MCQ Questions

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 9th Social Science Lesson 8 Questions in Tamil

9th Social Science Lesson 8 Questions in Tamil

8. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் ____________ எனப்படுவர்.

A) உழைப்பாளர் குழு

B) பணியமர்த்துவோர்

C) ஊழியர்

D) விவசாயிகள்

(குறிப்பு: இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களின் பணிக்கு ஊதியம் தருவோரை, பணியமர்த்துவோர் என்று குறிப்பிடுவர்.)

உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் __________ வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

A) 12 – 58

B) 15 – 58

C) 12 – 60

D) 15 – 60

(குறிப்பு: உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.)

இந்தியாவில் பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் ___________ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மூன்று வகைகள்

முதன்மைத் துறை அல்லது விவசாயத் துறை

இரண்டாம் துறை அல்லது தொழில் துறை

மூன்றாம் துறை சார்புத் துறை அல்லது சேவைத் துறை)

கீழ்க்கண்டவற்றுள் முதன்மைத் துறையில் அடங்குபவை எவை?

1. விவசாயம் 2. சுரங்கம்

3. காடுகள் 4. மீன்வளர்ப்பு

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

கூற்று 1: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன.

கூற்று 2: நன்கு வளர்ந்த நாடுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரிதாகவும் இருக்கும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு இடம்பெற்றுள்ளது.)

கீழ்க்கண்டவற்றுள் முதன்மைத் துறை தொழில்கள் எவை?

1. விவசாயம் 2. கால்நடை வளர்ப்பு 3. கோழிவளர்ப்பு

4. பால் பண்ணை 5. மீன்வளர்ப்பு

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 3, 4 D) 1, 3, 5

கீழ்க்கண்டவற்றுள் இராண்டாம் துறை தொழில்கள் எவை?

1. உற்பத்தி 2. சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள்

3. கட்டுமானம் 4. போக்குவரத்து

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 3, 4 D) 1, 3, 5

கீழ்க்கண்டவற்றுள் சார்புத் துறை தொழில்கள் எவை?

1. போக்குவரத்து 2. காப்பீடு 3. வங்கி 4. வணிகம்

5. தொலைத்தொடர்பு 6. வீட்டுமனை விற்பனை

7. அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்

A) அனைத்தும் B) 1, 2, 3, 6 C) 1, 3, 6, 7 D) 2, 3, 5, 6

(குறிப்பு: உடல் நலம், வங்கியியல், உணவகம், சட்டம், சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்றவையும் சேவைத் துறையில் அடங்கும்.)

1972 – 73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, சராசரியாக _________ அளவுக்கு உயர்ந்துள்ளது.

A) 2% B) 3% C) 4% D) 5%

வேலைவாய்ப்பின்மை சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்த டெல்லி சுல்தான்

A) அக்பர்

B) இப்ராகிம் லோடி

C) பெரோஸ் ஷா துக்ளக்

D) அலாவுதீன் கில்ஜி

பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ____________ எனப்படும்.

A) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

B) ஒருங்கமைக்கப்படாதத் துறை

C) பொதுத் துறை

D) தனியார் துறை

(குறிப்பு: ஒழுங்கமைக்கப்பட்ட துறைக ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் இருப்பவரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.)

கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் எவை?

1. வங்கிகள் 2. ரயில்வே 3. காப்பீடு

4. உற்பத்தித் தொழிற்சாலைகள்

5. மத்திய மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள்

A) அனைத்தும் B) 1, 2, 5 C) 1, 2, 3, 5 D) 1, 2, 4, 5

(குறிப்பு: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி செயல்படுகிறது.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஒழுங்கமைக்கப்படாத துறைகள்)

A) தெருக்களில் விற்பனை செய்வோர், பழுதுகள் சரிபார்ப்போர், சிறிய அளவிலான தொழில்கள் போன்றவை ஒழுங்கமைக்கப்படாத துறைகள் ஆகும்.

B) இத்துறைகளுக்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை.

C) இவற்றில் வேலை செய்வோருக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது, பெரும்பாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு, விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு போன்றவை இருக்காது.

D) இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவை.

(குறிப்பு: ஒழுங்கமைக்கப்படாத துறைகள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல மற்றும் வேலை உத்திரவாதம் கிடையாது.)

எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

A) முதன்மைத் துறை

B) இரண்டாம் துறை

C) சார்புத்துறை

D) தனியார் துறை

2011-12 ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு

A) 27% B) 24% C) 49% D) 74%

(குறிப்பு: 1972 – 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு 74% ஆகும்.)

2011-12 ஆண்டின் வேலைவாய்ப்பில் இரண்டாம் துறையின் பங்கு

A) 27% B) 24% C) 11% D) 15%

(குறிப்பு: 1972 – 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் இரண்டாம் துறையின் பங்கு 11% ஆகும்.

2011 – 12 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் சார்புத் துறையின் பங்கு

A) 15% B) 27% C) 25% D) 23%

(குறிப்பு: 1972 – 73 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பில் முதன்மைத் துறையின் பங்கு 15% ஆகும்.)

கீழ்க்கண்டவற்றுள் எவை பொதுத்துறை நிறுவனங்கள்?

1. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

2. இந்திய உருக்கு ஆணையம்

3. பாரத தொலைபேசி நிறுவனம்

4. டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை ஆகியவை தனியார்துறை நிறுவனங்கள் ஆகும்.)

பொதுத்துறை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. சேவை நோக்கம் கொண்டது.

2. சொத்துக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம்.

3. ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஆகியவை பொதுத்துறையில் அடங்கும்.)

தனியார் துறை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. இலாப நோக்கம் கொண்டது.

2. சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்.

3. ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 2 தவறு

D) எதுவுமில்லை

கீழ்க்கண்டவற்றுள் தற்கால வேலைவாய்ப்பின் போக்குகளாக கருதப்படுபவை எவை?

1. அதிகரித்து வரும் சுய-வேலைவாய்ப்பு

2. நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும்.

3. மக்களின் வாழ்க்கை முறை காரணமாக பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது.

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 1, 3

இருவேல்பட்டு கிராமத்திற்கு கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் கள ஆய்வு பணிக்காக சென்ற ஆண்டு

A) 1914 B) 1915 C) 1916 D) 1917

(குறிப்பு: கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.)

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?

A) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத் துறை

B) முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை

C) சார்புத்துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை

D) இரண்டாம் துறை, சார்புத்துறை, முதன்மைத் துறை

பொருத்துக.

1. வேளாண்மை, காடுகள்,

மீன்பிடிப்பு மற்றும் சுரங்கம் i) ஒழுங்கமைக்கப்படாத துறை

2. உற்பத்தி, மின் உற்பத்தி, எரிவாயு

மற்றும் குடிநீர் விநியோகம் ii) சார்புத்துறை

3. வாணிபம், போக்குவரத்து மற்றும்

தொலைத்தொடர்பு iii) இரண்டாம் துறை

4. குழுமப் பதிவற்ற நிறுவனங்கள்

மற்றும் வீட்டுத் தொழில்கள் iv) முதன்மை துறை

A) i ii iii iv

B) iv iii ii i

C) ii iii i iv

D) iii ii iv i

பொதுத்துறை மற்றும் தனியார்துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?

A) பணியாளர்களின் எண்ணிக்கை

B) இயற்கை வளங்கள்

C) நிறுவனங்களின் உரிமை

D) வேலைவாய்ப்பின் நிலை

(குறிப்பு: சொத்துகளின் உரிமையாளரையும், சேவைகள் அளிப்பதற்குப் பொறுப்பானவரையும் அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.)

கூற்று: ஒழுங்குப்படுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.

காரணம்: இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.

A) கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரி

B) கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் தவறு

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

தமிழ்நாட்டில் __________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

A) வேளாண்மை

B) உற்பத்தி

C) வங்கியல்

D) சிறுதொழில்

பொருத்துக.

1. பொதுத்துறை i) வங்கியல்

2. தனியார்துறை ii) கோழிவளர்ப்பு

3. முதன்மைத் துறை iii) இலாபநோக்கம்

4. சார்புத்துறை iv) சேவை நோக்கம்

A) ii iii i iv

B) iv iii ii i

C) iv iii i ii

D) iii iv ii i

ஸ்லேட்டர் கிராமம் என அழைக்கப்பபடும் இருவேல்பட்டு கிராமம் __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

A) சேலம்

B) வேலூர்

C) விழுப்புரம்

D) கடலூர்

(குறிப்பு: இந்த கிராமம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறிஞர்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது.)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!