உயிர்க்கோளம் 11th Geography Lesson 5 Questions in Tamil
11th Geography Lesson 5 Questions in Tamil
5] உயிர்க்கோளம்
1) புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உருவானது?
A] 4.2 மில்லியன் B] 4.6 மில்லியன் C] 4.2 பில்லியன் D] 4.6 பில்லியன்
விடை: D] 4.6 பில்லியன்
- புவியின் கோளங்கள் தற்போது அமைந்துள்ளது போல் புவி உருவாகியபோது அமையவில்லை. மாறாக புவி உருவான பிறகு அவை நீண்ட காலமாக பரிணாம மாற்றம் அடைந்தன.
2) புவியில் முதல் உயிரினம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது?
A] 3.2 மில்லியன் B] 3.2 பில்லியன் C] 3.5 பில்லியன் D] 3.5 மில்லியன்
விடை: C] 3.5 பில்லியன்
- முதலில் பூமி உருவான பிறகு நீண்ட காலமாக உயிரினங்கள் தோன்றவில்லை. நமது புவியில் முதல் உயிரினம் தோன்றியதே உயிர்கோளத்தின் பிறப்பு எனப்படுகிறது.
3) சைலண்ட் ஸ்ப்ரிங் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
A] கரோலஸ் லின்னேயஸ் B] ரேச்சல் கார்சன் C] சார்லஸ் டார்வின் D] எட்வர்ட் சுயெஸ்
விடை: B] ரேச்சல் கார்சன்
- 1962ஆம் ஆண்டு இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு ஊக்கமளித்து சர்வதேச அமைப்புகள் உயரத்தை பாதுகாத்து அதனை மேலும் நீடித்திருக்க செய்வதற்கு தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தியது.
4) யுனெஸ்கோ ‘மனிதனும் உயிர்க்கோளமும்’ என்ற திட்டத்தை தொடங்கிய ஆண்டு எது?
A] 1896 B] 1935 C] 1954 D] 1971
விடை: D] 1971
- இத்திட்டம் இயற்கை மீதான மனித செயல்களின் தாக்கத்தையும் அதை குறைப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதற்காக தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ச்சியாக இன்றுவரை புவிநிலை தன்மையின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
5) உயிர்க்கோளம் என்ற சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தோன்றியது?
A] கிரேக்கம் B] இலத்தீன் C] அரபு D] ஆங்கிலம்
விடை: A] கிரேக்கம்
- உயிர்க்கோளம் என்ற சொல் பயோஸ்பியர் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. பயோஸ் என்றால் உயிர் மற்றும் ஸ்பைரா என்றால் கோளம் என்று பொருள்.
6) சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது எது?
A] புதன் B] செவ்வாய் C] புவி D] வியாழன்
விடை: C] புவி
- உயிரினங்கள் பூமியில் வாழ்வதற்கு சாதகமாக பல காரணிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது சூரியனிடமிருந்து புவி அமைந்துள்ள தொலைவு, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் புவியில் காணப்படும் நீர் ஆகியவை ஆகும்.
7) உயிர்க்கோளம் என்ற சொல் முதன் முதலாக யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A] சார்லஸ் டார்வின் B] எட்வர்டு சுயெஸ்
C] கரோலஸ் லின்னேயஸ் D] ரேச்சல் கார்சன்
விடை: B] எட்வர்டு சுயெஸ்
- 1875 ஆம் ஆண்டில் உயிர்க்கோளம் என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. புவியின் மூன்று கோளங்களான பாறை கோளம், வளி கோளம் மற்றும் நீர்க்கோளம் ஆகியவற்றின் இடை செயல்களால் நான்காவது கோளமான உயிர்கோளம் உருவானது.
8) ஒரு பகுதியில் வாழும் ஒரே வகையான தாவரங்கள் அல்லது விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உயிரினம் B] இனக்குழுமம் C] சூழ்நிலை மண்டலம் D] உயிரினத் திரள்
விடை: D] உயிரினத் திரள்
- தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியது உயிரினங்கள் என அழைக்கப்படுகிறது. இனக்குழுமம் என்பது ஒரு பகுதியில் வாழும் அனைத்து தாவரங்களையும் விலங்குகளையும் குறிக்கிறது.
9) ஒரு தொகுதியின் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு இடையேயான இடைச்செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உயிர்க்கோளம் B] உயிரினக் கூறுகள் C] இனக்குழுமம் D] சூழ்நிலை மண்டலம்
விடை: D] சூழ்நிலை மண்டலம்
- உயிர்க்கோளம் உயிரின கூறுகளால் ஆனது. இவை உயிரினங்கள், உயிரினத் திரள், இனக்குழுமம் மற்றும் சூழ்நிலை மண்டலம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
10) சூழ்நிலை மண்டலம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
A] ஏ.ஜி. டான்ஸ்லி B] கரோலஸ் லின்னேயஸ் C] சார்லஸ் டார்வின் D] எட்வர்ட் சுயெஸ்
விடை: A] ஏ.ஜி. டான்ஸ்லி
- சுற்றுப்புற சூழலிலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளின் ஒருங்கிணைப்பின் விளைவாக உருவான அமைப்பே சூழ்நிலை மண்டலம் என ஏ.ஜி. டான்ஸ்லி வரையறுத்துள்ளார். இவை பரப்பளவில் சில சதுர சென்டி மீட்டரில் இருந்து மிகப்பெரிதாக பல சதுர கிலோமீட்டர் வரை காணப்படலாம்.
11) சூழ்நிலை மண்டலம் எத்தனை கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A] 2 B] 3 C] 4 D] 5
விடை: A] 2
- உயிரற்ற கூறுகள் மற்றும் உயிருள்ள கூறுகள் என சூழ்நிலை மண்டலம் இரு முக்கிய கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருட்களை குறிப்பது உயிரற்ற கூறுகள் என்றும், தாவரங்கள், நுண்ணியிரிகள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது உயிருள்ள கூறுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
12) சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிருள்ள கூறுகள் அவற்றின் எந்த திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது?
A] எண்ணிக்கை திறன் அடிப்படையில் B] உணவு உண்ணும் திறன்
C] நீடித்து வாழும் திறன் D] பண்புகள் அடிப்படையில்
விடை: C] நீடித்து வாழும் திறன்
- சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிருள்ள கூறுகள் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்பவர்கள் என மேலும் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
13) தனக்குத் தானே உணவை தயாரித்துக் கொள்ளும் உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உயிருள்ள கூறுகள் B] உற்பத்தியாளர்கள் C] நுகர்வோர்கள் D] தயாரிப்பாளர்கள்
விடை: B] உற்பத்தியாளர்கள்
- பச்சையம் அல்லது பச்சை நிறமியை கொண்டுள்ள தாவரங்கள் சூரிய ஒளியையும், வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடையும், மண்ணில் உள்ள நீரையும் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்கு தேவையான உணவைத் தயாரிக்கின்றன. இந்த பசுந்தாவரங்கள் தற்சார்பு ஊட்ட உயிரிகள் என அழைக்கப்படுகிறது.
14) கீழ்கண்டவற்றுள் பிற சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
A] உற்பத்தியாளர்கள் B] சிதைப்பவர்கள்
C] உயிருள்ள கூறுகள் D] நுகர்வோர்கள்
விடை: D] நுகர்வோர்கள்
- நுகர்வோர்கள் தங்கள் சொந்த உணவை உற்பத்தி செய்ய முடியாது. உணவையும் ஊட்டச்சத்துக்களையும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மற்ற உயிரினங்களிலிருந்தோ பெற்றுக் கொள்கின்றன.
15) கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை நுகர்வோர் தாவர உண்ணிகள் என்று அழைக்கப்படுகிறது?
A] முதல்நிலை நுகர்வோர் B] இரண்டாம் நிலை நுகர்வோர்
C] மூன்றாம் நிலை நுகர்வோர் D] நான்காம் நிலை நுகர்வோர்
விடை: A] முதல்நிலை நுகர்வோர்
- பசும் தாவரங்களை உண்ணும் உயிரினங்கள் முதல்நிலை நுகர்வோர்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெட்டுக்கிளி, சுண்டெலி, செம்மறியாடு, ஆடு, மாடு, மான் போன்ற நிலத்தில் வாழும் தாவர உண்ணிகள்.
16) சிறுகூனி என்பது எந்த வகை உயிரி?
A] விலங்கு உண்ணி B] ஒட்டுண்ணி C] தாவர உண்ணி D] A & C
விடை: C] தாவர உண்ணி
- சிறுகூனி என்பது நீரில் வாழும் தாவர உண்ணி ஆகும். மேலும் விலங்கின மிதவை, கடல் முள்ளெலி, கணவாய், சிறிய மீன் போன்றவை நீரில் வாழும் மற்றும் பிற தாவர உண்ணிகள் ஆகும்
17) தாவர உண்ணிகளை உண்டு வாழும் நுகர்வோர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] முதல்நிலை நுகர்வோர் B] இரண்டாம் நிலை நுகர்வோர்
C] மூன்றாம் நிலை நுகர்வோர் D] நான்காம் நிலை நுகர்வோர்
விடை: B] இரண்டாம் நிலை நுகர்வோர்
- இவை மாமிச உண்ணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ( எ.கா ) சிங்கம், புலி, நரி, தவளை, பாம்பு, சிலந்தி, முதலை மற்றும் பல
18) உணவு சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகள் என்று அழைக்கப்படுவது எது?
A] தாவர உண்ணிகள் B] மாமிச உண்ணிகள்
C] மூன்றாம் நிலை நுகர்வோர் D] அனைத்துண்ணி
விடை: C] மூன்றாம் நிலை நுகர்வோர்
- இரண்டாம் நிலை நுகர்வோர்களை கொன்று உண்பவைகளை மூன்றாம் நிலை நுகர்வோர்கள் என்கிறோம். அவை வேட்டை விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேல் மட்ட உணவூட்ட நிலையில் உள்ள மாமிச உண்ணிகளை மற்ற வேட்டை விலங்குகள் கொன்று உண்ண முடியாத காரணத்தினால் அவை உயர் வேட்டை இனம் என்று அழைக்கப்படுகிறன.
19) கீழ்கண்டவற்றுள் சிதைப்போர் என்று அழைக்கப்படுவது எது?
A] ஆந்தை B] சிங்கம் C] கரடி D] பருந்து
விடை: D] பருந்து
- மேல் மட்ட மாமிச உண்ணிகள் இறந்த பிறகு அவற்றின் உடல் அழுகுண்ணிகளால் உண்ணப்பட்டு சிதைப்போர்களால் சிதைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு முதலை.
20) தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரண்டையும் உண்டு வாழும் உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] நுகர்வோர்கள் B] தற்சார்பு ஊட்ட உயிரிகள்
C] அனைத்துண்ணிகள் D] மாமிச உண்ணிகள்
விடை: C] அனைத்துண்ணிகள்
- எடுத்துக்காட்டு கரப்பான் பூச்சி, நரி, கடல் புறா மற்றும் மனித இனம்
21) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) சில அனைத்துண்ணிகள் அழுகுண்ணிகளாகவும் இருக்கின்றன.
2) தாவரம் அல்லது விலங்குகளின் ஒரு பகுதி அல்லது வெளி பகுதியில் வாழும் தாவரம் அல்லது விலங்கை ஒட்டுண்ணி என்று அழைக்கிறோம்.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- அனைத்துண்ணிகள் அழுகுண்ணிகளாகவும் இருக்கின்றன. ஏனென்றால் பிற உயிரினங்கள் உண்ட பிறகு மீதமுள்ள உணவை உண்ணுபவை. எடுத்துக்காட்டு கழுதைப்புலி மற்றும் கழுகு ஆகும்.
22) கீழ்க்கண்டவற்றுள் ஒட்டுண்ணி அல்லாதது எது?
A] நாடா புழு B] தெள்ளுப்பூச்சி C] வட்டப்புழுக்கள் D] சாண வண்டு
விடை: D] சாண வண்டு
- மேலும் வேறு தாவரத்தின் உயிர்வாழும் புல்லுருவி, பேன் போன்றவை மற்ற ஒட்டுண்ணிகள் ஆகும்.
23) கழிவு பொருட்களை உண்டு வாழும் நுகர்வோர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] மட்குண்ணிகள் B] ஒட்டுண்ணிகள்
C] மாமிச உண்ணிகள் D] தாவர உண்ணிகள்
விடை: A] மட்குண்ணிகள்
- இவை உதிர்ந்த இலைகள், இறந்த தாவரங்களின் சில பகுதிகள் மற்றும் விலங்கின கழிவுகளையும் உண்டு வாழ்கின்றன. எறும்புகள், கரையான், மண்புழு, மர அட்டை, சாண வண்டு, ஃபிடில் நண்டு மற்றும் கடல் வெள்ளரி ஆகியவை மட்குண்ணிகள் ஆகும்.
24) உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
A] கரையான் B] மண்புழு C] சிறுகூணி D] எறும்புகள்
விடை: B] மண்புழு
25) சிதைப்போர்கள் கீழ்க்கண்ட எந்த வகையைச் சார்ந்தது?
A] ஒட்டுண்ணி B] மட்குண்ணி
C] தற்சார்பு உயிரி D] பிற சார்பு உயிரி
விடை: D] பிற சார்பு உயிரி
- இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவுப் பொருட்களை சிதைக்கும் உயிரினங்கள் சிதைப்போர்கள் எனப்படும். சிதைப்போர்கள் இயற்கையால் வடிவமைக்கப்பட்ட மறுசுழற்சி அமைப்பாகும்.
26) கீழ்கண்டவற்றுள் பொருட்களை சிதைப்பதன் மூலம் சத்துப்பொருட்களை மண்ணிற்கே திருப்பி அனுப்புவது எது?
A] அழுகுண்ணிகள் B] அனைத்துண்ணிகள்
C] சிதைப்போர்கள் D] உற்பத்தியாளர்கள்
விடை: C] சிதைப்போர்கள்
- சிதைப்போர்கள் மண்ணிற்கு அனுப்பிய அந்த சத்துப்பொருட்கள் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு உணவு ஆதாரமாக அமைகிறது.
27) கீழ்கண்டவற்றுள் சிதைப்போர் அல்லாதது எது?
A] காளான் B] பாக்டீரியா C] பூஞ்சை D] வைரஸ்
விடை: D] வைரஸ்
- மேலும் ஈஸ்ட் போன்றவை பொதுவான சிதைப்போர்களாகும். சிதைப்போர்களும் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
28) ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவு தொடர்பினை விளக்குவது எது?
A] உயிரின கூறுகள் B] உணவுச் சங்கிலி
C] உணவு வலை D] உணவூட்ட கட்டமைப்பு
விடை: B] உணவுச் சங்கிலி
- ஆற்றலானது ஒரு மட்டத்தில் இருந்து மற்றொரு நிலைக்கு செல்வதே உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
29) சூழ்நிலை மண்டலத்தில் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்தில் இருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும் ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உணவூட்ட கட்டமைப்பு B] உணவு வலை
C] உணவூட்ட நிலைகள் D] உணவுச் சங்கிலி
விடை: A] உணவூட்ட கட்டமைப்பு
- சூழ்நிலை மண்டலத்தில் முறைமையில் உள்ள ஒவ்வொரு உணவு மட்டத்திலிருந்து மற்ற உணவு மட்டத்திற்கு உணவும் ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவது உணவூட்ட நிலைகள் என்று அழைக்கப்படுகிறது.
30) சூழ்நிலை மண்டலத்தில் பல்வேறு உணவு சங்கிலியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள சிக்கலான வலையமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உயிரின கூறுகள் B] ஆற்றல் சங்கிலி
C] உணவு வலை D] உணவு சங்கிலி
விடை: C] உணவு வலை
- உணவு சங்கிலி அல்லது உணவு வலையில் உள்ள உயிரினங்கள் உயிர் வாழ ஒன்றையொன்று சார்ந்தும் இணைந்தும் காணப்படுகின்றன. ஒரு உணவு நிலையில் உள்ள உயிரினங்கள் அச்சுறுத்தப்பட்டால் மற்ற உணவூட்ட நிலையிலுள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
31) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) சூழ்நிலை மண்டலத்தில் அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதில்லை.
2) சூழ்நிலை மண்டலத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் அது சார்ந்துள்ள அமைப்பில் உள்ள ஆற்றல் ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: B] 2 மட்டும்
- சூழ்நிலை மண்டலத்தில் அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சுவாசிப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும், இடம்பெயருதலுக்கும் மற்றும் இனப்பெருக்கத்திற்கும் உயிரினங்களுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
32) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) ஆற்றல் ஒரு பாதையில் மட்டும் செல்வதை உணவு சங்கிலி காட்டுகிறது.
2) உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் ஒன்றோடொன்று இணைந்த அனைத்து வழிகளையும் உணவு சங்கிலி காட்டுகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: A] 1 மட்டும்
- உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் ஒன்றோடொன்று இணைந்து அனைத்து வழிகளையும் உணவு வலை காட்டுகிறது.
33) கீழ்கண்டவற்றுள் சரியான தொடர்பை தேர்ந்தெடு.
A] தாவரங்கள்🡪முயல்🡪பாம்பு🡪பருந்து
B] பாம்பு🡪முயல்🡪பருந்து🡪தாவரங்கள்
C] தாவரங்கள்🡪பாம்பு🡪பருந்து🡪முயல்
D] தாவரங்கள்🡪பருந்து🡪முயல்🡪பாம்பு
விடை: A] தாவரங்கள்🡪முயல்🡪பாம்பு🡪பருந்து
- பசுந்தாவரங்கள் முதன்மை நிலை உற்பத்தியாளர், முயல் தாவர உண்ணி – முதல்நிலை நுகர்வோர், பாம்பு மாமிச உண்ணி – இரண்டாம் நிலை நுகர்வோர் அல்லது முதல்நிலை மாமிச உண்ணி, பருந்து மூன்றாம் நிலை நுகர்வோர்.
34) கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பை தேர்ந்தெடு.
A] விதைகள்🡪பாம்பு🡪சுண்டெலி🡪கழுகு
B] விதைகள்🡪சுண்டெலி🡪பாம்பு🡪கழுகு
C] சுண்டெலி🡪விதைகள்🡪கழுகு🡪பாம்பு
D] பாம்பு🡪கழுகு🡪சுண்டெலி🡪விதைகள்
விடை: B] விதைகள்🡪சுண்டெலி🡪பாம்பு🡪கழுகு
- இவ்வாறு ஒவ்வொரு படிநிலையிலும் விதைக்குள் சிக்கியிருக்கும் சூரிய ஆற்றல் கடந்து செல்கிறது. ஒவ்வொரு உயிரினமும் பல வகை உயிரினங்களை உண்ணலாம், அவற்றை பல உயிரினங்கள் உண்ணும் என்பதால், உணவுகளை ஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றலின் பரிமாற்றங்களை மிகவும் உயிரோட்டமாக எடுத்துக்காட்டும்.
35) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) உணவு சங்கிலியிலுள்ள ஒவ்வொரு உணவூட்ட நிலையிலிருந்து அடுத்த உணவூட்ட நிலைக்கு ஆற்றல் கடத்தப்படும் பொழுது ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.
2) சூழ்நிலை மண்டலத்தில் முதல் உணவூட்ட நிலையில் வாழும் உயிரினங்களை விட மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் உள்ள நுகர்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: B] 2 மட்டும்
- சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றலானது உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோர் வரை பாய்கிறது. உணவு சங்கிலியிலுள்ள ஒவ்வொரு உணவூட்ட நிலையிலிருந்து அடுத்த உணவூட்ட நிலைக்கு ஆற்றல் கடத்தப்படும் பொழுது ஆற்றல் அளவு குறைகிறது.
36) ஒரு உணவூட்ட நிலையில் கிடைக்கக்கூடிய ஆற்றலில் எத்தனை சதவீதம் மட்டுமே அடுத்த உணவூட்ட நிலைக்கு கடத்தப்படுகிறது?
A] 10% B] 20% C] 30% D] 40%
விடை: A] 10%
- மீதமுள்ள 90 சதவீதம் ஆற்றலானது சுவாசித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற செயலுக்காக பயன்படுகிறது அல்லது வெப்பமாக சுற்றுச்சூழலில் இழந்து போகிறது.
37) சத்துக்கள் சூழ்நிலை மண்டலத்தின் சுழற்சியின் வழியாக சுழல்வதை எவ்வாறு அழைக்கிறோம்?
A] சுழற்சிகள் B] வேதியல் சுழற்சிகள்
C] உயிர் புவி சுழற்சிகள் D] உயிர் புவி வேதியியல் சுழற்சிகள்
விடை: D] உயிர் புவி வேதியியல் சுழற்சிகள்
- உயிர் புவி வேதியியல் சுழற்சி என்பது வேதியியல் பொருட்கள் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிர் மண்டலம் மற்றும் உயிரற்ற மண்டலங்கள் வழியாக சுழல்வது ஆகும்.
38) அனைத்து வாழ்க்கை செயல்முறைகளும் கீழ்கண்ட எந்த சுழற்சிகளால் வளிமண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது?
1) ஆக்ஸிஜன் 2) கார்பன் 3) நைட்ரஜன் 4) ஹைட்ரஜன்
A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 1, 4 & 3 D] 1, 2, 3 & 4
விடை: A] 1, 2 & 3
- இந்த சுழற்சிகளால் ஆற்றல் மற்றும் பொருட்கள் பல்வேறு சூழ்நிலை மண்டலத்தில் சேமிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
39) அனைத்து உயிரினங்களும் எந்த மூலக்கூறினால் கட்டமைக்கப்பட்டுள்ளன?
A] அம்மோனியா B] நைட்ரஜன் C] ஆக்ஸிஜன் D] கார்பன்
விடை: D] கார்பன்
- புவியின் பல்வேறு கோளங்களுக்கு இடையே கார்பன் பரிமாற்றம் அல்லது சுழற்சி ஏற்படுகிறது. உயிரின வாழ்க்கை தொகுதியின் அடிப்படையாகவும், பல்வேறு வகையான வேதியியல் செயல்முறைகளின் முக்கிய கூறாகவும் கார்பன் உள்ளது.
40) வளிமண்டல கார்பன் கீழ்கண்ட எந்த நிகழ்வின் மூலம் பசுந்தாவரங்களில் பொருத்தப்படுகிறது?
A] ஆவியாதல் B] நீராவியாதல் C] ஒளிச்சேர்க்கை D] நீராவி போக்கு
விடை: C] ஒளிச்சேர்க்கை
- இந்த கார்பன் உணவுச் சங்கிலி மூலம் பிற உயிரினங்களுக்கு கடத்தப்படுகிறது. உணவில் உள்ள கார்பன் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு சுவாசித்தலின் போது வெளியேற்றப்படுகிறது.
41) கீழ்கண்டவற்றுள் கார்பனின் தேக்கங்களாக உள்ளவை எவை?
1) வளிமண்டலம் 2) பெருங்கடல்கள் 3) தாவரங்கள் 4) பாறைகள் மற்றும் மண்
A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 3, 4 & 1 D] 1, 2, 3 & 4
விடை: D] 1, 2, 3 & 4
- இன்று கார்பன் சுழற்சி மாறிக்கொண்டு வருகிறது. மனிதர்கள் அதிகமான கார்பனை புவித்தொகுதியின் பிற பாகங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு புகுத்தி வருகிறார்கள்.
42) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) படிம எரிபொருள்களான நிலக்கரி மற்றும் எண்ணெயை எரிக்கும் பொழுது கார்பன் அதிக அளவில் வளி மண்டலத்தை சென்றடைகிறது.
2) காட்டு மரங்கள் எரிக்கப் படும் பொழுது அதிக கார்பன் வெளியேறுகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- இவ்வாறு அதிக கார்பன் வளிமண்டலத்தில் சேர்வதால் புவி இயல்பை காட்டிலும் வேகமாக வெப்பமடைவதற்கும், அது தொடர்பாக எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.
43) வளிமண்டலத்தில் இருந்து எந்த வாயுவை ஒரு கார்பன் தேக்கம் பிரித்து எடுத்துக் கொள்வதை கார்பன் பிரிப்பு என்கிறோம்?
A] கார்பன் டை ஆக்சைடு B] கார்பன் மோனாக்சைடு
C] நைட்ரஸ் ஆக்சைடு D] சல்பர் ஹெக்ஸா ஃபுளூரைட்
விடை: A] கார்பன் டை ஆக்சைடு
- இயற்கையான அல்லது செயற்கையான ஒரு நீர்த்தேக்கம் ஆனது நீண்ட காலத்திற்கு கார்பனை தேக்கி வைக்கும் தேக்கமாக உள்ளது.
44) உயிர் கோளத்திலுள்ள சூழ்நிலை மண்டலம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A] 2 B] 3 C] 4 D] 5
விடை: A] 2
- சூழ்நிலை மண்டலம் நிலம் அல்லது நில சூழ்நிலை மண்டலம் மற்றும் நீர் அல்லது நீர் சூழ்நிலை மண்டலங்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீர் சூழ்நிலை மண்டலம் மேலும் நன்னீர் மற்றும் உவர் நீர் சூழ்நிலை மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
45) மிகவும் விரிவான சூழ்நிலை மண்டலத்தை உயிரின சூழ் வாழிடங்கள் என அழைக்கலாம் என்பது யாருடைய கருத்து?
A] சார்லஸ் டார்வின் B] ஐ.ஜி.சிமோன்ஸ் C] எட்வர்ட் சுயெஸ் D] ரேச்சல் கார்சன்
விடை: B] ஐ.ஜி.சிமோன்ஸ்
- ஒரு சூழ்நிலை மண்டலம் பெரிய பரப்பளவில் விரிவடையும் போது, அது உயிரினச் சூழல்வாழிடமாகிறது. ஒரு உயிரின சூழ்வாழிடத்தை நாம் ஆய்வு செய்யும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மொத்த கூட்டமாக அமைந்த ஒரு பெரிய சூழ்நிலை மண்டலம் என முடிவு செய்யலாம்.
46) கீழ்க்கண்ட எந்த காரணத்தினால் உயிரின சூழ் வாழிடங்கள் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
1) உயிரின சூழ்வாழிடத்தில் தாவர உயிரினம் சக்தி நிறைந்த பகுதியாக இருப்பதால்
2) தாவரமும் காலநிலையும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடைய காணப்படுவதால்
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- உலக உயிரின சூழ்வாழ்விடங்கள் மிகப்பெரிய பரப்பளவில் செயல்படும் சூழ்நிலைமண்டலமாக உள்ளன. காலநிலை வகை, மண் வகைகள் மற்றும் ஒரு பகுதியில் வசிக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உயிரினச் சூழல் வாழிடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
47) நீர்வாழ் உயிரினச் சூழ்வாழிடங்களுக்கும் நில வாழ் உயிரின சூழ்வாழ் இடங்களுக்கும் இடையே எல்லையாக அமைந்துள்ளது எது?
A] காலநிலை B] ஒரு பகுதியில் வசிக்கும் விலங்குகள்
C] ஒரு பகுதியில் வசிக்கும் தாவரங்கள் D] ஈரநிலங்கள்
விடை: D] ஈரநிலங்கள்
48) உலக உயிரின சூழ்வாழிடங்களை புரிந்து கொள்ள கீழ்கண்ட எவற்றை புரிந்து கொள்ள வேண்டும்?
1) வட்டாரக் காலநிலைகளின் பண்புகள்
2) இயற்கை சுற்றுச்சூழலில் உள்ள அம்சங்கள்
3) மண் வகைகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் செயல்முறைகள்
A] 1 & 2 B] 2 & 3 C] 3 & 1 D] 1, 2 & 3
விடை: C] 1, 2 & 3
- மேலும் ஒரு பகுதியில் உள்ள தாவரங்களின் பரவலையும் ஒரு பகுதியில் உள்ள விலங்கினங்களின் பரவல் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.
49) கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
1) நன்னீர் உயிரினச் சூழ்வாழிடம் புவியின் எல்லாப் பகுதிகளிலும் பரவி காணப்படுகிறது.
2) அதிகளவு நீர் கொண்ட கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்து நதிகளில் டால்பின்கள் அதிகம் காணப்படுகின்றன.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: D] எதுவும் இல்லை
- குளங்கள், ஏரிகள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் ஈர நிலங்கள் போன்றவை நன்னீர் உயிரினச் சூழ்வாழிடங்களாகும். ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்கி நிற்கும் நீரின் பகுதிகள் சிறியதாக உள்ளன. ஆற்று நீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் நதியில் காணப்படும் உயிரின பன்மை வேறுபடுகிறது.
50) கடல் புற்கள் எத்தனை இனங்களுக்கு மேல் காணப்படுகின்றன?
A] 10 B] 25 C] 50 D] 70
விடை: C] 50
- கடல் புற்கள் உவர் நீரில் வளரும் ஒரு வகை தாவரமாகும். இதன் பூக்கள், வேர்கள் மற்றும் சிறப்பான செல் வழியாக ஊட்டச்சத்துக்கள் அத்தாவரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வகையில் இது நிலப்பகுதி தாவரங்களை போன்றும், கடல் பாசி அல்லது பாசியிலிருந்து வேறுபட்டும் காணப்படுகிறது.
51) பவளத்திட்டிற்கு ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்களாக உள்ளது எது?
A] கடல் மண் B] கடல் தாவரங்கள் C] கடல் விலங்குகள் D] கடல் நீர்
விடை: B] கடல் தாவரங்கள்
- அவை பவளத் திட்டுகள் வளர்வதற்கு உதவுகின்றன. மேலும் தாவரங்களைப் போன்று உள்ள இந்த பவளப் பாசிகளும், பவள ஆல்கேக்களும் ஒன்றிணைக்கப்பட்டு பவளத்திட்டுகளாக வளர்கின்றன.
52) கீழ்கண்டவற்றுள் கூட்டமைப்போடு வாழ்கின்ற முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினம் எது?
A] கடல் சிங்கம் B] கடல் குதிரை C] கடல் நீர் நாய் D] பவளப்பாறைகள்
விடை: D] பவளப்பாறைகள்
- பவளத் திட்டுகள் அயனமண்டல பேராழிகள் மற்றும் கடல்களில் மட்டுமே காணப்படுகிறது. கடல் நீரின் வெப்பம் 20° செல்சியசுக்கு குறைவாக இருப்பின் இவை வாழ முடியாது.
53) பவளத் திட்டுகள் வளர்வதற்கு உகந்த வெப்பநிலை எது?
A] 23° முதல் 29° செல்சியஸ் B] 25° முதல் 32° செல்சியஸ்
C] 29° முதல் 35° செல்சியஸ் D] 32° முதல் 37° செல்சியஸ்
விடை: A] 23° முதல் 29° செல்சியஸ்
- பவளத் திட்டுகள் உவர்நீர் சூழ்நிலை மண்டலத்தின் ஒரு அங்கமாகும். பவளத் திட்டுகள் கூட்டமாக வாழக்கூடியவை.
54) பவளத் திட்டுகளின் கூடு எதனால் ஆனது?
A] கால்சியம் சல்பேட் B] கால்சியம் கார்பனேட்
C] கால்சியம் குளோரைடு D] சோடியம் குளோரைடு
விடை: B] கால்சியம் கார்பனேட்
- இவை நெருக்கமாகச் சேர்ந்து வளரும் தன்மை வாய்ந்தவை. கடலோர பவளத்திட்டு, அரண் பவளத்திட்டு மற்றும் வட்ட வடிவ பவளத்திட்டு என பவளத் திட்டுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
55) கீழ்க்கண்டவற்றுள் கடற்கரையில் இருந்து பார்க்கும்போது ஒரு விளிம்பு தோற்றத்தை உருவாக்கும் பவளத்திட்டு எது?
A] கடலோர பவளத்திட்டு B] வட்ட வடிவ பவளத்திட்டு
C] அரண் பவளத்திட்டு D] எதுவும் இல்லை
விடை: A] கடலோர பவளத்திட்டு
- இவை கடற்கரையோரப் பகுதியில் இருந்து கடல் நோக்கி வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக காணப்படும் பவளத்திட்டு வகையாகும்.
56) கடற்கரையிலிருந்து காயல்கள் போன்ற நீர்ப்பரப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ள பவளத்திட்டு எது?
A] கடலோர பவளத்திட்டு B] வட்ட வடிவ பவளத்திட்டு
C] அரண் பவளத்திட்டு D] எதுவும் இல்லை
விடை: C] அரண் பவளத்திட்டு
- மேலும் வட்ட வடிவ பவளத் திட்டுக்கள் பெயருக்கேற்ப வட்டவடிவமாக வளர்கின்றன. இதன் நடுவில் நீர்ப்பரப்பு மட்டுமே காணப்படும், தீவுகள் இருப்பதில்லை.
57) கீழ்க்கண்டவற்றுள் உவர் நீர் உயிரின சூழ்வாழிடத்தில் காணப்படும் உயிரினங்கள் யாவை?
1) திமிங்கலங்கள் 2) மெல்லுடலிகள் 3) ஓட்டு மீன்கள் 4) குழியுடலிகள்
A] 1 & 2 B] 2 & 4 C] 3 & 4 D] 1, 2, 3 & 4
விடை: D] 1, 2, 3 & 4
- மேலும் மீன்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஆகியவை காணப்படுகின்றன. இவ்வகை கடல்வாழ் உயிரினங்கள் கால நிலை மாற்றத்தாலும், அலைகள் மற்றும் நீரோட்டங்களினாலும் பாதிக்கப்படுகின்றன.
58) கீழ்க்கண்டவற்றுள் ஓட்டு மீன் வகை அல்லாதது எது?
A] நண்டு B] கிரே மீன் C] சிப்பி ஓடு D] சிறு கூனி
விடை: C] சிப்பி ஓடு
- ஓட்டு மீன்கள் முக்கியமான நீர் வாழ் கணுக்காலி உயிரினமாகும். அவை அதன் கடினமான மேல் ஓடு மற்றும் பல ஜோடி கால்களால் மூடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு கடல் நண்டு, பர்னக்கல்ஸ் மற்றும் இறால் மீன்கள் ஆகியவை ஆகும்.
59) முதுகெலும்பில்லாத மென்மையான உடலைக் கொண்ட உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] மெல்லுடலிகள் B] குழியுடலிகள் C] பவளப்பாறைகள் D] ஓட்டு மீன்கள்
விடை: A] மெல்லுடலிகள்
- பெரும்பாலும் இவற்றின் உடல்கள் தடிமனான ஓடுகளால் மூடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக நத்தை, அட்டை, கணவாய், கனவாய் மீன், எண்காலி, ஆலிகன் மற்றும் ஈரிதழ் சிப்பி போன்றவையாகும்.
60) ஈரநிலம் என்பது எவ்வாறு காணப்படுகிறது?
1) நிரந்தரமான நீர் நிரம்பிய சூழ்நிலை மண்டல அமைப்பு
2) அவ்வப்போது நீர் நிரம்பிய சூழ்நிலை மண்டல அமைப்பு
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- ஈரநிலங்கள் சுற்றுச்சூழல் அமைப்பில், நீர் சுத்திகரிப்பு, வெள்ளத்தடுப்பு, கார்பன் தேக்கங்கள் மற்றும் நிலையான கரையோர அமைப்பு போன்ற பல பணிகளைச் செய்கிறது.
61) கீழ்க்கண்டவற்றுள் சதுப்பு நிலத்தில் செழித்து வாழும் நீர் வாழ் தாவரம் அல்லாதது எது?
A] பால்களை B] வழுக்கை புன்னைமரம் C] நாணல்கள் D] ஈட்டி மரம்
விடை: D] ஈட்டி மரம்
- ஈர நிலங்கள் நீர் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கு உயிரினங்களை பரவலாக கொண்டுள்ளன. ஈரநில சூழ்நிலை மண்டலத்தில் சேரறு நிறைந்த சதுப்பு நிலம் காணப்படுகிறது.
62) கீழ்க்கண்டவற்றுள் பூச்சியுண்ணும் தாவரம் எது?
A] கடல் புற்கள் B] குடுவைத் தாவரம் C] மந்தாரை வகைகள் D] பருத்தி புல்
விடை: B] குடுவைத் தாவரம்
- சேறு நிறைந்த சதுப்பு நிலங்களில் ஈரமான கடற்பஞ்சு போன்ற தன்மை உடைய, பாசி மற்றும் இறந்த தாவரங்களால் ஆன நீர் வடியா கொண்டுள்ளது. சிதைந்த தாவரத்தின் பொருள் படிப்படியாக குவிந்து சேறு நிறைந்த இடங்களில் கார்பன் தேக்கங்களாக செயல்படுகின்றன.
63) அமில கரிம மண் கோரைகள், நாணல் ஆகியவை எந்த பகுதியின் தனிச்சிறப்புடைய தாவர வகைகள் ஆகும்?
A] இலையுதிர் காடுகள் B] சதுப்பு நிலக் காடுகள்
C] தாழ்வான சேற்று நிலப்பகுதி D] பசுமைமாறா காடுகள்
விடை: C] தாழ்வான சேற்று நிலப்பகுதி
- தாழ்வான சேற்று நிலப்பகுதியும் முழுமையாகவோ அல்லது ஓரளவு தண்ணீரால் மூடப்பட்டு நிலத்தடி நீரிலிருந்து ஊட்டச்சத்துக்களை பெறுகின்றன.
64) பின்வருவனவற்றுள் அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுவது எது?
A] சதுப்பு நிலக் காடுகள் B] இலையுதிர் காடுகள்
C] பசுமைமாறா காடுகள் D] புல்வெளிகள்
விடை: A] சதுப்பு நிலக்காடுகள்
- இவை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. சதுப்பு நிலங்கள் பெரும்பாலும் ஆறுகளின் கழிமுகங்களிலும், நன்னீர் உவர்நீருடன் கலக்கும் இடங்களிலும் காணப்படும்.
65) உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலப்பகுதி எது?
A] பிச்சாவரம் B] சுந்தரவனக்காடுகள்
C] மன்னார் வளைகுடா D] புன்னக்காயல்
விடை: B] சுந்தரவனக்காடுகள்
- இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சொத்து அமைவிடமாகவும் கருதப்படுகிறது. அலையாத்திக் காடுகள் நன்னீரிலும், உவர் நீரிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.
66) கீழ்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் உள்ள அலையாத்திக் காடு அல்லாதது எது?
A] இராமநாதபுரம் B] காஞ்சிபுரம் C] மன்னார் வளைகுடா D] முத்துப்பேட்டை
விடை: B] காஞ்சிபுரம்
- தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மன்னார் வளைகுடா மற்றும் புன்னக்காயல் ஆகியவற்றின் கடற்கரையோர பகுதியில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன.
67) வெப்ப மண்டல பசுமை மாறா மழைக்காடுகள் எது வரை பரவியுள்ளது?
A] நில நடுக் கோட்டிலிருந்து 10° வடக்கு மற்றும் தெற்கு வரை
B] நிலநடுக் கோட்டிலிருந்து 15° வடக்கு மற்றும் தெற்கு வரை
C] நில நடுக் கோட்டிலிருந்து 20° வடக்கு மற்றும் தெற்கு வரை
D] நிலநடுக்கோட்டில் இருந்து 30° வடக்கு மற்றும் தெற்கு வரை
விடை: A] நில நடுக் கோட்டிலிருந்து 10° வடக்கு மற்றும் தெற்கு வரை
- இந்த சூழ் வாழிடம் தென் அமெரிக்காவின் அமேசான் பள்ளத்தாக்குகளிலும், ஆப்பிரிக்காவின் காங்கோ பள்ளத்தாக்கிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், இந்தோ மலேசியா பகுதியிலும் மற்றும் இனியா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன.
68) வெப்ப மண்டல பசுமை மாறா மழைக்காடுகளின் சராசரி ஆண்டு வெப்பநிலை எவ்வளவு?
A] 10° செல்சியஸ் முதல் 20° செல்சியஸ் வரை
B] 15° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரை
C] 20° செல்சியஸ் முதல் 30° செல்சியஸ் வரை
D] 25° செல்சியஸ் முதல் 35° செல்சியஸ் வரை
விடை: C] 20° செல்சியஸ் முதல் 30° செல்சியஸ் வரை
- இந்த உயிரின சூழ் வாழிடம் ஆண்டு முழுவதும் செங்குத்தாக சூரிய ஒளியை பெறுவதால் இங்கு ஆண்டு முழுவதும் வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது.
69) பசுமை மாறா மழைக் காடுகளின் சராசரி ஆண்டு மழை அளவு எவ்வளவு?
A] 150 செ.மீ B] 180 செ.மீ C] 200 செ.மீ D] 230 செ.மீ
விடை: C] 200 செ.மீ
70) வெப்ப மண்டல பசுமை மாறா மழை காடுகளிலுள்ள வன்மரங்கள் எவ்வளவு உயரம் வளரும் தன்மை கொண்டவை?
A] 15 முதல் 25 மீட்டர் உயரம் B] 20 முதல் 35 மீட்டர் உயரம்
C] 25 முதல் 30 மீட்டர் உயரம் D] 35 முதல் 40 மீட்டர் உயரம்
விடை: B] 20 முதல் 35 மீட்டர் உயரம்
- வெப்ப மண்டல பசுமை மாறா மழைக்காடுகள் மிக அதிக அளவிலான தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளன. உயரமான அகன்ற இலைகளைக் கொண்ட பசுமைமாறா மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
71) கீழ்கண்டவற்றுள் வெப்ப மண்டல பசுமை மாறா மழைக்காட்டில் வளராத மரம் எது?
A] ஈட்டி மரம் B] சீமை தேக்கு C] கொய்னா மரம் D] பருத்தி புல்
விடை: D] பருத்திப் புல்
- மேலும் இந்த உயிரின சூழ் வாழிடத்தின் முக்கிய மரங்கள் கருங்காலி, ரப்பர் மரம், தென்னை மரம், பிரம்பு, மூங்கில் மற்றும் பல. இது அடர்த்தியான புதர் செடிகளையும் மற்றும் கொடிகளையும் கொண்டுள்ளது. இந்த காடுகளில் உள்ள உயிரின சூழ் வாழிடத்தில் ஏராளமான பூச்சிகள், பறவைகள், ஊர்வன மற்றும் உரோமமற்ற விலங்குகளும் வாழ்கின்றன. காடுகளின் விளிம்புப் பகுதியில் கொரில்லாக்களும், குரங்குகளும் காணப்படுகின்றன.
72) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) ஆப்பிரிக்கா – பிக்மீஸ்
2) அமேசான் – யானோமணி
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- மேலும் அமேசான் பகுதியில் டிக்குனா பழங்குடியினர் போன்றோர் வெப்பமண்டல பசுமை மாறா சூழ்வாழிடத்தில் வாழும் முக்கியமான பழங்குடி இன மக்கள் ஆவர். அவர்கள் பாரம்பரியமாக வேட்டையாடியும் மற்றும் உணவு சேகரித்தும் வாழ்கின்றனர்.
73) சைலண்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A] கேரளா B] கர்நாடகா C] மத்திய பிரதேசம் D] மேற்கு வங்காளம்
விடை: A] கேரளா
- கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் சைலண்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவானது இந்தியாவின் கடைசி எஞ்சிய வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் ஆகும். இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.
74) கீழ்கண்டவற்றுள் பருவ மழை காடுகள் என்று அழைக்கப்படுவது எது?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் D] சவானா உயிரின சூழ் வாழிடம்
விடை: B] வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
- வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் உயிரினச் சூழ்வாழிடம் காணப்படும் பகுதிகளில் பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளதால் பருவ மழைக் காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது.
75) கீழ்க்கண்டவற்றுள் வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் காணப்படாத இடம் எது?
A] இந்தியா B] தாய்லாந்து C] தெற்கு ஆஸ்திரேலியா D] கம்போடியா
விடை: C] தெற்கு ஆஸ்திரேலியா
- மேலும் இச்சூழ்வாழிடம் வியட்நாம், மியான்மர் மற்றும் சீனா தென் கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இது கிழக்கு பிரேசில், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், தென் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
76) வெப்பமண்டல இலையுதிர் காடுகளின் கோடைகால வெப்ப நிலை எவ்வளவு?
A] 20° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரை B] 23° செல்சியஸ் முதல் 36° செல்சியஸ் வரை
C] 38° செல்சியஸ் முதல் 48° செல்சியஸ் வரை D] 36° செல்சியஸ் முதல் 42° செல்சியஸ் வரை
விடை: C] 38° செல்சியஸ் முதல் 48° செல்சியஸ் வரை
- இந்த உயிரின சூழ்வாழிடத்தில் வெப்பநிலை ஒவ்வொரு பருவத்திலும் மாறுபட்டு காணப்படுகிறது. கோடை காலத்தில் வெப்பமும், ஈரப்பதமும் அதிகமாக காணப்படுகிறது. வறண்ட குளிர்காலத்தில் வெப்பநிலை 10° செல்சியஸ் முதல் 27° செல்சியஸ் வரை காணப்படுகிறது.
77) வெப்பமண்டல இலையுதிர் காடுகளின் ஆண்டு மழை அளவு எவ்வளவு?
A] 50 செ.மீ முதல் 90 செ.மீ வரை B] 60 செ.மீ முதல் 95 செ.மீ வரை
C] 75 செ.மீ முதல் 150 செ.மீ வரை D] 125 செ.மீ முதல் 175 செ.மீ வரை
விடை: C] 75 செ.மீ முதல் 150 செ.மீ வரை
- இது வெப்பமண்டல இலையுதிர் காடுகளின் தன்மையை பாதிக்கிறது.
78) கீழ்கண்டவற்றுள் வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் பொதுவாக காணப்படும் மரம் அல்லாதது எது?
A] மூங்கில் B] இலவம் பஞ்சு மரம் C] கருவேல மரம் D] புங்கை மரம்
விடை: D] புங்கை மரம்
- தாவரங்கள் வறண்ட பருவத்தில் தங்கள் இலைகளை உதிர்கின்றன. இங்கு மரங்கள் தடிமனான கரடுமுரடான பெரிய தண்டுகளை கொண்டிருக்கின்றன. தாவரங்கள் மற்றும் மரங்கள் மூன்று வெவ்வேறு நிலைகளில் வளரும். தேக்கு, சந்தன மரம், இலுப்பை, மாமரம், வேலி தட்டி, மற்றும் ஆலமரம் போன்றவை பொதுவாக காணப்படும் மரங்களாகும்.
79) மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் எது வரை பரவியுள்ளது?
A] 30° முதல் 50° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை
B] 40° முதல் 50° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை
C] 45° முதல் 55° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை
D] 50° முதல் 55° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை
விடை: A] 30° முதல் 50° வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை
- மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் ஒரு உயிரின சூழ்வாழ் இடமாகும். இந்த உயிரின சூழ் வாழிடம் புவியின் மத்திய அட்சரேகைப் பகுதியில் உள்ளது. இவை வெப்ப மண்டலத்துக்கும் ஆர்டிக் வட்டத்திற்கும் இடையில் காணப்படுகிறது.
80) மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகளில் சராசரி ஆண்டு வெப்பநிலை எவ்வளவு?
A] 10° செல்சியஸ் B] 15° செல்சியஸ்
C] 20° செல்சியஸ் D] 25° செல்சியஸ்
விடை: A] 10° செல்சியஸ்
- இவ்வகை காடுகள் கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதியிலும், சீனா, ஜப்பான், வட மற்றும் தென் கொரியாவிலும் காணப்படுகிறது.
81) மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் எத்தனை பருவ காலங்களை கொண்டுள்ளது?
A] 2 B] 3 C] 4 D] 5
விடை: C] 4
- இந்த உயிரின சூழ் வாழிடம் குளிர்காலம், வசந்த காலம், கோடைக்காலம் மற்றும் இலையுதிர் காலம் என நான்கு பருவங்களை கொண்டிருக்கின்றன. இங்கு குளிர்காலம் குளிராகவும் மற்றும் கோடை காலம் வெப்பமாகவும் உள்ளது.
82) கீழ்கண்டவைகளில் மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படாத மரம் எது?
A] புங்கை மரம் B] ஹிக்கோரி
C] தேவதாரு D] இலுப்பை மரம்
விடை: D] இலுப்பை மரம்
- இங்குள்ள மரங்கள் இலையுதிர் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன. இலைகளில் பச்சையம் தன்மை உற்பத்தி குறைவதினால் இவைகள் பழுப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களாக மாறுகின்றன. ஓக், மேப்பிள் மற்றும் கொட்டை மரம் போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.
83) லாரல் மரம் கீழ்க்கண்ட எந்த உயிரின சூழலில் காணப்படுகிறது?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் D] சவானா உயிரின சூழ் வாழிடம்
விடை: C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
- அகன்ற இலைகளைக் கொண்ட மரங்கள் காணப்படுவதால் இந்த காட்டின் தரைப்பகுதியில் சூரிய வெப்பம் மிக சிறிய அளவே சென்றடைகிறது. இதன் காரணமாக அங்கு பாசிகள், அஜேலிய பலவகை வண்ணப்பூக்கள் உள்ள செடிகள் ஆகியவை காணப்படுகின்றன.
84) சாலமண்டர்கள் கீழ்க்கண்ட எந்த உயிரின சூழலில் வாழ்கின்றன?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் D] சவானா உயிரின சூழ் வாழிடம்
விடை: C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
- இந்த மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படும் உயிரினங்கள், எறும்புகள், பூச்சிகள், ஈக்கள், தேனீக்கள், குளவிகள், சில்வண்டு, குச்சி பூச்சி, விட்டில் பூச்சி, பட்டாம்பூச்சி, தட்டான்கள், கொசுக்கள் மற்றும் கும்புடு பூச்சி வாழ்கின்றன. மேலும் தவளைகள், பாம்புகள், தேரை போன்றவையும் இந்த உயிரின சூழ்வாழிடத்தில் காணப்படுகின்றன.
85) புவியில் காணப்படும் இயற்கை தாவரங்களில் புல்வெளிகள் எத்தனை பகுதி காணப்படுகிறது?
A] மூன்றில் ஒரு பகுதி B] இரண்டில் ஒரு பகுதி
C] நான்கில் ஒரு பகுதி D] ஐந்தில் ஒரு பகுதி
விடை: D] ஐந்தில் ஒரு பகுதி
- புல்வெளிகள் பாலைவனத்தின் எல்லைப் பகுதியில் காணப்படுகின்றன. புல்வெளிகள் இருவகைப்படும். நிலநடுக்கோட்டுக்கு அருகில் காணப்படும் புல்வெளியை வெப்பமண்டல புல்வெளிகள் எனவும் மத்திய அட்ச பகுதியில் காணப்படும் புல்வெளிகளை மிதவெப்பமண்டல புல்வெளிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
86) கீழ்கண்டவற்றுள் சவானா உயிரின சூழ் வாழிடம் என்று அழைக்கப்படுவது எது?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் D] வெப்ப மண்டல புல்வெளி உயிரின சூழ் வாழிடம்
விடை: D] வெப்பமண்டல புல்வெளி உயிரின சூழ் வாழிடம்
- சவானா பரந்து விரிந்த புல்வெளிகளையும், சிறிய புதர்கள் மற்றும் தனித்த மரங்களையும் கொண்டுள்ளது. இந்த சூழ் வாழிடம் வெப்பமண்டல மலை காடுகளுக்கும் மற்றும் பாலை வன உயிரினச் சூழ்வாழிடங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
87) புல்வெளி லானோஸ் என்று எங்கு அழைக்கப்படுகிறது?@
A] ஆப்பிரிக்கா B] ரஷ்யா C] கொலம்பியா D] கனடா
விடை: C] கொலம்பியா
- ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெப்ப மண்டல புல்வெளி காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இந்த புல்வெளியை சவானா என்றும், தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் லானோஸ் என்றும் பிரேசிலில் காம்போஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
88) சவானாவில் உள்ள புற்கள் எவ்வளவு உயரம் வளரக்கூடியது?
A] 1 அல்லது 2 மீட்டர் B] 2 அல்லது 3 மீட்டர்
C] 3 அல்லது 4 மீட்டர் D] 4 அல்லது 5 மீட்டர்
விடை: A] 1 அல்லது 2 மீட்டர்
- சவானாவில் ஆண்டு முழுவதும் அதிகமான வெப்பநிலை நிலவுகிறது. இது மிக நீண்ட வறண்ட குளிர் காலத்தையும் ஈரமான கோடை காலத்தையும் கொண்டுள்ளது. இங்கு சிறு புதிர்கள் மற்றும் தனித்த குடை வடிவ மரங்களான அகேசியா மற்றும் பெருக்க மரம் போன்ற மரங்கள் காணப்படுகின்றன.
89) கீழ்கண்டவற்றுள் அதிகப்படியான தண்ணீரை தண்டில் சேமித்து வைத்துக் கொள்ளும் மரம் எது?
A] புங்கை மரம் B] பெருக்க மரம் C] லாரல் மரம் D] கொட்டை மரம்
விடை: B] பெருக்க மரம்
- சவானாவில் ஒட்டகச்சிவிங்கி மற்றும் கங்காரு போன்ற பெரும்பாலான விலங்குகள் நீண்ட கால்களைக் கொண்டுள்ளன. சிங்கம், சிறுத்தை, சிறுத்தை புலி, ஓநாய், கழுதை புலி போன்ற விலங்குகள் இந்த உயிரின சூழ் வாழிடத்தில் வாழ்கின்றன.
90) கீழ்கண்டவற்றுள் ஸ்டெப்பி என்று அழைக்கப்படும் உயிரின சூழ் வாழிடம் எது?
A] மிதவெப்ப மண்டல புல்வெளி B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் D] வெப்ப மண்டல புல்வெளி
விடை: A] மிதவெப்ப மண்டல புல்வெளி
- மிதவெப்ப மண்டல புல்வெளி சூழ் வாழிடம் மத்திய அட்சத்தின் கண்டங்களின் உட்பகுதியில் காணப்படுகிறது. பொதுவாக இந்த புல்வெளி சூழ் வாழிடம் ஈரப்பதமான கடற்கரை பகுதிகள் மற்றும் மத்திய அட்சரேகை பாலைவன பகுதிகளுக்கு இடையே இடைநிலை மண்டலங்களாக காணப்படுகின்றன.
91) மிதவெப்ப மண்டல புல்வெளி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] பாம் பாஸ் B] ஸ்டெப்பி C] பிரெய்ரி D] வெல்ட்ஸ்
விடை: C] பிரெய்ரி
- மேலும் இப் புல்வெளிகள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஸ்டெப்பி என்றும், வட அமெரிக்காவின் கனடாவில் பிரெய்ரி என்றும், தென்னமெரிக்காவில் பாம்பாஸ் என்றும் தென் ஆப்பிரிக்காவில் வெல்ட்ஸ் என்றும் மற்றும் ஹங்கேரியில் புஸ்டா என்றும் அழைக்கப்படுகின்றன.
92) மிதவெப்ப மண்டல புல்வெளியில் கோடைகாலத்தில் நிலவும் வெப்பநிலையின் அளவு எவ்வளவு?
A] 25° செல்சியஸ் B] 29° செல்சியஸ் C] 32° செல்சியஸ் D] 38° செல்சியஸ்
விடை: D] 38° செல்சியஸ்
- இங்கு கோடைக்கால வெப்பநிலை ஆண்டின் சராசரி வெப்பநிலையை விட மிகவும் அதிகமாக உள்ளது. குளிர்காலத்தில் அதிக குளிரும் வெப்பநிலை உறை நிலைக்கு கீழ் – 40° செல்சியஸ் அளவும் காணப்படுகிறது.
93) மிதவெப்ப மண்டல புல்வெளியின் சராசரி ஆண்டு மழை அளவு எவ்வளவு?
A] 30 செ.மீ B] 50 செ.மீ C] 65 செ.மீ D] 78 செ.மீ
விடை: B] 50 செ.மீ
- இது புற்கள் மிகுதியாக காணப்படும் புல்வெளி சூழ்வாழிடமாகும். இங்கு வளரும் புற்கள் மலையின் அளவுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
94) காட்டெருமை, ஓநாய் போன்ற விலங்குகள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?
A] ஸ்டெப்பி புல்வெளி B] சவானா புல்வெளி
C] பிரெய்ரி புல்வெளி D] வெல்ட்ஸ் புல்வெளி
விடை: C] பிரெய்ரி புல்வெளி
- மேலும் கொயோடோ நாய்கள், பிரெய்ரி நாய், நரிகள், சுண்டெலி, முயல்கள், குறுந்தலை வளைகரடி, கிலுகிலுப்பை விரியன் பாம்பு, பாக்கெட் கோபர்ஸ், வீசெல், வெட்டுக்கிளிகள், காடைகள் மற்றும் பருந்துகள் போன்றவை இங்கு காணப்படும் மற்ற விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகும்.
95) கீழ்க்கண்டவற்றுள் உலகிலேயே மிக வெப்பமான வறண்ட மற்றும் மழைப்பொழிவு மிகக் குறைவான பகுதி எது?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] வெப்பமண்டல பாலை வன உயிரின சூழ்வாழிடம்
D] வெப்ப மண்டல புல்வெளி உயிரின சூழ் வாழிடம்
விடை: C] வெப்பமண்டல பாலை வன உயிரின சூழ் வாழிடம்
- இந்த உயிரின சூழ் வாழிடம் பொதுவாக அயன மண்டலத்தில் காணப்படும் கண்டங்களின் மேற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.
96) கீழ்கண்டவற்றுள் வட அரைக்கோளத்தில் காணப்படாத பாலைவனம் எது?
A] சகாரா பாலைவனம் B] அரேபியன் பாலைவனம்
C] தார் பாலைவனம் D] கலஹாரி பாலைவனம்
விடை: D] கலஹாரி பாலைவனம்
- ஆப்பிரிக்க – ஆசிய பாலைவனங்கள் மிக நீண்ட பாலைவன மண்டலம் ஆகும். வட அமெரிக்க வெப்பமண்டல பாலைவனங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரிசோனா, கலிபோர்னியா, நியூ மெக்ஸிகோ பகுதிகளிலும் மற்றும் மெக்சிகோ வரையிலும் பரவியுள்ளது.
97) அட்டகாமா பாலைவனம் கீழ்க்கண்ட எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
A] அட்லஸ் மலைத்தொடர் B] ஆண்டிஸ் மலைத் தொடர்
C] இமயமலைத் தொடர் D] ராக்கி மலைத்தொடர்
விடை: B] ஆண்டிஸ் மலைத் தொடர்
- மேலும் தென் ஆப்பிரிக்காவின் நமீபியன் மற்றும் கலஹாரி பாலைவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படும் பெரிய ஆஸ்திரேலியன் பாலைவனம் போன்றவை தென் அரைக்கோளத்தில் உள்ள பாலைவனங்கள் ஆகும்.
98) பாலைவன சோலை பகுதியில் அதிகமாக விளையும் மரம் எது?
A] பனைமரம் B] கருவேல மரம் C] பேரீச்சை மரம் D] வேப்பமரம்
விடை: C] பேரீச்சை மரம்
- வெப்பமண்டல பாலை வன உயிரின சூழ் வாழிடம் விவசாய உற்பத்திக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் பாலைவனச்சோலை பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. பாலைவனச் சோலையில் வேளாண்மைக்கு பயன்படக்கூடிய நீர்ப்பாசனம் புனல் மற்றும் நிலத்தடி நீர் மூலமாக கிடைக்கிறது.
99) நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்காவில் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
A] பெர்பெர்ஸ் B] புஷ்மென் C] டமாரா D] அபாரிஜின்ஸ்
விடை: A] பெர்பெர்ஸ்
- பாலைவனங்களில் வாழும் மக்கள் நாடோடிகளாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் கூடாரங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்கின்றனர்.
100) டமாரா என்று அழைக்கப்படும் நாடோடி மக்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் வாழ்கின்றனர்?
A] வட ஆப்பிரிக்கா B] நமீபியா C] கலகாரி D] ஆஸ்திரேலியா
விடை: B] நமீபியா
- மேலும் அரேபிய பாலைவன பகுதியில் உள்ள மக்களை பெடோய்ன்ஸ் என்றும், கலகாரி பாலைவனத்தில் உள்ள மக்களை புஷ்மென் என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நாடோடிகளை அபாரிஜின்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
101) வெப்பமண்டல பாலை வன உயிரின சூழ் வாழிடத்தில் வாழும் மக்களின் தொழில் என்ன?
1) வேட்டையாடுதல் 2) உணவு சேகரித்தல் 3) மேய்ச்சல் தொழில் 4) தன்னிறைவு விவசாயம்
A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 1, 3 & 4 D] 1, 2, 3 & 4
விடை: D] 1, 2, 3 & 4
- வெப்பமண்டல பாலை வன உயிரினச் சூழ்வாழிடத்தில் வாழும் மக்கள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் போன்ற தொழிலையும், சிலர் ஆடு, ஒட்டகம், மாடு போன்றவற்றைக் கொண்டு மேய்ச்சல் தொழிலையும் மற்றும் சிலர் சிறிய அளவிலான தன்னிறைவு விவசாயமும் செய்கின்றனர்.
102) மாரத்தான் டெ சாபல்ஸ் என்ற நடை பந்தயம் எந்த பாலைவனத்தில் நடைபெறுகிறது?
A] தார் பாலைவனம் B] அட்டகாமா பாலைவனம்
C] சகாரா பாலைவனம் D] கோபி பாலைவனம்
விடை: C] சகாரா பாலைவனம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சகாரா பாலைவனத்தில் மிகக் கடினமான இந்த நடை பந்தயம் நடைபெறுகிறது.
103) சகாரா பாலைவனத்தில் நடைபெறும் நடை பந்தயத்தில் எத்தனை வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்?
A] 12 – 49 வயது B] 20 – 58 வயது C] 14 – 72 வயது D] 16 – 79 வயது
விடை: D] 16 – 79 வயது
- இந்த நடை பந்தயத்தின் பங்கேற்பாளர்கள் தெற்கு மொராக்கோவில் உள்ள சகாரா பாலைவனத்திலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவை ஏழு நாட்களுக்குள் கடக்க வேண்டும். உலகம் முழுவதும் 16 முதல் 79 வயதிற்குட்பட்ட சுமார் 1500 பங்கேற்பாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.
104) போரில் வனப்பகுதி உயிரினச் சூழ்வாழிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] ஸ்டெப்பி B] டைகா C] பிரெய்ரி D] சவானா
விடை: B] டைகா
- இது மிகப் பெரிய நில உயிரின சூழ்வாழிடமாகும். இவை ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பரவி காணப்படுகின்றன.
105) கீழ்க்கண்டவற்றுள் ஊசியிலை காடுகள் உயிரின தொகுதி என்று அழைக்கப்படுவது எது?
A] வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் B] வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
C] போரியல் வனப்பகுதி உயிரின சூழ் வாழிடம் D] சவானா உயிரின சூழ் வாழிடம்
விடை: C] போரியல் வனப்பகுதி உயிரின சூழ் வாழிடம்
- மேலும் டைகா உயிரின சூழ்வாழிடத்தை வடமுனை பகுதி வனப்பகுதி உயிரின சூழ்வாழிடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூழ் வாழிடம் 50° – 55° வடக்கிலிருந்து 65° – 75° வடக்கு அட்ச ரேகை வரை பரவியுள்ளது.
106) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) போரியல் வனப்பகுதி உயிரின சூழ் வாழிடம் தென் அரைக்கோளத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
2) இந்த சூழ் வாழிடம் குறுகிய கோடை காலத்தையும் மிக நீண்ட குளிர் காலத்தையும் கொண்டது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: B] 2 மட்டும்
- போரியல் வனப்பகுதி மிதவெப்ப மண்டல புல்வெளியின் தெற்கில் இருந்து வடக்கில் உள்ள தூந்திர பகுதி வரை அமைந்துள்ளது. தென்துருவத்தில் கண்டங்கள் குறுகலாக உள்ளதால் தென் அரைக்கோளத்தில் இந்த சூழ் வாழிடம் இல்லை.
107) டைகா உயிரின சூழ் வாழிடத்தின் சராசரி ஆண்டு மழை பொழிவு எவ்வளவு?
A] 35 – 60 செ.மீ B] 40 – 65 செ.மீ C] 50 – 65 செ.மீ D] 55 – 75 செ.மீ
விடை: A] 35 – 60 செ.மீ
- டைகா சூழ் வாழிடத்தில் குறுகிய ஈரமான கோடைகாலமும் நீண்ட குளிர்காலமும் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் அதிகப்படியான பனிப்பொழிவை பெறுகிறது. டைகா அல்லது வட கோளார்த்த சூழ்வாழிடமானது பசுமையான ஊசியிலை காடுகளை கொண்டுள்ளது.
108) பசும்புல் நிலம் என்றழைக்கப்படும் நிலத்தோற்றம் கீழ்க்கண்ட எந்த உயிரினச் சூழ்வாழிடத்தில் ஏற்படுகிறது?
A] வெப்பமண்டல பாலை வன உயிரின சூழ் வாழிடம்
B] மிதவெப்ப மண்டல புல்வெளி உயிரினச் சூழ் வாழிடம்
C] போரியல் வனப்பகுதி உயிரின சூழ் வாழிடம்
D] வெப்பமண்டல புல்வெளி உயிரின சூழ் வாழிடம்
விடை: C] போரியல் வனப்பகுதி உயிரினச் சூழ் வாழிடம்
- பைன், ஸ்பூரூஸ், தேவதாரு மரம், மேப்பிள் மரம், சிடார் மரம் ஆகியவை இந்த காடுகளில் உள்ள முக்கியமான ஊசியிலை மரங்கள் ஆகும். குறுகிய கோடைகாலத்தில் பனி உருகும் போது, மரப் பாசிகள், பாசி மற்றும் சிறிய புற்கள் வளர்ந்து தரை முழுவதும் பரவி பசும்புல் நிலம் என்று அழைக்கப்படும் நிலத்தோற்றம் ஏற்படுகிறது.
109) வெள்ளை கீரி என்ற பாலூட்டி கோடை காலத்தில் எந்த நிற உரோமங்களால் மூடப்பட்டிருக்கும்?
A] கருப்பு B] இருண்ட பழுப்பு C] அடர் சாம்பல் D] அடர் காவி
விடை: B] இருண்ட பழுப்பு
- வெள்ளைக்கீரி குளிர்காலத்தில் இதன் உரோமங்கள் பனியை போல வெள்ளை நிறமாக மாறி விடுகின்றன. இது பனி கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. அதனால் வேட்டைக்காரர்களுக்கு வெள்ளைக்கீரியை வேட்டையாடுவது கடினமாகிறது.
110) போரியல் வனப்பகுதியில் வாழும் மக்களின் முக்கிய தொழில் எது?
A] விவசாயம் B] வேட்டையாடுதல் C] சுரங்கத் தொழில் D] மரம் வெட்டுதல்
விடை: D] மரம் வெட்டுதல்
- ஊசியிலைக் காடுகளில் மென்மையான மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து பெறப்படும் மரக்கூழ் கொண்டு செய்தித்தாள்கள், காகிதம், தீப்பெட்டி, மரச்சாமான்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.
111) தூந்திரம் என்றால் என்ன பொருள்?
A] மரங்கள் நிறைந்த சமவெளி B] மரங்களற்ற சமவெளி
C] புற்கள் நிறைந்த சமவெளி D] புற்கள் அற்ற சமவெளி
விடை: B] மரங்களற்ற சமவெளி
- தூந்திரப் பகுதி மிகப் பரந்து விரிந்து வட அரைக்கோளத்தில் ஆர்டிக் வட்டத்திற்கு மேல் ஆர்டிக் கடற்கரையோரங்களில் காணப்படுகிறது. இது தெற்கில் ஊசியிலைக் காடுகளான டைகா வரை பரவியுள்ளது. தூந்திர உயிரின சூழ்வாழிடம் மலைகளின் உச்சிகளில் ஆல்பைன் பகுதியில் அமைந்துள்ளது.
112) தூந்திர உயிரின சூழ் வாழிடத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலை எவ்வளவு?
A] -10° செல்சியஸ் B] -6° செல்சியஸ் C] -2° செல்சியஸ் D] -12° செல்சியஸ்
விடை: D] -12° செல்சியஸ்
- தூந்திர பகுதியில் காணப்படும் தனித்துவமான காலநிலையானது சூரிய ஒளி கிடைக்காத காரணத்தினால் அங்கு வருடம் முழுவதும் மிகக் குறைந்த வெப்ப நிலை நிலவுகிறது. ஒரு வருடத்தில் 8 முதல் 9 மாதம் வரை தரைப்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும்.
113) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) தூந்திர சூழ்வாழிடத்தில் மண் உறைந்த நிலையில் காணப்படுவதால், அவை நிரந்தர பனிக்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.
2) அல்கே மற்றும் பூஞ்சைகள் பாறைகளிலும் சரளை படுகைகளிலும் மற்றும் ரொசெட் செடிகள் செங்குத்து பாறைகளிலும் வளர்கின்றன.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: A] 1 மட்டும்
- அல்கே மற்றும் பூஞ்சைகள் செங்குத்து பாறைகளிலும் மற்றும் ரொசெட் செடிகள் பாறைகளிலும் சரளை படுகைகளிலும் வளர்கின்றன. கடற்பஞ்சு போன்ற புல் தரை மற்றும் மர பாசிகள் வறண்ட தூந்திர உட்பகுதியில் வளர்கின்றன.
114) லேமிங்கு எலிகள் கீழ்க்கண்ட எந்த பகுதியில் வாழ்கின்றன?
A] போரியல் வனப்பகுதி B] சவானா உயிரின சூழ் வாழிடம்
C] சகாரா பாலைவன சோலை D] தூந்திர உயிரின சூழ் வாழிடம்
விடை: D] தூந்திர உயிரின சூழ் வாழிடம்
- மேலும் ஆர்டிக் தூந்திர பகுதிகளில் காணப்படும் பொதுவான விலங்குகள் துருவக்கரடி, ஆர்டிக் ஓநாய், ஆர்க்டிக் நரி, ஆர்டிக் முயல் மற்றும் ஆர்டிக் வீசால் ஆகும். மஸ்கு எருமைகள், காரிபோ மற்றும் கிளைமான் போன்ற தாவர உண்ணிகள் இங்கு காணப்படுகின்றன.
115) கீழ்கண்டவற்றுள் இடம்பெயரும் பறவை இனம் அல்லாதது எது?
A] நெருங்காற் பறவை B] தூந்திர அன்னம் C] ஹார்குலேகுயின் D] பாக்கெட் கோபர்ஸ்
விடை: D] பாக்கெட் கோபர்ஸ்
- தூந்திர பகுதிகளில் பெரும்பாலும் இடம்பெயரும் பறவை இனங்கள் வாழ்கின்றன. மேற்கண்டவை தவிர கூஸ்புறா, வாத்து மற்றும் கடற்பறவை ஆகியவை இடம்பெயரும் பறவை இனங்கள் ஆகும்.
116) உயிரின பன்மை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
A] ரேச்சல் கார்சன் B] ரேய்மண்ட் எப் டாஸ்மன் C] இ.ஓ.வில்சன் D] சார்லஸ் டார்வின்
விடை: B] ரேய்மண்ட் எப் டாஸ்மன்
- உயிரின பன்மை என்ற சொல் 1968 ஆம் ஆண்டில் வன உயிரின பாதுகாவலர் ரேய்மண்ட் எப் டாஸ்மன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1988 ல் இ.ஓ.வில்சன் உயிரின பன்மை என்னும் சொல்லை உபயோகப்படுத்தினார். அந்த சொல்லே நிலைத்து விட்டது.
117) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) உயிரினப் பன்மை என்பது உயிரினங்களுக்கு இடையில் அல்லது இருவேறு உயிரினங்களுக்கு இடையில் அல்லது உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு ஆகும்.
2) ஒரு இடத்திலுள்ள பலவகை உயிரினப் பன்மைகள் அல்லது அங்குள்ள பேரினங்களின் எண்ணிக்கை அவ்விடத்தை உயிரிகளின் வளமையம் ஆக்குகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- உயிரினப் பன்மை என்பது உயிரினங்களுக்கிடையே உள்ள வேறுபாடாகும். ஒரு இடத்தின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க அவ்விடத்தில் வாழும் உயிரினங்களின் வகைகளும் அதிகரிக்கும்.
118) ஒரு இடத்தின் உயிரினப்பன்மையை எத்தனை நிலைகளாக அடையாளம் காணலாம்?
A] 2 B] 3 C] 4 D] 5
விடை: B] 3
- பன்முக மரபணுக்கள், பன்முக சிற்றினங்கள், பன்முக சூழல் மண்டலங்கள் என மூன்று நிலைகளாக அடையாளம் காணலாம்.
119) பன்முக மரபணு வகை உயிரின பன்மைக்கு எடுத்துக்காட்டு எது?
A] மனிதன் B] சிங்கம் C] தாவரங்கள் D] பூனை
விடை: A] மனிதன்
- மரபணுக்களால் ஆக்கப்பட்ட சிற்றினங்களில் காணப்படும் மொத்த மரபணுக்களின் தொகுப்பே பல்வகை மரபணுக்கள் ஆகும். ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனிலிருந்து எல்லாவற்றிலும் வேறுபடுகிறான். இந்த பன்முக மரபணு அல்லது மரபணு வேறுபாடானது உயிரிகளின் பெருக்கம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் அல்லது வேறுபட்ட சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வாழ தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள உதவுகிறது.
120) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) ஒரு இடத்தில் வாழும் வேறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளை பன்முக சிற்றினங்கள் என அழைக்கிறோம்.
2) மனிதர்களால் இடையூறு ஏற்படாத இயற்கையான காடுகள் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகின்ற காடுகளை விட அதிக அளவில் சிற்றினத்தின் செழுமையான மையமாக திகழ்கிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- அதிக அளவிலான விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களை கொண்டு இருக்கும் இடங்கள் வளமிகு பன்முக மையங்களாக விளங்குகின்றன. சிற்றினங்கள் வட்டார சிற்றினம், அன்னிய இனங்கள் மற்றும் உலக பொது இனம் என மூன்று வகைப்படும்.
121) கீழ்கண்ட ஒரு ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் வாழும் தன்மையுடைய சிற்றின வகை எது?
A] வட்டார சிற்றினம் B] அன்னிய இனங்கள்
C] உலகப் பொது இனம் D] எதுவும் இல்லை
விடை: A] வட்டார சிற்றினம்
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காணப்படும். இவை வேறு இடத்தில் வாழ தங்களை மாற்றிக்கொள்ள இயலாத காரணத்தால் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன. இவைகள் தங்களது பிறப்பிடத்தில் மட்டும் காணக்கூடிய பூர்விக உயிரிகளில் இருந்து மாறுபட்டவை.
122) உயிரியல் பன்மை உலகெங்கும் இழந்து போவதற்கு காரணமாக சிற்றின வகை எது?
A] வட்டார சிற்றினம் B] அன்னிய இனங்கள்
C] உலகப் பொது இனம் D] எதுவும் இல்லை
விடை: B] அன்னிய இனங்கள்
- அன்னிய இனங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதன் இயற்கையான சுற்று சூழலை விட்டு வேறு ஒரு சுற்றுச்சூழலுக்கு கொண்டுவரப்பட்ட இனம் ஆகும்.
123) உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் சிற்றின வகை எது?
A] வட்டார சிற்றினம் B] அன்னிய இனங்கள்
C] உலகப் பொது இனம் D] எதுவும் இல்லை
விடை: C] உலகப் பொது இனம்
- எடுத்துக்காட்டாக நாய், பூனை மற்றும் மனிதன். உலகிலேயே கொல்லும் திமிங்கலம்தான் அதிக உலக பொது என தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
124) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) வட்டார சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்ததாக இருந்தாலும் பிற இடங்களிலும் பரவி காணப்படுகின்றன.
2) உலக பொது இன சிற்றின வகை தான் சுற்றுச் சூழலில் காணப்படும் பலவித மாற்றங்கள் ஏற்படுவதற்கும் மற்றும் சுற்றுச்சூழலின் அரிய தன்மை அழிந்து போவதற்கும் காரணமாகின்றன.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: A] 1 மட்டும்
- அன்னிய இடங்கள் தான் சுற்றுச் சூழலில் காணப்படும் பலவித மாற்றங்கள் ஏற்படுவதற்கும் மற்றும் சுற்றுச்சூழலின் அரிய தன்மை அழிந்து போவதற்கும் காரணமாகின்றன.
125) ஒரு குறிப்பிட்ட சுற்றுச் சூழலில் காணப்படும் உயிரின பன்மைத்தன்மையை குறிப்பது எது?
A] பன்முக மரபணுக்கள் B] பன்முக சிற்றினங்கள்
C] பன்முக சூழல் மண்டலங்கள் D] எதுவும் இல்லை
விடை: C] பன்முக சூழல் மண்டலங்கள்
- சூழ்நிலை மண்டலம் நிலம் சார்ந்ததாகவும், நீர் சார்ந்ததாகவும் இருக்கும். காடுகள், புல்வெளிகள், பாலைவனம் முதலியன தனித்தன்மையுள்ள நிலம் சார்ந்த சூழ்நிலை மண்டலங்கள் ஆகும். ஆறு, ஏரி, குளம் ஆகியவை நீர் சார்ந்த சூழ்நிலை மண்டலங்கள் ஆகும்.
126) சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி எவ்வளவு உயிரினங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது?
A] 15.2 மில்லியன் B] 18.7 மில்லியன் C] 21.9 மில்லியன் D] 23.5 மில்லியன்
விடை: B] 18.7 மில்லியன்
- இவற்றில் நுண்ணுயிரிகளிலிருந்து மிகப்பெரிய பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வரையிலான 2 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே நாம் அறிந்த ஒன்றாக உள்ளன. பல உயிரிகள் அழிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் பல புதிய உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமே உள்ளன.
127) கீழ்க்கண்டவற்றுள் செழுமையான வள மையம் கொண்டுள்ள பகுதி எது?
A] மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் B] தூந்திர வனக்காடுகள்
C] வெப்ப மண்டல மழை காடுகள் D] போரியல் வனப்பகுதி
விடை: C] வெப்ப மண்டல மழை காடுகள்
- வெப்பமண்டல காடுகள் உலக நிலப்பரப்பில் 7% மட்டுமே உள்ளடக்கியது. ஆனால் 50% பல்வகை உயிரினங்களை தன்னகத்தே கொண்டது. இந்தியா அபரிதமான பல் வகை உயிரினங்களைக் கொண்ட 17 நாடுகளில் ஒன்றாகும்.
128) உயிரின பன்மை வள மையங்கள் என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
A] ரேச்சல் கார்சன் B] ரேய்மண்ட் எப் டாஸ்மன்
C] இ.ஓ.வில்சன் D] நார்மன் மைர்ஸ்
விடை: D] நார்மன் மைர்ஸ்
- 1988 ஆம் ஆண்டு இந்த வார்த்தையை உருவாக்கினார். இவரின் கூற்றுப்படி உயிர்கோள வள மையம் என்பது தனிச்சிறப்பு கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் வாழிட இழப்பு இரண்டையும் தன்னகத்தே கொண்ட உயிர் புவிப்பரப்பில் ஆகும்.
129) சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் ஒரு மண்டலம் வளமையாக கருதப்படுவதற்கு குறிப்பிட்ட விதிகளுள் சரியானது எது?
1) குறைந்தது 1500 தனிச்சிறப்பு கொண்ட சிற்றினம் தாவரங்களை கொண்டிருக்க வேண்டும்.
2) அவ்விடத்திற்கே உரிய வாழிட இழப்பு 30% கொண்டதாக இருக்க வேண்டும்.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: A] 1 மட்டும்
- நார்மன் மைர்ஸ் ஆய்வின்படி ஒரு மண்டலம் வளமையாக கருதப்படுவதற்கு அவ்விடத்திற்கே உரிய வாழிட இழப்பு 70% கொண்டதாக இருக்க வேண்டும்.
130) தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ள உயிரின பன்மை வள மையங்கள் எத்தனை?
A] 23 B] 28 C] 34 D] 38
விடை: C] 34
- 1999 களில் இந்த மையம் சர்வதேச உயிர் பாதுகாப்பு மையத்தின் புத்தகம் “வளமையம் உலகிலேயே அதிக வளம் கொண்ட உயிரியல் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள சுற்றுச்சூழல் நிலப்பரப்பு” 34 உயிர்கோள மையங்களை அடையாளம் காண்பித்துள்ளது.
131) நார்மன் மைர்ஸ் எந்த நாட்டு உயிரியலாளர்?
A] பிரெஞ்சு உயிரியலாளர் B] ஆங்கிலேய உயிரியலாளர்
C] இலத்தீன் உயிரியலாளர் D] ரஷ்ய உயிரியலாளர்
விடை: B] ஆங்கிலேய உயிரியலாளர்
- இவர் உயிரின பன்மை வளமையங்களை ஆராய்வதில் வல்லுனர். பேராசிரியர் நார்மன் மைர்ஸ் தான் உலக அளவில் வெப்பமண்டல காடுகளின் அழிப்பு, உயிரிகளின் மொத்தக் அழிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை கொண்டு வந்தவர்.
132) ஆசிய சிங்கம் கீழ்க்கண்ட எந்த இடத்தில் மட்டும் வாழக்கூடியது?
A] கிர்காடு B] களக்காடு C] முண்டந்துறை D] ஆனைமலை
விடை: A] கிர்காடு
- மேலும் ஹங்குல் என்றழைக்கப்படும் காஷ்மீர் கலைமான் இவைகள் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள நதிக்காடுகள் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சம்பா பள்ளத்தாக்குகளில் மட்டுமே காணப்படும்.
133) கீழ்க்கண்டவற்றுள் விரைவில் அழியக்கூடிய அதிகப்படியான அச்சுறுத்தலில் உள்ள விலங்கு எது?
A] காண்டாமிருகம் B] கங்காரு C] சிங்கவால் குரங்குகள் D] காட்டு எருமைகள்
விடை: C] சிங்கவால் குரங்குகள்
- இது தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும்.
134) புவியின் நிலப்பரப்பில் உயிரின பன்மை வள மையங்கள் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
A] 1.8% B] 2.3% C] 2.7% D] 3.4%
விடை: B] 2.3%
- இவைகளில் 50% உலகிலுள்ள வட்டார இனங்கள் மற்றும் 42% முதுகெலும்பிகள் காணப்படுகின்றன.
135) இந்தியாவில் உள்ள வள மையங்களின் எண்ணிக்கை யாது?
A] 1 B] 2 C] 3 D] 4
விடை: D] 4
- மேற்கு தொடர்ச்சி மலை, இமாச்சலப் பிரதேசம், இந்தோ – பர்மா பிரதேசம் மற்றும் சுந்தர் லேண்ட்
( நிக்கோபார் தீவு கூட்டமும் சேர்ந்தது ).
136) கீழ்க்கண்டவற்றுள் சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1) இது ஒரு நிதி சாரா அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகும்.
2) இதனுடைய நோக்கம் நமக்கு உணவு, தூய நீர், வாழ்வாதாரம் தரும் இயற்கையையும் மற்றும் ஒரு நிலையான காலநிலையையும் பாதுகாப்பதாகும்.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் 1987 ஆம் ஆண்டு வெர்ஜினாவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு 77 நாடுகளில் உள்ள 1200 இடங்களைப் பாதுகாக்க உதவி செய்கிறது. இதன் மூலம் 601 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான கடல் சார்ந்த மற்றும் கடலோர இடங்கள் பாதுகாக்கப்படுகிறது.
137) கீழ்க்கண்டவற்றுள் அழிந்து வரும் உயிரினங்களின் தன்மைக்கேற்ப அவற்றை வகைப்படுத்தும் அமைப்பு எது?
A] IUCN B] IMF C] IUBS D] IOBC
விடை: A] IUCN
- அழிந்து வரும் உயிரினங்களின் தன்மைக்கேற்ப அவைகளை இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச சங்கம் ( IUCN ) அடையாளம் கண்டு அவற்றை வகைப்படுத்தி உள்ளது. அடுத்து அடுத்து 64ஆம் ஆண்டு முதல் அழியும் அபாய நிலையில் உள்ள அடையாளம் காணப்பட்ட இடங்களின் பட்டியல் இச்சங்கத்திடம உள்ளது.
138) இயற்கை பாதுகாப்பு சர்வதேச சங்கம் கொடுத்துள்ள சிவப்பு பட்டியலின்படி உயிரினங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
A] 3 B] 9 C] 12 D] 15
விடை: B] 9
- உயிரினங்களின் எண்ணிக்கை குறையும் வீதம் உயிரிகளின் எண்ணிக்கை, புவிப் பரப்பில் காணப்படும் உயிரிகளின் எண்ணிக்கை மற்றும் இனப் பரவலின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
139) கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
1) முற்றிலும் புவியை விட்டு மறைந்து போன, அதில் ஒரு உயிரி கூட தற்போது இல்லாதது அழிவுற்ற இனமாக இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச சங்கம் வகைப்படுத்தியுள்ளது.
2) தங்கள் பிறப்பிடமாகிய காடுகள் அல்லது வனங்களில் இல்லாது அடைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காணக் கூடும் இனங்களை வனத்தில் அழிவுற்ற இனம் என IUCN வரையறுத்துள்ளது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: D] எதுவும் இல்லை
- விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரிகளின் பட்டியலில் இடம் பெறும் நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நிலை என IUCN வரையறுத்துள்ளது.
140) விரைவில் முற்றிலும் இப்புவியில் இருந்து மறையும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] அபாயகரமான அழியும் நிலை B] அச்சுறுத்தல் நிலை
C] அழியும் நிலை D] அதிக கவலை தேவையற்ற நிலை
விடை: C] அழியும் நிலை
- அபாயகரமான நிலையில் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருபவை அல்லது வெகு விரைவில் இப்புவியில் காணாமல் போகும் நிலையில் உள்ளவை அபாயகரமான அழியும் நிலை என IUCN வரையறுத்துள்ளது.
141) வருங்காலங்களில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியல் இடம்பெறும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] பாதுகாப்பை நம்பியுள்ள நிலை B] அச்சுறுத்தல் நிலை
C] அதிக கவனம் தேவையற்ற நிலை D] சரியான விவரம் இல்லாத நிலை
விடை: B] அச்சுறுத்தல் நிலை
- மேலும் அழியும் நிலையில் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் அதிக பரப்பளவில் காணப்படும் இனங்கள் அதிக கவலை தேவையற்ற நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது.
142) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) பாதுகாப்பை நம்பியுள்ள நிலை தற்போது அச்சுறுத்தும் நிலையோடு சேர்க்கப்பட்டு விட்டது.
2) இனங்களின் அழிவு நிலையை தெரிந்து கொள்ள சரியான விவரம் இல்லாத நிலை சரியான விவரம் இல்லாத நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- மேலும் விதிகளின் அடிப்படையில் இன்னும் மதிப்பிட்டு தரம் பிரிக்கப் படாத நிலை இன்னும் மதிப்பிடப்படவில்லை என வரையறுக்கப்பட்டுள்ளது.
143) சிவப்பு புள்ளி விவரப்பட்டியல் எத்தனை நிலைகளை உள்ளடக்கியது?
A] 2 B] 3 C] 4 D] 5
விடை: B] 3
- அச்சுறுத்தல் அபாயகரமான அழியும் நிலை, அழியும் நிலை மற்றும் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நிலை என மூன்று நிலைகளை உள்ளடக்கியது சிவப்பு புள்ளி விவரப்பட்டியல் ஆகும்.
144) எந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிவப்பு பட்டியல் படி 19,817 இனங்கள் அழியும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது?
A] 1992 B] 1996 C] 2008 D] 2012
விடை: D] 2012
- ஜீன் 20 – 22, 2012 ஆம் ஆண்டில் ரியோ + 20 புவி உச்சி மாநாட்டில் மேற்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
145) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச சங்கம் மட்டுமே உலகின் புவியின் இனங்களை பாதுகாப்பதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
2) ஒரு குறிப்பிட்ட அரசியலமைப்பிலுள்ள அழிந்து போன இனங்களை குறித்த சிவப்பு விவரப் பட்டியலை அந்தந்த நாடுகள் மற்றும் அவற்றில் உள்ள அமைப்புகள் வெளியிடும்.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- 1964 இல் தோற்றுவிக்கப்பட்ட ICUN ன் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சிவப்புப் பட்டியல் தான் உலகளாவிய நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய இனங்களின் உலகின் அதிக விரிவான விவரப்பட்டியல் ஆகும்.
146) கம்பு முட்டைக்கோஸ் என்னும் தாவர இனம் எங்கு காணப்படுகிறது?
A] ஹவாய் தீவு B] அந்தமான் தீவு C] மாலத்தீவுகள் D] அலெக்சாண்டர் தீவு
விடை: A] ஹவாய் தீவு
- கம்பு முட்டைக்கோஸ் அலுலா என்று அத்தீவு மக்களால் அழைக்கப்படுகிறது. இது அபாயகரமான அழியும் நிலையில் இருந்து வனத்தில் அழிவு நிலைக்கு சென்றது.
147) சிவப்புப் பட்டியலில் அழியும் நிலையில் உள்ள இனங்களின் எண்ணிக்கை யாது?
A] 25 B] 29 C] 33 D] 38
விடை: D] 38
- அலுலா சிவப்புப் பட்டியலில் உள்ள 38 அழியும் நிலையில் உள்ள இனங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது ஹவாயில் அலுலா தாவரங்கள் அழியும் நிலையில் இருந்து அறிந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இவை ஹவாயின் காற்றில் உள்ள மலை முகப்பு பகுதிகளில் மட்டும் காணப்பட்டன.
148) ஐவா சூறைக்காற்று ஏற்பட்ட ஆண்டு எது?
A] 1975 B] 1979 C] 1982 D] 1986
விடை: C] 1982
- அலுலா முறையே 1982 மற்றும் 1992 களில் ஏற்பட்ட ஐவா இன்கி சூறைக்காற்றுகளால் அளிக்கப்பட்டு 10 தாவரங்கள் மட்டுமே உயிரோடு காணப்பட்டன.
149) கிழக்கு கொரில்லாக்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் மட்டும் வாழக்கூடியது?
1) காங்கோ கிழக்கு ஜனநாயக குடியரசு 2) தென்மேற்கு உகாண்டா 3) ருவாண்டா 4) அங்கோலா
A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 1, 4 & 3 D] 1, 2, 3 & 4
விடை: A] 1, 2 & 3
- இது ஒரு உயர் விலங்கினமாகும். மேற்கண்ட இடங்களில் மட்டுமே வாழக்கூடிய ஒரு வட்டார இனமாகும். இவைகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக 2016 ல் அழியும் நிலையிலிருந்து அபாயகரமான அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலை நீடித்தால் 2054 ல் 93% கொரில்லாக்கள் புவியை விட்டு மறைந்து விடும்.
150) குள்ள காட்டுப்பன்றி தற்போது இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது?
A] அருணாச்சலப் பிரதேசம் B] அஸ்ஸாம் C] நாகாலாந்து D] மணிப்பூர்
விடை: A] அஸ்ஸாம்
- குள்ள காட்டுப் பன்றி ஒரு சிறிய, மிக அரிய வகை பன்றி ஆகும். இது அபாயகரமான அழியும் நிலையில் உள்ளது. இது ஒரு காலத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் காணப்பட்டது.
151) குள்ள பன்றிகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A] சூரிய நாராயணன் B] கௌதமன் C] கௌதம் நாராயணன் D] வில்லியம்சன்
விடை: C] கெளதம் நாராயணன்
- 1995ஆம் ஆண்டில் இந்த வகை பன்றிகளை காப்பதற்காகக் உள்ள பன்றி பாதுகாப்பு அமைப்பு ஒன்றை இந்திய சூழ்நிலை மண்டல அமைப்பை சார்ந்த கெளதம் நாராயணன் என்பவர் அசாம் அரசின் உதவியோடு தோற்றுவித்தார். தற்போது இந்த பன்றிகளின் எண்ணிக்கை 150 ஆகும்.
152) கீழ்கண்டவற்றுள் 2016 ம் ஆண்டு படி இந்தியாவில் அபாயகரமாக அழியும் நிலையில் இல்லாத பறவை எது?
A] ரோசா வண்ண தலை வாத்து B] கானமயில்
C] கரண்டி வாய் மணற் பறவை D] மரங்கொத்தி பறவை
விடை: D] மரங்கொத்தி பறவை
- மேலும் காட்டு ஆந்தை, சைபீரிய நாரை, இந்திய கழுகு மற்றும் இமாலய காடை ஆகிய பறவை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. ராமேஸ்வரம் பாராசூட் சிலந்தி மற்றும் மயில் பெரும் சிலந்தி ஆகிய கணுக்காலி இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
153) கீழ்கண்டவற்றுள் 2016 ம் ஆண்டு படி இந்தியாவில் அபாயகரமாக அழியும் நிலையில் இல்லாத மீன் வகை எது?
A] விலாங்கு மீன் B] வாளமீன் C] கங்கை சுறா D] பாண்டிச்சேரி சுறா
விடை: A] விலாங்கு மீன்
- மேலும் வயநாடு பொன் மீன் அல்லது பெளி மீன் மற்றும் பூக்கோடே ஏரி சிலாம்பு ஆகிய மீன்களும் மற்றும் குள்ள காட்டுப்பன்றியில் உள்ள பேன் ஆகியவை அழியும் நிலையில் உள்ளன.
154) அலியம்யாட்ரோயினம் என்ற தாவர இனம் சிவப்பு பட்டியலில் அதிகப்படியான அழியும் நிலையிலுள்ள இனங்களோடு சேர்க்கப்பட்ட ஆண்டு எது?
A] 2012 B] 2015 C] 2016 D] 2017
விடை: D] 2017
- அலியம்யாட்ரோயினம் மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் உள்ள வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் ஆகும். தற்போது இவ்வகைத் தாவரம் கிரேக்க நாட்டில் உள்ள எவ்வியா தீவின் தெற்கு பகுதியிலுள்ள ஒச்சி மலையில் மட்டுமே காணப்படுவதாக அறியப்படுகிறது. இந்த இனம் அழிவுக்கு அங்கு நிறுவப்பட்ட காற்றாலைகள் மற்றும் காற்று விசையாழிகள் தான் காரணமாகும்.
155) பிட்டோஸ்போரம் பிரைஸ்பினியம் எந்த இடத்தை சேர்ந்த வட்டார இன தாவரமாகும்?
A] கலிபோர்னியா B] நியூ கலிடோனியா C] கனடா D] தென் ஆப்பிரிக்கா
விடை: B] நியூ கலிடோனியா
- இது தாழ் நிலங்களில் வளரக்கூடிய ஒரு வட்டார இன தாவரமாகும். இவ்வனத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து 2017 ல் அழியும் நிலையிலிருந்து அபாயகரமான அழிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வறண்ட காடுகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதாலும் மற்றும் ரூசா மான்களால் காடுகளுக்கு ஏற்படும் சீரழிவாலும் இவ்வினங்களின் எண்ணிக்கை குறைகிறது.
156) சிவப்பு நிற கால்களுடைய தீ போன்ற மரவட்டை கீழ்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?
A] அந்தமான் தீவு B] ஹவாய் தீவு C] மடகாஸ்கர் தீவு D] மாலத்தீவு
விடை: C] மடகாஸ்கர் தீவு
- இந்த இனம் 2017 ஆம் ஆண்டின் சிவப்பு பட்டியலில் அபாயகரமான அழியும் நிலையில் உள்ள இனமாக சேர்க்கப்பட்டது. விவசாயத்திற்காக நிலத்தை சுத்தப்படுத்தி எரித்தல் காரணமாகவும் மற்றும் வீட்டில் அடுப்பு எரிக்க காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டதே இந்த இனம் அழிவதற்கு காரணமாகும்.
157) கூண்டில் பாதுகாக்கப்பட்ட ஒரே ஒரு கிறிஸ்துமஸ் தீவு சவுக்கை வால் அரைஞான் இறந்த ஆண்டு எது?
A] 2012 B] 2014 C] 2016 D] 2018
விடை: B] 2014
- 2017 ஆம் ஆண்டில், IUCN சிவப்புப் பட்டியலில் கிறிஸ்துமஸ் தீவுகளில் மட்டுமே வட்டார விதமான கிறிஸ்துமஸ் தீவு சவுக்கை வால் அரைஞான்கள் அழிந்து விட்டதாக அறியப் பட்டது. இந்த அழிவுக்கு காரணம் இத்தீவில் அந்நிய இனங்களான மஞ்சள் கிரேசி எறும்பு, இந்திய ஓநாய் பாம்பு மற்றும் பல புதிய இனங்களை அறிமுகப்படுத்தியதோடு மற்றும் சுரங்க தொழிலுக்காக காடுகளை அழித்ததுமே ஆகும்.
158) ரோட்ரிகஸ் பறக்கும் நரி என்ற வவ்வால் இனம் 2017ஆம் ஆண்டில் எந்த நிலையில் இருந்து எந்த நிலைக்கு மாற்றப்பட்டது?
A] அபாயகரமான அழியும் நிலையில் இருந்து அழிந்து கொண்டிருக்கும் இனம்
B] அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இருந்து அபாயகரமான அழியும் நிலை
C] அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து அச்சுறுத்தல் நிலை
D] அச்சுறுத்தப்பட்ட நிலையிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்ட நிலை
விடை: A] அபாயகரமான அழியும் நிலையில் இருந்து அழிந்து கொண்டிருக்கும் இனம்
- இதற்கு காரணம் பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கைகள் எடுத்த முயற்சியே ஆகும். அவை கூண்டில் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தை உலக அளவில் 46 உயிரியல் பூங்காக்களில் வைத்து பாதுகாக்கப்பட்டதால் இனப்பெருக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
159) 2003 ஆம் ஆண்டில் ரோட்ரிகள் பறக்கும் வௌவாலின் எண்ணிக்கை எத்தனையாக இருந்தது?
A] 2500 B] 3000 C] 3500 D] 4000
விடை: D] 4000
- ஓடை வடிகால் பராமரிப்பு மற்றும் மக்களிடத்தில் மேற்கொண்ட பராமரிப்பு விழிப்புணர்வு காரணத்தினால் ரோட்ரிகள் பறக்கும் வௌவாலின் எண்ணிக்கை 2016 ல் 20,000 ஆக பெருகியுள்ளது. தொடர்ந்து செய்யக்கூடிய பாதுகாப்பு முயற்சியினால் எதிர்காலத்தில் இவ்வினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
160) கீழ்கண்டவற்றுள் இனங்கள் அழிவதற்கு காரணமாக அமைபவை எவை?
1) திடீரென ஏற்படும் அதிவேக சுற்றுச் சூழல் மாற்றங்கள்
2) வியாதிகள் மற்றும் பூச்சிகளால் வரும் தொற்று நோய்களின் திடீர் பெருக்கம்
3) எரிமலை மற்றும் காட்டுத்தீ போன்ற எதிர்பாராத இயற்கை பேரழிவுகள்
4) வேட்டையாடப்படுதல் மற்றும் துன்புறுத்தப்படுதல் போன்ற காரணங்களால் சில குறிப்பிட்ட இனங்கள் அதிகமாக அழிதல்
A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 1, 3 & 4 D] 1, 2, 3 & 4
விடை: D] 1, 2, 3 & 4
- மேலும் ஒரே வகையான உணவை உண்ணும் விலங்குகளின் வலிமையான விலங்குகள் பலவீனமான விலங்குகளோடு போட்டி போட்டு சுற்றுச்சூழல் சமமற்ற நிலையை உருவாக்குவதும் இனங்கள் அழிய காரணமாகும்.
161) கீழ்கண்டவற்றுள் இனங்கள் அழிய காரணமானவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) காலநிலை மாற்றங்கள் பெரும் பாலூட்டிகளுக்கு இடையே உணவிற்காகவும் இருப்பிடத்திற்கும் போட்டியை தீவிரப்படுத்துவது.
2) இந்த போட்டி நடைபெறும் போது பலவீனமான இனங்கள் வலிமையான இனங்களால் அழிக்கப்பட்டு ஒரு இனமே அழியும் நிலை உருவாக்கப்படுகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- மேலும் மனிதனால் தூண்டப்பட்ட, உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாற்றமும் இனங்கள் அழிய ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. 1600 க்கும் 1900 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நான்கு வருடங்களிலும் ஒரு சிற்றினம் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
162) விலங்கின இன மறைவுக்கான காரணங்களில் வேட்டையாடுதல் எத்தனை சதவீத காரணமாக உள்ளது?
A] 15% B] 23% C] 28% D] 33%
விடை: B] 23%
- விலங்கின இன மறைவுக்கான காரணங்களில் வேட்டையாடுதல் 23%, இன அறிமுகங்கள் 39%, வாழிட அழிவு 36% மற்றும் மற்ற காரணங்கள் 2% ஆகும்.
163) பின்வருவனவற்றுள் உயிரின பன்மைக்கு ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தல்களில் தவறானது எது?
1) அன்னிய இனங்களின் ஆக்கிரமிப்பால் அவ்விடத்தை பிறப்பிடமாகக் கொண்ட சில இனங்கள் அழிவதற்கு எடுத்துக்காட்டு உண்ணிச் செடி.
2) காலநிலை மாற்றம் எடுத்துக்காட்டாக, புவி வெப்பமாதல் காரணமாக பவளத் திட்டுகள் தங்கள் வண்ணமிழந்து அழிவது
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: D] எதுவும் இல்லை
- மேலும் இனங்களின் வாழிடம் சீர்கெடுவது மற்றும் அழிக்கப்படுவதும் நீர், காற்று மற்றும் நில மாசுபாடு உயிரினங்களின் வளர்ச்சியை அதிக அளவில் தடை செய்வதும் மற்றும் அதிக அளவில் ஒரு வளங்களை சுரண்டி பயன்படுத்துதல் ஆகியன விலங்கின இன அழிவுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.
164) 1960 லிருந்து இதுவரை எத்தனை உயிரின பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன?
A] 75,000 B] 85,000 C] 92,000 D] 1,00,000
விடை: D] 1,00,000
- இந்த பாதுகாப்பு மையங்கள் 11,265,408 சதுரமைல் நிலம் மற்றும் 16,09,344 சதுரமைல் நீர்ப்பரப்பை கொண்டுள்ளன. ஆனால் இதே காலகட்டத்தில் தான் நிலம் மற்றும் நீர் சார் உயிரிகளின் அழிவும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. பொதுவாக நீர், நில உயிரிகளை பாதுகாக்கும் திட்ட முறை போதுமானதாக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
165) கீழ்கண்டவற்றுள் உயிரின பன்மை பாதுகாப்பின் நோக்கங்கள் யாவை?
1) சூழியல் பாதுகாக்கும் செயல்பாடுகள் மற்றும் உயிரிகளை ஆதரிக்கும் நடைமுறைகளை நல்ல முறையில் பராமரிப்பது
2) பல்வகை உயிரிகளை பாதுகாப்பது
3) உயிர்களையும் சுற்றுச்சூழலையும் தொடர்ந்து உபயோகிக்கும் வகையில் அவற்றை பராமரிப்பது
A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3
விடை: D] 1, 2 & 3
- இந்த பாதுகாப்பு முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உயிரிகளின் இயல்பு சூழலில் அவற்றை பாதுகாப்பது. மற்றொன்று இயல்பு வாழ்விற்கு வெளியில் அவற்றை பாதுகாப்பதாகும்.
166) கீழ்க்கண்டவற்றுள் உள் வாழிட பாதுகாப்பு பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1) உள் வாழிட பாதுகாப்பு முறை இயல்பான வாழ்க்கைச் சூழலில் பாதுகாக்கப்படுகிறது
2) இவ்வகையில் உயிரிகள் மனிதனின் இடையூறின்றி அவைகளின் இயல்பு சூழலில் பாதுகாக்கப்படும்.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- இந்த முறையில் அழியும் இனங்களை அடையாளம் கண்டு அவை வாழும் இடத்தை தேசிய பூங்கா / வனவிலங்கு சரணாலயங்கள் / உயிர்கோள வளங்காப்பு மையங்களாக மாற்றி அவற்றை பாதுகாப்பதாகும்.
167) வெளி வாழிட பாதுகாப்பு முறைகளின் எடுத்துக்காட்டுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A] தேசிய பூங்கா B] மிருகக்காட்சி சாலை C] உயிரியல் பூங்கா D] உயிரிகள் வளர்ப்பிடம்
விடை: A] தேசிய பூங்கா
- வெளிப் வாழிட பாதுகாப்பு முறை அல்லது இயல்பு வாழ்விற்கு வெளியில் பராமரிப்பது என்பது முழுவதும் அல்லது பகுதி கட்டுப்பாடான சூழலுக்கு கொண்டு சென்று உயிரிகளை குறிப்பிட்ட இடத்தில் வைத்து பாதுகாப்பதாகும். மேலும் விதை மரபணு பண்ணை அல்லது வங்கி, நில மரபணு வங்கி மற்றும் உயிரியல் தோட்டங்கள் ஆகியவையும் வெளி வாழிட பாதுகாப்பு முறைக்கு எடுத்துக்காட்டாகும்.
168) உலகில் சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் எத்தனை அமைந்துள்ளது?
A] 12 B] 17 C] 23 D] 25
விடை: B] 17
- உலகின் மிகப்பெரிய உயிரினப் பன்மை மையங்கள் உள்ள 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச உயிர் பாதுகாப்பு மையத்தின் கருத்தானது இந்தியா உலக நிலப்பரப்பில் 2.4% உலக மக்கள் தொகையில் 16.7% உலக அளவில் 18% கால்நடையை கொண்டிருந்தாலும் உலக அளவில் உயிர் பன்மையின் பங்களிப்பு 8% மட்டுமே.
169) கீழ்க்கண்டவற்றுள் அழிந்து கொண்டிருக்கும் இனங்களில் இந்தியாவில் காணப்படாதது எது?
A] கானமயில் B] கடல் ஆமை C] கடல் பசு D] காஷ்மீர் கலைமான்
விடை: B] கடல் ஆமை
- உலக அளவில் முக்கியமான அதேவேளையில் அழிந்துகொண்டிருக்கும் இனங்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றன. இவை ஆசிய சிங்கம், ஆசிய யானை, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், கங்கை நதி டால்பின், பனி சிறுத்தைப்புலி, கங்கை நீர் முதலை மற்றும் சோலைமந்தி ( சிங்கவால் குரங்கு ) முதலியன ஆகும்.
170) வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
A] 1972 B] 1975 C] 1976 D] 1978
விடை: A] 1972
- இந்திய அரசால் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட சட்டம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ஆகும். சட்டத்திற்கு விரோதமாக வேட்டையாடுதல், கடத்தல், சட்டத்திற்குப் புறம்பாக வனம் சார்ந்த பொருட்களின் வியாபாரங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை இச்சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமாகும்.
171) தேசிய வனவிலங்கு செயல் திட்டம் எந்த ஆண்டு முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது?
A] 1998 B] 2000 C] 2002 D] 2004
விடை: C] 2002
- இது வன விலங்கை பாதுகாக்க மக்களின் பங்கு மற்றும் அவர்களின் ஆதரவை வலியுறுத்துகிறது.
172) காடுகள் மற்றும் வன விலங்குகளை குறித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது?
A] மாநிலப் பட்டியல் B] மத்தியப் பட்டியல் C] பொதுப் பட்டியல் D] எதுவும் இல்லை
விடை: C] பொதுப் பட்டியல்
- இதன் மூலம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உயிரினங்களை பாதுகாக்கும் பொறுப்பு உண்டு என்பதை அரசியலமைப்பு சட்டம் தெரியப்படுத்துகிறது.
173) தேசிய வனவிலங்கு வாரியத்தின் தலைவர் யார்?
A] குடியரசுத் தலைவர் B] முதலமைச்சர்களின் குழு C] ஆளுநர்கள் குழு D] பிரதமர்
விடை: D] பிரதமர்
- இது வனவிலங்குகளை பாதுகாக்கும் கொள்கைகள் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. சிறப்புத் திட்டங்கள் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாக்க சர்வதேச உதவியுடன் மற்றும் தனியாகவும் சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
174) உயிரின பாதுகாப்பு திட்டமான புலி காப்பகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
A] 1972 B] 1973 C] 1974 D] 1975
விடை: B] 1973
- மேலும் யானை பாதுகாப்புத் திட்டம் 1988 ஆம் ஆண்டும் கடலாமைகள் பாதுகாப்பு திட்டம் 1999 ஆம் ஆண்டும் ஏற்படுத்தப்பட்டது.
175) உயிரின பாதுகாப்பு திட்டமான காண்டாமிருக பாதுகாப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
A] 1987 B] 1983 C] 1981 D] 1979
விடை: A] 1987
- மேலும் முதலைகள் வளர்ப்பு இயக்கம் 1975 ஆம் ஆண்டிலும், யானைகள் பாதுகாப்பு திட்டம் 1988 ஆம் ஆண்டிலும் இயற்றப்பட்டது. மேலும் பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டமும் ஏற்படுத்தப்பட்டது.
176) கீழ்க்கண்டவற்றுள் முழு அல்லது பகுதி சட்டப்பாதுகாப்பு கொடுக்கப்படாத உயிரினம் எது?
A] பனி சிறுத்தை புலிகள் B] கானமயில்
C] சிங்கார மான் D] ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
விடை: D] ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
- முழு அல்லது பகுதி சட்ட பாதுகாப்பின் படி மேற்கண்ட உயிரினங்களை வேட்டையாடி வியாபாரம் செய்வது நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
177) இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எத்தனை பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
A] 3 B] 4 C] 5 D] 6
விடை: B] 4
- பாதுகாக்கப்பட்ட பகுதி என்பது மனித நடமாட்டம் மிகவும் குறைந்ததாகவும் வன வளங்களை சுரண்டுவது கட்டுப்படுத்த பட்டதாகவும் உள்ள ஒரு பகுதியாகும். இது தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சமுதாய காடுகள் என நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
178) இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை யாது?
A] 96 B] 101 C] 103 D] 108
விடை: C] 103
- இவை 40,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவி காணப்படுகின்றன. மேலும் நாட்டின் நிலப்பரப்பில் 1.2% அளவு காணப்படுகிறது.
179) கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையை கொண்டது எது?
A] தேசிய பூங்காக்கள் B] பாதுகாக்கப்பட்ட காடுகள்
C] சமுதாய காடுகள் D] வனவிலங்கு சரணாலயங்கள்
விடை: D] வனவிலங்கு சரணாலயங்கள்
- இந்தியாவில் 537 வனவிலங்கு சரணாலயங்கள் காணப்படுகின்றன. அவை 1,18,005 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவி காணப்படுகின்றது. மேலும் நாட்டின் நிலப்பரப்பில் 3.6% அளவு காணப்படுகிறது.
180) நாட்டின் நிலப்பரப்பில் சமுதாய காடுகளில் விகிதம் எவ்வளவு?
A] 0.1% B] 0.01% C] 0.5% D] 0.05%
விடை: B] 0.01%
- இந்தியாவில் 67 பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளன. இவை 47 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவிக் காணப்படுகின்றன.
181) இந்தியாவில் காணப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை யாது?
A] 67 B] 69 C] 73 D] 75
விடை: A] 67
- இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட காடுகள் 2350 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவி காணப்படுகின்றன. மேலும் நாட்டின் நிலப்பரப்பில் 0.1% விகிதமும் காணப்படுகிறது.
182) இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A] 1922 B] 1929 C] 1932 D] 1936
விடை: D] 1936
- இது ஹேய்லி தேசியப் பூங்கா என்ற பெயருடன் நிறுவப்பட்டது. தற்போது அதன் பெயர் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா என்று மாற்றப்பட்டுள்ளது. இது உத்தரகாண்டில் உள்ளது.
183) கீழ்க்கண்டவற்றுள் மனித நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி எது?
A] தேசிய பூங்காக்கள் B] பாதுகாக்கப்பட்ட காடுகள்
C] சமுதாய காடுகள் D] வனவிலங்கு சரணாலயங்கள்
விடை: A] தேசிய பூங்காக்கள்
- இங்கு மேய்ச்சல், வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் மேலும் விவசாயம் செய்தல் ஆகியவை கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
184) கீழ்க்கண்டவற்றுள் அதிக எண்ணிக்கையில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் தன்னகத்தே கொண்டுள்ள உயிரின வளப் பகுதி எது?
A] வனவிலங்கு சரணாலயம் B] சமுதாய காடுகள்
C] தேசிய பூங்காக்கள் D] பாதுகாக்கப்பட்ட காடுகள்
விடை: C] தேசிய பூங்காக்கள்
- இந்தியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள் இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச சங்கத்தின் II வது தர பாதுகாப்பு பகுதியில் உள்ளது. இது வன உயிர்களை பாதுகாத்து, அவற்றை மேம்படுத்தி அவற்றின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.
185) கீழ்க்கண்டவற்றுள் வன உயிரிகள் சரணாலயம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
1) சரணாலயங்களில் மனிதர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
2) சரணாலயத்திற்கும் தேசிய பூங்காவிற்கு உள்ள வித்தியாசம் மக்களுக்கு உள்ளே வாழ்வதற்கு கொடுக்கப்படும் உரிமையில் தான் உள்ளது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: B] 2 மட்டும்
- சரணாலயங்களில் குறிப்பிட்ட உரிமைகள் கொடுக்கப்படும். சரணாலயங்களில் உள்ள தலைமை வன விலங்கு சரணாலய காவலர் அந்த சரணாலயத்தில் அன்றாட போக்கை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் தேவையானால் சில நடவடிக்கைகளை தடுக்கவும் செய்வார்.
186) தனி நபர்களுக்கு சொந்தமான சிறிய வனப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A] உயிர்க்கோள வள மையம் B] வன பாதுகாப்பு மையம்
C] பாதுகாக்கப்பட்ட வள மையங்கள் D] சமூக வள மையம்
விடை: D] சமூக வள மையம்
- இது சமூக காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது.
187) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) பாதுகாப்பு வள மையங்கள் மனித குடியிருப்பு இல்லாத முழுவதும் இந்திய அரசுக்கு சொந்தமானது.
2) மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாதுகாப்பு வள மையங்கள் மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- வன பாதுகாப்பு மையம் மற்றும் சமூகநல காடுகள் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை குறிக்கிறது. இவைகள் நன்கு நிறுவப்பட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கும் வள பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கும் இடைப்பகுதியாக செயல்படுகிறது.
188) கீழ்க்கண்டவற்றுள் பெரிய பரப்பளவு உடையது எது?
A] தேசிய பூங்காக்கள் B] உயிர்க்கோள வள மையங்கள்
C] வனவிலங்கு சரணாலயங்கள் D] சமூக காடுகள்
விடை: B] உயிர்க்கோள வள மையங்கள்
- உயிர்கோள வளமைய காப்பகம் என்பது சட்டத்தின் மூலம் ஒரு வள மையத்தின் வளத்தை ஆதரித்து, பாதுகாத்து, தக்கவைத்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் அல்லது நிலப்பகுதியாகும். இவற்றுள் பல்வகை தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் காணப்படும். தொடர்ச்சியான பாதுகாப்பு அவள மையங்களும் இதற்குள் அடங்கும்.
189) கீழ்க்கண்டவற்றுள் நீலகிரி உயிர்க்கோள மையத்தில் காணப்படாத பகுதி எது?
A] பந்திப்பூர் தேசிய பூங்கா B] முதுமலை புலிகள் காப்பகம்
C] அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா D] பெரியார் தேசிய பூங்கா
விடை: D] பெரியார் தேசிய பூங்கா
- மேலும் நாகர்கோவில் தேசிய பூங்கா மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காக்களையும் உள்ளடக்கியது நீலகிரி உயிர்க்கோள மையமாகும்.
190) தற்போது இந்தியாவில் எத்தனை குறிப்பிடக்கூடிய உயிர்கோள வளையங்கள் காணப்படுகின்றது?
A] 13 B] 18 C] 23 D] 29
விடை: B] 18
- யுனெஸ்கோவின் கீழ் உள்ள மனிதனும் உயிர் கோளமும் என்ற அமைப்பின் திட்டமிட்ட பட்டியலின் அடிப்படையில் 18 உயிர்கோள வளமைய அமைப்பில் 10 வள மையங்கள் உலக உயிர்கோள காப்பக வலையமைப்புகளில் உள்ளன.
191) உயிர்க்கோள காப்பகங்கள் எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
A] 3 B] 4 B] 5 D] 6
விடை: A] 3
- உயிர்க்கோள காப்பகங்கள் மரபு சார்ந்த வகையில் ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை மத்திய பகுதி, இடைநிலை மண்டலம் மற்றும் வெளி அல்லது மாற்றக் கூடிய மண்டலமாகும்.
192) இந்தியாவில் உள்ள புலி காப்பகங்களின் எண்ணிக்கை யாது?
A] 25 B] 39 C] 50 D] 72
விடை: C] 50
- இந்தியாவில் புலிகள் காப்பகம் 71,027 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவிக் காணப்படுகிறது. மேலும் இயற்கையான உலக பாரம்பரிய இடத்தின் எண்ணிக்கை 7 ஆகவும் 11, 756 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் பரவி காணப்படுகிறது.
193) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) யானைகள் காப்பகம் – 32
2) உயிர்க்கோள காப்பகம் – 18
3) ராமேஸ்வர ஈரநிலம் – 26
A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3
விடை: D] 1, 2 & 3
- யானைகள் காப்பகம் 69,583 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், உயிர்க்கோளக் காப்பகம் 87,492 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் மற்றும் ராமேஸ்வர ஈரநிலம் 12,119 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் பரவி காணப்படுகிறது.
194) இந்தியாவிலுள்ள பாதுகாக்கப்பட்ட கடல்சார்ந்த பகுதிகளின் எண்ணிக்கை யாது?
A] 125 B] 131 C] 137 D] 143
விடை: B] 131
- பாதுகாக்கப்பட்ட கடல் சார்ந்த பகுதிகள் 9, 701 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவி காணப்படுகிறது. மேலும் முக்கியமான கடல் சார்ந்த மற்றும் கடலோர உயிரின பன் மையங்களின் எண்ணிக்கையை 107 ஆகவும், முக்கியமான பறவை காப்பகங்களின் எண்ணிக்கை 563 ஆகவும் உள்ளது.
195) 1973ஆம் ஆண்டில் புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட போது எத்தனை காப்பகங்களோடு தொடங்கப்பட்டது?
A] 2 B] 5 C] 9 D] 12
விடை: C] 9
- புலிகள் காப்பகம் அழிந்துகொண்டிருக்கும் புலிகளை காக்க 1973 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் 9 காப்பகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டில் 50 ஆக அதிகரித்தது.
196) கீழ்கண்டவற்றுள் சுரங்கப் பணிக்கு எதிராக போராடி உயிரிகளின் வாழிடத்தை பாதுகாக்க மக்களே ஏற்படுத்திய அமைப்பு எது?
A] சரிஸ்கா புலிகள் காப்பகம் B] பைரோடெவ் டாகவ் சொன்சூரி
C] பிஷ்னாய் கிராமங்கள் D] எதுவும் இல்லை
விடை: A] சரிஸ்கா புலிகள் காப்பகம்
- ராஜஸ்தான் கிராம மக்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி சுரங்கப் பணிக்கு எதிராக போராடினர். கிராமவாசிகள் தாங்களே வன உயிர்களின் வாழிடத்தை பாதுகாக்கின்றனர். மேலும் அரசாங்கத்தின் ஈடுபாட்டை வெளிப்படையாக நிராகரிக்கின்றனர்.
197) பைரோடெவ் டாகவ் சொன்சூரி எத்தனை ஹெக்டேர் காடுகளை உள்ளடக்கியது?
A] 1000 ஹெக்டேர் B] 1100 ஹெக்டேர் C] 1200 ஹெக்டேர் D] 1300 ஹெக்டேர்
விடை: C] 1200 ஹெக்டேர்
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்கள் இணைந்து 1200 ஹெக்டேர் காடுகளை பைரோடெவ் டாகவ் சொன்சூரி என்று அறிவித்தனர். மேலும் அதை பாதுகாக்க தாங்களே விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை அறிவித்து வேட்டையாடுதலை தடுத்தல் மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து வனவிலங்குகளை காத்து வருகின்றனர்.
198) பிஷ்னாய் கிராமங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A] மத்திய பிரதேசம் B] குஜராத் C] ஹரியானா D] ராஜஸ்தான்
விடை: D] ராஜஸ்தான்
- ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் கிராமங்களில் வெளிமான்கள் கூட்டமாய் செல்வதையும், நீல மானினங்கள் மற்றும் மயில்கள் அந்த கிராமத்தில் ஒரு அங்கமாக திகழ்வதையும் யாரும் அவற்றை துன்புறுத்தாமல் இருப்பதையும் காணலாம்.
199) உயிரின பன்மைய பகுதியை அடையாளம் காண உருவாக்கப்பட்ட முறை எது?
A] யுனெஸ்கோவின் மனிதனும் உயிர் கோளமும் B] இடைவெளி பகுப்பாய்வு
C] உயிரினப் பன்மைய பகுப்பாய்வு D] வள மைய பகுப்பாய்வு
விடை: B] இடைவெளி பகுப்பாய்வு
- பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இடைவெளி பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. இடைவெளி பகுப்பாய்வு செயல்திறனை உண்மையான செயல் திறனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு முறையாகும். உலகில் இன்னும் பல இடங்களில் பாதுகாக்கப்படாத உயிரின பன்மை மையங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட போது இந்த முறைமை உருவாக்கப்பட்டது. பொதுவாக மிகப் பெரிய பரப்பில் ஆய்வுகள் செய்யப்படும்போது இம்முறை உபயோகிக்கப்படுகிறது.
200) சிறுத்தைப்புலி கீழ்க்கண்ட எந்தெந்த கண்டங்களில் வாழும் விலங்காகும்?
1) ஆசியா 2) ஆஸ்திரேலியா 3) ஐரோப்பா 4) ஆப்பிரிக்கா
A] 1 & 2 B] 1 & 4 C] 2 & 4 D] 3 & 1
விடை: B] 1 & 4
- உலகிலேயே மிக வேகமாக ஓடும் நில விலங்கு ஆகும். உருவத்தில் ஆசிய சிறுத்தைகள் ஆப்பிரிக்க சிறுத்தைகளை விட சற்று சிறியதாக காணப்படும். அதற்கு கருப்பு புள்ளிகள் உடைய பழுப்பு நிற உடலும் முகத்தில் கண் உள் மூலையிலிருந்து மூக்கு பக்கம் வரை தனித்துவமான கருப்பு நிற கண்ணீர் குறிப்புகள் காணப்படும்.
201) ஆசிய சிறுத்தை இன்று எங்கு மட்டுமே காணப்படுகிறது?
A] இந்தியா B] எகிப்து C] ஈரான் D] ஈராக்
விடை: C] ஈரான்
- ஈரானில் மட்டுமே இன்று எஞ்சியிருக்கும் ஈரானிய சிறுத்தை என்றும் அழைக்கப்படும் ஆசிய சிறுத்தை அபாயகரமாக அழியக்கூடிய நிலையில் உள்ள ஒரு சிற்றினமாகும். ஒரு காலத்தில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் உள்ள காஸ்பியன் மண்டலத்தில் கைசுல்கும் பாலைவனத்திற்கு அருகே இவை காணப்பட்டன.
202) 1948 ஆம் ஆண்டு எஞ்சி இருந்த மூன்று ஆசிய சிறுத்தைகளை சுட்டுக் கொன்றவர் யார்?
A] மகாராஜா ராமானுஜர் பிரதாப் சிங் B] அஹில்யபாய் ஹோல்கர்
C] ராமச்சந்திர குஹா D] மஹாட்ஜி ஷிண்டே
விடை: A] மகாராஜா ராமானுஜர் பிரதாப் சிங்
- 1948 ஆம் ஆண்டில் மகாராஜா ராமானுஜ பிரதாப் சிங் தியோ என்பவர் இன்றைய வட சட்டிஸ்கர் மாநிலமான, அன்றைய மத்திய பிரதேசத்தைச் சார்ந்த சர்குஜா மாநிலத்தில் எஞ்சியிருந்த மூன்று ஆசிய சிறுத்தைகளை சுட்டு கொன்று விட்டார். இதற்குப் பின்னர் இந்திய அரசாங்கம் 2009 ஆம் ஆண்டில் ஆசிய சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுத்தது. ஆனால் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்படவில்லை.
203) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
1) பவள மொட்டுகள் கடல் வெள்ளரி மற்றும் ஜெல்லி மீன்கள் போன்று மென் உடலிகள்.
2) இவற்றின் அடிப்பாகம் பாதுகாக்கும் கடின பொருளான சுண்ணாம்புக் கல்லால் ஆனது.
A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை
விடை: C] 1 & 2
- பவள மொட்டுகள் தான் பவளப்பாறையை உருவாக்குகிறது. இந்த மொட்டுக்கள் தங்களை கடலின் தரையில் உள்ள பாறையில் ஒட்ட வைத்துக் கொள்ளும் அதன் பிறகு பிரிந்து அல்லது புதிய மொட்டுகள் மூலம் ஆயிரக்கணக்கான பவள மொட்டுகளை உருவாக்கும். அதுவே பாறையாக மாறிவிடும்.
204) சிங்கவால் குரங்கு கீழ்க்கண்ட எந்த இடத்தில் மட்டுமே காணப்படுகிறது?
A] பந்திப்பூர் B] வண்டலூர் C] கிண்டி D] நீலகிரி
விடை: D] நீலகிரி
- சிங்கவால் குரங்கு உட் பிரதேச உயிரி என்றழைக்கப்படுகிறது. இயற்கையாக அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே காணக்கூடிய உயிரிகள் உட்பிரதேச உயிரிகள் என்றழைக்கப்படுகிறது.