Advanced Tamil Questions

அரங்கவியல் 12th Advanced Tamil Unit 2 Questions

12th Advanced Tamil Unit 2 Questions

2] அரங்கவியல்

1) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) 18-ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது.

B) இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரியா நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றன.

C) விடிய, விடிய நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணிநேர நிகழ்வாகச் சுருக்கியது பார்சி நாடகங்கள்.

D) அரங்க நிகழ்வுகள், பார்வையாளர், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார்.

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது.

2) கூற்று: கான்ஸ் உலகத் திரைப்பட விழா 1939இல் தொடங்கப்பட்டாலும், 1949-ஆம் ஆண்டிலிருந்து இதற்கு முக்கியத்துவம் உருவானது.

காரணம்: இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் 1949-ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955-ஆம் ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது

3) இந்தியத் திரைப்பட இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரான சத்தியஜித் ரே எந்த மொழிக்கு பெருமை சேர்த்தவர் ஆவார்?

A) இந்தி

B) வங்காளி

C) தெலுங்கு

D) மலையாளம்

விளக்கம்: இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே. இந்தியமொழிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், இரவீந்திர நாத தாகூர். இருவரும் வங்கமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களாவர். தாகூரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சத்தியஜித் ரே, அவரது பண்பட்ட சிந்தனைத் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

4) வீடு என்ற என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா- சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன்- முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன்- மோகமுள்

5) பலூன் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) அறந்தை நாராயணன்

B) ஞாநி

C) அ.ராமசாமி

D) அ.மங்கை

விளக்கம்: அறந்தை நாராயணன் – மூர் மார்க்கெட்

ஞாநி- பலூன், நாங்கள்

அ.ராமசாமி- பல்லக்குத்தூக்கிகள்

அ.மங்கை- மௌனக்குரல் குழுவை நடத்தியவர்.

6) நாற்காலிக்காரர் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

7) இந்தியாவில் எப்போது முதல் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது?

A) 1952

B) 1956

C) 1950

D) 1965

விளக்கம்: திரைப்பட ஆர்வலர்களுக்குத் திருவிழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்கள்தாம். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952-ஆம் ஆண்டு மும்பையில் முதலில் இது நடைபெற்றது.

8) கூற்று: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் நவீன நாடக ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டனர்.

காரணம்: தமிழ் நாடகங்களைவிடவும் மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெக்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழ் நாடகங்களை விடவும் மொழியாக்கவும் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின. இதன்பின் நேரடி தமிழ் நவீன நாடகத்திற்கான முயற்சிகள் நாடக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழில் நவீன நாடகங்கள் மிகுதியாகத் தோன்றலாயின. தங்களின் படைப்புகளின் மூலம் நவீன நாடக ஆளுமைகள் இக்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்டனர்

9) சத்தியஜித் ரே-ன் முதல் மூன்று காவியப் படங்களில் பொருந்தாதது எது?

A) பதேர் பாஞ்சாலி

B) அபராஜிதோ

C) குற்றமும் தண்டனையும்

D) அபுன்சன்சார்

விளக்கம்: இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேயின் முதல் காவியப் படங்களான பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர்சன்சார் ஆகியவை பிபூபதி பூஷன் என்ற எழுத்தாளரது புதினம்.

10) தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் ‘கீசகவதம்’ என்னும் மௌனப்படம் ஆகும். இது எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது?

A) கெயிட்டி

B) எடிசன் சினிமாட்டோ கிராப்

C) ஜெனரல் பிக்சர் கார்ப்பரேஷன்

D) இந்தியா பிலிம் கம்பெனி

விளக்கம்: மும்பையில் தயாரான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. புராணப் படங்களின் வரவேற்பைக் கண்ட நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவினார், இதன்மூலம் 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படம் தயாரிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

11) மௌனப் படக் காலத்திலேயே வை.மு.கோதைநாயகி அம்மாளின் புதினம் எந்த பெயரில் படமாக்கப்பட்டது?

A) தயாநிதி

B) சித்தி

C) அனாதைப்பெண்

D) செக்குமாடுகள்

விளக்கம்: மௌனப்படக் காலத்திலேயே வை.மு.கோதைநாயகி அம்மாளின் அனாதைப் பெண் புதினம் அதே பெயரில் படமாக்கப்பட்டது. இதே புதினம் பேசும் படமாகவும் எடுக்கப்பட்டது. இவரின் தயாநிதி புதினம் சித்தி என்னும் திரைப்படமானது.

12) கூற்று: மகேந்திரனைவிட பாலு மகேந்திராவிற்கு திரைப்பட மொழி தெரிந்திருக்கும்.

காரணம்: பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும். ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர் என்பதால் திரைப்பட மொழி அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், மகேந்திரன் ஒளிப்பதிவாளராக இருந்ததில்லை. அப்படியிருந்தும் மகேந்திரன், திரைப்பட மொழியைச் சரியாக கையாண்டு இருக்கிறார்.

13) சந்தியா ராகம் என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா- சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன்- முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன்- மோகமுள்

14) அப்பாவும் பிள்ளையும் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

15) ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா ஆவார். இவர் கீழ்க்காணும் எதற்காக இவ்விருதினைப் பெற்றார்?

A) வாழ்நாள் சாதனைக்காக

B) இசைக்காக

C) திரைப்படத்திற்காக

D) இயக்குனருக்கான விருது

விளக்கம்: ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஆஸ்கார் விழாவை 1927-இல் நிறுவப்பட்ட அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இவ்விருது 1929 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா ஆவார். இவர் காந்தி படத்திற்காக இவ்விருதினைப் பெற்றார்.

16) நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற புதினம் திரைப்படமானது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) ஜெயகாந்தன்

B) அகிலன்

C) இராமலிங்கனார்

D) ஜே.ஆர்.ரங்கராஜு

விளக்கம்: ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற புதினங்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன.

17) எந்த ஆண்டு பாதல் சர்க்கார் அவர்களைக் கொண்டு சென்னையில் 10 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது?

A) 1977

B) 1978

C) 1979

D) 1980

விளக்கம்: பாதல் சர்க்கார் அவர்களைக் கொண்டு 1980-இல் சென்னையில் 10 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

18) 1964-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) கண்ணதாசன்

விளக்கம்: 1964-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை பாரதிதாசன் எழுதினார். அந்நாடகம் அமைதி என்னும் தலைப்பில் எழுதப்பட்டது.

19) கான்ஸ் உலகத் திரைப்பட விழா எங்கு தொடங்கப்பட்டது?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) பிரேசில்

D) இந்தியா

விளக்கம்: கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் 1949-ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955-ஆம் ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது

20) தாகூரின் எழுத்துப் படைப்புகளை நேரில் கண்டு, கேட்டறியும் உயிர் செறிந்த கலையனுபவங்களாக, உலகமெல்லாம் இரசித்து மகிழும் வகையில் உருவாக்கிய பெருமை யாரைச் சாரும்?

A) பானு அத்தையா

B) சத்தியஜித் ரே

C) தாதா சாகிப் பால்கே

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே. இந்தியமொழிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், இரவீந்திர நாத தாகூர். இருவரும் வங்கமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களாவர். தாகூரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சத்தியஜித் ரே, அவரது பண்பட்ட சிந்தனைத் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தாகூரின் எழுத்துப் படைப்புகளை நேரில் கண்டு, கேட்டறியும் உயிர் செறிந்த கலையனுபவங்களாக, உலகமெல்லாம் இரசித்து மகிழும் வகையில் உருவாக்கிய பெருமை, சத்தியஜித் ரேவையே சாரும்.

21) சத்தியஜித் ரே என்பவர் கீழ்க்காணும் எதற்காக ஆஸ்கார் விருது பெற்றார்?

A) திரைப்படம்

B) இசை

C) இயக்குநர்

D) வாழ்நாள் சாதனையாளர்

விளக்கம்: ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஆஸ்கார் விழாவை 1927-இல் நிறுவப்பட்ட அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இவ்விருது 1929 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா ஆவார். இவர் காந்தி படத்திற்காக இவ்விருதினைப் பெற்றார். வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர் சத்தியஜித் ரே.

22) இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற்றது?

A) மும்பை

B) சென்னை

C) பெங்களுரு

D) கொல்கத்தா

விளக்கம்: திரைப்பட ஆர்வலர்களுக்குத் திருவிழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்கள்தாம். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952-ஆம் ஆண்டு மும்பையில் முதலில் இது நடைபெற்றது.

23) இங்கிலாந்து என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

24) இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்த பிரிவில் ஒவ்வோர் ஆண்டும் வெளியான முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படும்?

A) இந்தியன் பனோரமா

B) இந்திய ஹோலிவுட்

C) இந்தியன் மூவி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ஒவ்வோர் ஆண்டும் வெளியான முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படும்.

25) அசையாத படங்களை வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப்படும் ஆகும். இதனை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

A) மூவி

B) சீரியல்

C) ரன்னிங் மூவி

D) திரைப்படம்

விளக்கம்: அசையாத படங்களை வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப்படும் ஆகும். ஆங்கிலத்தில் இதனை மூவி என்பர்.

26) நாங்கள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) அறந்தை நாராயணன்

B) ஞாநி

C) அ.ராமசாமி

D) அ.மங்கை

விளக்கம்: அறந்தை நாராயணன் – மூர் மார்க்கெட்

ஞாநி- பலூன், நாங்கள்

அ.ராமசாமி- பல்லக்குத்தூக்கிகள்

அ.மங்கை- மௌனக்குரல் குழுவை நடத்தியவர்.

27) எந்த ஆண்டு இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது வென்றார்?

A) 2007

B) 2008

C) 2009

D) 2010

விளக்கம்: இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனார் என்ற திரைப்படத்திற்காக 2009-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்றார்.

28) இந்தியத் திரைப்பட மேதை என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) பானு அத்தையா

B) சத்தியஜித் ரே

C) தாதா சாகிப் பால்கே

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: இந்தியத் திரைப்பட வரலாற்றில் சிறுகதை அல்லது புதினத்தின் கதையைத் திரைமொழிக்கேற்ப வடிவ மாற்றம் செய்து திரைப்படங்களாக்கினர். இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேயின் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் புதினங்களையும், சிறுகதைகளையும் அடிப்படையாகக்கொண்டவை.

29) 1964-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை பாரதிதாசன் எழுதினார். இது எத்தனை காட்சிகளை உடையது?

A) 15

B) 10

C) 17

D) 16

விளக்கம்: 1964-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை பாரதிதாசன் எழுதினார். அந்நாடகம் அமைதி என்னும் தலைப்பில் எழுதப்பட்டது. இந்நாடகம் 16 காட்சிகளை கொண்டது.

30) தேசிய நாடகப்பள்ளியின் மூலம் எந்த ஆண்டு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒருவார நாடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது?

A) 1977

B) 1978

C) 1979

D) 1980

விளக்கம்: தேசிய நாடகப்பள்ளியின் மூலம் 1977-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒருவார நாடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

31) எங்கிருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர்?

A) பிரேசில்

B) பிரான்ஸ்

C) அமெரிக்கா

D) இங்கிலாந்து

விளக்கம்: அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது. அங்கிருந்தபடியே திரைப்படத் தொழிலில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தக் காட்டினை ஹோலி வுட்(ஹோலி வுட் – புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஹாலிவுட் நகரமானது.

32) சாருலதா, வீடும் உலகமும் என்னும் இருநாவல்களோடு தொடர்புடையவர் யார்?

A) பானு அத்தையா

B) தாகூர்

C) தாதா சாகிப் பால்கே

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சாருலதா, வீடும் உலகமும் (கரே பைரே) என்னும் இருநாவல்கள் சத்யஜித் ரேவால் உருவாக்கப்பட்ட அரிய திரைப்படக்கலை வடிவங்கள் ஆகும்.

33) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடங்களில் பொருந்தாதது எது?

A) ஒளரங்சீப்

B) நந்தன் கதை

C) பசி

D) புறஞ்சேரி

விளக்கம்: இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்கள்:

1. இராமானுஜர்

2. இறுதி ஆட்டம்

3. கொங்கைத்தீ

4. ஒளரங்கசீப்

5. நந்தன் கதை

6. பசி

7. மழை

8. காலயந்திரங்கள்

9. புனரபி ஜனனம் புனரபி மரணம்

10. தர்மம்

11. போர்வை போர்த்திய உடல்கள்

புறஞ்சேரி என்பது சே.இராமானுஜம் எழுதிய நாடகமாகும்.

34) பல்கலையரங்கம் கீழ்க்காணும் எதற்காக தொடங்கப்பட்டது?

A) பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்.

B) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

C) பெண்களின் பல்வேறு பிரச்சனைகள்

D) எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள்

விளக்கம்: பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல் – பல்கலையரங்கம்.

35) காலம் காலமாக என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

36) கான்ஸ் உலகத் திரைப்பட விழா எப்போது தொடங்கப்பட்டது?

A) 1929

B) 1939

C) 1949

D) 1919

விளக்கம்: கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் 1939-இல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் 1949ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955ஆம் ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது.

37) எந்த ஆண்டு தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது?

A) 1959

B) 1961

C) 1971

D) 1981

விளக்கம்: 1961-ஆம் ஆண்டில் தாகூரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இரவீந்திர நாத தாகூர் தொடர்பான ஆவணப்படும் ஒன்றை சத்திய ஜித் ரே உருவாக்கினார்.

38) தாதாசாகேப் பால்கே விருது கீழ்க்காணும் எதற்காக வழங்கப்படுகிறது?

A) சிறந்த நடிகர்

B) சிறந்த நடிகை

C) சிறந்த இயக்குநர்

D) வாழ்நாள் சாதனையாளர்

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.

39) எந்த ஆண்டு கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ஆம் தேதியை உலக நாடக நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது?

A) 1939

B) 1958

C) 1961

D) 1977

விளக்கம்: சர்வதேச அரங்கேற்று நிறுவனம் பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961-இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ஆம் தேதியை உலக நாடக நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

40) போர்வை போர்த்திய உடல்கள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) நா.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) அம்பை

D) பிரபஞ்சன்

விளக்கம்: நா.முத்துசாமி- நாற்காலிக்காரர்

இந்திரா பார்த்தசாரதி- போர்வை போரத்திய உடல்கள்

அம்பை- பயங்கள்

பிரபஞ்சன்-முட்டை

41) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) வயிறு

B) மரபு

C) பாடலிபுத்திரம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வயிறு, மரபு, பாடலிபுத்திரம் ஆகிய நாடகங்கள் ஞான ராஜசேகரன் எழுதிய நாடகங்களாகும்.

42) சுவரொட்டிகள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

43) மகேந்திரனின் முதல் படம் முள்ளும் மலரும் ஆகும். இந்த புதினத்தை எழுதியவர் யார்?

A) உமாச்சந்திரன்

B) கோமல் சுவாமிநாதன்

C) பம்மல் சம்பந்தனார்

D) வடுவூர் துரைசாமி

விளக்கம்: மகேந்திரன் இலக்கிய வாசகராகவும் திரைநுட்பங்களை அறிந்தவராகவும் இருக்கின்றார். அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டவையே. அவரது முதல் படம் உமாச்சந்திரனின் முள்ளும் மலரும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

44) அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், எந்த பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர்?

A) அமேசான்

B) லண்டன்

C) வாசிங்டன்

D) லாஸ் ஏஞ்சல்ஸ்

விளக்கம்: அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது. அங்கிருந்தபடியே திரைப்படத் தொழிலில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தக் காட்டினை ஹோலி வுட்(ஹோலி வுட் – புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஹாலிவுட் நகரமானது.

45) கிடை என்ற கதை ஒருத்தி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இக்கதையை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) பாஸ்கர் சக்தி

D) பி.எச்.டேனியல்

விளக்கம்: கி.ராஜநாராயணன் – கிடை என்ற கதை ஒருத்தி என்ற திரைப்படமானது

ஜெயமோகன் – ஏழாம் உலகம் என்ற கதை நான் கடவுள் என்ற திரைப்படமானது

பாஸ்கர் சக்தி – அழகர்சாமியின் குதிரை என்ற கதை அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படமானது

பி.எச்.டேனியல் – எரியும் பனிக்காடு என்ற கதை பரதேசி என்ற திரைப்படமானது

46) ஒரு நாவலைத் திரைபடமாக்கும் முறையை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு நாவலைத் திரைப்படமாக்கும் முறையை இருவகையாக பிரிக்கலாம்.

முதலாவது, வாக்கியத்திற்கு வாக்கியம் மூலப்படைப்பைச் சார்ந்தே திரைப்படக்காட்சிகளை அமைப்பது.

இரண்டாவது முறை திரைப்படத்தின் சாத்தியக்கூறுகளை, பலத்தை உணர்ந்து சினிமா மொழியில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவது. நாவலாசிரியரின் மையக்கருத்தை உள்வாங்கி அதற்கேற்றபடி திரைக்கதையை அமைத்து அக்கருத்தைத் திரைப்படக் காட்சிகள் மூலம் வெளிக்கொணர்வது.

47) பொருத்துக.

அ. சிவப்பு- 1. காதல்

ஆ. கருநீலம்- 2. அபாயம்

இ. பச்சை- 3. தாராளம்

ஈ. இளஞ்சிவப்பு- 4. களங்கமின்மை

A) 3, 1, 2, 4

B) 4, 2, 1, 3

C) 1, 3, 4, 2

D) 2, 4, 3, 1

விளக்கம்: சிவப்பு- சினம், அபாயம், நெருப்பு

கருநீலம்- குளிர்ச்சி, களங்கமின்மை, பயபக்தி, அடிமை, வானம், கடல்

பச்சை- செல்வம், தாராளம், அமைதி, மகிழ்ச்சி, ஓய்வு

இளஞ்சிவப்பு- காதல், பாலுணர்வு

48) இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?

A) சத்திய ஜித் ரே

B) தாதா சாகிப் பால்கே

C) பானு அத்யா

D) அமிதாப் பச்சன்

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.

49) கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் எந்த ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது?

A) 1929

B) 1939

C) 1949

D) 1955

விளக்கம்: கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் 1949-ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955-ஆம் ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது

50) உந்திச்சுழி என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

51) கூற்று: சர்வதேச நாடக நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

காரணம்: ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: சர்வதேச அரங்கேற்று நிறுவனம் பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961-இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ஆம் தேதியை உலக நாடக நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

52) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்.

A) இராமாநுஜர்

B) இறுதி ஆட்டம்

C) கொங்கைத்தீ

D) முகப்போலிகள்

விளக்கம்: இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்கள்:

1. இராமாநுஜர்

2. இறுதி ஆட்டம்

3. கொங்கைத்தீ

4. ஒளரங்கசீப்

5. நந்தன் கதை

6. பசி

7. மழை

8. காலயந்திரங்கள்

9. புனரபி ஜனனம் புனரபி மரணம்

10. தர்மம்

11. போர்வை போர்த்திய உடல்கள்

முகப்போலிகள் என்பது சே.இராமானுஜம் எழுதிய நாடகமாகும்

53) ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படங்கள் மேடை நாடகங்களையும் நாடக நடிகர்களையுமே அடிப்படையாகக் கொண்டவை.

காரணம்: எழுதப்பட்ட கதைகள் நாடகமாக நடிக்கப்பட்டபோது அந்நாடகங்களைக் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதனை திரைப்படமாக்கினர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படங்கள் மேடை நாடகங்களையும் நாடக நடிகர்களையுமே அடிப்படையாகக் கொண்டவை. எழுதப்பட்ட கதைகள் நாடகமாக நடிக்கப்பட்டபோது அந்நாடகங்களைக் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதனை திரைப்படமாக்கினர்.

54) தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது ‘கருப்புத் தெய்வத்தைத் தேடி’ ஆகும். இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) மு.ராமசாமி

B) அ.ராமசாமி

C) கே.ஏ.குணசேகரன்

D) சே.இராமானுஜம்

விளக்கம்: மு.ராமசாமி மேடையேற்றிய ‘துர்க்கிர அவலம்’, சே.இராமானுஜத்தின் ‘கறுப்புத் தெய்வத்தைத் தேடி’ போன்றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. தமிழ் நாடகங்களைவிடவும் மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின.

55) முதல் தேசிய திரைப்பட விருதினை பெற்ற திரைப்படம் எது?

A) மலைக்கள்ளன்

B) எதிர்நீச்சல்

C) சர்வர் சுந்தரம்

D) செக்குமாடுகள்

விளக்கம்: இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது. இவ்விருது வழங்கும் அமைப்பு 1954-ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்திய திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் 1973 முதல் இவ்விருதுகளை வழங்கி வருகிறது. முதல் தேசிய விருதினை பெற்ற தமிழ்ப்படம் மலைக்கள்ளன் ஆகும்.

56) கூற்று: திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் நகரம் ஹாலிவுட் ஆகும்.

காரணம்: திரைப்படக்கலைஞர்களுக்கு புகலிடம் தந்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது. அங்கிருந்தபடியே திரைப்படத் தொழிலில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தக் காட்டினை ஹோலி வுட்(ஹோலி வுட் – புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஹாலிவுட் நகரமானது.

57) கூற்றுகளை ஆராய்க.

1. உரைநடை, வசனம், மேடையமைப்பு, ஒளி அமைப்பு போன்ற அரங்கக்கூறுகள் இணைக்கப்பட்டதால் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

2. இவ்வகை அமைப்புகளோடு கூடிய அரங்கினைப் படச்சட்டக அரங்கம் என்பர். இதனையே பாதல் சர்க்கார் இரண்டாம் அரங்கு எனச் சுட்டிக்காட்டினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உரைநடை, வசனம், மேடையமைப்பு, ஒளி அமைப்பு போன்ற அரங்கக்கூறுகள் இணைக்கப்பட்டதால் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

2. இவ்வகை அமைப்புகளோடு கூடிய அரங்கினைப் படச்சட்டக அரங்கம் என்பர். இதனையே பாதல் சர்க்கார் இரண்டாம் அரங்கு எனச் சுட்டிக்காட்டினார்.

58) முட்டை, அகல்யா போன்ற நாடகங்களை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) ஜெயந்தன்

C) பிரபஞ்சன்

D) ஞான ராஜசேகரன்

விளக்கம்: பிரபஞ்சன் எழுதிய நாடகங்கள்:

1. முட்டை

2. அகல்யா

59) இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதாசாகிப் பால்கே வழங்கப்படும். இவ்விருது வழங்கும் அமைப்பு எப்போது நிறுவப்பட்டது?

A) 1978

B) 1973

C) 1954

D) 1969

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.

60) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) சர்வர் சுந்தரம்

B) நீர்க்குமிழி

C) எதிர்நீச்சல்

D) செக்குமாடுகள்

விளக்கம்: சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல் – கே.பாலசந்தர்.

கோமல் சுவாமிநாதன் – தண்ணீர் தண்ணீர், செக்குமாடுகள்

61) கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இவ்விழாவில் எந்த ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது?

A) 1939

B) 1927

C) 1949

D) 1955

விளக்கம்: கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்படவிழா நடைபெறவில்லை. மீண்டும் 1949-ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955-ஆம் ஆண்டிலிருந்து தங்கப்பனை விருது வழங்கப்படுகிறது.

62) எந்த நூல் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது?

A) அகத்தியம்

B) நன்னூல்

C) தொல்காப்பியம்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: தொல்காப்பியம் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அத்திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின் போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர். நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குருந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

63) கூற்றுகளை ஆராய்க.

1. தொடக்கக்காலத் தமிழ்ப்படங்கள் புராணகத்கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

2. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் வரவேற்பு பெற்ற இராமாயண, மகாபாரத கதைகளே படமாக்கப்பட்டன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தொடக்கக்காலத் தமிழ்ப்படங்கள் புராணகத்கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

2. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் வரவேற்பு பெற்ற இராமாயண, மகாபாரத கதைகளே படமாக்கப்பட்டன.

64) தங்கர் பச்சான் கல்வெட்டு என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய படம் எது?

A) அழகி

B) சொல்லமறந்த கதை

C) அம்மாவின் கைப்பேசி

D) ஒன்பது ரூபாய் நோட்டு

விளக்கம்: சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் தங்கர்பச்சான் காட்டிய அக்கறை அதிகம். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் இவர். தமது கல்வெட்டு என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு அழகி படத்தை இயக்கினார்.

65) பல்லக்குத்தூக்கிகள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) அறந்தை நாராயணன்

B) ஞாநி

C) அ.ராமசாமி

D) அ.மங்கை

விளக்கம்: அறந்தை நாராயணன் – மூர் மார்க்கெட்

ஞாநி- பலூன், நாங்கள்

அ.ராமசாமி – பல்லக்குத்தூக்கிகள்

அ.மங்கை- மௌனக்குரல் குழுவை நடத்தியவர்.

66) கூற்று: நவீன நாடகக்குழுக்கள் மரபார்ந்த கலைகளைக் கையிலெடுக்கத் தொடங்கின.

காரணம்: மத்திய சங்கீத நாடக அகாதெமி இளம் நாடக இயக்குநர்களையும், நாடக குழுக்களையும் ஊக்குவிக்க நிதி வழங்கியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: மத்திய சங்கீத நாடக அகாதெமி இளம் நாடக இயக்குநர்களையும், நாடக குழுக்களையும் ஊக்குவிக்க நிதி வழங்கியது. ஒவ்வோர் ஆண்டும் நவீன நாடகத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வந்ததோடு, மரபார்ந்த அரங்க வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. பிறமொழி நாடகங்களோடு ஒப்பிட்டுப் பேசவும் போட்டிபோடவும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. இதன் காரணமாக நவீன நாடகக்குழுக்கள் மரபார்ந்த கலைகளைக் கையிலெடுக்கத் தொடங்கின.

67) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க?

A) தஞ்சை- பல்கலை அரங்கம்

B) காந்தி கிராமத்தில்- தளிர்.

C) திருச்சி- நாடகச் சங்கம்

D) திருவண்ணாமலை- தீட்சண்யா

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா.

68) அகில இந்திய அளவில் _______________________ என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது?

A) உலக நாடகக் கழகம்

B) தேசிய நாடகப் பள்ளி

C) பாரதீய நாட்டியகஸ்

D) சங்கீத நாடக அகாதெமி

விளக்கம்: அகில இந்திய அளவில் பாரதீய நாட்டியகஸ் என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதெமியும் நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப்பள்ளியும் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து உலக நாடகக் கழகமும் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்புகள் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

69) ஜே.ஆர்.ரங்கராஜு என்பவர் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையவர்?

A) மேனகா

B) டம்பாச்சாரி

C) ராஜாம்பாள்

D) இழந்த காதல்

விளக்கம்: வடுவூர் துரைசாமி – மேனகா

காசி விஸ்வநாதர்- டம்பாச்சாரி

ஜே.ஆர்.ரங்கராஜு- ராஜாம்பாள்

பம்மல் சம்பந்தனார்- இழந்த காதல்

70) விறகுவெட்டிகள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

71) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) துர்க்கிர அவலம்

B) சாபம் விமோசனம்?

C) புரட்சிப்புயல்

D) ஆபுத்திரன்

விளக்கம்: மு.இராமசுமாமி எழுதிய நாடகங்கள்:

1. துர்க்கிர அவலம்

2. சாபம் விமோனம்?

3. புரட்சிக்கவி

4. ஆபுத்திரன்.

72) தாதாசாகிப் பால்கே விருதை முதலில் பெற்றவர் யார்?

A) தேவிகா ராணி

B) சத்திய ஜித் ரே

C) பானு அத்யா

D) அமிதாப் பச்சன்

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது. தேவிகா ராணி 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் இவ்விருதைப் பெற்றார். தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும், 2010-ஆம் ஆண்டு கே.பாலசந்தரும் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

73) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான தேசிய திரைப்பட விருது எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது?

A) 1954

B) 1969

C) 1952

D) 1973

விளக்கம்: இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது. இவ்விருது வழங்கும் அமைப்பு 1954-ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்திய திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் 1973 முதல் இவ்விருதுகளை வழங்கி வருகிறது.

74) ஹோலி வுட் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) புனிதமான காடு

B) திரைப்பட இடம்

C) வட இந்திய திரைப்படம்

D) புதுவகை திரைப்படம்

விளக்கம்: அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது. அங்கிருந்தபடியே திரைப்படத் தொழிலில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தக் காட்டினை ஹோலி வுட்(ஹோலி வுட் – புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஹாலிவுட் நகரமானது.

75) நினைக்கப்படும் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) ஜெயந்தன்

விளக்கம்: ஜெயந்தன் எழுதிய நாடகங்கள்:

1. மனுசா மனுசா

2. நினைக்கப்படும்

76) நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குருந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கும் நூல் எது?

A) பரிபாடல்

B) தொல்காப்பியம்

C) மலைபடுகடாம்

D) கலித்தொகை

விளக்கம்: தொல்காப்பியம் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அத்திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின் போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர். நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குருந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

77) கூட்டுக்குரல் என்ற குழு கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்

B) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

C) பெண்களின் பல்வேறு பிரச்சனைகள்

D) எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள்

விளக்கம்: பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்- பல்கலையரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு- கூட்டுக்குரல்

பெண்களின் பல்வேறு பிரச்சனைகள்- மௌனக்குரல்

எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள் – சென்னைக் கலைக்குழு

78) முள்ளும் மலரும்என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா- சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்

79) வண்டிச்சோடை என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

80) பயங்கள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) நா.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) அம்பை

D) பிரபஞ்சன்

விளக்கம்: நா.முத்துசாமி- நாற்காலிக்காரர்

இந்திரா பார்த்தசாரதி- போர்வை போரத்திய உடல்கள்

அம்பை- பயங்கள்

பிரபஞ்சன்- முட்டை

81) தமிழ்த் திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தியவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) நடராஜர்

D) எல்லிஸ் ஆர்.டங்கன்

விளக்கம்: எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார். ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

82) மைனர் ராஜாமணி என்னும் புதினம் திரைப்படமானது. இப்புதினம் யாருடையது?

A) ஜே.ஆர்.ரங்கராஜு

B) வடுவூர் துரைசாமி

C) கல்கி

D) ராஜாஜி

விளக்கம்: ஜே.ஆர்.ரங்கராஜு – சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

83) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது ஆகும். இவ்விருது வழங்கும் அமைப்பு எப்போது நிறுவப்பட்டது?

A) 1954

B) 1969

C) 1996

D) 1952

விளக்கம்: இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது. இவ்விருது வழங்கும் அமைப்பு 1954-ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்திய திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் 1973 முதல் இவ்விருதுகளை வழங்கி வருகிறது.

84) மனுசா மனுசா என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) ஜெயந்தன்

விளக்கம்: ஜெயந்தன் எழுதிய நாடகங்கள்:

1. மனுசா மனுசா

2. நினைக்கப்படும்

85) ஹோலிவுட் என்ற காடு எந்த நாட்டிலுள்ளது?

A) இங்கிலாந்து

B) பிரான்சு

C) அமெரிக்கா

D) பிரேசில்

விளக்கம்: அமெரிக்காவில் இருந்த பழைமைவாதிகளாலும் மதப்பற்றுள்ளவர்களாலும் பல இன்னல்களுக்கு ஆளான திரைப்படக் கலைஞர் அனைவரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த அடர்ந்த காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். அந்தக் காடே அவர்களுக்குப் புகலிடம் தந்தது. அங்கிருந்தபடியே திரைப்படத் தொழிலில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்க்கை அளித்த அந்தக் காட்டினை ஹோலி வுட்(ஹோலி வுட் – புனிதமான காடு) என்று பெயரிட்டுப் புகழ்ந்து, அதனையே தங்கள் வாழ்விடமாகக் கருதினர். அதுவே இன்று திரைப்படத் துறையில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஹாலிவுட் நகரமானது.

86) ஆஸ்கர் விழாவை அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இது எப்போது நிறுவப்பட்டது?

A) 1939

B) 1927

C) 1903

D) 1929

விளக்கம்: ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஆஸ்கார் விழாவை 1927-இல் நிறுவப்பட்ட அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது.

87) பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அந்த அந்த திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின் போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர் என்று குறிப்பிடும் நூல் எது?

A) பரிபாடல்

B) தொல்காப்பியம்

C) மலைபடுகடாம்

D) கலித்தொகை

விளக்கம்: தொல்காப்பியம் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அத்திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின் போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர். நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குருந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

88) உலக நாடக நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) மார்ச் 27

B) மார்ச் 21

C) மார்ச் 29

D) மார்ச் 24

விளக்கம்: சர்வதேச அரங்கேற்று நிறுவனம் பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ஆம் தேதியை உலக நாடக நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

89) ஏழாம் உலகம் என்ற கதை நான் கடவுள் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இக்கதையை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) பாஸ்கர் சக்தி

D) பி.எச்.டேனியல்

விளக்கம்: கி.ராஜநாராயணன் – கிடை என்ற கதை ஒருத்தி என்ற திரைப்படமானது

ஜெயமோகன் – ஏழாம் உலகம் என்ற கதை நான் கடவுள் என்ற திரைப்படமானது

பாஸ்கர் சக்தி – அழகர்சாமியின் குதிரை என்ற கதை அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படமானது

பி.எச்.டேனியல் – எரியும் பனிக்காடு என்ற கதை பரதேசி என்ற திரைப்படமானது

90) ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டது. இந்த நாவலை எழுதியவர் யார்?

A) தங்கர் பச்சான்

B) நாஞ்சில் நாடன்

C) மகேந்திரன்

D) ஜெயகாந்தன்

விளக்கம்: சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் தங்கர்பச்சான் காட்டிய அக்கறை அதிகம். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் இவர். இவர் தாம் எழுதிய ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் அம்மாவின் கைப்பேசி நாவல்களை அதேபெயரில் படமாக்கினார்.

91) இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எது?

A) உலக நாடகக் கழகம்

B) தேசிய நாடகப் பள்ளி

C) பாரதீய நாட்டியகஸ்

D) மத்திய சங்கீத நாடக அகாதெமி

விளக்கம்: அகில இந்திய அளவில் பாரதீய நாட்டியகஸ் என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதெமியும் நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப்பள்ளியும் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து உலக நாடகக் கழகமும் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்புகள் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

92) நற்றுணையப்பன் அல்லது கடவுள் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

93)கூற்று: எழுபதுகளின் இறுதியில் நவீன நாடகங்கள் தோற்றம் பெறுவதற்கான சூழல் உருவாகத் தொடங்கியது.

காரணம்: கவிதை, சிறுகதை போன்றவற்றில் நவீன சிந்தனைகளையும் வடிவங்களையும் பகுத்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை போல நாடகத்திலும் இதே போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: இலக்கியத்தின் பிற துறைகளான கவிதை, சிறுகதை போன்றவற்றில் நவீன சிந்தனைகளையும் வடிவங்களையும் பகுத்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை போல நாடகத்திலும் இதே போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் எழுபதுகளின் இறுதியில் நவீன நாடகங்கள் தோற்றம் பெறுவதற்கான சூழல் உருவாகத் தொடங்கியது.

94) டம்பாச்சாரி என்ற கதையை எழுதியவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) ஜே.ஆர்.ரங்கராஜு

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: வடுவூர் துரைசாமி – மேனகா

காசி விஸ்வநாதர்- டம்பாச்சாரி

ஜே.ஆர்.ரங்கராஜு- ராஜாம்பாள்

பம்மல் சம்பந்தனார்- இழந்த காதல்

95) இந்தியாவின் முதல் பேசும்படம் எது?

A) ஆலம் ஆரா

B) கீசகவதம்

C) காளிதாஸ்

D) ராஜா ஹரிசந்திரா

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

96) உதிரிப் பூக்கள் என்ற என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா – சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்

97) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது எது?

A) தாதாசாகிப் பால்கே விருது

B) தேசிய திரைப்பட விருது

C) சிறந்த இயக்குநர் விருது

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது. இவ்விருது வழங்கும் அமைப்பு 1954-ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது.

98) எப்போது கே.பாலசந்தர் தாதாசாகிப் பால்கே விருதை பெற்றார்?

A) 2010

B) 2008

C) 2011

D) 2012

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது. தேவிகா ராணி 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் இவ்விருதைப் பெற்றார். தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும், 2010ஆம் ஆண்டு கே.பாலசந்தரும் இவ்விருதினைப் பெற்றுள்ளனார்.

99) ஆஸ்கார் விருது எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது?

A) 1927

B) 1939

C) 1929

D) 1917

விளக்கம்: ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஆஸ்கார் விழாவை 1927-இல் நிறுவப்பட்ட அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இவ்விருது 1929 முதல் வழங்கப்பட்டு வருகிறது

100) சர்வதேச அரங்கேற்று நிறுவனம் எங்கு செயல்பட்டு வருகின்றது?

A) அமெரிக்கா

B) பின்லாந்து

C) இங்கிலாந்து

D) பிரான்சு

விளக்கம்: சர்வதேச அரங்கேற்று நிறுவனம் பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961-இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ஆம் தேதியை உலக நாடக நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

101) கூற்று: இருபதாம் நூற்றாண்டின் இறுதி 26 ஆண்டுகள், தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தன.

காரணம்: சிறுபத்திரிகைகளில் எழுதிய சிறுகதை ஆசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறையச் சார்ந்த பேராசிரியர்கள், பொதுவுடைமைக் கருத்துகளின்பால் ஈடுபாடுகொண்ட எழுத்தாளர்கள் முதலானோர் நவீன நாடகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சிறுபத்திரிகைகளில் எழுதிய சிறுகதை ஆசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறையைச் சார்ந்த பேராசிரியர்கள், பொதுவுடைமைக் கருத்துகளின்பால் ஈடுபாடுகொண்ட எழுத்தாளர்கள் முதலானோர் நவீன நாடகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் இறுதி 26 ஆண்டுகள், தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தன.

102) ஏவம் இந்திரஜித் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

103) பல்வேறு கலைகளும் சங்கமிக்கும் இடம் திரைப்படம். இதன் நுட்பத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர்கள் யார்?

A) மகேந்திரன், பாலு மகேந்திரா

B) ராஜசேகரன், ருத்ரய்யா

C) மகேந்திரன், ருத்ரய்யா

D) ராஜசேகரன், பாலுமகேந்திரா

விளக்கம்: பல்வேறு கலைகளும் சங்கமிக்கும் இடம் திரைப்படம். இதன் நுட்பத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர்கள் மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா ஆவார்.

104) கல்யாணப் பரிசு படத்தின் மூலம் புகழ்பெற்று, நெஞ்சில் ஒர் ஆலயம், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியவர் யார்?

A) ஸ்ரீதர்

B) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

C) பீம்சிங்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: ஸ்ரீதர், கல்யாணப் பரிசு படத்தின் மூலம் புகழ்பெற்று, நெஞ்சில் ஒர் ஆலயம், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியவர்.

105) 1970களில் தமிழ்த் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இதற்கான களமாக திகழ்ந்தது எது?

A) புதினம்

B) சிறுகதை

C) கதை

D) இலக்கியம்

விளக்கம்: 1970களில் தமிழ்த் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. எப்போதும் வசனங்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத்தைக் காட்சிப் பூர்வமாக அணுகியவர்கள் மகேந்திரனும் பாலு மகேந்திராவும். அதற்கான களத்தை இலக்கியத்தில் இருந்து தேர்ந்தெடுத்தனர்.

106) திரைப்படத்தில் மஞ்சள் என்னும் வண்ணம் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது அல்ல?

A) இன்றியமையாமை

B) சூரியன்

C) பெருமகிழ்ச்சி

D) வேடிக்கை

விளக்கம்: மஞ்சள் – உற்சாகம், நல்லெண்ணம், பெருமகிழ்ச்சி, சூரியன், இன்றியமையாமை.

ஆரஞ்சு – வேடிக்கை, விளையாட்டு, செழிப்பு, நகைச்சுவை.

107) தர்மம், போர்வை போர்த்தி உடல்கள் போன்ற நாடகங்களை எழுதியவர் யார்?

A) பிரளயன்

B) எம்.டி.முத்து குமாரசாமி

C) இன்குலாப்

D) இந்திரா பார்த்தசாரதி

விளக்கம்: இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்கள்:

1. இராமாநுஜர்

2. இறுதி ஆட்டம்

3. கொங்கைத்தீ

4. ஒளரங்கசீப்

5. நந்தன் கதை

6. பசி

7. மழை

8. காலயந்திரங்கள்

9. புனரபி ஜனனம் புனரபி மரணம்

10. தர்மம்

11. போர்வை போர்த்திய உடல்கள்

108) எப்போது மதுரையில் முதல் நாடக விழாவை நிஜநாடக இயக்கம் நடத்தியது?

A) 1988

B) 1978

C) 1987

D) 1977

விளக்கம்: தென்மண்டல நாடக விழாவில் நிஜநாடக இயக்க நாடகமான சாபம் விமோனம்? அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் முதல் நாடக விழாவை நிஜநாடக இயக்கம் 1988-ஆம் ஆண்டு நடத்தியது.

109) ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

A) சத்தியஜித் ரே

B) பானு அத்தையா

C) ஏ.ஆர்.ரகுமான்

D) பாலையா

விளக்கம்: ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஆஸ்கார் விழாவை 1927-இல் நிறுவப்பட்ட அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இவ்விருது 1929 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா ஆவார்.

110) டம்பாச்சாரி என்ற கதையை எழுதியவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) ஜே.ஆர்.ரங்கராஜு

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: வடுவூர் துரைசாமி – மேனகா

காசி விஸ்வநாதர்- டம்பாச்சாரி

ஜே.ஆர்.ரங்கராஜு- ராஜாம்பாள்

பம்மல் சம்பந்தனார்- இழந்த காதல்

111) மகேந்திரன் இலக்கியத்தைத் திரைப்படமாகப் பெரும் ஆளுமையோடு உருவாக்கியவர். குறிப்பாக அவரது எந்த படம் தமிழ்த்திரைப்படத்தின் தரத்தை உயர்த்தியது?

A) உதிரிப்பூக்கள்

B) பூட்டாத பூட்டுகள்

C) முள்ளும் மலரும்

D) சாசனம்

விளக்கம்: முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், சாசனம் ஆகியவை மகேந்திரனின் திரைப்படமாகும். இதில் உதிரிப்பூக்கள் தமிழ்த் திரைப்படத்தின் தரத்தை உயர்த்தியது எனலாம்.

112) திரைப்படம் ஒரு காட்சி மொழி என்பதை உணர்ந்தவர் யார்?

A) மகேந்திரன்

B) பாலு மகேந்திரா

C) ருத்ரய்யா

D) ராஜசேகரன்

விளக்கம்: திரைப்படம் ஒரு காட்சி மொழி என்பதை உணர்ந்தவர் பாலு மகேந்திரா ஆவார். அவர் இயக்கிய சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

113) மௌனக்குழுவை நடத்தியவர் அ.மங்கை. இது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்

B) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

C) பெண்களின் பல்வேறு பிரச்சனைகள்

D) எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள்

விளக்கம்: பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல் – பல்கலையரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – கூட்டுக்குரல்

பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் – மௌனக்குரல்

114) பம்மல் சம்பந்தனார் என்பவர் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையவர்?

A) மேனகா

B) டம்பாச்சாரி

C) ராஜாம்பாள்

D) இழந்த காதல்

விளக்கம்: வடுவூர் துரைசாமி – மேனகா

காசி விஸ்வநாதர்- டம்பாச்சாரி

ஜே.ஆர்.ரங்கராஜு- ராஜாம்பாள்

பம்மல் சம்பந்தனார்- இழந்த காதல்

115) கூற்று: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் நேரடி தமிழ் நவீன நாடகத்திற்கான முயற்சிகள் நாடக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டன.

காரணம்: தமிழ் நாடகங்களைவிடவும் மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெக்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழ் நாடகங்களை விடவும் மொழியாக்கவும் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின. இதன்பின் நேரடி தமிழ் நவீன நாடகத்திற்கான முயற்சிகள் நாடக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டன.

116) கூத்துப்பட்டறை தொன்மையான தெருக்கூத்துக் கலையை நவீனமாக்கி, மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னையில் 1977-ஆம் ஆண்டு யாரால் உருவாக்கப்பட்டது?

A) மகேந்திரன்

B) பாலு மகேந்திரா

C) பம்மல் சம்பந்தனார்

D) நா.முத்துசாமி

விளக்கம்: கூத்துப்பட்டறை தொன்மையான தெருக்கூத்துக் கலையை நவீனமாக்கி, மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னையில் 1977-ஆம் ஆண்டு ந.முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, ஜெர்மனியின் மேக்ஸ்முல்லர் பவன் போன்ற அமைப்புகளின் ஆதரவில் இவ்வமைப்பு அரங்கச் செயல்பாடுகளை முன்னெடுத்தது.

117) வை.மு.கோதைநாயகி அம்மாளின் தயாநிதி என்னும் புதினம் எந்த பெயரில் திரைப்படமாக்கப்பட்டது?

A) தயாநிதி

B) சித்தி

C) அனாதைப்பெண்

D) செக்குமாடுகள்

விளக்கம்: மௌனப்படக் காலத்திலேயே வை.மு.கோதைநாயகி அம்மாளின் அனாதைப் பெண் புதினம் அதே பெயரில் படமாக்கப்பட்டது. இதே புதினம் பேசும் படமாகவும் எடுக்கப்பட்டது. இவரின் தயாநிதி புதினம் சித்தி என்னும் திரைப்படமானது.

118) சவுக்கடி சந்திரகாந்தா என்னும் புதினம் திரைப்படமானது. இப்புதினம் யாருடையது?

A) ஜே.ஆர்.ரங்கராஜு

B) வடுவூர் துரைசாமி

C) கல்கி

D) ராஜாஜி

விளக்கம்: ஜே.ஆர்.ரங்கராஜு – சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

119) பூட்டாத பூட்டுகள் என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா – சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்

120) எந்த படம் தங்கர்பச்சான் என்ற ஆளுமையைத் திரையுலகில் பரவலாக அறியசெய்தது?

A) அழகி

B) சொல்ல மறந்த கதை

C) ஒன்பது ரூபாய் நோட்டு

D) அம்மாவின் கைப்பேசி

விளக்கம்: சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் தங்கர்பச்சான் காட்டிய அக்கறை அதிகம். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இவரின் அழகி என்ற திரைப்படம் தங்கர்பச்சான் என்ற ஆளுமையைத் திரையுலகில் பரவலாக அறியசெய்தது.

121) அழகர்சாமியின் குதிரை என்ற கதை அழகர்சாமியின் குதிரை என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்துள்ளது. இக்கதையை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) பாஸ்கர் சக்தி

D) பி.எச்.டேனியல்

விளக்கம்: கி.ராஜநாராயணன் – கிடை என்ற கதை ஒருத்தி என்ற திரைப்படமானது

ஜெயமோகன் – ஏழாம் உலகம் என்ற கதை நான் கடவுள் என்ற திரைப்படமானது

பாஸ்கர் சக்தி – அழகர்சாமியின் குதிரை என்ற கதை அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படமானது

பி.எச்.டேனியல் – எரியும் பனிக்காடு என்ற கதை பரதேசி என்ற திரைப்படமானது.

122) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்களில் பொருந்தாத எது?

A) மழை

B) காலயந்திரங்கள்

C) நூறு குறுநாடகங்கள்

D) புனரபி ஜனனம் புனரபி மரணம்

விளக்கம்: இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்கள்:

1. இராமாநுஜர்

2. இறுதி ஆட்டம்

3. கொங்கைத்தீ

4. ஒளரங்கசீப்

5. நந்தன் கதை

6. பசி

7. மழை

8. காலயந்திரங்கள்

9. புனரபி ஜனனம் புனரபி மரணம்

10. தர்மம்

11. போர்வை போர்த்திய உடல்கள்

நூறு குறுநாடகங்கள் என்பது அ.ராமசாமி எழுதிய நாடகமாகும்.

123) கூற்று: இலக்கியம் திரைப்படமாக உருவானது.

காரணம்: சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாக எழுத்தாளர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகம் திரைப்படம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தாலும், அவை அனைத்து மக்களிடமும் சென்று சேருவதில்லை. அவ்விலக்கியம் சொல்லவரும் கருத்தை மக்களிடம் கொண்டு செல்லத் திரைப்பட ஊடகமே பெருந்துணையாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலக்கியம் திரைப்படமாக உருவானது. மேற்கத்திய நாடுகளிலும்கூட, திரைப்படத்திற்கான கதையை இலக்கியத்தில் தேர்ந்தெடுக்கின்றனர்.

124) மேனகா என்ற கதையை எழுதியவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) ஜே.ஆர்.ரங்கராஜு

D) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்: வடுவூர் துரைசாமி – மேனகா

காசி விஸ்வநாதர்- டம்பாச்சாரி

ஜே.ஆர்.ரங்கராஜு- ராஜாம்பாள்

பம்மல் சம்பந்தனார்- இழந்த காதல்

125) ச.தமிழ்ச்செல்வன் எழுதிய வெயிலோடு போய் என்ற சிறுகதையை சசி என்பவர் எந்த பெயரில் படமாக்கினார்?

A) பூ

B) விசாரணை

C) தடயம்

D) அழகி

விளக்கம்: சசி இயக்கிய பூ என்னும் திரைப்படம் எதார்த்த வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததுதானே. ச.தமிழ்ச்செல்வன் எழுதிய வெயிலோடு போய் என்ற சிறுகதையைச் சசி பூ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். இக்கதை எளிமையான பெண்ணின் பேரன்பைப் பேசுகிறது.

126) நாட்டார் கலைகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படும் நாட்டார் கலைகளை அதன் தன்மைக்கேற்ப,

1. சடங்குசார் கலைகள்

2. பாடல்சார் கலைகள்

3. கருவிசார் கலைகள்

என வகைப்படுத்துவர்.

127) துக்ளக் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

128) ‘கண்ணாடிக் கலைக்குழு’ நாடக அமைப்பு கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) தாழ்த்தப்பட்டோர்

B) பெண்கள்

C) திருநங்கைகள்

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: 2000-க்குப் பிறகு விளிம்புநிலைக் கருத்துக்களோடு மேடை ஏறிய நாடகங்களான ஆஷா பாரதியின் நாடகங்கள் திருநங்கைகள் குறித்துப் பேசின. அதற்கெனவே ‘கண்ணாடிக் கலைக்குழு’ நாடக அமைப்பு செயல்பட்டது.

129) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க?

A) சென்னை- ஆடுகளம்

B) மதுரை- சுதேசி.

C) பாண்டிச்சேரி- கூட்டுக்குரல்,

D) தஞ்சை- தலைக்கோல்

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா

130) யாருடைய நாடகங்கள் வேளாண்மைக் குடிகளையும் பழங்குடி மனிதர்களையும் காட்சிப்படுத்தின?

A) வேலு சரவணன்

B) ரவியண்ணா

C) முருகபூபதி

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: குழந்தைகள் நாடகக் செயல்பாட்டாளர்களாக வேலு சரவணன், ரவியண்ணா போன்றோரைக் குறிப்பிடலாம். முருகபூபதியின் நாடகங்கள் காட்சிப் படிமங்களின் வழியாக நிலமற்ற வேளாண்மைக் குடிகளையும் பழங்குடி மனிதர்களையும் காட்சிப்படுத்தின. செம்மூதாய், வனத்தாதி, தேகவயல், பித்த நிலத்தின் பொம்மைகள் போன்றவை குறிப்பிடத்தகுந்த நாடகங்களாகும்.

131) அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்டின்

விளக்கம்: அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் ஆவார்.

132) நிஜநாடக இயக்கத்தை எந்த ஆண்டு மதுரையில் மு.இராசுவாமி தொடங்கினார்?

A) 1977

B) 1978

C) 1979

D) 1980

விளக்கம்: நிஜ நாடக இயக்கத்தை 1978-ஆம் ஆண்டு மதுரையில் மு.இராமசுவாமி தொடங்கினார். தொடக்கத்தில் எளிமையான திறந்தவெளி நாடகங்களை மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருந்த இவ்வியக்கம் பின்னாளில் மேடைகளில் தங்கள் நாடகங்கைள அரங்கேற்றியது.

133) நீர்க்குமிழி என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) கே.பாலச்சந்தர்

B) கோமல் சுவாமிநாதன்

C) பம்மல் சம்பந்தனார்

D) வடுவூர் துரைசாமி

விளக்கம்: சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல் – கே.பாலசந்தர்.

கோமல் சுவாமிநாதன் – தண்ணீர் தண்ணீர், செக்குமாடுகள்

134) கூற்று: 1990களின் தொடக்கத்தில் நாடகத்துறையில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு உருவாவதற்கான சூழல் தோன்றியது.

காரணம்: சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்பட்டனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: சமூக மாற்றத்திற்கேற்ப கலை-இலக்கிய வடிவங்களின் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு 1990களின் தொடக்கத்தில் உருவானது. அதனால் நாடகத்துறையில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு உருவாவதற்கான சூழல் தோன்றியது.

135) நாற்காலிக்காரர் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) நா.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) அம்பை

D) பிரபஞ்சன்

விளக்கம்: நா.முத்துசாமி- நாற்காலிக்காரர்

இந்திரா பார்த்தசாரதி- போர்வை போரத்திய உடல்கள்

அம்பை- பயங்கள்

பிரபஞ்சன்-முட்டை

136) தியாகபூமி என்னும் புதினம் திரைப்படமானது. இப்புதினம் யாருடையது?

A) ஜே.ஆர்.ரங்கராஜு

B) வடுவூர் துரைசாமி

C) கல்கி

D) ராஜாஜி

விளக்கம்: ஜே.ஆர்.ரங்கராஜு – சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி – மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

137) சாசனம் என்ற என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா – சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்

138) கூற்று: ‘பரீக்ஷா’ என்னும் நாடகக்குழு ஞாநியால் 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

காரணம்: நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டதால் இக்குழு ‘பரீக்ஷா’ என்னும் பெயரைப் பெற்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: ‘பரீக்ஷா’ என்னும் நாடகக்குழு ஞாநியால் 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டதால் இக்குழு ‘பரீக்ஷா’ என்னும் பெயரைப் பெற்றது.

139) யாருடைய படங்களில், ஒரு காட்சியை அழகுபடுத்த, அதன் கருத்தைப் பார்வையாளனுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்?

A) மகேந்திரன்

B) பாலுமகேந்திரா

C) ராஜசேகரன்

D) ருத்ரய்யா

விளக்கம்: பாலு மகேந்திராவின் படங்களில் ஒரு காட்சியை அழகுபடுத்த, அதன் கருத்தைப் பார்வையாளனுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர். தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளம் காட்டுவதோடு பல படங்களுக்குத் திரைக்கதையையும் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.

140) எந்த ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை பாரதிதாசன் எழுதினார்?

A) 1946

B) 1949

C) 1954

D) 1964

விளக்கம்: 1964-ஆம் ஆண்டு ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகத்தை பாரதிதாசன் எழுதினார்.

141) வழக்கமான திரைப்படங்களில் இடம்பெறும் நடனத்தையும் பாட்டையும் தவிர்த்து தான் எழுத்தில் படைத்த உலகை, திரைப்படத்தில் காட்ட முயன்ற இலக்கிய எழுத்தாளர் யார்?

A) அகிலன்

B) கொத்தமங்கலம் சுப்பு

C) பாலு மகேந்திரா

D) ஜெயகாந்தன்

விளக்கம்: ஜெயகாந்தன் வழக்கமான திரைப்படங்களில் இடம்பெறும் நடனத்தையும் பாட்டையும் தவிர்த்து தான் எழுத்தில் படைத்த உலகை, திரைப்படத்தில் காட்ட முயன்ற இலக்கிய எழுத்தாளர் ஆவார்.

142) வேலைக்காரி என்னும் புதினம் திரைப்படமாக வெளிவந்தது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) கே.ஆர்.ரங்கராஜு

C) வடுவூர் துரைசாமி

D) கல்கி

விளக்கம்: அறிஞர் அண்ணா – வேலைக்காரி

கே.ஆர்.ரங்கராஜு- சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி

143) தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படும் நாட்டார் அரங்கக் கலைகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படும் நாட்டார் அரங்கக் கலைகள் அதன் தன்மைக்கேற்ப,

1. சடங்குசார் கலைகள்

2. பாடல்சார் கலைகள்

3. கருவிசார் கலைகள்

என வகைப்படுத்துவர்.

144) கூற்று: இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரிய நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வக்குப் பெற்றன.

காரணம்: உரைநடை, வசனம், மேடையமைப்பு, ஒளி அமைப்பு போன்ற அரங்கக்கூறுகள் இணைக்கப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரிய நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வக்குப் பெற்றன. உரைநடை, வசனம், மேடையமைப்பு, ஒளி அமைப்பு போன்ற அரங்கக்கூறுகள் இணைக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றன.

145) கட்டியக்காரன் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) ந.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) சே.இராமானுஜம்

D) மு.இராமாசாமி

விளக்கம்: ந.முத்துசாமி எழுதிய நாடகங்கள்:

1. காலம் காலமாக

2. நாற்காலிக்காரர்

3. அப்பாவும் பிள்ளையும்

4. இங்கிலாந்து

5. சுவரொட்டிகள்

6. உந்திச்சுழி

7. கட்டியக்காரன்

8. விறகுவெட்டிகள்

9. வண்டிச்சோடை

10. நற்றுணையப்பன் அல்லது கடவுள்.

146) கூற்று: முதல் மற்றும் இரண்டாம் வகை அரங்குகள் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்கின.

காரணம்: 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கிலும் மக்களின் சிந்தனையின் வளர்ச்சிக்கேற்ப நாடகங்கள் புதுவடிவம் பெற்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கிலும் மக்களின் சிந்தனையின் வளர்ச்சிக்கேற்ப நாடகங்கள் புதுவடிவம் பெற்றன. இதனால், முதல் மற்றும் இரண்டாம் வகை அரங்குகள் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்கின.

147)பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக குறிப்பிடப்படுபவர்களில் பொருந்தாதவர் யார்?

A) அ.மங்கை

B) மு.ஜீவா

C) பிரசன்னா ராமசாமி

D) கே.ஏ.குணசேகரன்

விளக்கம்: பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக அ.மங்கை, மு.ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். அ.மங்கை என்பவர் இன்குலாப் எழுதிய ‘ஒளவை’, சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக்குறம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார்.

148) எரியும் பனிக்காடு என்ற கதை பரதேசி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இக்கதையை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) பாஸ்கர் சக்தி

D) பி.எச்.டேனியல்

விளக்கம்: கி.ராஜநாராயணன் – கிடை என்ற கதை ஒருத்தி என்ற திரைப்படமானது

ஜெயமோகன் – ஏழாம் உலகம் என்ற கதை நான் கடவுள் என்ற திரைப்படமானது

பாஸ்கர் சக்தி – அழகர்சாமியின் குதிரை என்ற கதை அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படமானது

பி.எச்.டேனியல் – எரியும் பனிக்காடு என்ற கதை பரதேசி என்ற திரைப்படமானது

149) கீழ்க்காணும் எந்த படத்திற்கு ஜெயகாந்தன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார்?

A) ஏழாம் உலகம்

B) யாருக்காக அழுதான்

C) சில நேரங்களில் சில மனிதர்கள்

D) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

விளக்கம்: மேற்காணும் நூல்கள் அனைத்தும் ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் ஆகும். இதில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும். உன்னைப்போல் ஒருவன் படத்திற்கான திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் ஜெயகாந்தன் ஆகும். யாருக்காக அழுதான் என்ற படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் இருக்கிறார்.

150) எப்போது பெண்ணிய அரங்கம், தலித்திய அரங்கம், திருநங்கைகள் அரங்கம், சிறுவர் அரங்கம் போன்றவை தோன்றின?

A) 1970

B) 1980

C) 1990

D) 1960

விளக்கம்: சமூக மாற்றத்திற்கேற்ப கலை-இலக்கிய வடிவங்களின் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு 1990-களின் தொடக்கத்தில் உருவானது. அதனால் நாடகத்துறையில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு உருவாவதற்கான சூழல் தோன்றியது. அந்த வகையில் பெண்ணிய அரங்கம், தலித்திய அரங்கம், திருநங்கைகள் அரங்கம், சிறுவர் அரங்கம் போன்றவை தோன்றின.

151) திக்கற்ற பார்வதி என்னும் புதினம் திரைப்படமானது. இப்புதினம் யாருடையது?

A) ஜே.ஆர்.ரங்கராஜு

B) வடுவூர் துரைசாமி

C) கல்கி

D) ராஜாஜி

விளக்கம்: ஜே.ஆர்.ரங்கராஜு- சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

152) நாடகங்களைப் பார்க்க பார்வையாளர்கள் வரவேண்டும் என்பதற்குப் பதிலாக பார்வைகளை நோக்கி நாடகங்கள் செல்ல வேண்டும் என்ற கருத்து உருவானது. இதனை மூன்றாம் அரங்கம் என்பதாக அறிமுகப்படுத்தியவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்டின்

விளக்கம்: நாடகங்களைப் பார்க்க பார்வையாளர்கள் வர வேண்டும் என்பதற்குப் பதிலாக பார்வைகளை நோக்கி நாடகங்கள் செல்ல வேண்டும் என்ற கருத்து உருவானது. இதனை மூன்றாம் அரங்கம் என்பதாக அறிமுகப்படுத்தியவர் பாதல் சர்க்கார் ஆவார்.

153) பாதல் சர்க்கார் அறிமுகப்படுத்திய நாடக அரங்கின் வகைகளில் ஏழைகளின் அரங்கு என அழைக்கப்பட்ட அரங்கு வகை எது?

A) முதல் அரங்கு

B) இரண்டாhம் அரங்கு

C) மூன்றாம் அரங்கு

D) நான்காம் அரங்கு

விளக்கம்: அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன்வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் ஆவார்.

ஒப்பனை அரங்கை கைவிட்டு விட்டு நடிகனின் குரல், உடல் இவற்றை மையப்படுத்தும் அரங்கு, மூன்றாம் அரங்கு அல்லது ஏழைகளின் அரங்கு எனப்பட்டது.

154) மக்களின் துயரங்களைப் போக்கும் விதமான பாத்திரங்களுக்காக அறியப்பட்டவர் யார்?

A) சிவாஜி கணேசன்

B) எம்.ஜி.ஆர்

C) ஜெமினி கணேசன்

D) ஜெய்சங்கர்

விளக்கம்: உணர்ச்சிகரமான வசனத்திற்காக சிவாஜி கணேசனும், அதன் மறுதலையாக மக்களின் துயரங்களைப் போக்கும் விதமான பாத்திரங்களுக்காக எம்.ஜி.ஆர்-ம் அறியப்பட்டார்கள். இவ்விரு ஆளுமைகளும் ஒரே காலகட்டத்தில் நாயகர்களாக வலம் வந்தது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் போன்றோரும் அக்கால கட்டத்தில் நாயகர்களாக நன்கு அறியப்பட்டனர்.

155) இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட நாடக மரபு எது?

A) பார்சி நாடகம்

B) விக்டோரியா நாடகம்

C) பாதல் நாடகம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது. இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரியா நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வக்குப் பெற்றன.

156) விடிய விடிய நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணிநேர நிகழ்வாகச் சுருக்கிய நாடக மரபு எது?

A) விக்டோரியா நாடக மரபு

B) மேற்கத்திய நாடக மரபு

C) பார்சி கம்பெனிகளின் நாடகம்

D) பாதல் சர்க்கார் நாடகம்

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது. இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரியா நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வக்குப் பெற்றன. விடிய, விடிய நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணிநேர நிகழ்வாகச் சுருக்கியது பார்சி நாடகங்கள்.

157) கீழ்க்காணும் நூல்களில் ஜெயகாந்தன் எழுதாத நூல் எது?

A) உன்னைப்போல் ஒருவன்

B) யாருக்காக அழுதான்

C) சில நேரங்களில் சில மனிதர்கள்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

மலைக்கள்ளன் என்பது இராமலிங்கனாரின் புதினம் ஆகும்.

158) அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் அரங்கு எத்தனை வகை என வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் கூறியுள்ளார்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் ஆவார்.

159) எப்போதும் வசனங்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத்தைக் காட்சிப் பூர்வமாக அணுகியவர்கள் யார்?

A) பாலு மகேந்திரா

B) ஜெயகாந்தன்

C) ராஜசேகரன்

D) ருத்ரய்யா

விளக்கம்: 1970-களில் தமிழ்த் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. எப்போதும் வசனங்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத்தைக் காட்சிப் பூர்வமாக அணுகியவர்கள் மகேந்திரனும் பாலு மகேந்திராவும். அதற்கான களத்தை இலக்கியத்தில் இருந்து தேர்ந்தெடுத்தனர்.

160) கீழ்க்காணும் நூல்களில் எந்த நூல் திரைப்படமாவதற்கு திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் ஜெயகாந்தனே எழுதினார்?

A) உன்னைப்போல் ஒருவன்

B) ஏழாம் உலகம்

C) சில நேரங்களில் சில மனிதர்கள்

D) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

விளக்கம்: மேற்காணும் நூல்கள் அனைத்தும் ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் ஆகும். இதில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும். உன்னைப்போல் ஒருவன் படத்திற்கான திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் ஜெயகாந்தன் ஆகும்.

161) நிஜ நாடக இயக்கத்தை 1978-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கியவர் யார்?

A) நா.முத்துசாமி

B) பாலு மகேந்திரா

C) பம்மல் சம்பந்தனார்

D) மு.இராமசுவாமி

விளக்கம்: நிஜ நாடக இயக்கத்தை 1978-ஆம் ஆண்டு மதுரையில் மு.இராமசுவாமி தொடங்கினார். தொடக்கத்தில் எளிமையான திறந்தவெளி நாடகங்களை மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருந்த இவ்வியக்கம் பின்னாளில் மேடைகளில் தங்கள் நாடகங்களை அரங்கேற்றியது.

162) ‘பரீக்ஷா’ என்னும் நாடகக்குழு யாரால் 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது?

A) நா.முத்துசாமி

B) மு.இராமசுவாமி

C) ஞாநி

D) அ.மங்கை

விளக்கம்: ‘பரீக்ஷா’ என்னும் நாடகக்குழு ஞாநியால் 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டதால் இக்குழு ‘பரீக்ஷா’ என்னும் பெயரைப் பெற்றது.

163) முட்டை என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) நா.முத்துசாமி

B) இந்திரா பார்த்தசாரதி

C) அம்பை

D) பிரபஞ்சன்

விளக்கம்: நா.முத்துசாமி- நாற்காலிக்காரர்

இந்திரா பார்த்தசாரதி- போர்வை போரத்திய உடல்கள்

அம்பை- பயங்கள்

பிரபஞ்சன்- முட்டை

164) நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு தங்கர் பச்சான் உருவாக்கிய படம் எது?

A) பூ

B) சொல்லமறந்த கதை

C) அம்மாவின் கைப்பேசி

D) ஒன்பது ரூபாய் நோட்டு

விளக்கம்: நாஞ்சில் நாடனின் நாவலான தலைகீழ் விகிதங்கள் என்ற கதையை அடிப்படையாக கொண்டு சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தை தங்கர் பச்சான் உருவாக்கினார்.

165) எந்த ஆண்டு சிவாஜி கணேசன் தாதாசாகிப்பால்கே விருதை பெற்றுள்ளார்?

A) 1996

B) 1979

C) 2010

D) 1969

விளக்கம்: இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது. தேவிகா ராணி 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் இவ்விருதைப் பெற்றார். தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு சிவாஜி கணேசனும், 2010ஆம் ஆண்டு கே.பாலசந்தரும் இவ்விருதினைப் பெற்றுள்ளனார்.

166) எந்த ஆண்டு காளிதாஸ் என்ற திரைப்படம் வெளிவந்தது?

A) 1919

B) 1921

C) 1928

D) 1931

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸம்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது.

167) பாவை விளக்கு என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

A) இராமலிங்கனார்

B) அகிலன்

C) இராஜாஜி

D) வடுவூர் துரைசாமி

விளக்கம்: இராமலிங்கனார் – மலைக்கள்ளன்

அகிலன்- பாவை விளக்கு

இராஜாஜி- திக்கற்ற பார்வதி

வடுவூர் துரைசாமி – மைனர் ராஜாமணி

168) ஜெயகாந்தன் எழுதிய எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

A) உன்னைப்போல் ஒருவன்

B) யாருக்காக அழுதான்

C) சில நேரங்களில் சில மனிதர்கள்

D) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

விளக்கம்: மேற்காணும் நூல்கள் அனைத்தும் ஜெயகாந்தன் எழுதிய நூல்கள் ஆகும். இதில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும்.

169) சந்திரகுமாரின் எந்த கதை விசாரணை என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது?

A) லாக்கப்

B) விசாரணை

C) காவல் நிலையம்

D) நீதிமன்றம்

விளக்கம்: மு.சந்திரகுமாரின் லாக்கப் என்ற கதை விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

170) எந்த ஆண்டு தேசிய நாடகப் பள்ளியும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய 70 நாள் நாடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது?

A) 1977

B) 1978

C) 1979

D) 1980

விளக்கம்: 1978-ஆம் ஆண்டு தேசிய நாடகப் பள்ளியும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய 70 நாள் நாடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

171) மூர்மார்க்கெட் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) அறந்தை நாராயணன்

B) ஞாநி

C) அ.ராமசாமி

D) அ.மங்கை

விளக்கம்: அறந்தை நாராயணன் – மூர் மார்க்கெட்

ஞாநி- பலூன், நாங்கள்

அ.ராமசாமி- பல்லக்குத்தூக்கிகள்

அ.மங்கை- மௌனக்குரல் குழுவை நடத்தியவர்.

172) இராமலிங்கனார் எழுதிய எந்த புதினம் திரைப்படமாக வெளிவந்தது?

A) தியாகபூமி

B) திக்கற்ற பார்வதி

C) தில்லானா மோகனாம்மாள்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: கல்கி- தியாக பூமி, பார்த்திபன் கனவு

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

தில்லானா மோகனாம்மாள் – கொத்தமங்கலம் சுப்பு

மலைக்கள்ளன்- இராமலிங்கனார்

173) எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளின் நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதில் பொருந்தாதது எது?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பரீக்

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம், இந்திரஜித் மற்றும் விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

174) எந்த நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது?

A) 18

B) 19

C) 20

D) 17

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது. இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரியா நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வக்குப் பெற்றன.

175) நாடகக்குழுக்கள் மற்றும் அதன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?

A) முத்ரா- சென்னை

B) தளிர் அரங்கு- காந்தி கிராமம்

C) துளிர்- தஞ்சை

D) கூடம்- தஞ்சை

விளக்கம்: கூடம் – சென்னை

176) மோகமுள் என்ற என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா- சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்.

177) எந்த ஆண்டு தமிழ்த் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன?

A) 1970

B) 1975

C) 1980

D) 1977

விளக்கம்: 1970களில் தமிழ்த் திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. எப்போதும் வசனங்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத்தைக் காட்சிப் பூர்வமாக அணுகியவர்கள் மகேந்திரனும் பாலு மகேந்திராவும். அதற்கான களத்தை இலக்கியத்தில் இருந்து தேர்ந்தெடுத்தனர்.

178) சென்னைக் கலைக்குழு கீழ்க்காணும் எதற்காக பிரளயனால் தொடங்கப்பட்டது?

A) பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்

B) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

C) பெண்களின் பல்வேறு பிரச்சனைகள்

D) எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள்

விளக்கம்: பல்கலைக்கழக மாணவர்களிடையே அரங்க ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குதல்- பல்கலையரங்கம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு- கூட்டுக்குரல்

பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் – மௌனக்குரல்

எழுத்தறிவு மற்றும் அறிவியல் பிரச்சார நாடகங்கள் – சென்னைக் கலைக்குழு.

179) கூட்டுக்குழு என்ற நாடகக்குழுவை பாண்டிச்சேரியில் எப்போது அ.ராமசாமி ஆரம்பித்தார்?

A) 1990

B) 1970

C) 1980

D) 1997

விளக்கம்: பாண்டிச்சேரியில் 1990களில் கூட்டுக்குரல் என்ற குழுவை ஆரம்பித்தவர் அ.ராமசாமி. இக்குழு ‘நியாயங்கள்’, ‘திருப்பிக்கொடு’, ‘பல்லக்குத்தூக்கிகள்’, ‘சிற்பியின் நகரம்’ முதலான நாடகங்களை நடத்தியுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகங்களையும் தலித்திய உள்ளடக்க நாடகங்களான ‘தண்ணீர்’, ‘வார்த்தை மிருகம்’ போன்றனவும் இக்குழுவின் முக்கியமான நாடகங்கள் ஆகும்.

180) கமலா என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

181) தியாக பூமி புதினத்தின் ஆசிரியர் யார்?

A) கல்கி

B) ராஜாஜி

C) இராமலிங்கனார்

D) வடுவூர் துரைசாமி

விளக்கம்: கல்கி- தியாக பூமி, பார்த்திபன் கனவு

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

தில்லானா மோகனாம்மாள் – கொத்தமங்கலம் சுப்பு

மலைக்கள்ளன்– இராமலிங்கனார்.

182) இந்திய அரசால் நிகழ்த்துக் கலைகளுக்காக நிறுவப்பட்ட தேசியளவிலான அமைப்பு எது?

A) சங்கீத நாடக அகாதெமி

B) பாரதிய நாட்டிய சங்கம்

C) தேசிய நாடகப்பள்ளி

D) தேசிய இயல் இசை நாடகப் பள்ளி

விளக்கம்: ‘சங்கீத நாடக அகாதெமி’ இந்திய அரசால் நிகழ்த்துக் கலைகளுக்காக நிறுவப்பட்ட தேசியளவிலான அமைப்பாகும். 1952-ஆம் ஆண்டு புதுடெல்லியில் உருவான இவ்வமைப்பு இந்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

183) வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் மூவகை அரங்கை முன் வைத்தவர் ஆவார். கீழ்க்காணும் எதன் அடிப்படையில் இவர் மூவகை அரங்கை வகைப்படுத்தவில்லை?

A) அரங்க நிகழ்வுகள்

B) பார்வையாளர்கள்

C) பேசுபொருள்

D) ஒளி அமைப்பு

விளக்கம்: அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் ஆவார்.

184) சென்னையில் எந்த ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சி திரையிடப்பட்டது?

A) 1895

B) 1896

C) 1897

D) 1898

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

185) கொத்தமங்கலம் சுப்பு எழுதிய எந்த புதினம் திரைப்படமாக வெளிவந்தது?

A) தியாகபூமி

B) திக்கற்ற பார்வதி

C) தில்லானா மோகனாம்மாள்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: கல்கி- தியாக பூமி, பார்த்திபன் கனவு

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

தில்லானா மோகனாம்மாள் – கொத்தமங்கலம் சுப்பு

மலைக்கள்ளன் – இராமலிங்கனார்.

186) இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு ‘கெயிட்டி’ ஆகும். இதனை கட்டியவர் யார்?

A) சுவாமிக்கண்ணு வின்சென்ட்

B) எட்வர்ட்

C) வெங்கையா

D) டுபாண்ட்

விளக்கம்: 1914-ஆம் ஆண்டு சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே ஆகும்.

187) இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் எது?

A) ராஜா ஹரிச்சந்திரா

B) கீசகவதம்

C) ஆலம் ஆரா

D) காளிதாஸ்

விளக்கம்: தாதா சாகேப் பால்கே தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.

188) கூற்று: இந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் எழுந்தது.

காரணம்: 1914-இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை’என்பதாகும். அந்த மௌனப்படம்தான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் ஆகும். அதன்பின் பெரும்பாலும் மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே இங்கு திரையிடப்பட்டன. இக்கதைப்படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கூடியது. அதனால் இந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் எழுந்தது

189) எந்த ஆண்டு தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்டது?

A) 1898

B) 1897

C) 1902

D) 1900

விளக்கம்: 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர் ஆகும்.

190) கூட்டுக்குரல் என்ற குழுவை பாண்டிச்சேரியில் ஆரம்பித்தவர் யார்?

A) அ.ராமசாமி

B) அ.மங்கை

C) பிரளயன்

D) ஞாநி

விளக்கம்: பாண்டிச்சேரியில் 1990களில் கூட்டுக்குரல் என்ற குழுவை ஆரம்பித்தவர் அ.ராமசாமி. இக்குழு ‘நியாயங்கள்’, ‘திருப்பிக்கொடு’, ‘பல்லக்குத்தூக்கிகள்’, ‘சிற்பியின்நகரம்’ முதலான நாடகங்களை நடத்தியுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகங்களையும் தலித்திய உள்ளடக்க நாடகங்களான ‘தண்ணீர்’, ‘வார்த்தை மிருகம்’ போன்றனவும் இக்குழுவின் முக்கியமான நாடகங்கள் ஆகும்.

191) அம்மாவின் கைப்பேசி என்ற நாவல் அதே பெயரில் படமாக்கப்பட்டது. இந்த நாவலை எழுதியவர் யார்?

A) தங்கர் பச்சான்

B) நாஞ்சில் நாடன்

C) மகேந்திரன்

D) ஜெயகாந்தன்

விளக்கம்: சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் தங்கர்பச்சான் காட்டிய அக்கறை அதிகம். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் இவர். இவர் தாம் எழுதிய ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் அம்மாவின் கைப்பேசி நாவல்களை அதேபெயரில் படமாக்கினார்.

192)நாடகக்குழுக்கள் மற்றும் அதன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?

A) அரங்கம்- தஞ்சை

B) எது?- சென்னை

C) சுதேசிகள்- மதுரை

D) ஜவாலா- புதுவை

விளக்கம்: ஜவாலா – மதுரை

193) தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது ‘துர்க்கிர அவலம்’ ஆகும். இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) மு.ராமசாமி

B) அ.ராமசாமி

C) கே.ஏ.குணசேகரன்

D) சே.இராமானுஜம்

விளக்கம்: மு.ராமசாமி மேடையேற்றிய ‘துர்க்கிர அவலம்’, சே.இராமானுஜத்தின் ‘கறுப்புத் தெய்வத்தைத் தேடி’ போன்றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. தமிழ் நாடகங்களைவிடவும் மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின.

194) 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. சிலர் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர். இதில் தொடர்பில்லாதவர் யார்?

A) அ.ராமசாமி

B) பிரேம்

C) இரா.ராஜு

D) கே.ஏ.குணசேகரன்

விளக்கம்: 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் கே.ஏ.குணசேகரன் ஆவார். அவரது ‘பலி ஆடுகள்’ முதல் தலித் நாடகமாகக் கருதப்படுகிறது. அ.ராமசாமி, பிரேம், இரா.ராஜு போன்றவர்கள் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர்.

195) நாடகக் கலை பயிற்சியளிக்க உருவாக்கப்பட்டது எது?

A) உலக நாடகக் கழகம்

B) தேசிய நாடகப் பள்ளி

C) உலக நாடகக் குழுமம்

D) சங்கீத நாடக அகாதெமி

விளக்கம்: அகில இந்திய அளவில் பாரதீய நாட்டியகஸ் என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதெமியும் நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப்பள்ளியும் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து உலக நாடகக் கழகமும் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்புகள் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

196) திக்கற்ற பார்வதி என்னும் புதினம் திரைப்படமாக வெளிவந்தது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) கல்கி

B) ராஜாஜி

C) தில்லானா மோகனாம்மாள்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: கல்கி- தியாக பூமி, பார்த்திபன் கனவு

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

தில்லானா மோகனாம்மாள் – கொத்தமங்கலம் சுப்பு

மலைக்கள்ளன்- இராமலிங்கனார்.

197) தமிழகத்தில் சீர்திருத்த நாடகங்கள் உருவாக அடித்தளமிட்டவர் யார்?

A) சங்கரதாஸ் சுவாமிகள்

B) பம்மல் சம்பந்தனார்

C) தந்தை பெரியார்

D) அறிஞர் அண்ணா

விளக்கம்: தமிழில் சீர்திருத்த நாடகங்கள் உருவாக அடித்தளமாய் அமைந்தவை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் ஆகும்.

198) தடயம் என்ற கதை அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இக்கதையை எழுதியவர் யார்?

A) தமயந்தி

B) மு.சந்திரகுமார்

C) பி.எச்.டேனியல்

D) பாஸ்கர் சக்தி

விளக்கம்: தமயந்தியின் தடயம் என்ற கதை தடயம் என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்துள்ளது.

199) எப்போது தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின?

A) எழுபது, எண்பதுகளில்

B) எண்பது, தொண்ணூறுகளில்

C) அறுபது, எழுபதுகளில்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம், இந்திரஜித் மற்றும் விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

200) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் திருவண்ணாமலையில் தோன்றிய நாடகக்குழு எது?

A) நாடகச் சங்கம்

B) தளிர்

C) சுதேசி

D) தீட்சண்யா

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில் – தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா

201) நாடகவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) சங்ரதாச சுவாமிகள்

B) பரிதிமாற்கலைஞர்

C) பம்மல் சம்மபந்தனார்

D) மதுரகவி பாஸ்கரதாஸ்

விளக்கம்: பரிதிமாற்கலைஞரின் நாடகவியல் என்னும் நூல் நாடகக்கலைக்கு இலக்கணம் வகுத்தது.

202) எந்த படத்திற்குக் கதை வசனம் எழுதியதன் மூலம் அறிஞர் அண்ணா திரையுலகில் அறியப்பட்டார்?

A) மந்திரி குமாரி

B) நல்லதம்பி

C) வேலைக்காரி

D) பாவமன்னிப்பு

விளக்கம்: பகுத்தறிவுக் கருத்துகளை உள்ளடக்கிய சில படங்கள் 1940களில் வெளிவந்தன. நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் சிலர் திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்டர். ‘நல்லதம்பி’ படத்திற்குக் கதை வசனம் எழுதியதன் மூலம் அறிஞர் அண்ணா திரையுலகில் அறியப்பட்டார்.

203) இந்தியாவில் மூன்றாம் அரங்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) விஜய் டெண்டுல்கர்

B) கிரிஷ் கர்னாட்

C) பெர்டோல்ட் பிரெக்ட்

D) பாதல் சர்க்கார்

விளக்கம்: அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசும்பொருள் அடிப்படையில் மூவகை அரங்கை முன் வைத்தவர் வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் ஆவார்.

204) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க

A) சுத்துப்பட்டறை- ந.முத்துசாமி

B) நிஜ நாடக இயக்கம்- இந்திரா பார்த்தசாரதி

C) பரிஷா- ஞாநி

D) சென்னைக் கலைக்குழு – பிரளயன்

விளக்கம்: நிஜ நாடக இயக்கம் – மு.இராமசுவாமி

205) கூற்றுகளை ஆராய்க.

1. திரைப்படத்தின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வசனங்களுக்கு இன்றியமையாத பங்குண்டு.

2. ‘மந்திரி குமாரி’ என்ற படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திரைப்படத்தின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வசனங்களுக்கு இன்றியமையாத பங்குண்டு.

2. ‘மந்திரி குமாரி’ என்ற படத்திற்கு வனம் எழுதியவர் மு.கருணாநிதி ஆவார்.

206) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகின்றன. இதற்கு பொருந்தாதது எது?

A) கோவா

B) திருவனந்தபுரம்

C) மும்பை

D) சண்டிகர்

விளக்கம்: திரைப்பட ஆர்வலர்களுக்குத் திருவிழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்கள்தாம். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952-ஆம் ஆண்டு மும்பையில் முதலில் நடைபெற்றது. அதன்பின் சென்னை, கல்கத்தா, திருவனந்தபுரம், கோவா போன்ற இந்திய நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

207) பார்த்திபன் கனவு என்னும் புதினம் திரைப்படமாக வெளிவந்தது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) கல்கி

B) ராஜாஜி

C) தில்லானா மோகனாம்மாள்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: கல்கி- தியாக பூமி, பார்த்திபன் கனவு

ராஜாஜி- திக்கற்ற பார்வதி

தில்லானா மோகனாம்மாள் – கொத்தமங்கலம் சுப்பு

மலைக்கள்ளன்- இராமலிங்கனார்.

208) அரவான் என்ற திரைப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் யாருடைய கதையை தழுவி திரைப்படமாக்கப்பட்டது?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) ஷான் கருப்பசாமி

D) சு.வெங்கடேசன்

விளக்கம்: வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ திரைப்படம் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புதினத்தின் ஒரு பகுதியே ஆகும்.

209) ஜெயகாந்தனால் எழுதப்படாத நூல் எது?

A) உன்னைப்போல் ஒருவன்

B) யாருக்காக அழுதான்

C) தண்ணீர் தண்ணீர்

D) சில நேரங்களில் சில மனிதர்கள்

விளக்கம்: தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்.

210) தமிழில் வெளிவந்த முதல் குறும்படம் எது?

A) குறத்திப் பாட்டும் டான்ஸம்

B) காளிதாஸ்

C) கீசகவதம்

D) ராஜா ஹரிசந்திரா

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸம்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது.

211)சரியான இணையைத் தேர்ந்தெடுக்க

A) ஏழாம் உலகம்- அரவான்

B) எரியும் பனிக்காடு- நான் கடவுள்

C) காவல் கோட்டம்- பரதேசி

D) லாக்கப்- விசாரணை

விளக்கம்: லாக்கப் – விசாரணை.

212) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.

B) இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு டெல்லியில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது.

C) சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

D) சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார். சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இவையே திரைப்படங்களுக்குத் தொடக்கமாக அமைந்தன.

213) தியாகபூமி என்னும் புதினம் திரைப்படமாக வெளிவந்தது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) கே.ஆர்.ரங்கராஜு

C) வடுவூர் துரைசாமி

D) கல்கி

விளக்கம்: அறிஞர் அண்ணா – வேலைக்காரி

கே.ஆர்.ரங்கராஜு- சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி.

214) தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு எங்கு அமைக்கப்பட்டது?

A) ஹைதராபாத்

B) சென்னை

C) திருவனந்தபுரம்

D) பெங்களுர்

விளக்கம்: 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர்.

215) தி ஜாஸ் சிங்கர் என்பது?

A) உலகின் முதல் மௌனப்படம்

B) உலகின் முதல் பேசும்படம்

C) இந்தியாவின் முதல் மௌனப்படம்

D) இந்தியாவின் முதல் பேசும்படம்

விளக்கம்: 1926-இல் ‘வார்னர்’ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டேன்ஜுன்’. அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ வெளிவந்தது.

216) கூற்று: தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

காரணம்: ஏ.நாராயணன் என்பவர் ஜெனரல் பிக்சர்ஸ் கர்ப்பரேஷன் என்ற பட நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸம்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம். ‘காளிதாஸ்’ படம் வெளிவந்ததும் தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

217) இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் எந்த ஆண்டு அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது?

A) 1921

B) 1931

C) 1941

D) 1935

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

218) கூற்றுகளை ஆராய்க.

1. மணிமேகலைக்குச் சோமையாஜுலுவும், சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

2. இதனைத் தொடர்ந்து வந்த படங்களில் இலக்கியத்தமிழ் கொண்ட வசனங்கள் முதன்மை பெற்று, வசனம் எழுதுபவர்கள் கவனம் பெற்றனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மணிமேகலைக்குச் சோமையாஜுலுவும், சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

2. இதனைத் தொடர்ந்து வந்த படங்களில் இலக்கியத்தமிழ் கொண்ட வசனங்கள் முதன்மை பெற்று, வசனம் எழுதுபவர்கள் கவனம் பெற்றனர்.

219) ஒளியின் வகை எத்தனை?

A) 4

B) 2

C) 3

D) 5

விளக்கம்: ஒளியை இரண்டு வகையாகக் கொள்ளலாம். அவை, இயற்கை ஒளி, செயற்கை ஒளி. சூரிய ஒளி மட்டுமே இயற்கை ஒளி. ஏனைய எல்லாம் செயற்கை ஒளி. ஒளி ஒரு மொழியாகவே செயல்படுகிறது.

220) தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் எது?

A) ஆலம் ஆரா

B) கீசகவதம்

C) காளிதாஸ்

D) ராஜா ஹரிசந்திரா

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸ{ம்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம். ‘காளிதாஸ்’ படம் வெளிவந்ததும் தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

221) கூற்றுகளை ஆராய்க.

1. பகுத்தறிவுக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள்1940களில் வெளிவந்தன.

2. ‘வேலைக்காரி’ படம் அறிஞர் அண்ணாவிற்கு மேலும் புகழைப் பெற்றுத்தந்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பகுத்தறிவுக் கருத்துகளை உள்ளடக்கிய சில படங்கள் 1940களில் வெளிவந்தன. நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் சிலர் திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்டர். ‘நல்லதம்பி’ படத்திற்குக் கதை வசனம் எழுதியதன் மூலம் அறிஞர் அண்ணா திரையுலகில் அறியப்பட்டார்.

222) எல்லிஸ்.ஆர்.டங்கன்-க்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார்.

B) வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார்.

C) ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தினார்.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார். ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

223) கட்டைக்கூத்து என்று அழைக்கப்படும் கலை எது?

A) ஒயிலாட்டம்

B) மரக்கால் ஆட்டம்

C) தெருக்கூத்து

D) தோல்பாவைக்கூத்து

விளக்கம்: தமிழக மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய கலை தெருக்கூத்து, இதனைக் ‘கட்டைக் கூத்து’ என்றும் அழைப்பர். கதை சொல்லல், ஆடல், பாடல் என பலதரப்பட்ட கூறுகள் தெருக்கூத்தில் கலந்திருக்கின்றன. பொதுவாக தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, விழிப்புணர்வுக் கதை முதலியனவற்றை மையமாகக் கொண்டு தெருக்கூத்து நிகழ்த்தப்படுகின்றது.

224) நோட்டா என்ற திரைப்படம் வெட்டாட்டம் என்ற கதையை தழுவி திரைப்படமாக்கப்பட்டது. இக்கதையை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) ஜெயமோகன்

C) ஷான் கருப்பசாமி

D) சு.வெங்கடேசன்

விளக்கம்: நோட்டா படம் ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நூலை அடிப்படையாகக் கொண்டதுதான்.

வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ திரைப்படம் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புதினத்தின் ஒரு பகுதியே ஆகும்.

225) மைனர் ராஜாமணி என்னும் புதினம் திரைப்படமாக வெளிவந்தது. இப்புதினத்தை எழுதியவர் யார்?

A) அறிஞர் அண்ணா

B) கே.ஆர்.ரங்கராஜு

C) வடுவூர் துரைசாமி

D) கல்கி

விளக்கம்: அறிஞர் அண்ணா – வேலைக்காரி

கே.ஆர்.ரங்கராஜு- சவுக்கடி சந்திரகாந்தா

வடுவூர் துரைசாமி- மைனர் ராஜாமணி

கல்கி- தியாகபூமி.

226) கீழுள்ள கூற்றுகளுள் எவை சரியானவை?

கூற்று 1: சங்க இலக்கியங்களில் குடக்கூத்து எனக் குறிக்கப்படுவது கரகாட்டம்.

கூற்று 2: அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தலையில் வைத்து ஆடுவர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சங்க இலக்கியங்களில் குடக்கூத்து எனக் குறிக்கப்படுவது கரகாட்டம்.

அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தலையில் வைத்து ஆடுவர்

227) ‘ஒளவை’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) சே.இராமானுஜம்

B) இன்குலாப்

C) பிரசன்னா ராமசாமி

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக அ.மங்கை, மு.ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். அ.மங்கை என்பவர் இன்குலாப் எழுதிய ‘ஒளவை’, சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக்குறம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார்.

228) பாதல் சர்க்கார் மூவகை அரங்கை முன்வைத்தார். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் மரபுக்கேற்றவாறு அரங்கக்கலை வடிவம் பெற்றிருந்தது. இதனை எத்தனையாவது அரங்கு என குறிப்பிடுகிறார்?

A) முதலாம் அரங்கு

B) இரண்டாம் அரங்கு

C) மூன்றாம் அரங்கு

D) நான்காம் அரங்கு

விளக்கம்: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் மரபுக்கேற்றவாறு அரங்கக்கலை வடிவம் பெற்றிருந்தது. கதகளி, யட்சகானம், ஜாக்ரா, பங்காரா, தமாஷா, தெருக்கூத்து என ஒவ்வொரு மாநிலச் சூழலுக்கேற்பப் பெயர் பெற்றிருந்த இக்கலைகளை முதலாம் அரங்கு என பாதல் சர்க்கார் வகைப்படுத்துகிறார். இம்முதல் வகை அரங்கு புராண, இதிகாச, வரலாற்றுப் பாத்திரங்களின் மூலம் மக்களின் பண்பாடு, வாழ்வியல், சடங்குகள் போன்றவற்றை வெளிப்படுத்தியது. பார்வையாளர்களின் சுதந்திரத்தையும் நெருக்கத்தையும் தன்னகத்தைக் கொண்டதாக முதல் வகை அரங்கு உள்ளது என்பார் பாதல் சர்க்கார்.

229) எந்த நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது?

A) 17

B) 18

C) 19

D) 20

விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் இந்திய மேடை நாடகங்களில் மேற்கத்திய நாடகத்தின் தாக்கம் இருந்தது. இந்திய நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கருதப்பட்ட விக்டோரியா நாடக மரபினைப் பின்பற்றிப் பார்சி கம்பெனிகளின் நாடகங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றன.

230) நாடகக்குழுக்கள் மற்றும் அதன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?

A) பல்கலை அரங்கம் – சென்னை

B) ஆப்டிஸ்ட்- புதுவை

C) ஆழி- புதுவை

D) கூடம்- புதுவை

விளக்கம்: கூடம் – சென்னை.

கூட்டுக்குரல்- புதுவை.

231) பெண்சிசுக் கொலை நிகழும் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ‘பச்ச மண்ணு’ என்னும் விவாதக்கள வீதி அரங்க நிகழ்வை நிகழ்த்திய குழு எது?

A) மௌனக்குரல்

B) கூட்டுக்குரல்

C) சென்னைக் கலைக்குழு

D) பல்கலையரங்கம்

விளக்கம்: மௌனக்குரலை நடத்தியவர் அ.மங்கை. இது பெண்களின் பல்வேறு பிரச்சினைகளைப் பேசும் நாடகங்களில் கவனம் செலுத்தியது. ‘காலக்கனவு’, ‘ஒளவை’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘மணிமேகலை’ முதலான நாடகங்களை மேடையேற்றியுள்ளது. ‘பெண் சிசுக் கொலை’ நிகழும் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இக்குழு ‘பச்ச மண்ணு’ என்னும் விவாதக்கள வீதி அரங்க நிகழ்வை நிகழ்த்தியது.

232) சங்கீத நாடக அகாதெமி’ இந்திய அரசால் நிகழ்த்துக் கலைகளுக்காக நிறுவப்பட்ட தேசியளவிலான அமைப்பாகும். இது எப்போது தொடங்கப்பட்டது?

A) 1957

B) 1952

C) 1955

D) 1956

விளக்கம்: ‘சங்கீத நாடக அகாதெமி’ இந்திய அரசால் நிகழ்த்துக் கலைகளுக்காக நிறுவப்பட்ட தேசியளவிலான அமைப்பாகும். 1952-ஆம் ஆண்டு புதுடெல்லியில் உருவான இவ்வமைப்பு இந்தியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

233) ஆசிய அரங்க நிறுவனம் என்ற அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது?

A) 1952

B) 1958

C) 1956

D) 1954

விளக்கம்: யுனெஸ்கோவின் உதவியோடு டில்லியில் இயங்கி வந்த ‘பாரதிய நாட்டிய சங்கம்’ என்ற அமைப்பு 1958-இல் ‘ஆசிய அரங்க நிறுவனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது.

234) அசையாத படங்களை வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது________________எனப்படும்?

A) அசைவுப்படம்

B) சலனப்படம்

C) திரைப்படம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அசையாத படங்களை வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப்படும் ஆகும். ஆங்கிலத்தில் இதனை மூவி என்பர்.

235) இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் எது?

A) அரிச்சந்திரா

B) ஏசுவின் வாழ்க்கை

C) ராஜா ஹரிச்சந்திரா

D) கீசகவதம்

விளக்கம்: டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை’ என்பதாகும். அந்த மௌனப்படம்தான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் ஆகும். அதன்பின் பெரும்பாலும் மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே இங்கு திரையிடப்பட்டன. இக்கதைப்படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கூடியது. அதனால் இந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் எழுந்தது.

236) தொடக்கக்காலத் தமிழப்படங்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்டன?

A) அற இலக்கியங்கள்

B) சமூக சீர்திருத்தக் கதைகள்

C) எள்ளல் இலக்கிங்கள்

D) புராணக்கதைகள்

விளக்கம்: தொடக்கக்காலத் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டன. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் வரவேற்பு பெற்ற இராமாயண, மகாபாரத கதைகளே படமாக்கப்பட்டன.

237) எப்போது முதல் சமூக சீர்த்திருத்த கருத்துகளைக் கதைகளாகக் கொண்டு படங்கள் வெளிவந்தன?

A) 1925

B) 1929

C) 1932

D) 1935

விளக்கம்: 1935 முதல் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கதைகளாகக் கொண்ட படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாக அறியப்படுகிறது.

238) டம்பாச்சாரி என்ற திரைப்படம் சமூக சீர்திருத்தக்கருத்துக்களை கதையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) வடுவூர் துரைசாமி

C) காசி விஸ்வநாதர்

D) இராஜாஜி

விளக்கம்: வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி ஆகிய படங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கதைகளாகக் கொண்ட படங்கள் ஆகும்.

239) ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை கீழ்க்காணும் எதனால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது?

A) ஜாலியன் வாலாபாக் படுகொலை

B) உப்புச்சத்தியா கிரகம்

C) சௌரி சௌரா நிகழ்வு

D) ஒத்துழையாமை இயக்கம்

விளக்கம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது. அதனால், சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன.

240) வெயிலோடு போய் என்ற சிறுகதையைச் சசி ‘பூ’ என்ற திரைப்படமாக்கினார். இச்சிறுகதையை எழுதியவர் யார்?

A) வசந்தபாலன்

B) சு.வெங்கடேசன்

C) கருப்பசாமி

D) ச.தமிழ்ச்செல்வன்

விளக்கம்: ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்’ என்ற சிறுகதையைச் சசி ‘பூ’ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். இக்கதை எளிமையான பெண்ணின் பேரன்பைப் பேசுகிறது.

241) திரைப்படங்களில் வண்ணத்தாளைக் காட்டி படம்பிடிக்கும் முறை உள்ளது. இதில் பச்சை நிறத்திற்கு பொருந்தாதது எது?

A) செல்வம்

B) தாராளம்

C) அமைதி

D) நெருப்பு

விளக்கம்: சிவப்பு – சினம், அபாயம், நெருப்பு

கருநீலம்- குளிர்ச்சி, களங்கமின்மை, பயபக்தி, அடிமை, வானம், கடல்

பச்சை-செல்வம், தாராளம், அமைதி, மகிழ்ச்சி, ஓய்வு

இளஞ்சிவப்பு- காதல், பாலுணர்வு

242) திரைப்படத்தில் ஒலிப்பதிவு, எத்தனை வித ஒலிகளை முதன்மைப்படுத்துகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: திரைப்படத்தில் ஒலிப்பதிவு, நான்கு வித ஒலிகளை முதன்மைப்படுத்துகிறது.

1. உரையாடல்

2. பாடல்கள்

3. பின்னணி இசை

4. சிறப்பு ஒலிகள்.

243) இந்தியாவில் முதன்முதலில் எந்த ஆண்டு சலனப்படம் திரையிடப்பட்டது?

A) 1895

B) 1896

C) 1897

D) 1898

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

244) 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. முதல் தலித் நாடகமாக கருதப்படுவது எது?

A) பலி ஆடுகள்

B) துர்க்கிர அவலம்

C) கறுப்பத் தெய்வத்தை தேடி

D) மௌனக்குறம்

விளக்கம்: 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் கே.ஏ.குணசேகரன் ஆவார். அவரது ‘பலி ஆடுகள்’ முதல் தலித் நாடகமாகக் கருதப்படுகிறது. அ.ராமசாமி, பிரேம், இரா.ராஜு போன்றவர்கள் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர்.

245) தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது?

A) 1910

B) 1901

C) 1905

D) 1914

விளக்கம்: 1914-ஆம் ஆண்டு சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே ஆகும்.

246) பகுத்தறிவுக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் எப்போது வெளிவந்தன?

A) 1935

B) 1940

C) 1942

D) 1945

விளக்கம்: பகுத்தறிவுக் கருத்துகளை உள்ளடக்கிய சில படங்கள் 1940களில் வெளிவந்தன. நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் சிலர் திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்டனர்.

247) அவள் அப்படித்தான் என்ற திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாலு மகேந்திரா

B) ருத்ரய்யா

C) மகேந்திரன்

D) ஞான.ராஜசேகரன்

விளக்கம்: பாலு மகேந்திரா – சந்தியா ராகம், வீடு

ருத்ரய்யா- அவள் அப்படித்தான்

மகேந்திரன் – முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், சாசனம்.

ஞான.ராஜசேகரன் – மோகமுள்.

248) ‘மௌனக்குறம்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) சே.இராமானுஜம்

B) இன்குலாப்

C) பிரசன்னா ராமசாமி

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக அ.மங்கை, மு.ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். அ.மங்கை என்பவர் இன்குலாப் எழுதிய ‘ஒளவை’, சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக்குறம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார்.

249) நாடகக்குழுக்கள் மற்றும் அதன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?

A) கூட்டுக்குரல்- புதுவை

B) தலைக்கோல்- புதுவை

C) தியேட்டர் லெப்ட்- மதுரை

D) ஒத்திகை- திருச்சி

விளக்கம்: ஒத்திசை- மதுரை

திருச்சி நாடகச் சங்கம்– திருச்சி.

250) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் திருச்சியில் தோன்றிய நாடகக்குழு எது?

A) நாடகச் சங்கம்

B) தளிர்

C) சுதேசி

D) தீட்சண்யா

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா.

251) ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) நடராஜர்

D) எல்லிஸ் ஆர்.டங்கன்

விளக்கம்: எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார். ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

252) மேனகா என்ற திரைப்படம் சமூக சீர்திருத்தக்கருத்துக்களை கதையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) பம்மல் சம்பந்தனார்

B) வடுவூர் துரைசாமி

C) காசி விஸ்வநாதர்

D) இராஜாஜி

விளக்கம்: வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வநாதரின் டம்பாச்சாரி ஆகிய படங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கதைகளாக் கொண்ட படங்கள் ஆகும்.

253) சமூக சீர்திருத்தக்கருத்துகளைக் கதைகளாகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் எது?

A) ராஜா ஹரிச்சந்திரா

B) கௌசல்யா

C) மேனகா

D) டம்பாச்சாரி

விளக்கம்: தொடக்கக்காலத் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் வரவேற்பு பெற்ற இராமாயண, மகாபாரத கதைகளே படமாக்கப்பட்டன. 1935 முதல் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கதைகளாகக் கொண்ட படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாக அறியப்படுகிறது.

254) பல்வேறு நாடகக் குழுக்களில் நடிகையாகச் செயல்பட்டதோடு ஐரோப்பிய பெண்ணிய நாடகங்களிலிருந்து சில பகுதிகளைக் காட்சிகளாக நிகழ்த்திக் காட்டியவர் யார்?

A) மு.ஜீவா

B) இன்குலாப்

C) பிரசன்னா ராமசாமி

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக அ.மங்கை, மு.ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். அ.மங்கை என்பவர் இன்குலாப் எழுதிய ‘ஒளவை’, சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக்குறம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார். மு.ஜீவா பல்வேறு நாடகக் குழுக்களில் நடிகையாகச் செயல்பட்டதோடு ஐரோப்பிய பெண்ணிய நாடகங்களிலிருந்து சில பகுதிகளைக் காட்சிகளாக நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

255) ஐக்யா என்ற நாடகக்குழு எங்கு தொடங்கப்பட்டது?

A) புதுவை

B) திருச்சி

C) சென்னை

D) தஞ்சை

விளக்கம்: ஐக்யா – சென்னை

256) கூத்துப்பட்டறை தொன்மையான தெருக்கூத்துக் கலையை நவீனமாக்கி, மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னையில் எப்போது ந.முத்துசாமியால் உருவாக்கப்பட்டது?

A) 1977

B) 1978

C) 1979

D) 1980

விளக்கம்: கூத்துப்பட்டறை தொன்மையான தெருக்கூத்துக் கலையை நவீனமாக்கி, மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னையில் 1977-ஆம் ஆண்டு ந.முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, ஜெர்மனியின் மேக்ஸ்முல்லர் பவன் போன்ற அமைப்புகளின் ஆதரவில் இவ்வமைப்பு அரங்கச் செயல்பாடுகளை முன்னெடுத்தது.

257) சுவாமிக்கண்ணு என்பவர் எங்கு ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்க செய்தார்?

A) திருச்சி

B) சென்னை

C) கோயம்புத்தூர்

D) தஞ்சை

விளக்கம்: சுவாமிக்கண்ணு என்பவர் கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸைக் கட்டிப் பல படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.

258) தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ எது?

A) ரெயின்போ டாக்கீஸ்

B) எடிசன் சினிமட்டோ கிராப்

C) எட்வர்ட் சினிமட்டோ கிராப்

D) விக்டோரியா பப்ளிக் ஹால்

விளக்கம்: 1905-இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ இதுவே.

259) யுனெஸ்கோவின் உதவியோடு டில்லியில் இயங்கி வந்த ____________________________ என்ற அமைப்பு 1958-இல் ‘ஆசிய அரங்க நிறுவனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது.

A) பாரதிய நாட்டிய சங்கம்

B) சங்கீத நாடக அமைப்பு

C) தேசிய நாடகப் பள்ளி

D) தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம்

விளக்கம்: யுனெஸ்கோவின் உதவியோடு டில்லியில் இயங்கி வந்த ‘பாரதிய நாட்டிய சங்கம்’ என்ற அமைப்பு 1958-இல் ‘ஆசிய அரங்க நிறுவனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது.

260) ஆசிய அரங்க நிறுவனம் எந்த ஆண்டு மைய அரசின் சங்கீத நாடக அமைப்போடு இணைக்கபட்டு ‘தேசிய நாடகப் பள்ளி’ என்று பெயர் மாற்றம் பெற்றது?

A) 1952

B) 1956

C) 1958

D) 1959

விளக்கம்: யுனெஸ்கோவின் உதவியோடு டில்லியில் இயங்கி வந்த ‘பாரதிய நாட்டிய சங்கம்’ என்ற அமைப்பு 1958-இல் ‘ஆசிய அரங்க நிறுவனம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1959-இல் இந்த நிறுவனம் மைய அரசின் சங்கீத நாடக அமைப்போடு இணைக்கப்பட்டு ‘தேசிய நாடகப்பள்ளி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பள்ளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இனம், மொழி பேசும் மக்கள் நாடகக்கல்வியை முறையாகப் பயில வழிவகுத்தது.

261) தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இது மத்திய சங்கீத நாடக அகாதெமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

B) இது ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கலை நிறுவனம்

C) இது தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து மேம்படுத்தி வருகிறது.

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: இது மத்திய சங்கீத நாடக அகாதெமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

இது ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கலை நிறுவனம்

இது தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து மேம்படுத்தி வருகிறது.

262) எப்போது லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1895

B) 1896

C) 1897

D) 1898

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

263) கூற்றுகளை ஆராய்க.

1. 1895-இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.

2. 1914-இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1895இல் லூமியர் சகோதரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது.

2. 1914-இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது.

264) டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து எங்கு காட்டினார்?

A) சென்னை

B) பம்பாய்

C) கொல்கத்தா

D) டெல்லி

விளக்கம்: டுபாண்ட் என்பவர் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கதைப்படத்தைக் கொண்டு வந்து பம்பாயில் காட்டினார். அந்தப் படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை’என்பதாகும். அந்த மௌனப்படம்தான் இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் ஆகும். அதன்பின் பெரும்பாலும் மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே இங்கு திரையிடப்பட்டன. இக்கதைப்படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கூடியது. அதனால் இந்தியாவில் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் எழுந்தது.

265) ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்தவர் யார்?

A) ஏ.நாராயணன்

B) எச்.எம்.ரெட்டி

C) தாதா சாகேப் பால்கே

D) வெங்கையா

விளக்கம்: தாதா சாகேப் பால்கே தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.

266) பொருத்துக.

அ. சிவப்பு- 1. பாலுணர்வு

ஆ. கருநீலம்- 2. சினம்

இ. பச்சை- 3. செல்வம்

ஈ. இளஞ்சிவப்பு- 4. குளிர்ச்சி

A) 3, 1, 2, 4

B) 4, 2, 1, 3

C) 1, 3, 4, 2

D) 2, 4, 3, 1

விளக்கம்: சிவப்பு- சினம், அபாயம், நெருப்பு

கருநீலம்-குளிர்ச்சி, களங்கமின்மை, பயபக்தி, அடிமை, வானம், கடல்

பச்சை- செல்வம், தாராளம், அமைதி, மகிழ்ச்சி, ஓய்வு

இளஞ்சிவப்பு- காதல், பாலுணர்வு.

267) திரைப்படங்களில் வண்ணத்தாளைக் காட்டி படம்பிடிக்கும் முறை உள்ளது. இதில் கருநீல நிறத்திற்கு பொருந்தாதது எது?

A) குளிர்ச்சி

B) பயபக்தி

C) அடிமை

D) ஓய்வு

விளக்கம்: சிவப்பு – சினம், அபாயம், நெருப்பு

கருநீலம்- குளிர்ச்சி, களங்கமின்மை, பயபக்தி, அடிமை, வானம், கடல்

பச்சை- செல்வம், தாராளம், அமைதி, மகிழ்ச்சி, ஓய்வு

இளஞ்சிவப்பு- காதல், பாலுணர்வு.

268) கூற்று: சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன.

காரணம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது. அதனால், சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன.

269) தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் எது?

A) ராஜா ஹரிச்சந்திரா

B) ஆலம் ஆரா

C) கீசகவதம்

D) காளிதாஸ்

விளக்கம்: மும்பையில் தயாரான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. புராணப் படங்களின் வரவேற்பைக் கண்ட நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவி, 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

270) கூற்று: திரைப்படங்களில் புராணக்கதைகளும், மாயாஜாலக் கதைகளுமே பெரிதும் தயாரிக்கப்பட்டன.

காரணம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத்துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது. அதனால், சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துக்களையோ, காந்திய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. எனவே, புராணக்கதைகளும், மாயாஜாலக் கதைகளுமே பெரிதும் தயாரிக்கப்பட்டன.

271) ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் யார்?

A) ஏ.நாராயணன்

B) எச்.எம்.ரெட்டி

C) தாதா சாகேப் பால்கே

D) நடராஜர்

விளக்கம்: ஏ.நாராயணன் எனபவர் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களை தயாரித்தார். அதே காலகட்டத்தில் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

272) கூற்றுகளை ஆராய்க.

1. திரையரங்குளில் மௌனப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இடையே படத்தை நிறுத்தி, வெள்ளைத் திரைக்கு முன் அமைந்த மேடையில் மல்யுத்தம், நடனங்கள் முதலியவற்றை நடத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது.

2. இக்காலத்தில் ‘கதைசொல்லிகள்’ என்னும் ஒருவகைக் கலைஞர்கள் உருவாயினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திரையரங்குளில் மௌனப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இடையே படத்தை நிறுத்தி, வெள்ளைத் திரைக்கு முன் அமைந்த மேடையில் மல்யுத்தம், நடனங்கள் முதலியவற்றை நடத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது.

2. இக்காலத்தில் ‘கதைசொல்லிகள்’ என்னும் ஒருவகைக் கலைஞர்கள் உருவாயினர்.

273) கூற்று: 1918-ஆம் ஆண்டில் இந்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை செயல்படுத்தியது.

காரணம்: திரைப்படக் காட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதைக் கண்ட ஆங்கில அரசு இந்த வெகுசனத் தொடர்புச் சாதனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: திரைப்படக் காட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதைக் கண்ட ஆங்கில அரசு இந்த வெகுசனத் தொடர்புச் சாதனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்தது. தொடர்ந்து இந்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918-ஆம் ஆண்டில் செயல்படுத்தியது.

275) 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. முதல் தலித் நாடகமாக கருதப்படுவது ‘பலி ஆடுகள்’ ஆகும். இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) கே.ஏ.குணசேகரன்

B) அ.ராமசாமி

C) பிரேம்

D) இரா.ராஜு

விளக்கம்: 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் கே.ஏ.குணசேகரன் ஆவார். அவரது ‘பலி ஆடுகள்’ முதல் தலித் நாடகமாகக் கருதப்படுகிறது. அ.ராமசாமி, பிரேம், இரா.ராஜு போன்றவர்கள் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர்.

276) கூற்று: பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு 1990களின் தொடக்கத்தில் உருவானது.

காரணம்: சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: சமூக மாற்றத்திற்கேற்ப கலை-இலக்கிய வடிவங்களின் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு 1990களின் தொடக்கத்தில் உருவானது. அதனால் நாடகத்துறையில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு உருவாவதற்கான சூழல் தோன்றியது.

277) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் காந்தி கிராமத்தில் தோன்றிய நாடகக்குழு எது?

A) நாடகச் சங்கம்

B) தளிர்

C) சுதேசி

D) தீட்சண்யா

விளக்கம்: சென்னை- ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்.

திருவண்ணாமலை- தீட்சண்யா

278) 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் என்ன?

A) எலக்ட்ரிக் தியேட்டர்

B) எடிசன் தியேட்டர்

C) வார்விக் தியேட்டர்

D) எட்வர்டு தியேட்டர்

விளக்கம்: 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர் ஆகும்.

279) எந்த ஆண்டு திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத்தைத் தொடங்கினார்?

A) 1897

B) 1898

C) 1900

D) 1905

விளக்கம்: 1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனத்தைத் தொடங்கினார். தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ இதுவே.

280) கூற்று: நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

காரணம்: புராணப் படங்களின் வரவேற்பு.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: மும்பையில் தயாரான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. புராணப் படங்களின் வரவேற்பைக் கண்ட நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவினார். இது 1916-இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தது. தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

281) மௌனக்குரல் என்ற குழுவை நடத்தியவர் யார்?

A) அறந்தை நாராயணன்

B) ஞாநி

C) அ.ராமசாமி

D) அ.மங்கை

விளக்கம்: அறந்தை நாராயணன் – மூர் மார்க்கெட்

ஞாநி- பலூன், நாங்கள்

அ.ராமசாமி- பல்லக்குத்தூக்கிகள்

அ.மங்கை- மௌனக்குரல் குழுவை நடத்தியவர்.

282) திரைப்படங்களில் வண்ணத்தாளைக் காட்டி படம்பிடிக்கும் முறை உள்ளது. இதில் கருப்பு நிறத்திற்கு பொருந்தாதது எது?

A) துக்கம்

B) பயம்

C) பரிதாபம்

D) கடல்

விளக்கம்: கருப்பு – துக்கம், பயம், பரிதாபம், கள்ளம், கவலை.

283) உணர்ச்சிகரமான வசனத்திற்காக அறியப்பட்டவர் யார்?

A) சிவாஜி கணேசன்

B) எம்.ஜி.ஆர்

C) ஜெமினி கணேசன்

D) ஜெய்சங்கர்

விளக்கம்: உணர்ச்சிகரமான வசனத்திற்காக சிவாஜி கணேசனும், அதன் மறுதiலையாக மக்களின் துயரங்களைப் போக்கும் விதமான பாத்திரங்களுக்காக எம்.ஜி.ஆர்-ம் அறியப்பட்டார்கள். இவ்விரு ஆளுமைகளும் ஒரே காலகட்டத்தில் நாயகர்களாக வலம் வந்தது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் போன்றோரும் அக்கால கட்டத்தில் நாயகர்களாக நன்கு அறியப்பட்டனர்.

284) சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் சிறந்த புராணப்பட இயக்குநர் என்ற பெயரைப் பெற்றுப் பல படங்களை இயக்கியவர் யார்?

A) ஸ்ரீதர்

B) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

C) பீம்சிங்

D) ஏ.பிநாகராஜன்

விளக்கம்: ஏ.பி.நாகராஜன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் மூலம் சிறந்த புராணப்பட இயக்குநர் என்ற பெயரைப் பெற்றுப் பல படங்களை இயக்கினார்.

285) கூற்று: எழுத்துக்களை விட திரைப்படங்கள் கலைத்தன்மை வாய்ந்தவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

காரணம்: எழுத்துக்களால் வெளிப்படுத்த முடியாத எதார்த்த உலகத்தைக் காட்சிகளால் எளிதில் காட்ட முடியும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கற்பனைக் கதையைத் திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும், புதினம் ஒன்றைத் திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும் எழுத்துக்களால் வெளிப்படுத்த முடியாத எதார்த்த உலகத்தைக் காட்சிகளால் எளிதில் காட்ட முடியும். எழுத்துக்களுக்கு இல்லாத ஒரு வசதி காட்சிகளுக்கு உண்டு. எனவே திரைப்படங்கள் கலைத்தன்மை வாய்ந்தவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

286) மேடை நாடக ஆசிரியராகத் திகழ்ந்த கே.பாலசந்தர் எந்த படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராகப் புகழ் பெற்றார்?

A) கற்பகம்

B) உன்னைப்போல் ஒருவன்

C) காதலிக்க நேரமில்லை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மேடை நாடக ஆசிரியராகத் திகழ்ந்த கே.பாலசந்தர் ‘நீர்க்குமிழி’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராகப் புகழ் பெற்றார்.

287) சென்னையில் எங்கு திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டது?

A) அடையாறு

B) சாந்தோம்

C) வேளச்சேரி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதன் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதிய பாணி தமிழ்த் திரைபடத்தில் வெளிப்படத் தொடங்கியது.

288) கூற்றுகளை ஆராய்க.

1. மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோர் எதார்த்த பாணியில் அமைந்த திரைப்படங்களை இயக்கினர்.

2. பாரதிராஜா வெளிப்புறப் படப்பிடிப்பை முதன்மையாக்கிக் கிராமியப் படங்களை உருவாக்கினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோர் எதார்த்த பாணியில் அமைந்த திரைப்படங்களை இயக்கினர்.

2. பாரதிராஜா வெளிப்புறப் படப்பிடிப்பை முதன்மையாக்கிக் கிராமியப் படங்களை உருவாக்கினார்.

289) இளையராஜா எந்த படத்திற்கு அமைத்த இசை மக்களால் பெரிதும் பேசப்பட்டது?

A) மௌனராகம்

B) அன்னக்கிளி

C) நீர்க்குமிழி

D) கற்பகம்

விளக்கம்: கிராமிய இசையினை எதார்த்தப் பாணியில் கொண்டுவந்து தமிழ்த் திரையில் ஒலிக்கச் செய்தார். ‘அன்னக்கிளி’ படத்திற்கு அமைத்த இசை மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

290) இந்தியாவில் வர்த்தகரீதியில் முதல் இடத்தில் இருப்பது எம்மொழித்திரைப்படங்கள்?

A) தெலுங்கு

B) தமிழ்

C) இந்தி

D) ஆங்கிலம்

விளக்கம்: எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்ப் படத் தயாரிப்பு, முன்பில்லாத அளவு அதிகரித்தது. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தித் திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இராண்டாமிடத்தில் இருப்பது தமிழ்த் திரைப்படங்கள்தான்.

291) ‘மௌனராகம்’ என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதைப் பெற்றது. இத்திரைப்படம் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?

A) பாக்யராஜ்

B) மணிரத்தினம்

C) கே.பாலசந்தர்

D) ஸ்ரீதர்

விளக்கம்: எண்பதுகளின் குறிப்பிடத்தக்க மற்றுமோர் இயக்குநராகக் கருதப்படுபவர் மணிரத்னம். அவரது ‘மௌனராகம்’ சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதைப் பெற்றது.

292) திரைப்படத்தில் ஆரஞ்சு என்னும் வண்ணம் கீழ்க்காணும் எதைக் குறிக்கவில்லை?

A) வேடிக்கை

B) விளையாட்டு

C) செழிப்பு

D) நம்பிக்கை

விளக்கம்: ஆரஞ்சு- வேடிக்கை, விளையாட்டு, செழிப்பு, நகைச்சுவை.

ஊதா- பெருமை, பிரகாசம், பயபக்தி, கடவுள், நம்பிக்கை.

293) கூற்று: இந்திய அரங்கில் தமிழ் நாடகத்திற்கு ஓர் அடையாளம் கிடைத்துள்ளது.

காரணம்: மு.இராமசுவாமி என்பவர் துர்க்கிர அவலம் என்னும் நாடகத்தை பெங்களுரில் நடந்த தென் மண்டல நாடக விழாவிலும், டெல்லியில் நடந்த தேசிய விழாவிலும் அரங்கேற்றினார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தேசிய சங்கீத நாடக அகாதெமி நடத்திய போட்டியில் மு.இராமசுவாமி, துர்க்கிர அவலம் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் பெங்களுரில் நடந்த தென் மண்டல நாடகவிழாவிலும், டெல்லியில் நடந்த தேசிய விழாவிலும் இதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் இந்திய அரங்கில் தமிழ் நாடகத்திற்கு ஓர் அடையாளம் கிடைத்தது.

294) நாட்டார் அரங்கக் கலைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) இக்கலை மனிதர்களின் வாழ்க்கைச் சூழல், தெய்வ வழிபாடு, அன்றாட வாழ்க்கைச் சிக்கல் இவற்றின் கூட்டுப்படைப்பாக வெளிப்படுகின்றன.

B) இவை வட்டாரத் தன்மை கொண்டவை.

C) இக்கலைகள் 4 வகைப்படும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படும் நாட்டார் அரங்கக் கலைகள் அதன் தன்மைக்கேற்ப,

1. சடங்குசார் கலைகள்

2. பாடல்சார் கலைகள்

3. கருவிசார் கலைகள்

என வகைப்படுத்துவர்.

295) கூற்றுகளை ஆராய்க.

1. பொன்னர் சங்கர் கதைப்பாடல் என்பது இடைக்காலத்தில் வாழ்ந்த பொன்னர் சங்கர் என்ற சகோதரர்களின் வரலாற்றினைக் கதைப்பாடலாக நிகழ்த்திக் காட்டுவதாகும்.

2. திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இக்கதைப்பாடல் நிகழ்த்தப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பொன்னர் சங்கர் கதைப்பாடல் என்பது இடைக்காலத்தில் வாழ்ந்த பொன்னர் சங்கர் என்ற சகோதரர்களின் வரலாற்றினைக் கதைப்பாடலாக நிகழ்த்திக் காட்டுவதாகும்.

2. திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இக்கதைப்பாடல் நிகழ்த்தப்படுகிறது.

296) தென்னிந்தியாவின் முதல் ஒலிப்பதிவுக் கூடம் எங்கு நிறுவப்பட்டது?

A) மும்பை

B) ஹைதராபாத்

C) திருவனந்தபுரம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: முதல் நான்கு ஆண்டுகள் வரை சென்னையில் ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லாததால் தமிழத் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. 1934ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது.

297) பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் போன்ற படங்களை இயக்கி புகழுடன் விளங்கியவர் யார்?

A) ஏ.பி.நாகராஜன்

B) ஸ்ரீதர்

C) பீம்சிங்

D) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

விளக்கம்: பீம்சிங்- பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும்.

ஏ.பி.நாகராஜன்- சரஸ்வதி சபதம்

ஸ்ரீதர் – கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை

கே.எஸ்கோபாலகிருஷ்ணன் – கற்பகம்.

298) நாடகக்குழுக்கள் மற்றும் அதன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?

A) கூத்துப்பட்டறை- சென்னை

B) நிஜநாடக இயக்கம்- மதுரை

C) பரீக்ஷா- சென்னை

D) வீதி- தஞ்சை

விளக்கம்: வீதி – சென்னை

299) எந்த ஆண்டு தணிக்கைத்துறை செயல்படுத்தப்பட்டது?

A) 1902

B) 1904

C) 1914

D) 1918

விளக்கம்: திரைப்படக் காட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதைக் கண்ட ஆங்கில அரசு இந்த வெகுசனத் தொடர்புச் சாதனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்தது. இந்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறை 1918ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது.

300) எந்த ஆண்டு சுகுண விலாச சபையை பம்மல் சம்பந்தனார் நிறுவினார்?

A) 1890

B) 1891

C) 1892

D) 1893

விளக்கம்: 1891-ஆம் ஆண்டு சுகுண விலாச சபையை நிறுவிய பம்மல் சம்பந்தனார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேடைகளில் பல புதுமைகளைக் கையாண்டார்.

301) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் மதுரையில் தோன்றிய நாடகக்குழு எது?

A) நாடகச் சங்கம்

B) தளிர்

C) சுதேசி

D) தீட்சண்யா

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா.

302) கூற்று: தமிழ்த்திரைப்படங்கள் இசைக்கும், பாட்டுக்மே முதன்மை அளித்து வந்த நிலையை மாற்றிப் பாத்திரப் பேச்சுக்கு முக்கியத்துவம் தந்தன.

காரணம்: ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவர் எல்லிஸ்.ஆர்.டங்கன்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவர் எல்லிஸ்.ஆர்.டங்கன் ஆவார். இம்முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ்த்திரைபடங்கள் இசைக்கும், பாட்டுக்குமே முதன்மை அளித்து வந்த நிலையை மாற்றிப் பாத்திரப் பேச்சுக்கு முக்கியத்துவம் தந்தன.

303) கூற்றுகளை ஆராய்க.

1. தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் – ஆட்டக்கரகம்

2. தொழில்முறைக் கரகம் – சக்திக்கரகம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் – சக்திக்கரகம்

தொழில்முறைக் கரகம் – ஆட்டக்கரகம்.

304) தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் ‘கீசகவதம்’ ஆகும். இத்திரைப்படம் யாரால் தயாரிக்கப்பட்டது?

A) தாதா சகேப் பால்கே

B) ஏ.நாராயணன்

C) சுப்பையா

D) நடராஜர்

விளக்கம்: மும்பையில் தயாரான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. புராணப் படங்களின் வரவேற்பைக் கண்ட நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவினார், இது 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தது. தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

305) 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) கீழ்க்காணும் யாரால் கட்டப்பட்டது?

A) லுமியர் சகோதரர்கள்

B) எட்வர்டு

C) வெங்கய்யா

D) வார்விக் மேஜர்

விளக்கம்: 1900-இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர் ஆகும்.

306) தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தவர் யார்?

A) சங்கரதாஸ் சுவாமிகள்

B) பம்மல் சம்பந்தனார்

C) பரிதிமாற்கலைஞர்

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: நாடகத்துறையின் புதிய பரிணாமத்திற்குக் காரணமாக அமைந்தவர்களாகச் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற்கலைஞர் ஆகியோரைக் குறிப்பிடலாம். சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலைநாட்டு உத்திகளையும் இணைத்துப் புதிய போக்கினை உருவாக்கித் தந்தார். தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தார்.

307) இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’.இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யார்?

A) ஏ.நாராயணன்

B) அர்தெஷிர் இரானி

C) எச்.எம்.ரெட்டி

D) தாதா சாகேப் பால்கே

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

308) கூற்றுகளை ஆராய்க.

1. 1935 முதல் சமூக சீர்திருத்தக் கருத்துகளைக் கதைகளாக் கொண்ட படங்கள் வெளிவந்தன.

2. கௌசல்யா என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாக அறியப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1935 முதல் சமூக சீர்திருத்தக் கருத்துகளைக் கதைகளாக் கொண்ட படங்கள் வெளிவந்தன.

2. கௌசல்யா என்ற திரைப்படம் இக்கதையமைப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாக அறியப்படுகிறது.

309) கூற்று: ஒத்துழையாமை இயக்க காலத்தில் புராணக் கதைகளும், மாயாஜாலக் கதைகளுமே பெரிதும் தயாரிக்கப்பட்டன.

காரணம்: தேசியக் கருத்துகளையோ, காந்திய சமூக சீர்த்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் திரைப்படங்களிலிருந்து வெட்டப்பட்டன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஆங்கிலேயரின் காலத்தில் காவல் ஆணையரின்கீழ் செயல்பட்ட தணிக்கைத் துறை ஒத்துழையாமை இயக்கத்தால் தன் சட்டங்களைக் கடுமையாக்கியது. அதனால், சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துகளையோ, காந்திய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. எனவே, புராணக்கதைகளும், மாயாஜாலக் கதைகளுமே பெரிதும் தயாரிக்கப்பட்டன.

310) கூற்று: தமிழ் நாடகங்களில் இருந்த பாடத் தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் திரைப்படங்களை நாடினர்.

காரணம்: தமிழ்நாட்டில் பேசும்படம் தோன்றியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தமிழ்நாட்டில் பேசும்படம் தோன்றியதும் தமிழ் நாடகங்களில் இருந்த பாடத் தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் திரைப்படங்களை நாடினர்.

311) கூற்றுகளை ஆராய்க.

1. பாட்டும், இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகளாக விளங்கின.

2. ஒரே படத்தில் 50, 60 பாடல்கள் இருப்பது சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தமிழ்நாட்டில் பேசும்படம் தோன்றியதும் தமிழ் நாடகங்களில் இருந்த பாடத் தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் திரைப்படங்களை நாடினர். அக்காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலும் மேடை நாடகத் தன்மையே மேலோங்கியிருந்தது. பாட்டும், இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகளாக விளங்கின. ஒரே படத்தில் 50, 60 பாடல்கள் இருப்பது சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

312) முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டேன்ஜுன்’ ஆகும். இதனை தயாரித்தவர் யார்?

A) அர்தேஷிர் இரானி

B) டுபாண்ட்

C) லூமியர் சகோதரர்கள்

D) வார்னர் சகோதரர்கள்

விளக்கம்: 1926-இல் ‘வார்னர்’ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டேன்ஜுன்’. அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ வெளிவந்தது.

313) கூற்று: தமிழ்த்திரைப்படங்களில் இலக்கியத்தமிழ் கொண்ட வசனங்கள் முதன்மை பெற்று, வசனம் எழுதுபவர்கள் கவனம் பெற்றனர்.

காரணம்: மணிமேகலைக்குச் சோமையாஜுலுவும், சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதி, தமிழ்த்திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: மணிமேகலைக்குச் சோமையாஜுலுவும், சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதி, தமிழ்த்திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். தமிழ்த்திரைப்படங்களில் இலக்கியத்தமிழ் கொண்ட வசனங்கள் முதன்மை பெற்று, வசனம் எழுதுபவர்கள் கவனம் பெற்றனர்.

314) 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் யார்?

A) கே.ஏ.குணசேகரன்

B) அ.ராமசாமி

C) பிரேம்

D) இரா.ராஜு

விளக்கம்: 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் கே.ஏ.குணசேகரன் ஆவார். அவரது ‘பலி ஆடுகள்’ முதல் தலித் நாடகமாகக் கருதப்படுகிறது. அ.ராமசாமி, பிரேம், இரா.ராஜு போன்றவர்கள் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர்.

315) கூற்றுகளை ஆராய்க.

1. படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இருட்டில் திரையோரமாக நின்றவாறே ஒலிப்பெருக்குக் குழாய் மூலமாக உரத்த குரலில் காட்சிச் சூழலை வருணித்தும், தேவையான இடங்களில் சுவையான வசனத்தையும் பேசிக் கதை கூறுபவர்களே கதைசொல்லிகள்.

2. திரைப்படக் காட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதைக் கண்ட ஆங்கில அரசு இந்த வெகுசனத் தொடர்புச் சாதனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்தது. தொடர்ந்து இந்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918-ஆம் ஆண்டில் செயல்படுத்தியது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இருட்டில் திரையோரமாக நின்றவாறே ஒலிப்பெருக்குக் குழாய் மூலமாக உரத்த குரலில் காட்சிச் சூழலை வருணித்தும், தேவையான இடங்களில் சுவையான வசனத்தையும் பேசிக் கதை கூறுபவர்களே கதைசொல்லிகள்.

2. திரைப்படக் காட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதைக் கண்ட ஆங்கில அரசு இந்த வெகுசனத் தொடர்புச் சாதனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்தது. தொடர்ந்து இந்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918ஆம் ஆண்டில் செயல்படுத்தியது.

316) பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு எப்போது உருவானது?

A) 1970

B) 1980

C) 1990

D) 1960

விளக்கம்: சமூக மாற்றத்திற்கேற்ப கலை-இலக்கிய வடிவங்களின் போக்குகளிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், சிறுவர் போன்றோர் பல்வேறு முறைகளில் ஒடுக்கப்படுவதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்கும் போக்கு 1990களின் தொடக்கத்தில் உருவானது.

317) இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேயின் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் எதனை அடிப்படையாகக் கொண்டவை?

A) சிறுகதைகள்

B) நாடகங்கள்

C) இலக்கியம்

D) வாசனகவிதைகள்

விளக்கம்: இந்தியத் திரைப்பட வரலாற்றில் சிறுகதை அல்லது புதினத்தின் கதையைத் திரைமொழிக்கேற்ப வடிவ மாற்றம் செய்து திரைப்படங்களாக்கினர். இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேயின் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் புதினங்களையும், சிறுகதைகளையும் அடிப்படையாகக்கொண்டவை ஆகும்.

318) எந்த நூற்றாண்டில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமைகள் தோன்றின?

A) 17, 18

B) 16, 17

C) 18, 19

D) 20, 21

விளக்கம்: 17, 18ஆம் நூற்றாண்டில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமைகள் தோன்றின.

319) கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலைநாட்டு உத்திகளையும் உருவாக்கித் தந்தவர் யார்?

A) சங்கரதாஸ் சுவாமிகள்

B) பம்மல் சம்பந்தனார்

C) பரிதிமாற்கலைஞர்

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: நாடகத்துறையின் புதிய பரிணாமத்திற்குக் காரணமாக அமைந்தவர்களாகச் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற்கலைஞர் ஆகியோரைக் குறிப்பிடலாம். சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலைநாட்டு உத்திகளையும் இணைத்துப் புதிய போக்கினை உருவாக்கித் தந்தார்.

320) கூற்றுகளை ஆராய்க.

1. இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது.

2. எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது.

2. எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார்.

321) இந்தியாவில் முதல் பேசும்படம் எந்த மொழியில் தயாரிக்கப்பட்டது?

A) தெலுங்கு

B) ஆங்கிலம்

C) மலையாளம்

D) இந்தி

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.

322) சென்னையில் முதல் சலனப்படக் காட்சி எங்கு திரையிடப்பட்டது?

A) சென்னை பல்கலைக்கழகம்

B) சென்னை சென்ட்ரல்

C) விக்டோரியா பப்ளிக் ஹால்

D) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

விளக்கம்: இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார். சென்னையில் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் இக்காட்சி காட்டப்பட்டதைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இவையே திரைப்படங்களுக்குத் தொடக்கமாக அமைந்தன.

323) சலனப்படத்தை முதலில் கண்டுபிடித்தவர் யார்?

A) அலெக்சாண்டர் பிளம்மிங்

B) எட்வர்ட்

C)லூமியர் சகோதரர்கள்

D) சர் தாமஸ் மன்ரோ

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

324) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் தஞ்சையில் தோன்றிய நாடகக்குழு எது?

A) ஆடுகளம்

B) யவனிகா

C) அரூபம்

D) அரங்கம்

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை-சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல்,

தஞ்சை- அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா

325) அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்து கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் நாடகக்கலை வளர உறுதுணையாக இருந்தனர்.

326) தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் ‘கீசகவதம்’ என்னும் மௌனப்படம் ஆகும். இது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?

A) 1916

B) 1914

C) 1919

D) 1921

விளக்கம்: மும்பையில் தயாரான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்ற புராணப் படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. புராணப் படங்களின் வரவேற்பைக் கண்ட நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவினார், இது 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தது. தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

327) தமிழ்த் திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தவர் யார்?

A) வடுவூர் துரைசாமி

B) காசி விஸ்வநாதர்

C) நடராஜர்

D) எல்லிஸ் ஆர்.டங்கன்

விளக்கம்: எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ்த்திரைப்படங்களில் 50, 60 பாடல்கள் என்றிருந்த நிலையை மாற்றி ஆறு அல்லது எட்டுப் பாடல்களாகக் குறைத்தார். வெளிப்புறப் படப்பிடிப்பை அதிகம் பயன்படுத்தினார். ஹாலிவுட் பாணியில் கதைகூறும் முறையைத் தமிழ்ப்படங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

328) யார் முதலமைச்சராக இருந்தபோது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது?

A) காமராசர்

B) இராஜாஜி

C) ஓமந்தூர் ராமசாமி

D) கக்கன்

விளக்கம்: நாடக மேடைகளில் சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த சூழலில், திரைப்படக் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களின்மீதும் கவனம் செலுத்தியது. இராஜாஜி முதல்வராக இருந்த இக்காலத்தில் தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்தான் தியாகபூமி, மாத்ரூபூமி, விமோசனம், தேச முன்னேற்றம் போன்ற நாட்டுப்பற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன.

329) கூற்று: பாட்டும், இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகளாக விளங்கின.

காரணம்: ஒரே படத்தில் 50, 60 பாடல்கள் இருப்பது சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தமிழ்நாட்டில் பேசும்படம் தோன்றியதும் தமிழ் நாடகங்களில் இருந்த பாடத் தெரிந்த நடிகர்கள், வசனகர்த்தாக்கள், இசையமைப்பாளர்கள் முதலிய கலைஞர்கள் திரைப்படங்களை நாடினர். அக்காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலும் மேடை நாடகத் தன்மையே மேலோங்கியிருந்தது. பாட்டும், இசையும் தொடக்க காலத் திரைப்படங்களின் முதன்மை கூறுகளாக விளங்கின. ஒரே படத்தில் 50, 60 பாடல்கள் இருப்பது சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

330) எந்த ஆண்டு முதன் முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு ‘டேன்ஜுன்’ என்ற படம் வெளிவந்தது?

A) 1918

B) 1921

C) 1926

D) 1928

விளக்கம்: 1926-இல் ‘வார்னர்’ சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு முதன்முதலாகப் பேச்சு, பாடல் இல்லாமல் வெறும் சப்தத்தை மட்டும் கொண்டு வெளிவந்த படம் ‘டோன்ஜுன்’ ஆகும். அதன்பின் உரையாடலையும் பாடல்களையும் கொண்டு உலகில் முதல் பேசும்படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ வெளிவந்தது.

331) சென்னையில் ___________________ என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

A) அலெக்சாண்டர் பிளம்மிங்

B) எட்வர்ட்

C) லுமியர் சகோதரர்கள்

D) சர் தாமஸ் மன்ரோ

விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வலிமையான காட்சி ஊடகம் திரைப்படம். 1895-இல் லூமியர் சகோதரரர்களால் சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 1896-ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் எட்வர்டு என்ற ஆங்கிலேயர் 1897-ஆம் ஆண்டு சில நிமிடங்களே ஓடக்கூடிய முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டுக் காட்டினார்.

332) 2000-க்குப் பிறகு விளிம்புநிலைக் கருத்துக்களோடு மேடை ஏறிய நாடகங்களான ஆஷா பாரதியின் நாடகங்கள் கீழக்காணும் யாரைப் பற்றி பேசின?

A) தாழ்த்தப்பட்டோர்

B) பெண்கள்

C) திருநங்கைகள்

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: 2000-க்குப் பிறகு விளிம்புநிலைக் கருத்துக்களோடு மேடை ஏறிய நாடகங்களான ஆஷா பாரதியின் நாடகங்கள் திருநங்கைகள் குறித்துப் பேசின. அதற்கெனவே ‘கண்ணாடிக் கலைக்குழு’ நாடக அமைப்பு செயல்பட்டது.

333) போர், சாதி, சுற்றுச்சூழல், நகரமயமாதல் போன்றவற்றில் பெண்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மேடைகளில் நிகழ்த்திக் காட்டியவர் யார்?

A) மு.ஜீவா

B) இன்குலாப்

C) பிரசன்னா ராமசாமி

D) தி.க.சண்முகனார்

விளக்கம்: பெண்ணிய அரங்கச் செயல்பாடுகளில் இயங்கியவர்களில் முக்கியமானவர்களாக அ.மங்கை, மு.ஜீவா, பிரசன்னா ராமசாமி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். அ.மங்கை என்பவர் இன்குலாப் எழுதிய ‘ஒளவை’, சே.இராமானுஜம் எழுதிய ‘மௌனக்குறம்’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார். மு.ஜீவா பல்வேறு நாடகக் குழுக்களில் நடிகையாகச் செயல்பட்டதோடு ஐரோப்பிய பெண்ணிய நாடகங்களிலிருந்து சில பகுதிகளைக் காட்சிகளாக நிகழ்த்திக் காட்டியுள்ளார். மற்றொரு பெண் நாடக இயக்குநரான பிரசன்னா ராமசாமி போர், சாதி, சுற்றுச்சூழல், நகரமயமாதல் போன்றவற்றில் பெண்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மேடைகளில் நிகழ்த்திக் காட்டினார்.

334) _______________களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது?

A) 80

B) 70

C) 90

D) 60

விளக்கம்: 90களின் தொடக்கத்தில் தலித்திய அரங்கம் கவனம் பெற்றது. குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்தவர் கே.ஏ.குணசேகரன் ஆவார். அவரது ‘பலி ஆடுகள்’ முதல் தலித் நாடகமாகக் கருதப்படுகிறது. அ.ராமசாமி, பிரேம், இரா.ராஜு போன்றவர்கள் தலித்திய பெண்ணிய உள்ளடக்கங்களோடு நாடகங்களை மேடையேற்றினர்.

335) வெள்ளை வட்டம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாதல் சர்க்கார்

B) விஜய் டெண்டுல்கர்

C) கிரிஷ் கர்னாட்

D) பெர்டோல்ட் பிரெகட்

விளக்கம்: எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப்படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் மற்றும் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

336) பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின. இதில் சென்னைக்கு பொருந்தாதது எது?

A) ஆடுகளம்

B) யவனிகா

C) அரூபம்

D) அரங்கம்

விளக்கம்: சென்னை – ஆடுகளம், யவனிகா, பல்கலை அரங்கம், அரூபம்

மதுரை- சுதேசி.

பாண்டிச்சேரி- கூட்டுக்குரல், தலைக்கோல், தஞ்சை – அரங்கம்

காந்தி கிராமத்தில்- தளிர்.

திருச்சி- நாடகச் சங்கம்

திருவண்ணாமலை- தீட்சண்யா.

337) எந்த ஆண்டுகளின் தஞ்சை, புதுவை, மதுரை முதலான பல்கலைக்கழகங்களில் நாடகத்துறைகள் தொடங்கப்பட்டன?

A) 1990

B) 1980

C) 1970

D) 1960

விளக்கம்: 1970-களில் தஞ்சை, புதுவை, மதுரை முதலான பல்கலைகழகங்களில் நாடகத்துறைகள் தொடங்கப்பட்டன. முதுகலைப்பாடத்தில் நாடகம் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை தோன்றியதன் விளைவாகப் பல நவீன நாடகக்குழுக்கள் தோன்றின.

338) 1990 ஜுலையில் ரெங்கராஜனால் நாடகத்திற்கெனத் தொடங்கப்பெற்ற ______________ என்னும் இதழ் பத்து ஆண்டுகளில் நாற்பது இதழ்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது?

A) நாடகவியல்

B) நாடகவெளி

C) நாடககூத்து

D) நாடகத் தமிழ்

விளக்கம்: 1990 ஜுலையில் ரெங்கராஜனால் நாடகத்திற்கெனத் தொடங்கப்பெற்ற நாடகவெளி என்னும் இதழ் பத்து ஆண்டுகளில் நாற்பது இதழ்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

339) அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்து எந்த நூலின் மெய்ப்பாட்டியல் வழியாக விரிவான செய்திகளை அறிய முடிகிறது?

A) தொல்காப்பியம்

B) அகத்தியம்

C) நன்னூல்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் நாடகக்கலை வளர உறுதுணையாக இருந்தனர்.

340) எந்த காலகட்டத்தில் நாடகம் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதில் கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன்ற சிறுபத்திரிக்கைகள் குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்தன?

A) 1980

B) 1970

C) 1990

D) 1960

விளக்கம்: 1980-களின் காலகட்டத்தில் நாடகம் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதில் கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன்ற சிறுபத்திரிக்கைகள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன. கணையாழியிலும் அவ்வப்போது நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளும் விமரிசனக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன.

341) திரைப்படத்தின் உயிர் என்று கருதப்படுவது எது?

A) ஒலியமைப்பு

B) இசை

C) கதை

D) நடிகர்கள்

விளக்கம்: ஒரு நல்ல திரைப்படம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அதனால்தான் ‘கதை’ திரைப்படத்தின் உயிர் என்று கருதப்படுகிறது.

342) ‘நாட்’ என்ற சொல்லின் சரியான தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க?

A) தவறு

B) எதிர்மறை

C) முடிச்சு

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: திரைக்கதையின் உயிர்மூச்சு முடிச்சு ஆகும். கதையின் விறுவிறுப்பு கதைமுடிச்சில் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘நாட்’ என்பர். காப்பியம், புதினம் முதலிய எல்லாவகைக் கதை இலக்கியங்களுக்கும் இந்த முடிச்சு அடிப்படையானது. அதனால் ஒரு கதையில் முடிச்சு எது என்பதை அறிதல் வேண்டும்.

343) கூற்றுகளை ஆராய்க.

1. சட்டகம் என்பது திரைப்படத்தின் அமைப்பு ரீதியான ஓர் அலகு ஆகும்.

2. காட்சித்துணிப்பு அண்மைக் காட்சி, இடைநிலைக் காட்சி, சேய்மைக் காட்சி, முழுக்காட்சி எனப் பலவகையாக அமையும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சட்டகம் என்பது திரைப்படத்தின் அமைப்பு ரீதியான ஓர் அலகு ஆகும்.

2. காட்சித்துணிப்பு அண்மைக் காட்சி, இடைநிலைக் காட்சி, சேய்மைக் காட்சி, முழுக்காட்சி எனப் பலவகையாக அமையும்.

344) கூற்றுகளை ஆராய்க.

1. எந்தப் பகுதியை மையப்படுத்துகிறமோ அதுமட்டும் தெளிவாகத் தெரியும் – அண்மைக்காட்சி

2. இடுப்புவரை எடுக்கப்படும் காட்சி – இடைநிலைக்காட்சி.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. எந்தப் பகுதியை மையப்படுத்துகிறமோ அதுமட்டும் தெளிவாகத் தெரியும் – அண்மைக்காட்சி

2. இடுப்புவரை எடுக்கப்படும் காட்சி – இடைநிலைக்காட்சி.

345) துணிப்புகளின் தலைமையாக விளங்குவது எது?

A) அண்மைக்காட்சி

B) இடைநிலைக்காட்சி

C) சேய்மைக்காட்சி

D) முழுக்காட்சி

விளக்கம்: துணிப்புகளின் தலைமையாக சேய்மைக்காட்சி விளங்குகிறது. நகரத்தையோ, நிலப்பகுதியையோ காண்பிப்பதற்கு ஏற்ற துணிப்பு இது. கதையில் வரும் கட்டடத் தொழிலாளர் தாங்கள் கட்டிய கட்டடங்களை நினைத்துப் பார்க்கும்போது, சேய்மைக்காட்சியில் அனைத்துக் கட்டடங்களையும் ஒருசேரக் காட்டலாம்.

346) ஒரு காட்சியை எத்தனை விதக் கோணங்களின் மூலம் கொண்டுவர முடியும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு காட்சியை மூன்றுவித கோணங்கள் மூலம் கொண்டுவர முடியும். இதனைப் புறநிலைக்கோணம், அகநிலைக்கோணம், பார்வையாளர் கோணம் என்று அழைப்பர். எந்தக் கோணத்தில் படமாக்க கருவியை வைக்கிறமோ அதுவே படபிடிப்புக் கருவி கோணம் என்கிறோம்.

347) நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகிறது. ஒன்று கதை எழுதுபவரின் மேசை, மற்றொன்று எது?

A) படத்தொகுப்பாளரின் மேசை

B) இசையமைப்பாளரின் மேசை

C) இயக்குநரின் மேசை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகிறது. ஒன்று கதை எழுதுபவரின் மேசை. மற்றொன்று படத்தொகுப்பாளரின் மேசை.

348) எந்த ஆண்டு சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது?

A) 1931

B) 1932

C) 1933

D) 1934

விளக்கம்: முதல் நான்கு ஆண்டுகள் வரை சென்னையில் ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லாததால் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. 1934-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது.

349) எந்த படம் வெளிவந்ததும் தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது?

A) ஆலம் ஆரா

B) கீசகவதம்

C) காளிதாஸ்

D) ராஜா ஹரிசந்திரா

விளக்கம்: இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931-இல் அர்தெஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘குறத்திப் பாட்டும் டான்ஸம்’ என்ற நான்கு படச்சுருள் கொண்ட குறும்படம் வெளி வந்தது. அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம். ‘காளிதாஸ்’ படம் வெளிவந்ததும் தமிழ்த் திரைப்படங்களைத் தமிழகத்திலேயே தயாரித்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

350) கூற்று: 1931 முதல் நான்கு ஆண்டுகள் தமிழ்த்திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன.

காரணம்: சென்னையில் ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: முதல் நான்கு ஆண்டுகள் வரை சென்னையில் ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லாததால் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. 1934-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது.

351) 1934-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது?

A) சீனிவாசக் கல்யாணம்

B) காளிதாஸ்

C) ராஜா ஹரிசந்திரா

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 1934-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலேயே சென்னையில் முதல் ஒலிப்பதிவுக் கூடம் நிறுவப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் பேசும்படம் ‘சீனிவாசக் கல்யாணம்’. இப்படம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஒலிப்பதிவுக் கூடங்கள் சென்னையில் நிறுவப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!