MCQ Questions

இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் 11th Economics Lesson 2 Questions in Tamil

11th Economics Lesson 2 Questions in Tamil

2] இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்

1) வாஸ்கோடகாமா இந்தியாவில் உள்ள கோழிக்கோடுக்கு எந்த ஆண்டு வருகை புரிந்தார்?

A) மே 20, 1498

B) மே 22, 1498

C) மே 24, 1498

D) மே 26, 1498

(குறிப்பு – வாஸ்கோடகாமா இந்தியாவில் உள்ள கோழிக்கோடுக்கு மே 20, 1498 ஆம் ஆண்டில் வந்தார். அவர் வந்ததற்கு பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பா உடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது)

2) 1510 இல் இருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர்கள் யார்?

A) ஆங்கிலேயர்

B) போர்த்துகீசியர்கள்

C) பிரெஞ்சுக்காரர்கள்

D) டச்சுக்காரர்கள்

(குறிப்பு – போர்ச்சுகீசியர்கள் 1510 இல் இருந்து கோவா உடன் வாணிகம் செய்து வந்தனர். 1601இல் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டவுடன் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெருங்கடல் வழி வாணிகத்தை தொடங்கினர்)

3) சர் தாமஸ் ரோ, ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க எந்த ஆண்டு அனுமதி பெற்றார்?

A) 1610 இல்

B) 1612 இல்

C) 1614 இல்

D) 1616 இல்

(குறிப்பு – 1614இல் சர் தாமஸ் ரோ, ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றதுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை மெதுவாக ஆக்கிரமிப்பு செய்தார்)

4) எந்த ஆண்டு ஆங்கில பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி ஒரு சட்டம் இயற்றியது?

A) 1857 இல்

B) 1858 இல்

C) 1859 இல்

D) 1860 இல்

(குறிப்பு – பிளாசி போருக்கு நூறு ஆண்டுகளுக்குப்பின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. 1858 இல் ஆங்கில பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி ஒரு சட்டம் இயற்றியது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அதிகாரம் ஆங்கிலேயருக்கு மாற்றப்பட்டபோது இந்திய பொருளாதார நிலைமையை முழுவதுமாக மாற்ற இயலவில்லை)

5) 1757 முதல் 1813 வரையிலான காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வணிக மூலதனக் காலம்

B) தொழில் மூலதனக் காலம்

C) நிதி மூலதனக் காலம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – பிரிட்டன் நாடு இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழித்து வந்தது. காலனி ஆதிக்கச் உழைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்று பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாக பிரித்தனர். அவை வணிக மூலதனக் காலம், தொழில் மூலதனக் காலம் மற்றும் நிதி மூலதனக் காலம் ஆகும்)

6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம், இந்திய மற்றும் கிழக்கிந்திய பொருட்களை ஒருவர் முழுமையாக வாணிபம் செய்து லாபம் ஈட்டுவதே ஆகும்.

II. இந்த காலகட்டத்தில் பிரிட்டனில் தொழில் மூலதனத்தை முன்னேற்ற, இந்தியா ஒரு மிக முக்கிய சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்திய கம்பெனியால் கருதப்பட்டது.

III. கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று, ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1750 மற்றும் 1760 களில் வங்காளமும், தென்னிந்தியாவும் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் நோக்கம் நிறைவேறியது. உபரிகளை இங்கிலாந்திற்கு கடத்துவதில், இந்த நிர்வாகம் வெற்றி பெற்றது. இந்திய தலைவர்கள் இப்பிரச்சினையை சுரண்டலுடன் ஒப்பிட்டனர்)

7) 1813 முதல் 1858 வரையிலான காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வணிக மூலதனக் காலம்

B) தொழில் மூலதனக் காலம்

C) நிதி மூலதனக் காலம்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – 1757 முதல் 1813 வரையிலான காலம் வணிக மூலதனக் காலம் என்றழைக்கப்படுகிறது. அதேபோல, 1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதனக் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது. இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன)

8) இந்திய கைவினை பொருட்களின் நசிவு காலம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாகுபாடான சுங்க வாரிக்கொள்கை மூலம் பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே இந்தியக் கைவினை பொருட்களை அழித்தது.

II. நவாப் மற்றும் அரசர்கள் காலம் முடிவுக்கு வந்தவுடன், இந்திய கைவினைப் பொருட்களை காப்பாற்ற எவருமில்லாத நிலை ஏற்பட்டது.

III. இந்தியாவில் ரயில்வே அறிமுகம் ஆனப்பின் பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்திய கைவினைப் பொருட்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருந்தது.இந்திய ஏற்றுமதியில் கையால் நெய்யப்பட்ட பருத்தி, பட்டு ஆடைகள், காலிகோக்கள், அலங்கார பொருட்கள் மற்றும் மர சிற்பங்கள் முதன்மையானவையாக இடம் பெற்றிருந்தன. இந்திய கைவினைப் பொருட்களின் இயந்திர தயாரிப்பு பொருட்களின் போட்டியிட முடியவில்லை. இவையெல்லாம் இந்திய கைவினைப் பொருட்கள் நசிவதற்கான காரணமாக அமைந்தது)

9) சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் கீழ்க்காணும் எந்த நிலவுடைமை முறை நடைமுறையில் இருந்தன?

I. ஜமீன்தாரி முறை

II. மஹல்வாரி முறை

III. இராயத்துவாரி முறை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – நிலவுடைமை முறை என்பது நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியதாகும் பிற முறைகளிலிருந்து நிலவுடைமை முறை பின்வரும் விதங்களில் வேறுபடுகிறது. நிலம் யாருக்கு சொந்தமானது, நிலத்தில் யார் அறுவடை செய்வது, நில வருவாய் அரசுக்கு செலுத்துவதற்கு பொறுப்பானவர் யார். இந்த வினாக்களின் அடிப்படையில் சுதந்திரத்திற்கு முன் மூன்று விதமான நிலவுடைமை முறைகள் இருந்தன.)

10) காரன்வாலிஸ் எந்த ஆண்டு நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்?

A) 1791 ஆம் ஆண்டு

B) 1793 ஆம் ஆண்டு

C) 1795 ஆம் ஆண்டு

D) 1797 ஆம் ஆண்டு

(குறிப்பு – லார்டு காரன்வாலிஸ் 1793 இல் நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு ஜமீன்தாரி முறையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது. இந்த முறையில் உள்ள நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தார்களும் நிலத்தின் சொந்தக்காரர்களாக அறிவிக்கப்பட்டு நில வருவாயை அரசுக்கு செலுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டது.)

11) கீழ்காணும் எது நிலச்சுவான்தாரா முறை என அழைக்கப்படுகிறது?

A) ஜமீன்தாரி முறை

B) மஹல்வாரி முறை

C) இரயத்துவாரி முறை

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஜமீன்தாரி முறை அல்லது நிலச்சுவான்தாரா முறையில் நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தார்களும் நிலத்தின் சொந்தக்காரர்களாக அறிவிக்கப்பட்டு நில வருவாயை அரசுக்கு செலுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டது. வசூலிக்கப்பட்ட நிலவருவாயில் 11இல் 10பங்கு அரசுக்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் மீத தொகை ஜமீன்தார்களுக்கான ஊதியமாகவும் அறிவிக்கப்பட்டது)

12) கீழ்க்காணும் எந்த முறையில் கிராம மக்களாலானக்குழுவினர் நிலச்சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர்?

A) ஜமீன்தாரி முறை

B) மஹல்வாரி முறை

C) இரயத்துவாரி முறை

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – மஹல்வாரி முறை அல்லது இனவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த முறையில் கிராம மக்களாலானக்குழுவினர் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர். அந்த குழுவினர் நிலத்தை விவசாயிகளிடம் பிரித்துக் கொடுத்து அவர்களிடமிருந்து வரி பெற்று அரசுக்கு செலுத்தினர்)

13) இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?

A) ஆந்திரா

B) தமிழ்நாடு

C) மகாராஷ்டிரம்

D) பஞ்சாப்

(குறிப்பு – ரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை முதன் முதலில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மகாராஷ்டிரா, குஜராத், அசாம், கூர்க், கிழக்கு பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது)

14) கீழ்க்காணும் எந்த முறையில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை, நிலத்துக்கான கட்டுப்பாடு போன்றவை நில உரிமையாளரிடம் இருந்தது?

A) ஜமீன்தாரி முறை

B) மஹல்வாரி முறை

C) இரயத்துவாரி முறை

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – ரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறையில் இடத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுப்பாடு நில உரிமையாளரிடம் இருந்தது.உரிமையாளர்களிடம் நேரடியான உறவு இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் இந்த முறை குறைந்த அடக்குமுறை உடையதாக இருந்தது)

15) 19ம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய முதலீட்டாளர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பல முன்னோடி தொழில் நிறுவனங்களை இந்தியாவில் ஆரம்பித்தனர்.

II. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தொழில் புரட்சிக்கு வித்திட்ட போதும் அவர்கள் லாபத்தை ஈட்டுவதையே முதன்மை குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

III. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் 194 ஆலைகளும் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இருந்தன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆங்கிலேயர்கள் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலக்கரி உற்பத்தி ஆண்டுக்கு 6 மில்லியன் டன்களாக உயர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் 194 பருத்தி ஆடைகள் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இந்தியாவில் இருந்தன)

16) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் எத்தனை சணல் ஆலைகள் இருந்தன?

A) 32 ஆலைகள்

B) 34 ஆலைகள்

C) 36 ஆலைகள்

D) 38 ஆலைகள்

(குறிப்பு – பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தொழில் புரட்சிக்கு வித்திட்ட போதும் அவர்கள் லாபத்தை ஈட்டுவதையே முதன்மை குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர்)

17) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் தொழில் மயமாக்கலை ஊக்குவித்தது.

கூற்று 2 – 1914 ஆம் ஆண்டில் முதல் உலகப் போர் வெடிக்கும் வரை இந்தியாவில் பழைய-புதிய நிறுவனங்கள் மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சியை பராமரித்து வந்தனர்.

கூற்று 3 – இரும்பு, எஃகு தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் இருபதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இருபதாம் நூற்றாண்டு காலத்தில் 70க்கும் மேற்பட்ட பருத்தி ஆலைகளும், 30க்கும் மேற்பட்ட சணல் ஆலைகளும் அமைக்கப்பட்டன. நிலக்கரி உற்பத்தி இரு மடங்கானது. ரயில்வே அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது)

18) 1924 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் கீழ்காணும் எந்த தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன?

A) பருத்தி நெசவாலைகள்

B) சணல், தீப்பெட்டி

C) இரும்பு, எஃகு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – 1924 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களான இரும்பு, எஃகு, பருத்தி நெசவாலைகள், சணல், தீப்பெட்டி, சர்க்கரை, காகிதம் மற்றும் காகித கூழ் நிறுவனங்கள் போன்றவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட தொழில்கள் விரிவடைய வழிவகுத்தது)

19) ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளாக கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. ஆங்கில பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் மூலதன ஆக்கத்தை குன்றச் செய்து வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது.

II. நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயர்களின் மூலதன முன்னேற்றத்திற்கு நிதியுதவி செய்தன.

III. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்த இருந்தபோதும், இந்திய வேளாண்மை தொழில் தேக்கமடைந்து நலிவுற்றது.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மற்றும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) இவை அனைத்தும் சரியானது

(குறிப்பு – ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தால் தோட்டக்கலை, சுரங்கங்கள், சணல் ஆலைகள், வங்கிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முதலாளித்துவ நிறுவனங்களை ஊக்குவித்தது, அதை வெளிநாட்டவர்கள் நிர்வகித்தார்கள்.இத்தகைய நடவடிக்கைகளால் இந்திய வளங்கள் மேலும் சுரண்டப்பட்டன)

20) ஆசியாவின் மூன்றாவது முக்கிய பொருள் ஆதாரமாக விளங்குவது கீழ்க்கண்ட நாடுகளுள் எது?

A) சீனா

B) இலங்கை

C) இந்தியா

D) வங்கதேசம்

(குறிப்பு – ஆசியாவின் மூன்றாவது முக்கிய பொருளாதாரம் இந்தியா ஆகும். 70 ஆண்டுகால சுதந்திர வாழ்க்கை இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.)

21) இந்தியாவின் தொழில் கொள்கை கீழ்காணும் எந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவில்லை?

A) 1948 இல்

B) 1956 இல்

C) 1975 இல்

D) 1991 இல்

(குறிப்பு – இந்திய தொழில் கொள்கையானது கீழ்காணும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. அவையாவன 1948இல், 1956இல், 1977இல், 1980இல், 1990இல் மற்றும் 1991இல் ஆகும். ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறிப்பாக தொழில்மயமாதலை சார்ந்துள்ளது. சுதந்திரம் அடைந்த போது இந்தியா பலவீனமான தொழில் அடிப்படையை பெற்றிருந்தது. ஆகையால் சுதந்திரம் பெற்றதற்கு பிந்தைய காலத்தில் இந்திய அரசு வலிமையான தொழில் அமைப்பை உருவாக்குவதற்கான சிறப்பு வலியுறுத்தல்களை மேற்கொண்டது)

22) இந்தியா தனது முதல் தொழில் கொள்கையை எந்த ஆண்டு அறிவித்தது?

A) ஏப்ரல் 6,1948 இல்

B) மே 6,1948 இல்

C) ஜூன் 6,1948 இல்

D) ஜூலை 6,1948இல்

(குறிப்பு – இந்திய அரசு தொழில்மயமாதலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்தது. ஆகையால் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தனது முதல் தொழில் கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதாகும்)

23) இந்தியாவின் 1998ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின் தீர்மானங்களில் கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

A) இந்திய தொழில்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டன.

B) இந்த கொள்கை குடிசைத் தொழில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழில்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டது.

C) இந்திய அரசு பிற நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வெளிநாட்டு முதலீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவில்லை.

D) இருப்புப் பாதைகள் மற்றும் இரும்புத்தாது முதலான கனிம வளங்களுக்கான பிரத்யேக உரிமையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏகபோகம் பெற்றிருந்தன

(குறிப்பு – 1948 ஆம் ஆண்டின் இந்திய அரசின் தொழில் கொள்கையின்படி, இந்திய அரசு பிற நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வெளிநாட்டு முதலீட்டில் முக்கியத்துவத்தை ஊக்குவித்தாலும், அதன் முழு கட்டுப்பாடு இந்தியர்களின் கரங்களிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது)

24) 1948ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின்படி இந்திய தொழில்கள் கீழ்காணும் எந்த வகையாக பிரிக்கப்படவில்லை?

A) பொதுத்துறை

B) பொது மற்றும் தனியார் துறை

C) தனியார் மற்றும் கூட்டுறவு துறை

D) கட்டுப்படுத்தப்படாத தனியார் துறை

(குறிப்பு – 1948ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின்படி இந்திய தொழில்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டன.அவை பொதுத்துறை(மூலத்தொழில்கள்), பொது மற்றும் தனியார் துறை (முக்கிய தொழில்கள்), கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன ஆகும்

25) கீழ்க்காணும் எந்த ஆண்டின் தொழில் கொள்கை பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது?

A) 1948ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

B) 1956ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

C) 1977ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

D) 1991ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

(குறிப்பு – 1956 ஆம் ஆண்டு தொழில்துறை தீர்மானம் கொள்கை பொதுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதேநேரத்தில் தனியார் துறையையும் நியாயமான முறையில் வழிநடத்தியது.அரசாங்கம் குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவித்து நேரடி மானியம் அளித்து பெருமளவு உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு விதமான வரிகளையும் அரசு விதித்தது)

26) 1956ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின்படி, தொழில்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டது?

A) 3 வகைகள்

B) 4 வகைகள்

C) 5 வகைகள்

D) 6 வகைகள்

(குறிப்பு – 1956ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின்படி, தொழில்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டது. ரயில்வே, வான்வழி போக்குவரத்து ராணுவத் தளவாடங்கள், வெடிமருந்துகள் இரும்பு மற்றும் எஃகு, அணு ஆற்றல் போன்ற 17 தொழில்கள் ஒரு வகையாகவும், மாநில அரசு சொந்தமாக கொண்டிருக்கும் தொழில்களுக்கு தனியார்துறை துணையாக இருக்கும் என 12 தொழில்களையும், மூன்றாவது பிரிவாக மேற்கண்ட தொழில்கள் தவிர்த்து ஏனைய தொழில்கள் தனியார் துறையோ அல்லது அரசுத் துறையோ வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்பட தடை இல்லாதவையாக பிரிக்கப்பட்டது.)

27) 1960-61இல் எத்தனை மாவட்டங்களில்” வழி நடத்தும் திட்டம்” எனும் பெயரில் புதிய தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது?

A) ஆறு மாவட்டங்கள்

B) ஏழு மாவட்டங்கள்

C) எட்டு மாவட்டங்கள்

D) ஒன்பது மாவட்டங்கள்

(குறிப்பு – பசுமைப் புரட்சி என்பது வேளாண் துறையில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1960க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு, புதிய தொழில்நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன. இதற்கு ஆரம்பமாக 1960-61இல் ஏழு மாவட்டங்களில் “வழி நடத்தும் திட்டம் ” எனும் பெயரில் புதிய தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. இது அதிக விளைச்சல் தரும் ரகங்களை (HYVP)உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆகும்)

28) பசுமை புரட்சியின் சாதனைகளாக கீழ்கண்டவகைகளில் எவை கூறப்படுகிறது?

I. புதுமையான உத்திகளின் பெரிய சாதனை, முதன்மை பயிர்களான கோதுமை மற்றும் நெல் போன்ற பயிர்களின் உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது ஆகும்.

II. அதிக விளைச்சல் தரக்கூடிய வகைகளான நெல், கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற பயிர்களுக்கு மட்டுமே பசுமைபுரட்சி முக்கியத்துவம் கொடுத்தது.

III. சிறந்த விதைகள் மூலமாக அனைத்து பயிர்களின் உற்பத்தி திறனும் பெருகியது.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பசுமைப் புரட்சியின் மூலம், வணிக பயிர்கள் அல்லது பணப் பயிர்களான கரும்பு, பருத்தி சணல், எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்தது. வேளாண்மைக்கு தேவையான கருவிகளான டிரா டாக்டர்கள் இயந்திரங்கள் அதிரடிப் ஆண்கள் மற்றும் பம்பு செட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் வளர்வதற்கு பசுமைப்புரட்சி நேரடிக் காரணமாக விளங்கியது)

29) பசுமை புரட்சி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பசுமை புரட்சியின்போது வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இந்த வங்கிகள் விவசாயிகளுக்கு எளிமையான முறைகளில் கடன்கள் வழங்கின.

கூற்று 2 – பசுமை புரட்சியின் போது பண்ணைகள் இயந்திரமயமாக்கப்பட்ட தால் பஞ்சாப் மற்றும் அரியானாவின் சில பகுதிகளைத் தவிர சில கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்களுக்கான வேலையின்மை அதிகரித்தது,

கூற்று 3 – பசுமை புரட்சியின்போது, பல்வகைப் பயிர் வளர்ப்பு முறை மற்றும் அதிக அளவில் வேதி உரங்களைப் பயன்படுத்தியதால் உடைப்பிற்கான தேவை அதிகரித்தது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பெரு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இடையே ஆன வருமான இடைவெளி அதிகரித்தது. நீர்ப்பாசனம் மற்றும் மழைப்பொழிவை நம்பி இருக்கும் பகுதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்தது இக்கருத்துக்கு மாற்றுக் கருத்தும் உள்ளது.பசுமை புரட்சியின் தந்தை என M.S. ஸ்வாமிநாதன் அழைக்கப்படுகிறார்.)

30) பொருத்துக

I. மஞ்சள் புரட்சி – a) பெட்ரோலியம்

II. நீல புரட்சி – b) இறால்

III. கருப்பு புரட்சி – c) மீன்

IV. இளஞ்சிவப்பு புரட்சி – d) எண்ணெய் வித்துக்கள்

A) I-d, II-c, III-a, IV-b

B) I-b, II-a, III-c, IV-d

C) I-a, II-c, III-b, IV-d

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – வெண்மை புரட்சி, நீலப்புரட்சி, மஞ்சள் புரட்சி, கருப்பு புரட்சி, வெள்ளி புரட்சி, இளஞ்சிவப்பு புரட்சி என வேளாண்மையில் புரட்சிகள் பல உள்ளன.அவை வானவில் புரட்சி என அழைக்கப்படுகிறது.)

31) இரண்டாவது பசுமைப் புரட்சியின் நோக்கம் 2020இல் உணவு பயிர் உற்பத்தியை____________ உயர்த்துதல் ஆகும்.

A) 300 மில்லியன் டன்களாக

B) 400 மில்லியன் டன்களாக

C) 500 மில்லியன் டன்களாக

D) 600 மில்லியன் டன்களாக

(குறிப்பு – அதிக வேளாண்மை வளர்ச்சிக்காக இந்திய அரசு இரண்டாவது பசுமைப் புரட்சியை செயல்படுத்தியது. இந்த இரண்டாவது புரட்சியின் முக்கிய நோக்கம் 2006 மற்றும் 2007ம் 214மில்லியன் டன்களாக இருந்த உணவுப் பயிர் உற்பத்தியை, 2020இல் 400 மில்லியன் டன்களாக உயர்த்துவது ஆகும்)

32) இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான தேவைகளுள் கீழ்கண்டவற்றில் எது தவறானது?

A) ஒரு ஏக்கருக்கு உற்பத்தியை இரண்டு மடங்காக தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தல்.

B) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பை உறுதி செய்தல்.

C) பாசன வசதிகளை துரிதப்படுத்துவதிலும், நீராதாரங்களை நிர்வகிப்பதிலும் தனியார் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

D) நதிநீர் இணைப்பின் மூலம் உபரி நீரை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்.

(குறிப்பு – இரண்டாவது பசுமைப் புரட்சியின் மூலம் வேளாண்மையின் வளர்ச்சி விகிதத்தை அடுத்த 15 ஆண்டுகளில் 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பாசன வசதிகளை துரிதப்படுத்துவதிலும், நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதிலும், அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

33) பெரிய அளவிலான தொழிற்சாலைகள் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பெரிய அளவிலான தொழிற்சாலை என்பது பெரிய உள்கட்டமைப்பு, அதிக மனித சக்தி, அதிக மூலதன சொத்துக்களை உள்ளடக்கியதாகும்.

கூற்று 2 – பெரிய அளவிலான தொழிற்சாலை என்பது, பல தொழிற்சாலைகளை கண்காணித்து ஒரே தொழிற்சாலையின் கீழ் உள்ளடக்குவதாகும்.

கூற்று 3 – இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, நெசவுத் தொழிற்சாலை, ஆட்டோமொபைல் தொழிற்சாலை போன்றவை மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கடந்த சில வருடங்களாக தகவல் தொழில் தொழிலில் அபரிமித வளர்ச்சி மற்றும் அதன் அதிக வருமான உருவாக்கம் போன்ற காரணங்களினால் தகவல் தொழில்நுட்ப தொழில்களும் பெரிய அளவிலான தொழில்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரமானது பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு பணம் உருவாக்கம், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றுக்கு பெரும் தொழிற்சாலையை பெரிதும் நம்பியுள்ளது.)

34) இந்தியாவின் முதல் எஃகு தொழிற்சாலை எந்த இடத்தில் நிறுவப்பட்டது?

A) ஜார்கண்ட்

B) கர்நாடகா

C) மஹாராஷ்டிரம்

D) மத்தியபிரதேசம்

(குறிப்பு – முதல் எஃகு தொழிற்சாலை ஜார்கண்ட் மாநிலம், ஜாரியாவிலுள்ள, குல்டி என்னும் இடத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள ‘வங்காள இரும்பு தொழில் கம்பெனி ‘1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)

35) பெரிய அளவிலான இரும்பு எக்கு தொழிற்சாலையான, TISCO ஜாம்ஷெட்பூரில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A) 1905 இல்

B) 1906 இல்

C) 1907 இல்

D) 1908 இல்

(குறிப்பு – 1907 இல் பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலையான, TISCO ஜாம்ஷெட்பூரில் நிறுவப்பட்டது. அதனைத்தொடர்ந்து JISCO தொழிற்சாலை 1919 ஆம் ஆண்டு பான்பூரில் தொடங்கப்பட்டன. இவை இரண்டும் தனியார் துறை ஆகும்)

36) இந்தியாவில் முதன் முதலில் பொதுத்துறை நிறுவனம் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?

A) அமராவதி

B) அகமதாபாத்

C) பத்ராவதி

D) கான்பூர்

(குறிப்பு – முதல் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள, விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு தொழில் ஆகும். பெரும் நிறுவனங்கள் அதிகம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டிருக்கும் என பொருளியல் கோட்பாடுகள் கூறியுள்ளன)

37) பொதுத்துறையில் எஃகு நிறுவனங்களின் இடங்களையும் அவை அமைய உதவி செய்த நாடுகளையும் பொருத்துக.

I. ரூர்கேலா – a) ரஷ்ய அரசு

II. பிலாய் – b) இங்கிலாந்து அரசு

III. துர்காபூர் – c) ஜெர்மனி

IV. பர்னபூர் – d) தனியார் துறை

A) I-c, II-a, III-b, IV-d

B) I-b, II-a, III-c, IV-d

C) I-a, II-c, III-b, IV-d

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – ரூர்கேலா – ஜெர்மனி, பிலாய் – ரஷ்யா, துர்காபூர் – இங்கிலாந்து, பொகாரோ – ரஷ்யா, பர்னபூர் – தனியார்துறை, விசாகப்பட்டினம் – ரஷ்யா, பெரன்பூர் – தனியார்துறை, விஜய்நகர் – இந்திய அரசு போன்றவை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், அவை இருக்கும் இடங்களும் மற்றும் அவை அமைய உதவி செய்த நாடுகளும் ஆகும்)

38) கீழ்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ள பொதுத்துறை எஃகு நிறுவனம், எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது?

A) துர்காபூர்

B) விசாகப்பட்டினம்

C) பொகாரோ

D) சேலம்

(குறிப்பு – சேலம் (தமிழ்நாடு) மற்றும் விஜய் நகர்(கர்நாடகா) போன்றவை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை எஃகு நிறுவனங்கள் ஆகும்.மேற்கண்ட அனைத்தும் SAIL ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது TIGCO தவிர மற்ற அனைத்து முக்கிய இரும்பு எஃகு நிறுவனங்கள் பொதுத் துறையின் கீழ் இயங்குகின்றன)

39) இந்தியா எஃகு உற்பத்தியில் உலக அளவில் எந்த இடத்தில் உள்ளது?

A) ஆறாவது

B) ஏழாவது

C) எட்டாவது

D) ஒன்பதாவது

(குறிப்பு – இந்திய எஃகு நிறுவனம் (SAIL) 1974 இல் நிறுவப்பட்டது. மேலும் எஃகு துறையை மேம்படுத்தும் பொறுப்பும் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய எஃகு உற்பத்தியில் உலக அளவில் எட்டாவது உயரிய இடத்தில் உள்ளது)

40) மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரேஷரா எனும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட சணல் தொழிற்சாலை முதன் முறையாக எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1855 இல்

B) 1860 இல்

C) 1865 இல்

D) 1870 இல்

(குறிப்பு – இந்தியா போன்ற நாட்டிற்கு சணல் தொழில் மிக முக்கியமானதாகும். காரணம் இத்தொழில் மூலம் வெளிநாட்டு செலவாணி ஈட்டப்படுகிறது. மேலும் இது கணிசமான வேலை வாய்ப்பை அளிக்கிறது. 1855ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரேஷ்ரா என்னும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட சணல் தொழிற்சாலை முதன்முதலாக உருவாக்கப்பட்டது)

41) மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி (MUMBAI’S SPINNING AND WEAVING CO) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1852 இல்

B) 1854 இல்

C) 1856 இல்

D) 1858 இல்

(குறிப்பு – இந்தியாவில் நெசவு தொழில் மிகப் பழமையானதாகும். மேலும் அதிக தொழிலாளர்களையும் கொண்ட துறையாகும். கல்கத்தாவிற்கு அருகில் உள்ள குளோஸ்டர் துறைமுக நகரில் 1818ஆம் ஆண்டு முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆலை சிறப்பாக இயங்கவில்லை. அடுத்ததாக 1854 ஆம் ஆண்டு, மும்பையில் கேஜி என் டேபர் என்பவரால் மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி உருவாக்கப்பட்டது)

42) இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி அளவில், மூன்றில் ஒரு பங்கு அளவை எந்த மாநிலம் உருவாக்குகிறது?

A) உத்தரப் பிரதேசம்

B) மகாராஷ்டிரா

C) ஜார்கண்ட்

D) மத்திய பிரதேசம்

(குறிப்பு – இந்தியாவில் வேளாண் சார்ந்த தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரை தொழில் உள்ளது. உலக அளவில் இந்தியா பெரிய அளவிலான சர்க்கரை உற்பத்தியாளராகவும், பெரிய அளவிலான நுகர்வோராகவும் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவை மகாராஷ்டிர மாநிலம் மட்டுமே வழங்குகிறது. அடுத்தபடியாக உத்தரபிரதேச மாநிலம் இருக்கிறது.

43) 1812 ஆம் ஆண்டு, எந்த இடத்தில் காகித தொழிற்சாலை உருவாக்கப்பட்டது?

A) மேற்கு வங்கம்

B) ஜார்கண்ட்

C) மத்தியபிரதேசம்

D) மஹாராஷ்ட்ரம்

(குறிப்பு – 1812 இல் மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் ஊரில் இயந்திரத்தால் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள காகிதம் உற்பத்தி தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா 15 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி தயாரிக்கும் உரத்தொழிலானது, உலகின் மூன்றாவது மிகப் பெரிய தொழிலாக உள்ளது)

44) பொருத்துக

I. சணல் தொழிற்சாலை – a) செராம்பூர்

II. துணி ஆலை – b) குளோஸ்டர்

III. காகித தொழிற்சாலை – c) ஜாம்ஷெட்பூர்

IV. இரும்பு தொழிற்சாலை – d) ரேஸ்ரா

A) I-d, II-b, III-a, IV-c

B) I-b, II-a, III-c, IV-d

C) I-a, II-c, III-b, IV-d

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – மேற்கண்டவை இந்தியாவிலுள்ள பெரிய தொழிற்சாலைகள் ஆகும். சணல் தொழிற்சாலை மேற்குவங்கத்தில் உள்ள ரேஷ்ரா என்னும் இடத்திலும், துணி ஆலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள குளோஸ்டர் துறைமுக நகரிலும், காகித தொழிற்சாலை மேற்குவங்கத்தில் உள்ள செராம்பூர் நகரிலும், இரும்பு தொழிற்சாலை ஜாம்ஷெட்பூரிலும் அமைந்துள்ளது)

45) இந்தியாவின் பருத்தி தொழில் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இந்தியாவில் நெசவு தொழில் மிகப் பழமையானதாகும். இது அதிக தொழிலாளர்களை கொண்ட துறை ஆகும்.

II. இந்தியாவில் நெசவுத் தொழிலானது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய அளவிலானதும் பரந்துபட்ட அளவிலும் வளர்ந்துள்ளது.

III. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம், நெசவு தொழில் மூலம் இந்தியாவிற்கு கிடைக்கிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியாவில் நெசவுத் தொழிலில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமும், மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் 20% ஏற்றுமதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கும் நெசவு தொழில் துறையின் மூலம் கிடைக்கிறது. கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள குளோஸ்டர் துறைமுகநகரில் 1818 ஆம் ஆண்டில் முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. எனினும் இந்த ஆலை சிறப்பாக இயங்கவில்லை.)

46) இயற்கையான பட்டு தயாரிப்பில் உலக அளவில் இந்தியா எந்த இடத்தில் வகிக்கிறது?

A) முதலாம் இடம்

B) இரண்டாமிடம்

C) மூன்றாமிடம்

D) நான்காமிடம்

(குறிப்பு – இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. தற்போது உலக அளவில் 16 சதவீத உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா மட்டுமே வணிக அடிப்படையிலான ஐந்து வகையான பட்டுத் துணிகளை உற்பத்தி செய்கிறது)

47) இந்தியா உற்பத்தி செய்யும் பட்டு வகைகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மல்பெரி பட்டு

II. வெப்ப மண்டல டஸ்சர் பட்டு

III. ஓக் டஸ்சர் பட்டு

IV. பட்டு எரி

V. முகா பட்டு

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – உலக அளவில் இந்தியா பட்டு உற்பத்தியில் 16 சதவீதம் அளவு கொண்டுள்ளது. இந்தியா மட்டுமே கீழ்கண்ட வணிக அடிப்படையிலான ஐந்து வகையான பட்டுத் துணிகளை உற்பத்தி செய்கிறது. அதாவது மல்பெரி பட்டு, வெப்பமண்டல டஸ்சர் பட்டு, ஓக் டஸ்சர் பட்டு, எரி பட்டு மற்றும் முகா பட்டு ஆகியன ஆகும்)

48) இந்தியாவின் எந்த மாநிலத்தில் 1889ம் ஆண்டு முதன்முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது?

A) மேற்கு வங்காளம்

B) ஜார்கண்ட்

C) அருணாச்சலப் பிரதேசம்

D) அஸ்ஸாம்

(குறிப்பு – அசாம் மாநிலத்தில் உள்ள டிக்பாய் (DIGBOI) என்னும் ஊரில் 1889 இல் வெற்றிகரமாக முதன்முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் இருப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு, எண்ணெய்யை வெளியில் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன)

49) உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்னும் நகரில் எண்ணெய் பரிவாயுக் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1952 இல்

B) 1956 இல்

C) 1958 இல்

D) 1960 இல்

(குறிப்பு – எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் (DEHRADUN) என்னும் நகரில் 1956ஆம் ஆண்டில் எண்ணெய் பரிவாயுக் கழகம் உருவாக்கப்பட்டது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் இருப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு எண்ணெய்யை வெளியில் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன)

50) இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்களின் பங்களிப்பு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் சிறுதொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொத்த புத்தாக்கங்களில் 60 முதல் 70% வரை சிறு தொழில்கள் மூலமாக கிடைக்கிறது.

II. சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களை பயன்படுத்தும் உத்தியை பயன்படுத்துகின்றன.இதனால் அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது.

III. சிறு தொழில் துறையில் உழைப்பு முதலீட்டு விகிதம் குறைவு.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களை பயன்படுத்தும் உத்தியைப் பயன்படுத்துகின்றன.இதனால் அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது. இதன் மூலமாக வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் குறைகிறது. சிறு தொழில் துறையில் உழைப்பு முதலீட்டு விகிதம் அதிகமாக உள்ளது. கைவினைத் தொழிலாளர்கள், தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள், தொழில் முனைபவர்கள், பாரம்பரிய கலைஞர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பை சிறு தொழில் துறை அளிக்கிறது)

51) சிறு தொழில்களின் வளர்ச்சியால் கீழ்க்கண்டவைகளில் எவை குறைகிறது?

I. மக்கள் தொகை நெருக்கம்

II. சேரிகளின் வளர்ச்சி

III. சுகாதாரமின்மை

IV. மாசுபாடு

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) I, II, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சிறு தொழில்கள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது. கிராம மற்றும் பின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை வேற்றுமைகளைக் களைய உதவி செய்கிறது. சிறு தொழில்களின் வளர்ச்சியினால் மக்கள் தொகை நெருக்கம், சேரிகளின் வளர்ச்சி, சுகாதாரமின்மை, மாசுபாடு ஆகியவை குறைகிறது)

52) இந்தியாவின் பொதுத்துறை வங்கி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

II. பொதுத்துறை வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் மாநில வங்கிகள் என இரு வகைப்படுத்தப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இதில் மாற்றங்கள் வரலாம். பொதுத்துறை வங்கிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவையாவன, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் மாநிலங்கள் மற்றும் அவற்றின் கூட்டு நிறுவனங்கள் என்பன ஆகும்)

53) கீழ்க்காணும் எந்த வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல?

A) பாரத ஸ்டேட் வங்கி

B) பஞ்சாப் நேஷனல் வங்கி

C) பேங்க் ஆப் பரோடா

D) ஆக்சிஸ் வங்கி

(குறிப்பு – தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நிறுவன செயல்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி(SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB), பேங்க் ஆஃப் பரோடா (BOB), ஓரியன்டல் வங்கி (OBC), அலகாபாத் வங்கி மற்றும் பல இருந்த போதிலும் பொதுத்துறை வங்கிகள் பங்குகளை விற்கும்போது தனது பங்குகளின் எண்ணிக்கையை அரசு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த வங்கிகளில் அரசாங்கம் சிறுபான்மை பங்குதாரராக மாறவும் வாய்ப்புள்ளது)

54) இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் ______________பொதுத்துறை வங்கிகள் ஆக உள்ளன.

A) 71.4 சதவீத வங்கிகள்

B) 72.9 சதவீத வங்கிகள்

C) 74.5 சதவீத வங்கிகள்

D) 73.7 சதவீத வங்கிகள்

(குறிப்பு – தனியார் வங்கிகளில் பெரும்பான்மையான பங்குகளை அரசு சாராத தனியார் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், கார்ப்பரேஷன் மற்றும் தனி நபர் வசம் உள்ளன. இந்த வங்கிகள் தனியார் நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் 72.9 சதவீத வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவும், மீதமுள்ளவை தனியாரால் நிர்வகிக்கப்படும் வங்கிகளாகவும் உள்ளன)

55) எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை பொதுத்துறை வங்கிகள் இந்தியாவில் உள்ளன?

A) 21 வங்கிகள்

B) 23 வங்கிகள்

C) 25 வங்கிகள்

D) 27 வங்கிகள்

(குறிப்பு – எண்ணிக்கை அடிப்படையில் 27 பொதுத்துறை வங்கிகளும், 22 தனியார் வங்கிகளும் இந்தியாவில் உள்ளன.தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தன்னுடைய வெவ்வேறு வங்கி ஆட்சியின் மூலம் வங்கிகளுக்கு பணம் வழங்குதல் மற்றும் சிறிய அளவிலான நிதி வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல் (SFB) ஆகிய பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளது)

56) இந்திய அரசு எந்த ஆண்டு 14 பெரிய வங்கிகளை தேசிய மயமாக்க முடிவு செய்தது?

A) ஜூலை 19, 1968 இல்

B) ஜூலை 19, 1969 இல்

C) ஜூலை 19, 1970 இல்

D) ஜூலை 19, 1971 இல்

(குறிப்பு – சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதார மேம்பாட்டு கொள்கையை கையாண்டது. இதற்காக 1951ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டு திட்டங்கள் உருவாகின. இந்திய அரசு 14 மிகப்பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 ஆம் ஆண்டு அன்று தேசிய மயமாக்க முடிவு செய்தது. 1980ஆம் ஆண்டில் அரசு மேலும் ஆறு வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது )

57) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் நோக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துதல்.

II. வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவுதல்.

III. கிராமப்புற மக்களிடையே வங்கி செயல்பாடுகளை ஊக்குவித்தல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையை கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாக கடன் அளிப்பதற்கு பேருதவியாக இருந்தன. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.தேசியமயமாக்கப்பட்ட பிறகு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பல புதிய வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட பின் வேளாண் துறை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளுக்கு தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன)

58) கீழ்க்காணும் எந்த வங்கி ஜூலை 19, 1969 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட 14 வணிக வங்கிகளுள் அல்லாதது ஆகும்?

A) இந்தியன் வங்கி

B) விஜயா வங்கி

C) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

D) பஞ்சாப் நேஷனல் வங்கி.

(குறிப்பு – ஜூலை 19, 1969ஆம் ஆண்டு அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, மத்திய வங்கி, தேனா வங்கி இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கி, யுனைடட் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன)

59) கீழ்காணும் எந்த வங்கி ஏப்ரல் 15, 1980 இல் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல?

A) ஆந்திரா வங்கி

B) விஜயா வங்கி

C) பஞ்சாப் சிந்து வங்கி

D) இந்தியன் வங்கி

(குறிப்பு – ஏப்ரல் 15, 1980 ஆம் ஆண்டு ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, நியூ பேங்க் ஆப், இந்தியா ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் சிந்து வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய ஆறு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன)

60) ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எந்த நாட்டில் இருந்து இந்தியா தருவித்துக் கொண்டது?

A) ஜப்பான்

B) சீனா

C) ரஷ்யா

D) அமெரிக்கா

(குறிப்பு – பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களை திறம்பட பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதல் என்பதாகும். ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து இந்தியா தருவித்துக் கொண்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.)

61) சிறு தொழில் நிறுவனங்கள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) சமூகத்தில் தொழில்முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகின்றன

B) சிறு தொழில் நிறுவனங்கள் வேலை தேடுவோரை, வேலை வாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.

C) மக்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய சுய தொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.

D) இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைய, சிறு தொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.

(குறிப்பு – சமூகத்தில் பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஏழை மக்களை முன்னேற்ற சிறு தொழில் நிறுவனங்கள் உதவுகின்றன. சமூகத்தின் பல்வேறு வகையான பங்கேற்பாளர்களுக்கு தேசிய வருமானத்தை மிக திறம்படவும் சமமாகவும் பங்கிடுவதில் சிறுதொழில் நிறுவனங்கள் திறமையானவை ஆகும். மேலும் பல்வேறு வகைகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரிக்க சிறு தொழில் நிறுவனங்கள் உதவுகின்றன)

62) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. குறு உற்பத்தி நிறுவனங்கள் என்பவை தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

II. நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என்பவை, தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 லட்சத்திற்கு அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தற்போதைய காலத்தில் பல்வேறு வகையான தொழில் பிரிவுகளை வகைப்படுத்த பின்வரும் பல முதலீட்டு அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் இவை காலத்திற்கு ஏற்றார்போல் மாறக் கூடியவை ஆகும். குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(MSME) என இவை அழைக்கப்படுகின்றன. குறு உற்பத்தி நிறுவனம் என்பவை முதலீடு ரூபாய் 25 லட்சத்திற்கு மிகாமலும், சிறு உற்பத்தி நிறுவனங்கள் என்பவை முதலீடு ரூபாய் 25 லட்சம் முதல் 5 கோடிக்கு மிகாமலும், நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என்பவை 5 கோடி முதல் 10 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்)

63) பொருத்துக

I. குறு உற்பத்தி நிறுவனம் – a) முதலீடு 2 லட்சம் முதல் 2 கோடி வரை

II. குறு சேவை நிறுவனம் – b) முதலீடு 25 லட்சம் முதல் 5 கோடி வரை

III. சிறு உற்பத்தி நிறுவனம் – c) முதலீடு 25 லட்சம் வரை

IV. சிறு சேவை நிறுவனம் – d) முதலீடு பத்து லட்சம் வரை

A) I-c, II-d, III-b, IV-a

B) I-b, II-a, III-c, IV-d

C) I-a, II-c, III-b, IV-d

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – குறு சேவை நிறுவனங்கள் என்பவை முதலீடு ரூபாய் 10 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவை, சிறு சேவை நிறுவனங்கள் என்பவை முதலீடு ரூபாய் 10 லட்சத்தை விட அதிகமாகவும் இரண்டு கோடிக்கு மிகாமலும் இருப்பவை, நடுத்தர சேவை நிறுவனம் என்பவை முதலீடு ரூபாய் இரண்டு கோடியை விட அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருப்பவை ஆகும்.)

64) சிறு தொழில் நிறுவனங்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) சிறுதொழில் மூலதனத்தின் தேவை குறைவு.மேலும் இந்தத் துறையிலும் செய்த முதலீட்டிற்கு காத்திருப்பு காலம் (Gestation Period) மிகக் குறைவாக இருக்கும்.

B) இந்தியாவின் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர் களையும் சுயதொழில் முனைவோர் களையும் வளர்த்தெடுக்க சிறுதொழில் உதவுகிறது.

C) சிறு தொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் அதிகம் தேவை. எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்வது அவசியமாகிறது.

D) சிறுசேமிப்பு, தொழில்முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல், அது வெளிப்படவும் பலருக்கும் பயன்படவும் சிறுதொழில் காரணமாகிறது.

(குறிப்பு – கைவினை பொருள்கள் தயாரிப்போரின் பாரம்பரிய குடும்ப திறன்களை வளர்க்க சிறு தொழில் உதவுகிறது. வளர்ந்த நாடுகளில் கைவினைப் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் அன்னிய செலவாணி மீதான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆனாலும் பெரும் தொழில்களின் அளவிற்கு விளம்பரம் செய்ய இயலாமலும் மூலதனம் திரட்ட இயலாமலும் சிறு தொழில்கள் செய்து வருவதையும் காண முடிகிறது)

65) பொருத்துக

I. முதல் ஐந்தாண்டு திட்டம் – a) மஹலனோபிஸ் மாதிரி

II. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – b) காட்கில் திட்டம்

III. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் – c) ஹாரெட் டாமர் மாதிரி

IV. ஆறாவது ஐந்தாண்டு திட்டம் – d) வறுமை ஒழிப்பு

A) I-c, II-a, III-b, IV-d

B) I-b, II-a, III-c, IV-d

C) I-a, II-c, III-b, IV-d

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களை திறம்பட பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதல் என்பது ஆகும்.ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடல் மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து இந்தியாவால் தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்திய அரசு ஐந்தாண்டு திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (National Institution for Transforming India)மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.)

66) முதல் ஐந்தாண்டு திட்டம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.

B) இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.

C) இந்தத் திட்டம் 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் வெற்றி பெற்றது

D) 1952 முதல் 1957 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்டது

(குறிப்பு – முதல் ஐந்தாண்டு திட்டம் 1951 முதல் 1956 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.இந்தத் திட்டம் 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் வெற்றி பெற்றது)

67) கீழ்க்காணும் எந்த ஆண்டு காலம் திட்ட விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டது?

A) 1961 முதல் 1966 வரை

B) 1966 முதல் 1969 வரை

C) 1967 முதல் 1971 வரை

D) 1969 முதல் 1974 வரை

(குறிப்பு – 1966 முதல் 1969 வரையிலான காலம் திட்ட விடுமுறை காலம் என அறிவிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே, இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும். இக்காலகட்டத்தில் ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேலாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது)

68) கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம் வேளாண்மை தொழில்துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து?

A) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்

B) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்

C) நான்காவது ஐந்தாண்டு திட்டம்

D) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

(குறிப்பு – ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்(1974-1979), வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை அளித்தது. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட அதிகமாக 4.8 சதவீத வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது. இந்தத் திட்டத்திற்கான முன்வரைவு D.P தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு, அதாவது ஓராண்டுக்கு முன்பே கைவிடப்பட்டது).

69) வறுமை ஒழிப்பு என்பது கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டத்தின் லட்சியமாகும்?

A) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

B) ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்

C) ஏழாவது ஐந்தாண்டு திட்டம்

D) எட்டாவது ஐந்தாண்டு திட்டம்

(குறிப்பு – ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் 1980 முதல் 1985 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். வறுமை ஒழிப்பு (GARIBI HAT AO) என்பதே இதன் லட்சியமாகும்.இது முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2. ஆனால் 5.7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது.

70) கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம் வெற்றி அடையவில்லை?

A) முதலாம் ஐந்தாண்டு திட்டம்

B) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்

C) நான்காம் ஐந்தாண்டு திட்டம்

D) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்

(குறிப்பு – முதலாம் ஐந்தாண்டு திட்டம் 3.6 சதவீதம் வளர்ச்சி விகிதத்துடன் வெற்றிபெற்றது. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 4.1 சதவீத வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 5.6 சதவீத வளர்ச்சியுடன் தோல்வியுற்றது. நான்காம் ஐந்தாண்டு திட்டம் 3.3 சதவீத வளர்ச்சியுடன் தோல்வியுற்றது. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் 4.8% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.).

71) கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முதல்முறையாக பொதுத் துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது?

A) ஆறாம் ஐந்தாண்டு திட்டம்

B) ஏழாம் ஐந்தாண்டு திட்டம்

C) எட்டாம் ஐந்தாண்டு திட்டம்

D) ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம்

(குறிப்பு – ஏழாம் ஐந்தாண்டு திட்டம் 1985 முதல் 1990 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. முதன்முறையாக பொதுத்துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது. இந்த திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0 சதவீதமாக இருந்தது. ஆனால் 6.0 சதவீத வளர்ச்சியுடன் இது வெற்றி பெற்றது.)

72) கீழ்காணும் எந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஓராண்டு திட்டம் சரியானது?

I. 1990 – 1991

II. 1991 – 1992

III. 1992 – 1993

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மைய அரசில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990-1991, 1991-1992 ஆகிய ஆண்டுகளில் இரு ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன்பின்னர் எட்டாம் ஐந்தாண்டு திட்டம் 1992 முதல் 1997ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் வேலை வாய்ப்பு, கல்வி, சமூக நலம் போன்ற மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.)

73) கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம், 2012ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது?

A) எட்டாம் ஐந்தாண்டு திட்டம்

B) ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம்

C) பத்தாம் ஐந்தாண்டு திட்டம்

D) பதினோராம் ஐந்தாண்டு திட்டம்

(குறிப்பு – பத்தாம் ஐந்தாண்டு திட்டம் 2002 முதல் 2007ஆம் ஆண்டு காலங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இத்திட்டம் 2012ம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0 சதவீதம் ஆகும் ஆனால் 7.2 சதவீதம் மட்டுமே ஏற்றப்பட்டது.

74) ஐந்தாண்டு திட்டங்களையும், அதன் நோக்கங்களையும் பொருத்துக.

I. தன்னிறைவு பொருளாதாரம் – a) முதலாம் ஐந்தாண்டு திட்டம்

II. வேளாண்மை முன்னேற்றம் – b) ஏழாம் ஐந்தாண்டு திட்டம்

III. தொழில் முன்னேற்றம் – c) ஆறாம் ஐந்தாண்டு திட்டம்

IV. வறுமை ஒழிப்பு – d) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்

A) I-b, II-a, III-d, IV-c

B) I-a, II-d, III-b, IV-c

C) I-c, II-d, III-a, IV-b

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – இந்தியாவின் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களும் ஒவ்வொரு நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டவை ஆகும். வேளாண்மை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், சுதந்திரமான பொருளாதாரம், நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதல், வறுமை ஒழிப்பு, தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல், மனிதவள மேம்பாட்டுக்கு முன்னுரிமை, சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி, தலா வருவாயை உயர்த்துதல், விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை முறையே 12 ஐந்தாண்டு திட்டங்களின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.)

75) திட்டக்குழு (Planning Commission) என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் (NITI AAYOG ) எனும் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) ஜனவரி 1, 2014 இல்

B) ஜனவரி 1, 2015 இல்

C) ஜனவரி 1, 2016 இல்

D) ஜனவரி 1, 2017 இல்

(குறிப்பு – திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த, நிலையான வளர்ச்சியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையம் ஆகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய கொள்கைகளை ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான ஆதரவையும் இது தரும்)

76) எந்த ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை பிரசுரம் செய்கிறது?

A) 1980 முதல்

B) 1985 முதல்

C) 1990 முதல்

D) 1995 முதல்

(குறிப்பு – 1990 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை பிரசுரம் செய்கிறது. இக்குறியீடு மூன்று குறியீடுகளை அடிப்படையாக கொண்டது. நாடு, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தற்போது தயாரிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான வாழ்க்கை தரத்தை கண்டறிய மனித மேம்பாட்டு குறியீடு(HDI) பயன்படுகிறது)

77) மனித மேம்பாட்டு குறியீடு என்பதனை உருவாக்கியவர்கள் கீழ்காணும் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவர்?

I. இந்தியா

II. பாகிஸ்தான்

III. ரஷ்யா

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மனித மேம்பாட்டு குறியீடு(Human Development Index) என்பதை பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் மஹபூப் உல் ஹக் (Mahbul ul Haq) என்பவரும் இந்தியாவை சேர்ந்த அமர்த்தியா குமார் சென் அவர்களும் 1990 ஆம் ஆண்டில் மேம்படுத்தினர். இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது. இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு, கல்வி குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது)

78) ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் 2016ஆம் ஆண்டு முன்னேற்ற அறிக்கையின்படி 188 நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

A) 130 வது

B) 131 வது

C) 132 வது

D) 133 வது

(குறிப்பு – திட்டக்குழுவின் 2011ம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனித வளர்ச்சி குறியீடு 1980 முதல் 2011-ம் ஆண்டுவரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி உள்ளது.அதாவது மனித மேம்பாட்டு குறியீடு 1981ம் ஆண்டு 0.302 லிருந்து 2011ஆம் ஆண்டில் 0.472 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் 2014ஆம் ஆண்டு மனித முன்னேற்ற அறிக்கையின்படி 188 நாடுகளில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது)

79) மனித மேம்பாட்டு குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர் யார்?

A) மஹபூப் உல் ஹக்

B) அமர்த்தியா குமார் சென்

C) பிஸ்வஜித்குஹா

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – மனித மேம்பாட்டு குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர் பிஸ்வஜித்குஹா என்பவராவார். அவர் HDI1, HDI2, HDI3, HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டு குறியீடுகளை உருவாக்கியுள்ளார். HDI1 என்பது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பொறுத்துள்ளது.)

80) மனிதவள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் உள்ள முதல் மூன்று இடங்களில் இல்லாத நாடு எது?

A) நார்வே

B) ஆஸ்திரேலியா

C) இத்தாலி

D) சுவிட்சர்லாந்து

(குறிப்பு – இந்தியா உட்பட பல்வேறு நாடுகள், மனித மேம்பாட்டு கணக்கீடத் தேவையான புள்ளிவிவரங்களை மேம்படுத்தவும் வீட்டை விரிவுபடுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மனித வள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நாடுகள் முறையே நார்வே (0.949), ஆஸ்திரேலியா (0.939) மற்றும் சுவிட்சர்லாந்து (0.939) என்பன ஆகும்.

81) வாழ்க்கை தர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் கீழ்கண்டவரில் யார்?

A) டி.மோரிஸ்

B) அலெக்ஸ்

C) வில்லியம்

D) ஹென்றி

(குறிப்பு – வாழ்க்கை தர குறியீட்டு எண்ணை (PQLI) உருவாக்கியவர் மோரிஸ் டி மோரிஸ் (MORRIS D MORRIS) என்பவராவார். இது ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தினை அளவிடப் பயன்படுகிறது. இதற்காக அவர் எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற மூன்று குறியீடுகளைப் பயன்படுத்தினார்.ஒவ்வொரு குறியீட்டு எண்ணின் அளவும் ஒன்றிலிருந்து 100 வரையிலான எண்களுக்குள் இருக்கும். ஒன்று என்பது மிக மோசமான செயல்பாட்டினை குறிக்கும்.100 என்பது மிக சிறப்பான செயல்பாட்டினை குறிக்கும்)

82) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) வாழ்க்கை தர குறியீட்டு எண்ணில் 100 என்ற மேல் எல்லையானது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

B) வாழ்க்கை தர குறியீட்டு எண்ணில் 1 என்ற கீழ் எல்லையானது 25 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

C) 100 என்னும் குறியீட்டு எண்ணை 1973ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடு அடைந்துவிட்டது.

D) 1 என்னும் குறியீட்டு எண்ணை 1960 ஆம் ஆண்டு கயானா பிசாவு என்னும் நாடு அடைந்துவிட்டது.

(குறிப்பு – வாழ்க்கை தர குறியீட்டு எண்ணில் 100 என்ற மேல் எல்லையானது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது.வாழ்க்கை தர குறியீட்டு எண்ணில் 1 என்ற கீழ் எல்லையானது 28 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. PQLI க்கும் HDI க்கும் ஒரு வேறுபாடு உள்ளது. HDI யில் வருமானம் சேர்க்கப்படுகிறது. PQLI லிருந்து வருமானம் நீக்கப்படுகிறது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin