Advanced Tamil Questions

ஊடகவியல் 12th Advanced Tamil Unit 3 Questions

12th Advanced Tamil Unit 3 Questions

3] ஊடகவியல்

1) Twitter – என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) அங்கவேகம்

B) சமிக்ஞை

C) கீச்சகம்

D) புலனம்

விளக்கம்: அங்கவேகம் – Tempo

சமிக்ஞை- Signal

கீச்சகம்- Twitter

புலனம்– Whatsapp.

2) எந்த ஆண்டு மார்க்கோனி கம்பில்லாத் தந்தி சேவை நிறுவனத்தைத் தொடங்கினார்?

A) 1897

B) 1887

C) 1893

D) 1894

விளக்கம்: 1897ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். அட்லாண்டிக் கடலின் குறுக்கே கார்ன்வாலில் இருந்து நியூபவுண்லாந்து வரை செய்திகளை அனுப்பினார். இவருக்கு 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நேபால் பரிசு வழங்கப்பட்டது.

3) குலீல்மோ மர்க்கோனி வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகத் தன் வீட்டையே ஆராய்ச்சிக்கூடமாக மாற்றினார். நீண்ட நாள்களாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவாகக் கம்பில்லாத் தந்தி முறையில் செய்திகளைத் தொலைதூரத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். இக்கண்டுபிடிப்பை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார். இவர் எந்த நாட்டு அறிஞர்?

A) ஜெர்மனி

B) இத்தாலி

C) பிரான்சு

D) அமெரிக்கா

விளக்கம்: இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மர்க்கோனி வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகத் தன் வீட்டையே ஆராய்ச்சிக்கூடமாக மாற்றினார். நீண்ட நாள்களாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவாகக் கம்பில்லாத் தந்தி முறையில் செய்திகளைத் தொலைதூரத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். இக்கண்டுபிடிப்பை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்.

4) எந்த ஆண்டு அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது?

A) 1957

B) 1956

C) 1952

D) 1974

விளக்கம்: தொடக்க காலத்தில் படம்பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட்டன. 1956இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்பம் கொண்ட படப்பிடிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

5) 1982ஆம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவில் அறிமுகமானது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது எது?

A) குடியரசு தின விழா

B) சுதந்திர தின விழா

C) காந்தி ஜெயந்தி விழா

D) ஆங்கிலப் புத்தாண்டு விழா

விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1959-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பாயின. பின்பு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் சுந்திரதினவிழாப் பேருரையே முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

6) ஐ.நா.சபை1975ஆம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்தது?

A) உலக குழந்தைகள் ஆண்டு

B) உலகப் பெண்கள் ஆண்டு

C) உலக ஆண்கள் ஆண்டு

D) உலக வயது முதிர்ந்தோர் ஆண்டு

விளக்கம்: ஐ.நா.அவை 1975 ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது. அவ்வாண்டில் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்திலும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

7) எப்போது இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது?

A) 1997

B) 1998

C) 1999

D) 2000

விளக்கம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority of India).

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

8) ISBS என்ற சொல்லின் சரியான விரிவாக்கத்தை கண்டுபிடி.

A) Indian State Broard casting Service

B) Indian State Broad of Service

C) Indian Service of Broad casting Scheme

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை (Indian State Broard casting Service) தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது.

9) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது.

2. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டது.

10) இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க

A) இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்கள் – கவியரங்கம்

B) இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களம் – பட்டிமன்றங்கள்

C) ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சிகள் – வழக்காடு மன்றம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்கள் – கவியரங்கம்.

இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களம் – பட்டிமன்றங்கள்

ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சிகள் – வழக்காடு மன்றம்.

சிறந்த மேடைப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் – சொற்பொழிவு

11) யார் “ரேடியோ” என்ற சொல்லுக்குத் தமிழில் வானொலி என்ற சொல்லை முன்மொழிந்தார்?

A) மு.வரதராசனார்

B) டி.கே.சிதம்பரனார்

C) பாரதிதாசன்

D) கவிமணி

விளக்கம்: டி.கே.சிதம்பரனார் “ரேடியோ” என்ற சொல்லுக்குத் தமிழில் வானொலி என்ற சொல்லை முன்மொழிந்தார். ஆல் இந்தியா ரேடியோ, ஆகாஷவாணி என்று முழங்கி வந்த நிலையில் முதன்முதலில் திருச்சி வானொலி நிலையம் 1959இல் திருச்சி வானொலி நிலையம் என்று அறிவித்தது. அதன்பிறகு வானொலி என்ற சொல்லை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

12) உலகத் தொலைக்காட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) நவம்பர் 21

B) நவம்பர் 12

C) மார்ச் 21

D) பிப்ரவரி 13

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

13) உஷா மேத்தா எப்போது வானொலி நிலையத்தை தொடங்கினார்?

A) 1942 ஆகஸ்ட் 15

B) 1940 ஆகஸ்ட் 15

C) 1947 ஆகஸ்ட் 15

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

14) அலுவலக இரகசியங்கள் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

A) 1922

B) 1923

C) 1924

D) 1925

விளக்கம்: ஊடகமானது நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடி என்ற நோக்கில் எல்லாவற்றையும் வெளியிடுதல் கூடாது. நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, குற்றப்புலனாய்வு, அமைச்சரவை முடிவு போன்றவற்றை ரகசியமாக அறிந்து அவற்றை வெளியிடுவது பெரும் குற்றமாகும். இதைத் தடை செய்ய 1923ஆம் ஆண்டில் அலுவலக இரகசியங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது.

15) எந்த ஆண்டு குலீல்மோ மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

A) 1906

B) 1909

C) 1913

D) 1907

விளக்கம்: 1897ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். அட்லாண்டிக் கடலின் குறுக்கே கார்ன்வாலில் இருந்து நியூபவுண்லாந்து வரை செய்திகளை அனுப்பினார். இவருக்கு 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

16) குலீல்மோ மார்க்கோனி 1897ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். தனது அடுத்த முயற்சியின் விளைவாக எத்தனை மைல் தொலைவிற்குச் செய்திகளை அனுப்பி வெற்றிகண்டார்?

A) 1400

B) 1800

C) 2700

D) 1200

விளக்கம்: 1897ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். அட்லாண்டிக் கடலின் குறுக்கே கார்ன்வாலில் இருந்து நியூபவுண்லாந்து வரை செய்திகளை அனுப்பினார். இவருக்கு 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தமது அடுத்த முயற்சியின் விளைவாக 1800 மைல் தொலைவிற்குச் செய்திகளை அனுப்பி வெற்றிகண்டார்.

17) உலகத்தின் முதல் வானொலி நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

A) பீட்ஸ்பர்க் நகர்

B) பீட்டர்மரிட்ஸ் பர்க் நகர்

C) வாஷிங்டன்

D) இலண்டன்

விளக்கம்: உலகத்தின் முதல் வானொலி நிலையம் 1920ஆம் ஆண்டு அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது. “அமெரிக்க ஜனாதிபதியாக ஹார்டிங்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்பதே இதில் ஒளிபரப்பப்பட்ட முதல் செய்தியாகும்.

18) 1952 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 1952 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் உரிமையியல், குற்றவியல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. நீதிமன்ற ஆணைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட மறுப்பது உரிமையியல் வழக்காகவும் ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்புவது குற்றவியல் வழக்காகவும் பதிவு செய்யப்படும். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் ஆறுமாதம் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

19) எந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி புதுதில்லியில் தொடங்கப்பட்டது?

A) 1956

B) 1958

C) 1950

D) 1959

விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1959-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பாயின. பின்பு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் சுந்திரதினவிழாப் பேருரையே முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

20) இந்தியக் குற்றவியல் சட்டத்தில் சில பிரிவுகள் எவை எவை ஆபாசம் எனப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இதில் பொருந்தாதது எது?

A) 291

B) 292

C) 293

D) 294

விளக்கம்: இந்தியக் குற்றவில் சட்டத்தில் 292, 293, 294 முதலானப் பிரிவுகள் எவை எவை ஆபாசம் எனப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

21) யார் இயற்றிய சிலப்பத்திகார நாடகநூல் ‘நுபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது?

A) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

B) ரா.அய்யாசாமி

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: வெ.நல்லத்தம்பி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார். இவது சிலப்பதிகார நாடகநூல் ‘நுபுர் க ஸ்வர்’ என் பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது.

22) கூற்றுகளை ஆராய்க.

1. ஐ.நா.அவை1975ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது.

2. 1983இல் இன்சாட் 1பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஐ.நா.அவை 1975ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது.

2. 1983இல் இன்சாட் 1பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டன.

23) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன் எந்த மொழிகளில் தன் வானொலி ஒளிபரப்பைத் தொடங்கியது?

A) ஆங்கிலம்

B) இந்திய மொழி

C) உருது

D) தமிழ்

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

24) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம் பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றி கூறுகிறது.

B) 1959ஆம் ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டத்தின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தீய நோக்கில் வெளியிட்டன என உறுதி செய்யப்பட்டால் தண்டனை வழங்கலாம்.

C) 1973ஆம் ஆண்டின் வழக்குத்தொடர்விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

D) 1952ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் உரிமையியல், குற்றவியல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

விளக்கம்: 1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டத்தின்படி நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தீய நோக்கில் வெளியிட்டன என உறுதி செய்யப்பட்டால் தண்டனை வழங்கலாம்.

25) இரண்டாவது, ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியுள்ளவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: இரண்டாவது, ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியுள்ளவர் நல்லத்தம்பி ஆவார்.

26) சென்னை வானொலியில் பாலராமாயணத்துடன் மோனக காந்தி என்னும் நிகழ்ச்சியையும் வழங்கி வானொலிக்குப் பெருமை சேர்த்தவர் யார்?

A) ர.அய்யாசாமி

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: ர.அய்யாசாமி என்பவர் சென்னை வானொலியில் பாலராமாயணத்துடன் மோகன காந்தி என்னும் நிகழ்ச்சியையும் வழங்கி வானொலிக்குப் பெருமை சேர்த்தார். இவரது நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பப்பட்டன.

27) உலக பொம்மலாட்டத்தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) நவம்பர் 21

B) நவம்பர் 12

C) மார்ச் 21

D) பிப்ரவரி 13

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

28) கல்வியைத் தரமானதாகவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. எந்த ஆண்டின் நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது?

A) 1976

B) 1984

C) 1970

D) 1956

விளக்கம்: கல்வியைத் தரமானதாகவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. 1976ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது. இதனால் ஊக்கம் பெற்ற இந்தியக் கல்வியாளர்கள் தொலைக்காட்சியைக் கல்வி வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

29) சென்னைத் தொலைக்காட்சியில் ‘கண்மணிப்பூங்கா’ என்னும் நிகழ்ச்சியில் யாருடைய பொம்மலாட்டம் இடம்பெற்றது?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) துகிலி.சுப்பிரமணியம்

D) நல்லத்தம்பி

விளக்கம்: சென்னைத் தொலைக்காட்சியில் ‘கண்மணிப்பூங்கா’ என்னும் நிகழ்ச்சியில் முத்துக்கூத்தனின் பொம்மலாட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, குடும்பநலம், இயற்கை, வேளாண்மை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வுக் கதைகள் பொம்மலாட்டங்களில் நிகழ்த்தப்பட்டன.

30) கூற்றுகளை ஆராய்க.

1. 1809ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தைத் தொடங்கினார்.

2. இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மர்க்கோனிக்கு 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1897ஆம் ஆண்டு மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி சேவை நிறுவனத்தை தொடங்கினார். ஒலிபரப்பிற்குத் தேவையான கருவிகளையும் அவரே உருவாக்கினார். அட்லாண்டிக் கடலின் குறுக்கே கார்ன்வாலில் இருந்து நியூபவுண்லாந்து வரை செய்திகளை அனுப்பினார். இவருக்கு 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

31) கூற்று: குலீல்மோ மார்க்கோனி என்பவர் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

காரணம்: 1800 மைல் தொலைவிற்குச் செய்திகளை அனுப்பி வெற்றிகண்டார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: மார்க்கோனி 1800 மைல் தொலைவிற்குச் செய்திகைள அனுப்பி வெற்றிகண்டார். இதனால் இவர் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

32) 1909ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு குலீல்மோ மார்க்கோனிக்கு வழங்கப்பட்டது. இவருடன் இணைந்து அப்பரிசை பெற்றவர் யார்?

A) பெர்டினாண்ட் பிரவுன்

B) ஹார்டிங்கஸ்

C) ஜான்லெகி பெயர்டு

D) அலெக்சாண்டர் பிளம்மிங்

விளக்கம்: இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்க்கோனி என்பவர் வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு 1909 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானிய அறிஞரும் இவருடன் இணைந்து இப்பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

33) வெ.நல்லதம்பி என்பவர் சில காப்பியங்களை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார். இதில் பொருந்தாதது எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: வெ.நல்லத்தம்பி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார். இவது சிலப்பதிகார நாடகநூல் ‘நுபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது.

34) கூற்று 1: இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய வளத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கென நிதிகள் ஒதுக்கப்பட்டன

கூற்று 2: இதில் வானொலிச் சேவையினை விரிவுபடுத்தும் பணிக்காக ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் புதிய வானொலி நிலையங்களும் ஒலிபரப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) இரண்டு கூற்றும் சரி

D) இரண்டும் கூற்றும் தவறு

விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய வளத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கென நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் வானொலிச் சேவையினை விரிவுபடுத்தும் பணிக்காக ஒவ்வோர் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் புதிய வானொலி நிலையங்களும் ஒலிபரப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டன

35) இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் பயன்படுத்தப்படுவது எது?

A) பண்பலை

B) ஹாம் வானொலி

C) அமச்சூர் வானொலி

D) B மற்றும் C

விளக்கம்: இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாம் வானொலியில் தகவல்களைப் பெறவும் ஒலிபரப்பவும் முடியும். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் அறவே செயலற்றுவிடுகின்றன. அச்சூழலில் நமக்குக் கை கொடுத்து உதவுவது, ஹாம் வானொலிகள் மட்டுமே. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

36) கூற்று: தற்காலத்தில் தொலைகாட்சியில் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

காரணம்: தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தொடக்க காலத்தில் படம்பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட்டன. 1956இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்பம் கொண்ட படப்பிடிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

37) உஷா மேத்தா எப்போது பிறந்தார்?

A) 1920 மார்ச் 24

B) 1921 மார்ச் 24

C) 1922 மார்ச் 24

D) 1923 மார்ச் 24

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

38) சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் பாலஇராமாயணத்தை இயற்றி, இசை வடிவில் வானொலியின் மூலம் கொண்டு சேர்த்தவர், ர.அய்யாசாமி ஆவார். இதற்கு இசையமைத்தவர் யார்?

A) விஸ்வநாதன்

B) ராமமூர்த்தி

C) மல்லிக்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வகையில் பாலராமாயணம் இயற்றி இசைவடிவில் வானொலியின் மூலம் கொண்டு சேர்த்தவர் ர.அய்யாசாமி ஆவார். இதற்கு இசையமைத்தவர் மல்லிக் என்பவர் ஆவார்.

39) கூற்றுகளை ஆராய்க.

1. கல்வியைத் தரமானதாகவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. 1976ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது.

2. 1956ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கல்வியைத் தரமானதாகவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. 1976ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது..

2. 1956ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது.

40) இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி எங்கு தொடங்கப்பட்டது?

A) கொல்கத்தா

B) புதுடெல்லி

C) மும்பை

D) பெங்களுரு

விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1959-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பாயின. பின்பு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் சுந்திரதினவிழாப் பேருரையே முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

41) 1973-ஆம் ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் இதில் விதிவிலக்காக அரசு வழக்குரைஞர் சிலருக்காக வழக்கு தொடுக்கலாம். இதில் பொருந்தாதவர் யார்?

A) குடியரசுத்தலைவர்

B) குடியரசுத் துணைத்தலைவர்

C) மத்திய மாநில அமைச்சர்கள்

D)பாராளுமன்ற உறுப்பினர்கள்

விளக்கம்: 1973-ஆம் ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோர் அவமதிப்புக்கு ஆளானால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடுக்கலாம்.

42) ர.அய்யாசாமி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இவர் வானொலி அண்ணா என்று அழைக்கப்படுகிறது

B) இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சிக்கு அருகில் உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் பிறந்தவர்.

C) கல்லூரி படிப்பிற்குப் பிறகு ‘இந்தியா’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

D) 1944ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியேற்றார்.

விளக்கம்: கல்லூரி படிப்பிற்குப் பிறகு ‘தமிழ்நாடு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

43) இந்தியாவின் முதல் வானொலி நிலையம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1909

B) 1920

C) 1924

D) 1927

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

44) உலகத்தின் முதல் வானொலி நிலையம் எந்த ஆண்டு அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது?

A) 1909

B) 1913

C) 1918

D) 1920

விளக்கம்: உலகத்தின் முதல் வானொலி நிலையம் 1920ஆம் ஆண்டு அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது. “அமெரிக்க ஜனாதிபதியாக ஹார்டிங்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்பதே இதில் ஒளிபரப்பப்பட்ட முதல் செய்தியாகும்.

45) கூற்று: 1975ஆம் ஆண்டில் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்திலும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

காரணம்: ஐ.நா.அவை 1975ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: ஐ.நா.அவை 1975ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது. அவ்வாண்டில் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்திலும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

46) TRAI என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன?

A) Telecommunication Regulatory Authority of India

B) Telecom Regulatory Authority of India

C) Telecom Regulation Authority of India

D) Telecommunication Regulatory Authority of India

விளக்கம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority of India).

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

47) கூற்று: பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

காரணம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

48) ர.அய்யாசாமி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) இவர் சிறுவர்களுக்கான ‘பாப்பா மலர்’ மற்றும் ‘முத்துக்குவியல்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 12 ஆண்டுகள் ஒலிபரப்பாயிற்று

B) கவிமணியின் கனவை நிறைவேற்றும் வகையில் பாலராமாயணம் இயற்றினார்.

C) இவரின் பாலராமாயணத்திற்கு மல்லிக் என்பவர் இசையமைத்துள்ளார்.

D) இரண்டாவது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நடத்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தினார்.

விளக்கம்: இரண்டாவது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நடத்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியவர் நல்லத்தம்பி ஆவார்.

49) கூற்றுகளை ஆராய்க.

1. கையுறை பொம்மலாட்டம் என்று அழைக்கப்படுவது பாவைக்கூத்து, பொம்மலாட்டம் ஆகும்

2. தமிழில் பொம்மலாட்டக் கலைக்குப் பெருமை சேர்த்தவர் முத்துக்கூத்தன் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பாவைக்கூத்து என்றும் பொம்மலாட்டம் என்றும் சொல்லப்படும் கையுறை பொம்மலாட்டம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பரவியுள்ளது.

தமிழில் பொம்மலாட்டக் கலைக்குப் பெருமை சேர்த்தவர் முத்துக்கூத்தன் ஆவார்.

50) சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் எளிய நடையில் பாலஇராமாயணத்தை இயற்றி அதனை இசைவடிவில் வானொலி மூலம் கொண்டு சேர்த்தவர் யார்?

A) சோமசுந்தரபாரதியார்

B) கவிமணி

C) கண்ணதாசன்

D) ர.அய்யாசாமி

விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் “ராமாயணக்கதையினைத் தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழக் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கவிமணியின் கனவை நிறைவேற்றும் வகையில் ர.அய்யாசாமி பாலராமாயணம் இயற்றினார். இதனை இசை வடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலியில் கொண்டு சென்றார்.

51) சென்னைத் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கியவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: சென்னைத் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று ‘எதிரொலி நல்லதம்பி’ என்று அழைக்கப்படுபவர் முனைவர் வெ.நல்லத்தம்பி. இவர் பள்ளிப் படிப்பை மணப்பாறையிலும், பட்டப்படிப்பினை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

52) பொது ஒலிபரப்புநாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) நவம்பர் 21

B) நவம்பர் 12

C) மார்ச் 21

D) பிப்ரவரி 13

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மாலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

53) தமிழில் மட்டுமின்றி விஜயவாடாவில் தெலுங்கிலும், கோழிக்கோட்டில் மலையாளத்திலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கியவர் யார்?

A) ர.அய்யாசாமி

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: ர.அய்யாசாமி என்பவர் தமிழில் மட்டுமின்றி விஜயவாடாவில் தெலுங்கிலும் கோழிக்கோட்டில் மலையாளத்திலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

54) 2008ஆம் ண்டு கீழ்க்காணும் யாருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது?

A) சரோஜ் நாராயணசுவாமி

B) துகிலி.சுப்பிரமணியம்

C) ர.அய்யாசாமி

D) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

விளக்கம்: ‘ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி’ என்ற குரலை வானொலியில் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. 40 ஆண்டுகாலம் ஒலிபரப்புத் துறையில் சிறப்பாகச் செய்தி வாசித்தமைக்காகத் தமிழக அரசு இவருக்கு 2008ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இதுவே செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருதாகும்.

55) எந்தெந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்?

A) சீனா, ரஷ்யா

B) பிரிட்டன், பிரான்ஸ்

C) அமெரிக்கா, ஜப்பான்

D) வடகொரியா, தென்கொரியா

விளக்கம்: இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாம் வானொலியில் தகவல்களைப் பெறவும் ஒலிபரப்பவும் முடியும். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் அறவே செயலற்றுவிடுகின்றன. அச்சூழலில் நமக்குக் கை கொடுத்து உதவுவது, ஹாம் வானொலிகள் மட்டுமே. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப்பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

56) இந்தியாவின் முதல் வானொலி நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

A) கொல்கத்தா

B) சென்னை

C) மும்பை

D) டெல்லி

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்படுகிறது.

57) கூற்றுகளை ஆராய்க.

1. 1956இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது.

2. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தொடக்க காலத்தில் படம்பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட்டன. 1956இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்பம் கொண்ட படப்பிடிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digial) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

58) கூற்று: தொலைக்காட்சியை கல்விக்கான ஓர் ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் இந்தியக் கல்வியாளர்கள் ஈடுபட்டனர்.

காரணம்: 1976ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கல்வியைத் தரமானதாகவும் பரவலாக்கவும் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்படுகிறது. 1976ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது. இதனால் ஊக்கம் பெற்ற இந்தியக் கல்வியாளர்கள் தொலைக்காட்சியைக் கல்வி வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

59) ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சி _______________எனப்படும்.

A) கவியரங்கம்

B) பட்டிமன்றம்

C) வழக்காடு மன்றம்

D) சொற்பொழிவு

விளக்கம்: இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்கள் – கவியரங்கம்.

இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களம் – பட்டிமன்றங்கள்

ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சிகள் – வழக்காடு மன்றம்.

சிறந்த மேடைப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் – சொற்பொழிவு

60) 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்த உஷா மேத்தா தனது எத்தனையாவது வயதில் வானொலி நிலையத்தை உருவாக்கினார்?

A) 24

B) 28

C) 22

D) 29

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதல் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

61) பிபிசி-யில் தமிழ் ஒலிபரப்பு எப்போது தொடங்கப்பட்டது?

A) 1941 மே 3

B) 1942 மே 2

C) 1941 மே 2

D) 1942 மே 3

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

62) இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் _________________இன் _______________ஆவது பிரிவு வழிவகை செய்கிறது.

A) 1997, 2

B) 1996, 2

C) 1997, 3

D) 1996, 3

விளக்கம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ((TRAI – Telecom Regulatory Authority of India).

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

63) இந்திய குற்றவியல் சட்டத்தின் எத்தனையாவது பிரிவு அவமதிப்புக்கான தண்டனைகள் பற்றி கூறுகிறது?

A) 498

B) 499

C) 500

D) 501

விளக்கம்: ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைகள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம், பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றியும், 500ஆம் பிரிவு தண்டனைகள் பற்றியும் விளக்குகிறது.

64) எந்த ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்?

A) 1977

B) 1981

C) 1972

D) 1973

விளக்கம்: 1973 ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோர் அவமதிப்பு ஆளானால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடுக்கலாம்.

65) யாருடைய கனவை நிறைவேற்றும் வகையில் ர.அய்யசாமி பாலராமாயணத்தை இயற்றினார்?

A) பாரதிதாசன்

B) கவியோகி

C) கவிமணி

D) வாணிதாசன்

விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் “ராமாயணக்கதையினைத் தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கவிமணியின் கனவை நிறைவேற்றும் வகையில் இவர் பாலராமாயணத்தை இயற்றினார்

66) தவறான கூற்றை தேர்வு செய்க.

A) இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 500ஆம் பிரிவு ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுபவருக்கான தண்டனைகள் பற்றி விளக்குகிறது

B) இந்தியக் குற்றவியல் சட்டத்தில் 292, 293, 294 முதலான பிரிவுகள் எவை எவை ஆபாசம் எனப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

C) 1956-இல் இளைஞர்களைக் கெடுக்கும் வெளியீடுகள் தடைச்சட்டம் அரசால் நிறைவேற்றப்பட்டது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 500ஆம் பிரிவு ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுபவருக்கான தண்டனைகள் பற்றி விளக்குகிறது

இந்தியக் குற்றவியல் சட்டத்தில் 292, 293, 294 முதலான பிரிவுகள் எவை எவை ஆபாசம் எனப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

1956-இல் இளைஞர்களைக் கெடுக்கும் வெளியீடுகள் தடைச்சட்டம் அரசால் நிறைவேற்றப்பட்டது.

67) வானொலி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை எது?

A) பண்பலை

B) இணையத்தள வானொலி

C) தொலைக்காட்சி

D) திரையரங்கம்

விளக்கம்: வானொலி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை பண்பலை (FM). பொழுதுபோக்கு நிகழ்ச்சிசகளை மையப்படுத்தித் தொடங்கப்பட்டவையே பண்பலைகள். இவை வானொலி வருணணையாளர்களை (ரேடியோ ஜாக்கி) முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அரசு பண்பலை நிலையங்களும் முறையான உரிமம் பெற்ற தனியார் பண்பலை நிலையங்களும் உலகெங்கிலும் தமது ஒலிபரப்புச் சேவையினைச் சிறப்பாகச் செய்துவருகின்றன.

68) கூற்று: இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது..

காரணம்: இந்த வானொலி விரைவாகவும், சத்தமாகவும் தகவல்களை வழங்கும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும், மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாம் வானொலியில் தகவல்களைப் பெறவும் ஒலிபரப்பவும் முடியும். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் அறவே செயலற்றுவிடுகின்றன. அச்சூழலில் நமக்குக் கை கொடுத்து உதவுவது, ஹாம் வானொலிகள் மட்டுமே. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

69) இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இதில் கீழக்காணும் எது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது?

A) சென்னை மாநில வானொலிக் குழு

B) மும்பை மாநில வானொலிக் குழு

C) பெங்களுரு மாநில வானொலிக் குழு

D) டெல்லி மாநில வானொலிக் குழு

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும்அழைக்கப்படுகிறது.

70) எந்த ஆண்டு ரேடியோ என்ற சொல்லை மாற்றி வானொலி என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக, திருச்சி வானொலி நிலையம் என்று அறிவித்தது?

A) 1956

B) 1957

C) 1958

D) 1959

விளக்கம்: டி.கே.சிதம்பரனார் “ரேடியோ” என்ற சொல்லுக்குத் தமிழில் வானொலி என்ற சொல்லை முன்மொழிந்தார். ஆல் இந்தியா ரேடியோ, ஆகாஷவாணி என்று முழங்கி வந்த நிலையில் முதன்முதலில் திருச்சி வானொலி நிலையம் 1959இல் திருச்சி வானொலி நிலையம் என்று அறிவித்தது. அதன்பிறகு வானொலி என்ற சொல்லை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

71) எந்த ஆண்டு இளைஞர்களைக் கெடுக்கும் வெளியீடுகள் தடைச்சட்டம் அரசால் நிறைவேற்றப்பட்டது?

A) 1955

B) 1956

C) 1957

D) 1958

விளக்கம்: 1956இல் இளைஞர்களைக் கெடுக்கும் வெளியீடுகள் தடைச்சட்டம் அரசால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, குற்றங்களைத் தூண்டுகின்ற நிகழ்ச்சி, வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சி, அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, இளைஞர்களைக் கெடுக்கும் விளம்பர நிகழ்ச்சி இவையெல்லாம் ஒளிபரப்பத் தடை செய்யப்பட்டுள்ளது.

72) ‘டெலிவிஷன்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ‘தொலைக்காட்சி’ என்னும் தமிழ்ச்சொல்லை உருவாக்கியவர் யார்?

A) ர.அய்யாசாமி

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: ‘டெலிவிஷன்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க முயன்றபோது பலரும் பல சொற்களை உருவாக்கியளித்தனர். இருப்பினும் வெ.நல்லத்தம்பி அவர்கள் முன்மொழிந்த ‘தொலைக்காட்சி’ என்ற சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

73) கீழ்க்காணும் யாருடைய கல்விப் பணியினைப் பாராட்டி ‘மால்கம் ஆதிசேஷய்யா’ என்னும் விருது வழங்கியுள்ளனர்?

A) ர.அய்யாசாமி

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: வெ.நல்லதம்பி என்பவர் ஓய்வுக்குப் பின் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையத்தில் சிறப்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், இவரது கல்விப் பணியினைப் பாராட்டி ‘மால்கம் ஆதிசேஷய்யா’ என்னும் விருது வழங்கியுள்ளர்.

74) கூற்று: வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவதை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவது எளிதான செயலாகும்.

காரணம்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எழுத்துக்கலையைவிட நடிப்புக்கலை முதன்மை இடத்தைப் பெறுகின்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி.

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவதை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுதுவது எளிதான செயலாகும். தொலைக்காட்சியில் காட்சிகளின் மூலம் கதாப்பாத்திரங்கள், சூழல், மெய்ப்பாடுகள் முதலானவற்றை வெளிப்படுத்த முடியும். இதில் எழுத்துக்கலையைவிட நடிப்புக்கலை முதன்மை இடத்தைப் பெறுகின்றது.

75) தவறான கூற்றை ஆராய்க.

A) நிலையத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பும் சிற்றுந்துகளையே ‘நடமாடும் ஒளிபரப்புக்கூடம்’ என்று அழைக்கிறோம்.

B) நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்தே நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்புவதுவெளிப்புற ஒலி-ஒளிபரப்பு வாகனம்

C) 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனம் – மின்னனு செய்தி சேகரிப்பு வாகனம்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நிலையத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தொலைகக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பும் சிற்றுந்துகளையே ‘நடமாடும் ஒளிபரப்புக்கூடம்’ என்று அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்தே நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்புவது – வெளிப்புற ஒலி- ஒளிபரப்பு வாகனம்

24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனம் – மின்னனு செய்தி சேகரிப்பு வாகனம்.

76) “பிரசார் பாரதி” என்னும் அமைப்பு எப்போது நிறுவப்பட்டது?

A) 1990

B) 1993

C) 1996

D) 1997

விளக்கம்: “பிரசார் பாரதி” என்னும் அமைப்பு 1997ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட அமைப்பு. வானொலியும் தொலைக்காட்சியும் இந்த அமைப்பின்கீழ்தான் இயங்கி வருகின்றன.

77) கூற்றுகளை ஆராய்க.

1. அகாசவாணி என்னும் வானொலியும் தூர்தர்சன் என்னும் தொலைக்காட்சியும் மத்திய தகவல் மற்றும் ஒளி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது.

2. “தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் நிர்வாகப் பிரிவு, நிகழ்ச்சிப் பிரிவு, எந்திரப் பிரிவு” என மூன்று பிரிவுகள் உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆகாசவாணி என்னும் வானொலியும் தூர்தர்சன் என்னும் தொலைக்காட்சியும் மத்திய தகவல் மற்றும் ஒளி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது.

2. “தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் நிர்வாகப் பிரிவு, நிகழ்ச்சிப் பிரிவு, எந்திரப் பிரிவு” என மூன்று பிரிவுகள் உள்ளன.

78) உலக வானொலி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) நவம்பர் 21

B) நவம்பர் 12

C) மார்ச் 21

D) பிப்ரவரி 13

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மாலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

79) கூற்று: 1927இல் மும்பையில் தொடங்கப்பட்ட வானொலி நிலையம் 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காரணம்: தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டது.

80) கூற்றுகளை ஆராய்க.

1. 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000 ஆம் ஆண்டு தரைவழி அலைபேசிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

2. ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தொடரினைப் பார்த்து ரசித்த இலக்கு பார்வையளார்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி “மக்கள் கருவி” என அழைக்கப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 2.6 கிகா கெட்சு(2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000 ஆம் ஆண்டு தரைவழி அலைபேசிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

2. ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தொடரினைப் பார்த்து ரசித்த இலக்கு பார்வையளார்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி “மக்கள் கருவி” என அழைக்கப்படும்.

81) VTR என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன?

A) Video Tape Recorder

B) Voice Tape Recorder

C) voice Tied Recorder

D) Video Tied Recorder

விளக்கம்: தொடக்க காலத்தில் படம்பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட்டன. 1956இல் அமெரிக்காவின் ‘ஆம்பெக்ஸ்’ நிறுவனம் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, தேவைப்படும்போது காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு நாடா என்ற கருவியை உருவாக்கியது. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்பம் கொண்ட படப்பிடிக்குக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முழுமையாக எண்ணிம (Digital) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் காட்சிகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் காணமுடிகிறது.

82) தொலைக்காட்சியின் தோற்றத்துடன் தொடர்புடையவர் யார்?

A) பெர்டினாண்ட் பிரவுன்

B) ஹார்டிங்கஸ்

C) ஜான்லெகி பெயர்டு

D) அலெக்சாண்டர் பிளம்மிங்

விளக்கம்: இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஜான்லெகி பெயர்டு காட்சி ஒலிபரப்பு பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கம்பியில்லாத் தந்திக் கருவி மற்றும் சில மின்கலன்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவ்வாய்வின் விளைவாக ஒரு பொம்மையின் உருவத்தை ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்கு அனுப்பி வெற்றி கண்டார். ஒரு சிறுவனைத் தமது படம் பிடிக்கும் கருவி முன் நிறுத்தி, அவனது கை, கால்களை அசைக்க வைத்து அக்காட்சியினை ஒளிபரப்பி மகிழ்ந்தார். தனது இந்த அரிய கண்டுபிடிப்பை இலண்டனில் உள்ள ராயல் குழுமத்தில் பதிவு செய்துகொண்டார்.

83) கூற்று: இரண்டாம் உலகப்போரின் போது வானொலி உரைச்சித்திரங்கள் முதன்முதலாக ஒலிபரப்பாயின.

காரணம்: மக்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுவதற்காக

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும், மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: இரண்டாம் உலகப்போரின் போது மக்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுவதற்காக, வானொலி உரைச்சித்திரங்கள் முதன்முதலாக ஒலிபரப்பாயின. தேசிய நெருக்கடிக் காலங்களில் மக்களிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கும் விதமாக உரைச்சித்திரங்கள் நிகழ்த்தப்பட்டன.

84) இந்தியக் குற்றவியல் சட்டத்தின் எத்தனையாவது பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றி கூறுகிறது?

A) 498

B) 499

C) 500

D) 501

விளக்கம்: ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம், பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குள் பற்றியும், 500ஆம் பிரிவு தண்டனைகள் பற்றியும் விளக்குகிறது.

85) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்நிழ்ச்சிக்கு தொடக்கத்தில் _________________எனப் பெயரிட்டிருந்தார்கள்.

A) தமிழோசை

B) செய்தி மடல்

C) தமிழ் மடல்

D) வானொலி மடல்

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

86) கூற்றுகளை ஆராய்க.

1. வெ.நல்லதம்பி என்பவர் ஓய்வுக்குப் பின் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையத்தில் சிறப்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2.இவரது கல்விப் பணியினைப் பாராட்டி ‘மால்கம் ஆதிசேஷய்யா’ என்னும் விருது வழங்கியுள்ளனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: வெ.நல்லதம்பி என்பவர் ஓய்வுக்குப் பின் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையத்தில் சிறப்பு அலுவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், இவரது கல்விப் பணியினைப் பாராட்டி ‘மால்கம் ஆதிசேஷய்யா’ என்னும் விருது வழங்கியுள்ளனர்.

87) “ராமாயணக்கதையினைத் தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) கவிமணி

D) பாரதியார்

விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் “ராமாயணக்கதையினைத் தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

88) கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ‘தமிழ்நாடு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் வானொலி அறிஞர் ர.அய்யாசாமி. இவர் எந்த ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியேற்றார்?

A) 1942

B) 1944

C) 1947

D) 1950

விளக்கம்: கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ‘தமிழ்நாடு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் வானொலி அறிஞர் ர.அய்யாசாமி. 1944ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியேற்றார். இவர் சிறுவர்களுக்கான ‘பாப்பா மலர்’ மற்றும் ‘முத்துக்குவியல்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சி 12 ஆண்டுகள் ஒலிபரப்பாயிற்று.

89) அகில இந்திய வானொலியின் பொன்மொழி எது?

A) பகுஜன் ஹம்யா

B) பகுஜன் ஹிதயா

C) பகுஜன் சுகயா

D) B மற்றும் C

விளக்கம்: வானொலி அதிர்வெண்ணைக் கண்டுபிடித்தவர் – ஹெய்ன்ரீச் ருடேல்ஃப் ஹெட்ஸ்

பண்பலை வானொலி ஒளிபரப்பு முறையைக் கண்டுபிடித்தவர் – எட்வின் எச்.ஆம்ஸ்ட்ராங்.

அகில இந்திய வானொலியின் பொன்மொழி -பகுஜன் ஹிதயா, பகுஜன் சுகயா.

90) கூற்று: இயற்கைச் சீற்றங்களை அமெரிக்கா, ஜப்பான் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

காரணம்: இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும், மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாம் வானொலியில் தகவல்களைப் பெறவும் ஒலிபரப்பவும் முடியும். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் அறவே செயலற்றுவிடுகின்றன. அச்சூழலில் நமக்குக் கை கொடுத்து உதவுவது, ஹாம் வானொலிகள் மட்டுமே. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

91) 1927இல் மும்பையில் தொடங்கப்பட்ட வானொலி நிலையம் எப்போது முதல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது?

A) 1936

B) 1947

C) 1950

D) 1957

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்படுகிறது.

92) 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர் நல்லத்தம்பி ஆவார்.

93) எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது 2 முதல் 5 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும். இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் எந்த ஆண்டு தரைவழி அலைபேசிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது?

A) 1999

B) 2000

C) 2004

D) 2010

விளக்கம்: எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது 2 முதல் 5 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும். இது அலைபேசித் தொலைதொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழித் தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000-ஆம் ஆண்டு தரைவழி அலைபேசிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

94) உஷா மேத்தா என்பவர் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?

A) மேற்கு வங்காளம்

B) குஜராத்

C) மத்தியப் பிரதேசம்

D) மஹாராஷ்டிரா

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

95) வெ.நல்லதம்பி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) சென்னைத் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று ‘எதிரொலி நல்லதம்பி’ என்று அழைக்கப்படுபவர் வெ. நல்லதம்பி.

B) 1961 முதல் 1963 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார்.

C) பிறகு வாசிங்டனில் உள்ள ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

D) பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்

விளக்கம்: 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார்.

96) கூற்று: செயற்கைகோள்கள் மூலம் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன.

காரணம்: ஒலி-ஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மையுடையது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும், மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஒலி-ஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மைகொண்டவை. பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொலைதூரத்திற்குப் பரப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இச்சூழலில் செயற்கைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன. அதன் பயனாக இன்று உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை எளிதாக வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் வழியாக நாம் கண்டும் கேட்டும் மகிழ்கிறோம்.

97) வாஷிங்டனில் உள்ள ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார் வெ.நல்லதம்பி. பிறகு வாசிங்டனில் உள்ள ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

98) முதன்முதலாகப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த நாட்டிலிருந்து ஒளிபரப்பட்டது?

A) பிரான்ஸ்

B) அமெரிக்கா

C) இத்தாலி

D) இங்கிலாந்து

விளக்கம்: முதன்முதலாகப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் ஒளிபரப்பட்டது. அதில் கருப்பு, வெள்ளை நிறக் காட்சி ஒளிபரப்பானது. பின்னர், அமெரிக்காவில் வண்ணநிற ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

99) தொலைக்காட்சி சேவைகளைக் காண்பதற்கு எத்தனை கருவிகள் வேண்டும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொலைக்காட்சி சேவைகளைக் காண்பதற்கு உதவும் மூன்று கருவிகள்:

1. படப்பிடிப்புக் கருவி (Camera)

2. பிடிக்கப்பட்டப் படத்தினை மின்னலைகளாக மாற்றி தொலைதூரத்திற்கு அனுப்பும் கோபுரம் (Transmitting Tower).

3. அனுப்பப்பட்ட மின்னலைகளை வாங்கி, அவற்றைப் படமாகவும் ஒலியாகவும் மாற்றித்தரும் தொலைக்காட்சிப் பெட்டி.

100) எந்த இணையத்தளங்கள் இணைய வானொலியைத் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குகின்றன?

A) பாட்காஸ்ட்

B) ஸ்பிரிக்கர்

C) ஹாம்

D) அமெச்சூர்

விளக்கம்: வானொலி இசைப்பிரியர்களுக்கென பாட்காஸ்ட் போன்ற இணையத்தள சேவைகள் உள்ளன. இவைகளுடன் ஸ்பிரிக்கர் போன்ற இணையத்தளங்கள் இணைய வானொலியைத் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குகின்றன. இவ்விணையதளத்தில் வானொலி சேவையினைத் தொடங்க தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டும். இங்கு வானொலி நடத்துபவர்களுக்கெனத் தனிப்பக்கமும் ஒதுக்கப்படுகிறது.

101) பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். எப்போது இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

A) 1941

B) 1945

C) 1947

D) 1948

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

102) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1956-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது.

2. 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1959-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பாயின. பின்பு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் சுந்திரதினவிழாப் பேருரையே முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

103) இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இது எப்போது முதல் ஆகாசவாணி என்று அழைக்கப்படுகிறது?

A) 1927

B) 1936

C) 1950

D) 1957

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்பட்டது.

104) கூற்று: வானொலியின் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை பண்பலை ஆகும்.

காரணம்: பொழுபோக்கு நிகழ்ச்சிகளை மையப்படுத்தி தொடங்கப்பட்டவையே பண்பலைகள் ஆகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும், மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: வானொலி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை பண்பலை (FM) பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மையப்படுத்தித் தொடங்கப்பட்டவையே பண்பலைகள். இவை வானொலி வருணணையாளர்களை (ரேடியோ ஜாக்கி) முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அரசு பண்பலை நிலையங்களும் முறையான உரிமம் பெற்ற தனியார் பண்பலை நிலையங்களும் உலகெங்கிலும் தமது ஒலிபரப்புச் சேவையினைச் சிறப்பாகச் செய்துவருகின்றன.

105) தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.சுவாமிநாதன்.

B) வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர்

C) தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.சுவாமிநாதன்.

வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர்

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.

106) தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேளாண் பிரிவு இயக்குநரான இருந்தபோது ‘வீடும் வயலும்’ என்னும் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கினார்.

B) தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நீதிநெறிகளை வழங்கி வந்தார்.

C) இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேளாண் பிரிவு இயக்குநரான இருந்தபோது ‘வீடும் வயலும்’ என்னும் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கினார்.

தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நீதிநெறிகளை வழங்கி வந்தார்.

இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

107) வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட ர.அய்யாசாமி எந்த நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்?

A) இந்தியா

B) தமிழ்நாடு

C) தேசபக்தன்

D) நவசக்தி

விளக்கம்: கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ‘தமிழ்நாடு’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் வானொலி அறிஞர் ர.அய்யாசாமி. 1944ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியேற்றார். இவர் சிறுவர்களுக்கான ‘பாப்பா மலர்’ மற்றும் ‘முத்துக்குவியல்’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சி 12 ஆண்டுகள் ஒலிபரப்பாயிற்று.

108) வெ.நல்லதம்பி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார்.

B) இவரது சிலப்பதிகார நாடக நூல் ‘நூபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது குறிப்பிடத்ததக்கது.

C) ‘டெலிவிஷன்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்க முயன்றபோது பலரும்பல சொற்களை உருவாக்கியளித்தனர். இருப்பினும் இவர் முன்மொழிந்த ‘தொலைக்காட்சி’ என்னும் சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

D) தொலைக்காட்சியிலும் வானொலியிலும் செய்தி வாசிப்பவர்களுக்கும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களுக்கும் தமிழ் மொழியினை உச்சரிப்புப் பிழையின்றிப் பேச இவர் பயிற்சியளித்துள்ளார்.

விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார்.

109) தவறான கூற்றை தேர்வு செய்க

A) இரண்டாவது, நான்காவது உலகத் தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியவர் – வெ.நல்லதம்பி

B) சென்னைத் தொலைக்காட்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று மதுவிலக்குப் பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டத்தை முத்துக்கூத்தன் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

C) கிராம மக்களுக்குப் பயன்படும் கல்வி, உடல்நலம், தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை முத்துக்கூத்தன் நடத்தினார்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இரண்டாவது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுகளில் பிற நாட்டுத் தமிழறிஞர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி அதனைப் படத்துடன் ஆவணப்படுத்தியவர் – வெ.நல்லதம்பி.

110) முதன்முதலாகப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வண்ணநிற ஒளிபரப்பாக எங்கு தொடங்கப்பட்டது?

A) பிரான்ஸ்

B) அமெரிக்கா

C) இத்தாலி

D) இங்கிலாந்து

விளக்கம்: முதன்முதலாகப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் ஒளிபரப்பட்டது. அதில் கருப்பு, வெள்ளை நிறக் காட்சி ஒளிபரப்பானது. பின்னர், அமெரிக்காவில் வண்ணநிற ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

111) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி தினம்

B) நவம்பர் 12- பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

C) மார்ச் 23- உலக பொம்மாலாட்ட தினம்

D) பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மாலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்.

112) இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களங்களாக திகழ்வது எது?

A) கவியரங்கம்

B) பட்டிமன்றம்

C) வழக்காடு மன்றம்

D) சொற்பொழிவு

விளக்கம்: இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்கள் – கவியரங்கங்கள்.

இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களம் – பட்டிமன்றங்கள்

ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சிகள் – வழக்காடு மன்றம்.

சிறந்த மேடைப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் – சொற்பொழிவு

113) எப்போது வானொலி உரைச்சித்திரங்கள் முதன்முதலாக ஒலிபரப்பாயின?

A) இந்தியா சுதந்திரம் அடையும் போது

B) இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெறும் போது

C) இரண்டாம் உலகப்போரின் போது

D) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது

விளக்கம்: இரண்டாம் உலகப்போரின் போது மக்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி நம்பிக்கை ஊட்டுவதற்காக, வானொலி உரைச்சித்திரங்கள் முதன்முதலாக ஒலிபரப்பாயின. தேசிய நெருக்கடிக் காலங்களில் மக்களிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கும் விதமாக உரைச்சித்திரங்கள் நிகழ்த்தப்பட்டன.

114) கூற்றுகளை ஆராய்க.

1. இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது.

2. வானொலி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை பண்பலை(FM).

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது.

2. வானொலி தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை பண்பலை(FM).பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மையப்படுத்தித் தொடங்கப்பட்டவையே பண்பலைகள்.

115) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது.

2. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநில வானொலிக் குழு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. தனியார் நிறுவனத்திடமிருந்த ஒலிபரப்புச் சேவையை இந்திய அரசு ஒலிபரப்புத்துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. இது 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பின்னர் இது 1957-முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்படுகிறது.

116) கூற்றுகளை ஆராய்க.

1. 1973 ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

2. ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைகள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம் பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றி கூறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1973 ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோர் அவமதிப்பு ஆளானால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடுக்கலாம்.

ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைகள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம் பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றியும், 500ஆம் பிரிவு தண்டனைகள் பற்றியும் விளக்குகிறது.

117) சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார் வெ.நல்லதம்பி. பிறகு வாசிங்டனில் உள்ள ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

118) வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

B) ர.அய்யாசாமி

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்டவர் ர.அய்யாசாமி ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சிக்கு அருகில் உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்று விளங்கினார்.

119) பண்பலை வானொலி ஒளிபரப்பு முறையைக் கண்டுபிடித்தவர் யார்?

A) ஹெய்ன்ரீச் ருடோல்ஃப் ஹெட்ஸ்

B) பகுஜன் ஹிதயா

C) எட்வின் எச்.ஆம்ஸ்ட்ராங்

D) பகுஜன் சுகயா

விளக்கம்: வானொலி அதிர்வெண்ணைக் கண்டுபிடித்தவர் – ஹெய்ன்ரீச் ருடேல்ஃப் ஹெட்ஸ்

பண்பலை வானொலி ஒளிபரப்பு முறையைக் கண்டுபிடித்தவர் – எட்வின் எச்.ஆம்ஸ்ட்ராங்.

அகில இந்திய வானொலியின் பொன்மொழி -பகுஜன் ஹிதயா, பகுஜன் சுகயா.

120) பாட்காஸ்ட் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) நாடகம்

B) திரைப்படம்

C) இசை

D) பண்பலை

விளக்கம்: வானொலி இசைப்பிரியர்களுக்கென பாட்காஸ்ட் போன்ற இணையத்தள சேவைகள் உள்ளன. இவைகளுடன் ஸ்பிரிக்கர் போன்ற இணையத்தளங்கள் இணைய வானொலியைத் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குகின்றன. இவ்விணையதளத்தில் வானொலி சேவையினைத் தொடங்க தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டும். இங்கு வானொலி நடத்துபவர்களுக்கெனத் தனிப்பக்கமும் ஒதுக்கப்படுகிறது.

121) கூற்றுகளை ஆராய்க (தென்கச்சி கோ.சுவாமிநாதன்)

1. இவர் தொலைகாட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நீதிநெறிகளை வழங்கிவந்தார்.

2. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இவர் தொலைகாட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நீதிநெறிகளை வழங்கிவந்தார்.

2. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

122) எந்த ஆண்டு தொலைக்காட்சி, இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது?

A) 1959

B) 1982

C) 1967

D) 1998

விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் தொலைக்காட்சி 1959-இல் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பாயின. பின்பு, 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ்வண்ணத் தொலைக்காட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் சுந்திரதினவிழாப் பேருரையே முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.

123) கூற்றுகளை ஆராய்.

1. இணையத்தள வானொலியினை யார்வேண்டுமானலும் தொடங்கி நடத்திட முடியாது.

2. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இணையத்தள வானொலியினை யார்வேண்டுமானலும் தொடங்கி நடத்திட முடியாது.

2. இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

124) உஷா மேத்தா தன்னுடைய 22 வயதில் வானொலி நிலையத்தை யாருடைய உதவியுடன் உருவாக்கினார்?

A) பாபுபாய் படேல்

B) பண்டிட் ரவி சங்கர்

C) ஆம்ஸ்ட்ராங்க

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

125) சென்னைத் தொலைக்காட்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று மதுவிலக்குப் பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டத்தை நிகழ்த்தியவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) ர.அய்யாசாமி

D) நல்லத்தம்பி

விளக்கம்: முத்துக்கூத்தன் சென்னைத் தொலைக்காட்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று மதுவிலக்குப் பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டத்தை நிகழ்த்தினார்.

126) கூற்றுகளை ஆராய்க (துகிலி.சுப்பிரமணியம்)

1. பாமரமக்களிடமும் எளிமையான முறையில் நேர்காணல் நிகழ்த்தி நுட்பமான தகவல்களைச் சேகரிப்பதில் வல்லவர்.

2. இவர் பயிர்களின் இடையில் மறைந்திருக்கும் பூச்சிகளையும் மிகவும் தெளிவாகப் படம் எடுத்துவிடுவார். இவரால் எடுக்கப்பட்ட பூச்சிகளின் புகைப்படங்கள் இன்று பல ஆய்வுக்கூடங்களிலும் வேளாண் அலுவலகங்களிலும் ஆவணமாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாமரமக்களிடமும் எளிமையான முறையில் நேர்காணல் நிகழ்த்தி நுட்பமான தகவல்களைச் சேகரிப்பதில் வல்லவர்.

2. இவர் பயிர்களின் இடையில் மறைந்திருக்கும் பூச்சிகளையும் மிகவும் தெளிவாகப் படம் எடுத்துவிடுவார். இவரால் எடுக்கப்பட்ட பூச்சிகளின் புகைப்படங்கள் இன்று பல ஆய்வுக்கூடங்களிலும் வேளாண் அலுவலகங்களிலும் ஆவணமாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

127) கூற்றுகளை ஆராய்க.

1. இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்க்கோனி என்பவர் வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

2. நீண்ட நாள்களாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடியவாகக் கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளைத் தொலைதூரத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். இக்கண்டுபிடிப்பை இத்தாலி அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மர்க்கோனி வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகத் தன் வீட்டையே ஆராய்ச்சிக்கூடமாக மாற்றினார். நீண்ட நாள்களாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவாகக் கம்பில்லாத் தந்தி முறையில் செய்திகளைத் தொலைதூரத்திற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். இக்கண்டுபிடிப்பை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்.

128) எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது ___________ முதல் ____________ கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும்.

A) 1 முதல் 4

B) 2 முதல் 5

C) 5 முதல் 10

D) 20 முதல் 200000

விளக்கம்: எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது 2 முதல் 5 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும். இது அலைபேசித் தொலைதொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழித் தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா கெட்சு (2500-2690 கிகா கெட்சு) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000-ஆம் ஆண்டு தரைவழி அலைபேசிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

129) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். பிறகு எவ்வாறு அழைத்தார்கள்?

A) வானொலி மடல்

B) தமிழிசை

C) தமிழோசை

D) தமிழின்பம்

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

130) பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் _______________________________ என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது?

A) நாடெங்கும் கல்லூரி வகுப்பு

B) நாடெங்கும் கல்வி

C) நாடெங்கும் உயர்கல்வி

D) நாடெங்கும் இலவச கல்வி

விளக்கம்: பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் ‘நாடெங்கும் கல்லூரி வகுப்பு’ என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினங்கள் தவிர ஏனைய நாள்களில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இக்கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாலையில் 4 மணிமுதல் 5 மணி வரை மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

131) தமிழக அரசு கல்வி ஒளிபரப்பிற்கென எப்போது முதல் தொலைக்காட்சி நிலையம் ஒன்றைத் தொடங்கி, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது?

A) 2019 சனவரி 21

B) 2018 சனவரி 1

C) 2020 சனவரி 11

D) 2019 ஜுலை 15

விளக்கம்: தமிழக அரசு கல்வி ஒளிபரப்பிற்கென 2019ஆம் ஆண்டு சனவரி 21ஆம் நாள் தொலைக்காட்சி நிலையம் ஒன்றைத் தொடங்கி, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் கல்வி தொடர்பான தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறலாம். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகின்றன.

132) ஐ.நா.அவை எந்த ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது?

A) 1975

B) 1977

C) 1979

D) 1980

விளக்கம்: ஐ.நா.அவை 1975 ஆம் ஆண்டை உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது. அவ்வாண்டில் இந்திய வானொலி நிலையங்கள் அனைத்திலும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.

133) வானொலியில் பண்ணை இல்லம் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் யார்?

A) முத்துக்கூத்தன்

B) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

C) துகிலி.சுப்பிரமணியம்

D) நல்லத்தம்பி

விளக்கம்: துகிலி.சுப்பிரமணியம் வானொலியில் பண்ணை இல்லம் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் துகிலி என்னும் கிராமத்தில் உள்ள ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

134) கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) தமிழில் பொம்மலாட்டக் கலைக்குப் பெருமை சேர்த்தவர் முத்துக்கூத்தன் ஆவார்.

B) சென்னைத் தொலைக்காட்சியில் ‘பண்ணை இல்லம்’ என்னும் நிகழ்ச்சியில் முத்துக்கூத்தனின் பொம்மலாட்டம் இடம்பெற்றது.

C) விவசாயத்தை உயிரெனக் கருதி அவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் துகிலி.சுப்பிரமணியம் ஆவார்

D) தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் கிராம நல அலுவலராகப் பணியாற்றியவர் துகிலி.சுப்பிரமணியம் ஆவார்.

விளக்கம்: சென்னைத் தொலைக்காட்சியில் ‘கண்மணிப்பூங்கா’ என்னும் நிகழ்ச்சியில் முத்துக்கூத்தனின் பொம்மலாட்டம் இடம்பெற்றது.

135) 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. இது கீழ்க்காணும் எதனை மேற்பார்வை செய்து வருகிறது?

A) சுங்க வரி விதிப்பு

B) கலால் வரி விதிப்பு

C) தொழில் வரி விதிப்பு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority of India).

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

136) கூற்றுகளை ஆராய்க.

1. அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோர் அவமதிப்பு ஆளானால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடுக்கலாம்.

2. ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைகள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 500ஆம் பிரிவு தண்டனைகள் பற்றி கூறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1973 ஆண்டின் வழக்குத்தொடரின் விதிப்படி 199(1) அவமதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் ஆகியோர் அவமதிப்பு ஆளானால் அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்கு தொடுக்கலாம்.

ஒருவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசுவதோ, எழுதுவதோ அல்லது சைகைகள் மற்றும் குறியீடுகளால் வெளிப்படுத்துவதோ அவமதிப்புக் குற்றத்தின் கீழ் வரும். இந்தியக் குற்றவியல் சட்டம் 499ஆம் பிரிவு அவமதிப்பு மற்றும் விதிவிலக்குகள் பற்றியும், 500ஆம் பிரிவு தண்டனைகள் பற்றியும் விளக்குகிறது.

137) எந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன?

A) 1951

B) 1952

C) 1953

D) 1954

விளக்கம்: 1952 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் உரிமையியல், குற்றவியல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. நீதிமன்ற ஆணைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட மறுப்பது உரிமையியல் வழக்காகவும் ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்புவது குற்றவியல் வழக்காகவும் பதிவு செய்யப்படும். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் ஆறுமாதம் சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

138) சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டவர் யார்?

A) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

B) ரா.அய்யாசாமி

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: வெ.நல்லத்தம்பி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றை நாடக வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சிலப்பதிகார நாடகநூல் ‘நுபுர் க ஸ்வர்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுப் புதுதில்லி வானொலியில் ஒலிபரப்பானது.

139) தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார்

B) சிறிது காலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப்பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.

C) சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேளாண் பிரிவு இயக்குநராக இருந்தபோது ‘வீடும் வயலும்’ என்னும் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கினார்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராகப் பணியில் சேர்ந்தார்

சிறிது காலத்திற்குப் பிறகு திருநெல்வேலி வானொலியில் பண்ணை இல்லப்பிரிவில் அறிவிப்பாளராகப் பணியேற்றார்.

சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேளாண் பிரிவு இயக்குநராக இருந்தபோது ‘வீடும் வயலும்’ என்னும் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கினார்.

140) கூற்று: நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் 1983-க்கு பிறகு தொடங்கப்பட்டன.

காரணம்: 1983இல் இன்சாட் 1பி என்ற தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 1983இல் இன்சாட் 1பி என்ற தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்துத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. இதன் காரணமாக இவ்வசதிகளைப் பயன்படுத்தி நாடெங்குமுள்ள கல்லூரி மாணவர்களுக்குப் பொதுவான கல்வி நிகழ்ச்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டது.

141) கூற்றுகளை ஆராய்க.

1. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் ‘நாடெங்கும் கல்லூரி வகுப்பு’ என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது.

2. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் ‘நாடெங்கும் கல்லூரி வகுப்பு’ என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது.

2. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது.

142) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) Antenna- ஒலி வாங்கி

B) Blogspot- வலைப்பூ

C) Channel- அலைவரிசை

D) Disk- தட்டு

விளக்கம்: Disk– வட்டு

143) பொருத்துக.

அ. நவம்பர் 21- 1. உலக வானொலி தினம்

ஆ.நவம்பர் 12- 2. உலக பொம்மாலாட்ட தினம்

இ. மார்ச் 21- 3.உலகத் தொலைக்காட்சி தினம்

ஈ.பிப்ரவரி 13- 4. பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

A) 3, 4, 2, 1

B) 4, 3, 1, 2

C) 1, 2, 4, 3

D) 3, 4, 1, 2

விளக்கம்: நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்

நவம்பர் 12- பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம்

மார்ச் 21- உலக பொம்மாலாட்ட தினம்

பிப்ரவரி 13- உலக வானொலி தினம்

144) மக்களவைத் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது?

A) 2004

B) 2009

C) 2007

D) 2005

விளக்கம்: மக்களவைத் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 2004.

145) அகில இந்திய வானொலியின் தலைப்பு இசையை அமைத்தவர் யார்?

A) எம்.எஸ்.சுப்புலட்சுமி

B) பண்டிட் ரவி சங்கர்

C) ஏ.ஆர்.ரகுமான்

D) மேற்காணும் எவருமில்லை

விளக்கம்: அகில இந்திய வானொலியின் தலைப்பு இசையை அமைத்தவர் – பண்டிட் ரவி சங்கர் ஆவார்.

146) தூர்தர்சனின் பொன்மொழியுடன் தொடர்புடையது?

A) சத்தியம் பிரியம் சுந்தரம்

B) சத்தியம் வாய்மை சுந்தரம்

C) கொள்கை வாய்மை சுந்தரம்

D) சத்தியம் கொள்கை சுந்தரம்

விளக்கம்: தூர்தர்சனின் பொன்மொழி – சத்தியம் பிரியம் சுந்தரம்

147) அகில இந்திய வானொலியின் தலைமையிடம் எது?

A) மும்பை

B) புனே

C) புதுடெல்லி

D) ஆக்ரா

விளக்கம்: அகில இந்திய வானொலியின் தலைமையிடம் – ஆகாஷ்வாணி பவன், புதுடெல்லி

148) இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority of India) பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது

B) அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது.

C) தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority of India).

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997இன் 3ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

149) இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்களாக திகழ்பவை எது?

A) கவியரங்கம்

B) பட்டிமன்றம்

C) வழக்காடு மன்றம்

D) சொற்பொழிவு

விளக்கம்: இளம் கவிஞர்களுக்கான வெளிப்பாட்டுக் களங்கள் – கவியரங்கம்.

இலக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் பன்முக நோக்கில் ஆராயும் களம் – பட்டிமன்றங்கள்

ஓர் இலக்கியம் படைக்கப்பட்டதற்கான கோணங்களில் இருவர் விவாதிக்கும் நிகழ்ச்சிகள் – வழக்காடு மன்றம்.

சிறந்த மேடைப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் – சொற்பொழிவு.

150) வானொலி அதிர்வெண்ணைக் கண்டுபிடித்தவர் யார்?

A) ஹெய்ன்ரீச் ருடோல்ஃப் ஹெட்ஸ்

B) பகுஜன் ஹிதயா

C) எட்வின் எச்.ஆம்ஸ்ட்ராங்

D) பகுஜன் சுகயா

விளக்கம்: வானொலி அதிர்வெண்ணைக் கண்டுபிடித்தவர் – ஹெய்ன்ரீச் ருடேல்ஃப் ஹெட்ஸ்

பண்பலை வானொலி ஒளிபரப்பு முறையைக் கண்டுபிடித்தவர் – எட்வின் எச்.ஆம்ஸ்ட்ராங்.

அகில இந்திய வானொலியின் பொன்மொழி -பகுஜன் ஹிதயா, பகுஜன் சுகயா.

151) ‘நாடெங்கும் கல்லூரி வகுப்பு’ என்னும் கல்வி தொலைக்காட்சி திட்டம் எப்போது தொடங்கி வைக்கப்பட்டது?

A) 1984 ஆகஸ்ட் 15

B) 1984 ஜனவரி 26

C) 1984 செப்டம்பர் 5

D) 1984 அக்டோபர் 2

விளக்கம்: பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாள்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் ‘நாடெங்கும் கல்லூரி வகுப்பு’ என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியை தூர்தர்சனுடன் இணைந்து வழங்கத் தொடங்கியது. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது.

152) பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என பெயரிட்டவர் யார்?

A) தமிழன்பன்

B) பண்டிட் ரவிசங்கர்

C) சிவபாத சுந்தரம்

D) ர.அய்யாச்சாமி

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

153) செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருது கீழ்க்காணும் யாருக்காக வழங்கப்பட்டது??

A) சரோஜ் நாராயணசுவாமி

B) துகிலி.சுப்பிரமணியம்

C) ர.அய்யாசாமி

D) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

விளக்கம்: ‘ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி’ என்ற குரலை வானொலியில் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. 40 ஆண்டுகாலம் ஒலிபரப்புத் துறையில் சிறப்பாகச் செய்தி வாசித்தமைக்காகத் தமிழக அரசு இவருக்கு 2008ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இதுவே செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருதாகும்.

154) கூற்றுகளை ஆராய்க.

1. தொடக்கத்தில் வாரம் ஒருநாள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிசகள் 80களின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என விரிவுபடுத்தப்பட்டது.

2. 80களின் இறுதியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தொடக்கத்தில் வாரம் ஒருநாள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிசகள் 80களின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என விரிவுபடுத்தப்பட்டது.

2. 80களின் இறுதியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது.

155) எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் வெ.நல்லதம்பி பணிபுரிந்தார்?

A) 1961-1963

B) 1962-1964

C) 1963-1965

D) 1964-1966

விளக்கம்: 1963 முதல் 1965 வரை திருநெல்வேலியிலும் திருச்சியிலும் அகில இந்திய வானொலி நிலையங்களில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார் வெ.நல்லதம்பி. பிறகு வாசிங்டனில் உள்ள ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு சென்னைத் தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளராகவும் நிலைய உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

156) வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர் யார்?

A) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

B) ரா.அய்யாசாமி

C) வெ.நல்லதம்பி

D) முத்துக்கூத்தன்

விளக்கம்: வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறிக் கதைகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை மகிழ்வித்தவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்ஆவார். வானொலியில் இவரது பேச்சைக் கேட்பதற்காகவே பெருமளவிலான மக்கள் காத்திருந்தனர்.

157)Head setஎன்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) காதணி கேட்பி

B) தலையணி பேசி

C) கம்பியில்லா பேசி

D) ஒலி செலுத்தி

விளக்கம்: Head set என்பதன் தமிழாக்கம் காதணி கேட்பி.

158) Whatsapp – என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) அங்கவேகம்

B) சமிக்ஞை

C) கீச்சகம்

D) புலனம்

விளக்கம்: அங்கவேகம் – Tempo

சமிக்ஞை- Signal

கீச்சகம்- Twitter

புலனம்– Whatsapp

159) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) Loudspeaker- ஒலிபெருக்கி

B) Multimedia- பல்லூடகம்

C) Mass media- பெரிய ஊடகம்

D) Radio Jockey- வானொலி வருணனையாளர்

விளக்கம்: Loudspeaker– ஒலிபெருக்கி

Multi media- பல்லூடகம்

Mass media- மக்கள் ஊடகம்

Radio Jockey- வானொலி வருணனையாளர்.

160) உஷா மேத்தா பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தேர்க.

A) 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா.

B) இவர் தனது 25ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார்.

C) தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பபட்டன.

D) வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது.

விளக்கம்: 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர் தனது 22ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இத்ல் ஒலிபரப்பபட்டன. வானொலி நிலையம் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து செயல்பட இயலவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை இடம்மாற்றப்பட்டது. 3 மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

161) தமிழ்நாட்டில் எந்த ஆண்டு வரை தூர்தர்சன் என்ற ஒரே அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமே இருந்தது?

A) 1991

B) 1992

C) 1990

D) 1993

விளக்கம்: தமிழ்நாட்டில் 1993ஆம் ஆண்டிற்கு முன்னர் தூர்தர்சன் என்ற ஒரே அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமே இருந்தது. இதில் வெள்ளிக்கிழமையில் இரவு நேரத்தில் ஒளியும் ஒலியும் என்ற தலைப்பில் திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்பப்படும். ஞாயிறு மாலையில் ஒரு தமிழ்த் திரைப்படம் ஒளிப்பரப்பாகும்.

162) கூற்றுகளை ஆராய்க.

1. இலக்கு அளவீட்டுப் புள்ளி என்பது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும்.

2. எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது 2 முதல் 5 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இலக்கு அளவீட்டுப் புள்ளி என்பது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும்.

2. எஸ் பாண்ட் அலைக்கற்றை என்பது 2 முதல் 5 கிகா கெட்சு வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும்.

163) பிபிசி தமிழோசை பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை தெரிவு செய்க.

A) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது.

B) இதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941-ஆம் ஆண்டு மே திங்கள் 2-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

C) அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் ‘செய்தி மடல்’ எனப் பெயரிட்டிருந்தார்கள்.

D) 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழோசை’ என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

விளக்கம்: இதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941-ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

164) தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்பவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

A) பெரம்பலூர்

B) சிவகங்கை

C) அரியலூர்

D) இராமநாதபுரம்

விளக்கம்: அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள் நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். இவர் தொடக்கக் கல்வியைச் சொந்த ஊரிலும், கல்லூரிக் கல்வியைக் கும்பகோணத்திலும் வேளாண் கல்வியைக் கோயம்புத்தூரிலும் பயின்றார்.

165) வெளிநாட்டுச் சேவையான பிபிசி, ‘வோர்ல்ட் சர்வீஸ்’ என்ற பெயரில் எத்தனை மொழிகளில் ஒலிபரப்புகின்றனர்?

A) 22

B) 33

C) 30

D) 27

விளக்கம்: வெளிநாட்டுச் சேவையான பிபிசி, ‘வோர்ல்ட் சர்வீஸ்’ என்ற பெயரில் 33 மொழிகளில் ஒலிபரப்புகின்றனர். இதில் தமிழும் அடங்கும். உலகத் தமிழர்கள் இங்கிலாந்திலிருந்து வரும் தமிழோசை நிகழ்ச்சியைத் தங்கள் மொழிக்குக் கிடைத்த பெருமையாகவே கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

166) செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருது கீழ்க்காணும் யாருக்காக வழங்கப்பட்டது??

A) சரோஜ் நாராயணசுவாமி

B) துகிலி.சுப்பிரமணியம்

C) ர.அய்யாசாமி

D) தென்கச்சி கோ.சுவாமிநாதன்

விளக்கம்: ‘ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி’ என்ற குரலை வானொலியில் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. 40 ஆண்டுகாலம் ஒலிபரப்புத் துறையில் சிறப்பாகச் செய்தி வாசித்தமைக்காகத் தமிழக அரசு இவருக்கு 2008ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இதுவே செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருதாகும்.

167) தவறாக பொருந்தியுள்தை தேர்வு செய்க

A) Intercom- தகவல் சாதனம்

B) Anchor- தொகுப்பாளர்

C) Audiozone- ஒலியலை

D) Bandwidth- அலைத்தொகுப்பு

விளக்கம்: Audiozone- ஒலி மையம்

Audiowave – ஒலியலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!