Advanced Tamil Questions

ஊடகவியல் 11th Advanced Tamil Unit 3 Questions

11th Advanced Tamil Unit 3 Questions

3] ஊடகவியல்

1) தமிழ்க்கொடி என்ற இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) மறைமலை அடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்தனார்

விளக்கம்: தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அவை,

1. மறைமலை அடிகள் – அறிவுக்கடல்

2. சி.பா.ஆதித்தனார்- தமிழன், தமிழ்க்கொடி

3. பாரதிதாசன் – குயில்

4. பெருஞ்சித்தனார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு.

2) காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான் – என்ற வரிகளை பாடியவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) கவிமணி

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான் இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணில்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே – பாரதிதாசன்

3) ‘மக்களாட்சியின் முதல் தூண்’ என அழைக்கப்படுவது எது?

A) அரசு நிர்வாகம்

B) பாராளுமன்றம், சட்டமன்றம்

C) நீதிமன்றம்

D) ஊடகம்

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது. முதல் தூணாக அரசு நிருவாகமும், இரண்டாவது தூணாகப் பாராளுமன்றமும் சட்டமன்றமும், மூன்றாவது தூணாக நீதிமன்றமும், நான்காவது தூணாக ஊடகமும் குறிப்பிடப்படுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

4) செய்திகளை வழங்குவதன் அடிப்படையில் செய்தித்தாள் மூவகைப் பக்க அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் பொருந்தாதது எது?

A) சமநிலைப் பக்க அமைப்பு

B) மாறுபட்ட பக்க அமைப்பு

C) கலப்பு பக்க அமைப்பு

D) கூம்புப் பக்க அமைப்பு

விளக்கம்: செய்திகளை வழங்குவதன் அடிப்படையில் செய்தித்தாள் மூவகைப் பக்க அமைப்பைக் கொண்டுள்ளது. அவை,

1. சமநிலைப் பக்க அமைப்பு

2. மாறுபட்ட பக்க அமைப்பு

3. கலப்பு பக்க அமைப்பு.

5) கூற்றுகளை ஆராய்க.

1. தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது செய்திகளை வழங்குவதில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று சிந்தித்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.

2. 1990இலிருந்து மின்னணுப்பக்கங்களாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது தி ஹிந்து நாளிதழ்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது செய்திகளை வழங்குவதில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்என்று சிந்தித்தவர் ஜி.கஸ்தூரி ஆவார்.

2. 1990இலிருந்து மின்னணுப்பக்கங்களாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது தி ஹிந்து நாளிதழ்.

6) கூற்று: தந்தை பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டார்.

காரணம்: தமிழை விரைவாகவும் வடிவ ஒழுங்கோடும் அச்சிடுவதற்கு எழுத்துருக்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார். தமிழைக் கற்போர் மற்றும் பயன்படுத்துவோர்க்கு எளிமையாகவும் சுமை இல்லாமலும் எழுத்துருக்கள் இருக்கவேண்டும். மேலும் தமிழை விரைவாகவும் வடிவ ஒழுங்கோடும் அச்சிடுவதற்கு எழுத்துருக்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.

7) இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் எங்குள்ளது?

A) பெங்களுரு

B) புது தில்லி

C) அகமதாபாத்

D) சென்னை

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி

இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு.

முதுரா தகவல் தொடர்பு நிறுவனம் – அகமதாபாத்

ஆசிய இதழியல் கல்லூரி – சென்னை

8) ‘சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பாரதியார் குறிப்பிடுவது கீழ்க்காணும் யாரை?

A) படித்த இந்தியர்கள்

B) மிதவாதிகள்

C) தீவிர தேசிய வாதிகள்

D) ஆங்கிலேயர்கள்

விளக்கம்: நாடு விரைந்து சுதந்திரம் அடைய போராடியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதியார் தயக்கமின்றி எதிர்த்து எழுதினார். சித்திரம் ஒன்றில் அவர்களைகச் ‘சுதேச ஒளிக்கும் அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தார்.

9) ஜி.கஸ்தூரி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) இந்தியாவில் தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது அதனைச் செய்தித்தாளுக்கான போட்டியாகக் கருதினார்

B) 1980இல் உலோக எழுத்துருக்களைக் கோத்து அச்சிடும் முறையிலிருந்து தட்டச்சு செய்து பக்கங்களைத் தயார் செய்யும் முறைக்கு மாறியபோதும் பின்னர், ஒளியச்சுக்கோவைக்கு மாறியபோதும் அவர் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கும் எந்தவொரு ஊழியரையும் மாற்றவில்லை.

C) செய்திகளை விரைந்து சேகரிக்க மாவட்ட, மாநிலத் தலைநகரங்களில் முதன்மைச் செய்தி அலுவலர்களை நியமித்தது அவரது புதுமையான முயற்சியாகும்.

D) ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வது செய்தித்தாளின் பணி என்று கருதினார்.

விளக்கம்: ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வது செய்தித்தாளின் பணி என்று கருதியவர் ஏ.என்.சிவராமன் ஆவார்.

10) கூற்று: செய்தியின் முகப்புப்பகுதி, சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருத்தல் வேண்டும்.

காரணம்: முகப்புப் பகுதி செய்திக்கு உயிரோட்டம் தருகிறது. படிப்பவர்களின் ஆவலையும் தூண்டுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: செய்தியின் முகப்புப்பகுதி, சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருத்தல் வேண்டும். இது செய்திக்கு உயிரோட்டம் தருகிறது. படிப்பவர்களின் ஆவலையும் தூண்டுகிறது.

11) செய்திகளை வழங்குவதன் அடிப்படையில் செய்தித்தாள் எத்தனை பக்க அமைப்பைக் கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: செய்திகளை வழங்குவதன் அடிப்படையில் செய்தித்தாள் மூவகைப் பக்க அமைப்பைக் கொண்டுள்ளது. அவை,

1. சமநிலைப் பக்க அமைப்பு.

2. மாறுபட்ட பக்க அமைப்பு.

3. கலப்புநிலைப் பக்க அமைப்பு

12) இதழ்களின் பத்திகள் எத்தனை செ.மீ. நீளத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்?

A) 5

B) 10

C) 2

D) 15

விளக்கம்: இதழ்களில் பத்திகள் 5 செ.மீ. நீளத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் தொடர்பு இருக்க வேண்டும். இரண்டு பத்திக்குமிடையே தொடர்பு விட்டுப்போகுமிடத்தில் துணைத் தலைப்பிட்டு இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

13) ‘இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும்’ என்னும் தலைப்பில் ஆங்கில அரசின் வரிவிதிப்பு பற்றிய பாரதியின் கருத்துப்படம் எப்போது வெளியானது?

A) 13.03.1909

B) 08.09.1906

C) 19.12.1908

D) 30.03.1907

விளக்கம்: ஆங்கில அரசின் வரிவிதிப்புச் சார்ந்து 30.03.1907-இல் ‘இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும்’ என்னும் தலைப்பில் வெளியான கருத்துப்படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

14) ஆங்கில அரசு வரிச்சலுகையாக கீழ்க்காணும் எதனை குறைத்துவிட்டதாக பாரதியார் தன் கருத்துப்படம் மூலம் விளக்கியுள்ளார்?

A) குடிநீர்

B) உப்பு

C) கைத்தறி ஆடை

D) அழகு சாதனப் பொருட்கள்

விளக்கம்: அமைதியும், பலமும் கொண்ட இந்தியா என்ற யானையின்மீது சுங்கவரி, நிலவரி, தொழில்வரி, வருமான வரி முதலிய சுமக்க முடியாத வரிச்சுமைகளை ஏற்றி, அதன் கழுத்தின்மீது அமர்ந்து ஜான் புல்துரை (ஆங்கிலய அரசு) சவாரி செய்வதுபோல இக்கருத்துப்படம் அமைந்துள்ளது. இதில் சிறு வரிச்சலுகையாக உப்பு மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெரிய சுமையைக் குறைத்துவிட்டதாக ஆங்கில அரசு மகிழ்வதாகவும், யானை தன் மனத்திலே என்ன எண்ணம் வைத்திருக்கிறதோ யார் அறிவார், என்ற வினாவையும் எழுதியுள்ளமை பாரதியாரின் நுட்பமான வெளிப்பாட்டு உத்தியைக் காட்டுகிறது.

15) கூற்றுகளை ஆராய்க.

1. வங்காளத்திலிருந்து வெளியான ‘இந்தியன் பஞ்ச்’ மற்றும் ‘அவத் பஞ்ச்’ ஆகிய இதழ்கள் தொடக்ககால கருத்துப்படங்களுக்காக அறிப்படுகின்றன.

2. தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதியார் நடத்திய இந்தியா என்ற இதழே ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தில்லியிலிருந்து வெளியான ‘இந்தியன் பஞ்ச்’ மற்றும் ‘அவத் பஞ்ச்’ ஆகிய இதழ்கள் தொடக்ககால கருத்துப்படங்களுக்காக அறிப்படுகின்றன.

2. தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதியார் நடத்திய இந்தியா என்ற இதழே ஆகும்.

16) பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. ஆனால் சுதேசிக்கப்பலின் தேவையை உணர்ந்து எத்தனை படங்கள் வரைந்துள்ளார்?

A) 2

B) 3

C) 4

D) 10

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம், பாரதியின் கனவு தேசியமே. ஆனால், சுதேசிக் கப்பலின் தேவையை உணர்ந்து நான்கு படங்கள் வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் “இதற்கு உதவுங்கள்” என்று கூறுவதாக அமைந்திருக்கின்றது.

17) ‘மக்களாட்சியின் இரண்டாவது தூண்’ என அழைக்கப்படுவது எது?

A) அரசு நிர்வாகம்

B) பாராளுமன்றம், சட்டமன்றம்

C) நீதிமன்றம்

D) ஊடகம்

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது.முதல் தூணாக அரசு நிருவாகமும், இரண்டாவது தூணாகப் பாராளுமன்றமும் சட்டமன்றமும், மூன்றாவது தூணாக நீதிமன்றமும், நான்காவது தூணாக ஊடகமும் குறிப்பிடப்படுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

18) கூற்றுகளை ஆராய்க.

1. செய்தித் தலைப்பைச் செய்தித் தாளின் பலகணி என்பர்.

2. செய்தித்தாளின் பகுதிகள் நான்கு ஆகும்

3. ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை மூன்று காரணிகள் உறுதிசெய்கின்றன.

4. இதழாசிரியர்கள், செய்திகளின் முதன்மை கருதி எந்தச் செய்தியை எந்தப் பக்கத்தில் வெளியிடுவது என்று முடிவு செய்வர்.

A) 1, 4 சரி

B) 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. செய்தித் தலைப்பைச் செய்தித் தாளின் பலகணி என்பர்.

2. செய்தித்தாளின் பகுதிகள் மூன்று. செய்தித்தாளில் வெளிவருகின்ற ஒரு செய்தி தலைப்பு, முகப்பு, செய்தி விளக்கம் ஆகிய மூன்று பகுதிகளைக்கொண்டு அமைகிறது

3. ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை நான்கு காரணிகள் உறுதிசெய்கின்றன. அவை,

1. செய்தி எழுதுவதற்குக் கிடைக்கும் நேரம்.

2. செய்தியின் உருவ அமைப்பு.

3. செய்தித்தாளில் அவற்றை வெளியிடுவதற்குக் கிடைக்கும் இடம்

4.செய்தி எழுதுபவரின் திறமை.

4. இதழாசிரியர்கள், செய்திகளின் முதன்மை கருதி எந்தச் செய்தியை எந்தப் பக்கத்தில் வெளியிடுவது என்று முடிவு செய்வர்.

19) சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம் எங்குள்ளது?

A) புனே

B) மும்பை

C) ஜாமியா

D) கோட்டயம்

விளக்கம்: சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம் – மும்பை.

எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி – ஜமியா, புதுதில்லி

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி – கோட்டயம், கேரளா

20) தந்தை பெரியார் தாம் நடத்திய எந்த இதழில் தாம் மேற்கொள்ளப்போகும் எழுத்துரு மாற்றங்கள் குறித்து அறிவித்தார்?

A) ரிவோல்ட்

B) குடி அரசு

C) விடுதலை

D) பகுத்தறிவு

விளக்கம்: பெரியார் தாம் நடத்திய பகுத்தறிவு இதழில் (30.12.1934) தாம் மேற்கொள்ளப்போகும் எழுத்துரு மாற்றங்கள் குறித்து அறிவித்தார். அதற்கு அடுத்த இதழிலிருந்து எழுத்துருக்களை மாற்றம் செய்து பதிப்பித்தார்.

21) எப்போது பாரதியார் சுதேசமித்திரன் என்ற இதழின் துணையாசிரியராக சேர்ந்தார்?

A) 1856

B) 1882

C) 1889

D) 1904

விளக்கம்: 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ 1889இல் நாளிதழாக மாறியது. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகளாலும் சுவைமிகு உரைநடையாலும் சுதேசமித்திரன் புதுப்பொலிவோடும் வலுவோடும் வெளிவந்தது.

22) இந்தியாவில் எந்த இதழில் கருத்துப்படம் முதன்முதலில் வெளியானது?

A) பெங்கால் கெஜட்

B) மெட்ராஸ் மெயில்

C) சுதேசமித்திரன்

D) தில்லி ஸ்கெட்ச் புக்

விளக்கம்: 1850 ஆம் ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.

23) கூற்று: கஸ்தூரி தேசிய அளவில் நாளிதழ் ஆசிரியர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

காரணம்: தொலைநோக்குமிக்க வாணிக மேலாண்மை, காலத்திற்கேற்ற நவீனத் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துதல்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

விளக்கம்: தொலைநோக்குமிக்க வாணிக மேலாண்மை, காலத்திற்கேற்ற நவீனத் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தியதால், கஸ்தூரி தேசிய அளவில் நாளிதழ் ஆசிரியர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

24) பொருத்துக.

அ. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் இதழ்- 1. 1882

ஆ. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ்- 2. 1780

இ. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – 3. 1868

A) 2, 3, 1

B) 1, 3, 2

C) 2, 3, 1

D) 3, 2, 1

விளக்கம்: இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் இதழ்- 1780

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் – 1868

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ்- 1882

25) ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே – என்ற வரிகளைபாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கவிமணி

விளக்கம்: காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான் இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணில்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே – பாரதிதாசன்

மேற்காணும் வரிகளில் குறிப்பிடப்படுவது பத்திரிக்கை ஆகும்.

26) இதழ்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 5

D) 6

விளக்கம்: நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை நாளிதழ்கள் எனவும் காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் எனவும் வகைப்படுத்தலாம்.

பருவ இதழ்கள் வாரம், வாரமிருமுறை, மாதம், மாதமிருமுறை, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனக் கால இடைவெளியை வரையறுத்துக்கொண்டு வெளிவருகின்றன.

27) கூற்றுகளை ஆராய்க.

1. பாரதியார் ‘புதிய அபிவிருத்தி’ என்ற கட்டுரையில் “தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்களை பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றர்.

2. பாரதியார் ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பாரதியார் ‘புதிய அபிவிருத்தி’ என்ற கட்டுரையில் “தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்களை பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றர்.

2. பாரதியார் ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

28) யாருடைய இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், சிறப்போடு வளர்ந்து வந்ததுடன். புதுப்புதுத்தமிழ்ச் சொற்களும் உலா வந்தன?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

C) திரு.வி.க

D) பாரதியார்

விளக்கம்: தமிழ் இதழியலில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி.கலியாண சுந்தரனாரையே சாரும். அவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், சிறப்போடு வளர்ந்து வந்தது. புதுப்புதுத்தமிழ்ச் சொற்கள் உலா வந்தன. தமிழ் உரைநடை வரலாற்றில் அவரது நடை குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்ந்தது.

29) இதழ்களை அவற்றில் இடம்பெறும் தலைப்புகளே துல்லியமாகக் கணிக்கின்றன – என்று கூறியவர் யார்?

A) ஆலன் ஹோம் கோம்ப்

B) வின்சென்ட் சர்ச்சில்

C) பாரதிதாசன்

D) பாரதியார்

விளக்கம்: “இதழ்களை, அவற்றில் இடம்பெறும் தலைப்புகளே துல்லியமாக் கணிக்கின்றன” – ஆலன் ஹோம் கோம்ப்.

30) கூற்றுகளை ஆராய்க.

1. செய்தித்தாள்கள் விநியோகத்தில் மேற்கொண்ட புதுமையான முயற்சிகளுக்காகவும், அச்சுத் தொழில்நுட்பத்தில் கையாண்ட நவீன முறைகளுக்காகவும் பத்திரிக்கை உலகில் போற்றப்படுபவர் – டி.எஸ்.சொக்கலிங்கம்.

2. டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய ‘காந்தி’ இதழில் ஒரு பத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கியவர். ஏ.என்.சிவராமன் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. செய்தித்தாள்கள் விநியோகத்தில் மேற்கொண்ட புதுமையான முயற்சிகளுக்காகவும், அச்சுத் தொழில்நுட்பத்தில் கையாண்ட நவீன முறைகளுக்காகவும் பத்திரிக்கை உலகில் போற்றப்படுபவர் – ஜி.கஸ்தூரி.

2. டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய ‘காந்தி’ இதழில் ஒரு பத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கியவர் ஏ.என்.சிவராமன்.

31) ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை எத்தனை காரணிகள் உறுதி செய்கின்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை நான்கு காரணிகள் உறுதிசெய்கின்றன.அவையாவன:

1. செய்தி எழுதுவதற்குக் கிடைக்கும் நேரம்.

2. செய்தியின் உருவ அமைப்பு.

3. செய்தித்தாளில் அவற்றை வெளியிடுவதற்குக் கிடைக்கும் இடம்

4. செய்தி எழுதுபவரின் திறமை.

32) கீழ்க்காண்பனவற்றில் எது முதன்மை செய்திக்களம் அல்ல?

A) மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

B) மக்கள் செய்தித்தொடர்பு அலுவலகம்

C) காவல் நிலையங்கள்

D) பல்கலைக்கழகங்கள்

விளக்கம்: மாவட்ட ஆட்சியர் அலுவலம், மக்கள் செய்தித்தொடர்பு அலுவலகம், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் ஆகியவை முதன்மைச் செய்திக் களங்களாகக் கருதப்படுகின்றன.

33) கூற்று: புகை நுழையமுடியாத இடத்திலும் செய்தியாளர்கள் நுழைந்துவிடுவர் என்னும் சொல் வழக்கு உள்ளது.

காரணம்: தீ பற்றிய செய்திகளை உடனடியாக சேகரித்து வழங்குவர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: செய்தியாளர்கள், செய்தி திரட்டுவதற்காக எல்லா இடங்களிலும் பம்பரமாய்ச் சுழல்வார்கள். எனவேதான், புகை நுழையமுடியாத இடத்திலும் செய்தியாளர்கள் நுழைந்துவிடுவர் என்னும் சொல் வழக்கு ஏற்பட்டது.

34) கூற்றுகளை ஆராய்க.

1. நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை நாளிதழ்கள் என்கிறோம்.

2. காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் என்கிறோம்.

3. நாளிதழ்கள் நாள்தோறும் காலை இதழ், மாலை இதழ் என இருவகையாக வெளிவருகின்றன.

4. செய்திகளை திரட்டுபவர்கள் செய்தியாளர்கள். இவர்களை நிருபர்கள் எனவும் அழைக்கின்றனர்.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை நாளிதழ்கள் எனவும் காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் எனவும் வகைப்படுத்தலாம்.

பருவ இதழ்கள் வாரம், வாரமிருமுறை, மாதம், மாதமிருமுறை, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனக் கால இடைவெளியை வரையறுத்துக்கொண்டு வெளிவருகின்றன.

நாளிதழ்கள், நாள்தோறும் காலை இதழ், மாலை இதழ் என இருவகையாக வெளிவருகின்றன. அவை உலகெங்கும் நிகழும் நிகழ்ச்சிகளை நாள்தோறும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

செய்திகளை திரட்டுபவர்கள் செய்தியாளர்கள். இவர்களை நிருபர்கள் எனவும் அழைக்கின்றனர்.

35) ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்று பாரதியார் தம் கருத்துப்படம் மூலம் விளக்கினார். இந்த கருத்துப்படம் இந்தியா என்ற இதழில் எப்போது வெளிவந்தது?

A) 13.03.1909

B) 08.09.1906

C) 11.12.108

D) 11.10.1912

விளக்கம்: ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்று பாரதியார் சித்திரம் ஒன்றின் மூலம் இந்தியா இதழில் 08.09.1906-ல் விளக்கினார்.

36) கல்விக்கதிர் என்ற இதழ் கீழ்க்காணும் எந்த ஆண்டுடன் தொடர்புடையது?

A) 1897

B) 1951

C) 1969

D) 1911

விளக்கம்: ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காகத் தமிழ்க்கல்வி (1897), முதியோர் கல்வி (1951), கல்விக்கதிர் (1969) போன்ற இதழ்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்தன.

37) ஓர் இதழுக்குச் சிறப்பு சேர்ப்பனவற்றுள் முதன்மையாது எது?

A) தலைப்பு

B) முகப்பு

C) பக்க அமைப்பு

D) மொழிநடை

விளக்கம்: ஓர் இதழுக்குச் சிறப்பு சேர்ப்பனவற்றுள் முதன்மையானது அதனுடைய மொழி நடையாகும். சிறப்பான மொழிநடை மக்களை வெகுவாக ஈர்க்கிறது.

38) கூற்றுகளை ஆராய்க.

1. நாளிதழ்கள் உலகெங்கும் நிகழும் நிகழ்ச்சிகளை நாள்தோறும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

2. பருவ இதழ்கள், நாட்டு நடப்புகளை விவரித்து எழுதுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாளிதழ்கள் உலகெங்கும் நிகழும் நிகழ்ச்சிகளை நாள்தோறும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. நாளிதழ்களை உருவாக்குவதில் செய்தியாளர்கள், இதழாசிரியர்கள், பதிப்பாளர்கள் முகவர்கள் ஆகியோர் இன்றியமையாப் பணியாற்றுகின்றனர்.

2. பருவ இதழ்கள், நாட்டு நடப்புகளை விவரித்து எழுதுகின்றன. இவை பல்வேறு துறைசார்ந்த பருவ இதழ்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக இலக்கிய இதழ்கள், அறிவியல் இதழ்கள்.

39) பொருத்துக.

அ. பெங்கால் கெஜட்- 1. 1882

ஆ. மதராஸ் மெயில்- 2. 1780

இ. சுதேசமித்திரன்- 3. 1868

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: பெங்கால் கெஜட் – 1780.

மதராஸ் மெயில்- 1868.

சுதேசமித்திரன்- 1882.

40) கூற்று: ஊடகம் என்பது மக்களாட்சியின் நான்காவது தூண்

காரணம்: நான்கு திசைகளிலிருந்து செய்தியை திரட்டித் தருவது ஊடகம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

41) ஓர் இதழின் கருத்துக் கண்ணாடி என்று அழைக்கப்படுவது எது?

A) முகப்பு

B) தலையங்கம்

C) மொழி நடை

D) கருத்துப்படம்

விளக்கம்: தலையங்கம் ஓர் இதழின் கருத்துக் கண்ணாடி ஆகும். எதனைப் பற்றி தலையங்கம் எழுதினாலும் தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு நடுநிலையோடு எழுதுதல் வேண்டும்.

42) ‘தேசப்பிதா காந்திஜி’யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) சுபாஷ் சந்திரபோஸ்

C) திரு.வி.க

D) அறிஞர் அண்ணா

விளக்கம்: ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் எழுதியுள்ளார்.

43) பாரதியார் கீழ்க்காணும் யாரை நிதானக் கட்சியினர், பழையக் கட்சியினர் என்று அழைத்தார்?

A)மிதவாதிகள்

B) தீவிரதேசியவாதிகள்

C) அகிம்சைவாதிகள்

D) ஆங்கிலேயர்கள்

விளக்கம்: நாடு விரைந்து சுதந்திரம் அடைய போராடியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதியார் தயக்கமின்றி எதிர்த்து எழுதினார். சித்திரம் ஒன்றில் அவர்களைகச் ‘சுதேச ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தார். இவர்களை நிதானக் கட்சியினர், பழைய கட்சியினர் என்று அழைத்தார். அத்துடன் உலக அரசியல் நிகழ்வுகளைக் கூறியும் மிதவாதிகளை விமர்சித்தார்.

44) தமிழின் முதல் வார இதழ் தினவர்த்தமானி ஆகும். இதனைத் தொடங்கியவர் யார்?

A) பெர்சிவல் பாதிரியார்

B) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

C) ஜோஹன்னஸ் கூடன்பர்க்

D) ரிச்சர்டு ஜான்

விளக்கம்: தமிழ்மொழியில் முதன்முதலில் வெளிவந்த நாளிதழ் எது என்பது பற்றித் திட்டவட்டமாகத் தெரிவில்லை. 1856-இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தனமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும். இந்த இதழ் செய்திகளோடு கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்தது.

45) ‘தேசபக்தன்’ என்ற இதழை திரு.வி.க எப்போது தொடங்கினார்?

A) 1907

B) 1917

C) 1909

D) 1908

விளக்கம்: 1917-இல் திரு.வி.க அவர்கள் ‘தேசபக்தன்’ என்ற நாளிதழைத் தொடங்கினார். சுதேசமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே.

46) வை.மு.கோதைநாயகி எப்போது “ஜகன்மோகினி” என்னும் நாவல் இதழினை அதன் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார்?

A) 1921

B) 1922

C) 1924

D) 1925

விளக்கம்: வை.மு.கோதைநாயகி 1925இல் “ஜகன்மோகினி” என்னும் நாவல் இதழினை அதன் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார். முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” 1937இல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

47) தமிழில் அறிவியலுக்கு புகழ்பெற்ற காலைக்கதிர் என்ற இதழ் எப்போது முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது?

A) 1951

B) 1948

C) 1949

D) 1952

விளக்கம்: தமிழில் புகழ்பெற்ற இதழான ‘காலைக்கதிர்’ 1948 முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் குறித்து நுட்பமாகவும் விரிவாகவும் அமைந்து கட்டுரைகளை அவ்விதழ் வெளியிடுகிறது.

48) தமது தொலைநோக்குமிக்க வாணிக மேலாண்மையாலும், காலத்திற்கேற்ற நவீனத் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தியதிலும் தேசிய அளவில் நாளிதழ் ஆசிரியர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) ஜி.கஸ்தூரி

D) வை.மு.கோதைநாயகி

விளக்கம்: ஜி.கஸ்தூரி, தமது தொலைநோக்குமிக்க வாணிக மேலாண்மையாலும், காலத்திற்கேற்ற நவீனத் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தியதிலும் தேசிய அளவில் நாளிதழ் ஆசியர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

49) ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்று பாரதியார் தம் கருத்துப்படம் மூலம் விளக்கினார்?

A) 45

B) 50

C) 100

D) 25

விளக்கம்: ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்று பாரதியார் தம் கருத்துப்படம் மூலம் விளக்கினார்.

50) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) ஆங்கிலத்தில் கார்ட்டூன் என்று அழைக்கப்படும் சொல் தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், வேடிக்கை வித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூர்த்தப்படம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

B) பாரதியாரின் காலம் 1882 முதல் 1921 வரையாகும்.

C) வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் பெங்களுருவில் உள்ளது.

D) சமயமற்ற, சாதிபேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயமாக நாடு திகழ வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் குறிக்கோளாக இருந்தது

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் புதுடெல்லியில் உள்ளது.

51) வை.மு.கோதை நாயகி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் ஆசிரியர், பொறுப்பேற்று நடத்திய “ஜகன்மோகினி” இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது ஒரு சாதனையாகும்.

2. இன்றைய மகளிர் இதழ்களின் தவிர்க்க முடியாத தன்மையாக விளங்கும் சமையல், கோலம், அழகுக்குறிப்பு, சோதிடம் போன்றவை அன்றைய ஜகன்மோகினியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் ஆசிரியர், பொறுப்பேற்று நடத்திய “ஜகன்மோகினி” இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது ஒரு சாதனையாகும்.

2. இன்றைய மகளிர் இதழ்களின் தவிர்க்க முடியாத தன்மையாக விளங்கும் சமையல், கோலம், அழகுக்குறிப்பு, சோதிடம் போன்றவை அன்றைய ஜகன்மோகினியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

52) கூற்று: இந்தியா என்ற இதழுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது.

காரணம்: கருத்துப்படங்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இதழ் இந்தியா.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கருத்துப்படங்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், ‘இந்தியா’ என்ற இதழுக்கு ஆங்கில அரசு தடை விதித்திருந்தது அவை மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வினை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

53) ‘மக்களாட்சியின் மூன்றாவது தூண்’ என அழைக்கப்படுவது எது?

A) அரசு நிர்வாகம்

B) பாராளுமன்றம், சட்டமன்றம்

C) நீதிமன்றம்

D) ஊடகம்

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது.முதல் தூணாக அரசு நிருவாகமும், இரண்டாவது தூணாகப் பாராளுமன்றமும் சட்டமன்றமும், மூன்றாவது தூணாக நீதிமன்றமும், நான்காவது தூணாக ஊடகமும் குறிப்பிடப்படுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

54) வண்ண அச்சுமுறை நடைமுறைக்கு வந்தபோது வண்ணப்படங்களுக்காகவே எந்த நாளிதழ் புகழ்பெற்றன?

A) மெட்ராஸ் மெயில்

B) தி ஹிந்து

C) தினமணி

D) ஜகன்மோகினி

விளக்கம்: வண்ண அச்சுமுறை நடைமுறைக்கு வந்தபோது வண்ணப்படங்களுக்காகவே தி ஹிந்து நாளிதழும் அதன் குழும இதழ்களும் புகழ்பெற்றன. நேர்த்தியான புகைப்படக் கலைஞர் ஒருவனின் கைவண்ணத்தில் உருவாகும் ஒரு வண்ணப்படம் அதே தரத்துடன் நாளிதழில் வெளியாகும்போதும் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜி.கஸ்தூரி.

55) திரைப்படக் கல்லூரி எங்குள்ளது?

A) புனே

B) புதுதில்லி

C) அடையாறு

D) திருநெல்வேலி

விளக்கம்: இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் – புனே.

டைம்ஸ் இதழியல் பள்ளி – புதுதில்லி.

திரைப்படக் கல்லூரி – அடையாறு, சென்னை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி.

56) தமிழ்நாட்டில் முதல் நாளிதழ் எப்போது வெளிவந்தது?

A) 1868

B) 1882

C) 1780

D) 1898

விளக்கம்: தமிழ்நாட்டின்வெளிவந்த முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1868).

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் (1882).

57) கூற்றுகளை ஆராய்க.

1. தலைப்பு 5 வகைப்படும்.

2. செய்திக்கு உயிரோட்டம் தருவது முகப்புப் பகுதியாகும்.

3. செய்தி விளக்கப்பகுதியை எழுதுவதற்கு முன்னால் மூன்று குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. செய்திகள் தொடக்கம், இடை, இறுதி என்று மூன்று நிலைகளில் அமைதல் வேண்டும்

A) 1, 2, 3 சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தலைப்பு 5 வகைப்படும்.

2. செய்திக்கு உயிரோட்டம் தருவது முகப்புப் பகுதியாகும்.

3. செய்தி விளக்கப்பகுதியை எழுதுவதற்கு முன்னால் மூன்று குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. செய்திகள் தொடக்கம், இடை, இறுதி என்று மூன்று நிலைகளில் அமைதல் வேண்டும்.

58) எந்த ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.

A) 1882

B) 1868

C) 1780

D) 1850

விளக்கம்: 1850 ஆம் ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.

59) தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். இதற்கு காரணமாக இருந்தது எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் எழுதியுள்ளார்.

60) ஆசிய இதழியல் கல்லூரி எங்குள்ளது?

A) பெங்களுரு

B) புது தில்லி

C) அகமதாபாத்

D) சென்னை

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி

இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு.

முதுரா தகவல் தொடர்பு நிறுவனம் – அகமதாபாத்

ஆசிய இதழியல் கல்லூரி – சென்னை

61) ‘பாலபாரதம்’ என்பது ஒரு ஆங்கில வார இதழ் ஆகும். இந்த இதழ் யாரால் தொடங்கப்பட்டது?

A) திரு.வி.க

B) பாரதியார்

C) அறிஞர் அண்ணா

D) ஜி.சுப்பிரமணிய ஐயர்

விளக்கம்: மகாகவி பாரதியார், 1907இல் “இந்தியா” என்ற தமிழ் மாத இதழையும், “பால பாரதம்” என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

62) பாரதியார் சுதேசி கப்பல் பற்றி நான்கு படங்கள் வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் கீழ்க்காணும் எதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது?

A) தேசிய விடுதலைக்கு போராடுவது நமது கடமை

B) மிதவாதிகளுக்கு எதிராக தீவிர தேசியவாதிகள் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்

C) ஆங்கிலேயருக்கு எதிராக சுயமாக தொழில் செய்ய வேண்டும்

D) சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம், பாரதியின் கனவு தேசியமே. ஆனால், சுதேசிக் கப்பலின் தேவையை உணர்ந்து நான்கு படங்கள் வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் “இதற்கு உதவுங்கள்” என்று கூறுவதாக அமைந்திருக்கின்றது.

63) ராணி என்பது கீழ்க்காணும் யாருடைய இதழ்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) ஏ.என்.சிவராமன்

C) ஜி.கஸ்தூரி

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: “தினத்தந்து, ராணி ஆகிய சி.பா.ஆதித்தனாரின் இதழ்கள் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சுத்தமிழில் நடத்தப்படுகின்றன. ஆகவே அவை அதிகமாக விற்பனை ஆகின்றன.” – ஜவஹர்லால் நேரு.

64) செய்தியின் விளக்கப்பகுதியை எழுதுவதற்கு முன்னால் எத்தனை குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: செய்தியின் விளக்கப்பகுதியை எழுதுவதற்கு முன்னால் மூன்று குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. செய்தியை முழுமையாகப் படித்து, படிப்பவர்களுக்கு எவை தேவை என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

2. செய்திக்குத் தேவையான எல்லா விவரங்களும் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

3. செய்தியை எவ்வளவு விரைவாகக் கூற முடியுமோ அவ்வளவு விரைவாகக் கூற வேண்டும்.

65) எந்த ஆண்டிலிருந்து மின்னணுப்பக்கங்களாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது தி ஹிந்து நாளிதழ்?

A) 1980

B) 1987

C) 1990

D) 1992

விளக்கம்: 1990இலிருந்து மின்னணுப்பக்கங்களாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது தி ஹிந்து நாளிதழ்.

66) இதழ் செய்திகளை தயார் செய்வதில் எப்போது உலோக எழுத்துருக்களைக் கோத்து அச்சிடும் முறையிலிருந்து தட்டச்சு செய்து பக்கங்களைத் தயார் செய்யும் முறைக்கு மாறியது?

A) 1969

B) 1974

C) 1980

D) 1987

விளக்கம்: 1980இல் உலோக எழுத்துருக்களைக் கோத்து அச்சிடும் முறையிலிருந்து தட்டச்சு செய்து பக்கங்களைத் தயார் செய்யும் முறைக்கு மாறியபோதும் பின்னர், ஒளியச்சுக்கோவைக்கு மாறியபோதும் ஜி.கஸ்தூரி ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கும் எந்வொரு ஊழியரையும் மாற்றவில்லை.

67) காந்தியடிகளின் இதழ்களில் ஒன்று மட்டும் பொருந்தாமல் உள்ளது. அதனை கண்டுபிடி?

A) இந்தியன் ஒபினியன்

B) யங் இந்தியா

C) ஹரிஜன்

D) நவ இந்தியா

விளக்கம்: அண்ணல் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்கள் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அண்ணலின் அரசியல்நுழைவு, இதழ்களின் வளர்ச்சியில் இன்றியமையாத இடத்தைப் பெற்றது. அவர் தென்னாப்பிரிகாவில், ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழையும், நம் நாட்டில் ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய இதழ்களையும் அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்.

68) ‘மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுவது ஊடகம் ஆகும். இதற்கு நான்கு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பொருந்தாதது எது?

A) அரசுக்கு வழிகாட்டுதல்

B) ஆலோசனைகளை வழங்குதல்

C) அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல்

D) கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது.முதல் தூணாக அரசு நிருவாகமும், இரண்டாவது தூணாகப் பாராளுமன்றமும் சட்டமன்றமும், மூன்றாவது தூணாக நீதிமன்றமும், நான்காவது தூணாக ஊடகமும் குறிப்பிடப்படுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

69) பேச்சுத்தமிழைக் கொச்சைநீக்கி, மக்களின் மொழியில் எழுதவேண்டும் என நாளிதழ்களுக்காக பொன்விதி ஏற்படுத்தியவர் யார்?

A) தந்தை பெரியார்

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) திரு.வி.க

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: ஒரு செய்தித்தாள் என்பது, மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண வாசகனுக்கும் சென்று சேர வேண்டுமென்றால், அது எளிய மொழிநடையில் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும். பேச்சுத்தமிழைக் கொச்சைநீக்கி, மக்களின் மொழியில் எழுதவேண்டும் என்பது, ஆதித்தனார் தமது நாளிதழ்களுக்காக ஏற்படுத்திய பொன்விதி.

70) சென்னை தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை தொடங்கியவர் ஜி.கஸ்தூரி ஆவார். இம்முறையிலான முதல் வெளியூர்ப் பதிப்பு 1969ஆம் ஆண்டு எந்த நகரத்திலிருந்து வெளிவந்தது?

A) திருச்சி

B) மதுரை

C) கோயம்புத்தூர்

D) பெங்களுரு

விளக்கம்: சென்னை தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை தொடங்கியவர் ஜி.கஸ்தூரி ஆவார். ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்ட இம்முறையினால் செய்தித்தாள் விநியோகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்தினார். இம்முறையிலான முதல் வெளியூர்ப் பதிப்பு 1969ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது.

71) தொடக்க கால கருத்துப்படங்களுக்காக அறியப்படும் இதழ்களில் பொருந்தாது எது?

A) அமிர்த பஜார் பத்திரிகா

B) அவத் பஞ்ச்

C) இந்தியன் பஞ்ச்

D) பெங்கால் கெஜட்

விளக்கம்: 1850 ஆம் ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும். வங்காளத்திலிருந்து வெளியியான அமிர்த பஜார் பத்திரிக்கா, தில்லியிலிருந்து வெளியான ‘இந்தியன் பஞ்ச்’, ‘அவத் பஞ்ச்’ ஆகிய இதழ்களும் தொடக்க கால கருத்துப்படங்களுக்காக அறியப்படுகின்றன.

72) தலைப்பு எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 3

D) 2

விளக்கம்: தலைப்பு 5 வகைப்படும். அவை,

1. கூம்புத்தலைப்பு

2. தலைகீழ்க் கூம்புத்தலைப்பு

3. இடப்பக்கம் தள்ளிய தலைப்பு

4. வலப்பக்கம் தள்ளிய தலைப்பு

5. உடுக்குத் தலைப்பு

73)செய்திகள் எத்தனை நிலைகளில் அமைதல் வேண்டும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: செய்தியின் தலைப்பையும் முகப்பையும் எழுதிய பிறகு, செய்தியின் விளக்கப்பகுதியை எழுத வேண்டும். செய்திகள் தொடக்கம், இடை, இறுதி என்று மூன்று நிலைகளில் அமைதல் வேண்டும்.

74) சகோதரர் என்ற இதழுடன் தொடர்புடையவர் யார்?

A) திலகர்

B) அரவிந்தர்

C) சுவாமி விவேகானந்தர்

D) காந்தியடிகள்

விளக்கம்: இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்தபோது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும் போராட்டம் செய்த தலைவர்களுக்கு இதழ்கள் உறுதுணையாக இருந்தன. திலகரின் ‘கேசரி’ அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’ சுவாமி விவேகானந்தரின் ‘சகோதரர்’ போன்ற இதழ்கள் உரிமை வேண்டித் தொடர்ந்து குரல் கொடுத்தன.

75) கூற்று: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும்.

காரணம்: கருத்துப்படங்களின் வழியாகச் செய்திகளை எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும் என்று பாரதியார் நம்பினார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். கருத்துப்படங்களின் வழியாகச் செய்திகளை எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும் என்று பாரதியார் நம்பினார்.

76) மார்ட்டின் லூதர்கிங், தமது புரட்சிக் கருத்துகளை எங்கு பரப்புவதற்காகக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார்?

A) இத்தாலி

B) ஜெர்மனி

C) இங்கிலாந்து

D) பிரான்சு

விளக்கம்: மார்ட்டின் லூதர்கிங், தமது புரட்சிக் கருத்துகளை ஜெர்மனியில் பரப்புவதற்காகக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார்.

77) இந்திய அளவிலான இதழியல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் பொருத்தமற்றதை தெரிவு செய்க.

A) வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி.

B) இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு

C) முதுரா தகவல் தொடர்பு நிறுவனம் – புனே

D) ஆசிய இதழியல் கல்லூரி – சென்னை

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி

இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு.

முதுரா தகவல் தொடர்பு நிறுவனம் – அகமதாபாத்

ஆசிய இதழியல் கல்லூரி – சென்னை

சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

78) கூற்று: தந்தை பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டார்.

காரணம்: தமிழைக் கற்போர் மற்றும் பயன்படுத்துவோர்க்கு எளிமையாகவும் சுமை இல்லாமலும் எழுத்துருக்கள் இருக்க வேண்டும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார். தமிழைக் கற்போர் மற்றும் பயன்படுத்துவோர்க்கு எளிமையாகவும் சுமை இல்லாமலும் எழுத்துருக்கள் இருக்கவேண்டும். மேலும் தமிழை விரைவாகவும் வடிவ ஒழுங்கோடும் அச்சிடுவதற்கு எழுத்துருக்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.

79) அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்று எழுதியவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) பாரதியார்

C) திலகர்

D) திரு.வி.க

விளக்கம்: காந்திஜியை காந்தியடிகள் என்று குறிப்பிட்டது போலவே, அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதினார்.

80) தந்தை பெரியார் குடி அரசு, விடுதலை ஆகிய இதழ்களில் சிலவற்றை பற்றி எழுதியதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்படுகிறார். இதில் பொருந்தாதது எது?

A) சமயம் சார்ந்த கருத்தாடல்கள்

B) பொருளியல் கொள்கை

C) பிற்படுத்தப்பட்டோரின் நிலை

D) எழுத்து சீர்திருத்தம்

விளக்கம்: பெரியார் குடி அரசு, விடுதலை ஆகிய இதழ்களில் பெண்விடுதலை, இந்திய சமூக அமைப்பு, அதில் பிற்படுத்தப்பட்டோரின் நிலை, சுயமரியாதையோடு கூடிய அரசியல் சுதந்திரம், சமயம் சார்ந்த கருத்தாடல்கள், பொருளியல் கொள்கை போன்றவற்றை எழுதியதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்படுகிறார்.

81) 1935இல் நீதிக்கட்சிக்காக, தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ என்னும் இதழ் சிறிதுகாலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது. பின்னர், அது நாளிதழாக மாற்றம் பெற்றது. ஆரம்பத்தில் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வரும் இதழாக இருந்தது?

A) வாரம் இருமுறை

B) மாதம் இருமுறை

C) மாதம் ஒருமுறை

D) வாரம் ஒருமுறை

விளக்கம்: 1935இல் நீதிக்கட்சிக்காக, வாரம் இருமுறை ஏடாகத் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ சிறிதுகாலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது. பின்னர், அது நாளிதழாக மாற்றம் பெற்றது.

82) “அடுத்த வாரம் முதல் தலைப்பக்கத்தில் உள்ள ஒரு சித்திரம் மட்டுமே அன்றி, பக்கத்துக்குப் பக்கம் உள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குதவன் பொருட்டு ஆங்காங்குச் சிறிய படங்களும் சித்திரங்களும் போடுவதாக உத்தேசம்” என்று குறிப்பிட்டவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வ.உ.சி

D) வ.வே.சு.ஐயர்

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனைப் பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் (13.03.1909) “தமிழ்நாட்டுப் வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றார். “அடுத்த வாரம் முதல் தலைப்பக்கத்தில் உள்ள ஒரு சித்திரம் மட்டுமே அன்றி, பக்கத்துக்குப் பக்கம் உள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குதவன் பொருட்டு ஆங்காங்குச் சிறிய படங்களும் சித்திரங்களும் போடுவதாக உத்தேசம்” என்றும் குறிப்பிடுகிறார்.

83) கூற்றுகளை ஆராய்க.

1. முதியோர் கல்வி என்ற கல்வி இதழ் 1951 முதல் வெளிவந்தது.

2. தமிழ் இதழியலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை மறைமலையடிகளாரையே சாரும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முதியோர் கல்வி என்ற கல்வி இதழ் 1951 முதல் வெளிவந்தது.

2. தமிழ் இதழியலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி.க-வையே சாரும்.

84) தமிழ்நாட்டில் முதல் தமிழ் நாளிதழ் எப்போது வெளிவந்தது?

A) 1868

B) 1882

C) 1780

D) 1898

விளக்கம்: தமிழ்நாட்டில்வெளிவந்த முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1868).

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் (1882).

85) பாரதியின் கருத்துப்படங்களில் நான்கு படங்கள் சுதேசிக்கப்பலின் தேவையை உணர்ந்து வரையப்பட்டவை. இதில் ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் கீழ்க்காணும் எதனை கூறுவதாக அமைந்திருக்கின்றது?

A) தேசிய விடுதலைக்கு உதவுங்கள்

B) ஆங்கிலேயரின் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்

C) இதற்கு உதவுங்கள்

D) அகிம்சை கொள்கையை பின்பற்றுங்கள்

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம், பாரதியின் கனவு தேசியமே. ஆனால், சுதேசிக் கப்பலின் தேவையை உணர்ந்து நான்கு படங்கள் வரைந்துள்ளார். இதில் மூன்று படங்கள் சுதேசிக்கப்பலுக்கு உதவுவது நமது கடமை என்பதனை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒன்றில் பாரதமாதா தம் மக்களிடம் “இதற்கு உதவுங்கள்” என்று கூறுவதாக அமைந்திருக்கின்றது.

86) தமிழ் உரைநடை வரலாற்றில் யாருடைய நடை குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்ந்தது?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

C) திரு.வி.க

D) பாரதியார்

விளக்கம்: தமிழ் இதழியலில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி.கலியாண சுந்தரனாரையே சாரும். அவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், சிறப்போடு வளர்ந்து வந்ததது. புதுப்புதுத்தமிழ்ச் சொற்கள் உலா வந்தன. தமிழ் உரைநடை வரலாற்றில் அவரது நடை குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்ந்தது.

87) திரு.வி.க-கீழ்க்காணும் எந்த சொல்லை முதன்முதலில் உருவாக்கினார்?

A) வல்லரசு

B) நல்லரசு

C) பேரரசு

D) சுதந்திர அரசு

விளக்கம்: ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவர் திரு.வி.க ஆவார்.

88) ‘அந்தச் சித்திரம்தான் முதலில் என்னை அவர்தம் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது’ என்ற வரியில் அவர் என்று குறிப்பிடப்படுவர் யார்?

A) பாரதிதாசன்

B) திரு.வி.க

C) தந்தை பெரியார்

D) பாரதியார்

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதும்போது, “அந்தச் சித்திரம்தான் முதலில் என்னை அவர்தம் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம்தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று” என்று, பாரதியின் கருத்துப்படம் பற்றிய பாரதிதாசன் எழுதியுள்ளார்.

89) சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் எங்குள்ளது?

A) புனே

B) மும்பை

C) ஜாமியா

D) கோட்டயம்

விளக்கம்: சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம்- மும்பை.

எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி- ஜமியா, புதுதில்லி

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி- கோட்டயம், கேரளா

90) பெரியார் பல்வேறு இதழ்களில் பணியாற்றினாலும், கீழ்க்காணும் எந்த இதழ் அவரின் மனக்கருத்தை வெளிப்படுத்தின?

A) குடி அரசு, விடுதலை

B) விடுதலை, புரட்சி

C) குடி அரசு, பகுத்தறிவு

D) பகுத்தறிவு, ரிவோல்ட்

விளக்கம்: பெரியார் பல்வேறு இதழ்களில் பணியாற்றினாலும், பெரியாரால் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ என்ற இதழும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் நீதிக்கட்சிக்காக தொடங்கப்பட்ட ‘விடுதலை’ என்ற இதழுமே அவரின் முழுமையான மனக்கருத்தை வெளிப்படுத்தின.

91) கூற்றுகளை ஆராய்க.

1. ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் வரைந்து சுதேசமித்திரன் இதழில் பாரதியார் மக்களுக்கு விளக்கினார்.

2. இந்தியர்களை எலும்பும் தோலுமாகவும் வெள்ளையர்களைச் செல்வச்செழிப்புடனும் அமைத்து, இந்தியாவின் நிலையை விளக்கியிருந்தார் பாரதியார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்றையும் (இந்தியா இதழ் – 08.09.1906). இந்தியர்களை எலும்பும் தோலுமாகவும் வெள்ளையர்களைச் செல்வச்செழிப்புடனும் அமைத்து, இந்தியாவின் நிலையை விளக்கியிருந்தார் பாரதியார்.

92) சென்னை தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை தொடங்கியவர் ஜி.கஸ்தூரி ஆவார். இம்முறையிலான முதல் வெளியூர்ப் பதிப்பு எந்த ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது?

A) 1971

B) 1968

C) 1970

D) 1969

விளக்கம்: சென்னை தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை தொடங்கியவர் ஜி.கஸ்தூரி ஆவார். ஆசியாவிலேயே முதன்முiறாயகச் செயல்படுத்தப்பட்ட இம்முறையினால் செய்தித்தாள் விநியோகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்தினார். இம்முறையிலான முதல் வெளியூர்ப் பதிப்பு 1969ஆம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது.

93) தினமணி பத்திரிக்கையின் ஆசிரியரான ஏ.என்.சிவராமன் எத்தனை மொழிகளை அறிந்திருந்தார்?

A) 2

B) 9

C) 4

D) 17

விளக்கம்: பிரெஞ்சு, சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட 17 மொழிகளை அறிந்திருந்தார் என்பது வியப்பிற்குரிய செய்தியாகும்.

94) தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் எது?

A) மதராஸ் மெயில்

B) சுதேசமித்திரன்

C) நவஇந்தியா

D) தி இந்து

விளக்கம்: தமிழ்நாட்டின்வெளிவந்த முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1868).

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் (1882)

95) சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த யார் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார் திரு.வி.க?

A) இராஜாஜி

B) மோகன் குமாரமங்கலம்

C) பி.வி.நரசிம்மன்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார் திரு.வி.க.

96) இந்தியாவில் தொடக்க கால கருத்துப்படங்களை வெளியிட்ட நாளிதழ்களுள் அமிர்த பஜார் பத்திரிக்கையும் ஒன்று. இது எங்கு இருந்து வெளியிடப்பட்டது?

A) டெல்லி

B) வங்காளம்

C) மும்பை

D) சென்னை

விளக்கம்: 1850 ஆம் ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும். வங்காளத்திலிருந்து வெளியான அமிர்த பஜார் பத்திரிக்கா, தில்லியிலிருந்து வெளியான ‘இந்தியன் பஞ்ச்’, ‘அவத் பஞ்ச்’ ஆகிய இதழ்களும் தொடக்க கால கருத்துப்படங்களுக்காக அறியப்படுகின்றன.

97) கடுமையான சட்டங்கள் என்ற கோழி, குப்பை மேட்டிலிருந்து கூவுகின்றது. இக்கோழியின் குரலைக் கேட்டவுடனே ‘சுதந்திர சூரியன்’ உதிப்பது போன்ற சித்திரம் எப்போது பத்திரிக்கையில் வெளிவந்தது?

A) 13.03.1909

B) 08.09.1906

C) 19.12.1908

D) 11.10.1913

விளக்கம்: பாரதியார் வரைந்த, கடுமையான சட்டங்கள் என்ற கோழி, குப்பை மேட்டிலிருந்து கூவுகின்றது. இக்கோழியின் குரலைக் கேட்டவுடனே ‘சுதந்திர சூரியன்’ உதிப்பது போன்ற சித்திரம் 19.12.1908ல் பத்திரிக்கையில் வெளிவந்தது.

98) யாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ என்னும் இதழ் சிறிது காலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது?

A) நீதிக்கட்சி

B) தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தார்

C) சென்னை மகாஜன சபை

D) சென்னை சுதேசி சங்கம்

விளக்கம்: 1935இல் நீதிக்கட்சிக்காக, வாரம் இருமுறை ஏடாகத் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ சிறிதுகாலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது. பின்னர், அது நாளிதழாக மாற்றம் பெற்றது.

99) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) தமிழன், தமிழ்க்கொடி- சி.பா. ஆதித்தனார்.

B) தென்மொழி, தமிழ்ச்சிட்டு- பெருஞ்சித்தனார்

C) வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை என்று காந்தியடிகள் கூறினார்.

D) மணிக்கொடி, கிராம ஊழியன். கலாமோகினி, எழுத்து போன்றவை புகழ்பெற்ற சிற்றிதழ்கள் ஆகும்.

விளக்கம்: வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை என்று அசோகர் தர்ம ஆணை பிறப்பித்துள்ளார்.

100) தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ ஆகும். இதனைப் பற்றி பாரதியார் எந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்?

A) புதிய அபிவிருத்தி

B) விகடசித்திரம்

C) கேலிச்சித்திரம்

D) புதிய முயற்சி

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனைப் பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் (13.03.1909) “தமிழ்நாட்டுப் வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றார்.

101) எந்த ஆண்டு, ஏ.என்.சிவராமன் தமது சிறந்த இதழியல் பணிகளுக்காகக் ‘கோயங்கோ விருது’ பெற்றார்?

A) 1976

B) 1978

C) 1988

D) 1974

விளக்கம்: 1988ஆம் ஆண்டு, தமது சிறந்த இதழியல் பணிகளுக்காகக் ‘கோயங்கோ விருது’ பெற்றார் ஏ.என்.சிவராமன்.

102) தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் எது?

A) மதராஸ் மெயில்

B) சுதேசமித்திரன்

C) நவஇந்தியா

D) தி இந்து

விளக்கம்: தமிழ்நாட்டில்வெளிவந்த முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1868).

தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் (1882)

103) பாரதியார் பஞ்சம் எந்த தலைப்பில் சித்திரம் வரைந்து, பஞ்சத்திற்கு காரணமாக கீழ்க்காணும் எதைக் குறிப்பிடுகிறார்?

A) பருவநிலை மாற்றம்

B) இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக வரி

C) இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வது

D) மேற்காணும்அனைத்தும்

விளக்கம்: பாரதியார் ஒரு பன்முக ஆளுமைத் தன்மை கொண்டவர். அவருடைய பொருளாதார அறிவு வியக்கத்தக்கது. ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

104) சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் திரு.வி.க எந்த இதழில் வெளியிட்டார்?

A) நவசக்தி

B) தேசபக்தன்

C) சுதேச மித்திரன்

D) முல்லை

விளக்கம்: சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார் திரு.வி.க.

105) ‘இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும்’ என்ற தலைப்பில் பாரதியாரின் கருத்துப்படம் கீழ்க்காணும் எதனைக் குறிப்பிடுகிறது?

A) பஞ்சம்

B) சுரண்டல்

C) வரிவிதிப்பு

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: ஆங்கில அரசின் வரிவிதிப்புச் சார்ந்து 30.03.1907-இல் ‘இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும்’ என்னும் தலைப்பில் வெளியான கருத்துப்படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

106) இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1780

B) 1791

C) 1882

D) 1799

விளக்கம்: இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் பெங்கால் கெஜட் (1780).

107) “அந்தச் சித்திரம்தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று” என்ற வரியை கூறியவர் யார்?

A) பாரதிதாசன்

B) திரு.வி.க

C) தந்தை பெரியார்

D) பாரதிதாசன்

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதும்போது, “அந்தச் சித்திரம்தான் முதலில் என்னை அவர்தம் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம்தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று” என்று பாரதியின் கருத்துப்படம் பற்றி பாரதிதாசன் எழுதியுள்ளார்.

108) கருத்துப்படங்களின் வழியாகச் செய்திகளை எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும் என்று நம்பியவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) திலகர்

D) ஜவஹர்லால் நேரு

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். கருத்துப்படங்களின் வழியாகச் செய்திகளை எளிமையாகக் கொண்டுசெல்ல முடியும் என்று பாரதியார் நம்பினார்.

109) வெகுமக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் எங்குள்ளது?

A) பெங்களுரு

B) புது தில்லி

C) அகமதாபாத்

D) சென்னை

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி

இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு.

முதுரா தகவல் தொடர்பு நிறுவனம்- அகமதாபாத்

ஆசிய இதழியல் கல்லூரி – சென்னை

110) கீழ்க்காணும் பத்திரிக்கைகளில் ஒன்று மட்டும் அது வெளியாகும் இடத்திலிருந்து மாறுபட்டுள்ளது?

A) தில்லி ஸ்கெட்ச் புக்

B) அமிர்த பஜார் பத்திரிக்கா

C) இந்தியன் பஞ்ச்

D) அவத் பஞ்ச்

விளக்கம்: 1850 ஆம் ஆண்டு தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும். வங்காளத்திலிருந்து வெளியான அமிர்த பஜார் பத்திரிக்கா, தில்லியிலிருந்து வெளியான ‘இந்தியன் பஞ்ச்’, ‘அவத் பஞ்ச்’ ஆகிய இதழ்களும் தொடக்க கால கருத்துப்படங்களுக்காக அறியப்படுகின்றன.

111) எப்போது ‘குடி அரசு’ என்னும் இதழைத் தொடங்க தந்தை பெரியார் முடிவு செய்தார்?

A) 1921

B) 1922

C) 1924

D) 1925

விளக்கம்: 1922இல் கோயம்புத்தூர் சிறையில் தம் நண்பர் தங்கப்பெருமாளோடு இருக்கும்போது, ‘குடி அரசு’ என்னும் பத்திரிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். அதன்படி 02.05.1925 முதல் ‘குடி அரசு’ வார இதழைத் தொடங்கினார்.

112) எப்போது ‘விடுதலை’ என்னும் இதழ் தொடங்கப்பட்டது?

A) 1932

B) 1935

C) 1934

D) 1925

விளக்கம்: 1935இல் நீதிக்கட்சிக்காக, வாரம் இருமுறை ஏடாகத் தென்னிந்திய நலஉரிமைமச் சங்கத்தாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’ சிறிதுகாலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது. பின்னர், அது நாளிதழாக மாற்றம் பெற்றது.

113) தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) திரு.வி.க

D) வ.உ.சி

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனை பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் (13.03.1909) “தமிழ்நாட்டுப் வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றார்.

114) காலைக்கதிர் என்ற இதழ் எதற்கு புகழ்பெற்றது?

A) அறிவியல்

B) தொழில்நுட்பம்

C) கல்வி

D) மருத்துவம்

விளக்கம்: தமிழில் புகழ்பெற்ற இதழான ‘காலைக்கதிர்’ 1948 முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் குறித்து நுட்பமாகவும் விரிவாகவும் அமைந்து கட்டுரைகளை அவ்விதழ் வெளியிடுகிறது.

115) இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இதழ் எது?

A) மதராஸ் மெயில்

B) பெங்கால் கெஜட்

C) டெல்லி எக்ஸ்பிரஸ்

D) மும்பை இந்தியா

விளக்கம்: இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் பெங்கால் கெஜட் (1780).

(கல்கத்தா ஜெனரல் அட்வைசர்).

116) “தமிழ் பத்திரிக்கைகள் எளிய நடையில் எழுதப்படுவதால் அதிகமாக விற்பனையாகின்றன. இந்தியப் பத்திரிக்கைகள் கடினமான இலக்கிய நடையில் எழுதப்படுவதால் குறைவாக விற்பனையாகின்றன” என்று குறிப்பிட்டவர் யார்?

A) சி.பா.ஆதித்தனார்

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) தந்தை பெரியார்

D) ஜவஹர்லால் நேரு

விளக்கம்: “தமிழ் பத்திரிக்கைகள் எளிய நடையில் எழுதப்படுவதால் அதிகமாக விற்பனையாகின்றன. இந்தியப் பத்திரிக்கைகள் கடினமான இலக்கிய நடையில் எழுதப்படுவதால் குறைவாக விற்பனையாகின்றன. அவர்கள்(இந்தியப் பத்திரிக்கைகள்) எழுவதை என்னால்கூடப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் கடின நடையைக் கைவிட்டு எளிய நடையைப் பின்பற்றி எழுத வேண்டும்” என்றார் ஜவஹர்லால் நேரு. இதன்பிறகு, இந்திய நாளிதழ்கள் சி.பா.ஆதித்தனாரின் மொழிநடையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

117) செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் எப்போது அறிமுகப்படுத்தினார்?

A) பொ.ஆ.60

B) பொ.ஆ.மு.60

C) பொ.ஆ.600

D) பொ.ஆ.மு.600

விளக்கம்: செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார். அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.

118) கூற்று: 1951-52இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தினத்தந்தி நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாது.

காரணம்: தினத்தந்தி அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சுத் தமிழில் நடத்தப்படுகின்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: 1951-52இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தினத்தந்தி நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையானது. ஆதித்தனாரின் இதழ்கள் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சுத் தமிழில் நடத்தப்படுகின்றன, ஆகவே அவை அதிகமாக விற்பனை ஆகின்றன.

119) மக்களாட்சி உரிமைகளைக் காக்கும் இதழியல் பணியில் வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சி கண்டவர் யார்?

A) தந்தை பெரியார்

B) சி.பா.ஆதித்தனார்

C) திரு.வி.க

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: மக்களாட்சி உரிமைகளைக் காக்கும் இதழியல் பணியில் வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சி கண்டவர் டி.எஸ்.சொக்கலிங்கம். இவர் காந்தி, தினமணி, தினசரி, ஜனயுகம், நவசக்தி போன்ற இதழ்களில் பணியாற்றினார்.

120) கூற்றுகளை ஆராய்க.

1. சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது தேசபக்தன் இதழில் திரு.வி.க எழுதியுள்ளார்.

2. சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது நவசக்தி இதழில் வெளியிட்டார் திரு.வி.க.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் திரு.வி.க எழுதியுள்ளார்.

2. சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார் திரு.வி.க.

121) இந்திய இதழியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) சி.பா.ஆதித்தனார்

D) அரங்க.சீனிவாசன்

விளக்கம்: இந்திய இதழியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி ஆவார்.

122) 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, எந்த தலைப்பில் தினமணி இதழில் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார்?

A) ஆங்கிலேயரின் அதிகாரம்

B) அரசின் இயலாமை

C) பீகார் துயரம்

D) சர்க்கார் எங்கே?

விளக்கம்: 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தினமணி இதழில் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார். இதனால், ஆங்கிலேய அரசு இவர் மீதும் இவ்விதழின் மீதும் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் முன்பிணை (முன்ஜாமீன்) வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார்.

123) ஹரிஜன் என்ற இதழை நடத்தியவர் யார்??

A) ஆச்சார்ய வினோபாவே

B) காந்தியடிகள்

C) அம்பேத்கர்

D) திலகர்

விளக்கம்: அண்ணல் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்கள் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அண்ணலின் அரசியல்நுழைவு, இதழ்களின் வளர்ச்சியில் இன்றியமையாத இடத்தைப் பெற்றது. அவர் தென்னாப்பிரிகாவில், ‘இந்தியன் ஒபீனியன்’ என்ற இதழையும், நம் நாட்டில் ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய இதழ்களையும் அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்.

124) இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் எங்குள்ளது?

A) புனே

B) புதுதில்லி

C) அடையாறு

D) திருநெல்வேலி

விளக்கம்: இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் – புனே.

டைம்ஸ் இதழியல் பள்ளி – புதுதில்லி.

திரைப்படக் கல்லூரி – அடையாறு, சென்னை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி.

125) தந்தை பெரியார் தமிழகத்தில் எதன் தாக்கத்தால் மக்களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்?

A) மேடைப்பேச்சு

B) இதழ்கள்

C) கருத்துப்படம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் தந்தை பெரியாரின் இதழ்ப்பணி முதன்மையானது. எதனையும் ஏன்? எதற்கு, எப்படி? என்று ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதையே ஓர் இதழாளராக, பெரியார் தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

126) எப்போது முதல் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ வார இதழ் வெளிவந்தது?

A) 02.04.1925

B) 04.02.1925

C) 02.05.1925

D) 05.02.1925

விளக்கம்: 1922இல் கோயம்புத்தூர் சிறையில் தம் நண்பர் தங்கப்பெருமாளோடு இருக்கும்போது, ‘குடி அரசு’ என்னும் பத்திரிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். அதன்படி 02.05.1925 முதல் ‘குடி அரசு’ வார இதழைத் தொடங்கினார்.

127) மக்கள் செய்ய வேண்டியதைத் தலையங்கம் மூலம் உணர்த்தும் ஆற்றல் பெற்றவர் யார்?

A) தந்தை பெரியார்

B) சி.பா.ஆதித்தனார்

C) திரு.வி.க

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: இதழாளராகவும் எழுத்தாளராகவும் விளங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உடைத்தார். மக்கள் செய்ய வேண்டியதைத் தலையங்கம் மூலம் உணர்த்தும் ஆற்றல் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் எழுத்துக்களில் இருந்தது.

128) ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காக முதியோர் கல்வி என்ற இதழ் எப்போது தொடங்கப்பட்டது.

A) 1897

B) 1951

C) 1969

D) 1856

விளக்கம்: ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காகத் தமிழ்க்கல்வி (1897), முதியோர் கல்வி (1951), கல்விக்கதிர் (1969) போன்ற இதழ்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்தன.

129) டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் ‘ராஜபாட்டை’என்ற தலைப்பில் எந்த இதழில் கட்டுரை எழுதினார்?

A) தினமணி

B) தினசரி

C) ஜனயுகம்

D) நவசக்தி

விளக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் தினசரி என்ற நாளிதழில் ‘ராஜபாட்டை’ என்ற தலைப்பில் சிந்தனைக் கட்டுரைகளும், ‘ஊதல், உண்ணல், உறிஞ்சல்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எழுதிய வந்த எழுத்தோவியங்களும் பரவலான வரவேற்பைப் பெற்றன.

130) எதனையும் ஏன்? எதற்கு, எப்படி? என்று ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதையே ஓர் இதழாளராக, யார் தமது நோக்கமாகக் கொணடிருந்தார்?

A) அம்பேத்கர்

B) திரு.வி.க

C) தந்தை பெரியார்

D) பேரறிஞர் அண்ணா

விளக்கம்: தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் தந்தை பெரியாரின் இதழ்ப்பணி முதன்மையானது. எதனையும் ஏன்? எதற்கு, எப்படி? என்று ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதையே ஓர் இதழாளராக, பெரியார் தமது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

131) டி.எஸ்.சொக்கலிங்கம் கீழ்க்காணும் எந்த இதழில் பணியாற்றவில்லை?

A) காந்தி

B) தினசரி

C) ஜனயுகம்

D) தேசபக்தன்

விளக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் காந்தி, தினமணி, தினசரி, ஜனயுகம், நவசக்தி போன்ற இதழ்களில் பணியாற்றினார்.

132) சென்னைத் தலைமை அலுவலத்தில் வடிவமைக்கப்பட்ட பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை முதலில் தொடங்கியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: நாளிதழின் அச்சமைப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடி ஜி.கஸ்தூரி ஆவார். சென்னைத் தலைமை அலுவலத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை முதலில் தொடங்கியவர் இவரே.

133) முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” எந்த ஆண்டு முதல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது?

A) 1925

B) 1927

C) 1932

D) 1937

விளக்கம்: வை.மு.கோதைநாயகி 1925இல் “ஜகன்மோகினி” என்னும் நாவல் இதழினை அதன் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார். முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” 1937இல் மகளிருக்கான இதழாகத் தன்மை மாற்றிக்கொண்டது.

134) குயில் என்ற இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) மறைமலை அடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்தனார்

விளக்கம்: தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அவை,

1. மறைமலை அடிகள்- அறிவுக்கடல்

2. சி.பா.ஆதித்தனார்- தமிழன், தமிழ்க்கொடி

3. பாரதிதாசன்- குயில்

4. பெருஞ்சித்தனார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு.

135) “இந்திய பத்திரிக்கைகள் கடின நடையைக் கைவிட்டு எளிய நடையைப் பின்பற்றி எழுத வேண்டும்” என்று கூறியவர் யார்?

A) சி.பா.ஆதித்தனார்

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) தந்தை பெரியார்

D) ஜவஹர்லால் நேரு

விளக்கம்: “தமிழ் பத்திரிக்கைகள் எளிய நடையில் எழுதப்படுவதால் அதிகமாக விற்பனையாகின்றன. இந்தியப் பத்திரிக்கைகள் கடினமான இலக்கிய நடையில் எழுதப்படுவதால் குறைவாக விற்பனையாகின்றன. அவர்கள்(இந்தியப் பத்திரிக்கைகள்) எழுவதை என்னால்கூடப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் கடின நடையைக் கைவிட்டு எளிய நடையைப் பின்பற்றி எழுத வேண்டும்” என்று ஜவஹர்லால் நேரு கூறினார். இதன்பிறகு, இந்திய நாளிதழ்கள் சி.பா.ஆதித்தனாரின் மொழிநடையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

136) இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது?

A) 1950-51

B) 1951-52

C) 1949-50

D) 1952-53

விளக்கம்: 1951-52இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தினத்தந்தி நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையானது.

137) தம் நாளிதழ் வளர வேண்டும் என்பதைவிட மக்களைப் பாதிக்கும் சிக்கல்கள் தீரவேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டவர் யார்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) தந்தை பெரியார்

C) திரு.வி.க

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: மக்களாட்சி உரிமைகளைக் காக்கும் இதழியல் பணியில் வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சி கண்டவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார். இவர் தம் நாளிதழ் வளர வேண்டும் என்பதைவிட மக்களைப் பாதிக்கும் சிக்கல்கள் தீரவேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார்.

138) கீழ்க்காணும் எந்த மாவட்டச் சிறையில் இருக்கும்போது தந்தை பெரியார் இதழை தொடங்க முடிவெடுத்தார்?

A) சென்னை

B) வேலூர்

C) ஈரோடு

D) கோயம்புத்தூர்

விளக்கம்: 1922இல் கோயம்புத்தூர் சிறையில் தம் நண்பர் தங்கப்பெருமாளோடு இருக்கும்போது, ‘குடி அரசு’ என்னும் பத்திரிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். அதன்படி 02.05.1925 முதல் ‘குடி அரசு’ வார இதழைத் தொடங்கினார்.

139) கூற்று: பெரியார் நாளிதழ் ஒன்றை தொடங்க விரும்பினார்.

காரணம்: பெரியாரின் கொள்கையை எந்த நாளிதழும் வெளியிட முன்வரவில்லை

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பெரியாரின் சுயமரியாதை. சமதருமம், பெண்ணுரிமை, வகுப்புரிமை போன்ற பரப்புரைகளை வெளியிட எந்த இதழும் முன்வரவில்லை. எனவே, தெளிவு உடைய நோக்கத்தினை மக்களிடையே கொண்டுசெல்லவேண்டும் என்று விரும்பிய பெரியார் நாளிதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார்.

140) ஆங்கிலத்தில் காரட்டூன் என்பதனை பாரதியார் தமிழில் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

A) கேலிச்சித்திரம்

B) விகட சித்திரம்

C) விளக்கப்படம்

D) வேடிக்கைச் சித்திரம்

விளக்கம்: ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ என்று அழைக்கப்படும் கருத்துப்படம், தமிழில் விகட சித்திரம், வேடிக்கைப்படம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இதனைப் பாரதியார் ‘விகட சித்திரம்’ என்று குறிப்பிடுகிறார்.

141) 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியவர் யார்?

A) சி.பா.ஆதித்தனார்

B) ஏ.என்.சிவராமன்

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தினமணி இதழில் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார். இதனால், ஆங்கிலேய அரசு இவர் மீதும் இவ்விதழின் மீதும் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் முன்பிணை (முன்ஜாமீன்) வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார்.

142) டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் எந்த இதழில் ‘ஊதல், உண்ணல், உறிஞ்சல்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எழுத்தோவியங்களை எழுதினார்?

A) ஜனயுகம்

B) தினசரி

C) தினமணி

D) காந்தி

விளக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் என்பர் தினசரி என்ற நாளிதழில் ‘ராஜபாட்டை’ என்ற தலைப்பில் சிந்தனைக் கட்டுரைகளும், ‘ஊதல், உண்ணல், உறிஞ்சல்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எழுதிய வந்த எழுத்தோவியங்களும் பரவலான வரவேற்பைப் பெற்றன.

143) பயிற்சியற்ற வாசகர்களின் படிப்பறிவை வளர்ப்பதைத் தம் நோக்கமாகக் கொண்டு, தமது நாளிதழின் மொழிநடையை அவர்களுக்கு ஏற்றாற்போல் எளிமையாக அமைத்துக்கொண்டவர் யார்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) தந்தை பெரியார்

C) திரு.வி.க

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: பயிற்சியற்ற வாசகர்களின் படிப்பறிவை வளர்ப்பதைத் தம் நோக்கமாகக் கொண்டு, தமது தினத்தந்தி நாளிதழின் மொழிநடையை அவர்களுக்கு ஏற்றாற்போல் எளிமையாக அமைத்துக்கொண்டவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

144) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயகத்திற்குப் பின்னர், பெரும்பாலான இதழ்கள் தேசிய இயக்கத்தோடு ஒன்றிணைந்தன.

B) சமூகத்தின் எண்ணங்களையும் எழுச்சிகளையும் எதிரொளிக்கும் கண்ணாடியாய் இதழ்கள் விளங்குகின்றன.

C) தமிழில் புகழ்பெற்ற அறிவியல் இதழான ‘காலைக்கதிர்’ 1951 முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.

D) தமிழ்க்கல்வி – 1897

விளக்கம்: தமிழில் புகழ்பெற்ற அறிவியல் இதழான ‘காலைக்கதிர்’ 1948 முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.

145) எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களையும் மனத்தில் வைத்து இதழ் நடத்தியவர் யார்?

A) தந்தை பெரியார்

B) சி.பா.ஆதித்தனார்

C) ஜ.கஸ்தூரி

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: சி.பா.ஆதித்தனார் எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களையும் மனத்தில் வைத்துத்தான் இதழ் நடத்தினார். ஆகவேதான். கலைச்சொற்களைத் தவிர்த்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தினார்.

146) ‘போரும் அமைதியும்’ என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

A) பாரதிதாசன்

B) சி.பா.ஆதித்தனார்

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) பாரதியார்

விளக்கம்: லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.

147) “செந்தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நாளிதழில் எழுதினால் அது பலருக்குப் புரியாது.” என்று கூறியவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) சி.பா.ஆதித்தனார்

C) ஜ.கஸ்தூரி

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: “செந்தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நாளிதழில் எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுதமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு” என்று ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.

148) இதழாளராகவும் எழுத்தாளராகவும் விளங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உடைத்தவர் யார்?

A) தந்தை பெரியார்

B) சி.பா.ஆதித்தனார்

C) திரு.வி.க

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: இதழாளராகவும் எழுத்தாளராகவும் விளங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடையவராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை உடைத்தார் டி.எஸ்.சொக்கலிங்கம். மக்கள் செய்ய வேண்டியதைத் தலையங்கம் மூலம் உணர்த்தும் ஆற்றல்இவரின் எழுத்துக்களில் இருந்தது.

149) தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் யாருடைய இதழ்ப்பணி முதன்மையானது?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

C) பாரதியார்

D) மு.வ

விளக்கம்: தமிழகத்தில் இதழ்களின் தாக்கத்தால் மக்களையும், தலைவர்களையும் ஒருங்கிணைத்ததில் தந்தை பெரியாரின் இதழ்ப்பணி முதன்மையானது. எதனையும் ஏன்? எதற்கு, எப்படி? என்று ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதையே ஓர் இதழாளராக, பெரியார் தமது நோக்கமாகக் கொணடிருந்தார்.

150) 1951-1952இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது எந்த நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையானது?

A) பெங்கால் கெஜட்

B) மெட்ராஸ் மெயில்

C) தினத்தந்தி

D) தி இந்து

விளக்கம்: 1951-52இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தினத்தந்தி நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையானது.

151) செய்தித்தாள் வாசித்தல் என்பது, நன்கு படித்தவர்களுக்கான செயல் என்கிற காலம்மாறிச் சற்றே தமிழ் தெரிந்தவர்களும் படிக்குமாறு தமிழை எளிமைப்படுத்தி, கொஞ்சம் பரபரப்புச் சேர்த்து, குழப்பம் இல்லாத வகையில் செய்தியைத் தரும் உத்தியைத் தமிழ்நாட்டில் முதலில் கொண்டுவந்தவர் யார்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) ஏ.என்.சிவராமன்

C) ஜி.கஸ்தூரி

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: “செய்தித்தாள் வாசித்தல் என்பது, நன்கு படித்தவர்களுக்கான செயல் என்கிற காலம்மாறிச் சற்றே தமிழ் தெரிந்தவர்களும் படிக்குமாறு தமிழை எளிமைப்படுத்தி, கொஞ்சம் பரபரப்புச் சேர்த்து, குழப்பம் இல்லாத வகையில் செய்தியைத் தரும் உத்தியைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்தவர் சி.பா.ஆதித்தனார்”

152) குற்றாலம் அறிவியில் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை அகற்ற போராட்டம் நடத்தியவர் யார்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) தந்தை பெரியார்

C) சி.பா.ஆதித்தனார்

D) ஏ.என்.சிவராமன்

விளக்கம்: குற்றாலம் அருவியில் வெள்யைரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்தப் பலகையை எடுக்க அறப்போர் நடத்தினார் டி.எஸ்.சொக்கலிங்கம். இருபதே வயது நிறைந்திருந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அறப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வலுத்தது. நாடெங்கும் இந்த அறப்போராட்டச் செய்தி பரவியது. ‘தேசபக்தன்’ நாளிதழ், இளைஞர் சொக்கலிங்கத்தின் போராட்டத்தை ஆதரித்து எழுதியது. இக்கிளர்ச்சிக்கு ஆங்கிலேய அரசு பணிந்தது. உடனே அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.

153) எந்த ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தினமணி இதழில் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார்?

A) 1938

B) 1934

C) 1937

D) 1935

விளக்கம்: 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தினமணி இதழில் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார். இதனால், ஆங்கிலேய அரசு இவர் மீதும் இவ்விதழின் மீதும் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் முன்பிணை(முன்ஜாமீன்) வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார்.

154) பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. இதில் ஒன்று கீழ்க்காண்பனவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தேர்வு செய்க

A) பத்திரிக்கை

B) துண்டுபிரசுரம்

C) புத்தகம்

D) மேடைப்பேச்சு

விளக்கம்: பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. அவை,

1. மேடைப்பேச்சு

2. எழுத்து

155) நாளிதழ் என்பவை வீடு வீடாக சென்று விற்கும் பொருளாக இல்லாமல் மக்கள் முந்திச் சென்று வாங்கும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் என்று கருதியவர் யார்?

A) தந்தை பெரியார்

B) சி.பா.ஆதித்தனார்

C) திரு.வி.க

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் நாளிதழ் என்பவை வீடு வீடாக் சென்று விற்கும் பொருளாக இல்லாமல் மக்கள் முந்திச் சென்று வாங்கும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் என்று கருதினார்.

156) கூற்று: தந்தை பெரியார் ஒரு புரட்சிகரமான இதழாளர் ஆவார்.

காரணம்: தமது எழுத்துக்களை வெளியிடத் தாமே இதழ்களைப் பொறுப்பேற்று நடத்தினார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பெரியார் தமது எழுத்துக்களை வெளியிடத் தாமே இதழ்களைப் பொறுப்பேற்று நடத்தியதன்மூலம், அவர் ஒரு புரட்சிகரமான இதழாளராக அறியப்படுகிறார்.

157) ‘போரும் அமைதியும்’ என்ற நாவலின் ஆசிரியர் யார்?

A) காளிதாசர்

B) லியோ டால்ஸ்டாய்

C) எர்னஸ்ட் ஹெமிங்வே

D) நா.காமராசன்

விளக்கம்: லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.

158) “இதழ்களில் பேச்சுதமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு” என்று கூறியவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) சி.பா.ஆதித்தனார்

C) ஜ.கஸ்தூரி

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: “செந்தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நாளிதழில் எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுதமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு” என்று ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.

159) தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனைப் பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் எப்போது குறிப்பிட்டார்?

A) 13.04.1909

B) 13.02.1909

C) 13.03.1909

D) 13.05.1909

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனைப் பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் (13.03.1909) “தமிழ்நாட்டுப் வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றார். “அடுத்த வாரம் முதல் தலைப்பக்கத்தில் உள்ள ஒரு சித்திரம் மட்டுமே அன்றி, பக்கத்துக்குப் பக்கம் உள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குவதன் பொருட்டு ஆங்காங்குச் சிறிய படங்களும் சித்திரங்களும் போடுவதாக உத்தேசம்” என்றும் குறிப்பிடுகிறார்.

160) கூற்று: சி.பா.ஆதித்தனார் இந்தியப் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

காரணம்: தமது மொழிநடையால் பாமரரையும் நாளிதழ் படிக்கவைத்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தமது மொழிநடையால் பாமரரையும் நாளிதழ் படிக்கவைத்ததன் மூலம் ஆதித்தனார் இந்தியப் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

161) கூற்று: தினமணி நாளிதழ் 1934இல் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.

காரணம்: இவர், தமது தலையங்களுக்காகவும், கட்டுரைகள் மற்றும் கருத்துப்படங்களுக்காகவும் அறியப்படுகிறார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தினமணி நாளிதழ் 1934இல் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார். இவர், தமது தலையங்களுக்காகவும், கட்டுரைகள் மற்றும் கருத்துப்படங்களுக்காகவும் அறியப்படுகிறார்.

162) பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. இதில் அவரது நேரிடையான களப்பணிக்கு உதவியது எது?

A) மேடைப்பேச்சு

B) எழுத்து

C) புத்தகம்

D) துண்டுப்பிரசுரம்

விளக்கம்: பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. அவை,

1. மேடைப்பேச்சு

2. எழுத்து

அவரது நேரிடையான களப்பணிக்கு உதவியது மேடைப்பேச்சு.

அவரது கொள்கைகளை மிகப்பெரிய வீச்சில் மக்களிடையே கொண்டு சென்றது – எழுத்து.

163) சமயமற்ற, சாதிபேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயமாக நாடு திகழவேண்டும் என்பதை நிறைவேற்ற, ஆட்சியில் பங்கேற்காமல் ஆட்சியாளர்களை இயக்கிய ஆளுமை யார்?

A) அறிஞர் அண்ணா

B) காமராசர்

C) பக்தவத்சலம்

D) தந்தை பெரியார்

விளக்கம்: சமயமற்ற, சாதிபேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயமாக நாடு திகழவேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோளாக இருந்தது. அவரது குறிக்கோள்களை நிறைவேற்ற, ஆட்சியில் பங்கேற்காமல் ஆட்சியளர்களை இயக்கிய ஆளுமை தந்தை பெரியார்.

164) இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அங்கில-தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்?

A) திரு.வி.க

B) தந்தை பெரியார்

C) சி.பா.ஆதித்தனார்

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் ஆங்கில-தமிழ் அகராதியை உருவாக்கினார். லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

165) செய்தியின் பகுதிகள் எத்தனை?

A) 2

B) 3

C) 5

D) 6

விளக்கம்: செய்தித்தாளில் வெளிவருகின்ற ஒரு செய்தி தலைப்பு, முகப்பு, செய்தி விளக்கம் ஆகிய மூன்று பகுதிகளைக்கொண்டு அமைகிறது.

166) ஜகன்மோகினி இதழின் வெற்றிக்கு காரணமான ஒன்றை தெரிவு செய்க?

A) கருத்துப்படங்களுடன் கூடிய செய்தி

B) வண்ண இதழாக வெளிவந்தது

C) எளிய நடையில் செய்திகளை வெளியிட்டது

D) மகளிருக்கான சிறப்பு இதழ்

விளக்கம்: முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” 1937இல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது. பண்டிதத் தமிழில் ஏனைய பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் எளிய நடையில் பாமரரும் படித்தறியும் வகையில் வை.மு.கோதைநாயகி எழுதியதும் ஜகன்மோகினியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.

167) எத்தனை ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றினார் வை.மு.கோதைநாயகி?

A) 35

B) 29

C) 33

D) 37

விளக்கம்: 35 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இவர் எழுதியுள்ள 115 நாவல்களில் ‘அனாதைப்பெண்’, ‘தயாநிதி’ போன்றவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

168) எழுத்துநடை குறித்துப் பத்திரிக்கை எழுத்தளார் கையேடு என்ற பெயரில் ஒரு வழிகாட்டி நூலை வெளியிட்டவர். சி.பா.ஆதித்தனார் ஆவார். இதன் நோக்கம் என்ன?

A) இதழ்களில் கொச்சை நீக்க வேண்டும்

B) எழுத்துத் தமிழில் கொச்சை நீக்க வேண்டும்

C) பேச்சுத் தமிழில் கொச்சை நீக்க வேண்டும்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: எழுத்துநடை குறித்துப் பத்திரிகை எழுத்தாளர் கையேடு என்ற பெயரில் ஒரு வழிகாட்டி நூலை வெளியிட்டிருக்கிறார் சி.பா.ஆதித்தனார். பேச்சுத்தமிழைக் கொச்சை நீக்கி எழுது என்பதே இக்கையேட்டின் பொன்விதி.

169) ஒரு செய்தித்தாள் என்பது, மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண வாசகனுக்கும் சென்று சேர வேண்டுமென்றால், அது எளிய மொழிநடையில் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்ற கொள்கை கொண்டவர் யார்?

A) தந்தை பெரியார்

B) டி.எஸ்.சொக்கலிங்கம்

C) திரு.வி.க

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: ஒரு செய்தித்தாள் என்பது, மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண வாசகனுக்கும் சென்று சேர வேண்டுமென்றால், அது எளிய மொழிநடையில் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும். பேச்சுத்தமிழைக் கொச்சைநீக்கி, மக்களின் மொழியில் எழுதவேண்டும் என்பது, ஆதித்தனார் தமது நாளிதழ்களுக்காக ஏற்படுத்திய பொன்விதி.

170) குற்றாலம் அருவியில் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையை அகற்றுவதற்காக போராடிய டி.எஸ்.சொக்கலிங்கத்தின் போராட்டத்தை ஆதரித்து செய்தி வெளியிட்ட நாளிதழ் எது?

A) தினமணி

B) சுதேசமித்திரன்

C) தி ஹிந்து

D) தேசபக்தன்

விளக்கம்: குற்றாலம் அருவியில் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்ட நேரத்தில் குளிக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்தப் பலகையை எடுக்க அறப்போர் நடத்தினார் டி.எஸ்.சொக்கலிங்கம். இருபதே வயது நிறைந்திருந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அறப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வலுத்தது. நாடெங்கும் இந்த அறப்போராட்டச் செய்தி பரவியது. ‘தேசபக்தன்’ நாளிதழ், இளைஞர் சொக்கலிங்கத்தின் போராட்டத்தை ஆதரித்து எழுதியது. இக்கிளர்ச்சிக்கு ஆங்கிலேய அரசு பணிந்தது. உடனே அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.

171) தனது தலையங்களுக்காகத் தினமணி புகழ்பெற்றிருப்பதற்கு மூலகாரணமாக அமைந்தவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) சி.பா.ஆதித்தனார்

D) டி.எஸ்.சொக்கலிங்கம்

விளக்கம்: தினமணி நாளிதழின் முதல் ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்கலிங்கம், தினமணி தலையங்களுக்காகப் புகழ்பெற்றிருப்பதற்கு இவரே காரணமாவார்.

172) எப்போது தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டது?

A) 1938

B) 1925

C) 1937

D) 1934

விளக்கம்: தினமணி நாளிதழ் 1934இல் தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.

173) ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காக கல்விக்கதிர் இதழ் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1897

B) 1951

C) 1969

D) 1978

விளக்கம்: ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காகத் தமிழ்க்கல்வி (1897), முதியோர் கல்வி (1951), கல்விக்கதிர் (1969) போன்ற இதழ்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்தன.

174) தந்தை பெரியாரின் காலம் என்ன?

A) 1869-1972

B) 1879-1963

C) 1879-1973

D) 1889-1979

விளக்கம்: பகுத்தறிவு சிந்தனை கொண்ட தந்தை பெரியாரின் காலம் 1879 முதல் 1973 வரையாகும். பெரியாரின் வாழ்க்கை, சமுதாயச் சீர்திருத்ததிற்கான வரலாறாகும். சமயமற்ற, சாதிபேதமற்ற ஒரு சமத்துவச் சமுதாயமாக நாடு திகழவேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோளாக இருந்தது.

175) பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. இதில் கொள்கைகளை மிகப்பெரிய வீச்சில் மக்களிடையே கொண்டு சென்றது எது?

A) மேடைப்பேச்சு

B) எழுத்து

C) புத்தகம்

D) துண்டுப்பிரசுரம்

விளக்கம்: பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசேர்க்கப் பயன்பட்ட கருவிகள் இரண்டு. அவை,

1. மேடைப்பேச்சு

2. எழுத்து

அவரது நேரிடையான களப்பணிக்கு உதவியது மேடைப்பேச்சு.

அவரது கொள்கைகளை மிகப்பெரிய வீச்சில் மக்களிடையே கொண்டு சென்றது – எழுத்து.

176) அனாதைப்பெண் என்ற நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இதனை எழுதியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) சங்கரதாச சுவாமிகள்

C) வை.மு.கோதைநாயகி அம்மாள்

D) அம்புஜதம்மாள்

விளக்கம்: 35 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இவர் எழுதியுள்ள 115 நாவல்களில் ‘அனாதைப்பெண்’, ‘தயாநிதி’ போன்றவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

177) செய்தி பரிமாற்றத்தின் வளர்ச்சி நிலைகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A)புகைமூட்டிச் செய்தி அறிவித்தல்🡪குறியீடு வழியாகச் செய்தி அறிவித்தல்🡪முரசறைந்து செய்தி அறிவித்தல்🡪பொதுஇடங்களில் செய்தியை எழுதிவைத்தல்.

B) புகைமூட்டிச் செய்தி அறிவித்தல்🡪குறியீடு வழியாகச் செய்தி அறிவித்தல்🡪பொதுஇடங்களில் செய்தியை எழுதிவைத்தல்🡪முரசறைந்து செய்தி அறிவித்தல்

C) குறியீடு வழியாகச் செய்தி அறிவித்தல்🡪புகைமூட்டிச் செய்தி அறிவித்தல்🡪பொதுஇடங்களில் செய்தியை எழுதிவைத்தல்🡪முரசறைந்து செய்தி அறிவித்தல்

D) புகைமூட்டிச் செய்தி அறிவித்தல்🡪பொதுஇடங்களில் செய்தியை எழுதிவைத்தல்🡪குறியீடு வழியாகச் செய்தி அறிவித்தல் 🡪முரசறைந்து செய்தி அறிவித்தல்

விளக்கம்: செய்தி பரிமாற்றத்தின் வளர்ச்சி நிலைகள்:

1. புகைமூட்டிச் செய்தி அறிவித்தல்

2. குறியீடு வழியாகச் செய்தி அறிவித்தல்

3. முரசறைந்து செய்தி அறிவித்தல்

4. பொதுஇடங்களில் செய்தியை எழுதிவைத்தல்

178) 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ எப்போது நாளிதழாக மாறியது?

A) 1856

B) 1882

C) 1889

D) 1904

விளக்கம்: 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ 1889இல் நாளிதழாக மாறியது. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகளாலும் சுவைமிகு உரைநடையாலும் சுதேசமித்திரன் புதுப்பொலிவோடும் வலுவோடும் வெளிவந்தது.

179) எந்த ஆண்டு பெங்கால் கெஜட் என்ற முதல் இந்தியச் செய்தித்தாள் வெளியிடப்பட்டது?

A) 1788

B) 1785

C) 1782

D) 1780

விளக்கம்: 1780ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29ஆம் நாள் பெங்கால் கெஜட் என்ற முதல் இந்திய செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி வெளியிட்டார்.

180) ‘இந்தியா’ என்ற தமிழ் மாத இதழைத் தொடங்கியவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) பாரதியார்

C) திரு.வி.க

D) ஜி.சுப்பிரமணிய ஐயர்

விளக்கம்: மகாகவி பாரதியார், 1907இல் “இந்தியா” என்ற தமிழ் மாத இதழையும், “பால பாரதம்” என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

181) எந்த இதழுக்குப் பிறகு ‘தேசபக்தன்’ இதழ் தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கியது?

A) நவ இந்தியா

B) சுதேசமித்திரன்

C) திராவிடன்

D) பாலபாரதம்

விளக்கம்: 1917இல் திரு.வி.க. அவர்கள் “தேசபக்தன்” என்னும் நாளிதழைத் தொடங்கினார். சுதேசமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே.

182) கேசரி என்ற இதழைத் தொடங்கியவர் யார்?

A) திலகர்

B) அரவிந்தர்

C) சுவாமி விவேகானந்தர்

D) காந்தியடிகள்

விளக்கம்: இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்தபோது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும் போராட்டம் செய்த தலைவர்களுக்கு இதழ்கள் உறுதுணையாக இருந்தன. திலகரின் ‘கேசரி’ அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’ சுவாமி விவேகானந்தரின் ‘சகோதரர்’ போன்ற இதழ்கள் உரிமை வேண்டித் தொடர்ந்து குரல் கொடுத்தன.

183) கூற்று: பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு.

காரணம்: பாரதியின் கனவு தேசியமே.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பாரதியின் கருத்துப்படங்களில் தமிழகத்தைக் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இதற்குக் காரணம், பாரதியின் கனவு தேசியமே.

184) காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாக எந்த இதழில் திரு.வி.க. எழுதியுள்ளார்?

A) நவசக்தி

B) சுதேசமித்திரன்

C) தேசபக்தன்

D) காந்திஜி

விளக்கம்: ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் எழுதியுள்ளார்.

185) கூற்றுகளை ஆராய்க.

1. 1917இல் திரு.வி.க. ‘தேசபக்தன்’ என்னும் நாளிதழைத் தொடங்கினார்.

2. சுதேமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1917இல் திரு.வி.க. ‘தேசபக்தன்’ என்னும் நாளிதழைத் தொடங்கினார். சுதேமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே. இதனைத் தொடர்ந்து நவசக்தி, திராவிடன், தமிழ்நாடு, ஜெயபாரதி, சுதந்திர சங்கு, ஜனசக்தி போன்ற இதழ்களும் தோன்றி மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தின.

186) மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி எங்குள்ளது?

A) புனே

B) மும்பை

C) ஜாமியா

D) கோட்டயம்

விளக்கம்: சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம்- மும்பை.

எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி- ஜமியா, புதுதில்லி

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி- கோட்டயம், கேரளா.

187) பொ.ஆ.1450 இல் ஆண்டு ஜோகன்ஸ் கூடன்பர்க்(1398-1468) என்பவர் முதன்முதலில் அச்சுப்பொறியினை கண்டுபிடித்தார். இவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

A) ரோம்

B) ஜெர்மனி

C) பிரேசில்

D) இங்கிலாந்து

விளக்கம்: பொ.ஆ.1450 இல் ஆண்டு ஜோகன்ஸ் கூடன்பர்க்(1398-1468) என்ற ஜெர்மானியர் முதன்முதலில் அச்சுப்பொறியினை கண்டுபிடித்தார். இதனால், அச்சிட்ட இதழ்கள் நம் நகரங்களில் தவழ்ந்து, சமுதாயம் பல மாற்றங்களைப் பெறக் காரணமாக அமைந்தது.

188) முதுரா தகவல் தொடர்பு நிறுவனம்எங்குள்ளது?

A) பெங்களுரு

B) புது தில்லி

C) அகமதாபாத்

D) சென்னை

விளக்கம்: வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவனம் – புது தில்லி

இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவனம் – பெங்களுரு.

முதுரா தகவல் தொடர்பு நிறுவனம்- அகமதாபாத்

ஆசிய இதழியல் கல்லூரி- சென்னை

189) இந்தியர்களை எலும்பும் தோலுமாகவும், வெள்ளையார்களைச் செல்வச்செழிப்புடனும் அமைத்து, இந்தியாவின் நிலையை விளக்கியவர் யார்?

A) வ.உ.சி

B) பாரதிதாசன்

C) திரு.வி.க

D) பாரதியார்

விளக்கம்: ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்றையும் (இந்தியா இதழ் – 08.09.1906). இந்தியர்களை எலும்பும் தோலுமாகவும் வெள்ளையர்களைச் செல்வச்செழிப்புடனும் அமைத்து, இந்தியாவின் நிலையை விளக்கியிருந்தார் பாரதியார்.

190) பெங்கால் கெஜட் என்ற முதல் இந்தியச் செய்தித்தாளை வெளியிட்டவர் யார்?

A) ரிச்சர்டு ஜான்சன்

B) பெர்சிவல் பாதிரியார்

C) ஜோஹன்னஸ் கூடன்பர்க்

D) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

விளக்கம்: 1780ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29ஆம் நாள் பெங்கால் கெஜட் என்ற முதல் இந்தியச் செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி வெளியிட்டார்.

191) நாளிதழின் அச்சமைப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடி யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: நாளிதழின் அச்சமைப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடி ஜி.கஸ்தூரி ஆவார். சென்னைத் தலைமை அலுவலத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை முதலில் தொடங்கியவர் இவரே.

192) தயாநிதி என்ற நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இதனை எழுதியவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) சங்கரதாச சுவாமிகள்

C) வை.மு.கோதைநாயகி அம்மாள்

D) அம்புஜதம்மாள்

விளக்கம்: 35 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இவர் எழுதியுள்ள 115 நாவல்களில் ‘அனாதைப்பெண்’, ‘தயாநிதி’ போன்றவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

193) மகாகவி பாரதியார் எப்போது இந்தியா என்ற தமிழ் மாத இதழைத் தொடங்கினார்?

A) 1907

B) 1917

C) 1905

D) 1908

விளக்கம்: மகாகவி பாரதியார், 1907இல் “இந்தியா” என்ற தமிழ் மாத இதழையும், “பால பாரதம்” என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

194) 1977இல் தி ஹிந்து நாளிதழில் அறிமுகப்படுத்திய “OUTLOOK, SPECIAL REPORT OPEN PAGE” ஆகிய பகுதிகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதனை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: செய்திகளை விரைந்து சேகரிக்க மாவட்ட, மாநில தலைநகரங்களில் முதன்மைச் செய்தி அலுவலர்களை நியமித்தது ஜி.கஸ்தூரியின் புதுமையான முயற்சியாகும். 1977இல் அவர் தி ஹிந்து நாளிதழில் அறிமுகப்படுத்திய “OUTLOOK, SPECIAL REPORT OPEN PAGE” ஆகிய பகுதிகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

195) “ஜகன்மோகினி” யின் துணைவெளியீடாக எந்த இதழ் வெளியிடப்பட்டது?

A) தினசரி

B) தினயுகம்

C) பூமி

D) நந்தவனம்

விளக்கம்: “ஜகன்மோகினி”யின் துணைவெளியீடாக நந்தவனம் என்ற இதழையும் வெளியிட்டு, அதன்மூலம் 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வை.மு.கோதைநாயகி அறிமுகப்படுத்தினார்.

196) ‘தேசபக்தன்’ என்ற இதழை திரு.வி.க எப்போது தொடங்கினார்?

A) 1907

B) 1917

C) 1909

D) 1908

விளக்கம்: 1917-இல் திரு.வி.க அவர்கள் ‘தேசபக்தன்’ என்ற நாளிதழைத் தொடங்கினார். சுதேசமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே.

197) ‘பாலபாரதம்’ என்பது ஒரு ஆங்கில வார இதழ் ஆகும். இந்த இதழ் யாரால் தொடங்கப்பட்டது?

A) திரு.வி.க

B) பாரதியார்

C) அறிஞர் அண்ணா

D) ஜி.சுப்பிரமணிய ஐயர்

விளக்கம்: மகாகவி பாரதியார், 1907-இல் “இந்தியா” என்ற தமிழ் மாத இதழையும், “பால பாரதம்” என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

198) எந்த ஆண்டு ஜோகன்ஸ் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன்முதலில் அச்சுப்பொறியினை கண்டுபிடித்தார்?

A) 1780

B) 1450

C) 1665

D) 1545

விளக்கம்: பொ.ஆ.1450-ஆம் ஆண்டு ஜோகன்ஸ் கூடன்பர்க்(1398-1468) என்ற ஜெர்மானியர் முதன்முதலில் அச்சுப்பொறியினை கண்டுபிடித்தார். இதனால், அச்சிட்ட இதழ்கள் நம் நகரங்களில் தவழ்ந்து, சமுதாயம் பல மாற்றங்களைப் பெறக் காரணமாக அமைந்தது.

199) கூற்றுகளை ஆராய்க.

1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் ‘இந்தியன் ஒப்பினியன்’ என்ற இதழை நடத்தி வந்தார்.

2. துளிர் என்னும் அறிவியல் இதழ் சிறுவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செய்திகளையும், செயல்பாடுகளையும் வெளியிட்டு வருகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் ‘இந்தியன் ஒப்பினியன்’ என்ற இதழை நடத்தி வந்தார்.

2. துளிர் என்னும் அறிவியல் இதழ் சிறுவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செய்திகளையும், செயல்பாடுகளையும் வெளியிட்டு வருகிறது.

200) கூற்று: பாரதியார் தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தினார்.

காரணம்: அன்றைய அரசியல், சமூகச் சூழல்களையும் சுட்டிக்காட்டி விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்குபெற வேண்டும் என்கிற உணர்வினை ஏற்டுத்த.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: பாரதி தமது கருத்துப்படங்கள் வழி அன்றைய அரசியல், சமூகச் சூழல்களையும் சுட்டிக்காட்டி விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்குபெற வேண்டும் என்கிற உணர்வினை ஏற்படுத்தினார். இவரே தமிழில் கருத்துப்படத்தை அறிமுகம் செய்தவர் ஆவார்.

201) தினமணி இதழின் முதல் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் மறைவுக்குப் பின்னர்த் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) அறிஞர் அண்ணா

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: தினமணி நாளிதழின் முதல் ஆசிரியராக 1934இல் டி.எஸ்.சொக்கலிங்கம் பொறுப்பேற்றார். அவரின் மறைவுக்குப் பின்னர் தினமணியின் ஆசிரியாகப் பொறுப்பேற்ற சிவராமன் 1987 வரை பணியாற்றினார்.

202) மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை சென்னையில் வெளியிட்டவர் யார்?

A) ரிச்சர்டு ஜான்சன்

B) பெர்சிவல் பாதிரியார்

C) ஜோஹன்னஸ் கூடன்பர்க்

D) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

விளக்கம்: சென்னையில் 1785ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் முதன் முதலாக ரிச்சர்டு ஜான்சன் என்பவர் ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.

203) சி.பா.ஆதித்தனாரின் பத்திரிக்கை கையேட்டிலிருந்து சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தவறான ஒன்றை தெரிவு செய்க?

A) கள்ள ரூபாய் நோட்டுச் செய்தியை எழுதும்போது ‘கத்தை கத்தையாக நோட்டு அச்சடிப்பு’ என்று எழுத வேண்டும்.

B) அரசாங்கம் நோட்டு அச்சடிக்கும்போது ‘கோடிக்கணக்கில் ரூபாய்நோட்டு அச்சடிப்பு’ என்று சொல்ல வேண்டும்

C) மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியைத் ‘தலைமை ஆஸ்பத்திரி’ என்று எழுத வேண்டும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கள்ள ரூபாய் நோட்டுச் செய்தியை எழுதும்போது ‘கத்தை கத்தையாக நோட்டு அச்சடிப்பு’ என்று எழுத வேண்டும்.

அரசாங்கம் நோட்டு அச்சடிக்கும்போது ‘கோடிக்கணக்கில் ரூபாய்நோட்டு அச்சடிப்பு’ என்று சொல்ல வேண்டும்

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தலைமை ஆஸ்பத்திரியைப் ‘பெரிய ஆஸ்பத்திரி’ என்று எழுத வேண்டும்

204) இந்திர மோகனா என்னும் நாடகம் யாருடைய முதல் படைப்பு?

A) டி.சி.பட்டம்மாள்

B) வை.மு.கோதைநாயகி

C) பம்மல் சம்பந்தனார்

D) அறிஞர் அண்ணா

விளக்கம்: வை.மு.கோதைநாயகி, நன்றாக கதை சொல்வதைக் கேட்டு அவரின் தோழியான டி.சி.பட்டம்மாள் அவரை கதை எழுதத் தூண்டினார். எழுதப் படிக்கத் தெரியாத வை.மு.கோதைநாயகி தன்னால் எப்படி எழுத முடியும்? என வருத்தமுற்றார். அவரின் முகக் குறிப்பை உணர்ந்த பட்டம்மாள், ‘நீ சொல்லச் சொல்ல நான் எழுதுகிறேன்’என்று கூறி, அவருக்கு ஊக்கமூட்டினார். வை.மு.கோதைநாயகியின் முதல் படைப்பு, ‘இந்திர மோகனா’ என்னும் நாடகமாகும். பின்னர், எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடத் தொடங்கினார்.

205) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) சகோதரர் – சுவாமி விவேகானந்தர்

B) பொ.ஆ. 1450இல் ஜோஹன்னஸ் கூடன்பர்க் என்ற ஜெர்மானியர் முதன்முதலில் அச்சுப்பொறியினைக் கண்டுபிடித்தார்.

C) 1782ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29ஆம் நாள் பெங்கால் கெஜட் என்ற முதல் இந்தியச் செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி வெளியிட்டார்.

D) 1785 அக்டோபர் 12இல் முதல் முதலாக ரிச்சர்டு ஜான்சன் என்பவர் ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.

விளக்கம்: 1780ஆம் ஆண்ட ஜனவரித் திங்கள் 29ஆம் நாள் பெங்கால் கெஜட் என்ற முதல் இந்தியச் செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி வெளியிட்டார்.

206) செய்திகளை சேரிக்க மாவட்ட, மாநிலத் தலைநகரங்களில் முதன்மைச் செய்தி அலுவலர்களை நியமித்து புதுமையான முயற்சி மேற்கொண்டவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: செய்திகளை விரைந்து சேகரிக்க மாவட்ட, மாநில தலைநகரங்களில் முதன்மைச் செய்தி அலுவலர்களை நியமித்தது ஜி.கஸ்தூரியின் புதுமையான முயற்சியாகும். 1977இல் அவர் தி ஹிந்து நாளிதழில் அறிமுகப்படுத்திய “OUTLOOK, SPECIAL REPORT OPEN PAGE” ஆகிய பகுதிகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

207) தமிழ் இதழியல் வரலாற்றில் முன்முறையாக ஒரு பெண் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி எந்த இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது?

A) தினசரி

B) தினமணி

C) நந்தவனம்

D) ஜகன்மோகினி

விளக்கம்: தமிழ் இதழியல் வரலாற்றில் முன்முறையாக ஒரு பெண் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய ‘ஜகன்மோகினி’ இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது ஒரு சாதனையாகும். இன்றைய மகளிர் இதழ்களின் தவிர்க்க முடியாத தன்மையாக விளங்கும் சமையல், கோலம், அழகுக்குறிப்பு, சோதிடம் போன்றவை அன்றைய ஜகன் மோகினியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

208) தமிழ் இதழியலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை யாரைச்சாரும்?

A) அறிஞர் அண்ணா

B) தந்தை பெரியார்

C) திரு.வி.க

D) பாரதியார்

விளக்கம்: தமிழ் இதழியலில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி.கலியாண சுந்தரனாரையே சாரும். அவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், சிறப்போடு வளர்ந்து வந்ததது. புதுப்புதுத்தமிழ்ச் சொற்கள் உலா வந்தன. தமிழ் உரைநடை வரலாற்றில் அவரது நடை குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்ந்தது.

209) டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி ஆசிரியராக இருந்தபோது அதில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) தந்தை பெரியார்.

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய இதழ் ‘காந்தி’ ஆகும். இதில் ஒரு பத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கிய ஏ.என்.சிவராமன், பின் அதிலிருந்து விலகி வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். 1934ல் டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் சிவராமன் அதில் துணையாசிரியராகப் இணைந்தார்.

210) கூற்று: இதழியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஆவார்.

காரணம்: செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார். அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார். அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். அவர் இதழியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

211) கூற்றுகளை ஆராய்க.

1. பொருள் நிறைந்த தகவல்களைக்கொண்டு புலமைமிக்கவர்கள் மட்டுமே படிக்கும் இதழ்களைச் ‘செவ்வியல் இதழ்கள்’ என்று அழைப்பர்.

2. அனைத்து மக்களும் எளிதாகப் படிக்கக் கூடிய இதழ்களை ‘மக்கள் இதழ்கள்’ என்று அழைப்பர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொருள் நிறைந்த தகவல்களைக்கொண்டு புலமைமிக்கவர்கள் மட்டுமே படிக்கும் இதழ்களைச் ‘செவ்வியல் இதழ்கள்’ என்று அழைப்பர்.

2. அனைத்து மக்களும் எளிதாகப் படிக்கக் கூடியத இதழ்களை ‘மக்கள் இதழ்கள்’ என்று அழைப்பர்.

212) எந்த ஆண்டு ஜி.கஸ்தூரி தி ஹிந்து நாளிதழில் அறிமுகப்படுத்திய “OUTLOOK, SPECIAL REPORT OPEN PAGE” ஆகிய பகுதிகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன?

A) 1974

B) 1976

C) 1978

D) 1977

விளக்கம்: செய்திகளை விரைந்து சேகரிக்க மாவட்ட, மாநில தலைநகரங்களில் முதன்மைச் செய்தி அலுவலர்களை நியமித்தது ஜி.கஸ்தூரியின் புதுமையான முயற்சியாகும். 1977இல் அவர் தி ஹிந்து நாளிதழில் அறிமுகப்படுத்திய “OUTLOOK, SPECIAL REPORT OPEN PAGE” ஆகிய பகுதிகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

213) சி.பா.ஆதித்தனாரின் பத்திரிக்கை கையேட்டிலிருந்து சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) காரால் மோதப்பட்டு கிழவி சாவு

B) கார் மோதி கிழவி சாவு

C) மண்டையைப் பிளக்கும் வெயிலில் உணவு அமைச்சர் துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்தார்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: செய்வினையில் எழுத வேண்டும்.

‘காரால் மோதப்பட்டு கிழவி சாவு’ – தவறு.

‘கார் மோதி கிழவி சாவு’ – சரி.

‘உணவு அமைச்சர் மண்டையைப் பிளக்கும் வெயிலில் துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்தார்’ – தவறு.

‘மண்டையைப் பிளக்கும் வெயிலில் உணவு அமைச்சர் துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்தார்’ – சரி.

214) கூற்றுகளை ஆராய்க.

1. நாடோடிகளாக வாழ்ந்த மனிதஇனம் படிப்படியாக நாகரிக வளர்ச்சி பெற்று வாழ முற்பட்டது. அவர்களுக்குள்ளே செய்திப் பரிமாற்றங்கள் தேவைபட்டன.

2. சீனர்கள் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அச்சுக்கலை தோன்றி வளர ஆரம்பித்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாடோடிகளாக வாழ்ந்த மனிதஇனம் படிப்படியாக நாகரிக வளர்ச்சி பெற்று வாழ முற்பட்டது. அவர்களுக்குள்ளே செய்திப் பரிமாற்றங்கள் தேவைபட்டன. இதுவேமொழி தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. தீப்பந்தங்களை எரிந்தும், பறை அறிவித்தும் ஓர் இடத்தில் நிகழும் செய்திகளை மற்றவர்களுக்கு அறிவித்தனர். மேலும், ஆட்களை அனுப்பியும் புறாக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டியும் செய்திகளைத் தெரிவித்தனர்.

2. சீனர்கள் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அச்சுக்கலை தோன்றி வளர ஆரம்பித்தது.

215) இந்தியாவில் யாருடைய கல்வெட்டுகளை இதழ்களின் முன்னோடியாகக் கொள்ளலாம்?

A) அசோகர்

B) கனிஷ்கர்

C) சமுத்திரகுப்தர்

D) அக்பர்

விளக்கம்: செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார். அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். அவர் இதழியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவில் அசோகரின் கல்வெட்டுகளை இதழ்களின் முன்னோடியாகக் கொள்ளலாம்.

216) எப்போது ரிச்சர்டு ஜான்சன் என்பவர் ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்?

A) 1785 அக்டோபர் 2

B) 1785 அக்டோபர் 7

C) 1785 அக்டோபர் 12

D) 1785 அக்டோபர் 17

விளக்கம்: சென்னையில் 1785ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் முதன் முதலாக ரிச்சர்டு ஜான்சன் என்பவர் ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.

217) எழுத்துநடை குறித்துப் பத்திரிக்கை எழுத்தாளர் கையேடு என்ற பெயரில் ஒரு வழிகாட்டி நூலை வெளியிட்டவர் யார்?

A) டி.எஸ்.சொக்கலிங்கம்

B) சி.பா.ஆதித்தனார்

C) தந்தை பெரியார்

D) ஜி.கஸ்தூரி

விளக்கம்: எழுத்துநடை குறித்துப் பத்திரிகை எழுத்தாளர் கையேடு என்ற பெயரில் ஒரு வழிகாட்டி நூலை வெளியிட்டிருக்கிறார் சி.பா.ஆதித்தனார். பேச்சுத்தமிழைக் கொச்சை நீக்கி எழுது என்பதே இக்கையேட்டின் பொன்விதி.

218) தினமணியின் ஆசிரியராகப் சிவராமன் எப்போது வரை இருந்தார்?

A) 1965

B) 1978

C) 1984

D) 1987

விளக்கம்: தினமணி நாளிதழின் முதல் ஆசிரியராக 1934இல் டி.எஸ்.சொக்கலிங்கம் பொறுப்பேற்றார். அவரின் மறைவுக்குப் பின்னர் தினமணியின் ஆசிரியாகப் பொறுப்பேற்ற சிவராமன் 1987 வரை பணியாற்றினார்.

219) தமிழன் என்ற இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) மறைமலை அடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்தனார்

விளக்கம்: தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அவை,

1. மறைமலை அடிகள்- அறிவுக்கடல்

2. சி.பா.ஆதித்தனார்- தமிழன், தமிழ்க்கொடி

3. பாரதிதாசன்- குயில்

4. பெருஞ்சித்தனார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு.

220) தினமணி நாளிதழின் ஆசிரியரான ஏ.என். சிவராமன் கீழ்க்காணும் எதைப் பற்றிய கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார்?

A) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

B) கல்வி

C) வேலைவாயப்பு

D) உடல் நலம்

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான ஏ.என். சிவராமன் தமது அறிவியல் மற்றும் தொழிநுட்பக் கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார்.

221) தமிழில் முதன் முதலில் வெளிவந்த நாளிதழ் எது?

A) தினவர்த்தனமானி

B) தினமணி

C) தி ஹிந்து

D) தெரியவில்லை

விளக்கம்: தமிழ்மொழியில் முதன்முதலில் வெளிவந்த நாளிதழ் எது என்பது பற்றித் திட்டவட்டமாகத் தெரிவில்லை. 1856-இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தனமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும். இந்த இதழ் செய்திகளோடு கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்தது.

222) விண்வெளி, அறிவியல், அரசியல் தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரப்பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: விண்வெளி, அறிவியல், அரசியல் தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரப்பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஏ.என்.சிவராமன் ஆவார்.

223) எந்த ஆண்டு கல்வித்துறையின் ஆதரவில் ‘ஜனவிநோதினி’ என்ற தமிழ் மாத இதழ் வெளிவந்தது?

A) 1780

B) 1785

C) 1856

D) 1870

விளக்கம்: 1870-ஆம் ஆண்டு கல்வித்துறையின் ஆதரவில் ‘ஜனவிநோதினி’ என்ற தமிழ் மாத இதழ் வெளிவந்தது. கல்வி வளர்ச்சியே இதன் தலையாய குறிக்கோளாக இருந்தது.

224) ‘மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுவது எது?

A) அரசு நிர்வாகம்

B) பாராளுமன்றம், சட்டமன்றம்

C) நீதிமன்றம்

D) ஊடகம்

விளக்கம்: ‘ஊடகம் மக்களாட்சின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

225) டி.எஸ்.சொக்கலிங்கம் எப்போது தினமணி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்?

A) 1935

B) 1934

C) 1938

D) 1937

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய இதழ் ‘காந்தி’ ஆகும். இதில் ஒருபத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கிய ஏ.என்.சிவராமன், பின் அதிலிருந்து விலகி வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். 1934ல் டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் சிவராமன் அதில் துணையாசிரியராகப் இணைந்தார்.

226) தி இந்து ஆங்கில நாளிதழில் திரு.ஜி.கஸ்தூரி என்பவர் எப்போது முதல் எப்போது வரை ஆசிரியராகப் பணியாற்றினார்?

A) 1965 முதல் 1991 வரை

B) 1960 முதல் 1994 வரை

C) 1969 முதல் 1997 வரை

D) 1963 முதல் 1994 வரை

விளக்கம்: திரு.ஜி.எஸ்.கஸ்தூரி தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் செய்தித்தாள் விநியோகத்தில் மேற்கொண்ட புதுமையான முயற்சிகளுக்காகவும், அச்சுத் தொழில்நுட்பத்தில் கையாண்ட நவீன முறைகளுக்காகவும் பத்திரிக்கை உலகில் போற்றப்படுகிறார்.

227) இதழியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

A) அரிஸ்டாட்டில்

B) ஜுலியஸ் சீசர்

C) ஜோஹன்ஸ் கூடன்பர்க்

D) ஜேம்ஸ் அகஸ்டஸ்

விளக்கம்: செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையினை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார். அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். அவர் இதழியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

228) பாரிடைத் துயில்வோர் கண்ணில்

பாய்ந்திடும் எழுச்சி நீதான் – இவ்வரியில் குறிப்பிடப்படுவது கீழ்க்காணும் எதனை?

A) வானொலி

B) தொலைக்காட்சி

C) பத்திரிக்கை

D) இணையம்

விளக்கம்: காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான் இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணில்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே – பாரதிதாசன்

மேற்காணும் வரிகளில் குறிப்பிடப்படுவது பத்திரிக்கை ஆகும்.

229) அறிவுக்கடல் என்ற இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) மறைமலை அடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்தனார்

விளக்கம்: தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அவை,

1. மறைமலை அடிகள்- அறிவுக்கடல்

2. சி.பா.ஆதித்தனார்- தமிழன், தமிழ்க்கொடி

3. பாரதிதாசன்- குயில்

4. பெருஞ்சித்தனார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு.

230) கூற்று: ‘இந்தியா’ என்ற இதழை அனைவரும் விரும்பி படித்தனர்.

காரணம்: பாரதியார் அவ்விதழில் சிரியராகப் பணியாற்றினார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கருத்துப்பட வடிவத்தினை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் காட்டியவர் பாரதியே. கருத்துப்படங்களுக்காகவே ‘இந்தியா’ இதழினை அனைரும் விரும்பிப் படித்தனர்.

231) சென்னைத் தலைமை அலுவலத்தில் வடிவமைக்கப்பட்ட பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை சியாவிலேயே முதலில் அறிமுகம் செய்தவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: நாளிதழின் அச்சமைப்பில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடி ஜி.கஸ்தூரி ஆவார். சென்னைத் தலைமை அலுவலத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடுகிற முறையை முதலில் தொடங்கியவர் இவரே. ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்ட இம்முறையினால் செய்தித்தாள் விநியோகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்தினார்.

232) தமிழில் முதன் முதலில் வெளிவந்த வார இதழ் எது?

A) தினவர்த்தனமானி

B) தினமணி

C) தி ஹிந்து

D) சுதேசிமித்ரன்

விளக்கம்: தமிழ்மொழியில் முதன்முதலில் வெளிவந்த நாளிதழ் எது என்பது பற்றித் திட்டவட்டமாகத் தெரிவில்லை. 1856-இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தனமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும். இந்த இதழ் செய்திகளோடு கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்தது.

233) ஏ.என்.சிவராமன் எந்த இதழுடன் தொடர்புடையவர் ஆவார்?

A) தினத்தந்தி

B) தினசரி

C) தினமணி

D) தி இந்து

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான ஏ.என். சிவராமன் தமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார்.

234) இந்தியாவில் தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது அதனைச் செய்தித்தாளுக்கான போட்டியாக கருதியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: இந்தியாவில் தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது அதனைச் செய்தித்தாளுக்கான போட்டியாகக் கருதியவர் ஜி.கஸ்தூரி ஆவார். செய்திதாள்கள் அதனை ஈடு செய்யும் வகையில் செய்திகளை வழங்குவதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் செய்திகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டார்.

235) எந்த ஆண்டு ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாக சுதேசமித்திரன் தொடங்கப்பட்டது?

A) 1870

B) 1882

C) 1889

D) 1904

விளக்கம்: 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ 1889இல் நாளிதழாக மாறியது. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகளாலும் சுவைமிகு உரைநடையாலும் சுதேசமித்திரன் புதுப்பொலிவோடும் வலுவோடும் வெளிவந்தது.

236) ஜனவிநோதினி என்ற இதழின் நோக்கம் என்ன?

A) கல்வி வளர்ச்சி

B) மருத்துவம் சார்ந்த தகவல்கள்

C) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள்

D) கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்

விளக்கம்: 1870-ஆம் ஆண்டு கல்வித்துறையின் ஆதரவில் ‘ஜனவிநோதினி’ என்ற தமிழ் மாத இதழ் வெளிவந்தது. கல்வி வளர்ச்சியே இதன் தலையாய குறிக்கோளாக இருந்தது.

237) ‘காந்தி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய இதழ் ‘காந்தி’ ஆகும். இதில் ஒருபத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கிய ஏ.என்.சிவராமன், பின் அதிலிருந் விலகி வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார்.

238) செய்தித்தாள் விநியோகத்தில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டவர், அச்சுத் தொழில்நுட்பத்தில் நவீன முறைகளை கையாண்டவர் என்ற வாசகத்துடன் தொடர்புடையவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: திரு.ஜி.எஸ்.கஸ்தூரி தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் செய்தித்தாள் விநியோகத்தில் மேற்கொண்ட புதுமையான முயற்சிகளுக்காகவும், அச்சுத் தொழில்நுட்பத்தில் கையாண்ட நவீன முறைகளுக்காகவும் பத்திரிக்கை உலகில் போற்றப்படுகிறார்.

239) பொருத்துக.

அ. தமிழ்க்கல்வி- 1. 1897

ஆ. கல்விக்கதிர்-2. 1969

இ. முதியோர்க்கல்வி- 3. 1951

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 3, 1, 2

D) 1, 3, 2

விளக்கம்: ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதி செய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காகத் தமிழ்க்கல்வி (1897), முதியோர் கல்வி (1951), கல்விக்கதிர் (1969) போன்ற இதழ்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்தன.

240) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது?

A) திருச்சி

B) சிவகங்கை

C) வேலூர்

D) திருநெல்வேலி

விளக்கம்: இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் – புனே.

டைம்ஸ் இதழியல் பள்ளி- புததில்லி.

திரைப்படக் கல்லூரி- அடையாறு, சென்னை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி

241) “தமிழ் ஒரு மாநில மொழி, அப்படியிருந்தும் இந்தியப் பத்திரிக்கைகளைவிடத் தமிழ்ப் பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன’ இதற்குக் காரணம் என்ன?” என்ற கூற்றை கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) ஜவஹர்லால் நேரு

D) இராஜேந்திரப் பிரசாத்

விளக்கம்: 1951-52இல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தினத்தந்தி நாளிதழ் 3 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையானது. பத்திரிகைப் பதிவாளரின் அறிக்கையில் இந்த விவரங்களைப் படித்த நேரு வியப்படைந்து, தமிழ் ஒரு மாநில மொழி, அப்படியிருந்தும் இந்தியப் பத்திரிக்கைகளைவிடத் தமிழ்ப் பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன’ இதற்குக் காரணம் என்ன என்று அலுவலர்களிடம் விசாரித்தார்.

242) கூற்று: செய்தித்தாள்கள் செய்திகளை வழங்குவதில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்

காரணம்: இந்தியாவில் தொலைகாட்சி அறிமுகமானது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இந்தியாவில் தொலைக்காட்சி பயன்பாட்டிற்கு வந்தபோது அதனைச் செய்தித்தாளுக்கான போட்டியாகக் கருதியவர் ஜி.கஸ்தூரி ஆவார். செய்திதாள்கள் அதனை ஈடு செய்யும் வகையில் செய்திகளை வழங்குவதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து வெவ்வேறு வடிவங்களில் செய்திகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டார்.

243) காலைக்கதிர் என்ற இதழ் எதற்கு புகழ்பெற்றது?

A) அறிவியல்

B) தொழில்நுட்பம்

C) கல்வி

D) மருத்துவம்

விளக்கம்: தமிழில் புகழ்பெற்ற இதழான ‘காலைக்கதிர்’ 1948 முதல் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் குறித்து நுட்பமாகவும் விரிவாகவும் கட்டுரைகளை அவ்விதழ் வெளியிடுகிறது.

244) 1934ஆம் ஆண்டு எந்த இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்று டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார்?

A) தினமணி

B) காந்தி

C) தினசரி

D) நவசக்தி

விளக்கம்: 1934ஆம் ஆண்டு ‘காந்தி’ இதழில் பீகார் நிலநடுக்கத்தையொட்டி, ‘சர்க்கார் எங்கே?’ என்ற தலைப்பில் தினமணி இதழில், அவ்விதழின் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் தலையங்கம் எழுதினார். இதனால், ஆங்கிலேய அரசு இவர் மீதும் இவ்விதழின் மீதும் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் முன்பிணை (முன்ஜாமீன்) வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார்.

245) மக்கள் செய்திகளின் உள்ளடக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையே ஒரு நாளிதழின் மிகப்பெரும் சொத்து என கருதியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: மக்கள் செய்திகளின் உள்ளடக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையே ஒரு நாளிதழின் மிகப்பெரும் சொத்து என ஜி.கஸ்தூரி கருதினார். தென்னகம் முழுமைக்கும் விரைவாக அதிகாலையிலேயே நாளிதழ்கள் கிடைக்கும்பொருட்டு, முதன்முதலில் விமானச்சேவையைப் பயன்படுத்தியது அவரது குறிபப்பிடத்தக்க சாதனையாகும்.

246) பேரரசர் அசோகர் எப்போது மக்களுக்கு செய்தி வெளியிட்டார்?

A) பொ.ஆ.மு.256

B) பொ.ஆ.மு.262

C) பொ.ஆ.மு.267

D) பொ.ஆ.மு.269

விளக்கம்: பேரரசர் அசோர் பொ.ஆ.மு.262இல் மக்களுக்கு வெளியிட்ட அரசு செய்தியில், ‘பிரியமான மன்னர் பியாதசி இவ்வாறு சொல்கிறார்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

247) எந்த ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் நடைபெற்றது?

A) 1941

B) 1942

C) 1940

D) 1939

விளக்கம்: 1942இல் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்திற்குப் பின்னர், பெரும்பாலான இதழ்கள் தேசிய இயக்கத்தோடு ஒன்றிணைந்தன. இந்திய மக்களிடையே விடுதலை வேட்கையை வளர்த்தன. இதன் விளைவாக, நாட்டு மக்கள் அந்நியர்களை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியில் பல போராட்டங்களை நடத்தி விடுதலை பெற்றனர்.

248) பொருத்துக.

அ. பாலபாரதம், இந்தியா- 1. பண்பாட்டுப் பாதுகாப்பு, தமிழ் மறுமலர்ச்சி

ஆ. ஜெயபாரதம், சுந்திரச் சங்கு, லோகோபகாரி – 2. சமூகச் சீர்திருத்தம், தமிழ் மொழி மேம்பாடு

இ. மணிக்கொடி- 3. விடுதலை உணர்வு

A) 3, 1, 2

B) 1, 3, 2

C) 1, 2, 3

D) 3, 2, 1

விளக்கம்: பாலபாரதம், இந்தியா – விடுதலை உணர்வு

ஜெயபாரதம், சுந்திரச் சங்கு, லோகோபகாரி – பண்பாட்டுப் பாதுகாப்பு, தமிழ் மறுமலர்ச்சி

மணிக்கொடி – சமூகச் சீர்திருத்தம், தமிழ் மொழி மேம்பாடு

249) தமிழில் முதன் முதலில் கருத்துப்படத்தை வெளியிட்ட இதழ் எது?

A) இந்தியா

B) சுதேசமித்திரன்

C) தேசபக்தி

D) நவசக்தி

விளக்கம்: தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும். இதனைப் பாரதி, “புதிய அபிவிருத்தி” என்ற கட்டுரையில் (13.03.1909) “தமிழ்நாட்டுப் வர்த்தமானப் பத்திரிக்கைகளிலே நமது பத்திரிக்கையொன்றுதான் விகடசித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றார்.

250) கீழ்க்காணும் எந்தப் பத்திரிக்கையாளர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்திரயாகிரகத்தில் பங்கேற்றார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: தினமணி நாளிதழின் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய இதழ் ‘காந்தி’ ஆகும். இதில் ஒருபத்திரிக்கையாளராகத் தம் பணியைத் தொடங்கிய ஏ.என்.சிவராமன், பின் அதிலிருந்து விலகி வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார்.

251) சுதேசமித்திரன் என்ற வாரஇதழைத் தொடங்கியவர் யார்?

A) பாரதியார்

B) ஜி.சுப்பிரமணியம்

C) திரு.வி.க

D) அரவிந்தர்

விளக்கம்: 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ 1889இல் நாளிதழாக மாறியது. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகளாலும் சுவைமிகு உரைநடையாலும் சுதேசமித்திரன் புதுப்பொலிவோடும் வலுவோடும் வெளிவந்தது.

252) சமூகத்தின் எண்ணங்களையும் எழுச்சிகளையும் எதிரொளிக்கும் கண்ணாடியாய் விளங்குவது எது?

A) திரைப்படம்

B) இலக்கியம்

C) அற நூல்கள்

D) இதழ்கள்

விளக்கம்: மக்கள் ஒன்றாய் கூடி வாழும் அமைப்பே சமூகம் ஆகும். அது மொழி, இன, அரசியல் தொடர்புகளினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அத்தகைய சமூகத்தின் எண்ணங்களையும் எழுச்சிகளையும் எதிரொளிக்கும் கண்ணாடியாய் இதழ்கள் விளங்குகின்றன.

253) தவறான கூற்றை தெரிவு செய்க

A) ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார்.

B) ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் திரு.வி.க. உருவாக்கினார்

C) அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றேதிரு.வி.க எழுதினார்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார்.

‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் திரு.வி.க. உருவாக்கினார்

அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றேதிரு.வி.க எழுதினார்.

254) எந்த அறிவியல் இதழ் சிறுவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செய்திகளையும், செயல்பாடுகளையும் வெளியிட்டு வருகிறது?

A) கம்யூட்டர் உலகம்

B) தமிழ் கம்ப்யூட்டர்

C) துளிர்

D) காலைக்கதிர்

விளக்கம்: ‘துளிர்’ என்னும் அறிவியல் இதழ் சிறுவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செய்திகளையும், செயல்பாடுகளையும் வெளியிட்டு வருகிறது. ‘கம்ப்யூட்டர் உலகம்’, ‘தமிழ் கம்ப்யூட்டர்’ போன்ற கணினி இதழ்கள் கணினி அறிவை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பல புதிய தொழில்நுட்பச் செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றன.

255) தமிழின் முதல் வார இதழ் எப்போது தொடங்கப்பட்டது?

A) 1780

B) 1785

C) 1848

D) 1856

விளக்கம்: தமிழ்மொழியில் முதன்முதலில் வெளிவந்த நாளிதழ் எது என்பது பற்றித் திட்டவட்டமாகத் தெரிவில்லை. 1856-இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தனமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும். இந்த இதழ் செய்திகளோடு கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்தது.

256) வை.மு.கோதைநாயகியின் காலம் என்ன?

A) 1901-1960

B) 1924-2012

C) 1904-2001

D) 1905-1981

விளக்கம்: 1901-1960 – வை.மு.கோதைநாயகி

1924-2012 – ஜி.கஸ்தூரி

1904-2001 – ஏ.என்.சிவராமன்

1905-1981 – சி.பா.ஆதித்தனார்

257) பாலபாரதம் என்ற இதழ் விடுதலை உணர்வை உண்டாக்கியது. இந்த இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாரதியார்

B) வ.வே.சு.ஐயர்

C) ஜி.சுப்பிரமணிய ஐயர்

D) மறைமலை அடிகள்

விளக்கம்: பண்பாட்டை உருவாக்குவதில் இதழ்கள் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. வ.வே.சு-வின் பாலபாரதம் என்னும் இதழ் விடுதலை உணர்வை உண்டாக்கியது. பாரதியாரின் ‘இந்தியா’ இதழில் விடுதலை உணர்வு, சமூகச்சீர்த்திருத்தம், பண்பாடு ஆகியன வலியுறுத்தப்பட்டன.

258) தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த இதழ் எது?

A) விடுதலை

B) தனித்தமிழ்

C) அறிவுக்கடல்

D) தமிழன்

விளக்கம்: தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த பெரியாரின் ‘விடுதலை’, ‘குடியரசு’ ஆகிய இதழ்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின.

259) நவஜீவன் என்ற இதழை நடத்தியவர் யார்?

A) திலகர்

B) அம்பேத்கர்

C) காந்தியடிகள்

D) சுவாமி விவேகானந்தர்

விளக்கம்: அண்ணல் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்கள் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அண்ணலின் அரசியல் நுழைவு, இதழ்களின் வளர்ச்சியின் இன்றியமையாத இடத்தைப் பெற்றது. அவர் தென்னாப்பிரிகாவில், ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழையும், நம் நாட்டில் ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய இதழ்களையும் அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்.

260) தென்னகம் முழுமைக்கும் விரைவாக அதிகாலையிலேயே நாளிதழ்கள் கிடைக்கும்பொருட்டு, முதன்முதலில் விமானச்சேவையைப் பயன்படுத்தியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: மக்கள் செய்திகளின் உள்ளடக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையே ஒரு நாளிதழின் மிகப்பெரும் சொத்து என ஜி.கஸ்தூரி கருதினார். தென்னகம் முழுமைக்கும் விரைவாக அதிகாலையிலேயே நாளிதழ்கள் கிடைக்கும்பொருட்டு, முதன்முதலில் விமானச்சேவையைப் பயன்படுத்தியது அவரது குறிபப்பிடத்தக்க சாதனையாகும்.

261) தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற இதழ் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) மறைமலை அடிகள்

B) சி.பா.ஆதித்தனார்

C) பாரதிதாசன்

D) பெருஞ்சித்தனார்

விளக்கம்: தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அவை,

1. மறைமலை அடிகள்- அறிவுக்கடல்

2. சி.பா.ஆதித்தனார்- தமிழன், தமிழ்க்கொடி

3. பாரதிதாசன்- குயில்

4. பெருஞ்சித்தனார்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு.

262) பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுக்க காரணமாக இருந்தவர் யார்?

A) தயானந்த சரஸ்வதி

B) விவேகானந்தர்

C) இராஜாராம் மோகன் ராய்

D) தந்தை பெரியார்

விளக்கம்: இராஜராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்காக மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார். குறிப்பாகப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தீவிரமாக எதிர்த்தார். இவரின் முயற்சியால் 1829-இல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை. ஏறும் வழக்கத்தை நீக்கினார். தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கக் கோரி இதழ்கள் வெளிவருகின்றன.

263) கூற்றுகளை ஆராய்க.

1. பொருள் நிறைந்த தகவல்களைக்கொண்டு புலமைமிக்கவர்கள் மட்டும் படிக்கும் இதழ்கள் – செவ்விதழ்கள்

2. அனைத்து மக்களும் எளிதாகப் படிக்கக் கூடிய இதழ்கள் – மக்கள் இதழ்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொருள் நிறைந்த தகவல்களைக்கொண்டு புலமைமிக்கவர்கள் மட்டும் படிக்கும் இதழ்கள் – செவ்விதழ்கள்.

2. அனைத்து மக்களும் எளிதாகப் படிக்கக் கூடிய இதழ்கள் – மக்கள் இதழ்கள்.

264) கூற்றுகளை ஆராய்க.

1. மொழி தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது செய்திப் பரிமாற்றம்.

2. செய்தித்தாள்கள் வருவதற்கு முன், தீப்பந்தங்களை எரித்தும், பறை அறிவித்தும், புறக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டியும் செய்திகளை தெரிவித்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மொழி தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது செய்திப் பரிமாற்றம்.

2. செய்தித்தாள்கள் வருவதற்கு முன், தீப்பந்தங்களை எரித்தும், பறை அறிவித்தும், புறக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டியும் செய்திகளை தெரிவித்தனர்.

265) தவறான கூற்றை தெரிவு செய்க

A) செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.60இல் அறிமுகப்படுத்தினார்.

B) அவர் தினசரி செய்தி என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச்செய்திகளை எழுதிப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.

C) 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பட்டது சுதேச மித்திரன்.

D)மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு முறையை ஜுலியஸ் சீசர் பொ.ஆ.மு.60இல் அறிமுகப்படுத்தினார்.

266) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) இதழியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – ஜுலியஸ் சீசர்

B) இந்தியாவில் அசோகரின் கல்வெட்டுகளை இதழ்களின் முன்னோடியாகக் கொள்ளலாம்.

C) திலகர் – கேசரி

D) 1882இல் கல்வித்துறையின் ஆதரவில் ‘ஜனவிநோதினி’ என்ற தமிழ் மாத இதழ் வெளிவந்தது. கல்வி வளர்ச்சியே இதன் தலையாய குறிக்கோளாக இருந்தது.

விளக்கம்: 1870இல் கல்வித்துறையின் ஆதரவில் ‘ஜனவிநோதினி’ என்ற தமிழ் மாத இதழ் வெளிவந்தது. கல்வி வளர்ச்சியே இதன் தலையாய குறிக்கோளாக இருந்தது.

267) தவறான கூற்றை ஆராய்க.

A) 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற ‘சுதேசமித்திரன்’ 1889-இல் நாளிதழிலாக மாறியது.

B) சீனர்களால் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அச்சுக்கலை தோன்றி வளர ஆரம்பித்தது.

C) வந்தேமாதரம் – அரவிந்தர்

D) 1886இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும்.

விளக்கம்: 1856இல் பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தொடங்கிய ‘தினவர்த்தமானி’ தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும்.

268) ஒரு செய்தித்தாளின் பணியென்பது செய்திகளை ஆதாரப்பூர்வமாகவும் துல்லியமாகவும் வழங்குவது மட்டுமன்று, ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வதுமாகும் என்று கருதியவர் யார்?

A) ஏ.என்.சிவராமன்

B) ஜி.கஸ்தூரி

C) டி.எஸ்.சொக்கலிங்கம்

D) சி.பா.ஆதித்தனார்

விளக்கம்: ஒரு செய்தித்தாளின் பணியென்பது செய்திகளை ஆதாரப்பூர்வமாகவும் துல்லியமாகவும் வழங்குவது மட்டுமன்று, ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வதுமாகும் என்று ஏ.என்.சிவராமன் கருதினார்.

269) கூற்றுகளை ஆராய்க.

1. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார்.

2. மகாகவி பாரதியார் 1909இல் ‘இந்தியா’ என்ற தமிழ் மாத இதழையும், ‘பாலபாரதம்’ என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1904இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார்.

2. மகாகவி பாரதியார் 1907இல் ‘இந்தியா’ என்ற தமிழ் மாத இதழையும், ‘பாலபாரதம்’ என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.

270) காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் எந்த இதழை அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்?

A) இந்தியன் ஒபினியன்

B) யங் இந்தியா

C) ஹரிஜன்

D) நவ இந்தியா

விளக்கம்: அண்ணல் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்கள் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அண்ணலின் அரசியல்நுழைவு, இதழ்களின் வளர்ச்சியின் இன்றியமையாத இடத்தைப் பெற்றது. அவர் தென்னாப்பிரிகாவில், ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழையும், நம் நாட்டில் ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய இதழ்களையும் அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்.

271) காகிதத்தை கண்டுடிபிடித்த நாடு எது?

A) இத்தாலி

B) ரோம்

C) சீனர்கள்

D) இங்கிலாந்து

விளக்கம்: சீனர்களால் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அச்சுக்கலை தோன்றி வளர ஆரம்பித்தது. இதழ்களின் வளர்ச்சிக்கு அச்சுக்கலை பெருந்துணை புரிந்தது.

272) கூற்றுகளை ஆராய்க.

1. இராஜாராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார்.

2. யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் முதலிய இதழ்கள் காந்தியடிகளால் நடத்தப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இராஜாராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார்.

2. யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் முதலிய இதழ்கள் காந்தியடிகளால் நடத்தப்பட்டன.

273) யாருடைய அறிவுரையின்படி இந்தியப் பத்திரிக்கைகள் சி.பா.ஆதித்தனாரின் மொழி நடையைப் பின்பற்ற ஆரம்பித்தன?

A) காந்தியடிகள்

B) ஜவஹர்லால் நேரு

C) இராதகிருஷ்ணன்

D) இராஜேந்திர பிரசாத்

விளக்கம்: “தமிழ் பத்திரிக்கைகள் எளிய நடையில் எழுதப்படுவதால் அதிகமாக விற்பனையாகின்றன. இந்தியப் பத்திரிக்கைகள் கடினமான இலக்கிய நடையில் எழுதப்படுவதால் குறைவாக விற்பனையாகின்றன. அவர்கள் (இந்தியப் பத்திரிக்கைகள்) எழுவதை என்னால்கூடப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் கடின நடையைக் கைவிட்டு எளிய நடையைப் பின்பற்றி எழுத வேண்டும்” என்றார் ஜவஹர்லால் நேரு. இதன்பிறகு, இந்திய நாளிதழ்கள் சி.பா.ஆதித்தனாரின் மொழிநடையைப் பின்பற்ற ஆரம்பித்தன.

274) ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழுடன் தொடர்புடையவர் யார்?

A) திலகர்

B) அம்பேத்கர்

C) காந்தியடிகள்

D) இராஜராம் மோகன்ராய்

விளக்கம்: பெண்கல்வியும், கைம்பெண் மறுமணமும் மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்காக இதழ்கள் பெரிதும் போராடின. இராஜராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்காக மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார். குறிப்பாகப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தீவிரமாக எதிர்த்தார். இவரின் முயற்சியால் 1829-இல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டைஏறும் வழக்கத்தை நீக்கினார். தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கக் கோரி இதழ்கள் வெளிவருகின்றன.

275) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) தமிழ் உரைநடை வரலாற்றில் திரு.வி.க-வின் உரைநடை குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்ந்தது.

B) அறிவுக்கடல் – மறைமலை அடிகள்

C) தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த இதழ் – விடுதலை, குடியரசு

D) கல்விக்கதிர் என்ற கல்வி இதழ் 1967 முதல் வெளிவந்தன.

விளக்கம்: ஒரு நாட்டின் அறிவு வளத்தை உறுதிசெய்வது அந்நாட்டில் வழங்கப்படும் கல்வியே. அக்கல்வியை வளர்ப்பதற்காக கல்விக்கதிர் என்ற கல்வி இதழ் 1969 முதல் வெளிவந்தன.

276) இந்திய அளவிலான இதழியல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் பொருந்தாததை தேர்வு செய்க.

A) சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம்- புனே.

B) சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம்- மும்பை.

C) எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி- ஜமியா, புதுதில்லி

D) மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி- சென்னை

விளக்கம்: சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம்- மும்பை.

எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி- ஜமியா, புதுதில்லி

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி- கோட்டயம், கேரளா.

ஆசிய இதழியல் கல்லூரி- சென்னை

திரைப்படக் கல்லூரி- அடையாறு, சென்னை

278) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) குயில் என்ற இதழுடன் தொடர்புடையவர் பாரதிதாசன் ஆவார்

B) வ.வே.சு-வின் பாலபாரதம் என்னும் இதழ் விடுதலை உணர்வை உண்டாக்கியது.

C) பாரதியாரின் ‘இந்தியா’ இதழில், விடுதலை உணர்வு, சமூகச்சீர்த்திருத்தம், பண்பாடு ஆகியன வலியுறுத்தப்பட்டன.

D) எழுத்து இதழ் சமூகச் சீர்திருத்தம், தமிழ் மொழி மேம்பாடு ஆகியவற்றை வெளியிடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு விளங்கியது.

விளக்கம்: மணிக்கொடி இதழ் சமூகச் சீர்திருத்தம், தமிழ் மொழி மேம்பாடு ஆகியவற்றை வெளியிடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு விளங்கியது.

279) எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி எங்குள்ளது?

A) புனே

B) மும்பை

C) ஜாமியா

D) கோட்டயம்

விளக்கம்: சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவனம் – புனே.

சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம்- மும்பை.

எ.ஜெ.கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி- ஜமியா, புதுதில்லி

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி- கோட்டயம், கேரளா.

280) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) பாரதியார் கருத்துப்படத்தை ‘விகடசித்திரம்’என்று அழைத்தார்

B) 1850ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான ‘தில்லி ஸ்கெட்ச் புக்’என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.

C) பெரியார் தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுத்திய இரண்டு கருவிகள் – மேடைப்பேச்சு, எழுத்து

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பாரதியார் கருத்துப்படத்தை ‘விகடசித்திரம்’என்று அழைத்தார்

1850ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான ‘தில்லி ஸ்கெட்ச் புக்’என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.

பெரியார் தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுத்திய இரண்டு கருவிகள் – மேடைப்பேச்சு, எழுத்து

281) பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுக்க காரணமாக இருந்தவர் யார்?

A) வில்லியம் பெண்டிங் பிரபு

B) டல்ஹெளசி பிரவு

C) வாரன் ஹேஸ்டிங்ஸ்

D) காரன் வாலிஸ் பிரபு

விளக்கம்: இராஜராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்காக மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார். குறிப்பாகப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தீவிரமாக எதிர்த்தார். இவரின் முயற்சியால் 1829-இல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை. ஏறும் வழக்கத்தை நீக்கினார். தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கக் கோரி இதழ்கள் வெளிவருகின்றன.

282) “பிரியமான மன்னர் பியாதசி இவ்வாறு சொல்கிறார்” இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) சமுத்திர குப்தர்

B) சந்திர குப்தர்

C) அசோகர்

D) அக்பர்

விளக்கம்: பேரரசர் அசோகர் பொ.ஆ.மு.262இல் மக்களுக்கு வெளியிட்ட அரசு செய்தியில், ‘பிரியமான மன்னர் பியாதசி இவ்வாறு சொல்கிறார்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

283) பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

A) 1823

B) 1856

C) 1829

D) 1833

விளக்கம்: இராஜராம் மோகன்ராய் ‘சம்பத் கௌமுதி’ என்ற இதழில் பெண்களுக்காக மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்து வன்மையாகக் கண்டித்து எழுதினார். குறிப்பாகப் பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தீவிரமாக எதிர்த்தார். இவரின் முயற்சியால் 1829-இல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை. ஏறும் வழக்கத்தை நீக்கினார். தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கக் கோரி இதழ்கள் வெளிவருகின்றன.

284) டைம்ஸ் இதழியல் பள்ளி எங்குள்ளது?

A) புனே

B) புதுதில்லி

C) அடையாறு

D) திருநெல்வேலி

விளக்கம்: இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் – புனே.

டைம்ஸ் இதழியல் பள்ளி- புதுதில்லி.

திரைப்படக் கல்லூரி- அடையாறு, சென்னை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி.

285) நாளிதழ்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நாளிதழ்கள், நாள்தோறும் காலை இதழ், மாலை இதழ் என இருவகையாக வெளிவருகின்றன. அவை உலகெங்கும் நிகழும் நிகழ்ச்சிகளை நாள்தோறும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

286) கூற்றுகளை ஆராய்க.

1. மார்ட்டின் லூதர்கிங், தமது புரட்சிக் கருத்துக்களை ஜெர்மனியில் பரப்புவதற்குக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார்.

2. கருத்துப்படங்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் ‘இந்தியா’ இதழுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மார்ட்டின் லூதர்கிங், தமது புரட்சிக் கருத்துக்களை ஜெர்மனியில் பரப்புவதற்குக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தினார்.

2. கருத்துப்படங்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் ‘இந்தியா’ இதழுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது.

287) “வந்தே மாதரம்” என்ற இதழைத் தொடங்கியவர் யார்?

A) திலகர்

B) அரவிந்தர்

C) சுவாமி விவேகானந்தர்

D) காந்தியடிகள்

விளக்கம்: இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்தபோது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும் போராட்டம் செய்த தலைவர்களுக்கு இதழ்கள் உறுதுணையாக இருந்தன. திலகரின் ‘கேசரி’ அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’ சுவாமி விவேகானந்தரின் ‘சகோதரர்’ போன்ற இதழ்கள் உரிமை வேண்டித் தொடர்ந்து குரல் கொடுத்தன.

288) கூற்றுகளை ஆராய்க.

1. ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்றை வரைந்தவர் பாரதியார்.

2. சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம் புதுடெல்லியில் உள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்தியாவிலிருந்து உறிஞ்சிவிடுகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் சித்திரம் ஒன்றை வரைந்தவர் பாரதியார்.

2. சேவியர் தகவல் தொடர்பு நிறுவனம் புதுடெல்லியில் உள்ளது.

289) வை.மு.கோதைநாயகி பற்றிய கூற்றுகளில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இவர் 1925இல் ‘ஜகன் மோகினி’ என்னும் நாவல் இதழினை அதன் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்தியவர்.

B) முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” 1939இல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

C) பண்டிதத் தமிழில் ஏனைய பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் எளிய நடையில் பாமரரும் படித்தறியும் வகையில் இவர் எழுதியதும் ஜகன்மோகினியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

D) இவரின் காலம் – 1901 முதல் 1960 வரை ஆகும்.

விளக்கம்: முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த “ஜெகன்மோகினி” 1937-இல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது

290) “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி” என்று கீழ்க்காணும் எந்த நாடுகளின் அரசியல் சூழ்ச்சிகளை பாரதியார் படம் பிடித்துக் காட்டினார்?

A) இலங்கை, இந்தோனேசியா

B) அமெரிக்கா, ஜப்பான்

C) இங்கிலாந்து, அமெரிக்கா

D) இரஷ்யா, சீனா

விளக்கம்: “கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி” (23.03.1907) என்று அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் அரசியல் சூழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டினார் பாரதியார்.

291) கூற்றுகளை ஆராய்க.

1. “ஜகன்மோகினி” யின் துணைவெளியீடாக தயாநிதி என்னும் இதழை வெளியிட்டு, அதன்மூலம் 150-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வை.மு.கோதைநாயகி அறிமுகப்படுத்தினார்.

2. ஜி.கஸ்தூரி தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: “ஜகன்மோகினி” யின் துணைவெளியீடாக நந்தவனம் என்னும் இதழையும் வெளியிட்டு, அதன்மூலம் 150-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வை.மு.கோதைநாயகி அறிமுகப்படுத்தினார்.

292) யங் இந்தியா என்ற இதழை தொடங்கியவர் யார்??

A) ஜவஹர்லால் நேரு

B) திலகர்

C) காந்தியடிகள்

D) சுவாமி விவேகானந்தர்

விளக்கம்: அண்ணல் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்கள் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அண்ணலின் அரசியல் நுழைவு, இதழ்களின் வளர்ச்சியின் இன்றியமையாத இடத்தைப் பெற்றது. அவர் தென்னாப்பிரிகாவில், ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழையும், நம் நாட்டில் ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய இதழ்களையும் அறத்தோடும் தரத்தோடும் நடத்தி வந்தார்.

293) கூற்றுகளை ஆராய்க.

1. இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர் டி.எஸ் சொக்கலிங்கம் ஆவார்.

2. விண்வெளி, அறிவியல், அரசியல், தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரப்பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஏ.என்.சிவராமன் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர் ஏ.என்.சிவராமன் ஆவார்.

2. விண்வெளி, அறிவியல், அரசியல், தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரப்பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஏ.என்.சிவராமன் ஆவார்

294) கூற்றுகளை ஆராய்க.

1. 40 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர்.

2. இவர் எழுதியுள்ள 115 நாவல்களில் ‘அனாதைப்பெண்’, ‘தயாநிதி’ போன்றவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

3. வை.மு.கோதைநாயகியின் முதல் படைப்பு, ‘இந்திர மோகனா’ என்னும் நாடகமாகும்.

4. வண்ண அச்சுமுறை நடைமுறைக்கு வந்தபோது வண்ணப்படங்களுக்காகவே தி ஹிந்து நாளிதழும் அதன் குழும இதழ்களும் புகழ்பெற்றன.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 35 ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!