MCQ Questions

நீரியல் சுழற்சி 8th Social Science Lesson 7 Questions in Tamil

8th Social Science Lesson 7 Questions in Tamil

7. நீரியல் சுழற்சி

1) புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?

A) 71%

B) 80%

C) 69%

D) 75%

(குறிப்பு – புவியின் மேற்பரப்பு ஏறத்தாழ 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான பகுதிகளில் நீர் உவர்ப்பு நீராக உள்ளது.)

2) பூமியில் உள்ள நீரின் அளவு என்ன?

A) 126 மில்லியன் கன மைல்கள்

B) 226 மில்லியன் கன மைல்கள்

C) 326 மில்லியன் கன மைல்கள்

D) 426 மில்லியன் கன மைல்கள்

(குறிப்பு – புவியில் உள்ள நீரின் அளவு 326 மில்லியன் கன மைல்களாகும். இவ்வளவு பெரிய கன அளவு நீரை கண்ணால் காண்பது என்பது மிகவும் கடினமாகும்)

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. புவியில் உள்ள பெரும்பாலான நீர் உப்பு நீராக உள்ளது

II. இந்த உவர்ப்பு நீரானது கடலிலும், பேராழிகளிலும் மற்றும் ஆறுகளிலும் உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – உப்பு நீரானது கடலிலும், பேராழிகளிலும் மட்டுமே அதிகமாக உள்ளது. ஆற்று நீரானது நன்னீர் ஆகும்)

4) பொருத்துக

I. கடல்கள் – a). 0.001%

II. பனியாறுகள் – b) 96.54%

III. நிலத்தடி நீர் – c) 1.74%

IV. மண்ணின் ஈரப்பதம் – d) 1.69%

A) I-b, II-c, III-d, IV-a

B) I-d, II-a, III-b, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – புவியின் நீராதாரங்களில் கடல்நீர் 96.54%, பனியாறு 1.74%, நிலத்தடி நீர் 1.69% மற்றும் மண்ணின் ஈரப்பதம், ஏரிகள், ஆறுகள், சதுப்புநில நீர் போன்றவை மிக குறைந்த பங்கில் உள்ளது.)

5) பொருத்துக

I. ஏரிகள் – a) 0.001%

II. வளிமண்டலம் – b) 0.0008%

III. சதுப்பு நில நீர் – c) 0.013%

IV. ஆறுகள் – d) 0.0002%

A) I-c, II-a, III-b, IV-d

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

(குறிப்பு – புவியில் உள்ள நீர் ஆதாரங்களில் ஏரிகள், வளிமண்டலம், சதுப்பு நில நீர் மற்றும் உயிரியல் நீரின் பங்கு மிக குறைந்த அளவே உள்ளது)

6) புவியில் உள்ள மொத்த நீரில் உவர்ப்பு நீரின் பங்களிப்பு என்ன?

A) 97.2%

B) 93.5%

C) 94.2%

D) 95.2%

(குறிப்பு – புவியில் உள்ள மொத்த நீரில் உவர்ப்பு நீரின் பங்களிப்பு 97.2% ஆகும். இது பெரும்பாலும் கடல்களிலும்,பேராழிகளிலும் மற்றும் குடாக்களில் உள்ளது.)

7) மொத்த நிலத்தடி நீரில் பொருளாதார ரீதியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் துளையிட்டு எடுக்கப்படும் நீரின் சதவீதம் என்ன?

A) 1.5%

B) 2.3%

C) 0.6%

D) 0.1%

(குறிப்பு – பொருளாதார ரீதியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தலையிட்டு எடுக்கப்படும் நீரின் அளவு 0.6 சதவீதம் ஆகும். நிலத்தடி நீர் என்பது நன்னீர் ஆகும்)

8) இந்தியாவின் நீர்வள ஆதாரங்களுள் தவறானது எது?

A) மழை பொழிவு

B) புவியின் மேற்பரப்பு நீர்

C) நிலத்தடி நீர்

D) மண்ணின் ஈரப்பதம்

(குறிப்பு – இந்தியாவில் நீர்வள ஆதாரம் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவையாவன, மழைப்பொழிவு, புவியின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகும்)

9) புவியில் உள்ள நீரை அளக்க பயன்படுத்தப்படும் அலகுகளில் எது ஸ்டீயர் என அழைக்கப்பட்டது?

A) லிட்டர்

B) கேலன்

C) கன அளவு

D) எதுவும் இல்லை

(குறிப்பு – நீரின் அளவை அளப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு கன அளவு ஆகும். 1 கன அளவு என்பது 1000 லிட்டர் ஆகும். முன்னர் இது ஸ்டீயர் என அழைக்கப்பட்டது)

10) புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை பரவல் இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை கையாளும் அறிவியல்………….. எனப்படும்.

A) நீர் மேலாண்மை

B) நீரியல்

C) நீரியல் சுழற்சி

D) எதுவும் இல்லை

(குறிப்பு – நீரியல் என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை பரவல் போன்ற அம்சங்களை கையாளும் அறிவியலாகும்)

11) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. புவியில் கிடைக்கப்பெறும் நீரானது ஒரே சீராக இருக்கும்.

II. புவியில் உயிரியல் நீரானது முக்கிய பங்கு வகிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

( குறிப்பு – புவியின் கிடைக்கப்படும் நீர் வளமானது ஒரே சீராக இருப்பதில்லை. மேலும் உயிரியல் நீரின் பங்களிப்பு மிகக் குறைந்த சதவீதம் (0.0001%) ஆகும்.)

12) நீர் சுழற்சியில் சரியான நிகழ்வரிசை எது?

A) நீர் ஆவியாதல்-> மழைப் பொழிவு-> கடலுக்குச் செல்லுதல்-> நீர் ஆவியாதல்

B) மழைப்பொழிவு-> நீர் ஆவியாதல்-> கடலுக்குச் செல்லுதல்-> மழைப்பொழிவு

C) உறை நீர் -> மழை பொழிவு-> கடலுக்கு செல்லுதல்-> நீர் ஆவியாதல்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – நீர் சுழற்சியில் நீர் ஆவியாதல், பின் சுருங்குதல் மூலம் மழை பொழிதல், மழைநீர் ஆறுகள் மூலம் கடலில் சேருதல், கடல் நீர் ஆவியாதல் என சுழற்சி முறை நடக்கிறது)

13) புவி தொடர்புடைய இயக்கங்களுள் எது முக்கியமானது?

I. புவி சுழற்சி

II. நீரியல் சுழற்சி

A) I மட்டும் முக்கியமானது

B) II மட்டும் முக்கியமானது

C) இரண்டும் முக்கியமானது

D) இரண்டும் அல்ல

( குறிப்பு – புவி தொடர்புடைய இயக்கங்களுள் புவியின் சுழற்சி மற்றும் நீரியல் சுழற்சி இரண்டும் அத்தியாவசியமாகிறது. இவை இரண்டும் இல்லையேல் புவியில் உயிர்கள் வாழ்வது சாத்தியம் ஆகாது.)

14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீர் சுழற்சியில் உள்ளாகும் நீரின் அளவு மாறாது.

II. இது நீர்ப்பரவல், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நீர் சுழற்சியில் ஈடுபடும் நீரின் அளவு மாறாது. எனினும் அவற்றின் உருவ நிலைகளும், பண்பு நிலைகளும் மட்டும் மாறும். நீர் சுழற்சியின் அளவு நீர்ப்பறவை இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்)

15) நீர் ஆவியாதல் என்பது எங்கு நிகழ்கிறது?

I. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில்

II. தாவரங்களில் இருந்து நீர் கசிந்து வெளியிடுதல் மூலம்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

( குறிப்பு – நீர் ஆவியாதல் என்பது திரவ நிலையில் இருக்கும் நீர், நீர் ஆவியாகி காற்றில் கலத்தல் ஆகும். இது புவியில் உள்ள மேற்பரப்பு நீர் மூலமும், தாவரங்களின் மூலமும் நிகழ்கிறது )

16) மழைநீர் பொழிவதற்கான காரணம் எது?

I. மேகத்தில் உள்ள நீர்த் திவலைகள் உருகுதல்

II. மேகங்கள் உடைதல்

A) I மட்டும் காரணம்

B) II மட்டும் காரணம்

C) இரண்டும் காரணமாகும்

D) இவை இரண்டும் அல்ல

( குறிப்பு – மேகத்தில் உள்ள நீர் திவலைகள் உருகுதல் மற்றும் மேகம் உடைதல் காரணமாக மழை பொலிவாக மாறி புவியை வந்தடைகிறது)

17) நீர்மயியல் சுழற்சி பற்றிய சரியான செய்தி எது?

I. இது இயற்கையானது

II. இது தொடர்ச்சியற்றது

III. இது மூன்று முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நீர்மயியல் சுழற்சி ஆவியீர்ப்பு, பொழிவு மற்றும் நீர் வழிந்தோடல் எனும் 3 முக்கிய நிலைகளில் நிகழ்கிறது. இது இயற்கையானது மற்றும் தொடர்ச்சியானது)

18) நீர்மயியல் சுழற்சியுடன் தொடர்பில்லாதது எது?

A) ஆவி ஈர்ப்பு

B) உறைதல்

C) பொலிவு

D) நீர் வழிந்தோடல்

(குறிப்பு – நீர்மயியல் சுழற்சி ஆவிஈர்ப்பு, பொழிவு மற்றும் நீர்வழிந்தோடல் ஆகிய நிலைகளை கொண்டுள்ளது)

19) நீர்மயியலின் கூறுகள் அல்லாதவை எது?

A) நீர் ஊடுருவல் (Infiltration)

B) உட் கசிதல் (Percolation)

C) நீர் வழிந்தோடல் (Runoff)

D) பதங்கமாதல் (sublimation)

(குறிப்பு – பதங்கமாதல் என்பது திண்ம நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆகும்.இது நீர்மயியல் சுழற்சியுடன் தொடர்பில்லாதவை)

20) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீரின் கொதிநிலை 212°F ஆகும். அப்போது நீரானது வேகமாக நீராவி ஆகும்.

II. நீர் 0°C வெப்ப நிலையிலும் ஆவியாகும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நீரானது கொதிநிலையில் மிக வேகமாக நீராவியாகும். எனினும் 0°C வெப்பநிலையில் மிக மெதுவாக நீராவி ஆகும்.)

21) புவியின் மேற்பரப்பில் ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் காரணிகளுள் அல்லாதவை எது?

A) பரந்த நிலப்பரப்பு

B) காற்று

C) வளிமண்டல ஈரப்பதம்

D) புவி சுழற்சி

(குறிப்பு – புவியின் மேற்பரப்பில் நீர் ஆவியாதலை வெப்பம், பரந்த நிலப்பரப்பு, காற்று, வளிமண்டல ஈரப்பதம் போன்ற காரணிகள் பாதிக்கின்றன)

22) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பேராழிகளில் ஆவியாதல் அதிகம்

II. நிலப்பரப்பில் பொழிவு அதிகம்

III. நீர் எவ்வளவு ஆவி ஆகிறதோ அதே அளவு பொழிவாக புவிக்கு மீண்டும் கிடைக்கும்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நீரியல் சுழற்சியில் எவ்வளவு நீர் ஆவி ஆகிறதோ அதே அளவு மீண்டும் பொழிவாக மாறும். ஆவியாதல் பேராழிகளில் அதிகமாகவும், நிலப் பகுதிகளில் குறைவாகவும் இருக்கும். மழைப் பொழிவு நிலப்பகுதிகளில் அதிகமாகவும் போராழிகளில் குறைவாகவும் இருக்கும்)

23) சரியானது எது?

I. காற்று குறைவாக உள்ள காலங்களில் ஆவியாதல் விகிதம் குறைவாக இருக்கும்.

II. காற்று குறைவாக உள்ள காலங்களில் நீராவி நீர்நிலைகளுக்கு அருகிலேயே தங்காமல் ஆவியாதலை துரிதப்படுத்தும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆவியாதலில் காற்றின் பங்கு அதிகம் இருத்தலால், காற்று குறையும் போது நீராவியாதல் குறையும்)

24) ஆவியாதல் விகிதம் அதிகரித்தல் குறித்த தவறான காரணி எது?

A) காற்றின் வேகம் அதிகரித்தல்

B) வெப்பநிலை அதிகரித்தல்

C) ஈரப்பதம் அதிகரித்தல்

D) பூமியில் நீர் நிலைகள் அதிகரித்தல்

(குறிப்பு – காற்றில் ஈரப்பதம் குறையும்போது ஆவியாதல் விகிதம் அதிகரிக்கும்.)

25) நீர் உட்கசிந்து வெளியிடுதல் எங்கு நிகழும்?

A) தாவரங்களில்

B) பாறை இடுக்குகளில்

C) புவியின் மேற்பரப்பில்

D) இவை எதுவுமல்ல

(குறிப்பு – நீர் கசிந்து வெளியிடுதல் என்பது தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் செல்லும் செயலாக்கம் ஆகும்.(Transpiraration))

26) நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்னும் நிகழ்வில் பங்கு பெறும் நீர் எது?

A) நிலத்தடி நீர்

B) புவியின் மேற்பரப்பு நீர்

C) தாவரங்களால் உறிஞ்சப்பட்ட நீர்

D) காற்றில் உள்ள நீர்த்திவலைகள்

(குறிப்பு – நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்பது தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்லும் செயலாகும். தாவரங்களால் உறிஞ்சப்பட்ட நீரானது, நீர் உட்கசிதல் என்னும் நிகழ்வின் மூலம் வளிமண்டலத்திற்கு செல்கிறது)

27) நீர் சுருங்குதல் என்பது ஆவியாதலின்………

I. நேர்வினை செயல்

II. எதிர்வினை செயல்

III. நேரெதிர்வினை செயல்

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) எல்லாமும்

(குறிப்பு – நீர் ஆவியாதல் என்பது திரவ நிலையில் இருந்து வாயுநிலைக்கு மாறுதல். நீர் சுருங்குதல் என்பது வாயுநிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல்.எனவே இரண்டும் எதிர்வினைகள் ஆகும்)

28) குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து படிகங்களாக மாறுவதை…………..என்கிறோம்.

A) பனி

B) உறைபனி

C) அடர் மூடுபனி

D) மூடுபனி

(குறிப்பு – குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து படிகங்களாக மாறுவதை உறைபனி என்கிறோம். பொருட்களின் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழே செல்லும் போது இது உருவாகிறது)

29) அடர் மூடுபனி என்பது புவியின் மேற்பரப்பில் இருந்து எத்தனை மீட்டர் உயரம் வரை உள்ளது?

A) புவியின் மேற்பரப்பில் இருந்து 1000 மீட்டர் வரை

B) புவியின் மேற்பரப்பில் இருந்து 2000 மீட்டர் வரை

C) புவியின் மேற்பரப்பில் இருந்து 3000 மீட்டர் வரை

D) புவியின் மேற்பரப்பில் இருந்து 4000 மீட்டர் வரை

(குறிப்பு – அடர்மூடுபனி என்பது நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் ஆகும். புவியின் மேற்பரப்பிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரத்திற்குள் இது அமைந்திருக்கும்)

30) கீழே உள்ளவற்றில் எது புவியின் மேற்பரப்பிலுள்ள காற்றடுக்காகும்?

A) பனி

B) உறைபனி

C) அடர் மூடுபனி

D) மூடுபனி

(குறிப்பு – அடர் மூடு பனி என்பது புவியின் மேற்பரப்பிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் கீழே உள்ள காற்றடுக்காகும்.)

31) காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகள் எது?

A) மூடுபனி

B) பனி

C) மேகம்

D) அடர் மூடுபனி

(குறிப்பு – காற்றில் தொங்கும் நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளை மூடுபனி என்கிறோம். மூடுபனியானது, அடர் மூடுபனியை விட அடர்த்தி குறைவானது ஆகும்)

32) வளிமண்டலத்தில் காணப்படும், குறைந்த எடை கொண்ட மிக நுண்ணிய நீர்துளிகளையும், பனிப்படிகங்களையும் கொண்டிருப்பது?

A) மேகம்

B) பனி

C) நீராவி

D) ஈரப்பதம்

(குறிப்பு – மேகங்கள் மிக குறைந்த எடை கொண்ட நீர்திவலைகளும், பனிபடிகங்களும் கொண்டவை. இது புவியின் வளிமண்டலத்தில் நிறைந்திருக்கும்)

33) மேகங்களில் இருக்கும் நுண்ணிய நீர் துளிகள் எந்த அளவை தாண்டும்போது நீர்துளிகளாக மாறி மழைப்பொழிவை தருகிறது?

A) 100 மைக்ரானுக்கு மேல்

B) 150 மைக்ரானுக்கு மேல்

C) 200 மைக்ரானுக்கு மேல்

D) 250 மைக்ரானுக்கு மேல்

(குறிப்பு – மேகங்களில் உள்ள நுண்ணிய நீர் துளிகளின் அளவானது 2 முதல் 100 மைக்ரோன் ஆகும். இந்த மைக்ரான் அளவுக்கு மேல் செல்லும்போது இவை நீர் துளிகளாக மாறி மழைப்பொழிவை உண்டாக்கும்)

34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீர் சுருங்குதல் என்பது நீராவி காற்றில் செறிந்து பூரித நிலையை அடைவது.

II. வெப்ப காற்று குளிர்ந்த காற்றை விட அதிக நீராவியை தக்க வைத்துக் கொள்ளும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நீராவி காற்றில் செறிந்து இருக்கும்போது காற்று பூரித நிலை அடையும். பூரித நிலை அடைந்தால் பின்னர் அது மழைக்கு வழிசெய்யும். பொதுவாக வெப்பக் காற்று குளிர்ந்த காற்றை விட அதிக நீராவியை தக்க வைத்துக் கொள்ளும்.)

35) காற்று எப்போது பூரித நிலையை அடைகிறது?

I. வெப்பநிலை உயரும் போது

II. வெப்பநிலை குறையும் போது

III. நீராவி காற்றில் அதிகமாகும் போது

IV. நீராவி காற்றில் குறையும் போது

A) I, III மட்டும் சரி

B) I, IV மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) II, IV மட்டும் சரி

(குறிப்பு – நீராவி காற்றில் செறிந்து இருக்கும்போதும், காற்றில் வெப்பநிலை குறையும்போதும் காற்று பூரித நிலையை அடையும் )

36) மழைபொழிவின் வடிவம் எதை சார்ந்து அமையும்?

I. வானிலை

II. காலநிலை

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மழை பொழிவு ஒரு இடத்தின் வானிலையையும் ( குறுகிய நிகழ்வு ), கால்நிலையையும் (நீண்ட கால நிகழ்வு) பொறுத்தே அமையும்.)

37) கீழ்உள்ள கூற்றுகளில் எது சரியானது?

I. வெப்ப மண்டல பகுதிகளில் மழையானது பொழிவாகவோ அல்லது

தூறலாகவோ இருக்கும்.

II. குளிர் பிரதேசங்களில் மழையானது அடர்த்தியாகவும், அடைமழையாகவும் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வெப்பமண்டலத்தில் மழை என்பது தூறலாகவும், குளிர்மண்டலத்தில் மழை என்பது பனியாகவும் இருக்கும் )

38) மழைப் பொழிவின் வகை அல்லாதது எது?

A) கல்மழை

B) உறைபனி மழை

C) ஆலங்கட்டி மழை

D) பேய்மழை

(குறிப்பு – பொழிவின் வகைகளை மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம் )

39) பொருத்துக

I. நீர்த்துளிகள் குளிர்ந்த மேற்பரப்பில் விழுதல் – a) மூடுபனி

II. நீராவி பனி படிகங்களாக மாறுதல் – b) அடர் மூடுபனி

III. நீர்த்துளிகள் கொண்ட காற்று அடுக்கு – c) உறைபனி

IV. தொங்கும் நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகள் – d) பனி

A) I-d, II-c, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

(குறிப்பு – பனி, உறைபனி, மூடுபனி, அடர் மூடுபனி ஆகியவை உயிர் சுருங்குதல் உருவங்கள் ஆகும்)

40) பொழிவின் பொதுவான வடிவம் எது?

A) மழைபொழிவு

B) ஆலங்கட்டி மழை

C) உறைபனி மழை

D) பனி

(குறிப்பு – பொழிவின் பொதுவான வடிவம் மழைப்பொழிவு ஆகும். மழைப்பொழிவு நீர்த்துளிகள் வடிவத்தில் உள்ளதால் மழை எனப்படுகிறது)

41) மழைநீர் துளியின் விட்டம் 0.5 மிமீக்கு அதிகமாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

A) மழை பொழிவு

B) கனமழை

C) பேய்மழை

D) அடைமழை

(குறிப்பு – மழைபொழிவு என்பது பொதுவாக 0.5மிமீக்கு மேலான விட்டம் கொண்ட நீர்துளிகளை கொண்டிருக்கும்)

42) மழைநீர் துளியின் விட்டம் 0.5 மிமீக்கு குறைவாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

A) மழை பொழிவு

B) கனமழை

C) தூறல்

D) அடைமழை

(குறிப்பு – தூறல் என்பது பொதுவாக 0.5மிமீக்கு குறைவான விட்டம் கொண்ட நீர்துளிகளை கொண்டிருக்கும்)

43) மழை தூறல் எந்த வகை மேகங்களில் இருந்து உருவாகிறது?

A) கீறல் மேகம்

B) கீற்றுதிரள் மேகம்

C) படை மேகம்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – பொதுவாக மழை தூரல் மழை மேகங்களில் இருந்து உருவாகிறது)

44) நீர் துளிகளும் ஐந்து மில்லி மீட்டர் விட்டத்திற்கு மேல் உள்ள பனி துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு………….என்று பெயராகும்.

A) கல்மழை

B) பனிமலை

C) உறைபனி மழை

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – கல்மழை என்பது பனிக்கட்டிகளும் நீர்த்துளிகள் சேர்ந்தது ஆகும்)

45) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மழைத்துளிகள் புவி பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்று வழியாக விழும்போது உறைவதில்லை.

II. வளிமண்டல வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும் போது நீர் உறை நிலைக்கு சென்று விடுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளிமண்டலத்தில் மிக மிக குறைந்த வெப்பம் கொண்ட அடுக்கு வழியாக வரும் மழைத்துளி மட்டுமே உறைகிறது. மற்றவை உறைவதில்லை )

46) மழைத்துளியானது குளிர்ந்த நிலபரப்பை தொட்ட பின்பு உறைந்துவிடுகிறது. இம்மாதிரியான மலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கல்மழை

B) உறைபனி மழை

C) ஆலங்கட்டி மழை

D) அடர்மழை

(குறிப்பு – இவை நிலப்பரப்பை தொட்ட பின்பு உறைகிறது. எனவே உறைபனி என அழைக்கப்படுகிறது)

47) கார்திரள் மேகங்களில் இருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாக்குவது?

A) கல்மழை

B) உறைபனி மழை

C) ஆலங்கட்டி மழை

D) அடர்மழை

(குறிப்பு – ஆலங்கட்டி மழை என்பது 5 மில்லி மீட்டர் விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளை கொண்டிருக்கும். இது கார்த்திரள் மேகங்களில் இருந்து இடியுடன் கூடிய மழையுடன் புவியை அடைகிறது)

48) மேகத்தில் ஏற்படும் கடும் ………………… ஆலங்கட்டியைக் குளிர்ந்த பகுதியின் ஊடே மேலும் கீழுமாக பலமுறை எடுத்துச் செல்கிறது.

A) செங்குத்து சலனமானது

B) கிடைமட்ட சலனமானது

C) செங்குத்து மற்றும் கிடைமட்ட சலனமானது

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு- இந்த வகையான நிகழ்வுகள் ஆலங்கட்டி மழை பொழிவின் போது நிகழ்கிறது)

49) மேகத்தில் உள்ள வெப்பம் குறைவதன் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனித்துகள்களாக மாற்றப்படுகிறது. இதை………………. என்று அழைப்பர்.

A) பனி

B) உறைபனி மழை

C) ஆலங்கட்டி மழை

D) அடர்மழை

(குறிப்பு – பனித்திரள் துகள்கள் பொழிவதை பனிப்பொழிவு என அழைக்கின்றோம். இவை துருவப் பகுதிகளில் அதிகமாக பொழிகிறது)

50) புவியின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு…………… என்று பெயர்.

A) நீர் உட்புகுதல்

B) நீர் ஊடுருவல்

C) நீர் கசிதல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்கிறது)

51) நிலத்தடி நீர் குறித்த தவறான செய்தி எது?

I. மழைநீர் நிலத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் அடுக்குகள் வழியாக புவிக்கு அடியில் சென்று சேர்க்கிறது.இது நிலத்தடி நீர் என அழைக்கப்படுகிறது.

II. இவ்வாறு செல்லும் நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் உயர்வான பகுதிகளின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்து அடைகிறது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மலை இடுக்குகளில் செல்லும் நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் தாழ்வான பகுதிகள் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடையும். குறிப்பிட்ட அளவு நீர் நிலத்தின் அடியில் தங்குவதால் அதனை நிலத்தடி நீர் என்கிறோம்)

52) நீர் ஊடுருவலை தீர்மானிக்கும் காரணிகளுள் தவறானது எது?

A) மண்ணின் இயற்பியல் தன்மை

B) மேற்பரப்பில் காணப்படும் தாவரங்கள்

C) மண்ணின் ஈரத்தன்மை

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மண்ணின் ஈரத்தன்மை வெப்பநிலை மற்றும் மழை பொழிவு போன்றவை நீர்ஊடுருவலை தீர்மானிக்கின்றன)

53) கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?

I. நீர்உட்கசிவு என்பது மண்அடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.

II. புவியின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் அடுக்கில் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயராகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நீர்உட்கசிதல் மற்றும் நீர் ஊடுருவல் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை ஆகும்)

54) மண்ணின் மேற்பரப்பில் உள்ள நீர் தாவரங்களின் வேர் பகுதியை நோக்கி ஊடுருவி செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) நீர் ஊடுருவல்

B) நீர் உட்கசிதல்

C) நீரோட்டம்

D) இவை எதுவுமில்லை

(குறிப்பு – மண்ணின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர் ஊடுருவல் மூலமாக தாவரங்களின் வேர் பகுதியை நோக்கி செல்கிறது. இதில் நீரானது அதற்குமேல் செல்வதில்லை)

55) செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதிக்கு செல்லும் நீரோட்டம் எது?

A) நீர் ஊடுருவல்

B) நீர் உட்கசிதல்

C) நீரோட்டம்

D) இவை எதுவுமில்லை

(குறிப்பு – நீர் கசிதல் என்பது நீரானது செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதியான நிலத்தின் தரைமட்டம் நோக்கி செல்வதாகும்)

56) ஓடும் நீரானது ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வது எது?

A) நீர் ஊடுருவல்

B) நீர் உட்கசிதல்

C) நீரோட்டம்

D) நீர் வழிந்தோடல்

(குறிப்பு – நீர் வழிந்தோடும் என்பது ஓடும் நீரானது ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் படர்வதாகும். நீர் வழிந்தோட லால் மேற்பரப்பு நீர் நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகிறது.)

57) பள்ளத்தாக்குகள், மலை இடுக்குகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது எது?

A) நீர் ஊடுருவல்

B) நீர் உட்கசிதல்

C) நீரோட்டம்

D) நீர் வழிந்தோடல்

(குறிப்பு – நீர் வழிந்தோடல் என்பது மண்ணரிப்பு மூலம் பெரிய பள்ளத்தாக்குகள், மலைக் இடுக்குகள் போன்ற நிலத்தோற்றங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது)

58) நீர் வழிந்தோடல் கீழ்க்கண்டவற்றுள் எதை சார்ந்து இருப்பதில்லை?

A) மண்ணின் நீர்புகும் தன்மை

B) மழைவீழ்ச்சியின் அளவு

C) தாவரமூட்டம்

D) மண்ணரிப்பு

(குறிப்பு – நீர்வழிந்தோடலின் அளவானது மழைவீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர்புகும் தன்மை, தாவரமூட்டம் போன்றவைகளை சார்ந்துள்ளது. மண்ணரிப்பு என்பதை அதன் விளைவாகும்)

59) மழை நீரில் எத்தனை சதவீதமானது மண்ணினால் உறிஞ்சப்படுகிறது?

A) 20%

B) 50%

C) 65%

D) 90%

(குறிப்பு – மழை நீரில் 35 சதவீதம் மட்டுமே கடல் மற்றும் போராழிகளில் கலக்கிறது. மீதமுள்ள 65 சதவீதமானவை மண்ணில் உறிஞ்சப்படுகிறது)

60) நீரானது நிலப்பரப்பில் செறிவடைந்து பின்னர் நிலச்சரிவின் காரணமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதற்கு பெயர் என்ன?

A) நிலத்தடி நீரோட்டம்

B) நிலநீர் ஓட்டம்

C) நிலச்சரிவு நீரோட்டம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – இந்த நில நீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது)

61) நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் ஓடைகள் மற்றும் ஆறுகள் உடன் இணைவதற்கு பெயர் என்ன?

A) நீர் வழிந்தோடல்

B) நிலநீர் ஓட்டம்

C) அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – அடிப்பரப்பு நீர் வழிந்தோடல், இடை நீரோட்டம் எனவும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது)

62) செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவது……………. எனப்படும்.

A) அடிமட்ட நீரோட்டம்

B) நிலநீர் ஓட்டம்

C) அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – அடிமட்ட நீரோட்டமானது நிலத்தடி நீர்மட்டத்தை விட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணப்படும்)

63) வறண்ட மற்றும் மழையற்ற காலங்களில் அடிமட்ட நீரோட்டத்திற்கு நீர் ஊட்டுபவை எது?

A) நிலத்தடி நீர்

B) ஆற்றுநீர்

C) ஊற்று நீர்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடும் நீரானது அடிமட்ட நீரோட்டம் என அழைக்கப்படுகிறது. இவற்றிர்க்கு வறண்ட மற்றும் மழையற்ற காலங்களில் நிலத்தடி நீரால் நீரூட்டப்படுகிறது)

64) தவறான இணை எது?

A) ஆவியாதல் – அங்குலம்

B) மழைநீர் ஊடுருவல் – அங்குலம் அல்லது செமீ / மணி

C) மழைவழிவின் கனஅளவு – கனஅடி/வினாடி

D) மழை நீரின் கொள்ளளவு – கனஅடி/ஏக்கர் அடி

(குறிப்பு – மழைவழிவின் கனஅளவு, கனஅடி/ஏக்கர்அடி அலகால் அளக்கப்படுகிறது.)

65) பொருத்துக

I. தூறல் – a) ஜீரோ டிகிரி செல்சியஸ் அடுக்கு வழியே வரும் உறைந்த நீர்

II. ஆலங்கட்டி மழை – b) குளிர்ந்த மழைநீர் புவியை தொட்டபின் உறைதல்

III. கல்மழை – c) மழைத்துளி விட்டம் 0.5மிமீக்கு கீழ் இருத்தல்

IV. உறைபனி மழை – d) கார்திரள் மேகங்களில் இருந்து வருபவை

A) I-c, II-d, III-a, IV-b

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

(குறிப்பு – மழைப் பொழிவின் வடிவங்கள் ஆவன கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை, பனி போன்றவைகளாகும்)

66) பொருத்துக

I. கல்மழை – a) Freezing rain

II. மழைபொழிவு – b) Sleet

III. ஆலங்கட்டி மழை – c) Rain fall

IV. உறைபனி மழை – d) Hail

A) I-b, II-c, III-d, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

(குறிப்பு – மழைப் பொழிவின் வடிவங்கள் அவற்றின் நிலையையும், பண்பு நலன்களையும் வைத்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது)

67) பொருத்துக

I. தாவரம் – a) இடைநீரோட்டம்

II. மலை இடுக்குகள் – b) கல்மழை

III. பனித்துளி மற்றும் மழைத்துளி – c) நீர் வழிந்தோடல்

IV. அடி பரப்பு நீர் வழிந்தோடல் – d) நீர் ஊடுருவல்

A)I-d, II-c, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

68) நன்னீரில் இவற்றின் பங்களிப்பை பொருத்துக

I. பனியாறு – a) 30.1%

II. நிலத்தடி நீர் – b) 0.3%

III. மேற்பரப்பு நீர் – c) 0.9%

IV. மற்றவை – d) 68.7%

A) I-d, II-a, III-b, IV-c

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-a, II-b, III-d, IV-c

(குறிப்பு – புவியில் உள்ள மொத்த நீரில், நன்னீரின் பங்களிப்பு 2.8% ஆகும். அதில் பெரும்பாலான நீர் பனியாறுகள் மற்றும் பனிமலைகளில் உள்ளது (68.7%). மீதம் உள்ளவை நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர் என உள்ளது )

69) தவறான இணை எது?

A) நன்னீரில் மேற்பரப்பு நீரின் பங்களிப்பு – 0.9%

B) மேற்பரப்பு நீரில் ஏரிகளின் பங்களிப்பு – 87%

C) மேற்பரப்பு நீரில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு – 11%

D) மேற்பரப்பு நீரில் ஆறுகளின் பங்களிப்பு – 2%

(குறிப்பு – புவியில் உள்ள மொத்த நன்னீரில் மேற்பரப்பு நீரின் பங்களிப்பு 0.3% ஆகும். அதில் பெரும்பாலான நீரானது ஏரிகளில் உள்ளது(87%). மீதம் சதுப்பு நிலம் மற்றும் ஆறுகளில் உள்ளது.)

70) பேராழிகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றிலிருந்து எத்தனை சதவீதம் ஈரப்பதம் ஆவியாதல் மூலமாக வளிமண்டலத்திற்கு செல்கிறது?

A) 90 சதவீதம்

B) 80 சதவீதம்

C) 70 சதவீதம்

D) 60 சதவீதம்

(குறிப்பு – பேராழிகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றிலிருந்து 90% ஈரப்பதம் ஆவியாதல் மூலமாக வளிமண்டலத்திற்கும், மீதம் 10 சதவீதம் தாவரங்களில் நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாக செல்கிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!