மக்களாட்சி 6th Social Science Lesson 22 Questions in Tamil
6th Social Science Lesson 22 Questions in Tamil
22. மக்களாட்சி
- 1கூற்று 1: மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் ஆப்ரகாம் லிங்கன்.
கூற்று 2: மக்களாட்சியின் பிறப்பிடம் சுவிட்சர்லாந்து.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
விடை மற்றும் விளக்கம்
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(குறிப்பு: மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும். ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன் மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையும் மக்களாட்சி என்கிறோம்.)
2. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A) மக்களாட்சி அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகாரம் மக்களிடம் இருக்கும்.
B) நேரடி மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
C) மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்கும்.
D) நேரடி மக்களாட்சியில் அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர், அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர்.
விடை மற்றும் விளக்கம்
C) மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்கும்.
(குறிப்பு: மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது. மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம்தான் இருக்கும்.)
3. பிரதிநித்துவ மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் எது தவறானது?
A) இந்தியா
B) இங்கிலாந்து
C) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D) சுவிட்சர்லாந்து
விடை மற்றும் விளக்கம்
விடை: D) சுவிட்சர்லாந்து
4. அதிபர் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் எவை?
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 2. இங்கிலாந்து
3. கனடா 4. இந்தியா
A) 1, 2
B) 2, 3
C) 1, 3
D) 1, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 1, 3
5. எந்த ஆண்டு ஐ.நா.சபை உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் நாளை அறிவித்தது?
A) 2004
B) 2005
C) 2006
D) 2007
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 2007
6. நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர் யார்?
A) M.N. ராய்
B) இராஜேந்திர பிரசாத்
C) அம்பேத்கர்
D) ஜவஹர்லால் நேரு
விடை மற்றும் விளக்கம்
C) அம்பேத்கர்
(குறிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப்பெரியது. இதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தலைமையிலான அரசமைப்புச் சட்டவரைவுக் குழு உருவாக்கியது.)
7. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு ____________ ஆகும்.
A) சுவிட்சர்லாந்து
B) இந்தியா
C) ஐஸ்லாந்து
D) நியூஸிலாந்து
விடை மற்றும் விளக்கம்
D) நியூஸிலாந்து
(குறிப்பு: உலகளாவிய வயதுவந்தோர் உரிமைகளின்படி இந்தியாவில் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது.)
8. தவறான இணையைத் தேர்ந்தெடு. (நாடு – பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட ஆண்டு)
1. நியூஸிலாந்து – 1893
2. ஐக்கிய பேரரசு – 1917
3. அமெரிக்க ஐக்கிய நாடு – 1919
A) 1 மட்டும்
B) 1, 2
C) 2, 3
D) 1, 3
விடை மற்றும் விளக்கம்
C) 2, 3
(குறிப்பு: ஐக்கிய பேரரசு – 1918, அமெரிக்க ஐக்கிய நாடு – 1920)
9. இந்தியக் குடிமக்களில் எத்தனை சதவீத பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன?
A) 59%
B) 62%
C) 69%
D) 79%
விடை மற்றும் விளக்கம்
D) 79%
(குறிப்பு: இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.)
10. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தை கொண்ட மக்களாட்சி நாடு
A) கிரேக்கம்
B) சான் மரினோஸ்
C) ஐஸ்லாந்து
D) இங்கிலாந்து
விடை மற்றும் விளக்கம்
C) ஐஸ்லாந்து
(குறிப்பு: ஐஸ்லாந்து
காலம் – கி.பி (பொ.ஆ) 301
அமைவிடம் – திங்வேளிர்)
11. பழமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ள நாடு
A) கிரேக்கம்
B) சான் மரினோஸ்
C) மனிதத் தீவு
D) இங்கிலாந்து
விடை மற்றும் விளக்கம்
B) சான் மரினோஸ்
(குறிப்பு: சான் மரினோஸ்
காலம் – கி.பி. (பொ.ஆ) 301
அமைவிடம் – இத்தாலி)
12. தவறான இணையைத் தேர்ந்தெடு.(மக்களாட்சி நாடு – சிறப்புக்கூறுகள்)
A) ரோமானியப் பேரரசு – நாகரிக வளர்ச்சியின் உலகளாவிய விரிவாக்கம்.
B) மனிதத் தீவு – மன்னராட்சியின் கீழ் சுயாட்சி
C) 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D) அரசியல் தத்துவத்தின் அடித்தளம் – கிரேக்கம்
விடை மற்றும் விளக்கம்
C) 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(குறிப்பு:
1. கிரேக்கம்
காலம் – கி.மு.5 ஆம் நூற்றாண்டு
அமைவிடம் – கிரீஸ்
2. இங்கிலாந்து: காலம் – கி.பி. 13 ஆம் நூற்றாண்டு)
13. தவறான இணையைத் தேர்ந்தெடு. (மக்களாட்சி நாடு – அமைவிடம்)
1. ரோமானியப் பேரரசு – தீபகற்ப இத்தாலி
2. மனிதத் தீவு – இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ளது
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) இரண்டும் தவறு
D) இரண்டும் சரி
விடை மற்றும் விளக்கம்
D) இரண்டும் சரி
(குறிப்பு:
ரோமானியப் பேரரசு
காலம் – கி.மு (பொ.ஆ.மு) 300-50
மனிதத் தீவு
காலம் – கி.பி (பொ.ஆ) 927
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
காலம் – கி.பி.1789
சிறப்புக்கூறுகள் – மிகப்பழமையான மக்களாட்சிகளுள் ஒன்று)
14. ஆதிமனிதன் _________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
A) சமவெளி
B) ஆற்றோரம்
C) மலை
D) குன்று
விடை மற்றும் விளக்கம்
B) ஆற்றோரம்
(குறிப்பு: ஆதிமனிதன் தொடக்கத்தில் வேட்டைச் சமூகமாகவும் உணவு சேகரிப்போராகவும் வாழ்ந்தனர்.)
15. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் __________.
A) ஆண்கள்
B) பெண்கள்
C) பிரதிநிதிகள்
D) வாக்காளர்கள்
விடை மற்றும் விளக்கம்
D) வாக்காளர்கள்
(குறிப்பு: மக்களாட்சி அரசில், 18 வயது நிறைவுற்ற அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் மக்கள் நலனைக் காப்பதைக் தனது கடமையாகக் கொள்ள வேண்டும்.)