Samacheer NotesTnpsc

இந்தியாவும் உலகமும் Notes 12th Political Science Lesson 9 Notes in Tamil

12th Political Science Lesson 9 Notes in Tamil

இந்தியாவும் உலகமும்

இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947 – 54)

சுதந்திரமும் பிரிவினையும்

  • சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆங்கிலேய அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் வெற்றிக்காக இந்தியா தேவையான அளவு மனித சக்தி மற்றும் இதர கருவிகளை பங்களித்தது.
  • 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிந்து, 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்தியா ஆங்கிலேய அரசாங்கத்திடம் இருந்து விடுதலையடைந்தபின், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்துக்கொண்டது.
  • போருக்கு பின்னர் ஏற்பட்ட உலக அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் சொந்த அரசியல் சூழல் போன்றவை வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்தன.
  • உலக நாடுகள் ராணுவ ரீதியாக இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தன. அவை தங்களைப் பாதுகாப்பதற்காக ராணுவ கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டன.
  • இரு ராணுவ கூட்டணிகளிலும் பல நாடுகள் இணைந்தன. இந்த இரு கூட்டணிகளும் ஒன்றையொன்று வெற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளே பனிப்போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டு முகாம்களும் ராணுவங்களை கட்டியெழுப்ப பெருமளவு பணம் செலவழித்தாலும், பெரியளவிளான போர் தவிர்க்கப்பட்டது. மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
  • புதிதாக விடுதலையடைந்த நாடுகள் இந்த இரண்டு இராணுவ முகாம்களின் சண்டைகளுக்கிடையே தங்களுடைய வளங்களை வீணாக்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. அந்நாடுகள் தங்களைக் கட்டமைப்பதற்கு அனைத்தையும் பாதுகாக்க வேண்டியிருந்தது.
  • அதேநேரத்தில் இரண்டு வல்லரசுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடைப்பெற்ற கருத்து ரீதியான சண்டை பனிப்போரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
  • காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து புதிய எல்லைகளுடன் தோன்றிய நாடுகளுக்கு உலகளாவிய அளவில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. மேற்கத்திய சக்திகள் புதிய உலக ஒழுங்கமைப்பை ஏற்படுத்த வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், கண்டங்களுக்கிடையே பெருமளவிலான மனித இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது.
  • 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் சாசனம் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோன்றுவதற்கு உலக நாடுகள் முனைப்பாக இருந்தன.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் சிற்பியாக ஜவஹர்லால் நேரு இருந்தார். அப்போது உலகம் இருந்த நிலை,மைகளில் உலக அமைதிக்கான தாக்கத்தைப் பற்றியும், ஒரு புதிய தேசத்தின் தேவைகளைப் பற்றியும் நேரு நன்கு உணர்ந்திருந்தார்.
  • புதிய இந்திய தேசத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்குதல், உலக அமைதி, போர் தவிர்ப்பு, பிற நாடுகளின் அமைதியான ஆக்கப்பூர்வமான உறவு, காலனியாதிக்கத்திலிருந்து ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகளின் விடுதலை, ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவது பிற நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய இந்தியத் தேவைகளின் அடிப்படையில் நேருவின் அயல்நாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது.
  • 1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தை பிரித்து, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வானது மனித வரலாற்றில் பெருமளவு அகதிகள் புலம்பெயர்வதற்கு காரணமாக இருந்தது.
  • இன்றுவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காஷ்மீர் சிக்கலானது தொடர்ந்து அடிப்படை விஷயமாக இருந்து வருகிறது. இதுவே தொடர்ச்சியாக நான்கு போர்களுக்கு காரணமாகியது.

பஞ்சசீலமும் –அணிசேரா இயக்கமும் (1954 – 1991)

  • தனது அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொள்வது மற்றும் பராமரிப்பது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். குறிப்பாக சீனாவுடனான உறவில், இரு நாடுகள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பிணைப்பில் நீண்ட வரலாறு கொண்டிருப்பவையாகும்.
  • இது இந்திய –சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 1954ஆம் ஆண்டு நேரு மற்றும் சீனா பிரதமர் சூ-யென் –லாய்-வுடன் பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகியது. பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகியது. பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் உறவுகளைப் பேணுவது என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர்.

  • இந்த ஒப்பந்தங்கள் யாவும் இருந்த போதிலும், 1962ஆம் ஆண்டு இந்தியாவும் –சீனாவும் எல்லை தொடர்பான விவகாரத்தின் மீது இறுதியாக போரில் குதித்தன. இந்த இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை இந்த நாள் வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மிகவும் முதன்மையாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • 17 ஆண்டுகள் வெளியுறவு விவகாரத்தினை தனது பொறுப்பில் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு (1947-64) பனிப்போரில் சிக்காமல், இந்தியாவுக்கென்று சொந்த வெளியுறவுக் கொள்கைப் பற்றி தெளிவாக இருந்தார். இந்த நிலைப்பாடு 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.
  • அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு எகிப்தின் கமால் அப்துல் நாடர், கானாவின் குவாமி நிக்ருமா, இந்தோனேசியாவின் அகமது சுகர்னோ மற்றும் யூகோஸ்லேவியாவின் ஜோசிப் புரோஸ் டிட்டோ ஆகியோருடன் நேருவும் காரணமாவார். இதன் பொருள் நீதிக்கும் அநீதிக்குமான சண்டையில் யார் ஒருவரும் நடுநிலையோடு இருக்க முடியாது என்பதாகும்.
  • கூட்டு சேராமை என்பதன் பொருள் ராணுவ ரீதியாக எந்த ஒரு வல்லரசுகளுடனோ அல்லது ராணுவ முகாம்களுடனோ உடன்பாடு செய்துக் கொள்ளக் கூடாது என்பதாகும். ஆஅனால், நாடுகளுக்கிடையே உள்ள சிக்கலின் தன்மையின் அடிப்படையில் அமைதியான ஒத்துழைப்பு என்ற நோக்கத்துடன் தீர்மானிக்கும் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வது அணிசேராமை ஆகும். இந்த சுதந்திரமான தெரிவு முறைதான் சீனாவுடனான போரின்போது மேற்கு உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்ய வைத்தது, மேலும் சோவியத் ஒன்றியத்துடன் தூதரக அளவிலான உடன்படிக்கையை 1971இல் வங்கதேச நாட்டுடனான போருக்கு முன்னர் செய்து கொள்ளவும் முடிந்தது.
  • அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே இரண்டு வல்லரசு கூட்டணிகளுடனும் அணிசேர்க்கை கூடாது என்ற சிந்தனை இருந்தது.
  • 1955ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் ஆசிய-ஆப்ரிக்க மாநாடு அத்தகைய அணிசேரா கோட்பாட்டினைக் கொண்டிருந்தது, பின்னர் இதுதான் 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர குரல் கொடுத்த நேரு, அணிசேரா இயக்கமே அமெரிக்க மற்றும் சோவியத் யூனியனின் ராணுவக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதிதாக சுதந்திரம் அடையும் நாடுகளுக்கு இருக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்தார். இதுவே அணிசேரா இயக்கத்தின் மையக் கருத்தாகும், பல புதிய நாடுகள் இதன் ஒரு பகுதியாக மாற முடிவு செய்தன, அவை பனிப்போர் அரங்கத்தின் ஒரு அங்கமாக தங்களது நாடு இருக்க விரும்பவில்லை.

பஞ்சசீலக் கொள்கைகள்

  • இரு நாடுகளும் ஒன்றின் எல்லையை, இறையாண்மையை மற்றொன்று மதிப்பது.
  • ஆக்கிரமிப்பு செய்யாமை
  • ஒவ்வொருவரின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர் தலையிடாமல் இருத்தல்
  • தூதரக அளவிலான சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு
  • அமைதியுடன் இணைந்து வாழ்தல்

பாண்டுங் மாநாடு

பாண்டுங் மாநாடு (இந்தோனேசியா) 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991 –முதல் தற்பொழுது வரை)

  • சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் போன்றவை எழுச்சி பெற்றன.
  • இந்தியாவை பெருமளவு சோசலிச பொருளாதாரத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு நகர்த்திச் சென்றது.
  • இந்தியா இதன் பிறகு அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) தனது கதவுகளைத் திறந்து விட்டது. பின்னர் இது அமெரிக்க ஐக்கியநாடுகளுடனான உறவுகள் மேம்பட உதவியாக அமைந்தது.
  • தற்காலத்தில் இந்தியா புது வகையான சவால்களை சந்திக்கிறது, மாறிவரும் புவிசார் அரசியல் தன்மைகளினால் மையக்கரு மாறாமல், அதன் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
  • தெற்கு ஆசியாவின் சீனா, உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அது நமது அண்டை நாட்டு வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இந்தியாவும், இரு மண்டல அளவிலான சக்தியாகிறது. எனவே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதற்கு இன்னும் அதிக உலகளாவிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா தன்னுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் தனது வெளியுறவுக்கொள்கையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.
  • இந்தியா மற்ற நாடுகளுடன் உறவை பேணுவதற்கான மற்ற காரணிகளாக பாதுகாப்பு மற்றும் பொது பயன்பாட்டிற்கு அணு ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும் வலிமையை தன்னகத்தே கொண்டிருத்தல், முக்கிய சர்வதேச அமைப்புகளான பிரிக்ஸ் (BRICS), ஜி 20 (G20), ஷாங்காய் அமைப்பு (SCO) ஏவுகளைத் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு (MTCR) போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது போன்றவற்றைக் கூறலாம்
  • இந்தியா தனது அடையாளத்தில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், உலகத்தில் உள்ள பல வலிமையான நாடுகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சத்தை நாம் சுருக்கமாக குறிப்பிட வேண்டுமானால், இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் சவுதி அரேபியா போன்ற மாறுபட்ட பண்புகளை கொண்ட நாடுகளுடன் நட்புறவை வைத்திருக்கும் மிகவும் அரிதான தனித்தன்மையைக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இந்தியா எனலாம்.

இந்திய –அமெரிக்கா உறவுகள்

வரலாறு

  • அமெரிக்கா உடனான முறையான அரசியல் உறவு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் தொடங்கியது. முதன்முதலாக 1940ஆம் ஆண்டு தாமஸ் வில்சன் மற்றும் சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் ஆகிய தூதர்களை பரிமாறிக் கொள்வது நிகழ்ந்தது. இது டில்லியில் தூதரக அலுவலகத்தை நிறுவுவதற்கு காரணமாகியது.

  • எனினும் 1946ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஹாரி S.ட்ருமன் என்ற குடியரசுத்தலைவரின் தலைமையின்கீழ்தான் இந்திய-அமெரிக்காவுக்கு இடையே முழுமையான முழுநேர தூதரக உறவுகள் தோன்றியது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் மேலும் இது வலுப்படுத்தப்பட்டது.

  • பிரிவினையின் பொழுது, காஷ்மீர் ஓர் முடியரசாக இந்தியாவுடன் இணைந்தது. இதனை பாகிஸ்தான் எதிர்த்தது. இது குறித்து பாகிஸ்தான் , இந்தியாவுடன் காஷ்மீரின் இணைப்பு சட்டவிரோதமானது, கட்டாயத்தினால் செய்யப்பட்டது என்று கூறியது.
  • 1948ஆம் ஆண்டு இந்த சிக்கல் ஐக்கிய நாடுகளின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன் விளைவாக இந்திய –பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNCIP) நிறுவப்பட்டது. இதில் இந்தியா கடுமையாக ஏமாற்றம் அடைந்தது.
  • “இது முழுவதும் தவறான நடவடிக்கை” என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் செயற்பாட்டினையும் இந்தியா விமர்சித்தது. தொடர்ந்து நேரு ஐக்கிய நாடுகளுக்கு தன்னுடைய முதற்பயணத்தை மேற்கொண்டார்.
  • இரண்டு அரசுகளின் தலைமைகளுக்கு இடையே தனித்த ஒத்துணர்வு இல்லாமல் போனதாலும், பரஸ்பரம் இருவரும் குறைக்கூறிக் கொண்டதாலும், இந்திய-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது.
  • சீட்டோ (SEATO) மற்றும் செண்டோ (CENTO) எனப்படும் அமெரிக்கா வழங்கிய (தென்கிழக்கு ஆசிய ஒப்பந்தம் அமைப்பு மற்றும் மத்திய ஒப்பந்தம் அமைப்பு) நேச உடன்படிக்கை அமைப்பு மேலும் உறவை மேம்படுத்தவில்லை.
  • இந்த அமைப்பில் பாகீஸ்தானை சேர்த்தது மற்றும் பாகிஸ்தான் – அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம் போன்றவை இருதரப்பு உறவுகளிடையே சிறிதளவு மட்டுமே முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • ஐசனோவர் மற்றும் கென்னடி ஆகியோரின் இரண்டாம் முறை பதவிகாலத்தின் போது, அது மிகச் சிறிய காலமாக இருந்த போதிலும் சிறப்பாக சூழ்நிலை நிலவியபோதும், இன்னும் அனைத்து காலங்களுக்கான உறவு நிலவுவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருந்தது.
  • தொழில்மயமாக்கலுக்கு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு அமெரிக்காவை இந்தியா நாடியபோது, இந்திய-அமெரிக்காவின் உள்நாட்டு (பொருளாதார) திட்டங்களில் தலையிட மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது.

இந்திய –அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கிடையேயான ராணுவம் சாரா அணு ஒப்பந்தம்

இந்திய குடியரசுக்கும் –அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தமே, 123 உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைக்காக 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மெரிக்க அதிபர் ஜார்ஜ் W.புஷ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி , அதில் இந்தியா தனது ராணுவம் மற்றும் ராணுவம் சாராத அணு உலைகள் அமைப்புகளை தனித்தனியாக பிரித்துக் கொள்வது என்பதை ஏற்றுக் கொண்டது மற்றும் இந்தியாவின் அனைத்து செயற்பாடுகளையும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்படியும், அதற்கு கைமாறாக, அமெரிக்கா இந்தியாவுடன் முழுமையான ராணுவம் சாரா ஒத்துழைப்பை வழங்க ஏற்றுக் கொண்டது.

இந்த ஒப்பந்தமானது, இந்தியா “ராணுவம் சாராத” என்று அடையாளப்படுத்திய அணுக்கரு உலை அமைப்புகளை, நிரந்தரப் பாதுகாப்பு என்ற ஒப்பந்தத்தின் கீழ் வைத்து விட்டு, பிரச்சனைக்குரிய தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை, குறிப்பாக ராணுவம் சாரா அணுக்கரு செறிவூட்டல் பணிகள் உள்ளிட்ட, மற்றும் மறுசுழற்சி செய்யும் சாதனங்களை, இந்த சர்வதேச அணு ஆற்றல் முகமைகளின் பாதுகாப்பு வரம்பின்கீழ் வருவதைக் கூட செய்யாமல் விதிவிலக்கு பெறும்படியாக செய்து விட்டது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அன்று, ராணுவம் சாரா அணு உலை எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை உள்ளடங்கிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மேலவை “செனட்” ஒப்புதல் அளித்தது.

  • பொதுச்சட்டம் 480 கீழ் 1954ஆம் ஆண்டு வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ஐந்து ஒப்பந்தங்கள் இந்திய-அமெரிக்கா இடையே கையெழுத்தானது.

பனிப்போருக்கு பிந்தைய காலம்

  • நீண்ட கால காலனியாதிக்க அழிவுகளிலிருந்து மீண்டெழுந்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளில் மாபெரும் மக்களாட்சி அமைப்பை கொண்ட இந்தியா அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளது. இந்த இணையதள காலத்தில், இந்தியாவின் பன்மைத்துவம், தகவல் தொழில்நுட்பத்திறன் மற்றும் ஆங்கிலமொழித் திறமை போன்றவை இந்தியாவிற்கு பெரிய சொத்தாக உள்ளது. இந்த புத்தாயிரமாண்டில், ஆசியாவின் இருபெரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் அதிகாரமிக்க நாடுகளாக மிளிரத் தொடங்கியுள்ளன.

  • இது சர்வதேச அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதை காட்டுகிறது. நரசிம்ம ராவ் மற்றும் கிளிண்டன் காலத்தில் இந்திய- அமெரிக்கா உறவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பும் ஏற்பட்டது.
  • பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி கார்கில் போரில் ஈடுபட்டபோது அமெரிக்கா அதை கண்டித்து இந்தியாவின் நிலைக்கு ஆதரவளித்தது. அதை இந்தியாவும் வரவேற்றது.
  • இந்தியாவிற்கு 2000ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் வருகை இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. வாஜ்பாய் இந்திய-அமெரிக்க உறவைப் பற்றி குறிப்பிடும்போது டிஜிட்டல் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் பக்கத்து நாடுகள் மற்றும் பங்காளிகள் என்றார். அதன் பின்பு, அறிவியல் தொழில்நுட்பம், சூழலியல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கல்வி, எச்.ஐ.வி, சுனாமி மீட்பு போன்றவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுத்தன. அதன் தொடர்ச்சியாக புஷ் நிர்வாகத்தின் போதும் இதே இணக்கமான பாதையில் இரு நாட்டு உறவு பயணித்தது. இரு நாடுகளும் இயற்கையாகவே கூட்டாளிகள் என்றும் கூறப்பட்டன. இந்த உறவு, ஒபாமா அமெரிக்கா அதிபரான பிறகு நன்கு பக்குவமடைந்த ஒன்றாக மாறியது, பாதுகாப்பு, அணு ஆற்றல் போன்றவற்றில் புது ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

எதிர்கால ஒத்துழைப்பு

  • டிரம்ப் நிர்வாகத்தில் காணப்பட்ட போக்கு உலக நாடுகளுக்கிடையே பதட்டத்தையும், எதிர்வினையையும் ஏற்படுத்தின. புதிய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இந்திய-அமெரிக்கா உறவுகள் தொடர்ந்த போதிலும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள், “அமெரிக்கா முதன்மை” எனும் கொள்கை போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான தடைக்கற்கள் ஆகும்.
  • பாரம்பரியமிக்க இந்திய ஈரான் உறவுகளில் அமெரிக்காவின் தலையீடு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வெளியுறவில் எந்த வித தலையீடும் இல்லாத சுதந்திரமான கொள்கையை கடைபிடிக்கிறது.
இந்திய-அமெரிக்கா உறவுகளின் கால வரிசை
வ.எண் ஆண்டு முக்கியமான நிகழ்வுகள்
1 1949 பிரதமர் நேரு அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்லுதல்
2 1978 அமெரிக்க அதிபர் கார்ட்டர் இந்தியாவிற்கு வருகை தருதல்
3 1991 பொருளாதார சீர்த்திருத்தம்
4 1998 இந்தியா அணு ஆயுத சோதனை செய்தல். அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தல்
5 2000 கிளிண்டன் வருகை, உறவுகள் வலுப்படுதல்
6 2001 அமெரிக்கா, இந்தியா மீதான் பொருளாதார தடைகளை நீக்குதல்
7 2005 ஆற்றல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை
8 2005 இந்தியா, அமெரிக்கா புதிய ராணுவ கட்டமைப்பில் கையெழுத்திடுதல்
9 2005 அணு ஒப்பந்தம்
10 2010 பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு
11 2010 இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு முதல் பேச்சுவார்த்தை துவங்குதல்
12 2010 ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஒபாமா ஆதரவு
13 2011 அமெரிக்கா, இந்தியா வலைதளப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடல்
14 2015 ஒபாமா இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக வருதல் மற்றும் உறவை மேம்படுத்துதல்
15 2016 இந்தியா ஒரு முக்கியமான ராணுவ கூட்டாளியாக ஒபாமா அங்கீகரித்தல்
16 2019 இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார்

இந்திய –ரஷ்ய உறவுகள்

  • சோவியத் ஒன்றியமானது 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பனாகவும், ராணுவ ரீதியாக ஒரு பங்குதாராகவும் இருந்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவானது பல சவாலான புவியரசியல் மாற்றங்களின் போதும் தொடர்கிறது.
  • அமெரிக்காவைப் போல் அல்லாமல், ரஷ்யாவானது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான தன்னாட்சி நிலையை வரலாற்று ரீதியாக புரிந்து கொண்டது மற்றும் மதிக்கிறது. அது (ரஷ்யா) இந்தியாவை மிகப் பழமையான நாகரிகம் மற்றும் மிக உயர்ந்தப் பண்பாடு, அறிவாற்றல், பேரறிவு கொண்ட நாடாகப் பார்க்கிறது.
  • இரு நாடுகளுக்கிடையே தொடரும் உறவின் இந்த அடிப்படைப் பண்பானது, கடந்தக் காலங்களில் இரு தரப்பு உறவுகள் மலர்வதற்கு உத்வேகமாக இருந்தது.

  • தொடக்கத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், சோவியத் ஒன்றியம் (USSR) ஜோசப் ஸ்டாலின் தலைமையின் கீழ் இருக்கும் பொழுது, இந்தியாவினுடைய சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அணிசேரா கொள்கையின் உண்மைத் தன்மையை சந்தேகித்தது.
  • இருந்தபோதிலும், இந்திய-ரஷ்ய நல்லுறவானது, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 1955ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் நிகிதா குருஷேவின் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வருகை ஆகியவற்றால் சிறப்புற தொடங்கியது.
  • இதே காலக்கட்டத்தில்தான் இந்தியா, சோவியத் மாதிரியின் அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் சோசலிட மாதிரியான சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்த சகாப்தத்தில் தான் சோவியத் ஒன்றியம் மேற்கு உலகின் தாக்கத்தை கட்டுப்படுத்த, நிதி உதவி, வர்த்தகம் மற்றும் தூதரக உறவு போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளில் பயன்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய-சோவியத் உறவுகள் உலோகவியல், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் வர்த்தகத் துறைகளில் மேம்படத் தொடங்கியது.
  • இருதரப்பும் 1971 ஆம் ஆண்டு இந்திய-சோவியத் அமைதி, நட்பூறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு மைல்கல் ஆகும்.
  • 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம், இந்தியாவிற்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கை எடுக்க, ஏற்கனவே அமெரிக்கா தனது 7-வது கடற்படைப் பிரிவை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அனுப்பியிருந்த நிலையில் அது இந்தியாவிற்கு எதிராக இருக்குமானால் அதனை எதிர்கொள்ள தனது போர் கப்பல்களை இந்திய பெருங்கடற் பகுதிக்கு அனுப்பி வைத்தது. அதேபோல 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தோற்றம் போன்றவையெல்லாம் இந்தியா மற்றும் சோவியத் ஒன்றியத்தினியிடையே ஒரு நம்பிக்கையான நட்புறவை நிறுவியது.

இந்திய –ரஷ்ய உறவுகள் (1991 முதல் இன்று வரை)

  • 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு சென்றது.
  • சோவியத் ஒன்றியம் என்ற அரசு இல்லாமல் போய்விட்டதால் 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை செயலிழந்து போனது. ரஷ்யாவும் தனது கவனத்தை அதன் உள்விவகாரங்களிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பா உடனான உறவுகளில் கவனம் செலுத்தியது.
  • இப்பொழுது இந்தியா, பிற வளரும் நாடுகளைப் போல் இருக்கும் ஆர்வமும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் இல்லாத ரஷ்யாவுடன் பரஸ்பர உறவை மேற்கொண்டு வருகிறது.
  • ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் 1993ஆம் ஆண்டு இந்திய வருகையின் போது 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையை மீண்டும் தூண்டிவிடும் விதமாக புதிய நட்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
  • எனினும் பழைய உடன்படிக்கையின் அடிப்படைத்தன்மை மாற்றியமைக்கப்பட்டு, புதிய உடன்படிக்கையானது அமைதிக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது, ஆலோசனையும் ஒருங்கிணைப்பு மட்டும் இருப்பதாக செய்யப்பட்டது.

  • சோவியத் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் அல்லாமல், போரிஸ் எல்ட்சின் இந்தியாவை ஒரு “இயற்கை கூட்டாளி” என்று கூறினாரே தவிர, சிறப்பான உறவு உள்ளது எனும் அளவிற்கு ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இந்த உறவானது இரு நாடுகளுக்கிடையே 1990ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரை இருந்தபோதிலும், இக்காலக்கட்டத்தில் ரஷ்யா உறவு மிகச் சாதாரணமாகவே இருந்தது. இந்தியாவை, ரஷ்யா ஓரளவுக்கு புறக்கணித்தாலும், அது இந்தியாவிற்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தவில்லை.
  • விளாடிமிர் புடின் அதிபர் தலைமையிலான (2000 முதல் இன்று வரை) புதிய ரஷ்யா, எல்ட்சின் காலத்து இந்திய-ரஷ்யா இருதரப்பு உறவுகளை மீண்டும் பழையபடி மாற்றி அமைந்தது. ரஷ்யாவானது 2000 ஆம் ஆண்டு இந்தியாவுடன் “ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில்” கையெழுத்திட்டது. மேலும் 2010ஆம் ஆண்டு இந்த பிரகடனமானது சிறப்பான ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.
  • மாஸ்கோ யூரோ-ரஷ்யா பகுதியின் வல்லரசு என்ற வகையில், இந்தியா போன்ற பழைய நண்பருடன் திடமான நட்பூறவு இல்லாமல் ஆசியாவில் ஒரு சக்தி என்பதை அடைய முடியாது என்று ரஷ்யா உணர்ந்துள்ளது.

எஸ் (S)-400 வான்வழி பாதுகாப்பு முறைக்கான வர்த்தக ஏற்பாடு

முன்னதான இந்தியாவும்-ரஷ்யாவும், எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான (Air Defence System) 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு கையெழுத்திட்டன. இந்த வான்பாதுகாப்பு ஏற்பாடானது 2020ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 டிரையம்ஃப் (triumph) என்பது மேம்பட்ட தரையில் இருந்து வானிற்கு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு முறை ஆகும். இதனை உருவாக்கியது “அல்மாஸ் ஆன்டே” என்ற ரஷ்ய அரசு நிறுவனமாகும். இது எதிரி நாட்டு போர் விமானத்தை மற்றும் கண்டம் தாவும் ஏவுகளைகளை தாக்கி அழிக்கக்கூடியது. இதன் தாக்கும் தீறன் 250 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். மேலும், இதன் சிறப்பு தாக்கும் தீரனை 400 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகப்படுத்தமுடியும்.

ஒத்துழைப்பிற்கான பகுதிகள்

  • தற்சமயம், இந்தியா ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் பெரியளவு இறக்குமதியாளர் ஆகும். சோதனையான காலக்கட்டங்களில் மட்டுமல்லாமல் இந்திய-ரஷ்யா உறவுகளானது மிகவும் வலிமையான தூண் என்பது இரு நாடுகளுக்கிடையே இருந்த ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் என்பதற்கான ஒப்பந்தமே ஆகும்.
  • ராணுவ தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்தும் நாடாக இன்று ரஷ்யா உள்ளது. இது இருவருக்கும் இடையே சுமுகமான உறவை விதைக்கிறது.
  • இந்தியா, ரஷ்யா மற்றும் இதர அண்டை நாடுகள், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பெருவழித் தடத்தை செயற்பாட்டிற்கு கொண்டு வர தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.
  • இந்தியா மற்றும் ரஷ்யா பல்வேறுபட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்றன. அவைகள் முறையே அணு ஆற்றல், வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விண்வெளித்திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை மேலும், ஐக்கிய நாடுகள் சபை , பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிற சர்வதேச மன்றங்களுடனும் ஒத்துழைப்பும் ஆகும். இந்த இரு நாடுகளும் மிகவும் சிக்கலான உலகளாவிய சவால்களான தீவிரவாதம், விண்புறவெளிப் பகுதி ஆயுதமாக்கப்படல் மற்றும் பேரழிவு தரும் ஆயுதங்களைத் தடுத்தல், இணைய பாதுகாப்பு , பருவநிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில் பொதுவான தளத்தில் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யாவும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவின் நலனிலும் காஷ்மீர் சிக்கலிலும் இன்றும் உறுதியான ஆதரவாளராக ரஷ்யா இருந்து வருகிறது.

இந்திய –ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்

  • காலனியக்காலத்தில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே தீவிர தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. காலனியாதிக்க நாடுகள் அல்லாத ஐரோப்பிய நாடுகள் கூட இந்திய “மக்களிடையே பணி செய்ய வந்தன” எல்லது இந்த பண்பாடு மற்றும் கல்வி, சுகாதார சேவை, சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் மேம்பாட்டை ஆய்வு செய்ய வந்தன. ஒருபுறம் காலனியாதிக்கவாதிகளால் (நாடுகளால்) காலனியாக்கப்பட்டு பொருளாதார சுரண்டல் செய்யப்பட்ட காலகட்டமாக இருந்தபோதிலும், ஒரு நாடுகளுக்கிடையே கருத்துகளும் தொழில்நுட்பங்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. மாறாக பண்பாடு மற்றும் சமூகத்தின் அனைத்து அடிப்படைப் பண்புகளும் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் அடிப்படையான சமூக இயல்புகளுடன் ஊடுருவியது “தேசியம்” எனும் உணர்வு, இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரிய அளவிலான சுதந்திரத்திற்கான இயக்கம் தோன்றுவதற்கு வழிகோலியது.

வாஸ்கோடகாமா எனும் போர்ச்சுகீசிய மாலுமி 1498ஆம் ஆண்டு இந்தியாவிற்கும்-ஐரோப்பாவிற்கும் இடையேயான கடல் வழியை கண்டறிந்தார். இது இந்தியாவில் ஐரோப்பாவுக்கிடையே நேரடி வர்த்தகத்தை தொடங்கி வைத்தது.

சுதந்திரத்திற்கு பின்பு உள்ள உறவுகள் (1947 முதல் இன்று வரை)

  • இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஆங்கிலேய அரசால் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது தனது பிடியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தியாவை மத அடிப்படையிலான இரு நாடுகளாக பிரித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.
  • 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்தது குறிப்பாக விடுதலையடைந்த நாடுகளின் அங்கம் என்ற வகையில் (Common wealth) இங்கிலாந்துடன் முதன்மையான உறவுகளைக் கொண்டிருந்தது.
  • இதர ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவானது பனிப்போரின் விளைவால் ஏற்பட்டவையே ஆகும். 1962ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்கு முன்பே, அணிசேரா நிலையை இந்தியா தழுவிக் கொண்டதால், சோவியத் ஒன்றியமானது அதன் நெருக்கத்தை அவநம்பிக்கையுடன் பார்த்தது.
  • 1991ஆம் ஆண்டு இந்தியா தாராளமயத்தை துவக்கி வைக்கும் வரை வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இந்தியா குறைந்த அளவிலே ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளில் ஈடுபட்டிருந்தது.
  • 1994ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. இது இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முதலில் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடு என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுக்கமற்ற பொருளாதார உறவு முடிவுக்கு வந்தது. எனினும், 2007ஆம் ஆண்டு முதல் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு 2013இல் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியமானது 2018-19ஆம் ஆண்டு 104.3 பில்லியன் வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டணியாக இருந்தது. ஆனால் இப்போது முன்னேற்றம் கொண்டுள்ள உறவில் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றமானது நிச்சயம் தாக்கத்தை ஏர்படுத்தும்.
  • இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மற்றுமொரு சிக்கலானது, குடியேற்றம் மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றின் மீதான பொதுத் திட்டமாகும். சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் மற்றும் குடிமக்கள் இடம் பெயர்வதை ஒழுங்குப்படுத்துவது பற்றிக் கோருவதாகும்.
  • இந்தியாவின் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகத்தைக் கடந்து சில பொதுவான நலன்களைக் கொண்டிருக்கின்றன, அவை பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல், ஈரான் அணுக்கரு ஒப்பந்தத்தைப் பராமரித்தல், அணு ஆற்றல், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை உயர்த்துவது போண்றவை ஆகும்.
  • கூட்டாட்சி அமைப்பு மூறையை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட்டாட்சி மக்களாட்சி அரசாங்க மாதிரி இந்தியா போன்ர பன்முக கலாச்சாரம் உடைய நாடுகளுக்கு ஒரு முன் மாதிரி ஆகும்.

ப்ரெக்சிட் (பிரிட்டன் வெளியேற்றம்)

ஒரு மாதக்கால அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பிறகு, இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரசல்ஸ் உச்சிமாநாட்டில் பிரிட்டனின் வெளியேறும் முடிவினை ஏற்றுக் கொண்டன.

ப்ரெக்சிட் என்றால் என்ன?

  • ப்ரெக்சிட் என்ற பதமானது “பிரிட்டன்” வெளியேறுவதைக் குறிப்பதற்கான வார்த்தையாகும்.
  • ப்ரெக்சிட் என்பது இங்கிலாந்து (UK) ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதாகும். இது 2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 51.9% வாக்குப்பதிவு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சாதகமாக பதிவானது.
  • லிஸ்பன் உடன்படிக்கையின் 50-வது சட்ட உறுப்பானது, முன்வைத்த இரண்டு ஆண்டு காலக்கெடு நிகழ்வு முறை மார்ச் 29, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து வெளியேறுவதுடன் முடிவடைகிறது.
  • மார்ச் 21, 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை, இங்கிலாந்தின் கோரிக்கையை ஏற்று, வெளியேறும் கெடுவை ஏப்ரல் 12, 2019 வரை நீட்டிக்க ஒத்துக்கொண்டது.
  • இந்திய –ஜப்பான் உறவுகள்

வரலாறு

  • இந்திய-ஜப்பானுக்கிடையேயான உறவுகளில், ஆறாம் நூற்றாண்டிலே பௌத்த மதம் ஜப்பானை சென்று அடைந்ததிலிருந்து இருந்தது. ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர், அதில் மிகவும் புகழ்பெற்றவர் “டென்ஜிக்கு டோக்குபி” என்ற பயணி ஆவார். இந்த “டென்ஜிக்கு” (Tenjiku) என்பது குறிக்கும் சீன வார்த்தையாகும், இதன் பொருள் “சொர்க்கத்தின் உறைவிடம்” என்பதாகும். மிகவும் பழைமையான அரசியல் பரிவர்த்தனையானது, இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசிய காலனிக்கும் ஜப்பானுக்கும் இடையே நிறுவப்பட்டதாகும்.
  • இந்திய-ஜப்பான் கழகமானது 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பான அரசியல் பரிமாற்ற உறவு மெய்ஜி (Meiji) சகாப்தத்தின் போது (1868 – 1912) நிகழ்ந்தது. அது முதல் இரு நாடுகளும் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரத்திற்கு பிறகான உறவுகள்

  • இந்திய-ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளானது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1952ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஜப்பான் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது,.
  • 1951ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த உறவுகள் ஜப்பான் பிரதமட் நோபுக்கே கிஷி மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பரஸ்பரம் பயணம் மேற்கொண்டதன் மூலம் மேலும் வலுவடைந்தது.
  • இந்தியா ஜப்பானின் “யென்” கடன் உதவிப்பெறும் முதல் நாடானது மேலும், இந்தியாவிற்கு கடன் வழங்கும் மிகப் பெரிய நாடாக ஜப்பான் மாறியது.
  • பல இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனையாளர்கள் போருக்கு பின்னரான ஜப்பானின் பொருளாதார மறுகட்டுமானம் வெற்றிகரமாக நடந்திருப்பதை புகழ்ந்துள்ளனர்,.

  • இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பனிப்போர் காலத்தின் போது பின்னடைவை சந்தித்தன. ஜப்பான் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துவிட்டதால், இந்தியா அணிசேராக் கொள்கையினை தேர்வு செய்து கொண்டது.
  • மேலும், இந்த உறவுகளானது, 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போது ஜப்பான் நடுநிலை வகித்ததால் தடைக்கல்லாகிப் போனது.
  • 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஜப்பானுடைய தென்கிழக்கு நாடுகளுடனான பொருளாதார செயற்பாடுகள் ஆழமடைந்தன. ஆசியா என்ற வரையறையின் வரம்பிற்குள்ளே இந்தியா விடப்பட்டது. இந்தியா செய்த அணுக்கரு சோதனையை அதன் அணு ஆயுதப் பரவல் நோக்கத்திற்கு அச்சுறுத்தல் என்பதாகவே கருதியது.

  • ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரி 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த பிறகு இரு தரப்பு உறவு மேம்படத் தொடங்கியது. பொருளாதாரம், வர்த்தகம், நிதிச் சேவை, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, கப்பல், கல்வி என்ற பல துறைகளிலும் ஒத்துழைக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

பொருளாதார உறவுகள்

  • இந்தியாவில் ஜப்பான் தனது உற்பத்தி நிறுவனங்களை நிறுவியவுடன் சோனி, யமஹா, ஹோண்டா, டொயோட்டா போன்றவையெல்லாம் வீடு தோறும் இருக்கக்கூடிய பொருள்கள் ஆயின.
  • இந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனத்துடன் ஜப்பானின் சுசூகி நிறுவனம் இணைந்து மாருதி-சுசூகி எனும் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் தோன்றியது. இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிக்கு, ஜப்பானின் ஆதரவானது ஆற்றல், போக்குவரத்து, சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் மனிதனின் அடிப்படைத் தேவையுடன் முக்கியமானவைகள் ஆகும்.
  • ஆகஸ்ட் 2000இல் பிரதமர் யோஷிரோ மோரியின் இந்தியா வருகை இந்திய-ஜப்பான் உறவை வலுப்படுத்துவதற்கான வேகத்தை அளித்தது. ஜப்பான் பிரதமர் மோரியும், இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் “ஜப்பானுக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உலகளாவிய ஒத்துழைப்பு” நிறுவ முடிவு செய்தனர்.
  • ஏப்ரல் 2005இல் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் இந்தியா வருகைக்குப் பின்னர், இந்திய-ஜப்பானுக்கு இடையே ஆண்டு உச்சி மாநாட்டுக் கூட்டங்கள் அந்தந்த தலைநகரங்களில் நடத்தப்பட்டன.
  • 2006 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுக்கு வருகை புரிந்தபோது, இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு”க்கு உயர்த்தப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு

  • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 2008ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அங்கே இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பிரகடனத்தை வெளியிட்டனர்.
  • 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீதான உறுதிமொழியில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஜப்பானுடன் பாதுகாப்பு உறவு கொண்ட நாடுகளுள் இந்தியா மூன்றாவது நாடாகும், இதர நாடுகள் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆகும்.
  • இந்தியாவும் ஜப்பானும் தங்களது இரு தரப்பு உறவுகளை வலிமைப்படுத்தியது உலக சமூகத்திற்கு நேர்மறையான தகவலைத் தந்தது. சீனாவின் வளர்ச்சியும் இப்பகுதியில் இந்தியாவும் ஜப்பானும் தங்களது உரவுகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஒரு இன்றியமையாத காரணமாகும்.
  • பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் ஜப்பானுடன் சேர்த்துக்கொண்டது. பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் வருகை, இரு நாடுகளும் கடல்வழி வர்த்தக பாதுகாப்பு (Maritime), தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, அணு ஆயுத பரவல் எதிர்ப்பு நடவடிக்கை, பேரழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபடுவதில் செயற்பாடுகளைத் துவக்கின.
  • 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அரசுமுறையிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். அதேபோல 2015ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார்.
  • இந்திய-பசிபிக் மண்டலம் மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு 2025-ஐ ஜப்பான் பிரதமரும், இந்திய பிரதமரும் கூட்டாக அறிவித்தனர்.
  • 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்து, பிரதமர் அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இதுகுறித்து பிரதமர் அபே கூறும்போது, தடையில்லா மற்றும் வெளிப்படையான இந்தியா, பசுபிக் பகுதி யுத்த தந்திரம், கிழக்கு நோக்கிய செயற்பாடு போன்ற கொள்கைகளின் ஒருங்கிணைப்பின் விளைவாக, இரு நாடுகளும் இந்திய-பசிபிக் பகுதியில் வளமும், உறுதித்தன்மையும் ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
  • 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது, 2019ஆம் ஆண்டிற்குள்ளாக, இந்தியாவில் ஜப்பானின் நேரடி முதலீடு மற்றும் கம்பெனிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காகவும் உயர்த்த இரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, மேலும் இருதரப்பு உறவிலும் முழுமையான வெற்றி என்ற உறவை கட்டியமைக்க, இரு நாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.
  • மேலும் பிரதமர் ஹின்ஷோ அபே, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் அளவிற்கு பொதுத்துறை மற்றும் தனியார் நிதியளிப்பு மற்றும் பங்களிப்பு, இவற்றோடு அலுவலர் மேம்பாட்டு நிதிஉதவி (Official Development Assistance) போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டார்.
  • ஜப்பான் இந்தியாவிடம் விதிமுறைகளை எளிமையாக்குதல் மற்றும் அமைப்பு உறுதித்தன்மை உள்ளிட்ட வியாபாரச் சூழலை எதிர்பார்த்தது. 2014ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, “One Stop” எனப்படும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் படியான ஏற்பாட்டை செய்வதற்கு ‘Japan Plus’ என்ற அலுவலகத்தை மத்திய வணிகத்துறை அமைச்சகத்தி;ல் ஏற்படுத்தியது.
  • 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லி-மும்பை பெருவழித்தடம் (DMIC) மற்றும் சென்னை-பெங்களூரு பெருவழித்தடன் (CBIC) ஆகியவற்றைச் சுற்றி பதினொரு ஜப்பான் நிறுவனங்களைக் கொண்ட நகரங்களை நிறுவ ஜப்பானும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டன.
  • மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, டிசம்பர் 2015 மற்றும் நவம்பர் 2016இல் ஜப்பான் தொழில் நகரத்திற்கான சிறப்பு ஊக்கத் தொகுப்பை அளிப்பதற்கான முடிவை இந்தியா விரைந்து எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
  • 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு மருக இ தந்தபொழுது “ஷின்கான்சென்” என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்த இந்தியா முடிவெடுத்தது. ஜப்பானின் “ஷின்கான் சென்” அமைப்பு என்பது உலகளாவில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் துல்லியம், என்ற வகையில் அதிவிரைவுக் கொண்ட ஜப்பானின் ராயில்வே போக்குவரத்து ஆகும்.
  • ஜப்பானும்-இந்தியாவும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதற்கானப் பணிகளைத் தொடங்கி விட வேண்டும், கட்டுமானப் பணிகள் 2018இல் துவங்கும், ரயில்களின் இயக்கம் 2023ஆம் ஆண்டில் துவங்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஜப்பானின் ஒத்துழைப்பால் வெளிநாட்டு அலுவலர் மேம்பாட்டு உதவி பயன்பாட்டின் மூலம் மிகவும் வெற்றிகரமாக பயனடைந்த நகரம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையாகும்.
  • இந்தியா ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் முதன்மையானது, பெட்ரோலியப் பொருள்கள், வேதிப்பொருள்கள், சேர்மங்கள், உலோகம் அல்லாத தாதுக்கள், மின் மற்றும் தயாரிப்பு பொருள்கள், உலோகத் தாதுக்கள் மற்றும் உலோகத் தாதுக்களின் எச்சங்கள், துணிஇழை, நெய்யப்பட்ட ஆடை மற்றும் இயந்திரத் தளவாடங்கள் போன்றவைகள் ஆகும், இந்திய ஜப்பானிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும் பொருள்களில் முதன்மையானது இயந்திரத் தளவாடங்கள், போக்குவரத்து சாதனங்கள் , இரும்பு மற்றும் எஃகு மின்னணு பொருள்கள், கரிம வேதிப்பொருள்கள், இயந்திரக் கருவிகள் போன்றவைகளாகும்.
  • ஜப்பானின் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடானது தானியங்கி வாகனங்கள், மின்சாரக் கருவிகள், தொலைதொடர்பு, வேதிப்பொருள்கள் மற்றும் மருந்து தயாரிப்பு வேதிப்பொருள்கள் போன்றவை முதன்மையான துறைகளாகும்.
  • இந்தியாவில் , உற்பத்தித் துறையில், மனித வளமேம்பாடு என்ற வகையில் , உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனத்தின் (JIM) மூலம் அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு 30,000 இந்தியருக்கு, இந்தியாவின் “திறன் இந்தியா” மற்றும் “இந்தியாவில் தயாரிப்பு” போன்ற தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட உற்பத்திக்கு இந்தியா மேற்கொண்டு வரும் துவக்கத்திற்கு, ஜப்பான் -மாதிரி உற்பத்தித் திறன் மற்றும் நடைமூறைப் பயிற்சியினை அளிக்க, ஜப்பான் தன்னுடைய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
  • அதேபோல உற்பத்திக்கான இந்திய –ஜப்பான் நிறுவனம் மற்றும் “ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப்பிரிவுகள்” (JEC – Japanese Endowed Courses) என்ற பொறியியல் கல்லூரிகளில் வழங்கும் பாடத்திட்டத்தை, ஜப்பானிய நிறுவனங்களே இந்தியாவில் வடிவமைக்கும் என்பவையெல்லாம் அரசு துறைக்கும், தனியார் தூறைக்கும் இடையே உள்ள நல்ல ஒத்துழைப்பிற்கான உதாரணங்கள் ஆகும்.
  • 2017ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனமானது, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய முதல் நான்கு மாநிலங்களில் துவங்கப்பட்டது. அதே போல “ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப் பிரிவுகளானது முதன் முறையாக் ஆந்திர மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மேலும் நான்கு ஜப்பானியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருகின்றன. இந்த நிறுவனங்கள் யாவும் ஜப்பானிய மொழியை படிக்க ஆர்வமாக உள்ள நிறைய இந்திய மாணாக்கர்களுக்கு கற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலாச்சார உறவுகள்

  • 2012ஆம் ஆண்டு இந்திய-ஜப்பான் இடையேயான தூதரக உறவு நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை குறிக்கிறது. இந்திய-ஜப்பான், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவை மேம்படுத்த “எழுச்சிப்பெறும் ஜப்பான், துடிப்பான இந்தியா; புதிய கண்ணோட்டமும் , புதிய பரிமாற்றமும்,” என்ற கருத்தின் அடிப்படையில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.
  • 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இரு நாட்டுப் பிரதமர்களும் 2017ஆம் ஆண்டு, இந்திய-ஜப்பான், மக்களுக்கிடையேயான நட்புறவை மேலும் பரிமாறிக் கொண்டனர்.
  • கலாச்சார உடன்படிக்கை 1957இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2017ஆம் ஆண்டு கலாச்சார உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.

இந்திய – ஆப்பிரிக்கா உறவுகள்

அறிமுகம்

  • ஆசியாவும் ஆப்பிரிக்காவும் மிகவும் தொன்மையான நாகரிகங்களுக்குத் தாய்வீடாகும். கடந்த 1000 ஆண்டுகளாக இன்றியமையாத வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் பரிமாற்றங்களைக் கொண்டிருக்கின்றன.
  • வர்த்தகத்தில் செதுக்கிய மணிகள், பருத்தி, சுட்ட மண்பாண்டங்கள், தங்கம் போன்ற பொருள்கள் அடங்கும்.
  • கி.மு. (பொ.ஆ.மு) 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொன்மையான பரிவர்த்தனைகளான உணவுப் பயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இத்தகைய தொன்மையான வர்த்தகம் பற்றிய எழுதப்பட்டக் குறிப்புகள், “எரித்திரியக் கடற்பயனம்” என்று அழைக்கப்படும் “பைஸாண்டைன் தினசரி கூறிப்பு புத்தகம்” கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் மேற்கண்ட இரண்டு பகுதிகளின் நலன்களும், பரந்தும், விரிந்தும் இருந்தன.

போருக்கு பிந்தைய சகாப்தம்

  • இந்தியாவின் சுதந்திரம் 1947ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின் பெரும்பாலான ஆப்ரிக்கா நாடுகளும் ஐரோப்பாவின் செல்வாக்கில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தன.
  • இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தது, பல்வேறு பன்முக சர்வதேச அமைப்புகளில், ஆப்பிரிக்காவின் விடுதலைக்கு தன்னுடைய குரலை வலுவாக எடுத்து வைத்தது. இனவெறி போராட்டம் மற்றும் காலனி நீக்கம் போன்றவை, இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள் மேம்படுவதற்கு காரணியாக இருந்தது.

அணிசேரா இயக்கமும் ஆப்பிரிக்காவும்

  • அணிசேர இயக்கம் பனிப்போர் காலகட்டத்தில் உருவானதன் காரணமாக தோன்றியதாகும். மூன்றாம் உலகப்போரினைத் தடுக்கும் பொருட்டு, புதியதாக காலனி ஆதிக்கத்தில் இருந்து நீக்கம் பெற்ற ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவை, இருதுருவ வல்லரசுகள் மேற்கொள்ளும் ஆயுதக் குவிப்பில் பங்கேற்பதை மறுத்து நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்த நிகழ்வினை உருவாக்கியதில் இந்தியாவுடன் அன்றைய எகிப்து மற்றும் கானா நாட்டு அரசு தலைவர்கள் மற்றும் யுகோஸ்லாவியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அரசு தலைவர்களும் ஈடுபட்டனர்.
  • மேலும் அணிசேரா இயக்கம், காலனி எதிர்ப்புக் கூட்டாணியாகும், இது போர் நடத்தும் வளம் பெற்ற நாடுகளுடன் சேர்வதை தடுத்து தங்கள் நாடுகள் பின்னடைவை சந்திப்பதை தடுப்பதற்காகவும் துவங்கப்பட்டது. ஆப்பிரிக்கா காலனிகளின் உறைவிடங்களாக இருப்பதால், காலனிய சக்திகளை எதிர்த்து பெரும் எழுச்சியுடன் நடத்தி அதில் பெரும் வெற்றியும் பெற்றன. அந்த கண்டத்தில் அமைப்புரீதியான நிறவெறி மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக , Dr. நிக்குருமாவுடன் இதர அணிசேரா இயக்கத்தினை உருவாக்கிய பிறத்தலைவர்களும், இனவெறி பாகுபாட்டை எதிர்த்தும், அணிசேரா இயக்கத்தின் கோட்பாடுகளை பாதுகாத்தும் வந்ததில் அப்பிரிக்கா எப்பொழுதும் முதலாவதாகும் என்று பறை சாற்றினார்.
  • 1970ஆம் ஆண்டுகளில் நேருவுக்கு பிறகான இந்தியாவானது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான உலக கண்னோட்டத்தை முன்னுக்கு எடுத்துச் சென்றது.

ஆப்பிரிக்காவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்

  • டயாஸ்போரா எனப்படும் புலம் பெயர்ந்த (அ) வெளிநாடு வாழ்வோர் என்பது, ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியை கொண்டோர், தங்களுடைய சொந்த மண்ணைவிட்டு வெகுதொலைவு சென்று ஒரு சமூகத்தை ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கும் வார்த்தையாகும். ஆங்கிலேயர்கள் பல இந்திய தொழிலாளர்களைச் சர்க்கரை இரப்பர் மற்றும் பணப் பயிர்களை விளைவிப்பதற்காக, ஆப்பிரிக்க-கரீபியன் தீவுகளுக்கும், மலேசியா மற்றும் இலங்கைக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பினர். காலனி காலத்தில் மட்டும் 7,69,437 இந்தியர்கள் மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் தீவுகள் (Reunion Islands), செச்ஷலஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு குடியேறினர்.
  • தற்சமயம், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் நகரம் 13 இலட்சம் இந்தியர்களின் வீடாகிப்போனது. இதுதான் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய இந்திய நகரமாகும், இதனை தொடர்ந்து மொரீசியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகள் இந்த வரிசையில் வருகின்றன.

ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம்

  • ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம் என்பது, ஆசிய-ஆப்ப்பிரிக்காவின் சமூக பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, இந்திய –ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும். இந்த ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்திற்கான பார்வை பற்றிய ஆவணத்தை, 2017ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா வளர்ச்சி வங்கி கூட்டத்தில் இந்தியா வெளியிட்டது. இந்த ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்தின் நோக்கமானது, இந்திய –ஜப்பான் இணைப்பின் மூலம் ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் எண்முறை அடிப்படையிலான தொடர்பை வளர்த்தெடுத்தல் என்பனவாகும்.
  • இது சீனாவின் நீண்ட நெடு வழி மற்றும் பட்டு சாலை முன்னெடுப்புக்கு (Belt and Road Initiative) இந்தியா ஜப்பானின் எதிர் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்

பின்னணி

  • இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையேயான உறவுகளானது, நீண்டகாலமாக பெருமளவு முன்னிலைப்படுதாமல் இருந்தன. இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே இருந்த புவியியல் சார்ந்த இடைவெளி மற்றும் யுத்த தந்திர ரீதியாகவும், பொருளாதார உறவு ரீதியாகவும் கட்டாயம் என்று உயிர்ப்பான வேகத்துடன் இருதரப்பு உறவுகளில் ஆர்வம் காட்டவில்லை.
  • இருந்தபோதிலும் இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் சுமுகமான ஒரு வரலாற்று உறவைப் பராமரித்து வந்தன.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் இந்தியாவுடன் காலனிய எதிர்ப்பு என்ற மனநிலையை கொண்டிருந்தன, அவற்றுள் பல நாடுகள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே (பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுதந்திரம் அடைந்து விட்டன.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபீயன் நாடுகளில் உள்ள சமூகங்கள் யாவும் , ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்லது போன்று தொன்மையான மற்றும் வளமான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றன.
  • எனவே ஒருவர், இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் கலாச்சார ரீதியாக ஒருமைத் தன்மைகொண்ட நடவடிக்கைகள் இருப்பதை காணமுடியும். சூரினாம் மற்றும் கயானா போன்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளும் கணிசமான அளவிற்கு இந்திய வம்சாவழியினரைக் கொண்டதாக இருக்கிறது. இவர்கள் யாவரும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக, காலனி ஆதிக்க சக்திகளால் கூலிகளாக அனுப்பப்பட்டவர்கள் ஆவர். இதுவே, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவின் அடிப்படையாகும்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் பட்டியல் – 40

  • இலத்தீன் அமெரிக்கா என்பது பொதுவாக தென்அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகள் மற்றும் இதன் கூட மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவை கொண்டவை என்று புரிந்து கொள்ளப்பட்டன.
  • அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டோரிகா, கியூபா, டொமினிகம் குடியரசு, ஈகுவடார், எல் சல்வடோர், பிரெஞ்சு, கயானா, காடியோப், கைத்தமாலா, ஹைதி, ஹோன்டுராஸ், மெக்சிகோ, நிக்காரகுவோ, பனாமா, பராகுவே , பெரு, பியூர்டோரிக்கோ, செயிண்ட் பார்தலோமி, செயீண்ட் மார்டின், செயிண்ட்பியரி, மிக்கியூலான், உருகுவே மற்ரும் வெனிசுலா போன்றவைகளாகும்.
  • கரீபியன் நாடுகள் : ஆன்டிகுவா மற்றும் பெர்முடா, பகாமாஸ், பார்படாஸ், கியூபா. டொமினிகா, டொமினிக்கன் குடியரசு, கிரேனடா, ஹைதி, ஜமைக்கா, செயின்ட் கீட்ஸ் மற்றும் நெவீஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரெனாடின்ஸ் , டிரினிடாட் மற்றும் டொபாகோ பொன்றவைகள் ஆகும்.

சுதந்திரத்திற்கு பிந்தைய உறவுகள்

1947 முதல் 1991 வரை

  • இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான இந்தியா கொண்ட உறவு என்பது, 1961 ஆம் ஆண்டு நேரு மெக்சிகோ பயணம் மேற்கொண்டது, இந்திராகாந்தி 1968ஆம் ஆண்டு எட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட காலங்கள் கூட மிகவும் சொற்பமானதாகும்.

தற்போதய உறவுகள்

  • 2006ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பாக கொண்டு (BRICS –பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) பிரிஸ் எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இது, இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு ஊக்கத்துடன் செயல்பட பாலமாக அமைந்தது. உலகத்தின் எழுச்சி பெற்று வரும் இந்த நாடுகளின் ஒத்துழைப்பானது, பெருமளவு இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்தது.
  • 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உச்சி மாநாடு, இந்தியாவை மற்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த வகை செய்தது.
  • ஏறத்தாழ 620 மில்லியன் மக்கள் தொகை மற்றும் வளங்கள் அதிகம் கொண்ட நிலமான இலத்தீன், அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள், இந்தியாவிற்கு உலகளாவிய அளவில் தனது தடத்தைப் பதிப்பதற்கு பெரும் வாய்ப்புகளைத் தருகிறது.
  • தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் புவியியல் இடைவெளிகள் குறைக்கப்பட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் பகுதிகளுடன் இந்தியா நெருங்கிய உறவு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
  • இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான வரலாற்று ரீதியிலான நட்புறவானது, 21ஆம் நூற்றாண்டில் மேலும் மேம்படுவதற்கு அடித்தளமாக உள்ளது.

இந்திய மற்றும் மண்டல அமைப்புகள்

சார்க் அமைப்பு (தெற்காசிய நாடு மண்டல ஒத்துழைப்பு அமைப்பு – SAARC)

  • சார்க் அமைப்பானது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, டாக்கா நகரில் சார்க் சாசனச் சட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் நிறுவப்பட்டது. சார்க் அமைப்பானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, மக்கள் நலன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையே நெருக்கமாக வரலாற்று மற்றும் பண்பாட்டு தொடர்பை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்டது.
  • சார்க் அமைப்பு எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. அவை ஆப்கானீஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இந்த அமைப்பின் செயலகம் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் நாள் காத்மாண்டு நகரில் நிறுவப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கங்கள்

  • தெற்காசிய மக்களின் நலன்களை வளர்த்தெடுத்தல் மற்றும் அவர்களின் தரமான வாழ்வை உயர்த்துதல்.
  • இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார மேம்பாட்டை முடுக்கி விடுதல் மற்றும் ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடன் வாழவும் மற்றும் அவர்களின் முழுமையான ஆற்ரலை உணரவும் வாய்ப்பளிப்பது.
  • தெற்காசிய நாடுகளுக்கு இடையே கூட்டு சுயநம்பிக்கை வளர்த்தெடுப்பதும், வலிமைப்படுத்துவதும்.
  • பரஸ்பர நம்பிக்கைக்கு பங்களிப்பது, பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது, மதிப்பளிப்பது.
  • செயலாக்கமிக்க கூட்டு இணைவை வளர்த்தல் மற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் பரஸ்பர உதவிகள்.
  • சர்வதேச அரங்குகளில் தங்களுக்குள்ளாக ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
  • அதே நோக்கங்களுடன், சர்வதேச மற்றும் மண்டல அளவிலான அமைப்புகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குதல்.

  • அமைப்பு வடிவத்தில், சார்க் அமைப்பானது நான்கு அடுக்கு நிறுவனத்தை கொண்டிருக்கிறது, அதில் உச்சி மாநாடுகளும் அதில் அனைத்து தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் உறுப்பினர்கள் ஆவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் சந்திப்பர், அமைச்சரவை குழுவில் வெளியுறவு அமைச்சர்கள் இருப்பார்கள்.
  • சார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். தொழில்நுட்பக் குழு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பர். இந்த ஒருங்கிணைப்பு குழுவானது, ஒவ்வொருவருடைய குறிப்பான ஒத்துழைப்பு விவகாரங்களிலும், திட்டங்களை ஒருங்கிணைப்பது, நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது என்பது அதன் பொறுப்பாகும். இப்பொழுது வரை 18 உச்சி மாநாடுகள் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்டுள்ளன.
  • தெற்காசியா பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமைகளில், சார்க் உறுப்பினர் நாடுகள், தெற்காசிய தடையில்லா வர்த்தக பகுதிகளாக உருவாக்கிக் கொண்டது. இந்த ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்து 1993 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடுத்த தொடர்ச்சியாகும்.
  • மேலும், தெற்காசிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கமானது, தெற்காசிய பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு சிறப்பான மற்றும் சார்பு தன்மையுடன் நடத்த வேண்டியது அவசியம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் இப்பகுதி அனைத்தும் வளர்ச்சி பெறுவதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (QUAD)

  • இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக, இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமைப்புசாரா வழிமுறை மூலம் இணைந்து கூட்டாக செயல்படுவது என விளக்கமளிக்கப்படுவது.
  • இந்த நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை “குவாட்” (QUAD) எனும் கருத்தானது உண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயைச் சாரும்.
  • இது 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது மற்றும் 2017 ஆம் ஆண்டில் மறு ஆய்வு செய்யப்பட்டது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)

  • இந்த ஆசியான் அமைப்பு 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் நிறுவப்பட்டது. ஆசியான் அமைப்பு கையெழுத்திடப்பட்டு புகழ்பெற்ற பாங்காக் பிரகடனம் என்று அழைக்கப்பட்டது. இதன் நிறுவன தலைவர்களாக இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்றவை உள்ளன.
  • ஆசியான் அமைப்பில் தற்போது பத்து உறுப்பு நாடுகள் உள்ளன. அவைகள் முறையே புருனேதருசாலம் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாளும், வியட்நாம் 1995ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாளும், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகியவை 1997ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாளும், கம்போடியா 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியும் இணைந்துகொண்டன.
  • ஆசியான் அமைப்பானது கிட்டத்தட்ட ஆரம்பத்தில் பத்து உறுப்பினர் நாடுகளை கொண்டிருக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு கிழக்காசியாவில் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பிற்கான துவக்கத்தை ஏற்படுத்தியதற்கும் பொறுப்பாகும்.

அவை,

  • ஆசியான் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (AFTA)
  • ஆசியான் சேவைப் பணிகளுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் (AFAS)
  • ஆசியான முதலீட்டுப் பகுதி (AIA)
  • இதன் உறுப்புகளான கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவானது நூற்றாண்டு காலமாக தொடர்கிறது. இந்த புதிய துவக்கத்தை இந்தியா மேற்கொள்வதற்கு 1990 ஆம் ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை தன்னுடைய “கிழக்கு நோக்கி கொள்கை” அடிப்படையிலிருந்து தொடங்கியதாகும்.
  • இதற்கிடையே சீனா மற்றும் இதர மேற்கு உலக நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளும், இந்தியா ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு எனவும், அது மண்டல அளவில் தோற்றம் பெற்று வரும் சக்தி எனவும் , உணரத் தொடங்கின. இந்த புரிதலானது 1992ஆம் ஆண்டு இந்தியாவை ஆசியான் அமைப்பின் ஒரு பகுதியளவு கூட்டாளி என்ற வகையிலும், 1996 ஆம் ஆண்டுகளில் அதன் முழுமையான பேச்சு நடத்தும் அளவிற்கு உரிய கூட்டாளியாகவும் ஆக்கியது.
  • “கிழக்கு நோக்கி கொள்கையானது” வளர்ச்சி அடைந்து செயக்திட்டம் சார்ந்த, “கிழக்கு நோக்கி செயல்பாடு” என்பதாக பெயர் மாற்றமடைந்தது.
  • பன்னிரண்டாவது ஆசியான் –இந்தியா உச்சி மாநாட்டின் போதும், நவம்பர் 2014 இல் , மியான்மரின் நே பை டா- நகரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், இந்திய பிரதமர் “கிழக்கு நோக்கி செயல்பாடு” என்ற கொள்கையை முறையாகத் தெளிவாக விளக்கினார்.
  • இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் உடனான உறவானது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய தூணாக இருக்கிறது மற்ரும் “கிழக்கு நோக்கி செயல்பாடு” (AEP) எனும் கொள்கையின் ஒரு அடித்தளமாக இருக்கிறது.
  • ஆசியான் அமைப்பு உடனான இந்தியாவின் முக்கியமான உறவுகளில், அரசியல்-பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக-கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு போன்றவைகளாகும். மேலும் கூடுதலாக, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களும் நிறுவப்பட்டுள்ளது.

ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA)

  • இதன் நோக்கம் இந்திய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு, இதன் பொருளாதார நலன் அதன் மதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பன்முகத்தன்மை.
  • இந்த புதிய சட்டமானது, தென் சீனா கடல் பகுதியில் சீனா செய்துவரும் சட்டவிரோதக் கட்டுமானம் மற்றும் செயற்கையாக ராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.
  • ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA) என்பது இந்திய-அமெரிக்கா இடையேயான மிக அவசியாமான யுத்த தந்திர ரீதியிலான நட்புறவை அங்கீகரித்தல் மற்றும் இந்திய பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே தூதரக, பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுத்தல் ஆகும்.
  • சிறிது காலத்திற்கு முன்பு அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த பசிபிக் பகுதி தலைமையை (PACOM) இந்திய –பசிபிக் தலைமை (COMMAND) பகுதி என பெயர் மாற்றம் செய்தது. இது அமெரிக்க அரசாங்கம், கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் தனித்து போடும் பகுதியாகிறது, மற்றும் இந்திய போர்திறன் சார்ந்த திட்டமிடலில் ஒரு முக்கிய கூட்டாளியாகும்.
  • அமெரிக்கா தன்னுடைய இந்திய-பசிபிக் பகுதிக்கு பொருளாதாரத் தூணாக இருப்பதற்காக இந்திய-பசிபிக் அமைப்பை நிறுவியது.

பிரிக்ஸ் (BRICS)

  • “பிரேசில் , ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்பதின் சுருங்கிய வார்த்தையான பிரிக்ஸ் (BRICS) என்பது 2001ஆம் ஆண்டு “கோல்டுமென் சாஸ்” என்ற அமைப்பை சார்ந்த “ஜிம் ஓ நில்” (Jim O Neil) என்பவரால் உருவாக்கப்பட்டது. இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான பொருளாதார போக்குகளின் உலகளாவிய பொருளாதார மாதிரி வடிவத்தின் தொலைநோக்கு பார்வையின் விளைவாகும்.
  • அடுத்த 2050ஆம் ஆண்டுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகாள் “டாலர்” என்ற வகையில் மிகவும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளைக் காட்டிலும் பெரிய நாடாக இருக்கும் என்றும், இது கடந்த 300 ஆண்டுகால “வல்லரசு” என்ற அடிப்படை இயக்கத்தையே முழுவதுமாக மாற்றி அமைக்க போகிறது என்று கணித்தார்.
  • பிரிக்ஸ் அமைப்பின் முதன்மையான ஒரு சாதனை என்பது புதிய வளர்ச்சி வங்கியினை நிறுவியது ஆகும். இது 2015ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று பிரிக்ஸ் நாடுகளில் மற்றும் இதர வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை திருடுவதை தனது கருத்தாக கொண்டு இயங்குவதற்கு வந்தது.
  • இந்த புதிய வளர்ச்சி வங்கியானது தனது உறுப்பினர் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை ஏற்படுத்திக் கொள்வதில் உதவுகிறது.
  • “அவசரகால நிதியிருப்பு ஒப்பந்தம்” என்பது பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்திய மற்றொரு முயற்சியாகும், இது பிரிக்ஸ் நாடுகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி உள்ளாகுமானால், அப்போது நிதி பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுகிறது.

புலம்பெயர்ந்த இந்தியர்கள்

  • “டயஸ்போரா” என்ற வார்த்தை குறிப்பிடுவது” ஒரு மக்கள் தொகையானது தனது சொந்த (தாய்) நாட்டில் (Homeland) இருந்து புலம் பெயர்ந்து பிற இடங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று விடுவதை குறிக்கும்.
  • ஒரே கலாச்சாரத்தை அல்லது ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட்டம் பல்வேறு காரணங்களால் குறிக்கும். சில நேரங்களில் தங்களுடைய நாட்டைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் தங்கிவிடுவது: இத்தகைய இடப்பெயர்வானது அல்லது மாறிச் செல்வதானது தன்னிச்சையாகவும் அல்லது கட்டாயத்தின் மீதும் இருக்க முடியும்.
  • மிகவும் துன்பகரமான நிகழ்வுகள், போர்கள், காலனி ஆதிக்கம், அடிமைத்தனம், இயற்கை பேரிடர்கள், தொடர் துன்புறுத்தல்கள், இழப்பு, சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் போன்றவையெல்லாம் கட்டாயம் புலம்பெயர்ந்த மக்களின் காரணங்களாகும். தானாகவே முன்வந்து புலம்பெயர்ந்தோர் என்போர், இதைவிட சிறந்த பொருளாதார வாய்ப்பிற்காக தங்களது சொந்த நாட்டை விட்டு சென்றார்கள் ஆவர்.
  • உதாரணமாக, பெருமளவிலான குடியேற்றமானது 1800 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பின்தங்கியப் பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றதை குறிப்பிடலாம்.
  • கட்டாயத்தின் காரணமாக புலம் பெயர்ந்த மக்கள் கூட்டத்தினர் போலல்லாமல், தானாக முன்வந்து புலம்பெயரும் மக்கள் பிரிவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும், எண்ணிக்கையிலும் ஏற்கும் படியாக ஆகிறார்கள்.
  • புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் பணம் அனுப்பியவர்களாகவும் செயல்படுகிறார்கள், அவர்கள் வர்த்தகம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறார்கள், தொழில்முனைவோரை உருவாக்கி வளர்க்கிறார்கள் மற்றும் புதிய அறிவு மற்றும் திறன்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறார்கள்.
  • வெளிநாடு வாழ் இந்தியர் என்பதன் பொதுவான பதம், இந்தியக் குடியரசின் கீழ் வரும் ஒன்றியங்கள் மற்றும் மாநிலங்களிலுள்ள மக்கள் குடியேறுவதை குறிக்கும் இந்த வெளிநாடு வாழ்வோர் தற்சமயம் கிட்டத்தட்ட 30 மில்லியன் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதில் (NRI எனப்படும்) இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு உலகெங்கும் பரவி இருப்போரையும் உள்ளடக்கியதாகும்.

வெளிநாடு வாழ் இந்தியர் வகைப்படுத்தப்படுதல்:

  • வெளிநாடு வாழ் இந்தியர் (NRI)-இவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்திய குடிமக்கள் காலவரையறையின்றி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களை “வெளிநாடு வாழ் இந்தியர்” என வகைப்படுத்தப்படுகின்றனர்.
  • இந்திய வம்சாவழியினர் (PIO)-இவர்கள் வெளிநாட்டு இந்தியர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அங்கேயே குடியுரிமைபெற்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோரைக் குறிக்கும்.
  • அரசற்ற இந்திய வம்சாவழியினர் (SPIO)- இவர்களிடம் தாங்கள் இந்தியர்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்கள் வைத்து இருக்காதவர்கள் ஆவர்.
  • இந்திய அரசாங்கம் புலம்பெயர் இந்தியர்களின் தேவையை அங்கீகரித்துள்ளது. ஏனெனில் அது பொருளாதார, நிதி மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்லது. இந்த குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும், உலக அரசங்கில் இந்தியா பிரகாசிக்கச் செய்ய முயற்சிக்கிறார்கள்.
  • இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு புலம்பெயர் இந்தியர்களிடம் இருந்து “மிகவும் விலகியிருக்கக் கூடிய வகையில் தீவிரக் கொள்கையினை பின்பற்றினார்”.
  • சொந்த நாட்டின் இறையாண்மை பற்றிய விவகாரத்தில் அவர் தந்த முதன்மையினால் இந்த நிலையினை எடுத்தார். பின்னர் ராஜீவ் காந்தியின் ஆட்சியின்போது தான் புலம்பெயர் இந்தியர் கொள்கையில் ஊக்கம் அளிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பிஜி பிரச்சனையில் இந்தியர்களுக்கு ஆதரவு கொடுத்தார். இவற்றோடு புலம்பெயர் இந்தியர்கள் ஒரு “இந்தியாவின் திட்டங்களில் சொத்து” என உணர்ந்தார். மேலும் 1984ஆம் ஆண்டு வெளிநாடு வாழ்வோருக்கான துறையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பற்றிய கொள்கை, அவர்களை தேடிச் சென்றடைவதற்கு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின்போது மீண்டும் தொடங்கியது. இவருடைய பதவிக்காலத்தின் பொழுது, முதன் முதலில் 2003ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான “பிரவாசி பாரதிய திவாஸ்” என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த “பிரவாசி பாரதிய திவாஸ்” தினக் கொண்டாட்டமானது ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் 9-ம் நாள், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்திய அரசாங்கம் இதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தி குறிப்பாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் முக்கியமானவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் உள்ளடக்கியதாகும். கடந்த 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய அரசாங்கம் எடுத்துவரும் முன் முயற்சிகள் யாவும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் நாட்டின் மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பங்களிப்பானது மிகவும் வலுவானதும் மற்றும் இன்றியமையாததாகிறது.
  • உலகளாவிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடு உதவி, தொழில்நுட்பத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் 79 பில்லியன் டாலர்கள் தாய்நாட்டிற்கு அனுப்புவதன் மூலம் அந்நியப் பணத்தை பெரும் நாடுகளில் , உலக அளவில் முதலிடத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
  • கிட்டத்தட்ட 31 மில்லியன் இந்திய பிறப்பு அல்லது அதன் வழித்தோன்றல்கள், புலம்பெயர்ந்த இந்தியர்களாக உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களுள், 3.1 மில்லியனில், 10 சதவீதம் பேர் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் ஆவர். அமெரிக்க வாழ் புல பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவின் பொருளாதார அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கு மிக இன்றியமையாத ஆதாரமாக விளங்குகிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள்

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் என்போர் தங்களது மூதாதையர்களின் சொந்த நாடான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கையில் இருந்து குடியேற்றம் பெற்றவர்களை குறிக்கும் சொல்லாகும். அவர்கள் உலகம் முழுவதும் 50 நாடுகளில் பரவி இருக்கின்றனர். தென் கிழக்கு ஆசியா, ஒசியானா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆகியன இதில் அடங்கும்.
  • இவ்வாறு மிகவும் ஆரம்பகால குடியேற்ற வகையானது, மொரிஷியஸ், ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சூரினாம், கயானா போன்ற நாடுகளுக்கு கரும்பு தோட்டத்திற்கு கூலித் தொழிலாளர்களாகச் சென்றது மற்றும் மலேசியாவின் ரப்பர் தோட்டம் மற்றும் இருப்புப்பாதை பணி மற்றும் இலங்கையில் தேயிலை தோட்டம் ஆகியவற்றிலும் கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர்.
  • இதுபோக தாமாகவே சென்று எழுத்தர், நிர்வாகப் பணி மற்றும் ராணுவ பணிக்கு சென்றுள்ளனர். இந்த குடியேற்றம் பெற்றவர்கள்தான் படிப்படியாக வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெற்றவராக ஆயினர். குறிப்பாக இதில் மியான்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வாழ் தமிழர்களும் இதில் அடங்குவர்.
  • நவீன புலம்பெயர்ந்த தமிழர்கள் தீறன் பெற்ற தொழில் நிபுணர்களாக உலகம் முழுவதும் பல நாடுகளில் குடியேறியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் ஆகும். இதில் சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகள் அடங்கும். சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை, வானொலி ஆகியவற்றின் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கிறது.
  • உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோரின் விழாக்களில் கலந்து கொள்கின்றனர். தங்கள் சொந்த தாய் மண்னை விட்டு விலகி சென்றாலும் அவர்கள் பண்பாட்டு வழியில் தங்களது தாய்மண்ணான இந்தியா அல்லது தமிழகத்து பண்பாடுகளை உலகெங்கும் கொண்டு செல்பவராகவே உள்ளனர்.

உலகம் முழுவதும் தமிழர்களின் நிலை

  1. தமிழ் அலுவல் மொழிகளாக உள்ள நாடுகள் சிங்கப்பூர், இலங்கை ஆகும்.
  2. தமிழ் சிறுபான்மை மொழியாக உள்ள நாடுகள் கனடா, மலேசியா, மொரிஷியஸ், செஷல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ரியூனியன் மற்றும் பிரான்ஸ் ஆகியவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!