தமிழக அரசியல் சிந்தனைகள் Notes 11th Political Science
11th Political Science Lesson 15 Notes in Tamil
தமிழக அரசியல் சிந்தனைகள்
வரலாற்றுப் பின்னணி
- அடிப்படையில் செம்மொழியான தமிழின் தாய்நாடு (தமிழகம்) என்பதை தமிழ்நாடு என்று அழைக்கின்றோம். இதன் அருகில் உள்ள சில பகுதிகளாக கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கியதாக தமிழகம் இருந்தது.
- ஸ்டராபோ (கி.மு. (பொ.ஆ) 63-முதல் கி.பி. (பொ.ஆ)) 24 வரை). வாழ்ந்த கிரேக்க வரலாற்று சிந்தனையாளர் மற்றும் புவியியலாளர் ஆவார். இவர் தமிழ் முடியாட்சியின் பாண்டியர்கள் காலத்தில் உள்ள இராஜதந்திர வரலாற்றை உற்றூநோக்கியிருந்தார்.
- கடல் பயணங்களின் மூலமாக சோழ, சேர மற்றும் பாண்டியர்கள் கடலருகில் வாழும் மக்களிடம் தமிழரின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா மற்றும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளில் வர்த்தகத்தை வளர்ப்பதற்காக தமிழக கரையோரங்களில் இருந்த துறைமுகங்கள் முக்கிய மையமாக செயல்பட்டன.
- குறிப்பாக கி.மு. (பொ.ஆ.மு.) 200 முதல் காலகட்டத்தைச் சார்ந்த கி.பி, (பொ.ஆ) 300 வரையானது ஆகும்.
- பண்டையகால துறைமுகங்களான கொற்கை, பூம்புகார், வசவசமுத்திரம், பெரிமுளா, அரிக்கமேடு, அழகன்குளம், மாமல்லபுரம் போன்றவை சிறந்தமுறையில் செயல்பட்டன.
- குறிப்பாக வர்த்தகம், வாணிபம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, சீனா எகிப்து, கிரேக்க மற்றும் ரோமாபுரி போன்ற நாடுகளுடன் திறம்பட மேற்கொள்ளப்பட்டது.
- கப்பல் கட்டுதலில் பாரம்பரியமிக்க தமிழர்கள் சிறந்த கடலோடிகளான நமது முன்னோர்கள் உலகின் அடிப்படை தன்மைகளின் தாக்கங்களான அரசியல், சமுதாயம், பண்பாடு , வர்த்தகம் மற்றும் வாணிபத் தொடர்புகளை உலகின் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்தினர்.
- ஏறத்தாழ கி.மு. (பொ.ஆ.மு.) 300 முதல் கி.பி. (பொ.ஆ) 300. வரையிலான சங்க இலக்கியங்களில் முக்கிய ஆதாரங்களாக விளங்குவதுடன் அக்கால சமுதாயம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியலை பிரதிபலிக்கின்றன.
- சங்கப்பாடலின் வகைப்பாட்டியலில் அகம் (அன்பு சார்ந்து இருத்தல்) மற்றும் புறம் (போர், நன்மை மற்றும் தீமை, சமூகம், நீதி மற்றும் முடியரசு) போண்றவற்றால் தமிழ் அரசியல் முறைமை பற்றி கூறியிருக்கின்றன.
- சங்க இலக்கிய புத்தகங்கள் (எட்டுத்தொகை) எட்டு நூல் திரட்டு ஆகும். அவையாவன :
- நற்றினை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு மற்றும்
- புறநானூறு, இவை தவிர மேலும் ஒன்பதாவது குழுவாக விளங்கும் பாட்டுகளான பத்துப்பாட்டும் காணப்பட்டது.
- ஆரம்ப காலத்தில் தொல்காப்பியத்தின் முதல் இரண்டு புத்தகங்களும் தமிழ் இலக்கணமாகக் கருதப்பட்டதும் இக்காலக்கட்டத்தில்தான் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.
- சங்க இலக்கியங்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட பிரபலமான நூற்கோவை/பாடல் திரட்டு என்பது ‘கீழ்கணக்கு’ என அழைக்கப்படுகிறது. இப்பதினெட்டு நூல்களின் ஒரு பகுதிதான் மிகவும் பிரபலமான சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பதினெட்டு சிறிய நூல்கள் பதினெட்டு சிறிய நூல்கள் (பதிணென் கீழ்க்கணக்கு, இது திருக்குறளையும் உள்ளடக்கியதாகும்.) அக்காலகட்டத்தில் எழுதியதாகும்.
- பிரபந்த இலக்கியம் பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டிருந்தது அவை: ‘கோவை’, என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளைக் கொண்டிருப்பதுடன் (பொதுவாக அன்பைப் பற்றியதாகும்) ‘கலம்பகம்’ என்பது ஓர் பத்தியின் முடிவு என்பது அடுத்த வரிக்கு ஆரம்பமாக வழி இருப்பதுடன் (பொதுவாக அரசன் மற்றும் வீரத்தை குறிப்பிடுதல்) மேலும் ‘பரணி’ என்பதற்கும் வழி வகுக்கிறது. இது பாரம்பரியத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம் மற்றும் கலிங்கத்துப்பரணி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
- பண்டைய கால தமிழ் இலக்கியங்களை திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை பல சங்க கால அரசியலின் தன்மை, சமுதாயம் மற்றும் பண்பாட்டினைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவுடன் படைக்கப்பட்டு இருந்தன.
- தமிழ் மொழியானது தமிழ் அடையாளம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மரபுகளின் அடிப்படியாக உள்ளதாகும். நிலம், புவியமைப்பு, ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களால் வேறுபட்டு இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைவு என்பது இருந்தது. கலிங்க அரசன் காரவேலா கி.மு. (பொ.ஆ.மு) 165 காலத்தின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்தான் 132 வருடமாக இருந்த ‘தமிழ் கூட்டமைவு’ என்பதை அழித்தார்’ என்று அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்றே தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராக சண்டையிட்டதை சங்க கால இலக்கியமான ‘அகநானூறு’ விவரித்துள்ளது. ஆனால் தமிழ் தேசியவாதம் என்பது காலனி ஆதிக்கத்தின் விளைவினால் தோன்றியது என்று சாதாரணமாக கூறிவிடமுடியாது.
- தமிழ் தேசியத்தின் மூல ஆதாரங்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டினுடைய வரலாற்றுடன் தொடர்புடைய பங்கு வகிப்பதாகும். இதனால் அரசியல் வரையறுக்கப்பட்டிருப்பதனை சங்க காலம் முதல் காணலாம்.
- இங்கே அரசு கருத்தாக்கமும், லட்சிய அரசன் எனும் பதமும் , கிரேக்கத்தில் நில எல்லைகளில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்த நகர அரசை போன்று இருந்தது.
- பண்டைய தமிழ்நாடு என்பது தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இது மேற்கு மலையைச் சார்ந்த திருப்பதியிலிருந்து கன்னியாகுமரியின் நுனிவரை உள்ளடக்கியதாகும். இந்த நிலமானது பாரம்பரியமாக ஐந்து புவியியல் சார்ந்த பிராந்தியமாக (திணை) இயற்கைத் தன்மையுடன் பிரிக்கப்பட்டுள்ளது.
- மலையை சார்ந்த பகுதி (குறிஞ்சி), காடுகளை சார்ந்த பகுதி (முல்லை) , வயல் சார்ந்த பகுதி (மருதம்), கடல் சார்ந்த பகுதி (நெய்தல்), மணல் சார்ந்த பகுதி (பாலை) ஆகியன ஐந்தினைகள் ஆகும்.
- தமிழ் மொழி பேசும் பகுதிகள் சோழர்கள் (தலைநகரம் உறையூர்), பாண்டியர்கள் (தலைநகரம் மதுரை), சேரர்கள் (தற்போதைய கொங்கு நாடு மற்றும் கேரளா), பல்லவர்கள் (தலைநகரம் காஞ்சிபுரம்) என பலவாறு பிரிக்கப்பட்டு இருந்தது.
- தமிழ்நாடு பல்வேறு அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது. கடை ஏழு வள்ளல்கள் புலவர்களுக்கு வாரி வழங்கியதை பற்றி சங்கப்புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். கபிலர் மற்றும் ஔவையார் கடை ஏழு வள்ளல்களான ஆய், பாரி, ஓரி, காரி, அதியமான், பேகன் மற்றும் நல்லியை பற்றி குறிப்பிடுகின்றனர். ஓர் சிறந்த அரசனின் குணங்களாக அவன் பாகுபாடற்ற நீதி வழங்கும் அரசனாகவும், மக்களிடத்தில் அன்பு உடையவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளிடம் வீரத்தை வெளிப்படுத்துபவனாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
- சபை அல்லது மன்றம் மன்றம் எனப்படுவது அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இதை போலவே ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மன்றம் உண்டு. அது அந்த கிராமத்தின் பொது இடத்தில் கூடி அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கும்.
- போர் வீரர்கள் மிகவும் மதிப்புடன் நடத்தப்பட்டனர். போரில் அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் நினைவாக நினைவுத்தூண் ஒன்று ஊரில் எழுதப்படும்.
- ஆனால் போரில் ஒரு வீரன் தன் பின்புறம் காயப்பட்டு அதனால் இறந்தால் சங்க இலக்கிய காலங்களில் அது அவமானமாக கருதப்படும்.
- போரின் நல்ல நடைமுறைகள் பலவற்றை சங்க இலக்கியங்கள் நிறைய தெரிவிக்கின்றன.
- புறநானூறு என்பது ஒரு சங்க இலக்கியம் ஆகும். இது பாண்டிய அரசனை புகழ்கிறது. அவன் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிக மக்கள், கால்நடைகள் இவை அனைத்தையும் பாதுகாப்பான இடங்களில் போர்காலங்களில் இடம் பெயரச் செய்தான்.
- நீதி என்பது அரசு மற்றும் அரசனின் நல்லாட்சி மற்றும் நற்செயல்கள் எப்பொழுதும் நிலையான நீடித்த புகழை கொண்டு வரும். இவைகள் தான் முக்கிய அரசியல் கொள்கைகளாக சங்க காலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மன்னராட்சி / முடியாட்சி தன்மையைக் கொண்டிருந்தாலும் அரசனின் சட்டப்படியான முடிவுகள் மக்களின் ஒப்புதலைச் சார்ந்தே இருந்தது. அரசன் மக்களின் ஆதரவு இருக்கும் வரை சட்டப்படியான முடிவுகளை அனுபவிப்பவராகவும் அதேச்சமயம் அவற்றை தவறாக பன்படுத்தினால் மக்கள் ஆதரவை இழக்கவும் நேரிடும். சங்க இலக்கியம் (பட்டினப்பாலை) பல்வேறு வகையான வரிகளைப் பற்றி கூறுகின்றது. அவைகள் சுங்கவரி, வருமானவரி, பொருள் மீதுள்ள வரி மற்றும் பல வரிகள் அரசின் வருவாய்களை பெருக்கும் ஆதாரமாக கூறப்பட்டுள்ளன.
- எளிமையான நிர்வாக கட்டமைப்பின் வழியே (அமைச்சர்கள், அதிகாரிகள்) தமிழ் அரசர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர் வெளிநாட்டு வர்த்தகம், சுங்க வரி முதலானவை அரசின் வருவாயில் பெரும் பங்கு வகித்தன. பாண்டியர் கல்வெட்டில் முத்துக்குளித்தல் (கலாத்திகர்) பற்றியும் மற்றும் முதன்மை எழுத்தர் (கணத்திகன்) பற்றியும் கூறப்பட்டுள்ளது.
- சோழர்களின் கொடியிலும் மற்றும் நாணயங்களிலும் புலி சின்னத்தை பொறித்து இருந்தார்கள், சேரர்கள் வில் மற்றும் அம்புகளையும், பாண்டியர்கள் மீன் சின்னத்தையும் மற்றும் பல்லவர்கள் சிங்கத்தை சின்னமாக பெற்று இருந்தனர்.
- ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல் என்பது நிறுவனப்படுத்தப்பட்டு நாட்டின் முக்கியமானதொரு அங்கமாக இருந்தது. நாட்டின் நிலைத்தன்மையும் அமைதியும் இதன் செயல்பாட்டை பொறுத்தே அமைந்திருந்தது. நிறுவனப்படுத்தப்படாமல் இருந்தாலும் அடிமைகள் இல்லாமலில்லை அடிமைகளை படையெடுத்தபின் பிடிப்பதும், அடிமைகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தவும், பரிசுக்காக பரிமாற்றம் செய்யவும் அரசாட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கட்டுமானம் மற்றும் கட்டிட வேலைகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர்.
- பண்டைய தமிழில் சாதி முறை என்பது காணப்படவில்லை. வர்க்க கொள்கை மற்றும் வர்க்க கருத்து வேறுபாடுகள் அவரவர்களின் தொழில் சார்ந்த முறையில் காணப்பட்டன. சங்ககால சமுதாயத்தில் சாதிய மூறை என்பது வெளியிடத்திற்குரியதாகவும் மற்றும் அறியப்படாததாகவும் இருந்தது. சமுதாயப் பிரிவுகளை வர்க்கத்தின் அடிப்படையில் சங்க புலவர்கள் தரம் பிரித்தனர்.
- அவைகள்: (குடி) துடியன், பாணன் மற்றும் கடம்பன் அல்லது அரசர் (ஆட்சிபுரிபவர்), வைசியர் (வர்த்தகர்கள்) மற்றும் வேளாளர் (விவசாயிகள்) என்று குறிப்பிட்டுள்ளனர். தகுதிநிலைகளில் காணப்பட்ட வித்தியாசங்கள் தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வர்ண முறை எனும் சாதி அமைப்பு சங்ககால சமுதாயத்தில் சிறிதளவே காணப்பட்டன.
- பண்டைய தமிழ் சமூக அமைப்புகளில் மனுதர்மம் மூலமாக சட்டமாக்கப்படவில்லை. ஆரம்பக்கால ஆரிய-பிராமண சாதிய அமைப்புகள் சங்க காலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற அமைப்புகள் சங்க காலத்திற்கு பிறகே தோன்றின.
- பண்டைய தமிழ் மதங்கள் நாட்டுப்புற கலையை சார்ந்தே இருந்தது. இயற்கையை வழிபடுதல் மற்றும் இயற்கை காரணிகளே பொதுவாக காணப்பட்டன.
- முருகக் கடவுளை வழிபடுவதே தமிழ்நாடு பழங்குடியினரின் வழிபாட்டு மரபு ஆகும். முருகக் கடவுளை போராளிகளின்/மாவீரர்கள் கடவுளாக நாட்டுப்புற கலாச்சாரமாக செயல்படுத்தினர். உலகில் பற்றுடைய கடவுளாக தமிழ்-திராவிட மரபுகளின் கட்டுரைகளில் வேர் ஊன்ற ஆரம்பித்தது. கி.பி. (பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துகள் தோன்ற ஆரம்பித்தது.
- சமஸ்கிருதமயமாதல் மெதுவாக பொது வெளிக்கு பரவ ஆரம்பித்தது. பிராமணர்கள் அரசனுக்கு ஆசி வழங்குபவர்களாகவும், மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாகவும் கருதும் மனப்பாங்கு தொடக்கியது.
- இக்கால கட்டத்திற்கு பின் பிராமணர்களிடம் ஆசி பெறுவது சட்டப்பூர்வ வழியாக துவங்கியது. சமஸ்கிருதமயமாதலுடன் சேர்ந்து. வேத சடங்குகள், மனு கொண்டு வந்த வர்ணாசிரமம் அமைப்பு போன்றவை, ஏற்கனவே தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டு இருந்த திராவிட சமூகத்தை மேலிருந்து கீழாக சாதி ரீதியாக பிரித்தது.
- மரபு வழி கொள்கையும் இயற்கை வழிபாடும் தமிழ் மன்னர்களிடம் பொதுவாக காணப்பட்டது. முடியாட்சியும் கலாச்சார மையத்திலிருந்து அதிகார மையத்தை நோக்கி நகர்ந்தது. இதனால், சங்க காலத்துக்கு பிந்தைய காலத்தில் அரசனின் அதிகாரங்கள் அதிகரித்து நட்டின் மொத்த அதிகாரமும் பெற்ற ஒரே அமைப்பாக அரியணை உயர்ந்தது.
- அரசுரிமையாது புனிதத் தன்மையுடையதாகவும், மரபு வழியானதாகவும் பல்லவர்கள் கூறினர். பல்லவர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் ஊடுறுவியது. இரண்டு கலாச்சாரங்களிலும் உள்ள கருத்துக்கள், அமைப்புகள் , சில ஒன்றிணையும் முரண்பட்ட சில வழக்கொழிந்து போகவும் இந்த ஊடுருவல் வழி வகுத்தது. இந்த கலப்பின் விளைவாக தமிழ் பக்தி கலாச்சாரம் தோன்றியது.
- பெண்கள் மிகவும் உயரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர் மற்றும் இவர்கள் அரசர்களுக்கு பாதுகாவல் மற்றும் பல்வேறு வகையான பணிகளையும் செய்தனர். ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் ஆண்டிகளிடம் மட்டுமே இருந்தது.
- பெண்கள் பொது அவையில் பங்கேற்கலாம். ஆனால் ஆண்களே நிர்வாகிகளாகவும் மற்றும் ஆட்சியாளர்களாகவும் இருந்தனர். பெண்கள் சமூக சடங்குகளில் முக்கியப் பங்கு வகித்தனர். மேலும் மரபு வழி உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் ஆண்களிடம் இருந்தாலும், குடும்பத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
- தமிழகச் சமூகத்தில் பெண்களின் பங்கை பற்றி விவாதிக்கையில் ஔவையார் பற்றி குறிப்பிடுவது அவசியமாகிறது.
- (ஔவையார் என்றால் மதிப்புக்குரிய பெண் என்று பொருள்) தமிழ் இலக்கத்திற்கு எந்த பெண்மணிகளெல்லாம் முக்கிய பங்களித்தனரோ, அவர்கள் ஔவையார் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர். வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஆறு பெண் தமிழ்ப் புலவர்களுக்கு இப்பட்டப்பெயர் வழங்கப்பட்டது.
- சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் மற்றும் சோழர்களும் சிறந்த சிறப்புத்தன்மை வாய்ந்தவர்களாக கருதப்பட்டனர்.
- இலக்கியம், கலாச்சாரம், உலகளாவிய அறநெறி, அரசியல் தன்மை , போர், அமைதி மற்றும் இராஜதந்திரம் போன்றவற்றில் இவர்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தினர். இந்த ஔவையார் ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுக்கு (பொ.ஆ) காலத்தில் வசித்தவர். இவர் அதியமானின் அவையில் இருந்தார். இவர் திருவள்ளுவர் மற்றும் கபிலரின் சம காலத்தவர் ஆவார்.
- நற்றினை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு இவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். இவர் சிறந்த ஒரு தூதராகவும் இருந்தார். அதியமானுக்காக பலமுறை பல அரசர்களிடம் தூதுவனாக சென்றுள்ளார். அதியமான் அவையில் புலவராகவும், அதியமானின் உற்ற தோழராகவும் இருந்தார். தன் தூது திறமையின் மூலம் போர்களைக்கூட இவர் தவிர்த்துள்ளார்.
- ஒருமுறை காஞ்சியை ஆண்ட தொண்டைமான், அதியமான் ஆண்ட தகடூரை தாக்கி போர்புரியும் எண்ணத்துடன் இருந்தான் இதை அறிந்த ஔவையார் காஞ்சி சென்று தொண்டைமானை சந்தித்து பின் வருமாறு கூறினார்.
- “தொண்டைமான் அரசரே உங்களுக்கும் அதியமானுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு உங்களது ஆயுதக்கிடங்கில் ஆயுதங்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் நெய் பூசப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
- ஆனால் பாவம் அதியமானின் ஆயுதங்கள் உடைந்தும், ரத்தக்கரை படிந்தும், பட்டறைகளில் பழுது நீக்கும் பணியிலும் உள்ளன” என்றார். தொண்டைமானை புகழ்வது போல், ஔவையார் அவனது போர் அனுபவமின்மையும், அதியமானின் தொடந்த போர்களையும், போர் திறனையும் தெரிவித்து போர் வந்தால் தொண்டைமான் வெற்றி பெறுவது கடினம் என்பதையும் உணர்த்தினார்.
- சோழர் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இன்னொரு புகழ்பெற்ற ஔவையார் இருந்தார்.இவரே குழந்தைகளுக்கான நீதி கதைகளையும் ஆத்திசூடியையும் கொன்றைவேந்தனையும் எழுதியவர். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்காக மூதுரை மற்றும் நல்வழி என்ற இரண்டு நூல்களை இவர் எழுதியுள்ளார்.
திருக்குறள்
- நம் பண்டைய இலக்கியங்கள் நம் கலாச்சாரம் மற்றும் இலக்கிய மரபுகளை பற்றி குறிப்பிடுகிற அதேவேளையில் நம் தமிழ் கலாச்சாரத்தின் வரலாற்றை குறிப்பாக தமிழ் சமூக அமைப்பு மற்றும் மத நம்பிக்கைகள், வாழ்வாதாரம் , விதிமுறைகள், தொழிற்கல்வி மற்றும் பெண்களின் தகுதிநிலை, திருமணம், பாலினம், வர்க்க கட்டமைப்பு, சாதி அமைப்பின் தோற்றம், வர்க்க கட்டமைப்பு, சாதி அமைப்பின் தோற்றம், அமைதி, ஆட்சி முறை , கடற்படை, மீன்பிடித்தொழில் பாரம்பரியம், வர்த்தகம், வணிகம், கப்பல் கட்டும் பணி, மற்றும் கடற்பயணங்கள் பொருளாதாரம், நிலம், அமைப்பு, விவசாயம், கலை, நாட்டியம், பாடல்கள், இசை, கட்டடக்கலை மற்றும் அயல் நாடுகளுடன் உறவு மற்றும் தொலை தூர தேசங்களைப் பற்றியும் கூறுகின்றன.
அறிமுகம்
அரசியல் என்பது சமுதாயத்தின் நடைமுறைச் செயல்பாடுகளை அப்படியே கிரகித்துக் கொள்வதற்கு மாறாகச் சமுதாயத்தின் விழிப்புணர்வை மாற்றுவதற்கான நடவடிக்கை ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் எழ பல காரணிகள் உள்ளன. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டங்களில் பழைய சிந்தனைகளால் இடையூறுகளுக்கு உள்ளாகும். சமூகத்தில் புதிய காரணிகள் நெருக்கடிகளை உருவாக்குகின்றன. இவை சமூகத் தளத்தில் புதிய சிந்தனையாளர்களை தோற்றுவிக்கின்றன. இவர்களில் நீண்டகாலத் தாக்கங்களை உருவாக்குபவர்கள் அரசியல் சிந்தனையாளர்களாக உருவாகிறார்கள்.
அரசியல் சிந்தனையாளருக்கான வரையறைகளாக கீழ்க் காண்பவற்றைக் கூறலாம்.
- சமூகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய கொள்கைகள், நிகழ்வுகளுக்குக் காரணியாக இருத்தல்; மக்களின் பொதுப் புத்தியில் மாற்றத்தை உருவாக்குதல்.
- சமூகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய அரசியல் முடிவுகளை எடுத்தல்
- சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கும் பலன்கள் அளித்த அரசு முடிவுகளுக்குக் காரணமாக இருத்தல்
- சமூகத்தின் பல பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்குக் காரணமான அரசியல் கருத்துகளை பொதுக் கருத்தாக உருவாக்குதல்
- அரசியல் சிந்தனையாளர்களின் நடவடிக்கைகள் புதிய அரசியல் சிந்தனைகளுக்கு ஆதரவாக மக்களின் ஈடுபாட்டினையும் பகுத்தறிவினையும் உருவாக்குகின்றன. சமகால அரசியல் களங்களில் அவர்கள் ஊடாட்டம் கொள்வதால் புதிய சமூக விழுமியங்கள் உருவாகின்றன.
- அடுத்த காலகட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் அரசியல் மாற்றத்துக்கான அரசியல் முடிவுகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களது அரசியல் முடிவுகள் அநேக மக்களின் அன்றாட வாழ்வில் நீண்டகால மாற்றங்களை உருவாக்குகின்றன.
- உலகம் முழுவதிலும் இத்தகைய அரசியல் சிந்தனையாளர்கள் அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலும் தமிழகத்திலும் பண்டைய காலத்திலிருந்து இத்தகை அரசியல் சிந்தனையாளர்கள் உருவாகியுள்ளனர்.
- நவீன அரசியல் கருத்தாக்கங்களின் படி தேசிய அரசியல் சிந்தனையாளர்கள், பொதுவுடைமைவாத அரசியல் சிந்தனையாளர்கள், திராவிடப் பண்பாட்டு அரசியல் சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனையாளர்கள் என நாம் பகுக்கலாம்.
இதன்படி தமிழகத்தில் தோன்றிய அரசியல் சிந்தனையாளர்கள் இப்பாடத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.
பண்டைய அரசியல் சிந்தனைகள்
- திருவள்ளுவர் தம் நூலின் முதல் பகுதியாகிய அறத்துப் பாலில் அறத்தின் சிறப்பைத் திடமாக எடுத்துரைத்துக் கற்பவரின் நெஞ்சில் பதியுமாறு செய்கிறார். இங்கே நெறி தவறாத ஓர் அறவோராக விளங்கி, உணர்ச்சி வயப்படாமல், கற்பனைக்கு இடம் தராமல், நடுநிலையில் நின்று தாம் உணர்ந்த உண்மைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
- இரண்டாம் பகுதியாகிய பொருட்பாலில் உலக வாழ்க்கையின் இயல்புகளையும் நடைமுறைகளையும் அலசி ஆராயும் ஓர் அனுபவம் நிறைந்த அறிஞராகத் திகழ்கிறார்: பல காலத்தும் பல துறைகளிலும் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை எல்லாம் தம் சிந்தனைத் திறத்தால் தெளிவாக உணர்ந்து வகைப்படுத்திக் கூறுகிறார்.
- மூன்றாம் பகுதியாகிய காமத்துப் பாலில் படைப்புத் திறன் மிக்க ஒரு கவிஞராக நின்று குறள் மணிகளை இயற்றியுள்ளார்; தாம் மறைந்திருந்து, நாடகப் போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்துள்ளார்.
பொருட்பாலின் ஏழு பகுதிகள்
“அரசியல் ஐந்து; அமைச்சியல் ஈரைந்து;
உருவவல் இரண்டு; ஒன்று ஒண்கூழ் – இருவியல்
திண்படை; நட்புப் பழனேழ்; குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை”.
என்பது போக்கியார் என்னும் புலவர் பெயரால் அமைந்த பழைய வெண்பா. இதன் படி, பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது; அரசியல் 25, அமைச்சியல் 10, அரண் 2, கூழ் 1, படை 2, நட்பு 17, குடி 13 ஆக பொருட்பாலின் எழுபது அதிகாரங்கள் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” (குறள் : 381)
என வரும் பொருட்பாலின் முதல் குறட்பாவிலேயே இந்த வேறுபாட்டிற்கான அடிப்படையும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
- இக்குறட்பாவில் உள்ளவாறு அரசாங்கம் (அரசின் அங்கம்) என்பதன் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என்னும் ஆறு அங்கங்களையும் தனித்தனியே வகுத்து, இந்த ஆறு அங்கங்களையும் உடைய ஆட்சித் தலைவனைப் பற்றித் தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாக வேறுபாடு செய்வது திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.
அரசனது இயல்பு கூறும் இருபத்தைந்து அதிகாரங்கள்
- பொருட்பாலின் முதலில் அரசனது இயல்பு கூறும் அரசியலை மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களில் கூறியுள்ளார் திருவள்ளுவர்.
- ‘இறைமாட்சி’ (அதிகாரம் ) தொடங்கி ‘இடுக்கண் அழியாமை’ (அதிகாரம் ) வரையிலான இருபத்தைந்து அதிகாரங்களில் ‘அரசர்’, ‘வேந்தர்’, ‘நிலன் ஆண்டவர்’, ‘மன்னவர்’ முதலான பெயர்களால் நாற்பத்தாறு முறை அவர் ஆட்சித் தலைவனைச் சுட்டிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
- கல்வி வேண்டும் (40), கேள்வி வேண்டும் (42), அறிவு வேண்டும் (43), குற்றம் கடிந்து வாழ்வு வேண்டும் (44), பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் (45), சிற்றினம் சேராமல் வாழ வேண்டும் (46), தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும் (47), வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும் (48- 50), தெரிந்து தெளியும் ஆற்றல் வேண்டும் (51), தெரிந்து வினையை ஆளும் வன்மை வேண்டும் (52), சுற்றம் தழுவ வேண்டும் (53), மறதி (சோர்வு) இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும் (54), செங்கோன்மை (நேர்மை) வேண்டும் (55), கொடுங்கோன்மையை வெறுக்க வேண்டும் (56), வெருவந்த (பிறர் அஞ்சி நடுங்கும் செயல்கள்) செய்யாமை வேண்டும் (57), கண்ணோட்டம் (இரக்கம்) வேண்டும் (58), ஒற்று (உளவு) ஆளும் முறை வேண்டும் (59), ஊக்கம் வேண்டும் (60), சோம்பலை ஒழிக்க வேண்டும் (61), முயற்சி வேண்டும் (62), இடுக்கணைப் (துன்பத்தைப்) பொருட்படுத்தாத உறுதி வேண்டும் (63): இவைகளே அரசியலில் ஆட்சித் தலைவர்களுக்குத் திருவள்ளுவர் வலியுறுத்தும் இயல்புகள். இவை யாவும் நன்மக்கள் எல்லோருக்கும் வேண்டும் பண்புகளே என்பது நெற்றித் திலகம்.
குடியாட்சிக் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரைகள்
- அரசனைப் பற்றியும், அரசியல் அமைப்பினைப் பற்றியும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் பொன் போல் போற்றத்தக்கனவாக விளங்குகின்றன.
- திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக் காலம்.
- எனினும், அந்த காலத்தில் அவர் அரசனுக்குச் சொன்னவைகளாக அமைந்த அறிவுரைகள், இன்று குடியாட்சி முறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் நன்மொழிகளாக உள்ளன.
- திருவள்ளுவர், அரசு எப்படி இருக்க வேண்டும் என்று முடியாட்சி எங்கும் பரவியிருந்த காலத்திலேயே அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
- திருவள்ளுவர் காட்டுகின்ற அரசு எந்தக் காலத்திற்கும் , எந்த அமைப்பிற்கும் பொருத்தமாகக் காணப்படுகிற நிலையினை நாம் காண்கின்றோம். அவருடைய அரசியல் கருத்துக்கள் எந்தக் காலத்திற்கும் எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறப்பினைப் பெற்று விளங்குகின்றன.
மக்கள் நல அரசு
சுருங்கக் கூறின் , திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பு ஒரு ‘மக்கள் நல அரசு’ (Welfare State) அடிப்படையில் அமைந்தது எனலாம் (திருக்குறளில் அறிவுத் துறைகள், பக்.114; 118)
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (குறள் : 388)
என்ற குறட்பாவில், ‘அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அரசனாகப் பொறுப்பு ஏற்றால் மட்டுமே ஒருவன் அரசனாகச் சிறக்க முடியாது’ என்னும் கருத்தியலைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளார் திருவள்ளுவர்.
- ஒரு மன்னன் நீதி நெறி வழுவாமல் தன் கடமையைச் சரிவரச் செய்தால் – குடிமக்களைக் காப்பாற்றினான் என்றால் – வன் , ‘இறை என்று வைக்கப்படும்’ – ‘முறை செய்து காப்பாற்றும்’ அவனை மக்கள் காணும் கடவுளாகவே கருதுவார்கள் என்கிறார் அவர்.
- மன்னனைக் கடவுளாக நினைத்த ஒரு காலக்கட்டத்தில், ‘நீ ஒன்றும் கடவுள் அல்ல, நல்ல வண்ணம் நடந்தால், நீதி நெறி வழுவாமல் காப்பாற்றினால் உன்னை மக்கள் கடவுளாகவே கருதுவார்கள்’ என்று வள்ளுவர் கூறியிருப்பது , ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இக்கருத்தும் முடியாட்சிக் காலத்திற்கு மட்டுமன்றி, குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலக்கட்டத்திற்கும் பொருந்தி வருவதே.
- திருவள்ளுவரின் கண்ணோட்டத்தில் ‘அறம் வழுவாது, தீமைகளை நீக்கி, மறம் வழுவாது , மானம் காப்பது அரசு’ ஆகும்.
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு” (குறள் : 384)
என்னும் குறட்பா இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது.
- ‘மன்னர் எவ்வழி; மக்கள் அவ்வழி’. நாடாளும் மன்னன் தனது குடிமக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவன் ஆவான். அவன் ஒருவன் தீய வழியில் நடந்தால், மற்றவர்களுக்கு அதுவே தூண்டுகோல் ஆகிவிடும்.
- அவன் தலைவனாக இருப்பதால், அவனுடைய ஒழுக்கம் மற்றும் தனிவாழ்வு பற்றிய செய்திகள் நாடெங்கும் பரவுதல் எளிது. ஆகவேம் அவனுக்கு அறநெறி கட்டாயம் வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
- மானம் வேண்டும் என்று கூறும்போதும், தனிவாழ்க்கை பற்றிய மான உணர்ச்சியைக் குறிப்பிடாமல், ‘மறன் இழுக்கா மானம்’ என வீரத்திற்கு ஏற்புடைய மானத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு மன்னன் வாழ்க்கை நடத்த வேண்டும் என அவர் அறிவுறுத்துயுள்ளார்.
- ‘செங்கோன்மை’ அதிகாரத்திலும் நல்லாட்சி பற்றி எக்காலத்திற்கும் பொருந்தி வருகின்ற அடிப்படையான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.
- உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன; அது போல், குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை –நல்லாட்சியை-எதிர்பார்த்து வாழ்கின்றனர் என்கிறார்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம்: மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி” (குறள்; 542)
என்ற குறட்பாவில் ‘மன்னவன் கோல்’ என்னும் முடியாட்சிக் காலத்திற்கான தொடரின் இடத்தில், ‘நல்லாட்சி’ என்ற பொதுவான இன்றைய மக்களாட்சிக்கு ஏற்ற தொடரைப் பொருத்திக் கொள்ளும் வகையில் பாடியிருப்பது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாகும்.
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” (குறள்: 544)
என்னும் குறட்பாவும் திருவள்ளுவரின் காலம் கடந்து நிற்கும் பொதுமை நோக்கினைத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றது.
- ‘குடிமக்களை அன்போடு அணைத்துக் கொண்டு ஆட்சி புரியும் அரசனுடைய அடிகளைப் பொருந்தி நிற்குமாம் உலகம்’.
- இக்கருத்தினையே ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் வரும் குறட்பா ஒன்றில் எதிர்மறை வாய்ப்பாட்டால் தெளிவுபடுத்தியுள்ளார் திருவள்ளுவர். கொடுமையைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் துன்புற்றுக் குடிமக்கள் அழும் கண்ணீருக்கு மிகுந்த ஆற்றல் உண்டு; அதுவே ஆற்றல் மிக்க படையாகி முறை செய்யாத மன்னனுடைய அரசரையே அடியோடு அழித்துவிடும்.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”. (குறள்: 555)
இங்கே அல்லற்பட்டு ஆற்றாது குடிமக்கள் அழும் ‘கண்ணீரை’, கொடுங்கோல் அரசையே அடியோடு தேய்த்து அழித்துவிடும் ‘படையாக’ உருவகம் செய்திருக்கும் திருவள்ளுவரின் சிந்தனை புதுவது; இதுவரை யாரும் கூறாதது. ஹிட்லர், முசோலினி, ஜார் முதலான உலகின் கொடுங்கோலரகளுக்கு எதிராகத் திருவள்ளுவர் இக்குறட்பாவில் அடித்திருக்கும் சாவுமணி வலிமையானது.
வருவாயைப் பெருக்குவதற்கான நான்கு வழிவகைகள்
- ஒருமன்னன் தனது அரசின் வருவாயைப் பெருக்கும் துறையிலும் வரவு-செலவுத் திட்டத்திலும் (Budget) வல்லவனாக விளங்க வேண்டும். இவ்வகையில் திருவள்ளுவர் ’இறைமாட்சி’ அதிகாரத்தில் கூறுயுள்ள ஓர் அடிப்படையான அரசியல் சிந்தனை வருமாறு:
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.” (குறள் : 385)
முதலாவதாக, ஒரு மன்னன் பொருள் வரும் வழிவகைகளைப் பெருக்க வேண்டும்; இதனை ‘இயற்றல்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர். அடுத்து, அரசுக்குப் பல வழிகளிலே வந்த வருவாயைத் திரட்டி ஒன்றுசேர்க்க வேண்டும்; இதனை ‘ஈட்டல்’ என்கிறார் வள்ளுவர். மூன்றாவதாக ஒன்று சேர்த்த பொருளை அழிவு நேராமல் காக்க வேண்டும் ; இது ‘காத்தல்’ ஆகும். மிக இன்றியமையாத நான்காவது படிநிலை, இயற்றியும் ஈட்டியும் காத்தும் வைத்துள்ளவற்றைச் செலவிடுவதற்கு உரிய துறைகள் இவை இவை, அவற்றிற்கான தொகைகள் இவ்வளவு இவ்வளவு என்று வகுத்துச் செலவு செய்தல் ஆகும். இதுவே ‘வகுத்தல்’ எனப்படும். இங்ஙனம் இயற்றல், ஈட்டல், காத்தல் , வகுத்தல் என்னும் நான்கு வழிமுறைகளில் அரசின் வருவாயைச் சேர்த்து, பகிர்ந்து, திட்டமிட்டு, பயன்படுத்திக் கொள்வது ஒரு தேர்ந்த மன்னனின் தலையாய கடமை ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
- இக்கருத்து இன்று அரசியல் மற்றும் பொருளியல் சார்ந்த அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சமதர்மம் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்றாகும். ஓர் அரசு தனது வருவாயை எவ்வாறு எல்லாம் சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முப்போக்கான கருத்தினை இரண்டாயிட்ரம் ஆண்டுகளுக்கு முன்பே நறுக்குத் தறித்தாற் போல் ‘இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்’ என நான்கே நான்கு சொற்களில் வடித்துத் தந்துள்ள பாங்கினை இங்கே நம்மால் காண முடிகின்றது.
- அரசனுக்கென்று திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள நல்லியல்புகள் நாட்டு மக்கள் எல்லோருக்கும் வேண்டியனவாக, பொருந்தக் கூடியனவாக இருக்கின்றன. அதனால்தான் அவர் அரசனுக்கு என்று கூறத் தொடங்கிய ‘கல்வி’ முதலாக ‘இடுக்கண் அறியாமை’ வரையிலான பண்பு நலன்களை ‘வாழும் உயிர்க்கு’ என்றும் ‘மாந்தர்க்கு’ என்றும் பலர்க்கும் பொதுவாக்கிக் கூறியுள்ளார்.
- திருவள்ளுவர்வ் பொருட்பாலில் வலியுறுத்தியுள்ள அரசியல் சிந்தனைகளில் அறநெறியே முதன்மையான இடத்தினைப் பெறுகின்றது, அவரது அரசியல் அமைப்பில் மக்கள் நலமே அடிப்படையாக விளங்குகின்றது.
- வேறு சொற்களில் கூறுவது என்றால், முடியாட்சிக் காலத்தைச் சார்ந்த திருவள்ளுவரின் பெரும்பாலான அரசியல் சிந்தனைகள் இன்றைய குடியாட்சிக் காலத்திற்கும் ஏற்புடையனவாகத் திகழ்கின்றன.
திருக்குறள் ஓர் மதச்சார்பற்ற நூல்
திருக்குறளை நாம் படிக்க ஆரம்பித்த உடனேயே அது ஒரு மதச்சார்பற்ற நூல் என்ற உண்மையை நாம் அறியலாம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பௌத்த மதம், சீக்கிய மதம் , ஜைன மதம் மற்றும் இந்து மதம் போன்ற பல மாதங்கள் இருந்தன. அதைப்போலவே இறை மறுப்பாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் மதச்சார்பற்ற தன்மை எனும் கருத்தாக்கத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. வள்ளுவரே மத நம்பிக்கை உடையவர் தான். கடவுளைப் புகழ்ந்தே பத்து குறள்களை கொண்ட ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார். அவரும் ஒரு மதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு மதத்துக்கும் ஆதாரமாக இந்நூல் இல்லை. குறிப்பாக சொல்வதென்றால் எந்த மதத்தைப் பற்றியும் குறிப்பிடக்கூட இல்லை.
தேசியவாதம்
சுப்ரமணிய பாரதியார் (1882 – 1921)
- சி. சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று மிகவும் போற்றப்படுகிறார். மகாகவி என்றால் மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் தலைசிற்ந்த கவிஞராகக் கருதப்படுகிறார்.
- இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன.
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
நாம் சாதி மதங்களைப் பார்க்க வேண்டாம், இந்த நிலத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒன்றே அவர்கள் எந்த சாதியினரை சார்ந்திருந்தாலும் அல்லது எந்த வேதத்தை போதிப்பவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே அது மனிதகுலம் ஆகும்.
- சுப்ரமணிய பாரதியார்
- “நாம் ஆயிரம் பிரிவுகளாக வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் அந்நிய படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது”.
பாரதி: ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி
- தமிழ் இலக்கியங்களின் ஓர் புதிய சகாப்தமே சுப்ரமணிய பாரதியாரிடமிருந்து தொடங்கியுள்ளது எனலாம். இவருடைய பெரும்பாலான படைப்புகள் தேசபற்று, பக்தி மற்றும் மறைபொருள் பற்றியதாகும்.
- பாரதியார் மிகவும் உணர்ச்சிப் பெருக்குள்ள கவிஞர் ஆவார். “கண்ணன் பாட்டு” நிலவும், “வான்மீனும் காற்றும்” “பாஞ்சாலி சபதம்” போன்றவை பாரதியாரின் மிகச் சிறந்த படைப்புகளின் வெளிப்பாடுகளாகும்.
- பாரதி ஓர் தேசியக் கவிஞராக கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசப்பற்று மிக்கதாக மக்கள் மத்தியில் போற்றப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் பங்கேற்று நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்.
- பாரதியார் நாட்டின் பெருமையை மட்டும் கூறாமல் சுதந்திர இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் கட்டுகிறார். இவர் 1908ஆம் ஆண்டு “சுதேச கீதங்கள்” எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்.
- பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” என்பது ஓர் தலைசிறந்த படைப்பாகும். இது இந்தியாவை திரௌபதியாகவும், ஆங்கிலேயரை கௌரவர்களாகவும் சுதந்திர போராட்ட வீரர்களை பாண்டவர்களாகவும், உருவகப்படுத்தியிருந்தார். திரௌபதியின் போராட்டம் மூலமாக அவர் இந்திய தாய் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுள்ளதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
ஓர் இதழாசிரியராக பாரதியார்
- பாரதியார் (பல வருடங்களைப்) தன்னுடைய வாழ்க்கையில் பத்திரிக்கையாளராக செலவிட்டார். பாரதி இளம் வயதில் தன்னுடைய வாழ்க்கையை ஓர் பத்திரிக்கையாளர் மற்றும் “சுதேச மித்திரன்” என்ற பத்திரிக்கையில் 1904-ஆம் ஆண்டு தொடங்கினார்.
- 1906ஆம் ஆண்டு மே மாதம் “இந்தியா” எனப்படும் ஓர் புதிய நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பிரஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்தது.
- இது பிரெஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்தது. இது தமிழ் பத்திரிக்கை துறையில் ஓர் புதிய பாதையை ஏற்படுத்தியது எனலாம். இது புரட்சிகரமான புதிய முயற்சியாக தோன்றியது.
- தனது புரட்சிகரமான முனைப்புகைளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை சிகப்பு தாளில் அச்சிட்டு பிரசுரித்தார்.
- அரசியல் கேலிச் சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு ‘இந்தியா’ என்பதாகும். இவர் மேலும் விஜயா என்கிற தமிழ் தினசரியின் அதன் பதிப்பாசிரியராகவும் இருந்து வெளீயிட்டார்.
- “பால பாரதா” என்கிற ஆங்கில மாத இதழையும், பாண்டிச்சேரியில் “சூர்யோதயம்” எனும் உள்நாட்டு வார இதழை வெளியிட்டார்.
- “இந்தியா” என்கிற இதழின் பதிப்பாசிரியராக இருந்து செயல்பட்டதனால் பாரதியாருக்கு கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நிலைமை மிகவும் மோசமானதால் 1908-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அங்கு பாரதியாரின் வாழ்வில் பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டன.
- இதன்மூலம் பல தலைவர்களை சந்திக்கவும், சுதந்திரப்போராட்டத்தில் ஆயுதமேந்திய இயக்கத்தின் தலைவர்களான அரவிந்தோ, லாலா லஜபதிராய் மற்றும் வி.வி.சுப்ரமணியம் ஆகியோரையும் பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்திருக்கும் பொழுது சந்தித்தார்.
- மிகவும் ஆதாயத்திற்குரிய பாரதியாரின் வாழ்க்கை என்பது பாண்டிச்சேரியில் பத்து வருடன் அவர் தங்கியிருந்த காலமாகும். இவர் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டி தேசிய பாதைக்கு இட்டுச் சென்றார்.
- பாரதியாரின் படைப்புகள் ஆங்கிலேய அரசுக்கு மிகவும் எரிச்சலூட்டின, இவரின் எழுத்துக்கள் மூலம் தாய் நாட்டுப்பற்றை தமிழ் இளைஞர்களிடம் விதைத்தார்.
- பாரதியார் 1919-ஆம் ஆண்டு சென்னையில் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியை சந்தித்தார். பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிற்கு அருகில் 1917-ஆம் ஆண்டு கடலூரில் நெருங்கினார். அப்பொழுது அவர் கைது செய்யப்பட்டார்.
- இவர் சிறையில் இருக்கும்பொழுது தன்னுடைய நேரத்தை சுதந்திரம், தேசியவாதம் மற்றும் நாட்டின் நலத்தைப் பற்றிய கவிதைகள் எழுதுவதற்கு செலவிட்டார்.
- பாரதியார் தன்னுடைய இளமைக்காலத்தில் தமிழ் தேசியத் தலைவர்களிடம் நல்ல உறவுகளை ஏற்படுத்தினார், குறிப்பாக வ.உ. சிதம்பரம், சுப்ரமணிய சிவா மண்டயம் திருமலச்சாரியார் மற்றும் சீனுவாச்சாரி போண்றவர்களிடம் நல்லுறவுகளை வளர்த்தார். இந்த தலைவர்களிடம் ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தார்.
- பாரதியார் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் தேசிய பிரச்சனைகளை தீவிரமான இந்திய தேசியவாதத் தலைவர்களான பிபின். சந்திரபால், பாலகங்காதர திலக் மற்றும் வி.வி.சுப்ரமணியம் போன்றோரிடம் விவாதித்தார்.
- பாரதியாரின் பங்கேற்பு மற்றும் செயல்பாடுகளால் 1905-ஆம் ஆண்டு பனாரஸ் மற்றும் 1907-ஆம் ஆண்டு சூரத் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களை இவரது தேசபற்று மிகவும் கவர்ந்து இழுத்ததுடன் ப்ல தாய் நாட்டை நேசிக்கும் தேசத் தலைவர்களால் மதிக்கப்பட்டார்.
- சில தேசத்தலைவர்களுடன் தேசம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் பல்வேறு முறையில் தேசிய இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.
- சந்தேகமில்லாமல் பாரதியாருடைய அறிவுரைகள் மூலமாகப் பல தேசிய தலைவர்கள் புத்துணர்வு பெற்று தேசியவாதத்திற்கு பங்காற்றினார். இவ்வாறு பாரதியார் இந்திய சுதந்திரத்திற்காக முக்கிய பங்காற்றினார் என்பதை நாம் அறிவோம்.
- “சுயராஜ்ய தினம்” கொண்டாடுவதற்காக 1908-ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்திற்கு இவர் ஏற்பாடு செய்தார். “வந்தேமாதரம்” “எந்தையும் தாயும், ஜெய பாரத்” போன்ற பாரதியாரின் கவிதைகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
- சுப்ரமணிய பாரதியார் (டிசம்பர்) பதினோராம் நாளில் 1882-ஆம் ஆண்டு எட்டயபுரம் என்னும் கிராமத்தில்பிறந்தார். இந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது, இவருடைய குழந்தை பெருவ பெயர் சுப்பையா ஆகும். இவரது தந்தையார் சின்னசாமி, தாயார் லட்சுமி அம்மாள் ஆவார்.
பாரதியார் ஏழு வயதுல் தமிழ்க் கவிதைகளை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய பதினோராம் வயதில் அவருடைய படைப்புகள் மற்றும் திறமைகள் கற்றறிந்த அறிஞர்களால் புகழப்பட்டது. பதினோராம் வயதில் சுப்பையா அனைத்து பெருமக்கள் மற்றும் அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் ஓர் சவால் விட்டார். யாரேனும் என்னுடன் எந்தவித முன்னறிப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் பேச தயாரா? என சவால் விட்டார். இந்த போட்டி எட்டையபுர அரசவையில் ஓர் சிறப்பு அமர்வாக எட்டயபுர அரசரின் தலைமையில் நடைபெற்றது. சவாலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு ‘கல்வி’ ஆகும். சுப்பையா பேச்சுப் போட்டியில் வென்றார். இது சுப்பையாவின் வாழ்க்கையில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. இந்த மறக்க முடியாத நிகழ்வுக்கு பிறகு ‘எட்டயபுர சுப்பையா’ என்று அழைக்கப்பட்ட அவர் ‘ பாரதி’ என்றும் பிற்காலத்தில் பாரதியார் என்றும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ‘பாரதியார்’ என்ற பெயர் அனைவராலும் குறிப்பாக தேசவாதிகளாலும் உலகெங்கிலும் உள்ள கோடான கோடி தமிழப் பற்றாளர்களால் மதியாதையுடனும் நினைவு கூறப்படுகிறது.
ஜூன் 1897-இல் பாரதியாருக்கு பதினைந்து வயது நிரம்பியிருந்த போது செல்லமாளுடன் திருமணம் நடந்தது. இதன்பிறகு பாரதியார் காசிக்கு சென்றார். அங்கு தனது அத்தை குப்பாள் மற்றும் மாமா கிருஷ்ணசிவனுடன் இரண்டு ஆண்டுகள் இருந்தார். அங்கிருந்த போது தான் சமஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழியறிவினை பெற்றார். அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். காசியில் தங்கியிருந்தது பாரதியின் ஆளுமையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. முறுக்கு மீசை, சீக்கியர்களின் தலைப்பாகை மற்றும் வீறு கொண்ட நடையினை உரித்தானதாக்கினார். இத்தகைய வெளிப்படையான மாற்றங்களும் பாரதியாரிடம் ஏற்பட்டன.
ஓர் சமூக சீர்திருத்தவாதியாக பாரதியார்
- பாரதியார் சாதிய அமைப்புக்கு எதிராக செயல்பட்டவர். இவர் உலகில் இரண்டு சாதிகள் உள்ளன. ஒன்று ஆண்சாதி மற்றொன்று பெண்சாதி என்பதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
- இவற்றிற்கெல்லாம் இவர் தனது பூநூலை அகற்றினார். மேலும் அட்டவணை சாதியினரையும் பூநூல் அணியச்செய்து வேதம் ஓதச் செய்தார். இவர் முஸ்லிம்கள் நடத்தும் கடையில் தேநீர் பருகினார்.
- இவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தேவாலாயத்திற்கு அனைத்து விழாக்களிலும் பங்கேற்றார். இவர் பட்டியல் இனத்தவரை கோயிலுக்கு அனுமதிப்பதை ஆதரித்தார். இவருடைய அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இவருடைய அக்கம் பக்கத்தினரிடையே பெரிய எதிர்ப்பு இருந்தது.
- பாரதியார் மிகவும் திறமையானவர். இந்தியர், தெளிவாக அனைவரும் பாரதத்தாயின் குழந்தைகள் என ஒன்றுபட்டு செயல்பட்டால் அன்றி இந்திய விடுதலை சாத்தியமாகாது என்று கூறினார். இவர் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் ஆற்றலாதல் ஆகியவற்றை மிகவும் நம்பினார். இவர் குழந்தை திருமணம், வரதட்சணை முறையைத் தீவிரமாக எதிர்த்தார். ஆனால் விதவை திருமணத்தை அவர் ஆதரித்தார்.
- ஆணும் பெணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும்.
- சுப்ரமணிய பாரதியார்.
- விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவுடனான பாரதியாரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றி சிந்தனையைப் பாரதியாரிடம் ஏற்படுத்தின. இது சாதியப் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் வரைக்கும் மற்றும் ஆன்மீகம் வரை பாடுபட்டவர். இவர் தற்கால பெண்களுக்கு சக்தி என்கிற அடையாளத்தை ஏற்படுத்தியவர், குறிப்பாக நவீன பெண்களின் அதிகாரம், பலமான, சுதந்திரமான மற்றும் ஆண்களுக்கு சமமான பங்குதாரர் என்று பெண்களை குறிப்பிடுகிறார்.
ஓர் தொலைநோக்குச் சிந்தனையாளராகப் பாரதியார்
- பாரதி என்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஏழுத்தாளர், சுதந்திரப் போரட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் தமிழக சமுதாயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
- இவர் சொன்னதைச் செய்துக் காட்டியவர் என்பது இவரின் உயர்வைக் காட்டுகிறது. இவருடைய தொலை நோக்கான முன்கணிப்பு போல அடுத்து இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஓர் மகத்தான இந்தியா பற்றிய இவரின் தொலை நோக்கு சிந்தனைகள் சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- பாரதியார் தனக்காக வாழாமல் மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் வாழ்ந்தவர். ஆகையால்தான் மரியாதையுடன் இவரைப் பாரதியார் எனப் போற்றுகின்றனர்.
- பல ஆண்டுகளுக்குப் பிறகும் சுப்ரமணிய பாரதியார் இந்திய சுதந்திரத்தின் சின்னமாகவும் தமிழ் தேசியவாத அதிர்வலையை ஏற்படுத்தியவராகவும் விளங்குகிறார்.
பொதுவுடைமைவாதம்
ம. சிங்காரவேலர் (1860 -1946)
- இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுச்சிபெற்ற சுதேசி மற்றும் தன்னாட்சி இயக்கங்களால் நாடு முழுவதும் விடுதலை உணர்வு பரவியது. சமூகரீதியிலும் இந்து மதத்திற்குள் சில சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
- அரசியல் ரீதியாக இந்தியத் தன்மை அல்லது தேசிய உணர்வு உருவாவதில் இந்த இயக்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
- இருந்தபோதும் இவை மதவாதத் தன்மையை கொண்டிருந்தன. அதேபோல இந்த இயக்கங்களில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினராக இருந்தனர்.
- அவர்கள் கோரும் விடுதலை மட்டுமே அரசியல் விடுதலையாக இருந்தது. அடித்தட்டு மக்களான விவசாயிகள் , தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
- பெரும்பாலான விவசாயிகள் ஏழைகளாக இருந்தனர். மேலும், காங்கிரசு கட்சிக்குள் சாதிப் பாகுபாடுகள் நிலவின. குறிப்பாக, தமிழகத்தில் பிராமணர், பிராமணரல்லாதவர் என்ற பாகுபாடு நிலவியது.
- இந்த நிலைமையில் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துகள் , அறிவியல் பார்வை ஆகியன உருவாவதிலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு வட்டாரத் தன்மை அளிப்பதிலும், விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களை இணைப்பதிலும் இந்திய அரசியலில் சமதர்மக் கருத்துகள் பரவியதிலும் ம.சிங்காரவேலரின் அரசியல் சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின.
- பாரதியார் செப்டம்பர் பதினோராம் நாள் 1921-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆனால் இவரின் இறுதி சடங்கில் பதினான்கு நபர்கள் மட்டுமே பங்கேற்றனர், இதற்கு சாதியை விட்டு தள்ளி வைக்கப்படுவோம் என்பதுடன் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்கு முறையினால் ஏற்பட்ட பயமே கரணமாகும்.
காங்கிரசு அரசியலில் சிங்காரவேலருடைய சிந்தனைகளின் தாக்கம்
- தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து மூலப்பொருட்களாகத் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ஆங்கிலேய அரசு, தங்கள் தேவைகள் அதிகரித்ததால் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளைத் தொடங்கியது.
- ஏற்கனவே இந்தியாவில் பாரம்பரியத் தொழில்களை காலனியாதிக்க அரசு முடக்கிவிட்டதால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பசி, பட்டினி, வறுமையில் வாடினர்.
- இதனால் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேலும் மோசமாக்கியது. இதனால் கூலி வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தளப்பட்டனர்.
- இதனால் பின்னர் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்திலும் தொழிலாளர்கள் மிகக் குறைவான கூலிக்கு வேலையில் அமர்த்தப்பட்டனர். அடிமைகளைப் போல் உழைத்தனர்.
- போராடினால் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டனர்.
- இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காகத் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. அன்றைய சென்னை மாகாணத்தில் இந்த அமைப்புகளுக்கு திரு.வி.கல்யாணசுந்தரனார், தி.வரதராஜுலு போன்றோர் தலைமை தாங்கினர். இந்த தொழிலாளர் அமைப்புகள் உருவாக முன்முயற்சிகள் எடுத்து பாடுபட்டவர் ம.சிங்காரவேலர் ஆவார் என்பது மிகையில்லை.
- இந்த தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தி விடுதலை இயக்கத்தோடு இணைக்க வேண்டும் என்று ம.சிங்காரவேலர் விரும்பினார். ஆனால் காங்கிரசு கட்சி இதனை விரும்பவில்லை.
- ம.சிங்காரவேலர் இதனை கடுமையாக விமர்சித்து 1920ஆம் ஆண்டிலேயே காங்கிரசு தலைமைக்கு தந்தி அனுப்பினார். தொடர்ந்து அண்ணல் காந்திக்குப் பகிரங்கக் கடிதமும் எழுதினார்.
- அத்துடன் ஹிந்து, சுதேசமித்திரன் உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களிலும் நவசக்தி போன்ற பருவ இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.
- காங்கிரசு தொண்டர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்தார். இச்சமயத்தில் 1922-ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு குழுவின் கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அவர் அங்கும் விவாதத்தை உருவாக்கி தமக்கு ஆதரவு திரட்டினார். அவரது கருத்துக்கள் வருமாறு:
- இந்திய விடுதலை என்பது விவசாயிகள், தொழிலாளர்களின் பொருளாதார சுதந்திரத்தை உள்ளடக்கியதாகும்.
- தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களுக்காகவும் காங்கிரசு பேரியக்கம் போராட வேண்டும்.
- விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும்.
- பல்வேறு அமைப்புகளில் உள்ள மக்களை ஒன்று திரட்ட காங்கிரசு தலைவர்கள் உதவ வேண்டும்.
- இதன்விளைவாக 1922-இல் இந்திய தேசிய காங்கிரசு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டத் தீர்மானம் நிறைவேற்றுயதுடன் இதற்கென ஓர் குழுவினை அமைத்தது.
- ஆறுபேர்கொண்ட அக்குழுவில் சிங்காரவேலரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று போராடினார். அதனை வலியுறுத்தி அன்றைய முன்னணி நாளிதழ்களில் தொடர்ந்து எழுதினார்.
- இதுபோன்ற முயற்சிகளின் பலனாக முதல் முறையாக 1926-இல் தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்டது.
- இதேபோல காங்கிரசு தலைவர்கள் அந்தந்த வட்டார மொழிகளில் பேசினால்தான் விடுதலைக்கருத்துகள் மக்களைச் சென்றடையும் என்பதுடன் மக்களுக்கும் காங்கிரசு பேரியக்கத்துக்கும் இடையே நெருக்கம் உருவாகும் என்றார்.
- மக்கள் பிரச்சனைகளைப் பொதுமக்களிடம் பேசும்போது தமிழ் மொழியிலேயே பேச வேண்டும் என உறுதியாக இருந்தார். இதையொட்டி 1918-ல் சென்னை மாகாண சங்கத்தின் மாநாட்டில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்காரவேலர் மற்றும் ஈ.வெ.ரா பெரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுயமரியாதை, பொதுவுடைமைவாதம் இயக்கங்களின் மீதான ம.சிங்காரவேலரின் தாக்கம்
- பிராமணர், பிராமணரல்லாதோர் பாகுபாடு காங்கிரஸ் கட்சியில் நிலவுவதைக் கண்டித்து பெரியார் விலகியபோது ம.சிங்காரவேலர் அவரை ஆதரித்தார்.
- சோவியத் ஒன்றியம் சென்றுவந்த ஈ.வெ.ரா. பெரியார் அதன் தாக்கத்தில் பொதுவுடைமைவாதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தினை சுயமரியாதை சமூக நீதிக் கட்சி என்று பெயர் மாற்றினார்.
- அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்தளிப்பதில் ம.சிங்காரவேலர் உறுதுணையாக நின்றார். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பரவ ம.சிங்காரவேலர் அயராது பாடுபட்டார்.
- பெரியார் நடத்திய ‘குடியரசு’ உள்ளிட்ட இதழ்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக் ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். அவரது கட்டுரைகள் எளிமையான நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தன.
- ம.சிங்காரவேலர் பொதுவுடைமைவாதத் தத்துவத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். காங்கிரசு பேரியக்கம் தொழிலாளர் அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் என்று 1920-ல் தலைமைக்குத் தந்தி அனுப்பினார்.
- அது சென்னை சமதர்மவாதிகள் சார்பில் அனுப்பப்படுவதாக அதில் தெரிவித்திருந்தார். அகில இந்திய காங்கிரசு குழுவின் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பொதுவுடைமைவாதப் பிரதிநிதியாகவே வாதிட்டார்.
- தொழிலாளர்கள் பலமாகத் திகழ்ந்த சென்னை நகரில் இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை 1923 மே முதல் நாளன்று நடத்திக்காட்டினார். அதே நாளில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி அமைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அக்கட்சியின் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் பின்வருமாறு:
தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள்
- எட்டுமணிநேர வேலை
- சங்கம் அமைக்கும் உரிமை
- தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க கடைசி ஆயுதமாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமை
- கோரிக்கைகளை பரிசீலிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக் குழு
- குறைந்தபட்ச ஊதியம்
- அடிப்படை வசதிகளுடன் கூடிய சுகாதாரமான குடியிருப்பு வசதி
- மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு
- வருங்கால வைப்புநிதி
- சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்பு
- இலவச மருத்துவ உதவி
- பேறுகால விடுப்பு
- ஒப்பந்த முறை ஒழிப்பு
விவசாயிகளுக்கு
- இலவச நீர்ப்பாசனம்
- சமீன்தார் முறை ஒழிப்பு
பொதுமக்களுக்கு
- அனைவருக்கும் வாக்குரிமை
- அடித்தட்டு மக்கள்., தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோர் தேர்தலில் போட்டியிட அனுமதி.
1925-ல் கான்பூர் நகரில் இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதம் மாநாடு நடந்தபோது அதற்குத் தலைமை ஏற்று நடத்தித் தந்தார்.
- அப்போது “வன்முறையற்ற மார்க்சியப் பாதை”யை வலியுறுத்திப்பேசினார். மேலும் “இந்தியாவுக்கேற்ற மார்க்சியப் பாதையைத் திட்டமிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
- “காங்கிரசு கட்சியில் இருந்துகொண்டே பொதுவுடைமைவாதிகள் தனிப்பிரிவாக இயங்க வேண்டும்’ என்றார். இதையொட்டி காங்கிரசு கட்சிக்குள் சமதர்ம பிரிவு உருவானது.
ம.சிங்காரவேலரின் வாழ்வும் சமூக பணியும்
- ம.சிங்காரவேலர் இளம் வயதிலேயே இந்து மதத்தில் நிலவும் வர்ண அமைப்பிலும் மூட நம்பிக்கைகளிலும் அதிருப்தி அடைந்திருந்தார். இதன் விளைவாக 1890களிலேயே பல இடங்களில் பௌத்த சங்கம் அமைத்து வர்ண அமைப்புக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பரப்புரை செய்தார்.
- வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்ற சிங்காரவேலர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினராகவும் அதன் சுகாதாரக் குழுவிலும் பணியாற்றினார்.
- அப்போது குடிசைப் பகுதிகளில் கொள்ளை நோய்தாக்கம் அதிகமாக இருந்ததால் சுகாதாரம், கல்வி ஆகிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தார்.
- தொடர்ந்து குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். இதன் அடிப்படையிலேயே காங்கிரசு இயக்கத்தில் செயலாற்றினார். பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
- தனது ஐம்பது வயதைக் கடந்தபின்பே அரசியலில் இறங்கினாலும் சுமார் 30ஆண்டுகளுக்கும் அதிகமாக முதுமையையும் பொருட்படுத்தாமல் பகுத்தறிவு மற்றும் பொதுவுடைமைவாதக் கருத்துகளையும் விடாது பிரசாரம் செய்தார்.
- ம.சிங்காரவேலர் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்று நேசத்துடன் நினைவு கூறப்படுகிறார்.
திராவிடக் கொள்கைவாதம்
பெரியார் (1879 – 1973)
அறிமுகம்
தமிழக அரசியல் சிந்தனையாளர்களில் இ.வெ.ரா. பெரியார் மிகச்சிறந்த சிந்தனையாளராக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதி ஆவார். இவரைப்பற்றி விருவாக காணலாம்.
- பன்னெடுங்காலமாக தமிழகத்தைப் பீடித்திருந்த மூடப்பழக்க வழக்கங்கள், பெண்ணடிமை, சமூகப் பின்னடைவுகளுக்கு அறிவையும், சுய மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டு தனது நெடிய வாழ்நாள் மூழ்வதும் போராடியவர். இதற்காகத் தந்தை பெரியார் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்.
- பண்பாட்டு ரீதியாக அவர் வகுத்துத் தந்த திராவிடக் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் ஒளி வீசுகிறது என்று புகழ்பெற்ற சமூக நீதி அறிஞர்கள் கூறுகிறார்கள்.
- காந்தியின் அரசியல் வருகையால் ஈர்க்கப்பட்ட பெரியார் காங்கிரசு இயக்கத்தில் இணைந்து சுதந்திரப்போராட்ட இயக்கத்திலும், சமூக சீர்திருத்தத்திகாகவும் தீவிரமாக பங்கேற்றினார்.
- (காங்கிரசு இயக்கத்தில் மேட்டுக்குடியினரின் செல்வாக்கு கோலோச்சிய 1920-களில் அடித்தட்டு மக்களிடம் காங்கிரசு பேரியக்கத்தைக் கொண்டு சென்றதிலும், ஆலய நுழைவு போராட்டங்கள் வெற்றி பெற்றதிலும் பெரியார் பெரும் பங்காற்றினார்.
- ஆனால் காங்கிரசு கட்சியில் வர்ணாசிரம கொள்கை கடைபிடிக்கப்பட்டதால் அதிலிருந்து விலகி நீதிக்கட்சியில் இணைந்து சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இதற்குப் பின்னர் தந்தை பெரியாரின் பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் இந்திய மற்றும் தமிழக அரசியலில் பிரிக்க முடியாத வரலாறாயின.
- தேசத்தின்பெயரால் ஓர் குழு மக்களைச் சுரண்ட நினைத்தால் அத்தேசம் போராடிப்பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல என்றார் ஈ.வெ.ரா. பெரியார் பல்வேறு நிலைகளில் தேசம், இனம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்ரை பெரியார் கடுமையாக விமர்சித்தார்.
- தேசம், தேசியவாதம் மற்றும் தேசிவாதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்தாக்கங்களே என அவர் கருதினார். இவ்வேறுபாடுகளே அந்நட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமக்களின் சுயமரியாதையைக் குறிப்பதாக அவர் கூறுகிறார்.
- அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தில் தேசியவாதத்தைப் பற்றி யாரேனும் பேசுகையில் அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்களா? என தம வியப்பதாகப் பெரியார் வினவுகிறார்.
தேசியவாதம் என்பது சுரண்டலாகும்.
- இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மட்டுமல்லமல் மக்களின் சுயமரியாதையைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்களும் உள்ளனர். அவர்கள் தங்களின் சுயநலன் மற்றும் மேம்பாட்டிற்காக மக்களை தேசம் மற்றும் தேசியவாதத்தினை நம்பவைத்து ஏமாற்றுவர், தேசம் மற்றும் தேசியவாதத்திற்காக சுயமரியாதை மறைக்கப்படுமானால் அது தேசத்திற்கு எதிரான குற்றமாகும் என்றார் பெரியார்.
- தேசியவாதம் என்பது ஓர் கற்பனையான உணர்வாகும். ஆகவே தேசிய உணர்வு என்பது வசதிமுக்க மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களால் மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சதியாகும். அது ஓர் தவறான அனுமான்னாகும். இதனை வசதிபடைத்த உயர் குடியினர் ஏழை சமுதாயத்தின் உரிமைகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
- தேசியவாதம் என்பது மக்களுக்கு ஓர் மயக்கத்தையும் உணர்வுப்பூர்வமான வெறியையும் குறிக்கும் சொல்லாகி விட்டது.
உலகளாவிய தேசியவாதத்திற்கு மறுப்பு
- பெரியார் தனது இலங்கைப் பேருரையில், தேசம் , தேசியவாதம் என்பதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். ‘இந்திய தேசியவாதம்’ என்ற கருத்தை சிலர் தங்கள் ஆயுதமாகக் கையிலெடுத்த காலத்தில் தேசியவாதத்தைப் பற்றி பெரியார் எதிர்த்துப் பேசியுள்ளார். இந்திய தேசியவாதத்தை மட்டுமின்றி, உலகில் உள்ள மற்ற நாடுகளின் தேசியங்களையும் சான்றாகக் காட்டி, தேசியவாதத்தை மறுக்கிறார் பெரியார்.
- “தேசியவாதம் என்பது முதலாளித்துவவாதிகள் தங்கள் தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை பலி கடாவாக்குவதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.
- உதாரணமாக, “இங்கிலாந்து நாட்டின் பணக்கார சமூகத்திற்கு அமெரிக்க நாட்டின் பணக்கார சமூகத்துடன் மோதல் வந்தால் இங்கிலாந்து தேசத்துடன் மோதல் வந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள், அந்நாட்டின் ஏழைகளைப் பார்த்து, “ஓ இங்கிலாந்து மக்கச்ளே! தேசபக்தர்களே! தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது, என்று கூறி ஏழை சமுதாயத்தை தூண்டுகின்றனர்.
- இவ்வகைப்பொய்யுரைகள் மூலம் மக்களைச் சுரண்டி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
- பல்வேறு தேசிய இனங்களையும் – தேசங்களையும் உள்ளடக்கிய நாடு ரஷ்யா. அந்த ஒன்றுபட்ட ரஷ்யாவில் எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்றுகூறி, அந்தவகையான புரட்சிக்கு ஆதரவாக நின்றவர் , பெரியார்.
- “கடவுள், மதம் மற்றும் தேசியவாதம் ஆகியவை பணக்காரக் கொடுமையும், சோம்பேறி வாழ்க்கையும் , பட்டினி கஷ்டமும் , உயர்வு தாழ்வு நிலையும் காணப்படவில்லை.
- அதுபோன்ற நாடுகளிக் கடவுள், மதம் மற்றும் தேசப்பற்று ஆகியவை இல்லை. ஆனால் மனித சமூக சமத்து சமுதாயமே அந்நாடுகளில் முக்குயமாகக் கருதப்பட்டது அங்கு பணக்காரன் –ஏழை, முதலாளி-தொழிலாளி, அதிகாரி-குடிமக்கள் என்கின்ற பாகுபாடு காணப்படவில்லை. மோன் மக்களுக்கு சமத்துவ விரும்பிகளும் கடவுள் மற்றும் தேசியவிவாதத்திற்கு முன்னுரிமை தரும் தேசத்திற்கு சமமானவர்கள் அல்ல.
- உலகில் உள்ள அனைத்து தேசங்களையும், தேசியங்களையும் கடுமையாக எதிர்த்து போல ;இந்திய தேசம்’ என்பது, பல்வேறு தேசிய இனங்களை – பல்வேறு தேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்று, – அந்த இணைப்பு ஒரு சிலரின் ஆதிக்கத்திற்குக் கருவியாக இருப்பதால் அதையும் பெரியார் எதிர்க்கிறார்.
பெரியார் ஓர் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய சமூக சீர்திருத்தவாதி
பெரியானின் படைப்புகள் மற்றும் மரபு
சராசரித் தமிழனுக்குப் பெரியார் ஓர் கொள்கையாக உள்ளார். சமூக சமத்துவம், சுயமரியாதை மற்றும் மொழியின் சீர்திருத்தவாதியாக அவர் சமூகம் , பண்பாடு மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அவர் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது பகுத்தறிவின் அடிப்படையில் செயல்பட வலியுறுத்தினார். பெண்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதுடன் பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்காக எனும் நிலையை மாற்றி அவர்களுக்கு வேலை சுயமரியாதை இயக்கம், சடங்குகளற்ற திருமணங்களை ஊக்குவித்ததுடன் பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விவாகரத்து செய்யும் உரிமைகளும் வழங்க வேண்டும் எனப் போராடினார். அவர் மக்கள் தங்களின் பெயருக்கு பின் உள்ல சாதிப் பெயரை கைவிடுமாறும் அதனைக் குறிப்பிட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 1930-களில் பட்டியல் இனத்தவறால் சமைக்கப்பட்ட உணவை பொதுக்கூட்டங்களின் பின்னர் சமபந்தியாக நடத்திக் காட்டினார்.
காலப்போக்கில சாதி., மத அரசியல் வேறுபாடுகளைக் கடந்த பெருமதிப்புடன் ‘பெரியார்’ நவீன தமிழகத்தின் தந்தையென அழைக்கப்படுகிறார்.
நன்றி அருண் ஜனார்த்தனன், தி.நியூ ,இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2018
இந்தியாவில் வேறுபாடுகளின் தேசம்
- ‘தேசம்’ என்ற கருத்தியல் இந்தியாவுக்குப் பொருந்துமா/ என்ற கேள்விக்கு அவரே சிறப்பான பதில் அளித்துள்ளார்.
- “மதராஸ்” என்பது ஒரு தனித்தேசம் அல்லவென்றும், அது தனித்து செயல்பட முடியாது என்றும் தோழர்கள் சிலர் சொல்கிறார்கள். மதராஸ் ஒரு தனி தேசமாக இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் “திராவிடம்” அதனுடைய நாகரிகம் பண்பாடு பழக்கவழக்கங்கள் ஆகிவை வங்காளம், பம்பாயிடம் இருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கில மொழி அறிமுகம் ஆகி இருக்கிறது.
- ஆங்கிலமும் ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கில மொழி அறிமுகம் ஆகி இருக்கிறது. ஆங்கிலமும் ஆங்கிலேயர் ஆட்சியி,ம் ஒழிந்து ஹிந்தி மொழி வந்தால் மதராசானது ஜெர்மன், இத்தாலி, பிராசு முதலிய ஏதோ ப்ரு நாட்டுடன் சோர்ந்துவிடும்.
- “இந்தியா ஒரு ‘தேசம்’ என்று சொல்வதை விட, ‘திராவிட நாடு’ ஒரு ‘தேசம்’, ஆந்திரநாடு ஒரு ‘தேசம்’ வங்காளநாடு ஒரு ‘தேசம்’ என்று சொன்னாலும் பொருந்தும்.
- உதாரணமாக திராவிட நாட்டை எடுத்துக்கொண்டால் திராவிடநாடு என்று தனிப்பட்ட பண்பாடு கலை, மொழி, நாகரிகம் மற்றும் ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருந்து வந்ததென்று சரித்திரம் கூறுவதை யாராலும் மறைக்க முடியாது.
- மாறுபட்ட ஆட்சிகளின் கீழ் இருந்துவரும் ஒரு நாட்டை ஒரு ‘தேசம்’ என்று சொல்லி எல்லாமக்களையும் ஒன்றுபடுத்தி அன்னியனிடமிருந்து விடுதலையடைந்த பின்னர் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை ஆளலாம் என்றால் , இதை யார் ஒப்புக்கொள்வார்கள் என்று கேட்கிறார்.
- பெரியார் முன்மொழிந்த ‘திராவிட தேசியவாதம் ) முற்றிலும் பெருவாரியாக மத ஆதிக்கங்களுக்கு எதிராக இருந்தது.
மொழிக் கொள்கை
- “அவரவர் மொழியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவரவருக்கு உரிமை உண்டு. இந்த உரிமை திராவிட சமதர்மக் குடியாட்சியில் பாதுகாக்கப்படும்.
- எந்த மொழியும் , மற்றொரு மொழி பேசுபவர்கள் மீது வலுக்காட்டாயமாகத் திணிக்கப்படக்கூடாது. பிரிவினை வாதத்திற்கான ஆயுதமாக மொழி பயன்படுத்தக்கூடாது.
- மக்களின் அனைத்து தேவைகளுக்கும் மத்திய அரசாங்கத்தைச் சார்ந்திருப்பது எதனையும் வெளிப்படுத்தாது. ஒருவேளை மொழியானது தேசியமயமாக்கப்பட்டால் மக்களுக்கு அதனால் பட்டினியில் இருந்து விடுதலை கிடைக்குமா? தெளிவாகக் கூறுவதெனில் தமிழ் உழைப்பாளர்கள் தமிழ் பேசும் முதலாளிகளாலேயே சுரண்டப்படுகின்றனர்.
சாதியற்ற சமுதாயம்
- பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே , திராவிடநாடு திராவிடருக்கே’ என்று தொடர்ச்சியான பரப்புரைகள், போரட்டங்களை நடத்தினார். பொதுச்செயல்திட்டம், பொதுவேலைத்திட்டம், இஸ்லாமுக்கு மதமாற்றம், திராவிடநாட்டுப் பிரிவினை போன்றவற்றில் பல்வேறு வடிவங்களில் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார்.
- ஆனால் , ஆதிக்க சக்திகள் மிக எளிதாக தமிழன், தேசியவாதம், தேசிய இனம் போன்ற உணர்வுளை ஏற்றி, சில தமிழ் தேசியத் தலைவர்கள் மூலமாக மீண்டும் தங்களது ஆதிக்கத்தைத் தொடரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டபோது, ஒருகால கட்டத்தில் பெரியார் , இந்தத் திராவிட நாடே கூட வேண்டாம்.
- சாதி ஒழிப்பே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை அவரின் சிந்தனைத் தொகுப்புகள் வழியாக அறியலாம்.
- “திராவிட நாடுபெறாவிட்டாலும் சரி; சில ஆதிக்க சக்திகளை ஒழுக்க முடியாவிட்டாகும் சரி; முதலாளித்துவத்தை அழிக்க முடியாது போனாலும் சரி; சாதியை ஒழிக்கின்ற ஒரே காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் போதும் என்கிறார். இது ஒன்றே திராவிடர் கழகத்தின் லட்சிய வெற்றி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த சாதி வெறியானது , திராவிட இனத்தைச் சின்னபின்னப்படுத்தி ஆரியத்துக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்று 1950-களின் தொடக்கத்தில் அவர் தனது அரசியல் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.