இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 7th Social Science Lesson 24 Questions in Tamil
7th Social Science Lesson 24 Questions in Tamil
24] இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
1) தொடக்க இடைக்கால இந்திய வரலாற்று காலம் எது?
A) கி.பி.700 முதல் கி.பி.900
B) கி.பி.700 முதல் கி.பி.1000
C) கி.பி.700 முதல் கி.பி.1200
D) கி.பி.700 முதல் கி.பி.1400
விளக்கம்: கி.பி (பொ.ஆ.) 700 முதல் 1200 – தொடக்க இடைக்கால இந்திய வரலாறு
கி.பி (பொ.ஆ) 1200 முதல் 1700 – பின் இடைக்கால இந்திய வரலாறு
2) வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும், கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் தனது குறிப்புகளில் எழுதியவர் யார்?
A) அல்-பரூனி
B) அபல் பாசல்
C) மார்கோபோலோ
D) இபன் பதூதா
விளக்கம்: மொராக்கோ நாட்டு வெளிநாட்டுப் பயணியானா இபன் பதூதா, இந்தியாவின் சாதி குறித்தும், சதி (உடன் கட்டை) ஏறுதல் பற்றியும் கூறியுள்ளார். வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் இவரின் குறிப்புகளில் உள்ளது.
3) யாருடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றிய பதிவுகள் உள்ளன?
A) முற்கால பாண்டியர்கள்
B) பிற்கால பாண்டியர்கள்
C) முற்கால சோழர்கள்
D) பிற்கால சோழர்கள்
விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் (கி.பி.10 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை) வெளியிடப்பட்ட பல செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது புகழ் பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
4) தபகத் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) தலைமுறைகள்
B) வரலாறு
C) சுயசரிதை
D) சான்றுகள்
விளக்கம்: தபகத் – அராபியச் சொல் – தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள்
தஜுக் – பாரசீகச் சொல் – சுயசரிதை
தாரிக் அல்லது தாகுயூத் – அராபியச் சொல் – வரலாறு
5) ராஜ தரங்கிணி என்ற நூல் எந்த நூற்றாண்டை சார்ந்தது?
A) 10ஆம் நூற்றாண்டு
B) 11-ஆம் நூற்றாண்டு
C) 12-ஆம் நூற்றாண்டு
D) 13-ஆம் நூற்றாண்டு
விளக்கம்: இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ராஜதரங்கினி என்ற நூல் ஆகும். இந்நூல் 11-ஆம் நூற்றாண்டை சார்ந்தது ஆகும்.
6) அல்-பரூனி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்தியாவையும் அதன் மக்களையும் புரிந்து கொள்ள முயன்றார்.
B) சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்ட அவர் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்
C) கஜினி மாமூதின் படையெடுப்பு மூலம் இந்தியாவிற்கு வருகை புரிந்தவர்
D) மிகைப்படுத்திக்கூறும் பாங்கினைக் கொண்டவர்
விளக்கம்: மிகைப்படுத்திக்கூறும் பாங்கினை கொண்டவர் அபுல் பாசல் ஆவார். இவர் அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா எனும் இரு நூலினை எழுதியுள்ளார்.
7) வெனிஸ் நகர பயணியான மார்கோ போலோ கீழ்க்காணும் ———————— எனும் ஊருக்கு இருமுறை வருகை புரிந்தார்.
A) கொற்கை
B) தொண்டி
C) காயல்
D) தஞ்சை
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அவர் தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
8) தபகத்-இ-நஸிரி என்ற நூலினை எழுதியவரை ஆதரித்தவர் யார்?
A) முகமது கோரி
B) நஸ்ருதின் மாமூது
C) மின்கஜ் உஸ் சிராஜ்
D) முகமது பின் துக்ளக்
விளக்கம்: அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் என்பார் தபகத்-இ-நஸிரி எனும் நூலினை எழுதினார். இந்நூலின் சுருக்க உரை முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி.1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளைக் கூறுகின்றன.
9) ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலைப் படம்பிடித்துக் காட்டும் நூல் எது?
A) ராஜ தரங்கிணி
B) பிருதிவி ராஜ ராசோ
C) அமுக்த மால்யதா
D) மதுரா விஜயம்
விளக்கம்: சந்த்பார்தையின் பிருதிவி ராஜ ராசோ என்ற நூல் ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலை படம்பிடித்துக் காட்டுகின்றது.
10) டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது?
A) தாஜ்-உல்-மா-அசிர்
B) தாரிக்-இ-பதானி
C) ஜியா-உத்-பரணி
D) தாரிக்-இ-பிரோஷாகி
விளக்கம்: ஹசன் நிஜாமி என்பார் தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது. இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும்.
11) தாரிக்-இ-பதானி என்ற வரலாற்று நூல் கீழ்க்காணும் எந்த முகலாய அரசரைப் பற்றி கூறுகிறது?
A) அக்பர்
B) பாபர்
C) ஜஹாங்கீர்
D) ஒளரங்கசீப்
விளக்கம்: பதானி எழுதிய நூலான தாரிக்-இ-பதானி ஒரு மிகச் சிறந்த நூல். 1595-ல் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நூல் அக்பர் பற்றி கூறுகிறது.
12) டெல்லி ஒரு பரந்து, விரிந்த நேர்த்தியான நகரம். இதனை பொட்டற்காடாக்கியாவர் முகமது பின் துக்ளக் என்று கூறியவர் யார்?
A) இபன் பதூதா
B) மார்கோ போலோ
C) அல்-பரூனி
D) யுவான் சுவாங்
விளக்கம்: டெல்லி ஒரு பரந்து விரிந்த, நேர்த்தியான நகரமென்று இபன் பதூதா விவரிக்கின்றார். இந்நாட்களில்தான் சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிலிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியைப் பொட்டற்காடாக்கினார்.
13) தஜுக் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) தலைமுறைகள்
B) வரலாறு
C) சுயசரிதை
D) சான்றுகள்
விளக்கம்: தபகத் – அராபியச் சொல் – தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள்
தஜுக் – பாரசீகச் சொல் – சுயசரிதை
தாரிக் அல்லது தாகுயூத் – அராபியச் சொல் – வரலாறு
14) இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று எது?
A) ராஜ தரங்கிணி
B) பிருதிவி ராஜ ராசோ
C) அமுக்த மால்யதா
D) மதுரா விஜயம்
விளக்கம்: இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ராஜதரங்கினி என்ற நூல் ஆகும்.
15) அமுக்த மால்யதா என்ற நூலை இயற்றியவர் யார்?
A) கங்கா தேவி
B) கிருஷ்ணதேவராயர்
C) சந்த்பார்தை
D) ஜெயதேவர்
விளக்கம்: கங்காதேவியால் இயற்றப்பட்ட மதுரா விஜயம், கிருஷ்ணதேவராயரின் அமுக்த மால்யதா ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனிநபர்களையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.
16) குத்புதீன் ஐபக்-உடன் தொடர்புடைய நூல் எது?
A) தாஜ்-உல்-மா-அசிர்
B) தாரிக்-இ-பதானி
C) ஜியா-உத்-பரணி
D) தாரிக்-இ-பிரோஷாகி
விளக்கம்: ஹசன் நிஜாமி என்பார் தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது. இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும்.
17) கங்காதேவியால் இயற்றப்பட்ட மதுரா விஜயம் கீழ்க்காணும் எந்த மரபுடன் தொடர்புடையது?
A) பாமினி பேரரசு
B) விஜயநகரப் பேரரசு
C) சோழப் பேரரசு
D) பல்லவப் பேரரசு
விளக்கம்: கங்காதேவியால் இயற்றப்பட்ட மதுரா விஜயம், கிருஷ்ணதேவராயரின் அமுக்த மால்யதா ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனிநபர்களையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.
18) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சி என அழைக்கப்படும் நூல் எது?
A) நாலயிர திவ்விய பிரபந்தம்
B) கீதகோவிந்தம்
C) பெரியபுராணம்
D) திருவாசகம்
விளக்கம்: ஜெயதேவரின் கீதகோவிந்தம் (12-ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும்.
19) கூற்றுகளை ஆராய்க.
1. செப்புப்பட்டயங்களில் கொடை வழங்கியவர்கள் மற்றும் கொடை பெற்றவர் ஆகியோர் குறித்து விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
2. கல்வெட்டுகளில் கொடை வழங்கியவரின் அறச்செயல்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: செப்புபட்டயங்களில் கொடை வழங்கியவர், கொடை பெற்றவர் ஆகியோர் குறித்து விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முரணாக கல்வெட்டுகளில் கொடை வழங்கியவரின் அறச்செயல்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
20) தாகுயூக்-இ-ஹிந்த் என்னும் நூலின் மூலம் இந்தியாவின் நிலைகளை விவரித்தவர் யார்?
A) இபன் பதூதா
B) அல்-பரூனி
C) மார்கோபோலோ
D) அபுல் பாசல்
விளக்கம்: சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்ட அல்-பரூனி இந்தியத் தத்துவங்களை கற்றார். தாகுயூக்-இ-ஹிந்த் என்ற தனது நூலில் இந்தியாவின் நிலைகளையும் அறிவு முறையினையும், சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து விவரித்துள்ளார்.
21) திருவாலங்காடு செப்பேடு கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?
A) முதலாம் ராஜராஜசோழன்
B) முதலாம் ராஜேந்திர சோழன்
C) சுந்தர சோழன்
D) கரிகாலன்
விளக்கம்: கல்வெட்டுகளில் கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்பு கவனம் பெறுகிறார்;.
திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ரஜேந்திர சோழன்
அன்பில் செப்பேடு – சுந்தரச்சோழன்
22) தாரிக்-இ-பிரோஷாகி எனும் நூலை எழுதியவர் யார்?
A) ஜியா-உத்-பரணி
B) பெரிஷ்டா
C) ஹசன் நிசாமி
D) மின்கஜ் உஸ் சிராஜ்
விளக்கம்: முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர் ஜியா-உத்-பரணி, தாரிக்-இ-பிரோஷாகி எனும் நூலைப் படைத்தார். இந்நூல் கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்ஷா துக்ளக்கின் தொடக்ககால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை விளக்குகிறது.
23) தேவாரத்தை தொகுத்தவர் யார்?
A) நாத முனி
B) ஜெயதேவர்
C) நம்பியாண்டார் நம்பி
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது. கம்பராமாயணம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாகம் ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
24) பதானி எழுதிய தாரிக்- இபதானி என்னும் வரலாற்று நூல் மூன்று தொகுதிகளை கொண்டது. இதில் பொருந்தாத தொகுதி எது?
A) அக்பரின் ஆட்சி
B) அக்பரின் நிர்வாகம்
C) அக்பரின் மதக்கொள்கை
D) அக்பரின் வெற்றிகள்
விளக்கம்: பதானி எழுதிய நூலான தாரிக்-இ-பதானி ஒரு மிகச் சிறந்த நூல். 1595-ல் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. அக்பருடைய ஆட்சி, நிர்வாகம் மற்றும் மதக்கொள்கை குறித்து ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துகளை முன்வைக்கிறது.
25) ரிக்ளா எனும் பயண நூலை எழுதியவர் யார்?
A) அபுல் பாசல்
B) அபுல் பைசி
C) அல்-பரூனி
D) இபன் பதூதா
விளக்கம்: அராபியாவில் பிறந்த மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14-ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு வடஆப்பிரிக்காவின் குறுக்காக எகிப்தை அடைந்து பின்னர் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் (ரிக்ளா (பயணங்கள்)) ஆகும்.
26) வெனிஸ் நகர பயணியான மார்கோ போலோ கீழ்க்காணும் எந்த அரசு ஆட்சிகாலத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்தார்?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்கள்
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார்.
27) தனது தலைநகரை டெல்லியிருந்து தேவரிகிரிக்கு மாற்றிய சுல்தான் யார்?
A) இல்துமிஷ்
B) பெரோஸ் துக்ளக்
C) முகமது பின் துக்ளக்
D) பால்பன்
விளக்கம்: மங்கோலிய தாக்குதலில் இருந்து தலைநகரை பாதுகாக்கவும், நிர்வாக வசதிக்காகவும், தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத்)-க்கு மாற்றினார் முகமது பின் துக்ளக்.
28) மிகைப்படுத்திக் கூறும் பாங்கினை கொண்ட நூலாசிரியர் யார்?
A) அபுல் பாசல்
B) அபுல் பைசி
C) பாபர்
D) நிஜாமுதீன் அகமத்
விளக்கம்:16-ஆம் நூற்றாண்டில் அபுல் பாசலின் அயினி அக்பரி;, அக்பர் நாமா ஆகிய நூல்கள் அக்பர் குறித்த முழுமையான விவரங்களை எடுத்துரைக்கின்றன. இவர் மிகைப்படுத்திக்கூறும் பாங்கினை கொண்டவர்.
29) கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின் போது அவருடன் இந்தியாவிற்கு வந்து, அவரின் சோமநாதபுரப் படையெடுப்பு குறித்த துல்லியமான தகவல்கள் கொடுத்தவர் யார்?
A) மார்கோ போலோ
B) யுவான் சுவாங்
C) அல்-பரூனி
D) இபன் பதூதா
விளக்கம்: கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின் போது அவருடன் அல்-பரூனி (11-ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்து இங்கு பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார். கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெப்பு குறித்த துல்லியமான தகவல்கள் இவர் கொடுத்ததாகும்.
30) நாலாயிர திவ்விய பிரபந்தம் – தொகுத்தவர் யார்?
A) நம்பியாண்டார் நம்பி
B) நாதமுனி
C) மாணிக்க வாசகர்
D) ஜெயதேவர்
விளக்கம்: சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது. கம்பராமாயணம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாகம் ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
31) அயினி அக்பரி, அக்பர் நாமா என்ற இரு நூல்களை எழுதியவர் யார்?
A) அபுல் பைசி
B) அபுல் பாசல்
C) அக்பர்
D) தான்சேன்
விளக்கம்: அபுல் பாசல் என்பவர் எழுதிய அயினி அக்பரி, அக்பர் நாமா ஆகிய இரு நூல்கள் அக்பர் பற்றி விவரிக்கிறது.
32) நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி எப்போது விஜயநகர் வந்தார்?
A) 1420
B) 1425
C) 1430
D) 1450
விளக்கம்: நிகோலோ கோண்டி எனும் இத்தலிய நாட்டுப் பயணி 1420-இல் விஜயநகர் வந்தார்.
33) ரிக்ளா எனும் பயண நூல் இபன் பதூதா எனும் மொரக்கோ நாட்டு பயணியால் எழுதப்பட்டது. இதன் பொருள் என்ன?
A) குதிரைப் பந்தையம்
B) பயணங்கள்
C) புதிய வழி
D) புதிய உலகம்
விளக்கம்: அராபியாவில் பிறந்த மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14-ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு வடஆப்பிரிக்காவின் குறுக்காக எகிப்தை அடைந்து பின்னர் மத்திய ஆசிய வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் (ரிக்ளா (பயணங்கள்)) ஆகும்.
34) இடைக்கால இந்திய வரலாற்று காலத்தில் கிடைத்த சான்று பற்றிய கூற்றிய சரியான ஒன்றை தெரிவு செய்க.
A) சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து அதிகப்படியான செய்திகளை கூறுகின்றன
B) அறிஞர்கள் மற்றும் புலவர்கள் பற்றி அதிகப்படியான செய்திகளை குறிப்பிடுகின்றன
C) போர் வீரர்கள் பற்றி அதிகப்படியான செய்திகளை குறிப்பிடுகின்றன
D) அரசர்களின் வாழ்க்கை பற்றி அதிகப்படியான செய்திகளை குறிப்பிடுகின்றன.
விளக்கம்: இடைக்கால ஆதாரங்கள்:- சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்துக் குறைவான செய்திகளை மட்டுமே முன்வைக்கும் இச்சான்றுகள் அரசர்களின் வாழ்க்கை பற்றி நேரடியான, செறிவான, அதிக எண்ணிக்கையிலான தகவல்களை வழங்குகின்றன.
35) ஹீரட் எனும் இடம் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது
A) முகமது கஜினியின் அரசவை இருந்த இடம்
B) செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்
C) முகமது கோரியின் அரசவை இருந்த இடம்
D) இல்துமிஷின் அரசவை இருந்த இடம்
விளக்கம்: 1443-ல் மத்திய ஆசியாவின் மாபொரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடமான ஹீரட் நகரிலிருந்து அப்துர் ரஸாக் விஜயநகருக்கு வந்தார்.
36) வரலாற்று அறிஞரான காஃபிகான் யாருடைய அவைக்கள புலவராக இருந்தார்?
A) அக்பர்
B) ஷாஜகான்
C) ஒளரங்கசீப்
D) ஜகாங்கீர்
விளக்கம்: ஒளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று: விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்.
37) ரிக்ளா எனும் பயண நூலை எழுதியவர் யார்?
A) அபுல் பாசல்
B) அபுல் பைசி
C) அல்-பரூனி
D) இபன் பதூதா
விளக்கம்: அராபியாவில் பிறந்த மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14-ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு வடஆப்பிரிக்காவின் குறுக்காக எகிப்தை அடைந்து பின்னர் மத்திய ஆசிய வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் (ரிக்ளா (பயணங்கள்)) ஆகும்.
38) பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் எது?
A) கி.பி.700 முதல் கி.பி.900
B) கி.பி.1200 முதல் கி.பி.1700
C) கி.பி.700 முதல் கி.பி.1200
D) கி.பி.1200 முதல் கி.பி.1400
விளக்கம்: கி.பி (பொ.ஆ.) 700 முதல் 1200 – தொடக்க இடைக்கால இந்திய வரலாறு
கி.பி (பொ.ஆ) 1200 முதல் 1700 – பின் இடைக்கால இந்திய வரலாறு
39) கூற்று: 13-ஆம் நூற்றாண்டு முதல் செப்பு பட்டயங்களுக்கு மாற்றாக பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
காரணம்: செப்பு பட்டயங்களுக்கு பயன்படுத்தப்படும் செம்பின் விலை அதிகம்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
40) கீழ்க்காண்பனவற்றில் பிற்கால சோழர்கள் காலம் எது?
A) கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை
B) கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை
C) கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை
D) கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை
விளக்கம்: பிற்காலச் சோழர்கள் காலத்தில் (கி.பி.10 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை) வெளியிடப்பட்ட பல செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது புகழ் பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
41) சாலபோகம் என்ற சொல்லுடன் தொடர்புடையது எது?
A) பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
B) கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட நிலங்கள்
C) கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
D) சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
விளக்கம்: வேளாண் வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
பிரம்மதேயம் – பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
சாலபோகம் – கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட நிலங்கள்
தேவதானம் – கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
பள்ளிச் சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
42) தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க
A) கஜுராகோ – மத்தியப்பிரதேசம்
B) அபு குன்று – ராஜஸ்தான்
C) கொனாரக் – ஒடிசா
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: கஜுராகோ – மத்தியப்பிரதேசம்
அபு குன்று – ராஜஸ்தான்
கொனாரக் – ஒடிசா
43) தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்து தனது பெயரையும் பொறிக்கச் செய்தவர் யார்?
A) முகமது கோரி
B) முகமது கஜினி
C) இல்துமிஷ்
D) பிரித்வி ராஜ் சௌகான்
விளக்கம்: முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்து தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார். இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாரளத்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
44) தாரிக்-இ-பெரிஷ்டா என்ற நூல் எந்த ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கிறது?
A) டெல்லி சுல்தான்கள்
B) பாமினி பேரரசு
C) மொகலாயர்கள்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: பெரிஷ்டாவின் தாரிக்-இ-பெரிஷ்டா என்ற நூல் 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். இந்நூல் இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்றது.
45) 1522 இல் டோமிங்கோ பயஸ் எனும் வெளிநாட்டுப் பயணி விஜயநகரப் பேரரசிற்கு வருகை புரிந்தார். இவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A) சீனா
B) இத்தாலி
C) மொரக்கோ
D) போர்ச்சுக்கல்
விளக்கம்: போர்ச்சுகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் 1522-ல் விஜயநகருக்கு வருகை தந்தார்.
46) அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டவர் யார்?
A) யுவான் சுவாங்க
B) மார்கோபோலோ
C) அல் பரூனி
D) முகமது கஜினி
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அவர் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் குதிரைகள் தென்னிந்யாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகின்றார்.
47) யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என அழைக்கப்படுகின்றது?
A) சேரர்கள்
B) சோழர்கள்
C) பாண்டியர்கள்
D) பல்லவர்கள்
விளக்கம்: சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது. கம்பராமாயணம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம் ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
48) டங்கா எனப்படும் வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்தவர் யார்?
A) முகமது கோரி
B) இல்துமிஷ்
C) அலாவூதின் கில்ஜி
D) அக்பர்
விளக்கம்: டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள ஜிட்டல் என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன. இல்துமிஷ் டங்கா எனப்படும் வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
49) ஒளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) விசுவாசம் உள்ளவராக இருத்தல்
B) லாப நோக்கம் இன்மை
C) ஆபத்துக்கு அஞ்சாமை
D) வீரத்துடன் இருத்தல்
விளக்கம்: ஒளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று: விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்.
50) வெனிஸ் நகர பயணியான மார்கோ போலோ காயல் எனும் ஊருக்கு இருமுறை வருகை புரிந்தார். காயல் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) திருநெல்வேலி
B) தூத்துக்குடி
C) நாகப்பட்டிணம்
D) கடலூர்
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அவர் தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
51) கூற்று: தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாரளத்தன்மையுடன் நடந்துகொண்டனர்.
காரணம்: முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்து தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்து தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார். இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாரளத்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
52) பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) பிரம்ம தேயம்
B) வேளாண் வகை
C) வேளாண் வகை
D) சாலபோகம்
விளக்கம்: வேளாண் வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
பிரம்மதேயம் – பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
சாலபோகம் – கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட நிலங்கள்
தேவதானம் – கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
பள்ளிச் சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
53) டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள ———————– நாணயங்கள் பயன்படுகின்றன.
A) டங்கா
B) ஜிட்டல்
C) கோசி
D) விஜயா
விளக்கம்: டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள ஜிட்டல் என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன. இல்துமிஷ் அறிமுகம் செய்த டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்கள், அலாவூதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்தததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றையும் சுட்டுவதாகவும் அமைந்துள்ளன.
54) ஒரு ஜிட்டால் _______ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.
A) 4.2
B) 3.6
C) 2.7
D) 4.8
விளக்கம்: ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
55) கூற்று: எகிப்து செல்வம் கொழித்த நாடாகும்
காரணம்: மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: இபன் பதூதா கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது.
56) தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க.
A) சாலபோகம் – கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட நிலங்கள்
B) தேவதானம் – கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
C) பள்ளிச் சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: சாலபோகம் – கல்வி நிலையங்களை பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட நிலங்கள்
தேவதானம் – கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
பள்ளிச் சந்தம் – சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
57) கொடை வழங்கப்பட்டதை குறிக்கும் செப்புப்பட்டயங்கள் கீழ்க்காணும் யாருடைய படையெடுப்பின் காரணமாக வழக்கொழிந்தன?
A) இஸ்லாமிய பாரசீகம்
B) அரேபியர்கள்
C) மங்கோலியர்கள்
D) ஆரியர்கள்
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
58) இரண்டாம் நிலைச்சான்றுகளில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) இலக்கியங்கள்
B) காலவரிசையலான நிகழ்வுப்பதிவுகள்
C) வாழ்க்கை வரலாற்று நூல்கள்
D) நாணயங்கள்
விளக்கம்: முதல் நிலைச் சான்றுகள்: பொறிப்புகள் (கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்), நினைவுச்சின்னங்கள், நாணயங்கள்.
இரண்டாம் நிலைச்சான்றுகள்: இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள்.
59) இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு பயணி யார்?
A) அல்-பரூனி
B) அபல் பாசல்
C) மார்கோபோலோ
D) இபன் பதூதா
விளக்கம்: மொரக்கோ நாட்டு வெளிநாட்டுப் பயணியானா இபன் பதூதா, இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன் கட்டை) ஏறுதல் பற்றியும் கூறியுள்ளார்.
60) வரலாற்று ஆசிரியரின் கடமைகள் பற்றி ஒளரங்சீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞர் காஃபிகான் கூறியவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) ஒருதலை பட்சமாக இல்லாதிருத்தல்
B) விருப்பு வெறுப்பின்றி இருத்தல்
C) நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பார்த்தல்
D) நேர்மையுடன் எழுதுதல்
விளக்கம்: ஒளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று: விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்.
61) சட்டப்பூர்வமான ஆவணமாக கருதப்படும் வரலாற்று சான்று எது?
A) நாணயங்கள்
B) சுயசரிதைகள்
C) இலக்கியங்கள்
D) செப்புபட்டயங்கள்
விளக்கம்: கொடைகள் வழங்கப்பட்டதைக் குறிப்பும் செப்புப்பட்டயங்கள் சட்டப்பூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்பினைக் கொண்டுள்ளன.
62) சான்றுகள் எத்தனை வகைப்படும்?
A) 4
B) 3
C) 2
D) 5
விளக்கம்: கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும். சான்றுகள் இரண்டு வகைப்படும் அவை.
1. முதல் நிலைசான்றுகள்
2. இரண்டாம் நிலைச் சான்றுகள்.
63) எந்த நூற்றாண்டு முதல் செப்புப்பட்டயங்களுக்கு பதிலாக பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
A) 10
B) 11
C) 12
D) 13
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
64) கீழ்க்காணும் எந்த கல்வெட்டு கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கின்றன.
A) திருவாலங்காடு கல்வெட்டு
B) அன்பில் கல்வெட்டு
C) உத்திரமேரூர் கல்வெட்டு
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்ட என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.
65) அன்பில் செப்பேடு கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?
A) முதலாம் ராஜராஜசோழன்
B) முதலாம் ராஜேந்திர சோழன்
C) சுந்தர சோழன்
D) கரிகாலன்
விளக்கம்: கல்வெட்டுகளில் கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்பு கவனம் பெறுகிறார்;.
திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ரஜேந்திர சோழன்
அன்பில் செப்பேடு – சுந்தரச்சோழன்
66) முதல்நிலைச் சான்றுகளில் பொருந்தாது எது?
A) பொறிப்புகள்
B) நினைவுச்சின்னங்கள்
C) நாணயங்கள்
D) பயணக்குறிப்புகள்
விளக்கம்: முதல் நிலைச்சான்றுகள்:
1. பொறிப்புகள் – கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்
2. நினைவுச்சின்னங்கள்
3. நாணயங்கள்
67) வெனிஸ் நகர பயணியான மார்கோபோலோ ———————- எனும் நாட்டிலிருந்து தாம் கப்பலில் வந்ததாய் நம்மிடம் கூறுகிறார்
A) வெனிஸ்
B) சீனா
C) சோவியத் யூனியன்
D) பர்மா
விளக்கம்: 13-ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அக்காலத்தில் காயல் துறைமுகம், அரேபியாலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த கப்பல்களால் நிரம்பியிருந்த துறைமுகப்பட்டினமாகும். சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததால் மார்க்கோபோலோ நம்மிடம் கூறுகிறார்.