Tnpsc Question And Answer Videos

இந்தியாவை ஆண்ட முதல் அரசி என்று அழைக்கப்படுபவர் யார்?

இந்தியாவை ஆண்ட முதல் அரசி என்று அழைக்கப்படுபவர் யார்?

ரஸியா பேகம் கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான் ஆவார். சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம். இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார்.

இவரது தந்தை பெயர் சம்சுதீன் இல்துமிஷ். சம்சுதீன் இல்துமிஷ் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.

குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். இல்துமிஷ் திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்கால கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.

தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 – ஆம் ஆண்டு சம்சுதீன் இல்துமிஷ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது மகன்களுள் ஒருவரான ருக்குதீன் பிரோஷ் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் மிக மோசமான ஆட்சியின் மூலம் ஆறே மாதங்களில் மக்களிடம் செல்வாக்கை இழந்தார்.

பின் ரஸியா பேகம் ஆட்சிப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் தன் தந்தைக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றார். ரஸ்ஸியா திறமையுள்ளவரும் மனவலிமை கொண்ட வீராங்கனையுமாவார். அவர் துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் துருக்கியப் பிரபுக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். அதே நேரத்தில் பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கினார். அப்போக்கு துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமாயிற்று. அவருக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் 1240இல் ரஸ்ஸியா கொலையுண்டார்.

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!