Tnpsc
அரேபியர், துருக்கியரின் வருகை Online Test 11th History Lesson 5 Questions in Tamil
அரேபியர், துருக்கியரின் வருகை Online Test 11th History Lesson 5 Questions in Tamil
Question 1 |
இந்தியாவில் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட காலம் எது?
1200 - 1550 | |
1100 - 1250 | |
1200 - 1300 | |
1000 - 1400 |
Question 1 Explanation:
(குறிப்பு - 13 முதல் 16 ஆம் நூற்றாண்டு(1200 - 1550) வரையான காலத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் டெல்லி சுல்தானிய அரசு நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமிய பண்பாடும் இந்தியாவில் கால் கொண்டன)
Question 2 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - இந்தியாவுக்கும் அரேபியாவுக்கும் இடையே வணிக தொடர்புகள் ஏற்பட பூகோள அமைவிடம் உதவியது.
- கூற்று 2 - இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே கடல்வழி வணிகத்தில் அரேபியர் ஈடுபட்டிருந்தனர்.
கூற்று 1 மட்டும் சரி | |
கூற்று 2 மட்டும் சரி. | |
இரண்டு கூற்றுகளும் சரி | |
இரண்டு கூற்றுகளும் தவறு |
Question 2 Explanation:
(குறிப்பு - இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை களுடன் கடல்வழி வணிகத் தொடர்புகளை அரேபியர்கள் கொண்டிருந்தனர்)
Question 3 |
இந்தியாவின் மீதான முதல் அரேபிய படையெடுப்பு எப்போது நிகழ்ந்தது?
700 ஆம் ஆண்டு | |
712 ஆம் ஆண்டு | |
726 ஆம் ஆண்டு | |
750 ஆம் ஆண்டு |
Question 3 Explanation:
(குறிப்பு - பொது ஆண்டு 712இல் இந்தியாவின் மீதான முதல் அரேபிய படையெடுப்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து கஜினி மற்றும் கோரி மன்னர்களின் படையெடுப்பு, இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு மத்திய ஆசியாவில் அவர்கள் ஆட்சி வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதும் நிகழ்ந்தது)
Question 4 |
மலபார் பெண்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரேபியர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாய்கள் | |
மாப்பிள்ளை | |
துலுக்கர் | |
இஸ்லாமியர் |
Question 4 Explanation:
(குறிப்பு - அரேபியர்கள் தென்னிந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை கல்யாண மலபார் மற்றும் கோரமண்டல் கடற்கரைகளில் குடியேறினர். மலபார் பெண்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரேபியர் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர்)
Question 5 |
குரசன் நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது?
ஈராக் | |
கிழக்கு ஈரான் | |
ஈரான் | |
ஆப்கானிஸ்தான் |
Question 5 Explanation:
(குறிப்பு - கஜினி முகமது மற்றும் முகமது கோரி நிகழ்த்திய திடீர் தாக்குதல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர்கள் என்ற உறவை இந்தியாவிற்கும் அரேபியர்களுக்கும் ஏற்படுத்தின.குரசன் நாட்டு ஷா (கிழக்கு ஈரான்) பின்னர் செங்கிஸ் கான் ஆகியோர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தனர்)
Question 6 |
தொடக்கத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தலைநகரமாக இருந்த இடம் எது?
தில்லி | |
அஜ்மீர் | |
கான்பூர் | |
ஹைதராபாத் |
Question 6 Explanation:
(குறிப்பு - வட இந்தியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு சுல்தான் இல்துமிஷுக்கு இருந்தது. இது டில்லியை தலைநகராகக் கொண்டு இந்திய மாகாணங்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆள்வதற்கு வழிவகுத்தது)
Question 7 |
கீழ்க்கண்டவர்களில் அபெர்லாய் துருக்கியர் என்பவர் யார்?
இல்துமிஷ் | |
இப்ராஹிம் லோடி | |
அக்பர் | |
பாபர் |
Question 7 Explanation:
(குறிப்பு - அரேபியர், துருக்கியர், பாரசீகர், மத்திய ஆசிரியரும் ராணுவத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர். இல்துமிஷ் ஓர் அபேர்லாய் துருக்கியர் என்பதோடு அவரது ராணுவ அடிமைகள் பலரும் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர்)
Question 8 |
பொருத்துக
- அடிமை வம்சம் - a) 1290 முதல் 1320 வரை
- கில்ஜி வம்சம் - b) 1414 முதல் 1451 வரை
- துக்ளக் வம்சம் - c) 1206 முதல் 1290 வரை
- சையது வம்சம் - d) 1320 முதல் 1414 வரை
I-c, II-a, III-d, IV-b | |
I-d, II-b, III-c, IV-a | |
I-c, II-d, III-a, IV-b | |
I-b, II-d, III-c, IV-a |
Question 8 Explanation:
(குறிப்பு - 1206 முதல் 1526 வரை டெல்லி சுல்தானியம் ஒரே மரபை சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை. அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு அம்சங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையது வம்சம் மற்றும் லோடி வம்சம் என்பன ஆகும்.)
Question 9 |
டெல்லி சுல்தானிய மரபுகளை சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
அடிமை, கில்ஜி, துக்ளக், லோடி, சையது | |
அடிமை, கில்ஜி, லோடி, துக்ளக், சையது | |
அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி | |
அடிமை, கில்ஜி, சையது, துக்ளக், லோடி |
Question 9 Explanation:
(குறிப்பு - டெல்லி சுல்தானியம் 5 வம்ச மரபு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. அவையாவன அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையது வம்சம் மற்றும் லோடி வம்சம் ஆகும்)
Question 10 |
இல்துமிஷ் ஆட்சியின்போது இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர் யார்?
ஹிந்து கான் | |
அப்சல் கான் | |
கபீர் கான் | |
ஷேர் கான் |
Question 10 Explanation:
(குறிப்பு - இல்துமிஷ் தில்லிக்கு தனது ராணுவ அடிமைகளான புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் ஆகிய இடங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்தார். மத்திய இந்தியாவில் மிஹிரிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட இந்து கான் போன்றவர்களும் அடிமைகளில் இருந்தனர். இருந்தாலும் இல்துமிஷ் அவர்கள் அனைவருக்கும் துருக்கிய பெயர்களையே சூட்டினார்)
Question 11 |
நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் பொருத்துக
- அல்- பெருனி - a) தாரிக்-இ-பெரோஸ்
- மின்ஹஜ் உஸ் சிராஜ் - b) தாரிக்-அல்-ஹிந்த்
- ஜியாவுதீன் பாரனி - c) மிஃப்தா உல் ஃபுதா
- அமிர் குஸ்ரூ - d) தபகத்-இ-நஸரி
I-b, II-d, III-a, IV-c | |
I-d, II-a, III-b, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-a, II-b, III-d, IV-c |
Question 11 Explanation:
(குறிப்பு - அல்-பெருனி என்பவரால் எழுதப்பட்ட தாரிக்-அல்-ஹிந்த் என்பது அரபு மொழியில் எழுதப்பட்ட இந்தியத் தத்துவ ஞானமும் மதமும் என்னும் நூலாகும்.
Question 12 |
மின்ஹஜ் உஸ் சிராஜ் என்பவரால் தபகத்-இ-நசிரி என்னும் நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
1250 | |
1260 | |
1270 | |
1280 |
Question 12 Explanation:
( குறிப்பு - மின்ஹஜ் உஸ் சிராஜ் என்பவரால் தபகத்-இ-நசிரி என்னும் நூல் 1260ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இது அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு என்பது ஆகும்)
Question 13 |
மிஃப்தா உல் ஃபுதா என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
அமீர் குஸ்ரு | |
அல்பெருனி | |
மின்ஹஜ் உஸ் சிராஜ் | |
ஃபெரிஷ்டா |
Question 13 Explanation:
(குறிப்பு - ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள் என்று அழைக்கப்படும் மிஃப்தா உல் ஃபுதா என்ற நூலை எழுதியவர் அமிர்குஸ்ரு என்பவராவார். கஜைன் என்பவர் அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் என்று அழைக்கப்படும் உல் ஃபுதூ என்னும் நூலை பாரசீக மொழியில் எழுதியுள்ளார்)
Question 14 |
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு என்னும் நூல் எது?
துக்ளக் நாமா | |
தாரிக்-இ-ஃபெரோஜ் ஷாஹி | |
ஃபெரிஷ்டா | |
தாரிக்-இ-முபாரக் ஷாஹி |
Question 14 Explanation:
(குறிப்பு - ஃபெரிஷ்டா என்னும் நூல் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு இன்று அடைக்கப்பட்ட பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல் ஆகும்)
Question 15 |
கீழ்க்காணும் நூல்களில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல்கள் எது?
- துக்ளக் நாமா
- தாரிக் அல் ஹிந்த்
- ஃபெரிஷ்டா
- தாரிக் இ பெரோஸ்
I, II, III மட்டும் | |
I, II மட்டும் | |
II, III, IV மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 15 Explanation:
(குறிப்பு - மேற்கண்ட அனைத்து நூல்களும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல்கள் ஆகும். மேற்கண்ட அனைத்து உணவுகளும் டெல்லி சுல்தானியம் மற்றும் இஸ்லாமியம் பட்டியல் சான்றுகளை கூறுவன ஆகும்)
Question 16 |
சிந்து அரசர் தாகீரை எதிர்த்து தரைவழி மற்றும் கடல்வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பிய ஈராக்கின் அரபு ஆளுநர் யார்?
மின்ஹஜ் உஸ் சிராஜ் | |
ஹஜஜ் பின் யூசூப் | |
குலாம் யாஹ்யா பின் அஹ்மத் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 16 Explanation:
(குறிப்பு - ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ் பின் யூசுப் கடற்கொள்ளையர் எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி சிந்து அரசர் தாகீரை எதிர்த்து தரைவழி மற்றும் கடல்வழி என இரு தனித்தனி படைப்பிரிவுகளை அனுப்பினார். ஆனால் இரு படைப்பிரிவுகளும் தோற்றன)
Question 17 |
ஹஜஜ் பின் யூசுப் என்பவரால் கலிபாவின் அனுமதியுடன் அனுப்பப்பட்ட படைக்கு தலைமை தாங்கியவர் யார்?
முகமது பின் காசிம் | |
முகமது கோரி | |
முகமது சல்மான் | |
முகமது கஜினி |
Question 17 Explanation:
(குறிப்பு - சிந்து அரசர் தாகீருக்கு எதிராக தோற்ற பின்னர், ஹஜஜ் பின் யூசுப் கலிபாவின் அனுமதியுடன் 6000 வலுவான குதிரைப்படை, போர்த் தளவாடங்களை சுமந்து வந்த ஒரு பெரிய ஒட்டக படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான ராணுவத்தை 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது பின் காசிம் தலைமையில் அனுப்பினார்)
Question 18 |
முகமது பின் காசிம் கைப்பற்றிய இடம் கீழ்க்கண்டவற்றுள் எது?
இஸ்லாமாபாத் | |
பைசலாபாத் | |
பிராமணாபாத் | |
இது எதுவும் அல்ல |
Question 18 Explanation:
(குறிப்பு - பிராமணாபாத் என்னும் இடத்தில் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். சிந்து அரசர் தாகீரின் முன்னோர்கள் பல அரச வம்சத்தில் இருந்து இன் நகரை கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர்)
Question 19 |
சிந்துவின் தேபல் துறைமுக நகரத்தை அழித்தவர் யார்?
முகமது பின் காசிம் | |
முகமது கோரி | |
முகமது கஜினி | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 19 Explanation:
(குறிப்பு - முகமது பின் காசிம் பிராமணாபாத் நகரை எளிதில் கைப்பற்றினார். சிந்து அரசர் தாகீரை விரட்டி சென்ற முகமது பின் காசிம் ரோஹரீ என்னும் இடத்தில் அவரைக் கொன்றார்.)
Question 20 |
963ஆம் ஆண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்த கஜினி நகரை கைப்பற்றி ஒரு சுதந்திர அரசை நிறுவியவர் யார்?
அல்ப்ட்டிஜின் | |
சபுக்திஜின் | |
முகமது பின் காசிம் | |
முகமது கஜினி |
Question 20 Explanation:
(குறிப்பு - மத்திய ஆசியாவில் சாமானித் பேரரசு உடைந்து பல சுதந்திர அரசுகள் தோன்றின. இவ்வாறு 963 கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருந்த கஜினி நகரை கைப்பற்றி ஒரு சுதந்திர அரசை நிறுவியவர் அல்ப்திஜின் என்பவர் ஆவார்.)
Question 21 |
தனது சகோதரன் இஸ்மாயில் என்பவரை தோற்கடித்து கஜினிமுகமது ஆட்சியில் அமர்ந்தபோது அவரது வயது?
25 வயது | |
26 வயது | |
27 வயது | |
28 வயது |
Question 21 Explanation:
(குறிப்பு - சாபுக்திஜ்ஜின் இறந்தபோது கஜினிமுகமது குரசன் என்னும் நகரில் இருந்தார். எனவே இளைய மகன் இஸ்மாயில் என்பவர் வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிறகு தனது சகோதரன் இஸ்மாயில் என்பவரை தோற்கடித்து 27 வயது கஜினிமுகமது ஆட்சியில் அமர்ந்தார்)
Question 22 |
கஜினி முகமது ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது கலீபாவினால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?
யாமினி உத் தவுலா | |
யாமின் அராஸ் தவுலா | |
யாமின் ராஜ்ய தவுலா | |
யாமின் பின் தவுலா |
Question 22 Explanation:
(குறிப்பு - தனது சகோதரர் இஸ்மாயில் என்பவரை தோற்கடித்து கஜினிமுகமது ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். கஜினி முகமது பதவியேற்பினை அங்கீகரித்து கலீபா ஒரு பதவியேற்பு அங்கியை அளித்தும் யாமினி உத் தௌலா அதாவது பேரரசின் வலதுகை என்ற பட்டத்தை வழங்கியும் கவுரவித்தார்)
Question 23 |
கஜினி முகமது எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
30 ஆண்டுகள் | |
32 ஆண்டுகள் | |
34 ஆண்டுகள் | |
36 ஆண்டுகள் |
Question 23 Explanation:
(குறிப்பு - 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினிமுகமது 17 முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார். செல்வக் களஞ்சியமாக இருந்த இந்து கோயில்களில் கொள்ளையடிப்பது இவரது முதன்மை நோக்கமாக இருந்தது)
Question 24 |
முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட ஹாஜி அரசர் யார்?
சிசுபாலர் | |
அனந்தபாலர் | |
ஜெயபாலர் | |
விஜயபாலர் |
Question 24 Explanation:
(குறிப்பு - முகமது கஜினி ஹாஜி அரசர் அனந்தபாலரை தோற்கடித்தார். பின்பு பஞ்சாப்பை கடந்து கங்கை சமவெளியில் நெடுந்தொலைவு உள்ளே வந்தார்)
Question 25 |
முகமது கஜினி குஜராத் கடற்கரையில் உள்ள கோயில் நகரமான சோம்நாத்தின் மீது படையெடுத்த ஆண்டு எது?
1020 ஆம் ஆண்டு | |
1025 ஆம் ஆண்டு | |
1030 ஆம் ஆண்டு | |
1035 ஆம் ஆண்டு |
Question 25 Explanation:
(குறிப்பு - முகமது கஜினி கண்ணு ஜி சென்று அடைவதற்கு முன்னர் மதுராவை சூறையாடினார். பின்னர் குஜராத் கடற்கரையில் உள்ள கோயில் நகரமான சோமநாதர் கோவிலின் மீது 1025இல் படையெடுத்து கொள்ளை அடித்தார்.)
Question 26 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - அரேபியர்களும், ஈரானியர்களும் இந்தியாவை ஹிந்த் என்று அழைத்தனர்.
- கூற்று 2 - இஸ்லாமிய சமுதாயம் தோன்றிய பிறகு ஹிந்து என்னும் பெயர் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களை குறிப்பதாயிற்று.
கூற்று 1 மட்டும் சரி | |
கூற்று 2 மட்டும் சரி | |
இரண்டு கூற்றுகளும் சரி | |
இரண்டு கூற்றுகளும் தவறு. |
Question 26 Explanation:
(குறிப்பு - தொடக்கத்தில் அரேபியர்களும் ஈரானியர்கள் இந்தியாவை ஹிந்த் என்று அழைத்தனர். இந்தியர்களை ஹிந்துக்கள் என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயம் தோன்றிய பிறகு ஹிந்து என்னும் பெயர் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களை குறிப்பதாயிற்று)
Question 27 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - துருக்கியர் படை என்பது நிரந்தரமான தொழில் நேர்த்தி பெற்ற படையாகும்.
- கூற்று 2 - இவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாவர்.
- கூற்று 3 - இந்தியாவில் இந்து அரசாட்சிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 27 Explanation:
(குறிப்பு - துருக்கியர் படை என்பது ஒரு நிரந்தரமான தொழில் நேர்த்தி பெற்ற படையாகும். அது தெரிந்தெடுத்து தகுதி உயர்த்தப்பட்ட வில்லாளிகள் பிரிவை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். இவர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன)
Question 28 |
கஜினி முகமது அவர்களால் 1029 ஆம் ஆண்டு சூறையாடப்பட்ட நகரம் எது?
சோமநாதர் கோவில் | |
ரேய் நகரம் | |
பஞ்சாப் நகரம் | |
மதுரா நகரம் |
Question 28 Explanation:
(குறிப்பு - 1029 ஆம் ஆண்டு ரேய் என்ற ஈரானிய நகரத்தை சூரையாடியதில் கஜினிமுகமதுவிற்கு 50000 தினார்கள் மதிப்புள்ள ஆபரணங்கள், நாணயங்களாக 26000 தினார்கள், 30, 000 தினார்கள் மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது)
Question 29 |
சோமநாதர் படையெடுப்பு குறித்த தகவல்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழி பதிவுகளில் காணப்படுகின்றன என்று எடுத்துக் கூறியவர் யார்?
வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர் | |
வரலாற்று அறிஞர் வில்லியம் ஹென்றி | |
வரலாற்று அறிஞர் ஜார்ஜ் பூலே | |
வரலாற்று அறிஞர் காபர்னிகஸ் |
Question 29 Explanation:
(குறிப்பு - சோமநாதர் படையெடுப்பு குறித்த தகவல்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழி பதிவுகளில் காணப்படுகின்றன ஆனால் இதன் சமகால சமண மதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பவர் கூறுகிறார்.)
Question 30 |
கஜினி முகமதுக்கு பின்னர் கஜினி வம்சத்தில் 42 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தவர் யார்?
சுல்தான் முகமது | |
சுல்தான் இப்ராஹிம் | |
சுல்தான் மசூத் | |
சுல்தான் அப்துல்லா |
Question 30 Explanation:
(குறிப்பு - கஜினி முகமது இறந்த பிறகு கஜினி வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை தொடர்பாக முடிவற்ற மோதல்கள் நிகழ்ந்தன. இருப்பினும் சுல்தான் இப்ராஹிம் என்பவர் 42 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தார்)
Question 31 |
மொய்சுதீன் முகமது என்பவர் கஜினி வம்சத்தினரை தோற்கடித்து லாகூர் நகரை கைப்பற்றிய ஆண்டு எது?
1182 | |
1184 | |
1186 | |
1188 |
Question 31 Explanation:
(குறிப்பு - கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது. 1186 ஆம் ஆண்டு கோரி அரசர் மொய்சுதீன் அகமது என்கிற கோரி முகமது பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரை கைப்பற்றினார்)
Question 32 |
கஜினி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
ஆலம் ஷா | |
குரவ் ஷா | |
பகதூர் ஷா | |
நீரவ் ஷா |
Question 32 Explanation:
(குறிப்பு - கஜினி வம்சத்தின் கடைசி அரசர் குரவ் ஷா என்பவராவார். இவர் 1192 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவருடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது)
Question 33 |
பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் காவலரண்களை அமைத்தவர் யார்?
முகமது கஜினி | |
முகமது கோரி | |
முகமது பின் காசிம் | |
பிரித்திவிராஜ் சௌஹான் |
Question 33 Explanation:
(குறிப்பு - கோரி முகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். 1180களிலும், 1190களிலும் நவீன பஞ்சாப், சிந்து மற்றும் அரியானா மாகாணங்களில் அவர் காவலரண்களை அமைத்தார். இந்த படை மையங்களில் பல கூலிப் படை வீரர்கள் விரைவில் குடியேறினர்)
Question 34 |
உச் என்று அழைக்கப்பட்ட இடம் கீழ்க்கண்டவற்றுள் எது?
லாகூர் | |
சிந்து | |
ஹரியானா | |
காபுல் |
Question 34 Explanation:
(குறிப்பு - உச் என்பது லாகூரை குறிக்கும். தொடக்கத்தில் லாகூர், முல்தான் ஆகியன குறிப்பிடத்தக்க அதிகார மையங்களாக கருதப்பட்டன)
Question 35 |
முல்தான் நகரை முகமது கோரி கைப்பற்றிய ஆண்டு எது?
1170ஆம் ஆண்டு | |
1175ஆம் ஆண்டு | |
1180ஆம் ஆண்டு | |
1185ஆம் ஆண்டு |
Question 35 Explanation:
(குறிப்பு - 1175 ஆம் ஆண்டு முல்தான் நகரை முகமது கோரி அதன் இசுமாயிய வம்ச ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து உச்(லாகூர்) கோட்டையும் தாக்குதல் இன்றி பணிந்தது.)
Question 36 |
1179ஆம் ஆண்டு முகமது கோரி யாரிடம் ஒரு பயங்கர தோல்வியை கண்டார்?
சாளுக்கியர்கள் | |
துருக்கியர்கள் | |
இசுமாயியர்கள் | |
சௌகான்கள் |
Question 36 Explanation:
(குறிப்பு - குஜராத்தின் சாளுக்கியர் அபு மலையில் கோரி முகமதுவுக்கு ஒரு பயங்கர தோல்வியை கொடுத்தனர்.(1179ஆம் ஆண்டு). இந்த தோல்விக்கு பிறகு முகமது கோரி தமது படையெடுப்பின் போக்கை மாற்றிக்கொண்டு சிந்துவிலும், பஞ்சாபிலும் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்)
Question 37 |
அல்பெரூணி கீழ்க்கண்டவற்றில் எதில் சிறந்து விளங்கினார்?
- கணிதம்
- தத்துவம்
- வானியல்
I, II மட்டும் சரி | |
I, II, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 37 Explanation:
(குறிப்பு - கணிதவியலாளரும், தத்துவ ஞானியும், வானியலாளரும், வரலாற்று ஆசிரியருமான அல்பெருனி கஜினிமுகமது உடன் இந்தியா வந்தார்.)
Question 38 |
கிரேக்க கணித மேதையான யூக்ளிட் என்பவரின் நூலை அல்பெருனி எந்த மொழியில் மொழி பெயர்த்தார்?
அரேபிய மொழியில் | |
துருக்கிய மொழியில் | |
சமஸ்கிருத மொழியில் | |
இது எதுவும் அல்ல |
Question 38 Explanation:
(குறிப்பு - அல்பெருனி கிதாப் உல் ஹிந்த் என்ற நூலை இயற்றுவதற்கு முன்னர் அவர் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். இந்து மத நூல்களையும் தத்துவ நூல்களையும் கற்றார்.)
Question 39 |
அஜ்மீர் சௌகான்களின் எந்த கோட்டையை முகமது கோரி தாக்கினார்?
தபர்ஹிந்தா கோட்டை | |
கோல்கொண்டா கோட்டை | |
ஹல்திண்டா கோட்டை | |
அல்பெண்டா கோட்டை |
Question 39 Explanation:
(குறிப்பு - அஜ்மீர் சௌகான்களின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பட்டிண்டா) கோட்டையை முகமது கோரி தாக்கினார்)
Question 40 |
முதல் தரைன் போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
1190 இல் | |
1191 இல் | |
1192 இல் | |
1193 இல் |
Question 40 Explanation:
(குறிப்பு - அஜ்மீர் அரசர் பிரிதிவிராஜ் சவுகான் தபர்ஹிந்தா கோட்டைக்கு அணிவகுத்துச் சென்று 1191 ஆம் ஆண்டு முதலாவது தரைன் போரை நிகழ்த்தினார். இதில் பிரிதிவிராஜ் சவுகான் வெற்றி பெற்றார்)
Question 41 |
பிரிதிவிராஜ் சவுகான் முகமது கோரியை குறைத்து மதிப்பிட்டார் மேலும் தனது அமைச்சரான ________________ என்பவரின் ஆலோசனையை நிராகரித்தார்.
சோமேஸ்வர ராவ் | |
நாகேஸ்வர ராவ் | |
சந்திரசேகர ராவ் | |
சுந்தரேஸ்வர ராவ் |
Question 41 Explanation:
(குறிப்பு - பிரிதிவிராஜ் சவுகான் தனது அமைச்சரான சோமேஸ்வரர்ராவின் ஆலோசனையை நிராகரித்தார். முகமது கோரி க்கு எதிராக ஒரு சிறு படை குழுவை தலைமை ஏற்று சென்றார். எனவே இரண்டாம் தரைன் போரில் தோல்வி அடைந்தார்)
Question 42 |
இரண்டாம் தரைன் போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
1191 ஆம் ஆண்டு | |
1192 ஆம் ஆண்டு | |
1193 ஆம் ஆண்டு | |
1194 ஆம் ஆண்டு |
Question 42 Explanation:
(குறிப்பு - இரண்டாம் தரைன் போர் 1192 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதில் பிரிதிவிராஜ் சவுகான் தோல்வி அடைந்தார். அவர் சிறை பிடிக்கப்பட்டார். எனினும் போரில் வெற்றி பெற்ற முகமது கோரி மீண்டும் அஜ்மீரின் ஆட்சியை பிரித்திவிராஜ் இடமே ஒப்படைத்தார்)
Question 43 |
முகமது கோரியால் இந்திய பகுதிக்கான துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துமிஷ் | |
இப்ராஹிம் லோடி | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 43 Explanation:
(குறிப்பு - இரண்டாம் தரைன் போருக்குப் பின்னர், பிரிதிவிராஜ் சவுகான் ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் குத்புதீன் ஐபக் என்பவரை இந்திய பகுதிக்கான துணை ஆட்சியாளராக முகமது கோரி நியமித்தார்)
Question 44 |
கன்னோசி போரில் முகமது கோரி யாரை வீழ்த்தினார்?
ஜெயச்சந்திரன் | |
ஜெயபாலர் | |
விஜய பாலர் | |
சம்யுக்தர் |
Question 44 Explanation:
(குறிப்பு - கன்னோசி அரசர் ஜெயச்சந்திரா முகமது கோரியால் வீழ்த்தப்பட்டார். கன்னோசி போரில் வெற்றி பெற்ற பின்பு திரும்பும் வழியில் சிந்து நதிக்கரையில் தங்கியிருந்தபோது அடையாளம் தெரியாதவர்களால் முகமது கோரி கொல்லப்பட்டார்)
Question 45 |
பத்தாம் நூற்றாண்டில் இருந்த ரஜபுத்திர அரசாட்சிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
- கூர்ஜா பிரதிஹாரர்
- ராஷ்டிரகூடர்
- பரமர்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 45 Explanation:
(குறிப்பு - பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூர்ஜா பிரதிஹாரர், இராஷ்டிரகூடர் ஆகிய வலுவான இரண்டு ராஜபுத்திர அரசாட்சிகள் தங்கள் அதிகாரத்தை இழந்தன)
Question 46 |
வட இந்தியாவின் முக்கியமான அரசவம்சங்களை பொருத்துக.
- டோமர் - a) ராஜஸ்தான்
- சௌஹான் - b) மால்வா
- சோலங்கி - c) குஜராத்
- பரமர் - d) தில்லி
I-d, II-a, III-c, IV-b | |
I-d, II-a, III-b, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-a, II-b, III-d, IV-c |
Question 46 Explanation:
(குறிப்பு - டோமர் (டில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி), சந்தேலர் (புந்தேல்கந்த்) ஆகியன வட இந்தியாவின் முக்கியமான அரச வம்சங்கள் ஆகும்)
Question 47 |
வம்சங்களையும் அதன் அரசர்களையும் பொருத்துக
- சௌஹான் அரசர் - a) ஜெயச்சந்திரா
- பரமர் அரசர் - b) பிரித்திவிராஜ்
- கடவாலா அரசர் - c) யசோவர்மன்
- சந்தேலா அரசர் - d) போஜர்
I-b, II-d, III-a, IV-c | |
I-d, II-a, III-b, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-a, II-b, III-d, IV-c |
Question 47 Explanation:
(குறிப்பு - ராஜபுத்திரர்கள் போர் பாரம்பரியம் கொண்டவர்கள். துருக்கியர்களும் ரஜபுத்திரர்களும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர், எனினும் படை ஒழுங்கிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றி இருந்தனர்)
Question 48 |
ராஜபுத்திரர்கள்களை துருக்கியர்கள் எளிதாக வென்றதற்கான காரணங்களுள் சரியானது கீழ்க்கண்டவற்றுள் எது?
- படை ஒழுங்கிலும், பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றி இருந்தனர்.
- துருக்கியர்களின் குதிரைப்படை இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாக இருந்தது.
- நேரத்திற்கு தக்கவாறு உத்திகள் வகுப்பதில் துருக்கியர்கள் மேம்பட்டவர்களாக இருந்தனர்.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 48 Explanation:
(குறிப்பு - ராஜபுத்திர படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. துருக்கியர்களின் குதிரைப்படை இந்தியர்களின் குதிரை படையை விட மேம்பட்டதாக இருந்தது. குதிரைகள் யானைகளை விட வேகமானவை. இவை அனைத்தும் துருக்கியர்கள் இந்தியர்களை வீழ்த்த காரணமாக இருந்தன)
Question 49 |
அடிமை வம்சத்தை சாராதவர்கள் யார்?
இல்துமிஷ் | |
பால்பன் | |
குத்புதீன் ஐபக் | |
முகமது கோரி |
Question 49 Explanation:
(குறிப்பு - முகமது கோரியின் இறப்பிற்குப் பிறகு, அதிகாரத்திற்கு மூவர் போட்டியிட்டனர். அதில் ஒருவர் குத்புதீன் ஐபக் ஆவார். அவர் டில்லியில் அரியணை ஏறினார். இந்த வம்சத்தின் முக்கியமான மூன்று ஆட்சியாளர்கள் குத்புதீன் ஐபக், இல்துமிஷ் மற்றும் பால்பன் ஆவர்)
Question 50 |
குத்புதீன் ஐபக் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
நான்கு ஆண்டுகள் | |
ஐந்து ஆண்டுகள் | |
ஆறு ஆண்டுகள் | |
ஏழு ஆண்டுகள் |
Question 50 Explanation:
(குறிப்பு - முகமது கோரியால் இந்தியாவுக்கு நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் குத்புதீன் ஐபக் ஆவார். அவர் 1206 முதல் 1210ஆம் ஆண்டுவரை சுமார் நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்)
Question 51 |
கஜூராகோ கோவில் எந்த வம்சத்தினரால் கட்டப்பட்டது?
சவுகான் வம்சத்தினர் | |
பரமர் வம்சத்தினர் | |
சந்தேலா வம்சத்தினர் | |
டோமர் வம்சத்தினர் |
Question 51 Explanation:
(குறிப்பு - உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோவில் வளாகம், கஜுராஹோவில் இருந்து ஆட்சி புரிந்த புந்தேல்கண்ட் சந்தேலர்களால் கட்டப்பட்டது)
Question 52 |
அடிமை வம்சத்தை எவ்வாறு கூறுவர்?
மாம்லுக் வம்சம் | |
கில்ஜி வம்சம் | |
துக்ளக் வம்சம் | |
எல்லாமே தவறு |
Question 52 Explanation:
(குறிப்பு - அடிமை வம்சத்தை மாம்லுக் வம்சம் என்றும் கூறுவர். மாம்லுக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும். இது ஒரு அடிமை என்பதற்கான அரபு தகுதி பெயருமாகும்)
Question 53 |
புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர் என்று கருதப்படுபவர் யார்?
அலாவுதீன் கில்ஜி | |
பக்தியார் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 53 Explanation:
(குறிப்பு - புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி என்று கருதப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்)
Question 54 |
வட இந்தியாவில் மொய்சுதீன் கோரியின் அடிமைகளாக இருந்தவர்கள் யார்?
குரித் பண்டகன் | |
மாம்லுக் பண்டகன் | |
சம்ரத் பண்டகன் | |
எல்லாமே தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு - பண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும். இச்சொல்லுக்கு படை அடிமை என்று பொருள். வட இந்தியாவில் குரித் பண்டகன், மொய்சுதீன் கோரியின் அடிமைகளாவர். இந்த அடிமைகளுக்கு சொந்த சமூக அடையாளம் இல்லை. இதனால் அவர்களது எஜமானர்கள் அவர்களுக்கு புதிய பெயர்கள் சூட்டினர்.)
Question 55 |
குத்புதீன் ஐபக்கிற்கு பின்னர் தில்லி ஆட்சியை பிடித்தவர் யார்?
சம்சுதீன் | |
ஆரம் ஷா | |
ஆலம் ஷா | |
மொய்சுதீன் |
Question 55 Explanation:
(குறிப்பு - குத்புதீன் ஐபக்கின் அடிமையும் மருமகனுமான சம்சுதீன் இல்டுமிஷ், குத்புதீன் ஐபக்கின் மகன் ஆரம்ப ஆட்சிக்கு வருவதை தடுத்து தானே தில்லி ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்)
Question 56 |
சுல்தான்கள் ஆட்சி காலத்தில் இரண்டு அடிப்படை நாணயங்களாக செப்பு மற்றும் வெள்ளி தங்காவை அறிமுகம் செய்தது யார்?
குத்புதீன் ஐபக் | |
சம்சுதீன் இல்துமிஸ் | |
ஆரம் ஷா | |
கவாரிஸ்மி ஷா |
Question 56 Explanation:
(குறிப்பு - குத்புதீன் ஐபக்கிற்கு பின்னர் தில்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் சம்சுதீன் இல்துமிஷ் என்பவராவார். இவர் 243 அடி உயரமுள்ள குதுப்மினார் என்ற ஒரு வெற்றித் தூணை கட்டி முடித்தார். மேலும் செப்பு மற்றும் வெள்ளி தங்காவை அறிமுகம் செய்தார்)
Question 57 |
அடிமை வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் யார்?
சுல்தானா ரஸியா | |
இரண்டாம் நசீர் அல்லுதின் முகமது | |
சுல்தான் சம்சுதீன் முகமது | |
சுல்தான் முகமது ஆரம் ஷா |
Question 57 Explanation:
(குறிப்பு - குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஸ் ஆகியோருக்கு பின்னர் அடிமை வம்சம் சுல்தானா ரஸியா, இல்துமிஷ் அவர்களின் மற்றொரு மகன் பேரன் என பலரும் ஆட்சிக்கு வந்தனர். இறுதியில் இல்துமிஷ் அவர்களின் கடைசி மகன் சுல்தான் இரண்டாம் நசீர் அல்லுதீன் முகமது (1244-1266)ஆட்சி செய்தார்)
Question 58 |
வடமேற்கில் சிவாலிக் ஆட்சி பகுதிகளின் தளபதியாக இருந்தவர் யார்?
ரசூல் கான் | |
பாபர் கான் | |
அப்சல் கான் | |
உலுக் கான் |
Question 58 Explanation:
(குறிப்பு - 1754 ஆம் ஆண்டு வடமேற்கில் சிவாலிக் ஆட்சிப் பகுதிகளில் தளபதியாக இருந்த உலுக் கான் டெல்லியை கைப்பற்றினார். இவர் சம்சுதீன் இல்துமிஸ் ஆட்சியின்போது அடிமையாகவும் இளைஞனாகவும் இருந்தவர்)
Question 59 |
நயிப்-இ முல்க் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டவர் யார்?
சுல்தானா ரஸியா | |
சம்சுதீன் இல்துமிஷ் | |
உலுக் கான் | |
பால்பன் |
Question 59 Explanation:
(குறிப்பு - சம்சுதீன் இல்துமிஸ் ஆட்சியின் போது அவரிடம் அடிமையாகவும் இளைஞனாகவும் இருந்தவர் உலுக் கான். அவர் சுல்தானுக்கு துணையாக இருந்த ஆட்சி அதிகார பிரதிநிதி என்று பொருள்படும், நயிப்-இ முல்க் என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டார்)
Question 60 |
அடிமைவம்சத்தில் கியாசுதீன் பால்பன் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு எது?
1264 ஆம் ஆண்டு | |
1266 ஆம் ஆண்டு | |
1268 ஆம் ஆண்டு | |
1270 ஆம் ஆண்டு |
Question 60 Explanation:
(குறிப்பு - 1266 ஆம் ஆண்டு சுல்தான் கியாஸ்-அல்-தின் பால்பன் தில்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார்)
Question 61 |
சுல்தானா ரஸியா கொல்லப்பட்ட ஆண்டு எது?
1240 | |
1242 | |
1244 | |
1246 |
Question 61 Explanation:
(குறிப்பு - தில்லி அரசவையில் ஒரே பெண் அரசி சுல்தானா ரஸியா ஆவார். இவர் 1240 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்)
Question 62 |
ரசியா பேகம் குதிரை லாயம் பணித்துறை தலைவராக யாரை நியமித்தார்?
ஜலாலுதீன் முகமது | |
ஜலாலுதீன் அகமது | |
ஜலாலுதீன் யாகுத் | |
ஜலாலுதீன் பீர்ஷா |
Question 62 Explanation:
(குறிப்பு - ரசியா பேகம் ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை குதிரை லாயபணித்துறை தலைவராக (அமீர் இ அகுர்) நியமித்தார். இது துருக்கிய பிரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது)
Question 63 |
பால்பன் அவர்களால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் படையில் சேர்ந்த ஆப்கானியர் களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகை இல்லாத வழங்கப்பட்டு அவை பயிரிடப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ராஜ்தான் | |
மஃப்ருஸி | |
நிஸ்பா | |
இவை எதுவும் இல்லை |
Question 63 Explanation:
(குறிப்பு - பால்பன் அரசு டில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாப்பிலும் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டன.புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.)
Question 64 |
மேவார் பகுதியில் கொலையிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்டிருந்த ஒரு இஸ்லாமிய சமூகம் எது?
நியோ | |
மியோ | |
சியோ | |
எல்லாமே தவறு |
Question 64 Explanation:
(குறிப்பு - வடமேற்கில் மேவாரை சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மியோ என்ற ஒரு இஸ்லாமிய சமூகம் கொலைகளிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதை ஒரு சவாலாக ஏற்ற பால்பன் தாமே முன்னின்று மேவாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்)
Question 65 |
வங்கத்தின் ஆளுநராக பால்பன் யாரை நியமித்தார்?
கைகுபாத் | |
புக்ரா கான் | |
அப்சல் கான் | |
அமின் கான் |
Question 65 Explanation:
(குறிப்பு - வங்கத்தின் ஆளுநராக பால்பனின் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார். பால்பன் இறந்த பிறகு புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாக பிரிந்து போனாரே அன்றி தந்தையின் அரியணையை கோரவில்லை)
Question 66 |
சட்லஜ் நதிக்கு அப்பால் முன்னேறி வர மாட்டோம் என்ற வாக்குறுதியை எந்த மங்கோலிய அரசரிடமிருந்து பால்பன் பெற்றார்?
செங்கிஸ்கான் | |
சிங்கிஸ்கான் | |
ஹுலுக் கான் | |
அப்சல் கான் |
Question 66 Explanation:
(குறிப்பு - பால்பன் ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும் செங்கிஸ்கானின் பேரனுமான ஹுலுக் கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு முயற்சி செய்தார். சட்லெஜ் நதிக்கு அப்பால் முன்னேறி வர மாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியர்கள் இடமிருந்து பால்பன் பெற்றார்)
Question 67 |
ஹுலுக் கான் ஒரு நல்லெண்ண குழுவை தில்லிக்கு அனுப்பி வைத்த ஆண்டு எது?
1253 | |
1256 | |
1259 | |
1262 |
Question 67 Explanation:
(குறிப்பு - 1259 ஆம் ஆண்டு ஹுலுக் கான் தில்லிக்கு ஒரு நல்லெண்ண குழுவை அனுப்பி வைத்தார். மங்கோலிய தாக்கங்கள் தாக்குதல்களில் இருந்து எல்லைப் பகுதிகளை காப்பதற்காக தனது விருப்பத்திற்குரிய மகன் முகமது கானுக்கு முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்தார் பால்பன்)
Question 68 |
ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?
1280 | |
1290 | |
1295 | |
1300 |
Question 68 Explanation:
(குறிப்பு - படைத் தலைவராகப் பணியாற்றி வந்த மாலிக் ஜலாலுதீன் கில்ஜி கைக்குபாத்தின் பெயரால் அரசாட்சி செய்தார். விரைவிலேயே ஜலாலுதீன் கில்ஜி முறைப்படி அரசரானார்)
Question 69 |
மங்கோலியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதை ஜலாலுதீன் கில்ஜி எந்த ஆண்டு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்?
1290 | |
1291 | |
1292 | |
1293 |
Question 69 Explanation:
(குறிப்பு - ஜலாலுதீன் கில்ஜி அரசரான பின்பு பல சண்டைகளில் வெற்றி பெற்றார். மேலும் தமது முதிய வயதில் கூட மங்கோலிய கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர் இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்)
Question 70 |
எந்த ஆண்டு அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின்போது மங்கோலியர்கள் தில்லியை தாக்கினர்?
1292 | |
1294 | |
1296 | |
1298 |
Question 70 Explanation:
(குறிப்பு - மங்கோலியப் படை எடுப்புகள் அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தன. அவரது இரண்டாவது ஆட்சி ஆண்டில் (1298) மங்கோலியர்கள் தில்லியை உக்கிரமாக தாக்கினர். அலாவுதீன் கில்ஜியின் படையால் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை)
Question 71 |
இந்தியாவின் மீதான மங்கோலியர்களின் கடைசி தாக்குதல் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
1307 | |
1310 | |
1312 | |
1315 |
Question 71 Explanation:
(குறிப்பு - 1298, 1305 போன்ற ஆண்டுகளில் மங்கோலியர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இருப்பினும் பல முறை மங்கோலியர் ஐ தோற்கடித்த சுல்தானின் படை அதிக எண்ணிக்கையில் அவர்களை சிறை பிடித்து கொன்றது. இந்தியர்களின் மீதான கடைசி மங்கோலிய தாக்குதல் 1307 மற்றும் 1308ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது)
Question 72 |
அலாவுதீன் கில்ஜி நடத்திய தாக்குதல்களை பொருத்துக.
- தேவகிரி - a) 1303
- குஜராத் - b) 1305
- சித்தோர் - c) 1299
- மால்வா - d) 1296
I-d, II-c, III-a, IV-b | |
I-d, II-a, III-b, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-a, II-b, III-d, IV-c |
Question 72 Explanation:
(குறிப்பு - சுல்தானியம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு அதன் வட இந்திய நிலப்பரப்புகளில் வேளாண் நிலங்களை பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. இது கொள்ளை பொருள்தேடி இடைவிடாமல் அவர்கள் நடத்திய சூரையாடல்களால் தெளிவாகிறது)
Question 73 |
1307ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜி தனது தளபதியான மாலிக் கபூர் என்பவரின் தலைமையில் எந்த கோட்டையை கைப்பற்றுவதற்காக படையை அனுப்பினார்?
மேவார் கோட்டை | |
தேவகிரி கோட்டை | |
அஜ்மீர் கோட்டை | |
டில்லி கோட்டை |
Question 73 Explanation:
(குறிப்பு - தீபகற்பத்தில் அலாவுதீன் கில்ஜியின் முதல் இலக்கு மேற்கு தக்காணத்தில் இருந்த தேவகிரி ஆகும். 1307ஆம் ஆண்டு தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக மாலிக்கபூர் தலைமையில் ஒரு பெரும்படையை அலாவுதீன் கில்ஜி அனுப்பினார்)
Question 74 |
ஜலாலுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர் தலைமையிலான படை 1309ஆம் ஆண்டு யாரை தோற்கடித்தது?
பிரதாபருத்ராதேவா | |
வீரவல்லாளன் | |
விஜயதேவோ | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 74 Explanation:
(குறிப்பு - 1309 ஆம் ஆண்டு மாலிக்கபூர் தலைமையிலான படை தெலுங்கானா பகுதியில் இருந்த வாரங்கல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ராதேவா என்பவரை தோற்கடித்தது)
Question 75 |
மாலிக்கபூர் தலைமையிலான படை தமிழ்நாட்டில் எந்த இடங்களை சூறையாடினர்?
- சிதம்பரம்
- திருவரங்கம்
- மதுரை
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 75 Explanation:
(குறிப்பு - மாலிக் கபூரின் தமிழ்நாட்டு தாக்குதல் கனத்த மழை வெள்ளத்தால் தடைபட்டது. எனினும் சிதம்பரம் திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும் பாண்டியர் தலைநகரம் மதுரையும் சூறையாடினர்)
Question 76 |
நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் யார்?
பால்பன் | |
இல்துமிஷ் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி |
Question 76 Explanation:
(குறிப்பு - இல்துமிஷ் நாற்பதின்மர் குழுவை அமைத்து அவர்களில் இருந்து தெரிவு செய்து ராணுவத்திலும் குடிமை நிர்வாகத்திலும் நியமித்தார். இல்துமிஷ் இறந்த பிறகு ருக்னுத்தீன் ஃபெரோசை அரசனாக வேண்டும் என்ற இல்துமிஷ்ஷின் விருப்பத்தை புறம் தள்ளும் அளவுக்கு இந்த நாற்பதின்மர் குழு வலுமிக்கதாயிற்று)
Question 77 |
நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்?
பால்பன் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி | |
மாலிக் கபூர் |
Question 77 Explanation:
(குறிப்பு - சுல்தானியத்தின் நிலைதன்மைக்கு பெரிய அபாயத்தை ஏற்படுத்துகின்றது எனக்கூறி நாற்பதின்மர் குழுவை பால்பன் ஒழித்தார். இதன் மூலம் துருக்கிய பிரபுக்கள் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்)
Question 78 |
மதுவும், போதை மருந்துகளின் பயன்பாடும் யாருடைய ஆட்சியில் தடை செய்யப்பட்டன?
பால்பன் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி | |
கியாசுதீன் துக்ளக் |
Question 78 Explanation:
(குறிப்பு - அலாவுதீன் கில்ஜி ஊழல் வயப்பட்ட அரசு அலுவலர்களை கடுமையாக கண்டித்தார். மது, போதை தரும் மருந்துகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டன. சூதாட்டமும் தடை செய்யப்பட்டது. சூதாடிகள் நகரத்துக்கு வெளியே விரட்டப்பட்டனர்)
Question 79 |
படை வீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி | |
கியாசுதீன் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 79 Explanation:
(குறிப்பு - அலாவுதீன் கில்ஜி ஒரு பெரிய திறமை வாய்ந்த படையை பராமரிக்க வேண்டி இருந்தது. படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவார். படைவீரர்களுக்கு குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது)
Question 80 |
கியாசுதீன் துக்ளக் என்பவரின் இயற்பெயர் என்ன?
காஸி மாலிக் | |
அப்துல் மாலிக் | |
மாலிக் கபூர் | |
எல்லாமே தவறு |
Question 80 Explanation:
(குறிப்பு - அலாவுதீன் கில்ஜிக்கு பின்னர் மாலிக்கபூர் தாமே அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். எனினும் ஆட்சிக்கு வந்து 35 நாட்களில் அவர் கொலை செய்யப்பட்டார். பின்னர் மங்கோலியர்க்கு எதிராக பல படையெடுப்புகளில் பங்கேற்ற திறமைசாலியான காஸிமாலிக் என்னும் கியாசுதீன் துக்ளக் 1320ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தார்)
Question 81 |
துக்லக் வம்சத்தின் ஆட்சி எப்போது வரை நீடித்தது?
1410 வரை | |
1412 வரை | |
1414 வரை | |
1416 வரை |
Question 81 Explanation:
(குறிப்பு - 1320ஆம் ஆண்டு கியாசுதீன் துக்ளக் ஆட்சியில் அமர்ந்தார். பதவியில் இருந்த கில்ஜி ஆட்சியாளர் குஸ்ரோவை கொன்றதன் மூலம் கில்ஜி வம்சத்தில் இருந்து எவரும் அரசுரிமை கூறுவதை தடுத்தார்.1414வரையிலும் நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது)
Question 82 |
முகமது பின் துக்ளக் என்பவரின் இயற்பெயர் என்ன?
ஜான் கான் | |
அப்சல் கான் | |
ஷேர் கான் | |
பைரம் கான் |
Question 82 Explanation:
(குறிப்பு - கியாசுதீன் துக்ளக் ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325இல்) இறந்தார். மூன்று நாள்கள் கழித்து ஜான் கான் என்ற இயற்பெயர் கொண்ட அவரது மகன் ஆட்சிக்கட்டிலில் ஏறியதோடு முகமது பின் துக்ளக் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்)
Question 83 |
தலைநகரை தில்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர் யார்?
கியாஸ் உத்தின் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி |
Question 83 Explanation:
(குறிப்பு - முகமது பின் துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர், கொடூரமானவர் மற்றும் நியாயமற்றவர் எனும் பெயர் பெற்றிருந்தார். டெல்லிக்கு அருகே மீரட் வரையிலும் அணிவகுத்து வந்த மங்கோலிய படையை முகமது பின் துக்ளக் திறமையாக பின்வாங்கச் செய்தார்)
Question 84 |
முகமது பின் துக்ளக் எந்த நகரத்திற்கு தௌலதாபாத் என்று பெயர் சூட்டினார்?
சித்தோர் | |
தேவகிரி | |
ரண்தம்போர் | |
மால்வா |
Question 84 Explanation:
(குறிப்பு - மகாராஷ்டிரத்தில் உள்ள தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் சூட்டிய மறுபெயரே தௌலதாபாத் ஆகும். தில்லியில் இருந்து தௌலதாபாத்திற்கு தலைநகரை மாற்ற உத்தரவிட்டவர் முகமது பின் துக்ளக் ஆவார்)
Question 85 |
அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
கியாஸ் உத்தின் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி |
Question 85 Explanation:
(குறிப்பு - முகமது பின் துக்ளக் மேற்கொண்ட அடுத்த முக்கியமான பரிசோதனை அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியது ஆகும். இந்த நாணய முறை ஏற்கனவே சீனாவிலும், ஈரானிலும் நடைமுறையில் இருந்தது.)
Question 86 |
வேளாண்மையை கவனித்துக்கொள்ள திவான்-இ-அமிர்-கோஹி என்ற தனித் துறையை உருவாக்கியவர் யார்?
கியாஸ் உத்தின் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஜலாலுதீன் கில்ஜி |
Question 86 Explanation:
(குறிப்பு - வேளாண்மையை விரிவாக்க முகமது பின் துக்ளக்கின் திட்டம் புதுமையானது என்றாலும் அதுவும் துயரமாக தோற்றது. கால்நடைகளையும் விதைகளையும் வாங்க கிணறு வெட்ட விவசாயிகளுக்கு கடன் தரப்பட்டது என்றாலும் இது பயன் தரவில்லை.)
Question 87 |
முகமது பின் துக்ளக் எந்த ஆண்டு மறைந்தார்?
1350 இல் | |
1351 இல் | |
1352 இல் | |
1353 இல் |
Question 87 Explanation:
(குறிப்பு - கிளர்ச்சியாளர்களுடன் சண்டை விடுவதிலேயே முகமது தமது கடைசி நாட்களை கழித்தார். குஜராத்தில் ஒரு கிளர்ச்சி தலைவரை விரட்டி செல்வதில் ஈடுபட்டிருந்த போது உடல் நலம் கெட்டு தனது 26வது ஆட்சி ஆண்டின் முடிவில் முகமது பின் துக்ளக் இறந்தார்)
Question 88 |
ஃபெரோஸ் துக்ளக் பற்றிய கீழ்காணும் செய்திகளில் எது தவறானது?
இவர் கியாசுதீன் துக்ளக்கின் தம்பி ஆவார். | |
இவர் ஒரு ஜாட் இளவரசியை மணந்தார். | |
சுல்தானியத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது. | |
இவர் முகமது பின் துக்ளக்கை வீழ்த்தி பின்னர் ஆட்சி பொறுப்பேற்றார் |
Question 88 Explanation:
(குறிப்பு - . கியாசுதீன் துக்ளக் ஆட்சிக்கு வந்தபோது இவரை 12, 000 குதிரை வீரர்களை கொண்ட சிறப்பு படைக்குத் தளபதியாக்கினார். முகமது பின் துக்ளக் தனது வாரிசை அறிவிக்காமலேயே இறந்துவிட்டார். எனவே பெரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் அமர்ந்தார்)
Question 89 |
ஃபெரோஸ் துக்ளக்கிடம் பணிபுரிந்த இஸ்லாமுக்கு மாறிய பிராமணர் யார்?
கான்-இ-ஜஹன் | |
கான் அப்துல்லா | |
கான் மஃகான் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 89 Explanation:
(குறிப்பு - ஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயர் அதிகாரியாக இருந்த புகழ்பெற்ற கான்-இ-ஜஹன் இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர் ஆவார். ஆதியில் கண்ணு என்று அறியப்பட்ட அவர் வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பு ஒன்றின்போது சிறைபிடிக்கப்பட்டவர்)
Question 90 |
அடிமைகள் நலனுக்காக ஒரு அரசுத் துறையை உருவாக்கியவர் யார்?
கியாசுதீன் துக்ளக் | |
ஃபெரோஸ் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி | |
கான்-இ-ஜஹன் |
Question 90 Explanation:
(குறிப்பு - ஃபெரோஸ் துக்ளக் அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதைகளை ஒழித்தார். அடிமைகள் குறித்து இவருக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது எனவே அவர்களது நலன்களை கவனிப்பதற்காக தனியே ஒரு அரசுத் துறையை ஏற்படுத்தினார்.)
Question 91 |
போர்கள் வேண்டாம் என்பது கீழ்க்கண்டவர்களில் யாருடைய கொள்கையாகும்?
ஃபெரோஸ் துக்ளக் | |
கியாசுதீன் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 91 Explanation:
(குறிப்பு - ஃபெரோஸ் துக்ளக், போர்கள் எதுவும் தொடுக்கவில்லை. இருப்பினும் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அவரது வங்கப் படையெடுப்பு ஒரு விதிவிலக்காகும்)
Question 92 |
ஃபெரோஸ் துக்ளக் காலத்திய ஒரே பெரிய ராணுவ படையெடுப்பு எது?
சிந்து படையெடுப்பு | |
குஜராத் படையெடுப்பு | |
மால்வா படையெடுப்பு | |
தேவகிரி படையெடுப்பு |
Question 92 Explanation:
(குறிப்பு - ஃபெரோஸ் துக்ளக் போர்கள் எதுவும் தொடுக்கவில்லை. அவரது காலத்தில் இரண்டு மங்கோலிய தாக்குதல்களை நிகழ்ந்தன இரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அவரது காலத்திய ஒரே பெரிய ராணுவப் படையெடுப்பு 1362 இல் சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும்)
Question 93 |
ஃபெரோஸ் துக்ளக் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - இவர் வைதீக இஸ்லாமை ஆதரித்தார்.
- கூற்று 2 - இஸ்லாமியர் அல்லாதவர் ஜிசியா எனும் வரியை விதித்தார்.
- கூற்று 3 - புதிய இந்து கோயில் கட்டுவதை இவர் தடை செய்தார்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 93 Explanation:
(குறிப்பு -ஃபெரோஸ் துக்ளக் புதிய இந்து கோயில் கட்டுவதை தடை செய்யவில்லை. இவரது பண்பாட்டு ஆர்வம், மதம், மருத்துவம், இசை தொடர்பான பல சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வித்திட்டது)
Question 94 |
இந்தியாவில் முதன் முறையாக இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரியை விதித்தவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
பால்பன் | |
அலாவுதீன் கில்ஜி | |
ஃபெரோஸ் துக்ளக் |
Question 94 Explanation:
(குறிப்பு - ஜெசியா என்பது இஸ்லாமிய அரசுகளால் அவர்கள் நிலத்தில் வாழும் இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வசூலிக்கப்பட்ட ஒரு வரியாகும். இந்தியாவில் முதன்முதலாக இஸ்லாமியர் அல்லாதவர் மீது ஜிஸ்யா வரியை விதைத்தவர் குத்புதீன் ஐபக் ஆவார்)
Question 95 |
கடைசி துக்ளக் அரசர் யார்?
முகமது பாமன் ஷா | |
நசுருதின் முகமது ஷா | |
முகமது ஷா | |
ஆலம் ஷா |
Question 95 Explanation:
(குறிப்பு - கடைசி துக்ளக் அரசர் நசுருதின் முகமது ஷா என்பவர் ஆவார். இவரது காலம் 1394 முதல் 1412 வரையாகும். இவரது காலத்தில்தான் மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது)
Question 96 |
தைமூர் இந்தியாவின் எந்த நகரத்தை சூறையாடினார்?
டில்லி | |
பஞ்சாப் | |
குஜராத் | |
தேவகிரி |
Question 96 Explanation:
(குறிப்பு - தைமூர் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் உடன் ரத்த உறவு இருப்பதாக கூறத்தக்க துருக்கியர் ஆவார்.)
Question 97 |
பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு தைமூர் யாரை நியமித்தார்?
அப்சல் கான் | |
கிஸிர் கான் | |
மாப் கான் | |
சையது கான் |
Question 97 Explanation:
(குறிப்பு - பஞ்சாப் போர் அணி வகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர்கானை தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர்கான் தானே சென்று டில்லியை கைப்பற்றி செய்வது வம்ச ஆட்சியை நிறுவினார்)
Question 98 |
சையது வம்சத்தில் 1414 முதல் 1451 வரை எத்தனை சுல்தான்கள் ஆட்சி செய்தனர்?
நான்கு | |
ஐந்து | |
ஆறு | |
ஏழு |
Question 98 Explanation:
(குறிப்பு - கிஸ்ர்கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451ஆம் ஆண்டு காலம் வரையில் நான்கு சுல்தான்கள் ஆண்டனர். முற்பட்ட சையது சுல்தான்கள் தைமூரின் மகனுக்கு திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர்.)
Question 99 |
டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்த சுல்தான் யார்?
சுல்தான் ஆலம் ஷா | |
சுல்தான் பகதூர் ஷா | |
சுல்தான் பாமன் ஷா | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 99 Explanation:
(குறிப்பு - டெல்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று முழுமையாக 30 ஆண்டுகள் மன நிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சையது வம்சத்தில் வந்த ஆலம் ஷா ஆவார்)
Question 100 |
லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
இப்ராஹிம் லோடி | |
பஹ்லால் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இவர்கள் யாரும் அல்ல. |
Question 100 Explanation:
(குறிப்பு - லோடி வம்சம் ஆட்சியை நிறுவியவர் பஹ்லால் லோடி ஆவார். 1451ஆம் ஆண்டு லோடி வம்சம் தோன்றியது.)
Question 101 |
லோடி வம்ச ஆட்சியில் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றியவர் யார்?
இப்ராஹிம் லோடி | |
பஹ்லால் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 101 Explanation:
(குறிப்பு - பஹ்லால் லோடியின் ஆட்சியின் போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்க்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர் லோடி 1504ஆம் ஆண்டு தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்)
Question 102 |
லோடி வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் யார்?
இப்ராஹிம் லோடி | |
பஹ்லால் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இவர்கள் யாரும் அல்ல. |
Question 102 Explanation:
(குறிப்பு - கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் பாபரிடம் தோற்றார்)
Question 103 |
சுல்தானிய ஆட்சி நிர்வாகம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - சுல்தானிய அரசு முறையான ஓர் இஸ்லாமிய அரசாக கருதப்பட்டது.
- கூற்று 2 - பூமியில் கடவுளின் பிரதிநிதியாக தாம் ஆட்சி செய்வதாக பால்பன் கூறினார்.
- கூற்று 3 - மதத்தின் பரிந்துரைகள் குறித்து தாம் கவலைப்படவில்லை என கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தை கோரினார்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 103 Explanation:
(குறிப்பு - சுல்தான்கள் பலரும், கலிபாக்களின் தலைமையை அங்கு ஏற்பதாக கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினார். ராணுவ தலைவர் என்ற வகையில் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைமைப்பதவி தளபதி எனும் அதிகாரம் அவர்களிடம் இருந்தது)
Question 104 |
சுல்தானிய ஆட்சியின்போது வரி வசூலுக்கு எதிரான ஒரு விவசாய கிளர்ச்சி எங்கு தோன்றியது?
தோவாப் | |
தேவகிரி | |
ஆக்ரா | |
அஜ்மீர் |
Question 104 Explanation:
(குறிப்பு - டெல்லி அருகே தோவாபில் 1332ஆம் ஆண்டு சுல்தானிய வழி வசூலுக்கு எதிராக ஒரு விவசாய கிளர்ச்சி தோன்றியது.தொடர்ந்து வந்த பஞ்சமும் தில்லி பகுதியிலும் தோவாப் பகுதிகளிலும் உழவர்களுக்கு கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண் வளர்ச்சித் திட்டத்தை கொண்டு வருமாறு முகமது பின் துக்ளக்கை நிர்ப்பந்தித்தன.)
Question 105 |
தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தை பொறித்த இஸ்லாமிய அரசர் யார்?
முகமது கஜினி | |
முகமது கோரி | |
முகமது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி |
Question 105 Explanation:
(குறிப்பு - இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தை பொறித்திருக்கிறார்)
Question 106 |
முகமது பின் துக்ளக் சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற ஆணையை எந்த ஆண்டு வெளியிட்டார்?
1320ஆம் ஆண்டு | |
1325ஆம் ஆண்டு | |
1330ஆம் ஆண்டு | |
1335ஆம் ஆண்டு |
Question 106 Explanation:
(குறிப்பு - முகமது பின் துக்ளக் ஹோலி பண்டிகையில் பங்கேடுத்ததோடு யோகிகள் உடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.)
Question 107 |
தென்னிந்திய பக்தி இயக்கத்தையும், ஓரிறைக் கொள்கையும் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர்கள் கீழ்க்கண்டவர்களுள் யார்?
- நாமதேவர்
- ராமானுஜர்
- ராமானந்தர்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 107 Explanation:
(குறிப்பு - நாமதேவர் மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் எதிர்த்தார். ஓரிறை கொள்கையை மிகத் தீவிரமாக பின்பற்றினார். இன்னொருவர் ராமானுஜரை பின்பற்றிய ராமானந்தர் ஆவார்.)
Question 108 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - வணிகக் குழுக்கள் சுல்தான்கள் காலத்தில் இருந்ததற்க்கு சான்று இல்லை.
- கூற்று 2 - பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செப்புக்காசுகளோடு தங்கம் மற்றும் வெள்ளி காசுகளையும் தில்லி சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர்.
- கூற்று 3 - டெல்லி சுல்தானியர் காலத்தில் காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமானது.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 108 Explanation:
(குறிப்பு - சீனர்கள் கண்டுபிடித்த நூற்பு சக்கரம் பதினான்காம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது. இது நூற்ப்பவர்களின் உற்பத்தித்திறனை 6 மடங்கு அதிகரிக்க உதவியது.)
Question 109 |
வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு எந்த நூற்றாண்டில் நிறுவப்பட்டது?
பதிமூன்றாம் நூற்றாண்டு | |
பதினான்காம் நூற்றாண்டு | |
பதினைந்தாம் நூற்றாண்டு | |
பதினாறாம் நூற்றாண்டு |
Question 109 Explanation:
(குறிப்பு - சீனர்கள் கண்டுபிடித்த நூற்பு சக்கர தொழில்நுட்பம் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது. இதன் மூலம் நூல் உற்பத்தி பெருகியது போலவே நெசவு வேலையை விரைவுபடுத்த இது உதவியது. பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு நிறுவப்பட்டது)
Question 110 |
டெல்லி சுல்தானிய காலத்தில் இருந்த மதரசா என்பதற்கான சரியான பொருள் எது?
- இதில் ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுத் தந்தார்.
- உயர்கல்வியில் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவம் மதரசா என்பது ஆகும்.
- பதினோராம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும் ஈரானிலும் இது பரவலாக நிறுவப்பட்டது.
- வழக்கமாக மதரஸாவுக்கு ஒரு கட்டடம் இருந்தது. தனி ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.
I, II, III மட்டும் சரி | |
II, III, IV மட்டும் சரி | |
I, III, IV மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 110 Explanation:
(குறிப்பு - மதரஸா என்னுமிடத்தில் மாணவர்கள் தங்கி இருக்கவும் நூலகத்திற்கும், தொழுகைக்கும் என சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பெரோஸ் துக்ளக் ஒரு பெரிய மதராசாவை கட்டினார்)
Question 111 |
சூஃபிகளிடையே தோன்றிய செல்வாக்குமிக்க இரு பிரிவுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?
- சுஹ்ரவார்தி
- சிஸ்டி
- மியோ
I, II மட்டும் சரியானது | |
II, III மட்டும் சரியானது | |
I, III மட்டும் சரியானது | |
இவை அனைத்தும் சரியானது |
Question 111 Explanation:
(குறிப்பு - 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் சூபிகள் மத்தியில் செல்வாக்குமிக்க இரு பிரிவுகள் தோன்றின. முல்தானி மையமாகக் கொண்ட சுஹ்ரவார்தி, தில்லியிலும் பிற இடங்களிலும் கோலோச்சிய சிஸ்டி ஆகியன ஆகும்)
Question 112 |
மங்கோலியர்கள் பாக்தாத் நகரை எந்த ஆண்டு கைப்பற்றினர்?
1252 இல் | |
1254 இல் | |
1254 இல் | |
1258 இல் |
Question 112 Explanation:
(குறிப்பு - முகமது நபியின் வாரிசாக கருதப்படும் கலீபாக்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் குடிமை மற்றும் மதம் தொடர்பான விவகாரங்களில் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர். 1258ஆம் ஆண்டு பாக்தாத் நகரை மங்கோலியர்கள் கைப்பற்றும் வரை கலிபா அந்நகரை ஆட்சி செய்தார்)
Question 113 |
கலீபா பதவி எந்த ஆண்டு முதல் ஒழிக்கப்பட்டது?
1910 முதல் | |
1920 முதல் | |
1930 முதல் | |
1940 முதல் |
Question 113 Explanation:
(குறிப்பு - ஆட்டோமானிய பேரரசு நீக்கப்பட்டு(1920) முஸ்தபா கமால் அத்தாதுர்க்கின் தலைமையில் துருக்கிய குடியரசு உருவானபோது இக்கலீபா பதவி ஒழிக்கப்பட்டது)
Question 114 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- இஸ்லாமிய மரபில் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை.
- இஸ்லாமிய மரபில் பெண்கள் படிக்கவும் எழுதவும் கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
- இஸ்லாமிய மரபு பலதார மணத்திற்கு ஏற்பளித்தது.
- இஸ்லாமிய மரபில் தங்களின் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறவும், மணவிலக்கு பெறவும் உரிமை இருந்தது.
I, II, III மட்டும் சரி | |
II, III, IV மட்டும் சரி | |
I, III, IV மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 114 Explanation:
(குறிப்பு - பர்தா அணிந்து இருந்த போதிலும் சில விஷயங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு பெரும்பாலான இந்து பெண்களை காட்டிலும் ஒப்பீட்டளவில் சமூகத்தில் உயர்ந்த தகுதியும் அதிக சுதந்திரமும் இருந்தன)
Question 115 |
சுல்தானிய காலத்தில் கட்டப்பட்ட முதல் கவிகை எது?
அலாய் தர்வாஸா | |
குவாத் உல் இஸ்லாம் மசூதி | |
அத்ஹை-தின்-க-ஜோப்ரா | |
இது எதுவும் இல்லை. |
Question 115 Explanation:
(குறிப்பு - மேற்கு ஆசியாவில் இருந்து கைவினைஞர்கள் வந்து சேர்ந்ததும் வளைவுகளும் கவிகைகளும் துல்லியமும் முழுமையும் அடைந்தன. படிப்படியாக உள்ளூர் கைவினைஞர்களும் இதில் பயிற்சி பெற்றனர். முதல் மெய்யான விளைவால் அலங்கரிக்கப்பட்டது பால்பனின் கல்லறை ஆகும்)
Question 116 |
ராக்தர்பன் எனும் இசை நூல் எந்த மொழியைச் சார்ந்ததாகும்?
குஜராத்தி | |
சமஸ்கிருதம் | |
ஹிந்தி | |
கன்னடம் |
Question 116 Explanation:
(குறிப்பு - சுல்தானிய அரசர் ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக்தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலை பாரசீக மொழிக்கு மொழி பெயர்த்ததன் மூலம் ஒத்திசைவுக்கு இட்டுச் சென்றது.)
Question 117 |
'ஒன்பது வானங்கள் 'என்ற நூலை எழுதியவர் யார்?
அமிர் குஸ்ரு | |
மீர் அஃப்ரோஸ் | |
ஜலாலுதீன் கில்ஜி | |
நுஸ்ரத் காட்டன் |
Question 117 Explanation:
(குறிப்பு - பாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமீர் குஸ்ரு ஆவார். அவர் தமது ' ஒன்பது வானங்கள்' என்னும் நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்)
Question 118 |
பாரசீக உரைநடையின் ஆசானாக கருதப்படுபவர் யார்?
நிசாமுதீன் அவுலியா | |
அப்துல் மாலிக் இசுலாமி | |
ஜியாவுதீன் பரனி | |
சம்சுதீன் சிராஜ் |
Question 118 Explanation:
(குறிப்பு - பாரசீக உரைநடையில் ஆசானாக கருதப்படுபவர் ஜியாவுதீன் பரனி என்பவராவார்.ஃபுதூ உஸ் salathin என்ற தனது கவிதைத் தொகுப்பில் அப்துல் மாலிக் இஸ்லாமி கஜனவிய காலம் தொடங்கி முகமது பின் துக்ளக் ஆட்சி வரையிலுமான இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்)
Question 119 |
காஷ்மீர் அரசர்களின் வரலாற்று நூலான ஜைனவிலாஸ் என்னும் நூலை இயற்றியவர் யார்?
பட்டவதாரா | |
பக்ருதீன் கவ்வாஸ் | |
ஜியாவுதீன் பரனி | |
அப்துல்மாலிக் இஸ்லாமி |
Question 119 Explanation:
(குறிப்பு - காஷ்மீர அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார, ஷா நாமா எனும் ஃபிர்தௌசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளார்)
Question 120 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளம் அடைந்தது,
- கூற்று 2 - பாரசீக சொற்களுக்கு நிகரான ஹிந்தாவி சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன.
- கூற்று 3 - மகாபாரதமும், ராஜதரங்கிணியும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 120 Explanation:
(குறிப்பு - சமஸ்கிருத இலக்கியத்தில் முன்னேற்றத்தை டெல்லி சுல்தானிய ஆட்சி தடுக்கவில்லை. உயர் அறிவுப்பூர்வ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது. பேரரசின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சமஸ்கிருத பள்ளிகளும் கல்வி நிலையங்களும் தொடர்ந்து செழித்தன.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 120 questions to complete.