இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும் 12th Ethics Lesson 8 Questions
12th Ethics Lesson 8 Questions
8] இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும்
1) கூற்று: நதிகளுக்கு பெண்ணின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
காரணம்: நதிகளை தாயாக போற்றும் பாண்பாடு.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: நதிகளை மக்கள் தாயாகப் போற்றும் பண்பாட்டை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே பெரும்பாலான நதிகளுக்குச் சிந்து, கங்கை, நர்மதை, காவிரி போன்ற பெண்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நதிகளே பண்பாட்டின் மையமாகத் திகழ்கின்றன.
2) “நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” என்ற வரி கீழ்க்காணும் எதனோடு தொடர்புடையது?
A) தொல்காப்பியம்
B) அகத்தியம்
C) நன்னூல்
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐவகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு இவ்வுலகம் தோன்றியது என்ற கருத்தைத் தொல்காப்பியர் வெளிப்படுத்தியுள்ளார்.
“நிலம்;, நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”
என்று உலகத் தோற்றம் பற்றி அறிவியல் அடிப்படையில் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
3) கூற்று: இந்தியப் பண்பாடானது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அடிப்படையாக விளங்குகிறது
காரணம்: சுற்றுச்சூழலின் அங்கங்களான விலங்குகள், பறவைகள் போன்றவற்றை இந்தியப்பண்பாடானது இறைவனோடு இணைத்து புனிதமாக வணங்குகிறது.
A) கூற்று சரி காரணம் தவறு
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: இந்தியப் பண்பாடானது சுற்றுச்சூழலின் அங்கங்களாக இருக்கின்ற பரந்து விரிந்த காடுகள், வானாளவிய மலைகள், குன்றுகள் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள், செடிகொடிகள், கடல்கள், ஆறுகள், நீர்நிலைகள், புல்வெளிகள், மலர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்கள் என இவை அனைத்தையுயே இறைவனோடு இணைத்து புனிதாமாக வணங்குகிறது. இதன்மூலம் இந்தியப் பண்பாடானது இயல்பாவே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
4) ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல்—————-எனப் பொருள்படும்.
A) கற்றல்
B) ஆகாயம்
C) விமானம்
D) வீடு
விளக்கம்: ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘வீடு’ எனப் பொருள்படும். ‘லோகாஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும். ஆய்காஸ், லோகாஸ் என்ற இவ்விருசொல்லும் இணைந்து ‘யிகோலஜி’ என்ற சொல் உருவானது. உயிருள்ளவையும், உயிரற்றவையும் அடங்கிய இயற்கையின் தொகுப்பிற்கு சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத் தொகுப்பு என்று பெயர்.
5)கீழ்க்காண்பனவற்றில் எது நமது பழைமையான வட இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்கின்றன?
A) சிந்துகங்கைச் சமவெளி
B) தக்காணப் பீடபூமி
C) கடற்கரைச் சமவெளிகள்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: நம் நாட்டின் இயற்கை பிரிவுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,
- சிந்துகங்கைச் சமவெளி
- தக்காணப் பீடபூமி
- கடற்கரைச் சமவெளி
சிந்துகங்கைச் சமவெளிகள், பழைமையான வட இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்கின்றன. சிந்துவெளி நாகரிகம், சிந்து மற்றும் அதன் துணை நதிகளான, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி ஆகியவற்றின் பகுதிகளில் தோன்றிப் பரவியது.
6) சிந்துவெளி மக்களால் வழிபடப்பட்ட மரம் எது?
A) அரசமரம்
B) ஆலமரம்
C) பனைமரம்
D) வேப்பமரம்
விளக்கம்: அரசமரம்: அரசமரம் இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் இம்மரத்தை கடவுளாக வழிபட்டனர். புத்தர் அரசமரத்தின் (போதிமரம்) அடியில் ஞானோதயம் பெற்றார். பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால் இம்மரம், ‘மரங்களில் அரசன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
7) திபெத்தின் கயிலை மலையில் தோன்றும் நதி எது?
A) பிரம்மபுத்திரா
B) சரஸ்வதி
C) சிந்து
D) கங்கை
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரியநதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. இந்நதி அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A) 1986
B) 1987
C) 1988
D) 1972
விளக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986:
1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
9) சுற்றுச்சூழல் கல்வி என்பது கீழ்க்காணும் எதன் அறிவியல் பிரிவு?
A) சூழ்நிலையியல்
B) சமூகவியல்
C) சமுதாய அறிவியல்
D) சமூக அறிவியல்
விளக்கம்: சுற்றுச்சூழல் கல்வி என்பது, “சூழ்நிலையியல்” என்ற அறிவியல் பிரிவாகும். சுற்றுச்சூழல் கல்வி, தனிநபருக்கும் மனிதச் சமுதாயத்திற்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது இயற்பியல், பண்பாட்டுச் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இயற்கையான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்புடையது என்பதையும் உணரச்செய்கிறது.
10) எந்த நதிக்கரையில் காசி அமைந்துள்ளது?
A) சரஸ்வதி
B) பிரம்மபுத்திரா
C) கங்கை
D) யமுனை
விளக்கம்: இந்துக்களின் புனிதத் தலமான காசி, கங்கை நதியோரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கங்கையில் புனிதநீராடி வழிபடுகின்றனர்.
11) சிப்கோ இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது?
A) மத்தியப் பிரதேசம்
B) உத்திரப் பிரதேசம்
C) பீகார்
D) தமிழ்நாடு
விளக்கம்: 1972-இல் சுந்தர்லால் பகுகுணா என்பவர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கத்தைத் தொடங்கினார். இதன் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாத்தல் ஆகும்.
12) காகாதரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) பிரம்மா
B) விஷ்ணு
C) சிவபெருமான்
D) முருகன்
விளக்கம்: கங்கைநதி சிவபெருமானின் சடாமுடியிலிருந்து தோன்றியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைக் கங்காதரர் என்று அழைக்கின்றனர்.
13) கூற்றுகளை ஆராய்க
1. கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே கடல் தெய்வமாக வழிபடப்படுகிறது.
2. “சமுத்திரராஜன்” என்ற பெயரில் கடல் வணங்கப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: கடலுக்கடியிலுள்ள பவளப்பாறைகள் முக்கியமான இயற்கை வளங்களாகும். கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, கடல் தெய்வமாக வழிபடப்படுகிறது. “சமுத்திரராஜன்” என்ற பெயரில் கடல் வணங்கப்படுகிறது.
14) “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்” என்ற குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்தி கூறுவது கீழ்க்காணும் எதனை?
A) ஆறுகளின் முக்கியத்துவம்
B) மலையின் முக்கியத்துவம்
C) காற்றின் முக்கியத்துவம்
D) காடுகளின முக்கியத்துவம்
விளக்கம்: ஒரு நாட்டில் மணிபோல் தெளிந்த நீரும், பரந்து விரிந்த நிலப்பரப்பும், வானாளவிய மலையும் அணி அணியாய் நிழல் தரக்கூடிய அடர்ந்த மரங்களை உடைய காடும் அமையப்பெற்றால் அதுவே, அந்நாட்டிற்குப் பாதுகாப்பாய் அமையும் என்கிறார் திருவள்ளுவர். இக்குறட்பாவில் காடுகளில் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
15) இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு, “காடு, ஏரி” போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி கூறுகிறது?
A) 51ஏ
B) 40
C) 17
D) 45
விளக்கம்: இந்திய அரசியலைப்புச் சட்டம் பிரிவு 51ஏ-இன் படி “காடு, ஏரி, ஆறு போன்ற இயற்கைச் சூழல்களை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும், பறவை, விலங்கு போன்றவற்றிடம் அன்பு பாராட்டுவதும் அவற்றால் ஏற்படும் நன்மைகளை உணர்வதும், அவற்றிடம் கருணை காட்டுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று குறிப்பிடுகிறது.
16) ஐ.நா.சபை எந்த ஆணடு சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டிக்கு ஏற்பாடு செய்தது?
A) 1990
B) 1991
C) 1992
D) 1993
விளக்கம்: ஐ.நா.சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன.
17) “சின்னஞ்சிறு குருவிபோல – நீ
திரிந்து பறந்துவா பாப்பா” என்று பாடியவர் யார்?
A) பாரதிதாசன்
B) கவிமணி
C) பாரதியார்
D) வாணிதாசன்
விளக்கம்: “சின்னஞ்சிறு குருவிபோலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா” – பாரதியார்
18) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
B) முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
C) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
D) பாலை – கடலும் கடல் சார்ந்த இடமும்
விளக்கம்: குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – மணலும் மணல் சார்ந்த இடமும்
19) கூற்றுகளை ஆராய்க.
1. மலை, நதி, கடல், சூரியன், ஆகாயம், காற்று விலங்கினங்கள் முதலியவற்றைப் பற்றி அறிவதும், இவற்றில் மனிதனின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்வதும் சுற்றுச்சூழல் கல்வியாகும்.
2. பகுத்தறிவுள்ள மனித சமுதாயம், பஞ்சபூதங்களுக்கும், உலகிலுள்ள மற்ற உயிரினங்களுக்கும், பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அவற்றைப் புனிதமாக மதித்துப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்று இந்தியப் பண்பாடானது வலியுறுத்துகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. மலை, நதி, கடல், சூரியன், ஆகாயம், காற்று விலங்கினங்கள் முதலியவற்றைப் பற்றி அறிவதும், இவற்றில் மனிதனின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்வதும் சுற்றுச்சூழல் கல்வியாகும்.
2. பகுத்தறிவுள்ள மனித சமுதாயம், பஞ்சபூதங்களுக்கும், உலகிலுள்ள மற்ற உயிரினங்களுக்கும், பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அவற்றைப் புனிதமாக மதித்துப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்று இந்தியப் பண்பாடானது வலியுறுத்துகிறது.
20) கூற்றுகளை ஆராய்க.
1. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த முதன்மை அளித்த சிந்துவெளி மக்கள், மூடப்பட்ட பாதாள சாக்கடை, நேரான, வரிசையான சாலைகள், வீடுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
2. வேதகால மக்கள் கங்கை நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த முதன்மை அளித்த சிந்துவெளி மக்கள், மூடப்பட்ட பாதாள சாக்கடை, நேரான, வரிசையான சாலைகள், வீடுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
2. வேதகால மக்கள் கங்கை நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
21) மரங்களை வெட்டுதல், தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிடும் நூல் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது?
A) கி.பி.(பொ.ஆ) 5
B) கி.பி.(பொ.ஆ) 7
C) கி.மு. 5
D) கி.மு. 7
விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 5-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘யக்ஞவால்கியஸ்மிருதி’ மரங்களை வெட்டுதல், தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது.
22) கூற்றுகளை ஆராய்க.
1. “நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” – தொல்காப்பியர்
2. இந்தியப் பண்பாடானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அடிப்படையாக விளங்குகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. “நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” – தொல்காப்பியர்
2. இந்தியப் பண்பாடானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அடிப்படையாக விளங்குகிறது.
23) கூற்றுகளை ஆராய்க.
1. ஆற்றைத் தந்தையாகவும், கடலைத் தாயாகவும் கருதுவது நமது பண்பாடாகும்.
2. முருகனின் ஆறுபடைவீடுகளுள் கடற்கரையோரம் உள்ள ஒரே தலம் திருச்செந்தூராகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: ஆற்றைத் தாயாகவும், கடலைத் தந்தையாகவும் கருதுவது நமது பண்பாடாகும்.
முருகனின் அறுபடைவீடுகளுள் கடற்கரையோரம் உள்ள ஒரே தலம் திருச்செந்தூராகும். இங்குதான், சூரபத்மன் என்ற அசுரனை முருகக் கடவுள் வதம் செய்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டிவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
24) பத்மாநதி என்று அழைக்கப்படும் நதி எது?
A) யமுனை
B) கங்கை
C) பிரம்மபுத்திரா
D) சிந்து
விளக்கம்: கங்கைநதி இமயமலையிலுள்ள கங்கோத்திரியில் பனியாறாக உருவாகிறது. இந்நதி, வங்கதேசத்தில் பத்மாநதி என்றும் அழைக்கப்படுகிறது.
25) பிரம்மபுத்திரா நதி கயிலை மலையில் தோன்றுகிறது. இந்நதி பிறக்கும்போது கீழ்க்காணும் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
A) சங்கோசு
B) சியாங்
C) ஸாங்-போ
D) ஜமுனா
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
26) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) கும்பகோணம் – மகாமக விழா
B) மயிலாடுதுறை – காவிரி புஷ்கரம்
C) நெல்லை – வைகை புஷ்கரம்
D) மதுரை – கள்ளழகர் ஆற்றிலிறங்குதல்
விளக்கம்: நெல்லை – தமிரபரணி புஷ்கரம்
27) கூற்றுகளை ஆராய்க.
1. சங்ககாலத் தமிழகத்தின் தலைசிறந்த புலவர்களில் ஒருவரான கபிலர், இயற்கையின் அம்சங்களான காற்று, நீர், வானம், வனங்கள் போன்றவற்றைப் போற்றியுள்ளார்.
2. சங்ககால மன்னர்களான மூவேந்தர்கள் சுற்றுச்சூழலின் அம்சங்களான நதிகள், கடல்கள், மலைகள், வனங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு முதன்மையளித்ததுடன், அவற்றைப் பாதுகாப்பதற்குத் தனிப்படைகளையும் வைத்திருந்தனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சங்ககாலத் தமிழகத்தின் தலைசிறந்த புலவர்களில் ஒருவரான கபிலர், இயற்கையின் அம்சங்களான காற்று, நீர், வானம், வனங்கள் போன்றவற்றைப் போற்றியுள்ளார்.
2. சங்ககால மன்னர்களான மூவேந்தர்கள் சுற்றுச்சூழலின் அம்சங்களான நதிகள், கடல்கள், மலைகள், வனங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு முதன்மையளித்ததுடன், அவற்றைப் பாதுகாப்பதற்குத் தனிப்படைகளையும் வைத்திருந்தனர்.
28) மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
விளக்கம்: குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – மணலும் மணல் சார்ந்த இடமும்
29) வேதகாலப் பண்பாட்டின் மையமாக விளங்கும் நதி எது?
A) யமுனை
B) கங்கை
C) சிந்து
D) பிரம்மபுத்திரா
விளக்கம்: கங்கைநதி இமயமலையிலுள்ள கங்கோத்திரியில் பனியாறாக உருவாகிறது. இந்நதி, வங்கதேசத்தில் பத்மாநதி என்றும் அழைக்கப்படுகிறது. இது, வேதகாலப் பண்பாட்டின் மையமாக விளங்குகிறது.
30) நம் நாட்டின் பருவமழையைத் தீர்மானிப்பது எது?
A) மலை
B) நதி
C) கடல்
D) புயல்
விளக்கம்: பரந்து விரிந்த மலைத்தொடர்களே நமது நாட்டின் பருவநிலைகளைத் தீர்மானிக்கின்றன.
31) கூற்றுகளை ஆராய்க
1. இராமாயணத்தில் இராமபிரான் 14ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததால், காட்டையே இறைவனாக இந்துக்கள் கருதினர்.
2. ஆலமரத்தை பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய கடவுளோடு சேர்த்து வணங்குகிறார்கள்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததால், காட்டையே இறைவனாக இந்துக்கள் கருதினர்.
ஆலமரத்தை பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய கடவுளோடு சேர்த்து வணங்குகிறார்கள்.
32) குறிஞ்சி நில மக்கள் வழிபட்ட கடவுள் யார்?
A) முருகன்
B) சிவபெருமான்
C) இந்திரன்
D) வருணன்
விளக்கம்: சங்ககாலத் தமிழகத்தில் மலைப்பகுதியான குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த மக்கள், முருகப்பெருமானைக் கடவுளாக வழிபட்டனர்.
33) கிண்ணத்திருவிழா கீழ்க்காணும் எந்த நகரில் கொண்டாடப்படுவதில்லை?
A) அலகாபாத்
B) ஹரித்துவார்
C) உஜ்ஜயினி
D) நாக்பூர்
விளக்கம்: கும்பமேளா (கிண்ணத்திருவிழா): இந்து சமயத்தினரால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்விழா அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களிலுள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது.
34) திருமாலின் திருவடிகள் எந்த நதியால் தூய்மைப்படுத்தப்படுகிறது?
A) கங்கை
B) சரஸ்வதி
C) யமுனை
D) சிந்து
விளக்கம்: இந்துக்களின் புனிதத் தலமான காசி, கங்கை நதியோரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபடுகின்றனர். திருமாலின் திருவடிகள் கங்கையால் தூய்மைப்படுத்தப்படுகிறது.
35) 1972-ஆம் ஆண்டு எங்கு நடைபெற்ற மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது?
A) பாரிஸ்
B) ஸ்டாக்ஹோம்
C) இலண்டன்
D) நியூயார்க்
விளக்கம்: 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
36) நமது நாட்டின் இயற்கைப் பிரிவுகள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நம் நாட்டின் இயற்கை பிரிவுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,
1. சிந்துகங்கைச் சமவெளி
2. தக்காணப் பீடபூமி
3. கடற்கரைச் சமவெளி
37) கூற்று: கும்பமேளா அலகாபாத்தில் கொண்டாடப்படுகிறது
காரணம்: கங்கையும், யமுனையும் அலகாபாத்தில் இணைகிறது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காணரம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: கங்கையும், யமுனையும் இணையும் பகுதியான அலகாபாத்தில், புகழ்பெற்ற கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
38) கூற்று: அரசமரத்தை ஒவ்வோர் ஊரிலும் வளர்த்துப் பாதுகாக்கின்றனர்.
காரணம்: ஆதிமனிதனின் முதல் வீடாக இருந்தவை காடுகளில் உள்ள பெரிய மரங்களேயாகும்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்:ஆதிமனிதனின் முதல் வீடாக இருந்தவை காடுகளில் உள்ள பெரிய மரங்களேயாகும். இதன் அடையாளமாக அரசமரத்தை ஒவ்வோர் ஊரிலும் வளர்த்துப் பாதுகாக்கின்றனர்.
39) கூற்றுகளை ஆராய்க.
1. ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘வீடு’ எனப் பொருள்படும்.
2. ‘லோகாஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘வீடு’ எனப் பொருள்படும்.
2. ‘லோகாஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும்
40) கூற்றுகளை ஆராய்க
1. மலை, நதி, கடல், சூரியன், ஆகாயம், காற்று, விலங்கினங்கள் முதலியவற்றைப் பற்றி அறிவதும், இவற்றில் மனிதனின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்வதும் சுற்றுச்சூழல் கல்வியாகும்.
2. இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பற்றி அறிந்துகொள்வதே சுற்றுச்சூழல் கல்வியாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மலை, நதி, கடல், சூரியன், ஆகாயம், காற்று, விலங்கினங்கள் முதலியவற்றைப் பற்றி அறிவதும், இவற்றில் மனிதனின் பங்கினைப் பற்றித் தெரிந்து கொள்வதும் சுற்றுச்சூழல் கல்வியாகும். அதாவது, இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பற்றி அறிந்துகொள்வதே சுற்றுச்சூழல் கல்வியாகும்.
41) பிரம்மபுத்திரா நதி கயிலை மலையில் தோன்றுகிறது. இந்நதி அருணாச்சலப்பிரதேசத்தில் நுழையும்போது கீழ்க்காணும் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
A) சங்கோசு
B) சியாங்
C) ஸாங்-போ
D) ஜமுனா
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
42) கூற்றுகளை ஆராய்க
1. மௌரியர்கள் காலத்தில் சாணக்கியர் எழுதிய ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூல் வனவளம், வனவளத்தின் தேவை, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
2. மாமன்னர் அக்பர் கல்வெட்டுகளில் வனங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், பாதுகாப்பதின் தேவை, போன்றவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: . மௌரியர்கள் காலத்தில் சாணக்கியர் எழுதிய ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூல் வனவளம், வனவளத்தின் தேவை, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
2. மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகளில் வனங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், பாதுகாப்பதின் தேவை, போன்றவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
43) எந்த நதியில் இருக்கும் கூழாங்கற்கள் சிவபெருமானின் சொரூபங்களாகக் கருதப்படுகின்றன?
A) யமுனை
B) சரஸ்வதி
C) கங்கை
D) நர்மதை
விளக்கம்: நர்மதை நதியில் இருக்கும் கூழாங்கற்கள் சிவபெருமானின் சொரூபங்களாகக் கருதப்படுகின்றன.
44) கூற்று: கங்காதரர் என்று அழைக்கப்படுபவர் சிவபெருமான்
காரணம்: கங்கை நதியில் புனித நீராடினார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: கங்கை நதி சிவபெருமானின் சடாமுடியிலிருந்து தோன்றியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைக் கங்காதரர் என்று அழைக்கின்றனர்.
45) கூற்றுகளை ஆராய்க.
1. வைஷ்ணவதேவி ஆலயம் காஷ்மீரிலுள்ள வைஷ்ணவதேவி மலையில் அமைந்துள்ளது.
2. இங்குள்ள இறைவி மாதாராணி வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறார்.
3. இக்கோயிலின் மூலவருக்கு மற்றொரு பெயர் சிரோபலி என்பதாகும்.
4. இக்கோயிலில் மகாகாளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் ஒரே இடத்திலிருந்து அருள் பாலிக்கின்றர்.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 1, 3 சரி
D) அனைததும் சரி
விளக்கம்: வைஷ்ணவதேவி கோயில்: இக்கோயில் காஷ்மீரிலுள்ள வைஷ்ணவதேவி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவி மாதாராணி வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மூலவருக்கு மற்றொரு பெயர் சிரோபலி என்பதாகும். .இக்கோயிலில் மகாகாளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் ஒரே இடத்திலிருந்து அருள் பாலிக்கின்றனர்.
46) கூற்றுகளை ஆராய்க.
1. சிவபெருமானின் தலையில் கங்கை உருவாகிறது என்ற ஆன்மிக நம்பிக்கை மக்களிடையே இன்றும் உள்ளது.
2. யமுனை நதியோரத்தில் கண்ணன் கோபியருடன் விளையாடினார் என்றும், சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தியில் இராமன் தோன்றினார் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: சிவபெருமானின் தலையில் கங்கை உருவாகிறது என்ற ஆன்மிக நம்பிக்கை மக்களிடையே இன்றும் உள்ளது. யமுனை நதியோரத்தில் கண்ணன் கோபியருடன் விளையாடினார் என்றும், சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தில் இராமன் தோன்றினார் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
47) மரங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மரம் எது?
A) பனை மரம்
B) வேப்ப மரம்
C) ஆல மரம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: அரசமரம்: அரசமரம் இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் இம்மரத்தை கடவுளாக வழிபட்டனர். புத்தர் அரசமரத்தின் (போதிமரம்) அடியில் ஞானோதயம் பெற்றார். பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம் ‘மரங்களின் அரசன்’ என்றும் அழைக்கப்படுகிறது
48) சிப்கோ இயக்கம் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இது கீழ்க்காணும் எந்த மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை?
A) மத்தியப் பிரதேசம்
B) இமாச்சலப் பிரதேசம்
C) இராஜஸ்தான்
D) கர்நாடகம்
விளக்கம்: சிப்கோ இயக்கம் 1972-ல் சுந்தர்லால் பகுகுணா என்பவரால் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வனங்களை பாதுகாப்பதாகும். இவ்வியக்கம் கர்நாடகம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் போனற் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
49) மரங்களை வெட்டுதல் தண்டைனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிடும் நூல் எது?
A) அர்த்த சாஸ்திரம்
B) யக்ஞவால்கியஸ்மிருதி
C) ஆர்யபட்டியம்
D) முத்ராராட்சதம்
விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 5-ஆம் நூற்றாண்டில இயற்றப்பட்ட ‘யக்ஞவால்கியஸ்மிருதி’ மரங்களை வெட்டுதல், தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது.
50) கூற்றுகளை ஆராய்க.
1. இந்தியாவின் தென்பகுதி வெப்பமண்டலப் பகுதி.
2. இந்தியாவின் வடபகுதி மிதவெப்பமண்டலப் பகுதி
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இந்தியாவின் சுற்றுச்சூழல் அம்சங்களே பண்பாட்டைத் தீர்மானிக்கின்றன. மலைகள், காடுகள், நதிகள், கடல்கள் போன்ற சுற்றுச்சூழலின் உட்கூறுகளுக்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவின் தென்பகுதி மிதவெப்பமண்டல பகுதியாகவும், வடபகுதி வெப்பமண்டலப் பகுதியாகவும் விளங்குகிறது.
51) கூற்றுகளை ஆராய்க
1. காடுகளே நாட்டின் செல்வங்கள் என்பதை உணர்ந்த பெரோஸ் துக்ளக் நாடெங்கிலும் நிழல்தரும் மரங்களை நட்டு இயற்கையைப் பேணிப் பாதுகாத்தார்.
2. குப்தர்கள் இயற்கைக் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியதன் மூலம், இயற்கைக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: காடுகளே நாட்டின் செல்வங்கள் என்பதை உணர்ந்த மௌரிய மன்னர் அசோகர், நாடெங்கிலும் நிழல்தரும் மரங்களை நட்டு இயற்கையைப் பேணிப் பாதுகாத்தார். குப்தர்கள் இயற்கைக் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியதன் மூலம், இயற்கைக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.
52) மகாமகம் கீழ்க்காணும் எங்கு நடைபெறுகிறது?
A) கும்பகோணம்
B) மயிலாடுதுறை
C) நெல்லை
D) மதுரை
விளக்கம்: கும்பகோணம் – மகாமக விழா
மயிலாடுதுறை – காவிரி புஷ்கரம்
நெல்லை – தாமிரபரணி புஷ்கரம்
மதுரை – கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்குதல்
53) பிரம்மபுத்திரா நதி கயிலை மலையில் தோன்றுகிறது. இந்நதியில் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் சங்கோசு என்ற ஆறு கலக்கிறது?
A) அருணாச்சலப்பிரதேசம்
B) அஸ்ஸாம்
C) மிசோரம்
D) திரிபுரா
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
54) ‘லோகாஸ்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) வீடு
B) கற்றல்
C) சூழ்நிலைமண்டலம்
D) சூழ்நிலைத் தொகுப்பு
விளக்கம்: 1. ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘வீடு’ எனப் பொருள்படும்.
2. ‘லோகாஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும்.
55) அரசமரம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) இந்தியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது
B) சிந்துவெளி நாகரிக மக்கள் இம்மரத்தை கடவுளாக வழிபட்டனர்
C) புத்தர் அரசமரத்தின் (போதிமரம்) அடியில் ஞனோதயம் பெற்றார்
D) இந்தியாவின் சின்னமாக அரசமரம் விளங்குகிறது
விளக்கம்: இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் இம்மரத்தை கடவுளாக வழிபட்டனர். புத்தர் அரசமரத்தின் (போதிமரம்) அடியில் ஞனோதயம் பெற்றார். பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம், ‘மரங்களில் அரசன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் சின்னமாக இடம்பெற்றுள்ள மரம் ஆலமரமாகும்.
56) யாருடைய கல்வெட்டுகளில் வனங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், பாதுகாப்பதின் தேவை போன்றவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
A) சமுத்திர குப்தர்
B) அசோகர்
C) ஹர்சர்
D) அக்பர்
விளக்கம்: மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகளில் வனங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், பாதுகாப்பதின் தேவை போன்றவை குறித்த செய்திகள் காணப்படுகின்றன.
57) அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
A) சாணக்கியர்
B) ஆரியபட்டர்
C) வராகமிகிரர்
D) தன்வந்திரி
விளக்கம்: மௌரியர்கள் காலத்தில் கௌடில்யர் எழுதிய ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூல் வனவளம் வனவளத்தின் தேவை, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
58) புஷ்கரலு என்று அழைக்கப்படும் நதி எது?
A) கோதாவரி
B) கிருஷ்ணா
C) வைகை
D) தென்பெண்ணை
விளக்கம்: கிருஷ்ணாநதி புஷ்கரலு என்று அழைக்கப்படும். கிருஷ்ணநதி புஷ்கர விழா 12 ஆண்டுகளுக்கொருமுறை 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது.
59) கங்கை நதியுடன் சிவபெருமான் தொடர்புடையவர் எனில் எந்த நதியுடன் விஷ்ணு தொடர்புடையவர்?
A) யமுனை
B) சிந்து
C) நர்மதை
D) பிரம்மபுத்திரா
விளக்கம்: சிவபெருமானின் தலையில் கங்கை உருவாகிறது என்ற ஆன்மிக நம்பிக்கை மக்களிடையே இன்றும் உள்ளது. யமுனை நதியோரத்தில் கண்ணன் கோபியருடன் விளையாடினார் என்றும், சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தியில் இராமன் தோன்றினார் என்றும் மக்ள் நம்புகின்றனர்.
60) எந்த நதிக்கரையில் விஜயநகரப் பேரரசு ஏற்படுத்தப்பட்டது?
A) நர்மதை
B) தபதி
C) கோதாவரி
D) துங்கபத்ரா
விளக்கம்: துங்கபத்ரா நதிக்கரையில் ஏற்படுத்தப்பட்ட விஜயநகரப் பேரரசு தென்னிந்தியப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தது.
61) தவறான கூற்றை தெரிவு செய்க.
A) காடுகளிலுள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்தியப் பண்பாடு புனிதமாகப் போற்றுகிறது
B) நம் வாழ்வில் காடுகள் குருகுலங்களாகவும், நம்முனிவர்களின் வாழ்விடங்களாகவும், கல்வி பயிலும் இடங்களாகவும் விளங்கின.
C) சிந்துவெளிமக்கள் மரவழிபாட்டு முறையை பின்பற்றவில்லை
D) வேத இலக்கியமான சம்ஹிதைகள், ஆரண்யகத்தில் காட்டில் தவம் மேற்கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
விளக்கம்: சிந்துவெளி மக்களால் மரவழிபாடு பின்பற்றப்பட்டுள்ளதை அறிகிறோம்.
62) கும்பமேளா கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) நீர் பெருவிழா திருவிழா
B) கிண்ணத் திருவிழா
C) புனிதத் திருவிழா
D) புனித நீர் திருவிழா
விளக்கம்: கும்பமேளா (கிண்ணத்திருவிழா) இந்து சமயத்தினரால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்விழா அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களிலுள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது.
63) கூற்று: மரங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மரம் அரசமரம்.
காரணம்: அரசமரம் இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: அரசமரம்: அரசமரம் இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் இம்மரத்தை கடவுளாக வழிபட்டனர். புத்தர் அரசமரத்தின் (போதிமரம்) அடியில் ஞனோதயம் பெற்றார். பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம், ‘மரங்களின் அரசன்’ என்றும் அழைக்கப்படுகிறது
64) காடுகளே நாட்டின் செல்வங்கள் என்று கருதிய மன்னர் யார்?
A) கனிஷ்கர்
B) அக்பர்
C) பெரேஸ்துக்ளக்
D) அசோகர்
விளக்கம்: காடுகளில் வாழும் மக்கள் காடுகளைவிட்டு வெளியேவந்து வாழவிரும்பவில்லை. அவர்கள் காடுகளையே தெய்வமாக வழிபடுகின்றனர். காடுகளே நாட்டின் செல்வங்கள் என்பதை உணர்ந்த மௌரிய மன்னர் அசோகர், நாடெங்கிலும் நிழல்தரும் மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாத்தார்.
65) விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்று தனது பயணக்குறிப்பிட்டவர் யார்?
A) யுவான் சுவாங்
B) பாகியான்
C) மனுஷி
D) லேன்பூல்
விளக்கம்: சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்புகளில் விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த “சபார்கள்” என்ற மலைவாழ்மக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு உள்ளது.
66) கூற்று: காட்டையே இறைவனாக இந்துக்கள் கருதினர்.
காரணம்: இராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததால், காட்டையே இறைவனாக இந்துக்கள் கருதினர்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: காட்டில் தவவாழ்க்கை மேற்கொண்ட ரிஷிகள், ஞானிகள் தாங்கள் உணர்ந்த யாவற்றையும் இறைவடிவமாகக் கண்டனர். இராமாயணத்தில் இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழந்ததால், கட்டையே இறைவனாக இந்துக்கள் கருதினர்.
67) சிப்கோ இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?
A) மரங்களை பாதுகாத்தல்
B) மக்களைப் பாதுகாத்தல்
C) வனங்களைப் பாதுகாப்பது
D) இயற்கையைப் பாதுகாப்பது
விளக்கம்: 1972-இல் பகுகுணா என்பவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாப்பதாகும்.
68) ——————–ஐ தாயாகவும், ———————–ஐ தந்தையாகவும் கருதுவது நமது பண்பாடாகும்?
A) கடல், ஆறு
B) ஆறு, கடல்
C) கடல், ஏரி
D) ஏரி, கடல்
விளக்கம்: கடலுக்கடியிலுள்ள பவளப்பாறைகள் முக்கியமாக இயற்கை வளங்களாகும். கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, கடல் தெய்வமாக வழிப்படப்படுகிறது. “சமுத்திரராஜன்” என்ற பெயரில் கடல் வணங்கப்படுகிறது. ஆற்றைத் தாயாகவும், கடலைத் தந்தையாகவும் கருதுவது நமது பண்பாடாகும்.
69) இந்தியாவில் காடுகளிலுள்ள மரங்கை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர் யார்?
A) சுந்தர்லால் பகுகுணா
B) அம்ரிதாதேவி
C) ஜாதுநாத் பயோங்
D) சலீம் அலி
விளக்கம்: இந்தியாவில், காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர், அம்ரிதாதேவி என்ற பெண்மணியாவார்.
70) சிப்கோ என்ற இந்திச் சொல்லுக்கு——————என்று பொருள்?
A) கட்டியணைத்தல்
B) மரம் வெட்டுதலை தடுத்தல்
C) காடு பாதுகாப்பு
D) மரம் பாதுகாப்பு
விளக்கம்: சிப்போ இயக்கம் 1972-இல் உத்திரப்பிரதேசத்தில் சுந்தர்லால் பகுகுணா என்பவரால் தொடங்கப்பட்டது. இவ்வியகத்தின் முக்கிய நோக்கம் வனங்களை பாதுகாத்தல் ஆகும். சிப்கோ என்னும் இ;ந்திச் சொல்லுக்குக் ‘கட்டிணைத்தல்’ என்று பொருள்.
71) சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1972
B) 1971
C) 1970
D) 1973
விளக்கம்: 1972-இல் பகுகுணா என்பவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாப்பதாகும்.
72) கீழ்க்காணும் எங்கு காவிரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது?
A) கும்பகோணம்
B) மயிலாடுதுறை
C) நெல்லை
D) மதுரை
விளக்கம்: கும்பகோணம் – மகாமக விழா
காவிரி புஷ்கரம் – மயிலாடுதுறை
நெல்லை – தாமிரபரணி புஷ்கரம்
மதுரை – கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்குதல்
73) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் -1986-க்கு பொருந்தாதது எது?
A) பல்வேறு பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்தல்
B) விபத்துகள் ஏற்படா வண்ணம் தகுந்த வழிமுறைகள் மற்றும் குறைகளைத் தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ளுதல்
C) தூய்மையான காற்று, நீர், நிலம் போன்றவற்றை வழங்குதல்
D) வனங்களை தடை செய்தல்
விளக்கம்: மேற்காண்பனவற்றில் வனங்களைப் பாதுகாத்தல் என்பது சிப்கோ இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
74) வேப்பமரத்தை அம்மனாகக் கருதி வழிபடும் ஆலயம் எது?
A) திருவேற்காடு
B) பண்ணாரி
C) மேல்மருவத்தூர்
D) சமயபுரம்
விளக்கம்: திருவேற்காட்டில் வேப்பமரத்தை அம்மனாகக் கருதி வழிபடுகிறார்கள்.
75) பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் கடவுளோடு கீழ்க்காணும் எந்த மரத்தை சேர்த்து வணங்குகிறார்கள்?
A) ஆலமரம்
B) அரசமரம்
C) வில்வமரம்
D) வேங்கை மரம்
விளக்கம்: இந்து சமயத்தில், ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு மரத்தோடு சேர்த்து வணங்குகிறார்கள். ஆலமரத்தைப் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய கடவுளோடு சேர்த்து வணங்குகிறார்கள்.
76) கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படும் விழா எது?
A) கிருஷ்ணாநதி புஷ்கர விழா
B) தாமிரபரணி புஷ்கர விழா
C) காவிரி புஷ்கரவிழா
D) மகாமக விழா
விளக்கம்: கிருஷ்ணநதி புஷ்கரலு என்று அழைக்கப்படும். கிருஷ்ணாநதி புஷ்கர விழா 12 ஆண்டுகளுக்கொருமுறை 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி இவ்விழா கொண்டாடப்படுகிறது.
77) மாமரம் புனிதமாக வணங்கப்படும் ஆலயம் எது?
A) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம்
B) திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம்
C) திருப்பரங்குன்றம் முருகர் ஆலயம்
D) சமயபுரம் மாரியம்மன் ஆலயம்
விளக்கம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திலுள்ள மாமரம் புனிதமாக வணங்கப்படுகின்றன.
78) இந்திர விழா கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) முல்லை
B) நெய்தல்
C) மருதம்
D) பாலை
விளக்கம்: நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன.
79) காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர், அம்ரிதாதேவி என்ற பெண்மணியாவார். இவர் கீழ்க்காணும் எந்த இடத்தை சார்ந்தவர்?
A) ஜெய்ப்பூர்
B) ஜோத்பூர்
C) கௌகாத்தி
D) அலகாபாத்
விளக்கம்: இந்தியாவில் காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர், அம்ரிதாதேவி என்ற பெண்மணியாவார். அதற்காகத் தம் குடும்பதோடு உயிர் நீத்த முதல்நபராவார். இவர் ஜோத்பூருக்கு அருகிலுள்ள கெஜாரிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
80) கூற்றுகளை ஆராய்க
1. வனபிரஸ்த நிலை என்பது, காடுகளில் தவவாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்கிற இறைநிலையாகும்.
2. சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்புகளில் விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த “சபார்கள்” என்ற மலைவாழ்மக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு உள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: வனபிரஸ்த நிலை என்பது, காடுகளில் தவவாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்கிற இறைநிலையாகும். இந்நிலையை அடைந்த சித்தர்கள், வனப்பகுதியிலேயே பல்வேறு மரங்களாக உருமாறி இருப்பதால், காடுகளிலுள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்தியப் பண்பாடு புனிதமாகப் போற்றுகிறது.
சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்புகளில் விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த “சபார்கள்” என்ற மலைவாழ்மக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்ற குறிப்பு உள்ளது.
81) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) பைரவர் – நாய்
B) ஐயப்பன் – புலி
C) எமன் – எருமை
D) இந்திரன் – குதிரை
விளக்கம்: சிவபெருமான் – காளை அல்லது நந்தி
பராசக்தி – சிங்கம்
பிள்ளையார் – மூஷிகம்
திருமால் – ஆதிசேஷன்
ஐயனார் – குதிரை
எமன் – எருமை
இந்திரன் – யானை
82) இலங்கையில் இராவணனைக் கொன்ற இராமன் கீழ்க்காணும் எந்த கடலில் நீராடித் தம் பாவத்தைப் போக்கிக் கொண்டார் என்று நம்பப்படுகிறது?
A) கன்னியாகுமாரி
B) தூத்துக்குடி
C) நாகப்பட்டினம்
D) இராமேஸ்வரம்
விளக்கம்: பண்டைய காலம் முதலே, கடலையும் கடலில் நீராடுவதையும் மக்கள் புனிதமாகக் கருதினர். இலங்கையில் இராவணனைக் கொன்ற இராமன் இராமேஸ்வரம் கடலில் நீராடித் தம் பாவத்தைப் போக்கிக் கொண்டார் என்று நம்பப்படுகிறது.
83) கடலும் கடல் சார்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
விளக்கம்: குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியும்
முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியும்
நெல்தல் – வயலும் வயல் சார்ந்த பகுதியும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியும்
பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதியும்
84) பிரம்மபுத்திரா நதி கயிலை மலையில் தோன்றுகிறது. இந்நதி கீழ்க்காணும் எந்த பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து வங்காளதேசம் செல்கிறது?
A) சியாங்
B) சங்கோசு
C) துப்ரி
D) கௌகாத்தி
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
85) சுற்றுச்சூழல் கல்வி, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட கீழ்க்காணும் எந்த ஐ.நா.சபை மாநாடு காரணமாக அமைந்தது?
A) 1992
B) 1990
C) 2001
D) 2002
விளக்கம்: ஐ.நா.சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு ‘அஜண்டா – 21’ என்று பொதுப் பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவற்றைச் சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ளவேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
86) சிப்கோ இயக்கம் கீழ்க்காணும் யாரால் தொடங்கப்பட்டது?
A) சலீம் அலி
B) சுந்தர்லால் பகுகுணா
C) அம்ரிதாதேவி
D) கைலாஷ் சத்யார்த்தி
விளக்கம்: 1972-இல் சுந்தர்லால் பகுகுணா என்பவர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கத்தைத் தொடங்கினார். இதன் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாத்தல் ஆகும்.
87) நெய்தல் நில மக்கள் கீழ்க்காணும் எந்த கடவுளை வழிபடுகின்றனர்?
A) முருகர்
B) இந்திரன்
C) கொற்றவை
D) வருணன்
விளக்கம்: முல்லை – கடலும் கடல் சார்ந்த இடமும்
நெய்தல் நில கடவுள் – வருணன்
88) கடல்மகள் என்று போற்றப்படுபவர் யார்?
A) பார்வதி
B) மகாஇலட்சுமி
C) சரஸ்வதி
D) காமாட்சி
விளக்கம்: மகாலட்சுமி, கடலில் தோன்றியதால் கடல், மகள் என்றும் போற்றப்படுகிறார்.
89) ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டையகாலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நீருக்கு கீழ்க்காணும் எந்த கோயில் பஞ்சபூதத் தலமாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது?
A) சிதம்பரம் நடராஜர் கோயில்
B) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
C) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
D) ஸ்ரீ காளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில்
விளக்கம்: ஆகாயம், நெருப்பு, நீர், காற்;று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டைக்காலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நீருக்கு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலமாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
90) நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் கூறும் நூல் எது?
A) சிலப்பதிகாரம், மணிமேகலை
B) குண்டலகேசி, நீலகேசி
C) பட்டினப்பாலை, புறநானூறு
D) பட்டினப்பாலை, அகநானூறு
விளக்கம்: நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகின்றன.
91) கூற்று: வைணவர்கள் கடலை கடவுளாக வழிபடுகின்றனர்.
காரணம்: காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, பரந்தாமனாக லட்சுமிதேவியுடன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, பரந்தாமனாக லட்சுமிதேவியுன் திருபாற்கடலில் பள்ளிக் கொண்டுள்தால், கடலைக் கடவுளாக வைணவர்கள் வழிபடுகின்றனர்.
92) ‘ஆல் அமர் செல்வன்’ என்று குறிப்பிடப்படுபவர் யார்?
A) சிவபெருமான்
B) விநாயகர்
C) விஷ்ணு
D) பிரம்மா
விளக்கம்: சங்க இலக்கியங்கள் சிவபெருமானை ‘ஆல் அமர் செல்வன்’ என்று குறிப்பிடுகின்றன.
93) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு பொருந்தாதது எது?
A) தூய்மையான காற்று, நீர், நிலம் போன்றவற்றை வழங்குதல்
B) குறிப்பிட்ட அளவில் மாசுபடுதலைக் கட்டுப்படுத்துல்
C) உயிர்க்குத் தீங்குவிளைவிக்கும் பொருள்களைப் பாதுகாப்பான முறையில் கையாளுதல்
D) மரங்களை வெட்டுதலை தடுத்தல்
விளக்கம்: மேற்காண்பனவற்றில் மரங்களை வெட்டுதலை தடுத்தல் என்பது சிப்கோ இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். சிப்கோ என்ற இந்திச் சொல்லுக்குக் கட்டிணைத்தல் என்று பொருள். அதாவது மரங்களை வெட்டும்போது அதனை தடுக்கும் பொருட்டு மரத்தை கட்டியணைத்தல் என்று பொருள்.
94) கூற்று: இந்தியா தருமபூமி, புண்ணியபூமி, ஆன்மிகபூமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
காரணம்: இந்தியாவில் அமைந்துள்ள காடுகள்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: இந்தியா தருமபூமி, புண்ணியபூமி, ஆன்மிகபூமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காடுகளாகும்.
95) வேதங்கள் நான்குவகை ஆசிரம தர்மங்களை மனித இனத்திற்கு வழங்கியுள்ளன. இவற்றில் பொருந்தாதது எது?
A) பிரம்மச்சரியம்
B) கிரகஸ்தம்
C) இந்திரபிரஸ்தம்
D) சன்னியாசம்
விளக்கம்: வேதங்கள் நான்குவகை ஆசிரம தர்மங்களை மனித இனத்திற்கு வழங்கியுள்ளன. அவை:
1. பிரம்மசரியம்
2. கிரகஸ்தம்
3. வனபிரஸ்தம்
4. சன்னியாசம்
96) கூற்று: காடுகளிலுள்ள அனைத்து தாவரங்களையும் இந்தியப் பண்பாடு புனிதமாகப் போற்றுகிறது.
காரணம்: காடுகளில் மூலிகைத் தாவரங்கள் நிறைந்திருக்கின்றன
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: சித்தர்கள் வனப்பகுதியிலே பல்வேறு மரங்களாக உருமாறி இருப்பதால், காடுகளிலுள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்தியப் பண்பாடு புனிதமாகப் போற்றுகிறது.
97) இராமாயணம் ஆறு காண்டங்களை உடையதாகும். இதில் முக்கியத்துவம் பெறுவது?
A) கிட்கிந்தா காண்டம்
B) ஆரண்ய காண்டம்
C) சுந்தர காண்டம்
D) அயோத்தியா காண்டம்
விளக்கம்: இராமாயணத்தில் ஆரண்யகாண்டமே முக்கியத்துவம் பெறுகிறது. 98) கூற்றுகளை ஆராய்க
1. இந்தியா தருமபூமி, புண்ணியபூமி, ஆன்மிகபூமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
2. நான்குவகை ஆசிரம தர்மங்கள்: பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்னியாசம்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இந்தியா தருமபூமி, புண்ணிபூமி, ஆன்மீகபூமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காடுகளாகும். அமைதியான இக்காட்டுப்பகுதியில்தான் ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், ஞானிகள் போன்ற அனைவரும் ஞானம்பெற்று, வேத உபநிடதங்களை உலகிற்கு அளித்தார்கள். வேதங்கள், நான்குவகை ஆசிரம தர்மங்களை மனித இனத்திற்கு வழங்கியுள்ளன. அவை: பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்னியாசம் என்பனவாகும்.
99) தவறான கூற்றை தெரிவு செய்க. (பிரம்மபுத்திரா நதி பற்றிய கூற்றுகளில்)
A) திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றுகிறது
B) அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது.
C) அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுகிறது
D) வங்காளதேசத்தில் இந்நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வங்காளத்தில் பத்மா என்று அழைக்கப்படும் நதி – கங்கை
100) கும்பமேளா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது?
A) 10
B) 6
C) 5
D) 12
விளக்கம்: கும்பமேளா (கிண்ணத்திருவிழா): இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்விழா அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களிலுள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது.
101) முல்லை நிலக் கடவுளாக வழிப்படப்படுபவர் யார்?
A) முருகர்
B) திருமால்
C) இந்திரன்
D) வருணன்
விளக்கம்: முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
முல்லை நில மக்கள் திருமாலை வழிபடுகின்றனர்.
102) திருவேங்கடமலையில் செண்பகமரமாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டியவர் யார்?
A) பொய்கையாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) பேயாழ்வார்
D) குலசேகர ஆழ்வார்
விளக்கம்: குலசேகர ஆழ்வார் திருவேங்கடமலையில் செண்பகமரமாகப் பிறக்கவேண்டும் என்று வேண்டுகிறார்.
103) கூற்றுகளை ஆராய்க
1. திருச்செந்தூரில் திருநீற்றை இலையில் வைத்துதான் பிரசாதமாகத் தருகிறார்கள்.
2. தஞ்சை மாவட்டம் சூரியனால் கோயிலில் எருக்கு இலையில்தான் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்:1. திருச்செந்தூரில் திருநீற்றை இலையில் வைத்துதான் பிரசாதமாகத் தருகிறார்கள்.
2. தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயிலில் எருக்கு இலையில்தான தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
104) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) வேப்பம் பூ – பாண்டிய மன்னர்
B) ஆத்திப் பூ – சோழ மன்னர்
C) பனம்பூ – பாண்டிய மன்னர்
D) மாமரம் – தொண்ட மண்டல மன்னர்
விளக்கம்: சங்ககால மன்னர்கள், மரங்களைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தனர்.
வேப்பம் பூ – பாண்டிய மன்னர்
ஆத்திப் பூ – சோழ மன்னர்
பனம் பூ – சேர மன்னர்
அரசமரம் – தொண்டை மண்டல மன்னர்.
தமிழக பேரரரசர்களின் கோட்டை வாயிலில், காவல்மரங்கள் என்ற பெயரில் பல மரங்கள் நடப்பட்டிருந்தன. இம்மரங்களைக் ‘காவல்மரம்’ அல்லது ‘கடிமரம்’ என்றழைத்தார்கள். இக்கடிமரத்தை வீரர்கள் எப்பொழுதும் காவல் காப்பார்கள். கடிமரத்தை மாற்றான் வீழ்த்தினால், மன்னன் வீழ்ந்தான் என்பது பொருளாகும். இவ்வாறாக மரங்கள் மிகப் பழங்காலத்திலிருந்து மனிதனோடும், மனித நம்பிக்கைகளோடும் முதன்மையாக இருந்து வருகின்றன.
105) கிருஷ்ணாநதி புஷ்கரவிழா கீழ்க்காணும் எதனை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது?
A) சூரியனின் சுழற்சி
B) பூமியின் சுழற்சி
C) கோள்களின் சுழற்சி
D) ஐம்பூதங்கள்
விளக்கம்: கிருஷ்ணாநதி புஷ்கரவிழா: கிருஷ்ணாநதி புஷ்கரலு என்று அழைக்கப்படும் கிருஷ்ணாநதி புஷ்கரவிழா 12 ஆண்டுகளுக்கொருமுறை 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது. கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி இவ்விழா கொண்டாடப்படுகிறது.
106) ‘நாளை உலகம் அழிவதாக இருந்தாலும், இன்றைக்கு மரம் நடுவதை விட்டுவிடாதே’ என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் யார்?
A) இயேசுநாதர்
B) கன்பூசினியஸ்
C) புத்தர்
D) முகமது நபி
விளக்கம்: இஸ்லாம் சமயத்தில் முகமது நபி ‘நாளை உலகம் அழிவதாக இருந்தாலும், இன்றைக்கு மரம் நடுவதை விட்டுவிடாதே’ என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
107) ‘காக்கை குருவி எங்கள் சாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ – என்று பாடியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) கவிமணி
D) வாணிதாசன்
விளக்கம்: “காக்கை குருவி எங்கள் சாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – பாரதியார்.
108) பறவைகளின் அரசனாக கருதப்படும் பறவை எது?
A) மயில்
B) நெருப்புக் கோழி
C) புறா
D) கருடன்
விளக்கம்: இந்தியப் பண்பாட்டில் கடவுளோடு சேர்த்துப் பறவைகளும் வணங்கப்படுகின்றன. எடுத்துகாட்டாகப் பறவைகளின் அரசனாகக் கருதப்படும் கருடன், திருமாலின் வாகனமாகும். வைணவத் தலங்களில் கருடாழ்வாரைத் தான் முதலில் பக்தர்கள் வணங்குவார்கள்.
109) பொருத்துக.
அ. மீனாட்சி அம்மன் – 1. அன்னப்பறவை
ஆ. இலட்சுமி – 2. மயில்
இ. சரஸ்வதி – 3. ஆந்தை
ஈ. முருகன் – 4. கிளி
A) 4, 1, 3, 2
B) 4, 3, 1, 2
C) 4, 1.2, 3
D) 4, 2, 1, 3
விளக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் – கிளி
இலட்சுமி – ஆந்தை
சரஸ்வதி – அன்னப்பறவை
முருகப்பெருமான் – மயில்
110) பொருத்துக.
அ சிவபெருமான் – 1. மூஷிகம்
ஆ. திருமால் – 2. காளை
இ. பராசக்தி – 3. ஆதிசேஷன் என்ற பாம்பு
ஈ. பிள்ளையார் – 4. சிங்கம்
A) 2, 3, 4, 1
B) 3, 2.4, 1
C) 2, 4, 3, 1
D) 1, 2, 3, 4
விளக்கம்: சிவபெருமான் – காளை அல்லது நந்தி
பராசக்தி – சிங்கம்
பிள்ளையார் – மூஷிகம்
திருமால் – ஆதிசேஷன் என்ற பாம்பு
111) ஐ.நா. சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. அதில் ஏற்கப்பட்ட உறுதிக்கு கீழ்க்காணும் எந்த பெயர் சூட்டப்பட்டது?
A) அஜண்டா 22
B) அஜண்டா 21
C) அஜண்டா 19
D) அஜண்டா 20
விளக்கம்: ஐ.நா.சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு ‘அஜண்டா-21’ என்று பொதுப் பெயரிடப்பட்டது.
112) கூற்று: கடல் தெய்வமாக வழிபடப்படுகிறது.
காரணம்: கடலுக்கடியிலுள்ள பவளப்பாறைகள் முக்கியமான இயற்கை வளங்களாகும். கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாக கருதப்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: கடலுக்கடையிலுள்ள பவளப்பாறைகள் முக்கியமான இயற்கை வளங்களாகும். கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, கடல் தெய்வமாக வழிபடப்படுகிறது.
113) கடல் கீழ்க்காணும் எந்த பெயரில் வணங்கப்படுகிறது?
A) சமுத்திரராஜன்
B) சமுத்திரன்
C) வருணாதிராஜன்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: கடலுக்கடியிலுள்ள பவளப்பாறைகள் முக்கியமான இயற்கை வளங்களாகும். கடலில் கிடைக்கும் முத்து விலைமதிப்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே, கடல் தெய்வமாக வழிபடப்படுகிறது. கடல் “சமுத்திரராஜன்” என்ற பெயரில் கடல் வணங்கப்படுகிறது.
114) ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டைக்காலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இவற்றில் ஆகாயத்திற்கான தலமாக கருதப்பட்டு வழிபடப்படும் கோயில் எது?
A) சிதம்பரம் நடராஜர் கோயில்
B) திருவண்ணாமலை அண்ணாமiலையார் கோயில்
C) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
D) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில்
விளக்கம்: ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டையக்காலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ஆகாயத்திற்குச் சிதம்பரம் நடராஜர் கோயில் தலமாகக் கருதப்பட்டு வழிப்படப்படுகிறது.
115) ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற கூற்றுடன் தொடர்புடையவர் யார்?
A) தாயுமானவர்
B) வள்ளலார்
C) திருமூலர்
D) அகத்தியர்
விளக்கம்: உயிருள்ள அனைத்தையும் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். படைப்புகள் அனைத்தையும் நேசிக்க வேண்டும். இதனையே வள்ளலாரும் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று மனம் வருந்தி கூறுகிறார். இப்படிப் படைப்பு முழுவதிலுமே மனித நேயத்தைக் கற்றுத்தருவது இந்தியப் பண்பாடாகும்.
116) ஐ.நா.சபை 1992இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இதில் கீழ்க்காணும் எந்த உறுதி எடுக்கப்பட்டது?
A) சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்
B) சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்
C) சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும்
D) சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விளக்கம்: ஐ.நா.சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது
117) ஐ.நா.வின் சுற்றுச்சுழல் மாநாட்டில் சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள கீழ்க்காணும் எவற்றை தேர்வு செய்தனர்?
A) கல்வி, பொது விழிப்புணர்வு
B) பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஐ.நா.சபை 1992-இல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு ‘அஜண்டா – 21’ என்று பொதுப் பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவற்றைச் சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ளவேண்டும் என்று முடிவானது.
118) ஜமுனா என்று அழைக்கப்படும் நதி எது?
A) பிரம்மபுத்திரா
B) கங்கை
C) யமுனை
D) சிந்து
விளக்கம்: பிரம்மபுத்திரா: இந்நதி ஆசியாவின் பெரிய நதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி வங்காளதேசத்தில் பாய்கிறது. அங்கு இந்நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
119) கூற்றுகளை ஆராய்க
1. நர்மதை நதியில் இருக்கும் கூழாங்கற்கள் சிவபெருமானின் சொரூபங்களாகக் கருதப்படுகின்றன.
2. துங்கபத்ரா நதிக்கரையில் ஏற்படுத்தப்பட்ட விஜயநகரப் பேரரசு தென்னிந்தியப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: நர்மதை நதியில் இருக்கும் கூழாங்கற்கள் சிவபெருமானின் சொரூபங்களாகக் கருதப்படுகின்றன. துங்கபத்ரா நதிக்கரையில் ஏற்படுத்தப்பட்ட விஜயநகரப்பேரரசு தென்னிந்தியப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தது.
120) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழகத்தின் புனிதமாக நதியான காவிரியில் நதிக்கரையில் தான் வைணவப் புனிதத் தலமான திருவரங்கம் அமைந்துள்ளது.
2. காவிரியின் நதிக்கரையில்தான் சைவத்தலமான மயிலாடுதுறை அமைந்துள்ளது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: காவிரிநதி தமிழகத்தின் புனிதமான நதியாகும். இந்நதிக்கரையில்தான் வைணவப் புனிதத் தலமான திருவரங்கம், சைவத் தலமான மயிலாடுறை ஆகியவை அமைந்துள்ளன. இந்நதியில் நீராடுவதை மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.
121) எந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘காடுகள் பாதுகாப்புச்சட்டம்’ வனங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதைத் தடைசெய்கிறது?
A) 1972
B) 1990
C) 1980
D) 1986
விளக்கம்: 1980-இல் கொண்டுவரப்பட்ட ‘காடுகள் பாதுகாப்புச்சட்டம்’, வனங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதைத் தடைச்செய்கிறது.
122) சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்பது கீழ்க்காணும் எந்த அரசியலைப்புச் சட்டத்திருத்ததின்படி, அறிவிக்கப்பட்டுள்ளது?
A) 46
B) 42
C) 48
D) 40
விளக்கம்: ஸ்டாக்ஹோம் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உலகில் பல நாடுகள் தாமாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவித்தது.
123) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) சிவபெருமான் – காளை
B) பராசக்தி – சிங்கம்
C) ஐயனார் – குதிரை
D) பைரவர் – பாம்பு
விளக்கம்: பைரவர் – நாய்
124) ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டைக்கலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நெருப்பிற்கு கீழ்க்காணும் எந்த தலம் வழிபாட்டு தலமாக விளங்குகிறது?
A) சிதம்பரம் நடராஜர் கோயில்
B) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
C) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
D) ஸ்ரீகாளகஸ்தியுள்ள காளஹ்தீஸ்வரர் கோயில்
விளக்கம்: ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றன. பண்டைக்கலத்திலிருந்தே மக்கள் இவற்றைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நெருப்பிற்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
125) ஆய்காஸ் என்பது எந்த மொழிச் சொல்?
A) இலத்தீன்
B) பிரெஞ்சு
C) கிரேக்கம்
D) ஸ்பானிஷ்
விளக்கம்: ஆய்காஸ் என்ற கிரேக்கச் சொல் ‘வீடு’ எனப் பொருள்படும். ‘லோகஸ்’என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும். ஆய்காஸ், லோகாஸ் என்ற இவ்விருச்சொல்லும் இணைந்து ‘யிகோலஜி’ என்ற சொல் உருவானது. உயிருள்ளவையும், உயிரற்றவையும் அடங்கிய தொகுப்பிற்கு சூழ்நிலைமண்டலம் அல்லது சூழ்நிலைத் தொகுப்பு என்று பெயர்.
126) உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
A) ஜுன் 5
B) ஜுலை 5
C) ஆகஸ்ட் 5
D) செப்டம்பர் 5
விளக்கம்: உலகச் சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51ஏ-இன் படி, “காடு, ஏரி, ஆறு போன்ற இயற்கைச் சூழல்களை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும், பறவை, விலங்கு போன்றவற்றிடம் அன்பு பாராட்டுவதும் அவற்றால் ஏற்படும் நன்மைகளை உணர்வதும் கருணை காட்டுவதும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்”.
127) வைஷண்வதேவி கோயில் இடம்பெற்றுள்ள மாநிலம் எது?
A) காஷ்மீர்
B) தமிழ்நாடு
C) இமாச்சலப்பிரதேசம்
D) சிக்கிம்
விளக்கம்: வைஷ்ணவிதேவி கோயில் காஷ்மீரிலுள்ள வைஷ்ணவதேவி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவி மாதாராணி வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மூலவருக்கு மற்றொரு பெயர் சிரோபலி என்பதாகும். இக்கோயிலில் மகாகாளி, மாகலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் ஒரே இடத்திலிருந்து அருள் பாலிக்கின்றனர்.
128) பொருத்துக
அ. மகாமகம் – 1. அலகாபாத்
ஆ. கும்பமேளா – 2. மதுரை
இ. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா – 3. மயிலாடுதுறை
ஈ. காவிரி புஷ்கரவிழா – 4. கும்பகோணம்
A) 2, 3, 4, 1
B) 4, 1, 2, 3
C) 3, 4, 1, 2
D) 2, 4, 3, 1
விளக்கம்: மகாமகம் – கும்பகோணம்
கும்பமேளா – அலகாபாத்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா – மதுரை
காவிரி புஷ்கரம் – மயிலாடுதுறை
129) பிரம்மபுத்திரா நதி பற்றிய கூற்றில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) இந்நதி ஆசியாவின் பெரியநதிகளில் ஒன்றாகும்.
B) இந்நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் தோன்றி அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது
C) இந்நதி அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்தோசு ஆறு இதனுடன் கூடுமிடத்திலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது
D) வங்கதேசத்தில் இந்நதி பத்மா என்று அழைக்கப்படுகிறது
விளக்கம்: பிரம்மபுத்திரா நதி வங்கதேசத்தில் ஜமுனா என்று அழைக்கப்படுகிறது.
130) தவறான கூற்றை தெரிவு செய்க
A) இந்துக்களின் புனிதத் தலமான காசி, கங்கை நதியோரத்தில் அமைந்துள்ளது.
B) சிவபெருமானின் திருவடிகள் கங்கையால் தூய்மைப்படுத்தப்படுகிறது
C) கங்கையும், யமுனையும் இணையும் பகுதியான அலகாபாத்தில், புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுகிறது
D) சிவபெருமானின் தலையில் கங்கை உருவாகிறது என்ற ஆன்மிக நம்பிக்கை மக்களிடையே இன்றும் உள்ளது
விளக்கம்: திருமாலின் திருவடிகள் கங்கையால் தூய்மைப்படுத்தப்படுகிறது
131) கூற்றுகளை ஆராய்க
1. யமுனை நதியோரத்தில் கண்ணன் கோபியருடன் விளையாடினார் என்று மக்கள் நம்புகின்றனர்
2. அயோத்தில் இராமன் தோன்றினார் என்று மக்கள் நம்புகின்றனர்
A) 1மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: யமுனை நதியோரத்தில் கண்ணன் கோபியருடன் விளையாடினார் என்றும், சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தியில் இராமன் தோன்றினார் என்றும் மக்கள் நம்புகின்றனர்
132) ‘ஆரோக்ய பச்சை’ எனற மருத்துவத் தாவரம் கீழ்க்காணும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A) ஆந்திரா
B) தமிழ்நாடு
C) கர்நாடகா
D) கேரளா
விளக்கம்: வனங்கள், உயிரினங்களைக் காப்பாற்ற அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. எ.கா. கேரளாவில் ‘ஆரோக்ய பச்சை’ என்ற மருத்துவத் தாவரத்தின் பயனையறிந்து, வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா ஆராய்ச்சி நிறுவனம், இயற்கை வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது.
133) இந்தியா எந்த மாநாட்டில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா.உடன்படிக்கையில் கையொப்பமிட்டது?
A) ஸ்டாக்ஹோம்
B) ரியோ-டி-ஜெனிரோ
C) பாரிஸ்
D) இலண்டன்
விளக்கம்: உயிரியில் பல்வகை சட்டம் 2002-ன்படி, ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா.உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு அதாவது, காடுகளிலுள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபுப் பொருள்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள், திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவற்றைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
134) கிறிஸ்துமஸ் மரம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) ஆற்றல் மரம்
B) அறத்தின் மரம்
C) அறிவு மரம்
D) அன்பு மரம்
விளக்கம்: மரம் அனைத்துச் சமயங்களிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்து சமயத்தில் கற்பக விருட்சம் என்றும், கிறித்துவ மதத்தில் கிருஸ்துமஸ் மரம் என்றும் (அறிவு மரம்), பௌத்தத்தில் போதிமரம் என்றும் போற்றுகிறார்கள்.
135) காட்டில் தவம் மேற்கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விரிவாகக் கூறுவது எது?
A) உபநிடதங்கள்
B) ஆரண்யங்கள்
C) சில்பவேதம்
D) கந்தர்வ வேதம்
விளக்கம்: வேத இலக்கியமான சம்ஹிதைகள், ஆரண்யகத்தில் காட்டில் தவம் மேற்கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
136) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A) 1988
B) 1986
C) 1987
D) 1989
விளக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986: 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதன்மூலம், மனித இனத்திற்கும், பிற உயிரினங்களுக்கும் சட்டத்தின் வழியாகப் பாதுகாப்புச் செய்யப்பட்டுள்ளன.
137) கூற்றுகளை ஆராய்க
1. இந்தியாவில் காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர், சுந்தர் லால் பகுகுணா ஆவார்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ பிரிவு இயற்கைச் சூழல் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இந்தியாவில் காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பியவர், அம்ரிதாதேவி ஆவார்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ பிரிவு இயற்கைச் சூழல் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடுகிறது.
138) ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல் மற்றும் ‘லோகாஸ்’ என்ற கிரேக்கச் சொல் இணைந்து உருவான சொல் எது?
A) யிகோலஜி
B) யுகோலஜி
C) ஐகோலஜி
D) யோகோலஜி
விளக்கம்: ‘ஆய்காஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘வீடு’ எனப் பொருள்படும். ‘லோகோஸ்’ என்ற கிரேக்கச் சொல், ‘கற்றல்’ எனப் பொருள்படும். ஆய்காஸ், லோகாஸ் என்ற இவ்விருச்சொல்லும் இணைந்து ‘யிகோலஜி’ என்ற சொல் உருவானது. உயிருள்ளவையும், உயிரற்றவையும் அடங்கிய இயற்கையின் தொகுப்பிற்கு சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத் தொகுப்பு என்று பெயர்.
139) ஆதிமனிதனின் முதல் வீடாக இருந்தவை எது?
A) குகை
B) பெரிய மரம்
C) மரத்தினால் செய்யப்பட்ட வீடு
D) குடிசை
விளக்கம்: ஆதிமனிதனின் முதல் வீடாக இருந்தவை காடுகளில் உள்ள பெரிய மரங்களேயாகும். இதன் அடையாளமாக அரசமரத்தை ஒவ்வோர் ஊரிலும் வளர்த்துப் பாதுகாக்கின்றனர்.
140) தொல்காப்பியர் கூறும் பஞ்சபூதங்களை வரிசைப்படுத்துக?
A) நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
B) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
C) நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
D) நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம்
விளக்கம்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐவகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு இவ்வுலகம் தோன்றியது என்ற கருத்தைத் தொல்காப்பியர் வெளிப்படுத்தியுள்ளார்.
“நிலம்;, நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”
என்று உலகத் தோற்றம் பற்றி அறிவியல் அடிப்படையில் தொல்காப்பியர் கூறியுள்ளார்
141) சிப்கோ இயக்கம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) இவ்வியக்கம் 1972-இல் பகுகுணா என்பவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டது.
B) சிப்கோ என்னும் இந்தி சொல்லுக்கு ‘பாதுகாத்தல்’ என்று பொருள்
C) இந்திய மாநிலங்களில் உள்ள கிராம மக்கள், காட்டிலுள்ள மரங்களை வெட்டுபவர்களின் கோடரியைத் தடுக்கும்பொருட்டு, மரங்களைக் கட்டிப்பிடித்துக் காப்பாற்றும் செயலே சிப்கோ இயக்கமாகும்.
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: சிப்கோ என்ற இந்தி மொழிச் சொல்லுக்கு ‘கட்டிணைத்தல்’ என்று பொருள்.
142) உயிரியல் பல்வகை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A) 2000
B) 2002
C) 2004
D) 2007
விளக்கம்: உயிரியில் பல்வகை சட்டம் 2002-இதன்படி, ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா.உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு அதாவது, காடுகளிலுள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபுப் பொருள்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள், திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவற்றைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
143) சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று 42வது அரசியலமைப்புச்சட்டத்திருத்தின்படி வலியுறுத்தப்பட்டது. இச்சட்டத்திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
A) 1972
B) 1976
C) 1978
D) 1974
விளக்கம்: ஸ்டாக்ஹோம் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உலகில் பல நாடுகள் தாமாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவித்துள்ளது.
144) சிப்கோ இயக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாப்பதாகும்
2. உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இவ்வியக்கம், கர்நாடகம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம் வனங்களைப் பாதுகாப்பதாகும்
2. உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இவ்வியக்கம், கர்நாடகம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
145) கூற்றுகளை ஆராய்க.
1. 1988-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
2. 1972-ஆம் ஆண்டு இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல்வடிவம் தரும்வகையில், இந்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
2. 1988-ஆம் ஆண்டு இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.
146) தமிழகத்தின் புனிதமான நதி என போற்றப்படும் நதி எது?
A) காவிரி
B) வைகை
C) தென்பெண்ணையாறு
D) குண்டாறு
விளக்கம்: காவிரி தமிழகத்தின் புனிதமான நதியாகும். இந்நதிக்கரையில்தான் வைணவப் புனிதத் தலமான திருவரங்கம், சைவத் தலமான மயிலாடுதுறை ஆகியவை அமைந்துள்ளன. இந்நதியில் நீராடுவதை மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.
147) தவறான கூற்றை தெரிவு செய்க.
A) திருவேற்காட்டில வேப்பமரத்தை அம்மனாகக் கருதி வழிபடுகின்றனர்.
B) வில்வமரம் சிவபெருமானுக்கு உகந்த மரமாதலால், ஒவ்வொரு சிவாலயங்களிலும் இம்மரத்தை வளர்க்கிறார்கள்.
C) விநாயகரோடு அரசமரமும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மாமரமும் புனிதமாக வணங்கப்படுகின்றன.
D) சங்க இலக்கியங்களில் திருமாலை ‘ஆல் அமர் செல்வன்’ என்று குறிப்பிடுகின்றனர்.
விளக்கம்: சங்க இலக்கியங்களில் சிவபெருமானை ‘ஆல் அமர் செல்வன்’ என்று குறிப்பிடுகின்றனர்.
148) தவறான கூற்றை தெரிவு செய்க.
A) குலசேகர ஆழ்வார் திருவேங்கடமலையில் செண்பகமரமாகப் பிறக்கவேண்டும் என்று வேண்டுகிறார்.
B) திருச்செந்தூரில் திருநீற்றை இலையில் வைத்துதான் பிரசாதமாகத் தருகிறார்கள்
C) தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயிலில் எருக்கு இலையில்தான் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது
D) ஆலமரம் தொண்டை மண்டல மன்னர்களின் சின்னமாகும்
விளக்கம்: அரசமரம் தொண்டை மண்டல மன்னர்களின் சின்னமாகும்.
149) தவறான கூற்றை தெரிவு செய்க
A) இலங்கையில் இராவணனைக் கொன்ற இராமன் இராமேஸ்வரம் கடலில் நீராடித் தம் பாவத்தைப் போக்கிக் கொண்டார்
B) கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று அழைக்கப்படுகிறது.
C) நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன.
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இலங்கையில் இராவணனைக் கொன்ற இராமன் இராமேஸ்வரம் கடலில் நீராடித் தம் பாவத்தைப் போக்கிக் கொண்டார் .
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று அழைக்கப்படுகிறது.
நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறுகின்றன.
150) கூற்றுகளை ஆராய்க.
1. காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, பரந்தாமனாக லட்சுமிதேவியுடன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளதால் கடலைக் கடவுளாக வைணவர்கள் வழிபடுகின்றனர்.
2. சரஸ்வதி கடல்மகள் என்றும் போற்றப்படுகிறார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, பரந்தாமனாக லட்சுமிதேவியுடன் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளதால் கடலைக் கடவுளாக வைணவர்க் வழிபடுகின்றனர். மகாலட்சுமி கடல்மகள் என்றும் போற்றப்படுகிறார்.
151) கீழ்க்காண்பனவற்றில் எது சிந்து நதியின் துணை நதி அல்ல?
A) ஜீலம்
B) சினாப்
C) கோத்ரா
D) சட்லெஜ்
விளக்கம்: சிந்துகங்கைச் சமவெளிகள், பழைமையான வட இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்கின்றன. சிந்துவெளி நாகரிகம், சிந்து மற்றும் அதன் துணை நதிகளான ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி ஆகியவற்றின் பகுதிகளில் தோன்றிப் பரவியது.