Tnpsc
இந்தியப் பொருளாதாரம் Online Test 11th Economics Lesson 1 Questions in Tamil
இந்தியப் பொருளாதாரம்-11th Economics Lesson 1 Questions in Tamil-Online Test
Congratulations - you have completed இந்தியப் பொருளாதாரம்-11th Economics Lesson 1 Questions in Tamil-Online Test.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"இலக்க முறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும்" என்று கூறியவர்
மார்க் ஸுக்கர்பெர்க் | |
அப்துல்கலாம் | |
சுந்தர் பிச்சை | |
மயில்சாமி அண்ணாதுரை |
Question 2 |
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது ______________ ஆல் குறிப்பிடப்படுகிறது.
GNP | |
GDP | |
NNP | |
தலாவருமானம் |
Question 2 Explanation:
(குறிப்பு: ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பைக் குறிக்கும்.)
Question 3 |
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் எவற்றை பொறுத்தது?
- மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI)
- வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI)
- மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI)
- தனிநபர் வருமானம்
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
அனைத்தும் |
Question 3 Explanation:
(குறிப்பு: ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி, அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நலவாழ்வையும் உள்ளடக்கியதாகும்.)
Question 4 |
“மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற தொடர்____________ ஆண்டு ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1962 | |
1952 | |
1972 | |
1978 |
Question 4 Explanation:
(குறிப்பு: ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவர் பூடான் நாட்டின் நான்காவது மன்னர் ஆவார்.)
Question 5 |
உலக நாடுகள் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
இயற்கை வளம், தலா வருமானம் | |
வளர்ச்சி, முன்னேற்றம் | |
GDP, GNP | |
GDP, HDI |
Question 5 Explanation:
(குறிப்பு: வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமான நாடுகளைக் குறிக்கும். தன் வளங்களான நிலம், சுரங்கங்கள், உழைப்பாளர்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத நாடுகளை அதாவது குறைந்த தலா வருவாய் கொண்ட நாடுகளை வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள் என்று அழைக்கிறோம்.)
Question 6 |
கீழ்க்கண்ட வளர்ந்த பொருளாதார நாடுகளில் தவறானது எது?
கனடா | |
பிரான்ஸ் | |
ஜப்பான் | |
இந்தோனேசியா
|
Question 6 Explanation:
(குறிப்பு: அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் ஆகியவை வளர்ந்த பொருளாதார நாட்டிற்கு உதாரணம் ஆகும்.)
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படுபவை எவை?
- ஆப்பிரிக்கா
- பங்களாதேஷ்
- மியான்மர்
- பாகிஸ்தான்
- இந்தோனேசியா
அனைத்தும் | |
1, 2, 3, 5 | |
2, 4, 5 | |
1, 3, 4, 5 |
Question 7 Explanation:
(குறிப்பு: மேற்கண்ட நாடுகள் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளுக்கு உதாரணம் ஆகும். வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளை முன்னேற்றமடையாத வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய மற்றும் மூன்றாம் உலக நாடுகள் என்றும் அழைக்கலாம்.)
Question 8 |
உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா ___________ இடத்தைப் பிடித்திருக்கிறது.
5 | |
6 | |
7 | |
8 |
Question 9 |
தொழில்மயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா ___________ சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது.
6 | |
7 | |
8 | |
9 |
Question 10 |
முன்னேறிய நாடுகளின் இயல்புகளில் தவறானதை தேர்ந்தெடு.
உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி | |
முழு வேலைவாய்ப்பு | |
அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி | |
குறைவான நகர்மயமாதல் |
Question 10 Explanation:
(குறிப்பு: முன்னேறிய நாடுகளின் இயல்புகள்
உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி
உயர்ந்த தனிநபர் வருமானம்
உயர்ந்த வாழ்க்கைத்தரம்
முழுவேலைவாய்ப்பு
தொழில்துறையின் ஆதிக்கம்
உயர் தொழிநுட்பம்
தொழிற் செறிவு
அதிக நுகர்ச்சி நிலை
அதிக நகர்மயமாதல்
சீரிய பொருளாதார வளர்ச்சி
சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக்குறைந்த வறுமைநிலை
அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி)
Question 11 |
இந்தியாவில் ______________ சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
50% | |
55% | |
60% | |
70% |
Question 11 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.)
Question 12 |
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ____________ சதவீதம் வேளாண் துறையிலிருந்து கிடைக்கிறது.
15% | |
16% | |
17% | |
18% |
Question 12 Explanation:
(குறிப்பு: இந்தியா, பசுமைப் புரட்சி, பசுமை மாறா புரட்சி மற்றும் உயிரிதொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு அடைந்ததுடன் அல்லாமல் உபரி உற்பத்தி அடைந்துள்ளது.)
Question 13 |
உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் வாங்கும் சக்தி (PPP) ஆகியவற்றில் முறையே ______________ இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
6, 7 | |
7, 2 | |
6, 2 | |
7, 3 |
Question 13 Explanation:
(குறிப்பு: விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.)
Question 14 |
2016-17ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
6.9% | |
7.0% | |
7.1% | |
7.2% |
Question 14 Explanation:
(குறிப்பு: 2016-17ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக அமைந்திருந்தது.)
Question 15 |
இந்திய பொருளாதாரத்தின் பலங்களில் தவறானது எது?
இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம் | |
வேகமாக வளரும் பொருளாதாரம் | |
பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி | |
அதிக மக்கள்தொகை |
Question 15 Explanation:
(குறிப்பு: இந்திய பொருளாதாரத்தின் பலங்கள்
இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்
வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது
வளர்ந்து வரும் சந்தை
வளர்ந்து வரும் பொருளாதாரம்
வேகமாக வளரும் பொருளாதாரம்
வேகமாக வளரும் பணிகள் துறை
பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி
நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி
நிலையான பேரளவு பொருளாதாரம்
மக்கள்தொகை பகுப்பு)
Question 16 |
இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் ____________ என்ற வீதத்தில் அதிகரிக்கிறது
1.2 | |
1.5 | |
1.7 | |
1.9 |
Question 16 Explanation:
(குறிப்பு: மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது. வரும் காலத்தில் சீன மக்கள்தொகையையும் மிஞ்சக்கூடும்.)
Question 17 |
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கம் _____________ நாட்டின் மொத்த மக்கள்தொகைக்கு சமமாக உள்ளது.
கனடா | |
மியான்மர் | |
சிங்கப்பூர் | |
ஆஸ்திரேலியா |
Question 18 |
இந்திய பொருளாதாரம் கீழ்க்கண்ட எந்த பண்பைக் கொண்டுள்ளது?
வேலைவாய்ப்புள்ள வளர்ச்சி | |
வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி | |
தொழில்நுட்ப வளர்ச்சி | |
உள் கட்டமைப்பு வளர்ச்சி |
Question 18 Explanation:
(குறிப்பு: அதிகரித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது. இந்திய உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, இந்திய பொருளாதாரம் “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி" என்ற பண்பைக் கொண்டுள்ளது.)
Question 19 |
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களில் தவறானது எது?
ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை | |
அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு | |
உள் கட்டமைப்பு பலவீனம் | |
நவீன தொழில்நுட்பம் |
Question 19 Explanation:
(குறிப்பு: இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்கள்
அதிக மக்கள்தொகை
ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை
அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு
உள்கட்டமைப்பு பலவீனம்
வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை
பழமையான தொழில்நுட்பம்)
Question 20 |
மக்கள்தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பது ______________ எனப்படும்.
புவியியல் | |
மக்கள் தொகையியல் | |
மக்கள்தொகை வளர்ச்சியியல் | |
பூலோகவியல் |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய மக்கள்தொகை போக்கின் கூறுகள் எவை?
- வளர்ச்சி வீதம்
- பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்
- மக்கள் தொகை அடர்த்தி
- பாலின விகிதம்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
அனைத்தும் |
Question 21 Explanation:
(குறிப்பு: இந்திய மக்கள்தொகை போக்கின் பல்வேறு கூறுகளாவன
மக்கள்தொகை அளவு
வளர்ச்சி வீதம்
பிறப்பு, இறப்பு விகிதம்
மக்கள்தொகை அடர்த்தி
பாலின விகிதம்
வாழ்நாள் எதிர்பார்ப்பு
எழுத்தறிவு விகிதம்)
Question 22 |
இந்தியாவின் மக்கள் தொகை கடந்த நூறு ஆண்டுகளில் ____________ மடங்கு அதிகரித்துள்ளது.
2 | |
3 | |
4 | |
5 |
Question 23 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (உலகளவில் இந்தியாவின் நிலை)
- பரப்பு - 1.2%
- வருவாய் - 2.4%
- மக்கள்தொகை - 19.5%
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 23 Explanation:
(குறிப்பு: உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.5% ஐத் தன்னகத்தே கொண்டுள்ளது.)
Question 24 |
- கூற்று 1: உலக மக்கள் தொகையில் 6ல் ஒருவர் இந்தியர்.
- கூற்று 2: உத்திரபிரதேசம் மற்றும் மகாராஸ்டிரா இவற்றின் மக்கட்தொகையின் கூடுதலை ஒப்பிட்டால் மக்கள் தொகையில் மூன்றாம் இடம் பிடிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட அதிகம்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 24 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கட்தொகையை விட அதிகளவு உடையது.)
Question 25 |
மக்கள் தொகையில் 1921-ம் வருடம் ____________ எனப்படுகிறது.
சிறிய பிரிவினை வருடம் | |
மக்கள்தொகை வெடிப்பு வருடம் | |
நகரமயமாதல் வருடம் | |
பெரும் பிரிவினை வருடம் |
Question 25 Explanation:
(குறிப்பு: காலரா, பிளேக், இன்ஃபுளுயன்சா போன்ற கொள்ளை நோய்கள் மற்றும் பஞ்சம் இவற்றின் காரணமாக 1911-1921 காலகட்டத்தில் மக்கள் தொகை எதிர்மறையாக குறைந்தது. 1921 ஆம் ஆண்டு மக்கள்தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு பெரும் பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது.)
Question 26 |
மக்கள் தொகையில் “சிறு பிளவு ஆண்டு" என அழைக்கப்படுவது
1931 | |
1948 | |
1951 | |
1961 |
Question 26 Explanation:
(குறிப்பு: 1951ஆம் ஆண்டு மக்கள்தொகை பெருக்க வீதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது சிறு பிளவு ஆண்டு என அழைக்கப்படுகிறது.)
Question 27 |
____________ ஆண்டை "மக்கள்தொகை வெடிப்பு ஆண்டு” என்கிறோம்.
1921 | |
1951 | |
1961 | |
1971 |
Question 27 Explanation:
(குறிப்பு: 1961ல் இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் 1.96%. அதாவது 2% ஆகும். ஆகையால் 1961ஆம் ஆண்டை “மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு" என்கிறோம்.)
Question 28 |
- கூற்று 1: 1991ஆம் ஆண்டு மக்கள்தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவைக் கடந்தது.
- கூற்று 2: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இளைஞர்களின் மக்கட்தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது "மக்கட்தொகை மாறுதலைக்" குறிக்கிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 28 Explanation:
(குறிப்பு: 2001ல் இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் 1.97% ஆகும். 2011ல் இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் 1.66%.)
Question 29 |
ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம் | |
கச்சா பிறப்பு வீதம் | |
கச்சா சிசு வீதம் | |
மகப்பேறு இறப்பு வீதம் |
Question 30 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (ஆண்டு - பிறப்பு வீதம்)
- 1951 - 39.9
- 2001 - 21.8
- 2011 - 25.4
1 மட்டும் தவறு | |
1, 3 தவறு | |
2, 3 தவறு | |
1, 2 தவறு |
Question 30 Explanation:
(குறிப்பு: 2001 – 25.4, 2011 - 21.8)
Question 31 |
ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை என்பது
கச்சா இறப்பு வீதம் | |
இறப்பு வீதம் | |
சோர்வு வீதம் | |
கச்சா பிறப்பு வீதம் |
Question 32 |
சரியான இணையைத் தேர்ந்தெடு. (ஆண்டு - இறப்புவீதம்)
- 1951 - 27.4
- 2001 - 8.4
- 2011 - 8.11
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 32 Explanation:
(குறிப்பு: 2011 - 7.11)
Question 33 |
இந்தியாவில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
மேற்கு வங்காளம் | |
ஒரிசா | |
கேரளா | |
உத்திரபிரதேசம் |
Question 33 Explanation:
(குறிப்பு: கேரளாவின் பிறப்பு விகிதம் 14.7)
Question 34 |
அதிக அளவு பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள இந்திய மாநிலம்
மேற்கு வங்காளம் | |
ஒரிசா | |
கேரளா | |
உத்திரபிரதேசம் |
Question 34 Explanation:
(குறிப்பு: உத்திரபிரதேசத்தின் பிறப்பு விகிதம் 29.5)
Question 35 |
மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ள இந்திய மாநிலம்
மேற்கு வங்காளம் | |
ஒரிசா | |
கேரளா | |
உத்திரபிரதேசம் |
Question 35 Explanation:
(குறிப்பு: மேற்குவங்கத்தின் இறப்பு விகிதம் 6.3.)
Question 36 |
இந்தியாவில் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
மேற்கு வங்காளம் | |
ஒரிசா | |
கேரளா | |
உத்திரபிரதேசம் |
Question 36 Explanation:
(குறிப்பு: ஒரிசாவின் இறப்பு விகித அளவு 9.2.)
Question 37 |
2001-2011 இடைப்பட்ட பத்தாண்டுகளில் அதிக மக்கள் தொகை பெருக்கத்தை கொண்டுள்ள இந்திய மாநிலம்
மேற்கு வங்காளம் | |
பீகார் | |
கேரளா | |
உத்திரபிரதேசம் |
Question 37 Explanation:
(குறிப்பு: 2001-2011 இடைப்பட்ட பத்தாண்டுகளில் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம் கேரளா.)
Question 38 |
"BIMARU" பிமரு மாநிலங்கள் என்பவை _____________ ஆகும்.
அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாநிலங்கள் | |
குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாநிலங்கள் | |
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | |
குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் |
Question 38 Explanation:
(குறிப்பு: பீகார் (BI), மத்திய பிரதேசம் (MA), ராஜஸ்தான் (R), உத்திரபிரதேசம் (U) ஆகிய நான்கு மாநிலங்கள் "BIMARU" பிமரு மாநிலங்கள் எனப்படுகின்றன.)
Question 39 |
மக்கள தொகை அடர்த்தி என்பது
பாலின விகிதம் / அப்பகுதியின் நிலப்பரப்பு | |
பாலின விகிதம் / அப்பகுதியின் நிலப்பரப்பு | |
பாலின விகிதம் / அப்பகுதியின் நிலப்பரப்பு | |
மொத்த மக்கள் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு |
Question 39 Explanation:
(குறிப்பு: மக்கள்தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. அதாவது நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது.)
Question 40 |
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி
117 | |
325 | |
352 | |
382 |
Question 40 Explanation:
(குறிப்பு: சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100 க்கும் குறைவு. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள்தொகை அடர்த்தியானது 1951ல் 117 ஆக இருந்து உயர்ந்து பின் 2001ல் 325 ஆக அதிகரித்தது.)
Question 41 |
இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படும் மாநிலங்கள் எவை?
- கேரளா
- மேற்கு வங்காளம்
- பீகார்
- உத்திரப் பிரதேசம்
1, 2, 3 | |
2, 3, 4 | |
2, 3, 4 | |
அனைத்தும் |
Question 42 |
ஒரு சதுர கிமீக்கு 1102 நபர்கள் என மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட இந்திய மாநிலம்
கேரளா | |
மேற்கு வங்காளம் | |
பீகார் | |
உத்திரப்பிரதேசம் |
Question 42 Explanation:
(குறிப்பு: பீகாருக்கு அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 மக்கள்தொகை அடர்த்தி கொண்டுள்ளது.)
Question 43 |
மிக குறைந்த மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ள இந்திய மாநிலம்
ஒரிசா | |
மேகாலயா | |
நாகலாந்து | |
அருணாசலப் பிரதேசம் |
Question 43 Explanation:
(குறிப்பு: அருணாச்சலப் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 17 நபர்கள் ஆகும்.)
Question 44 |
சரியான இணையைத் தேர்ந்தெடு. (ஆண்டு - பாலின விகிதம்)
- 1951 – 946
- 2001 – 933
- 2011 – 940
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2,3 சரி | |
1, 3 சரி |
Question 44 Explanation:
(குறிப்பு: பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தைக் குறிக்கிறது.)
Question 45 |
2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, கேரளாவின் வயது வந்தோர் பாலின விகிதம்
940 | |
1048 | |
1084 | |
1097 |
Question 45 Explanation:
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதம் அதிகம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது.)
Question 46 |
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிகக்குறைந்த பாலின விகிதம் கொண்ட இந்திய மாநிலம்
பஞ்சாப் | |
ஹரியானா | |
மத்திய பிரதேசம் | |
உத்திர பிரதேசம் |
Question 46 Explanation:
(குறிப்பு: ஹரியானாவின் பாலின விகிதம் 877 ஆகும்.)
Question 47 |
- கூற்று 1: பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிக்கப்படுகிறது.
- கூற்று 2: அதிக வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் குறைந்த இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 47 Explanation:
(குறிப்பு: அதிக வாழ்நாள் காலம் குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது.)
Question 48 |
1901 - 1911 ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் ______________ வருடங்கள் ஆகும்.
18 | |
23 | |
25 | |
32 |
Question 49 |
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம்
62.5 | |
58.7 | |
32.1 | |
63.5 |
Question 49 Explanation:
(குறிப்பு: 2011ஆம் ஆண்டு வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆண்கள் - 62.6
பெண்கள் - 64.2)
Question 50 |
2001ல் ஆண்களுக்கான வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்
62.5 | |
63.3 | |
61.6 | |
64.2 |
Question 50 Explanation:
(குறிப்பு: 2001ஆம் ஆண்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆண்கள் - 61.6
பெண்கள் - 63.3
மொத்தம் - 62.5)
Question 51 |
1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம்
58.6 | |
59.0 | |
58.7 | |
61.6 |
Question 51 Explanation:
(குறிப்பு: 1991 ஆம் ஆண்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆண்கள் - 58.6
பெண்கள் - 59.0
மொத்தம் – 58.7)
Question 52 |
1951 ஆம் ஆண்டில் பெண்ண்களுக்கான வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்
32.5 | |
31.7 | |
32.1 | |
33.2 |
Question 52 Explanation:
(குறிப்பு: 1951 ஆம் ஆண்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆண்கள் - 32.5
பெண்கள் - 31.7
மொத்தம் - 32.1)
Question 53 |
- கூற்று 1: 1951ல் ஆண்கள் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
- கூற்று 2: 1951ல் சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 53 Explanation:
(குறிப்பு: எழுத்தறிவு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது.)
Question 54 |
2011ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம்
82.1% | |
65.5% | |
75.3% | |
74.04% |
Question 54 Explanation:
(குறிப்பு: 2011ல் ஆண்கள் 82.1% மற்றும் பெண்கள் 65.5% என்ற அளவில் எழுத்தறிவு பெற்றிருந்தனர். இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு.)
Question 55 |
2001ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம்
75.3% | |
53.7% | |
82.1% | |
64.8% |
Question 55 Explanation:
(குறிப்பு: 2001ல் எழுத்தறிவு விகிதம்
ஆண்கள் - 75.3%
பெண்கள் - 53.7%
மொத்தம் - 64.8%)
Question 56 |
1951ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம்
27.2% | |
18.3% | |
29.8% | |
35.8% |
Question 56 Explanation:
(குறிப்பு: 1951ல் எழுத்தறிவு விகிதம்
ஆண்கள் - 18.3%
பெண்கள் - 27.2%
மொத்தம் - 8.9%)
Question 57 |
பொருத்துக. (மாநிலம் – எழுத்தறிவு விகிதம்)
- கேரளா i) 92%
- கோவா ii) 82%
- ஹிமாச்சல பிரதேசம் iii) 76%
- மகாராஸ்டிரா iv) 75%
- தமிழ்நாடு v) 74%
i ii iii iv v | |
ii i iii v iv | |
ii iii v iv i | |
iii v iv ii i |
Question 57 Explanation:
(குறிப்பு: இந்தியாவில் கேரளா அதிக எழுத்தறிவு விகிதமும், அடுத்தபடியாக கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஸ்டிரா, தமிழ்நாடு என அடுத்த இடங்களைப் பிடிக்கிறது.)
Question 58 |
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலம்
பஞ்சாப் | |
அருணாசலபிரதேசம் | |
கர்நாடகா | |
பீகார் |
Question 58 Explanation:
(குறிப்பு: பீகார் 53% குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலமாக உள்ளது.)
Question 59 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.(மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு – மக்கள் தொகை - சராசரி ஆண்டு வளர்ச்சி)
- 1911 - 25.21 - 0.56
- 1951 - 36.11 - 1.25
- 1971 - 54.81 – 2.20
- 1991 - 84.33 - 2.16
- 2011 - 121.02 - 1.66
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 5 சரி | |
1, 3, 4 சரி |
Question 60 |
- கூற்று 1: நீண்ட காலங்கள் நிலைத்து இருக்கக்கூடிய மீண்டும் உருவாக்கக் கூடிய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.
- கூற்று 2: மீண்டும் உருவாக்க முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் புதுப்பிக்க இயலாத வளங்கள் எனப்படும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 60 Explanation:
(குறிப்பு: காடுகள், வனவிலங்குகள், காற்று, கடல்வளங்கள், நீர்மின் சக்தி, உயிரினத்தொகுதி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும். படிம எரிபொருட்கள் நிலக்கரி, பெட்ரோலியம் கனிமங்கள் போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.)
Question 61 |
இந்தியா மொத்த பரப்பளவில் ______________ சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
18.2 லட்சம் | |
78.2 லட்சம் | |
32.8 லட்சம் | |
38.2 லட்சம் |
Question 61 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் மொத்த பரப்பளவு உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.)
Question 62 |
2007ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்திய காடுகளின் பரப்பு
59.93 மில்லியன் ஹெக்டேர் | |
58.82 மில்லியன் ஹெக்டேர் | |
64.08 மில்லியன் ஹெக்டேர் | |
69.09 மில்லியன் ஹெக்டேர் |
Question 62 Explanation:
(குறிப்பு: இதில் 8.35 மில்லியன் ஹெக்டேர் அடர்ந்த காடுகள், 31.90 மில்லியன் ஹெக்டேர் காடுகள் ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84 மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்தவெளி காடுகள் ஆகும்.)
Question 63 |
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம்
18.22% | |
20.01% | |
21.02% | |
24.32% |
Question 64 |
இந்தியாவில் ஹேமடைட் இரும்புத்தாது ____________ மில்லியன் டன் அளவிற்கு இருப்பு உள்ளது.
3460 | |
4630 | |
5680 | |
6850 |
Question 64 Explanation:
(குறிப்பு: ஹேமடைட் இரும்புத் தாது அதிகமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.)
Question 65 |
இந்தியாவில் மேக்னடைட் இரும்புத்தாது ____________ மில்லியன் டன் அளவிற்கு இருப்பு உள்ளது.
10322 | |
10619 | |
10784 | |
11822 |
Question 65 Explanation:
(குறிப்பு: மேக்னடைட் தாது கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரையில் அதிகம் கிடைக்கிறது. கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.)
Question 66 |
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா __________ இடத்தில் அமைந்துள்ளது
2 | |
3 | |
4 | |
5 |
Question 66 Explanation:
(குறிப்பு: சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.)
Question 67 |
- கூற்று 1: மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
- கூற்று 2: வங்காளம், ஜார்கண்ட் மாநில நிலக்கரி வயல்களிலிருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 68 |
கீழ்க்கண்ட எந்த இடங்களில் பாக்சைட் தாது அதிக அளவில் செறிந்து காணப்படுகிறது?
- ஒடிசா
- ஆந்திரபிரதேசம்
- கேரளா
- மகாராஷ்டிரா
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
3, 4 |
Question 68 Explanation:
(குறிப்பு: பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.)
Question 69 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு
மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும். | |
இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பங்குடன், மைக்காதாள் உற்பத்தியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. | |
பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது. | |
மைக்கா மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது. |
Question 69 Explanation:
(குறிப்பு: இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பங்குடன், மைக்காதாள் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.)
Question 70 |
இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படும் இடங்கள்
- அருணாசல பிரதேசம்
- குஜராத்
- அஸ்ஸாம்
- ஒடிசா
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
3, 4 |
Question 70 Explanation:
(குறிப்பு: டிக்பாய், பாடர்பூர், நாகர்காட்டிகா, காசிம்பூர், பள்ளியரியா, ருத்ராபூர், சிவசாகர், மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள்) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.)
Question 71 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- கோலார் தங்க வயல் சுரங்கம் - கர்நாடகம்
- ஹட்டி தங்க வயல் சுரங்கம் – தெலுங்கானா
- ராம்கிரி தங்க வயல் சுரங்கம் – ஆந்திரா
2 மட்டும் தவறு | |
3 மட்டும் தவறு | |
1, 3 தவறு | |
1, 2 தவறு |
Question 71 Explanation:
(குறிப்பு: ஹட்டி தங்க வயல் சுரங்கம் கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ராம்கிரி தங்கவயல் சுரங்கம் அமைந்துள்ளது.)
Question 72 |
UNECE அறிக்கையின்படி இந்தியா முழுவதிலும்_______________ காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
3582 ஆயிரம் | |
3825 ஆயிரம் | |
4285 ஆயிரம் | |
4582 ஆயிரம் |
Question 72 Explanation:
(குறிப்பு: மத்திய பிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திர பிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும், கிருஷ்ணா நதியின் படுகையிலும் வைரம் கிடைக்கிறது. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. )
Question 73 |
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதார கட்டமைப்பு அல்லாதது எது?
போக்குவரத்து தொலைதொடர்பு | |
ஆற்றல் வளங்கள் | |
நீர்பாசனம் | |
சுகாதாரம் |
Question 73 Explanation:
(குறிப்பு: போக்குவரத்து தொலைதொடர்பு, ஆற்றல் வளங்கள், நீர்ப்பாசனம், பண மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை பொருளாதார கட்டமைப்பில் அடங்கும்.)
Question 74 |
கீழ்க்கண்டவற்றுள் சமூக கட்டமைப்பு சார்ந்தவை எவை?
- கல்வி
- பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
- சுகாதாரம்
- வீட்டு வசதி
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
அனைத்தும் |
Question 75 |
63,000 கி.மீ நீளம் கொண்ட இந்திய இருப்புப் பாதையில் __________ கி.மீ மின் மயமாக்கப்பட்டுள்ளது.
8000 | |
11,000 | |
13,000 | |
14,000 |
Question 75 Explanation:
(குறிப்பு: ஆசியாவில் மிகப்பெரிய இருப்புப்பாதை வழிகளிலும், உலகின் நான்காவது பெரிய போக்குவரத்து அமைப்பாகவும் இந்திய இருப்புப் பாதை திகழ்கிறது.)
Question 76 |
இந்தியா _____________ கி.மீ நீளம் கொண்ட சாலைகளால் உலகத்தின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்ட நாடாக திகழ்கிறது.
20 லட்சம் | |
30 லட்சம் | |
40 லட்சம் | |
45 லட்சம் |
Question 77 |
இந்திய இரயில்வே முதல் Wi-fi வசதியை______________ல் தொடங்கியது.
ஹைதராபாத் | |
சென்னை | |
பெங்களுரு | |
டெல்லி |
Question 78 |
இந்திய விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றை ______________அன்று ஒன்றாக இணைத்தது.
28-7-2007 | |
27-8-2007 | |
28-9-2007 | |
29-8-2007 |
Question 78 Explanation:
(குறிப்பு: உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான சேவைகள் செய்து வருகின்றன. பன்னாட்டு விமானப்போக்குவரத்தை ஏர் இந்தியன் நிறுவனம் வழங்கி வருகிறது.)
Question 79 |
தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1948 | |
1950 | |
1954 | |
1956 |
Question 79 Explanation:
(குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசுகள் துறைமுகங்களின் மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கு, குறிப்பாக சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்டது.)
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்ககூடிய மின்சக்தி மூலவளங்கள் எவை?
- சூரியசக்தி
- காற்று சக்தி
- அலைகள் சக்தி
- புவி வெப்ப சக்தி
- உயிரி எரிவாயு சக்தி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 2, 3, 5 | |
1, 2, 5 |
Question 80 Explanation:
(குறிப்பு: இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை. இவை ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை, வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு.)
Question 81 |
மனித வளங்களை மேம்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணை செய்வதுமான அமைப்புகளை ______________ என்கிறோம்.
பொருளாதார கட்டமைப்புகள் | |
சமூகக் கட்டமைப்புகள் | |
ஆற்றல் கட்டமைப்புகள் | |
சமூகக் கட்டமைப்புகள் |
Question 81 Explanation:
(குறிப்பு: சமூகக் கட்டமைப்புகள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு வெளியே இருக்கின்றன. (எ.கா) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள்.)
Question 82 |
இந்திய நாட்டின் கல்விக் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தும் அமைச்சகம்
உள்துறை அமைச்சகம் | |
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் | |
வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
பாதுகாப்புத்துறை அமைச்சகம் |
Question 82 Explanation:
(குறிப்பு: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை கல்விக்கான வரவு செலவுகளை மேற்கொள்கிறது.)
Question 83 |
___________ ஆண்டு வரை கல்வி மாநில அரசின் பொறுப்பில் இருந்தது.
1951 | |
1969 | |
1976 | |
1978 |
Question 83 Explanation:
(குறிப்பு: 1976ஆம் ஆண்டிற்கு பிறகு கல்வி மத்திய மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பில் வந்தது.)
Question 84 |
இந்திய கல்வி முறை, அடிப்படையில் ______________ நிலைகளைக் கொண்டுள்ளது.
4 | |
6 | |
8 | |
12 |
Question 84 Explanation:
(குறிப்பு: ஆறு நிலைகள்
குழந்தைக் கல்வி
தொடக்க கல்வி
இடைநிலைக் கல்வி
மேல்நிலைக் கல்வி
இளங்கலைப் பட்டம்
முதுகலைப் பட்டம்)
Question 85 |
பல்கலைக் கழகங்களின் தரம் ____________ சட்டத்தின்படி அளவிடப்படுகிறது.
இந்தியக் கல்விச் சட்டம் | |
மனிதவள மேம்பாட்டுத் துறைச் சட்டம் | |
பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் | |
பள்ளிக்கல்விச் சட்டம் |
Question 85 Explanation:
(குறிப்பு: கல்வித் துறை என்பது பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது. இது சமூதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் நடுநிலையான கல்வியளிக்கும் அமைப்பு ஆகும்.)
Question 86 |
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் ______________ சதவீத நிதி கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
2% | |
3% | |
4% | |
5% |
Question 86 Explanation:
(குறிப்பு: 3% நிதி ஒதுக்கீட்டில் பெருமளவு நிதி பள்ளிக் கல்விக்கே செலவிடப்படுகிறது.)
Question 87 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
இந்தியாவின் உடல்நலம் மாநில அரசின் பொறுப்பில் வருகிறது. | |
மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கழகம் பல்வேறு நலக் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. | |
மத்திய உள்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது | |
இந்தியாவில் அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் (ஆயுஷ் -AYUSH) தற்போது உள்ளன. |
Question 87 Explanation:
(குறிப்பு: மத்திய நலத்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது. இந்தியாவில் மருத்துவ சிகிக்சை மேற்கொள்ள நடுவண் நலத்துறை அமைச்சகத்திடமிருந்து முறையான அனுமதி பெற வேண்டும்.)
Question 88 |
இந்தியாவில் _______________ மாநிலம் உடல்நலம் பேணுதலில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு | |
கேரளா | |
மகாராஷ்டிரா | |
ஆந்திரா |
Question 88 Explanation:
(குறிப்பு: மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உடல் நலம் பேணுதல் திருப்திகரமானதாக இல்லை. இலங்கையை விட இந்தியாவில் உடல் நலம் பேணுதல் குறைவாக உள்ளது.)
Question 89 |
திருவள்ளுவரால் வாழ்வின் பெரும் ஆதாரமாக கருதப்படுவது
உழைப்பு | |
காலம் | |
முதல் | |
மழை |
Question 89 Explanation:
(குறிப்பு: மழை தான் உணவு தருகிறது. மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக திருவள்ளுவர் நம்பினார். வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது அழிமானத்தையும் தரும். அழிமானத்திலிருந்து மீண்டும் தழைத்தோங்கவும் செய்யும் ஆகிய இரண்டும் செய்யும் தன்மையுடையது மழையாகும்.)
Question 90 |
"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
___________ அல்ல பிற"
பொறையுடையான் | |
மழை | |
மக்கட்பேறு | |
வாழ்வார் |
Question 90 Explanation:
(குறிப்பு: உற்பத்தி காரணிகளான நிலம், உழைப்பு, முதல், அமைப்பு, காலம், தொழில்நுட்டம் ஆகியவை குறித்து பல கருத்துகளை வள்ளுவர் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.)
Question 91 |
வள்ளுவர் ____________ ஐ அடிப்படை பொருளாதார நடவடிக்கை என்கிறார்.
மருத்துவம் | |
வணிகம் | |
தச்சுத் தொழில் | |
வேளாண்மை |
Question 91 Explanation:
(குறிப்பு:
"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"
என்ற குறளில் உழவுத்தொழிலே மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக வள்ளுவர் கருதுகிறார்.)
Question 92 |
"ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை" என்றவர்
மகாத்மா காந்தியடிகள் | |
வள்ளுவர் | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 92 Explanation:
(குறிப்பு: வள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையைப் பரிந்துரை செய்கிறார். நிதி நிலைக் கொள்கை வகுக்கும்போது செய்ய வேண்டியதாக வள்ளுவர் சொல்வது “எப்போதும் உபரி நிதிநிலை இருக்கட்டும், சில நேரங்களில் சம நிதிநிலை இருக்கலாம், ஆனால் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது".)
Question 93 |
பொதுச் செலவைக் கீழ்க்கண்ட எவற்றிற்கு செலவிடுமாறு வள்ளுவர் வலியுறுத்துகிறார்?
- பாதுகாப்பு
- பொதுப்பணிகள்
- சமூகப்பணிகள்
- தொழில்மயமாதல்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 94 |
வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்று திருவள்ளுவர்______________ குறளில் குறிப்பிடுகிறார்.
589 | |
628 | |
729 | |
739 |
Question 94 Explanation:
(குறிப்பு: இக்குறளின் மூலம் திருவள்ளுவர் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தையே வலியுறுத்துகிறார்.)
Question 95 |
"பசிக்கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும் அனைத்து குடிமகனும் இதனை அனுபவிக்க வேண்டும் என்றும் கருதியவர்
மகாத்மா காந்தியடிகள் | |
வள்ளுவர் | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 95 Explanation:
(குறிப்பு: வறுமையே அனைத்து தீமைகளுக்கும் வேறாய் இருந்து எக்காலத்தும் தீராத துன்பங்களைத் தருவதாகவும் வள்ளுவர் கருதினார்.)
Question 96 |
தொழில்தான் உண்மையான செல்வம், மேலும் உழைப்பு தான் மிகப் பெரும் வளம் என்றும் கருதியவர்
மகாத்மா காந்தியடிகள் | |
வள்ளுவர் | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 96 Explanation:
(குறிப்பு: செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல என்று வள்ளுவர் கருதினார். செல்வம் சிறந்த மதிக்கத்தகுந்த வழிகளிலேயே ஈட்டப்பட வேண்டும் என்கிறார். செல்வத்தைப் பதுக்கி வைப்பது பயனற்றுப் போகும் என்று வள்ளுவர் கருதுகிறார்.)
Question 97 |
ஒரு நலம் பேணும் அரசில் கீழ்க்கண்ட எவை இருக்காது என வள்ளுவர் கூறுகிறார்?
- வறுமை
- எழுத்தறிவின்மை
- நோய்கள்
- பாதுகாப்பின்மை
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 97 Explanation:
(குறிப்பு: நலம் பேணும் அரசின் முக்கியக் கூறுகளாவன:
நோய் நொடியற்ற ஆரோக்கியமான மக்கள்
பெருஞ்செல்வம்
நல்ல விளைச்சல்
வளம் மற்றும் மகிழ்ச்சி
மக்களுக்கு முழுப் பாதுகாப்பு)
Question 98 |
"ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது" என்று காந்தி எழுதிய ஆண்டு
1918 | |
1919 | |
1920 | |
1921 |
Question 98 Explanation:
(குறிப்பு: மேற்கண்ட இதே நம்பிக்கையை காந்தியடிகள் “தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது" என 1924ல் கூறுகின்றார்.)
Question 99 |
அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தவர்
காந்தியடிகள் | |
வள்ளுவர் | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 99 Explanation:
(குறிப்பு: காந்தியடிகள் இயந்திரங்களை ‘மிகப்பெரிய பாவம்' என்று வர்ணித்தார். காந்தியடிகள், "இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணரவேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்" என்கிறார்.)
Question 100 |
"உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்" என்று கூறியவர்
காந்தியடிகள் | |
வள்ளுவர் | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் |
Question 100 Explanation:
(குறிப்பு: காந்தியடிகள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.)
Question 101 |
காந்தி பற்றிய கருத்துகளில் தவறானதை தேர்ந்தெடு.
மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி கூறினார். | |
உணவுப்பொருட்களின் மீதான எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். | |
காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஆதரித்தார். | |
இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்று காந்தி கூறினார். |
Question 101 Explanation:
(குறிப்பு: காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார். ஆனாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சாரியத்தை வலியுறுத்தினார்.)
Question 102 |
காந்தியப் பொருளாதாரம் ____________ ஐ அடிப்படையாகக் கொண்டது.
அகிம்சை | |
தொழில்மயமாதல் | |
நன்நெறி | |
கிராமக் குடியரசு |
Question 103 |
- கூற்று 1: நவீன இந்தியாவை கட்டமைத்த முதன்மை சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு.
- கூற்று 2: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் 1964ல் இறக்கும்வரை நேரு பதவி வகித்தார்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 103 Explanation:
(குறிப்பு: நேரு ஒரு மிகப்பெரிய தேசபக்தர், சிந்தனையாளர், அரசியல்வாதி அவருடைய பொருளாதார கருத்துக்கள் அவர் ஆற்றிய எண்ணற்ற உரைகளிலிருந்தும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தும் நமக்கு கிடைக்கின்றன.)
Question 104 |
"திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவதை குறிக்கும்" என்றவர்
ஜவஹர்லால் நேரு | |
காந்தியடிகள் | |
பி.ஆர்.அம்பேத்கர் | |
J.C.குமரப்பா |
Question 104 Explanation:
(குறிப்பு: திட்டமிடுதலை நம் நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ஜவஹர்லால் நேருவையே சேரும். 1956ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கருப்பொருள் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் துவக்கிவைத்து நேரு மேற்கண்டவாறு பேசினார்.)
Question 105 |
இந்தியாவில் ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்
ஜவஹர்லால் நேரு | |
காந்தியடிகள் | |
பி.ஆர்.அம்பேத்கர் | |
J.C.குமரப்பா |
Question 105 Explanation:
(குறிப்பு: சமதர்மம் என்பது இந்தியாவிற்கு நேருவின் மிகப் பெரிய பங்களிப்பு ஆகும். அவர் நம் இந்தியாவை சமதர்ம சமூகமாக கட்டமைக்க விரும்பினார். ஆனால் நேருவின் சமதர்மம் என்பது ஜனநாயக சமதர்மம் ஆகும்.)
Question 106 |
நேரு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
ஜனநாயகத்தை உறுதியாக நம்பியவர் நேரு. | |
பேச்சுரிமை குடிமக்கள் உரிமை, வாக்குரிமை, சட்டத்தின் வழி ஆட்சி மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை நேரு நம்பினார். | |
நேரு பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் தான் பல, IIT மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. | |
நேரு எப்போதும் அறிவியல் மனப்பான்மையை எதிர்த்தார். |
Question 106 Explanation:
(குறிப்பு: நேரு அறிவியல் மனப்பான்மையை வலியுறுத்தினார். அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நேருவின் பங்களிப்பு மறக்கமுடியாது.)
Question 107 |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி, சமதர்ம காவலர், சமூக நீதி பாதுகாவலர், அரசின் திட்டங்களை வடிவமைத்தவர் போன்ற பல பெருமைகளுக்குரியர்
ஜவஹர்லால் நேரு | |
காந்தியடிகள் | |
பி.ஆர்.அம்பேத்கர் | |
J.C.குமரப்பா |
Question 107 Explanation:
(குறிப்பு: பி.ஆர். அம்பேத்கரின் காலம் 1891-1956.)
Question 108 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (அம்பேத்கரின் நூல்கள்)
- பழங்கால இந்திய வர்த்தகம் – 1915ல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
- இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றி வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை - முனைவர் பட்டத்திற்காக சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
1 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
இரண்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 108 Explanation:
(குறிப்பு: பி.ஆர்.அம்பேத்கரின் "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதிகளின் மதிப்பீடு: மாகாண ஏகாதிபத்தியத்தின் நிதிகள் பரவலாக்கம் பற்றிய ஓர் ஆய்வு" கட்டுரையாக வெளியிடப்பட்டது.)
Question 109 |
அம்பேத்கருடைய பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் என்ற ஆய்வுக் கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
1920 | |
1921 | |
1922 | |
1923 |
Question 109 Explanation:
(குறிப்பு: பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் என்ற ஆய்வுக் கட்டுரை அம்பேத்கரின் M.Sc பட்டத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.)
Question 110 |
B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை இதன் அடிப்படையில் ஆராய்கிறார்
குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள் | |
இந்திய ரூபாயின் சிக்கல்கள் | |
சமதர்மப் பொருளாதாரம் | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 110 Explanation:
(குறிப்பு: 1923 ல் "ரூபாயின் பிரச்சனைகள்" என்ற ஆய்வறிக்கையை ஏற்று லண்டன் பொருளாதார பள்ளி D.Sc பட்டம் வழங்கியது.)
Question 111 |
இந்திய ரிசர்வ் வங்கியானது அம்பேத்கருடைய ______________ என்ற நூலில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது.
பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் | |
இந்தியாவின் தேசிய பங்கீடு - பற்றி வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை | |
பழங்கால இந்திய வர்த்தகம் | |
ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் - அதன் தீர்வும் |
Question 112 |
சரியான இணையைத் தேர்ந்தெடு. (அம்பேத்கருடைய மாகாண நிதிப் பெருக்கத்தின் மூன்று நிலைகள்)
- ஒப்படைப்பு வரவு செலவுத்திட்டம் (1871 - 72 முதல் 1876 - 77 முடிய)
- ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டம் (1877 - 78 முதல் 1881 - 82 முடிய)
- வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882 - 83 முதல் 1920 - 1921 முடிய)
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 112 Explanation:
(குறிப்பு: அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த 1913 - 1923 வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை.)
Question 113 |
அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்" என்ற கட்டுரையை எழுதிய ஆண்டு
1916 | |
1917 | |
1918 | |
1919 |
Question 113 Explanation:
(குறிப்பு: ஆடம் ஸ்மித்தின் 'நாடுகளின் செல்வத்தைப் போல்’ நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை அம்பேத்கர் இந்நூலில் கூறுகிறார்.)
Question 114 |
“சாதி முறை சமூக பதட்டத்திற்கு காரணமாக அமைகிறது. சாதி முறை அரசியல் ஜனநாயத்தை விடவும், சமூக ஜனநாயத்தை அமைப்பதில் தோல்வியடைந்திருக்கிறது" என்று கூறியவர்
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் | |
J.C. குமரப்பா |
Question 114 Explanation:
(குறிப்பு: சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப்பெரிய தடையாக இருப்பதாக அம்பேத்கர் நம்பினார். சாதி சமூக பிரிவினைக்கு வழிவகுக்கிறது. தனிநபர்கள் தங்களுக்குள் வேலைகளை பரிமாறிக்கொள்ளும் வழி இருக்க வேண்டுமென்று அவர் சொன்னார்.)
Question 115 |
"அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டு உடமை ஆக்க வேண்டுமென்றும் நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியவர்
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் | |
J.C. குமரப்பா |
Question 115 Explanation:
(குறிப்பு: அம்பேத்கர் அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக காப்பீட்டு வசதி அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார்.)
Question 116 |
கிராமப் பொருளாதார முன்னேற்றக் கொள்கைகளின் முன்னோடியாக அறியப்படுபவர்
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் | |
J.C. குமரப்பா |
Question 116 Explanation:
(குறிப்பு: "காந்தியப் பொருளாதாரம்" என்ற கருத்தை J.C குமரப்பா உருவாக்கினார்.)
Question 117 |
ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த ஆண்டு
1891 ஜனவரி 4 | |
1891 ஜனவரி 14 | |
1892 ஜனவரி 4 | |
1892 ஜனவரி 14 |
Question 117 Explanation:
(குறிப்பு: குமரப்பா அவரது அனைத்து பொருளாதார கருத்துக்களையும் காந்தியம் என்பதன் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டார்.)
Question 118 |
காந்தியின் கருத்தான கிராமத் தொழில்கள், கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தவர்
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் | |
J.C. குமரப்பா |
Question 118 Explanation:
(குறிப்பு: J.C.குமரப்பா கிருஸ்துவ மற்றும் காந்திய மதிப்பீடுகளை உள்ளடக்கி கோட்பாடுகளை கொண்டு வந்தார். அதில் அஹிம்சைக் கொள்கை, மனித நடத்தைகளை மையப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை பொருள்முதல் வாதத்திற்குப் பதிலாக பயன்படுத்தினார்.)
Question 119 |
குமரப்பா உப்பு சத்தியாக் கிரகத்தின் போது ______________ பத்திரிக்கையில் பணியாற்றினார்.
சுதேசிமித்திரன் | |
யங் இந்தியா | |
காமன் வீல் | |
இந்தியா |
Question 119 Explanation:
(குறிப்பு: குமரப்பா யங் இந்தியா பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டே அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.)
Question 120 |
J.C குமரப்பா அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை தோற்றுவித்த ஆண்டு
1931 | |
1934 | |
1935 | |
1937 |
Question 120 Explanation:
(குறிப்பு: காந்தியும் குமரப்பாவும் மனிதனின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற வேண்டுமானால் சமூக பொருளாதார பிரச்சினைகள், வேலையின்மை, வறுமை, மற்றும் ஆதரவற்ற நிலை ஆகியவற்றை களைய வேண்டும் என்று கூறுகின்றனர்.)
Question 121 |
கீழ்க்கண்டவற்றுள் J.C குமரப்பாவால் எழுதப்படாத நூல் எது?
இயேசுவின் வழிமுறைகள் | |
நிலைத்த பொருளாதாரம் | |
கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் | |
இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு? |
Question 121 Explanation:
(குறிப்பு: குமரப்பா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஓராண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது நிலைத்த பொருளாதாரம், இயேசுவின் வழிமுறைகள் (1945) மற்றும் கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945) ஆகிய புத்தகங்களை எழுதினார்.)
Question 122 |
J.C. குமரப்பாவை ‘பச்சை காந்தி’ என்று அழைத்தவர்
இராமச்சந்திர பரமஹம்சர் | |
இராஜேந்திர பிரசாத் | |
இராமச்சந்திர குஹா
| |
ஜவஹர்லால் நேரு |
Question 122 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் சுற்றுச் சூழலியல் குறித்து அடித்தளமிட்டதால் குமரப்பா பச்சை காந்தி என்று அழைக்கப்படுகிறார்.)
Question 123 |
- கூற்று 1: காந்தியை பின்பற்றுபவர்கள் சுற்றுப்புற சூழலியல் குறித்து நிறைய கோட்பாடுகளை உருவாக்கினார்.
- கூற்று 2: குமரப்பா 1930 - 1940 ஆண்டுகளுக்கு இடையே சுற்றுப்புற சூழலியல் குறித்து நிறைய புத்தகங்களை எழுதினார்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 123 Explanation:
(குறிப்பு: குமரப்பா சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று அங்கு இருந்த கிராம வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு நம் நாட்டில் அமல்படுத்த முனைந்தார்.)
Question 124 |
நாட்டு வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
மொத்த தேசிய வருமானம் | |
தலா வருமானம் | |
அந்நிய செலாவணி இருப்பு |
Question 125 |
"சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக D.R. காட்கில், C.N. வக்கில் மற்றும் V.K.R.V ராவ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த அறிஞர்கள் சிறந்த கனவுகளோடும் இந்தியப் பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து கொள்கைகளையும் திட்டங்களையும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வழங்கியிருக்கிறார்கள்" என்று கூறியவர்
நேரு | |
மஹலனோபிஸ் | |
அமர்த்தியாகுமார் சென் | |
P.R பிரமானந்தா |
Question 126 |
V.K.R.V ராவ் கீழ்க்கண்ட எந்த கருத்துக்களில் ஆர்வமுடையவராக இருந்தார்?
- தேசிய வருமானம்
- உணவு, ஊட்டச்சத்து மற்றும் பண்டங்களின் பகிர்வு
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பகிர்வு
- சுற்றுப்புற சுழலியல்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 126 Explanation:
(குறிப்பு: V.K.R.V ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆவார்.)
Question 127 |
- கூற்று 1: V.K.R.V. ராவ் J.M.கீன்சின் மாணவர் மட்டுமல்லாது கோலின் கிளார்க் அவர்களுடன் பணி செய்து இருக்கிறார்.
- கூற்று 2: H.W. சிங்கர், "கீன்சின் மாணவர்களில் சிறந்தவராக V.K.R.V ராவ் அவர்களைக் கருதுகிறார்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 127 Explanation:
(குறிப்பு: தேசிய வருமான கணக்கீட்டு முறையின் வாயிலாக ராவ் ஒரு நடைமுறைப் பொருளாதாரவாதியாக நினைவில் கொள்ளப்படுகிறார்.)
Question 128 |
"முழு வேலைவாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்" என்ற ஆய்வுக் கட்டுரை யாருடையது?
J.C. குமரப்பா | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
V.K.R.V ராவ் |
Question 128 Explanation:
(குறிப்பு: "முழு வேலைவாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்" என்ற கட்டுரை வேலைவாய்ப்புத் துறையில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.)
Question 129 |
"இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு?" என்ற புத்தகத்தை இயற்றியவர்
J.C. குமரப்பா | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
V.K.R.V ராவ் |
Question 129 Explanation:
(குறிப்பு: 1938ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவிற்கும், தனிநபர் ஊட்டச்சத்து குறைவிற்கும் பின்வரும் காரணங்களை விளக்குகிறார்.
முறையற்ற நிலவுடைமை, நிலம் துண்டாடல், நிலம் பிரிக்கப்படுதல்.
பயிர்களுக்கு குறைவான நீர்பாசன வசதி கிடைத்தல்
பேரளவு தொழில்துறை இன்மையால், வேளாண்மையில் அதிக மக்கள்தொகை அழுத்தம் ஏற்படுகின்றது.
முதலீடு இன்மை
நாணயத்தில் சுயாட்சி கொள்கையின்மை மற்றும் பணம் பற்றிய கருத்துக்களில் தங்கத்தை உடமையாகக் கொள்வதை ஊக்குவித்தது.)
Question 130 |
'முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு’ என்ற ராவின் புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு
1948 | |
1950 | |
1952 | |
1958 |
Question 130 Explanation:
(குறிப்பு: ராவின் இந்த புத்தகம் பேரியியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு வழங்கியது.)
Question 131 |
கீழ்க்கண்டவர்களுள் J.M.கீன்சின் அடிகளை பின்பற்றியவர் யார்?
J.C. குமரப்பா | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
V.K.R.V ராவ் |
Question 131 Explanation:
(குறிப்பு: சிந்தனையாளர், ஆசிரியர், பொருளாதார ஆலோசகர் மற்றும் நேரடி கொள்கை வடிவமைப்பாளர் என்ற பார்வையில் ராவ் கீன்சின் அடிகளை பின்பற்றினார்.)
Question 132 |
கீழ்க்கண்டவற்றுள் ராவ் உருவாக்கிய தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்கள் எவை?
- டெல்லி பொருளாதாரப் பள்ளி (டெல்லி)
- பொருளாதார வளர்ச்சிக் கழகம் (டெல்லி)
- சமூக பொருளாதார மாற்றத்திற்கான கழகம் (பெங்களூரு)
- பம்பாய் பொருளாதாரப் பள்ளி (பம்பாய்)
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 133 |
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு
1998 | |
2000 | |
2008 | |
2010 |
Question 133 Explanation:
(குறிப்பு: நோபல் குழு, சென்னின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிடும்போது, அவருடைய சமூகத் தெரிவு கொள்கை, வளர்ச்சிப் பொருளாதாரம், வறுமை மற்றும் பஞ்சங்கள் பற்றிய ஆய்வு மற்றும் உரிமங்கள் திறன் முன்னேற்றம் பற்றிய கருத்து ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.)
Question 134 |
சென்னின் வறுமை மற்றும் பஞ்சம்: உரிமம் மற்றும் இழப்பு பற்றிய கட்டுரை வெளியிடப்பட்ட ஆண்டு
1981 | |
2000 | |
2008 | |
2010 |
Question 135 |
"திறன் என்பது அடிப்படை கச்சாப் பொருட்களை மக்கள் நலத்திற்காக மாற்றி அமைப்பது" என்பது யாருடைய கருத்து
J.C. குமரப்பா | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
அமர்த்தியாகுமார் சென் |
Question 135 Explanation:
(குறிப்பு: ஊட்டச்சத்து உணவு, மருத்துவம், உடல் நலப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பஞ்சத்தின் போது வழங்கப்படும் உணவு ஆகியவை நமது உரிமைகளாக மாற வேண்டும் என்று சென் கருதினார். இத்தகைய உரிமைகள் வழங்குவதில் ஏற்பட்ட தோல்வியே பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகும் என அவர் கருதினார்.)
Question 136 |
"தொழில்நுட்பத் தெரிவு" என்ற புத்தகத்தை இயற்றியவர்
J.C. குமரப்பா | |
J.M. கீன்ஸ் | |
H.W. சிங்கர் | |
அமர்த்தியாகுமார் சென் |
Question 136 Explanation:
(குறிப்பு: இந்த புத்தகத்தில் மூலதன செறிவு நுட்ப முறையில், உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று சென் குறிப்பிடுகிறார்.)
Question 137 |
- கூற்று 1: மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்து முன்னேறாத நிலையிலிருந்த ஒரு பொருளாதாரம் முன்னேறிய நிலையை அடைவது பொருளாதார வளர்ச்சி எனப்படும்.
- கூற்று 2: தலா வருமானத்தைப் பொறுத்து ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நாட்டு நலன் ஆகியவை அதிகரிப்பது பொருளாதார முன்னேற்றம் எனப்படும்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 138 |
ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு என்பது
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
நிகர உள்நாட்டு உற்பத்தி | |
மொத்த தேசிய உற்பத்தி | |
நிகர தேசிய உற்பத்தி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 138 questions to complete.
Lots of thankyou winmeen team…this test gave me strong confident..