிதம் மக்களால் 23 முக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. ஆங்கிலம் தவிர்த்து 22 மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.)
137) கீழ்காணும் மொழிகளில் எது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை?
A) கன்னடம்
B) சிந்து
C) துளு
D) மைதிலி
(குறிப்பு – இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை காஷ்மீரி, பஞ்சாபி, ஹிந்தி, உருது, பெங்காலி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், சிந்தி, சமஸ்கிருதம், ஒரியா, நேபாளி, கொங்கணி, மணிப்புரி, போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி என்பன ஆகும்.)
138) தொடக்கத்தில் எத்தனை மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இருந்தது?
A) 12 மொழிகள்
B) 14 மொழிகள்
C) 16 மொழிகள்
D) 18 மொழிகள்
(குறிப்பு – தொடக்கத்தில் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 14 மொழிகள் இருந்தது. பின்னர் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் எட்டு மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் உள்ளது.)
139) எந்த ஆண்டு 21 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது?
A) 1961 இல்
B) 1963 இல்
C) 1965 இல்
D) 1967 இல்
(குறிப்பு – 1967 ஆம் ஆண்டு 21 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.)
140) 71 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிகளுள் அல்லாதது எது?
A) கொங்கனி
B) மணிப்புரி
C) சாந்தலி
D) நேபாளி
(குறிப்பு – 1992 ஆம் ஆண்டு 71 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டது.)
141) 92 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
A) 2001 ஆம் ஆண்டு
B) 2003 ஆம் ஆண்டு
C) 2005 ஆம் ஆண்டு
D) 2007 ஆம் ஆண்டு
(குறிப்பு – 2003 ஆம் ஆண்டு 92 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தளி ஆகிய மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.)
142) இந்திய மொழிகளில் உள்ள மொழிக் குடும்பங்களில் அல்லாதது எது?
A) ஆஸ்ட்ரிக்
B) திராவிடம்
C) சைனோ
D) சூடானிக்
(குறிப்பு – இந்திய மொழிகளில் முக்கியமாக நான்கு மொழி குடும்பங்கள் அடங்கியுள்ளன. அவை ஆஸ்ட்ரிக், திராவிடம், சைனோ மற்றும் இந்தோ ஆரியம் என்பதாகும்.)
143) கீழ்க்காணும் மொழிகளில் எது திராவிட மொழி அல்ல?
A) உருது
B) தெலுங்கு
C) கோண்டி
D) குருக்
(குறிப்பு – திராவிட மொழிகள் ஆவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் மற்றும் பல ஆகும். உருது என்பது இந்தோ ஆரிய மொழி ஆகும்.)
144) முண்டா மொழி கீழ்க்காணும் எந்த மொழிக்குடும்பத்தை சார்ந்தது?
A) ஆஸ்ட்ரிக்
B) திராவிடம்
C) சைனோ
D) இந்தோ ஆரிய
(குறிப்பு – ஆஸ்ட்ரிக் மொழி குடும்பம் முண்டா, மோன்-கிமர் ஆகிய மொழிகளை கொண்டது. திராவிட மொழிகள் ஆவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் மற்றும் பல ஆகும். ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் ஆகியவை இந்தோ-ஆரிய மொழிகள் ஆகும்.)
145) பொருத்துக
I. ஆஸ்ட்ரிக் – a) தமிழ்
II. திராவிடம் – b) போடோ
III. சைனோ – c) ஹிந்தி
IV. இந்தோ ஆரிய – d) முண்டா
A) I-d, II-a, III-b, IV-c
B) I-b, II-a, III-c, IV-d
C) I-d, II-b, III-a, IV-c
D) I-b, II-c, III-a, IV-d
(குறிப்பு – ஆஸ்ட்ரிக் மொழி குடும்பம் முண்டா, மோன்-கிமர் ஆகிய மொழிகளை கொண்டது. திராவிட மொழிகள் ஆவன தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் மற்றும் பல ஆகும். ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் ஆகியவை இந்தோ-ஆரிய மொழிகள் ஆகும்.)
146) பேச்சு வழக்கு என்பது எத்தனை வகைப்படுத்தபட்டுள்ளது?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – ஒரு பிரதேசத்தின் தனித்துவமான மொழி வடிவம் அல்லது சமூகக் குழு எதுவாக இருப்பினும் அதே மொழியில் பிற வடிவங்களில் பேச்சாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதை பேச்சுவழக்கு என்கிறோம். பேச்சு வழக்கு இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை புவியியல் சார்ந்த பேச்சு வழக்கு மற்றும் சமூக பேச்சு வழக்கு என்பது ஆகும்.)
147) இந்தியாவில் எத்தனை பேச்சு வழக்குகள் அழிந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது?
A) 25
B) 30
C) 40
D) 45
(குறிப்பு – இந்தியாவில் 40 க்கும் மேற்பட்ட மொழிகள் அல்லது பேச்சு வழக்குகள் அழிந்து வரும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்ற மொழிகள் அழிவை நோக்கி செல்வதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.)
148) இந்தியாவில் உள்ள பட்டியலிடப்படாத மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
A) 80
B) 100
C) 120
D) 130
(குறிப்பு – மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்தில் அறிக்கையின்படி, 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும், 100 பட்டியலிடப்படாத மொழிகளும் இந்தியாவில் உள்ளன.)
149) இந்தியாவில் எத்தனை மொழிகள் 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்களால் மட்டுமே பேசப்படுவதாக அறியப்பட்டுள்ளது?
A) 40 மொழிகள்
B) 42 மொழிகள்
C) 44 மொழிகள்
D) 46 மொழிகள்
(குறிப்பு – இந்தியாவில் 100 பட்டியலிடப்படாத மொழிகள் உள்ளன. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து 11 மொழிகளும், மணிப்பூரில் இருந்து 7 மொழிகளும் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து நான்கு மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் 42 மொழிகள் 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்களால் மட்டுமே பேசப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.)
150) யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்தான மொழிகள் பற்றிய ஆய்வின்படி குழந்தைகள் வீட்டிற்கு வெளியே பேசாத மொழிகளாக எத்தனை மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன?
A) 500 மொழிகள்
B) 600 மொழிகள்
C) 700 மொழிகள்
D) 800 மொழிகள்
(குறிப்பு – யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்தான மொழிகள் பற்றிய ஆய்வின்படி 600 மொழிகள் வீட்டிற்கு வெளியில் குழந்தைகள் பேசுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 646 மொழிகள் குழந்தைகள் பேசுவதே இல்லை என்று அறியப்பட்டுள்ளது.)
151) யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்தான மொழிகள் பற்றிய ஆய்வின் படி பழைய தலைமுறையினரால் மட்டுமே பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
A) 520 மொழிகள்
B) 523 மொழிகள்
C) 525 மொழிகள்
D) 527 மொழிகள்
(குறிப்பு – யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்தான மொழிகள் பற்றிய ஆய்வின்படி, 646 மொழிகள் குழந்தைகள் பேசுவது இல்லை எனவும், 600 மொழிகள் குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் பேசுவதில்லை எனவும், 527 மொழிகள் பழைய தலைமுறையினரால் மட்டுமே பேசப்படுகிறது எனவும், 577 மொழிகள் பழங்கால தலைமுறையின் ஒருசில உறுப்பினர்களால் மட்டுமே பேசப்படுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.)
152) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – பகிரப்பட்ட பண்பாடு அல்லது வரலாற்று அடிப்படையில் ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான மக்கள் குழுவினரை தேசம் என்கிறோம்.
கூற்று 2 – தேசங்கள் என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அலகாகும்.
கூற்று 3 – தேசம் என்பது இயற்கையால் கட்டமைக்கப்பட்டது அல்ல.
A) கூற்று 1, 2 மட்டும் சரி
B) கூற்று 2, 3 மட்டும் சரி
C) கூற்று 1, 3 மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – பகிரப்பட்ட பண்பாடு அல்லது வரலாற்று அடிப்படையில் ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான மக்கள் குழுவினரை தேசம் என்கிறோம். தேசங்கள் என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அலகாகும். தேசம் என்பது இயற்கையால் கட்டமைக்கப்பட்டது அல்ல. அவற்றின் இருப்பு, வரையறை மற்றும் உறுப்பினர்கள் சூழ்நிலைகளின் அடிப்படையில் வியத்தகு முறையில் மாறமுடியும்.)
153) அரசு என்பதற்கான சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. ஒரு அரசு என்பது சுதந்திரமான இறையாண்மை கொண்ட அரசாங்கம் ஆகும்.
II. ஒரு அரசு என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டது மற்றும் கட்டமைக்கப்பட்ட பகுதி மீது கட்டுப்பாட்டை கொண்டுள்ளது.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – ஒரு அரசு என்பது சுதந்திரமான இறையாண்மை கொண்ட அரசாங்கம் ஆகும். ஒரு அரசு என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டது மற்றும் கட்டமைக்கப்பட்ட பகுதி மீது கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. அதன் எல்லைகள் பொதுவாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அரசுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன.)
154) வைசாலி எந்த நூற்றாண்டில் ஒரு குடியரசாக நிறுவப்பட்டது?
A) பொ. ஆ. மு 5
B) பொ. ஆ. மு 6
C) பொ. ஆ. மு 7
D) பொ. ஆ. மு 8
(குறிப்பு – வைசாலி பொ. ஆ. மு 6 ஆம் நூற்றாண்டில் ஒரு குடியரசாக நிறுவப்பட்டது. இது பொ. ஆ. மு 563 ஆம் ஆண்டு கௌதம புத்தர் பிறப்பதற்கு முன் உலகின் முதல் குடியரசாக தோன்றியது.)
155) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – தேசம்-அரசு என்பது புவியியல், அரசியல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட அமைப்பு முறையாகும்.
கூற்று 2 – தேசமானது கலாச்சார அடையாளங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அரசு ஆட்சி நிர்வாகம் செய்கிறது
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – தேசம் – அரசு என்பது புவியியல், அரசியல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட அமைப்பு முறையாகும். தேசமானது கலாச்சார அடையாளங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அரசு ஆட்சி நிர்வாகம் செய்கிறது. ஒரு தேசமும் அரசும் தேசிய அடையாளத்தை பகிர்ந்து கொண்டு இயற்கை எல்லைகள் மற்றும் தனி அரசாங்கத்தை கொண்டிருக்க வேண்டும்.)
156) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – ஒரு தேசிய அரசு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பகுதியைக் கொண்ட ஒரு அரசியல் பிரிவாகும்.
கூற்று 2 – ஒரு தேசிய அரசு என்பது அங்கு வசித்து வரும் மக்களால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு போதுமான அதிகாரங்களை கொண்டிருக்க வேண்டும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – ஒரு தேசிய அரசு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பகுதியைக் கொண்ட ஒரு அரசியல் பிரிவாகும். ஒரு தேசிய அரசு என்பது அங்கு வசித்து வரும் மக்களால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு போதுமான அதிகாரங்களை கொண்டிருப்பதுடன் ஒரு குறிப்பிட்ட பிணைப்பு காரணிகளின் அடிப்படையில் ஒரு தேசமாக கருதப்படுகிறது.)
157) எல்லை என்பதன் சரியான பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது?
I. வெவ்வேறு இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பகுதி, ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவற்றால் சர்வதேச எல்லைப் புற மற்றும் எல்லைக்கோடுகள் பிரிக்கப்படுகின்றன.
II. ஒரு எல்லைப்புறம் என்பது ஒரு அரசியல் புவியியல் பகுதியாகும்.
A) I மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
(குறிப்பு – வெவ்வேறு இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பகுதி, ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவற்றால் சர்வதேச எல்லைப் புற மற்றும் எல்லைக்கோடுகள் பிரிக்கப்படுகின்றன. 1900 களில் இருந்த எல்லைப்புறங்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட தற்போது காணாமல் போய்விட்டன. அவை கோடுகளைக் கொண்ட எல்லைக்கோடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.)
158) உலகிலேயே மிக அதிகமாக அண்டை நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடு எது?
A) இந்தியா
B) சீனா
C) கனடா
D) இங்கிலாந்து
(குறிப்பு – உலகிலேயே மிக அதிகமான அண்டை நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடு சீனா ஆகும். சீனாவின் எல்லையில் அமைந்துள்ள நாடுகள் 14 நாடுகள் ஆகும்.)
159) சீன நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாத நாடு கீழ்க்கண்டவற்றுள் எது?
A) மங்கோலியா
B) ரஷ்யா
C) ஜப்பான்
D) வியட்நாம்
(குறிப்பு – சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியா. பாகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகிஸ்தான், மங்கோலியா, ரஷ்யா, வடகொரியா, வியட்நாம், லாவோஸ், மியான்மர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்.)
160) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. எல்லைப்புறம் என்பது இயற்கையாக உருவாகுபவை ஆகும்.
II. எல்லை புறம் என்பது மாறும். எல்லை என்பது மாறாது.
III. எல்லை புறம் என்பது பொதுவாக மலைப்பகுதி, பாலைவனப் பகுதி போன்றவையாக இருக்கும்.
IV. எல்லைக் கோடு என்பது கோட்டளவு கோட்பாடு ஆகும்.
A) I, II, III மட்டும் சரி
B) II, III, IV மட்டும் சரி
C) I, III, IV மட்டும் சரி
D) எல்லாமே சரி
(குறிப்பு – எல்லை புறம் என்பது இயற்கையாக உருவானவை. எல்லைக் கோடுகள் என்பதும் பெரும்பாலும் மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை. எல்லைப்புறம் என்பது பரப்பு கோட்பாடு. எல்லைக் கோடு என்பது கோட்டளவு கோட்பாடு. எல்லைப்புறமென்பது மாறும். எல்லைக் கோடுகள் நிலையானவை. ஏனெனில் ஒருமுறை முடிவு செய்தால் பின் மாற்றுவது கடினம்.)
161) உலகின் இரண்டாவது பெரிய நாடு எது?
A) இந்தியா
B) ரஷ்யா
C) கனடா
D) அமெரிக்கா
(குறிப்பு – உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா ஆகும். இது அமெரிக்காவுடன் மிக நீண்ட சர்வதேச எல்லை பகுதியை பகிர்ந்து கொள்கிறது. கனடா-அமெரிக்க நில எல்லைக்கோடு 8, 893 கிலோ மீட்டர் நீளம் உடையதாகும்.)
162) எல்லைக் கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு எத்தனை?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
(குறிப்பு – எல்லை கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு நான்கு ஆகும். அவை முந்தைய எல்லைக்கோடுகள், பின்தொடரும் எல்லைக்கோடுகள், அடுக்கமைவு எல்லைக்கோடுகள் மற்றும் எஞ்சிய எல்லைக்கோடுகள்.)
163) கீழ்க்காணும் எந்த எல்லை கோடுகள் அரசியல் கலாச்சார ஆட்சிப் பகுதிக்கு முன் வரையப்பட்டவை ஆகும்?
A) முந்தைய எல்லைக்கோடுகள்
B) பின்தொடரும் எல்லைக்கோடுகள்
C) அடுக்கமைவு எல்லைக்கோடுகள்
D) எஞ்சிய எல்லைக்கோடுகள்
(குறிப்பு – முந்தைய எல்லை கோடுகள் என்பவை அரசியல் கலாச்சார ஆட்சிப் பகுதிக்கு முன் வரையப்பட்டவை. இத்தகைய எல்லைக்கோடுகள் சர்ச்சைக்குரியவை அல்ல. எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லை கோடுகள்.)
164) புத்தகங்களில் மட்டுமே காணப்படும் வரலாற்று எல்லைக்கோடுகள் எது?
A) முந்தைய எல்லைக்கோடுகள்
B) பின்தொடரும் எல்லைக்கோடுகள்
C) அடுக்கமைவு எல்லைக்கோடுகள்
D) எஞ்சிய எல்லைக்கோடுகள்
(குறிப்பு – எஞ்சிய எல்லைக்கோடுகள் என்பது புத்தகங்களில் மட்டுமே காணப்படும் வரலாற்று எல்லைக்கோடுகள் ஆகும். எடுத்துக்காட்டாக பெர்சியா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த எல்லைக்கோடுகள் போன்றவைகளாகும்)
165) ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள எல்லைக்கோடுகள் கீழ்க்காணும் எந்த வகைபாட்டை சார்ந்தது?
A) முந்தைய எல்லைக்கோடுகள்
B) பின்தொடரும் எல்லைக்கோடுகள்
C) அடுக்கமைவு எல்லைக்கோடுகள்
D) எஞ்சிய எல்லைக்கோடுகள்
(குறிப்பு – கலாச்சார ஆட்சிப்பகுதி முழு வளர்ச்சியுற்ற போது அரசியல் எல்லைக்கோடுகள் சர்ச்சைகுரியவை. இத்தகைய எல்லைக்கோடுகள் ஒழுங்கற்ற அல்லது வடிவம் அல்லாத எல்லை கோடுகள் ஆகும். இவை பின்தொடரும் எல்லைக்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள எல்லைக் கோடுகள் ஆகும்.)
166) பொருத்துக
I. முந்தைய எல்லைக்கோடுகள் – a) கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையில்
II. பின்தொடரும் எல்லைக்கோடுகள் – b) ஐரோப்பிய நாடுகள்
III. அடுக்கமைவு எல்லைக்கோடுகள் – c) அமெரிக்க நாடுகளின் எல்லை கோடுகள்
IV. எஞ்சிய எல்லைக்கோடுகள் – d) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி
A) I-c, II-b, III-d, IV-a
B) I-b, II-a, III-c, IV-d
C) I-d, II-b, III-a, IV-c
D) I-b, II-c, III-a, IV-d
(குறிப்பு – எல்லை கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு நான்கு ஆகும். அவை முந்தைய எல்லைக்கோடுகள், பின்தொடரும் எல்லைக்கோடுகள், அடுக்கமைவு எல்லைக்கோடுகள் மற்றும் எஞ்சிய எல்லைக்கோடுகள் என்பனவாம்.)
167) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – புவிசார் அரசியல் என்பது ஒரு நாட்டின் அளவு மற்றும் அமைவிடம் அதன் அதிகாரத்தையும் மற்ற நாடுகளுடனான உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றிய படிப்பு ஆகும்.
கூற்று 2 – அரசியல் செயல்பாடு உலகில் உள்ள ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் இயற்கை அமைப்புகளால் பாதிக்கப்படுகிறது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத்தால் மாற்றியமைக்கப்பட்ட ஆட்சிக்கு உட்பட்ட பகுதி, மக்கள் தொகை, போர்த்திறன் வாய்ந்த இடம் மற்றும் இயற்கை வளங்களின் நன்கொடை போன்ற புவியியல் காரணிகள் அரசுகளுக்கு இடையிலான உறவுகளையும், போராட்டத்திற்கான முன்னோக்கிய ஆதிக்கத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதோடு தொடர்புடையது புவிசார் அரசியல் ஆகும்.)
168) உலக அரசியல் வரலாற்றை நில சக்தி மற்றும் கடல் சக்திகளுக்கு இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டம் என விவரித்தவர் யார்?
A) மெக்கிண்டர்
B) அலெக்ஸாண்டர்
C) சார்மாண்டர்
D) இவர்கள் யாரும் அல்ல
(குறிப்பு – புவிசார் அரசியல் என்பது உலக கண்டங்களை முன்னோக்கி வழிநடத்த போகிற சக்திக்கும் கடல் சக்திக்கும் இடையிலான யுத்தம் ஆகும். உலக அரசியல் வரலாற்றை நில சக்தி மற்றும் கடல் சக்திகளுக்கு இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டம் என மெக்கிண்டர் விவரித்தார். அவரின் கூற்றுப்படி நான்கு நூற்றாண்டுகளாக ஐரோப்பாவிற்கு முக்கிய அமைவிடத்தை வழங்கிய கடல் சக்திகளின் கொலம்பிய சகாப்தம் ஒரு முடிவுக்கு வருகிறது.)
169) மெக்கிண்டர் புவியை எத்தனை அடுக்குகளாக பிரித்தார்?
A) மூன்று அடுக்குகள்
B) நான்கு அடுக்குகள்
C) ஐந்து அடுக்குகள்
D) ஆறு அடுக்குகள்
(குறிப்பு – மெக்கிண்டர் கூற்றுப்படி நில சக்தி மற்றும் கடல் சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தில் நில சக்திக்கு இறுதி வெற்றி கிடைக்கும். அவர் புவியை மூன்று அடுக்குகளாக பிரித்தார். அவை மையப்பகுதி, உள் அல்லது விளிம்பு பிறைப்பகுதி மற்றும் வெளி அல்லது செவ்வக பிறை பகுதி.)
170) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஒட்டியுள்ள பகுதிகள் மெக்கிண்டர் வகுத்த எந்த புவி அடுக்கில் அமைந்துள்ளது?
A) மைய பகுதி
B) உள் அல்லது விளிம்பு பிறைப்பகுதி
C) வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி
D) இவை அனைத்தும் சரி
(குறிப்பு – ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஒட்டியுள்ள மைய நிலப்பகுதி, மற்றும் ஆப்பிரிக்காவில் சகாராவின் வடக்கு பகுதி போன்றவை மெக்கிண்டர் கூற்றுப்படி உள் அல்லது விளிம்பு பிறைப்பகுதி ஆகும்.)
171) ஆஸ்திரேலியா கீழ்காணும் எந்த புவி அடுக்கில் அமைந்துள்ளதாக மெக்கிண்டர் கூறுகிறார்?
A) மைய பகுதி
B) உள் அல்லது விளிம்பு பிறைப்பகுதி
C) வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி
D) இவை அனைத்தும் சரி
(குறிப்பு – வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி என்பது வட மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் சகாராவின் தெற்குப்பகுதி மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது. இரு யூரேசியாவிலிருந்து விலகி இருப்பதன் காரணமாக கிரேட் பிரிட்டனும், ஜப்பானும் இதில் அடங்கும்.)
172) மெக்கிண்டர் கருத்துப்படி எந்த நிலப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நாடு உலகை ஆளுவதற்கு தடையற்ற ஒரு அமைவிடத்தில் காணப்படும்?
A) மைய பகுதி
B) உள் அல்லது விளிம்பு பிறைப்பகுதி
C) வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி
D) இவை அனைத்தும் சரி
(குறிப்பு – மெக்கிண்டர் கருத்துப்படி மைய நிலப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நாடு உலகத்தை ஆளுவதற்கு தடை அற்ற ஒரு அமைவிடத்தில் காணப்படும். வேளாண் மற்றும் தொழில்துறை வளங்களைக் கொண்ட மைய நிலப்பகுதியானது உள் அல்லது விளிம்புப் பிறைபகுதியை வெல்லும், பின்னர் வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி அதை பின் தொடரும்.)
173) மைய நிலப்பகுதியை கட்டுப்படுத்துவதற்கான திறவுகோல் எங்கு அமைந்துள்ளதாக மெக்கிண்டர் கருதுகிறார்?
A) கிழக்கு ஐரோப்பா
B) தெற்கு ஐரோப்பா
C) மேற்கு ஐரோப்பா
D) வடக்கு ஐரோப்பா
(குறிப்பு – மெக்கிண்டர் கூற்றுப்படி மைய நிலப்பகுதியை கட்டுப்படுத்துவதற்கான திறவுகோல் கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. இது இடை அரசுகளை உருவாக்கி பலம்வாய்ந்த ஜெர்மனியையும் ரஷ்யாவையும் பிரிக்கவேண்டும் என்ற செய்தியுடன் தொடர்புடைய வெர்செல்லிசின் முந்தைய மற்றும் பிந்தைய புவியியல் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது என மெக்கிண்டர் கூறுகிறார்.)
174) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – கிழக்கு ஐரோப்பா வழியாக மைய நிலப்பகுதிக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.
கூற்று 2 – மைய நிலப்பகுதியை கிழக்கு ஐரோப்பா வழியாக மட்டுமே ஆக்கிரமிக்க முடியும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – கிழக்கு ஐரோப்பா வழியாக மையப்பகுதிக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. எனவே ஒரு நுழைவாயிலை பாதுகாப்பது மொத்த நிலப் பகுதியையும் பாதுகாப்பதை விட மிக எளிதாக இருக்கும். மேலும் மைய நிலப்பகுதியானது பெரும்பாலான வளங்களுடன் தன்னிறைவு பெற்று இருக்கிறது. எனவே வர்த்தக ரீதியாக வெளி உலகத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை.)
175) பிரிக்ஸ் (BRICS) வடிவத்தை விரிவுபடுத்த வேண்டிய சமீபத்திய திட்டங்களில் ஒன்று கீழ்க்கண்டவற்றுள் எது?
A) பிரிக்ஸ் பிளஸ் உத்திகள்
B) பிரிக்ஸ் சம்மன் கூட்டமைப்பு
C) பிரிக்ஸ் + ஷாங்காய் கூட்டமைப்பு
D) எல்லாமே தவறு
(குறிப்பு – பிரிக்ஸ் வடிவத்தை விரிவுபடுத்த வேண்டிய சமீபத்திய திட்டங்களில் ஒன்று பிரிக்ஸ் பிளஸ் உத்திகள் என்று அழைக்கப்படுகிறது. அடிப்படையில் ஐநாவின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைப்புகளிடையே பன்முக ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே முக்கியமாக விரும்புகின்றன.)
176) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 – உலகின் மீதான அமெரிக்க ஆதிக்கத்தின் அடிப்படை என்பது இராணுவ நடவடிக்கைகளால் செயல்படுத்தப்படும் பொருளாதார வழிமுறைகளாகும்.
கூற்று 2 – அமெரிக்காவின் ஏவுகணை கேடயங்கள் அல்லது அதன் விண்வெளி தொடர்பான ஆயுதங்கள் எந்த ஒரு நாட்டின் அணு ஆயுத அமைப்பின் முக்கியக் கூறுகளான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையில் இருந்து நாடு பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
(குறிப்பு – அமெரிக்காவின் ஏவுகணை கேடயங்கள் அல்லது அதன் விண்வெளி தொடர்பான ஆயுதங்கள் எந்த ஒரு நாட்டின் அணு ஆயுத அமைப்பின் முக்கியக் கூறுகளான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையில் இருந்து நாடு பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாகும். ரஷ்யா சீனா மற்றும் மற்ற நாடுகளிடமிருந்து அதிகரித்துவரும் போட்டியினால் உலகம் முழுவதும் திறந்த வெளிகளில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அமெரிக்க கடற்படை போட்டியிடுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.)