இந்தியாவின் வரலாறு என பொருள்படும் தாரிக்-அல்-ஹிந்த் என்ற நூலை எழுதியவர் யார்? இந்தியாவின் வரலாறு என பொருள்படும் தாரிக்-அல்-ஹிந்த் என்ற நூலை எழுதியவர் அல்-பரூனி ஆவார். 11ஆம் நூற்றாண்டில் கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின்போது, அவருடன் அல்-பரூனி இந்தியாவிற்கு வந்து இங்குப் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார். கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு குறித்துத் துல்லியமான தகவல்கள் இவர் கொடுத்ததாகும். ஒரு கற்றறிந்த அறிஞரான இவர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்தியாவையும் அதன் மக்களையும் புரிந்துகொள்ள முயன்றார். சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்ட அவர் இந்தியத் தத்துவங்களையும் கற்றார். 1017இல் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பயணித்து இந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களை கூர்ந்து நோக்கி, தாரிக்-அல்-ஹிந்த் அதாவது இந்தியாவின் வரலாறு என்ற நூலை எழுதியதால், இந்தியவியல் நிறுவனர் என்று பாராட்டப்பட்டார். மேலும் பல இந்தியத் துணை கண்டத்தின் பல நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்கள், சமயப் பழக்க வழக்கங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவை விளக்கும் வகையில் அல்-உஸ்தாத் - "The Master" என்ற நூலை வெளியிட்டார். மேலும் 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் புவி அறிவியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்ததால், இவர் நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என்றும் போற்றப்பட்டார்.