Ethics Questions

அண்மைக்கால அறநெறிப் போக்குகள் 11th Ethics Lesson 7 Questions

11th Ethics Lesson 7 Questions

7] அண்மைக்கால அறநெறிப் போக்குகள்

பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இந்தியாவில் தோன்றிய சமூகச் சீர்திருத்தவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் காந்தியடிகள்.

ⅱ) உண்மை, அகிம்சை ஆகியவற்றைத் தம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வெற்றி கண்டவர்.

ⅲ) காந்திய அறக்கோட்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது பக்தி ஆகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமூகச் சீர்திருத்தவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் காந்தியடிகள். இவர் உண்மை, அகிம்சை ஆகியவற்றைத் தம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வெற்றி கண்டவர். இவற்றின் மூலம், இந்தியாவை ஒரு சிறந்த அகிம்சை நாடாக உலகறியச் செய்தார். காந்திய அறக்கோட்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது ‘உண்மை’ மற்றும் ‘அகிம்சை’ என்ற இரண்டு அறநெறிகளே ஆகும். இந்தியா மட்டுமன்றி உலகமே வியக்கும்படி அன்பு, அகிம்சை, சத்தியம், தர்மம், தூய்மை, கடமை, தியாகம், எளிமை, புலனடக்கம், நம்பிக்கை போன்ற நற்பண்புகளைச் சிறுவயது முதற்கொண்டு வாழ்நாள் இறுதிவரை பின்பற்றியவர் காந்தியடிகள்.

2) ‘அறவியலுக்கு அடிடைப்படையானதும் முதன்மையானதும் உண்மையே’ என்று கூறியவர் யார்?

a) காந்தியடிகள்

b) நேரு

c) பெரியார்

d) திரு.வி.க

விளக்கம்: அகிம்சை என்னும் அணுகுமுறையின் மூலம், சமூகப் பிரச்சனைகளுக்கு அறவழியில் தீர்வு கண்டார். அகிம்சைவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்தார்.உண்மை ‘அறவியலுக்கு அடிடைப்படையானதும் முதன்மையானதும் உண்மையே’ என்கிறார் காந்தியடிகள். உண்மையே கடவுள் என்றும் குறிப்பிடுகிறார். உண்மை என்பது அனைவரும் ஏற்கும் ஒன்றாகும். கடவுளை ஏற்காதோரும் உண்மையை ஏற்கின்றனர். உண்மை அன்றாட வாழ்வில் அனைவருக்கும் நன்மை பயப்பதாகும். கடவுளின் இயல்புகளாகிய இருப்புநிலை, உணர்வுநிலை, ஆனந்தம் என்பனவும் மாறாத உண்மைகளாகும்.

3) சிறுவயதிலேயே காந்தியடிகளை மிகவும் கவர்ந்த கதா பாத்திரம் எது?

a) அரிச்சந்திரன்

b) அர்ச்சுனன்

c) கிருஷ்ணன்

d) ராமன்

விளக்கம்: அரிச்சந்திரன் உண்மைக்காகவும் சத்தியத்திற்காகவும் அரசாட்சி, நாடு, அரண்மனை, மனைவி, மகன், செல்வம் என அனைத்தையும் இழந்து, பல சோதனைக்குட்பட்டபோதும் உண்மை பேசுவதைக் கைவிடவில்லை. இது சிறுவயதிலேயே காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது.

4) பின்வருவனவற்றுள் காந்தியடிகளின் கருத்துகள் எவை?

ⅰ) அன்பு அல்லது அகிம்சை மூலமாக மட்டுமே கடவுளை உணரலாம்.

ⅱ) மனிதர்களுக்குச் செய்யும் தொண்டுகள் மூலமும் இறைவனைக் காணலாம் என்கிறார்.

ⅲ) இறைவனுக்குச் செய்யும் தொண்டே மனிதனை மனிதனோடு இணைக்கக்கூடிய செயலாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அன்பு அல்லது அகிம்சை மூலமாக மட்டுமே கடவுளை உணரலாம். மேலும், மனிதர்களுக்குச் செய்யும் தொண்டுகள் மூலமும் இறைவனைக் காணலாம் என்கிறார். மனிதர்களுக்குச் செய்யும் தொண் டே மனிதனை மனிதனோடு இணைக்கக்கூடிய செயலாகும். சமூகத் தொண்டுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி என்பது இவ்வுலகில் இல்லை.

5) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) தனிமனிதன் பிற உயிர்களுக்கு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தீங்கு விளைவிக்காத செயலே ‘அகிம்சை’ ஆகும்.

ⅱ) காந்தியடிகளின் கருத்துப்படி சத்தியமும், அகிம்சையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.

ⅲ) அகிம்சை நெறியைத் தனிமனிதநிலை முதல் குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அகிம்சை: தனிமனிதன் பிற உயிர்களுக்கு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தீங்கு விளைவிக்காத செயலே ‘அகிம்சை’ ஆகும். காந்தியடிகளின் கருத்துப்படி சத்தியமும், அகிம்சையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். அகிம்சை நெறியைத் தனிமனிதநிலை முதல் குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான ஆற்றல் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது.

6) பின்வருவனவற்றுள் சத்தியாக்கிரகம் என்ற சொல்லின் பொருள் எது?

a) உண்மையை போற்றுதல்

b) உண்மையை வணங்குதல்

c) உண்மை பேசுதல்

d) உண்மையை உறுதியாக பற்றுதல்

விளக்கம்: மனிதரைத் திருத்த வேண்டுமென்றால் அவர்மீது அன்பு செலுத்தி, அகிம்சை வழிநின்று திருத்திவிடலாம் என்கிறார் காந்தியடிகள். சமயங்களில் கூறப்படும் அகிம்சைக் கோட்பாடுகளுக்குக் காந்தியடிகள் புதிய விளக்கம் கண்டார். சத்யாகிரகம் சத்யம் + ஆகிரகம் = சத்யாகிரகம், சத்யம்- உண்மை, ஆகிரகம்-பற்றுதல். சத்தியாகிரகம் என்றால் உண்மையை உறுதியாகப் பற்றுதலாகும். மேலும், உண்மைக்காக அறவழியில் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவிப்பதுமாகும். உண்மையே கடவுளாக இருப்பதால் அறவழியில் போராடித் தீமையை வெல்லுவதே ‘சத்யாகிரகம்’ எனப்படுகிறது.

7) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சத்தியாகிரகத்தைக் கடைப்பிடிப்பவர் தீமையை நன்மையின் மூலமும், கோபத்தை அன்பின் மூலமும், பொய்ம்மையை உண்மையின் மூலமும், வன்முறையை அகிம்சையின் மூலமும் வெற்றி கொள்ளவேண்டும்.

ⅱ) சத்யாகிரகியாகத் திகழ விரும்புபவர், தம் தேவைகளைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.

ⅲ) அனைத்து மனிதர்களையும் பாகுபாடில்லாது மதித்தும், சமய நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சத்தியாகிரகத்தைக் கடைப்பிடிப்பவர் தீமையை நன்மையின் மூலமும், கோபத்தை அன்பின் மூலமும், பொய்ம்மையை உண்மையின் மூலமும், வன்முறையை அகிம்சையின் மூலமும் வெற்றி கொள்ளவேண்டும். அகிம்சை என்பது, கோழைகளின் ஆயுதமன்று; அது வீரம் உடையவர்கள் மட்டுமே கையாளக்கூடியதாகும். எளிமை, அமைதி, துறவு, தியாகம், புலனடக்கம், அன்பு, இரக்கம் ஆகிய பண்புகளை உடையவராகச் சத்யாகிரகி திகழவேண்டும். ‘சத்யாகிரகியாகத் திகழ விரும்புபவர், தம் தேவைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும். அனைத்து மனிதர்களையும் பாகுபாடில்லாது மதித்தும், சமய நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். அகிம்சை தனிமனித வாழ்க்கைக்கான நடத்தை மட்டுமன்று, அரசியல் மற்றும்சமூகப்பொருளாதார வாழ்வுக்கும் ஏற்புடையதாகும். இதுவே உலகப் பண்பாட்டிற்குக் காந்தியடிகளின் கொடையாகும்.

8) பின்வருவனவற்றுள் சத்தியாகிரகத்தின் பண்புகள் எவை?

ⅰ) கொண்ட கொள்கையில் பெருமையும், முயற்சியில் கண்ணியமும் கொண்டிருத்தல்.

ⅱ) வெளிப்படையான எண்ணத்துடனும் திறந்த மனத்துடனும் செயலாற்றுதல்

ⅲ) எதற்கும் கலங்காது, அச்சத்தை வெற்றி கொள்ளும் திறன் பெற்றிருத்தல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்:

சத்தியாகிரகத்தின் பண்புகள்:

• கொண்ட கொள்கையில் பெருமையும், முயற்சியில் கண்ணியமும் கொண்டிருத்தல். • வெளிப்படையான எண்ணத்துடனும் திறந்த மனத்துடனும் செயலாற்றுதல். • எதற்கும் கலங்காது, அச்சத்தை வெற்றி கொள்ளும் திறன் பெற்றிருத்தல். • உண்மை ஈடுபாடும், செயலுறுதியும் கொண்டிருத்தல். • மனம், வாக்கு, செயல் இம்மூன்றையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றுதல். • தன்னடக்கம், பொறுமை, கடவுள் நம்பிக்கை முதலியவற்றைக் கொண்டிருத்தல். • அடக்கம், எளிமை, தியாக மனப்பான்மை ஆகிய அரிய குணங்களைப் போற்றுதல். • திருடாமை, பிறர் பொருளை விரும்பாமை, பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தல்.

9) கூற்று: தென்னாப்பிரிக்காவின் அறவழி வெற்றியே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் வித்திட்டது.

காரணம்: மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரகக் கொள்கையைக் கடைப்பிடித்து முதன்முதலில் வெற்றி கண்டது தென்னாப்பிரிக்காவில்தான்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரகக் கொள்கையைக் கடைப்பிடித்து முதன்முதலில் வெற்றி கண்டது தென்னாப்பிரிக்காவில்தான். அந்த அறவழி வெற்றியே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் வித்திட்டது. தென்னாப்பிரிக்காவில் கருப்பர் இன மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட மார்டின் லூதர் கிங், காந்தியடிகளின் அகிம்சை நெறியைப் பின்பற்றி வெற்றி கண்டார்.

10) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ‘சர்வோதயம்’ என்ற சொல்லின் பொருள் ‘அனைவருக்கும் மேம்பாடு’ என்பதாகும்.

ⅱ) ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே சர்வோதயம் ஆகும்.

ⅲ) சமுதாயத்தில் கடைநிலையில் இருப்பவர்கள் சமயத் துறையில் ஏற்றம்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சர்வோதயம்: ‘சர்வோதயம்’ என்ற சொல்லின் பொருள் ‘அனைவருக்கும் மேம்பாடு’ என்பதாகும். ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே சர்வோதயம் ஆகும். சமுதாயத்தில் கடைநிலையில் இருப்பவர்களும் கல்வி, அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சமயத் துறைகளில் ஏற்றம்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இக்கருத்தையே மேலை நாட்டு அறிஞரான ஹென்றி S.L. போலக் ஜான் ரஸ்கினின் “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற நூல் வலியுறுத்துகிறது.

11) காந்தியடிகள் எந்த நூலை படித்ததன் மூலம் சர்வோதயத்தின் அடிப்படை உண்மைகளைத் தெரிவு செய்தார்?

a) அன்பின் நிழல்

b) விளிம்பில் ஒளி

c) இறுதி மனிதன்

d) கடையனுக்கும் கடைத்தேற்றம்

விளக்கம்: “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற நூலைக் காந்தியடிகள் படித்ததன் மூலம் சர்வோதயத்தின் அடிப்படை உண்மைகளைத் தெரிவு செய்தார். “சர்வோதயம்” என்பது, “முழுமையான வளர்ச்சி” அல்லது அனைத்து நிலைகளிலும் மனிதன் அடையும் முழுவளர்ச்சி எனவும் பொருள்படும். அனைத்துச் சமூகத்தினருக்கும் எல்லா வகை நலன்களையும் பெற்றுத் தருவதே சர்வோதயம் ஆகும்.

12) பின்வருவனவற்றுள் சர்வோதயக்கொள்கையின் சிறப்புக் கூறுகளைத்தேர்ந்தெடு.

ⅰ) அனைத்துத் தொழிலுக்கும் சமமதிப்பு

ⅱ) எத்தொழிலையும் மதித்தல்

ⅲ) அனைவருக்கும் உடல் உழைப்பு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: அனைத்துத் தொழிலுக்கும் சமமதிப்பு, எத்தொழிலையும் மதித்தல், அனைவருக்கும் உடல் உழைப்பு என்பன சர்வோதயக்கொள்கையின் சிறப்புக் கூறுகளாகும். காந்தியடிகளின் சமுதாய அறங்கள் நாட்டிலுள்ள அனைவரும் சகோதரர்களே. ‘பிறப்பு’ என்பது இனம், மொழி, சமயம், சாதி என்ற அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை அனைவரும் உணரவேண்டும். உண்மைக்குமுன் அனைவரும் சமம். எனவே, கடவுளுக்கு முன்பும் அனைவரும் சமம் என்ற காந்தியடிகளின் கருத்து சமுதாய ஒற்றுமைக்கு அடிப்படையானதாகும்.

13) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) பெண்கள் அனைத்துத் துறையிலும் சம உரிமை பெறவேண்டும் என்பதில் காந்திக்கு விருப்பம் இல்லை.

ⅱ) மக்களின் உடல், உள்ளம், ஒழுக்கம், பொருள் ஆகியவற்றுக்கு மது ஊறு விளைவிப்பதால் மதுவிலக்கைக் கடுமையாக வலியுறுத்தினார்.

ⅲ) தொழிற்கல்விதான் நாட்டுக்கு நலன் தரும் என்றும் காந்தியடிகள் கருதினார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் மதிக்கப்படவேண்டும். பெண்கள் அனைத்துத் துறையிலும் சம உரிமை பெறவேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். மக்களின் உடல், உள்ளம், ஒழுக்கம், பொருள் ஆகியவற்றுக்கு மது ஊறு விளைவிப்பதால் மதுவிலக்கைக் கடுமையாக வலியுறுத்தினார். தொடக்கக்கல்வி, தாய்மொழியில் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்றார். கல்வி என்பது, பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது, மாணவனின் உயிர், உடல், மனம் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார். தொழிற்கல்விதான் நாட்டுக்கு நலன் தரும் என்றும் காந்தியடிகள் கருதினார்.

14) மனிதன் சக மனிதனை நேசிக்க எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் ஒழுகவேண்டும்.” என்று கூறியவர்?

a) வள்ளலார்

b) பெரியார்

c) திருவிக

d) காந்தியடிகள்

விளக்கம்: ஒரு நாட்டில் வாழும் மக்களிடையே பிறப்பாலோ, சாதி மற்றும் மதங்களாலோ வேறுபாடு இருப்பின், அது சமூக ஒற்றுமைக்கு ஏற்புடையதன்று. மனிதன் சக மனிதனை நேசிக்க எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் ஒழுகவேண்டும்.” இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கையே இன்ப வாழ்க்கை என்பதைத் தாமும் உணர்ந்து, உலகிற்கும் காந்தியடிகள் உணர்த்தினார்.

15) கூற்று: காந்தியடிகளின் எளிய வாழ்க்கைதான், அவருக்கு மகத்தான ஆற்றலைக் கொடுத்து, ‘மகாத்மாவாக’ அவரை உயர்த்தியது.

காரணம்: எளிய உணவு, எளிய ஆடை, எளிய வாழ்வு, எல்லாரிடத்தும் அன்பு எனக் காந்தியடிகள் எளிமையின் இலக்கணமாய் ஆசிரம வாழ்வு வாழ்ந்தார்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: ஒவ்வொரு மனிதனும் அறவழியில் நின்று, பிறரை வருத்தாது, தனது தேவைகளுக்கு ஏற்பப் பொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய பொருள் அளவோடு செலவிட்டுப் பிறருக்கும் கொடுக்க வேண்டும். எளிய உணவு, எளிய ஆடை, எளிய வாழ்வு, எல்லாரிடத்தும் அன்பு எனக் காந்தியடிகள் எளிமையின் இலக்கணமாய் ஆசிரம வாழ்வு வாழ்ந்தார். அவர் தமக்குரிய வேலைகள் அனைத்தையும் தாமே செய்துகொண்டார். அவரின் எளிய வாழ்க்கைதான், அவருக்கு மகத்தான ஆற்றலைக் கொடுத்து, ‘மகாத்மாவாக’ அவரை உயர்த்தியது.

16) கீழ்க்கண்டவற்றுள் சமுதாயத்தின் ஏழு பாவங்கள் எவை?

ⅰ) உழைப்பில்லாத செல்வம்

ⅱ) மனச்சான்றில்லாத மகிழ்ச்சி

ⅲ) பண்பில்லாத சமயம்

ⅳ) அறமில்லாத வணிகம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅱ), ⅳ)

விளக்கம்: சமுதாயத்தின் ஏழு பாவங்கள் (Seven deadly sins) 1. உழைப்பில்லாத செல்வம் (Wealth without work) 2. மனச்சான்றில்லாத மகிழ்ச்சி (Pleasure without conscience) 3. பண்பில்லாத அறிவு (Knowledge without character) 4. அறமில்லாத வணிகம் (Business without morality) 5. மனிதநேயமில்லாத அறிவியல் (Science without humanity) 6. தியாகமில்லாத சமயம் (Religion without sacrifice) 7. கொள்கையில்லாத அரசியல் (Politics without principle)

17) மனிதனிடமுள்ள விலங்குத்தன்மையைத் திருத்திச் சீர்செய்வதே‘ஒழுக்கம்’ என்றும், அதைத் தருவது சமயம் என்றும் கூறியவர்?

a) வள்ளலார்

b) இராமகிருஷ்ணர்

c) காந்தியடிகள்

d) விவேகானந்தர்

விளக்கம்: காந்தியடிகளின் சமயநெறி: காந்தியடிகள் சிறுவயதிலிருந்தே ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையுடையவர். ஒருவருடைய சிக்கல்களுக்காக அனைவரும் கடவுளிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போது, அனைவரிடமும் ஒற்றுமையுணர்வு ஏற்பட்டு, அந்த ஒற்றுமையின் வலிமையால் கடவுளைக் காணலாம் என்ற கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது. மனிதனிடமுள்ள விலங்குத்தன்மையைத் திருத்திச் சீர்செய்வதே ‘ஒழுக்கம்’ என்றும், அதைத் தருவது சமயம் என்றும் காந்தியடிகள் கூறினார். சமயத்தின் சாரமே ஒழுக்கம். ‘சமயமில்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகு போன்றது’ என்றும் கருதினார்.

18) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சமய புனித நூல்களில் உள்ள கருத்துகளை உலக மக்கள் அனைவரும் கற்றுணர்ந்து பின்பற்ற வேண்டியனவாகும் என்று விவேகானந்தர் வலியுறுத்தினார்.

ⅱ) மதங்களிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், உண்மையைத் தவிர வேறு எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதில் அனைத்துச் சமயங்களும் ஒன்றுபட்டுள்ளன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: வேத உபநிடதங்கள், மகாவீரர் அறிவுரைகள், பெளத்தப் பிடகங்கள், தோரா, பைபிள், திருக்குரான், கிரந்தசாகிப் போன்ற பல சமய புனித நூல்களில் உள்ள கருத்துகள், ஒரு சமயத்தவருக்கு மட்டுமே உரியவை அல்ல; உலக மக்கள் அனைவரும் கற்றுணர்ந்து பின்பற்ற வேண்டியனவாகும் என்றும் காந்தியடிகள் வலியுறுத்தினார். மதங்களிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், உண்மையைத் தவிர வேறு எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதில் அனைத்துச் சமயங்களும் ஒன்றுபட்டுள்ளன. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய சமயங்களில் இணைந்து அதற்குரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வாழ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

19) கீழ்க்கண்டவற்றுள் மகாத்மா காந்தியடிகளின் மணிமொழிகளைத்தேர்ந்தெடு.

ⅰ) அன்பு, தன்னடக்கம் உள்ளவனிடத்தில் உண்மையைக் காணலாம்.

ⅱ) ஆடை, அணிகலன்களில் அழகு இல்லை, உண்மையாகப் பணியாற்றுவதில்தான் அழகு உள்ளது.

ⅲ) பிறரைத் தாழ்த்துபவன் எவனோ, அவன் பிறரால் தாழ்த்தப்படுவான்.

ⅳ) உண்மையான அன்பு, தியாகம் பலனை விரும்பும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: மகாத்மா காந்தியடிகளின் மணிமொழிகள் • அன்பு, தன்னடக்கம் உள்ளவனிடத்தில் உண்மையைக் காணலாம். • ஆடை, அணிகலன்களில் அழகு இல்லை, உண்மையாகப் பணியாற்றுவதில்தான் அழகு உள்ளது. • பிறரைத் தாழ்த்துபவன் எவனோ, அவன் பிறரால் தாழ்த்தப்படுவான். • உண்மையான அன்பு, தியாகம் பலனை விரும்பாது. • இலட்சியத்திற்காக உழைப்பவனை யாராலும் வெல்ல முடியாது. • நமக்குத் தெரிந்த உண்மைப்படி வாழ்ந்தால் போதும், நமது உண்மை எதுவென்று கடவுளுக்குத் தெரியும். • ஒழுக்கமில்லாத கல்வியால் பயன் ஏதும் இல்லை. • ஐம்புலன்களை அடக்காமல், மனத்தை அடக்க முடியாது. போன்றவை மகாத்மா காந்தியடிகளின் மணிமொழிகளில் போற்றத்தக்கனவாகும்.

20) மத நல்லிணக்கம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மத நல்லிணக்கம் என்பது, ஒரு நாட்டில் அவரவர் தங்கள் சமயத்தைப் பின்பற்றி பிற சமயம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதித்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ்வதாகும்.

ⅱ) மக்களிடையே சமய நல்லிணக்கம் வளர, நமது அரசியல் அமைப்புச் சட்டம், மக்களுக்குப் பல உரிமைகளை வழங்கியுள்ளது.

ⅲ) பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், பல இனத்தவர், பல மொழியினர், பல பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூகமாகவே நம் நாடு திகழ்ந்து வருகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சமய நல்லிணக்கம்: சமய நல்லிணக்கம் அல்லது மத நல்லிணக்கம் (Religious harmony) என்பது, ஒரு நாட்டில் அவரவர் தங்கள் சமயத்தைப் பின்பற்றி வாழும்போது, பிற சமயம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் மதித்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ்வதாகும். மக்களிடையே சமய நல்லிணக்கம் வளர, நமது அரசியல் அமைப்புச் சட்டம், மக்களுக்குப் பல உரிமைகளை வழங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், பல இனத்தவர், பல மொழியினர், பல பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூகமாகவே நம் நாடு திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகத்தில் சமய நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். எனவே, சமய நல்லிணக்கமே நம் நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகிறது.

21) கீழ்க்கண்டவற்றுள் சமய நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பவை எவை?

ⅰ) ஆதிக்க மனப்பான்மை

ⅱ) வெறுப்பு

ⅲ) பகைமை

ⅳ) நம்பிக்கை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: சமய நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பவை கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமயங்களுக்கிடையே காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, பொறாமை, நம்பிக்கையின்மை போன்றவையாகும். இவற்றைக் களைய, மனிதர்களிடையே சமய சமரசம் வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயங்களின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றின் உணர்வுகளையும், உயர்ந்த பண்புகளையும் மதிக்கவேண்டும்.

22) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒரு நாட்டில், ‘மொழி, சமய, பண்பாட்டுப்பன்மை’ இருப்பது என்பது தவிர்க்க முடியாததாகும்.

ⅱ) இந்துக்கள் நாகூராண்டவர் மசூதிக்குச் செல்வதும் – வேளாங்கண்ணித் திருச்சபைக்கு செல்வதும் – பிற சமயங்களோடு கொண்டுள்ள சமய நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: ஒரு நாட்டில், ‘மொழி, சமய, பண்பாட்டுப்பன்மை’ இருப்பது என்பது தவிர்க்க முடியாததாகும். அவரவர் சமய உரிமைகளையும் நெறிகளையும் முறையாகப் பின்பற்றி வாழ்ந்துவந்தால் சமயப் பூசலற்ற சமத்துவச் சமுதாயம் உருவாகும். இந்துக்கள் நாகூராண்டவர் மசூதிக்குச் செல்வதும் – வேளாங்கண்ணித் திருச்சபைக்கு செல்வதும் – பிற சமயங்களோடு கொண்டுள்ள சமய நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அனைத்துச் சமயங்களும் மனிதனுக்கு மிக உயரிய நிலையைக் கொடுத்துள்ளன.

23) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) மனிதர்கள் அனைவரும் கடவுள் தன்மையை அடைய முடியும் என்பதை அனைத்துச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.

ⅱ) சமயநல்லிணக்கம் சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் எதிராக உள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: மனிதர்கள் அனைவரும் கடவுள் தன்மையை அடைய முடியும் என்பதை அனைத்துச் சமயங்களும் வலியுறுத்துகின்றன. இைத ேய காந்தியடிகளும் பரிந்துைரத்துள்ளர். சமயநல்லிணக்கம் சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது. இதை நன்குணர்ந்த வள்ளலார், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், காந்தியடிகள் முதலானோர் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

24) கூற்று: சமய நல்லிணக்கம் என்பது, அனைத்துச் சமயங்களையும் உண்மையானதாக ஏற்கும் மனநிலையாகும்.

காரணம்: அனைத்துச் சமயங்களின் அடிப்படை உண்மைகளும் ஒன்றாகவே உள்ளன.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: சமய நல்லிணக்கம் என்பது, அனைத்துச் சமயங்களையும் உண்மையானதாக ஏற்கும் மனநிலையாகும். ஏனெனில், அனைத்துச் சமயங்களின் அடிப்படை உண்மைகளும் ஒன்றாகவே உள்ளன. அவற்றின் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைமுறைகள் மட்டுமே வேறுபடுகின்றன.

25) `ஒரு மனிதன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனை மகிழ்விப்பதும் அவனது பசிக்கு உணவளிப்பதும் துயர் துடைப்பதுமே மிகச்சிறந்த சமூகத் தொண்டு என்று கூறியவர்?

a) தாயுமானவர்

b) வள்ளலார்

c) இராமகிருஷ்ணர்

d) நபிகள் நாயகம்

விளக்கம்: `அனைத்துச் சமயங்களும் கடவுள் என்ற கடலைத் தேடிச் செல்லும் பல்வேறு நதிகள்’ எனத் தாயுமானவர், வள்ளலார், இராமகிருஷ்ணர் எனப் பலரும் கூறியுள்ளனர். எனவே, சமய நல்லிணக்கம் இக்காலத்தின் தேவையாகும். `ஒரு மனிதன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனை மகிழ்விப்பதும் அவனது பசிக்கு உணவளிப்பதும் துயர் துடைப்பதுமே மிகச்சிறந்த சமூகத் தொண்டு என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.

26) கீழ்க்கண்டவற்றுள் மனிதநேயம் எத்தகைய பண்புகளை உள்ளடக்கியது?

ⅰ) பிற உயிர்கள்மீது அன்பு செய்தல்

ⅱ) பரிவு காட்டுதல்

ⅲ) ஒற்றுமையைப் பேணல்

ⅳ) பகைவனுக்கும் நன்மை செய்தல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: எல்லாச் சமயங்களிலும் உள்ள நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் அறியச் செய்வதால் உலகளாவிய சமத்துவமும் சகோதரத்துவமும் ஏற்படுவது உறுதியாகும். இதனால், சமய நல்லிணக்கம் மேம்படும் எனலாம். மனிதநேயம் பிற உயிர்கள்மீது அன்பு செய்தல், பரிவு காட்டுதல், மன்னித்தல், ஒற்றுமையைப் பேணல், பகைவனுக்கும் நன்மை செய்தல் போன்ற உயரிய பண்புகளை உள்ளடக்கியதே மனிதநேயம் ஆகும்.

27) சமய நல்லிணக்க நாள் என்று கடைப்பிடிக்கப் படுகிறது?

a) ஆகஸ்ட் 20

b) ஆகஸ்ட் 22

c) ஆகஸ்ட் 18

d) ஆகஸ்ட் 21

விளக்கம்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20, சமய நல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

28) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆறறிவு பெற்ற மனிதன், சக மனிதனிடம் மட்டும் கருணையோடும் அன்போடும் நடந்துகொள்வதே மனித நேயமாகும்.

ⅱ) மற்றவர்களுக்கு உதவுவதற்காகத் தன்னையே முழுமையாக ஒப்பளிக்கும் உயர்ந்த உள்ளமே மனித நேயத்திற்கு அடிப்படையாகும்.

ⅲ) கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலில் உலகளாவிய மனிதநேயம் வலியுறுத்தப்படுகிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இத்தகைய மனிதநேயப் பண்புகளைப் பண்டைய தமிழர்கள் தாங்கள் மேற்கொண்ட போர்முறை முதற்கொண்டு, பல்வேறு சமூக நெறிமுறைகளிலும் பின்பற்றினர். போர் அறங்களை மதித்துப் போற்றியது போலவே வாழ்வியல் அறங்களிலும் மனிதநேயத்தைப் போற்றிக் காத்தனர். இதற்குச் சங்க இலக்கியம் சான்றாகிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்காகத் தன்னையே முழுமையாக ஒப்பளிக்கும் உயர்ந்த உள்ளமே மனித நேயத்திற்கு அடிப்படையாகும். உலகில் மனித நேயத்தைப் பற்றி அதிகம் பேசுவதைவிட, மனிதநேயமிக்க உலகாக இதை மாற்றுவதே நமது கடமையாகும். மனிதனின் சிக்கல்களையும் துன்பங்களையும் சகமனிதர்களால் மட்டுமே தீர்க்கமுடியும். நமது தமிழ்ப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலில் உலகளாவிய மனிதநேயம் வலியுறுத்தப்படுகிறது.

29) வள்ளலார் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப்போக புலாலைத் தவிர்க்கவேண்டும் என்று போதித்தவர் வள்ளலார்.

ⅱ) உயிர்களுக்கு இரக்கம் காட்டினால்தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்று ஆன்மநேயம் கொள்ளச் செய்த ஆன்றோர்.

ⅲ) துயர்போக்கும் பேரறத்தை வலியுறுத்திய அருட்செல்வர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப்போக புலாலைத் தவிர்க்கவேண்டும் என்று போதித்தவர். உயிர்களுக்கு இரக்கம் காட்டினால்தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்று ஆன்மநேயம் கொள்ளச் செய்த ஆன்றோர். சமத்துவம் பேசிய சான்றோர். பசிபோக்கும் பேரறத்தை வலியுறுத்திய அருட்செல்வர். எல்லா உயிர்களிடத்தும் பரிவும் இரக்கமும் அன்பும் அருளும் படைத்தவர். இவர் மக்களின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்திய அமைப்புகளாவன: 1. சத்திய தருமச் சாலை 2. சத்திய ஞான சபை 3. சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.

30) கூற்று: மனிதநேயம் குடும்பம், சமூகம், நாடு ஆகிய அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார் காந்தியடிகள்

காரணம்: குடும்பத்தில் மனிதநேயம் இல்லாதபோது சமூகத்திலும் மனிதநேயம் அற்றுப்போகிறது.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: குடும்ப உறவினர்களிடமும் மனிதநேயம் காக்கப்பட வேண்டும். குடும்பத்தில் வயதானவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களிடத்தும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளவேண்டும். குடும்பத்தில் மனிதநேயம் இல்லாதபோது சமூகத்திலும் மனிதநேயம் அற்றுப்போகிறது. எனவே, மனிதநேயம் குடும்பம், சமூகம், நாடு ஆகிய அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார் காந்தியடிகள்

31) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) கடவுள்மறுப்பு, பெண் விடுதலை, எழுத்துச் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, எனப் பல பயனுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தப் பெரியார் அரும்பாடுபட்டுள்ளார்.

ⅱ) மக்களிடையே சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும் என்பதே இவரின் உயிர் மூச்சாக இருந்தது.

ⅲ) ஒட்டுமொத்தச் சமூகமும் என்றில்லாமல் ஒவ்வொரு சாதியும் முன்னேறவேண்டும் என்கிறார் தந்தை பெரியார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சுயமரியாதை அறம்: பெரியார் ஒரு சிந்தனைக் களஞ்சியம், சமூகச் சீர்திருத்தச் செம்மல் ஆவார். கடவுள்மறுப்பு, பெண் விடுதலை, எழுத்துச் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, எனப் பல பயனுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தப் பெரியார் அரும்பாடுபட்டுள்ளார். மக்களிடையே சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும் என்பதே இவரின் உயிர் மூச்சாக இருந்தது. ஒவ்வொரு சாதியும் முன்னேறவேண்டும் என்றில்லாமல், ஒட்டுமொத்தச் சமூகமும் முன்னேற வேண்டும் என்கிறார் தந்தை பெரியார். சமூகத்தில் உயர்வு, தாழ்வு நீங்கி உண்மையறிவு வளரவேண்டும். சமத்துவம் நிலைக்கவேண்டும். சமூக ஒற்றுமை வலிமை பெறவேண்டும்.

32) கூற்று: சுயமரியாதையை சாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதே சுயமரியாதை இயக்கமாகும்.

காரணம்: இதற்கு ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழவேண்டும் எனப் பெரியார் விரும்பினார்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: இதற்கு ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழவேண்டும் எனப் பெரியார் விரும்பினார். இதைச் சாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதே சுயமரியாதை இயக்கமாகும். இதுவே, பெரியாரின் உயிர்நாடியாக விளங்கியது. மக்கள் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தந்தைபெரியார். இவர் மிகச்சிறந்தசமூகச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். இவர் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சமூகச் சிக்கல்களுக்காக மிகுந்த துணிவுடன் போராடி வெற்றி கண்டு சமூக நீதியை நிலைநாட்டினார். தேசநலன் கருதித் தம் குடும்பத்தையே பல சமூகநீதிப் போராட்டங்களில் ஈடுபடுத்தினார். ஆதலால், இவர் ‘சமுதாயச் சிற்பி’ என்றும் அழைக்கப்பட்டார். இவரது துணிச்சலான போராட்டங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘வைக்கம்’ போராட்டம்.

33) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ‘வைக்கம்’ என்ற ஊரில் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு மட்டும், அவ்வூரின் முக்கிய வீதிகளில் நடப்பதற்கும் அங்குள்ள ஆலயங்களுக்குள்ளே சென்று வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ⅱ) தந்தை பெரியார் திருவாங்கூர் மன்னருக்கு எதிராகப் போராடி, அவ்வூர் மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார்.

ⅲ) சமூக நீதிக்காக மிகுந்த துணிச்சலுடன் மன்னரையே எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட இச்செயலைப் பாராட்டி இவருக்கு மு .வ அவர்கள் ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை அளித்தார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இவர் தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது, கேரளா வாழ் மக்களுக்காகவும் போராடிச் சிறைசென்று வெற்றி கண்டார். வைக்கம் வீரர் கேரள மாநிலத்தின் திருவாங்கூரில் உள்ள ‘வைக்கம்’ என்ற ஊரில் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு மட்டும், அவ்வூரின் முக்கிய வீதிகளில் நடப்பதற்கும் அங்குள்ள ஆலயங்களுக்குள்ளே சென்று வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த தந்தை பெரியார் அங்குச் சென்று திருவாங்கூர் மன்னருக்கு எதிராகப் போராடி, அவ்வூர் மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார். சமூக நீதிக்காக மிகுந்த துணிச்சலுடன் மன்னரையே எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட இச்செயலைப் பாராட்டி இவருக்குத் திரு.வி.க. அவர்கள் ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை அளித்தார்.

34) ‘‘பவுர்ணமி இரவின் படகுக்காரரே! நதிநீரை அலைக்கும் நாணல் புதர்களை விலக்கிச் செல்கையில் மெதுவாகச் செல்லுங்கள் வழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம் கால்கள் – மோதிவிடாதிருக்கட்டும்! ” இவ்வரிகள் யாருடையது?

a) நா.காமராசன்

b) அப்துல் ரகுமான்

c) சுரதா

d) இன்குலாப்

விளக்கம்: கவிஞர் இன்குலாப், ‘பவுர்ணமி இரவில்’ என்ற தம் கவிதையில், பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார். ‘‘பவுர்ணமி இரவின் படகுக்காரரே! நதிநீரை அலைக்கும் நாணல் புதர்களை விலக்கிச் செல்கையில் மெதுவாகச் செல்லுங்கள்! வழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம் கால்கள் – மோதிவிடாதிருக்கட்டும்! ” இத்தகைய உயிர்நேயம், என்றுமுள தென்தமிழின் மானுடக்கொடையாகும்.

35) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் சென்னையில் மறைமலை அடிகளின் மகளான திருமதி நீலாம்பிகை அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடு நடைபெற்றது.

ⅱ) மாநாட்டின் இறுதியில் திருமதி நீலாம்பிகை அம்மையார் இவருக்குப் `பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள் சென்னையில் மறைமலை அடிகளின் மகளான திருமதி நீலாம்பிகை அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைக்கம் வீரர் ஈ.வே.ரா. அவர்கள் கலந்துகொண்டு பெண்ணுரிமைக்காக எழுச்சியுரையாற்றினார். இம்மாநாட்டின் இறுதியில் திருமதி நீலாம்பிகை அம்மையார் இவருக்குப் `பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றுமுதல் அனைவராலும் பெரியார் என்றே அழைக்கப்படுகிறார்.

36) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் சுயமரியாதைக்கு உரிமையுடையவன் என்பது பெரியாரின் உறுதியான கருத்தாகும்.

ⅱ) சமூகத்திலுள்ள மேல்தட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதை பெற்றுத் தங்கள் உரிமையை நிலைநாட்டவேண்டும் எனப் பெரியார் கூறினார்.

ⅲ) தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சுயமரியாதை இயக்கத்திற்காகவே அவர் ஒதுக்கினார்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மனிதன் என்பவன் மானம் உள்ளவனே என்பதை உணர்ந்து, ஒவ்வொரு மனிதனும் சக மனிதனுக்கு மதிப்பளிக்க வேண்டும்; மக்களுக்குள் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும்; மக்கள் அனைவரும் அறிவும் மரியாதையும் மிக்கவர்களாக வாழவேண்டும் என்றார் பெரியார். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் சுயமரியாதைக்கு உரிமையுடையவன் என்பது பெரியாரின் உறுதியான கருத்தாகும். சமூகத்திலுள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் சுயமரியாதை பெற்றுத் தங்கள் உரிமையை நிலைநாட்டவேண்டும் எனப் பெரியார் கூறினார். தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சுயமரியாதை இயக்கத்திற்காகவே அவர் ஒதுக்கினார்.

37) பின்வருவனவற்றுள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களைத் தேர்ந்தெடு.

ⅰ) சாதிப் பட்டங்களையும், சமய அடையாளக்குறிகளையும் மக்கள் விட்டொழிக்க வேண்டும்.

ⅱ) உரிய வயதுக்கு மேல்தான் பெண்களுக்குத் திருமணம் செய்யவேண்டும்.

ⅲ) மணமான பெண்களுக்கு ‘மணவிலக்கு’ செய்துகொள்ளும் உரிமை வேண்டாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்: சாதிப் பட்டங்களையும், சமய அடையாளக்குறிகளையும் மக்கள் விட்டொழிக்க வேண்டும். உரிய வயதுக்கு மேல்தான் பெண்களுக்குத் திருமணம் செய்யவேண்டும். மணமான பெண்களுக்கு ‘மணவிலக்கு’ செய்துகொள்ளும் உரிமை வேண்டும்; கைம்பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமை வேண்டும். பெண்களுக்குச் சொத்துரிமை, தொழில் நடத்த உரிமை, சிறுவர்களுக்குக் கட்டாயக் கல்வி, ஆசிரியர் பணியில் பெண்களை மட்டுமே நியமித்தல், தாய்மொழிக் கல்வி, சுயமரியாதைத் திருமணம் மற்றும் முழுமையான பெண் விடுதலை போன்ற சமுதாய முன்னேற்றச் செயல்திட்டங்கள் இவ்வியக்கத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.

38) பின்வருவனவற்றுள் சுயமரியாதை இயக்கத்தின் நல்விளைவுகளைத்தேர்ந்தெடு.

ⅰ) சமுதாயத்தில் இளைஞர்கள் பலர் விழிப்புணர்வு பெற்றார்கள்.

ⅱ) பெண் பிள்ளைகள் பெருமளவில் கல்வி கற்க முற்பட்டனர்.

ⅲ) திருமணங்களில் உள்ள தேவையற்ற சடங்குகள் நீங்கின.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சுயமரியாதை இயக்கத்தின் நல்விளைவுகள்: சமுதாயத்தில் இளைஞர்கள் பலர் விழிப்புணர்வு பெற்றார்கள். பெண் பிள்ளைகள் பெருமளவில் கல்வி கற்க முற்பட்டனர். திருமணங்களில் உள்ள தேவையற்ற சடங்குகள் நீங்கின. ஏழை எளியோர் பொருட்செலவின்றித் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்தனர். சாதியுடன் கூடிய பட்டப்பெயர்கள் குறையத் தொடங்கின.

39) கூற்று: இந்தப் பூமி முழுவதிலும் மக்கள் வாழும் இடங்களையும், அவ்விடங்களில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்றவற்றையும் குறிக்கும் ஒருங்கிணைந்த ஒரு சொல்லாகச் ‘சூழலியல்’ பயன்படுத்தப்படுகிறது.

காரணம்: இது நீர், உணவு, காற்று, நிலம், கடல், மலை, காடு, சூரிய ஒளி எனப் பலவற்றையும் குறிப்பிடுவதாகும்.

(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: சூழலியல் அறம்: இந்தப் பூமி முழுவதிலும் மக்கள் வாழும் இடங்களையும், அவ்விடங்களில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்றவற்றையும் குறிக்கும் ஒருங்கிணைந்த ஒரு சொல்லாகச் ‘சூழலியல்’ (Ecology) பயன்படுத்தப்படுகிறது. இது நீர், உணவு, காற்று, நிலம், கடல், மலை, காடு, சூரிய ஒளி எனப் பலவற்றையும் குறிப்பிடுவதாகும். இச்சூழலியல் என்பது, மனிதன் தோன்றுவதற்கு முன்பே இங்குள்ளதாகும்.

40) பின்வருவனவற்றுள் உலகத் தோற்றத்திற்குக் காரணமாக பகுத்தறிவாளர் முன்வைப்பவற்றைத்தேர்ந்தெடு.

ⅰ) பெருவெடிப்புக் கொள்கை

ⅱ) மாறாநிலைக் கொள்கை

ⅲ) பருப்பொருள் கொள்கை

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: உலகத் தோற்றத்திற்குக் காரணமாகப் பெருவெடிப்புக் கொள்கை (The Big Bang Theory), மாறாநிலைக் கொள்கை (The Steady State Theory), துடிப்புக்கொள்கை (The Pulsating Theory or The Oscillating Universe Theory) என்ற மூன்றைப் பகுத்தறிவாளர் முன்வைக்கின்றனர். இம்மூன்றினுள் இன்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது, ‘பெருவெடிப்புக் கொள்கை’ ஆகும்.

41) பெருவெடிப்புக் கொள்கைப்படி பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) ஏறக்குறைய 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பருப்பொருள்கள் அனைத்தும் துண்டுகளாகத் திசைகள்தோறும் வெடித்து விண்மீன் வடிவத் திரளாகச் சிதறின.

ⅱ) விண்மீன் திரள்களிடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் காலப்போக்கில் இவை முழுவதுமாக மறைந்தொழிந்துவிடும்.

ⅲ) இப்பேரண்டத்தில் பொருளோ ஆற்றலோ உயிரினமோ நில்லா என்றும் பெருவெடிப்பாளர் கருதுகின்றனர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பெருவெடிப்புக் கொள்கைப்படி, ஏறக்குறைய 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பருப்பொருள்கள் அனைத்தும் துண்டுகளாகத் திசைகள்தோறும் வெடித்து விண்மீன் வடிவத் திரளாகச் சிதறின என்றும், இவ்விண்மீன் திரள்களிடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் காலப்போக்கில் இவை முழுவதுமாக மறைந்தொழிந்துவிடும் என்றும், இறுதியில் இப்பேரண்டத்தில் பொருளோ ஆற்றலோ உயிரினமோ நில்லா என்றும் பெருவெடிப்பாளர் கருதுகின்றனர். இதை ஏற்கத் தயங்குவோரும், இங்குத் தொடர்ந்து நிகழும் சூழல் மாசுபாட்டால் உலகம் அழியலாம் என்ற அறிவியலாளர் கருத்துடன் முழுநிலையில் உடன்படுகின்றனர்.

42) உலகச் சுற்றுச்சூழல் நாள் (World Environment Day)’ என்று கொண்டாடப்படுகிறது?

a) ஜூன் 5

b) ஜூன் 15

c) ஜூலை 5

d) ஜூலை15

விளக்கம்: இத்தகைய மாசுபாடுகள் அனைத்தையும் தவிர்த்தால் மட்டுமே, இந்தப் பூமியும் இங்கு வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்துவகை உயிரினங்களும் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். இதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்காகவே, ஒவ்வோர் ஆண்டும், உலகம் முழுவதிலும் ஜூன் மாதம் 5ஆம் நாள், ‘உலகச் சுற்றுச்சூழல் நாள் (World Environment Day)’ எனக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை நாம் கொண்டாடினால் மட்டும் போதாது; ‘சுற்றுச் சூழலைப் பேணுவோம்’ என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் பணியாகக் கருதி ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இவ்வுலகம் தூய்மையும் அழகும் பெற்றுச் சிற்றுயிர்களும் பேருயிர்களும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான தகுதியைப் பெறும். இந்தத் தகுதியைக் கற்றுத்தருவதே சூழலியல் அறமாகும்.

43) சூழலியல் மாசுபாட்டின் வகைகளை தேர்ந்தெடு.

ⅰ) காற்றுவெளி மாசுபாடு

ⅱ) இரத்தமாசுபாடு

ⅲ) நீர்மாசுபாடு

ⅳ) கடல் மாசுபாடு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: சூழலியல் மாசுபாட்டின் வகைகள்: காற்றுவெளி மாசுபாடு (Air Pollution) இரத்தமாசுபாடு (Blood Pollution) நீர்மாசுபாடு (Water Pollution) கடல் மாசுபாடு (Marine Pollution) மண்மாசுபாடு (Soil Pollultion) உணவு மாசுபாடு(Food Pollution) கதிரியக்கமாசுபாடு (Radioactive Pollution) வெப்பமாசு (Heat Pollution) ஹார்மோன் மாசுபாடு (Harmone Pollution) ஒளி மாசுபாடு (Light Pollution) இரைச்சல் மாசுபாடு (Noise Pollution) ெநகிழி மாசுபாடு (Plastic Pollution) மனையக மாசுபாடு (Indoor Pollution) திடக்கழிவு மாசுபாடு (Solid Waste Pollution) பூச்சிக்கொல்லி மாசுபாடு (Pesticide Pollution)

44) பின்வருவனவற்றுள் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பின்வரும் சூழல் அறச்செயல்பாடுகள் எவை?

ⅰ) ‘ஒரு மனிதனுக்கு ஒரு மரம்’ என்ற கொள்கையைப் பின்பற்றவேண்டும்.

ⅱ) பயிர்நிலத்திற்காகத் தாவரங்களை அழிக்கக்கூடாது.

ⅲ) வீடு கட்டுவதற்காக மட்டும் காட்டு மரங்களை வெட்டலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பின்வரும் சூழல் அறச்செயல்பாடுகள், அறிஞர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. • ‘ஒரு மனிதனுக்கு ஒரு மரம்’ என்ற கொள்கையைப் பின்பற்றவேண்டும். • பயிர்நிலத்திற்காகத் தாவரங்களை அழிக்கக்கூடாது. • வீடு கட்டுவதற்காகக் காட்டு மரங்களை வெட்டக்கூடாது. • மண்ணரிப்பையும் மண்ணள்ளலையும் தவிர்க்கவேண்டும். • வேட்டையாடுவதை விட்டொழிக்கவேண்டும். • எந்திர மற்றும் வாகன இரைச்சலைக் குறைக்கவேண்டும். • உடனுக்குடன் கழிவுகளை அகற்றுவதும் இன்றியமையாததாகும். • எரிபொருள்களின் பயன்பாட்டையும் புகை வெளியேறுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். • இடுகாடுகளும் சுடுகாடுகளும் ஊருக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும். • இயற்கையைச் சுரண்டும் பேராசையைக் கைவிடவேண்டும்.

45) “மானுடத்திற்குப் பல்லுயிர்ப் பன்மையின் பங்களிப்பை அறிந்து அதைப் பயன் கொள்ளும்போது, அதன் ஒவ்வொரு துகளும் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பது நமக்கு விளங்கும்” என்று கூறுபவர் யார்?

a) ஆஸ்பார்ன் வில்சன்

b) நெல்சன் மார்க்ஸ்

c) உட்ரோ வில்சன்

d) ஆலன் ஆண்ட்ரீவ்

விளக்கம்: சூழலியல் அறம் என்பது மானுட அறமாகும். சுற்றுச்சூழலைப் பேணுவதன் வாயிலாகத் தம்மையே மனிதர்கள் பேணிக்கொள்கின்றனர். இது தொடர்பாகப் ‘புலிட்சர் விருதை‘ (Pulitzer Award), 1979 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில், தம் உயிரியல் ஆய்வுகளுக்காகப் பெற்ற உலகப்புகழ் வாய்ந்த அறிஞர் எட்வர்ட் ஆஸ்பார்ன் வில்சன் வலியுறுத்தும் சூழல் அறக்கருத்தும் எண்ணத்தக்கதாகும். “மானுடத்திற்குப் பல்லுயிர்ப் பன்மையின் பங்களிப்பை அறிந்து அதைப் பயன் கொள்ளும்போது, அதன் ஒவ்வொரு துகளும் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பது நமக்கு விளங்கும்” என்கிறார் எட்வர்ட் ஆஸ்பார்ன் வில்சன்.

46) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை விளக்குவதும் புரிந்துகொள்ள முனைவதும் சூழலியல் அறமாகும்.

ⅱ) இது விலங்குகளின் வாழ்வுரிமை, அவற்றின் மேம்பாடு, காட்டுயிர்ப் பேணல், விலங்குக்கல்வி, விலங்குநலச் சட்டம், உயிரிரக்கம் மற்றும் உயிர்நேயக் கொள்கைகளையும் உள்ளடக்கியதாகும்.

ⅲ) விலங்குகளின் மாண்பைக் குலைப்பதாகவும், தார்மீக மீறலாகவும் விலங்குவதையைக் கொள்ளலாம்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: விலங்குநல அறம்: மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவை விளக்குவதும் புரிந்துகொள்ள முனைவதும் விலங்குநல அறமாகும். இது விலங்குகளின் வாழ்வுரிமை, அவற்றின் மேம்பாடு, காட்டுயிர்ப் பேணல், விலங்குக்கல்வி, விலங்குநலச் சட்டம், உயிரிரக்கம் மற்றும் உயிர்நேயக் கொள்கைகளையும் உள்ளடக்கியதாகும். விலங்குகளின் மாண்பைக் குலைப்பதாகவும், தார்மீக மீறலாகவும் விலங்குவதையைக் கொள்ளலாம்.

47) பின்வருவனவற்றுள் தண்டனைக்குரிய குற்றங்களை தேர்ந்தெடு.

ⅰ) மாட்டை அடித்தல்

ⅱ) வண்ணத்துப்பூச்சிகளின் சிறகைப் பிய்த்தல்

ⅲ) பொன்வண்டைப் பிடித்தல்

ⅳ) நாயின்மீது கல்லெறிதல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: ஓணான் அடித்தல், வண்ணத்துப்பூச்சிகளின் சிறகைப் பிய்த்தல், பொன்வண்டைப் பிடித்தல், நாயின்மீது கல்லெறிதல், மாட்டை அடித்தல், கழுதை வாலில் பட்டாசு கட்டுதல், கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்தல் எனச் சிறார்ப் பருவத்தில் நம்மையும் அறியாமல் நாம் பல்வேறு உயிரிகளுக்குத் தீங்கு செய்திருக்கிறோம். இவை இன்று சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். நமது அன்றாட வாழ்வில் உரிய விழிப்பின்றிச் செய்யும் பல்வேறு செயல்களால், விலங்குநலத்துக்குத் தொடர்ந்து நாம் கேடு செய்கிறோம் என்பதை உணரவேண்டும். இதனை உணரத் தலைப்பட்ட நிலையில், 1866ஆம் ஆண்டு விலங்குவதைத் தடைச்சட்டத்தை அமெரிக்கர்கள் கொண்டுவந்தனர்.

48) ‘1992இல் விலங்குகள் என்பவை பொருள்கள் அல்ல; அவை உயிர்கள்’ என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த நாடு?

a) அமெரிக்கா

b) பிரான்ஸ்

c) நோர்வே

d) சுவிட்சர்லாந்து

விளக்கம்: விலங்குகளை ஆய்வுப் பொருள்களாகப் பயன்படுத்துவதால் அவற்றுக்கு ஏற்படும் துன்பங்களைவிட, மனிதர்களுக்கு விளையும் நன்மைகளே அதிகமென்று அறிவியலாளர் வாதாடினர். இது பயன்பாட்டுக் கருத்தியலாகும். இதனை ஏற்க மறுத்த உயிரிரக்கக் கோட்பாட்டாளர்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் உயிர்வாழும் உரிமையுண்டு. என்றும், மனிதர்களின் நலன்களுக்காக விலங்குகளை வதைக்கவோ அழிக்கவோ கூடாதென்றும் கருத்துரைத்தனர். இது பயன்பாட்டுக் கருத்தியலுக்கு எதிரானதாகும். 1992இல் விலங்குகள் என்பவை பொருள்கள் அல்ல; அவை உயிர்கள் என்ற சட்டத் திருத்தத்தைச் சுவிட்சர்லாந்து நாட்டினர் நிறைவேற்றினர்.

49) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 2013இல் இந்தியச் சட்டம், மனிதர்களுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க உயிரிகளாக டால்பின்களை ஏற்றுக்கொண்டதுடன், மனிதர்களுக்குள்ள அனைத்துரிமைகளையும் அவற்றுக்கும் உறுதிசெய்தது.

ⅱ) அசையும் சொத்துக்களாகக் கருதப்பட்ட விலங்குகளுக்கு உணர்வுயிரிகள் என்ற அடைமொழியை, 2014இல் சட்டத்திருத்தம் மூலமாக சுவிட்சர்லாந்து நாட்டினர் வழங்கியுள்ளனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: 2013இல் இந்தியச் சட்டம், மனிதர்களுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க உயிரிகளாக டால்பின்களை ஏற்றுக்கொண்டதுடன், மனிதர்களுக்குள்ள அனைத்துரிமைகளையும் அவற்றுக்கும் உறுதிசெய்தது. அசையும் சொத்துக்களாகக் கருதப்பட்ட விலங்குகளுக்கு உணர்வுயிரிகள் என்ற அடைமொழியை, 2014இல் சட்டத்திருத்தம் மூலமாகப் பிரான்ஸ் நாட்டினர் வழங்கியுள்ளனர். நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் ஒரங்குட்டன், கொரில்லா, சிம்பென்சி ஆகிய மூன்றும் மனிதனுக்கு ஒப்பானவை எனக் கருதப்பட்டு ஆய்வகச் சோதனைகளில் அவற்றைப் பயன்படுத்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

50) கீழ்க்கண்டவற்றுள் வன விலங்குகள் அழிவதற்கான காரணங்களை தேர்ந்தெடு.

ⅰ) பாதுகாப்பற்ற சூழ்நிலை

ⅱ) காடுகளின் பரப்பளவு குறைதல்

ⅲ) வனத்தாவரங்கள் அழிக்கப்படுதல்

ⅳ) மழைப்பொழிவு மற்றும் காட்டுத் தீ

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: வன விலங்குகள் ஏன் அழிகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா ? • பாதுகாப்பற்ற சூழ்நிலை • காடுகளின் பரப்பளவு குறைதல் • வனத்தாவரங்கள் அழிக்கப்படுதல் • வறட்சி மற்றும் காட்டுத் தீ • வேட்டையாடுதல் • தொற்றுநோய்கள் • மின்வேலிகள்

51) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21ஆம் பிரிவின்கீழ், 2000ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வேடிக்கை வட்டரங்கில் (Circus) உள்ள விலங்குகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ⅱ) நமது நண்பர்களான விலங்குகளிடம் இரக்கம் காட்டுவதுடன், அவற்றின் உரிமைகளை இனங்காண்பதும் பாதுகாப்பதும் நமது அடிப்படைக் கடமைகளாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21ஆம் பிரிவின்கீழ், 2000ஆம் ஆண்டில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வேடிக்கை வட்டரங்கில் (Circus) உள்ள விலங்குகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது நண்பர்களான விலங்குகளிடம் இரக்கம் காட்டுவதுடன், அவற்றின் உரிமைகளை இனங்காண்பதும் பாதுகாப்பதும் நமது அடிப்படைக் கடமைகளாகும்.

52) எந்த ஆண்டு முதல் உயிருள்ள விலங்குகளைக் கல்வி ஆய்வுகளுக்காகக்கூடப் பயன்படுத்தக்கூடாது என இந்திய அரசு தடை செய்துள்ளது?

a) 2012

b) 2010

c) 2009

d) 2004

விளக்கம்: 1960ஆம் ஆண்டு விலங்குவதைத் தடைச்சட்டத்தில் 2012இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், 15 ஆம் பிரிவு உயிருள்ள விலங்குகளைக் கல்வி ஆய்வுகளுக்காகக்கூடப் பயன்படுத்தக்கூடாது என இந்திய அரசு தடை செய்துள்ளது.

53) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) அனைத்து உயிர்களிடமும் பரிவு காட்டுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.

ⅱ) தெருவில் திரியும் விலங்குகளைக் காயப் படுத்துவதும் கொல்வதும் சட்டப்படி குற்றமாகும்.

ⅲ) எக்காரணம் கருதியும் எவ்விலங்கையும் கைவிடும் செயல் 6 மாதச் சிறைத் தண்டனைக்குரியது.

ⅳ) கட்டிவைத்தோ, உணவிடாமல் வதைத்தோ, குடிநீரை மறுத்தோ, தங்குமிடம் தராமலோ விலங்குகளைப் பல மணிநேரம் துன்புறுத்துவது தண்டத்தொகைக்கும் சிறைத்தண்டனைக்கும் உரியதாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅱ), ⅳ)

விளக்கம்: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள விலங்கு உரிமைகள் அனைத்து உயிர்களிடமும் பரிவு காட்டுவது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். தெருவில் திரியும் விலங்குகளைக் காயப் படுத்துவதும்கொல்வதும்சட்டப்படி குற்றமாகும். எக்காரணம் கருதியும் எவ்விலங்கையும் கைவிடும் செயல் மூன்றுமாதச் சிறைத் தண்டனைக்குரியது. கட்டிவைத்தோ, உணவிடாமல் வதைத்தோ, குடிநீரை மறுத்தோ, தங்குமிடம் தராமலோ விலங்குகளைப் பல மணிநேரம் துன்புறுத்துவது தண்டத்தொகைக்கும் சிறைத்தண்டனைக்கும் உரியதாகும். குரங்குகளை வளர்ப்பதும், காட்சிப்பொருள் ஆக்குவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

54) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) வேடிக்கை வட்டரங்குகளில் அல்லது தெருக்களில் வித்தை காட்டும் பொருட்டுக் குரங்கு, சிறுத்தை, கரடி, புலி, சிங்கம், காளை ஆகிய விலங்குகளைப் பயிற்சிகள்வழித் துன்புறுத்தக்கூடாது.

ⅱ) உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு உணவிடுதல் போற்றப்படுகிறது.

ⅲ) இக்குற்றத்திற்கு ரூபாய் 25,000 தண்டத்தொகையும், மூன்றாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வேடிக்கை வட்டரங்குகளில் அல்லது தெருக்களில் வித்தை காட்டும் பொருட்டுக் குரங்கு, சிறுத்தை, கரடி, புலி, சிங்கம், காளை ஆகிய விலங்குகளைப் பயிற்சிகள்வழித் துன்புறுத்தக்கூடாது. உயிரியல் பூங்காக்களில் குப்பைகளை வீசுதலும், விலங்குகளைச் சீண்டுதலும், விலங்குகளுக்கு உணவிடுதலும், தொந்தரவு செய்தலும் குற்றமாகும். இக்குற்றத்திற்கு ரூபாய் 25,000 தண்டத்தொகையும், மூன்றாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பிடித்தல், வலையில் அகப்படுத்தல், நஞ்சூட்டல், தாக்குதல் அல்லது துன்புறுத்த முனைதல் முதலிய குற்றங்கள் ரூபாய் 25,000 தண்டத்தொகைக்கும் ஏழாண்டுச் சிறைத் தண்டனைக்கும் உரியன.

55) வேட்டையாடுவதற்கு இணையான குற்றங்களாகக் கருதப்படுபவை எவை?

ⅰ) முட்டைகளை உடைத்தல் அல்லது இடம் பெயர்த்தல்

ⅱ) ஊர்வன மற்றும் பறவைகளின் வாழ்விடங்களைச் சிதைத்தல்

ⅲ) அவை வாழும் மரங்களை வெட்டுதல் அல்லது அதற்காக முனைதல்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: முட்டைகளை உடைத்தல் அல்லது இடம் பெயர்த்தல், ஊர்வன மற்றும் பறவைகளின் வாழ்விடங்களைச் சிதைத்தல், அவை வாழும் மரங்களை வெட்டுதல் அல்லது அதற்காக முனைதல் ஆகியன வேட்டையாடுவதற்கு இணையான குற்றங்களாகக் கருதப்பட்டு, ரூபாய் 25,000 தண்டத்தொகையும் ஏழாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். விலங்குகளை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருள்களுக்கும், அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

56) தாய், தந்தை முதலிய உறவுநிலைகளை ஆநிரைக்கும் பொருத்திப் பசுங்கன்றின் துயரத்துக்காகப் பரிந்து, ‘இன்னே வருகுவர்’ என்று ஆறுதல் கூறும் பாத்திரம் இடம் பெற்ற நூல்?

a) குறிஞ்சிப்பாட்டு

b) முல்லைப்பாட்டு

c) மலைபடுகடாம்

d) பட்டினப்பாலை

விளக்கம்: விலங்கு நல அறம் என்பது, ஒரு நவீனக் கருத்தியல் மட்டுமன்று. இது பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிறப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம். தாய், தந்தை முதலிய உறவுநிலைகளை ஆநிரைக்கும் பொருத்திப் பசுங்கன்றின் துயரத்துக்காகப் பரிந்து, ‘இன்னே வருகுவர்’ என்று ஆறுதல் கூறுகிறாள், முல்லைப்பாட்டில் வரும் ஆய்மகள். “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள் கைய கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள்” (முல்லைப்பாட்டு : 16-12) ‘இதோ வந்துவிட்டனர் உங்கள் அன்னையர்’ எனக் கன்றுக்குப் பரிந்து பேசும் இம்முல்லைப் பாட்டின் ஆய்மகள், விலங்குகள் மீது மானுடர் செலுத்த வேண்டிய உயிர்நேயப் பண்புக்குச் சிறந்த சான்றாகிறாள்.

57) பொருத பூமணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

a) நற்றிணை

b) முல்லைப்பாட்டு

c) குறுந்தொகை

d) பட்டினப்பாலை

விளக்கம்: சிற்றுயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு வாழ்வதே பழந்தமிழர் பண்பாடு ஆகும். இதன் பிழிவைப் பின்வரும் நற்றிணைப் பாடலிலும் காணலாம்.“புணரி பொருத பூமணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்றிணை: 8-6 :11) கடற்கரை மணலில் தேரோட்டிச் செல்பவன், அங்குள்ள நண்டுகளுக்குத் துன்பம் நேராதவாறு குதிரைகளைத் திருப்புகிறான் என்கிறார் உலோச்சனார். இத்தகைய உயிர்நேயம் உலகோர் அனைவரும் வியக்கத்தக்கதாகும்.

58) இராணுவ அறத்திற்கு மிகவும் இன்றியமையாதது எது?

a) தீங்கு செய்யாமை

b) கீழ்ப்படிதல்

c) இரக்கம்

d) வெற்றி

விளக்கம்: இராணுவ அறம்: ‘இராணுவ அறம்’ என்பது அனைத்து வகை இராணுவச்செயல்பாடுகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இராணுவ அறத்திற்குக் ‘கீழ்ப்படிதல்’ என்பது மிகவும் இன்றியமையாததாகும். இது குறிப்பாகக் போர்க்காலங்களில் கடைப்பிடிக்கபட வேண்டியதாகும். நவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தும் திறனும் விழிப்பும் ஒழுங்கும் இங்குத் தேவைப்படுகின்றன. இத்தேவையைப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவதை, ‘இராணுவ அறம்’ வலியுறுத்துகிறது.

59) கீழ்க்கண்டவற்றுள் இராணுவத்திற்கான அறங்கள் எவை?

ⅰ) பற்றுறுதி

ⅱ) கடமை

ⅲ) மதிப்பு

ⅳ) தன்னலமற்ற தொண்டு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: இராணுவத்திற்கான ஏழு அறங்கள்… • பற்றுறுதி (Loyalty) • கடமை (Duty) • மதிப்பு (Respect) • தன்னலமற்ற தொண்டு (Selfless Service) • மாண்பு (Honour) • நம்பிக்கை (Integrity) • மனத் துணிவு (Personal Courage)

60) கீழ்க்கண்டவற்றுள் இராணுவ அறத்தின் பாற்பட்ட விலக்க முடியாத விதிகளை தேர்ந்தெடு.

ⅰ) ஒரு குறிப்பிட்ட சூழலில் படைகளைக் களமிறக்க வேண்டிய நெருக்கடியுள்ளதா என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

ⅱ) போரிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை.

ⅲ) எளிய குடிமக்களின் உயிர்களுக்கு ஊறு ஏற்படாத வகையில், தாக்குதல் நடவடிக்கைகளைக் கட்டுக்கோப்புடன் கையாளவேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இராணுவ அறத்தின் பாற்பட்ட விலக்க முடியாத விதிகளைப் பின்வருமாறு தொகுக்கலாம். ஒரு குறிப்பிட்ட சூழலில் படைகளைக் களமிறக்க வேண்டிய நெருக்கடியுள்ளதா என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். போரிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும். எளிய குடிமக்களின் உயிர்களுக்கு ஊறு ஏற்படாத வகையில், தாக்குதல் நடவடிக்கைகளைக் கட்டுக்கோப்புடன் கையாளவேண்டும். ஒரு நாட்டின் மாண்புக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படாத முறையில், இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கமுடியாமைக்கான நியாயங்களைப்பகுத்தறிவுக்கோட்பாட்டிற்குப் பொருந்துமாறு ஆட்சித்தலைவர்கள் பொதுவெளியில் விளக்கவேண்டும்.

61) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) நவீனப் போர்த்தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகையில், அவை நடைமுறை இராணுவ அறவிதிகளுக்கு முரண்படாமலிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ⅱ) அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் வெகுமக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் கேடு செய்யாதவாறு ஒழுங்குபடுத்தப்படுதல் சாலச்சிறந்ததாகும்.

ⅲ) சட்டத்தின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் இராணுவ முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: *நவீனப் போர்த்தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகையில், அவை நடைமுறை இராணுவ அறவிதிகளுக்கு முரண்படாமலிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். *அமைதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள், இரு தரப்பிலுமுள்ள வெகுமக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் கேடு செய்யாதவாறு ஒழுங்குபடுத்தப்படுதல் சாலச்சிறந்ததாகும். * சட்டத்தின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் இராணுவ முடிவுகள் எடுக்கப்படவேண்டும். *குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர், எளியோர் முதலியோரைப் பாதுகாக்கவேண்டும்.

62) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) வழிபாட்டிடங்கள், வரலாற்றுச்சின்னங்கள், நினைவில்லங்கள், நூலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், கலைக்கூடங்கள் முதலியவற்றைத் தாக்கக்கூடாது.

ⅱ) சரியான முடிவுகளைத் தவறான காரணங்களுக்காகவோ, தவறான முடிவுகளைச் சரியான காரணங்களுக்காகவோ மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்

ⅲ) போர்க்கைதிகளைக் குற்றவாளிகளைப்போல் நடத்த வேண்டும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: வழிபாட்டிடங்கள், வரலாற்றுச்சின்னங்கள், நினைவில்லங்கள், நூலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், கலைக்கூடங்கள் முதலியவற்றைத் தாக்கக்கூடாது. சரியான முடிவுகளைத் தவறான காரணங்களுக்காகவோ, தவறான முடிவுகளைச் சரியான காரணங்களுக்காகவோ மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். போர்க்கைதிகளைக் குற்றவாளிகளைப்போல் நடத்தக்கூடாது; அரசியல் கைதிகளைத் தண்டிப்பதற்குரிய சட்டங்களுக்குட்பட்டு அவர்களை அணுகவேண்டும்.

63) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழும் சமத்துவச் சூழலை நோக்கித் தற்கால உலகம் சென்றுகொண்டிருக்கிறது.

ⅱ) சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தின் சிக்கல்களைப் பேசவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் உதவும் ஒரு கோட்பாடாகப் பெண்ணியத்தை வரையறுக்கலாம்.

ⅲ) இப்பெண்ணியம்வழிப் பெண்நலம் பேணுவது பெண்ணிய அறமாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: பெண்ணிய அறம்: ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழும் சமத்துவச் சூழலை நோக்கித் தற்கால உலகம் சென்றுகொண்டிருக்கிறது, இச்சூழலில், சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தின் சிக்கல்களைப் பேசவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் உதவும் ஒரு கோட்பாடாகப் பெண்ணியத்தை வரையறுக்கலாம். இப்பெண்ணியம்வழிப் பெண்நலம் பேணுவது பெண்ணிய அறமாகும். பெண்ணிருப்புக்கான நியாயங்களைப் பெண்ணின் கண்ணோட்டத்தின் வழியாகக் காண்பதும் பெண்களின் சமத்துவத்தையும் வளர்ச்சியையும் வலியுறுத்துவதும் பெண்களின் சார்பாகப் போராடுவதும் எல்லா நிலைகளிலும் பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்வதும் பெண்ணிய அறக்கோட்பாட்டின் இலக்குகளாகும்.

64) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) சமூக எழுச்சியின் ஒரு பகுதியாகவும் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் நியாயமான எதிர்ப்புணர்வாகவும் பெண் விடுதலை பற்றிய கருத்தியல் உருவானதாகக் கூறலாம்.

ⅱ) வழிவழியாக வந்த நியாயங்கள், தொடர்ந்து உருவாக்கப்பட்ட மதிப்புகள், விதிக்கப்பட்ட நெறிகள், கற்பிக்கப்பட்ட புனிதங்கள் போன்ற அனைத்தையும் பெண்ணிய அறம் ஏற்றுக்கொள்கிறது.

ⅲ) உரிய இடம், உரிய பங்கு, உரிய மதிப்பு, உரிய ஊதியம், உரிய உரிமை, உரிய அதிகாரம் முதலியவற்றைப் பெண்ணிய அறம் உறுதிசெய்கிறது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: சமூக எழுச்சியின் ஒரு பகுதியாகவும் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் நியாயமான எதிர்ப்புணர்வாகவும் பெண் விடுதலைபற்றிய கருத்தியல் உருவானதாகக் கூறலாம். வழிவழியாக வந்த நியாயங்கள், தொடர்ந்து உருவாக்கப்பட்டமதிப்புகள், விதிக்கப்பட்ட நெறிகள், கற்பிக்கப்பட்ட புனிதங்கள்போன்ற அனைத்தையும் பெண்ணிய அறம் கேள்வி கேட்கிறது. உரிய இடம், உரிய பங்கு, உரிய மதிப்பு, உரிய ஊதியம், உரிய உரிமை, உரிய அதிகாரம் முதலியவற்றைப் பெண்ணிய அறம் உறுதிசெய்கிறது. உடலால், உள்ளத்தால், மொழியால், கருத்தால், செயலால், விளைவால் ஆணுக்கிணையாகத் தன்னையும் பெண் வெளிப்படுத்திக்கொள்வதைப் பெண்ணிய அறம் வரவேற்கிறது.

65) ‘அனைத்துப் பண்பாடுகளிலும் உள்ள பெண் வெறுப்பு என்பது மானுடத்தின் உண்மை இயல்பன்று; அது ஒரு சமநிலைக் குலைவே’ என்று கூறுபவர் யார்?

a) ஆஸ்பார்ன் வில்சன்

b) நெல்சன் மார்க்ஸ்

c) உட்ரோ வில்சன்

d) ஜோஸ் வேடன்

விளக்கம்: பெண்களின் இயல்பான விருப்பங்கள், உள்ளத்துணர்வுகள், அவற்றின் முறிவுகள், சிதைவுகள், அழுத்தங்கள் முதலியவற்றைப் படைப்பிலக்கியங்கள் மற்றும் பிற கலை வெளிப்பாடுகளின்வழிப் பதிவுசெய்வதைப் பெண்ணிய அறம் ஊக்குவிக்கிறது. சமத்துவம் என்பது போராடிப் பெறும் ஏதோ ஒரு கருத்தியல் இல்லை; அது ஒரு தேவை; புவியீர்ப்பு விசை போன்று இயற்கையானது; ஆண்களும் பெண்களுமாகப் பூமியில் காலூன்றி நிற்பதற்கு அது வேண்டும்; அனைத்துப் பண்பாடுகளிலும் உள்ள பெண் வெறுப்பு என்பது மானுடத்தின் உண்மை இயல்பன்று; அது ஒரு சமநிலைக் குலைவே. (ஜோஸ் வேடன்) பெண்ணியம், முனைவர் இரா. பிரேமா, தமிழ்ப் புத்தகாலயம்.

66) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொதுமொழி என்பது பெரிதும் ஆண் மொழியாகவே உள்ளது.

ⅱ) ஆண் மொழியின் சொற்கள், பெண்ணைக் கேலி செய்வதாகவும், அவளின் இருப்புக்குரிய மதிப்பை மறுப்பதாகவும் உள்ளன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: பொதுமொழி என்பது பெரிதும் ஆண் மொழியாகவே உள்ளது. ஆண் மொழியின் சொற்கள், பெண்ணைக் கேலி செய்வதாகவும், அவளின் இருப்புக்குரிய மதிப்பை மறுப்பதாகவும் உள்ளன. இந்நிலையில், ஒரு புதிய பெண்மொழியின் தேவையைப் பெண்ணிய அறம் வலியுறுத்துகிறது. (எ.கா.) Chairman – Chairperson, Chairwoman, Chair; ஆசிரியன் – ஆசிரியை, ஆசிரியர்; மாணவன் – மாணவி, மாணவர்.

67) பெண்ணிய அமைப்புகள் போராடிப் பெற்ற உரிமைகளை தேர்ந்தெடு.

ⅰ) பெண்களுக்குக் கல்வி உரிமை

ⅱ) மணத்தெரிவு உரிமை

ⅲ) வழிபாட்டு உரிமை

ⅳ) வேலை பார்க்கும் பெண்கள் சங்கம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: பெண்களுக்குக் கல்வி உரிமை, மணத்தெரிவு உரிமை, சொத்து உரிமை, தொழில் உரிமை, வழிபாட்டு உரிமை, மணவிலக்கு உரிமை, குழந்தைப் பேற்றைத் தீர்மானிக்கும் உரிமை, பேறுகால விடுப்பிற்கான உரிமை, அரசியல் பங்கேற்பு உரிமை, ஓட்டுநர் உரிமை, வேலை பார்க்கும் பெண்கள் சங்கம் (Professional Women’s Club) அமைப்பதற்கான உரிமை எனப் பல்வேறு உரிமைகளைப் பெண்ணிய அமைப்புகள் போராடிப் பெற்றுள்ளன. மரபுவாதப் பெண்ணியம் (Conservative Feminism), தாராளவாதப் பெண்ணியம் (Liberal Feminism), தீவிரவாதப் பெண்ணியம் (Radical Feminism), சமதர்மப் பெண்ணியம் (Social Feminism), பண்பாட்டுப் பெண்ணியம் (Cultural Feminism), ஆன்மீகப் பெண்ணியம் (Spiritual Feminism), சீர்திருத்தப் பெண்ணியம் (Reformist Feminism), தலைமை வேண்டாப் பெண்ணியம் (Anarcha Feminism), அமைப்பை மறுக்கும் பெண்ணியம் (Rebellion Feminism), புரட்சிகரப் பெண்ணியம் (Revolutionary Feminism), வன்முறை எதிர்ப்புப் பெண்ணியம் (Anti-Violence Feminism), கருப்பினப் பெண்ணியம் (Black Feminism), சூழல் பெண்ணியம் (Eco-Feminism) எனப்பலவாறாகப் பெண்ணிய இயக்கங்களைப் பெண்ணியவாதிகள் பகுத்துள்ளனர்.

68) முதல் கட்ட பெண்ணியத்தின் குறிக்கோள்களை தேர்ந்தெடு.

ⅰ) பெண் கல்வி

ⅱ) பாலினச் சமத்துவம்

ⅲ) பணியிடப் பாதுகாப்பு

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இந்தப் பெண்ணிய இயக்கங்கள், உலகம் முழுவதிலும் பரவிப் பெண் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன. இவற்றை முதல் கட்டப் பெண்ணியம், இரண்டாம் கட்டப் பெண்ணியம், மூன்றாம் கட்டப் பெண்ணியம் என மூன்றாகப் பகுக்கலாம். முதல் கட்டப் பெண்ணியம் (First Wave Feminism: பெண் கல்வி, பாலினச் சமத்துவம், போதைப்பொருள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு முதலியவற்றைக் குறிக்கோளாக்கிப் பெண்ணியத்தின் முதல் அலை (1900- 1930), உலகம் முழுவதும் எழுந்தது. இது பெண் பற்றிய மரபுவழிக் கருத்துகளைப் பொதுநிலையில் எதிர்த்தது. அடிப்படையான மனித உரிமைகளையே இது கோரியது.

69) கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் கட்ட பெண்ணியத்தின் குறிக்கோள்களை தேர்ந்தெடு

ⅰ) போதைப்பொருள் மறுப்பு

ⅱ) வேலை வாய்ப்பு

ⅲ) ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் வாக்குரிமை

ⅳ) சம ஊதியம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: இரண்டாம் கட்டப் பெண்ணியம் (Second Wave Feminism) ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் வாக்குரிமை, வேலை வாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு, சம ஊதியம் முதலியவற்றைப் பெரிதும் வலியுறுத்துவதாகப் பெண்ணியத்தின் இரண்டாம் கட்டம் (1900 1960-) அடைந்தது. இது ஒடுக்கப்பட்டவர்களான நலிந்தோரின் உரிமைகள் அனைத்தையும் தன்னோடு இணைத்துக்கொண்டு வலிமையுற்றது. இவ்வகையில் பெண்களின் அரசியல் பங்கேற்பையும் இது முன்னெடுத்தது.

70) மூன்றாம் கட்டப் பெண்ணியம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) மானுட உரிமைப்போருக்கான உரையாடலின் ஒருபகுதியாக, மூன்றாம் கட்டப் பெண்ணியம் (1960 – இன்றுவரை) அமைகிறது.

ⅱ) தடைகளைத் தானே உடைத்துத் தனக்கான விடுதலையைத் தானே படைத்துக்கொண்டது.

ⅲ) அது உலகம் முழுவதும் வாழும் அனைத்து மனிதர்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் ஒலிக்கும் ஒரு வலிமையான அறக்குரலாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: மூன்றாம் கட்டப் பெண்ணியம் (Third Wave Feminism): மானுட உரிமைப்போருக்கான உரையாடலின் ஒருபகுதியாக, மூன்றாம் கட்டப் பெண்ணியம் (1960 – இன்றுவரை) அமைகிறது. இது ஆண் வெறுப்பில் விளையவில்லை; இரண்டாம் பாலினமாகப் பெண்ணைக் கருதிப் பெண்ணுக்கான உரிமைகளைப் பெறக் கெஞ்சவில்லை; தடைகளைத் தானே உடைத்துத் தனக்கான விடுதலையைத் தானே படைத்துக்கொண்டது. பெண்ணிய அறம் என்பது ஆண்களுக்கு இணையாகக் கல்வியும் வேலையும் சொத்தும் கேட்டுப்போராடுவதுடன் அமைதி கொள்வதில்லை. அது உலகம் முழுவதும் வாழும் அனைத்து மனிதர்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் ஒலிக்கும் ஒரு வலிமையான அறக்குரலாகும்.

71) “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை வெள்ளையினப் பெண்களின் முன்னேற்றத்தை வைத்து மட்டுமல்லாமல், கருப்பினப் பெண்களின் முன்னேற்றத்தையும் சேர்த்து வைத்தே அளவிடவேண்டும்” என்று கூறியவர்?

a) ஆஸ்பார்ன் வில்சன்

b) காரல் மார்க்ஸ்

c) உட்ரோ வில்சன்

d) ஆலன் ஆண்ட்ரீவ்

விளக்கம்: இதனால்தான் கார்ல் மார்க்ஸ், “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை வெள்ளையினப் பெண்களின் முன்னேற்றத்தை வைத்து மட்டுமல்லாமல், கருப்பினப் பெண்களின் முன்னேற்றத்தையும் சேர்த்து வைத்தே அளவிடவேண்டும்” எனச் சமூக விடுதலையின் முழுமுதற்காரணியாகப் பெண் முன்னேற்றத்தைப் பரிந்துரைக்கிறார். சமயஞ்சாரா அறம் சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம், பால் பாகுபாடுகளைத் தாண்டிய நிலையில் அறம் என்பது உலகப் பொதுவானதாகும். இத்தகைய பொதுமை அறம் மனிதகுலம் முழுமைக்கும் பயனளிப்பதாகும். இயற்கையைத் தொடக்கத்தில் வழிபட்ட மனிதன், ‘அரசு, குடும்பம், சமயம்’ ஆகிய நிறுவன அமைப்புகள் உருப்பெற்றநிலையில் இயற்கையை மீறிய கருத்துருவங்களைச் சிலைகளாகவும் கோவில்களாகவும் பிற வழிபாட்டுச் சின்னங்களாகவும் தொழத் தொடங்கினான். இதன் விளைவாகச் சமயம் என்பது எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வில் குறுக்கிடும் திட்டவட்டமான இறுகிய விதிகளைக் கொண்ட நிறுவன அமைப்பானது.

72) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) இந்த உலகையும் இங்கு வாழும் வாழ்வையும் சமய நிறுவனங்கள் பெரிதாகக் கருதின.

ⅱ) சமயஞ்சாரா மானுட விழுமியங்களில் செறிவும் ஆழமும் கூடிய மனிதப்பண்புகள் மிகுந்துள்ளன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: இந்த உலகையும் இங்கு வாழும் வாழ்வையும் பெரிதாகக் கருதாமல் சொர்க்க நரகங்களைச் சமய நிறுவனங்கள் வலியுறுத்தின. அன்பு, அருள், இரக்கம், பரிவு, தோழமை முதலியவற்றை வளர்க்க விரும்பிய சான்றோர்பெருமக்கள், இவற்றுக்குச் சமய நிறுவனங்கள்வேண்டாம் என்று கருதிச் சமயஞ்சாரா அறத்தைச் சிறப்புக்குரியதாகப் பரிந்துரைத்தனர். இங்குச் சமயக் கருத்தியலில் அறம் இல்லை என்பது பொருளன்று; சமயஞ்சாரா மானுட விழுமியங்களில் செறிவும் ஆழமும் கூடிய மனிதப்பண்புகள் மிகுந்துள்ளன எனப் பொதுஅறத்தைப் பெரியோர் விரிவுபடுத்துவர்.

73) “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், உண்டியும் உடையும் உறையுளும் அல்லது இல்” என்று கூறியவர்?

a) திருமூலர்

b) இளங்கோவடிகள்

c) சீத்தலைசாத்தனார்

d) உலோச்சனார்

விளக்கம்: ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனத் திருவள்ளுவர் கூறுவதைச் சமயஞ்சாரா அறக்கோட்பாடாகக் கருதலாம். இதன் நுண்விளக்கத்தைச் சீத்தலைச் சாத்தனார், “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், உண்டியும் உடையும் உறையுளும் அல்லது இல்” என்கிறார். ‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்றும், “உடம்பை வளர்த்தோம் உயிரை வளர்த்தோம்” என்றும், உணவையும் உயிரையும் உலகையும் வாழ்வையும் பொருட்படுத்திச் சான்றோர் பேசியுள்ளனர். ‘பசிப்பிணி என்னும் ஒரு பாவி’ என்றும், ‘கையது கொண்டு மெய்யது பொத்தி’ என்றும், ‘அழிபசி வருத்தம்’ என்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாததால் விளையும் துன்பங்களைப் புலப்படுத்தியுள்ளனர். இவற்றுக்குக் கடவுள் மற்றும் சமயச் சிந்தனைகளைத் தாண்டிய தீர்வுகளை உலக வாழ்விலேயே தேட வேண்டும் எனச் சான்றோர் கருதினர்.

74) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சமூக அமைதிக்குச் சமயங்களால் பங்கம் வராமல் காத்து நல்லிணக்கத்துடன் மனிதர்கள் அனைவரும் ஒருங்குகூடிவாழும் இயல்பையே சங்க கால மக்கள் வலியுறுத்தினர்.

ⅱ) சமயஞ்சாராமை என்பது கடவுள்/ சமயங்களின் மறுப்பு என்றும், பல்வேறு சமயங்களின் இடையே எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையையும் எடுக்காத நல்லிணக்கம் என்றும் இருவகையாகப் பொருள் கூறப்படுகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: சமூக அமைதிக்குச் சமயங்களால் பங்கம் வராமல் காத்து நல்லிணக்கத்துடன் மனிதர்கள் அனைவரும் ஒருங்குகூடிவாழும் இயல்பையே அவர்கள் வலியுறுத்தினர். சமயஞ்சாராமை என்பது கடவுள்/ சமயங்களின் மறுப்பு என்றும், பல்வேறு சமயங்களின் இடையே எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையையும் எடுக்காத நல்லிணக்கம் என்றும் இருவகையாகப் பொருள் கூறப்படுகிறது. மனித அறிவுப்புலங்களான தருக்கவியல், நடத்தையியல், நுண்ணறிவியல், சமூகவியல் போன்றவற்றின் அடிப்படையில் தோன்றுவதே சமயஞ்சாரா அறமாகும். இக்கோட்பாடுகள் இயற்கையிறந்த ஆணைகளாலோ சமயங்களாலோ ஏற்பட்டதல்ல. இவை மனிதநேயம், நல்லிணக்கம், சுதந்திரச் சிந்தனை உள்ள எந்த அமைப்புக்கும் பொருந்தும்.

75) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தொன்மை நியதிகள், சமூக ஒப்பந்தங்கள், சட்ட நெறிகள், பணிப் பண்பாடு போன்ற பகுத்தறிவுக்குப் பொருத்தமான ஒழுகலாறுகள் சமயஞ்சாரா அறத்திற்குரியன.

ⅱ) அன்பு, நேர்மை, உண்மை, ஒழுக்கம்’ ஆகிய அறங்களும், வன்முறை எதிர்ப்பும் சமயஞ்சார்ந்த மற்றும் சமயஞ்சாராக் கருத்தியல்களுக்குப் பொதுவானவை.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: தொன்மை நியதிகள், சமூக ஒப்பந்தங்கள், சட்ட நெறிகள், பணிப் பண்பாடு போன்ற பகுத்தறிவுக்குப் பொருத்தமான ஒழுகலாறுகள் சமயஞ்சாரா அறத்திற்குரியன. ‘அன்பு, நேர்மை, உண்மை, ஒழுக்கம்’ ஆகிய அறங்களும், வன்முறை எதிர்ப்பும் சமயஞ்சார்ந்த மற்றும் சமயஞ்சாராக் கருத்தியல்களுக்குப் பொதுவானவை. தனிமனித நலனையும் சமூகநலனையும் முன்வைக்கும் அறக்கொள்கைகளை ஏற்பதிலும் இவற்றிடையே ஒற்றுமையுள்ளது. ஆனால், கடவுளையும் கற்பிதங்களையும் சமயஞ்சாரா அறம் ஏற்பதில்லை.

76) “இயற்கையிடமிருந்து விடைகளை மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஏற்கமுடியாது என்றும், பகுத்தறிவின் மூலமே அறத்தை வரையறுக்க வேண்டும்” என்று கூறியவர்?

a) ஆஸ்பார்ன் வில்சன்

b) காரல் மார்க்ஸ்

c) உட்ரோ வில்சன்

d) ஸ்டீபன் ஜே கௌட்

விளக்கம்: இயற்கை கடந்த, உண்மைக்குப் புறம்பான எதையும் ஏற்றுக்கொள்ளாத சமயஞ்சாரா அறவியலாளரின் எடுகோள்களைப் பின்வருமாறு தொகுக்கலாம். சமயங்களால் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கமுடியுமே தவிர, பண்பார்ந்த மனிதர்களை அவற்றால் உருவாக்கமுடியாது என்றும், பகுத்தறிவு விழுமியங்களே சிறந்தவை என்றும் கருதுவர். புகழ்பெற்ற உயிரியல் அறிஞரான ஸ்டீபன் ஜே கௌட் (Stephen Jay Gould), “இயற்கையிடமிருந்து விடைகளை மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஏற்கமுடியாது என்றும், பகுத்தறிவின் மூலமே அறத்தை வரையறுக்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.

77) “தூய அறிவுடையவன், மெய்யான ஒழுக்கநெறி உடையவன், எண்வகை குணமுடையவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்” எனச் சமயப் பொறை பேசுபவர்?

a) தாயுமானவர்

b) இளங்கோவடிகள்

c) சீத்தலைசாத்தனார்

d) திருவள்ளுவர்

விளக்கம்: தமக்கு இயல்பான நற்பண்புகளின் அடிப்படையில், அறங்களைத் தமக்குத் தாமே படைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு உண்டு. அறக்கோட்பாட்டாளர்கள் எடுக்கும் முடிவுகள் பொதுநலன்களைக் கருதியதாக அமையவேண்டும். காரண காரிய அடிப்படையிலான நன்னெறிகளைக் காலத்திற்கு ஏற்ப மாற்றலாம்; புதுப்பிக்கலாம். தீங்கு பயக்காத நன்னெறிகளையே தனிநபரும் சமூகமும் பின்பற்ற வேண்டும். அறமும் பகுத்தறிவும் உள்ள பண்பட்ட சமூக அமைப்பை உருவாக்கவேண்டும். இத்தகைய சமயஞ்சாரா அறக்கருத்துக்களைத் திருக்குறளிலும் காண்கிறோம். கடவுள் பற்றிக் கூறும்போதும், எந்தச் சமயக் கடவுளையும் குறிப்பிடாமல், “தூய அறிவுடையவன், மெய்யான ஒழுக்கநெறி உடையவன், எண்வகை குணமுடையவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்” எனச் சமயப் பொறை பேசுகிறார் வள்ளுவர்.

78) எவ்வகை ஏற்றத்தாழ்வும் இன்றி, அனைவரும் உடன்பட்டு வாழும் மானுடநல அறம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) விலங்கு நல அறம்

b) சூழலியல் அறம்

c) பெண்ணியம்

d) சமயஞ்சாரா அறம்

விளக்கம்: அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, பொறையுடைமை, புறங்கூறாமை, வாய்மை, சான்றாண்மை, ஊக்கமுடைமை, இன்னா செய்யாமை எனச் சமயஞ்சாரா கருத்தியலின் அடிப்படைகளை வள்ளுவர் வரையறுத்துள்ளார். எனவே, எவ்வகை ஏற்றத்தாழ்வும் இன்றி, அனைவரும் உடன்பட்டு வாழும் மானுடநல அறமே ‘சமயஞ்சாரா அறம்’ எனலாம்.

79) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) எல்லா உயிர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி இரக்கம் காட்டிச் சமமாகப் பாவித்து அன்புடன் ஒத்து வாழ்தல் வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய வழியாகும்.

ⅱ) சமயவேறுபாடு, சாதிவேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றைக் முற்றிலும்வெறுத்து ஒதுக்கிய கருணையாளர் வள்ளலார்.

ⅲ) சடங்குகளையும் சமயத்தின் பெயரால் நிகழும் பலியினையும் முற்றாகக் கண்டித்தவர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅱ), ⅲ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: தற்காலத்தில் நிகழும் பெரும்பாலான சமூக சிக்கல்களுக்கு மனிதநேயமே தீர்வாக அமையும். வள்ளலாரின் கொள்கை சீவகாருண்யமும் ஆன்மநேய ஒருமைப்பாடுமே ஆகும். எல்லா உயிர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி இரக்கம் காட்டிச் சமமாகப் பாவித்து அன்புடன் ஒத்து வாழ்தல் வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய வழியாகும். சமயவேறுபாடு, சாதிவேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றைக் முற்றிலும்வெறுத்து ஒதுக்கிய கருணையாளர் வள்ளலார். உலக உயிர்கள் அனைத்தையும் மனிதநேயத்தாலும் அருள் உணர்வாலும் ஒப்ப மதித்து ஒழுகிய சித்தர். சடங்குகளையும் சமயத்தின் பெயரால் நிகழும் பலியினையும் முற்றாகக் கண்டித்தவர்.

80) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்பதாகும்.

ⅱ) கல்வி, உணவு, உடை, நீதி, வேலைவாய்ப்பு, பதவிகள் என அனைத்திலும் சமத்துவம் வேண்டும் என்பதே இக்கொள்கையின் மையக்கருத்தாகும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ) மற்றும் ⅱ)

d) இரண்டும் தவறு

விளக்கம்: சுயமரியாதை இயக்கம்: இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்பதாகும். கல்வி, உணவு, உடை, நீதி, வேலைவாய்ப்பு, பதவிகள் என அனைத்திலும் சமத்துவம் வேண்டும் என்பதே இக்கொள்கையின் மையக்கருத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!